Thursday, November 24, 2005

புலிகளும், இந்தியப் பாதுகாப்பும் - 1

விடுதலைப் புலிகள் இந்தியாவின் பாதுகாப்பிற்கும், இறையான்மைக்கும் அச்சுறுத்தலாக இருக்கிறார்கள் என்பதான ஒரு கருத்து இந்திய ஊடகங்களால் பல காலமாக தொடர்ந்து எழுதப்பட்டு வருகிறது.

விடுதலைப் புலிகளுக்கு ஏதிரான இவ்வாறான கருத்துக்கள் பல நிலைகளில் முன்வைக்கப்படுகிறது

  • விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக செயல்பட்டால் இலங்கையில் அமெரிக்க படைகள் நுழையும். அது இந்தியாவின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக அமையும்
  • தமிழ் ஈழம் அமைந்தால் தமிழ்நாட்டை விடுதலைப் புலிகள் பிரித்து ஒரு அகன்ற தமிழ் தேசத்தை உருவாக்க நினைப்பார்கள் அல்லது சுதந்திர தமிழ் ஈழம் அமைந்தால் அதன் பாதிப்பால் இங்குள்ள தனித் தமிழ் இயக்கங்கள் தனி நாடு கோருவார்கள்
  • ராஜீவ் காந்தியின் படுகொலை

1987 இந்திய இலங்கை ஒப்பந்தத்திற்குப் பிறகு, கடந்த 15 ஆண்டுகளில் இந்தியாவிலும் உலக நாடுகளிலும் எத்தனையோ மாறுதல்கள் ஏற்பட்ட போதிலும் இந்த வாதங்கள் மட்டும் எந்தவித மாற்றமும் இல்லாமல் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.

இந்த உளுத்துப் போன வாதங்கள் தவிர புதிதாக சில வாதங்களும் தற்பொழுது சேர்ந்து கொண்டுள்ளன.

  • விடுதலைப் புலிகளின் புதிய விமானங்கள், இந்தியாவின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக உள்ளன
  • புலிகள் சமர்ப்பித்துள்ள - ISGA (Interim Self Governing Authority) எனப்படும் இடைக்கால நிர்வாக அமைப்பின் சரத்துப் படி இந்துமகா சமுத்திரத்தில் மூன்றாவது கடற்படையாக புலிகளின் கடற்படை உருவாவது நீண்ட கடற்கரையுடைய இந்தியாவின் பாதுகாப்பிற்க்கு அச்சுறுத்தலாக அமையும்

இந்த வாதங்களில் எந்தளவிற்கு உண்மையிருக்கிறது ? இந்த வாதங்களின் படி இந்தியாவின் பாதுகாப்பிற்கு புலிகள் உண்மையில் அச்சுறுத்தலாக இருக்கிறார்களா ? அல்லது தமிழ் ஈழம் அமைவதை விரும்பாத சில பத்திரிக்கைகள்/குழுக்கள் இந்த வாதங்களை பல ஆண்டுகளாக தொடர்ந்து அப்படியே பராமரித்து வருகிறார்களா ?

இது பற்றி எழுத வேண்டும் என்று நீண்ட நாட்களாக நினைத்திருந்தாலும், இந்த Thanks Giving விடுமுறையில் தான் அதற்கான நேரம் கிடைத்திருக்கிறது.

1987க்குப் பிறகு உலக அரசியலில் நிறைய மாறுதல்கள் ஏற்பட்டன. குறிப்பாக பனிப்போர் முடிவிற்கு வந்து உலக வரைப்படத்தில் இருந்து சோவியத் யுனியன் காணாமல் போனது. இரு வல்லரசுகளுக்கும் அதனைச் சார்ந்த சார்பு நாடுகளுக்கும் இடையே இருந்த பகையுணர்வு குறைந்து பரஸ்பரம் நட்புறவை வளர்த்துக் கொள்ள அனைத்து நாடுகளும் முனைந்தன. போரும், ஆயுதக்குவிப்பிற்குமான முக்கியத்துவம் குறைந்து நாடுகளிடையே நட்புறவும், பொருளாதார வர்த்தக உறவும் முக்கியத்துவம் பெற்றன.

