இன்றைய சூழ்நிலையில் நான் யார் ? தமிழனா, இந்தியனா, இந்தியத் தமிழனா என்ற கேள்விகள் என்னுள் கடந்த சில மாதங்களாக எழுந்து கொண்டே இருந்தது. ஒவ்வொரு தமிழகத் தமிழன் மனிதில் உள்ள கேள்வியும் அது தான். இது குறித்து நண்பர் சொ.சங்கரபாண்டியின் கட்டுரையை சமீபத்தில் வாசிக்க நேர்ந்தது. என்னுடைய எண்ணத்தை அந்தக் கட்டுரை பிரதிபலிப்பதால் அவரது அனுமதியுடன் அதனை இந்த வலைப்பதிவில் பதிவு செய்கிறேன்.
தெளிவடைந்துள்ள என் அடையாளப் போராட்டம்
சொ. சங்கரபாண்டி
(இக்கட்டுரையின் பெரும்பகுதி வாசிங்டன் பெருநகரத் தமிழ்ச்சங்கத்தின் காலாண்டிதழான 'தென்றல் முல்லை'க்காக நான் 2007 செப்டம்பரில் எழுதப் பட்டது)
உலகத்தில் இதுவரை நாடுகளுக்கிடையே நிகழ்ந்து வரும் போர்களுக்கும், ஒரு நாட்டுக்குள்ளேயும், ஒரு மாநிலத்துக்குள்ளேயும் கூட தோன்றும் அல்லது தொடரும் பூசல்களுக்கும் அடிப்படைக் காரணம் மனிதரின் பல்வேறு அடையாளங்களும், அவற்றுக்குள்ளேயான முரண்பட்ட நிலைகளுமாகும். அடையாளம் (Identity) என்கிற பொழுது மொழி, இனம், நாடு, மதம், சாதி, வாழும் பகுதி, பண்பாடு, பால்வகை, கட்சி என பலவித அடையாளங்களைக் குறிப்பிட முடியும். இவற்றுள் சில உண்மையான அடையாளங்கள் என்று சொல்லவே தகுதியில்லாதவை என்பதை சற்றுப் பின்னால் பார்க்கலாம். இவை எல்லாமே மனிதரின் புற அடையாளங்களே என்பதையும், மனிதர்களெல்லோருமே உயிர் அல்லது ஆன்மா என்ற அகநிலையில் ஒன்றானவர்களே என்பதையும் சிந்தித்துப் பார்த்தால் அத்தனை முரண்பாடுகளையும் உதறித்தள்ளிப் போய்க்கொண்டிருக்கலாமே. ஆனால் அவ்வளவு எளிதாகச் செய்துவிட முடியாது என்பதை பிறப்பு முதல் இன்று வரை எனக்குள்ளேயும் வெளியேயும் நிகழ்ந்து வரும் அடையாளப் போராட்டத்தின் மூலம் உணர்ந்து வருகிறேன். ஆனாலும் ஒரு தனிமனிதனுக்கு பல்வேறு அடையாளங்கள் இருக்க முடியும் என்பதையும், அவற்றுள் சில இயல்பாகவும், சில திணிக்கப் பட்டும் இருக்க முடியும் என்பதையும் உணர்ந்து வருகிறேன். அவ்வடையாளங்கள் ஒன்றுக்கொன்று இயைந்து பரிணமித்தும் அல்லது முரண்பட்டு ஒன்றையொன்று விழுங்கியும் இயங்கக் கூடும். இயல்பாக இருந்த அடையாளங்கள் வலுவிழந்தும், திணிக்கப் பட்ட அடையாளங்கள் வலுப்பெற்றும் நிலைக்கலாம் என்றும் உணர்கிறேன். சில வேளைகளில் இம்மாற்றத்தினால் சில நன்மைகளும் அல்லது அல்லல்களும் ஏற்படலாம். உதாரணமாக என்னுடைய அனுபவத்தை இங்கு ஆராய முற்படுகிறேன்.
நான் பிறந்த பொழுது எனக்கு இயல்பாகக் கிடைத்தது ஆண் என்ற பால் அடையாளம் மட்டுமே. அடுத்து தாயுடனும், உறவுகளுடனும் இயல்பாக வளர்ந்தது தமிழன் என்ற மொழி அடையாளம். வாழும் நாட்டால் வகுக்கப் பட்டது இந்தியன் என்ற நாட்டு அடையாளம். பிறந்த உடனே கற்பனையாக என்மேல் திணிக்கப் பட்டவை சாதி மற்றும் மத அடையாளங்கள். இவ்வாறான பல அடையாளங்களில் பள்ளிக்கு உள்ளே இந்தியன் என்ற அடையாளமும், பள்ளிக்கு வெளியே சாதி மற்றும் மத அடையாளங்களும் போதனைகளால் உரமிட்டு வளர்க்கப் பட்டன. தமிழன் என்ற அடையாளம் தமிழைப் படித்தும், பேசியும் வளர்ந்தவரை கூடவே இருந்து கொண்டேயிருந்தாலும் தமிழை விட பொருள் ரீதியில் முன்னேற்றத்தை அளிக்கவல்ல ஆங்கிலத்தின் முன்பும், மதம் வழியே காதில் விழுந்த சமஸ்கிருதத்தின் முன்பும் கொஞ்சம் கூனிக்குறுகியே நின்றது. திராவிட அரசியல் பரப்புரைகளால் தமிழ் மொழியின் பெருமைகள் ஒருபுறம் ஊட்டப் பட்டு வந்தாலும், இன்னொரு புறம் தமிழன் என்ற மொழி அடையாளத்தைப் பேணுவது குறுகிய சிந்தனையாக படித்த சமூகத்தினரால் சித்தரிக்கப் பட்டதால், என்னுடைய கல்வி உயர உயர தமிழன் என்ற அடையாளம் உள்ளத்தில் மட்டுமே ஒளிந்து கொள்ள ஆரம்பித்தது.
சைவமும், காந்தியமும் உயர்ந்த நெறியாக போற்றப் பட்ட என் சமூகச்சூழலில் மதமும், சாதியும் உண்மையிலேயே மனித அடையாளங்களல்ல என்றும், இயல்பான மனித அடையாளமான மொழி அடையாளம் பேணுவது குற்றமானதல்ல என்றும் தோன்றவேயில்லை. சாதிக்கும், மதத்துக்கும் எந்தவித புறவடிவக் கூறுகளோ, குணாதிசயங்களோ கிடையாது. பகுத்தறிந்து பார்த்து, அவற்றை ஒரு நொடிப்பொழுதில் துறக்கவும், மாற்றவும் முடியும் என்கிற போது அவற்றை அடையாளங்கள் என்று அழைப்பதை விட நிறுவனங்கள் என்று சொல்வதே சரியாகும். எடுத்துக்காட்டாக, ஒரு நிறுவனத்தில் நாம் உறுப்பினராக இருக்கும்வரைதான் அந்நிறுவனத்தோடு நம்மை அடையாளப் படுத்திக் கொள்ள முடியும். ஆனால் மொழி அடையாளம் மூளையோடும், சுவாசத்தோடும் கலந்த இயல்பான அடையாளம் என்றாலும், அதை வைத்திருப்பது தவறானது என்று நான் படித்த சில மேட்டுக்குடி மேதாவிப் பத்திரிகைகளால் கட்டமைக்கப் பட்டன.
இந்தச் சூழலில் எனக்குள் ஒரு தெளிவை அடையக் காரணமாயிருந்தது ஈழப்பிரச்னையும், அதை இந்தியா எதிர் கொண்ட விதமும். காந்தியம்தான் மனிதாபிமானம் என்றிருந்த எனக்கு போலித்தனங்களை அடையாளம் காட்டிய பெரியாரியமும், போலித்தனங்களின் பொருளாதார அடிப்படையை புரிய வைத்த மார்க்ஸியமும் பரிச்சயமானது. எண்பதுகளின் ஆரம்பத்தில் ஈழத்திலிருந்து துரத்தப் பட்ட தமிழரின் துயரங்களை தமிழன் என்றல்லாமல் வெறும் மனிதாபிமான அடிப்படையில் புரிந்து கொள்ள ஆரம்பிக்கிறேன். தமிழ் மொழியை தங்களது அடையாளமாக வெளிப்படுத்திய ஒரே காரணத்திற்காக அரசு வன்முறையால் விரட்டியடிக்கப் பட்ட தமிழ் மக்களின் பிரச்னைக்குத் தீர்வாக இந்திய ஆளும் வர்க்கத் தேசியவாதம் காட்டிய வழியிலேயே நானும் முதலில் சிந்திக்கிறேன். தமிழன் என்ற அடையாளம் குறுகிய பிராந்திய அடையாளம் என்று எனக்குப் போதிக்கப் பட்டதால் எனக்கு அதுவே சரியாகப் பட்டது.
ஆனால் சில வருடங்களாக ஈழப்பிரச்னையை உன்னிப்பாகக் கவனிக்க ஆரம்பித்த பொழுதுதான் புரிந்தது -- தமிழன் என்ற அடையாளம் இந்தியன் என்று கட்டியமைக்கப் படும் அடையாளத்துக்கு எதிராகக் கருதப் படுகிறதென்று. அதனாலேயே ஈழத்தமிழருக்கு மனிதாபிமான அடிப்படையில் தேடவேண்டிய தீர்வுக்குத் தடையாக அம்மக்களது தமிழ் மொழி அடையாளத்தை இந்தியா கருதுகிறதென்று. தமிழ் மொழி அடையாளம் மூடிமறைக்கப் படவேண்டிய அடையாளம் என்று கருதப் பட்டதால்தான் இலங்கையில் ஐம்பது ஆண்டுகாலமாகத் தொடரும் அடக்கு முறையைப் பெரிது படுத்தாமல், இலங்கை அரசிடம் சரணடைந்து வாழுமாறு தமிழர் வன்முறையின் மூலம் பணிக்கப் பட்டனர். இதுவே தனிப்பட்ட அளவில் என்னிடம் தமிழன் என்ற அடையாளம் மீட்டெடுக்கப் படக் காரணமாயிருந்தது. ஈழப் பிரச்னையில் தமிழர் என்று பார்க்காமல், மனித உரிமை அடிப்படையில் அவர்களுக்கு நியாயமாகக் கிடைக்க வேண்டிய தீர்வு அளிக்கப் பட்டிருந்தால் என்னைப் போன்ற எத்தனையோ இந்தியத் தமிழர்களிடம் தமிழன் என்ற அடையாளம் வலுப்பெறாமலே கரைந்து போயிருக்கக் கூடும்.
எந்தவொரு பொருளிலும் அல்லது பிரச்னையிலும் உண்மையை அறிய வேண்டுமெனில், வெளியில் பிரபலமாக நிலவும் வெகுஜன ஊடகங்களை மட்டுமல்லாமல் அரிதாகக் கிடைக்கும் அனைத்து நூல்களையும், பிரசுரங்களையும் பாரபட்சமின்றி படிக்க வேண்டுமென்ற தூண்டுதலை மறைமுகமாக என்னுள் ஏற்படுத்தியது ஈழப் பிரச்னை. பெரியாரியம் அந்தவகையில் என்னுடைய அனைத்து அடையாளங்களையும் உடைத்துப் போட்டது. போலித்தனமான அடையாளங்களான மதமும், சாதியும் மட்டுமல்ல. புறவடிவக் கூறுகளைக் கொண்டு இயல்பாக வாய்த்த ஆண் என்ற அடையாளமும், இயல்பாக வளர்ந்த தமிழன் என்ற அடையாளமும் கூட என்னுள்ளே அடித்து நொறுக்கப் பட்டன. மாறுபட்ட அடையாளங்களுடன் உள்ளவர்களையும் சமமாக (உயர்வாகவோ அல்லது தாழ்வாகவோ இல்லாமல்) மதிக்க வேண்டும் என்றுணர்த்தியது பெரியாரின் சுயமரியாதைத் தத்துவம். அடையாளங்களை முன்வைத்து ஏற்றத்தாழ்வு செய்தலின் உண்மையான நோக்கமான பொருளாதாரச் சுரண்டலைப் புரிய வைத்தது மார்க்ஸியத் தத்துவம். தமிழன் என்ற அடையாளம் என்னுள் மீட்டெடுக்கப் பட்டாலும், தமிழ்த்தேசியவாதம் உள்பட அனைத்துத் தேசியவாதங்களிடமும் எப்பொழுதும் எச்சரிக்கையாக இருக்க உதவுகிறது பெரியாரியமும், மார்க்ஸியமும். மனித சமூகத்தின் சமநிலையைப் புறக்கணித்து, மனிதர்களிடம் உயர்வு தாழ்வு கற்பித்து ஒடுக்குமுறையைப் பயன்படுத்தும் அபாயத்தை அனைத்து தேசியவாதங்களும் உள்ளடக்கியவை.
கடந்த பல வருடங்களாக அமெரிக்க வாழ்க்கை எனக்குள் நடக்கும் அடையாளப் போராட்டத்தில் ஒரு புதிய பரிமாணத்தை அளிக்கிறது. அமெரிக்கன் என்ற அடையாளம் மற்ற அடையாளங்கள் போன்று புறவடிவத்தன்மை கொண்டதாக இல்லாமல், செயல்வடிவம் கொண்டதென்று சொல்லலாம். ஒருவகையில் பார்க்கப் போனால் மார்க்சியமும், பெரியாரியமும் வலியுறுத்தும் தனிமனித விடுதலையை செயல்வடிவமாகக் கொண்டதே அமெரிக்க அடையாளம். மொழி, நிறம், பால், இனம், நாடு என பலவிதங்களில் வேறுபட்டிருந்தாலும் மனிதர்கள் அனைவரும் சமமாக நடத்தப் பட வேண்டும் என்ற நிலைப்பாடும், எழுத்துரிமையும், பேச்சுரிமையும் எப்பொழுதும் மறுக்கப் படக் கூடாது என்ற நிலைப்பாடும் அமெரிக்கன் என்ற அடையாளத்தின் மூலம் வலியுறுத்தப்படுகிறது. இத்தகைய அமெரிக்க அடையாளத்துக்குப் புறம்பாக சில தனிநபர்களும், நிறுவனங்களும், புஷ் அரசு உள்ளிட்ட சில அரசுகளும் நடந்து வந்தாலும், அமெரிக்கன் என்ற அடையாளம் இங்கு வந்தேறியுள்ள அனைத்து மக்களிடமும் நல்லதொரு தாக்கத்தையே ஏற்படுத்துகிறது.
இப்படியாக தொடர்ந்து நிகழ்ந்து வரும் அடையாள மாற்றங்களுள் ஒரே நேரத்தில் பல அடையாளங்கள் இருப்பதில் ஆச்சரியமுல்லை. உதாரணமாக, மொழி வாயிலான தமிழன் என்ற அடையாளம் வேண்டுமென்றே ஒடுக்கப் பட்டதாக உணர்ந்ததால் கிளர்ந்தெழுந்த தமிழன் என்ற அடையாளமே என்னுடைய முதல் அடையாளம். ஆனாலும், பொதுவான பண்பாட்டுக் கூறுகளின் அடிப்படையில் இந்தியன் என்ற அடையாளமும், வந்து குடியேறி வாழும் நாட்டினால் அமெரிக்கன் என்ற அடையாளமும் கூடவே இருப்பதில் எனக்கு எந்த முரண்பாடும் தெரியவில்லை. அதே நேரத்தில் இந்த மூன்று அடையாளங்களில் என்னை மற்றவர்களை விட உயர்ந்தவன் என்று சொல்லுமளவுக்கும் எந்தவித பெருமையையும் நான் உணரவில்லை.
இந்தியன் அல்லது அமெரிக்கன் என்ற அடையாளத்தை மிஞ்சிய அடையாளமாக தமிழன் என்ற அடையாளம் இருக்கக் கூடாது என்று கூற நினைப்பவர்களை நினைத்து முன்பெல்லாம் எரிச்சல் வரும், இப்பொழுதோ அனுதாபப் படுவதைத் தவிர வேறொன்றும் தோன்றவில்லை. தமிழன் என்ற இயல்பான அடையாளத்தை அங்கீகரிக்கும் பொழுது தான் இந்தியன் அல்லது அமெரிக்கன் என்ற கட்டமைக்கப் பட்ட அடையாளமும் வலுப்பெற்று இயல்பான அடையாளமாக மாறும். அதுதான் அமெரிக்காவின் வெற்றிக்கும் இரகசியம். எனவே நான் முதலில் தமிழன், அதன் பிறகுதான் இந்தியன் மற்றும் அமெரிக்கன் என்று நினைக்கிறேன். அமெரிக்காவில் பிறந்து வளரும் என் குழந்தை முதலில் தன்னை அமெரிக்கனாகவும், அதன் பின்னே தமிழனாகவும், இந்தியனாகவும் உணரலாம். அதுவே இயற்கையும் கூட!
* * *
மேலே எழுதியுள்ள கட்டுரை வாசிங்டன் பெருநகரத் தமிழ்ச்சங்கத்தின் காலாண்டிதழான 'தென்றல் முல்லை'க்காக நான் 2007 செப்டம்பரில் எழுதியது. ஈழத்தமிழர் மேல் பற்றுள்ள தமிழகக் கட்சிகள் பங்கேற்றுள்ள அரசுகள் தமிழகத்திலும், டெல்லியிலும் இருப்பதால், புலிகளின் மேலுள்ள குறைபாடுகளையும் அவநம்பிக்கைகளையும் தாண்டி, தமிழீழ மக்களின் உரிமைப் போராட்டத்தை ஆதரிக்காவிடினும், புரிந்து கொண்டு அரசியல் முதிர்ச்சியுடன் இந்தியா செயல்படும் என்ற நப்பாசையைத் தமிழர்கள் கொண்டிருந்த நேரம். அதன் பின்னால் 2008 அக்டோபரில் சயந்தனின் இடுகையொன்றில் (http://blog.sajeek.com/?p=431) இட்ட பின்னூட்டம் கீழே. அப்பொழுது ஈழத்தமிழர்களும், தமிழகத்தமிழர்களும் கலைஞர் இந்திய அரசை வற்புறுத்திப் போர் நிறுத்தத்துக்கு வழிவகுப்பார் என்று பெரிதும் ஏங்கிய நேரம்.
“என்னைப் போன்ற இந்தியத் தமிழர்கள் இந்தியாவின் மேல் நம்பிக்கை வைப்பதே வீண். ஏனென்றால் இந்தியாவில் தமிழர்கள் ஓரளவுக்கேனும் தன்மானத்துடன் வாழ்ந்து கொண்டிருப்பதன் முக்கியக் காரணம், இந்தியாவில் பெரும்பான்மை இனம் என்று சொல்லிக் கொள்கிற அளவுக்கு தனியொரு இனமில்லாததால்தான். எல்லா இனங்களுமே ஐம்பது விழுக்காட்டுக்கும் கீழ்தான். இல்லையெனில் நாங்களும் ஈழத்தமிழர்களைப் போலவே வன்முறையால் என்றோ ஒடுக்கப் பட்டிருப்போம். எடுத்துக் காட்டாக, கட்டாய இந்தித் திணிப்புப் பிரச்னையில் நேருவின் வாக்குறுதி என்றெல்லாம் ஒன்றைப் பார்த்திருக்க முடியாது. போதாமைக்கு சோ, இராம், சுப்பிரமணியசாமி, சிதம்பரம் போன்ற பார்ப்பனிய-பனியா-இந்தியக் கைக்கூலிகளையும் எங்களுக்குள்ளேயே எப்பொழுதும் விட்டு வைத்திருக்கிறோம். எங்களது கலைஞரின் குடும்பத்தினர் போன்றவர்கள் தமிழகக் கொள்ளையில் ஆரம்பித்து தற்பொழுது அகில இந்திய அளவில் கொள்ளையடித்துச் சொத்துச் சேர்த்துக் கொள்ளத் தெரிந்திருக்கிறார்கள். உணர்ச்சி வயப்படுவதைத் தவிர ஏதும் தெரியாத வைக்கோ போன்றவர்கள் இன்னொரு புறம். எனவே தன்மானம் என்பதெல்லாம் தமிழகத் தமிழனுக்குக் கிடையாது. அந்த ஈரோட்டுக் கிழவன் சமூக மற்றும் பொருளாதாரத் தன்மானம் கிடைப்பதற்காகப் போராடியதால், தமிழ்நாட்டுத் தமிழர் தம்மளவில் விழிப்புணர்வடைந்து முன்னேறிக் கொண்டிருக்கின்றனர்.
உணமை இப்படியிருக்க ஈழத்தமிழர்கள் எம்மிடம் எதிர்பார்ப்புகள் வைத்திருப்பது வேதனையளிக்கிறது. தமிழகத் தமிழர்கள் சொல் என்றுமே டெல்லி அம்பலத்தில் ஏறாது. ஈழத்தமிழர்கள் பட்டு வருகிற இன்னலுக்கு இந்தியா உதவ வேண்டுமானால் தமிழினம் என்ற அடிப்படையிலான அக்கறை இந்திய அரசுக்கு இருக்க வேண்டியதில்லை. வெறும் மனிதாபிமான அடிப்படை ஒன்றே போதும். அந்த அளவுக்குக் கொடுமைகள் நிகழ்ந்துள்ளன. இந்தியா ஒரு போதும் தமிழர்களுக்கு மனிதாபிமான அடிப்படையில் கூட உதவாது, இலங்கை அரசுக்குத் தான் உதவும், ஏனென்றால் இந்திய இனமும், சிங்கள இனமும் தம் அடிப்படை வேரில் ஒன்றே. இந்திய அரசு சிங்கள் அரசுக்கு உதவுவது அதன் அடிப்படையிலேயே. (இந்திரா காந்தியின் காலத்தில் உதவியதாக ஈழத்தமிழர்கள்தான் நன்றியுடன் நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள். அவர் செய்தது கூட அப்போதைய பூகோள அரசியல் இலாபத்துக்காகத்தான்)
இந்தியாவின் பண்பாட்டு வேர்கள் என்னுள்ளே எப்பொழுதுமே இருக்கும் என்றாலும் இந்திய மக்களின் மேல் அந்த அடிப்படையிலான என்னுடைய அன்பும், ஈர்ப்பும் எதிர்காலத்திலும் எனக்கு இருக்கும் என்றாலும், ஒரு இந்தியன் என்று என்னைச் சொல்லிக் கொள்ள வெட்கப் படுகிறேன். வேதனைப் படுகிறேன். இந்தியா என் முகத்தில் இது வரை கரியைத்தான் பூசிக்கொண்டிருக்கிறது.
உங்களைப் போலவே ஈழத்தின் வலிகளையும், இரத்தக் காயங்களையும், வேதனைகளையும் மனதில் அனுபவித்துக் கொண்டிருக்கும் என்னைப் போன்ற எத்தனையோ இந்தியத் தமிழர்களையும் மன்னியுங்கள் என்பதைத் தவிர வேறொன்றும் சொல்லத் தெரியவில்லை.”
* * *
ஆனால் இன்று இந்தியாவே ஈழத்தமிழர்களை அழிக்கும் இலங்கை அரசின் இனப்படுகொலைக்கு உடந்தையாக இருப்பது மிகத் தெளிவாக அறியவந்தபின் என்னுள்ளே நிகழ்ந்த அடையாளப் போராட்டமும் இப்பொழுது தெளிவடைந்திருக்கிறது. நான் இனி இந்தியனுமில்லை, இந்தியத்தமிழனுமில்லை. தமிழன் மட்டுமே. தமிழன் என்ற அடையாளத்துக்கும், இனத்துக்கும் பலமுள்ள முதல் எதிரியாக இருக்கும் நாடு இந்தியா என்பது தெளிவாக நிரூபிக்கப் பட்டு விட்டது. பொதுப் பண்பாட்டு அடிப்படையில் மற்ற இந்தியர்களுடன் என்னை அடையாளப்படுத்திக் கொள்வதைக் கூட இனி நான் மறுக்க வேண்டும். இது இந்தியர்களின் மேலுள்ள வெறுப்பினாலல்ல. அருந்ததி ராய் போன்ற முற்போக்குச் சிந்தனையாளர்களுக்குக் கூட ஈழத்தமிழரின் வலி எளிதில் புரிய மறுக்கிற பொழுது மற்ற இந்தியர்களை எந்தக் காலத்திலும் புரிய வைக்க முடியாது. புரிய மறுக்கும் வரை தமிழினப் படுகொலைகளுக்கு அவர்களும் உடந்தையாகவே இருக்கின்றனர்.
சீனா, பங்களாதேசம், பாக்கிஸ்தான் போன்ற அண்டை நாடுகளுக்கும், இந்தியாவுக்கும் என்னைப் பொறுத்தவரை இனி எந்த வேறுபாடுமில்லை. அந்த நாடுகளிலெல்லாம் இயற்கையின் சீற்றத்தால் பேரிழப்பு ஏற்படும் பொழுது மனிதாபிமான அடிப்படையில் வருந்துவதும், சிறிய அளவில் உதவுவதும் உண்டு. அப்படியொரு உறவை மட்டுமே இந்தியாவுடனும், இந்தியர்களுடனும் கடைப்பிடிக்க விரும்புகிறேன். மற்றபடி இந்தியா தமிழர்களின் முதல் எதிரி நாடு என்ற பிரக்ஞையோடு செயல்படுவேன். தமிழர்களுக்கென்று ஒரு நாடிருந்தால் உலக நாடுகளும் இப்படி இந்தியாவின் விருப்பப்படி படுகொலைகளைப் பார்த்துக் கொண்டிருக்க மாட்டா. எனவே உலக அளவில் தமிழர்கள் தம் அடையாளத்தை மீட்டெடுக்கும் புதிய முயற்சிகளில் இறங்க வேண்டும் என்று விரும்புகிறேன், உறுதி பூண்டுள்ளேன், அதற்காக உழைக்கவும் இருக்கிறேன்.
சொ. சங்கரபாண்டி
(இக்கட்டுரையின் பெரும்பகுதி வாசிங்டன் பெருநகரத் தமிழ்ச்சங்கத்தின் காலாண்டிதழான 'தென்றல் முல்லை'க்காக நான் 2007 செப்டம்பரில் எழுதப் பட்டது)
உலகத்தில் இதுவரை நாடுகளுக்கிடையே நிகழ்ந்து வரும் போர்களுக்கும், ஒரு நாட்டுக்குள்ளேயும், ஒரு மாநிலத்துக்குள்ளேயும் கூட தோன்றும் அல்லது தொடரும் பூசல்களுக்கும் அடிப்படைக் காரணம் மனிதரின் பல்வேறு அடையாளங்களும், அவற்றுக்குள்ளேயான முரண்பட்ட நிலைகளுமாகும். அடையாளம் (Identity) என்கிற பொழுது மொழி, இனம், நாடு, மதம், சாதி, வாழும் பகுதி, பண்பாடு, பால்வகை, கட்சி என பலவித அடையாளங்களைக் குறிப்பிட முடியும். இவற்றுள் சில உண்மையான அடையாளங்கள் என்று சொல்லவே தகுதியில்லாதவை என்பதை சற்றுப் பின்னால் பார்க்கலாம். இவை எல்லாமே மனிதரின் புற அடையாளங்களே என்பதையும், மனிதர்களெல்லோருமே உயிர் அல்லது ஆன்மா என்ற அகநிலையில் ஒன்றானவர்களே என்பதையும் சிந்தித்துப் பார்த்தால் அத்தனை முரண்பாடுகளையும் உதறித்தள்ளிப் போய்க்கொண்டிருக்கலாமே. ஆனால் அவ்வளவு எளிதாகச் செய்துவிட முடியாது என்பதை பிறப்பு முதல் இன்று வரை எனக்குள்ளேயும் வெளியேயும் நிகழ்ந்து வரும் அடையாளப் போராட்டத்தின் மூலம் உணர்ந்து வருகிறேன். ஆனாலும் ஒரு தனிமனிதனுக்கு பல்வேறு அடையாளங்கள் இருக்க முடியும் என்பதையும், அவற்றுள் சில இயல்பாகவும், சில திணிக்கப் பட்டும் இருக்க முடியும் என்பதையும் உணர்ந்து வருகிறேன். அவ்வடையாளங்கள் ஒன்றுக்கொன்று இயைந்து பரிணமித்தும் அல்லது முரண்பட்டு ஒன்றையொன்று விழுங்கியும் இயங்கக் கூடும். இயல்பாக இருந்த அடையாளங்கள் வலுவிழந்தும், திணிக்கப் பட்ட அடையாளங்கள் வலுப்பெற்றும் நிலைக்கலாம் என்றும் உணர்கிறேன். சில வேளைகளில் இம்மாற்றத்தினால் சில நன்மைகளும் அல்லது அல்லல்களும் ஏற்படலாம். உதாரணமாக என்னுடைய அனுபவத்தை இங்கு ஆராய முற்படுகிறேன்.
