Sunday, June 24, 2007

அப்துல் கலாம் என்னும் தேசியவாத முகமூடி



அப்துல் கலாமின் குடியரசுத்தலைவர் பதவிக்காலம் முடிவுக்கு வந்துள்ளது. பதவியேற்ற பொழுது இந்திய மக்களின் ஒட்டுமொத்த அபிமானம் பெற்ற "குடியரசு தலைவராக" (People's President) ஊடகங்களால் வர்ணிக்கப்பட்டவர், இன்று அவருடைய பிம்பத்திற்கு ஏற்பட்ட சிறிய சறுக்கலுடன் அவரது பதவிக்காலம் முடியப் போகிறது. நான் அதனை அவரது சறுக்கலாக பார்க்கவில்லை. ஏனெனில் அவரைச் சுற்றி எழுப்பப்பட்ட பிம்பமே போலியாது. அப்துல் கலாம் என்ற தனி மனிதனுக்கு பதவி மேல் ஆசைப்படுவதற்கு எல்லா உரிமையும் உள்ளது. மற்றொரு முறை குடியரசுத்தலைவராக முடிந்தால் அவரே தொடர்வதும் நல்லது தான். அலங்காரப்பதவியில் யார் இருந்தால் தான் என்ன ?

நகர்ப்புற, "ஏட்டுப்படிப்பு" படித்த நடுத்தர வர்க்க மக்களின் அபிமானமத்தை பெற்றவர்களை 100 கோடி இந்திய மக்களும் ஆதரிப்பதான ஒரு பிம்பத்தை தொடர்ந்து எழுப்பும் இந்திய வெகுஜன ஊடகங்களின் மற்றொரு "தந்திரம்" தான் அப்துல் கலாமைச் சார்ந்து எழுப்பபட்ட பிம்பமும். ஊடகங்களால் எழுப்பபட்டிருந்த அப்துல் கலாமின் பிம்பம் பதவிக்கு ஆசைப்படாதவர் என்பதாகும். கலாம் தன்னை ஒரு சாமானிய மனிதராக குடியரசுத் தலைவர் பதவியில் நீடிக்கும் ஆசையை வெளிப்படுத்திய பொழுது அவரை ஒட்டி எழுப்பியிருந்த பிம்பமும் தகர்ந்து போய் விட்டதாக அதே ஊடகங்கள் மறுபடியும் புலம்பிக்கொண்டிருக்கின்றன.

அப்துல் கலாம் என்ற தனி மனிதன் மீது எனக்கு அபிமானம் உண்டு. ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்து தன்னுடைய தனிப்பட்ட முயற்சியால் உயர்ந்து "தன்னுடைய துறையில்" பெரிய சாதனைகளை நிகழ்த்தியவர் என்ற வகையில் அவர் மீது எனக்கு மிகுந்த மரியாதை உண்டு. இந்தியாவில் அரசுப் பதவிகளை பெறுவதில் இருக்கும் அரசியல் மற்றும் பிற பேதங்களை கவனிக்கும் பொழுது அப்துல் கலாம் என்னும் சாமானியர் அனைவரையும் கவர்வதில் யாருக்கும் மாற்று கருத்து இருக்க முடியாது. ஆனால் அது மட்டுமே அவருக்கு குடியரசுத்தலைவர் என்ற பதவியை பெற்று கொடுத்து விடவில்லை.

சுதந்திரம் அடைந்த பிறகு இந்தியா தன்னுடைய Hegemonyஐ பல விடயங்களில் தொடர்ந்து வெளிப்படுத்த முனைந்து வருகிறது. இராணுவ ரீதியிலான இந்த முன்னெடுப்பினை செய்வதன் மூலமாக "இந்தியாவை பலம் மிகுந்த ஒரு இராணுவ வல்லரசாக மாற்ற வேண்டும்" என்பதே "ஏழ்மை அதிகமான நாட்டிலும்" இந்திய அரசியல்வாதிகள் சுதந்திரம் அடைந்ததில் இருந்து முன்னெடுத்த முக்கியமான செயல்திட்டம். இந்தியாவை ஒரு இராணுவ சக்தியாக மாற்றுவதன் மூலம் ஒரு போலியான தேசியவாதத்தை இந்திய மக்களிடம் ஊட்டவதும், இந்தியா பலம் வாய்ந்த ஒரு நாடு என்பதாக தன் மக்களிடமும் பிற நாடுகளிடமும் வெளிப்படுத்துவதும் இந்த செயல்திட்டத்தின் முக்கிய நோக்கம். இவ்வாறு செய்வதன் மூலம் "இந்தியனாக நீ பெருமை கொள்ள வேண்டும்" என்று கூறுவதும், இந்திய துணைக்கண்டத்தின் பல் வேறு தேசிய இனங்களின் தனித்தன்மையை "இந்தியன்" என்ற தட்டையான ஒரு வடிவத்தில் அடக்க முனைவதும் இந்திய தேசியவாதிகளின் தந்திரம்.

இந்திய தேசியவாதிகளின் இந்த நோக்கத்தை ஓரளவிற்கு பூர்த்தி செய்த "விஞ்ஞான" குழுவின் தலைவர் தான் அப்துல் கலாம். அப்துல் கலாம் இந்தியாவின் வலதுசாரி இந்துத்துவவாதிகளின் முக்கிய கனவான ஏவுகணைகளை உருவாக்கிய விஞ்ஞான் குழுவின் தலைவர். இந்தியா போக்ரான் அணு ஆயுத சோதனையை நடத்திய பொழுது பாதுகாப்பு ஆலோசகராக அதனை முன்னின்று நடத்தியவர்.

வலதுசாரி இந்துத்துவவாதிகளின் கனவை மெய்ப்பித்த "முஸ்லிம்". அதுவும் எப்படிப்பட்ட முஸ்லீம் - ராமபிரானின் பக்தர். அதை அவரே வெளிப்படுத்திக் கொண்டார். ஆனாலும் இரண்டு வேளை தொழுபவர். காலை எழுந்தவுடன் அவர் படிப்பது "பகவத் கீதை". ஆனாலும் குரான் படித்து தொழுகை செய்யும் முஸ்லீம். இந்துத்துவவாதிகள் ஒரு "இந்திய முஸ்லீம்" இப்படித் தான் இருக்க வேண்டும் என்று அடையாளம் காட்ட நினைத்ததை விட அப்துல் கலாமிடம் அளவுக்கு அதிகமாகவே இந்துத்துவவாத தன்மைகள் காணப்பட்டன.

இந்திய முஸ்லீம்கள் இப்படியாக இருந்தால் தான் அவர்களை வலதுசாரி இந்துத்துவவாதிகள் "இந்தியர்களாக" ஒப்புக்கொள்வார்கள். கலாம் அவ்வாறு இருந்ததால் தான் அவர் "200% இந்தியராக" ஒப்புக்கொள்ளப்பட்டார். இந்திய முஸ்லீம்கள் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று கூறவே 2002ல் அவரை ஆதரித்த ஆர். எஸ்.எஸ், இன்றைக்கும் அவரை ஆதரிக்கிறது.

(ஒரு பத்திரிக்கையாளர் - பெயர் நினைவில்லை, ஒரு முறை கலாம் 200% இந்தியர் என்பது குறித்து கூறும் பொழுது - ஆர். எஸ்.எஸ் பாணியில் ஹிந்துக்கள் என்றால் 100% இந்தியராக இருந்தால் போதுமானது. முஸ்லீம்கள் என்றால் 200% இந்தியராக இருந்தால் தான் ஒப்புக்கொள்வார்கள் என்றார்)

அப்துல் கலாம் பல வகையில் சாமானிய இந்தியர்களை பிரதிபலித்து இருந்தார். ஒரு சாமானியக் குடும்பத்தில் இருந்து உயர்ந்த பதவியை எட்டியது அவர் மீது ஒரு அபிமானத்தை இந்திய நடுத்தர வர்க்க மக்களிடம் ஏற்படுத்தி இருந்தது. அப்துல் கலாம் "அபரிதமான தேசபக்தி மிக்க இந்தியர்" என்பதாக ஊடகங்கள் அவரை சத்தரித்தன. அப்துல் கலாம் தன்னுடைய தேசபக்தியை அப்படி எந்த விதத்தில் வெளிப்படுத்தி இருந்தார் என்பது எனக்கு புரிந்ததேயில்லை. இந்தியாவிற்கான அணு ஆயுதங்களை தயாரிக்கும் குழுவின் தலைவர் (Project leader) , அவ்வப்பொழுது இந்தியாவை வலிமையான நாடாக மாற்ற "எனது கனவு" என புத்தகங்களிலும், பேட்டிகளிலும் முழங்கியது தவிர அவர் தன்னை குறித்து இந்துத்துவவாதிகளைச் சார்ந்து வெளிப்படுத்தி இருந்த பிம்பமே அவரை தேசபக்தி மிக்க இந்தியராக ஊடகங்கள் சித்தரிப்பதற்கு காரணமாக இருந்தன.

