Sunday, November 12, 2006

என்னைக் குறித்தான அவதூறு

என்னைக் குறித்து ஒரு வலைப்பதிவர் சில அவதூறுகளை வாரி இறைத்துக் கொண்டு சென்றுள்ளார். இதையெல்லாம் பொருட்படுத்தி விளக்கம் அளிக்க தேவையில்லை என்று நினைத்தாலும், இரண்டு ஆண்டுகள் தொடர்ந்து வலைப்பதிவில் இருந்து வருவதாலும், தொடர்ந்து இருக்க நினைப்பதாலும், என்னை அவதூறுகள் மூலம் தாக்கி அழிக்க நினைக்கும் சிலருக்கும், என் மேல் நம்பிக்கை கொண்ட சிலருக்கும் சில விளக்கங்களை அளிக்க வேண்டிய தேவை உள்ளது

முதலில் வீரவன்னியன் என்ற பதிவருடன் சம்பந்தப்படுத்தி இருப்பது.

சாதி ஒரு வலுவான ஆயுதம். இந்திய/தமிழக சூழலில் சாதியை மையமாக வைத்து நடக்கும் தாக்குதல்கள் ஒன்றும் புதிது அல்ல. சாதி ரீதியாக ஒருவரை தாக்கும் பொழுதும், சாதி வெறியராக சித்தரிக்கும் பொழுதும் அவருடைய அனைத்து சித்தாந்தங்களையும் கேள்விக்கு உள்ளாக்க முடியும். அவருடைய நம்பகத்தன்மை குறித்த கேள்விகளை எழுப்ப முடியும். இங்கும் அது தான் நடக்கிறது. திராவிட சிந்தனையும், ஈழ ஆதரவும் கொண்ட என்னை ஒரு சாதி வெறியனாக சித்தரிப்பதால் என்னுடைய நம்பகத்தன்மை குறித்த கேள்வி எழுகிறது. என்னை சாதி வெறியனாக கட்டமைத்து விட்டால் நான் கொண்ட தமிழ் தேசியம், திராவிடம், ஈழம், பெண் விடுதலை போன்ற முற்போக்கு சிந்தனையை கேள்விக்குள்ளாக்கி என்னை சிதைத்து விட முடியும். ஒரு சாதாரண வலைப்பதிவு சண்டைக்கு, தமிழ்மணம் சார்ந்த பிரச்சனைக்கு இப்படி ஒரு வடிமா ? சிரிப்பு தான் வருகிறது

என்னைப் பொறுத்தவரையில் பாமக, திமுக, மதிமுக, விடுதலைச் சிறுத்தைகள் போன்ற கட்சிகளை எல்லாம் ஒரே தட்டில் தான் பார்க்கிறேன். என்னுடைய தேர்தல் பதிவுகளைப் பார்த்தால் நான் திராவிட, தமிழர் ஆதரவு, ஈழ ஆதரவு, ஒடுக்கப்பட்ட மக்களின் ஆதரவு பெற்றக் கட்சிகளை ஒரே மாதிரியாத் தான் பார்க்கிறேன் என்பதை புரிந்து கொள்ள முடியும். என்னுடைய திராவிட அடையாளத்திற்கு ஒரு உதாரணம் கொடுக்க வேண்டுமென்றால், என்னுடைய திருமணமே திரு.மு.க.ஸ்டாலின் அவர்களின் தலைமையில் தான் நடைபெற்றது.
என்னுடைய திருமணமே மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்திருந்தும் திமுகவின் கொள்கைகளிலும், நடைமுறைகளிலும் நிறைய கருத்து வேறுபாடுகள் எனக்கு உண்டு. என்னுடைய பதிவுகளில் திமுகவுக்கு ஆதரவாக நான் எழுதியதில்லை என்றாலும் சில பதிவுகளில் அந்த திமுக ஆதரவு முகம் வெளிப்பட்டிருக்கலாம். அவ்வாறு இருந்தும் என் சாதியை சார்ந்து இங்கு அவதூறு செய்ய முற்படுவது எதனைக் குறிக்கிறது ? நான் சார்ந்த சாதியை வைத்து மட்டும் அவதூறு செய்ய நினைத்ததால் இங்கே வன்னியராக நான் சித்தரிக்கப்பட்டு இருக்கிறேன். அந்தளவுக்கு சாதியை அவதூறு ஆயுதமாக பயன்படுத்துகிறார்கள்.