நான் பிறந்த பொழுது எனக்கு இயல்பாகக் கிடைத்தது ஆண் என்ற பால் அடையாளம் மட்டுமே. அடுத்து தாயுடனும், உறவுகளுடனும் இயல்பாக வளர்ந்தது தமிழன் என்ற மொழி அடையாளம். வாழும் நாட்டால் வகுக்கப் பட்டது இந்தியன் என்ற நாட்டு அடையாளம். பிறந்த உடனே கற்பனையாக என்மேல் திணிக்கப் பட்டவை சாதி மற்றும் மத அடையாளங்கள். இவ்வாறான பல அடையாளங்களில் பள்ளிக்கு உள்ளே இந்தியன் என்ற அடையாளமும், பள்ளிக்கு வெளியே சாதி மற்றும் மத அடையாளங்களும் போதனைகளால் உரமிட்டு வளர்க்கப் பட்டன. தமிழன் என்ற அடையாளம் தமிழைப் படித்தும், பேசியும் வளர்ந்தவரை கூடவே இருந்து கொண்டேயிருந்தாலும் தமிழை விட பொருள் ரீதியில் முன்னேற்றத்தை அளிக்கவல்ல ஆங்கிலத்தின் முன்பும், மதம் வழியே காதில் விழுந்த சமஸ்கிருதத்தின் முன்பும் கொஞ்சம் கூனிக்குறுகியே நின்றது. திராவிட அரசியல் பரப்புரைகளால் தமிழ் மொழியின் பெருமைகள் ஒருபுறம் ஊட்டப் பட்டு வந்தாலும், இன்னொரு புறம் தமிழன் என்ற மொழி அடையாளத்தைப் பேணுவது குறுகிய சிந்தனையாக படித்த சமூகத்தினரால் சித்தரிக்கப் பட்டதால், என்னுடைய கல்வி உயர உயர தமிழன் என்ற அடையாளம் உள்ளத்தில் மட்டுமே ஒளிந்து கொள்ள ஆரம்பித்தது.
சைவமும், காந்தியமும் உயர்ந்த நெறியாக போற்றப் பட்ட என் சமூகச்சூழலில் மதமும், சாதியும் உண்மையிலேயே மனித அடையாளங்களல்ல என்றும், இயல்பான மனித அடையாளமான மொழி அடையாளம் பேணுவது குற்றமானதல்ல என்றும் தோன்றவேயில்லை. சாதிக்கும், மதத்துக்கும் எந்தவித புறவடிவக் கூறுகளோ, குணாதிசயங்களோ கிடையாது. பகுத்தறிந்து பார்த்து, அவற்றை ஒரு நொடிப்பொழுதில் துறக்கவும், மாற்றவும் முடியும் என்கிற போது அவற்றை அடையாளங்கள் என்று அழைப்பதை விட நிறுவனங்கள் என்று சொல்வதே சரியாகும். எடுத்துக்காட்டாக, ஒரு நிறுவனத்தில் நாம் உறுப்பினராக இருக்கும்வரைதான் அந்நிறுவனத்தோடு நம்மை அடையாளப் படுத்திக் கொள்ள முடியும். ஆனால் மொழி அடையாளம் மூளையோடும், சுவாசத்தோடும் கலந்த இயல்பான அடையாளம் என்றாலும், அதை வைத்திருப்பது தவறானது என்று நான் படித்த சில மேட்டுக்குடி மேதாவிப் பத்திரிகைகளால் கட்டமைக்கப் பட்டன.
இந்தச் சூழலில் எனக்குள் ஒரு தெளிவை அடையக் காரணமாயிருந்தது ஈழப்பிரச்னையும், அதை இந்தியா எதிர் கொண்ட விதமும். காந்தியம்தான் மனிதாபிமானம் என்றிருந்த எனக்கு போலித்தனங்களை அடையாளம் காட்டிய பெரியாரியமும், போலித்தனங்களின் பொருளாதார அடிப்படையை புரிய வைத்த மார்க்ஸியமும் பரிச்சயமானது. எண்பதுகளின் ஆரம்பத்தில் ஈழத்திலிருந்து துரத்தப் பட்ட தமிழரின் துயரங்களை தமிழன் என்றல்லாமல் வெறும் மனிதாபிமான அடிப்படையில் புரிந்து கொள்ள ஆரம்பிக்கிறேன். தமிழ் மொழியை தங்களது அடையாளமாக வெளிப்படுத்திய ஒரே காரணத்திற்காக அரசு வன்முறையால் விரட்டியடிக்கப் பட்ட தமிழ் மக்களின் பிரச்னைக்குத் தீர்வாக இந்திய ஆளும் வர்க்கத் தேசியவாதம் காட்டிய வழியிலேயே நானும் முதலில் சிந்திக்கிறேன். தமிழன் என்ற அடையாளம் குறுகிய பிராந்திய அடையாளம் என்று எனக்குப் போதிக்கப் பட்டதால் எனக்கு அதுவே சரியாகப் பட்டது.
ஆனால் சில வருடங்களாக ஈழப்பிரச்னையை உன்னிப்பாகக் கவனிக்க ஆரம்பித்த பொழுதுதான் புரிந்தது -- தமிழன் என்ற அடையாளம் இந்தியன் என்று கட்டியமைக்கப் படும் அடையாளத்துக்கு எதிராகக் கருதப் படுகிறதென்று. அதனாலேயே ஈழத்தமிழருக்கு மனிதாபிமான அடிப்படையில் தேடவேண்டிய தீர்வுக்குத் தடையாக அம்மக்களது தமிழ் மொழி அடையாளத்தை இந்தியா கருதுகிறதென்று. தமிழ் மொழி அடையாளம் மூடிமறைக்கப் படவேண்டிய அடையாளம் என்று கருதப் பட்டதால்தான் இலங்கையில் ஐம்பது ஆண்டுகாலமாகத் தொடரும் அடக்கு முறையைப் பெரிது படுத்தாமல், இலங்கை அரசிடம் சரணடைந்து வாழுமாறு தமிழர் வன்முறையின் மூலம் பணிக்கப் பட்டனர். இதுவே தனிப்பட்ட அளவில் என்னிடம் தமிழன் என்ற அடையாளம் மீட்டெடுக்கப் படக் காரணமாயிருந்தது. ஈழப் பிரச்னையில் தமிழர் என்று பார்க்காமல், மனித உரிமை அடிப்படையில் அவர்களுக்கு நியாயமாகக் கிடைக்க வேண்டிய தீர்வு அளிக்கப் பட்டிருந்தால் என்னைப் போன்ற எத்தனையோ இந்தியத் தமிழர்களிடம் தமிழன் என்ற அடையாளம் வலுப்பெறாமலே கரைந்து போயிருக்கக் கூடும்.
எந்தவொரு பொருளிலும் அல்லது பிரச்னையிலும் உண்மையை அறிய வேண்டுமெனில், வெளியில் பிரபலமாக நிலவும் வெகுஜன ஊடகங்களை மட்டுமல்லாமல் அரிதாகக் கிடைக்கும் அனைத்து நூல்களையும், பிரசுரங்களையும் பாரபட்சமின்றி படிக்க வேண்டுமென்ற தூண்டுதலை மறைமுகமாக என்னுள் ஏற்படுத்தியது ஈழப் பிரச்னை. பெரியாரியம் அந்தவகையில் என்னுடைய அனைத்து அடையாளங்களையும் உடைத்துப் போட்டது. போலித்தனமான அடையாளங்களான மதமும், சாதியும் மட்டுமல்ல. புறவடிவக் கூறுகளைக் கொண்டு இயல்பாக வாய்த்த ஆண் என்ற அடையாளமும், இயல்பாக வளர்ந்த தமிழன் என்ற அடையாளமும் கூட என்னுள்ளே அடித்து நொறுக்கப் பட்டன. மாறுபட்ட அடையாளங்களுடன் உள்ளவர்களையும் சமமாக (உயர்வாகவோ அல்லது தாழ்வாகவோ இல்லாமல்) மதிக்க வேண்டும் என்றுணர்த்தியது பெரியாரின் சுயமரியாதைத் தத்துவம். அடையாளங்களை முன்வைத்து ஏற்றத்தாழ்வு செய்தலின் உண்மையான நோக்கமான பொருளாதாரச் சுரண்டலைப் புரிய வைத்தது மார்க்ஸியத் தத்துவம். தமிழன் என்ற அடையாளம் என்னுள் மீட்டெடுக்கப் பட்டாலும், தமிழ்த்தேசியவாதம் உள்பட அனைத்துத் தேசியவாதங்களிடமும் எப்பொழுதும் எச்சரிக்கையாக இருக்க உதவுகிறது பெரியாரியமும், மார்க்ஸியமும். மனித சமூகத்தின் சமநிலையைப் புறக்கணித்து, மனிதர்களிடம் உயர்வு தாழ்வு கற்பித்து ஒடுக்குமுறையைப் பயன்படுத்தும் அபாயத்தை அனைத்து தேசியவாதங்களும் உள்ளடக்கியவை.
கடந்த பல வருடங்களாக அமெரிக்க வாழ்க்கை எனக்குள் நடக்கும் அடையாளப் போராட்டத்தில் ஒரு புதிய பரிமாணத்தை அளிக்கிறது. அமெரிக்கன் என்ற அடையாளம் மற்ற அடையாளங்கள் போன்று புறவடிவத்தன்மை கொண்டதாக இல்லாமல், செயல்வடிவம் கொண்டதென்று சொல்லலாம். ஒருவகையில் பார்க்கப் போனால் மார்க்சியமும், பெரியாரியமும் வலியுறுத்தும் தனிமனித விடுதலையை செயல்வடிவமாகக் கொண்டதே அமெரிக்க அடையாளம். மொழி, நிறம், பால், இனம், நாடு என பலவிதங்களில் வேறுபட்டிருந்தாலும் மனிதர்கள் அனைவரும் சமமாக நடத்தப் பட வேண்டும் என்ற நிலைப்பாடும், எழுத்துரிமையும், பேச்சுரிமையும் எப்பொழுதும் மறுக்கப் படக் கூடாது என்ற நிலைப்பாடும் அமெரிக்கன் என்ற அடையாளத்தின் மூலம் வலியுறுத்தப்படுகிறது. இத்தகைய அமெரிக்க அடையாளத்துக்குப் புறம்பாக சில தனிநபர்களும், நிறுவனங்களும், புஷ் அரசு உள்ளிட்ட சில அரசுகளும் நடந்து வந்தாலும், அமெரிக்கன் என்ற அடையாளம் இங்கு வந்தேறியுள்ள அனைத்து மக்களிடமும் நல்லதொரு தாக்கத்தையே ஏற்படுத்துகிறது.
இப்படியாக தொடர்ந்து நிகழ்ந்து வரும் அடையாள மாற்றங்களுள் ஒரே நேரத்தில் பல அடையாளங்கள் இருப்பதில் ஆச்சரியமுல்லை. உதாரணமாக, மொழி வாயிலான தமிழன் என்ற அடையாளம் வேண்டுமென்றே ஒடுக்கப் பட்டதாக உணர்ந்ததால் கிளர்ந்தெழுந்த தமிழன் என்ற அடையாளமே என்னுடைய முதல் அடையாளம். ஆனாலும், பொதுவான பண்பாட்டுக் கூறுகளின் அடிப்படையில் இந்தியன் என்ற அடையாளமும், வந்து குடியேறி வாழும் நாட்டினால் அமெரிக்கன் என்ற அடையாளமும் கூடவே இருப்பதில் எனக்கு எந்த முரண்பாடும் தெரியவில்லை. அதே நேரத்தில் இந்த மூன்று அடையாளங்களில் என்னை மற்றவர்களை விட உயர்ந்தவன் என்று சொல்லுமளவுக்கும் எந்தவித பெருமையையும் நான் உணரவில்லை.
இந்தியன் அல்லது அமெரிக்கன் என்ற அடையாளத்தை மிஞ்சிய அடையாளமாக தமிழன் என்ற அடையாளம் இருக்கக் கூடாது என்று கூற நினைப்பவர்களை நினைத்து முன்பெல்லாம் எரிச்சல் வரும், இப்பொழுதோ அனுதாபப் படுவதைத் தவிர வேறொன்றும் தோன்றவில்லை. தமிழன் என்ற இயல்பான அடையாளத்தை அங்கீகரிக்கும் பொழுது தான் இந்தியன் அல்லது அமெரிக்கன் என்ற கட்டமைக்கப் பட்ட அடையாளமும் வலுப்பெற்று இயல்பான அடையாளமாக மாறும். அதுதான் அமெரிக்காவின் வெற்றிக்கும் இரகசியம். எனவே நான் முதலில் தமிழன், அதன் பிறகுதான் இந்தியன் மற்றும் அமெரிக்கன் என்று நினைக்கிறேன். அமெரிக்காவில் பிறந்து வளரும் என் குழந்தை முதலில் தன்னை அமெரிக்கனாகவும், அதன் பின்னே தமிழனாகவும், இந்தியனாகவும் உணரலாம். அதுவே இயற்கையும் கூட!
* * *
மேலே எழுதியுள்ள கட்டுரை வாசிங்டன் பெருநகரத் தமிழ்ச்சங்கத்தின் காலாண்டிதழான 'தென்றல் முல்லை'க்காக நான் 2007 செப்டம்பரில் எழுதியது. ஈழத்தமிழர் மேல் பற்றுள்ள தமிழகக் கட்சிகள் பங்கேற்றுள்ள அரசுகள் தமிழகத்திலும், டெல்லியிலும் இருப்பதால், புலிகளின் மேலுள்ள குறைபாடுகளையும் அவநம்பிக்கைகளையும் தாண்டி, தமிழீழ மக்களின் உரிமைப் போராட்டத்தை ஆதரிக்காவிடினும், புரிந்து கொண்டு அரசியல் முதிர்ச்சியுடன் இந்தியா செயல்படும் என்ற நப்பாசையைத் தமிழர்கள் கொண்டிருந்த நேரம். அதன் பின்னால் 2008 அக்டோபரில் சயந்தனின் இடுகையொன்றில் (http://blog.sajeek.com/?p=431) இட்ட பின்னூட்டம் கீழே. அப்பொழுது ஈழத்தமிழர்களும், தமிழகத்தமிழர்களும் கலைஞர் இந்திய அரசை வற்புறுத்திப் போர் நிறுத்தத்துக்கு வழிவகுப்பார் என்று பெரிதும் ஏங்கிய நேரம்.
“என்னைப் போன்ற இந்தியத் தமிழர்கள் இந்தியாவின் மேல் நம்பிக்கை வைப்பதே வீண். ஏனென்றால் இந்தியாவில் தமிழர்கள் ஓரளவுக்கேனும் தன்மானத்துடன் வாழ்ந்து கொண்டிருப்பதன் முக்கியக் காரணம், இந்தியாவில் பெரும்பான்மை இனம் என்று சொல்லிக் கொள்கிற அளவுக்கு தனியொரு இனமில்லாததால்தான். எல்லா இனங்களுமே ஐம்பது விழுக்காட்டுக்கும் கீழ்தான். இல்லையெனில் நாங்களும் ஈழத்தமிழர்களைப் போலவே வன்முறையால் என்றோ ஒடுக்கப் பட்டிருப்போம். எடுத்துக் காட்டாக, கட்டாய இந்தித் திணிப்புப் பிரச்னையில் நேருவின் வாக்குறுதி என்றெல்லாம் ஒன்றைப் பார்த்திருக்க முடியாது. போதாமைக்கு சோ, இராம், சுப்பிரமணியசாமி, சிதம்பரம் போன்ற பார்ப்பனிய-பனியா-இந்தியக் கைக்கூலிகளையும் எங்களுக்குள்ளேயே எப்பொழுதும் விட்டு வைத்திருக்கிறோம். எங்களது கலைஞரின் குடும்பத்தினர் போன்றவர்கள் தமிழகக் கொள்ளையில் ஆரம்பித்து தற்பொழுது அகில இந்திய அளவில் கொள்ளையடித்துச் சொத்துச் சேர்த்துக் கொள்ளத் தெரிந்திருக்கிறார்கள். உணர்ச்சி வயப்படுவதைத் தவிர ஏதும் தெரியாத வைக்கோ போன்றவர்கள் இன்னொரு புறம். எனவே தன்மானம் என்பதெல்லாம் தமிழகத் தமிழனுக்குக் கிடையாது. அந்த ஈரோட்டுக் கிழவன் சமூக மற்றும் பொருளாதாரத் தன்மானம் கிடைப்பதற்காகப் போராடியதால், தமிழ்நாட்டுத் தமிழர் தம்மளவில் விழிப்புணர்வடைந்து முன்னேறிக் கொண்டிருக்கின்றனர்.
உணமை இப்படியிருக்க ஈழத்தமிழர்கள் எம்மிடம் எதிர்பார்ப்புகள் வைத்திருப்பது வேதனையளிக்கிறது. தமிழகத் தமிழர்கள் சொல் என்றுமே டெல்லி அம்பலத்தில் ஏறாது. ஈழத்தமிழர்கள் பட்டு வருகிற இன்னலுக்கு இந்தியா உதவ வேண்டுமானால் தமிழினம் என்ற அடிப்படையிலான அக்கறை இந்திய அரசுக்கு இருக்க வேண்டியதில்லை. வெறும் மனிதாபிமான அடிப்படை ஒன்றே போதும். அந்த அளவுக்குக் கொடுமைகள் நிகழ்ந்துள்ளன. இந்தியா ஒரு போதும் தமிழர்களுக்கு மனிதாபிமான அடிப்படையில் கூட உதவாது, இலங்கை அரசுக்குத் தான் உதவும், ஏனென்றால் இந்திய இனமும், சிங்கள இனமும் தம் அடிப்படை வேரில் ஒன்றே. இந்திய அரசு சிங்கள் அரசுக்கு உதவுவது அதன் அடிப்படையிலேயே. (இந்திரா காந்தியின் காலத்தில் உதவியதாக ஈழத்தமிழர்கள்தான் நன்றியுடன் நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள். அவர் செய்தது கூட அப்போதைய பூகோள அரசியல் இலாபத்துக்காகத்தான்)
இந்தியாவின் பண்பாட்டு வேர்கள் என்னுள்ளே எப்பொழுதுமே இருக்கும் என்றாலும் இந்திய மக்களின் மேல் அந்த அடிப்படையிலான என்னுடைய அன்பும், ஈர்ப்பும் எதிர்காலத்திலும் எனக்கு இருக்கும் என்றாலும், ஒரு இந்தியன் என்று என்னைச் சொல்லிக் கொள்ள வெட்கப் படுகிறேன். வேதனைப் படுகிறேன். இந்தியா என் முகத்தில் இது வரை கரியைத்தான் பூசிக்கொண்டிருக்கிறது.
உங்களைப் போலவே ஈழத்தின் வலிகளையும், இரத்தக் காயங்களையும், வேதனைகளையும் மனதில் அனுபவித்துக் கொண்டிருக்கும் என்னைப் போன்ற எத்தனையோ இந்தியத் தமிழர்களையும் மன்னியுங்கள் என்பதைத் தவிர வேறொன்றும் சொல்லத் தெரியவில்லை.”
* * *
ஆனால் இன்று இந்தியாவே ஈழத்தமிழர்களை அழிக்கும் இலங்கை அரசின் இனப்படுகொலைக்கு உடந்தையாக இருப்பது மிகத் தெளிவாக அறியவந்தபின் என்னுள்ளே நிகழ்ந்த அடையாளப் போராட்டமும் இப்பொழுது தெளிவடைந்திருக்கிறது. நான் இனி இந்தியனுமில்லை, இந்தியத்தமிழனுமில்லை. தமிழன் மட்டுமே. தமிழன் என்ற அடையாளத்துக்கும், இனத்துக்கும் பலமுள்ள முதல் எதிரியாக இருக்கும் நாடு இந்தியா என்பது தெளிவாக நிரூபிக்கப் பட்டு விட்டது. பொதுப் பண்பாட்டு அடிப்படையில் மற்ற இந்தியர்களுடன் என்னை அடையாளப்படுத்திக் கொள்வதைக் கூட இனி நான் மறுக்க வேண்டும். இது இந்தியர்களின் மேலுள்ள வெறுப்பினாலல்ல. அருந்ததி ராய் போன்ற முற்போக்குச் சிந்தனையாளர்களுக்குக் கூட ஈழத்தமிழரின் வலி எளிதில் புரிய மறுக்கிற பொழுது மற்ற இந்தியர்களை எந்தக் காலத்திலும் புரிய வைக்க முடியாது. புரிய மறுக்கும் வரை தமிழினப் படுகொலைகளுக்கு அவர்களும் உடந்தையாகவே இருக்கின்றனர்.
சீனா, பங்களாதேசம், பாக்கிஸ்தான் போன்ற அண்டை நாடுகளுக்கும், இந்தியாவுக்கும் என்னைப் பொறுத்தவரை இனி எந்த வேறுபாடுமில்லை. அந்த நாடுகளிலெல்லாம் இயற்கையின் சீற்றத்தால் பேரிழப்பு ஏற்படும் பொழுது மனிதாபிமான அடிப்படையில் வருந்துவதும், சிறிய அளவில் உதவுவதும் உண்டு. அப்படியொரு உறவை மட்டுமே இந்தியாவுடனும், இந்தியர்களுடனும் கடைப்பிடிக்க விரும்புகிறேன். மற்றபடி இந்தியா தமிழர்களின் முதல் எதிரி நாடு என்ற பிரக்ஞையோடு செயல்படுவேன். தமிழர்களுக்கென்று ஒரு நாடிருந்தால் உலக நாடுகளும் இப்படி இந்தியாவின் விருப்பப்படி படுகொலைகளைப் பார்த்துக் கொண்டிருக்க மாட்டா. எனவே உலக அளவில் தமிழர்கள் தம் அடையாளத்தை மீட்டெடுக்கும் புதிய முயற்சிகளில் இறங்க வேண்டும் என்று விரும்புகிறேன், உறுதி பூண்டுள்ளேன், அதற்காக உழைக்கவும் இருக்கிறேன்.
ஓவியம் - நன்றி தூரிகைகளின் துயரப்பதிவுகள் மற்றும் புதினம்
74 மறுமொழிகள்:
கட்டுரைக்கு நன்றி.
3:27 AM, April 14, 2009இன்றும் பலர் தமிழர் என்ற அடையாளத்தை பாவித்தால் பெரிய குற்றம் மாதிரியான உணர்வை வேண்டுமென்றே உண்டாக்குகிறார்கள்.
தமிழர் என்ற அய்யாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கிய இயல்பான மொழி அடையாளமும் ,இந்தியன் என்ற பூகோள எல்லைகளாலும் நாடு என்ற அரசியல் அமைப்பினாலும் அறுபது ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட அடையாளமும் ஒன்றுக்கொன்று எதிராக இருக்கத் தேவையில்லை ,ஆனால் அப்படித்தான் இருக்குமாறு பல இந்தியத் தமிழர்கள் தூண்டப்படுகிறார்கள்.
ஈழத்தமிழருக்கு ஆதரவாக பேசினால் அது ஏதோ இனவெறி என்ற மாதிரி சித்தரித்து எழுதுகிறார்கள் ,சிலர் அப்படி பின்னூட்டம் போட்டதையும் கண்டுள்ளேன்.
முதலில் இனவெறி என்றால் என்ன என்று இவர்களுக்கு தெரியுமா?
தமிழர்கள் தமது இனத்தின் மீது பற்று கொண்டிருந்தால் ,அல்லது தமிழரின் மீது அடக்குமுறை செய்பவர்களை,கொல்பவர்களை எதிர்த்து குரல் கொடுத்தால் அதற்குப் பெயர் இனவெறியா? அது இயல்பாக நியாயமாக வரும் ஒரு உணர்வுதானே?தமிழர் மட்டுமல்ல எந்த இனத்தவரும் இதே நிலைப்பாட்டைத்தான் எடுப்பார்கள்.
இனவெறி என்பதற்கு அர்த்தம் -definition இதுதான்
உங்கள் மொழியையும் உங்கள் பண்பாட்டையும் மற்றவர்கள்மீது திணித்தால் அல்லது திணிக்க நினைத்தால் அதற்குப் பெயர் இனவெறி.
இன்னொரு மொழி பேசும் இன்னொரு இனத்தின்மீது அந்த இனத்தை அடிமைப்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் வன்முறையை ஏவினால் அதற்க்கு பெயர் இனவெறி.
இன்னொரு மொழி பேசும் இனத்தின் நியாயமான உரிமைகளை மறுத்தால் வன்முறை கொண்டு அதை அடக்கினால் அது இனவெறி.
இன்னொரு இனத்தை அழிக்க நினைத்து போர் புரிந்தால் அது இனவெறி
தனது இனத்தை காப்பாற்ற சமஉரிமையுடன் வாழ கிளர்ச்சி செய்தால் அது போராட்டம் .
ஈழத்தமிழர் போராடுவதோ அல்லது அந்தப் போராட்டத்ததை இந்திய தமிழரோ அல்லது உலகத் தமிழரோ ஆதரிப்பது இனவெறி அல்ல .
அது நியாயபூர்வமான ஒரு உணர்வு.
ஹிட்லர் யூதர்களுக்கு எதிராக அன்று செய்தது இனவெறி
ராஜபக்ச ஈழத்தமிழருக்கு எதிராக இன்று செய்வது இனவெறி
இந்தியனாக இருந்து கொண்டும் இந்த இன வெறிக்கு எதிராகக் குரல் கொடுக்கலாம்
-வானதி
தமிழ் என்ற அடையாளத்தை கொண்டிருக்கும், குறைந்த பட்சமாய் அதை துறக்கவும், கழுவவும் முடியாமல் இருப்பவர்களுக்கு முதல் எதிரி இந்தியாவும் இந்திய தேசியமும்தான். இன்றய சூழலைவிட தெளிவாக வேறு எப்போதும் இதை உணர முடியாது. இப்போதைக்கு நிச்சயமாக இந்தியா சார்ந்த பிரச்சனைகளில் நமக்கு எந்த சம்பந்தமும் இல்லை என்று மீண்டும் மீண்டும் கிடைக்கும் இடங்களில் எல்லாம், ஈழப்பிரச்சனையை சுட்டிக்காட்டி பேசவேண்டும். வலதுசாரிகள் மட்டுமில்லாது, இடதுசாரிகளிடமும், அருந்திராய்ம் மேதா பட்கர் கும்பலிடமும் சொல்ல வேண்டும். அதே நேரம், நம்மால் இந்தியாவை நேரடியான வகையில், சமரசமின்றி எதிர்ப்பதும் போராடுவதும் சாத்தியமில்லை; ஏதோ ஒரு வகையில் இந்தியா என்ற சட்டகத்துடன் நாம் பிணைக்கப் படுவதை நம்மால் தவிர்க்கவும், தப்பவும் முடியாது; இந்த விஷயத்தில் உணர்ச்சிவசப்படுவதை விட சாமர்த்தியமாகவும் செயல்பட நாம் பழக வேண்டும் என்பதாக நினைக்கிறேன்.