அப்துல் கலாம் இந்துத்துவவாதிகளுக்கு கிடைத்த வரப்பிரசாதம். முஸ்லீம்கள் இவ்வாறு தான் இருக்க வேண்டும் என உதாரணம் காட்ட எப்படி அப்துல் கலாம் உதவினாரோ, அது போல நடுத்தரவர்க்க இந்தியர்களிடம் இவரை ஒரு முன்மாதிரியாக காட்டவும் உதவினார். அவரிடம் அதற்கான சில தன்மைகள் இருந்தன. ஆனாலும் அவரின் இராணுவ பலம் சார்ந்த தேசியவாதமே அப்துல் கலாமை பிரபலப்படுத்த இந்துவவாதிகள் துணிந்தமைக்கு முக்கிய காரணம்.

அப்துல் கலாம் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவராகவே பெரும்பான்மை இந்திய மக்கள் கருதினர். தேசியவாதிகளை தீவிரமாக எதிர்க்கும் தமிழகத்தை சேர்ந்தவர்கள் கூட அப்துல் கலாம் குறித்து வாய்மூடி மொளனமாகவே இருந்தனர். காரணம் அப்துல் கலாம் குறித்து எழுப்பப்பட்டிருந்த அளவுகடந்த பிம்பம். அதனால் தான் அவர் பதவியேற்ற சமயத்தில் கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரைக்கும் இருக்கும் குழந்தைகளை அவர் பதவியேற்பு விழாவிற்கு அழைத்து செல்வதாக அறிவித்த "சம்பிரதாய விளம்பர நடவடிக்கையும்" விமர்சிக்கப்படாமலேயே ஒதுக்கப்பட்டது. அப்துல் கலாம் குழந்தைகள் மீது அபிமானம் கொண்டவராக ஊடகங்கள் சித்தரித்தன. எப்படிப்பட்ட குழந்தைகள் அவர்கள் ? அவர் பல இடங்களில் உரையாடிய குழந்தைகள் எப்படிபட்டவர்கள் ? நகர்ப்புற பள்ளிகளில் படிக்கும் குழந்தைகள். அவர்களிடம் கனவு காணுங்கள் என்று அப்துல் கலாம் உரையாற்றுவார். ஊடகங்கள் குழந்தைகள் மீது அப்துல் கலாமுக்கு இருக்கும் அபிமானத்தை பட்டியலிடும்.

ஆனால் கிரமப்புற பள்ளிக்கு கூட செல்ல முடியாத ஏழை குழந்தைகள் பற்றி யாருக்கும் கவலையில்லை. தினந்தோறும் கிராமப்புறங்களில் பள்ளிக்கு செல்ல முடியாமல் அடுத்த வேளை சோறுக்காக பீடி சுற்றும் குழந்தைகளும், பட்டாசு தொழிற்சாலையில் தங்கள் மழலைப் பருவத்தை தொலைக்கும் குழந்தைகள் குறித்தும் யாருக்கும் கவலையில்லை. அடுத்த வேளை நல்ல சோற்றுக்கு கனவு காணுவதை தவிர இந்தக் குழந்தைகளுக்கு் கனவுகள் என எதுவும் இல்லை.

அந்த மழலைகள் படிக்க வேண்டிய ஆரம்ப பள்ளிப்படிப்புக்கு அரசு ஒதுக்க வேண்டிய பணம் - இந்தியாவின் போலியான இராணுவ வல்லரசு கனவுக்காக கொட்டப்படுவதை பற்றியும் யாருக்கும் அக்கறையில்லை. உலகில் தன்னுடைய இராணுவத்திற்காக அதிகமாக செலவு செய்யும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று. பல குழந்தைகளின் ஆரம்ப பள்ளிப்படிப்பு கனவுக்கு தேவைப்பட்ட அந்த பணத்தை கொண்டு கட்டியெழுப்பப்ட்ட அந்த இராணுவ வல்லரசு கனவை அப்துல் கலாம் நினைவாக்கியதாகத் தான் அவரை தேசியவாதிகள் கொண்டாடிக்கொண்டிருக்கின்றனர்.

சமீபத்தில் ஒரு பேட்டியில் ஷோபா சக்தி "தேசிய உணர்ச்சியை விட வயிறு வலிமையானது" என கூறியிருப்பார். நானும் அதைத்தான் கூற நினைக்கிறேன். இந் நாட்டில் பல ஆயிரம் குழந்தைகளுக்கு அடிப்படைக்கல்வி இல்லாத சூழலில், அந்த அடிப்படைக்கல்விக்கு செலவிடப்பட வேண்டிய பல ஆயிரம் கோடி ரூபாய் "இந்தியாவின் இராணுவ வலிமையை" நிலைநிறுத்த செலவிடப்படுகிறது. இந்தியாவில் ஆரம்பக்கல்விக்கு செலவிடப்படும் தொகையை இராணுவத்திற்கு செலவிடப்படும் தொகையுடன் கணக்கிட்டால் நான் கூற வருவது புரியும்.

அவ்வாறு பல ஆயிரம் குழந்தைகள் பள்ளிக்கு செல்ல முடியாமல் தங்களின் வாழ்கை தேவைக்காக மழலைப் பருவத்தை தொலைத்துக் கொண்டிருக்கும் சூழலில் பள்ளியில் படிக்கும் சில மாணவர்களுடன் பேசுவதும், கனவுகளை வளர்க்கச் சொல்வதும் வெறும் அடையாளப்பூர்வமான சம்பிரதாயமாகவே இருக்க முடியும்.

****

சிறுபான்மை இனத்தைச் சேர்ந்த, ஆனால் பெரும்பான்மை தேசியவாதிகளின் உணர்வுகளை பிரதிபலிக்கும் சிலருக்கு பவிகளை அள்ளித்தருவது எல்லா காலங்களிலும், நாடுகளிலும் நிகழ்ந்தே வருகிறது.

இந்தியாவில் சீக்கியர்கள் பிரிவினைவாதம் கோரிய பொழுது குடியரசுத்தலைவராக்கப்பட்டவர் சீக்கிய இனத்தைச் சேர்ந்த கியானி ஜெயில்சிங் (கியானி ஜெயில்சிங் ராஜ்வ் காந்திக்கு எதிராக மாறியது தனிக்கதை. இந்திய வரலாற்றில் ஜனாதிபதிக்கும், பிரதமருக்கு மிககடுமையான பனிப்போர் இருந்த சூழ்நிலை இந்தக் காலகட்டத்தில் தான் என்பதும் குறிப்பிடத்தக்கது)

இலங்கையில் சிறுபான்மை இனத்தைச் சேர்ந்த லக்ஷ்மன் கதிர்காமருக்கு இலங்கையின் பிரதமர் பதவியை கொடுக்குமாறு சிங்கள தேசியவாதிகளான ஜேவிபியினர் கூறியதையும் இவ்வாறே பார்க்க முடிகிறது.

****

ஒரு தமிழரான அப்துல் கலாமிற்கு குடியரசுத்தலைவர் பதவி கிடைக்காமல் திமுக சதி செய்வதாக ஜெயலலிதா மற்றும் பாரதீய ஜனதா கட்சியினர் கூறினார்களாம். இவர்கள் எல்லாம் "இந்தியர்கள்" தானே ? இப்பொழுது என்ன தமிழன் மீது திடீர் பாசம் :)

****
தொடர்புடைய கட்டுரை : அப்துல் கலாம் : கே.ஆர்.நாராயணன் - யார் சிறந்த குடியரசுத் தலைவர் ?


52 மறுமொழிகள்:

சிவபாலன் said...

Sasi

Excellent Post!

You are rightly pointed out.

But I have one question " Is it wrong to have strong force"?

5:16 PM, June 24, 2007
வெற்றி said...

சசி,
வழமைபோல் நல்ல அலசல். யதார்த்தமான, உணர்ச்சிவசப்படமால் ஆற அமர இருந்து சிந்தித்து எழுதிய பதிவு.

/* சிறுபான்மை இனத்தைச் சேர்ந்த, ஆனால் பெரும்பான்மை தேசியவாதிகளின் உணர்வுகளை பிரதிபலிக்கும் சிலருக்கு பதிவிகளை அள்ளித்தருவது எல்லா காலங்களிலும், நாடுகளிலும் நிகழ்ந்தே வருகிறது. */

நூற்றுக்கு நூறு உண்மை. அமெரிக்க வெளியுறவு அமைச்சர் Condoleezza Rice இதற்கு ஒரு நல்ல எடுத்துக்காட்டு என நினைக்கிறேன்.

