வணக்கம்

சசியின் டைரி என்ற என்னுடைய வலைப்பதிவிற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறேன்.

அரசியல், பொருளாதாரம், ஈழம், காஷ்மீர், சமூகம் என கடந்த 9 வருடங்களில் பல தலைப்புகளில் எழுதப்பட்டிருக்கின்ற என்னுடைய கட்டுரைகளை வாசிக்க உங்களை அழைக்கிறேன்

ஈழம்

என்னுடைய ஈழம் குறித்த பதிவுகளில் ஈழப்போராட்டம் குறித்த வரலாறு, போர், சாமானிய தமிழனின் வாழ்க்கை போராட்டம், இந்தியாவின் மறைமுக போர், தமிழக அரசியல்வாதிகளின் சுயநலம் என பல பார்வைகள் உள்ளன

வாசிக்க...

ஓவியம் : நன்றி - தூரிகைகளின் துயரப்பதிவுகள்

காஷ்மீர்

காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதியாக கூறப்பட்டு கொண்டிருந்த தருணத்தில் 2005ல் காஷ்மீருக்கு விடுதலை வேண்டும் என வலைப்பதிவுகளில் எழுதினேன். காஷ்மீர் குறித்து இந்திய ஊடகங்கள் வெளியிடாத சில தகவல்களையாவது என்னுடைய கட்டுரைகளில் பேசிய திருப்தி எனக்கு உண்டு

வாசிக்க...

அப்துல் கலாம் என்னும் தேசியவாத முகமூடி

அப்துல் கலாம் தமிழகத்தில் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவராக கருதப்பட்டார். தமிழக எழுத்தாளர்கள அவரை விமர்சிக்காமல் இருந்த தருணத்திலேயே அவரை வலைப்பதிவில் நான் விமர்சித்து எழுதினேன்

வாசிக்க...

பிற கட்டுரைகள்

தமிழக அரசியல், அமெரிக்க தேர்தல், இந்திய பொருளாதாரம், தமிழ் தேசியம், ஒடுக்கப்பட்ட மற்றும் தலித் மக்களின் பிரச்சனைகள் என பல கட்டுரைகள் இந்த வலைத்தளத்தில் உள்ளன. வாசியுங்கள், உங்கள் விமர்சனங்களையும் அனுப்புங்கள்

மின்னஞ்சல் : thamizhsasi@gmail.com

Monday, December 24, 2007

ஒரு மணி நேரத்தில் திரட்டி செய்வது எப்படி ?

திரட்டி, தொழில்நுட்பம், Design என ஆளாளுக்கு பேசிக்கொண்டிருக்கும் பொழுது, நாமும் ஏதாவது பேசி தமிழ் இணைய தொழில்நுட்ப பிதாமகன் என்ற பட்டத்தை வாங்கிக்கொள்ளலாம் என்ற ஒரு சின்ன ஆசையில் திரட்டி செய்வது எப்படி என்பது குறித்து இங்கே எழுத இருக்கிறேன்.

தமிழ் இணைய தொழில்நுட்பத்தில் பல நுட்பமான வேலைகளை ஆரம்பகாலங்களில் செய்து, வலைப்பதிவுகள் சுலபமாக பெருக காரணமாக இருந்த முகுந்த், சுரதா, உமர், காசி போன்றவர்கள் எல்லாம் பின்னுக்கு தள்ளப்பட்டு, திரட்டி குறித்து உரக்கப் பேசும் "கருத்து கந்தசாமிகள்" பிதாமகன் பட்டத்தை பெறும் இக் காலத்தில் திரட்டி, வறட்டி செய்வது குறித்த என்னுடைய Recipe இது. இது பலருக்கும் தெரிந்த Recipe தான். தெரியாதவர்கள் தெரிந்து கொள்ளலாம் அவ்வளவே.

****

ஒரு அடிப்படை திரட்டியை செய்வது மிக, மிக சுலபமான வேலை.

ஒரு மணி நேரத்தில் திரட்டி செய்ய தேவைப்படும் (மென்)பொருட்கள்

  • ஒரு லினக்ஸ் சர்வர் அக்கவுண்ட். கிடைக்கும் இடம் - 1and1, godady போன்றவை...

திரட்டி தயாரிக்க பல திறவுமூல மென்பொருள்கள் கிடைக்கின்றன. இங்கே இருக்கும் பல திரட்டிகள் திறவுமூல மென்பொருள் மூலமாகவே தயாரிக்கபட்டுள்ளன.

சில திறவுமூல மென்பொருள்கள்
தமிழ் திரட்டிகள் பல FoF மற்றும் FoFReduxஐ அதிகமாக பயன்படுத்துகின்றன என நினைக்கிறேன். ஆனால் இந்த இரண்டிலும் சில பிரச்சனைகள் உள்ளன. அடிப்படையில் இவை இரண்டும் Magapie என்ற PHP parserஐ பயன்படுத்துகின்றன. MagapieRSS development கிட்டத்தட்ட தேங்கிப் போய் விட்டது. இதனைக் கொண்டு பதிவுகளை திரட்டுவதில் சில பிரச்சனைகள் உள்ளன. சில வசதிகள் இதில் இல்லை. ஆனால் அடிப்படையான வசதிகள் உள்ளன.

தற்பொழுது அதிக கவனத்தைப் பெற்று வரும் ஒரு parser Simplepie. எனக்கு மிகவும் பிடித்தமான parser இது தான். பல தளங்கள் தற்பொழுது Simplepieஐ இப்பொழுது பயன்படுத்த தொடங்கியிருக்கின்றன. மிகவும் சுலபாக பயன்படுத்த கூடியதாக இருக்கிறது.

இது தான் அடிப்படை.

இப்பொழுது எப்படி திரட்டி செய்யலாம் என்று பார்ப்போம். சுலபமான வழிமுறைக்காக FoFRedux கொண்டு எப்படி திரட்டி செய்யலாம் என பார்க்கலாம்.
http://fofredux.sourceforge.net/ சென்று மென்பொருளை தறவிறக்கி கொள்ளுங்கள். உங்கள் தளத்தின் ஒரு முகவரியில் இதனை நிறுவவேண்டும். உதாரணமாக http://yourdomainname/feeds (உதாரணமாக : http://tamilsasi.com/feeds)

பிறகு config.php.sample என்ற ஒரு Fileல் மாற்றம் செய்ய வேண்டும். இதில் உங்கள் வழங்கியின் (Server) Mysql connection parametersஐ கொடுங்கள்

// Database connection information. Host, username, password, database name.
define('FOF_DB_HOST', "localhost");
define('FOF_DB_USER', "user");
define('FOF_DB_PASS', "password");
define('FOF_DB_DBNAME', "fofredux");
define('FOF_DB_TYPE', "mysql");

config.php.sampleஐ config.php என்ற பெயருக்கு மாற்றம் செய்யுங்கள்

பிறகு http://yourdomainname/feeds/install.php என்ற முகவரிக்கு சென்றால், உங்கள் திரட்டிக்கு தேவையான database tables உங்கள் தளத்தில் நிறுவப்பட்டு விடும்.

பிறகு உங்கள் தளத்தின் முகவரியான http://yourdomainname/feeds சென்று உங்கள் தளம் திரட்ட வேண்டிய செய்தியோடைகளை (RSS Feeds) சேர்க்கலாம். ஒவ்வொரு செய்தி ஓடையாகவும் சேர்க்கலாம். அல்லது பல பதிவுகளின் ஓடைகளை OPML மூலமாகவும் சேர்க்க முடியும். (http://yourdomainname/feeds/add.php).

அது போல உங்கள் தளத்தில் நீங்கள் வைத்திருக்கிற அனைத்து RSS ஓடைகளையும் OPMLக பெற முடியும் - (http://yourdomainname/feeds/opml.php )

அவ்வளவு தான் திரட்டியின் அடிப்படை வேலை முடிந்தது. இப்பொழுது இந்த திரட்டி தானாக பதிவுகளை திரட்ட வேண்டும். http://yourdomainname/feeds/update.php என்ற முகவரிக்கு சென்றால் திரட்டி நாம் கொடுத்துள்ள ஓடைகளை திரட்டும்.

Cron மூலமாக அரை மணி நேரத்திற்கு ஒரு முறை, ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை என்று Schedule செய்ய முடியும். இவ்வாறு செய்வதன் மூலமாக பதிவுகளை தொடர்ச்சியாக திரட்ட முடியும்.

இந்த திரட்டி இரண்டு Mysql tableல்களில் பதிவுகளை சேமிக்கிறது. fr_feedsல் நீங்கள் திரட்டும் பதிவுகளின் பட்டியல் இருக்கும். fr_itemsல் நீங்கள் திரட்டும் இடுகைகள் இருக்கும்

ஒரு அடிப்படையான திரட்டியை இதன் மூலமாக தயாரிக்க முடியும். பின்னூட்டங்களும் ஓடையாக (Comments RSS feed) இப்பொழுது கிடைப்பதால், பின்னூட்டங்களையும் இவ்வாறு திரட்ட முடியும்.

அடுத்து நாம் செய்ய வேண்டியதெல்லாம், ஒரு அழகான முகப்பு பக்கம். இணையத்தில் ஆயிரக்கணக்கான HTML templates கிடைக்கின்றன. நல்ல ஒரு டெம்ப்ளேட்டை எடுத்துக் கொண்டு fr_items tableல் இருந்து இடுகைகளின் பட்டியலை முகப்பு பக்கத்தில் அழகாக வடிவமைத்து காட்டலாம்.

அவ்வளவு தான் - திரட்டி ரெடி.

இப்பொழுது எல்லாவற்றையும் விட முக்கியமான ஒரு வேலை உள்ளது. அது தான் நானும் ஒரு திரட்டியை தயாரித்து விட்டேன் என்று வெளியூலகிற்கு அறிவித்து, தமிழ் இணைய வரலாற்றில் இடம் பிடிக்க முயற்சிப்பது :)

****

மேலே கூறியவை அனைத்தும் PHP சார்ந்த மென்பொருட்கள். இது போல ஜாவா சார்ந்த நுட்பங்கள் கூட திறவுமூல மென்பொருள் மூலமாக கிடைக்கின்றன. ஆனால் ஜாவா மூலமாக செய்வதால் Hosting செலவு அதிகம் ஆகலாம்.

****


திரட்டி செய்வது சுலபம் தான் என்றாலும் ஒரு திரட்டி வெற்றி பெறுவது அது முன்வைக்கும் Creative ideas மூலம் தான். அது போல தொடர்ச்சியாக பதிவுகளையும், பின்னூட்டங்களையும் உடனுக்குடன் காட்டும் திரட்டியே வெற்றி பெறும். அந்த வகையில் பல திரட்டிகளைக் காட்டிலும் தமிழ்மணம் பலவகையிலும் தொழில்நுட்ப ரீதியில் சிறந்து விளங்குவதே தமிழ்மணம் வெற்றி பெற்றதற்கு காரணமாக நினைக்கிறேன். தமிழ்மணம் கருவிப்பட்டையை பயன்படுத்துகிறது. என்றாலும் "உடனுக்குடன்" என்பது தான் தமிழ்மணத்தின் சிறப்பு...

தமிழ்மணத்தின் சில சிறப்பம்சங்கள்

- உடனுக்குடன் இடுகைகளும், பின்னூட்டங்களும் முகப்பில் தெரிவது (வேர்ட்பிரஸ் பின்னூட்டங்கள் முகப்பில் தெரிவதில்லை. "ம" திரட்டி மூலமாக திரட்டப்படுகிறது. தமிழ்வெளி தளத்தின் முகப்பில் வேர்ட்பிரஸ் பின்னூட்டங்கள் தெரியும்)
- பதிவுகள் சூடாகும் நிலவரம் தெரிவது
- ஒரு காலத்தில் வாசகர் பரிந்துரை தமிழ்மணத்தின் ஹைலைட். இன்றும் உள்ளது. ஆனால் அதிகம் கவனிக்கப்படுவதில்லை.

வலைப்பதிவு வாசகர்களில் 99% பேர் இவற்றை மட்டும் தான் பார்க்கிறார்கள். என்றாலும் பிற தொழில்நுட்ப சிறப்பம்சங்கள்...

- வலைப்பதிவுகளில் பயன்படுத்தப்படும் குறிச்சொற்கள் (Wordpress Categories, blogger labels) அனைத்தும் ஒரு இடத்தில் கிடைப்பதும், எந்த குறிச்சொற்கள் அதிகம் பயன்படுத்தபடுகிறது என்ற நிலவரமும்.
உதாரணமாக http://www.thamizmanam.com/tag/அரசியல் என்ற முகவரியில் அரசியல் என்ற குறிச்சொல் கொண்டு எழுதப்பட்டுள்ள அனைத்து இடுகைகளையும் பார்க்க முடியும். அங்கே கொடுக்கப்பட்டுள்ள இணைப்புகளை கொண்டு "அரசியல்" என்ற குறிச்சொல்லுடன் பிற தளங்களில் (wordpress, Technorati) எழுதப்பட்டுள்ள இடுகைகளையும் பார்க்க முடியும் (Find other blogs tagged with அரசியல் in the below sites).

தமிழ்மணம் தவிர தமிழூற்றும் குறிச்சொற்களை திரட்டுகிறது. தமிழூற்றில் குறிச்சொல் தொடர்பான மேலும் சில வசதிகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

- நாம் பல பதிவுகளில் மறுமொழிகளை எழுதுகிறோம். ஆனால் எத்தனை மறுமொழிகள் எழுதினோம், எங்கெல்லாம் மறுமொழிகள் எழுதினோம் என்பதை track செய்வது கடினம். என்னைப் போன்றவர்களுக்கு பிரச்சனையில்லை. ஆனால் கண்ணபிரான் ரவிசங்கர், துளசிகோபால் போன்றவர்களுக்கு தான் பிரச்சனை. சராசரியாக ஒரு மாதத்திற்கு 70-80 மறுமொழிகள் எழுதுகிறார்கள். அவர்கள் எழுதும் மறுமொழிகளை தமிழ்மணம் - "ம" திரட்டி மூலமாக track செய்ய முடியும். http://www.thamizmanam.com/comments/ என்ற முகவரி மூலமாக நீங்கள் எழுதும் பின்னூட்டங்களை track செய்ய முடியும். உதாரணமாக http://www.thamizmanam.com/comments/kannabiran,%20RAVI%20SHANKAR%20(KRS) என்பது மூலமாக கண்ணபிரான் ரவிசங்கர் எழுதும் பின்னூட்டங்களை ஒரே இடத்தில் வாசிக்க முடியும்.

தற்பொழுது இந்த வசதி தமிழ்மணத்தின் சோதனையில் உள்ளது. இது தமிழ்மணத்தில் மட்டுமே உள்ள சிறப்பம்சம். பிற திரட்டிகளில் இல்லை.

- தமிழ்மணத்தில் இணைக்கப்பட்டுள்ள பதிவுகள் மட்டும் தான் காண்பிக்கபடுவதாக ஒரு பிம்பம் உள்ளது. ஆனால் அது தவறு. தமிழ்மணத்தில் இணைக்கப்படாத பதிவுகளையும் தமிழ்மணம் தன்னுடைய கேளிர் திரட்டி மூலமாக திரட்டுகிறது. கேளிர் திரட்டியின் தமிழ்ப்பகுதியில் தமிழ்மணத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ள பதிவுகள் கூட திரட்டப்படுகின்றன. இது கூகுள் மூலமாக திரட்டப்படுகிறது. இது போன்ற ஒரு வசதி தேன்கூடு திரட்டியில் உள்ளது. ஆனால் தேன்கூடு "திரட்டிஜி"யை விட தமிழ்மணத்தின் கேளிர் திரட்டியில் பல தமிழ்ப்பதிவுகள் திரட்டப்படுகின்றன. இன்னும் சொல்லப்போனால் தமிழில் எழுதப்படும் அனைத்து வலைப்பதிவுகளும் கேளிர் திரட்டியில் உள்ளது.

- தமிழ்விழி மூலமாக வீடியோக்கள் திரட்டப்படுகின்றன.

****

குழலி பதிவில் தமிழ்மணம் கருவிப்பட்டை குறித்து நான் எழுதிய பின்னூட்டம்
http://kuzhali.blogspot.com/2007/12/blog-post_24.html#comment-1476921344624263856

****

எல்லாவற்றுக்கும் ஒரு மாற்று தேவை என்பது ஒரு சரியான நோக்கம் தான். ஆனால் தமிழனின் மனநிலை தன்னை முன்னிலைப்படுத்திக் கொள்வதில் தான் உள்ளது. "நான்" ஆலோசனை கொடுத்தேன், "நான்" செய்தேன் என அனைத்தும் "நான்", "நான்" என்றே முன்வைக்கப்படுகிறது. அதனால் தான் tamilblogs.com போன்ற தளம் திறவுமூலமாக இருந்தும் அது மேம்படுத்தப்படாமல் சுலபமாக செய்யக்கூடியதாக உள்ள திரட்டிகள் அதிகம் உருவாகி கொண்டே இருக்கின்றன. இது தமிழுக்கு எந்த வகையிலும் நன்மை அளிக்க போவதில்லை. தனிப்பட்டவர்களின் சுயதிருப்திக்கும், சுயதம்பட்டத்திற்கும் மட்டுமே இது வழிவகுக்கும். தமிழனின் இந்த மனநிலையால் தான் பெரிய கூட்டு முயற்சிகள் பெரும்பாலும் தோல்வியே அடைகின்றன. ஆனால் வெளிநாட்டு சூழலில் கூட்டு முயற்சிகள் பெரும் வெற்றி பெற்றிருக்கின்றன. அங்கு அமைப்புகள் முன்னிறுத்தப்பட்டுகின்றன. தனி நபர்கள் அல்ல.

தமிழ்மணத்திற்கு நிச்சயம் ஒரு மாற்று தேவை. புதிய சிந்தனைகளும், புதிய எண்ணங்களும் வளர வேண்டும். இது தமிழ் மொழிக்கும் நன்மையே. இதற்கு தேவை ஒரு பெரிய கூட்டு முயற்சி மட்டுமே. தனிப்பட்ட சிறு முயற்சிகள் அல்ல. அதுவும் வணிக ரீதியில் லாபம் இல்லாத நிலையில் ஆரம்பகட்ட ஆர்வம் சில மாதங்களில் காணாமல் போய் விடும். சிறு முயற்சிகள் தோல்வி அடைந்து விடும். இதனை நான் பல்வேறு முயற்சிகளில் பார்த்திருக்கிறேன். அனுபவத்தால் உணர்ந்தும் இருக்கிறேன்.

இது தமிழ் இணைய உலகை 2004ல் இருந்து கவனித்து வரும் என்னுடைய "இரண்டணா"


Leia Mais…
Thursday, November 22, 2007

ஈழம் - தமிழகம் : தமிழக அரசியல் : கலைஞரின் ஈழ ஆதரவு

தமிழ்ச்செல்வனின் படுகொலை, தமிழகத்தில் அதனால் ஒரு கொந்தளிப்பான சூழ்நிலை எழுந்துள்ளதாக மிகைப்படுத்தும் ஈழ ஊடகங்கள், அப்படியான எந்த ஒரு உணர்வும் தமிழகத்தில் இல்லை என உண்மையை மூடி மறைக்கும் இந்தியப் பத்திரிக்கையாளர்கள் (மற்றும் அவற்றின் வலைப்பதிவு வால்கள்) என அந்தப் படுகொலையை விட அதனை விளம்பரப்படுத்தும் உத்தியும் - அதன் எதிர்நிலையும் காணப்பட்ட சூழ்நிலை மறைந்து மிக இயல்பான ஒரு சூழ்நிலை நிலவிக்கொண்டிருக்கிற இந்த தருணத்திலே என்னுடைய இந்த இடுகை தாமதமாக எழுதப்படுகிறது.

ஜெயலலிதா குறித்து பெரிய விமர்சனத்தினை நாம் வைக்க வேண்டிய அவசியம் இருப்பதாக நான் நினைக்கவில்லை. ஜெயலலிதா இவ்வாறு செய்யாமல் இருந்தால் தான் ஆச்சரியம். எந்தப் பிரச்சனையையும் அரசியலாக்கும் கோணத்திலேயே பார்க்கும் ஜெயலலிதா இந்தப் பிரச்சனையையும் அரசியலாக்க முனைந்து, உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுப்பேன் என்று பயமுறுத்தி பிறகு அடங்கிப் போய் விட்டார். இது குறித்து இந்துஸ்தான் டைம்ஸ் இவ்வாறு எழுதியது.

Fearing isolation on the "Tamil issue" in a state dominated by ethnic politics, Jayalalitha quickly issued a statement claiming that Tamil blood ran in her veins too, even though she was born outside Tamil Nadu in Mysore. She has apparently given up the idea of going to the Supreme Court after seeing the general political mood in the state on the issue of Tamilselvan.

கலைஞர் வழக்கம் போல ஜெயலலிதாவிற்கு விளக்கம் அளித்தார். முன்பெல்லாம், ஜெயலலிதா கலைஞரை விடுதலைப் புலிகளின் ஆதரவாளர் என்று தாக்கும் பொழுதெல்லாம் ஜெயலலிதா விடுதலைப் புலிகளை ஆதரித்து இந்தியன் எக்ஸ்பிரசில் எப்பொழுதோ (1980களில் ?) வெளியிட்ட அறிக்கையை தான் சுட்டி காட்டுவார். எனவே விடுதலைப் புலிகள் என்ற பயங்கரவாத இயக்கத்தை ஆதரிப்பது தான் மட்டும் அல்ல. ஜெயலலிதா கூட "ஒரு காலத்தில்" ஆதரித்தார் என கலைஞர் சுட்டி காட்டுவார். ஆனால் இப்பொழுது வைகோ ஜெயலலிதா பக்கம் இருப்பதாலும், கலைஞருக்கும் வைகோவிற்கும் பகை இருப்பதாலும் விடுதலைப் புலிகளை ஜெயலலிதா அணியில் இருக்கும் வைகோ ஆதரிக்கிறாரே என கேள்வி கேட்டிருக்கிறார்.

வழக்கம் போல தமிழக அரசியலில் இருக்கும் மிக மோசமான அரசியல் சூழ்நிலைக்கு இந்தப் பிரச்சனையும் இரையாகி இருக்கிறது. விடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவு தலைவர் தமிழ்ச்செல்வனுக்கு ஒரு தமிழன் என்ற நிலையையும் கடந்து தன்னுள் இயல்பாக எழுந்த உணர்வின் காரணமாக இரங்கல் கவிதையை எழுதிய கலைஞர், அதனை வழக்கம் போல வெளிப்படையாக கூறிக்கொள்ள தயங்குகிறார். அவரின் இந்த தயக்கமும், அச்சமும் ஈழ விடுதலையின் எதிரிகளுக்கு பல நேரங்களில் வசதியாக இருந்து வந்துள்ளது.
தமிழகத்தில் ஈழ விடுதலை குறித்து எந்தக் கருத்தும் இல்லை என்று கூற தொடங்கி விடுவார்கள்.

ஆனால் இம்முறை கலைஞர் தெரிவித்த இரங்கல் இந்தப் பிரச்சனை தொடர்பாக தமிழகத்தில் பல காலமாக அடங்கி இருந்த உணர்வுகளுக்கு ஒரு வடிகாலாக மாறி எழத் தொடங்கியது. இந்தப் பிரச்சனை குறித்து எழுதிய Economist தமிழகம் குறித்து இவ்வாறு எழுதியுள்ளது.

One disturbing development is a revival of interest in Sri Lanka's Tamil issue in the Indian state of Tamil Nadu, just across the 30km-wide (19 -mile) Palk Strait. In the 1980s, its Tamils, now numbering some 60m, helped house, finance, train and arm Sri Lankan Tamil militants. The state's chief minister, M. Karunanidhi, opened a can of worms by penning a poem praising Tamilselvan and talking of the “Tamil brotherhood” binding Tamils across the globe. This revived memories of the late 1980s, when he was also chief minister and openly supported the Tigers.