அடுத்து என் பெயரில் இருக்கும் தமிழை சார்ந்து வேறொரு பதிவருடன் என்னை இணைத்திருக்கிறார்கள். அவதூறு பதிவரின் லாஜிக் மெய்சிலிர்க்க வைக்கிறது. தமிழ் மொழி மீது அபிமானம் கொண்டிருக்கும் பலரும் தமிழை தங்கள் பெயருடன் இணைத்துக் கொள்கிறார்கள்.
தமிழ் நதி, தமிழ் நிதி, தமிழ் பாம்பு என்று இருக்கும் வலைப்பதிவுகளுடன் என்னை சம்பந்தப்படுத்தாமல் இருக்குமாறு விண்ணபித்துக்கொள்கிறேன் :)

உண்மைகள் இவ்வாறு இருக்க, நான் தமிழ்மணத்திற்கு ஆதரவாக சில பின்னூட்டங்களை (இரண்டு பின்னூட்டங்களை இது வரை எழுதியிருக்கிறேன்) எழுதியதாலும், ஈழத்திற்கு ஆதரவாக பதிவுகளை தொடர்ந்து எழுதி வருவதாலும் தான் இந்த தாக்குதலுக்கு உள்ளானதாக நம்புகிறேன். ஏற்கனவே நான் ஈழத்திற்கு ஆதரவாக பதிவு எழுதியதில் கோபம் கொண்டு என்னை குறித்து முன்பே ஒரு பதிவு இட்டவர் தான் இந்த அவதூறு பதிவாளர்.

கடந்த முறை நான் அதை பொருட்படுத்தவில்லை. ஆனால் இம்முறை சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கும் வாய்ப்புகளை பரிசீலனை செய்ய உள்ளேன்.

இறுதியாக நான் உறுதிபட இதனை கூற நினைக்கிறேன்...

இவ்வாறான அவதூறு தாக்குதல்கள் நான் சரியான பாதையில் சென்று கொண்டிருப்பதான நம்பிக்கையை எனக்கு அளிக்கிறது. என்னுடைய பங்குச்சந்தை, பொருளாதாரம், ஈழம், அரசியல், உலகின் பல்வேறு மக்கள் போராட்டங்களைச் சார்ந்தப் பதிவுகளை தொடர்ந்து எழுதிக்கொண்டிருப்பேன்.

என்னை நம்பும் நண்பர்களும், வாசகர்களும் என்னை பின் தொடருவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. என் மீது நம்பிக்கை இல்லாதவர்கள் என்னை விட்டு விலகலாம். அவதூறுகளை எல்லாம் நான் பொருட்படுத்துவதில்லை. இது என் மீது நம்பிக்கை கொண்டவர்களுக்கான விளக்கம் மட்டுமே...

38 மறுமொழிகள்:

Anonymous said...

வணக்கம் தமிழ்சசி!

காய்த்த மரம்தான் கல்லடிபடும்.உங்களை
அவதூறு செய்வதன் மூலம் உங்களை
இங்கிருந்து அகற்ற முனைகிறார்கள்
இவர்கள்.அவர்களின் நோக்கத்தினை
நீங்கள் சரியாக புரிந்து கொண்டிருக்கிறீர்கள்.

உங்கள் பதிவுகளை
தொடர்ந்து படித்து வருபவன் என்ற வகையில் உங்கள் பாதை சரியான
பாதையே சந்தேகம் வேண்டாம்.இவர்களை பொருட்படுத்தாமல் விட்டாலே போதும் இவர்கள் அடங்கி விடுவார்கள்.
இவர்களை பொருட்படுத்தாதீர்கள்.