/* இந்திய துணைக்கண்டத்தின் பல் வேறு தேசிய இனங்களின் தனித்தன்மையை "இந்தியன்" என்ற தட்டையான ஒரு வடிவத்தில் அடக்க முனைவதும் இந்திய தேசியவாதிகளின் தந்திரம். */

சசி, கவனம். மேலே நீங்கள் சொல்லியுள்ள கருத்துக்களை வைத்தே உங்களைத் "தேசத்துரோகி"
"தமிழின வெறியன்" என்று முத்திரை குத்திவிடுவார்கள். -:))

/* இலங்கையில் சிறுபான்மை இனத்தைச் சேர்ந்த லக்ஷ்மன் கதிர்காமருக்கு இலங்கையின் பிரதமர் பதவியை கொடுக்குமாறு சிங்கள தேசியவாதிகளான ஜேவிபியினர் கூறியதையும் இவ்வாறே பார்க்க முடிகிறது. */

ஜேவிபி இலட்சுமன் கதிர்காமரை பிரதமராகப் பரிந்துரைத்த போது, சிங்கள புத்த பிக்குகள் கடுமையாக எதிர்த்தனர். புத்த மதத்தைச் சாராதவர் ஒருவர் பிரதமராகக் கூடாது என விடாப்பிடியாக நின்றனர்.

இதே புத்த பிக்குகள், கதிர்காமர் இறந்த பின் இவர் "சிறிலங்கா மண்ணின் உண்மையான மைந்தன்" என நீலக்கண்ணீர் வடித்த நாடகமும் நடந்தேறியது.

5:57 PM, June 24, 2007
Mookku Sundar said...

//ஒரு தமிழரான அப்துல் கலாமிற்கு குடியரசுத்தலைவர் பதவி கிடைக்காமல் திமுக சதி செய்வதாக ஜெயலலிதா மற்றும் பாரதீய ஜனதா கட்சியினர் கூறினார்களாம். இவர்கள் எல்லாம் "இந்தியர்கள்" தானே ? இப்பொழுது என்ன தமிழன் மீது திடீர் பாசம் :-) //

சப்பாஷ்...!!! மேற்சொன்ன வரிகளை எழுத, அதற்கு முன் உள்ள அத்தனை வரிகளையும் எழுதி இருக்கிறீர்கள்.

எனக்குக் கூட கலாமிடம் தென்படும் சில முரண்பாடுகள் பிடிக்காது.தேசிய அடையாளத்தை பேணுவதற்காக அவர் எப்போதும் தமிழ் அடையாளாத்தை குறைத்தோ, துறந்தோ நான் கண்டதில்லை. பா.ஜ.கவின் இந்து மதச்சார்பினை கூர்மழுக்க அப்போது ஒரு துருப்புச் சீட்டாக பயன்படுத்தப்பட்டு ஜனாதிபதி ஆனவர்.

என்னைப் பொறூத்தவரை கலாம் ஜனாதிபதியாக ஆகாமல் இரூந்திருந்தால்கூட தமிழர்களால் தங்கள் இனத்தை சேர்ந்த அறிவாளி என்பதற்காக போற்றப்பட்டவேண்டியவர். தேசியம் மீது கவர்ச்சி உள்ள அத்தனை தமிழர்களையும் வெறுக்க வேண்டிவந்தால், விரும்ப மிச்ச சொச்சம் பத்துபேர்தான் தேறுவார்கள்..அவர்கள் தமிழர்களாக என்ன மாதிரி உண்ர்கிறார்கள் என்பதைப் போறுத்து நம் தீர்ப்புகள் அமைந்தால் அதில் கொஞ்சம் நியாயம் இருக்கும்.

9:02 PM, June 24, 2007
குழலி / Kuzhali said...

//இந்துத்துவவாதிகள் ஒரு "இந்திய முஸ்லீம்" இப்படித் தான் இருக்க வேண்டும் என்று அடையாளம் காட்ட நினைத்ததை விட அப்துல் கலாமிடம் அளவுக்கு அதிகமாகவே இந்துத்துவவாத தன்மைகள் காணப்பட்டன.

இந்திய முஸ்லீம்கள் இப்படியாக இருந்தால் தான் அவர்களை வலதுசாரி இந்துத்துவவாதிகள் "இந்தியர்களாக" ஒப்புக்கொள்வார்கள். கலாம் அவ்வாறு இருந்ததால் தான் அவர் "200% இந்தியராக" ஒப்புக்கொள்ளப்பட்டார். இந்திய முஸ்லீம்கள் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று கூறவே 2002ல் அவரை ஆதரித்த ஆர். எஸ்.எஸ், இன்றைக்கும் அவரை ஆதரிக்கிறது.
//
100% சரி...

//சிறுபான்மை இனத்தைச் சேர்ந்த, ஆனால் பெரும்பான்மை தேசியவாதிகளின் உணர்வுகளை பிரதிபலிக்கும் சிலருக்கு பதிவிகளை அள்ளித்தருவது எல்லா காலங்களிலும், நாடுகளிலும் நிகழ்ந்தே வருகிறது.

இந்தியாவில் சீக்கியர்கள் பிரிவினைவாதம் கோரிய பொழுது குடியரசுத்தலைவராக்கப்பட்டவர் சீக்கிய இனத்தைச் சேர்ந்த கியானி ஜெயில்சிங் (கியானி ஜெயில்சிங் ராஜ்வ் காந்திக்கு எதிராக மாறியது தனிக்கதை. இந்திய வரலாற்றில் ஜனாதிபதிக்கும், பிரதமருக்கு மிககடுமையான பனிப்போர் இருந்த சூழ்நிலை இந்தக் காலகட்டத்தில் தான் என்பதும் குறிப்பிடத்தக்கது)

இலங்கையில் சிறுபான்மை இனத்தைச் சேர்ந்த லக்ஷ்மன் கதிர்காமருக்கு இலங்கையின் பிரதமர் பதவியை கொடுக்குமாறு சிங்கள தேசியவாதிகளான ஜேவிபியினர் கூறியதையும் இவ்வாறே பார்க்க முடிகிறது.
//
உண்மை...
//ஒரு தமிழரான அப்துல் கலாமிற்கு குடியரசுத்தலைவர் பதவி கிடைக்காமல் திமுக சதி செய்வதாக ஜெயலலிதா மற்றும் பாரதீய ஜனதா கட்சியினர் கூறினார்களாம். இவர்கள் எல்லாம் "இந்தியர்கள்" தானே ? இப்பொழுது என்ன தமிழன் மீது திடீர் பாசம் :-)
//
ஹா ஹா ரசித்தேன்...

9:15 PM, June 24, 2007
கோவி.கண்ணன் said...

சசி ஐயா,

சிறப்பான ஆராய்ச்சி...உண்மை !

9:24 PM, June 24, 2007
Kannabiran, Ravi Shankar (KRS) said...

வித்தியாசமான அலசல் சசி!
பிம்பங்கள் அறிந்தோ அறியாமலோ...எந்த ஒரு மனிதரையும் சுற்றி எழுவது வாடிக்கை தான்.

அதுவும் ஒட்டுமொத்த சமுதாயத்தில் இருந்து சற்று வித்தியாசமானவராகத் தெரிந்தால் அது இன்னும் சீக்கிரம் உருவாக்கப்படும்! பின்னாளில் அவை உடைபடுவதும் உண்டு.

குழந்தைகள் மீதான கலாமின் பார்வை என்ற கருத்தில் மட்டும் தான் சற்றே மாறுபடுகிறேன்.
நகர்ப்புறக் குழந்தைகள் மட்டும் தான் கலாமின் கவனத்தைக் கவர்ந்தன என்று சொல்வது உண்மையன்று!
வேண்டுமானால் ஊடகங்களில் பரவலாக வரவில்லை என்று வேண்டுமானால் சொல்லுங்கள்!

ஆவ் என்ற குக்கிராமம், பாண்டா மாவட்டம், உ.பி.யில் இருந்த வந்த குழந்தைகளோடு உரையாடினார் கலாம். அதில் ஒரு சிறுவன் தாங்கள் ஒரு வகுப்பு மட்டும் தான் வந்திருப்பதாகவும், தங்கள் பள்ளியில் மேலும் முந்நூறு பேர் படிக்கிறார்கள். அவர்கள் எல்லாருக்கும் உங்களுடன் பேச ஆசை என்று சொன்னான்.

அடுத்த முறை அந்த மாநிலம் செல்லும் போது மறக்காமல் அந்தக் கிராமத்துக்கும் சென்று கலந்து பேசினார் கலாம். இது போல் பல கிராமத்து மாணாக்கர்களைச் சந்தித்து உள்ளார் என்பதைச் சொல்ல முடியும்.

எங்கள் கிராமமான வாழைப்பந்தல், வடார்க்காடு மாவட்டத்தில் இருந்தும் குழந்தைகள் கலாமைச் சந்தித்து உள்ளார்கள். கிராம மேம்பாடு பற்றியும் அதற்கான திட்டங்கள் பற்றியும், ஆசிரியர்களிடம் அப்போது கலந்து பேசினார் என்பதை என் சிற்றப்பா உட்பட அவர்கள் சொல்லியே நான் கேட்டுள்ளேன்!

9:54 PM, June 24, 2007
Machi said...