குரூட்டுதனமாக சோவியத் பாணி பொருளாதாரத்தை நேரு தொடங்கினார் என்ற ஒரே காரணத்திற்கு விடாப்பிடியாக பற்றி வந்த காங்கிரஸ், நரசிம்மராவ் தலைமையில் அதனை 1991ல் மாற்றியது. பொருளாதாரம் தளர்த்தப்பட்டது.

இந்தியாவின் வெளியுறவு கொள்கைகளிலும் 1991ல் சோவியத் யுனியன் சிதறுண்ட பிறகு பெரிய மாற்றம் ஏற்பட்டது.

பனிப்போர் காலத்தில் அணிசேரா நாடு என்ற முகமூடியை இந்தியா அணிந்திருந்தாலும் உண்மையில் சோவியத் யுனியனின் மிக நெருங்கிய நட்பு நாடாக தான் இந்தியா செயல்பட்டது. எனவே இயல்பாக பல நேரங்களில் அமெரிக்காவிற்கு எதிராகவும் சோவியத் யுனியனிற்கு ஆதரவாகவுமே இந்தியாவின் கொள்கைகள் அமைந்தன. இந்திய-இலங்கை ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்ட சமயத்தில் இலங்கை உலக இராணுவ மையத்தில் கேந்திர முக்கியத்துவம் உள்ள பகுதியாக விளங்கியது. தெற்காசியாவில் தன் இரணுவத்தை நிலை நிறுத்திக் கொள்ள அமெரிக்காவிற்கு ஒரு இடம் தேவைப்பட்டது. எங்கே இலங்கையில் அமெரிக்கப் படைகள் நுழைந்தால் தன் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் நேருமோ என்று எண்ணி இந்தியப் படை அமைதி காக்கும் படையாக இலங்கையில் நுழைந்தது. அதன் பிற்கு நடந்தது ஒரு சோசகமான வரலாறு.

1991க்குப் பின் இந்தியா மிகவும் நம்பியிருந்த சோவியத் யுனியன் சிதறுண்டது, இந்தியாவின் வெளியுறவு கொள்கைக்கு ஒரு புதிய திசையை கொடுத்தது. சோவியத் யுனியன் போதையில் மறந்து போய் இருந்த நாடுகளிடம் உறவை இந்தியா புதுபிக்கத் தொடங்கியது. அதே சமயத்தில் இந்தியாவின் அணு ஆயுத பலம் மற்றும் இரணுவ பலத்துடன் பொருளாதார பலமும் கைசேர பில் க்ளிண்டன் அமெரிக்க அதிபராக இருந்த பொழுது, இந்தியாவுடன் அமெரிக்காவின் உறவை வளர்க்கத் தொடங்கினார்.

இது தவிர அமெரிக்கா சீனாவை தனக்கு எதிர்கால போட்டியாக கருதுகிறது. சீனாவின் பலத்துடன் மோத வேண்டுமானால் ஆசியாவில் அதற்கு ஒரு நட்பு நாடு தேவைப்பட்டது. சீனாவுடன் பொருளாதாரம் மற்றும் இராணுவ பலத்தில் ஆசியாவில் போட்டியிடக்கூடிய ஒரே நாடு இந்தியா தான். எனவே இந்தியாவுடன் பொருளாதார ரீதியில் மட்டுமில்லாமல் இராணுவ ரீதியிலும் தன் உறவை அமெரிக்கா வளர்த்துக் கொள்ள தொடங்கியிருக்கிறது. பல இராணுவ தளவாடங்கள், அணு ஆயுத ரீதியிலான ஒத்துழைப்பு, அணு ஆயுத எதிர்ப்பு ஏவுகணைகள் (Anti Nuclear Missile system) விற்பனை போன்ற எண்ணற்ற இராணுவ உதவிகளை இந்தியாவிற்கு வழங்கிக் கொண்டிருக்கிறது. ஒரு காலத்தில் அமெரிக்கப் படைகள் தெற்காசியாவில் நுழைவதை தன்னுடைய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக கருதி வந்த இந்தியா, இன்று அமெரிக்கப் படைகளுக்கு இந்தியாவிலேயே இடமளிக்க தொடங்கியிருக்கிறது.