தொடர்ந்து எழுதுங்கள்.

9:46 PM, November 12, 2006
சல்மான் said...

எழுத்துகளில் கண்ணியமும், மரியாதையும், பொருட்செறிவும் வெளிப்படுத்தும் சிறந்த வலைப்பதிவாளராகத்தான் நீங்கள் மிளிருகிறீர்கள். அவதூறுகள் வரத்தான் செய்யும். ஆனால் இறுதியில் நிலைத்திருக்கப் போவது உண்மையே! வருத்தம் தேவையா?

9:52 PM, November 12, 2006
குழலி / Kuzhali said...

சசி இதற்கெல்லாம் பதில் சொல்ல தேவையில்லையென்றாலும் இப்படியான சந்தேகத்தை விதைத்து இவர்கள் செய்ய நினைக்கும் அறுவடையின் பின்னுள்ள கீழ்த்தர செய்கைகள் அவர்களின் முகங்களை மேலும் மேலும் வெளிச்சம் போட்டு காட்டும்.

சமீப காலங்களில் ஒரு கும்பலின் குப்புற கவிழ்ந்த இமேஜை தூக்கி நிறுத்த செய்து கொண்டிருக்கும் முயற்சியில் இதுவும் ஒன்று... பாவம் பிழைத்து போகட்டும்....

நன்றி

9:56 PM, November 12, 2006
Muthu said...

சசி,

இதையெல்லாம் ஏங்க சீரியஸா எடுக்கறீங்க? விளக்கம் கொடுக்க ஆரம்பிச்சா கொடுத்துட்டே இருக்க வேண்டியதுதான்...

வேலையை பாரும்வே..

10:04 PM, November 12, 2006
துளசி கோபால் said...

என்னங்க சசி,
இப்படி ஒவ்வொருத்தருக்கும் தன்னிலை விளக்கம் கொடுத்துக்கிட்டு இருக்கறது நடக்கற காரியமா?
'பேசாம நம்ம வேலையைப் பார்த்துக்கிட்டுப் போகணும்' என்பதை நானும் வலைபதிய வந்த கொஞ்ச நாளுலேயே
புரிஞ்சுக்கிட்டேன்.
நம்ம மனசாட்சிக்குப் பதில் சொன்னாப்போதுங்க.
உண்மையை எழுதறப்போ இப்படி 'தம்கி'கள் வர்றது சகஜம்தான்:-)))

10:08 PM, November 12, 2006
Anonymous said...

please keep it up your good work ignore the idiots

thamilan (srilanka)

God bless you

10:12 PM, November 12, 2006
jeevagv said...

நீங்கள் சரியென உங்களுக்குத் தெரிந்தவற்றை தொடந்து எழுதுங்கள், மடியில் கனம் இல்லாதவரை வழியில் பயம் தேவையில்லை.
அவதூறுகள் மறைந்து போகட்டும், வாழ்த்துக்கள்!

10:14 PM, November 12, 2006
இளங்கோ-டிசே said...

சசி, காழ்ப்புணர்வுப் பதிவுகள் வலைப்பதிவுகள் பரீட்சயமானவர்க்கு புதிதானவையல்லவே. ஒரு தன்னிலை விளக்கம் கொடுத்து நகர்ந்துவிடலாம் (சிலவேளை அது கூட தேவையற்றது; அவ்வாறு பல இடங்களில் செய்திருக்கின்றேன்). மெளனம் பலவேளைகளில் மிகப்பெரும் ஆயுதம். பலரைத் தொந்தரவுபடுத்திக் கொண்டேயிருக்கும், தலைக்கு மேலே தொங்கும் கத்தியாய். எப்போது திருப்பிப் பாய்வார்களோ என்று பதட்டத்துடனேயே -காழ்ப்புடன் எதிர்த்து எழுதுபவர்கள் -தொடர்ந்து இருக்கவேண்டி வரும்.
....
விமர்சனத்துக்கும் காழ்ப்புணர்வுக்கும் இடையிலான வித்தியாசம் என்னவென்பதை அறியத்தெரியாதவர்களா வாசிக்கும் நாங்கள்?