3:37 AM, April 14, 2009பதிவுக்கு வந்தேன்.
3:46 AM, April 14, 2009இன்னுமா(டா) ஒலகம் உங்களையெல்லாம் நம்புது?!
3:49 AM, April 14, 2009உங்கள் தெளிவு என்னையும் தெளிவு பெற வைத்துள்ளது . நன்றி
5:23 AM, April 14, 2009A FANTASTIC WRITE UP
5:39 AM, April 14, 2009REFLECTION OF OUR MINDS
THANKS FOR YOUR TIMELY POST
V RADHAKRISHNAN
P.S CAN I USE SOME TEXT/PARAGRAPH FROM THIS FOR MAIL CIRCULATION
As per your logic, marraati's claim for their identity, kannadiga's claim for their resources, kashmiri's claim for their land, gujarati's claim for their own land without hindus -- all are justified.
10:12 AM, April 14, 2009if you think broader, you can instantly understand that this is not a sustaining thought for a stable world.
in the name of "newfound wisdom in realizing your identity" you look more confused, and more racially biased
PARAMS
ஒரு தெளிவான பார்வை.
10:44 AM, April 14, 2009I came to read this news item today.
1:06 PM, April 14, 2009This is not new ,but the accusing finger towards India is now shifted beyond Tamil newsmedias ,already a French news outlet also published the news about chemical weapons and the Indian army's involvement in the war against Tamils.
Isn't it the duty of the people of India and the media asking their govt some questions about their govt's shameful assistance towards killing of Tamils.
The evidence is mounting against srilanka's genocidal act.
'Are the indian ruling elite partners in crime?'
-vanathy
SRILANKA uses banned CHEMICAL WEAPONS - WebNewsService
http://www.youtube.com/watch?v=4TOEQGl1FJ0&eurl=http%3A%2F%2Fwww%2Efacebook%2Ecom%2Fprofile%2Ephp%3Fid%3D647835374%26v%3Dfeed%26story%5Ffbid%3D148502955374&feature=player_embedded
Richard Anderson of WebNewsService, melbourne, Australia:
As heavy fighting is raging in Northern Sri Lanka, it's reported that the Sri Lankan Army has started using chemical weapons in a bid to overwhelm rebel resistance. The type of weapons used by the Army is called nerve gas which has been categorised as a weapon of mass destruction by the UN according to UN Resolution 687. The use of chemical amunition comes in the wake of heavy losses to the Sri Lankan Army ion the battleground. The offensive divisions 58 and 59 have virtually become defunct and are entirely replenished by Indian troops. The Indian involvement in the conflict doesn't come as a surprise to many. Covert military assistance to Sri lanka by the Indian government was exposed when a contingent of battle tanks were caught in pictures by local media. Early last year the Sri lankan government has released pictures of Indian military commanders holding battlefield discussions with their Sri Lankan counterparts. Unconfirmed reports suggest that nearly a thousand casualties among Indian troopers since january 2009. Casualties apart, it remains to be seen whether Sri Lanka would be sanctioned and prosecuted for its crimes against humanity as it now uses banned chemical weapons.
//அருந்ததி ராய் போன்ற முற்போக்குச் சிந்தனையாளர்களுக்குக் கூட ஈழத்தமிழரின் வலி எளிதில் புரிய மறுக்கிற பொழுது மற்ற இந்தியர்களை எந்தக் காலத்திலும் புரிய வைக்க முடியாது. புரிய மறுக்கும் வரை தமிழினப் படுகொலைகளுக்கு அவர்களும் உடந்தையாகவே இருக்கின்றனர்.
2:56 PM, April 14, 2009//
this is not true. Indian people in general are not bad. The communication gap makes it hard for indian people to come together. this is convenient for the ruling elite to send punjab regiment to madras, madras regiment to kashmir etc. They go and fight not knowing what they are fighting against. The key to get any help from rest of india is to break this comm. gap.
திரு.சொ.சங்கரபாண்டியின் கட்டுரை புனைவுகளற்ற நேர்மையான எளிய அரிய வெளிப்பாடாக அமைந் துள்ளது.
3:42 PM, April 14, 2009சிக்கலற்ற முறையில் தெளிவாகப் புரியும் படியான நடை.
படித்ததில் மகிழ்ச்சி.
நெருடலாக இருந்த ஒரு கருத்து:
///"பொதுவான பண்பாட்டுக் கூறுகளின் அடிப்படையில் இந்தியன் என்ற அடையாளமும்" ////
இந்தியாவில் பொதுவான பணபாட்டுக் கூறுகளாக எதைஎதைக் கூறுவது?
Agree with your comments on Eelam.
3:50 PM, April 14, 2009But if you think you are just a tamil national, better surrender your current passport and get a tamil passport if you can. Please come to Tamilnadu and fight for a separate Tamil nation. That would show how serious you are. Will you be able to do that? I challenge you won't do it. You won't even be able to come out of your family bonds.
Please don't pass these kind of comments unless you have courage to do something meaningful.
//இந்தியாவில் பொதுவான பணபாட்டுக் கூறுகளாக எதைஎதைக் கூறுவது?
3:53 PM, April 14, 2009Chithirai 1 is tamil new year. Look at some other states in India that also celebrate this day with almost same meaning at their home states(although with another name). This is an easy example of common cultural bond.
//தமிழ் என்ற அடையாளத்தை கொண்டிருக்கும், குறைந்த பட்சமாய் அதை துறக்கவும், கழுவவும் முடியாமல் இருப்பவர்களுக்கு முதல் எதிரி இந்தியாவும் இந்திய தேசியமும்தான். இன்றய சூழலைவிட தெளிவாக வேறு எப்போதும் இதை உணர முடியாது.//
6:59 PM, April 14, 2009ரோசாவசந்த், உங்கள் கருத்துக்கு நன்றி. கடந்த 2-3 மாதங்களாக இங்கு நான் சந்திக்கும் தமிழகத் தமிழர்கள் பலரிடம் இதைப் போன்றதொரு புரிதல் ஏற்பட்டிருக்கிறது. முன்பெல்லாம் ஈழச்சிக்கல் பற்றி புலிகள் மீதான தடையினால் அதிகம் அக்கறை காட்டாத தமிழகத் தமிழரெல்லாம் கூட இந்தியாவின் செயல்பாடு கண்டு மனம் நொந்து பேசுவதைப் பார்க்க முடிகிறது.
//
இப்போதைக்கு நிச்சயமாக இந்தியா சார்ந்த பிரச்சனைகளில் நமக்கு எந்த சம்பந்தமும் இல்லை என்று மீண்டும் மீண்டும் கிடைக்கும் இடங்களில் எல்லாம், ஈழப்பிரச்சனையை சுட்டிக்காட்டி பேசவேண்டும். வலதுசாரிகள் மட்டுமில்லாது, இடதுசாரிகளிடமும், அருந்திராய்ம் மேதா பட்கர் கும்பலிடமும் சொல்ல வேண்டும்.//
இப்படித்தான் நானும் நினைக்கிறேன்.
//அதே நேரம், நம்மால் இந்தியாவை நேரடியான வகையில், சமரசமின்றி எதிர்ப்பதும் போராடுவதும் சாத்தியமில்லை; ஏதோ ஒரு வகையில் இந்தியா என்ற சட்டகத்துடன் நாம் பிணைக்கப் படுவதை நம்மால் தவிர்க்கவும், தப்பவும் முடியாது; இந்த விஷயத்தில் உணர்ச்சிவசப்படுவதை விட சாமர்த்தியமாகவும் செயல்பட நாம் பழக வேண்டும் என்பதாக நினைக்கிறேன்.//
இந்தியாவை எதிர்த்துப் போரிடுவது என்பது சாத்தியமில்லை மற்றும் ஆபத்தானது அல்லது தோல்வியில் முடியக் கூடியது என்றுதான் நானும் கருதுகிறேன். அதுமட்டுமல்லாமல் தமிழர் பிரச்னைகளையறியாத ஆனால் மனிதநேயம் கொண்ட எத்தனையோ நல்ல இந்தியர்களின் எதிர்ப்பையும் சம்பாதிக்க நேரிடலாம். நான் இறுதியில் சொல்ல வந்தது இந்தியாவை எதிர்த்துச் செயல்படுவதல்ல. தமிழன் என்ற அடையாளத்துக்கு, இனத்துக்கு இந்தியா எதிரி என்பதை மனதில் நிறுத்துவதன் மூலம் இந்தியாவின் ஆதரவை நம்பியிருக்கக் கூடாது என்பதே. உலகளாவிய அளவில் தமிழர் என்ற அடையாளத்தை நிலைநிறுத்த வேண்டுமென்று சொன்னதை நான் விளக்கமாகச் சொல்லியிருக்க வேண்டும்.
வருணாசிரம இந்தியாவில் ஒடுக்கப் படும் தலித்துகள் இந்தியசாதி ஒடுக்குமுறையைப் பற்றி நிறவெறிக்கு இணையாக உலக அளவில் எடுத்துச் சொல்ல வேண்டும் என்று நினைக்கிறோமோ அதைப்போலவென்று வைத்துக் கொள்ளலாம். தனக்கென ஒரு தொன்மையான வரலாற்றையும், நிலங்களையும் கொண்ட தமிழினம் இன்று சிறுபான்மையினராக பல நாடுகளில் ஒடுக்கப் படுவதை ஆவணப்படுத்தி உலக அரங்குகளில் தமிழருக்கென தனிநாடு அல்லது தனி அங்கீகாரம் கோர வேண்டும். ஐக்கிய நாடுகள் அமைப்பும், மேலை நாடுகளும் எந்தவொரு நாட்டிலும் சிறுபான்மையாக இருக்கும் தமிழர்களின் அரசியல் எதிர்காலத்தைத் தீர்மானிக்க/நிர்ணயிக்க இந்தியா போன்ற தமிழெதிரி நாடுகளைக் கணக்கில் கொள்ளாமல் ஒட்டுமொத்த உலகத் தமிழர்களின் கருத்தைக் கணிக்குமளவுக்கு தமிழர்களின் அடையாளம் வலியுறுத்தப் படவேண்டும்.
யூதர்கள் அவர்களது பூர்வீக நிலங்களை விட்டுப் பெயர்ந்து வெளியேறி பின்னால் அவர்களது இனப்படுகொலைக்குப்பின் பூர்வீக நிலங்கள் எவை என்று சொல்ல ஆதாரங்களைத் தேட வேண்டியிருந்தது. ஆனால் தமிழர்கள் இன்னும் தம்முடைய பூர்வீக நிலங்களில் ஒடுக்கப் பட்டு வருகிறார்கள். எனவே, யூதர்களுக்கிருக்கும் நியாயத்தையும் அங்கீகாரத்தையும் விட தமிழர்கள் பக்கம் அதிக நியாயமும், அங்கீகாரமும் இருக்கிறது என்பதை உலகம் உணரவேண்டும். உலக நாடுகளிலெல்லாம் தமிழர்கள் அதற்குண்டான முயற்சிகளில் இறங்கி உழைக்க வேண்டும்.
நன்றி - சொ.சங்கரபாண்டி
//இந்தியாவில் பொதுவான பணபாட்டுக் கூறுகளாக எதைஎதைக் கூறுவது?//
7:13 PM, April 14, 2009பண்பாட்டுக் கூறுகளென்று நான் சொல்வது இப்படித்தானென்று திட்டவட்டமாக வரையறுத்துச் சொல்லவும் முடியாது, அவையில்லையென்று சொல்லி விடமுடியாத அளவுக்கு நிறைய கூறுகளைக் கொண்டதும் கூட. காட்டாக, உணவு, உடை, சமய வழிபாட்டு முறைகள், இசை, நுண்கலைகள், திரைப்படங்கள் என எத்தனையோ அடுக்கிக் கொண்டு போகலாம். இந்தியா மட்டுமல்லாமல் தெற்காசிய நாடுகள் அனைத்துக்கும் கூட அவை தொடர்புடையவை. அதனால்தான் ஈழத்தமிழர்கள் பலர் தங்களை இந்தியாவுடன் மிக நெருக்கமானவர்களாக நினைக்கின்றனர். இந்தியா பலமுறைகள் முதுகில் குத்தினாலும் கூட ஈழத்தமிழர்கள் இந்தியர்களுடன் (தமிழகத்தவர் மட்டுமல்ல) ஒருவித ஒற்றுமையைத்தான் பார்க்கின்றனர். கிரிக்கெட்டில் அதிகம் ஆர்வமில்லாத நான் ஈழத்தமிழர்கள் இந்திய அணியை மிகுந்த பாசத்துடன் ஆதரிப்பதைப் பார்த்துப் பலமுறை வியந்திருக்கின்றேன். இப்படிப்பட்டத் தமிழர்களைதான் இந்தியா இலங்கை அரசுடன் சேர்ந்து கொன்று குவிக்கிறது.
நன்றி - சொ.சங்கரபாண்டி
All Nationalities in the world have the right of self-determination. I support the establishment of Kurdistan for the Kurdish people in the same way I support Tamil Eelam for the Tamil people in their ancestral home land.
8:54 PM, April 14, 2009I am a Tamil in every sense of the word. At the same time, I respect others. I do not impose anything on other people. India is an artificial country. It never was a single country. Only the British combined various disparate regions in the subcontinent and made it into one country and called it India comprising of what is now called India and what is now called Pakistan.
One is a European due to the geography. At the same time, he is a French, German, or Italian.
When we are discussing things about what is right or wrong, it is simply absurd, to say the least, to retort: " Why don't you surrender your passport, go to Tamil Nadu and fight for an independent country ?" Such persons must first answer the questions: " Why do you have laws which do not allow free speech permitting preaching independence? Are you afraid."
The oppressor makes laws in order to continue to oppress others.
***கடந்த பல வருடங்களாக அமெரிக்க வாழ்க்கை எனக்குள் நடக்கும் அடையாளப் போராட்டத்தில் ஒரு புதிய பரிமாணத்தை அளிக்கிறது. அமெரிக்கன் என்ற அடையாளம் மற்ற அடையாளங்கள் போன்று புறவடிவத்தன்மை கொண்டதாக இல்லாமல், செயல்வடிவம் கொண்டதென்று சொல்லலாம். ஒருவகையில் பார்க்கப் போனால் மார்க்சியமும், பெரியாரியமும் வலியுறுத்தும் தனிமனித விடுதலையை செயல்வடிவமாகக் கொண்டதே அமெரிக்க அடையாளம். ***
9:50 PM, April 14, 2009When you are applying for naturalization, form N-400, you will be asked series of serious questions which probably people say "NO".
* Have you ever been a member of communist party?
* Have you ever been a member of organaizations such as blah blah?
Suppose you say, you were a member of communist party and you believe in marxism or of that sort, I am not sure you will be naturazized easily.
Also, if you say you are a member of an organization considered as a terrorist organization by Americans, you will not be able to become a citizen of USA easily.
So, you cant just be an American and, there is a price you need to pay for that too.
Nothing wrong in having Tamil identity. I think it is the law of any country expects some "loyalty" from their citizens.
So, I dont think it is as simple as you are saying.
//இந்தியாவில் பொதுவான பணபாட்டுக் கூறுகளாக எதைஎதைக் கூறுவது?//
9:50 PM, April 14, 2009இந்தியா முழுமைக்குமான பொதுவான பண்பாட்டுக் கூறுகள் என எதுவும் இல்லை. இந்தியாவின் பல்வேறு பகுதிகளும் வெவ்வேறான பண்பாட்டுக் கூறுகளால் தான் பின்னப்பட்டிருகிறது. பொதுவான பண்பாட்டுக் கூறுகள் என்றால் சீனாவுடன் கூட இந்தியாவின் சில பண்பாட்டுக் கூறுகளை ஒப்பிட முடியும்.
இந்தியா என்ற தேசமே செயற்கையானது. பிரிட்டிஷ் அரசாகத்தின் நிர்வாக வசதிக்காக ஏற்படுத்தப்பட்டு, பின் ஹிந்து மதம் என்ற ஒற்றை தன்மையால் இந்தியா என்ற தனி நாடாக விடுதலையானது.
தென் இந்திய மாநிலங்களுக்கும், வட இந்திய மாநிலங்களுக்கும் இடையேயான வேறுபாடுகள் மிக அதிகம். அது போல காஷ்மீர் இந்தியாவின் பிற மாநிலங்களில் இருந்து முற்றிலும் வேறுபட்டது. அசாம், மணிப்பூர், நாகாலாந்து, சிக்கிம் போன்ற மாநிலங்களின் பண்பாட்டு கூறுகள் தனித்தன்மை உடையது. வட இந்திய மாநிலங்களில் கூட ஒரிசா, மேற்குவங்காளத்தை பிற மாநிலங்களில் இருந்து பிரித்து பார்க்க முடியும்.
இந்தியாவில் இருந்த பொழுதை விட அமெரிக்கா வந்த பிறகு இந்த வேறுபாடுகளை அதிகம் உணர்ந்திருக்கிறேன். தமிழ் பேசும் தமிழ்நாட்டு மற்றும் ஈழத்தமிழ் நண்பர்களை கடந்து என்னால் ஆந்திரா, கேரளாவைச் சேர்ந்தவர்களுடன் மட்டுமே நெருக்கமாக பழக முடிந்தது. ஆந்திராவைச் சேர்ந்தவர்களே எனக்கு மிக அதிகமான நண்பர்கள். எவ்வளவோ முயன்றும் என்னால் வட இந்தியர்களுடன் நெருங்க முடியவில்லை. ஒரே அலுவலகத்தில் வேலை பார்த்த பொழுதும் இதே நிலை தான். பக்கது வீடுகளில் இருந்த பொழுதும் இதே நிலை தான். நியூஜெர்சி போன்ற அதிகளவில் இந்தியர்கள் கொண்ட பகுதிகளில் இந்த வேறுபாட்டினை அதிகம் காண முடியும். தமிழர்களும், ஆந்திர மக்களுக்கும் இடையே இருக்கும் நெருக்கும் வட இந்தியர்களிடம் நிச்சயம் இருக்காது.
இது என்னைச் சார்ந்த தனிப்பட்ட நிலை அல்ல. இப்பொழுதும் sulekha போன்ற தளங்களில் Room mates தேவை என்ற விளம்பரத்தை பார்த்தால், தென்னிந்தியர்கள் தேவை என்ற விளம்பரங்களையும், வட இந்தியர்கள் வேண்டும் என்ற விளம்பரங்களையும் காண முடியும். ஒரு ஆந்திர நண்பனுடன் இயல்பாக ஒரு அறையில் தங்க முடிந்தாலும், வட இந்தியருடன் அவ்வாறு முடிவதில்லை. மொழி ஒரு பிரச்சனை என்றால் உணவு, திரைப்படம் என அனைத்து விடயங்களிலும் வேறுபாடுகள் நேர்ந்து விடுகிறது. கிட்டதட்ட ஒரு வட இந்தியனை வேற்று நாட்டவன் போல தான் பார்க்க முடிகிறது. இதிலே ஹிந்தி தெரியாவிட்டால், என்னவோ ஆங்கிலத்திற்கு அடுத்து ஹிந்தி தான் உலகப்பொதுமொழி என்பது போன்ற ஒரு ஏளனமான பார்வை வேறு ?
இப்படியான வேறுபாடுகளை மறைக்க தான் முதலில் இந்தியன் என்று சொல், தமிழன் என்று சொல்லாதே போன்ற பிரச்சாரங்கள் நம் சிறு வயதில் பள்ளியில் இருந்து நமக்கு போதிக்கப்படுகிறது. செயற்கையான ஒன்றினை வலுவாக்க முயற்சி செய்கிறார்கள். ஆனால் இயல்பாக அதனை நடைமுறைப்படுத்த முடியவில்லை என்பதே உண்மை.
அவனவன் வெளிநாட்டுக்காரர்களை கல்யாணமே செய்துகொண்டு குடும்பம் நடத்துகிறான். உங்களால் ஆந்திரா எல்லையை தாண்டி நட்பு வைத்துக்கொள்ள முடியவில்லை என்றால் குற்றம் யார் மேல்?
10:39 PM, April 14, 2009நானும் அமெரிக்காவில் வசிக்கும் இந்தி தெரியாத தமிழன் தான். எனக்கு கிடைத்த அமெரிக்க, வட இந்திய நண்பர்கள் தமிழ் நண்பர்களை விட அதிகம். அவர்கள் யாரும் என்னிடம் இந்தியில் பேசுவதில்லை. சொல்ல போனால் அவர்கள் பிள்ளைகளிடம் கூட அவர்கள் இந்தியில் பேசுவதில்லை. ஆங்கிலத்தில் தான் பேசுகின்றனர்
மனகதவை சற்றே திறந்து வையுங்கள். வெளிக்காற்று உள்ளே அடிக்கட்டும். பரந்த மனப்பான்மை இருந்தால் உலகம் முழுவதும் இருந்தும் நண்பர்கள் கிடைப்பார்கள். குண்டுசட்டியில் குதிரை ஓட்டும் மனப்பான்மையை கைவிடாவிட்டால் பக்கத்து ஊர்காரனுடன் கூட நட்பு வைத்துக்கொள்ள முடியாது.
1) தேர்தல் சமயத்தில் "வன்னியர் ஓட்டு அன்னியருக்கில்லை" என்பவர்கள் பதிவெழுதும்போது தமிழன் என்று ஜல்லி அடிப்பதை கண்டால் சிரிப்ஸ் கமிங்.
2) என்னமோ புதிதாக இந்தியன் என்ற அடையாளத்தை இப்போது சிலோன் பிரச்சனை காரனமாக துறப்பதாக நீங்கள் எழுதுவதை பார்த்தால் அதை விட சிரிப்ஸ். 2006, 2007ல் எல்லாம் இந்திய தேசபக்தி உங்கள் மனதில் பொங்கி வழிந்தது போல.போங்க சார்...போயி உங்கள் இந்திய பாஸ்போர்ட்டை கிழித்துபோட்டுவிட்டு அமெரிக்க குடியுரிமை வாங்கிகொண்டு செட்டில் ஆகும் வழியை பார்க்கவும். இந்தியாவுக்கு அதனால் நஷ்டம் எதுவும் கிடையாது. Good riddance.
Please see this post also
2:05 AM, April 15, 2009http://karaiyoram.blogspot.com/2009/04/blog-post_14.html
இறுதிப் போரும், இந்திய முதலாளிகளும்!!
பின்காலனியாதிக்க இந்தியாவின் அரசியல் மாற்றங்களும், கொள்கைகளும் ஏக-இந்தியா கோட்பாட்டில் அமைக்கப்பட்டன. ஒரே இந்தியா அல்லது ஏக இந்தியா கோட்பாட்டை வலுப்படுத்தியவர்கள் நேருவும், வல்லபாய் பட்டேலும். வடக்கிற்கும், தெற்கிற்கும் பண்பாட்டு அடிப்படையில் வேறுபாடுகளுண்டு. மொழி, மதம், உணவு, உடை, பழக்க வழக்கங்கள், சடங்குகள், விழாக்கள், கொண்டாட்டங்கள் இவற்றில் தமிழகமும் வட இந்திய பகுதிகளும் ஒத்திருப்பது எங்கே?
4:30 AM, April 15, 2009மதம்? வட இந்தியாவில் பசுவை முன்வைத்து 1950களில் உருவான கலவரமும், பின்னர் ‘பசுவதை’, ‘பசுக்கொலை’ என்ற இந்துத்துவ/பார்ப்பனீய அரசியலை முன்னிறுத்திய போதும் தமிழகத்தின் பங்கு சில வட இந்திய/இந்துத்துவ மட்டங்களுக்குள் மட்டும் முடங்கியது. தமிழக மக்களிடம் தன்னியல்பான கூறுகளாக அவை இருந்ததில்லை. 10ம் நூற்றாண்டுக்கு பின்னர் பிள்ளையார் வட இந்தியாவிலிருந்து தமிழகத்திற்கு இடம்பெயர்ந்த பின்னரும் பிள்ளையார் மக்கள் கடவுளாக, வழிபாடாக இருக்கவில்லை. இராமகோபலன் போன்ற காவிக்கூட்டத்தினர் பிள்ளையார் ஊர்வலத்தை துவங்கிய பிறகு மெல்ல அது நகரங்களிலும், பெருநகரங்களிலும் ஒரு நிகழ்வாக மாறியது. மாரியாத்தா, அய்யனார், சுடலைமாடன், எசக்கி வழிபாடுகளோடு பிள்ளையாரால் கூட்டுசேர முடியவில்லை. இப்போது இந்துத்துவவாதிகள் பிள்ளையாரையும், நாட்டார்வழக்கியல் தெய்வங்களையும் கூட்டுசேர்க்கின்றனர். ராமன் வட இந்தியாவில் பிரதான நாயகன். தமிழகத்திற்கு ராமன் கம்பனின் கதாபாத்திரம். இலக்கிய அடிப்படையில் சிலப்பதிகாரமும், திருக்குறளும் பிடித்திருக்கும் இடத்தை கம்பராமாயணம் பிடித்திருக்கிறதா? இந்த இலக்கியதிலுள்ள கூறுகளில் தமிழர்களின் வாழ்க்கையை பார்த்தால் மேலும் பல விசயங்கள் தென்படலாம்.
மொழி அடிப்படையில் தமிழகத்திற்கும், வட இந்தியாவுக்கும் ஒற்றுமையுள்ளதா? அதுவுமில்லை. உணவு? இல்லை. வேறு எதில் தமிழகமும், வட இந்தியாவும் பொதுவான பண்பாட்டில் இருக்கிறது? ஏக இந்தியா, ஒரே இந்தியா கோட்பாடு ஒரு செயற்கை ஏற்பாடு. என்னைப் பொறுத்தவரையில் பிரிட்டிஸ்காரன் நிர்வாக வசதிக்காக உருவாக்கிய ஒரு ஏற்பாடு இந்தியா. காலனியாதிக்கம் முடிவுக்கு வந்த போதும், அதற்கு பின்னரும் அதன் நிலப்பரப்பும், தளமும் சுரங்கவும், விரிவடையவும் செய்திருக்கிறது. பெரியாரும், அண்ணாவும் இதை நன்கு உணர்ந்தவர்கள்.
இந்த உரையாடலோடு தொடர்புடைய பேராசிரியர். தமிழவன் கட்டுரையொன்று நாகார்ஜுனன் வலைப்பதிவிலுள்ளது.
நச்சினார்க்கினியர், அண்ணாதுரை, ஷெல்டன் - தமிழவன் http://nagarjunan.blogspot.com/2009/04/blog-post_5744.html
சிலரது பின்னூட்டங்கள் கொஞ்சம் சின்னப்பிள்ளைத்தனமாக உள்ளது.