அமெரிக்கப் படைகள் இந்தியப் படைகளுடன் ப்ல பயிற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர். சில வாரங்களுக்கு முன்பு கொல்கத்தாவில் இந்திய விமானப்படையும், அமெரிக்க விமானப்படையும் கூட்டதாக போர் பயிற்சிகளில் ஈடுபட்டனர். அமெரிக்கப் படைகள் இந்தியாவில் பயிற்சி அளித்தது தவிர இந்தியாவில் இருந்து ஒரு குழு அலாஸ்கா சென்று மேலும் பயிற்சிகளில் ஈடுபட்டது.


அமெரிக்க, இந்திய இராணுவ ஒத்துழைப்பு மிக முக்கியமான ஒரு நிலையை அடைந்திருக்கிறது. சீனாவின் வளர்ந்து வரும் இராணுவ மற்றும் பொருளாதார பலத்தை எதிர்கொள்ள இந்தியாவை உற்ற நேச நாடாக அமெரிக்கா தற்பொழுது அங்கீகரித்திருக்கிறது. இதனால் தான் இரானுக்கு எதிராக International Atomic Energy Agency கூட்டத்தில் இந்தியா வாக்களித்தது. இந்தக் கூட்டத்தில் சீனா, ரஷ்யா போன்ற நாடுகள் வாக்களிப்பில் பங்கு பெறாமல் நடுநிலை வகித்தன. கடந்த காலங்களில் ரஷ்யாவை சார்ந்தோ அல்லது நடுநிலை வகித்தோ செயல்பட்டுவந்த இந்தியா இம் முறை அமெரிக்காவின் உற்ற தோழனாக மாறி அமெரிக்கா சார்பு நிலையை எடுத்தது.

கடந்த சில ஆண்டுகளாக செய்திகளில் அதிகம் அடிபடாமல் இந்தியாவும், அமெரிக்காவும் மேற்கொள்ளும் இரணுவ ஒத்துழைப்பு வியப்பை அளிக்கிறது. இந்தியா தவிர ஆசியாவின் பிற இடங்களில் இந்தியாவும், அமெரிக்காவும் தங்கள் இராணுவ ஒத்துழைப்பை அதிகப்படுத்தி வருகின்றன. மலாக்கா நீரிணையில் இந்திய மற்றும் அமெரிக்க கடற்படைகள் கூட்டாக ரோந்து மற்றும் இராணுவ பயிற்சிகளை மேற்கொண்டுள்ளன. இப் பகுதியில் சீனாவின் ஆதிக்கம் அதிகம் இருப்பதால் இந்தியாவை சீனாவின் ஆதிக்கத்தை தடுத்து நிறுத்த அமெரிக்கா பயன்படுத்திக் கொண்டுள்ளது.



பனிப் போர் காலத்தில் இலங்கை விஷ்யத்தில் அதிக அக்கறை காட்டிய இந்தியா தற்பொழுது இப் பிரச்சனையில் தன்னை அதிகம் ஈடுபடுத்தி கொள்ளாமைக்கு முக்கிய காரணம், அமெரிக்காவால் தனக்கு இந்தப் பிராந்தியத்தில் அச்சம் இல்லை என்பது தான். தன்னுடைய நலனுக்கு பிரச்சனையில்லாத பொழுது இலங்கையின் உள்விவகாரத்தில் தேவையில்லாத தலையீட்டையும் இந்தியா விரும்பவில்லை.

1980களில் அமெரிக்காவுடனும், பிரிட்டனுடனும் இணைவதாக பூச்சாண்டிக் காட்டிய இலங்கை, தற்பொழுது அது பற்றியெல்லாம் பேசாமல், இந்தியாவுடன் இராணுவ ஒத்துழைப்பை வேண்டுவது கூட இந்தியாவை தன் சார்பாக தொடர்ந்து தக்க வைத்துக் கொள்ளும் முயற்சி தான்.