10:18 PM, November 12, 2006
- உடுக்கை முனியாண்டி said...

இப்டி ஒரு தன்னிலை விளக்கம் தேவையில்லன்னாலும், ஒரு வகையில நல்லது தான்.

எப்பயும் போல தொடருங்க.

//விமர்சனத்துக்கும் காழ்ப்புணர்வுக்கும் இடையிலான வித்தியாசம் என்னவென்பதை அறியத்தெரியாதவர்களா வாசிக்கும் நாங்கள்?//

அதே!!!

10:43 PM, November 12, 2006
Machi said...

யார் அந்த அவதூறு பதிவர்? அப்படி ஒன்றும் நம் கண்ணுக்கு தெரியலயே என்று நினைத்தேன். அப்புறம் தான் இன்னொறு இடதில் அதிகம் பார்வையிட்டப்பட்ட பதிவு என்று இருந்தது. படித்தேன், ஆனால் பின்னூட்டத்தையும் அதை எழுதியவர்களையும் பார்த்துதான் அதிர்ச்சியாக இருந்தது. இது தான் வாய்ப்பென்று சகதியை அங்கு தெளித்துள்ளார்கள்.

ஆனால் ஒன்று நன்றாக தெரிகிறது வலைப்பதிவு என்று இருக்கும் வரை பிடிக்காதவர்களை வசைபாட அதை பயன்படுத்துவர்களும் இருந்துகொண்டுதான் இருப்பார்கள். இதையெல்லாம் பார்த்தா யாரும் வலைப்பதிய முடியாது.

பாருங்க ஜீவா(Jeeva) அங்கு விவரம் தெரியாம (?) "சூப்பர் கலக்கல்" ன்னு எழுதிட்டு இங்க தத்துவம் சொல்றாரு. என்னத்த சொல்ல :-|

10:43 PM, November 12, 2006
ஜோ/Joe said...

சசி,
மாற்றுக்கருத்து கொண்டுள்ள ஒருவர் தரமான வலைப்பதிவராக இருப்பது பொறுக்காமல் சிலர் செய்யும் வேலை இது .பொருட்படுத்த வேண்டாம்.

10:47 PM, November 12, 2006
தருமி said...

ஆனாலும் இத்தகைய கீழ்த்தரமான மனங்களின் செயல்பாடுகள், படித்தும் பண்படாத மக்களின் அருவருப்பு தரும் மனங்களைக் காணும்போது வேதனையாகத்தான் இருக்கிறது.

10:49 PM, November 12, 2006
மு. சுந்தரமூர்த்தி said...

சசி,
உங்கள் நிலையை தெளிவுபடுத்தியதற்கு நன்றி. நீங்கள் குறிப்பிடும் பதிவை எழுதியவரின் அய்யோக்கியத்தனத்தை வெளிச்சம் போட்டுக் காட்டிய பார்டெண்டர் என்பவருக்கு, அவர் யாராக இருந்தாலும் நன்றி. சில நண்பர்கள் மீதான பார்டெண்டரின் நையாண்டிகள் மீது எனக்கு உடன்பாடு இல்லாவிடினும் அவை குசும்பன் என்கிற வந்தியத்தேவன் தரத்திற்கு சென்றதாகத் தெரியவில்லை.

குசும்பனின் தரத்துக்கு உதாரணம் என்பதிவில் எழுதியுள்ள பின்னூட்டம் ஒன்றே போதும். கஷ்டப்பட்டு ஆராய்ச்சி செய்து புதுப்பிக்கப்படாத என் பணியிட வலைதளத்தை கண்டுபிடித்து, என்னிடம் முன்பு பணிபுரிந்த ஒரு பெண்ணின் பெயரை எடுத்துபோட்டு " நம்ம சூர்யகலாவ ரொம்பக் கேட்டதா சொல்லுங்க... காசா பணமா என்ன?" எனக்கேட்கும் வக்கிரத்துக்கு பார்டெண்டரின் வக்கிரமனத்தைப் பேச என்ன தகுதி இருக்கிறதென்று தெரியவில்லை. நையாண்டி என்கிற பெயரில் வெளிப்படும் இந்த வக்கிரமனத்தின் மொழிநடைக்கு ரசிகர்களாக அவருடைய பதிவில் பதிவில் தவறாமல் ஆஜராகும் நடுநிலைவாதிகளையும், பெண்ணியவாதிகளையும் நினைத்தால் பரிதாபமாக இருக்கிறது.