மற்ற எல்லோரையும் விட 'அப்துல் கலாம்' குடியரசுத்தலைவர் ஆவதற்கு\தொடர்வதற்கு தகுதியானவர் என்றே கூற வேண்டும்.
ஊடகங்கள் தங்களுக்கு தேவையான வகையில் சொல்கின்றன என்பதால் அவர் தவறானவர் ஆகிவிடுவாரா????

\\அலங்காரப்பதவியில் யார் இருந்தால் தான் என்ன ?\\
உண்மை. ஆனால் இந்த அலங்காரப்பதவியை பயன்படுத்தி மக்களுக்கு\மாணவர்களுக்கு அதிக செய்தியை சொன்னவர் யார்????

10:51 PM, June 24, 2007
தமிழ் சசி | Tamil SASI said...

அப்துல் கலாம் என்ற தனிப்பட்ட மனிதர் மீது எனக்குள்ள மரியாதையை நான் என்னுடைய பதிவில் தெளிவாக கூறியிருப்பதாகவே நம்புகிறேன்.

அதே நேரத்தில் அவரைச் சார்ந்து எழுப்பபட்ட இந்திய தேசியவாதம், இந்தியாவின் இராணுவம் சார்ந்த Hegemony இவற்றை தான் நான் சாடியுள்ளேன். அப்துல் கலாம் கூட பல நேரங்களில் அவ்வாறான இந்திய இராணுவம் சார்ந்த வலிமையை முன்நிறுத்தியுள்ளார் என்பதும் எனது கருத்து.

சமீபத்தில் ஒரு பேட்டியில் ஷோபா சக்தி "தேசிய உணர்ச்சியை விட வயிறு வலிமையானது" என கூறியிருப்பார். நானும் அதைத்தான் கூற நினைக்கிறேன். இந் நாட்டில் பல ஆயிரம் குழந்தைகளுக்கு அடிப்படைக்கல்வி இல்லாத சூழலில், அந்த அடிப்படைக்கல்விக்கு செலவிடப்பட வேண்டிய பல ஆயிரம் கோடி ரூபாய் "இந்தியாவின் இராணுவ வலிமையை" நிலைநிறுத்த செலவிடப்படுகிறது. இந்தியாவில் ஆரம்பக்கல்விக்கு செலவிடப்படும் தொகையை இராணுவத்திற்கு செலவிடப்படும் தொகையுடன் கணக்கிட்டால் நான் கூற வருவது புரியும்.

அவ்வாறு பல ஆயிரம் குழந்தைகள் பள்ளிக்கு செல்ல முடியாமல் தங்களின் வாழ்கை தேவைக்காக மழலைப் பருவத்தை தொலைத்துக் கொண்டிருக்கும் சூழலில் பள்ளியில் படிக்கும் சில மாணவர்களுடன் பேசுவதும், கனவுகளை வளர்க்கச் சொல்வதும் வெறும் அடையாளப்பூர்வமான சம்பிரதாயமாகவே இருக்க முடியும்.

இங்கு நான் வைத்திருக்கும் விமர்சனம் அப்துல் கலாம் என்ற தனிப்பட்ட மனிதர் மீதானதாகவே பலர் பார்த்துள்ளார். ஆனால் அவரை முன்நிறுத்தியவர்களை, அவர்களின் தேசியவாதத்தை, இந்தியாவின் வலிமையை முன்நிறுத்தி ஏழ்மையையும், பிற வேறுபாடுகளையும் மறைக்க முனையும் தந்திரங்களையே விமர்சித்துள்ளேன்.

அப்துல் கலாம் குறித்து நாம் உணர்ச்சிப்பூர்வமாக பார்ப்பதால் அவர் பின்னே அணிவகுத்திருக்கும் அரசியல் குறித்து நாம் தெளிவாக கவனிப்பதில்லை

அனைவரின் கருத்துகளுக்கும் நன்றி

11:59 PM, June 24, 2007
Unknown said...

Hi Sasi,

I haven't read your other posts..So I dont have any pre assumption about you. But your analysis in this blog is completely false. Probably because you are sitting in US you dont know the real facts happening in TN and your are just talking based on the information you have about Abdul Kalam.

The tag of Hindu - Muslim around ABJ is false. He is aprt from those. I would like to tell you onething I am proud to be a Tamilzhan as well as I am proud to be an Indian. If you dont want to be an Indian why you want to be a Tamizhan, I would better be a Tirunelveli Tamizhan then I can divide and confine myself to my family saying I am just a father I dont want share any kind of common feelings even whth my neighbours...

Please dont divide us like this. I belive these of your thoughts would have come to you becoz of u r love towards eelam Tamils. Even I pity them. But until and unless they give up LTTE its impossible to help them as an Indian Tamil.

Whats wrong in adding Military force...? one day if some british come and occupy you what will you do..? Atleast now you have right to vote any people you want..Can you just tell in which passport you went to US..? How do you introduce yourself to other US guys...As an Indian or Tamizhan..dont throw stone from glasses.

1:01 AM, June 25, 2007
பூனைக்குட்டி said...

அமேரிக்காவில் உட்கார்ந்துகொண்டு, 200% இந்தியர் கலாம் என்று சொல்வதை ஒப்புக்கொள்ள முடியாது. இதே ஒரு விஷயத்தை இந்தியாவில் இருந்து கொண்டு சொல்லியிருந்தால் ஒப்புக்கொண்டிருப்பேனோ என்னமோ தெரியாது.

இங்கே எல்லோரும் ஒவ்வொரு முகமூடியை அணிந்து கொண்டு தான் வாழ்ந்துகொண்டிருக்கிறோம்.

உங்களுக்கு ஒரு அமேரிக்க முகமூடி எப்படி தேவைப்படுகிறதோ அதைப் போல கலாமிற்கு ஒரு தேசியவாத முகமூடி தேவைப்பட்டிருக்கலாம்.

நீங்கள் அதைச் சரியாகச் செய்வதைப் போல் அவரும் சரியாகச் செய்திருக்கலாம்.

---------------------

எப்படி உங்களுக்கு கலாமின் மீது தனிப்பட்ட மரியாதை உண்டோ அதைப் போலவே உங்கள் மீதும் தனிப்பட்ட மரியாதை எனக்குண்டு. ஆனால் முகமூடிகள் பற்றி பேச வேண்டிவந்ததால் நாம் பலவண்ண நிறங்களுடன் அணிந்துகொள்ளும் முகமூடிகளைப் பற்றி பேச வேண்டி வந்தது.

2:32 AM, June 25, 2007
லொடுக்கு said...

// காலை எழுந்தவுடன் அவர் படிப்பது "பகவத் கீதை". ஆனாலும் குரான் படித்து தொழுகை செய்யும் முஸ்லீம். இந்துத்துவவாதிகள் ஒரு "இந்திய முஸ்லீம்" இப்படித் தான் இருக்க வேண்டும் என்று அடையாளம் காட்ட நினைத்ததை விட அப்துல் கலாமிடம் அளவுக்கு அதிகமாகவே இந்துத்துவவாத தன்மைகள் காணப்பட்டன.

இந்திய முஸ்லீம்கள் இப்படியாக இருந்தால் தான் அவர்களை வலதுசாரி இந்துத்துவவாதிகள் "இந்தியர்களாக" ஒப்புக்கொள்வார்கள். கலாம் அவ்வாறு இருந்ததால் தான் அவர் "200% இந்தியராக" ஒப்புக்கொள்ளப்பட்டார். இந்திய முஸ்லீம்கள் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று கூறவே 2002ல் அவரை ஆதரித்த ஆர். எஸ்.எஸ், இன்றைக்கும் அவரை ஆதரிக்கிறது.
//

உண்மை உண்மை.

//ஹிந்துக்கள் என்றால் 100% இந்தியராக இருந்தால் போதுமானது. முஸ்லீம்கள் என்றால் 200% இந்தியராக இருந்தால் தான் ஒப்புக்கொள்வார்கள் என்றார்//

முஸ்லீம்களுக்கு இருக்கும் ஒரு இக்கட்டான சூழ்நிலை இது.

//ஒரு தமிழரான அப்துல் கலாமிற்கு குடியரசுத்தலைவர் பதவி கிடைக்காமல் திமுக சதி செய்வதாக ஜெயலலிதா மற்றும் பாரதீய ஜனதா கட்சியினர் கூறினார்களாம். இவர்கள் எல்லாம் "இந்தியர்கள்" தானே ? இப்பொழுது என்ன தமிழன் மீது திடீர் பாசம் :-)//

பஞ்ச்.

3:41 AM, June 25, 2007
லக்கிலுக் said...

அரசியல் கட்சிகளால் கைப்புள்ள ஆக்கப்பட்ட அப்பாவி அப்துல்கலாம் என்பது என் எண்ணம்!

3:47 AM, June 25, 2007
╬அதி. அழகு╬ said...

சசி,

மிக‌ மிக‌ அற்புத‌மான‌ அல‌ச‌ல் ப‌திவு, வாழ்த்துக‌ள்!