The main opposition party in Tamil Nadu, the All-India Anna Dravida Munnetra Kazhagam, condemned Mr Karunanidhi's condolence message, saying that he had broken the law by praising a member of a proscribed group. The Tigers were banned in India after the assassination of Rajiv Gandhi, a former prime minister, in 1991. Tamilselvan's death has revived the issue of Tamil ethnicity in Tamil Nadu, which could help whip up support for the Tigers there. This is worrying Sri Lanka. At least one newspaper has asked the government to take the matter up in Delhi.

தமிழகத்தில் உள்ள நிலை குறித்து கொழும்பில் இருந்து வெளியாகும் டெய்லி மிரார் போன்ற பத்திரிக்கைகள் பல கட்டுரைகளை வெளியிட்டன.

தமிழகம் என்றில்லாமல் தில்லியின் ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்கள் தில்லியின் பல்கலைக்கழக வளாகத்திலும் இந்தப் பிரச்சனை எதிரொலித்தது.

TN students at JNU term slain Tamil Tiger a martyr

கலைஞர் தன்னுடைய விடுதலைப் புலிகளின் ஆதரவு நிலைப்பாட்டினை வெளிப்படையாக கூறாவிட்டாலும், தமிழகத்தின் பிற தலைவர்களான வைகோ, டாக்டர் ராமதாஸ், திருமா போன்றோர்களுக்கு கலைஞர் போல எந்த தயக்கமும் இல்லை. அவர்கள் வெளிப்படையாகவே விடுதலைப் புலிகளை தாங்கள் ஏன் ஆதரிக்கிறோம் என்று தெளிவுபடுத்தியிருக்கிறார்கள்.

கலைஞர், ஈழத்தமிழர்களை உணர்வால் ஆதரிக்ககூடியவர் என்றாலும் அவரின் நிலைப்பாடு ஒரளவிற்கு பெரும்பான்மையான தமிழகத் தமிழர்களின் நிலைப்பாட்டினை தெளிவுபடுத்துவதாக தான் நான் நினைக்கிறேன். அது விடுதலைப் புலிகளை ஆதரித்தால் எழும் "ராஜீவ் படுகொலை பூதம்", இந்திய தேசியத்திற்கு எதிரான பிரிவினைவாதிகள் என்ற குற்றச்சாட்டு போன்றவையே. 1989ல் கலைஞரின் ஆட்சி திமுக விடுதலைப் புலிகளை ஆதரிப்பதாக கலைக்கப்பட்டது. 1998ல் மைய அரசின் ஆட்சியில் அங்கம் வகித்த திமுக ஜெயின் கமிஷன் பிரச்சனையில் (ராஜீவ் படுகொலை சார்ந்த விசாரணைக் கமிஷன்) ஆட்சியினை இழக்க நேரிட்டது. இந்த இரண்டு காரணங்களும் திமுக விடுதலைப் புலிகளை வெளிப்படையாக ஆதரிக்க முடியாமைக்கு முக்கிய காரணமாக உள்ளது.

இவை தவிர மைய அரசியலில் காங்கிரஸ் அல்லது பாரதீய ஜனதா என இரு கட்சிகளுக்குள் ஏதேனும் ஒன்றினை தேர்ந்தெடுக்க வேண்டிய நிர்பந்தம் இன்றைக்கு திமுகவிற்கு உள்ளது. கொள்கை ரீதியில் பாரதீய ஜனதா கட்சியுடன் ஒட்ட முடியாத ஒரு ஒவ்வாத நிலை கடந்த காலத்தில் திமுகவிற்கு இருந்தது. அந்த நிலையிலே தான் காங்கிரசின் தலைவர் சோனியா காந்தி தானாக முன் வந்து கடந்த பாரளுமன்ற தேர்தலில் திமுகவுடன் உடன்பாடு செய்ய முனைந்த பொழுது அந்த ஆதரவினை திமுக கெட்டியாக பிடித்துக் கொண்டது. காங்கிரசின் மிக முக்கியமான தோழமைக் கட்சியாக இன்று திமுக உள்ளது. எதிர்காலத்தில் பாரதீய ஜனதா போன்ற மத ரீதியான கட்சியுடன் கூட்டணி வைத்துக் கொள்வதை தவிர்ப்பதற்கு இது திமுகவிற்கு உதவும். அதுவும் தவிர பாரதீய ஜனதா கட்சியுடன் கூட்டணி வைத்து கொள்வதால் திமுகவிற்கு தமிழகத்தில் பெரிய பலம் இல்லை. மயிலாப்பூரில் வாக்குகளை பெறுவதே கடினம் என்னும் நிலையில் பாரதீய ஜனதா கூட்டணி மாநில அரசியலில் திமுகவிற்கு பெரிய பலம் கிடைத்து விடாது. மாறாக காங்கிரசுடன் கூட்டணி திமுகவிற்கு மாநில அரசியலிலும் பலத்தைச் சேர்க்கிறது. எனவே விடுதலைப் புலிகள் விடயத்தில் அடக்கி வாசிக்க வேண்டிய அவசியம் நேருகிறது. தமிழக அரசியல் நிலைப்பாடுகள் முன்னிலைப்படுத்தப்பட்டு ஈழ விடுதலை பின்னுக்கு தள்ளப்படும் சூழல் திமுகவிற்கு உள்ளது.

திமுகவின் அரசியல் நிர்ப்பந்தம் இவ்வாறாக உள்ளது என்றால் ஜெயலலிதாவின் அரசியல் நிர்ப்பந்தமும் திமுகவை போல காங்கிரசைச் சார்ந்தே தான் அமைந்து உள்ளது. கடந்த தேர்தலில் பாரதீய ஜனதாவை கைகழுவி விட்ட நிலையில் அடுத்து வரும் பாரளுமன்ற தேர்தல் அதிமுகவிற்கு முக்கியமான சவால். அதுவும் அந்த பாராளுமன்ற தேர்தலை எதிர்க்கட்சியாக எதிர்கொள்வது அதனை விட சவாலானது. சட்டமன்ற தேர்தலுக்குப் பின் நடந்த இடைத்தேர்தல்கள் விஜயகாந்த்தின் கட்சி குறிப்பிடத்தக்க வாக்குகளை, அதுவும் அதிமுக வாக்கு வங்கியில் இருந்து பிளந்து பெற்று வரும் நிலை அதிமுகவிற்கு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. பொதுவாக தமிழக வாக்கு அரசியலில் இருக்கும் சினிமா கவர்ச்சி கலாச்சாரம் அதிமுகவை சார்ந்தே இயங்கி வந்திருக்கிறது. அதிமுகவின் வாக்கு வங்கி சினிமா கவர்ச்சியை சார்ந்த வாக்கு வங்கி தான். திமுகவின் வாக்கு வங்கி என்பது அவ்வாறானது அல்ல. அதுபோலவே கடந்த காலங்களில் "கருணாநிதி எதிர்ப்பு" என்பது தமிழக அரசியலில் முக்கியமான ஒன்று. அதனைச் சார்ந்து தான் தமிழக அரசியல் இயங்கி வந்துள்ளது. சினிமாவும், கலைஞர் எதிர்ப்பும் அதிமுகவின் முக்கியமான பலமாக இருந்து வந்துள்ளது.

விஜயகாந்தின் அரசியலை கவனிக்கும் பொழுது அவரும் இதே அரசியலை தான் பின்பற்றுகிறார் என்பதும், அவரது வளர்ச்சி அதிமுகவிற்கு வேட்டு வைக்க கூடியதாக உள்ளதையும் ஜெயலலிதா உணர்ந்திருக்கிறார். விஜயகாந்துடன் இருக்கும் பண்ருட்டியார் இவ்வாறான அரசியல் விளையாட்டுகளை கற்று தேர்ந்தவர் என்ற வகையிலே அதிமுக முன்வைக்க கூடிய அதே உத்திகளை முன்வைத்து வருகிறார்.

இவ்வாறான நிலையில் ஜெயலலிதா தன்னுடைய அரசியல் எதிர்காலத்தை தக்கவைக்க வேண்டுமெனில் காங்கிரசை தன்னுடைய கூட்டணியில் சேர்த்துக் கொள்ள வேண்டிய அவசியம் நேருகிறது. பாரதீய ஜனதா கட்சிக்கு தமிழகத்தில் ஓரளவுக்கு முக்கியத்துவத்தை ஏற்படுத்திக் கொடுத்தவர் ஜெயலலிதா தான். 1998ம் ஆண்டு பாரளுமன்ற தேர்தலில் ஜெயலலிதா பாரதீய ஜனதா கட்சியுடன் அமைத்த கூட்டணி மூலம் பாரதீய ஜனதா சார்ந்த அரசியலை தொடங்கி வைத்தார். அது போலவே பாரதீய ஜனதா சார்ந்த அரசியலை முடிவுக்கு கொண்டு வந்தவரும் ஜெயலலிதா தான். கடந்த சட்டசபை தேர்தலில் பாரதீய ஜனதா கட்சி எந்த கட்சியுடனும் கூட்டணி வைக்க முடியாத நிலை இருந்தது. 1998ல் பாரதீய ஜனதா ஜெயலலிதாவின் equationக்குள் வர முக்கிய காரணம், அப்போதைய மைய அரசியல் சூழல் தான். தமிழகத்தைச் சார்ந்து இவை அமைந்ததில்லை. தமிழகத்தில் காங்கிரசுடன் கூட்டணி அமைப்பதே அதிமுகவிற்கு பலத்தை கொடுக்கும். ஜெயலலிதா அதற்கு தொடர்ந்து முயலுவார். அதனால் தான் சேது சமுத்திர திட்டத்தில் பாஜக தாமாக முன் வந்து "சங்கராச்சாரியார் கைது செய்யப்பட்டதையும் மறந்து" அதிமுகவிற்கு ஆதரவுக்கரம் நீட்டிய பொழுதும் ஜெயலலிதா பொருட்படுத்தவில்லை.

காங்கிரசை தன் பக்கம் இழுக்க அதிமுக முனையும் பொழுது, காங்கிரசை தன் பக்கம் தக்க வைக்க திமுக நினைக்கும். எனவே விடுதலைப் புலிகள் விடயத்தில் திமுக எப்பொழுதுமே அடக்கியே வாசிக்க வேண்டிய அவசியம் உள்ளது. திமுக அந்த நிலையில் இருந்து மாற வேண்டும் என்று ஈழத்தமிழர்கள் நினைத்தால், அது நடக்கப்போவதில்லை.

கலைஞரின் இந்த நிர்ப்பந்தம் வைகோவிற்கோ, ராமதாசிற்கோ, திருமாவிற்கோ இல்லை. காரணம் இவர்களுக்கு தேவை காங்கிரஸ் அல்ல. திமுக அல்லது அதிமுக. இவற்றில் ஏதேனும் ஒரு அணி இவர்களுக்கு போதுமானது. காங்கிரசை இழுக்க வேண்டிய அவசியம் திமுகவிற்கே உள்ளது. பாமக கூட கடந்த காலங்களில் காங்கிரஸ் கட்சியால் தீண்டத்தகாத கட்சியாகவே பார்க்கப்பட்டது. காரணம் பாமகவின் விடுதலைப்புலிகள் ஆதரவு நிலைப்பாடு தான். திமுக-காங்கிரஸ்-பாமக இவை மூன்றும் ஒரே அணியில் இருந்தும், புதுவை மாநிலத்தில் காங்கிரஸ் ஆதரவில் பாமக தேர்தலில் போட்டியிட்ட பொழுதும் கூட, எங்களுடைய கூட்டணி திமுகவுடன் தானே தவிர பாமகவுடன் அல்ல என்று காங்கிரஸ் கூறியதை இங்கே குறிப்பிடவேண்டும்.

அவ்வாறான நிலையில் இருந்து காங்கிரசின் அரசியல் நிறைய மாற்றங்களை அடைந்துள்ள சூழலில் அதனை சிதைத்துக் கொள்ள திமுக தலைவர்கள் விரும்ப மாட்டார்கள்.

கலைஞர் மீதான ஈழத்தமிழர்களின் வருத்தம் என்பது அவர் வெளிப்படையாக ஈழ விடுதலையையோ, விடுதலைப் புலிகளையோ ஆதரிப்பதில்லை என்பதாக உள்ளது. ஆனால் வைகோ இதனை "ஓங்கி" ஒலிப்பதால் ஈழத்தமிழர்கள் வைகோவை கலைஞரை விட நேசமாக பார்க்கிறார்கள். ஈழத்தமிழர்கள் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். கலைஞரின் "தமிழ்" உணர்வுகள் என்பவை வேறானது. அரசியல் என்பது வேறானது. கலைஞரின் தமிழ் உணர்வுகளை யாரும் சந்தேகிக்க முடியாது.

இன்றைக்கு தமிழகத்தில் தமிழ்ச்செல்வனுக்கு ஆதரவாக கூட்டங்கள் நடத்த முடிகிறது. சுவரொட்டிகளை ஒட்ட முடிகிறது என்றால், அதற்கு காரணம் தமிழகத்தில் நடந்து கொண்டிருக்கும் கலைஞரின் ஆட்சி என்பதை உணர வேண்டும். ஜெயலலிதாவின் ஆட்சியாக இருந்திருந்தால் இதே அளவிளான கருத்துச்சுதந்திரம், பேச்சுசுதந்திரம் இருந்திருக்க முடியாது. கலைஞர் இந்தப் பேச்சு சுதந்திரத்தை அனுமதித்து இருப்பதால் தான் சென்னையிலே விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான கூட்டங்களை நடத்த முடிகிறது. அந்த வகையிலே சுப.வீரபாண்டியன் அவர்களின் கருத்துக்களைச் சார்ந்தே எனது கருத்துக்களும் உள்ளன.

தமிழகத்திலே மக்களின் மத்தியிலே ஈழப் போராட்டம் குறித்து தெளிவாக முன்வைக்க வேண்டிய அவசியம் உள்ளது. அவ்வாறான சூழல் கடந்த காலங்களில் இல்லை. தற்பொழுது அதற்கான சூழல் அமைந்துள்ள நிலையில் அதனை தெளிவாக பயன்படுத்திக்கொள்வதில் தான் ஈழவிடுதலை ஆதரவினை தமிழக மக்கள் மத்தியில் எழுப்ப முடியும். தற்போதைய சூழலில் இதனையே நான் முக்கியமாக நினைக்கிறேன். வைகோ போல விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக உரத்த குரல் எழுப்புவதால் இந்தப் பிரச்சனையில் பெரிதாக சாதித்து விட முடியாது.

தமிழக மக்கள் மத்தியில் ஈழ போராட்டத்திற்கு எழும் ஆதரவு தான் தில்லியில் இருக்கும் "சில வெளியூறவு/பாதுகாப்பு அதிகாரிகளை" அச்சப்படுத்தும். இந்தியாவின் வெளியூறவு மற்றும் பாதுகாப்பு கொள்கைகளை வகுக்கும் இந்த அதிகாரிகளுக்கு இருக்கும் அதிகாரம் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழக அரசியல்வாதிகளுக்கு இல்லை என்பது தான் இந்திய ஜனநாயக சூழலின் யதார்த்தமான உண்மை.

யார் அந்த அதிகாரிகள் ?

நான் குறிப்பிடும் அதிகாரி எம்.கே.நாராயணன் - பிரதமரின் பாதுகாப்பு ஆலோசகர் - National Security Advisor (NSA) to the Prime Minister of India.

Narayanan is an expert in security matters and a specialist on Sri Lankan affairs என விக்கிபீடியா குறிப்பிடுகிறது. அவ்வாறான ஒரு பிம்பம் தான் இந்தியாவின் மைய அரசின் வட்டாரத்தில் நிலவுகிறது. எம்.கே.நாராயணனும் சரி, இதற்கு முன்பு ஆலோசகராக இருந்தவரான ஜெ.என்.தீக்க்ஷ்த்தும் சரி விடுதலைப் புலிகளின் தீவிர எதிர்ப்பாளர்கள். எம்.கே.நாராயணன் Intelligence Bureau (IB) தலைவராக இருந்தவர். இலங்கை விவகாரத்தில் ராஜீவ் காந்தியின் முக்கிய ஆலோசகர்களாக இருந்தவர்களில் எம்.கே.நாரயணனும் ஒருவர்.

ஆண்டன் பாலசிங்கம் எழுதிய "War and Peace Efforts of LTTE" என்ற புத்தகத்தில் எம்.கே.நாராயணன் குறித்தும், அவருடன் தானும், பிரபாகரனும் நடத்திய ஆலோசனைகள் குறித்தும் பாலசிங்கம் குறிப்பிடுகிறார். எம்.கே.நாரயணன், பிரபாகரன், ஆண்டன் பாலசிங்கம் இடையேயான முதல் சந்திப்பு வட இந்தியாவில் உள்ள காசி நகரில் முதன் முதலாக நடைபெறுகிறது. ராஜீவ் காந்தி பிரதமராக பொறுப்பேற்ற நேரம் அது. இந்திரா காந்தி சிங்கள அரசுக்கு எதிராக எடுத்த நிலைப்பாடுகளுக்கு மாறாக சிங்கள அரசுடன் இணக்கமான ஒரு சூழ்நிலையை ஏற்படுத்த ராஜீவின் ஆலோசகர்கள் ராஜீவ் காந்திக்கு அறிவுறுத்தி இருந்தனர். அதன்படி புலிகளை சிங்கள அரசுடன் பேச்சுவார்த்தைக்கு இந்திய அரசின் உளவு நிறுவனமான ரா நெருக்குதல் செய்து கொண்டிருந்தது. இவ்வாறான சூழலில் தான் எம்.கே.நாராயணன் பிரபாகரனையும், ஆண்டன் பாலசிங்கத்தையும் சந்திக்கிறார். இதில் தொடங்கி 1987ம் ஆண்டு இந்திய இலங்கை ஒப்பந்தம் கையெழுத்தாகும் சூழ்நிலை வரை விடுதலைப் புலிகள் இயக்கத்துடன் தொடர்பில் இருந்த அதிகாரிகளில் எம்.கே.நாராயணனும் ஒருவர்.

இவ்வாறு இலங்கை விவகாரத்தில் பணியாற்றிய எம்.கே.நாராயணன் இன்றைக்கு இந்திய பிரதமருக்கு பாதுகாப்பு ஆலோசகராக இருக்கும் சூழலில், மைய அரசு பெரும்பாலும் "பாதுகாப்பு" என்ற காரணம் காட்டி தமிழக அரசியல்வாதிகளை தங்களின் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் சூழலில் இந்தியா இந்தப் பிரச்சனையில் தமிழர்களுக்கு இணக்கமாக இருக்கும் என்ற நம்பிக்கை இல்லை. கலைஞரால் இந்த நிலையை மாற்ற முடியும் என்ற நம்பிக்கையும் எனக்கு இல்லை.

விடுதலைப் புலிகளின் போர் வெற்றிகள் மட்டுமே சிங்கள அரசை மறுபடியும் பேச்சுவார்த்தைக்கு கொண்டுவரும். இந்தியாவும் புலிகளுடன் பேசுமாறு சிங்கள அரசை தூண்டும். புலிகள் பலவீனப்பட்டிருப்பதாக ஒரு பிம்பம் தற்பொழுது உருவாகியுள்ள சூழலில் புலிகளை தோற்கடிக்கவே இந்தியாவும் விரும்பும். 20 வருடங்களாக இந்தியாவின் நிறைவேறாத ஆசை அது.

புலிகள் போர் வெற்றிகளை பெற முடியுமா ? புலிகள் பலவீனம் அடைந்து விட்டார்கள் என்ற சிங்கள அரசின் பிராச்சாரத்தை முறியடிக்க முடியுமா ? என்பதே தற்போதைய கேள்வியாக உள்ளது.

அதுவரை, ஈழப் போராட்டம் பற்றிய உண்மை நிலையை தமிழக மக்களிடம் கொண்டு செல்லக்கூடிய வாய்ப்பாக தற்போதைய கலைஞரின் ஆட்சியை கருத வேண்டும். இந்த வாய்ப்பை "தீவிரவாதம்" பேசி, கலைஞர் ஆட்சிக்கு பிரச்சனைகளை ஏற்படுத்தி சிதைத்து விடக்கூடாது.


இது தொடர்பான பிற வலைப்பதிவர்களின் கட்டுரைகள்
பெயரிலியின் - சற்றே சும்மா க/கிடவும் பிள்ளாய்
நாக.இளங்கோவனின் - தமிழீழ மக்களுக்கு கருணாநிதி துரோகியா? part1

Leia Mais…
Friday, November 02, 2007

தமிழ்ச்செல்வனின் மறைவு

புலிகளின் அரசியல் பிரிவு தலைவரும், சமாதான பேச்சு வார்த்தைகளில் புலிகளின் சார்பான குழுவின் தலைவராக பணியாற்றியவருமாகிய சுப.தமிழ்ச்செல்வன் இன்று சிறீலங்கா விமானப்படையின் தாக்குதலில் படுகொலை செய்யப்பட்டுள்ளார். அரசியல் துறையில் கடந்த ஒரு ஆண்டில் ஏற்பட்ட இரண்டாவது பெரிய இழப்பு இது. ஆண்டன் பாலசிங்கம் அவர்கள் கடந்த ஆண்டு உடல்நலக்குறைவால் காலமானதை தொடர்ந்து, தற்பொழுது தமிழ்ச்செல்வனின் மறைவு புலிகளுக்கு பெருத்த பின்னடைவை ஏற்படுத்தும்.

இன்று காலை எழுந்தவுடன் நண்பர்கள் அனுப்பிய மின்னஞ்சலை பார்த்த பொழுது ஒரு நிமிடம் இது உண்மை தானா என்று எண்ணத் தோன்றியது. உடனே நண்பர் அனுப்பி இருந்த தமிழ்நெட் இணையத்தளம் சுட்டியை பார்த்து இந்த தகவலை உறுதி செய்து கொண்ட பொழுது எழுந்த உணர்வுகளை எழுத வார்த்தைகள் இல்லை.

தமிழ்ச்செல்வனின் மறைவு தமிழர்களுக்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு ஆகும். ஈழத்தமிழர்களுக்கு மட்டுமல்ல. தமிழனாய் தங்களை நினைக்கும் அனைவருக்குமே இது பேரிழப்பு தான். ஆண்டன் பாலசிங்கத்தின் மறைவிற்கு பிறகு அந்த பொறுப்பினை யார் வகிப்பார்கள் என்ற கேள்வி எழுந்தாலும் ஒரு வெற்றிடத்தை உணர்ந்தது இல்லை. தமிழ்ச்செல்வன் ஆங்கிலத்தில் சரளமாக உரையாட முடியாவிட்டாலும் கூட சமாதானப்பேச்சுவார்த்தை, வெளிநாட்டு பிரதிநிதிகளை சந்திப்பது போன்ற விடயங்களில் பாலசிங்கத்தை விட அதிகளவில் சமீபகாலங்களில் பணியாற்றியவர். எனவே அரசியல் வெளியில் ஒரு வெற்றிடத்தை உணர்ந்ததே இல்லை. ஆனால் தமிழ்ச்செல்வனின் மறைவு அந்த வெற்றிடத்தை ஏற்படுத்துகிறது.

தமிழ்ச்செல்வன் கொல்லப்பட்டதை தொடர்ந்து சிறீலங்கா இராணுவம் வெளியிட்ட தகவல்களை நோக்கும் பொழுது இது தமிழ்ச்செல்வனை குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதலாகவே தெரிகிறது. சிறீலங்கா இராணுவம் அமெரிக்கா, இந்தியா, பாக்கிஸ்தான், சீனா போன்ற நாடுகளிடம் இருந்து அதிநவீன கருவிகளை பெற தொடங்கியிருப்பதாக வெளியான தகவல்கள் உண்மை தான் என இந்த தாக்குதல் உறுதிப்படுத்துகிறது. இந்த தாக்குதல் ஒரு அரசியல் தலைவரின் மீது இரசாயண ஆயுதங்கள் கொண்டு நடத்தப்பட்டுள்ளது.