ஓரிருமுறை குடியாத்தம் என்று குறிப்பிட்டதைப் பிடித்துக்கொண்டு மிகவும் புத்திசாலித்தனமாக "குடியாத்தம் முனிரத்தினம் சுந்தரமூர்த்தி" என்று ஒரு மேதை அடியெடுத்துக் கொடுக்க 'குடியாத்தமா? அப்படியென்றால் இன்ன ஜாதிதான்' என்று மாமேதை குசும்பன் ஜாதிமாலைத் தொடுத்து தானும் சூட்டிக்கொண்டு, தன் நண்பருக்கு சூட்டிவிட்டதோல்லாமல் எனக்கும் சூட்டிவிட்டார். ஜாதிப்பற்று தன் பதிவில் வெளியிட்டுக்கொண்ட பின்னூட்டங்களிலும் தெள்ளத்தெளிவாகத் தெரியும். இந்த லட்சணத்தில் இவர் ஜாதிவெறியைப் பற்றி வேறு பிரசங்கம் பண்ணுகிறார்.

இந்தக் கோமாளிக்கு அஞ்சாமல், அங்கு ஆஜராகும் 'அப்பாவிகளையும்' பொருட்படுத்தாமல் உங்கள் பயணத்தைத் தொடருங்கள்.

ஜீவா(Jeeva),
அங்கே "சூப்பர் கலக்கல்!"
இங்கே "அவதூறுகள் மறைந்து போகட்டும், வாழ்த்துக்கள்!"

நீங்க சூப்பராவே கலக்கறீங்க. இதுவல்லவோ நடுநிலைமை!
உங்களுக்கும் வாழ்த்துக்கள்!

10:51 PM, November 12, 2006
BadNewsIndia said...

விஷயங்களை தெளிவு படுத்தியதர்க்கு நன்றி!

என்ன வேணும்னாலும் எழுதுவது அவரவர் இஷ்டம். அதை படிப்பதும் ஒதுக்குவதும் நம் இஷ்டம்.
ஆனால், character assassination எல்லாம் பண்றது ரொம்ப ரொம்ப கீழ்தரமான செயல்.
அந்த 'அவதூறு' பேர்வழி திருந்துவாராக.

யார் என்ன சொன்னாலும், தீர விசாரிக்காமல், உடனே தலைய ஆட்டி நம்புகிர நம்ம ஆளுங்களை நெனச்சாலும் மனசுக்கு கஷ்டமா இருக்கு.

11:29 PM, November 12, 2006
லக்கிலுக் said...

சசி!

உங்கள் பணிகளைத் தொடருங்கள். உண்மைத் தமிழர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள்.

11:47 PM, November 12, 2006
Anonymous said...

Dont worry for these silly things.. keep the good work going... we are here to support you..

-Valavan

11:54 PM, November 12, 2006
Pot"tea" kadai said...

சசி,

ஒரு "அவனுக்கு" எல்லாம் நீங்கள் விளக்கமளிக்க வேண்டிய அவசியம் இல்லை. முகத்தை மூடிகொண்டு அவன் அடிக்கும் மூத்திரத்தை குடிக்கும் சில பார்ப்பன அடிவருடிகள் ஆகா பேஷ் பேஷ் ...மனம் விட்டு சிரித்தேன் என்று சொல்லித் திரிவார்கள். இவனுடைய எழுத்தில் இருந்து இவனது பிறப்பை அறிந்து கொள்ளலாம் அதாங்க...மாயவரத்தார் கூட அடிக்கடி சொல்வாரே...ஆங் ...அதே தான்...ஜென்ம புத்தி. இதுகளை எத்தால அடித்தாலும் புத்தி வராது. இதையெல்லாம் கண்டுக்காம அடுத்த பங்குச்சந்தை பற்றிய பதிவை வெளியிடவும்.