அப்துல் கலாம் என்ற விஞ்ஞானி, குடியரசுத் தலைவராக உயர்வதற்குத் தேவைப் பட்ட மிக முக்கியமான சில விஷயங்களை எழுத மறந்து விட்டீர்கள் என்று நினைக்கிறேன்:

அவர் புலால் உண்ண மாட்டார்; சைவ உணவுதான் உண்பார்.

அவருக்குக் ஆரம்பக் கல்வி கற்பித்தவர் ஒரு பிராமணர்.


காஞ்சி ம‌ட‌ம் சென்று சாமிக‌ளின் காலைத் த‌ன் த‌லையில் வைத்து ஆசி பெற்றிருக்கிறார்.

தான் ஒரு முஸ்லிம் என்று ம‌ற‌ந்தும் சொல்லிவிடாம‌ல் க‌வ‌ன‌மாக‌ இருப்பார்.


நீங்க‌ள் தெரிவித்துள்ள‌ ஒருநாளைக்கு இர‌ண்டு வேளை(?) தொழுகை புரிவார் என்ற‌ செய்தியின் த‌ன்மையை நீங்க‌ள் உறுதி செய்ய‌ இய‌லுமா?

ஏனெனில், தொழுகை வழக்கமுடைய முஸ்லிம்கள் ஒருநாளைக்கு ஐந்து வேளைகள் தொழுவர்.

8:16 AM, June 25, 2007
மருதநாயகம் said...

திரு.கலாம் அவர்களை வைத்து சிலர் அரசியல் செய்வதைப் பார்த்தால் தேரை இழுத்து தெருவில் விட்டு வேடிக்கை பார்ப்பது தான் நினைவிற்கு வருகிறது

9:15 AM, June 25, 2007
aathirai said...

inconvenient truth.

அப்துல் கலாம் சில நிமிடங்களில் லட்சக்கணக்கானவர்களை
பஸ்பமாக்கக்கூடிய இந்தியாவின் அணுஆயுத வல்லமையின்
அடையாளம்.

இது பெருமைப்பட கூடியதா?

9:44 AM, June 25, 2007
குட்டிபிசாசு said...

நல்ல அலசல்! அருமையான இடுகை!! வாழ்த்துக்கள்!!!

2:06 PM, June 25, 2007
மயிலாடுதுறை சிவா said...

சசி

வழக்கம் போல் நல்ல கட்டுரை உங்களிடம் இருந்து...

தன்னுடைய 5 ஆண்டுகால ஆட்சியில் இவர் இன்னும் கொஞ்சம் ஏதாவது செய்து இருக்கலாம் என்பது சிலரின் எதிர்பார்ப்பு.

2020 - நிலாவில் ஓர் இந்திய பிரஜை காலடி வைக்கவேண்டும் சொல்லும் கலாம், 2020 இந்தியாவில் முழுக்க குடி தண்ணீர், மின்சார வசதி, பள்ளிகூட வசதி, அனைவருக்கும் கழிப்பட வசதி என ஆளும் அரசிற்கு வேண்டு கோளோ அல்லது பரிந்துரையோ செய்து இருக்கலாம்...

மயிலாடுதுறை சிவா...

2:39 PM, June 25, 2007
தனசேகர் said...

ஒட்டு மொத்த மக்களின் கருத்துக்கு எதிராக ஒரு வித்தியாசமான அனுகுமுறையுடன் உங்கள் பதிவு ..
இந்த வித்தியாசமான பார்வைக்கு வாழ்த்துக்கள்..

ஆனால் நான் உங்கள் கருத்துக்கள் அனைத்தயும் என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அவர் குடியரசுத்தலைவராக கொண்டுவரப்பட்டது என்னவோ தொங்கு அரசியலில் எதிரணியும் ஆதரிக்கக் கூடிய ஒரு வேட்பாளர் என்ற முறையில்தான். ஆனாலும் அவருடைய ஐந்து வருடப் பணியில் அவர் நடு நிலையாளராகவே இருந்துள்ளார் என்பது என் கருத்து.(எ.கா. ஆதாயம் தரும் பதவி மசோதாவை திருப்பி அனுப்பியது .. )

அவர் பாதுகாப்பு மற்றும் இராணுவத்திற்கே முன்னுரிமை கொடுத்தார் என்பது தவறு. அவர் அனைத்துத் துறையிலும் தன்னிறைவு அடைவதே குறிக்கோளாகக் காட்டியுளார். முக்கியமாக எரிசக்தி , மின்சாரம் முதலிய துறைகள். எடுத்துக்காட்டாக அவர் கல்லூரி விழாவில் பேசிய உரை.


http://ansit.wordpress.com/2007/01/30/dr-abdul-kalam-on-convergence-of-technologies-and-world-knowledge-platform/

அதில் அவர் இராணுவ பலத்தை முன்னிருத்துவதை விட தன்னிறைவையே முன்னிருத்துகிறார்.
அதில் இராணுவமும் ஒன்று. நாம் இராணுவத்துக்கு ஒதுக்கும் நிதியில் வெளிநாட்டில் ஆயுதம் வாங்கவே அதிகம் செலவு செய்கிறோம். அப்படியிருக்க நாம் இராணுவத்திலும் தன்னிறைவு அடைய வேண்டும் என்பது தவறில்லையே ??

12:19 AM, June 26, 2007
தமிழ் சசி | Tamil SASI said...

மறுமொழி மூலம் கருத்துகளை பகிர்ந்து கொண்ட அனைத்து நண்பர்களுக்கும் நன்றி...

அப்துல் கலாம் குறித்து இன்னும் கூட விரிவாக பேசலாம். அவர் புத்தகங்கள் குறித்து, இந்தியாவிற்கான அவரது கனவுகள் குறித்து என நிறைய பேசலாம்...

2020க்கான அவரது கனவு நினைவாக இன்னும் 13 வருடங்களே உள்ளன. அவரது கனவுலகில் வாழப்போகும் அனைவருக்கும் என் வாழ்த்துக்கள் :-)

1:05 AM, June 26, 2007
மு மாலிக் said...

Good post. Kalam is also a kind of introvert in my opinion. He hesitate to take important actions Or make his view knownto everyone during crucial developements in our country. Some time he make decision to be meak at the books of those who favoured him. An example is Gujarath. While the slaughterings were going for weeks, Kalam commented that the law-and-order was proper.

He had made numerous attempt to appease rightwing, as said by you: He claimed to be a devotee of Ram, a vegetarian, a player of veena, etc.

While the image built-up by media and rightwing politicians around him was fake, as pointed out by you, it infact had impact on him more than anyother common man. He wanted to protect those image by tailoring his speeches around the country very glamoursome by talking non-practical stuffs often praising unworthy developements that would benefit few who favoured him. I remember, during his visit to IISc, my friend commented: I am not interested to hear his expression of his 'twenty twenty' dreams.

3:36 AM, June 26, 2007
Unknown said...

The ability of an Indian President is restricted. But Adbul tried to use it at its max.

He met lots of children and feed fire to younters to grow INDIA better and faster. Only this made him to become a "People's President".

He never used the power for his self development. This fact is enough to accept "Jem of a person"


Be INDIAN! JAI HIND !!

Also, I would like to know who are all "Thamizhan"

Is it those who speaking tamil from birth? or WHAT ??? I had this question in my mind very long before.

9:12 AM, June 26, 2007
ஜடாயு said...

அப்துல் கலாம் என்ற மாமனிதரைச் சிறுமைப்படுத்தி, அவரை அவமதிக்கும் பதிவு இது.

அப்பட்டமான இந்திய தேச விரோதத்தை மிகவும் சாமர்த்தியமான, அலங்கார வார்த்தைகளில் பொதிந்து தந்திருக்கிறார் சசி, அவ்வளவு தான். இந்தப் பதிவைப் படிக்கும் இந்தியத் தமிழர்களே! இதைச் சரியாகப் புரிந்து கொள்ளுங்கள்.

எந்த தேசம் பலமிக்க ராணுவ ஆற்றலை முன் நிறுத்தாது? எந்த தேசம் தன் தேச ஒற்றுமைக்கு உரம் சேர்க்கும் தேசியவாத அடையாளங்களையும், சாதனைக் கனவுகளை இளம் நெஞ்சங்களுக்கு ஊட்டும் பெரும் தலைவரையும் விரும்பாது? இதைச் செய்வதற்காகவே ஒரு நாட்டு மக்கள் குற்ற உணர்வு கொள்ள வேண்டும் என்பது போலக் கூறுபவர்கள் அந்த தேசத்தின் நலம் விரும்பிகள் அல்ல, எதிரிகளே.

இது தொடர்பான அரவிந்தன் நீலகண்டனின் அருமையான பதிவு -

"அழு என் தேசமே!" -
http://arvindneela.blogspot.com/2007/06/blog-post_25.html

9:24 AM, June 26, 2007
Santhosh Selvarajan said...