அது மட்டுமில்லாமல் அரசியல் துறை பொறுப்பாளராக, பல நாட்டு பிரதிநிதிகளை புலிகள் சார்பாக சந்தித்து வந்த தமிழ்ச்செல்வனின் படுகொலையை இது வரையில் கண்டிக்காத உலகநாடுகளின் இரட்டை வேடத்தையும் இது வெளிப்படுத்துகிறது. உலக நாடுகள் புலிகள் சிங்கள அரசியல் தலைவர்கள் மீது நடத்தும் தாக்குதலை பயங்கரவாதமாக பார்ப்பதும், சிங்கள அரசு தமிழர்கள் மீது நடத்தும் தாக்குதலை கண்டுகொள்ளாமல் இருப்பதும் தமிழர்களுக்கு ஆதரவு தமிழர்கள் மட்டுமே என்பதை மறுபடியும் நிருபிக்கிறது.

தமிழ்ச்செல்வனின் மரணம் சாமாதனப் பேச்சுவார்த்தைகளுக்கு இனி வாய்ப்பே இல்லை என்பதை தான் வெளிப்படுத்துகிறது. எந்த தரப்பும் வெற்றி பெற முடியாத இந்தப் போரில் இன்னும் எத்தனை உயிர்களை இழக்கப்போகிறோம் என்ற அச்சமும் ஏற்படுகிறது.

சுப.தமிழ்ச்செல்வன் அவர்களுக்கு எனது கண்ணீர் அஞ்சலியை செலுத்துகிறேன்.


Leia Mais…
Tuesday, October 23, 2007

சிங்கள இனவெறி : பயங்கரவாதம் : ஹிலாரி

அனுராதபுரம் வான் படைத்தளத்தின் மீது தாக்குதல் நடத்திய கரும்புலிகளின் உடல்கள் நிர்வாணப்படுத்தப்பட்டு, அனுராதபுரம் வீதிகளில் கொண்டு சென்ற நிகழ்வு சிங்கள இனவெறியின் காட்டுமிராண்டித்தனத்தேயே நினைவுபடுத்துகிறது.

சிங்கள இராணுவத்திற்கு ஏற்பட்ட இழப்பையும், பின்னடைவையும் சிங்கள மக்கள் மனதில் இருந்து அகற்றவே இத்தகைய ஒரு காட்டுமிராண்டித்தனத்தை சிங்கள இராணுவம் கட்டவிழித்துள்ளது என lankadissent.com என்ற இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.

Several people who witnessed the incident commented that the intention was to prevent the mentality of defeat from entering the public mindset in the aftermath of this major military debacle which inflicted immeasurable damage to life and property.

கடந்த காலங்களில் சிங்கள இராணுவத்தினரின் உடலை தகுந்த இராணுவ மரியாதையுடன் அடக்கம் செய்த புலிகளின் செயல்பாட்டினையும் இங்கே குறிப்பிட வேண்டிய அவசியம் நேருகிறது. சிங்கள இராணுவ வீரர்களின் உடலை சிறீலங்கா இராணுவம் வாங்க மறுத்த நிலையில் அவர்களின் உடலை தகுந்த இராணுவ மரியாதையுடன் புலிகள் அடக்கம் செய்தனர்.

http://www.tamilnet.com/art.html?catid=13&artid=22392

சிங்கள இராணுவத்தின் இந்த காட்டுமிராண்டித்தனத்தை கண்டிப்பதும், வீரமரணம் அடைந்த கரும்புலிகளுக்கு நம்முடைய அஞ்சலியை செலுத்துவதும் அவசியமாகிறது.

****

புலிகளின் இந்த தாக்குதல் மிக நன்கு திட்டமிடப்பட்ட தாக்குதல் என்கிறார் இந்தியவின் உளவு அமைப்பின் ஓய்வு பெற்ற அதிகாரியான ராமன். இவர் புலிகளின் "தீவிர" எதிர்ப்பாளர் என்பதை இங்கே குறிப்பிட வேண்டும்

LTTE's Anuradhapura Raid: Bravery & Precision

Reliable details of the combined air and land attack launched by the Liberation Tigers of Tamil Eelam (LTTE) on the Anuradhapura air base of the Sri Lankan Air Force early in the morning of October 22, 2007, indicate that it was neither an act of desperation as projected by the embarrassed Sri Lankan military spokesmen nor an act of needless dramatics as suggested by others. It was an act of unbelievable determination, bravery and precision successfully carried out by a 21-member suicide commando group of the Black Tigers---significantly led by a Tamil from the Eastern Province--- with the back-up support of two planes of the so-called Tamil Eelam Air Force

****

பயங்கரவாதம் என்பது எல்லா காலங்களிலும் பல்வேறு நோக்கங்களுக்காக பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. இந்த நோக்கங்கள் விடுதலை சார்ந்தவையாகவும் உள்ளன. கொள்கை சார்ந்த புரட்சியாகவும் இருக்கலாம். இந்த அமைப்புகளின் நோக்கங்கள் என்ன என்பதை பார்க்க வேண்டும். அவ்வாறு பார்க்கும் பொழுது விடுதலைப்புலிகளின் நோக்கம் என்ன என்று பார்க்க வேண்டும். இவற்றின் நோக்கங்களை அடையும் வழியாக பயங்கரவாதம் உள்ளதே தவிர இவர்கள் அனைவரையும் மத அடிப்படை பயங்கரவாதிகளைப் போலவே பயங்கரவாதிகள் என்ற பொருள்பட அணுக முடியாது.

இந்தக் கருத்தை தமிழர்கள் பல காலமாக கூறி வருகிறார்கள். ஆனால் அமெரிக்காவின் பயங்கரவாத எதிர்ப்பு போரினை விடுதலைப்புலிகளை எதிர்ப்பதற்கும் பயன்படுத்த சிங்கள அரசாங்கமும், இந்தியாவின் சில சிங்கள அனுதாபிகளும் தொடர்ந்து முனைந்து வருகிறார்கள். அமெரிக்காவின் குடியரசுக்கட்சியை சார்ந்த சில அதிகாரிகளும் கொழும்பு சென்று அவ்வாறு உளறி வைத்து இருக்கின்றனர்.

ஆனால் ஹிலாரி கிளிண்டன் அந் நிலையில் இருந்து மாறுபட்டு கருத்து தெரிவித்து இருப்பது ஆச்சரியமளிக்கிறது. இது வரை அமெரிக்க அரசியல் தலைவர்களிடம் இருந்து இவ்வாறான ஒரு கருத்து வெளிப்பட்டதில்லை.

ஹிலாரியின் பேட்டியில் இருந்து...

Well, I believe that terrorism is a tool that has been utilized throughout history to achieve certain objectives. Some have been ideological, others territorial. There are personality-driven terroristic objectives. The bottom line is, you can't lump all terrorists together. And I think we've got to do a much better job of clarifying what are the motivations, the raisons d'être of terrorists. I mean, what the Tamil Tigers are fighting for in Sri Lanka, or the Basque separatists in Spain, or the insurgents in al-Anbar province may only be connected by tactics. They may not share all that much in terms of what is the philosophical or ideological underpinning. And I think one of our mistakes has been painting with such a broad brush, which has not been particularly helpful in understanding what it is we were up against when it comes to those who pursue terrorism for whichever ends they're seeking.

முழு பேட்டிக்கும் இங்கே செல்லலாம்

http://www.guardian.co.uk/uselections08/hillaryclinton/story/0,,2197197,00.html

இந்த பேட்டியினை யாராவது மொழிபெயர்ப்பார்களா ? :)

Leia Mais…
Friday, October 12, 2007

ஸ்டாலின் முதல்வராக வேண்டும், கலைஞர் விலகவேண்டும்

இந்தக் கட்டுரை 2006 தேர்தலின் பொழுது எழுதப்பட்டது. தற்பொழுது ஞாநி எழுதியிருக்கும் கட்டுரை கடுமையான விமர்சனத்தை எதிர்கொண்டுள்ள சூழலில் இதனை மீள்பதிவு செய்வது பொருத்தமாக தோன்றியது.

ஞாநியின் கருத்துக்களில் எனக்கும் உடன்பாடு உண்டு. அதே நேரத்தில் ஞாநி இதனை கலைஞர் மீதான நல்லெண்ணம் காரணமாக எழுதினார் என நினைக்க முடியவில்லை. ஞாநியின் கட்டுரைகளில் கலைஞர் மீதான எதிர்ப்பு அதிகம் தென்படுவது வழக்கமான ஒன்றாகி விட்டது.

ஞாநியின் அபத்தமான பல கருத்துகள் குறித்து ஒரு சிறு உதாரணம் கொடுக்க வேண்டுமென்றால் சென்னை சங்கமத்தின் பொழுது அவர் எழுதிய கட்டுரை தான் நினைவுக்கு வருகிறது. அதிலே வெளிநாட்டு தமிழர்கள் டிசம்பர் சங்கீத சீசனுக்கு சென்னை வந்து விட்டு சென்று விடுவார்கள். எனவே சென்னை சங்கமத்தை ஜனவரியில் நடத்துவதால் வெளிநாட்டு தமிழர்கள் அதிகளவில் சென்னை வருவார்கள் என்று சொல்ல முடியாது என்ற தொனியில் ஞாநி எழுதியிருந்தார் (அந்த சுட்டி இப்பொழுது இல்லாததால் இங்கே கொடுக்க முடியவில்லை) .

டிசம்பர் சங்கீத சீசனுக்காக சென்னை வருபவர்கள் யார் ? சங்கீத சீசனில் சென்னை வருபவர்கள் அதிகமா, அல்லது பொங்கலுகாக சென்னை/தமிழகம் வருபவர்கள் அதிகமா ?

இவ்வாறு ஞாநியின் சார்புகள் தெளிவாக தெரிந்தாலும், அவரது தற்போதைய கட்டுரையின் கருத்தில் எனக்கு பெரிய விமர்சனம் எதுவும் இல்லை. கலைஞர் அரசியலை விட்டு விலக வேண்டும் என்றே நானும் விரும்புகிறேன். ஆனால் ஞாநியின் கட்டுரையின் தொனியில் சில அதிருப்திகள் எனக்கும் உள்ளன. அது ஞாநியின் கலைஞர் எதிர்ப்பினையே ஞாபகப்படுத்துகிறது

2006ல் எழுதிய கட்டுரையை இங்கே தருகிறேன்

ஸ்டாலின் முதல்வராக வேண்டும், கலைஞர் விலகவேண்டும்

82வயதில் திமுகவை கலைஞர் ஆட்சி பீடத்தில் அமர்த்தி இருக்கிறார். அவருக்கும் திமுகவிற்கு பலர் தெரிவித்துள்ள வாழ்த்துக்களில் என்னுடைய வாழ்த்தினையும் ஐக்கியப்படுத்திக் கொள்கிறேன். வாழ்த்த வயதில்லை என்றெல்லாம் நான் நினைக்கவில்லை. ஓட்டு போடும் வயதிருப்பதால் தேர்தலில் வெற்றி பெறும் எவரையும்ஹ் வாழ்த்துவதற்கும் வயது ஒரு பொருட்டல்ல.

இந்த தேர்தலில் எனக்கு ஏற்பட்ட பல ஆச்சரியங்களில் ஒன்று கலைஞரின் பிரச்சாரம். 82வயதில் தமிழகத்தின் பல தொகுதிகளுக்கு சென்ற அவரது உடல் உறுதி என்னை வியப்பில் ஆழ்த்தியது. சென்னையில் இருந்து நான்கு மணி நேரப் பயணத்தில் இருக்கும் நெய்வேலிக்கு செல்வதற்குள் ஏற்படும் பயண எரிச்சல் ஒரு புறம் என்றால் இந்த கோடை காலத்தில் பயணம் செய்வதே எரிச்சல் மிகு தருணம் தான். என்ன தான் ஏசி காரில் சென்றாலும் கூட கோடை காலங்களில் ஏசியை மீறிய எரிச்சல் சில நேரங்களில் ஏற்படுவது இயல்பு. ஆனால் 82 வயதிலும் கடும் கோடை வெப்பத்திற்கிடையே சில ஆயிரம் கீ.மீ பயணம், பிரச்சார கூட்டம், தொண்டர்களின் அலைமோதல் இவற்றிடையே அவரது பேச்சின் ஈர்ப்பு மட்டும் இன்னும் குறையவே இல்லை. அதே கரகரப்பான குரல். அதில் தெரியும் கம்பீரம் போன்றவை கலைஞருக்கே உரித்தான இயல்புகள்.

என்றாலும் அதை மீறி தள்ளாட்டத்துடன் நடக்கும் அவரது நடை, நிற்பதற்கு கூட தேவைப்படும் ஒரு உதவியாளர், நிற்க முடியாமல் உட்கார்ந்து கொண்டே பேசும் அவரது முதிய நிலை போன்றவையெல்லாம் பார்க்கும் பொழுது கலைஞர் இந்த அரசியல் சாக்கடையை விட்டு கொஞ்சம் விலகி இருக்கலாமோ என்று தோன்றுகிறது. ஆனாலும் 82வயதிலும், 2006 தேர்தலில் திமுக வெற்றி பெற கலைஞர் தான் தேவைப்படுகிறார் என்பதை கவனிக்கும் பொழுது திமுகவின் அடுத்த தலைமுறையினர் பற்றிய கேள்விக்குறியும் எழுகிறது. அடுத்த தேர்தலில் திமுகவிற்கு மக்களிடையே ஆதரவு திரட்ட கலைஞர் ஆரோக்கியமுடன் இருப்பார் என்ற எண்ணம் எழுந்தாலும் அடுத்த தலைமுறை திமுகவை கலைஞர் அவரது காலத்திலேயே ஆட்சியில் அமர்த்த வேண்டும் என்று தோன்றுகிறது. தமிழக அமைச்சரவையில் அன்பழகன், ஆற்காடு வீராசாமி என வயதான தலைமுறையினரை தொடர்ந்து பார்க்க வேண்டுமா என்ற அலுப்பும் ஏற்படுகிறது.

இன்று இந்தியாவின் இளையதலைமுறை பல நாடுகளில் தங்கள் தாக்கத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றனர். பன்னாட்டு நிறுவனங்கள் இந்தியாவிற்கு குறிப்பாக தென் மாநிலங்களுக்கு படையெடுத்துக் கொண்டிருக்கின்றனர். தமிழகம், கர்நாடகா, ஆந்திரா போன்ற மாநிலங்களுக்கு வெளிநாட்டு முதலீடுகள் குவிந்து கொண்டே இருக்கின்றன. தமிழகம் பல இளைய தலைமுறை பொறியாளர்களை உருவாக்கி கொண்டிருக்கிறது. தமிழகத்திற்கு இயல்பாக இருக்கின்ற கல்வி வளம், உள்கட்டமைப்பு காரணமாக ஏராளமான வெளிநாட்டு முதலீடுகள் வந்து சேருகின்றன. தமிழகம் ஆசியாவின் எதிர்கால முக்கிய பிராந்தியத்திற்கான விருதினைப் பெற்று இருக்கிறது (ASIAN REGION OF THE FUTURE). ஆஸ்திரேலியா போன்ற பிராந்தியங்களை பின்னுக்கு தள்ளி தமிழகம் இந்த விருதினைப் பெற்றிருக்கிறது. இதற்கு முக்கிய காரணம் தமிழகம் இந்த முதலீடுகளைப் பெற தகுந்த அளவிலான ஒரு அரசாங்கத்தை கடந்த 5ஆண்டுகளாகப் பெற்றிருந்தது.

என்னுடைய முந்தைய ஒரு பதிவில் கூறியிருந்தது போல ஜெயலலிதாவின் கடந்த 5ஆண்டு கால ஆட்சியில் பொருளாதார ரீதியில் தமிழகம் ஒரு நல்ல நிலையை நோக்கி முன்னேறிக் கொண்டிருந்தது. ஆனால் இந்தியா போன்ற ஏழ்மை அதிகம் இருக்கும் நாடுகளில் பொருளாதார சீர்திருத்தங்கள் மட்டுமே மக்கள் மகிழ்ச்சியடைய முக்கிய காரணங்களாக இருப்பதில்லை. பொருளாதாரமும் உயரவேண்டும், மக்களுக்குச் சலுகைகளும் வழங்க வேண்டும். இதனை சரியான முறையில் பேலன்ஸ் செய்வதில் தான் இந்தியாவில் அமையும் அரசாங்கங்களின் திறமை இருக்கிறது. அந்த வகையில் பொருளாதார ரீதியில் சிறப்பாக செயல்பட்டிருந்தாலும், ஜெயலலிதா மக்களுக்கு சலுகைகள் வழங்கும் விதத்தில் சரியாக செயல்படவில்லை. இதை தவிர ஜனநாயக முறையில் இந்தியா கடுமையான சட்டதிட்டங்களை வைத்திருக்காவிட்டால் ஜெயலலிதா ஒரு முழுமையான சர்வாதிகாரியாகவே மாறியிருப்பார். எனவே பொருளாதார செயல்பாட்டில் ஜெயலலிதா சரியாக செயல்பட்டிருந்தால் கூட பிற வகையில் அவரின் செயல்பாடு கடுமையான விமர்சனத்திற்குள்ளாகியது. அதுவே அவர் 2004தேர்தலின் தோல்விக்கும், அதனை அவர் தாமதமாகப் புரிந்து கொண்டு தவறுகளை திருத்திக் கொண்டமை தான் 2006 தேர்தலில் மோசமான தோல்வியை தழுவாமைக்கும் முக்கிய காரணம்.

இங்கு கவனிக்க வேண்டிய முக்கிய விடயம் செயல்பாடு. அரசாங்கம் வேகமாக செயல்பட வேண்டும். பொருளாதார ரீதியில் பன்னாட்டு நிறுவனங்களை மாநிலத்திற்கு கொண்டு வந்து முதலீட்டினை அதிகரிக்க வேண்டும். அதே நேரத்தில் மக்களுக்கும் சலுகைகள், அடிப்படை வாழ்க்கை தேவைகள் போன்றவற்றை வழங்க வேண்டும். அரசாங்கத்தின் செலவுகள் அதிகரிக்கும் அதே நேரத்தில் அரசாங்கத்தின் வருவாய் பெருக்கப்பட வேண்டும். பொருளாதார ரீதியில் போட்டி இன்று அதிகரித்து இருக்கிறது. அண்டை மாநிலங்கள் பன்னாட்டு நிறுவனங்களின் முதலீடுகளை தங்கள் மாநிலத்திற்கு கொண்டு வர கடுமையாக முயற்சி மேற்க்கொள்கின்றன. இந்த முதலீடுகளை பெருமளவில் கவர்ந்தால் தான் மக்களுக்கான நலத்திட்டங்களை செயல்படுத்த முடியும். முதலீடுகளை தமிழகத்திற்கு கொண்டு வரவேண்டுமானால் தமிழகத்திற்கு கவர்ச்சியான முதல்வர் வேண்டும். இந் நிலையில் தமிழகத்திற்கு 82வயது கலைஞர் முதல்வராக இருப்பது ஏற்புடையது தானா என்ற கேள்வி எழுகிறது.

கலைஞர் முதல்வராகும் பட்சத்தில் அவரது அரசாங்கம் ஒரு முதிய மந்திரி சபையாகத் தான் இருக்கும். அரசாங்கம் அரசியல்வாதிகளை விட அவர்கள் தங்களிடையே வைத்துக் கொள்ளும் அரசாங்க அதிகாரிகளால் தான் நடத்தப்படுகிறது என்றாலும், அந்த முதல்வர் தான் அரசாங்கத்தின் முகம். தன்னுடைய மொத்த அமைச்சர்களையும் டம்மியாக்கி ஜெயலலிதா தன்னை முதலீடுகளுக்குச் சாதகமான முதல்வராக வெளிப்படுத்திக் கொண்டார். ஆனால் கலைஞரால் அது போல தன்னை வெளிப்படுத்திக் கொள்ள முடியாது. ஏற்கனவே அவர் கொடுத்துள்ள தேர்தல் வாக்குறுதிகள் தமிழக பொருளாதாரத்திற்கு கடுமையான நெருக்கடிகளை ஏற்படும். அவரது முதிய வயதில் செயல்பாடு மந்தப்படும் பொழுது, தமிழகத்திற்கு வரும் முதலீடுகள் அண்டை மாநிலங்களுக்குச் செல்லும். இது கலைஞர் மீதும், தமிழக அரசு மீதும் கடும் சுமையை ஏற்படுத்தும். இந்த காரணங்களால் தான் கலைஞர் முதல்வராவது சரியானது அல்ல என நான் நினைக்கிறேன்.

கலைஞருக்கு இந்த வாய்ப்பு இல்லையெனில் வேறு யாருக்கு இருக்கிறது ? நிச்சயமாக திமுகவில் தொண்டர் பலம் கொண்ட ஸ்டாலினை தவிர வேறு யாருக்கும் இந்த வாய்ப்பு இருக்கப்போவதில்லை. எனவே அடுத்த தலைமுறைக்கு வழி விட்டு கலைஞர் விலக வேண்டும். ஸ்டாலின் முதல்வராக வேண்டும்.

ஸ்டாலினுக்கு அந்த தகுதி எந்தளவிற்கு இருக்கிறது ? ஸ்டாலினுக்கு அந்த தகுதி இல்லையெனில் தயாநிதி மாறன் முதல்வராகலாமா ?

ஸ்டாலினின் வாய்ப்புகளும், தகுதிகளும் ஒரு புறம் இருக்க, ஒரு விடயத்தை இங்கு குறிப்பிட வேண்டும்.

கலைஞர் அரசியலில் இருந்து விலகி ஓய்வு எடுக்கும் தருணங்களில் அவரது ஆசை பேரன் தயாநிதியையும் அரசியலில் இருந்து விலக்கி தன்னுடன் அழைத்துக் கொள்வது நல்லது. திமுக மீதான அபிமானம் இனிமேலும் அதிகம் சேதம் அடையாமல் காப்பாற்ற இது உதவும்.

அரசாங்கத்தை தவிர திமுகவின் எதிர்காலத்தை முன்னிட்டும் கலைஞர் ஸ்டாலினை முதல்வராக்க வேண்டும் என்று தான் எனக்கு தோன்றுகிறது.

****

மேலே எழுதிய விடயத்தில் ஒன்றாவது நடந்ததில் எனக்கு மகிழ்ச்சி

அது தயாநிதி மாறன் அரசியலில் இருந்து விலக வேண்டும் என நினைத்தது :)

கலைஞர் அரசியலில் இருந்து விலகி ஓய்வு எடுக்கும் தருணங்களில் அவரது ஆசை பேரன் தயாநிதியையும் அரசியலில் இருந்து விலக்கி தன்னுடன் அழைத்துக் கொள்வது நல்லது. திமுக மீதான அபிமானம் இனிமேலும் அதிகம் சேதம் அடையாமல் காப்பாற்ற இது உதவும்.

Leia Mais…
Monday, October 08, 2007

சேது சமுத்திர திட்டம் : Frequently Asked Questions

சேது சமுத்திர திட்டம் குறித்து நான் வாசித்த வரையிலேயே எனக்கு தோன்றிய கேள்விகள், கிடைத்த பதில்கள் இவற்றை இங்கே பட்டியலிட்டிருக்கிறேன். இந்தப் பிரச்சனை குறித்து எனக்கு புரிந்த அளவிலான FAQ தான் இந்தக் கட்டுரை. சேது சமுத்திரம் குறித்த உணர்ச்சி மயமான சூழ்நிலை அடங்கி இருக்கும் இந்த நேரத்திலே, இது குறித்த பொருளாதார மற்றும் சுற்றுப்புறச்சூழ்நிலைகளை மட்டும் விவாதிப்பது பொருத்தமாக இருக்கும்.

சேது சமுத்திர திட்டம் என்றால் என்ன ?