சத்யா

12:05 AM, November 13, 2006
தமிழ் சசி | Tamil SASI said...

நண்பர்கள் அனைவரின் புரிதலுக்கும் என்னுடைய உள்ளம் நிறைந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்

எனக்கென நான் வகுத்துக்கொண்ட பாதையில் என்னை செலுத்திக்கொண்டே இருப்பேன்.

12:07 AM, November 13, 2006
Anonymous said...

Dear Mr.Sasi,
Don't worry for this type of
IDIOTS's article.We admire your balanced approch to any problems (Politics,Srilankan issue,tamil nadu politics etc) We are here to support you.Please keep it up your good work.May God bless you.

12:51 AM, November 13, 2006
பொன்ஸ்~~Poorna said...

சசி,
நீங்களே தன்னிலை விளக்கம் கொடுக்குமளவுக்கு வந்திடுச்சா..

விடுங்க.. பொழுது போகலைன்னா இப்படித் தான் ஏதாவது எழுதத் தோணும்.. இதையெல்லாம் பதில் சொல்லாமலே புறக்கணித்திருக்கலாம்.

1:25 AM, November 13, 2006
ஓகை said...

சசி அவர்களே, அந்த பதிவில் என் அதர்ச்சியை வெளியிட்டிருந்தேன். உங்கள் பதிவை பிறகுதான் பார்த்தேன். அவர் சட்டபூர்வமான நடவடிக்கைக்கு தயார் என்று எழுதியிருந்தது அவர் வெளியிட்ட செய்திக்கு நம்பகத் தன்மை கொடுத்தது. இதில் உங்கள் நிலையை உடனே தெளிவு படுத்தியதற்கு நன்றி.

1:31 AM, November 13, 2006
மணியன் said...

உங்கள் பதிவுகளின் வழக்கமான வாசகன் என்றமுறையில் தமிழ்மணம் செல்லும் திசை கண்டு வருந்துகிறேன்.

2:40 AM, November 13, 2006
சுந்தரவடிவேல் said...

சசி,
உண்மை நின்றிடும்.
நேற்றுக்கூட உங்களது பங்குச்சந்தைப் பதிவுகளை என் நண்பனொருவனுக்குப் பரிந்துரைத்தேன்.
அவசியம் தொடர்ந்து எழுதுங்கள். நன்றி!


(ஜீவா தனது மாற்று நிலைப்பாட்டை அந்த வலைப்பதிவிலேயே பின்னால் வந்த தனது மறுமொழியில் தெரிவித்திருக்கிறார்)

3:39 AM, November 13, 2006
வானம்பாடி said...

சசி,
உங்களை எதற்கு இந்த கும்பல் தாக்க புறப்பட்டுள்ளது என்று நிஜமாகவே புரியவில்லை. இந்த வக்கிர புத்திக்காரனின் பதிவுக்கு உங்கள் விளக்கம் அவசியமான ஒன்றுதான். சைக்கோ பயல்களை விட்டுத் தள்ளிவிட்டு போகவேண்டியதுதான்.

4:26 AM, November 13, 2006
thiru said...

நண்பரே,

காய்கிற மரம் கல்லடி படும்! பந்து அடிபட அடிபட களத்தில் எழும்.

நீங்கள் சரியான பாதையில் செல்கிறீர்கள் என்பதற்கான விமர்சனங்களாக இதை எடுத்துக்கொண்டு தொடர்ந்து முன்னேறுங்கள். கண்டெதுக்கும் விளக்கம் சொல்வதும் காற்றுக்கு வேலி கட்டுவதும் இயலுகிற காரியமா?