You stupid Fellow how dare you say கலாம்:
"தேசபக்தியை அப்படி எந்த விதத்தில் வெளிப்படுத்தி இருந்தார் என்பது எனக்கு புரிந்ததேயில்லை". ராடன் டாடாவிடம் என்ன நல்ல பண்பு இருந்தது என்பதற்கு சமம். Everybody does their best, you stupid if you can't do anything best in your life why are making criticism on national leaders to get FAULT FAME....?


I can clearly undrstand your intention by saying that " I accept him a good person form his presonal life" and also following that crticising that he prays 2 times (நரி மாதிரி இகழ்ச்சி செயிதல்), He writes in books about vision that not enough for national leader, Media created a hype..!!

So why can't you critise your mother...? What best she has done to the world other than
creatnig a junk fllow like you...!!!

Tell who else will you admire in the world...? Hitler..?

1:22 AM, June 27, 2007
Unknown said...

Sasi,

A different analysis..and the way you have projected your views is beautiful.

I disagree with many of your views.

Is accepting good things/principles from all religions a mistake?Dr.kalam was born in a Muslim family but he had many interactions with Hinduism from his early childhood days.So reading and learning good things from Hinduism in a secular country cannot be faulted.He has always projected himself as a spiritual person rather than a religious person.He had recommended 'Thirukkural' as a must read for all youngsters.He had given an option on "The Qaran" to read.

Being Spiritual is always better than being religious.

I feel that this analysis is not on Dr.Kalam..it speaks more of the reasons why he was supported by NDA.

I wonder that even being simple,not money minded,inspiring & motivating others(infact it's many..and that too young minds) on path to wellnes and goodness is also being looked with negative motives..."KuttRam kandu pidithey paer vaangum pulavar"ngra maathiri...

I dont know whether he had never visited rural school children..but he had interacted with many students of rural colleges...And rural colleges you can see students from various economic classes ..

Being in a society ruled & lived by hypocrites,it's hard to see such good personalities.Even if we see such persons, identifying mistakes(if any) by them and blowing it big is usual.

Name a good noble,politician in India in the recent past..you will have to think loooong to end up with no answer.

Bharathi was ridiculed by this society in his times;Jesus was killed;Gandhi & Lincoln were assasinated;Periyar was betrayed by his followers;..hmm..it seems there will not be an nd to this list...

So posts like this is nothing new to our society..

3:04 AM, June 27, 2007
nayanan said...

அப்துல் கலாம் ஒரு உழைப்பாளி.
அடித்தளத்தில் இருந்து நேர்மையாக மேலே ஏறும் அறிவாளி மற்றும் உழைப்பாளிக்கு இயல்பாக இருக்கக் கூடிய அப்பாவித் தனம் நிரம்பியவர்.
அந்த அப்பாவித் தனத்தாலேயே தராதரம் கெட்ட மடங்களிலே கூட போய் தரமற்ற ஆசிகளைப் பெற்று
வந்தார்.

இவரைப் போன்ற சாதனையாளர் வேறெவெரேனும் இப்பதவிக்கு வந்திருந்தால் குடியரசுத் தலைவர்
மாளிகையை மசூதியாக ஆக்கியிருப்பார் அல்லது வெங்கடராமன் செய்ததுபோல சங்கர மடமாக ஆக்கியிருப்பார்.

அந்த மாதிரியான தலைக்கிறுக்கு
இல்லாமல் நல்ல மனிதராக இருந்த
அவரைப் பாராட்டவே வேண்டும்.

பகவத்கீதையை சாட்சிக்கு வைத்துவிட்டு
அதுவே இந்திய மதநூல் மற்றும் ஆன்மீக நூல் என்று அழிச்சாட்டியம் செய்யும் வைதீகர்களோடு இவரும்
குழலை ஊதி நின்றது மட்டுமே அவரின்
குறையாக நான் காண்கிறேன்.

"நான் ஆன்மீகத்தைச் சேர்ந்தவன் - மதத்தைச் சேர்ந்தவன் அல்ல" என்று
அவர் சொன்னது வாழ்த்தப் படவேண்டிய ஒன்று.

ஆனால், ஆன்மீகத்தைத் தேட அவர்
எடுத்துக் கொண்ட வைதீகக் கருவிகள்
பிழையானவை. ஏனெனில் ஆன்மீகத்துக்கும் வைதீகத்துக்கும் தொடர்பே கிடையாது.

தமிழ்ச்சைவர்கள் கூட, சைவம் என்ற பெயரில் வைதீகத்துக்குப் பல்லக்குத் தூக்கிப் பிழைப்பை ஓட்டிக் கொண்டிருக்கும் பிழையைச் செய்கையில் இசலாத்தைச் சேர்ந்த இவரின் பிழை பொருட்படுத்தப் படவேண்டிய ஒன்று அல்ல.

இசலாத், வைதீகம் என்ற இரண்டையும்
புறந்தள்ளிவிட்டு, அப்துல்கலாமை
சிறந்த மனிதராக மட்டுமே காணவேண்டும்.

அன்புடன்
நாக.இளங்கோவன்

11:40 AM, June 29, 2007
Raveendran Chinnasamy said...

If you can write you can write against India ? I have sympathywith srilankanTamils but that doesnt tranlate against India and Nationalism.


Wording are great but you should not pour mud against the great Person.

I Belive he is better than others.

10:56 PM, June 29, 2007
Pot"tea" kadai said...

Good one mate!

***
lots of new kids in the the block , hey!

:))

3:11 AM, June 30, 2007
திருவடியான் said...

இந்தியாவின் முதல் குடிமகனை விமர்சித்திருக்கத் தேவையில்லை என்பது எனது கருத்து.

அப்துல் கலாம் என்ற தனிநபரை விமர்சிப்பதாக நினைத்துக் கொண்டு தற்சமயம் இந்தியாவின் மிகப்பெரிய பதவியான ஜனாதிபதி பதவி வகிக்கும் ஒருவரை நீங்கள் விமர்சித்திருக்கிறீர்கள். யாரையும் விமர்சிக்கலாம் என்பது இந்திய ஜனநாயகத்தின் வலிமை. அதே சமயம் வலிமையை தவறாகப் பயன்படுத்தாமல் இருக்கும் பொறுப்பும் ஒவ்வொரு இந்தியனுக்கும் இருக்கிறது.

1:43 PM, July 02, 2007
Vetirmagal said...

Sir,
A good Post . Nice to note that many people are not ga ga over Abdul Kalam, but question his much touted capabilities.

One question remains troubling:

why did he not take up developmental activiteis or encourage developmental projects for the minorities?. He had resources at his disposal, he could have subtly favoured those people who really wanted to uplift certain communities which are backward?. He knows edcuation is the key for upliftment. How come he never questioned about the poor educational standards in the Govt.Schools all over the country? There are NGOs who are doing what little they can sincerely. He could have identified them and given his tacit help.

Even now when you look at the poor and uneducated, there are so many in the minority communites who are rotting in ignorance and poverty. Even now if he wants, he can do things or get them done..

When a District Collector could do Things for Tsunami vitims, why not the Ex-President? (People's President ?)

Or he has done things in these areas but not publicised the good work?

1:38 AM, August 03, 2007
thiru said...

சசி அருமையான பதிவு! நீண்ட நாட்களாக எழுத நினைத்த ஒன்று.

அப்துல்கலாமுக்கு பிடித்த இன்னொன்றும் உண்டு. அது தேவபாஷை. இதுவரை இருந்த புனிதபிம்பங்களான காந்தி, நேரு, இராஜேந்திர பிரசாத் என பலரது பிம்பம்களை சேர்த்து குழைத்து அப்துல்கலாமுக்கு புனித வட்டம் கட்டியிருக்கிறார்கள் வலதுசாரிகளும், ஊடகங்களும். கனவு காணுங்கள் என்று கஞ்சிக்கு வழியில்லாதவனுக்கு சொல்லிக்கொண்டே வல்லரசு, வல்லரசு என முழங்கியவர் பாவம் நல்லரசு தான் இன்றைய தேவை மறந்துவிட்டார். சாமியார்களின் காலடியில் விழுந்து எழுந்தால் தான் அணுவிஞ்ஞானியாக இருப்பினும் அப்துல்கலாம் பெயர் நீடிக்க முடியுமென்பதை அறிந்து செயல்பட்டவர். பசியால் வாடுபவனுக்கு சாப்பாட்டு தட்டில் யுரேனியமா கொடுக்க இயலும்?

சாதாரண குடும்பத்தில் பிறந்த அவரது தனிப்பட்ட வளர்ச்சி பாராட்டத்தக்கது தான். ஏவுகணை மற்றும் அணுஆயுதம் உருவாக்கியதில் அப்துல்கலாம் மட்டும் தான் ஈடுபட்டது போன்ற ஒரு தோற்றம் உருவாக்கப்பட்டது அதற்காக உழைத்த மற்றவர்கள் இல்லையா என்ற கேள்வியும் எழுகிறது.