இன்று அமெரிக்கா இலங்கையில் நுழைந்தால் கூட இந்தியா எதிர்ப்பு தெரிவிக்காது என்றே கருதப்படுகிறது (நான் மட்டும் சொல்ல வில்லை. ஆசியாவில் உள்ள அமெரிக்கப் படைகள் பற்றி ஒரு முறை கட்டுரை எழுதிய ஹிந்துவும் இதைத் தான் தெரிவிக்கிறது).

சுனாமிக்குப் பிறகு அமெரிக்கப் படைகள் முதன் முறையாக இலங்கை, மாலத்தீவு போன்ற தெற்காசிய நாடுகளில் நுழைந்த பொழுது இந்தியா அதனை வரவேற்கவே செய்தது. இந்தியாவிலேயே அமெரிக்க படைகள் இருக்கும் பொழுது, இலங்கையில் அமெரிக்கப் படைகள் நுழைவதால் என்னப் பிரச்சனை ஏற்படப் போகிறது ?

இவ்வாறான நிலையில் 1987ல் கூறப்பட்ட அதே உளுத்துப் போன வாதத்தை கூறி இந்தியா தமிழர்களுக்கு ஆதரவான நிலையை எடுக்க கூடாது என்று கூறுவது படு அயோக்கியத்தனமான நிலைப்பாடாக தான் நான் நினைக்கிறேன்.

அது போலவே ராஜீவ் காந்தியின் படுகொலை என்ற ஒரே கண்ணாடியை கொண்டு ஈழப் பிரச்சனையை அணுகுவதும் முறையானது அல்ல என்பது எனது கருத்து.

இந்தியாவில் நிகழ்ந்த சோகமான மூன்று படுகொலைகள் - மகாத்மா காந்தி, இந்திரா காந்தி மற்றும் ராஜீவ் காந்தியின் படுகொலைகள்

இந்திரா காந்தியை ஒரு சீக்கியர் கொன்றான் என்பதற்காக சீக்கிய இனத்தையே நாம் பலிவாங்கி விடவில்லை.

அது போல காந்தியை கொன்ற RSS இயக்கம் அதன் அரசியல் Proxy பா.ஜ.க மூலமாக இந்தியாவை ஆட்சி செய்து விட்டது. மகாத்மா காந்தியை படுகொலை செய்த சதியில் சம்மந்தப்பட்டவரான வீர்சர்வார்காரின் படம் இந்தியப் பாரளுமன்றத்தில் மகாத்மா காந்தியின் படத்திற்கு எதிராகவே ஜனாதிபதியால் திறந்து வைக்கப்படும் கொடுமையெல்லாம் இந்த நாட்டில் நடந்து கொண்டு தான் இருக்கிறது.

ராஜீவ் காந்தியின் படுகொலையை கடந்து ஒரு இனத்தின் விடுதலை, அம் மக்களின் வாழ்க்கை என்ற நோக்கில் பிரச்சனையை அணுகவேண்டும்.

ஒரு நாட்டின் வரலாற்றிலோ, இயக்கத்தின் வரலாற்றிலோ மாற்றங்களும், பரிணாம வளர்ச்சிகளும் ஏற்படத்தான் செய்கின்றன. புலிகளின் வளர்ச்சியை நோக்கும் பொழுது கூட ஒரு சிறு கூட்டம், கொரில்லாப் படை, மரபு சார்ந்த படையாக வளர்ச்சிப் பெற்றது போன்ற நிலைகளை கடந்து இன்று ஒரு அரசியல், இராணுவ இயக்கமாக மாறியிருக்கிறார்கள். ஒரு தேசத்தின் உள்கட்டமைப்பை தனி அமைப்பாக இருந்து நிறுவி முன்னேறி இருக்கிறார்கள்.