5:24 AM, April 15, 2009இந்திய குடிஉரிமையை ரத்து செய்யுங்கள் ,பரந்த மனப்பான்மை இல்லாதவர்கள் என்ற மாதிரியான சில விமர்சனங்களை வைத்து இந்த விவாதத்தை முடிக்க நினைக்கிறார்கள்.
தமிழன் என்ற அடையாளத்தை கொஞ்சம் வெளிப்பட்டையாகச் சொல்லத்தொடங்கினால் பலருக்கு பிடிக்கவில்லை.ஏனெனில் இந்தியாவை சட்டங்களின் அடிப்படையில்தான் ஒன்றாக வைத்திருக்கிறார்களே தவிர பொதுவான வலுவான பிணைப்பினால் அல்ல.
உண்மையில் முதலில் இந்திய மக்களை தாங்கள் சரிசமமான குடிமக்கள் என்ற எண்ணத்தை எல்லோர் மனத்திலும் வரச் செய்யுங்கள்.அப்படி இருந்தால் தேசிய பாதுகாப்பு சட்டம் போன்ற அடக்குமுறை சட்டங்களால் அவர்களின் குரல்களை நசுக்கி அடக்கத் தேவை இல்லை.
கனடாவில் உள்ள பிரெஞ்சு மொழி பேசும் மக்களுக்கு(quebec) தாங்கள் நினைத்தால் பிரிந்து போகும் உரிமை இருந்தாலும் அவர்கள் பிரிந்து போக நினைக்கவில்லை.
அதே போல் பிரிட்டனில் இருந்து பிரிந்து போக ஸ்கொத்லந்டுக்கு(scotland )உரிமை உள்ளது மக்கள் சர்வஜன வாக்கெடுப்பில்(referendum) ஐம்பது சதவீதத்துக்கு அதிகமாக வாக்களித்தால் அவர்கள் தனி நாடாக பிரிந்து போகலாம் ஆனால் இன்றுவரை அவர்கள் பிரிந்து போகவில்லை
இந்த இரு நாட்டிலும் உள்ள இந்த இரு தேசிய இனங்களும் சமமாக நடத்தப்படுவதால்தான் தாம் கனடியர்கள் ,தாம் பிரிட்டிஷ் காரர்கள் என்ற உணர்வை ஏற்றுக்கொண்டுள்ளார்கள்.இந்த உணர்வு செயற்கையாகத் திணிக்கப் படுவதால் வரமாட்டாது.இயல்பாக மனப்பூர்வமாக வர வேண்டும்.
மற்றது இந்தியாவின் பொதுவான பண்பாடுகள் ,
சில விஷயங்களில் இந்திய மக்களிடம் பொதுவான பண்பாடுகள் உள்ளன ,சில விஷயங்களில் வேற்றுமை உள்ளன அது தென்னாசிய மக்கள் எல்லோருக்குமே பொருந்தும் ,தனியே இந்திய மக்களுக்கு மட்டுமல்ல இந்தியா ,பாகிஸ்தான் பங்களாதேஷ் ,நேபாளம் இலங்கை என்று எல்லா நாடுகளுக்குமே இந்த பொதுவான பண்பாடுகள் சில உள்ளன அதே சமயம் மொழி ,கலைகள் ,உணவு உடை பழக்க வழக்கங்கள் என்று பிரதேச ரீதியாக வேறுபாடுகளும் உள்ளன
இந்தியா என்ற நாடும் ஐரோப்பா என்ற கண்டமும் பல விஷயங்களில் ஒற்றுமை உடையவை ஐரோப்பா வை கிறிஸ்டியானிட்டி என்ற மதமும் சில வெள்ளையின மக்களுக்கே உரிய பண்பாடுகளும் ஒன்று சேர்த்தாலும் மொழி ,மனோபாவம் பழக்கவழக்கங்கள் என்பவற்றில் வேறுபட்டும் உள்ளார்கள் .
இன்றைய உலகில் இந்தியா ஒரு தனித்துவமான அபூர்வமான நாடு(a unique country) இத்தனை மொழிகளையும் பண்பாடுகளையும் கொண்ட பல தேசிய இனங்கள் இப்படி ஒரு நாடாக இருப்பது இந்தியாவில் மட்டும்தான் பல இனங்களைக் கொண்டிருந்த ரஷ்ய நாடு ஏற்கனவே பல நாடுகளாகப் பிரிந்து விட்டது.
கிட்டத்தட்ட இந்தியாவின் நிலையில் தற்போது இருப்பது சீனா மட்டும்தான் ,ஆனால் சீனாவின் பொது மொழியான மண்டரின்(Mandarin Chinese) என்ற எழுத்து மொழி உள்ளது சமீப காலத்தில் தேசிய மொழி என்று உருவாக்கப்பட்ட இந்தியைப்போல அல்லாது இந்த மனடிரின் மொழி சீன பேரரசர்களின் காலத்தில் இருந்தே பல ஆயிரம் ஆண்டுகளாக பொதுமொழியாக இருந்து வருகிறது
சீன தேசிய இனங்களின் பேச்சு மொழிதான் வேறாக இருக்கிறது எழுத்து மொழி ஒன்றுதான்.(all the dialects have same script and same written language)
இந்தியாவில் ஒவ்வொரு முக்கிய மொழிகளும் தமக்கென ஒரு தனித்துவமான எழுத்துமொழியையும் கொண்டுள்ளன.
அப்படி இருக்கும்போது இந்த தேசிய இனங்களை எல்லாம் உங்கள் அடையாளங்களை புதைத்து வைத்துவிட்டு அப்படி வெளிப்படையாகத் தெரிவித்தால் அவர்கள் குண்டுச்சட்டிக்குள் குதிரை ஊட்டுகிறார் என்று எத்தனை நாட்களுக்கு பலவந்தமாக மக்களின் உணர்வுகளை அடக்கி வைத்திருக்கலாம்
எத்தனை நாட்களுக்குத்தான் இந்தி மொழி ,இந்து சமயம் ,இந்திப்படம் ,கிரிக்கெட் ,நேரு குடும்பம் இந்த ஐந்து காரணங்களையும் வைத்து இந்தியாவின் ஒற்றுமையைக் கட்டிக் காக்கப் போகிறீர்கள்.
இவற்றை விட பலமான அத்திவாரங்களை முதலில் உண்டாக்க வேண்டும்.
இப்படி எழுதியதைப் பார்த்து கோபம் கொள்ளாதீர்கள்.
எனது கருத்துக்களை எழுதினேன்.
நான் இந்தியாவின் மீது அன்பு கொண்டவள் ,அந்த நாட்டின் ஆளும் வர்க்கம் ஈழத்தமிழருக்கு செய்யும் அதர்மத்தைக் கண்டு மன வேதனை அடைந்தாலும்
இந்திய நாடு என்ற கட்டமைப்பு குலையாமல் இருக்க வேண்டும் என்று மனப்பூர்வமாக நினைப்பவள்.
-வானதி
வானதி, திரு
11:04 AM, April 15, 2009தெளிவான கருத்துக்கள். நன்றி...
வலைப்பதிவில் இந்தியாவின் முரண்பாடு குறித்து பேசினாலே இந்திய பாஸ்போர்ட்டில் வந்து தான் விவாதம் நிற்கும். இது தான் விவாதத்தை திசை திருப்ப சிலர் பயன்படுத்தும் உத்தி.
விட்டுத் தள்ளுங்கள் :))
எப்படியோ கடைசியாக அண்ணன் சுடலைமாடன் ஒரு பதிவையாவது எழுதிவிட்டார். அல்லது இதை எங்கேயாவது பின்னூட்டமாக போட்டாரா? :-(
11:28 AM, April 15, 2009இந்தியன் என்ற அடையாளம் கடந்த சில வருடங்களாக கொஞ்சம் கொஞ்சமாக என் மனதுக்குள் இருந்து அழிந்து வருகிறது. இன்னும் கொஞ்ச நாளில் ஒட்டுமொத்தமாக க்ளியர் ஆகிவிடும் என்று நம்புகிறேன்.
//வலைப்பதிவில் இந்தியாவின் முரண்பாடு குறித்து பேசினாலே இந்திய பாஸ்போர்ட்டில் வந்து தான் விவாதம் நிற்கும். இது தான் விவாதத்தை திசை திருப்ப சிலர் பயன்படுத்தும் உத்தி.//
11:59 AM, April 15, 2009சிலருக்குள்ள இந்திய தேசிய பித்தமெல்லாம் நேரு குடும்பமும், இந்துத்துவா பண்டாரங்களும் அதிகாரத்திலிருக்கும் வரை தான். மாயாவதி பிரதமராகும்போது இந்த பித்தம் தானாக தெளிந்துவிடும்.
While pushing the Indian government to stop the war, why don't you guys take some effort to make Prabakaran surrender? That would stop the war and stop the killings right? And why don't you go to Tamilnadu and do all this? Atleast are you & your family ready to go to Tamilnadu and cast your vote against congress? Don't just preach. Do something and prove.
12:36 PM, April 15, 2009//vanathy said...
12:42 PM, April 15, 2009Vanathy can you tell clearly what are the things that you lost being and Indian (or disadvantages/difficulties being an Indian) and what are the things that you gained being an Indian?
//உங்கள் அடையாளங்களை புதைத்து வைத்துவிட்டு அப்படி வெளிப்படையாகத் தெரிவித்தால் அவர்கள் குண்டுச்சட்டிக்குள் குதிரை ஊட்டுகிறார் என்று எத்தனை நாட்களுக்கு பலவந்தமாக மக்களின் உணர்வுகளை அடக்கி வைத்திருக்கலாம்
There is nothing wrong to be express yourself as Tamilian but what prevents you to accept other people in India equally? No one will hang you in any part of India just for expressing you as a Tamilian. Have a broad mind please.
--Sudar
//இந்தியாவின் முரண்பாடு குறித்து பேசினாலே இந்திய பாஸ்போர்ட்டில் வந்து தான் விவாதம் நிற்கும்
12:44 PM, April 15, 2009Tamilsasi, If you don't want to be an Indian what is preventing you to shed the passport which symbolizes you as an Indian?
--Sudar
இந்தியா ஒரு வல்லரசு....வல்லர்சு என்பது கெட்ட வார்த்தை....இந்தியா தனது அயுதங்கள் கூர்மையானவை என்று,தமிழர்களை கொல்வதின் மூலம் நிறுபித்து உள்ளது!
8:45 PM, April 15, 2009நான் இந்தியன் என்று சொல்வது கேவலமக உள்ளது!
பாஸ்போர்ட் குறித்து இங்கே கொக்கரிக்கும் அனானிகளுக்கு,
11:12 PM, April 15, 2009பாஸ்போர்ட் என்பது ஒரு நாடு குடிமக்களுக்கு விதிக்கும் ஒரு கட்டுப்பாடு; சலுகை அல்ல. எல்லை தாண்டி பயணம் செய்ய எல்லாநாடுகளும் மக்களுக்கு இவ்வித கட்டுப்பாட்டை விதிக்கின்றன.
ஆங்காங்கே தேசிய கும்மியை அடித்துக்கொண்டிருக்கும் சிலதுகள் ஒருவரின் பாஸ்போர்ட்டை ரத்துசெய்யும் உரிமையை இந்திய அரசு தங்களிடம் கொடுத்திருப்பது போல் அலப்பறை செய்து கொண்டிருக்கின்றன. இந்தியா தேசிய இனங்களை பிரிந்து போக அனுமதித்து விட்டால் எல்லோரும் அவரவருக்குரிய தேசத்தில் தங்கள் கடவு பத்திரத்தை பெற்றுக்கொள்ளுவர்.
பிரிந்துபோக விரும்பிய தேசிய இனங்களை மோசடிகளாலும், பொய் வாக்குறுதிகளாலும், ராணுவத்தாலும், நயவஞ்சகத்தாலும் கட்டிவைத்து அவர்களுக்கு கட்டுப்பாடுகளை விதித்து அவர்களை மொத்தமாகவும் சிறுகச்சிறுகவும் சிதைக்கும் இந்தியா ஒன்றை புரிந்து கொள்ளவேண்டும். இந்திய கூட்டமைப்பின் விசாலமான விதிகளுக்கு உடன்பட்டே இனங்கள் இணைந்திருக்கின்றன. இந்தியர் அனைவரும் சட்டப்படி மட்டுமே இந்தியர்கள். உணர்வால் இணைவது என்பது இசைபட வாழும்போது மட்டுமே சாத்தியம். தேசியம் பேசும் முகவர்களைக்கொண்டு மக்களுக்கு தேசியத்தை ஊட்டமுடியாது. இதை தேசியவாதிகள் புரிந்தே உள்ளனர். ஆனால் இந்த அனானி தேசிய முகவர்கள் மற்றும் அவர்களின் அல்லக்கைகள் தொல்லைதான் தாங்க முடிவதில்லை.
I am not Indian, but fascinated with it. It is unfortunate that throughout the country, there is dissatisfaction and alienation. This is not only in Tamilnadu. Though Tamilnadu still faces central ire for rejecting Hindi, I find that all southern states have issues with one another. Talking with my north India friends, it is the same there. For instance, a Bengali friend gave an good nose-cut when I wrongly generalized north India. Apparently, Bengalis are East Indians:-)
12:07 AM, April 16, 2009On the other hand, India's role in Eelam has always been a grievance. It is unfortunate, that there is so much division among even Tamils, that they cannot come to an agreement on this issue.
Why do you want Prabhakaran? I am assuming that India has punished, more than legal terms, those directly involved. No leader in India would be alive, if so. Do look at the past involved with the riots, communal violence and actions by all, including Congress leadership.
-Kajan
நல்லதொரு பதிவு மற்றும் பின்னூட்ட விவாதங்கள். பல கோணங்களில் சிந்தனையைத் தூண்டுகிறது.
12:29 AM, April 16, 2009ரவி
அடையாளங்கள் என்பது,(பால் அடையாளம் தவிர) நாம் தேர்ந்து கொள்வது.மொழி அடையாளம் உட்பட. இரு மொழி பேசும் குடும்பங்களில் இதைப் பார்க்கலாம். அவசியம் ஏற்படும் போது இதை விளக்கலாம்.
1:13 AM, April 16, 2009அடையாளம் எனச் சொல்லப்படுவதன் அடித்தளம் அது தனிப் பண்பை பிரதிநிதித்துவப்படுத்துகிறது என்பதுதான். உணவு உடை போன்றவை அல்ல. தமிழருக்கு மற்ற இந்தியர்களிடமிருந்து மாறுபட்ட பண்பு என்பது இன்று இல்லை. (இன்று என்பதை அழுத்தி வாசிக்கவும்)
இலங்கையில் நடப்பது, அடையாளங்களுக்கிடையேயான மோதல் அல்ல. அடையாளங்களை முன்னிறுத்தி அதிகாரம் பெறுவதற்கான போராட்டம். அதிகாரம் யார் பக்கம் இருக்க வேண்டும் என விரும்புவர்கள் தங்கள் விருப்பத்திற்கேற்ப நிலைகளை எடுக்கின்றனர்.
இந்தியாவின ஒரு சிறப்பு இந்த முரண்பாடுகளை அங்கீகரிப்பதுதான். அந்த அங்கீகாரம் அதிகாரப்பகிவையும் உறுதிப்படுத்தியிருக்கிறது.
இந்திய அரசியலைக் கவனித்து வந்தால், அங்கு cebterist policiesஏ தொடர்ந்து அதிகாரம் பெற்றிருப்பதைக் காணலாம். கொள்கை அளவில் தீவிர நிலை கொண்டவர்கள் பதவிக்கு வரும் போது கூட அவர்கள் நடுநிலை நோக்கித் தள்ளப்படுகிறார்கள். அதே நேரம், மாநிலங்களில் இந்தத் தீவிர நிலைபாட்டிற்கு ஆதரவு கிடைக்கிறது.
அதாவது என் வீட்டில் நான் எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் பொது இடத்தில் அப்படி இருக்க முடியாது என்ற யதார்த்ததின் அடிப்படையில் உருவான ஒரு போக்கு இது.
இந்த நெகிழ்வு இந்தப் பன்முகத் தன்மையை அங்கீகரிக்கும் ம்னம் உங்களிடமிருக்குமானால் நீங்கள் உங்களை இந்தியனாகவே கருதிக் கொள்ளலாம்.
மாலன்
It is true that the Eelam Tamils of the 80s and 90s largely depended on and savored their relationship with India. That is due to cultural, religious, linguistic and racial unity. Even though Southern states are at loggerheads, they do all come from the same tree. Actually, when you look at India, 70% of the people look like the come from the same tree, even in North,East and West. And coming to Srilanka, basically, I can't tell the difference between Tamils and Sinhalas. Apart from a few cases, like a small percentage in the Malayalee community, Tamils and Sinhalas look the same. I think this theory of Aryan and Dravidan has much folklore and little substance.
1:15 AM, April 16, 2009But if you look today, the young Tamils of Eelam throughout the world, are not asking for India. Now that the fight has gone to the hands of younger generation, most of them first generation citizens of their respective county's, the Indian association took a step back. The young Tamils associate themselves with their Tamil identity and their respective country's.
-Kajan
இந்தியாவின ஒரு சிறப்பு இந்த முரண்பாடுகளை அங்கீகரிப்பதுதான். அந்த அங்கீகாரம் அதிகாரப்பகிவையும் உறுதிப்படுத்தியிருக்கிறது.
2:11 AM, April 16, 2009இந்த நெகிழ்வு இந்தப் பன்முகத் தன்மையை அங்கீகரிக்கும் ம்னம் உங்களிடமிருக்குமானால் நீங்கள் உங்களை இந்தியனாகவே கருதிக் கொள்ளலாம்.
*********************
என்னிடம் மட்டும் நெகிழ்வு இருக்க வேண்டும். உங்களைப் போன்றவர்களுக்கு அது இருக்காது என்றால் அது எப்படி மாலன் ?
இன்றைக்கு இந்தக் கட்டுரையை இங்கு வெளியிட்ட சூழலே இந்த நெழ்வு இந்தியாவிடம் இல்லை, இந்தியர்களிடமும் இல்லை என்பதால் தானே ? இதிலே அருந்ததிராய்
போன்ற அறிவாளிகளும் அடக்கம்.
உங்களிடம் ஒரு கேள்வி ?
ஈழத்தமிழர் விடயத்தில் தமிழகத்தை சேர்ந்த மக்களில் பெருவாரியான மக்கள் தமிழீழத்தை அங்கீகரிக்கிறார்கள் என்பதாக தொடர்ச்சியாக எடுக்கப்பட்ட பல
கருத்துக்கணிப்புகள் வலியுறுத்துகின்றன. தமிழக பத்திரிக்கைகள் எடுத்த கருத்துக்கணிப்புகளை விட்டுத்தள்ளுங்கள். இந்தியன் எக்ஸ்பிரஸ் எடுத்த கருத்துக்கணிப்பும் அதைத் தான் கூறுகிறது.
வெகு சமீபத்தில், சில நாட்களுக்கு முன்பு NDTV எடுத்த கருத்துக்கணிப்பும் அதைத் தான் கூறுகிறது. விடுதலைப் புலிகளை தமிழகத்தைச் சேர்ந்தவர்களில் 66% பேர்
ஆதரிக்கிறார்கள் என்பதாகவும், பெருவாரியான மக்கள் தமிழ் ஈழமே தமிழர்களுக்கு தீர்வு என்பதாகவும் கூறுகிறார்கள் என்பதாகவும் கருத்துக்கணிப்புகள் சொல்கின்றன
.
உங்கள் பார்வையில் இந்தியா தன்னுடைய பல முரண்பாடுகளை அங்கீகரிக்கும் நாடு, ஒரு ஜனநாயக நாடு என்றால் பெரும்பான்மையான தமிழர்களின் உணர்வுகளுக்கு
மதிப்பளித்திருக்க வேண்டும் அல்லவா ? அப்படி மதிப்பளிக்காமையால் தானே நாங்கள் ஒரு புது அடையாளத்தை தேட வேண்டியுள்ளது ?
நம்முடைய உணர்வுகளும், உரிமைகளும் மறுக்கப்படும் பொழுது நாம் பெறும் அடையாளங்கள் மாறும். எல்லா போராட்டங்களும் அடையாளங்கள் சார்ந்தது தான். ஒரு
பெண் சாதாரணமாக அனைத்து உரிமைகளையும் பெற்று கொண்டிருக்கும் பொழுது, இயல்பாக சமூகத்தில் இருக்கும் பொழுது பெண்ணியம் பற்றி பேசுவதில்லை. மாறாக அவள் பெண் என்ற காரணத்திற்காக ஒடுக்கப்படும் பொழுது தான் பெண்ணியம் என்பது குறித்த பார்வை ஏற்படுகிறது.
ஈழத்திலும் தமிழர்கள் என்ற அடையாளம் அந் நாடு விடுதலை அடைந்த பொழுது இல்லை. மாறாக சிங்கள ஆட்சி மொழி சட்டம் கொண்டு வரப்பட்டு தமிழர்கள் மீது
வன்முறை பிரயோகிப்பட்ட பொழுது தான் தமிழன் என்ற அடையாளமே அங்கே பிறந்தது. தொடர்ச்சியான ஒடுக்குமுறை தொடர்ந்த பொழுது தான் அவர்கள் அதிகாரம்
நோக்கியும் நகர்ந்தார்கள். எடுத்த உடனே தங்கள் அடையாளங்களை கொண்டு அதிகாரம் கோரவில்லை. 1956ல் தொடங்கி, 1977ல் தமிழ் ஈழமே தமிழர்களுக்கு தீர்வு என
வந்தடைகிறார்கள்.
சங்கரபாண்டி கட்டுரையில் தெளிவாக கூறியிருந்தபடி, இந்தியா ஈழத்தமிழர்களின் பிரச்சனையை மனிதாபிமான அடிப்படையில் அணுகியிருந்தால் கூட என்னைப் போன்ற பலர் தங்களை இந்தியர்களாக மட்டுமே பார்த்திருப்பார்கள். அப்படி இல்லாமையால் தான் தமிழன் என்ற அடையாளத்தை தூக்கிப் பிடிக்க வேண்டியுள்ளது. மற்ற எந்த
மாநிலத்தவருக்கும் இல்லாத பிரச்சனை இது. அதனால் தான் தமிழர்களின் உணர்வுகள் மற்ற மாநிலத்தைச் சார்ந்தவர்களுக்கு புரியவில்லை.
இந்தியாவின் மேட்டுக்குடியில் பிறந்து வளர்ந்த காந்திக்கு ரயிலில் இருந்து பிடித்து தள்ளப்பட்ட பொழுது தான் தன்னுடைய அடையாளம் குறித்த போராட்டம் தொடங்குகிறது. அது தான் அவரை இந்திய விடுதலை போராட்டத்திற்கு கொண்டு வந்து சேர்க்கிறது. அப்படி ஒரு நிகழ்வு அவர் வாழ் நாளில் நடந்திருக்காவிட்டால் அவர்
அப்படியே இருந்திருக்ககூடும்.
என்னைப் போன்றவர்களுக்கு ஈழப்போராட்டம், சிறீலங்காவிற்கான இந்தியாவின் ஆதரவு போன்றவை புதிய அடையாளப் போராட்டத்தை துவக்கியிருக்கிறது. என்னுடைய
அடையாளம் ”தமிழன்” என்பது மட்டுமே என்ற தெளிவினையும் கொடுத்து இருக்கிறது.
நன்றி...
கருத்துகளை கருத்துகளின் மூலம் எதிர்ப்பதை விட்டு ,ஏதோ இந்தியன் என்று சொன்னாலே தாங்கள் பரந்த மனப்பான்மை உள்ளவர்கள் மாதிரியும் தமிழன் ,வங்காளி ,தெலுங்கன் என்று சொன்னால் அது குறுகிய மனப்பான்மை என்ற மாதிரியும் சொல்லியே இந்திய மக்களின் உணர்வுகளை அடக்கப் பார்க்கிறார்கள்.இப்படியான வார்த்தைப்பிரயோகங்களாலும் ,தேசிய பாதுகாப்பு சட்டம் என்ற அடக்குமுறை சட்டங்கள் மூலமும் கருத்து சுதந்திரத்தை அடக்காமல் வெளிப்படையான விவாதம் செய்வதற்கு ஏன் இந்த தேசிய வாதிகள் தயங்குகிறார்கள்.?
3:30 AM, April 16, 2009வடநாட்டவருடன் தான் பழகுவதை விட தெலுங்கர்களுடன் கூடுதலாகப் பழகுகிறார் என்று சொன்ன 'குற்றத்திற்காக தமிழ் சசியை ஆந்திர எல்லையை கடக்க முடியாத குறுகிய மனப்பான்மை உடையவர் என்ற மாதிரி ஒருவர் விமர்சிக்கிறார்
உங்களுக்கு பரந்தமனப்பான்மை என்பது இந்திய ஆட்சியாளர்கள் செய்யும் எல்லாவற்றையும் (அவர்கள் இன்னொரு நாட்டின் குடிமக்களை ,குழந்தைகளை கொலை செய்வதற்கு உதவி செய்வது உட்பட ) எதிர்க்கேள்வி கேட்காமல் அப்படியே ஆதரிப்பதும் ,இந்தி படிப்பதும் மட்டும்தான்.உங்கள் பரந்தமனப்பான்மை காஷ்மீர் எல்லை மட்டும்தான் ,ஆனால் அவரின் பரந்தமனப்பான்மை அட்லாண்டிக் கடலையும் தாண்டியது.
திரு மாலன் ,அவர்களே,
மொழி என்பது ஒரு தெரிந்தெடுக்கப் பட்ட அடையாளம் என்று சொல்வது இந்தியாவின் எல்லாத் தேசிய இனங்களையும் அடக்குவதற்கு ஒரு கருவியாக இருக்கலாம் , அதுவே உண்மை இல்லை.இந்தியாவில் சில கலப்பு திருமணம் செய்த குடும்பங்களில் இரண்டு மொழி பேசுகிறார்கள் என்ற காரணத்துக்காக அதுவே ஒரு உண்மையான நிலவரம் என்ற மாதிரி சொல்கிறீர்கள்.
கென்யாவில் பிறந்தவர்கள் சுவாகிலி மொழியை மட்டும்தான் குழந்தைப் பருவத்தில் பேசுகிறார்கள் அவர்கள் அங்கே தாங்கள் மொழியைத் தேர்ந்தெடுப்பதில்லை.
சவூதி அரபியாவில் பிறந்த அரபியக் குழந்தைகள் அரபு மொழிதான் தமது தாயுடன் பேசுகிறார்கள்.அங்கே அவர்கள் இதை தேர்ந்தெடுக்கவில்லை
வரலாற்றில் சில சமயங்களில் சில இனங்கள் தமது மொழியை மாற்றியது உண்மைதான் ஆனால் அவை பெரும்பாலும் ஆக்கிரமிப்பாலும் பலவந்தத் திணிப்பாலும் அரச சட்டங்கள் ஆணைகளாலும் தான் நடந்திருக்கின்றன.
உண்மையில் உங்களைப் போன்றவர்களுக்கு இந்தியாவின் ஒற்றுமையைக் காக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தால் முதலில் இந்திமட்டும்தான் இந்தியாவின் தேசியமொழி என்பதை சட்டத்தில் இருந்து அகற்றி விட்டு இந்தியாவில் முக்கிய மொழிகள் எல்லாவற்றையும் தேசிய மொழிகள் ஆக்குங்கள்
இந்தியாவை தேசிய இனங்களின் ஒரு உண்மையான கூட்டாட்சி ஆக்குங்கள் இந்தியா ஒரு சில வடநாட்டுகுடும்பங்களின் சொத்தாக மட்டுமில்லாமல் எல்லா இந்திய மக்களின் சொத்தாகவும் மாற்றுங்கள். .