8:56 AM, August 03, 2007
meltronics said...

sasi

kalam is not oly "a father of agni". he was a role model for the president of india. i never seen any prseidents like him. after 25/09/2007 he back to his ulma matter. i watched him very closely. saying any thing from united states is very easy. he returned from rastrpathi bhavan with oly two bags. but after two days, the rooms in bhavan was filled by sons,grand sons,and relatives of current president.
really kalam is a gentle Man

2:33 AM, February 02, 2008
yummy-mummy said...

sasi, this post makes an interesting read. you allege that kalam has been " made " president for wrong reasons to satisfy the hindutva ideals of some. and that he is accepted and admired only because of his " hindutva " ideals.
now, does it matter if he was chosen for the " wrong " reasons to be president, when he is able to generate hope and inspiration among our people ?
of all people you should know that rolemodels in our country are few and far between.
people are idolizing movie stars and actors. ( not that i have anything against actors )
why should they not idolize someone like kalam, who has risen to this position, atleast that of a nuclear scientist, is not that of a president, based on his merit ?
do you want to take away one of very few decent rolemodels that we have ?
so what if he is accepted by the hindutva gang ? just because those perverts endorse him does that automatically mean that the rest of us should reject him ? that is not fair...
his words have inspired me endlessly and made me believe in myself, and the system to some extent, that if you do the right thing you may get there eventually even if it takes time.
do you want to take away even the littlest source of hope that our kids from the lower and middle classes ?
so what if he said he reads the bhagvat gits everyday ? what would you have been your reaction if he had said that he reads the Koran everyday ? would that be acceptable for him to say ?
the presidency in our country is a useless post, it should be gotten rid of. and for people to exepect kalam to do anything useful would be prepostrous.
so what if he is just there for display ? i say if it does any good, especially for the younger generation, then let him be.
we have a lot os vices in our society, hindutva included. but crucifying kalam is not going to solve that issue.

9:32 PM, April 14, 2008
தமிழ் சசி | Tamil SASI said...

yummy-mummy,

In today's Media dominated world, role models are created, projected and maintained by the Media and establishment. When Media and establishment creates a role model, they create them carefully to ensure that their Agenda is satisfied. They carefully avoid someone who does not toe their line. Since Adbul Kalam tried his best to satisfy the establishment's agenda in every possibe way, he was projected as a role model.

That's how you got Abdul Kalam as a role Model.

He was one of the best role models because, he was from a ordinary family from a remote part of Tamil Nadu who went on to become a nuclear scientist to project India as the next super power in the world. What else the establishment and Media can bargain for ? They can show him as a role model so every ordinary men and women of this country will aim to become like another Abdul Kalam and will support a strong "Hindutva" India.

You Said, we don't have much role models ? No, we have many role models. Even among the Indian Rubber stamp presidents there are role models. Among the Indian Presidents, i too have a Role model. His Name is K.R.Narayanan. Born as a Dalit and Poor in Kerala, discriminated by caste he went on to become the President of India. After becoming President he did not forget the roots from where he came. He used his limited power as Rubber stamp of this country to raise his voice for the Dalit people. He made protests when Supreme court Judge positions were not given to Dalits. He voiced against the Mass Genocide of Muslims in Gujarat.

What's the Result ? He was dumped by Media. That's why you don't get K.R.Narayanan role Model. Media will never ever project these people as role models.

Please read my comparison - அப்துல் கலாம் : கே.ஆர்.நாராயணன் - யார் சிறந்த குடியரசுத் தலைவர் ?


I am not rejecting Abdul Kalam just because Hindutva group is supporting him. I reject him because he toe's Hindutva line. Abdul Kalam bows to Hindutva groups to satisfy them. I don't have any problem if he reads Bhavat Gita, Bible or Kuran. I am only critizing the way he projected himself as being a Hindu-Muslim to satisfy his Hindutva masters

I agree Indian Presidents are Rubber Stamps. No where in my article, i have said that he could have done something Magic. What I am saying is he was projected for wrong reasons.

Many people keep saying that he created lot of inspiration among Children and Youth ? What kind of Inspiration it is ? As he loves Children, I would have been happy if he created some kind of awareness about Child Labours. He could have created awareness about proper rural education in this country. He could have created awareness about different discriminations in this country so that people can treat each other equally. He could have created awareness about Global Warming like Al Gore is doing.

But what did he do ? He created awareness that India can be made Super Power by creating Bombs and Missiles. Is it a Inspiration when people are dying due to Poverty ? When farmers commit suicide as they could not earn their living ? When many children does not have proper primary education ? When rural India does not have proper drinking water ?

Since he created a wrong Inspiration, we should crucify Abdul Kalam :)

Thanks for your comments...

11:33 PM, April 16, 2008
SnackDragon said...

Sasi,

Do not worry :-)

Abdul kalam is is the number one in my cricyfication list

4:20 PM, May 02, 2008
Santhosh Selvarajan said...

My comments about APJ:

Only + he vae is his hard work and dedication towards work. There are 1000 of Jawans Lacks of Train Drives and 1000 of doctor who are should be appreciated for their excellence. BUT HIS FEILD IDS UNIQUE FOR THAT HE GOT OVERWHELMING RESPONSE.

Next what you might be said are He haven't done anything only provided speech. I too aree to a extent but For a hard working fellow thats what intiation he can do, nothing else.

8:43 AM, July 17, 2008
நரேன் said...

திரு சசி,

இந்த கட்டுரையை நினைத்தால் சிரிப்புதான் வருது !

கம்யூனிஸ்ட்கள் எழுதிய கட்டுரைகளை நன்கு படித்து எழுதிவைகள்!

இதில் ஆழ்ந்த் சிந்தித்து எழுதிய கட்டுரை என்று புகழாரம் வேறு.

கோடிக்கணக்கில் பணம் கொட்ட தயாராகஇருந்த வெளிநாடுகளுக்கு செல்ல உறுதியுடன் மறுத்து! தன் வாழ்கையை இந்தியாவிற்கு கொடுத்து கொண்டிருக்கும் தலைவனை!

அமெரிக்கனுக்கு விளக்கு பிடிக்கும் நீங்கள் விமர்சனம் பண்ண உரிமை இல்லை.


தயவு செய்து கம்யூனிஸ்ட்கள் புத்தகங்களை மறந்து விட்டு ! அவரை பற்றி நன்கு அறிந்துகொண்டு விமர்சனம் செய்யுங்கள்.


நீங்கள் எழுதிய இந்த கட்டுரையில் துளி கூட உண்மை இல்லை என்பதை என்னால் ஆதாரத்துடன் எழுத முடியும்.

11:03 AM, February 07, 2009
காரூரன் said...

சசி,
மிகவும் ஆழமான ஆய்வுள்ள கட்டுரை. ஒரு இனம் ஒடுக்கப் பட்ட இனம் என்ற முனைப்பு இருக்கும் போது 100% மேல் தகுதியுடையவர்களாக இருக்க வேண்டும் என்ற முனைப்பு உலகெல்லாம் இருக்கின்றது. அப்துல் கலாம் கிராமத்து தமிழ் பள்ளிக் கூடங்களில் படித்து இந்தியாவிற்கு முன்னூதாரணமாய் இருப்பதையிட்டு எல்லோரும் பெருமைப் பட வேண்டும்.

11:30 AM, February 08, 2009
manmadhan said...

sasi ungalamadhiri adhimedhaviga erukkaradha nalathan indhiya urupada matengudhu abdul kalam patthi pesuriya unakku anna thaguthi erukku ne anna senju kilichirukka ne comunist thane hindhuthuva kolgaina unakku anna nu theriyuma veetla po soru poduvaanga nalla thinnuttu padu ennoru time yelathadhe...................

2:13 PM, October 22, 2009
Anonymous said...

Each and every thing on the earth(including human)(not only on the earth beyond this)has that's own + ves and - ves.no one is perfect.most of us haven't got the mentality to digest all things.

3:25 AM, October 24, 2009
Anonymous said...

Seems that you have a fixation about Kalam in the negative sense. He had his faults, after all he was a human being like us. He need not have aspired for the second term thereby diminishing his stature. That was unfortunate. He had a right to his own views, and by and large, he tried to something for everyone in his limited capacity in an ornamental Post.


Everyone has a right to criticize and you have a right to your views. He was above all a person of integrity, He did not practise nepotism, and nor did he allow his relatives to misuse his name. Isn't that something in today's world? He is not the villian you have made him out to be. When he found that he had raised a needless controversy by inaugurating a statue of Veer Savarkar in the Parliament, he decided that he would not henceforth unveil any statue of political leaders. He did try many things like withholding asset for the Office of Profit bill, encouraging digitization of Indian litreature, encouraging use of Open Source software etc. He was not the kind of Hindutva stooge that you are making him out to be. That is a harsh judgement.

May be you would have sung a different tune if he had professed his " ardent admiration " for people like Periyar and the " Dravidian movement ". You cannot admire a person individually and then criticize him harshly on another account. That is all hogwash, as the Americans say. Your article is heavily slanted and biased by your own prejudices.