இந்தியாவின் கிழக்கு மற்றும் மேற்கு பகுதிகளுக்கு இடையே நேரடியான கப்பல் போக்குவரத்தினை இந்த திட்டம் ஏற்படுத்தி கொடுக்க இருக்கிறது. தற்பொழுது இலங்கையைச் சுற்றி இந்தியாவின் கிழக்கு/மேற்கு பகுதிகளுக்குச் செல்ல வேண்டிய கப்பல்கள் சேது சமுத்திரத்தினை பயன்படுத்தும். இந்த திட்டத்தால் சுமாராக 424 nautical miles (780 Km) பயண தூரமும் 30 மணி நேர பயண நேரமும் குறையும்.

இந்த திட்டத்தின் பயன் என்ன ?

முதலில் பொருளாதார அடிப்படையை மட்டும் பார்ப்போம்...

Transhipment என்பது உலக வர்த்தகத்தின் ஏற்றுமதி மற்றும் இறக்குமதியில் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்தியாவிற்கு இறக்குமதி செய்யப்படும் பொருள்களாகட்டும், இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் பொருள்களாகட்டும் அது நேரடியாக ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு செல்வதில்லை. Mainline Cargo Vessels என்று சொல்லப்படுகிற பெரிய கப்பல்கள் மூலமாக இந்த பொருட்கள் சில பெரிய துறைமுகங்கள் - Transshipment Port வழியாகவே நடைபெறும்.

உலகின் மிக முக்கியமான Transshipment துறைமுகங்களில் கொழும்பு முக்கிய இடம் வகிக்கிறது. கொழும்பு துறைமுகத்தில் Mainline Cargo Vessels என்று சொல்லப்படுகிற பெரிய கப்பல்கள் நுழைவதற்கான வசதி உள்ளது. ஆனால் பல இந்திய துறைமுகங்களில் அந்த வசதி இல்லை. அதனால் இந்தியாவிற்கு வரும் பொருட்கள் அனைத்தும் கொழும்பிற்கு வந்தடையும். கொழும்பு துறைமுகத்தில் இருந்து பல சிறிய கப்பல்கள் மூலமாக இந்த பொருட்கள் இந்தியாவில் உள்ள துறைமுகங்களுக்கு வந்து சேரும். அது போல இந்திய துறைமுகத்தில் இருந்து ஏற்றுமதியாகும் பொருட்கள் அனைத்தும் இந்தியாவில் இருந்து சிறிய கப்பல்கள் மூலமாக கொழும்பு வந்தடையும். அங்கிருந்து பெரிய கப்பல்கள் மூலமாக பிற நாடுகளுக்கு சென்றடையும்.

இவ்வாறு இந்தியாவின் வர்த்தகத்தில் சுமார் 70% கொழும்பு துறைமுகம் வழியாகவே நடைபெறுகிறது. எஞ்சிய 30% சிங்கப்பூர் மற்றும் பிற துறைமுகங்கள் முலமாக நடைபெறுகிறது. கொழும்பு துறைமுகத்தின் மொத்த வருவாயில் 40% இந்தியா மூலமாக கிடைக்கிறது.

ஏன் இந்தியாவிடம் Transshipment துறைமுகம் இல்லை ?

இந்தியாவின் துறைமுகங்கள் எதுவுமே உலக கடல் போக்குவரத்து பாதையில் இல்லை. கொழும்பு, சிங்கப்பூர் போன்றவை கடல் போக்குவரத்து பாதையில் இருக்கின்றன. இது தவிர இந்திய துறைமுகங்கள் ஆழம் குறைவானவை. இந்திய துறைமுகங்கள் சர்வதேச தரத்தில் இல்லாதது முக்கிய காரணம். இந் நிலையிலே தான் இந்தியாவின் பொருட்களை கையாள கொழும்பு மற்றும் சிங்கப்பூர் துறைமுகங்களையே நம்பி உள்ள நிலை உள்ளது. இந்தியாவில் ஒரு துறைமுகம் கூட Transshipment துறைமுகமாக இல்லாதது பொருளாதார ரீதியாக வளர்ந்து வரும் இந்தியாவிற்கு உகந்தது அல்ல என உணர்ந்த மைய அரசு இதனை மாற்ற சில முயற்சிகளை கடந்த ஆண்டு முதல் எடுக்க தொடங்கியுள்ளது. கொச்சிக்கு அருகே இருக்கும் வல்லர்படம் Transshipment துறைமுகமாக மாற்றப்படும் என கேரள அரசியல்வாதிகளை திருப்தி படுத்த மைய அரசு கூறியுள்ளது

தூத்துக்குடி துறைமுகம் கொழும்பு போல வளருமா ?

தூத்துக்குடி துறைமுகத்தில் கூட இன்னும் பல உள்கட்டமைப்பு வேலைகளை செய்தால் தான் Transhipment port போல மாற்றம் செய்ய முடியும். தற்போதைய நிலையில் இது சாத்தியமாகி விடாது. அது தவிர தூத்துக்குடி துறைமுகம் கடல் பாதையில் இல்லை என்பது தூத்துக்குடி துறைமுகத்தின் வளர்ச்சிக்கு முக்கிய பின்னடைவே.

ஆனால் கொழும்பு துறைமுகம் அளவுக்கு சர்வதேச தரத்திற்கு தூத்துக்குடி துறைமுகத்தை மாற்ற மைய அரசு நடவடிக்கை மேற்கொண்டால் தூத்துக்குடி துறைமுகம் முக்கிய துறைமுகமாக மாற்றம் பெறும்

சேது சமுத்திர திட்டம் இந் நிலையை மாற்றுமா ?

மாற்றும் என்கிறது இந்திய அரசு

எப்படி ?

தூத்துக்குடி துறைமுகம் மும்பை, சென்னைக்கு அடுத்தபடியாக இந்தியாவின் மூன்றாவது சர்வதேச துறைமுகம். தற்பொழுது அதிவேகமாக வளர்ந்து வரும் துறைமுகங்களில் தூத்துக்குடியும் ஒன்று.

இந்தியாவில் இருந்து சிறிய கப்பல்கள் மூலமாக கொழும்புவிற்கு அனுப்பப்பட்டு அங்கிருந்து Mainline Cargo Vessels மூலமாக பிற நாடுகளுக்கு அனுப்பப்படும் சரக்கு போக்குவரத்து சேது சமுத்திரம் நடைமுறை படுத்தபட்டால் நேரடியாக தூத்துக்குடி வந்தடையும். தூத்துக்குடியில் இருந்து பெரிய கப்பல்கள் மூலமாக பிற நாடுகளை சென்றடையும்.

உதாரணமாக கல்கத்தாவில் இருந்து கொழும்புவிற்கு கப்பல் செல்வதற்கு பதிலாக சேது சமுத்திரம் மூலமாக நேரடியாக தூத்துக்குடி வந்தடையும். அங்கிருந்து பெரிய கப்பல்கள் மூலமாக பிற நாடுகளுக்கு சரக்கு சென்றடையும்.

இது தவிர இந்தியாவின் கிழக்கு, மேற்கு பகுதிகளுக்கு இடையே நேரடியான பாதையும் கிடைக்கிறது. இலங்கையை சுற்றிக்கொண்டு செல்ல வேண்டிய அவசியம் இல்லை.

எத்தனை கப்பல்கள் இதனை பயன்படுத்த கூடும் என அரசு தெரிவிக்கிறது ?

முதல் ஆண்டில் (2008ம் ஆண்டு) சுமாராக 3000 கப்பல்கள் இதனை பயன்படுத்தும். அடுத்த 15 ஆண்டுகளில் இது அதிகரித்து சுமார் 7000 கப்பல்கள் இதனை பயன்படுத்தும் என அரசு கருதுகிறது.

இந்த திட்டத்தால் என்ன நன்மை ?

கொழும்பு உள்ளிட்ட வெளிநாட்டு துறைமுகங்களை நம்பி இருப்பதால் வருடத்திற்கு சுமார் 1000 கோடி Transhipment வகையிலே அந்நியச்செலவாணி இழப்பு இந்தியாவிற்கு ஏற்படுகிறது. சேது சமுத்திர திட்டம் வெற்றியடைந்து தூத்துக்குடி துறைமுகம் Transhipment துறைமுகமாக மாறினால் இந்த 1000 கோடி அந்நியச்செலவாணி இழப்பு பெருமளவில் தவிர்க்கப்படும் என அரசு நம்புகிறது

தூத்துக்குடி துறைமுகம் இந்தியாவின் பொருட்களை கையாள துவங்கும் வாய்ப்பு ஏற்பட்டால் கொழும்பு துறைமுகம் போல தூத்துக்குடியும் முக்கிய துறைமுகமாக வளர்ச்சி பெறும். இதனால் தென்மாவட்டங்களில் வேலை வாய்ப்புகள் பெருகும். பொருளாதார ரீதியாக தென்மாவட்டங்கள் வளர்ச்சி பெறும். புதிய ஏற்றுமதி சார்ந்த தொழில் வாய்ப்புகள் தென்மாவட்டங்களில் ஏற்படும்.

கேட்க நன்றாக இருக்கிறது. நடைமுறையில் சாத்தியம் ஆகுமா ?

உள்கட்டமைப்பு துறையில் தெளிவான முடிவுகளை எடுக்காமல் அரசியல் ரீதியாக ஒவ்வொரு மாநிலத்தையும் திருப்திபடுத்த மைய அரசு சில முடிவுகளை அறிவித்து கொண்டுள்ளது. கடந்த ஆண்டு கேரளாவின் கொச்சி துறைமுகம் அருகே உள்ள வல்லர்படம் துறைமுகத்தை Transshipment துறைமுகமாக மாற்றப் போவதாக அரசு கூறியது. தூத்துக்குடியா ? வல்லர்படமா என்ற குழப்பம் உள்ளது.

இது தவிர சேது சமுத்திரம் திட்டத்தின் வெற்றி, தூத்துக்குடி துறைமுகத்தை சர்வதேச தரத்திற்கு மாற்றுவது இவை தான் இது நடைமுறைச் சாத்தியமா, வெறும் கனவு மட்டுமா என்பதை தீர்மானிக்கும்.

நல்ல திட்டமாக தானே தெரிகிறது ? பின் ஏன் இதனை பொருளாதார ரீதியாக எதிர்க்கிறார்கள் ?

கப்பல் போக்குவரத்து சேது சமுத்திரம் கடல்பாதையில் நடைபெற்றால் தான் மேலே கூறியவை அனைத்தும் நடைமுறைச் சாத்தியமாகக் கூடிய வாய்ப்பு உள்ளது. சில கடல் போக்குவரத்து வல்லுனர்கள் பெரிய கப்பல்கள் இந்த கடல் பாதையை பயன்படுத்த வாய்ப்பில்லை என நினைக்கிறார்கள்.

தவிரவும் சேது சமுத்திர திட்டம் சுமார் 2500 கோடி ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்படுகிறது. கப்பல்கள் சேது சமுத்திர கடல்பாதையை பயன்படுத்தி, அதற்கு அவர்கள் செலுத்தும் வரி மூலமாக தான் இந்த தொகையை திரும்பப் பெற முடியும். ஆனால் கப்பல்கள் இதனை பயன்படுத்தா விட்டால் லாபம் கிடைக்காது. இந்த திட்டத்தில் முதலீடு செய்யும் பணம் திரும்ப கிடைக்காது.

ஏன் கப்பல்கள் இதனை பயன்படுத்தாது என இவர்கள் நினைக்கிறார்கள் ?

இதற்கு பல காரணங்கள் முன்வைக்கப்படுகிறன

சேது சமுத்திர கடல்பாதையின் ஆழம் 12மீட்டம் மட்டுமே. இந்த கடல் பாதையில் 30,000 டன் கொண்ட கப்பல்கள் மட்டுமே செல்ல முடியும். பெரிய கப்பல்கள் செல்ல முடியாது.

சேது சமுத்திரம் கடல் பாதையில் வேகமாக செல்ல முடியாது. மிகக் குறைந்த வேகத்தில் செல்லும் பொழுது இலங்கையைச் சுற்றிச்செல்ல தேவைப்படும் நேரத்திற்கும், இந்த கடல்பாதையில் செல்லும் நேரத்திற்கு பெரிய வித்யாசம் இருக்காது. 30 மணி நேரம் குறையாது. வேண்டுமானால் சில மணி நேரங்கள் மட்டும் குறையும் என இவர்கள் கூறுகிறார்கள்

சேது சமுத்திர கடல் பாதையை பயன்படுத்த சுங்க வரி செலுத்த வேண்டும். சேது சமுத்திர கடல்பாதையில் பயணிக்க அதற்கென உள்ள ஸ்பெஷல் மாலுமிகள் தேவைப்படுவார்கள். அதற்கும் தனியாக கட்டணம் உண்டு. இந்த கட்டணம் இலங்கையை சுற்றி செல்ல தேவைப்படும் எரிபொருளை விட அதிகமாக இருக்கலாம். எனவே கப்பல் நிறுவனங்கள் இலங்கையைச் சுற்றி செல்லவே விரும்புவார்கள்


இதற்கு அரசு கூறும் பதில் என்ன ?

அரசு இது வரை எந்த பதிலும் கூறவில்லை. அரசு இது வரை இந்த கடல்பாதையை பயன்படுத்தும் கட்டணமாக கூட எதையும் நிர்ணயம் செய்யவில்லை.


இவை குறித்த உண்மை நிலை தான் என்ன ?

உண்மை நிலை என எதுவும் இல்லை. ஒவ்வொருவரும் ஒவ்வொரு கருத்து கூறிக்கொண்டிருக்கிறார்கள்.

சில விடயங்கள் மட்டும் உண்மை. தமிழக அரசியல் கட்சிகளின் அழுத்தத்திற்கு மைய அரசு இணங்கியுள்ளது. இந்த திட்டத்தை அரசு சரியாக ஆராயவில்லை.

இந்திய ஊடகங்கள் ஒரே கோணத்தில் இந்த திட்டத்திற்கு எதிராக செய்திகளை வெளியிடுகின்றன. இவற்றில் இந்த கடல்வல்லுனர்களின் கருத்துக்களும் அடக்கம்

உண்மை, இந்த இரண்டுக்கும் இடையே எங்கோ ஒளிந்து கிடைக்கிறது

சேது சமுத்திரம் கடல்பகுதியை இன்னும் ஆழப்படுத்தி அதிகளவில் போக்குவரத்தை ஏற்படுத்த முடியுமா ?

கால்வாய் ஆழம் குறித்த பிரச்சனை செயற்கையாக ஏற்படுத்தப்படும் எல்லா கால்வாய்களுக்கும் உள்ளது. சுஸ் கால்வாயின் ஆழம் 16மீட்டர். இதனால் பெரிய கப்பல்கள் இந்த கால்வாயில் செல்ல முடியாது. கால்வாயின் ஆரம்பத்தில் பெரிய கப்பல்கள் சுரக்குகளை இறக்கி விடும். பிறகு சிறிய கப்பல்கள் மூலமாக சரக்கு, கால்வாயின் அடுத்த பகுதிக்கு கொண்டு செல்லப்படும். அங்கிருந்து மறுபடியும் பெரிய கப்பல்கள் மூலமாக சரக்கு கையாளப்படும். சுஸ் கால்வாயின் ஆழத்தை 22மீட்டராக ஆழப்படுத்தும் முயற்சியை மேற்கொள்ள திட்டம் உள்ளது.

கப்பல் போக்குவரத்தில் நவீன நுட்பங்களுக்கு ஏற்ப இந்த கால்வாய்களையும் மாற்றம் செய்து கொண்டே இருக்க வேண்டும்.

சேது சமுத்திரம் கடல்பகுதியையும் ஆழப்படுத்த முடியும். கூடுதல் செலவாகும். சுற்றுப்புறச்சூழலுக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகளையும் கவனிக்க வேண்டும்.

அது தவிர சேது சமுத்திரம் கடல் பகுதியில் இதே ஆழத்தை தொடர்ச்சியாக பராமரிக்க வேண்டும். ஒவ்வொரு ஆண்டும் பராமரிப்புக்கும் செலவாகும்.
இது சேது சமுத்திரம் என்றில்லாமல் எல்லா துறைமுகங்களுக்கும் பொருந்தும்

இந்த திட்டம் தெற்க்காசியாவின் Suez Canal என கூறுகிறார்களே ?

இதை விட நகைச்சுவை வேறு எதுவும் இல்லை. சுஸ் கால்வாய், பனாமா கால்வாய் போன்றவை பயண நேரத்தை பல நாட்கள், பல ஆயிரம் மைல்கள் குறைக்கின்றன. சேது சமுத்திரம் குறைக்கும் நேரம் அதிகபட்சமாக வரையறுக்கப்பட்டிருப்பதே 30மணி நேரம் தான்

இவ்வளவு பிரச்சனைகளை எதிர் கொண்டுள்ள இந்த திட்டம் வெற்றி பெறுமா ?

பொருளாதாரக் காரணங்களை பொறுத்தவரையில் இந்த திட்டத்திற்கு ஆதரவு/எதிர்ப்பு என இரு தரப்பினர் கூறுவதிலும் எனக்கு பெரிய நம்பிக்கை இல்லை. உண்மை இந்த இரண்டிற்கும் இடையில் ஒளிந்து இருக்கிறது. இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டால் தான் இது வெற்றியா, தோல்வியா என்பது தெரியும். அது வரையில் இவை அனைத்தும் வெறும் ஊகங்கள் தான்.

இந்த திட்டத்தை ஆதரிக்க வேண்டுமா ? எதிர்க்க வேண்டுமா ?

சமீபகாலத்தில் தமிழகத்தில் உள்ள பலரை ஒரு தெளிவான நிலைப்பாட்டினை எடுக்க விடாமல் குழப்பிய ஒரு விடயம் இது தான் என்றால் அது மிகையல்ல.

ஒரு பொருளாதார திட்டம் Vs அது ஏற்படுத்தக்கூடிய சுற்றுப்புறச்சூழல், சாமானிய மக்களுக்கான வாழ்வியல் பாதிப்புகள் என்று மட்டும் இருந்திருந்தால் இதில் ஏதேனும் ஒரு அணியில் பலர் சேர்ந்திருக்ககூடும். ஆனால் இங்கே சம்பந்தமேயில்லாமல் சங்பரிவார் ஆஜராகியவுடன் தமிழகத்தில் உள்ள பலருக்கு இந்த திட்டத்தை எந்தக் காரணத்தால் ஆதரிப்பது, எதிர்ப்பது என்ற குழப்பம் ஏற்பட்டு விட்டது.

ஆனால் இந்த திட்டம் "எதிர்க்கப்படவேண்டிய" ஒரு திட்டம். பொருளாதாரக் காரணங்களுக்காக அல்ல. ராமன் தன் குரங்குகள் கூட்டணியுடன் பாலம் கட்டிய புராண கற்பனை கதைக்காகவும் அல்ல.

சுற்றுப்புறச்சூழலுக்காகவும், மீனவர்களின் வாழ்வியலுக்கு இந்த திட்டம் ஏற்படுத்தக்கூடிய பாதிப்புகளுக்காகவும் இந்த திட்டத்தை எதிர்க்க வேண்டும்.

தவிரவும் இயற்கை வளங்களாக இருக்கும் வரை அது சாமானியனின் சொத்தாக இருக்கும். அது பொருளாதாரக் காரணங்களுக்காக மாற்றப்படும் பொழுது பண முதலைகளுக்கும், அதிகார மையத்திற்கும் தான் அந்த சொத்தில் சொந்தம் இருக்கும். சாமானியனின் உரிமை பறிக்கப்பட்டு விடும். அந்த வகையிலும் இந்த திட்டத்தை எதிர்க்க வேண்டும்.

மீனவர்களை இந்த திட்டம் எவ்வாறு பாதிக்கும் ?

கப்பல்கள் இந்த கடல்பாதையில் செல்வதால் மீனவர்கள் இந்த கடல்பாதையை தற்பொழுது உள்ளது போல கடக்க முடியாது. கப்பல்கள் செல்லும் நேரத்தில் சேது சமுத்திரத்தை கடக்க காத்திருக்க வேண்டும்.

இந்த கடல்பாதையை ஆழப்படுத்த தோண்டப்படும் மணல் கரையோரங்களில் கொட்டப்படும். இதனால் கடலோரங்களில் இருக்கும் மீனவர்களுக்கு பாதிப்பு இருக்கும்.

மீன் வளம் குறையும்

The Gulf of Mannar and the Palk Bay are sensitive regions, very different from the open sea. "If their physical environment is disturbed in a big way, it will reflect on their biological environment, biodiversity and fishery production. Fishery production depends on the physical environment," says a marine biologist. The entire fish chain will be affected.


மீனவர்களுக்கு இந்த திட்டத்தால் ஆதாயம் எதுவும் இல்லையா ?

மீனவர்களுக்கும் இந்த திட்டத்தால் ஆதாயம் உள்ளது என சில கருத்துக்களும் முன்வைக்கப்படுகின்றன. தற்போதைய மன்னார் வளைகுடா உள்ளிட்ட கடல் பகுதியில் ஆழம் குறைவாக இருப்பதால் பெரிய அளவில் மீன் வளம் இல்லை. சில அரிய வகை கடல் இனங்கள் இருந்தாலும் மீன்கள் பெரிய அளவில் இல்லை. இதனால் தான் இந்தப் பகுதி மீனவர்கள் இலங்கை கடலுக்குளளும் கச்சத்தீவு பகுதிக்குள்ளும் சென்று விடுகிறார்கள். இதனால் சில நேரங்களில் இலங்கை கடற்படை இவர்களை பிடித்துக்கொண்டு சென்று விடுகிறது.

கடல்பகுதியில் ஆழம் குறைவாக இருப்பதால் இந்தியப் பெருங்கடல் பகுதிக்கு சென்று மீன்களை பிடிப்பதிலும் பிரச்சனைகள் உள்ளன. சேது சமுத்திரம் திட்டம் நடைமுறைபடுத்தப்பட்டால் இந்த கால்வாய் மூலமாக இந்தியப் பெருங்கடல் பகுதிக்கு சென்று மீன்களை பிடிக்க முடியும். அதுவும் தவிர மீன்களும் சேது சமுத்திரம் திட்டத்தால் இந்தப் பகுதிக்கு வரும் வாய்ப்பு உள்ளதாகவும் கருத்து உள்ளது

சுற்றுப்புறச்சூழலுக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகள் என்ன ?

மன்னார் வளைகுடா பகுதியினை கடல்வாழ் உயிரினங்களின் தேசிய பூங்காவாக அரசு அறிவித்துள்ளது. பல அரிய வகை கடல் இனங்கள் இங்கே உள்ளன.

Gulf of Mannar Biosphere Reserve is one of the world's richest regions from a marine biodiversity perspective. The Reserve harbours marine biodiversity of global significance and is renowned for its coral reef, sea grass and algal communities

Located on the southeastern tip of the subcontinent, the Gulf of Mannar is known to harbour over 3,600 species of flora and fauna, making it one of the richest coastal regions in Asia. 117 hard coral species have been recorded in the Gulf of Mannar. Sea turtles are frequent visitors to the gulf as are sacred sharks, dugongs, and dolphins

Among the species that figure in the endangered list include dolphins, Dugongs (Dugong Dugon), whales and sea cucumbers.

The Gulf of Mannar Biosphere Reserve covers an area of 10,500 km², with a larger buffer area that includes the adjoining coastline. The islets and coastal buffer zone includes beaches, estuaries, and tropical dry broadleaf forests, while the marine environments include algal communities, sea grass communities, coral reefs, salt marshes and mangroves.

சேது சமுத்திர திட்டம் இவை அனைத்திற்கும் வேட்டு வைக்கும் திட்டம். எனவே தான் இந்த இயற்கை வளங்களை பாதுகாக்க வேண்டிய அவசியம் நமக்கு உள்ளது. சேது சமுத்திர திட்டத்தை எதிர்க்க வேண்டும்

தொடர்புள்ள சுட்டிகள்
http://sethusamudram.info/content/view/48/27/
http://sethusamudram.info

வேறு என்ன சுற்றுப்புறச்சூழல் பிரச்சனைகள் உள்ளன ?

