கும்ளேவை ஒரு சுழற்பந்து வீச்சாளராகவே எவரும் ஒப்புக்கொள்வதில்லை. இந்தியாவின் தலைசிறந்த பந்து வீச்சாளர்களில் கும்ளே முக்கியமானவர் என்றாலும் அவர் எந்த வகைப் பந்து வீச்சாளர் என்பது குறித்து பல கேள்விகள். சில மாதங்களுக்கு முன்பு வரை அவர் இனி மேல் ரிடையராகி விடுவார் என்று தான் நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால் அவர் தான் ஒரு சளைக்காத ஒரு போராளி என்று மறுபடியும் நிருபிக்கத் தொடங்கியுள்ளார்.
இன்றைய ஆட்டத்தில் கூட யோகானா, ஆசிம் கமால் ஜோடி 50 ரன்களுக்கும் அதிகமாக சேர்த்த பொழுது இந்த ஆட்டமும் டிராவில் முடியப் போகிறது என்றே நினைத்தேன். யோகானா எந்த ஒரு தயக்கமும் இல்லாமல் Front Foot ல் மிக எளிதாக சமாளித்துக் கொண்டிருந்தார். ஆனால் உணவு இடைவேளைக்கு முந்தைய சில ஒவர்களில் கும்ளே யோகானாவை ஆட்டம் காண வைத்தார். யோகானாவை Back Foot க்கு சென்று ஆடுமாறு பந்துகளை வீசினார். வேகமாக வீசப்பட்ட இந்தப் பந்தில் யோகானாவின் தடுப்பாட்டம் ஆட்டம் கண்டது. யோகானாவின் ஆட்டத்தில் இதற்கு பிறகு ஒரு தயக்கம் தெரிந்தது. அது போலவே தனது விக்கெட்டையும் பறி கொடுத்தார்.
ஒவ்வொரு விக்கெட்டையும் மிக அற்புதமாக திட்டமிட்டு எடுப்பதில் கும்ளே வல்லவர். மட்டையாளருக்கு அதிக ரன்கள் கொடுக்காமல் கட்டுப்படுத்தி, மட்டையாளர் மீது Pressure ஏற்படுத்தி அவரது விக்கெட்டை வீழ்த்துவதில் கும்ளே வல்லவர். ஆடுகளமும் அவருக்கு சாதகமாக இருக்கும் பட்சத்தில் அவர் ராஜ்யம் தான்.
இது போலவே நேற்று அப்ரிடியின் அதிரடி ஆட்டத்திற்கு முற்றுப்புள்ளி வைத்ததிலும் கும்ளே ஜொலித்தார். அப்ரிடியின் அதிரடி ஆட்டத்தால் மிக அதிகமாக தெரிந்த வெற்றி இலக்கு குறுகிப் போனது போன்ற ஒரு தோற்றம். அப்ரிடி ஹர்பஷன் பந்தில் ஒரு சிக்ஸர் அடித்தார் பாருங்கள்.. கலக்கல். நல்ல அதிரடி தான். வேறு அணியிடம் இது போல அப்ரிடி ஆடினால் ரசிக்கலாம். நம்மிடம் ஆடினால் ? வயிற்றில் புளியைக் கரைத்தது.
இங்கு தான் கங்குலியின் கேப்டன்ஸி திறமை வெளிப்பட்டது. கும்ளேவை Around the wicket கொண்டு வந்தார். பந்து வீசும் ஆங்கிள் மாற்றப்பட்டது. அப்ரிடியை Sweep செய்ய வலை விரிக்கப்பட்டது. அந்த வலையை புரிந்து கொள்ளும் அளவுக்கு அப்ரிடிக்கு அனுபவம் இருக்கிறது என்று வர்ணனையாளர் ரமீஸ் ராஜா சொல்லிக் கொண்டிருந்தார். ஆனால் அதே ஓவரில் அப்ரிடி Sweep செய்ய கங்குலி கேட்ச் பிடிக்க, அற்புதமான விக்கெட் அது.
இது போன்றே இன்று காலை விழுந்த யுன்ஸ் கான் விக்கெட். பந்தை வலது புறமாக வீச அற்புதமான ஸ்டெம்பிங். இதுவும் திட்டமிட்டு வீழ்த்தப்பட்ட விக்கெட்.
அடுத்த போட்டியிலும் தன் சொந்த மண்ணில் கும்ளே கலக்குவார் என்று எதிர்பார்ப்போம். அவரது திறமை பற்றி இனி மேல் யாரும் கேள்வி கேட்க மாட்டார்கள்.
நல்ல டெஸ்ட் போட்டி. அற்புதமான வெற்றி
Sunday, March 20, 2005
சபாஷ் கும்ளே
By தமிழ் சசி | Tamil SASI | நேரம் 3/20/2005 07:25:00 AM
Subscribe to:
Post Comments (Atom)
1 மறுமொழிகள்:
ஆமாங்க..கும்ளேவை எப்பொழுதும் திட்டிக்கொண்டிருப்பவர்கள், கொஞ்சமாவது நினைத்துப்பார்க்கட்டும்.
8:57 PM, March 20, 2005Post a Comment