அங்குள்ள மக்களின் உணர்வுகளை மதியுங்கள் .
புலனாய்வுத்துறை மூலம் புனைகதைகள் பரப்பியும் போலிசை ஏவியும் மக்கள் கருத்துக்களை அடக்காமல் உண்மையான ஒரு ஜனநாயக நாடாக இருக்க முயற்சி செய்யுங்கள்.
ஊடகத்துறையை மேல்தட்டு வர்க்கத்துக்கும் ஆளும் வர்க்கத்துக்கும் ஜால்ரா போடும் அமைப்பாக வைத்திருக்காமல் ,சினிமாவையும் கிரிக்கெட்யும் காட்டி இந்தியமக்களை ப்ரோகிராம் பண்ணி வைத்திருக்காமல் அவர்களை சிந்திக்க கூடியவர்களாக ஆட்சி செய்வோர் செய்யும் தவறுகளை சுட்டிக்காட்டும் துணிவு கொண்டவராக மாற்றுங்கள்
இல்லாவிட்டால் கால ஓட்டத்தில் இந்தியா கூறுபடுவதை தடுக்க முடியாமல் போய்விடும்
நன்றி சசி,
4:45 AM, April 16, 20096 மாதங்கள் முன் வரை இந்திய ஒருமைப்பாடு, இறையாண்மை போன்ற அர்த்தமில்லாத வார்த்தைகளில் பெரிய பொருள் இருப்பதாக
எண்ணியிருந்தேன்.
ஈழப் பிரச்சனைக்கு பிறகு இதன் மீதெல்லாம் வெறுப்பு தோன்றுகிறது.
நீங்கள் சொல்வது போல் தமிழர்களுக்கான அடையாளத்தை மீட்டெடுக்கும் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்
பெரும்பாலான தமிழர்களிடம் போராட்ட குணம் அறவே இல்லாமல் போய் விட்டது.
சனநாயகம் என்ற போலி மயக்கத்தில் எல்லோரும் சொம்பேறிகளாகி விட்டனர்.
// உறுதி பூண்டுள்ளேன், அதற்காக உழைக்கவும் இருக்கிறேன்.//
நானும் தயாராக இருக்கிறேன்
என் மின்னஞ்சல் முகவரி: sreesharan@gmail.com
/But if you look today, the young Tamils of Eelam throughout the world, are not asking for India. Now that the fight has gone to the hands of younger generation, most of them first generation citizens of their respective county's, the Indian association took a step back. The young Tamils associate themselves with their Tamil identity and their respective country's./
6:52 AM, April 16, 2009You nailed it there my friend. We multi-facet-democrazy Indians can not digest this eiher. we want eelam tamilians always beg us. We want them dance to our tunes. Young eelam tamils find their own identities and try to push the struggle through the countries they are born scare us. We want them beg us. "India, Please help us."
மதன்,
2:20 PM, April 16, 2009நன்றி
நாம் பரந்த மனப்பான்மையுடன் இருக்க வேண்டும்.
ஆனால் அவர்கள் பரந்த மனப்பான்மையுடன் இருக்க மாட்டார்கள். காஷ்மீரிலும், வடகிழக்கு மாநிலங்களிலும் நடக்கும் உரிமை போராட்டத்தை பரந்த மனப்பான்மையுடன் அணுக மாட்டார்கள். குறைந்தபட்சம் குஜராத்தில் கொல்லப்பட்ட முஸ்லீம்கள் மீது கூட இவர்களுக்கு எந்த கருணை பார்வையும் இல்லை.
அவ்வளவு ஏன் ? மாயவதியை இந்திய பிரதமராக ஏற்றுக் கொள்ள கூட மாட்டார்கள்.
இந்தியா, இந்தி, இந்து மதம் என்பதில் மட்டும் தான் இவர்களின் பரந்த மன்ப்பான்மை.
எல்லோரும் எந்தக் கேள்வியும் இல்லாமல் தன்னை இந்தியனாக, இந்துவாக, இந்தியை கையில் பிடித்துக் கொண்டு மூச்சுக்கு முந்நூறு தடவை இந்தியன், இந்தியன் என சளவை செய்யப்பட்ட மூளையுடன் முழங்கிக் கொண்டிருந்தால், அவர்களுக்கு பரந்த மனப்பான்மை கொண்ட விசால உள்ளம் படைத்தவர்களாக பட்டம் கிடைக்கும் :)))
வேரைத் தேடுதல், மற்றும் எல்லா தேசியங்களுமே சர்வாதிகாரமாக மாறும் சாத்தியங்களைக் கொண்டிருந்தாலும், தமிழன் என்ற அடையாளம் இன்றைக்கு இருத்தலுக்கான உரிமையைக் கோரும் ஒரு அடையாளமாக முன்வைக்க வேண்டிய சூழலிலேயே இருக்கிறது.
3:30 PM, April 16, 2009இன்றைய சூழலில் அடையாள அரசியலை எதிர்ப்பதற்கே ஒரு அடையாளத்தைத் தளமாகக் கொண்டே இயங்க வேண்டியிருக்கிறது. அப்படியான ஒரு போராட்டத் தளமாகவே இன்றைக்குத் தமிழ் என்ற மொழி அடையாளம் இருக்கிறது.
ஈழப் போராட்டம் அதிகாரம் யார் கையில் இருக்கவேண்டும் என்பதற்கான போராட்டம் என்றால் இந்தியாவின் சுதந்திரப் போராட்டம் கூட அப்படிப்பட்டதுதானே. இது மட்டும் சுதந்திரப் போராட்டமாக வரலாறு பேசவேண்டும் ஈழப் போராட்டம் மட்டும் அடையாளங்களின் சர்வாதிகாரம் என்றும் தீவிரவாதம் என்றும் இனங்காணப்படவேண்டும்.
பள்ளிப்பருவங்களில் தேசியகீதம் என்ற இசை மட்டுமே புரிந்த ஒரு பாட்டைக் கேட்டு கொடியைப் பார்த்தால் மயிர் கூச்சறிவதுண்டு.
இந்தியா என்ற அதிகாரத்தினை நெகிழ்ச்சியோடு கேரள, கன்னட சகோதரர்களை நினைத்து புலகாங்கிதமடைந்த தருணங்கள் அவை.
அனைவருக்கும் சம உரிமையும் அங்கீகாரமும் தரும் இந்தியா என்ற நெகிழ்ச்சியும், பன்முகத்தன்மையைப் போற்றும் இந்திய இறையாண்மையும்
காவிரித் தண்ணீரின் போதும், முல்லைப் பெரியாறு தண்ணீரின் போதும் அதனைத் தொடர்ந்த கலவரங்களின் போதும் பல்லிளித்தது.
இது போன்ற நிகழ்வுகளில் இந்தியாவின் இறையாண்மையைப் பேணிப்பாதுகாக்க விரும்பினால் நமக்குள்ளே சகிப்புத்தன்மை தானாக வரும், உங்களுக்கு நெகிழ்ச்சியும் பன்முகத்தன்மையையும் போற்றத் தெரிந்திருக்குமானால் என்று சிலர் அறிவுரை கூ்றினர்.
ஆனால், வெளிநாட்டிலிருந்து இந்திய வல்லரசுக்குள் ஒரு 20 பேர் திருட்டுத் தனமாக நுழைந்து பல உயிரைக் காவு வாங்கிய போது தனது புஜங்களை மடக்கிக்கொண்டு போருக்கு ஆயத்தமானது எனது இந்தியா.
ஆனால், அனைவருக்கும் சம உரிமை வழங்கும் இந்தியா என்ற பண்முகத்தன்மை கொண்ட வல்லரசு 400 க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் கொல்லப் படும்போது வாயைத் திறந்து ஒரு கண்டனம் கூட சொல்லாமல் அமர்ந்திருந்தது எனது இந்தியா. மும்பைக்காக தனது கடும் கண்டனங்களைத் தெரிவித்ததில் வருத்தமில்லை எனக்கு. ஆனால், இங்கே மீனவர்கள் கொல்லப் படும் போது மட்டும் ஏன் மொளனம்?
தமக்கான குரலை தனது அரசு எழுப்பவில்லையெனில் அவ்வரசைப் புறக்கணிப்பது என்பது இயல்பான சமூக இயக்கம் தானே.
இப்போதெல்லாம் இந்தியா எனும்போது ஒரு மயிரும் கூச்சறிவதில்லை.
கவனமாகவே ஈழப் போராட்டம் பற்றி அதிகம் பேசவில்லை. முதலில் இந்திய இறையாண்மை, புண்ணாக்கு லொட்டு, லொசுக்கு என்ற எல்லா கன்றாவிக்கும் உட்பட்ட கேள்விகளுக்கு இந்திய தேசியவாதிகளிடமிருந்து பதில் வருகிறதா பார்க்கலாம்.
எது நடந்தாலும் தமிழன் மட்டும் ஒன்றினைந்து குரல் உயர்த்திவிடக்கூடாது என்பதில் பலர் தீவிர முனைப்புடந்தான் இருக்கிறார்கள்.
முதலில் இந்தியா என்ற நாட்டை உருவாக்கியபோது மக்களிடம் வந்து உங்களுக்கு இந்திய யூனியனில் இணைய விருப்பமா என்று யாராவது கேட்டார்களா? யாரோ சில நவாப்புகளும், ராஜாக்களும் எழுதி கொடுத்த கடிதங்களை வைத்து ஒட்டு போட்டு வைத்த நாடு இது. எங்கோ இருக்கும் காஸ்மீர பண்டிட்டு களுக்காக நம்மாளு ராமநாதபுரத்திலிருந்து கார்கிலுக்கு போய் சண்டை போடறான். தமிழ்நாட்டு
4:37 PM, April 16, 2009மக்களின் பாதுகாப்பிற்காக யாரும் வருவதில்லை.
சோவியத் யூனியனை உருவாக்கியவர்கள் நீ ஜார்ஜியன் இல்லை, ரஷ்யன் இல்லை. எல்லாரும் சகோதரர்கள் என்று சொன்னார்கள். இன்று என்ன ஆனது?
இந்தியாவுக்கும் அதுதான் நேரும்
>>என்னிடம் மட்டும் நெகிழ்வு இருக்க வேண்டும். உங்களைப் போன்றவர்களுக்கு அது இருக்காது என்றால் அது எப்படி மாலன்?<<
11:33 PM, April 16, 2009என்னிடம் நெகிழ்வுத் தன்மை இல்லை என்று எந்த அடிப்படையில் சொல்கிறீர்கள் என என்னால் விளங்கிக் கொள்ள முடியவில்லை. நான் கருத்து மாறுபடும் போது வாதிடுகிறேன்.அதை ஏற்றுக் கொள்ள வற்புறுத்துவதில்லை.மாற்றுக் கருத்துக்களை வெளிப்படுத்துவதற்கான உரிமையை மறுப்பதுமில்லை. என் பதிவுகளும் பின்னூட்டங்களும் இதற்குச் சான்றளிக்கும்.
>>உங்களைப் போன்றவர்களுக்கு<<
நான் இங்கு எந்த குழ்வையும், அமைப்பையும், நிறுவனத்தையும் பிரதிநிதித்துவப்படுத்தவில்லை.நான் எனக்காகத்தான் பேசுகிறேன்.
உங்கள் கேள்வி குறித்து:
இலங்கையில் தனித் தமிழ் ஈழமா அல்லது கூட்டாட்சியா, அல்லது ஒறறை அரசோடு இணங்கி வாழ்வதா என்ற முடிவை எடுக்க வேண்டியவர்கள் அங்கு வசிக்கும் மக்கள். தமிழ்நாட்டுத் தமிழர்களோ இந்தியாவோ அல்ல.
இந்திய அரசின் எல்லா நடவடிக்கைகளையும் நான் ஆதரிப்பதாக் நீங்கள் எண்ணிக் கொண்டிருக்கிறீர்கள் எனத் தோன்றுகிறது.
இந்தியா இலங்கைக்குச் செய்து வரும் ஆய்த உதவிகளை நான் ஆதரிக்கவில்லை.எந்த இரு தரப்புகளிடையேயும் போர் என்பது தவிர்க்கப்பட வேண்டியது என்பது என் நம்பிக்கை. ஏனெனில் எந்தப் போரும் மக்களுக்கு எதிரானவை. அப்படியே போர்தான் என்றால் அதில் மூன்றாவதாக ஒரு அயல் தரப்பு தன்னை ஈடுபடுத்திக் கொள்ளக் கூடாது என நான் எண்ணுகிறேன்.
ஆனால் இந்திய ஆட்சியாளர்கள் வேறு ஒரு கோணத்தில், புவியியல் பாதுகாப்பு அடிப்படையில் இதைப் பார்க்கிறார்கள் எனக் கருத இடமிருக்கிறது.துரதிருஷ்டவசமாக இலங்கை என்பது இந்தியா சீனா ஆகிய இரு அரசுகளுக்கிடையேயான அதிகாரப் போட்டிக்கான களமாகிவிட்டது.
என் பார்வையும் அரசின் பார்வையும் வேறு வேறாக இல்லாத போது நான் என்னை என் வாக்குகள் மூலம் வெளிப்படுத்திக் கொள்வேன். I will express my dissent/ displeasure through my ballot.வரும் தேர்தலில் இந்த அரசுக்கு வாக்களிக்க மாட்டேன்.
ஆனால் நான் தேர்ந்தெடுத்துக் கொண்ட இந்தியன் என்ற அடையாளத்தைத் துறப்பேனா என்றால் மாட்டேன். ஏனெனில் அது ஏற்கனவே நான் சொன்னபடி, பன்முகத் தன்மையை அதன் முரண்பாடுகளோடு அங்கீகரிக்கும் பண்பை பிரதிநிதித்துவப்படுத்துவதாக நான் நம்புகிறேன்.
இந்திய அரசு என்பது வேறு; இந்திய ஜனநாயகம் என்பது வேறு; இந்திய மக்கள் என்பவர் வேறு. State-Polity-People ஒவ்வொன்றும் ஒனறை ஒன்று சார்ந்திருந்தாலும் இந்தியாவில் அவை நடைமுறைப்படுத்துகிற விழுமியங்கள் (Values)வேறு வேறானவை. இவற்றை ஒரு நேர்கோட்டில் கொண்டுவருவதுதான் இந்த மூன்றையும் பலப்படுத்தும். ஆனால் அதைச் செய்ய முற்படும்போது கலாசார மேலாதிக்கம் (cultural hegemony) ஏற்பட்டுவிடும் ஆபத்திருக்கிறது. இதுதான் இன்று இந்தியர்கள் முன்னுள்ள சவால்.
மாலன்
ரஷ்யாவைப் போல் இந்தியாவும் பிரிந்தால் ரொம்ப நல்லா இருக்கும்.
2:36 AM, April 17, 2009மானங்கெட்ட இந்தியா.
I agree with most parts, but complaining about a certain caste for all the ailments is plain wrong. We have Brahmin boys who died in the Ealam war, and several others are still contributing immensely towards the liberation of Tamils. It is also wrong to selectively pick people from certain caste and claim all are traitors. Believe me; the Tamil traitors come in all shapes and sizes.
3:10 AM, April 17, 2009Simione பிராமணர்களைப் பற்றிச் சொன்னதை நானும் ஆதரிக்கிறேன்
4:29 AM, April 17, 2009ஆனால் தமிழ் சசி இங்கே அதைப் பற்றி வாதிடவுமில்லை அவர்களை தமிழர்களின் எல்லாப் பிரச்சினைகளுக்குமே காரணம் என்று சொல்லவும் இல்லையே?
ஆனாலும் அந்த நண்பர் இந்த விஷயத்தைத் தொட்டுள்ளதால் நானும் எனது கருத்தை தெரிவிக்க விரும்புகிறேன்.
தமிழ் சசி,எடுக்கப்பட்ட தலைப்பில் இருந்து விலகுவதற்கு மன்னிக்கவும்.
அந்தக் காலத்தில் பெரியார் சொன்ன சில பார்ப்பன எதிர்ப்புக் கருத்துக்கள் அந்தக் கால கட்டத்துக்கு தேவையாக இருந்திருக்கலாம் ,ஆதிக்க மனப்பான்மையை வெளிச்சம் போட்டு காட்டுவதற்கு அந்த நேரத்தில் அவருக்கு அது தேவையாக இருந்தது.
அத்துடன் இன்றும் பல பிராமண சமூகத்தைச் சேர்ந்த ஊடகர்களும் ,அரசியல் வாதிகளும் படித்த இளைஞர்களும் பொதுவாகவே ஒரு ஈழ விடுதலைக்கு எதிரான மனப்பான்மையையும் சிங்கள அரசுக்கு ஆதரவான நிலைப்பாட்டையையும் எடுப்பதால் பலருக்கு அவர்கள் மீது ஒரு தார்மீகக் கோபம் இருக்கிறது.
அதற்காக அந்த சமூகத்தை சேர்ந்த எல்லாரையும் ஒட்டுமொத்தமாக திட்டுவதில் எனக்கு உடன்பாடு இல்லை.
அத்துடன் அவர்கள் தமிழர்கள் இல்லை என்று சொல்வதையும் நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன் .
தமிழ் பிராமணர்களின் தாய்மொழி தமிழ்தானே ,தாய்மொழி மட்டுமல்ல முதல் மொழியும் அவர்களுக்கு தமிழ்தான்
ஈழத்தமிழர் மத்தியில் தமிழ்நாட்டில் உள்ளது போன்ற திராவிட பெரியார் பாரம்பரியம் இல்லாதபடியால் தமிழ் உணர்வாளர்களும் பிராமணர்களை அதே கண்ணோட்டத்தோடு பார்ப்பதில்லை.
அதற்கு ஈழவிடுதலைப் போராட்டத்தை அங்குள்ள பிராமண இளைஞர்கள் ஆதரித்தது மட்டுமல்லாமல் பல இளைஞர்கள் போராட்டத்தில் நேரடியாக பங்குபற்றியதும் காரணமாக இருக்கலாம்.
மாவீரர் பட்டியலில் பிராமண இளைஞர்கள் பெயர்களும் இருப்பதைக் காணலாம்.
தமிழ்ச்செல்வன் சிங்கள அரசின் குண்டில் இறந்தபோது அவரைக் காப்பாற்ற எண்ணி அவருடன் சேர்ந்து இறந்த ஆறு போராளி இளைஞர்களில் ஒருவர் பிராமண சமூகத்தைச் சேர்ந்தவர்.
எமது வீட்டில் எனது தந்தை வாங்கிப் போட்ட சுதந்திரன் என்ற பத்திரிகைதான் என்னைப்போன்ற பலருக்கு ஈழத்தமிழரின் விடுதலை உணர்வையும் தமிழ் உணர்வையும் படரச் செய்வதற்கு ஒரு காரணமாக இருந்தது.அந்தப் பத்திரிகையின் ஆசிரியர் கோவை (இது தமிழ் நாட்டுக் கோவை அல்ல யாழ்ப்பாணத்திலுள்ள கோப்பாய்) மகேசன் ஒரு பிராமணர்தான்.
தமிழர்களின் நலனுக்கு எதிராக செயல்படுபவர்கள் தனியே பிராமணர் மத்தியில் மட்டுமல்ல தமிழரின் எல்லாக் குழுவினர் மத்தியிலும் உள்ளார்கள்.
கருணா என்கிற முரளீதரன் பிராமணரா ? ஒரு பிராமணர் அல்லாத தமிழ் சைவர்.
டக்ளஸ் தேவானந்தா பிராமணரா? ஒரு தமிழ் கிறிஸ்துவர்.
சாதி என்கிற ஆதிக்க மனப்பான்மையை தமிழர்கள் மத்தியில் வேரோடச் செய்ததில் பார்ப்பனர்கள் மிகப் பெரிய பங்கை ஆற்றியுள்ளார்கள் என்பதில் சந்தேகம் இல்லை.
ஆனால் அந்த ஆதிக்க மனப்பான்மை இன்று பார்ப்பனர் இல்லாத மற்றைய தமிழர்களிடமும் இருக்கிறது ,அது தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிரான அடக்குமுறையாகவும் வன்முறையாகவும் உருவெடுக்கிறது என்பதை நாங்கள் ஏற்றுக்கொள்ளவேண்டும்
We should deal this in a different way ,no point in fighting the old battles and pointing the finger towards only one group of people.
--வானதி
வானதி,
2:29 PM, April 17, 2009நீங்கள் கூறும் பிராமணர்களைக் குறித்த கருத்தை ஈழத்தை சார்ந்த பார்வையாக மட்டுமே கருத முடியும். சாதி ரீதியிலான ஏற்றத்தாழ்வுகள் ஈழத்திலும், தமிழகத்திலும் ஒரே மாதிரியாக இருந்தாலும் தமிழகத்தில் பிராமண சமூகத்தைச் சார்ந்தவர்கள் ஆதிக்க சாதியினர். ஈழம் போல இல்லாமல் இன்றைக்கும் தமிழகத்தில் ஊடகம் மற்றும் இந்திய அதிகாரமையங்களில் அவர்களின் ஆதிக்கமே உள்ளது.
அவ்வாறான சூழ்நிலையில் ஈழத்தமிழர் பிரச்சனையில் இந்தியாவின் அணுகுமுறைக்கும், தமிழகத்தில் உள்ள ஊடகங்களின் போக்கிற்கும் பிராமணர்களின் தமிழ் தேசியம் சார்ந்த எதிர்ப்பு உணர்வு ஒரு முக்கிய காரணமாக உள்ளதை நாம் மறுக்க முடியாது. இந்திய தேசியத்திற்கு எதிரானதாக தமிழ்தேசியம் கருதப்படுகிறது. அந்த தமிழ்தேசியத்தின் வெற்றியாக தமிழ் ஈழம் கருதப்படும் என்பதால் தமிழகத்தில் உள்ள பிராமணர்களில் பெரும்பாலானோர் தமிழ் ஈழத்தை எதிர்க்கின்றனர். அந்த வகையில் ஈழப்பிரச்சனையைப் பொருத்தவரை பார்ப்பனீயத்தின் நிலைப்பாட்டினை எதிர்க்க வேண்டிய தேவை உள்ளது. காங்கிரஸ் போன்ற கட்சிகளின் நோக்கங்கள் பல்வேறு காலங்களில் அதன் தலைமைக்கு ஏற்றவாறு மாறிக் கொண்டே இருந்திருக்கிறது. ஆனால் ஆரம்பம் முதலே சோ போன்றவர்களின் நிலைப்பாடுகளில் எந்த மாற்றமும் இல்லை. இந்திய தேசியத்திற்கு எதிரானதாகவே தனி ஈழத்தை இவர்கள் பார்க்கின்றனர்.
திரு. மாலன் பேசுவது ஏட்டுச் சுரைக்காய், புத்தகப் பரப்புரை. மாலனைப் போன்று இந்தியாவிலும், என்னைப் போன்று அமெரிக்காவிலும் சுகமான வாழ்க்கை வாழ்ந்து கொண்டு “இந்தியாவின ஒரு சிறப்பு இந்த முரண்பாடுகளை அங்கீகரிப்பதுதான்“ போன்ற தத்துவங்களை உதிர்த்துப் பெருமிதமடையலாம். “என் பார்வையும் அரசின் பார்வையும் வேறு வேறாக இல்லாத போது நான் என்னை என் வாக்குகள் மூலம் வெளிப்படுத்திக் கொள்வேன்” என்று மக்களாட்சி நாயகனாகக் காட்சி தரலாம்.
8:21 PM, April 17, 2009ஆனால் நான் பேசுவது ஈழத்தில் ஐம்பதாண்டுகளுக்கும் மேலாக அரசு பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடும் தமிழர்கள் வாழும் இரத்தக் களத்தை அடிப்படையாக முன்வைத்து. மாலன், கொஞ்சம் உறக்கத்திலிருந்து கண்விழித்து யதார்த்தத்தைப் பாருங்கள். நீங்கள் விழித்துதான் இருக்கிறீர்கள், அப்பாவித் தமிழர்களைத் தேசிய மது ஊற்றி உறங்க வைப்பதுதான் உங்கள் நோக்கம் என்பது தெரியும். ஏன் உங்கள் வாக்குகள் மட்டும்தான் உயர்ந்தனவோ. ஈழத்து மக்கள் ஒட்டு மொத்தமாகத் தனிநாடுதான் தீர்வு என்று வாக்களித்தார்களே. பின் என்ன மயித்துக்குப் (இந்தக் கோபம் இந்தியா மேல்) பாசிச இந்தியா அவர்கள் மேல் தன்னுடைய தீர்வைத் திணிக்கிறது? நீங்களும் அதனை உங்கள் நாடு என்று ஆதரிக்கிறீர்கள். உடனே புலிகளின் வன்முறையைப் பற்றிப் பேசுவீர்கள். வன்முறை செய்யாத மலையகத் தொழிலாளர்களான இந்தியத் தமிழர்களுக்கு இந்தியா என்ன செய்தது என்று கேட்டால் காணாமல் போய் விடுவீர்கள்.
இந்தியாவில் மட்டும் என்ன வாழ்கிறது? இந்தியதேசிய வெறியர்களின் வேண்டுகோளுக்கிணங்க சீமான் போன்றவர்களின் பேச்சுரிமைக்கெதிராக வேண்டுமென்றே அரசு அடக்கு முறையைக் கையாளுகின்றது. மேலும், கலாச்சார மேலாதிக்கம் (cultural hegemony) தம்முடைய அடையாளங்களைப் பாதிக்காதவரை இந்தியத் தேசியம் பேசித்திரியலாம். ஆனால் நடைமுறையில் இருப்பது என்ன? தமிழர்களையே தம் பண்பாட்டின் மேல் வெறுப்பும், தாழ்வு மனப்பான்மையும் கொள்ளும் சூழ்நிலை திட்டமிட்டு வளர்க்கப் படுகிறது. மிகச் சிறிய எடுத்துக்காட்டு, தொலைக் காட்சித் தொடர்கள் வளர்த்தெடுக்கும் பிம்பங்கள்.
நண்பர் ஒருவர் கேட்டார், ஏன் பெரும்பாலான தொலைக் காட்சித் தொடர்களில் நீங்கள் வில்லனாக வருகிறீர்களென்று. சங்கரபாண்டியன் என்ற பெயர்தான் முக்கிய வில்லனாக நிறைய தொலைக் காட்சித் தொடர்களில் வைக்கப் படுகின்றது என்றார். நான் சொன்னேன், ஒரு காலத்தில் தமிழ்ப் படங்களில் மைக்கல் இரவுடியாகவும், ஸ்டெல்லா நடத்தை கெட்ட நவீனப் பெண்ணாகவும் வந்து கொண்டிருந்தார்கள். அப்பொழுதெல்லாம் முனியன், பாண்டியன் எல்லாம் வில்லனின் கைத்தடிகளாகவும், நாயகன்களின் எடுபிடிகளாகவும்தான் வருவார்கள். இப்பொழுது முக்கிய வில்லன்களாகப் பதவி உயர்வு கிடைத்திருக்கிறது என்றேன். இராகவன்களும், ஸ்ரீகாந்த்களும் கெட்டவர்களாக இருந்தாலும் இரவுடிகளாக, கொலைகாரர்களாக காண்பிக்கப் படுவதில்லை. நடப்பில் சங்கராச்சாரியாரே கொலைக் குற்றத்தில் மாட்டி சிறைக்குப் போய் வந்தாலும் இத்தொடர்கள் முன்வைக்கும் கலாச்சார மேலாதிக்கத்தை மாற்ற முடியாது. அப்பணியை பாண்டியனும்,முனியனுமே முன்வந்து செய்யுமளவுக்கு மழுங்கடிக்கப் படுகின்றனர். இது மாதிரியான மழுங்கடித்தலுக்கு உதவுவதே இந்தியத் தேசியம் போன்ற மதுபானங்கள்.