ஆதம் பாலம் இயற்கையாக பல இயற்கை சீற்றங்களில் இருந்து இந்தப் பகுதியை பாதுகாத்து உள்ளது. உதாரணமாக சுனாமி போன்றவையின் பொழுது இயற்கையின் சீற்றத்தை ஆதம் பாலம் தடுப்பு அணையாக எதிர்கொண்டுள்ளது. சேது சமுத்திரம் இதற்கு வேட்டு வைக்க கூடும்.

இந்த பகுதியில் இருக்கும் பல சிறு தீவுகள் சேது சமுத்திர திட்டத்திற்கு பிறகு கடலில் முழ்கி விடும் அபாயம் உள்ளது.

A fear has also been expressed that, after the Gulf of Mannar is dredged to cut the ship canal, nearly 85 islets in the Western coastal region of Sri Lanka will be submerged into the sea. According to Oceanographers' view, Indian Ocean around the tip of the Indian peninsula is an ancient area in natural transition which has not yet completed its full formation. This section is the most complex relief and the earth crust is still in motion

இந்தப் பகுதியில் எக் காலத்திலும் பெரிய அளவில் கடல் போக்குவரத்து இருந்ததில்லை. ஆனால் சேது சமுத்திர திட்டத்திற்கு பிறகு இந்தப் பாதையில் அதிகளவில் கடல் போக்குவரத்து ஏற்படும் வாய்ப்பு உள்ளதால் இது பல கடல்வாழ் இனங்களை அழித்து விடும் வாய்ப்பு உள்ளது.

A busy continuous navigation in this region will offset and trigger devastating ecological imbalance, affecting the lives of millions of fishermen and many endangered organisms of the subtropical, shallow Gulf of Mannar

Environmentalists fear that there are two ways in which the plying of ships could endanger the ecology. Dredged spoil dumped in the vicinity of the islands could cause mass, suspended sedimentation. The canal would cause a change in the magnitude and direction of currents in the Gulf of Mannar because it will be 300 metres wide, and the changed currents will flow towards the 21 islands.

விடுதலைப்புலிகளுக்கு இந்த திட்டம் சாதகமாக உள்ளதா போன்ற கேள்விகளும், இன்னும் பல கேள்விகளும் உள்ளன, அவை அடுத்த பகுதியில் வரும்...

****

இனி இந்தப் பிரச்சனை பற்றி இந்திய ஊடகங்கள் உளறி கொட்டியது குறித்த சிறு குறிப்பு

சேது சமுத்திரம் திட்டம் இந்திய ஊடகங்களின் வலதுசாரி ஆதரவு தன்மையை தெளிவாக வெளிப்படுத்தியது. வட இந்திய ஊடகங்கள் பல கதைகளையும், தியரிகளையும் வாரி இறைத்தன.

இதிலே உச்சகட்ட நகைச்சுவையை வழங்கியது ஓரளவிற்கு மாறுபட்ட பத்திரிக்கையான "தெகல்கா" என்பது தான் ஆச்சரியம். தெகல்காவின் ஆனந்த் சொல்கிறார் - தமிழர்களின் சேது சமுத்திர கனவு என்பது குமரிக்கண்டம் என்ற தமிழர்களின் கனவினை சிறிதளவேனும் நிறைவேற்றும் ஒரு திட்டமாம். அப்படியா ? :)

For Dravidianists, the construction of the Sethusamudram Canal comes closest to a modern realisation of the Lemuria myth. For the BJP and its cohorts, it is the demolition of the Aryan myth of conquest.

தெகல்கா எங்கிருந்து இப்படி ஒரு உண்மையை கண்டுபிடித்தது என்பது அவர்களுக்கே வெளிச்சம். முதலில் இது தமிழனின் கனவு என யார் சொன்னார்கள் ? அரசியல்வாதிகள் தான் கூறிக்கொண்டிருக்கிறார்கள்.

இப்படி ஆளாளுக்கு ஒரு கதை கட்டி இந்த திட்டத்தை ஒரு குழம்பிய குட்டையாக்கி விட்டார்கள்.

இந்த வட இந்திய ஊடகங்கள் இருக்கின்றனவே, அவர்களுடைய தியரி ரொம்ப சிம்பிள் - அரசியல்வாதிகள் ஒரு திட்டத்தை முன்வைத்தால் அது Vote Bank Politics. இந்த திட்டத்தால் என்ன ஓட்டு கிடைக்கும் என அவர்களிடமே திருப்பி யாராவது கேட்பார்களா என பார்த்தேன். எந்த நிகழ்ச்சியிலும் எவரும் கேட்கவில்லை.

தில்லியில் தென்னிந்தியா குறித்து ஓரளவிற்கு தெரிந்த செய்தியாளர்களை வைத்து இது குறித்து விவாதிக்கலாம். இந்த செய்தியாளர்களில் IBNLiveன் சாகரிகா கோஸ் இருக்கிறாரே, அவரின் அரசியல் அறிவை பல நேரங்களில் நினைத்து சிரிக்கத் தான் முடிந்தது. நான் இந்தியாவில் இருக்கும் பொழுது அதிகளவில் NDTV பார்ப்பது உண்டு. எனக்கு ஓரளவிற்கு பிடித்தமான, விபரமான
செய்தியாளர் - பர்கா தத். ஆனால் IBNLiveல் ஒரு செய்தியாளர் கூட அவ்வாறு இல்லாதது ஆச்சரியம் - ராஜ்தீப் சர்தேசாய் உட்பட. ஆனால் IBNLive தான் தற்பொழுது முதன்மையான செய்தி சேனல் என்பது ஆச்சரியம் தான்.

இவர்கள் குறைந்த பட்சம் சென்னையில் தமிழகத்தின் அரசியல் குறித்து அறிந்தவர்களை செய்தியாளர்களாக வைத்திருக்கலாம். அதுவும் இல்லை. சென்னையை சேர்ந்த IBNLive செய்தியாளர் (பெயர் சந்தியா என்பதாக ஞாபகம்) அந்த தொலைக்காட்சியில் சொல்கிறார் - "கலைஞர் முஸ்லீம் ஓட்டுகளை பெற தான் இராமன் இல்லை" என்று சொன்னாராம்.

என்ன ஒரு கண்டுபிடிப்பு. என்ன ஒரு செய்தியாளர் :)

Leia Mais…
Wednesday, September 26, 2007

திலீபன், காந்தி, அகிம்சை

இது கடந்த ஆண்டு எழுதிய கட்டுரையின் மீள்பதிவு

இன்று திலீபன் மறைந்த நாள். 12 நாட்கள் தண்ணீர் கூட அருந்தாமல் உண்ணாவிரதம் இருந்து தன்னுயிரை தமிழீழ விடுதலைக்காக அற்பணித்த நாள். அதுவும் அவர் தனது அகிம்சை போராட்டத்தை அகிம்சை வழியை உலகுக்கு பெரிய அளவில் அறிமுகப்படுத்திய மாத்மா காந்தி பிறந்த நாடான இந்தியாவை நோக்கி தொடங்கி, இந்தியாவால் அவரது கோரிக்கை நிறைவேற்றப்படாமல் மறைந்தார். அகிம்சை வழியில் தன் விடுதலையை பெற்றெடுத்ததாக கூறும் இந்தியா, உலகெங்கிலும் அகிம்சை குறித்து அறிவுரை கூறிக் கொண்டிருக்கும் இந்தியா, அகிம்சை போராட்டத்தை கையிலெடுத்த திலீபனுக்கு அளித்த பரிசு இது தான்.

திலீபனின் போராட்டம் மற்றொரு முறை அகிம்சை என்ற உளுத்துப் போன தத்துவத்தின் உண்மை நிலையை பிரதிபலிப்பதாகவே நான் காண்கிறேன்.

திலீபனுக்கும், காந்திக்கும் நிறைய வேறுபாடு உள்ளது. திலீபன் காந்தீய வழியில் தன் போராட்டத்தை முயன்றார். ஆனால் காந்தி போல முயலவில்லை. திலீபன் தன் உயிரை ஒரு பொருட்டாக கருதவில்லை.

அகிம்சை ஒரு நெடிய போராட்டம். போராடிக் கொண்டே இருக்கலாம். முடிவு போராட்டத்தின் கையில் இல்லை. எதிராளியின் வலிமையை பொறுத்தே உள்ளது.

அகிம்சை மூலமாக இந்தியா விடுதலைப் பெற்றது என்பதே இந்திய விடுதலையை ஒட்டி எழுப்பபட்ட மிகைப்படுத்தப்பட்ட பிம்பம் தானே தவிர அகிம்சை மட்டுமே இந்தியாவின் விடுதலைக்கு காரணமாக அமைந்து விட வில்லை. இந்திய விடுதலை அகிம்சையினால் நிகழ்ந்தது என்றால் இந்தியா விடுதலையான அதே நேரத்தில் காலனியாதிக்கத்தில் இருந்து விடுதலைப் பெற்ற இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, பர்மா போன்றவற்றின் விடுதலைக்கு காரணமாக அமைந்தது எது ? அகிம்சையா ?

"காந்தி தாத்தா வாங்கிக் கொடுத்த சுதந்திரம்" என பாடபுத்தகங்களும், திரைப்படங்களும், ஊடகங்களும் தொடர்ந்து எழுப்பிய அகிம்சை பிம்பம் நம் மூளையை சளவை செய்ததில் இருந்து நாம் வெளியேறவேயில்லை. இந்தியா பிரிட்டிஷ் எகாதிபத்தியத்தின் ஒரு காலனியாக உருமாறியத்தற்கும் சரி, பிறகு விடுதலையானதற்கு சரி - முக்கிய காரணம் - பொருளாதாரம் தான்.

in the larger world it came eventually to be realized that colonial territory was only marginally relevant to economic progress, if it was relevant at all. The dissidence and revolt of the colonial peoples and a more civilized attitude by the colonial powers are often credited with bringing the colonial era to end. More attention might well be accorded to the rather simple but persuasive fact that colonies had become no longer economically worthwhile. Territory was not the thing.

என்று தன்னுடைய "A Journey Through Economic Time" என்ற புத்தகத்தில் கூறுகிறார் புகழ்ப் பெற்ற பொருளாதார நிபுணர் ஜான் கால்பிரைத். காலனியாதிக்கத்தின் விடுதலைக்கு revolt of the colonial peoples and a more civilized attitude by the colonial powers தான் காரணம் என்பதை கால்பிரைத் மறுக்கிறார். காலனியாதிக்கத்தின் முடிவுக்கு colonies had become no longer economically worthwhile என்பது தான் காரணம் என்கிறார் கால்பிரைத்.

இவரின் இந்த வாதம் தவிர வரலாற்றை பொருளாதார கண்ணோட்டத்தில் பார்க்கும் பொழுது இது நமக்கு தெளிவாக புரியும். சோழர் கால வரலாறு முதல் இன்றைய இராக் யுத்தம் வரை அனைத்திற்கும் பொருளாதாரம் தான் அடிப்படைக் காரணம் என்னும் பொழுது அந்த பொருளாதார காரணிகளை விலக்கியே வரலாற்றை மக்களுக்கு நம்முடைய அரசு வழங்கிக் கொண்டிருக்கிறது.

இன்றளவும் உலகில் உருவான பன்னாட்டு தனியார் நிறுவனங்களில் மிகப் பெரிய நிறுவனமாக உருவெடுத்த நிறுவனம் - பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனி தான். வணிக நோக்கங்களுக்காக உள்ளே நுழைந்து பின் படிப்படியாக நாடு பிரிட்டிஷ் எகிதிபத்திய அரசிடம் சென்று சேர்ந்தது வரலாறு. பொருளாதார காரணங்களுக்காக முதலில் தொடங்கிய காலனியாதிக்கம், பின்பு படிப்படியாக மாறி நாடு பிடிக்கும் ஆசையாக உருவெடுத்தது. பின் தங்கள் நாட்டின் ஆதிக்கத்தை நிலைநிறுத்த பிற நாடுகளை தங்கள் ஆட்சியின் கீழ் கொண்டு வருவதாக மாற்றம் பெற்று விட்டது.

இவ்வாறு உருவான பிரிட்டிஷ் எகாதிபத்தியம் ஒரு கட்டத்தில் உலகின் கால்வாசி இடத்தை தன் வசம் வைத்திருந்தது. சூரியன் மறையாத பிரிட்டிஷ் சாம்ராஜ்யம் இவ்வாறு உருவான நிலையில் தான் இந்த மிகப் பெரிய பரப்பளவை நிர்வகிப்பதில் இருக்கும் பிரச்சனைகளையும் எதிர்கொண்டது. இந்தச் சூழ்நிலையில் நடைபெற்ற இரண்டாம் உலகப் போர் தான் இந்தியா உள்ளிட்ட பல காலனியாதிக்க நாடுகள் விடுதலைப் பெற முக்கிய காரணமே தவிர, அகிம்சைக்கு பெரிய பங்கு இருப்பதாக நான் நினைக்க வில்லை.

இரண்டாம் உலகப் போர் ஐரோப்பிய நாடுகளுக்கு கடும் பாதிப்பை ஏற்படுத்தியது. போரினால் நிர்மூலமான பொருளாதாரத்தை நிர்மாணிக்க வேண்டிய தேவை இருந்தது. அவ்வாறான தேவைக்கு இடையே ஒரு தூர தேசத்தில் இந்தியா உள்ளிட்ட ஆசியப் பகுதிகளை பராமரிப்பது பெருத்த சவால் மிகுந்த காரியமாகவே இருந்தது. இந் நிலையில் தான் இந்தியா உள்ளிட்ட பல ஆசிய நாடுகள் விடுதலைப் பெற்றன. இரண்டாம் உலகப் போருக்குப் முன்பு வரை மிக வலுவான பொருளாதார மற்றும் இராணுவ பலத்துடன் விளங்கிய பிரிட்டன் போருக்குப் பின் உலக அரசியலில் தன் முக்கியத்துவத்தை இழந்து அமெரிக்காவும், சோவியத் யூனியனும் வலுப்பெற தொடங்கியதன் பிண்ணனியும் இந்திய விடுதலையின் பிண்ணனியும் ஒன்று தான் - அது பிரிட்டிஷ் எகாதிபத்தியத்தின் பொருளாதார மற்றும் அரசியல் சரிவு.

காந்தி இந்திய விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்தவர் என்ற வகையில் அகிம்சை இந்திய விடுதலைக்கு முக்கிய காரணமாக உருவாக்கப்பட்டதே தவிர, இந்திய விடுதலை அகிம்சையால் மட்டுமே நிகழ வில்லை.

காந்தியின் அகிம்சை போராட்ட முறையாகட்டும், பாலஸ்தீனம், இலங்கை, காஷ்மீர் போன்ற இடங்களில் நடக்கும் ஆயுத போராட்டம் ஆகட்டும் - இவற்றுக்கு ஒரு பொதுவான அடிப்படை உள்ளது

தங்கள் போராட்டத்திற்கு வலுசேர்க்க, தாங்கள் எதிர்த்து போராடும் நாடுகளின் பொருளாதார அடித்தளத்தை தகர்ப்பது தான் இந்த பொதுவான நோக்கம். காந்தியின் நோக்கமும் அது தான், பிரபாகரனின் நோக்கமும் அது தான், ஹமாஸ் அமைப்பின் நோக்கமும் அது தான்.

ஆரம்ப காலத்தில் பிரிட்டிஷ் ஆட்சியில் இருந்து முழுமையான விடுதலையை ஆதரிக்காத காந்தி, பிறகு நடத்திய பல போராட்டங்கள் பிரிட்டிஷ் அரசாங்கத்தின் பொருளாதாரத்தை அசைத்துப் பார்க்க தான் முற்பட்டது. அதற்கு அவர் தேர்ந்தெடுத்த வழி அகிம்சை. இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சி நடைபெற்றாலும், அந்த அரசாங்கத்தை பிரிட்டிஷாரிடம் சம்பளம் வாங்கிக் கொண்டு நடத்திக் கொண்டிருந்தவர்கள் "இந்தியர்கள்" தான். இந்தியா போன்ற பெரிய நாட்டினை நிர்வாகிக்க கூடிய ஆட்பலமோ, இராணுவ, காவல்துறை எண்ணிக்கை பலமோ (ஆயுத பலம் அல்ல) பிரிட்டிஷ் அரசாங்கத்திடம் இல்லை. அவர்கள் இந்தியர்களைச் சார்ந்தே தங்கள் ஆட்சியை நடத்திக் கொண்டிருந்தனர். அவ்வாறான நிலையில் பிரிட்டிஷ் ஆட்சியை முடக்க வேண்டுமானால் அவர்கள் செயல்படுவதை முடக்க வேண்டும். இந்தியார்கள் பிரிட்டிஷ் வேலையைப் புறக்கணித்தால், பிரிட்டிஷாரின் நிர்வாகம் ஸ்தம்பிக்கும். அதைத் தான் காந்தி செய்ய முயன்றார். ஆனால் அதில் எந்தளவுக்கு வெற்றி பெற்றார் என்பதை வரலாற்றை புரட்டுபவர்களுக்கு புரியும்.

இங்கு கவனிக்க வேண்டியது, ஆயுதப் போராட்டம் இல்லாமலேயே பிரிட்டிஷ் அரசாங்கத்தை ஸ்தம்பிக்க செய்யக்கூடிய வாய்ப்பு இருந்தது. அதை காந்தி முன்னெடுத்தார். அவர் பிரிட்டிஷ் அரசாங்கத்தை ஸ்தம்பிக்க வைக்க வில்லை என்றாலும் ஒரு புது போராட்ட முறையை அறிமுகப்படுத்தியிருந்தார்.

ஆனால் இந்த நிலையா இன்று ஆயுதப் போராட்டம் நடைபெறும் நாடுகளில் உள்ளதா ?

மக்கள் எண்ணிக்கை, பொருளாதாரம் ஆகிய அனைத்திலும் சிறுபாண்மையாக உள்ளவர்களின் போராட்டம் எந்த வகையிலும் அகிம்சையை கொண்டு நடக்க முடியாது. காரணம் இலங்கை பொருளாதாரம் தமிழர்களை நம்பி இல்லை. இந்திய பொருளாதாரம் காஷ்மீரை நம்பி இல்லை. இந்த சிறுபான்மை இனத்தவரின் அகிம்சை போராட்டத்தை நசுக்க கூட வேண்டியதில்லை. கண்டுகொள்ளாமல் விட்டு விட்டால் கூட இந்த போராட்டம் பல ஆண்டு காலம் நடந்து கொண்டே இருக்கும். இது தான் இலங்கையிலும், காஷ்மீரிலும் ஆரம்ப காலங்களில் நடந்தது.

இத்தகைய நிலையில் தான் அகிம்சை என்பது அர்த்தமில்லாமல் போய் விட்டது. இலங்கை, பாலஸ்தீனம், காஷ்மீர் போன்ற தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமை அவர்கள் எதிர்த்து போரிடும் நாடுகளின் பொருளாதாரத்தை சிதைப்பதில் தான் உள்ளது. அதனால் தான் ஆயுதப் போராட்டங்கள் தொடங்குகின்றன. ஒரு விடயத்தை கவனிக்கலாம். இன்று இலங்கையில் ஆயுதப் போராட்டம் தொடங்கியிருக்காவிட்டால் இலங்கை பொருளாதார ரீதியில் நல்ல வளர்ச்சி பெற்றிருக்கும். சிங்கள ஆதிக்கம் முழுமை பெற்றிருக்கும். மாறாக ஆயுதப் போராட்டம் சிங்கள ஆதிக்கத்தை தடுத்து நிறுத்தியது மட்டுமில்லாமல், இலங்கையின் பொருளாதாரத்தை கடுமையாக பாதித்தும் இருக்கிறது.

அகிம்சை ஒரு விடுதலைப் போராட்ட முறை அல்ல. அது ஒரு கவன ஈர்ப்பு. இந்த கவனஈர்ப்பை காந்தி சரியாக நடத்தினார். ஆனால் திலீபன் அகிம்சையை தன் போராட்ட வடிவமாக எடுத்தார். அதன் பலன் அவர் உயிர் இழப்பு.

திலீபனின் நினைவு தினம் அகிம்சை ஒரு விடுதலைப் போராட்ட முறையல்ல என்பதை மீண்டும் ஒரு முறை வலியுறுத்தி விட்டுச் செல்கிறது

Leia Mais…
Tuesday, September 25, 2007

சேது சமுத்திரம் : சுற்றுப்புறச்சூழல்


சேது சமுத்திரம் திட்டம் குறித்த பொருளாதார வாய்ப்புகளை கடந்த கட்டுரையில் எழுதியிருந்தேன். அந்தக் கட்டுரையில் நான் சுற்றுப்புறச்சூழல் குறித்த எனது கருத்துக்களையும் கூறியிருந்தேன். சேது சமுத்திரம் திட்டத்தை சுற்றுப்புறச்சூழலுக்காகவும், மீனவர்களின் வாழ்வியலுக்கு ஏற்படுத்தக்கூடிய பாதிப்புகளுக்காகவும் மட்டுமே எதிர்க்க வேண்டிய அவசியம் உள்ளது.

சுற்றுப்புறச்சூழலுக்கு இந்த திட்டம் ஏற்படுத்தக்கூடிய பாதிப்புகளை சில கட்டுரைகள் விரிவாக அலசுகின்றன. அந்தக் கட்டுரைகளை மட்டும் இங்கே தருகிறேன்.

சேது சமுத்திரம் பகுதியில் பெரிய அளவில் கப்பல் போக்குவரத்து இல்லாத காரணத்தால் அங்கு பல அரிய வகை கடல் இனங்கள் இருப்பதை இந்தக் கட்டுரை விரிவாக அலசுகிறது. "மனிதம்" என்னும் தமிழ் தன்னார்வ அமைப்பு இந்த அறிக்கையினை தயாரித்துள்ளது.

Impact on the Environment - Manitham Report

அது போலவே மிக அரிய வகை கடல் ஆமைகள் போன்றவற்றுக்கும் இந்த திட்டம் பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும் என இந்த கட்டுரையில் கூறப்பட்டுள்ளது

Sethusamudram canal may disturb endangered turtles

****
ஆதம் பாலம் குறித்த நாசாவின் விளக்கத்தை இங்கே படிக்கலாம்

Space photos no proof of Ram Sethu: NASA

****

சேது சமுத்திரம் திட்டம் ஏற்படுத்தக்கூடிய இந்த சுற்றுப்புறச்சூழல் பிரச்சனையை சங்பரிவார் கும்பல் தங்களுக்கு சாதகமாக திரித்து கொள்ள முனைகின்றனர். அவர்கள் கருத்துப்படி இதனை கட்டியது இராமனும், சில குரங்குகளும் :)) என்றால் இது செயற்கை தானே ? எப்படி இயற்கை ஆகும் :)

Leia Mais…
Monday, September 24, 2007

சேது சமுத்திரம் : பொருளாதார வாய்ப்புகள் : கலைஞரை ஏன் ஆதரிக்க வேண்டும் ?

தமிழக முதல்வர் கலைஞர் அவர்களின் தலைக்கு சங்பரிவார் "முட்டாள் கூட்டம்" தங்கக்காசுகளை விலையாக நிர்ணயித்து இருக்கின்ற கேலிக்கூத்தான நிகழ்வுகளும், தன்னுடைய ஓட்டு வங்கிக்காக அத்தகைய காவிக்கூட்டங்களின் அறிவிப்பினை கைக்கட்டி அச்சத்துடன் பார்த்துக் கொண்டிருக்கிற காங்கிரஸ் அரசாங்கமும் அணு ஆயுத, பொருளாதார வல்லரசான இந்தியாவின் விஞ்ஞான அறிவினை கேலிக் கூத்தாக்கி இருக்கிறது. இந்தியாவின், இந்தியர்களின் இத்தகைய "விஞ்ஞான அறிவு" உலகெங்கும் சந்தி சிரித்து கொண்டிருக்கிறது. இந்தியா ஒரு மதச்சார்பின்மை நாடு என கூறிக்கொண்டாலும் அவ்வப்பொழுது தன் மதச்சார்பின்மை முகமூடியை விலக்கி "காவிச் சாயத்தை" வெளிப்படுத்தும். அத்தகைய தருணங்களில் இதுவும் ஒன்று. பாக்கிஸ்தானிலும், ஆப்கானிஸ்தானிலும் இருக்கும் இஸ்லாமிய மத அடிப்படைவாதிகள் குறித்து நம்மவர்கள் குறை கூறுவதும் நக்கல் அடிப்பதும் எப்பொழுதுமே வழக்கமானது. இந்த பிரச்சனையில் இந்தியர்களின் மத அடிப்படைவாதம் தெளிவாக வெளிப்பட்டது என்பது தான் உண்மை.

