எளிய தமிழில், மிக அழகாக, பல நல்ல விளம்பரங்களைப் பற்றி மீனாக்ஸ் சொல்லியிருக்கிறார். அழகான விளம்பரங்களுக்கு மத்தியில் அருவருக்கத்தக்க விளம்பரங்களும் உண்டு. மைனாக்களை இம்பரஸ் பண்ணச் சொல்லும் விளம்பரங்கள் போல.
இத்தகையச் சில மோசமான விளம்பரங்களை இன்றைய இக்னாமிக் டைமிஸ் நாளிதழில் பார்த்தேன்.
ஆபாச விளம்பரங்கள் தவிர, நல்ல செய்திகளைச் சொல்ல வந்த விளம்பரங்கள் கூட அருவருக்கத்தக்க வகையில் இருக்கின்றன. உதாரணத்திற்கு கீழே உள்ளப் படத்திலிருக்கும் விளம்பரம். வறுமையில் பிறக்கும் குழந்தைகளைப் பற்றிச் சொல்ல வரும் விளம்பரம், அதை சொல்லியிருக்கும் விதம் மோசமாக இருக்கிறது. வித்தியாசமாக சொல்ல முனைந்து அருவருப்பில் முடிந்திருக்கிறது. இத்தகைய விளம்பரங்களை ரசிக்கும் வகையில் செய்ய முடியாது. சிந்தனையைத் தூண்டும் வகையில் இருக்க வேண்டும். மாறாக பலரின் கவனத்தைக் கவர ஒரு மோசமான முறைக் கையாளப்பட்டிருக்கிறது.
மற்றொரு விளம்பரம், ஒரு ஜவுளி விளம்பரம். புதிதாகத் துணிகளை வாங்க புதிதாகப் பிறந்த குழந்தையைக் கொண்டு விளம்பரம் செய்கிறது.
தினமும் வெளிவரும் பல விளம்பரங்களுக்கு மத்தியில் இந்த விளம்பரங்கள் அனைவரின் கவனத்தையும் கவர்ந்து விட்டன. அது தானே விளம்பரங்களின் நோக்கம். அந்த வகையில் விளம்பர நிறுவனங்கள் வெற்றிப் பெற்று விட்டன. இங்கு மற்றவர்களின் உணர்வுகளா முக்கியம். பணமும், தொழிலும் தானே முக்கியம்.
பிற விளம்பரங்களைப் பார்க்க இந்தச் சுட்டிக்கு செல்லுங்கள்
http://live.indiatimes.com/ppt/picppt/index.html
Wednesday, January 26, 2005
மோசமான விளம்பரங்கள்
By தமிழ் சசி | Tamil SASI | நேரம் 1/26/2005 11:02:00 PM
Subscribe to:
Post Comments (Atom)
3 மறுமொழிகள்:
கோரம் கோரம் மகா கோரம்
11:59 PM, January 26, 2005யார்குடி எக்கேடுகெட்டா எனக்கு என்ன என்று நினைத்து வியாபாரம் ஒன்றையே குறிக்கோளாகக் கொண்ட பண முதலைகளின் மன அழுக்குகள் இப்படியாக வெளியாகின்றன.
2:14 AM, January 27, 2005By: மூர்த்தி
ச்....சீ...யா.....
2:40 AM, January 27, 2005பார்க்கவே முடியாத அருவதுப்பு.
இவர்கள் பொருட்களை வாங்குவோம் என்றுவேறு நினைக்கிறார்களா?
விளம்பர உளவியலே இவர்களுக்குப் புரியவில்லை.
டெட்டோல் விளம்பரம் நோய்க்கிருமிகளே அற்ற சுத்தமான காட்சிகளையும் சீரான பின்புலங்களையுமே காட்டும்.
தூய்மையும் சுகாதாரமும், டெட்டோல் என்றவுடன் மனதில் படியும்.
இந்த இரு விளம்பரங்களும் எதிர்மாறாகத்தான் இருக்கின்றன.
Post a Comment