நன்றி - சொ.சங்கரபாண்டி
என் பார்வையும் அரசின் பார்வையும் வேறு வேறாக இல்லாத போது நான் என்னை என் வாக்குகள் மூலம் வெளிப்படுத்திக் கொள்வேன். I will express my dissent/ displeasure through my ballot.வரும் தேர்தலில் இந்த அரசுக்கு வாக்களிக்க மாட்டேன்.
10:40 PM, April 17, 2009ஆனால் நான் தேர்ந்தெடுத்துக் கொண்ட இந்தியன் என்ற அடையாளத்தைத் துறப்பேனா என்றால் மாட்டேன். ஏனெனில் அது ஏற்கனவே நான் சொன்னபடி, பன்முகத் தன்மையை அதன் முரண்பாடுகளோடு அங்கீகரிக்கும் பண்பை பிரதிநிதித்துவப்படுத்துவதாக நான் நம்புகிறேன்.
******
மாலன்,
இந்த வரிகள் இந்திய தேசியத்தின் மேல் இருக்கிற உங்களின் ஆழ்ந்த பற்றினை வெளிப்படுத்துகிறது. அதனால் ஓட்டு போட்டு எல்லாவற்றையும் மாற்றி விடலாம் என்ற எளிமையான பார்வையுடன் அணுகுகிறீர்கள்.
ஆனால் ஓட்டுகளால் கட்சிகளையும், அரசுகளையும் மாற்றினாலும் மாற்றவே முடியாத சில கொள்கைகள் உள்ளன. அது தான் ஆளும் அதிகாரமையத்தின் கொள்கை. காங்கிரஸ், பாஜக, மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் போன்ற அனைத்து கட்சிகளுக்கும் பொதுவான தன்மைகள் பல விடயங்களில் உண்டு. அந்த பல விடயங்கள் தான் இந்திய அதிகாரமையத்தின் கொள்கைகளாக உள்ளன. அதிகாரமையத்தின் கொள்கை எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் பெரிய மாற்றங்களை கண்டு விடாது.
பாரதீய ஜனதா கட்சிக்கும், காங்கிரசுக்கு எனக்கு பெரிய வேறுபாடு எதுவும் தெரியவில்லை. பாரதீய ஜனதா மதவாதத்தை தூண்டுகிறது. காங்கிரஸ் அதனை செய்ய வில்லை என்பது போன்ற சில வேறுபாடுகளை கடந்து வெளிநாட்டு கொள்கை, முதலாளித்துவ பாணியிலான கொள்கை, இந்திய இராணுவ கொள்கை எல்லாவற்றுக்கும் மேலாக இந்திய உளவுக் கொள்கை போன்றவற்றினை ஓட்டு போட்டு மாற்றி விடலாம் என மூத்த பத்திரிக்கையாளரான நீங்கள் நம்புகிறீர்களா ?
என்னைப் பொறுத்தவரையில் இந்தியன் என்ற அடையாளத்தை துறக்க வேண்டிய காரணங்களாக நான் கருதுவது, இந்தியா பெருவாரியான தமிழகத் தமிழர்களின் உணர்வுகளை புறக்கணித்து உள்ளது. தமிழக மீனவர்கள் சுட்டுக் கொல்லப்படுவதற்கு இன்று வரையில் பெரிய நடவடிக்கை எதுவும் இல்லை. தமிழக தமிழர்களின் உணர்வுகளை புறக்கணித்து ஈழத்தமிழர்களின் நலன்களுக்கு எதிராக முடிவு செய்யும் இந்திய அதிகாரமையத்தில் தமிழகத்தின் பங்களிப்பு என்று எதுவும் இல்லை. தமிழர்களை சார்ந்த முக்கிய பிரச்சனையில் தமிழர்களின் பங்களிப்பு இல்லாத பொழுது இந்தியன் என்ற அடையாளத்தை சுமந்து என்ன செய்வது ?
தொடர்ச்சியாக இந்தியா இதைத் தான் செய்து கொண்டிருக்கிறது. ஈழத்தமிழர்களின் தேவையை ஈழத்தமிழர்கள் தான் முடிவு செய்ய வேண்டும் என்ற உங்களது வாதம் 100% உண்மை. ஆனால் அப்படி ஏதாவது நடக்க இந்தியா விட்டிருக்கிறதா ? 1983ல் தொடங்கி இன்று வரை இந்தியாவின் தலையீடு என்பது எதன் அடிப்படையில் அமைந்து இருக்கிறது ? இந்தியாவின் தலையீடு இல்லாத தெற்காசிய நாடு எது ? பாக்கிஸ்தான் உட்பட அனைத்து நாட்டு உள்விவகாரங்களிலும் இந்தியாவின் தலையீடு இல்லை என்பதை மறுக்க முடியுமா ? அப்படி எல்லா தலையீட்டினையும் செய்து விட்டு, சிறீலங்காவிற்கு ஆயுத, இராணுவ உதவிகள் செய்து விட்டு தமிழர்களுக்கு மனிதாபிமான அடிப்படையில் போர் நிறுத்தம் செய்ய வேண்டும் என்னும் பொழுது மட்டும் அடுத்த நாட்டு உள்விவகாரங்களில் தலையிட முடியாது என கூறுவது வேடிக்கையான நகைச்சுவையாக இருந்தாலும், தமிழர்களின் மனதில் இந்திய அடையாளத்தை துறப்பதற்கான முக்கிய காரணமாக இந்தியாவின் இந்த இரட்டை வேடமே உள்ளது.
>>> இந்திய அரசு என்பது வேறு; இந்திய ஜனநாயகம் என்பது வேறு; <<<<
அதைத் தான் நானும் சொல்கிறேன். இந்தியாவின் அரசுகள் மாறினாலும் கொள்கைகள் மாறாது. அடிப்படையில் யார் ஆண்டாலும் இந்தியாவின் அணுகுமுறை மாறாது என்னும் பொழுது ஜனநாயகம் இருந்தால் என்ன ? சர்வாதிகாரம் இருந்தால் தான் என்ன ?
அமெரிக்காவில் இருப்பதை நான் ஜனநாயகமாக கருதுகிறேன். காரணம் இங்கே சாமானியனால் கூட ஆட்சியை கைப்பற்ற முடியும். ஆனால் இங்கேயும் எந்தக் கட்சிகள் வந்தாலும் மாறாத விடயங்கள் உள்ளது.
இப்படியான அதிகாரமையத்தின் கொள்கை தான் அரசின் மீதும், அரசாங்கத்தின் மீது நம்பிக்கையின்மையை ஏற்படுத்துகிறது. அது தான் பல இடங்களில் தீவிரவாதத்திற்கு வழிவகுக்கிறது.
அனிதா பிரதாப் ஒரு முறை எவ்வாறு ஆயுதப் போராட்டங்கள் தொடங்குகிறது என்பது குறித்து பேசும் பொழுது அரசு, ஊடகம், இராணுவம் என அனைத்து அதிகாரமையங்களும் மக்களின் உணர்வுகளை புறக்கணிக்கும் பொழுது தான் அது ஆயுதப் போராட்டமாக மாறுகிறது என கூறினார். இன்றைக்கு இந்திய அரசாங்கம், இந்திய ஊடகங்கள் என அனைத்தும் தமிழர்களின் உணர்வுகளுக்கு எதிராக செயல்படுகிற பொழுது “இந்தியன்” என்ற அடையாளத்தை உதறுவது தவிர வேறு வழியில்லை என்றே தோன்றுகிறது. காஷ்மீர், அசாம், நாகாலாந்து என பல இடங்களிலும் இந்தியாவில் நடந்து வரும் ஆயுதப் போராட்டங்களுக்கு இந்திய அரசாங்கத்தின் மீதான நம்பிக்கையின்மை தான் காரணம். அங்கெல்லாம் நடப்பது அடையாளப் போராட்டமே. தமிழகம் அந்த நிலைக்கு செல்ல வேண்டாம் என்பதும், செல்லக்கூடாது என்பதும், நிச்சயம் செல்லாது என்பதும் என் எண்ணம்.
ஆனால் இந்தியா என்ற தேசத்தின் மீதான வெறுப்பினை பெருவாரியான தமிழக மக்கள் மத்தியில் இந்திய அதிகாரமையம் விதைக்க தொடங்கி விட்டது என்பதே நான் கூற விரும்புவது.
>>> என்னிடம் நெகிழ்வுத் தன்மை இல்லை என்று எந்த அடிப்படையில் சொல்கிறீர்கள் என என்னால் விளங்கிக் கொள்ள முடியவில்லை. <<<
மாலன்,
இது ஒரு வாசகனாக உங்களைப் பற்றிய எனது கருத்து. தினமணிக்கதிரில் நீங்கள் ஆசிரியராக இருந்த பொழுதில் இருந்து உங்களின் பல்வேறு எழுத்துக்களை வாசித்து வருகிறேன். அதன் அடிப்படையில் உங்களைச் சார்ந்து என் மனதில் படிந்த பிம்பம் என்று சில விடயங்கள் உண்டு. உங்களிடம் பிடித்த தனிப்பட்ட குணநலன்கள், எழுத்து சார்ந்த விடயங்கள் உண்டு. ஆனால் ஈழப்பிரச்சனையை சார்ந்த உங்களது பார்வை புலிகள் எதிர்ப்பு, இந்திய தேசிய ஆதரவு என்ற கோணத்திலேயே கட்டமைக்கப்பட்டு இருந்ததாகவே நான் நம்புகிறேன். தினமணிக்கதிரில் நீங்கள் ஆசிரியராக இருந்த பொழுதில் இருந்து இதற்கு எத்தனையோ உதாரணங்களை என்னால் கொடுக்க முடியும். ஈழப்பிரச்சனையை சார்ந்த உங்களது நிலைப்பாடுகள், ஹிந்து பத்திரிக்கையின் போக்கினை மிக எளிமையாக அணுகும் உங்களது பார்வை போன்றவை சார்ந்ததே என்னுடைய இந்தக் கருத்து.
நன்றி...
பா.ஜ.கவும், காங்கிரசும் பொருளாதார மற்றும் வெளியுறவுக் கொள்கையில் மாறுபட்டவையல்ல என்பது சரி.
5:32 AM, April 18, 2009மதச்சார்பின்மை விசயத்திலும் காங்கிரசுக்கு தெளிவான, நேர்மையான நிலைபாடில்லை என்று கருதுகிறேன்.
இந்துத்துவ மதக்கலவரங்கள் உருவான இடங்களில் காங்கிரசின் நிலைபாடு நேர்மையானதாக இல்லை. பாபர் மசூதி இடிக்கப்பட்ட போது மத்தியில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தது. கல்யாண்சிங் உ.பியில் ஆட்சியில் இருந்ததால் மாநில நிர்வாகத்தின் சம்மதமில்லாது மத்திய அரசு தலையிட முடியாது என்று காங்கிரஸ்காரர்கள் பேசினர்.
பாபர்மசூதி இடிக்கப்படுவதை வேடிக்கை பார்த்தது காங்கிரஸ். மதவெறியை பரப்பிய அத்வானியின் ரத யாத்திரைக்கு மாநிலங்களில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் அரசு தடையாக இருந்ததா? வி.பி.சிங் அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்துவதற்காக ராஜீவ் காந்தியின் மறைமுக ஆசியும், ஆதரவும் ரதயாத்திரைக்கு இருந்தது.
சேதுக்கால்வாய் திட்டத்தில் ராமன் பற்றிய 'அபிடவிட்' தாக்கல் செய்த வேகத்தில் வாக்குகளுக்காக பின்வாங்கியது காங்கிரஸ். மதச்சார்பின்மையும், மதவெறியும் வாக்குவங்கிகளுக்காக பயன்படுகின்ற நிலையில் காங்கிரசும், பா.ஜ.கவும் பார்ப்பனீய இந்திய நாணயத்தின் இரு பக்கங்கள். இரண்டு கட்சிகளின் புனிதபண்டங்கள் ஒற்றை தேசியமான இந்திய தேசியம், இந்தி, இந்துமதம்.
--
மாநிலங்களின் உரிமையை மதித்திருந்தால் ஈழப்பிரச்சனையில் தமிழக சட்டமன்றத்தின் அனைத்துக்கட்சி தீர்மானத்தை மதித்து சிறீலங்கா அரசுக்கு செய்துவருகிற உதவிகளை நிறுத்தியிருக்க வேண்டும். போர் தானாக நின்றிருக்கும். செய்தார்களா?
சோனியா காந்தியின் விருப்பு, வெறுப்புகளுக்காக செயல்படுகிற நிறுவனமாக இருக்கிறது காங்கிரஸ். நாளையே ராகுல்காந்தி இந்தியாவின் பிரதமர் என்று சோனியா சொன்னால் மறுக்கும் நிலையில் காங்கிரஸ் தலையாட்டிகள் இல்லை. காங்கிரஸ் என்ன கருணாநிதியே சோனியாவின் தலையாட்டியாக மாற்றப்பட்டுவிட்டார்.
இந்திய தேசிய அடையாளம் தமிழர்களின் குரல்வளையை நெறிக்க பயன்படுகிற தூக்குக்கயிறு.
----
இந்தியன் என்னும் அடையாளம் ‘கலாச்சார தேசியம்’ (பா.ஜ.க தேர்தல் அறிக்கை ஒன்றில் கலாச்சார தேசியம் இந்திய அடையாளமாக பேசப்பட்டது) என்கிறது இந்துத்துவம். தமிழகம் இந்துத்துவத்தை சுமார் 30 ஆண்டுகளாக எதிர்கொண்டு வந்தாலும், மரபுரீதியாக நீண்டகாலமாக பார்ப்பனீயத்தை/இந்துத்துவத்தை எதிர்த்தே வந்திருக்கிறது. தற்பொழுது இந்துத்துவ எதிர்ப்பு இந்தியா முழுமையும் பரவலாக காணப்பட்டாலும், கோட்பாட்டு அடிப்படையில் எதிர்ப்பதில் தமிழகம் முதன்மையாக இருப்பதை பெரியாரின் இந்திய/இந்து/இந்தி மறுப்போடு நாம் இங்கு புரிந்துகொள்ள வேண்டும்.
அந்த எதிர்ப்பிற்கு திராவிடம்/திராவிடர், தமிழர் அடையாளங்கள் தேவைப்பட்டது. இன்று பண்பாட்டு அடிப்படையிலும், அரசியல் அடிப்படையிலும் தமிழர்கள் தங்களை காத்துக்கொள்ளும் இடத்திற்கு இந்திய தேசியம் தள்ளியிருக்கிறதென்று கருதுகிறேன். தமிழர்கள் தானாக விலகிச்செல்வதாக கருதமுடியாது. இந்திய தேசியத்தின் துரோகமும், பழிவாங்கலும், ஆதிக்கமும், காழ்ப்புணர்வும், சந்தேகப்பார்வையும் தமிழர்களை வேறொரு தளத்தில் தள்ளியிருக்கிறது. இந்திய தேசியத்தின் காலடியில் அடிமையாக வீழ்ந்து போன திமுக/கருணாநிதியின் வரலாற்றிலிருந்து நாம் பாடங்களை கற்கமுடியும்.
தற்போதைய காலகட்டத்தில் இந்திய தேசியத்திற்கு சவாலான தலைமையும், இயக்கமும் தமிழகத்தில் வலுப்பெறவில்லையென்றே கருதுகிறேன். பெரியார் துவங்கிய இந்திய தேசிய எதிர்ப்பு அவரது 'விரல்பிடித்து நடந்த சீடர்கள்', 'இரட்டைக்குழல் துப்பாக்கிகளால்' வலுவிழக்க வைத்தனர். ஈழப்பிரச்சனையில் அப்பட்டமாக இது வெளிப்பட்டதுடன், இளம் தலைமுறையினரையும் சிந்திக்க வைத்துள்ளதென்று கருதுகிறேன்.
நானும் ஒரு இந்தியனாக என்னை நினைத்து உண்டு இந்தியாவின் வளர்ச்சிஇல் மகிழ்ச்சி அடைந்ததும் உன்டு ஆனால் கண்டிபாக இப்போது இல்லை. இந்த ஈழ போராட்டம் அதில் இந்திய அரசின் தலையீடு என்னை மிகவும் தெளிவாக மாற்றிவிட்டது. இந்தியனாக இருக்கவேண்டும் என்ற எண்ணம் நூறு விழுக்காடு இல்லை இப்பொழுது. இந்திய ஒரு அடக்கு முறை நாடு. அதனுடன் உள்ள ஒரு இனத்தை மதிக்க தெரியாத கேவலமான நாடு. இப்படி ஒடுக்கு முறை உள்ள நாட்டின் குடிமகன் என்று சொல்லிகொள்வதில் பெருமை கண்டிபாக இல்லை. நான் முதலில் தமிழன் என்று தெழிவு கிடைத்தது இந்த ஈழ போராட்டம். இந்தற்கு முன்னால் இருந்த தமிழ் ஈழ ஆதரவு மட்டும் என்று இருந்தது கடந்த இரண்டு மூன்று வருடத்தில் ஈழத்தின் சுதந்திரம் எனது சுதந்திரமாக .உலக தமிழரின் சுதந்திரமாக மாறிவிட்டது. நல்லபதிவு அண்ணன் சங்கரபாண்டி மிகவும் அழகாக எடுத்து சொல்லி உள்ளார். நன்றி!
6:04 AM, April 18, 2009///
1:06 PM, April 18, 2009தமிழருக்கு மற்ற இந்தியர்களிடமிருந்து மாறுபட்ட பண்பு என்பது இன்று இல்லை. (இன்று என்பதை அழுத்தி வாசிக்கவும்)
///
இது தான் மாலன் போன்றவர்களின் நகரம் சார்ந்த பார்வை. தமிழகத்திற்கு இன்றைக்கும் தனித்தன்மையுடைய பண்பாடுகள் உள்ளன. எதிர்காலத்திலும் இருக்கும். சிறு தெய்வ வழிபாடுகள் தமிழகத்திற்கே உரியது. இதனை வேறு மாநிலங்களில் காண முடியாது. சிறு தெய்வ வழிபாடுகள், அதற்கேயுரிய படையல்கள் போன்றவை தமிழகம், திராவிட பண்பாட்டின் அடையாளம். அதை சிதைத்து இந்துத்துவ பண்பாடுகளை திணிக்கவே ஜெயலலிதா சங்கரமடத்தின் அறிவுரையால் மிருகங்களை பலியிடுவதை தடை செய்யும் சட்டத்தை கொண்டு வந்தார். ஆனால் தமிழர்களின் எதிர்ப்பால், தேர்தல் தோல்வியால் அந்த சட்டம் திரும்பப் பெற்றுக் கொள்ளப் பட்டது. தங்கள் அடிப்படையான பண்பாடுகள் தடை செய்யப்படுவதை தமிழர்கள் எதிர்ப்பார்கள்.
இரண்டு வேறு நாடுகளைச் சார்ந்த தம்பதிகள் கூட திருமணம் செய்து கொண்டு வீட்டில் இரு வேறு மொழிகளை பேசுகிறார்கள். அதனால் ஜப்பானும் ஒன்று, இந்தியாவும் ஒன்று என வாதிட முடியுமா ?
மாலன் சொல்வது:
1:49 PM, April 18, 2009////
தமிழருக்கு மற்ற இந்தியர்களிடமிருந்து மாறுபட்ட பண்பு என்பது இன்று இல்லை. (இன்று என்பதை அழுத்தி வாசிக்கவும்)
///
அனானி சொல்வது:
//இது தான் மாலன் போன்றவர்களின் நகரம் சார்ந்த பார்வை.//
இது நகரம் சார்ந்த பார்வை அல்ல. "இந்தியா, இந்து, இந்தி" என்று ஒற்றைப்பரிமாணப் அடையாளத்தைக் கட்டமைக்க தொடர்ந்து முயன்று வரும் பார்ப்பனியப் பார்வை. இதை திராவிட, தமிழ்தேசிய அரசியலில் நம்பிக்கை வைத்தவர்கள் தொடர்ந்து எதிர்த்து வர வேண்டும். (தேவைப்படும்போது திராவிட அரசியல் முகமூடியை மாட்டிக்கொள்ளவும் மாலன் தயங்க மாட்டார்). ஒன்றுபட்ட இந்தியா என்ற அரசியல் அமைப்பில் இன்று (இன்று என்பதை அழுத்தி வாசிக்கவும்) இணைந்திருப்பதால் திராவிட-தமிழ் அடையாளங்களை இழக்கமாட்டோம் என்பதை மாலன்களுக்கு தொடர்ந்து நினைவுபடுத்திக்கொண்டே இருக்கவேண்டும்.
//இதுதான் இன்று இந்தியர்கள் முன்னுள்ள சவால்//
5:39 AM, April 19, 2009இந்தியர்கள் முன்னுள்ள சாவாலைச் சமாளிக்க உங்களைப் போன்ற பெரியவர்கள் எல்லாம் இருக்கிறீர்கள் மாலன், எங்க பிரச்சனை எங்க அம்மா, அப்பா, பிள்ளைக தலைல கொத்துக் கொத்தா குண்டைப்போட்டுக் கொல்றான். தனித் தனியே அழுது குமைவதைத் தவிர ஒண்ணும் புடுங்க முடியாம இருக்கமேங்கிறதும், எங்க கிட்ட காலங்காலமா பொறுக்கித்தின்னுகிட்டு, பிரச்சனையின் அடி இழை என்னன்னு கூடத் தெரியாம 'ஈழத்தை' எதிர்த்து நயமாக எழுதும் புல்லுருவிகளையும் இந்நேரத்தில் சகித்துக் கொண்டு இருக்க வேண்டியுள்ளதே என்பதுதான். இந்த நேரத்துலயும் கண்டத எழுதி முகம் காட்டிக்க அலையுதுக சிலது. பஞ்சாபிகளைக் தில்லில கொன்றபோது வரிந்து கட்டி காங்கிரஸைப் பொளந்த பேனாக்கள், இப்ப அமைதியா இருந்தாலும் பாதகமில்ல... தமிழனுக்குத் தர்ம, நியாயம் போதிக்கும் அவலத்தை என்னசொல்ல?....
//இலங்கையில் நடப்பது, அடையாளங்களுக்கிடையேயான மோதல் அல்ல. அடையாளங்களை முன்னிறுத்தி அதிகாரம் பெறுவதற்கான போராட்டம். அதிகாரம் யார் பக்கம் இருக்க வேண்டும் என விரும்புவர்கள் தங்கள் விருப்பத்திற்கேற்ப நிலைகளை எடுக்கின்றனர்.//
ஆமா!!, அதிகாரம் வேண்டுமென்ற ஒரே காரணத்திற்காகத்தான் 1948 லிருந்து இன்றுவரை உறவுகளை கண்ணெதிரே குடும்பம், குடும்பமாகச் சாகக் கொடுத்துவிட்டு, வாழ்க்கையின் அனைத்து இன்பங்களையும் பதுங்குக் குழிகளில் புதைத்துவிட்டு, வெட்டியா குப்பியக் கட்டி கழுத்தில் தொங்க விட்டுக்கொண்டு இன்று இந்திய வெறிநாய்கள், சீன சொறிநாய்கள் சர்வதேச வல்லூறுகளுடன் போராடிக் கொண்டு இருக்கிறார்கள். இது பாரதப் போர்ன்னு ஒரு வைக்கப்போராப் பத்தி காலகாலமா போதிக்கிறாய்ங்களே.... அண்ணந்த தம்பிகளுக்குள்ள…. ஆப்கானிஸ்தான்ல அடுச்சிக்கிட்டாய்ங்கன்னு அந்தப் போர் மாதிரின்னு நினைச்சுகிட்டிங்க போல (அது எப்படிப் பாரதப் போராகும்?).
இலங்கை மொத்தமும் தனக்குள் இருக்க வேண்டுமென அந்த காடை நாய் புரிவது அதன் அதிகாரத்திற்கான போராட்டம். எங்கள் இடத்தில் நாங்கள் எல்லாவித உரிமையுடன் வாழ வேண்டும் எனப் போராடுவது உரிமைப் போர். உரிமைப்போருக்கும், அதிகராகப்போருக்கும் வித்தியாசம் கன்னியாகுமரியில் இருந்து காஸ்மீர்வரை அனைத்து உரிமையையும் பெற்ற கூட்டத்திற்கு புரிவது கொஞ்சம் கடினம்தான். தமிழ்நாட்டில பதுங்குகுழி வாழ்க்கை வந்தால் ஒழிய சுலபத்தில் புரியாது. தன் உரிமையை உணரவைப்பது இன/மொழி அடையாளம். என்னைவிட என்னுடைய இந்த அடையாளங்களின் மேல் எதிரி அதிக கவனம் கொள்கிறான். அதனால்தான் இலங்கையில் குடியுரிமையை மறுதலித்தான், (தமிழ் பேசியவருக்கு / தமிழ் இனத்தாருக்கு) கல்வியை கட்டுப்படுத்தினான், அரசியல் லாபத்திற்காய் அவனுடைய இன உணர்வு தூண்டி இன வன்முறையை கடவிழ்த்து தமிழ் மக்களைக் கொன்றான், யாழ் நூலகம் போன்ற புற அடையாளங்களை அழித்தான், இன்று வெறிகொண்டு தமிழ் இன அழிப்பைச் செய்து வருகிறான். தமிழகத்தில் சொன்னால் உங்களுக்கு இன்னும் நன்றாகப் புரியும் தமிழ் என்றாலே, தமிழன் நலன் என்றாலே 80 சதவீதத் தமிழர்கள் மத்தியில் வாழ்கிறோம் என்பதையும் மறந்து சில பத்திரிக்கைகளை கையில் வைத்துக்கொண்டு, ஐயோ, அப்பான்னு குதிக்கிறான். இதெல்லாம் எதிரி எம்முடைய அடையாளத்தில் எங்களைவிட கவணமாக இருப்பதால். நீங்கள் சொன்னதுபோல் தமிழருக்கு மற்ற இந்தியர்களிடமிருந்து மாறுபட்ட பண்பு இன்று (அழுத்தித்தான்) இல்லாமல் எல்லோரும் மசாலா இந்தியராக மாற்றப்பட்டு விட்டோம். ஏன் 80 சதவீதம் தமிழர்கள் தமிழ்நாட்டில், ஆனால் ஊடகத்துறையில், நீதித்துறையில் 80 சதவீதம் யார் இருக்கிறனர்?. ஈழத்தில் உயிரழிப்பு. இங்கு உணர்வழிப்பு.