பொருளாதார, இராணுவ வல்லரசான இந்தியாவில் இப்பொழுது முக்கிய பிரச்சனை குரங்குகள் கூட்டணியுடன் ராமர் கட்டியதாக கதையளக்கப்படும் ஆதம் பாலம் என வழங்கப்படும் தீவுக்கூட்டம். இந்த ஆதம் பாலத்தை பல தலைமுறைகளாக ராமேஸ்வரம் பகுதியில் வசிக்கும் மக்கள் மணல் திட்டு என்றே வழங்கி வருகிறார்கள். ஆனால் திடீரென்று வலதுசாரி இந்துத்துவா கும்பல் இதனை "ராம் சேது" என பெயர் மாற்றம் செய்து விட்டது. இவர்களின் வாதத்திற்கு வக்காலத்து வாங்குவது போல வட இந்திய ஊடகங்களும் இதனை ஓங்கி முழங்கி வருகின்றன.

பெரும்பாலான வட இந்திய ஊடகங்களில் எப்பொழுதுமே வலதுசாரி முழக்கங்கள் காணப்படுவது வழக்கமான ஒன்று. இந்தியாவின் ஆங்கில செய்தி ஊடகங்களில் தென்னிந்தியச் செய்திகள் குறித்து விவாதிக்கப்படும் பொழுது கூட வட இந்திய வாடையும்/பார்வையும் முழுமையாக வீசிக்கொண்டிருக்கும். உண்மையை தெரியாத அரைகுறை செய்தியாளர்களின் உளறல் எப்பொழுதுமே இருக்கும். இப்பொழுது அது உச்சகட்டத்தில் இருக்கிறது. இந்த திட்டம் குறித்து தவறான தகவல்கள் திட்டமிட்டு பரப்ப படுகின்றன. ஹிந்து போன்ற தமிழகத்தில் இருந்து வெளியாகும் ஊடகங்கள் அவற்றில் விதிவிலக்கானவை. (ஹிந்துவின் அரசியல் வேறு வகையானது).

****

சேது சமுத்திர திட்டம் தமிழர்களின் 150 ஆண்டு கால கனவு என்பதில் எனக்கு பெரிய உடன்பாடு இல்லை. தமிழனின் பொருளாதாரம் இதை நம்பி மட்டுமே இன்றைக்கு இல்லை. இந்தியாவில் பொருளாதார வளர்ச்சி அடைந்த மாநிலங்களில் தமிழகம் முதல் 3 இடத்தில் இருக்கிறது. தமிழகத்திற்கு ஏராளமான வெளிநாட்டு முதலீடுகள் வந்து கொண்டிருக்கிறன. இவை அனைத்துமே தமிழ்நாட்டின் இயற்கையான சூழல் காரணமாகவும், தமிழனின் மனித வளம் காரணமாகவே வந்துள்ளன. மைய அரசாங்கத்தின் பங்களிப்பு மிகவும் குறைவே. நெய்வேலி போன்ற பகுதிகளில் கூட தமிழகத்தின் இயற்கை வளம் காரணமாகத் தான் மைய அரசு நிறுவனங்கள் உள்ளனவே தவிர வேறு எந்தக் காரணங்களாலும் அல்ல. நெய்வேலியில் தமிழகத்தின் இயற்கை வளத்தை உறிஞ்சும் மைய அரசாங்கம் தமிழகத்திற்கு ராயல்டி கூட வழங்குவதில்லை. பல தலைமுறைகளாக நெய்வேலியில் இருந்த என்னுடைய குடும்பத்தினரும் உறவினர்களும் நெய்வேலி நிலக்கரி நிறுவனத்திற்காக இழந்தது அதிகம். பலன் பெற்றது ஒன்றுமே இல்லை.

மைய அரசாங்கத்திடம் தமிழகம் பல ஆண்டுகளாக எதிர்பார்த்திருந்த திட்டங்களில் சேது சமுத்திரமும் ஒன்று. 1955ல் இந்த திட்டம் குறித்த முதல் ஆய்வு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு பல ஆண்டுகளாக இந்த திட்டம் மைய அரசாங்கத்தால் கிடப்பில் போடப்பட்டது. அன்றைக்கு இந்த திட்டத்தின் மதிப்பு வெறும் 9.98கோடி. ஆனால் இதே காலக்கட்டத்தில் வட இந்திய மாநிலங்களில் இந்திய அரசாங்கம் செய்த பொருளாதார முதலீடு எவ்வளவு என்பதை எண்ணிப்பார்க்க வேண்டும். இன்றைக்கு மைய அரசாங்கத்தின் தலையெழுத்தை நிர்ணயம் செய்யும் மாநிலமாக தமிழகம் உள்ளதால், 9.98கோடி கூட தராமல் தள்ளிப்போடப்பட்ட ஒரு திட்டம் இன்று சுமார் 2500 கோடி ரூபாய் செலவில் தமிழகத்திற்கு கிடைக்கிறது.

இந்த திட்டத்தின் பொருளாதார வாய்ப்புகள் குறித்து பல ஆய்வாளர்களின் அறிக்கைகள் ஊடகங்களில் வெளியாகிக்கொண்டிருக்கின்றன. அனைத்து அறிக்கைகளுமே இந்த திட்டத்திற்கு எதிராக உள்ளவை மட்டுமே. ஆனால் இந்த திட்டம் லாபம் தரும் எனக்கூறிய ஆய்வாளர்களின் அறிக்கைகளும் உள்ளன. அந்த அறிக்கைகள் வெளியாவதில்லை. எது அதிகளவு விளம்பரப்படுத்தப்படுகிறதோ அதைச் சார்ந்தே ஒரு கருத்து ஒற்றுமை உருவாகிறது. ஊடகங்களின் நோக்கமும் அது தான். இந்திய ஊடகங்களின் பல இரட்டை வேடங்களில் இதுவும் ஒன்று. இடஒத்துக்கீடு காலத்தில் இடஒதுக்கீட்டிற்கு எதிரான நிலைப்பாட்டினை வைத்து தன் கோர முகத்தை வெளிப்படுத்தியவை தான் இந்த ஊடகங்கள். மற்றொரு முறை அந்த ஊடகங்களின் வட இந்திய/பார்ப்பனிய/பனியா முகம் வெளிப்படுகிறது.

இந்த திட்டத்தின் அடிப்படை நோக்கம் என்ன ? தமிழகத்தின் கடலோர மாவட்டங்களின் பொருளாதாரம் உயரும் என்பது தான் இந்த திட்டத்தின் நோக்கம். அவ்வாறு பார்க்கும் பொழுது இந்த திட்டம் நிச்சயம் தமிழகத்தின் தற்பொதைய பொருளாதாரத்தை மேலும் பெருக்கும். ஒரு உதாரணத்தைப் பார்க்கலாம். மென்பொருள் துறையை விட்டுவிடுவோம். குறிப்பாக கார் மற்றும் ஆட்டோமோபைல் சார்ந்த தொழிற்சாலைகள் தமிழகத்தில் தான் அதிகம். சென்னை இந்தியாவின் டெட்ரோய்ட் (Detroit) என்று அழைக்கப்படுவதன் முக்கிய காரணம் சென்னையின் உள்கட்டமைப்பு. முக்கியமாக சென்னை துறைமுகம். Manufacturing தொழிற்சாலைகள் அமைக்க துறைமுகம் மிகவும் அவசியம். சென்னையில் ஒரு போர்ட், ஹுண்டாய் தொழிற்சாலை தொடங்கப்படுகின்றன என்றால் அதைச் சுற்றி அந்த தொழிற்சாலைக்கு தேவைப்படும் பல உதிரிப்பாகங்களை தயாரிக்கும் தொழிற்சாலை அவசியமாகிறது. இதனால் பல சிறிய தொழிற்சாலைகள் தொடங்கப்படுகின்றன. அதைத் தவிர மிக சுலபமாக தயாரித்த பொருள்களை ஏற்மதி செய்ய துறைமுகம் அவசியம்.
சென்னை துறைமுகம் இந்தியாவிலேயே இரண்டாவது பெரிய துறைமுகமாக விளங்குவதன் காரணமாகத் தான் இன்று சென்னைக்கு அருகே பல ஆட்டோமோபைல், தொலைத்தொடர்பு சாதனங்களின் உற்பத்தி தொழிற்சாலைகள் உள்ளன.

சேது சமுத்திரம் என்பது வெறும் கால்வாய் வெட்டும் வேலை மட்டுமே அல்ல. அது பொருளாதார வளர்ச்சியையும் கொண்டு வரும் வாய்ப்புகளை மறுக்க முடியாது. சேது சமுத்திரம் திட்டம் அறிவிக்கப்பட்ட காலத்தில் இந்த திட்டம் குறித்த பொருளாதார வாய்ப்புகள் அதிகளவில் ஊடகங்களில் வெளியாகின. பல வணிக ஊடகங்களிலும் அவ்வாறான செய்திகளே வந்தன. ஆனால் இன்று காவிக்கூட்டத்தின் முட்டாள்தனத்திற்கு தீனி போடும் வகையில் செய்திகள் வந்து கொண்டிருப்பது அந்த ஊடகங்களின் இரட்டை வேடத்தை தான் தெளிவுபடுத்துகிறது.

பொதுவாகவே இந்தியாவின் உள்கட்டமைப்பு மிகவும் மோசமான நிலையில் இருப்பதாலேயே பொருளாதார வளர்ச்சியில் தேக்கம் தொடர்ந்து கொண்டிருக்கிறது. சீனா பெரிய அளவில் பொருளாதார வளர்ச்சி பெற காரணம் அந் நாடு மிக வேகமாக தனது உள்கட்டமைப்பை பெருக்கி கொண்டுள்ளது தான். உள்கட்டமைப்பு என்னும் பொழுது மிகத் தரமான சாலைகள், விமான நிலையங்கள், துறைமுகங்கள், தொலைத்தொடர்பு, மின் உறபத்தி என அனைத்துமே அடங்கும். சேது சமுத்திரம் போன்ற திட்டங்கள் உள்கட்டமைப்பு, பொருளாதார வளர்ச்சியை அதிகரிக்கதக்கவை என்ற அளவுகோளில் தான் பார்க்கப்பட வேண்டும். மாறாக கடல்போக்குவரத்து மட்டுமே என்பதாக இதனை அணுக முடியாது.

சேது சமுத்திர திட்டம் லாபத்தை கொண்டு வந்து விடாது என்று கூறும் செய்திகளை வெளியிடும் ஊடகங்கள், லாபத்தை இந்த திட்டம் கொடுக்கும் என்ற செய்திகளை/ஆய்வறிக்கைகளை ஏன் வெளியிடுவதில்லை ?

இந்த திட்டத்தால் லாபம் உண்டு/இல்லை என்ற இரண்டுமே வெறும் ஊகங்கள் தான். இதில் எது உண்மை, பொய் என யாரும் உறுதியாக கூறிவிட முடியாது.

தூத்துக்குடி துறைமுகம் குறித்து ஆய்வறிக்கை ஒன்றினை தயாரித்த PricewaterhouseCoopers இவ்வாறு கூறுகிறது. தூத்துக்குடி துறைமுகத்தின் இந்த வாய்ப்பினை பெருக்க சேது சமுத்திரம் மிகவும் அவசியம்.

THE Tuticorin port has the potential to become an international container transhipment hub given its unique geographical location, says a feasibility study by PricewaterhouseCoopers Pvt Ltd (PwC).

இது தவிர சேது சமுத்திர திட்டம் குறித்த feasibility அறிக்கையினை L&T Ramboll ஏற்கனவே வழங்கியுள்ளது.

ஒரு சிறிய உதாரணத்தை மட்டும் பார்த்தாலே தூத்துக்குடி துறைமுகம் எந்தளவுக்கு முக்கியத்துவம் பெறும் என்பது புரியும். கொழும்பு துறைமுகத்தில் நடக்கும் சரக்கு போக்குவரத்தில் சுமார் 40% இந்தியாவின் கிழக்கு மேற்க்கு பகுதிகளுக்கு நேரடியாக செல்ல முடியாத காரணத்தால் கொழும்பு துறைமுகத்தின் மூலமாக நடக்கிறது. சேது சமுத்திரம் திட்டம் அமல் படுத்தப்பட்டால் இது தூத்துக்குடி துறைமுகம் மூலமாக நடக்கும்.

The Colombo port currently handles 1.7 million twenty-foot equivalent units (TEUs) of which 40 per cent is Indian transhipment cargo. It fears Sethusamudram project can wean away a substantial chunk of it.

உண்மைகள் இவ்வாறு இருக்க காவிக்கூட்டத்திற்கு வக்காலத்து வாங்கும் வகையில் செய்திகள் வெளியிடும் தொலைக்காட்சி மற்றும் வணிக ஊடகங்கள் குறித்து நாம் முடிவு செய்து கொள்ள முடியும்.

நான் இங்கு வைத்துள்ள புள்ளி விபரங்கள் அனைத்தும் http://sethusamudram.info என்னும் இணையத்தளத்தில் உள்ளன

****

சேது சமுத்திரம் திட்டத்தின் அடுத்த முக்கிய பிரச்சனையாக கூறப்படுவது சுற்றுப்புறச்சூழல் மற்றும் கடல் வாழ் இனங்களுக்கு ஏற்படக்கூடிய பாதிப்பு. இந்த பிரச்சனை குறித்து சங்பரிவார் கோஷ்டிகளுக்கு இப்பொழுது தான் தெரிகிறதா ?

சுற்றுப்புறச்சூழல் மட்டுமல்ல பல மக்களின் வாழ்வியலை குலைத்த நர்மதா அணைக்கட்டு திட்டத்தை இந்த காவிக் கும்பல் எதிர்த்ததா ? மேதா பட்கர் தனியாளாக போராடிய பொழுது இந்தியாவின் நீதிமன்றங்கள், ஊடகங்கள், அரசியல்வாதிகள் என அனனவருமே வளர்ச்சி திட்டத்தை மேதா பட்கர் குலைப்பதாக தானே கூறினார்கள். இந்திய உச்ச நீதிமன்றம் மேதா பட்கருக்கு எதிராக தீர்ப்பு வழங்கியதே...

சுற்றுப்புறச்சூழல் விடயத்தில் கூட சேது சமுத்திர திட்டம் பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தி விடாது என்ற கருத்துகளும் முன்வைக்கப்படுகின்றன - Sethu project will not create geological imbalance

மீனவர்கள் கூட முன்பை விட அதிக மீன்கள் கிடைக்க வாய்ப்பு இருப்பதாக கூறுகிறார்கள் - http://sethusamudram.info/content/view/20/32/

என்றாலும் இவையெல்லாம் வெறும் தியரி (theory). உண்மையில் என்ன நடக்கும் என யாரும் சரியாக கணிக்க முடியாது என்பதே உண்மை. இந்த திட்டத்தை பொருளாதார காரணங்களுக்காக ஆதரிக்கலாம். என்றாலும் சுற்றுப்புறச்சூழலுக்கு இந்த திட்டம் தீங்கு விளைவிக்க கூடிய வாய்ப்புகளை மறுக்க முடியாது. இயற்கையான எந்த ஒரு விடயத்தையும் செயற்கையாக மாற்றும் பொழுது சில எதிர்விளைவுகள் ஏற்படும். எனவே சுற்றுப்புறச்சூழலுக்காக மட்டுமே இந்த திட்டத்தை எதிர்க்கவேண்டிய அவசியம் நேருகிறது.

****

"Ram is a big lie: Karunanidhi" என்பது தான் கடந்த வாரம் பல வட இந்திய பத்திரிக்கைகளின் தலைப்புச் செய்தி. இந்தச் செய்தியை இந்த ஊடகங்கள் அதிர்ச்சியாக வெளியிட்டு உள்ளது தான் உச்சகட்ட காமெடி. கலைஞரை சாடி பல வட இந்திய ஆங்கில நாளிதழ்களில் கட்டுரைகள் எழுதப்பட்டுள்ளதை கூகுள் மூலமாக படித்து சிரித்து ரசிக்கலாம் :). இதனை "Blasphemy" :) என்று கதறும் ஊடகங்களும் அடக்கம். "Even Aurangzeb or the Britishers never questioned the existence of Lord Ram," என அழுகிறார் பாஜக தலைவர் ராஜ்நாத்சிங்

கலைஞர் ராமாயணம் என்ற கதையின் "கதாபாத்திரம்" ராமன் குறித்து பேசியது தவறு என பலர் கூறி வருகின்றனர். ஆனால் கலைஞர் கூறியதில் எந்த தவறும் இல்லை. இதனை இன்னும் வலுவாக, தெளிவாக கலைஞர் கூறியிருக்க வேண்டும் என்பது தான் என்னுடைய ஒரே வருத்தம்.

தமிழர்களின் கலாச்சாரத்தை தட்டையாக "இந்து" என்ற சொல்லாடலில் அடைப்பதை எதிர்க்க வேண்டிய அவசியம் உள்ளது. இந்த பிரச்சனையில் கலைஞர் முன்வைத்த வாதம் வட இந்தியாவில் பிரபலப்படுத்தப்பட்டு விவாதிக்கப்பட்டது ஒரு வகையில் நன்மையே. இந்து மத வெறியர்களை தவிர உண்மையை அறிந்து கொள்ள நினைக்கும் பலருக்கு இந்த உண்மை சென்று சேர்ந்து இருக்கிறது. பெரியார் குறித்தும் சில விவாதங்கள் நடப்பதை சில இணையத்தளங்களிலும், தொலைக்காட்சியிலும் காண முடிந்தது. Periyar An Iconoclast and a Reformer.

அது மட்டுமில்லாமல் இந்தப் பிரச்சனையின் பொழுதும், காஞ்சி மடாதிபதி கைது செய்யப்பட்ட பொழுதும், அயோத்தி பிரச்சனையின் பொழுதும் ஒட்டுமொத்த இந்தியாவில் இருந்து விலகி நிற்கும் ஒரே மாநிலம் தமிழகம் தான் என்பதும் பிற மாநில மக்களுக்கு தெளிவாகியிருக்கும். பெரியார் மாற்றம் செய்த மண் இது. இங்கு இந்து/இஸ்லாமிய/கிறுத்துவ என எந்த மத வெறியர்களுக்கும் வேலையில்லை.

இந்தப் பிரச்சனையை இந்து வெறியர்கள் தொடர்ந்தால் இந்து மதத்தை விமர்சிப்பதை ஒரு இயக்கமாக திராவிட அமைப்புகள் "மறுபடியும்" தொடங்க வேண்டும் என்பதே என் விருப்பம். எல்லா பேதங்களையும் கலைந்து தமிழர்கள் அனைவரும் கலைஞருக்கு இந்தப் பிரச்சனையில் முழுமையான ஆதரவு அளிக்க வேண்டியது அவசியமாகிறது.

Leia Mais…
Tuesday, September 04, 2007

இந்தியா அமெரிக்காவின் கூட்டு கடற்படை போர் ஒத்திகை...

இந்தியா, அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகள் இணைந்து வங்காள விரிகுடாவில் விசாகப்பட்டினத்திற்கும், அந்தமான் தீவுகளுக்கும் இடையே ஒரு மிகப் பெரிய இராணுவ போர் ஒத்திகைகளை "மலபார் 07 (Malabar 07)" என்ற பெயரில் இன்று நடத்த தொடங்கியிருக்கின்றன. இந்தியாவின் இடதுசாரிக் கட்சிகள் இதனை கடுமையாக எதிர்த்து வருகின்றன.

சுமார் 26 போர் கப்பல்கள், அணுசக்தி மூலம் இயங்கும் விமனம் தாங்கி கப்பல், 160 போர் விமானங்கள் போன்றவை கொண்டு நடத்தப்படும் இந்த போர் ஒத்திகை இது வரையில் இல்லாத அளவுக்கு மிகப் பெரிய இந்திய-அமெரிக்க கூட்டு போர் ஒத்திகை ஆகும். ஒரு காலத்தில் இராணுவ ரீதியில் எதிரும், புதிருமாக இருந்த இந்தியாவும், அமெரிக்காவும் இன்று நேச நாடுகளாக இணைந்து வருவதை தான் இந் நடவடிக்கை வெளிப்படுத்துகிறது.

சீனாவிற்கு எதிரான ஒரு போர் உத்தியாகவும், இராணுவ கூட்டமைப்பாகவும் இது கருதப்படுகிறது. சீனா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகள் ஒரு அணியாகவும், அமெரிக்கா மற்றும் அதன் நேச நாடுகள், இந்தியா, ஜப்பான் போன்றவை மற்றொரு அணியாகவும் ஒரு புதிய கூட்டமைப்பு உருவாகிறது.

ஐரோப்பாவில் அமெரிக்கா நிறுவ முனையும் ஏவுகணை எதிர்ப்பு தொழில்நுட்பத்தை (US Missile Defense System) ரஷ்யா கடுமையாக எதிர்த்து வருகிறது. கடந்த மாதம் தொடங்கி தனது போர் விமானங்களை NATO பகுதிகளுக்கு ரஷ்யா அனுப்ப தொடங்கியிருக்கிறது. சோவியத் யூனியன் பனிப்போர் காலங்களில் இவ்வாறு செய்வது வழக்கம். ஆனால் பனிப்போர் முடிவடைந்து சோவியத் யூனியன் சிதறியதை அடுத்து ரஷ்யா தனது உள்நாட்டு மற்றும் பொருளாதார தேவைகளை முன்னெடுத்தது. ஆனால் வளர்ந்து வரும் அமெரிக்காவின் ஆதிக்கத்தை தடுக்க ரஷ்யா இப்பொழுது அதிரடியாக சில இராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்கிறது. அதன் ஒரு பகுதி தான் பனிப்போர் கால போர் நடவடிக்கைகளை ரஷ்யா இப்பொழுது மறுபடியும் தொடங்கியிருக்கிறது.

வளர்ந்து வரும் பொருளாதார சூழ்நிலை சீனா-ரஷ்யா VS அமெரிக்கா இடையே ஒரு மோதலை எதிர்காலத்தில் ஏற்படுத்தக்கூடமோ என்ற எண்ணத்தை இந்த சில நிகழ்வுகள் வெளிப்படுத்துகின்றன. அமெரிக்காவின் நேச நாடாக தன்னை வெளிப்படுத்திக்கொள்ள இந்தியா நினைக்கிறது. ஆசியாவில் மிகப் பெரிய சக்தியாக வளர்ந்து வரும் சீனாவை சமாளிக்க இந்தியாவை தன் பக்கம் இழுக்க அமெரிக்கா நினைக்கிறது

வங்காள விரிகுடாவின் தற்போதைய போர் ஒத்திகை கூட மலாக்கா நீரிணைவு காரணமாகத் தான் முன்னெடுக்கப்படுகிறது. மலாக்கா நீரிணைவு உலகின் கடற்போக்குவரத்து அதிகளவில் இருக்கும் பகுதியாகும். உலகின் மொத்த எண்ணெய் வர்த்தகத்தில் 50% மலாக்கா நீரிணைவு வழியாகத் தான் நடைபெறுகிறது. உலக மொத்த வர்த்தகப் போக்குவரத்தில் மூன்றில் ஒரு பங்கு இந்தப் பகுதியில் தான் நடைபெறுகிறது. ஜப்பானின் எண்ணெய் தேவைகளில் சுமார் 80% இந்தப் பகுதி வழியாகத் தான் நடைபெறுகிறது. மலாக்கா நிரிணைவு சீனாவை ஆசியாவுடன் இணைக்கும் பகுதி என்பதும், சீனா தனது 60% எண்ணெய் தேவைகளுக்கு இந்தப் பகுதியையே நம்பி இருக்கிறது என்பதும் இந்தக் கடற்பகுதியின் முக்கியத்துவத்தை நமக்கு உணர்த்தும்.