உள்ளதை உள்ளபடியே சொல்வோம். தனிநபர் தாக்குதலை தவிர எதுவுமறியாதவர்களை புறந்தள்ளுங்கள்! உங்கள் மனதே உங்களுக்கு உண்மை நீதிபதி.

உங்கள் கட்டுரைகள் தரமும், பொருளும் செறிந்தவை. தொடருங்கள் பயணத்தை. இந்த அவதூறு செய்தி வழி ஒரு புது வலைப்பூ அதிகமாக விளம்பரம் பெறுகிறது :)

5:20 AM, November 13, 2006
Sivabalan said...

சசி,

உங்கள் தமிழ்ப் பணியை தொடருங்கள்..

இடையுறுகளை கண்டு கொள்ளாதீர்கள்

8:49 AM, November 13, 2006
Unknown said...

நீங்கள் இதற்காக ஒரு பதிவு எழுதியிருக்க வேண்டிய அவசியமே இல்லை...
உங்கள் பதிவுகளைத் தொடர்ந்து வாசிக்கிறவர்களுக்குப் புரியும் உங்களைப் பற்றி...

9:33 AM, November 13, 2006
கலாநிதி said...

சசி நான் விரும்பும் பயனுள்ள தமிழ் வலைப்பதிவரில் நீரும் ஒருவர் தொடர்ந்து எழுதவும்

11:51 AM, November 13, 2006
மு.கார்த்திகேயன் said...

சசி, நான் தங்களுடைய பதிவுகளை படித்து வருபவன்.. தொடர்ந்து இல்லையென்றாலும் நேரம் கிடைக்கும் போதெல்லாம்.. தங்களுடைய தேர்தல் பதிவுகளையும் அந்த அலசல் திறனையும் பார்த்து வியந்திருக்கிறேன், சசி..

இந்த மாதிரி அவதூறு பரப்புபவர்கள் எங்கும் உண்டு, சசி.. எப்போதும் எல்லோரும் சொல்வது போல காய்த்த மரத்துக்கு தான் கல்லடி கிடைக்கும்..

இந்த மாதிரி அவதூறை கண்டு அஞ்சாமல் தொர்ந்து எழுதும் உங்கள் எண்ணதிற்க்கு என்னை போன்றவர்களின் ஆதரவு என்றைக்குமே உண்டு சசி

12:01 PM, November 13, 2006
Thangamani said...

சசி

//இவ்வாறான அவதூறு தாக்குதல்கள் நான் சரியான பாதையில் சென்று கொண்டிருப்பதான நம்பிக்கையை எனக்கு அளிக்கிறது.//

மிகச்சரியான புரிதல்.
உங்கள் பணியைத் தொடருங்கள்.

12:12 PM, November 13, 2006
ஆப்பு said...

சசி,

இதற்கெல்லாம் மனசு உடைந்தால் எப்படி? அவர்களுக்கு பெரிய ஆப்பாக வைக்க நான் இருக்கிறேன்.முள்ளை முள்ளால்தான் எடுக்க வேண்டும்.

சிரிங்க பார்க்கலாம்!

8:05 PM, November 13, 2006
மயிலாடுதுறை சிவா said...

சசி

உங்கள் தன்னிலை விளக்கம் மிக அருமை.

திமுக என்ற இயக்கமும் அதன் தலைவர் முத்தமிழ் அறிஞர் வாழ்க்கை முழுவதுமே போராடி கொண்டு இருப்பவர். அந்த இயக்கம் தளராமல் முன் எடுத்து செல்வதை போல,

நீங்கள் இதுப் போல நபர்களை புறம் தள்ளி நீங்கள் நிறைய எழத வேண்டும்.

நன்றி
மயிலாடுதுறை சிவா...

7:40 PM, November 14, 2006
ஈழபாரதி said...

தமிழ் சசி, காய்கிறமரத்துக்குதான் கல்லெறி படும் என்கிறார்கள், நீங்கள் காய்கிறீர்கள், கல்லெறிகிறார்கள். உண்மைக்கு என்றும் அழிவில்லை என்று நம்புபவன் நான். அது உங்களை வாழ்வைக்கும். தொடர்ந்து உங்களுக்கு சரியானது என பட்டதை எழுதுங்கள், வாசிக்க நாம் ஆவலுடன் இருக்கிறோம். கலெறிபவர்களும் வாசிக்கிறார்கள்.