//மொழி அடையாளம் உட்பட. இரு மொழி பேசும் குடும்பங்களில் இதைப் பார்க்கலாம்//
இரு மொழி பேசினாலும், பத்து மொழி பேசினாலும், ஒரு மொழியைத்தான் தன் அடையாளமாக தேர்ந்து கொள்கிறனர். பெரும்பாலும் தமிழன்- வேறு இனப் பெண் கலப்பென்றால், வேறு இனப் பெண்மொழிதான் வாரிசுகளின் மொழியாகிறது. தமிழ் பெண் - வேறு ஆண் என்றாலும் ஆண் வழி சமுகமான தமிழ் பண்பாட்டால் தகப்பனின் மொழியையே வாரிசுகள் பேசுகிறார்கள் அல்லது ஆங்கிலம் போன்ற பொதுமொழி பேசுகிறார்கள். எவ்வளவு அடிச்சாலும் தாங்குறது எப்பவும் தமிழ்தான். தமிழர்தான். இது ஏதோ போற போக்குல நான் எழுதவில்லை. நிறைய குடும்பங்களை இங்கு பார்த்து உணர்ந்த பின்பே எழுதுகிறேன்.
//இந்தியாவின ஒரு சிறப்பு இந்த முரண்பாடுகளை அங்கீகரிப்பதுதான். அந்த அங்கீகாரம் அதிகாரப்பகிவையும் உறுதிப்படுத்தியிருக்கிறது// //இந்திய அரசியலைக் கவனித்து வந்தால், அங்கு cebterist policiesஏ தொடர்ந்து அதிகாரம் பெற்றிருப்பதைக் காணலாம். கொள்கை அளவில் தீவிர நிலை கொண்டவர்கள் பதவிக்கு வரும் போது கூட அவர்கள் நடுநிலை நோக்கித் தள்ளப்படுகிறார்கள்.//
ம்க்கும்!. இந்த அதிகாரப் பகிர்வென்பது என்னன்னா, அதிகாரத்தில் இருக்கும் கருணாநிதியும் எந்தவொரு கோரிக்கையையும் நிறைவேற்ற டில்லியிடம் மண்டியிட்டுப் போராடணும். அதிகாரத்தில் இல்லாத நெடுமாறன் அய்யாவும் போராடணும். மொத்ததுல தமிழனுக்கு, போராடித் தன்னை எரிச்சுக்க எல்லா அதிகாரமும் பகிர்ந்து கொடுத்திருக்காய்ங்க.
என்ன நடந்தாலும், அதன் பொருட்டுத் தன்னை எரித்துக் கொள்ளும் பிள்ளைகளை நாங்களும் பெற்று போட்டுக் கொண்டேயிருக்கிறோம். அரசியல்வாதிகள் அவிய்ங்களுடைய அரசியல் செல்வாக்கை காட்ட வேண்டுமென்றால் பத்திரிக்கை அலுவலத்தை எரிப்பது, பஸ் எரிப்பது, மரம் வெட்டி மறியல் செய்வது என்று எல்லாம் தெரிந்த களவாணிகள், எங்கள் மக்கள் கூட்டம் கூட்டமாக சாகும்போது எங்களை கைகளை இறுகக் கோர்ந்து மனித சங்கிலி போராட்டம் பண்ணணும் சொன்னாய்ங்க. இந்து பத்திரிக்கைக்கு சேதமில்லாம, இலங்கை தூதரகத்துக்கு பங்கமில்லாம, அம்சா மேல தூசி விழுகாம, இந்திய இறையாண்மைக்கு இழுக்கில்லாம, தினமலர் தினமணிப்பக்கம் காத்துப்படாம, சு சாமிகளுக்கு கொசுக்கடிக்காம... கையக் கோர்த்துகிட்டோம் (இந்தியாவின் எல்லா மாநிலங்களிலும் இப்படிப்பட்ட கட்டுப்பாடுகளுடந்தான் மக்கள் எதிர்ப்பை காட்டுகிறார்களா?) . அங்கு சாகும் மக்களுக்காக எங்களால் முடிந்தது எரித்துக் கொள்வதும், ஒப்பாறி வைப்பதும் மட்டுமே . அட அவிங்கதான் என்ன பண்ணுனாங்கன்னு பாத்தா, எரிஞ்சு முடிந்தவர்களின் இறுதி ஊர்வலத்துல கலந்துகிட்டாங்க.... பேசினாங்க...புதைச்ச ஈரம் காயுமுன்னே அந்தப் பொம்பள உண்ணாவிரத்த முடிச்சு வச்சாய்ங்க... பொறுக்கித்தின்ன கட்சி, கட்சியா ஓடி இப்ப கைகளில் சில, பல எழும்புத் துண்டுகளோடு திருப்தியாகிவிட்டார்கள்.
ஐந்து வயதிலிருந்து கையை விரித்துக் காட்டி மழலையில் 'சூரியன்' என்று சொல்லிய வாய்கள் எங்கள் பகுதிகளில் லட்சம், கருணாநிதி என்ற பெயர் சொன்னாலே சுட்டெறிக்கும் விழிகாட்டி கலைஞர்! திருத்திய நிகழ்வுகள் ஆயிரம். இன்று சகோதர கொலை பற்றிக் கதைக்கும் கலைஞரின் 'உடன்பிறப்பு' தா.கிருட்டிணனின் கொலையின் போது, கொன்னுட்டாய்ங்க, கொன்னுட்டாய்ங்கன்னு அலறிய அதிமுககாரனிடம், "ஆமா கொன்னுடாய்ங்க போ... உன் கட்சில நடக்காததா?" என கொலையையும் நியாயப் படுத்தினோம். 'சொத்து சேர்க்கிறாய்ங்க, குடும்ப ஆதிக்கம்' என்ற போது அரசங்க வேலையில் இருப்பவன் லஞ்சம் வாங்கி குடும்பத்த காப்பத்தறதில்ல, அரசியலில் இருப்பவர், அரசியலை வைத்துதான் தன் குடும்பத்தை காப்பாற்ற முடியும் என வக்காலத்து வாங்கினோம். பிள்ளைகளுக்கு பதவி தந்தபோது, அவர்களுக்கு என்ன தகுதி? என்றவர்களுக்கு, அப்பன் ஐம்பதாண்டு அரசியலில் இருந்ததே தகுதி!! எனத் தடாலடி பதில் தந்தோம். ஆனால் எங்கள் பிள்ளைகளின் படிப்பிற்காக செலவிட வைத்திருந்த பணத்தையும் கட்சி நிதியாக்கி களித்தோம். “கட்சி இருந்தால், கல்வி தன்னால் வரும், வெற்றிகொண்டான் அய்யால்லாம் எதை பள்ளியில் படித்து காரல்மார்க்ஸ் வரை கற்றுகொண்டார்? என எகத்தாளம் பேசினோம். இவை அனைத்தும் எதற்கு? கலைஞர் என்பவர் தமிழர்களின் காவல் என, தம்பி முத்துக்குமார் முடியும்வரை நம்பியதால்!. இன்று ஈழ மக்கள் துயர் கண்டு உளம் கொதிப்போர் அனைவரும் மானசீகமாவேனும் எங்களை செருப்பால் இரண்டு அடி அடித்துக் கொள்ளுங்கள், எதிர்த்துப் பேசா திமுக காரார்களால் மட்டுமே தமிழகர்களுக்கு இன்று இவ்வழிவு. பேச்சால் கெட்டோம் நாங்கள்!. பேசிக் கெடுத்தோம் அத்தனையும்!!.
(ராஜ பக்சேயின் சகோதரி, தடா, பொடா எனப் பயங்காட்டி, ராஜீவ்க்குப் அப்புறம் இலங்கை எந்த திசையில் இருக்கிறதென்பதைக் கூட எங்களை மறக்க வைத்தார். இன்று நாளொரு நீலிக்கண்ணீர் பொழுதொரு அறிக்கை. தேர்தல் நேரமெல்லாம் கச்சத்தீவை மீட்போம்! என முழக்கம்தான். இப்போ தனி ஈழம்தான் தீர்வாம், இதைதான் அன்று வைகோ சொன்னார், சிறையில் அடைக்கப்பட்டார். நேற்று சீமான் சொன்னார், ஏன் அடைக்கவில்லை என ஆர்ப்பாட்டம் செய்தது அம்மா!. தனி ஈழமென்றால் அதற்காக போரடுவதென்ன பன்னிர் செல்வமா?. அப்போ யாரை அவர் ஆதரிக்கிறார் என்பதையும் சொல்லலாம் அல்லவா?. சொல்ல முடியாது!. ஏனெனில் நாளை இதர மாநிலங்களில் காங்கிரஸ் பெரும்பான்மை பெற்று, தமிழகத்தில்தோற்குமெனில்(உப்பு போட்டுத்தான் தமிழன் உண்ணுகிறான் எனில், காங்கிரஸ் தோற்கும்!!) அம்மா ஆதரவுடன் ஆட்சி அமைத்தாலும் அமைக்கும்).
இப்படி தமிழுக்காய் தண்டவாளத்தில் தலைவைத்த அரசியல்வாதிகளை மழுங்கிப் போன மொக்கை அரசியல்வாதிகளாய் மாற்றியதில் மட்டுமே இந்தியா வெற்றிகண்டுள்ளது. கொள்கை அளவில் தீவிர நிலை கொண்டவர்கள் மத்திய அரசு பதவியில் இல்லாத போது கூட அவர்கள் ஏன் நடுநிலை நோக்கித் தள்ளப்படுகிறார்கள்?. பதவிப் பொறைக்காக!!, “இந்திய இறையாண்மையை காப்பாற்றுவேன்” என மத்திய அரசு தூக்கி எறியும் பொறைக்காக உறுதிஎடுத்து காசு பார்க்கும் அரசியல்வாதிகள் காக்கட்டும் இறையாண்மையை, ஒருமைப்பாட்டை! இல்லையெனில் தமிழகத்தில் இருந்துகொண்டு இந்திக்காரனோடு கூட்டணி போட்டு தமிழ் சமுதாயத்தை எதிலும் உருப்படவிடாத ஊடக வியாபாரிகள் காக்கட்டும்!, கிராமத்தில் நிதமும் உழைத்து, கால் வயிறு உண்டு, கடினப்பட்டு படித்து, அதனால் தெளிந்த அறிவில் எங்கள் மக்கள் உணர்வுபெற பேசுகிற சீமானுக்கும், எங்களுக்கும் எந்த புண்ணாக்கு ஆண்மை பற்றிய கவலை வேண்டும்?. ஏன் தமிழக கிராமங்களுக்குச் சென்று ஒரு கணக்கெடுத்துப் பாருங்கள் எத்தனை பேருக்கு இந்திய இறையாண்மைக்கு அர்த்தம் தெரியுமென?. நேருவின் குடும்பத் திருமணங்கள்போல், இந்திராவின் குடும்ப மரணங்கள்போல், இந்திய இறையாண்மையும் மர்மமான ஒன்றுதான். 1956 ல் இருந்து இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் போர் நடக்கிறதாம். 2006ல் போர் நிறுத்தம் என்கிறான். யார், யாருக்குள் போர்? எப்போது ஆரம்பித்தது, இப்போது ஏன் போர் நிறுத்தம்? எந்த இதர வெங்கய இந்தியனுக்குத் தெரியும் இது?. மக்களாட்சி!!
இந்தியாவிற்கும் வடகிழக்கு என்ற வார்த்தையே விடுதலையடைந்ததிலிருந்து இன்றுவரை ஒரு கிலிதரும் வார்த்தைதான். ஆஸ்ஸாம், அருணாச்சலப் பிரதேசம், மணிப்பூர், மேகாலயா, மிஷோரம் நாகாலாந்து, திரிபுரா அடங்கிய வடகிழக்கு பகுதிகளை எப்படி இந்திய பூதம் விழுங்கி தனதாக்கிக் கொண்டது என்பதை அறிந்தாலே, இராசபக்சேவிற்கு அப்பன் யார், ஆசான் யார் என்பது தெளிவாகிவிடும். நில எல்லையை சுருக்குதல், பாரிய இன மக்களைப் பிரித்து சிறுகூட்டமாக்கி கிளர்ச்சியை மழுங்கச் செய்தல், அடங்க மறுத்தால் அப்பகுதிக்கு இராணுவத்தை அனுப்பல் பிறகு வேறு இன மக்களை அங்கு குடியேறச் செய்து அங்குள்ள பெருபான்மையின மக்களின் வாழ்வாதரத்தைப் பறித்தல். அதன் மூலம் அவர்களின் போராட்டத்தை திசை திருப்பல். இவையெல்லாம் நேற்று இந்திய வடகிழக்கில் நடந்தது, இன்று இலங்கை வட(கிழ)க்கில் நடக்கிறது. வட (கிழக்கு) பிரிந்து நமக்கென தனிநாடு வந்துவிட்டால், இந்தியாவின் வட, கிழக்கு கவனிக்கும். (அதெல்லாம் முடிந்த கதை என சிலர் அலறுவீர்களேயானால், 2008ல் (போர் நிறுத்தம் நீட்டிப்பு என்ற அறிவிப்பிற்கு பிறகு) 1000 திற்க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர் என்ற உண்மையும் தெரிந்து கொள்ளுங்கள்.). காஸ்மீரம் கவனிக்கும். 35 வருடமாய் கனன்று கொண்டிருந்து, இந்திய ஆண்மைமேல் செருப்பெரிந்த பஞ்சாப் கவனிக்கும். "ஊரு தெலங்கானா, நா பேரு தெலங்கானா, நா பள்ளி தெலுங்கானா, தனு வெல்ல தெலங்கானா" ந்னு பாட்டுப் பாடுற ஆந்திராவின் ஒரு பகுதி கவனிக்கும் (இன்னைக்கு உள்ளதான் தனியாகனும்கிறாய்ங்க நாளைக்கு?, சோனியாகாந்தி தெலங்கானாவப் பிரிச்சுக் குடுக்கிறேன்னு வாக்குறுதி கொடுத்துருக்கு!!). ராஜீவ் மரணம் மட்டும் காரணமல்ல இந்தியா 'ஈழத்தை' அங்கிகரிக்க முடியாததற்கு. உணர்வற்ற, எதற்கும் உபயோகமில்லா தமிழக(சினிமா)த்தமிழன் தனிநாடு கேட்டுவிடுவான் என்பதல்ல இந்தியாவின் கவலை. இந்திய 'இறையாண்மை'யே மிகக் கவலைக்குறியதாகிவிடுமே என்பதுதான் கவலை.
இந்தியாவின் மாநிலமாக கருதப்படுகின்ற நாகலாந்திற்கு இந்தியக் குடிமகன் சர்வசாதரணமாக சென்று வர முடியாது. இந்தியா, நாகலாந்தின் சில பகுதிகளுக்கு பயணத் தடை விதித்துள்ளது. அப்பகுதிகளுக்குச் செல்ல வேண்டுமெனில் Restricted Area Permit வாங்கிச் செல்ல வேண்டும். ஏன்? 1951 நாகலாந்து இந்தியாவுடன் இணைய வேண்டுமா, தனியான நாடாக இருக்க வேண்டுமாவென எடுக்கப்பட்ட வாக்கெடுப்பில், 99.9 சதவீதம் தனி நாடாக இருக்கவேண்டுமென வாக்களித்திருந்தனர். இதன்படி நாக மக்கள் Civil Disobedient Movement கொண்டுவந்து தேர்தலை ஒட்டு மொத்தமாக புறக்கணித்தனர். இதிலிருந்து இந்தியா நாகலாந்து பிரச்சனை தனிநாடு அல்லது இந்தியக் கூட்டமைப்பில் இருந்து விலகிக் கொள்ளுதல் என்ற நிலையை அடைந்தது. நாகலாந்து இந்தியாவின் பகுதியாக முன் எப்போதும் இருந்ததில்லை. விடுதலைக்குப் பின் நாக நிலத்தை 2 பகுதி இந்தியாவும், 1 பகுதியை பர்மாவும் ஆக்கிரமித்துக்கொண்டு கூறு போட்டன. அம்மக்களை கேட்காமலேயே இந்தியா பர்மாவுடன் பேசி சர்வதேச எல்லை கோடு ஒன்றைப் போட்டுக்கொண்டது. இப்படி அந்நிலத்தை கூறுபோட்டதுடன் நில்லாது, மக்களின் கிளர்ச்சியை அடக்க நாகநிலத்தை இந்தியா, நாகலாந்து, அஸ்ஸாம், மணிப்பூர், அருச்சலப் பிரதேசம் என இன்னும் நான்கு கூறுகள் போட்டது. (பர்மா அதற்கு கிடைத்த ஒரு பகுதியை இரண்டாகக்கியது). இப்படி மிகப்பெரிய தேசிய இனத்தை வெள்ளைக்காரனுக்கு சற்றும் குறைவில்லாமல் பிரித்தாண்டு அம்மக்களை குறுகிய நிலப்பரப்பிற்குள் ஒடுக்கியது “வேற்றுமையில் ஒற்றுமை புகழ் “ இந்தியா. அமைதி வழியில் எதிர்த்த மக்களை அடக்க 1956 ல் ஒரு லட்சம் இராணுவ துருப்புகளை இந்தியா அனுப்பியது. 1958 ல் இந்தியா Armed force Act கொண்டுவந்ததால், இராணுவம் நாக நிலத்தில் புகுந்து அட்டுழியங்கள் செய்தது.
ஒரு நாகலாந்துகாரார் வார்த்தைகளில்....
****** In the past, successive Delhi governments had resorted to various forms of colonial policies to deal with the Naga political question. The big mistake was their decision to sent armies to literally teach us some “imperial” lessons in our own homeland. They forgot that Nagas’ love for freedom constitutes part of their lifestyle, a question that cannot be settled by the use of force at any cost. Even the mighty British Colonial Raj realized the futility of attempting to subjugate the warring Nagas tribes. The Delhi Government learnt nothing in this regard from their former colonial master. The forceful occupation of the Indian armies backed by several draconian laws that led to a long history of untold Indo-Naga wars painted a black picture of the Indian image in the minds of the Nagas. It only resulted in bringing the various Naga groups closer and the Naga movement for freedom received a great momentum. The Nagas were forced to opt for armed struggle. What happened in the course of time to the Nagas has become part of our living history, too debasing and too dehumanizing to be recalled or retold in detail here. Nevertheless, it is important to note that the common struggles and pains and sufferings have become not only part of our history but more significantly, they have become part of our Naga identity today – that is, they have become associated with the social and political consciousness of our Naga identity by and large. Worse, the Nagas began to see the ‘Indians’ with nothing less than utter hatred, bitterness, distrust, shame, guilt, jealousy, remorse, etc. The only Indians most Nagas have seen and encountered in the past were the Indian armies. Many who live in the interior villages and greatly suffered in the hands of the armed forces and who never got the opportunity to see the other proud and honorable Indian citizens still identify Indian identity with the living image of those brutal picture of the cruel soldiers. When I go to a village, every home has some tragic story to share about their encounters with the armies. Let me tell one such story that happened to my tribe and which has been recounted by Kaka Iralu in his book “Nagaland and India: The Blood and the Tears” – out of the 64 Chakhesang villages that existed in those days (1960s), 60 villages were burnt during the army operation and one particular village, Porba, was razed to the ground 14 times in a single year.
*************
1956 ல் துவங்கிய இந்த நீண்ட போராட்டம் 2001 லிருந்து 2008 வரை (போர் நிறுத்தம் நடைமுறையில் இருந்த அமைதி காலம்) மட்டும் 956 பேர்களைக் கொன்றிருக்கிறது. மணிப்பூரில் 2008 ஆம் ஆண்டு மட்டும் 492 பேர், அஸ்ஸாமில் 373 பேர் ஒரு வருடத்தில் கொல்லப்பட்டுள்ளனர். அப்பாவி மலைவாழ் மக்கள், மனிதரைக் கண்டாலே ஓடி ஒளியக்கூடிய கூட்டத்தின் மேல் இராணுவத்தை ஏவிவிட்ட இந்தியாவிடம், Indian army rape us என மணிப்பூர் வீதிகளில் பெண்கள் இந்திய இறையாண்மையை நிர்வாணமாக்கியதறிந்தும் கையேந்திக்கொண்டிருக்கிறோம்.
இந்திய விடுதலைப் போராட்ட வரலாற்றில் அதிகம் வதை அனுபவித்தது, சிறை சென்றது பஞ்சாபிகள்தான். அந்தாமான் சிறையில் அடைக்கப்பட்டவர்களில் எழுபது விழுக்காட்டிற்குமேல் பஞ்சாபிகள். பஞ்சாபிகள் இந்தியாவிற்கு விடுதலையைப் பெற்றுத் தந்தார்கள். இந்தியா அவர்களுக்கு 1984 வருடத்தை பரிசாகத் தந்தது.
பஞ்சாபியருக்கே இந்தக் கதியெனில், நம்ம கட்டப்பொம்மன், வேலு நாச்சி வீரத்தக் கூட ஒழுங்கா பதிவு செய்து வைக்கவில்லை. நம் குரல் இந்தியக் காதில் விழுமா?. திலகனத் தெரியுது நமக்கு, நம் திருப்பூர் குமரனைத் தெரியுமா வடநாட்டானுக்கு?, இந்திய சுதந்திரத்தப் பத்தி வடநாட்டாங்ய்ககிட்ட பேசுனாலே நம்ம எல்லாம் ஏதோ விடுதலைக்கு அப்புறம் ஓடியாந்து ஒட்டிகிட்ட மாதிரியே பேசுறாய்ங்க. ஆனால் மாலன் நமக்கு சலுகை வழங்குகிறார் //இந்த நெகிழ்வு இந்தப் பன்முகத் தன்மையை அங்கீகரிக்கும் மனம் உங்களிடமிருக்குமானால் நீங்கள் உங்களை இந்தியனாகவே கருதிக் கொள்ளலாம்// குஜராத்ல பூகம்பம் வந்தா, ஒரிசாவுல வெள்ளம் வந்தா தமிழ்நாட்டுக்காரன் வேணும், ஆனா அதுக்குக் கூட நம்மை இந்தியனா, இந்திகாரன் ஒத்துக்கொள்வதில்லை மதராஸிதான். இதையெல்லாம் பத்திரிக்கையாளர்கள் வட நாட்டு இந்தியனை டிக்கட் எடுத்துக் கொடுக்கச் சொல்லி வந்து பார்த்தால் நலம். தமிழனிடம் நெகிழ்வு கோருபவர்கள், அப்படியே சிறிது நகர்ந்து ஆந்திராவிலோ அல்லது கர்நாடகாவிலோ அல்லது அவர்கள் ஊரிலிருந்து அகலமா எட்டு வச்சாலே நம்ம தேனியிலோ, பொள்ளாச்சியிலோ, நாகர்கோவிலிலோதான் காலை ஊன்ற முடியும் அப்படிப்பட்ட தமிழகத்தின் செல்வத்தில் பாதியை இந்தியாவை காரணம் காட்டி திரைத்துறை, விளையாட்டுத்துறை மட்டுமல்லாது ரோட்டோர சிறு தொழில்வரை ஆக்கிரமித்து அனுபவித்துக் கொண்டிருக்கிற கேரளாக்கரனிடமோ (அவிங்க நாயர் டீக்கடைகளுக்கே பத்தாது 6 அடித் தண்ணி) கேட்டுப்பாருங்கள் என்ன நடக்கிறதென.
இந்திய அரசாங்கத்துக்கு கூப்புடுதூரம் இருக்கிற பஞ்சாபி "டெல்லி சர்க்கார்"னுதான் சொல்லுறான், வட,கிழக்கு மாகாணங்கள் அனைத்தும் "டெல்லி ராஜ்" ந்னுதான் சொல்லுது, இந்திய உயர்நீதி மன்றம் உத்தரவு போட்டா கர்நாடகா "போட்டுக்க!, ஆனா நாங்க அதை செயல்படுத்த மாட்டோம்"ங்குது. கிரிக்கெட்டுக்குப் பாதுகாப்பு குடுன்னு இந்திய அரசாங்கம் கோரினால், "நாங்க குடுக்கமுடியாது, தேர்தல் பாதுகாப்புக்கு எங்க காவல்துறை பயன்படுத்தப்படும்" கம்பீரமாகச் சொல்கிறார் இராஜசேகர ரெட்டி. எல்லா எடத்திலயும் செருப்படிபடுற இந்தியம் தமிழ்நாட்டில் மட்டும்தான் கொடிகட்டிப்பறக்குது. ஏனென்றால் 28 வருடங்களாக கருப்புக்கயிருடன் உயிரைச் சுற்றி பாக்கெட்டில் வைத்திருக்கும் தலைவன் எங்களிடம் இல்லை. "வெள்ளை மஞ்சளாக மாறிய" தலைவனையே நாங்கள் பெற்றிருக்கிறோம். அந்த மஞ்சத்துண்டு 40%, பச்சை சேலை 20%, சிவப்பு வெள்ளை பச்சை துணி 40% எம் உறவுகளைப் போட்டு மூடிவிட்டது. அக்குருதியில் நனைந்ததே இராஜபக்ஷேவின் கழுத்தில் இருப்பது.
சாதிப் பிரச்சனை வந்தா ஊரே காலியாகி மலைப்பக்கம் போயி உக்கந்துக்கிட்டு...அரசாங்கத்த அலறிகிட்டு மலையேற வைக்கிற, சல்லிகட்டுக்குத் தடை என்றால் துள்ளிப்பாய்ந்து தடையை திரும்பப்பெற போராடும் மக்கள் நினைத்திருந்தால் இன்னும் காத்திரமாக போராடியிருக்கமுடியாதா?. அங்கு அத்தனை மக்களும் முடியும்வரை பிச்சை கேட்டுக் கொண்டுதான் இருப்போமா?.
ஆறுமாச குழந்தை தலைல குண்டப் போடுறான், இதைக் கண்டிக்க மனிதன் என்ற "அடையாளம்' போதும். அந்த அடையாளம் கூட இல்லாத கூட்டம் "இது அதிகாரத்திற்கான போர்" என தன் அறிவுத் திறமையக் காட்டினால், தமிழர் என்கிற இன/மொழி அடையாளத்தை இன்னும் நாம் உறுதியாக பிடித்துக்கொள்ளத்தான் வேண்டும்.
கற்பகம்
Dear Sasi,
8:39 AM, April 19, 2009While you are agreeing to the fact that the Brahmins of India may be different to that of Ealam, you still saying that there is a need oppose Brahmins in India. Fair enough, I’m not qualified to dispute your views about India. However, this kind of rhetoric is deeply disturbing to Brahmins of Ealam. In Tamil Ealam, we never had any caste related problems, and it is an insult to tarnish all with the same brush. You must find a way to distinguish the two different groups. I am saying this because without any apparent reason, some Ealam based Tamil papers are now started coping similar view towards Brahmins. Most of Ealam Tamils do not have the deeper understanding of the caste based systems of India or the ideology of the Periyar movements
We, Ealam Tamils, do not have deep caste related divisions as such in India. This is primarily due to the fact that they all are well-educated, having a smaller population and have been collectively discriminated against by successive racist regimes.
I may have deviated from the main topic here, but please take note that we all have suffered a lot, and there is no need for further division amongst us.
Vanathy, Sasi, thank you both for your comments.
//இப்போதெல்லாம் இந்தியா எனும்போது ஒரு மயிரும் கூச்சறிவதில்லை.//
2:30 PM, April 19, 2009Even I felt same..
Am no longer an Indian..
Only a Tamil, Tamilian
Simione,
2:34 PM, April 19, 2009பார்பனீயம், பார்ப்பன எதிர்ப்பு என்னும் பொழுது அது பெரும்பாலும் தமிழகம் சார்ந்தே பேசப்படுகிறது. ஈழத்தைச் சார்ந்து அல்ல.