இவ்வாறான ஒரு பிராந்திய சூழல் தான் இந்துமா பெருங்கடலில் தமிழ் ஈழம் என்னும் தனி தேசம் அமைவதற்கும் அச்சுறுத்தலாக உள்ளது. ஆனால் எதிர்காலத்தில் புலிகளின் கடற்படை பலம் இந் நிலையை மாற்றவும் கூடும். அது புலிகளின் பலத்தை பொருத்தது. இது குறித்து முன்பு "சதுரங்க ஆட்டத்தில் தமிழீழம்" என்னும் கட்டுரை தொடரில் நான் எழுதிய ஒரு சிறு பகுதியை இங்கே மீள்பதிவு செய்கிறேன்.

மாறிவரும் உலகச் சூழலில் இந்தியா-அமெரிக்கா இடையே பொருளாதார மற்றும் இராணுவ ஒத்துழைப்பு அதிகரித்து உள்ள நிலையில் அமெரிக்க-இந்திய கடற்ப்படைகளுக்கு இடையே திரிகோணமலை துறைமுகம் சார்ந்த கடந்த கால பிரச்சனைகள் ஏற்படக்கூடிய வாய்ப்புகள் குறைவே. ஆனால் நாடுகளிடையே வளர்ந்து வரும் பொருளாதார ஒத்துழைப்புகள், உலகமயமாக்கம் போன்றவை இலங்கையின் பொருளாதார கேந்திர முக்கியத்துவத்தை அதிகரித்து உள்ளன. இந்த முக்கியத்துவத்தின் காரணமாகத் தான் உலகநாடுகள் இலங்கைப் பிரச்சனையில் தங்களை அதிகளவில் தற்பொழுது ஈடுபடுத்திக் கொள்கின்றன.

2000ம் ஆண்டிற்கு முன்பு வரை இலங்கைப் பிரச்சனையை கண்டுகொள்ளாமல் இருந்த ஜப்பான் போன்ற நாடுகள் கூட தற்பொழுது இலங்கை பிரச்சனையில் ஆர்வமுடன் தங்களை ஈடுபடுத்திக் கொள்வதை கவனிக்க வேண்டும். இலங்கைக்கு உதவி செய்யும் நாடுகளின் மாநாட்டை டோக்கியோவில் நடத்தியது, தன்னிச்சையான சமாதான முயற்சிகள் என ஜப்பான் இந்தப் பிரச்சனையில் கடந்த காலங்களில் இல்லாத அளவுக்கு ஆர்வத்தை செலுத்த தொடங்கியதன் பிண்ணனி சுவாரசியமானது.

ஒரு நாட்டின் பொருளாதாரம் வரலாற்று காலம் தொடங்கி இன்றைய நிலை வரை கடல் மீதான ஆளுமையைச் சார்ந்தே இருந்து வந்திருக்கிறது. தமிழக வரலாற்றை சோழர் காலம் முதல் ஆராயும் பொழுது கூட ( என்னுடைய முந்தையப் பதிவு - சோழர்களின் பொருளாதாரப் போர்கள் ) இந்த உண்மை நமக்கு தெளிவாகும். கடல் மீது இருந்த மிகப் பலமான ஆதிக்கம் மூலமே பிரிட்டிஷ் அரசாங்கம் உலகெங்கும் நிறுவப்பட்டது. சோழர் காலம் முதல் இன்றைய உலகமயமாக்கல் காலம் வரை இந்த நிலையில் பெரிய மாற்றங்கள் ஏற்பட்டு விடவில்லை.

இன்றைய இலங்கை இனப் பிரச்சனையில் கூட உலக நாடுகளை இந்த வர்த்தக எண்ணமே செலுத்திக் கொண்டிருக்கிறது. இலங்கை ஒரு தீவாக ஆசியாவின் மையப் பகுதியில் மத்திய கிழக்கு, கிழக்காசியா இடையேயான கடல் பாதையில் இருப்பதே இந்தப் பிரச்சனையில் பல நாடுகளை ஆர்வம் கொள்ளச் செய்திருக்கிறது. மத்திய கிழக்கு மற்றும் மலாக்கா நீரிணைவு இடையேயான கடல் பாதை உலக வர்த்தகத்தில் மிக முக்கியமான ஒரு இடத்தைப் பெற்றிருக்கிறது.

உலகின் மொத்த எண்ணெய் வர்த்தகத்தில் 50% மலாக்கா நீரிணைவு வழியாகத் தான் நடைபெறுகிறது. உலக மொத்த வர்த்தகப் போக்குவரத்தில் மூன்றில் ஒரு பங்கு இந்தப் பகுதியில் தான் நடைபெறுகிறது. ஜப்பானின் எண்ணெய் தேவைகளில் சுமார் 80% இந்தப் பகுதி வழியாகத் தான் நடைபெறுகிறது. மலாக்கா நிரிணைவு சீனாவை ஆசியாவுடன் இணைக்கும் பகுதி என்பதும், சீனா தனது 60% எண்ணெய் தேவைகளுக்கு இந்தப் பகுதியையே நம்பி இருக்கிறது என்பதும் இந்தக் கடற்பகுதியின் முக்கியத்துவத்தை நமக்கு உணர்த்தும்.

அடுத்த 20 ஆண்டுகளில் உலகின் முதல் ஐந்து இடம் பெறக் கூடிய பொருளாதார வல்லரசு நாடுகளான இந்தியா, சீனா, ஜப்பான் போன்றவற்றின் எரிபொருள் தேவை இந்தக் கடற்பகுதி வழியாகத் தான் நடைபெறும் என்பதால் தங்களின் தேவைகளுக்கு எந்தப் பிரச்சனையும் எதிர்காலத்தில் நேர்ந்து விடக் கூடாது என்ற அக்கறை இந்த நாடுகளுக்கு உண்டு. ஆசியாவின் பிற பொருளாதார வளர்ச்சி பெறும் நாடுகளான சிங்கப்பூர், மலேசியா, இந்தோனேசியா போன்றவையும் இந்தப் பகுதியில் இருப்பதை கவனிக்க வேண்டும். இவை தவிர எண்ணெய் வளம் மிக்க நாடான ஈரான் இந்தப் பகுதியில் தன்னுடைய எண்ணெய் வளத்துடன், இராணுவ ரீதியிலான பலத்தை பெறுவதற்கும் தொடர்ந்து முயற்சி எடுத்து வருகின்றது.

எதிர்காலத்தில் உலகின் முக்கியமான பொருளாதார கேந்திரமாக உருவாகக்கூடிய இந்தக் கடற்பரப்பில் தன்னுடைய ஆதிக்கத்தை நிலை நிறுத்த அமெரிக்காவும் தொடர்ந்து முயற்சித்து வந்துள்ளது.

கச்சா எண்ணெய் தவிர அணுமின் நிலையங்களுக்கும், அணுஆயுத உற்பத்திக்கும் தேவைப்படும் புளூட்டோனியம் போன்றவையும் கடல்வழியாகத் தான் கொண்டுச் செல்லப்படுகிறது. எதிர் வரும் காலங்களில் உலகின் முக்கியப் பொருளாதாரப் பிரச்சனையாக இருக்கப் போவது கச்சா எண்ணெய் உள்ளிட்ட எரிபொருள் தேவைகள் தான். தங்களுடைய எரிபொருள் தேவைகளுக்கு தன்னிச்சையான முயற்சிகளை மேற்கொள்ள சீனா, ஜப்பான், இந்தியா, அமெரிக்கா போன்ற நாடுகள் தொடர்ந்து முயற்சித்து வருகின்றன.

இந் நிலையில் தான் கடல் மீதான ஆதிக்கம் முக்கியத்துவம் பெறுகிறது. தங்களுடைய எண்ணைக் கப்பல்களின் பாதுகாப்பு, பிரச்சனையில்லாத போக்குவரத்தை கப்பல்களுக்கு ஏற்படுத்திக் கொடுப்பது, இஸ்லாமிய தீவிரவாதிகளுக்கு எதிரான பாதுகாப்பு, தங்களுடைய பொருளாதார தேவைகளுக்கான பாதுகாப்பு, கடற்பரப்பில் இருக்கின்ற எண்ணெய் வளங்களை கண்டறிவது போன்றவற்றுடன் இந்த கடல்வெளியில் இருக்கும் நாடுகளுடன் ஒத்துழைப்பை ஏற்படுத்திக் கொள்வது என்ற ரீதியில் தான் உலக நாடுகளின் நிலை அமைந்து இருக்கிறது.

இந்தக் கடற்பரப்பில் தங்களின் வர்த்தகத்திற்கு பாதுகாப்பினை ஏற்படுத்திக் கொள்வதும், எதிர்காலங்களில் பிரச்சனை நேரும் சமயங்களில் தங்களின் இருப்பை இந்த வர்த்தக முக்கியத்துவம் மிக்க பகுதியில் நிலை நிறுத்திக் கொள்வதிலும் உலக நாடுகள், குறிப்பாக அமெரிக்கா, சீனா, இந்தியா போன்ற நாடுகள் முனைந்தன.

உலக கடல் போக்குவரத்தில் chokepoint என்று சொல்லக்கூடிய பகுதிகள் நிறைய உண்டு. அதாவது மிகக் குறுகலான பாதை உடையப் பகுதிகளை chokepoint என்று கூறுவார்கள். இவ்வாறு குறுகலான பாதை உடைய கடல் பாதையை ஏதேனும் ஒரு நாட்டின் படையோ அல்லது தீவிரவாத அமைப்போ அடைத்து விட்டால் அதனை விடுவிப்பது கடினம். அவ்வாறான ஒரு chokepoint உள்ள இடம் தான் மலாக்கா நிரிணைவு ஆகும். இதில் சுமார் 2.5கி.மீ அகலம் மட்டுமே கொண்ட பல குறுகலான பாதைகள் உள்ளன. இதனை ஏதேனும் ஒரு நாட்டின் கடற்ப்படையோ, தீவிரவாத அமைப்போ அடைத்து விட்டால் உலகின் மிக முக்கியமான வர்த்தகப் போக்குவரத்து பாதிக்கப்படும். இது உலகப் பொருளாதாரத்திற்கு கடும் பாதிப்பை ஏற்படுத்தும்.

அதனை தடுக்கும் பொருட்டு தான் இந்தப் பகுதியில் பல நாடுகளின் கடற்ப்படை தளங்கள் உருவாக தொடங்கின. அமெரிக்கா இந்தப் பகுதியில் தன்னை நிலை நிறுத்திக் கொள்ள தொடர்ந்து முனைந்து வருகிறது. இந்திய அமெரிக்க கடற்ப்படை இடையே இராணுவ ஒத்துழைப்பு, மலாக்கா நிரிணைவுகளில் கூட்டு ரோந்து நடவடிக்கைகள் போன்றவை மேற்கொள்ளப் படுகின்றன. மத்திய ஆசியப் பகுதியில் அமெரிக்காவின் மிகப் பெரிய கடற்படை தளம் உள்ளது. சுனாமியை முன்னிட்டு அமெரிக்கா தனது கடற்படையை இப் பகுதியின் பலப் பகுதிகளுக்கும் அனுப்பியது குறிப்பிடத்தக்கது.

எதிர்காலத்தில் அமெரிக்காவிற்கு சவால் விடுக்கும் நாடாக கருதப்படும் சீனா இந்தப் பகுதியின் சில முக்கியமான இடங்களில் தன்னை நிலை நிறுத்திக் கொள்ள முனைந்தது. இப் பிராந்தியத்தின் வல்லரசான இந்தியா மூலம் எதிர்காலத்தில் தன் வர்த்தகத்திற்கு அச்சறுத்தல் நேராமல் தடுக்கவும், தன் வர்த்தகத்திற்கு பாதுகாப்பினை ஏற்படுத்தும் முகமாகவும் மியன்மார் (பர்மா), மாலத்தீவுகள் போன்ற பகுதிகளில் தன் கடற்ப்படை மற்றும் தொலைத்தொடர்பு தளங்களை சீனா அமைத்துக் கொண்டது. அது தவிர மியன்மார் அரசுடன் எண்ணெய் கிடங்குகளை பராமரிக்கும் வசதிகளையும் பெற்று இருக்கிறது.

இந்தியாவிற்கு ஏற்கனவே அந்தமான் நிக்கோபர் தீவுகளில் மிகப் பெரிய கடற்படை தளம் உள்ளது. இது மலாக்கா நிரிணைவு பகுதியின் அருகாமையில் இருப்பது குறிப்பிடத்தக்கது. அந்தமான் நிக்கோபர் தீவுகளில் எண்ணெய்க் கிடங்குகளையும் இந்தியா அமைத்துள்ளது. திரிகோணமலையிலும் இந்திய எண்ணெய் நிறுவனமான இந்தியன் ஆயில் காப்ரேஷன் எண்ணெய் கிடங்குகளை பராமரித்து வருகிறது.

இவை தவிர இந்தக் கடற்பரப்பில் தேவைப்படும் கண்காணிப்பிற்கு தொலைத்தொடர்பும் மிகவும் முக்கியமானது. மத்திய கிழக்கு முதல் மலாக்கா நிரிணைவு வரையிலான பகுதியில் இருக்கும் வர்த்தக கப்பல்கள் மற்றும் இராணுவ நிலைகளிடையே தொடர்பு கொள்ளக் கூடிய தேவையும் உள்ளது. இலங்கை இந்தக் கடற்ப்பாதையின் மையப் பகுதியில் இருப்பதால் இத்தகைய தொலைத்தொடர்புக்கு உகந்த இடமாகவும் உள்ளது. அதன் அடிப்படையில் தான் வாய்ஸ் ஆப் அமெரிக்கா போன்ற நிலைகளை 1980களிலேயே இங்கு அமைக்க அமெரிக்கா முனைந்தது. இன்று தொலைத்தொடர்பு அசுர வளர்ச்சிப் பெற்றிருக்கிற சூழ்நிலையில் இது ஒரு பெரிய பலம் என்று சொல்ல முடியாது. என்றாலும் இதுவும் இலங்கைக்கு ஒரு முக்கியமான பலம் தான் என்பதை மறுக்க முடியாது.

இவ்வாறு இந்தப் பகுதி மிக முக்கியமான பொருளாதார கேந்திரமாக இருப்பதால் தான் ஜப்பான், அமெரிக்கா போன்ற நாடுகள் இந்தப் பிரச்சனையில் மிகத் தீவிரமான ஆர்வம் காட்ட தொடங்கின. இயல்பாகவே இந்த நாடுகள் இப் பிராந்தியத்தில் அமைதி ஏற்படுவது தான் தங்களுடைய பொருளாதார தேவைகளுக்கு உகந்ததாக இருக்ககூடும் என்ற எண்ணத்தில் இலங்கை அரசு சார்பான நிலைப்பாட்டினை எடுத்தன. அதனால் புலிகளுக்கு அதிகப்படியான நெருக்கடியை கொடுக்க தொடங்கின. இவ்வாறு நெருக்கடி கொடுப்பதன் மூலம் புலிகளை போர் நோக்கி செல்லாமல் தடுக்க முடியும் என நினைத்தன. அதன் விளைவு தான் அமெரிக்கா ஐரோப்பிய யூனியனை நிர்பந்தம் செய்து புலிகள் மீதான தடையினை கொண்டு வந்தது.

ஆனால் புலிகளின் போக்கு உலக நாடுகளை தங்களின் வழிக்கு கொண்டு வருவது என்ற ரீதியிலேயே இருக்கிறது. இதற்கு காரணம் ஒவ்வொரு நாடும் விடுக்கும் நிர்பந்தங்களுக்கு அடிபணியும் பொழுது தமிழீழம் என்ற தீர்வினை விட்டுக்கொடுக்க நேரும். அது மட்டுமில்லாமல் ஈழப்போராட்டம் ஒரு தன்னிச்சையான பாதையில் செல்லாமல் உலகநாடுகளின் எண்ணங்களுக்கு ஏற்ப வளைந்து செல்லக்கூடிய நிலை நேர்ந்து விடும்.

இன்று இராணுவ ரீதியில் ஈராக், ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் நிறையப் பின்னடைவுகளை எதிர்கொண்டு இருக்கும் அமெரிக்கா, இலங்கைப் பிரச்சனையில் இராணுவ ரீதியில் "நேரடியாக" உள்ளே நுழையாது. வேறு எந்த நாடும் இந்தப் பிரச்சனையில் தன்னை நேரடியாக ஈடுபடுத்திக் கொள்ளாது என்ற நிலையில் உலக நாடுகளின் நிர்பந்தம் வெறும் அச்சறுத்தல், அங்கீகாரம் மறுப்பு என்ற அளவில் தான் இருக்கும்.

இந் நிலையில் இந்தக் கடற்ப்பரப்பில் தங்களது ஆளுமையை நிலை நிறுத்துவது தான் உலக நாடுகளை தங்களின் நிலை நோக்கி கொண்டு வரும் ஒரே வழி என புலிகள் முடிவு செய்தனர். இந்தப் பிராந்திய கடற்பகுதியில் தாங்களும் ஒரு முக்கியமான சக்தி என்பதை உலக நாடுகளுக்கு உணர்த்துவது தான் அவர்களின் எண்ணம். எனவே தான் திரிகோணமலை புலிகளின் முக்கிய இலக்காக எதிர்வரும் காலங்களில் இருக்கும் என நான் நினைக்கிறேன் - (சம்பூர் முதலிய கிழக்கு பிராந்திய பகுதிகளை சிறீலங்கா அரசாங்கம் சமீபத்தில் கைப்பறியதும், புலிகளின் கைகளுக்கு திரிகோணமலை சென்று விடக்கூடாது என்பதால் தான் என்பதையும் இங்கே கவனிக்க வேண்டும்)

புலிகளின் கடற்படை இப் பிராந்தியத்தின் கடற்ப்பரப்பில் ஒரு முக்கியமான சக்தி என்பதை நிலை நிறுத்தும் வகையில் தான் கடந்த கால நிகழ்வுகள் இருந்தன.

அதனால் புலிகள் பெறப் போகும் பலன் என்ன ?

பொருளாதார முக்கியத்துவம் மிக்க ஒரு பகுதியில், ஒரு முக்கியமான சக்தியை எந்த நாடும் புறக்கணித்து விட முடியாது.

Leia Mais…
Sunday, August 19, 2007

ஹிந்து ஆசிரியர் என்.ராமின் பத்திரிக்கையாளர் முகமூடி...


ஹிந்து நாளிதழின் ஆசிரியர் என்.ராம் பற்றி உங்களுக்கு என்ன தெரியும் ? அவர் இந்து நாளிதழின் ஆசிரியர், ஈழப்பிரச்சனைப் பற்றி தவறான தகவல்களை எழுதுகிறார் என்பது மட்டும் தானே ?

என்.ராம் ஏன் ஈழப் பிரச்சனைப் பற்றிய தவறான தகவல்களை எழுத வேண்டும் ? அதுவும் ஈழ விடுதலையை வெறித்தனமாக எதிர்த்து சிறீலங்கா ரத்னாவாக வேண்டும் ?

கடந்த ஆண்டு என்னுடைய ஒரு கட்டுரையின் மறுமொழியிலே அது பற்றி கூறியிருந்தேன்.

"ஏன் ஹிந்து இவ்வாறு நடந்து கொள்கிறது என்பதை ஆராய வேண்டியதன் அவசியம் உள்ளது

இலங்கை-இந்திய ஒப்பந்தத்தின் பொழுது ஹிந்து ராமின் பங்களிப்பு முக்கியமானது. விடுதலைப் புலிகளின் பிரதிநிதிகள் அவரை சந்தித்து பேசியது, அதன் பிறகு அவர் ஜெயவர்த்தனே அரசின் அமைச்சர்களை சந்தித்து பேசியது, ராஜீவ் மற்றும் ரா உளவு அமைப்புடன் இந்த விவகாரத்தில் பணியாற்றியது போன்ற விவகாரங்களை சமீபத்தில் வாசித்தேன்.

அதன் பிறகு நடந்த விஷயங்கள் என்ன ? அவர் என்ன நோக்கத்தில் இந்திய-இலங்கை ஒப்பந்தத்தில் பணியாற்றினார் போன்ற விவகாரங்கள் அலசப்பட வேண்டியவை"

இது தொடர்பாக நான் அறிந்த தகவல்களை முன்வைப்பதே இந்தக் கட்டுரையின் நோக்கம். இது குறித்து மிக விரிவாக எழுத வேண்டிய அவசியம் உள்ளது. காரணம் திரைமறைவில் நடந்த இந்த நிகழ்வுகள் ஈழப்பிரச்சனையை கூர்ந்து கவனித்து வரும் பலருக்கும் கூட தெரியவில்லை. இந்தக் கட்டுரை அதற்கான ஒரு சிறு அறிமுகம் மட்டுமே. இது குறித்த மிக விரிவான கட்டுரை தொடரை மற்றொரு தருணத்திலே நான் நிச்சயம் எழுதுவேன்.

ஹிந்து என்.ராம் இந்திய இலங்கை ஒப்பந்தத்தில் தன்னுடைய பங்களிப்பினை அதிகம் வெளிப்படுத்திக் கொள்வதில்லை. காரணம் ராஜீவ் காந்திக்கு தவறான தகவல்களை அளித்து இந்தியா-இலங்கை இடையேயான ஒப்பந்தத்தை ஏற்படுத்தி, இந்தியாவிற்கும் ஈழத்தமிழர்களுக்கும் பல இழப்புகளை ஏற்படுத்தி கொடுத்த குழுவில் ஹிந்து ராம் முக்கியமானவர். இந்தியாவின் Foriegn policy disaster என்று வர்ணிக்கப்படும் இந்தியாவின் இலங்கை தலையீட்டினை திட்டமிட்டு நடத்திய குழுவில் முக்கியமானவரான ஹிந்து ராம் அவரது தோல்வியை எப்படி வெளிப்படுத்திக் கொள்வார் ? நாம் தான் வெளிப்படுத்த வேண்டும்...

Assignment Colombo என்ற தன்னுடைய புத்தகத்திலே இந்திய-இலங்கை ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்ட நேரத்தில் ராஜீவ் காந்தியின் முக்கிய ஆலோசகராக இருந்த ஜே.என்.தீக்க்ஷித் இவ்வாறு குறிப்பிடுகிறார்.

I distinctly remember Rajiv Gandhi raising the question as to whether the LTTE would really abide by the agreement, which India was bound to implement as a guarantor. Rajiv Gandhi raised this question in the context of the doubts and misgivings Prabhakaran had expressed when Hardeep Puri provided details of the agreement to him on July 19.

Rajiv's question was primarily addressed to the then secretary of the Research and Analysis Wing, S E Joshi, who was cautious in his response. He said the LTTE was not a very trustworthy organisation and the agreement in a manner went against their high-flown demand for Eelam. Joshi was about to retire. His successor Anand Verma's response was that the LTTE owed much to India's support, that it was the LTTE which conveyed the message to N Ram of The Hindu, which initiated the whole process of discussions on the proposed Agreement.

ஒரு முக்கியமான விடயத்தை நாம் இங்கு கவனிக்க வேண்டும். இந்தியா இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதை புலிகள் எதிர்க்கின்றனர். காரணம் இந்த ஒப்பந்தத்தை முதன் முதலாக முன்னெடுத்தவர்கள் விடுதலைப் புலிகளே. இந்தியா அல்ல. ஆனால் விடுதலைப் புலிகளை அகற்றி விட்டு இந்தியா அவர்கள் சார்பாக இலங்கையுடன் கையெழுத்திடுகிறது. இதனை புலிகள் எதிர்க்கின்றனர். இந்திய-இலங்கை ஒப்பந்தத்தில் அது தான் முதல் கோணல். பிறகு அதுவே பெரிய சிக்கல்களை ஏற்படுத்துகிறது.