Name a celebrity and there are numerous self proclaimed critics. Even Sachin Tendulkar is criticized harshly. I guess it is the mentality of some people to attack and criticize people who are famous, probably because, deep down they have a resentment for their achievements as compared to their own failures. I guess that you are one of those people.

11:15 PM, December 10, 2009
Anonymous said...

You are bloody idiot to compare the post of a president the highest post of a constitution to a post of condelazza rice.

You watch the Gandhi film again carefully. When MKG says Jinnah to be the PM , JLN and SP says people wont accept. When media was weak this was the situation. But with Kalam even shiva sena did not object.

Smart talking is different from smartness. you are the one in a Dravidian mold. Trying to compare a rat and a tiger that both got four legs, one tail and listing longer both are same animals.

Learn to differentiate , appreciate then start commenting

5:48 AM, February 10, 2010
Anonymous said...

really it's a nice one....

1:30 AM, February 15, 2010
Unknown said...

Sasi,

You are an Idiot. You would blame everybody in the world. Dr Kalam is a very nice person I ever seen.

Go to Sri Lanka(A cursed country in the world).

7:37 PM, May 14, 2010
Anonymous said...

நீங்கள் ஒரு சோனியா காந்தி பக்தர்
என்றே நினைக்கிறேன்.அப்துல் கலாமைப் பழிக்கும் நீங்கள் மன்மோகன்சிங்கைச் செயல்வீரர்
என்பீரோ?

2:53 PM, August 30, 2010
Anonymous said...

சசி அவர்களுக்கு .,

வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ என்று எழுதக்கூடாது. அப்துல் கலாம் போன்றவர்களை விமர்சனம் செய்யும் முன் உங்களை சுயவிமர்சனம் செய்துகொள்ளுங்கள். கடைகோடியில் இருக்கும் உங்கள் இனத்தவனுக்கு முதலில் நீங்கள் என்ன செய்தீர்கள்?. அப்துல் கலாம் நகர்புற பள்ளிக்கு மட்டுமே சென்றார் என்றல் அவருக்கு அழைப்பு அங்கிருந்து மட்டுமே வந்தது. கிராமப்புற ஆசிரியர்களோ தலைமை ஆசிரியர்களோ அவருக்கு கடிதம் எழுதி இருந்தால் நிச்சயம் சென்றிருப்பார். இந்தியாவின் வல்லரசு கனவு என்று சொல்கிறீர்களே உடைந்து கிடந்த இந்தியா வலிவின்றி இருந்த போதுதான் அன்னியர்கள் நம்மை பிடித்தனர். அப்போது நீங்கள் என்ன செய்தீர்கள். உங்களை போன்றவர்கள் அந்நியர்களுக்கு தங்கள் கல்வியை வியாபாரம் செய்து வசதியை பெருக்கிக்கொண்டு சொந்த மண்ணுக்காக உழைத்தவர்களை குறை சொல்கிறீர்கள். மேலும் மக்கள் குறைந்த பட்ச நிம்மதியாக வழ்வதுகூட உங்களுக்கு பிடிக்கவில்லை. கோலோனி ஆதிக்கத்தின் போதும் மொகலாயர் ஆதிக்கத்தின் போதும் மக்கள் அடைந்த துன்பங்கள் உங்களுக்கு தெரியாது. ஏனெனில் அப்போது நீங்கள் கோலோனி ஆதிக்க முதளிளிகளுக்கு வால் பிடித்துக்கொண்டிருன்தீர்கள்,இன்னும் நிறைய பேச முடியும். கோர்வையாக எழுத வர வில்லை.
ஒரு கடை கோடி கிராமத்து இந்தியன்

6:32 AM, October 19, 2010
மதுரை முத்து said...

குழந்தைகளை பள்ளியில் சேர்க்கும் போது வலது கையை கொண்டு இடது காதை தொட சொல்வார்கள். அப்போது வித்யாசமாக செய்கிறேன் பேர்வழி என்று ஒரு குழந்தை தன் குஞ்சை தொட்டால் எப்படி இருக்குமோ அப்படி இருக்கிறது உங்கள் கட்டுரை.

8:22 AM, November 04, 2010
Anonymous said...

naan ungalidam ora oru kalvi than katka virumugiran yan thalaivaraga irunthal than makkaluku yathavathu saiya vanduma avarai patri valinattukaran muzuvathum thariyamal irukkalam anal oru inthiya kudimaganaga irunthu kondu intha katturai yazutha ungaluku yappadi manam vanthathu neengal intha natukaga yanna saithirgal ungal paguthil irukkum prachannaiyai yathirkolla thilkl illatha p[othu yangalai pol ilayathalaimurainiraku oru vundrukol lag irukkum dr apj abdul kalam mai vimarsithu yazuthuvatharku ungaluku yanna thaguthi ullathu itharkaga ungalai mannippu kora naan korikkai vaikka mattaen yaen yanral manithargaluku mattum than mannippu koruvatharkkum mannippu vazanguvatharkkum urimai undu yannai porutha varai nrrngal manithara illai

9:17 PM, November 28, 2011
mkevazhuthi said...

அப்துல் கலாம் குடியரசுத் தலைவராக பதவி ஏற்ற நாளில் நான் இராமேசுவரத்தில் தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி நுகர்வோர் குழுக்களின் கூட்டமைப்பின் சுற்றுச் சூழல் சார்ந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்துக் கொள்ள சென்றிருந்தேன். அன்று ஊரெல்லாம் விழாக் கோலம். மண்ணின் மைந்தர் இந்தியாவன் மிக உயர்ந்த பதவியில் அமர்ந்தது அவ்வூர் மக்களைப் பெரு மகிழ்வில் ஆழ்த்தியிருந்தது. அவர் குடும்பத்தினர் வாழும் பகுதிக்கு சென்றேன். ஆள் அரவமற்ற மணல் மட்டுமே பரந்திருந்தத் தெரு. அங்கங்கு மாட்டுச் சாணம். மிகவும் பிற்பட்டப் பகுதி. மிகச் சிறிய வீடு. ஆதிக்கச் சக்திகள் மட்டுமே குடியேறக் கூடிய குடியரசுத் தலைவர் மாளிகையில், இத்தெருவில் பிறந்தவரா அங்கு குடியேறுகிறார் என்றவொரு ஆச்சர்யம். இவையனைத்தும் போதாது என்று, அவருடைய அண்ணன் பெயரன் தன்னுடன் படிக்கும் எங்களுக்கு உதவ தன்னார்வலராக வந்திருந்தார். தன் பாட்டனார் குடியரசுத் தலைவர் பதவியில் உள்ளார் என்ற எந்த வித தலைக் கணமும் இன்றி அவர் எங்களுக்கு பணிவிடை செய்தார். இத்தகையப் பெருமைகள் கொண்ட இம்மண்ணின் மைந்தரால், சாமான்ய தமிழனின் குரல் ஒலிக்கக் கூடிய தமிழர் ஒருவர் குடியரசுத் தலைவர் மாளிகையில் என்ற பெருமை என் மனதில்.
காலம் செல்லச் செல்ல நடந்த நிகழ்வுகள் தந்ததோ ஏமாற்றம் மட்டுமே.
1. நதி நீர் பிரச்சனை: காவிரி, முல்லைப் பெரியார், பாலாறு போன்ற பிரச்சனைகளில் அவர் இந்தியராக இருந்தாரே தவிர தமிழனாய் இல்லை.
2. ஈழப் பிரச்சனை: தமிழ் நாட்டை உள்ளடக்கிய இந்தியாவின் குடிமகனாகவோ, இத்தமிழ் மண்ணின் மைந்தராகவோ, ஒரு மனிதராகவோ அவர் பிரச்சனையின் போது நடந்துக் கொண்டார்.
3. கூடங்குளம் பிரச்சனை: கூடங்குளம் பகுதியின் மண்ணின் மைந்தர்கள் எதிர்த்த இப்பிரச்சனையில் அவர் ஒரு இந்தியராக, ஒரு விஞ்ஞானியாக நடந்துக் கொண்டாரே தவிர, பிரச்சனையின் தீவிரம் புறிந்தவராக நடந்துக் கொள்ளவில்லை. தென்னிந்தியாவின் மற்ற மாநிலங்கள் மறுத்த அணு மின் நிலையத்தைத் தமிழ் நாட்டின் இடிந்தக் கரையில் அமைய, அதன் பலன் மட்டும் இம்மாநிலங்கள், தமிழகத்துடன் பகிர்ந்துக் கொள்கின்றன. இன்னிலைத் தெரிந்தும் அவர் இந்தியராக நடந்துக் கொண்டாரேத் தவிர, தமிழராக நடந்துக் கொள்ள வில்லை.
மொத்தத்தில் அவர் ஒரு ஏமாற்றமே! இருப்பினும் இராதா கிருட்டிணனுக்குப் பின் வந்த எந்தவொரு குடியரசுத் தலைவர்களையும் விட அப்பதவிக்கு இவர் மட்டும் தான் தகுந்தவர்!

10:55 AM, March 07, 2013