5:08 AM, November 16, 2006
We The People said...

சசி,

இதுக்கெல்லாம் பதிவு போட்டு முகமுடி அணிந்து வம்பு இழுக்கும் ஹைஜாக் கிங்களால் உங்கள் நோக்கமும் இனி வரும் பதிவுகளும் திசைமாறாமல் பார்த்துக்கொள்ளுங்க. இதை கண்டுக்கிட்டாதான் அவர்களுக்கு சந்தோஷம். கண்டுக்காம லூஸ்ல விடுங்க தலைவா. இதுக்கெல்லாம் மறுப்பு போட்ட பேச்சு தான் வளரும் நம்ம வேலைய நம்ம பார்த்துக்கொண்டே இருக்கனும் இவர்களை எல்லாம் கண்டுக்காம.

So No Worries. இதுக்கெல்லாம் ஒரு தன்னிலை விளக்கம் வேஸ்ட் தல..

அன்புடன்,

நா.ஜெயசங்கர்

1:54 AM, November 18, 2006
Anonymous said...

என்ன சசி இது? நல்ல ஒரு வாய்ப்பை இப்படி நழுவ விடலாமா? எத்தனை பேர் வந்து ஊக்கம் தந்திருக்கின்றார்கள். கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி ஒவ்வொருவருக்கும் குறைந்தது இரு பதில் பின்னூட்டமாவது போடலாமில்லையா? சரியான அப்பாவியாக இருப்பீர்கள் போலிருக்கிறது.

சகோதரர் சசி அவர்களே,

இதற்கு முன் உங்கள் பதிவில் நான் பின்னூட்டம் போட்டது கிடையாது என்று நினைக்கின்றேன்.

ஆனால் உங்கள் கட்டுரைகளை தொடர்ந்து படித்து வருகிறேன். இதுவரை பின்னூட்டும் வாய்ப்பு கிடைத்ததில்லை. அவ்வளவே.

ஆழமான கருத்துக்களை நிதானத்துடன் உறுதியாக தொடர்ந்து கொடுத்து வருகின்றீர்கள். உண்மைகள் வெளிப்படும்பொழுது அதற்கெதிராக அநியாயக் கும்பல்கள் அணிவகுக்கும் என்பது உங்களுக்கு தெரியாததா என்ன?

போகட்டும் சனியன்கள் விட்டுத்தள்ளுங்கள். தொடர்ந்து உங்கள் ஆக்கங்களை அளியுங்கள்.

அன்புடன்
இறை நேசன்

2:15 AM, November 18, 2006
முத்துகுமரன் said...

சசி, இதுமாதிரியான அவதூறுகள் ஒரு சில அரிப்புகளின் வெளிப்பாடே. நிதானமாக அதே நேரம் தெளிவாக பிரச்சனைகளை அலசும் உங்கள் பாணி, தொடர்ந்து வாசிப்பவர்களுக்கு உங்கள் எழுத்தின் தரம் புரியும்.

இவர்கள் இன்று தரநிர்னயாளராக மாறி வகை பிரித்து கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு ஒன்று மட்டும் புரிவதில்லை. யாரும் அவர்களுக்காக காத்திருக்கவில்லை என்று.

உங்கள் மீதான அவதூறுகள் அவர்களை புரிந்து கொள்ள இன்னொரு வாய்ப்பாக அமைந்திருக்கிறது.

தொடர்ந்து எழுதுங்கள். இந்தக்கழிவுகளை புறங்கையால் தள்ளிவிட்டு..

2:49 AM, November 18, 2006
தமிழ் சசி | Tamil SASI said...

நண்பர்கள் அனைவரின் பின்னூட்டங்களுக்கும் மனம் நிறைந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்

2:51 AM, November 18, 2006