1987ம் ஆண்டு விடுதலைப் புலிகள் இயக்கத்தின் பிரதிநிதிகள் சிங்கப்பூரில் ஹிந்து என்.ராமை சந்திக்கிறார்கள். இலங்கை அரசாங்கம் தங்களின் சில கோரிக்கைகளை ஏற்றுக்கொண்டால் இலங்கை அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தைக்கு தயாராக இருப்பதாக விடுதலைப்புலிகள் இயக்க பிரதிநிதிகள் என்.ராமிடம் தெரிவிக்கிறார்கள்.

LTTE representatives in Singapore met N Ram, the associate editor of The Hindu newspaper, published from Madras, and conveyed a message that, the LTTE would be willing for a political compromise, if the Sri Lankan government agreed to the following proposals:

  • Military operations should stop and Sri Lankan forces should return to the barracks, wherever they are;
  • The Northern and Eastern provinces should be merged and recognized as a Tamil homeland;
  • There should be devolution of powers on the basis of the proposals which had come up since 1983 and up to the end of 1986;
  • Tamil should be recognized as an official language equal in status with Sinhalese.
  • An interim Tamil administration should be put in place in the linked northern and eastern provinces, to negotiate and finalize details of devolution of power etc, and;
  • Tamils should be given proportional representation in the three services of the security forces and in the public service.
(Sri Lanka - The Untold Story)

மேலே உள்ள புலிகளின் கோரிக்கைகளை கவனித்தால் அது தான் இந்திய-இலங்கை ஒப்பந்தத்தின் சாராம்சம் என்பது நமக்கு தெரியும். ஆனால் அதனை முன்வைத்த புலிகளே, அந்த ஒப்பந்தத்தில் இருந்து ஒதுக்கப்படுகின்றனர்.

என்.ராம் விடுதலைப்புலிகளின் இந்த தகவலை இலங்கையின் அமைச்சர் காமினி திசநாயக்காவிடம் கொண்டு செல்கிறார். இதையடுத்து விடுதலைப்புலிகள் - இலங்கை அரசாங்கம் - இந்திய அரசாங்கம் இவர்களிடையே பல கடிதப் போக்குவரத்து ஏற்படுகிறது. இந்தக் கடிதங்களை பல தரப்புகளிடம் கொண்டு சேர்க்கும் பொறுப்பினை என்.ராம் ஏற்கிறார்.

காரணம் என்.ராம் இலங்கை அரசாங்கம், இந்திய அரசு மற்றும் உளவுநிறுவனங்களுக்கும் மட்டுமல்ல, விடுதலைப் புலிகளுக்கும் நெருக்கமானவர். எனவே ஹிந்து என்.ராம் இந்த ஒப்பந்தத்திலே ஒரு தூதுவராக இந்த மூன்று தரப்புகளிடையே பணியாற்றுகிறார்.

இந்த நெருக்கம் எப்படி ஏற்பட்டது ?

என்.ராம் இந்திய உளவு நிறுவனமான "ரா (RAW)" உளவு நிறுவனத்தின் உளவாளி என தமிழகத்திலே திராவிடர் கழகம் மேடைகளில் முழுங்குவதை கேட்டிருக்கிறேன். அவர் ராவின் உளவாளியாக பல தரப்புகளிடையேயும் தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டிருக்கலாம். அந்த வாய்ப்புகளை மறுப்பதற்கில்லை. ஒரு பத்திரிக்கையாளராக பல தரப்பினரையும் அவர் சந்தித்து இருக்கலாம், தனக்கு ஒரு நெருக்கத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கலாம். எது எப்படியாயினும் இலங்கையில் பலரிடம் என்.ராமிற்கு மிக நெருக்கமான நட்பு இருந்தது என்பதை இலங்கையில் நடந்த பல்வேறு நிகழ்வுகளை கொண்டு அறிய முடிகிறது.

என்.ராம் இலங்கை அரசியலில் தனது பங்கெடுப்பு குறித்து கொழும்பில் ஒரு முறை இவ்வாறு தெரிவிக்கிறார்..

Let me add, by way of disclosure, that I was in Sri Lanka as a journalist seeking to interview President Jayewardene but with an interest and, as it turned out, a role going beyond journalism...

ஆம்...இலங்கை அரசியலில் என்.ராமின் ஈடுபாடு என்பது வெறும் பத்திரிக்கையாளரின் ஈடுபாடு அல்ல. என்.ராம் பத்திரிக்கையாளர் என்னும் முகமூடி மூலமாக இலங்கை அரசியலில் அவரது ஈடுபாட்டினை பல தளங்களில் முன்னெடுக்க முடிகிறது.

அவரது நட்பின் வட்டம் இலங்கையின் பல்வேறு தரப்புகளிடையேயும் பரந்து விரிந்து இருந்தது. இலங்கையின் இரு பெரும் கட்சிகளான ஐக்கிய தேசியக் கட்சி, சிறீலங்கா சுதந்திரா கட்சி என இந்த இரண்டு தரப்புகளிடையேயும் அவருக்கு நெருக்கம் இருந்தது. அது போல இலங்கையைச் சார்ந்த சிறீலங்கா அரசு ஆதரவு தமிழ் தலைவர்களையும் அவருக்கு தெரியும். விடுதலைப் புலிகளுடனும் அவருக்கு நெருக்கம் இருந்தது.

ஐக்கிய தேசிய கட்சியின் தலைவரான காமினி திசநாயக்கா என்.ராமின் நெருங்கிய நண்பர். சென்னையில் என்.ராம் வீட்டிற்கு விருந்தினர்களாக குடும்பத்துடன் வந்து போகும் அளவிற்கு காமினி திசநாயக்காவுடன் என்.ராமிற்கு நெருங்கிய நட்பு இருந்ததாக ஹிந்து நாளிதமிழில் நிருபராக வேலை பார்த்தவரும், விடுதலைப் புலிகளின் எதிர்ப்பாளருமான இலங்கைச் சார்ந்த DBS.ஜெயராஜ் குறிப்பிடுகிறார். என்.ராம் கூட பல தருணங்களில் அவருக்கும் காமினி திசநாயக்காவுக்கும்மான நட்பினை வெளிப்படுத்தி இருக்கிறார்.

என்.ராமின் மற்றொரு நெருங்கிய நண்பர் விஜய குமாரதுங்கா. சந்திரிகா குமாரதுங்காவின் கணவர். திம்பு பேச்சுவார்த்தை தோல்வி அடைந்த பிறகு விடுதலைப் புலிகளையும், மிதவாத சிங்கள தலைவர்களையும் சந்திக்க வைக்கும் ஒரு முயற்சியை என்.ராம் மேற்கொள்கிறார். 1986ல் விஜய குமாரதுங்காவும், சந்திரிகா குமாரதுங்காவும் சென்னைக்கு வருகிறார்கள். என்.ராம் அவர்களை விடுதலைப் புலிகளுடனான சந்திப்பிற்கு ஏற்பாடு செய்கிறார். சென்னையில் இந்த சந்திப்பு நடந்தது.

1985ல் விடுதலைப் புலிகள் இயக்க தலைவர் வே.பிரபாகரனை பேட்டி எடுத்து ப்ரெண்ட்லைனில் வெளியிட்டவரும் என்.ராம் தான்.

மறுபடியும் இந்தியா - இலங்கை இடையேயான ஒப்பந்தத்திற்கு முன்பாக இருந்த சூழலுக்கு வருவோம்...

விடுதலைப் புலிகள், சிங்கள அரசியல்வாதிகள் என இரு தரப்பிற்கும் இடையே நெருக்கமாக என்.ராம் இருந்த காரணத்தாலும், 1986ம் ஆண்டு அவர் சிங்கள மிதவாத தலைவர்கள் எனக்கூறப்படும் விஜய குமாரதுங்கா, சந்திரிகா குமாரதுங்கா ஆகியோருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையேயான சந்திப்பை ஏற்பாடு செய்து இருந்ததமையாலும், விடுதலைப் புலிகள் இலங்கை அரசாங்கத்திற்கும், தங்களுக்கும் இடையேயான பேச்சு வார்த்தையினை ஏற்படுத்த ஒரு "தூதுவராக" என்.ராமை அணுகுகிறார்கள். சிங்கப்பூரில் என்.ராமிற்கும், புலிகளின் பிரதிநிதிகளுக்கும் இடையேயான இந்தச் சந்திப்பு நிகழ்கிறது.

இங்கு கவனிக்க வேண்டியது இந்த ஒப்பந்தத்தையே புலிகள் தான் முதன் முதலில் முன்வைக்கிறார்கள். அதனை ஜே.என்.தீக்க்ஷ்த் தன் புத்தகத்திலே குறிப்பிடுகிறார். பின்னாட்களில் இந்த ஒப்பந்தத்தை இந்தியா முன்னெடுத்ததாக திரிக்கப்படுவதையும் நாம் கவனிக்க வேண்டும்.

இலங்கை அரசாங்கம் மீதும், சிங்கள இனவெறி ஜெயவர்த்தனே மீதும் விடுதலைப் புலிகளுக்கு பெரிய நம்பிக்கை இல்லை. அதனால் இந்தியா ஒரு மத்தியஸ்தராக இந்தப் பிரச்சனையில் இருந்தால் இந்த ஒப்பந்தத்தை இலங்கை மீற முடியாது என புலிகள் நினைக்கிறார்கள். அவ்வாறே என்.ராம் காமினி திசநாயக்கா, ஜெயவர்த்தனே போன்றோரை சந்திக்கிறார். இந்திய தரப்பிலும் இந்திய உளவு நிறுவனத்தையும், இந்திய அரசாங்கத்தையும் சந்திக்கிறார். இம் மூன்று தரப்புகளிடையே ஒரு இணக்கமான சூழ்நிலை கொண்டு வருவதை முன்னெடுக்கிறார்.

ஆனால் இங்கே தான் ஒரு மிகப் பெரிய குழப்பத்தை என்.ராம் உள்ளிட்ட இந்திய தரப்பு செய்து விடுகிறது...

இந்தியாவின் வெளியூறவுக் கொள்கையை கூர்ந்து கவனித்தால் இந்தியா ஏன் இவ்வாறு ஒரு மிகப் பெரிய குழப்பத்தினைச் செய்கிறது என்பது புலப்படும். ஆனால் தமிழகத்திலே மட்டும் இந்த குழப்பத்தினை "தேச நலன்" என்று சப்பை கட்டும் பழக்கம் உள்ளது. ஆனால் தரவுகளை சரியாக பார்த்தால் இந்தியா தனது வெளியூறவுக் கொள்கையில் 1980களில் செய்த தவறுகளை 1990களில் சரி செய்து கொண்ட வரலாறு நமக்கு புரியும்.

இந்தியா சுதந்திரம் அடைந்தப் பிறகு தனது வெளியுறவுக் கொள்கைகளை பல மாற்றங்களுக்கு உட்படுத்தி இருக்கிறது. நேருவின் காலத்தில் அணிசேரா நாடு என்பதாக அனைத்து நாடுகளிடமும் இணக்கமாக இருந்த கொள்கை, இந்திராவின் காலத்தில் அதிரடியான வெளியூறவு கொள்கையாக மாற்றம் பெற்றது. இந்தியாவின் உளவு அமைப்புகள் அண்டை நாடுகளான பாக்கிஸ்தான் போன்ற நாடுகளில் பல குழப்பங்களை ஏற்படுத்தின. அன்றைக்கு பாக்கிஸ்தானை சீர்குலைப்பது இந்தியாவின் முக்கிய நோக்கமாக இருந்தது. அவ்வாறு தான் பாக்கிஸ்தானில் குழப்பம் ஏற்படுத்தப்பட்டு பங்களாதேஷ் உருவானது. இன்னும் சொல்லப்போனால் இந்திராவின் காலத்தில் தான் இந்திய உளவு நிறுவனங்கள் விஸ்ரூபம் எடுத்தன (உளவு நிறுவனங்கள் குறித்த என்னுடைய முந்தைய பதிவு - http://blog.tamilsasi.com/2005/12/blog-post_29.html)

இந்திராவிற்கு பிறகு பிரதமராக பொறுப்பேற்ற ராஜீவ் காந்தி அரசியலில் ஒரு கத்துக்குட்டி. அவரின் நடவடிக்கைகள் அதிகாரிகளின் ஆலோசனைகளுக்கு ஏற்ப அமைந்தன. இந்திராவின் நடவடிக்கைகள் அண்டை நாடுகளில் உளவுத்துறை மூலமாக குழப்பத்தை ஏற்படுத்தி இந்தப் பிராந்தியத்தில் இந்தியா தான் மிகப் பெரிய சக்தி என்பதை நிருபிக்கும் வகையிலே இருந்தது. ராஜீவ் காந்தி இதனை அடுத்த நிலைக்கு உளவுத்துறை அதிகாரிகளின் ஆலோசனைகள் பேரில் மேற்கொள்கிறார். அதற்கு அப்போதைய பனிப்போர் சூழலும் ஒரு காரணம். ராஜீவ் காந்தி பல நாடுகளில் இந்தியாவின் நேரடியான தலையீட்டினை முன்னெடுக்கிறார். இலங்கை, பங்களாதேஷ், மாலத்தீவு, நேபால் என அனைத்து சிறிய நாடுகளும் இந்தியாவைச் சார்ந்து இருக்க வேண்டும் என்பது தான் ராஜீவ் மற்றும் உளவு நிறுவனங்களின் Hegemony கொள்கையாக இருந்தது. இதனைச் சார்ந்து தான் இந்திய-இலங்கை ஒப்பந்தத்தில் இந்தியாவின் தலையீடும் அமைகிறது.

ஆனால் இதில் ஏற்பட்ட மிகப்பெரிய பின்னடைவு காரணமாக 1989ல் பதவியேற்கும் வி.பி.சிங் தலைமையிலான அரசாங்கம் இந்தியாவின் வெளியூறவு கொள்கைகளில் பல மாற்றங்களை கொண்டு வருகிறது. 1989ல் வெளியூறவுத்துறை அமைச்சரும், பிறகு இந்தியாவின் பிரதமராக பொறுப்பேற்றவருமான ஐ.கே.குஜ்ரால் இந்தியாவின் வெளியூறவு கொள்கைகளில் பல புதிய பரிமாணங்களை கொண்டு வருகிறார். கடந்த காலங்களில் ஏற்பட்ட தவறுகள் சரி செய்யப்பட்டு இன்று வரை அமலில் இருக்கும் அந்த வெளியூறவு கொள்கைகளை "Gujral Doctrine" என்று கூறுவார்கள். அண்டை நாடுகளை மதிப்பது, அண்டை நாடுகளுடன் இணக்கமாக, சமநிலையில் பழகுவது போன்றவை இந்த கொள்கையின் முக்கிய அம்சம். இது இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி போன்றோர் முன்னெடுத்த அதிரடி வெளியூறவு குழப்பத்தை சரி செய்தது மட்டுமில்லாமல் நாடுகளிடையேயான உறவுகளை மேம்படுத்துவதாகவும் அமைந்தது.

இந்தியாவின் இந்த வெளியூறவு கொள்கை குழப்பங்களையும், பின்னடைவுகளையும் மனதில் கொண்டு இந்தக் கட்டுரையினை வாசித்தால், இந்திய-இலங்கை ஒப்பந்தம் எவ்வாறு குழப்பத்துடன் அமைந்தது என்பது புரியும்.

இந்திரா காந்தி இருந்த வரையிலும் இலங்கை அரசுக்கு எதிராக தமிழர்களுக்கு இணக்கமான ஒரு கொள்கையினை அவர் வகுத்து இருந்தார். அந்த சமயத்திலே அவர் இவ்வாறான இணக்கமான நடவடிக்கையை எடுக்காமல் இருந்திருந்தால் தமிழகம் அப்போதைய சுழ்நிலையில் ஒரு கொந்தளிப்பான நிலைக்கு சென்றிருக்கும். எனவே இலங்கைப் பிரச்சனையில் தமிழர்களுக்கு இணக்கமான நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்ற சூழ்நிலை இந்திராவிற்கு இருந்தது. இந்திராவும் அதைத் தான் செய்தார்.

ஆனால் ராஜீவ் பதவியேற்ற பொழுது அந் நிலையில் மாற்றம் ஏற்பட்டது. ராஜீவ் காந்தியின் அருகில் இருந்த உளவு நிறுவ அதிகாரிகளும், ஆலோசகர்களும் இலங்கையிலே தமிழ் ஈழம் அமைவது இந்தியாவில் இருந்து தமிழகம் பிரிவதற்கும், மொழி ரீதியாக இலங்கையில் ஒரு தனி நாடு உருவாவது மொழி வாரி மாநிலங்களை உள்ளடக்கிய இந்தியாவில் பிரச்சனைகளை ஏற்படுத்தும் என்றும் நினைக்கின்றனர். அதனால் இலங்கையில் இந்திரா காந்தி முன்னெடுத்த கொள்கையில் இருந்து ராஜீவ் அரசு தடம் மாறுகிறது.

அவர்கள் தடம் மாற அடிப்படை காரணமாக இருந்த "தமிழகம் தனி நாடாக பிரியும் என்னும் வாதம்" எவ்வளவு முட்டாளதனமான ஒரு வாதம் என்பது இன்றைக்கு நமக்கு புரிகிறது. இதனை முன்னெடுத்துவர்கள் ஒரு சிறு குழுவினர். ஆனால் ஒரு அரசாங்கம் இருபது ஆண்டுகளுக்கு முன்பு இந்த குழுவினரைச் சார்ந்து இந்த வாதத்தை வைத்தது அப்போதைய அதிகாரிகளின் முட்டாள்தனத்தையும், குழுப்பத்தையும் நமக்கு தெளிவுபடுத்துகிறது. அதனால் தான் இந்தியாவின் இலங்கை தலையீட்டினை India's Foriegn Policy Disaster என கூறுகிறார்கள்.

இந்தியாவின் முன்னாள் வெளியூறவுச் செயலர் வெங்கடேஸ்வரன் தெகல்கா இதழுக்கு அளித்த ஒரு பேட்டியில் கடந்த ஆண்டு இவ்வாறு குறிப்பிடுகிறார்.

Going back to the Accord, if you were to look at the Letters of Exchange, it seems India was more concerned about its own geopolitical interests. There was absolutely no reference to the Tamil question.

You may be quite right. One of the clauses of the agreement was directly related to the Voice of America broadcasting station in Sri Lanka. Today, the whole geopolitical situation has changed. We are having a nuclear agreement with the US, which had reneged upon its nuclear agreement for supply of fuel to Tarapore atomic power station in 1974. So, it is very difficult to go digging into the past. There is no point in digging up graveyards.

During the Indira Gandhi era, India was perceived to be more sympathetic to the Tamil cause, but there was a sudden shift in approach after Rajiv Gandhi became PM. Was it because of a change in India’s perception of its own geopolitical interests or was it because of his advisers?

You are being slightly unfair to Rajiv. He offered to send Indian forces, as he said, to protect the Tamil people. He did not send the IPKF to fight the LTTE. In the first months there was a lot of bonhomie between the LTTE and the IPKF. Later on, for various reasons, the relationship between the two sides broke down.

இவர் கூறும் various reasons என்ன என்பதை விரிவாக இந்த கட்டுரை தொடரில் நான் அலச இருக்கிறேன்

But don’t you think he should have let the parties to the conflict come to an agreement (instead of India and Sri Lanka signing an agreement)?

It is a very valid point. The agreement should not have been between India and Sri Lanka. It should have been signed between the Sri Lankan government and the LTTE, with India, perhaps as a well-wisher, on the sidelines. On the other hand, the agreement was between the two governments and LTTE was not brought into the agreement directly, which is a pity. But all these are reminiscences in retrospect. Well, since you are asking me, I may say that before the Indo-Sri Lanka agreement was signed, I was still in Delhi after leaving my post as foreign secretary.

One evening, I bumped into N. Ram the present editor of The Hindu. I told him that the Accord, the draft of which was known, was very badly conceived. I felt the LTTE should have been made a party to the agreement, and the Indian government should not have been a direct party with the Lankan government. Ram said it was a bit too late to bring about any change in the agreement, which was happening in the next week or two. He was also travelling with the PM to Colombo for this “historic agreement”. The rest is history.

இரு பூனைகள் அப்பத்தை பங்கு பிரிக்க, குரங்கை அழைத்த கதை போல விடுதலைப் புலிகளும், இலங்கை அரசாங்கமும் செய்ய நினைத்த இந்த ஒப்பந்தத்திலே, மத்தியசம் செய்ய உள்ளே நுழைந்த இந்தியா, புலிகளை ஒதுக்கி தானே ஒப்பந்தத்தில் கையெழுத்திடுகிறது. இந்த ஒப்பந்தத்தை முதலில் முன்னெடுத்த புலிகள் ஒதுக்கப்படுகின்றனர். தமிழர் நலன் புறக்கணிக்கப்படுகிறது. இந்திய தேச நலன் என சில Theoretical அம்சங்களை, இன்று வரை நிருப்பிக்கப்படாத சில அம்சங்களை முன்னிறுத்தி தமிழர்கள் மீது இந்தியா போர் தொடுக்கிறது.

அந்த குழப்பத்தை முன்னெடுத்த குழுவில் முக்கியமானவர் பத்திரிக்கையாளர் என்ற முகமூடியை அணிந்திருக்கும் என்.ராம். ஹிந்து என்.ராம் எவ்வாறு இந்த விவகாரத்தில் பணியாற்றினார் ? விடுதலைப் புலிகளுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட என்.ராம் பிறகு ஏன் விடுதலைப் புலிகளுக்கு எதிராக மாறினார் ?

என்.ராம் தனது இலங்கை அரசியல் பங்கெடுப்பு குறித்து கொழும்பில் ஒரு முறை பேசும் பொழுது இவ்வாறு குறிப்பிடுகிறார்.

....What followed, between February 1987 and March 24, 1990, when the IPKF completed its `de-induction from Sri Lanka under unhappy circumstances, was akin to a historical adventure, some would say, misadventure.

அந்த misadventure குறித்து அடுத்தப் பதிவில் பார்ப்போம்...

********

என்.ராம் மீது திபெத் மக்களின் குற்றச்சாட்டு : கொழும்பில் இருந்து சிங்கள அரசாங்கம் தரும் செய்திகளை ஹிந்து வெளியிடுவதாக ஈழத்தமிழர்கள் குற்றம்சாட்டுவது போல, சீன அரசாங்கத்தின் செய்திகளை வெளியிட்டு திபெத் சுதந்திர போராட்டத்தை ஹிந்து ராம் திரிப்பதாக திபெத் விடுதலைப் போராட்ட ஆதரவாளர்கள் தெரிவிக்கின்றனர்.

அவர்கள் " 'Save The Hindu' Campaign " என்ற ஒன்றினை நடத்தி ஹிந்துவின் செய்தி திரிப்பை அம்பலப்படுத்தி இருக்கின்றனர். அது குறித்த தகவல்கள் இந்த இணையத்தளத்தில் கிடைக்கிறது - http://www.friendsoftibet.org/save/

Friends of Tibet has learned that the editorial board of The Hindu led by N Ram has instructed their centres not to carry any 'Tibet', 'Dalai Lama' and 'Falun Gong' stories criticising the policies of the Chinese government. Instead of depending on reliable news agencies like PTI, UNI, IANS, Reuters, AP and AFP, The Hindu has found a Beijing-based news-agency to fetch stories - The Xinhua - world's biggest propaganda agency belonging to the Chinese Communist Party. Probably The Hindu is the only newspaper in the country to reproduce Xinhua reports. Today The Hindu has virtually become a mouthpiece of the Chinese Communist Party.

திபெத் குறித்த என்னுடைய பதிவு - http://blog.tamilsasi.com/2005/11/blog-post_22.html

Leia Mais…