ஈழத்தில் பிராமணர்கள் ஆதிக்க சாதியினர் அல்ல என்பதை நான் உணர்ந்து இருக்கிறேன். எனவே என்னுடைய பார்ப்பனர்கள் குறித்த கருத்தினை நீங்கள் தமிழகம் சார்ந்ததாகவே பார்க்க வேண்டும். ஈழத்தைச் சார்ந்த நீங்கள் உங்களை சாதி ரீதியில் தமிழக பிராமணர்களுடன் பொருத்தி பார்க்க வேண்டிய தேவை இல்லை. தமிழ் அடையளத்தை ஈழத்தைச் சார்ந்த நீங்கள் முன்னிறுத்துகிறீர்கள். ஆனால் தமிழகத்தில் உள்ளவர்கள் முன்னிறுத்துவது தமிழன் என்ற அடையாளத்தை அல்ல. இந்தியன் என்ற அடையாளத்தை மட்டுமே. இன்னும் சொல்லப்போனால் மொழி ரீதியாக கூட சமஸ்கிருதத்திற்கு அடுத்த நிலை தான் தமிழுக்கு கொடுக்கப்படுகிறது.
தமிழகத்தில் உள்ள ஒரு சில பிராமணர்களை தவிர பெரும்பாலானோர்கள் ஈழத்திற்கு எதிராகவே உள்ளனர் என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். தினமலர், சோ, ஹிந்து என அனைத்து பார்ப்பன மையங்களும் ஈழத்தை எதிர்ப்பதில் முதன்மையாக இருக்கின்றன.
மாறாக ஈழத்தை ஆதரிக்கும் அமைப்புகளாக ஆரம்பத்தில் இருந்தே இருந்து வருபவர்கள் பெரியாரிஸ்ட்களும், தமிழ் தேசியவாதிகளும், இடதுசாரிகளுமே.
ஈழத்தில், போர் சூழ்நிலையில் சாதி மறைக்கப்பட்டு இருக்கிறது. ஆனால் முழுமையாக அழிந்து விட வில்லை என்பதே என்னுடைய புரிதல். நான் கூறுவது வெள்ளாள ஆதிக்கம் போன்றவற்றை...
இது குறித்து வேறொரு தருணத்தில் பேசுவோம். இப்பொழுது நாம் பேச வேண்டியது நம் தமிழர்களின் உயிர் குறித்து மட்டுமே. நமக்குள்ளே இருக்கும் சாதிப் பிளவுகள் குறித்து அல்ல. சிங்களவன் தமிழர்களை தான் கொல்கிறான். வெள்ளாளர்களை மட்டும் அல்ல, தலித்களை மட்டும் அல்ல...
நன்றி...
1. தமிழ் இன படுகொலையை எந்த நாடும் கண்டிக்கவில்லை
12:21 PM, April 22, 20092. சக மனித இனம் என்று எந்த நாடும் உதவவில்லை
3. சக இந்து என்று எந்த இந்து இயகங்களும் உதவவில்லை
4. பாக்கிஸ்தானில் கோயில் இடித்தால் இந்து இரத்தம் கொதிக்கும் எந்த பார்பனர்க்கும் சிங்களவன் இடித்தால் கொதிக்கவில்லை
5. இந்துகளுக்கு ஆபத்து என்றால் வாய்சவடால் பேசும் பஜக கும்பலின் வாயில் இப்போது வாழைபழம்
6. சைவ பக்தர்கள் என்று ஒரு சைவ மடமும் வாய்திறக்கவில்லை
7. பாதிக்கபட்ட கிறிஸ்துவ மக்கள் மற்றும் ஆலயங்களுக்காக எந்த கிறிஸ்துவ நாடும் உதவவில்லை
8. திராவிட இனம் என்று எந்த சக திராவிட இனமும் கண்டுகொள்ளவில்லை
9. பிற நாட்டில் வாழும் தமிழர் அடிமய்களாய் கெஞ்ஞி கொண்டு
இதற்க்கு ஒரே வழி ; அனைத்து தமிழரும் இஸ்லாமை தழுவவதுதான், ஏன் என்றால் அவர்கள் தான் சக முஸ்லீம்களுக்கு பிற இனத்தவரால்
பிரச்சனை என்றால் உலக அளவில் போராடி சாதிப்பது, பிற நாடுகளில் இருந்து சென்று போராடுவது.
ஒரு கார்டூன் பிரச்சனைகாக உலகளவில் போராடுவது.
எனவே அனைத்து தமிழரும் இஸ்லாமை தழுவவதுதான் தமிழ் இனத்தை காப்பதற்கான ஒரே வ
***பரந்த மனப்பான்மை இருந்தால் உலகம் முழுவதும் இருந்தும் நண்பர்கள் கிடைப்பார்கள். குண்டுசட்டியில் குதிரை ஓட்டும் மனப்பான்மையை கைவிடாவிட்டால் பக்கத்து ஊர்காரனுடன் கூட நட்பு வைத்துக்கொள்ள முடியாது.***
3:41 PM, April 22, 2009யாதும் ஊரே; யாவரும் கேளிர் என்றுதான் தமிழன் நம்பினான். இன்னும் கூட நம்பிக் கெட்டுக் கொண்டிருக்கிறான்.
"நீ கடலை கொண்டு வா; நான் உமி கொண்டு வருகிறேன். இரண்டையும் கலந்து பின் ஊதி ஊதிப் பிரித்துத் திங்கலாம்." - என்ற பேச்சை நம்பி ஏமாந்தது போல் இனியும் 'பரந்த மனப்பான்மை'யைத் தமிழனுக்கு மட்டும் தனியுடைமையாக்கும் தந்திரத்தை நம்பி மோசம் போக முடியாது.
என் இரத்த உறவைக் கொன்று குவிக்கின்ற - எம் இனமே இல்லாது துடைத்து ஒழிக்கும் கொடுங்கொடிய இனஅழிப்பிற்கு - எல்லா வகையும் உதவி நிற்கின்ற இந்த இந்திய ஒன்றிய வல்லாளுமையை என்னால் எப்படி வெறுக்காமல் இருக்க முடியும்?
///"பொதுவான பண்பாட்டுக் கூறுகளின் அடிப்படையில் இந்தியன் என்ற அடையாளமும்" ////
என்ற வரி எனக்கு உணர்த்திய நெருடல் வெற்று உணர்வன்று.
வட இந்தியரோடு அரபு நாட்டில் உடனிருந்து அறிந்த உண்மைகளின் விளைவே!
When I was schooled in Jaffna, we have always supported Indian Cricket Team and in fact fanatic about collecting stickers and articles about Srikanth, Gavasker and the likes. When the Indian army dropped few pieces of bread in 1987 we were jubilant and thought Tamil Ealam had already been achieved. Although we never were looking for food, but we thought it was a great symbolic gesture. The rest is history; some may blame Tigers for not singing from the same hymn sheet as Rajiv at that time. However, India and RAW in particular has already planted the seed for the destruction of Tamil Independent Movements. We have seen several manufactured mercenary Indian proxy groups emerged during the IPKF era, who never previously set foot in Ealam, and some could not even speak Tamil, but they called themselves Tamil Liberation Movements affiliated with India. We used to listen to All India Radio for sympathetic Ealam news, but as soon as IPKF landed, all we could hear was how kind and good and Indian Army was. They have fed us with daily dedicated programmes which featured interviews recorded in the presence of IPKF with Tamils who praise the greatness of the army, and continuous derogatory comments about Tigers. The truth is far from it, and I won’t dwell on it here.
8:15 AM, April 23, 2009We, Ealam Tamils, had felt a strong belonging towards ‘mother India’ for a long time. However, after having seen the atrocities of IPKF, I realised that our struggle for freedom is all but finished because our real enemy was not Sri Lanka, but the enemy within - India. When Rajiv was killed, although I regret the way he died, my feeling was ‘good riddance’!
I strongly believe that we have to preserve our identity, culture and retain our self respect. We have been taken for a ride for far too long by every opportunist politician, whether it is Indian or Sri Lankan.
I have seen everything in my life, bullets, shells, deaths etc. I can only ask you all keep burning the liberation torch, even if the LTTE is completely wiped out from Ealam. The problem was not the Tigers, it has stemmed from the discrimination and total disregard of Tamils in the hands of racist regimes. However, having now had a free hand in destroying Tamils and their culture, I can assure you that the Sinhala Army is going to weed out all the Tamils who have the potential to support any future National movement. People will disappear overnight and dead bodies will float on the rivers, wells and pits. What have we done so far to help the Tamils who are being routinely killed in hundreds, and what are we going to do if there will be no more Tamil soldiers to protect them? That is the question...
Tamil vs India. Then among Tamils
1:05 PM, April 23, 2009one identity vs another identity.
Such identity politics can result in endless antagnoisms.
Are you opposing the Indian state and its agencies or are you opposing India, the nation. Opposing Indian state is understandable. But how opposing India, the nation will help Tamils
in Tamil Nadu or elsewhere.
You can find fault with the Indian state and condemn it for its stand
on this issue.But to think that
Indian nationalism as well as India are enemies of Tamils will
not help you to solve any problem.
If you have to oppose you have to oppose almost all countries in the
world for dong nothing in this issue.
'தமிழகத்தில் உள்ள ஒரு சில பிராமணர்களை தவிர பெரும்பாலானோர்கள் ஈழத்திற்கு எதிராகவே உள்ளனர் என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். '
1:26 PM, April 23, 2009Brahmins hardly constitute 4% of the population.How many brahmin MLAa/MPs are there from Tamilnadu.
Industry,business, trade and education - in all these non-brahmins dominate.Brahmins are
mostly salary earners. They are
not big land lords. They have no political power.They enjoy no reservation benefits.
Have the brahmins as a group done anything against SriLankan Tamils?.
Has any brahmin association passed
any resolution supporting the war.
Cho,S.Swamy are just individuals.
In which way their view is different from that of Jayanthi
Natarajan or Chidambaram.
Your petty anti-brahmin politics will take you nowhere nor will
help Tamils in Sri Lanka.But petty minds like you will get pervese
pleasure in indulging in that
politics all the time.
'தனக்கென ஒரு தொன்மையான வரலாற்றையும், நிலங்களையும் கொண்ட தமிழினம் இன்று சிறுபான்மையினராக பல நாடுகளில் ஒடுக்கப் படுவதை ஆவணப்படுத்தி உலக அரங்குகளில் தமிழருக்கென தனிநாடு அல்லது தனி அங்கீகாரம் கோர வேண்டும்'
1:28 PM, April 23, 2009Do you support Hindraf?.
Just for information.
3:31 AM, April 24, 2009I would like to point out that as someone commented,the Tamil speakers of Tamil nadu is not 80% of Tamilnadu population.It is morethan that.
statistics from census 2001.
89% of tamil ndu population has Tamil as their mother tongue.
-vanathy
உணர்ச்சிவசப்பட்டு அடையாளப் போராட்டம் என்றெல்லாம் எழுதுவது எளிது. நடைமுறையில் தெரிவுகள்
2:42 AM, April 25, 2009எளிதல்ல என்பதை நண்பர்கள் புரிந்து
கொள்ள வேண்டும்.இன்றைய நிலையில் அமெரிக்காவின் செயல்களை வெறுக்கும் இந்தியர்கள்
அதற்காக அமெரிக்கா வேண்டாம் என்று ஈரானிற்கு செல்வதில்லை.
அமெரிக்க தேசியத்தை தம் எதிரி
என்று சொல்வதில்லை. இந்தியாவில் தமிழர்களுக்கு எதிராக பாரபட்சம் அரசால் காட்டப்படுவதில்லை. இந்தி அறிந்தவர்தான் மத்திய அரசு வேலைக்கு முயல முடியும் என்று
இல்லை. இந்தி வெறியர்கள் இருக்கிறார்கள். ஆனால் இந்தி பேச்சுவழக்கில் ஆங்கிலம் கலந்த
ஒன்றாகி விட்டது.ஆங்கில மோகம்
வடவருக்கும் இருக்கிறது.40 எம்.பிக்கள் கொண்ட தமிழகம்
இந்திய அரசியலின் விளிம்பில்
இல்லை.இந்திய தேசியம்
தமிழருக்கு எதிரி என்றால்
நண்பர் யார் - ஹுரியத் அமைப்பா,
தலிபானா?. இந்திய தேசியம் தமிழரை
சிங்களம் ஈழத்தமிழரை நடத்துவது
போல் நடத்துகிறதா.
ஈழத்தமிழருக்கு, அவர் நலனுக்கு
என்ன செய்ய முடியும் என்று சிந்திக்கலாம்.இந்திய அரசினை விமர்சிக்கலாம், அழுத்தம் தர முயலலாம். உலக அளவில்
தமிழர் என்ற அடையாளத்தை
முன் வைத்து அரசியல் செய்ய
இயலாது.தமிழருக்கென தனி நாடு
கோரவும் இயலாது.இவை நடைமுறையில் சாத்தியமில்லை.
//Have the brahmins as a group done anything against SriLankan Tamils?.//
8:58 AM, April 25, 2009Have the brahmins as a group done anything FOR Eelam Tamils?
//Has any brahmin association passed
any resolution supporting the war.//
Has any brahmin organization passed any resolution supporting the liberation of Eelam or for that matter sympathizing with the suffering Eelam Tamils? Are they part of any larger group that support the Eelam Tamils. For example, Nedumaran's organization or VaiKo's party are not openly anti-brahmin. Can you name few brahmins in those organizations?
//Cho,S.Swamy are just individuals.//
No they are not individuals. Cho, S.Swamy, N.Ram etc are institutions by themselves not to mention a host of retired bueracrates running one-man thinktanks (such as B.Raman, Hariharan etc).
//In which way their view is different from that of Jayanthi
Natarajan or Chidambaram.//
True there are Jayanthi Natarajans and Chidambarams among non-brahmins who are as bad as Cho and S. Swamy when it comes to betraying Tamils. Just enlighten us with the names of few brahmins in public life who are staunch supporters of Tamils. Supporters of Eelam Tamils are almost 100% non-brahmins.
ஒரு தெளிவான பார்வையினை முன்வைக்கின்றது இந்த அலசல். தமிழர்களின் நலன் என்பது தமிழக அரசியல் சூதாடிகளினால் பெரும் கேள்விக்குறியாக தோன்றும் இந்நிலையில் இது போன்ற கட்டுரைகள் அடுத்த செல்ல வேண்டிய இலக்கினை விவாதத்திற்கு வைக்கின்றன. இந்த கட்டுரையும் இதற்கு வந்துள்ள மறுமொழிகளும் பலருக்கும் தங்களுடைய சிந்தனைகளை மறுபரிசீலனைக்கு உட்படுத்தும் என்றெ எண்ணத் தோன்றுகின்றது. இது போன்ற கட்டுரைகளின் வெற்றியே இதற்கு கிடைக்கும் தட்டை மனப்பான்மை கொண்ட எதிர்விவாதங்கள் தான். !!!!!!
3:34 PM, April 26, 2009ரோசவசந்த் கூறியுள்ளது போல், //இப்போதைக்கு நிச்சயமாக இந்தியா சார்ந்த பிரச்சனைகளில் நமக்கு எந்த சம்பந்தமும் இல்லை என்று மீண்டும் மீண்டும் கிடைக்கும் இடங்களில் எல்லாம், ஈழப்பிரச்சனையை சுட்டிக்காட்டி பேசவேண்டும்.//
அதை கூடுமானவரை செய்தே வந்திருக்கின்றேன். அதே சமயம், தமிழர்களைத் தவிர பிற மொழிகளில் உள்ளோர் இந்தி தேசியத்திற்கு எதிராக முன் வைக்கும் கருத்துக்களை தமிழிலும் பிற மொழிகளிலும் பரப்ப நம்மால் முடிந்த காரியங்களைச் செய்ய வேண்டும். குறிப்பாக Paul Zacharia போன்றவர்களின் பேட்டி http://www.rediff.com/freedom/27paul.htm போன்றவை. அப்பொழுது தான் மற்றவர்களும் இது போன்ற உபயோகமற்ற தேசிய அமைப்புகளினால் என்ன மாதிரியான சிக்கல்களை எதிர் நோக்குகின்றனர் எனத் தெரியவரும்.
சங்கரபாண்டி குறிப்பிட்டுள்ளதைப் போல், //முன்பெல்லாம் ஈழச்சிக்கல் பற்றி புலிகள் மீதான தடையினால் அதிகம் அக்கறை காட்டாத தமிழகத் தமிழரெல்லாம் கூட இந்தியாவின் செயல்பாடு கண்டு மனம் நொந்து பேசுவதைப் பார்க்க முடிகிறது.// அதே சமயம், எவன் செத்தால் எனக்கென்ன மனப்பான்மை கொண்ட அல்லது அரசியலே பேசாதா அல்லது சினிமா சம்பந்தமான அல்லது நடிகர்களின் படங்கலை மின்னஞ்சலில் அனுப்பிக் கொண்டிருந்த நண்பர்கள் (பெண்கள் கூட) இப்பொழுதெல்லாம் ஈழப் போரின் கோரமுகத்தை விபரிக்கும் அல்லது இந்தியாவின் பிண்ணனியை விளக்கும் மின்னஞ்சல்களை அனுப்பத் துவங்கியுள்ளனர்..
சசி,
//வலைப்பதிவில் இந்தியாவின் முரண்பாடு குறித்து பேசினாலே இந்திய பாஸ்போர்ட்டில் வந்து தான் விவாதம் நிற்கும். இது தான் விவாதத்தை திசை திருப்ப சிலர் பயன்படுத்தும் உத்தி.//
இது அவர்களின் சிந்தனை வறட்சியை காண்பிக்கின்றது அவ்வளவே...
//But if you think you are just a tamil national, better surrender your current passport and get a tamil passport if you can.//
இது போன்ற முகமற்றவர்களின் பின்னூட்டம் எனக்கும் வந்தது. இது போன்ற ஏராளமான கேள்விகளை ஓர்குட்டில் காணலாம் !!!!
இவர்களுக்கு மோகன் கந்தசாமியின் பதிலுரையே சிறந்தது..
அதே சமயம், அந்த ஒட்டுப் போட்ட இந்தியா அரசியலமைப்பு சட்டத்த உருவாக்கியவர்கள் (B. R. Ambedkar), இல்லாத இந்தியாவை கனவு கண்டு அமைத்த காந்தி, நேரு எல்லாரும் வெளிநாட்டில் படித்து அல்லது வேலைபார்த்தவர்கள் தான் என்பதையும் அவர்கள் உள்ளே வந்து கட்டியது தான் அந்த இ்ந்தியா என்பதையும் இவர்களைப் போன்றவர்கள் வசதியாக மறந்துவிடுவர்...
உள்ளே உக்காந்துட்டு எவன் குடிய சாதி பேரை சொல்லி கெடுக்கலாம், பெரும்பான்மையான மக்கள் கூட்டத்த சாதியின் பெயரால் படிக்க விடாம பொழைப்புல மண்ண போடலாம்னு கால காலமா உக்காந்துட்டு இருக்குற 'கும்பல்'ல இருந்து வந்த அல்லக்கைங்க எல்லாம் பேசுறத கேக்கும் நேரக் கொடுமையை என்னவென்று சொல்ல???
அந்த பொணந்திண்ணி நாட்டுக்கு இருக்குறதே 60 வருச வரலாறு தானே?? அதைக் கூட ஒழுங்க படிக்காதவன் எல்லாம் தேசிய முகவர் ஆகிடுறாங்க...
இந்த லட்சணத்துல இவர்கள் சிலர் புலி, வன்முறை, குழந்தைகள் படையில்னு காய்சல் கண்டவர்கள் போல் புலம்பிக் கொண்டிருப்பர்.. அவர்களிடம், கீழ் உள்ள கேள்வியினை வைத்தால் பதிலேதும் வராது.
//உடனே புலிகளின் வன்முறையைப் பற்றிப் பேசுவீர்கள். வன்முறை செய்யாத மலையகத் தொழிலாளர்களான இந்தியத் தமிழர்களுக்கு இந்தியா என்ன செய்தது என்று கேட்டால் காணாமல் போய் விடுவீர்கள்.//
:)
//There is nothing wrong to be express yourself as Tamilian but what prevents you to accept other people in India equally? No one will hang you in any part of India just for expressing you as a Tamilian. Have a broad mind please.//
எப்போ, எங்க யாரு கூட தமிழன் பிரச்சனை பண்ணினான்னு இது போன்ற முகமிலிகள் விளக்க மாட்டார்கள்..
அது தான் பல இடத்துல மரண அடிவாங்கி broad mind இருப்பதை விளக்கிக் கொண்டுள்ளோமே.. இன்னமும் என்ன செய்ய வேண்டும் என எதிர்பார்க்கின்றிகள் ஐயா?
இவர்களைப் போன்றவர்கள் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும், தமக்கான குரலை தனது அரசு எழுப்பவில்லையெனில் அவ்வரசைப் புறக்கணிப்பது என்பது இயல்பான சமூக இயக்கம் தானே. ??
கையேடு இரஞ்சித் கூறியுள்ளது போல், இப்போதெல்லாம் இந்தியா எனும்போது ஒரு மயிரும் கூச்சறிவதில்லை. (ஏனெனில், இந்திய பாதுகாப்புபடையில் மட்டுமே வேலை செய்வேன் என்று டெல்லியிலும் போபாலிலும் சில காலம் சுற்றியவர்களில் நானும் ஒருவன் !!!!) :)))
ஆனால், இன்று
//என்னைப் போன்றவர்களுக்கு ஈழப்போராட்டம், சிறீலங்காவிற்கான இந்தியாவின் ஆதரவு போன்றவை புதிய அடையாளப் போராட்டத்தை துவக்கியிருக்கிறது. என்னுடைய அடையாளம் ”தமிழன்” என்பது மட்டுமே என்ற தெளிவினையும் கொடுத்து இருக்கிறது.//
என்று சொன்னால் மிகையாகாது. இந்த மனமாற்றத்தினை பாகிஸ்தான், அமெரிக்கா அல்லது சீனர்கள் வரவைக்கவில்லை. மனிதம் தொலைத்த 'இந்தி'யர்களே !!!!
கற்பகம் கூறியுள்ளது போல், //ஆறுமாச குழந்தை தலைல குண்டப் போடுறான், இதைக் கண்டிக்க மனிதன் என்ற "அடையாளம்' போதும். அந்த அடையாளம் கூட இல்லாத கூட்டம் "இது அதிகாரத்திற்கான போர்" என தன் அறிவுத் திறமையக் காட்டினால், தமிழர் என்கிற இன/மொழி அடையாளத்தை இன்னும் நாம் உறுதியாக பிடித்துக்கொள்ளத்தான் வேண்டும். //
உண்மை.
Has any brahmin organization passed any resolution supporting the liberation of Eelam or for that matter sympathizing with the suffering Eelam Tamils
12:41 AM, April 27, 2009தாம்பிராஸ் அத்தகைய நிலையை எடுத்துள்ளது. எத்தனை சாதி சங்கங்கள் ஈழத்தமிழருக்கு ஆதரவாக
போராட்டம் செய்தன?.எத்தனை சாதி
அமைப்புகள் ஈழத்தமிழருக்கு நீதி வேண்டும் என்று அரசியல் கட்சித்தலைவர்களை சந்த்தித்து
அழுத்தம் தந்தன.தமிழக அரசியல்
கட்சிகளில் பிராமணர்களின் பங்கேற்ப்பு
மிகக்குறைவு.பொதுவாக பிறசாதிகளை விட அமைப்பு ரீதியாக
வலுவற்ற சாதி பிராமண சாதி.
I often wonder what happens to people; what is the compulsive reason that everyone quote Marx. If one understand Marxian perception and of Periyaar, one should stick with either of them. Marx label is becoming more and more fancy.
9:13 AM, May 18, 2009I often wonder what happens to people; what is the compulsive reason that everyone quote Marx. If one understand Marxian perception and of Periyaar, one should stick with either of them. Marx label is becoming more and more fancy.
9:13 AM, May 18, 2009நான் புதிதாக வேலைக்கு சேர்ந்த இடத்தில், என்னை நான் அறிமுகப்படுத்தம்போது, I am from Tamilnadu என்று சொன்னேன். உடனே ஒரு வெளிநாட்டவர் நீங்கள் இந்தியரைப் போன்றே தோற்றத்தில் இருக்கிறீர்கள் என்றார். உடனே ஒரு வட இந்தியன், அவரை நோக்கி, என்னை இந்தியன் என்று விளக்கினான். வெளிநாட்டவர்கள் குழம்பிப் போய் என்னைப்பார்த்தனர். ஒரு சில வரிகளில் விளக்கினேன், இந்தியாவுக்கு தமிழ்நாடு தெவையாக இருக்கலாம் ஆனால் தமிழ்நாட்டுக்கு இந்தியா தேவையில்லை என்று சொல்லி, நான் ஏன் இந்தியனில்லை என்பதையும் விளக்கினேன். வெளிநாட்டவர்கள் புரிந்துகொண்டனர். வட இந்தியனும் புரிந்து கொண்டான், வேறு விதமாக, Are you Tiger?என்று கேட்டான். என்ன கொடுமை சார் இது!!!!
2:45 AM, June 08, 2009Dear Tamil Sasi....
2:24 AM, July 03, 2009This blog and the associated comments by other Bloggers/Readers are iving me sleepless nights... My mind is now agitated and really i dont know what to say when I meet my friends in north India!!!!
Could you permit me to send these article to my friends in Oman? There your blog is blocked by the goverment...
திரு மாலன் அவர்களுக்கு,
12:55 AM, May 15, 2010இலங்கையில் அமைதி பேச்சு வார்த்தை காலத்தில் அங்கு சென்று வந்த இந்து ராமை நீங்கள் சன் நியூஸ் இல் பேட்டி எடுத்தீர்கள் அதை நான் முழுமையாக பார்த்தேன்.அதில் ராம் முழுவதும் சிங்கள அரசுக்கு ஆதரவாக புலிகளை கடுமையாக தாக்கி பேசி கொண்டிருந்தார் ஆனால் நீங்கள் அங்கு பன்முகத் தன்மை குறித்து எந்த கேள்வியையும் எழுப்பவில்லை.அவரின் பேட்டி முழுவதும் ஒரு பிரசாரம் போலிருந்தது.உங்களின் கேள்விகளும் தான்.எனது கேள்வி இது தான் ஏன் இந்து ராமை மட்டுமே பேட்டி எடுக்க வேண்டும் ?
இந்து ராம் என்ன ஈழப் பிரச்சினையின் நாட்டாமையா ?
அப்பொழுது தமிழகத்தில் இருந்து பலர் சென்று வந்தார்கள் (திருமா,சீமான்,சூரிய தீபன்..) அவர்களையும் எடுத்திருக்கலாமே ?
தமிழன் மராத்தி நோய் உள்ளவன் தான் ஆனால் எல்லா தமிழர்களும் அல்ல என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
//ஓவியம் - நன்றி தூரிகைகளின் துயரப்பதிவுகள் மற்றும் புதினம்//
4:58 AM, July 09, 2010புதினம் அல்ல வினவு. சிங்கள சின்னமான சிங்கத்தின் கையில் தமிழர்களின் மண்டையோடு படம் ம க இ க தோழர் முகிலனால் வரையப்பட்டது. வினவில் வெளிவந்தது. புதினம் அதனைப் பெயர் குறிப்பிடமால் 'எச்சரிக்கையாக' பயன்பருத்திக் கொண்டுள்ளது.
excellent article broooooooo.
12:28 PM, November 02, 2010Post a Comment