காத்ரீனா போன்ற இயற்கை சீற்றங்களில் அமெரிக்கா போன்ற நாடுகளே சரியான நிவரணப் பணிகள் மேற்கொள்ளாமல் தாமதமாகத் தான் நிவாரணப் பணிகளை துவங்கியது. ஆனால் சுனாமிக்குப் பின் சில மணி நேரங்களில் புலிகள் மேற்க்கொண்ட நிவாரணப் பணிகளை உலக நாடுகள் கவனிக்க தவறவில்லை.

பல ஆண்டுகளுக்கு முன்பு நடந்ததை கொண்டே கொள்கைகளை ஒரே நோக்கில் வைத்திருக்க முடியாது. மாறிவரும் உலக நிலைக்கேற்ப கொள்கைகள் மாற்றம் பெற வேண்டும். இந்தியாவில் எண்ணற்ற குண்டுவெடிப்புகளை நிகழ்த்தி மனித உயிர்களையும், பொருளாதார சேதங்களையும் விளைவித்த பாக்கிஸ்தானுடன் கைகுலுக்க முடியும் என்றால் புலிகளிடமும் நிச்சயமாக கைகுலுக்க முடியும்.

கைகுலுக்க முடியாவிட்டால் குறைந்தபட்சம் அவர்களுக்கு எதிரான நிலைப்பாடு எடுக்காமல் இருக்கலாம். ஏனெனில் தமிழீழ மக்களிடம் மட்டுமே தமிழ்நாட்டு மக்கள் மூலமாக இந்தியாவிற்கு தொப்புள் கொடி உறவு இருக்கிறது.

விடுதலைப் புலிகளுக்கும், இந்தியாவிற்குமான பிரச்சனைகளாக சிண்டு முனையப் படும் மேலும் சில பிரச்சனைகள் பற்றியும், தமிழீழம் அமைவதால் இந்தியாவிற்கு என்ன நன்மைகள் ஏற்படும், பாதகம் ஏற்படும் வாய்ப்பு உண்டா என்பது பற்றியும் அடுத்து வரும் பதிவுகளில் எழுதுகிறேன்

35 மறுமொழிகள்:

Anonymous said...

dear

i am reading your articles since the begining.this is first time i am writing a comment.you are thinking reality(no hype) with huminity. really your anlyzing are well. congrats.

eagrly waiting next. can you write about the possiblity of 'Eelam'?.

3:43 AM, November 24, 2005
தருமி said...

பாடநூல் எழுதும் ஓர் ஆசிரியருக்கு இருக்க வேண்டிய ஒரு seriousness தமிழ் சசியின் ‘சசியின் டைரி’யில் பார்க்க முடிகிறது. ... எளிதாக, கண்ணை மூடிக்கொண்டு, பாட நூல்களில் அப்படியே சேர்த்துவிடலாம். அந்த அளவுக்கு அவரது எழுத்துக்களின் பின்னால் அவரது உழைப்பு தெரிகிறது. பணி தொடர வாழ்த்துக்கள்.// உங்களுக்கான இந்த வார்த்தைகள் நான் அங்கே எழுதியவை.You keep reinforcing it. Keep going.

4:37 AM, November 24, 2005
Amar said...

சசி

// சீனாவுடன் பொருளாதாரம் மற்றும் இராணுவ பலத்தில் ஆசியாவில் போட்டியிடக்கூடிய ஒரே நாடு இந்தியா தான்.//

இந்தியா ஆசியாவின் மிக பெரிய சக்தி என்பதில் சந்தேகம் இல்லை என்றாலும் ஜப்பானின் இரானுவ பலத்தை நினைவில் கொள்ள வேன்டும்.

இந்திய விமான படைக்கு மட்டும் இன்னும் 10 சுக்வாட்ரன் விமானங்கள் வாங்கவேன்டும்.
கடற்படைக்கு இன்னும் 10 நிர்முழ்கி கப்பல்கள் தேவைப்படுகிறது.

//இன்று அமெரிக்கப் படைகளுக்கு இந்தியாவிலேயே இடமளிக்க தொடங்கியிருக்கிறது.//

மிக தவறான தகவல்.
இந்தியாவில் எங்கே அமெரிக்கப் படைகளுக்கு இடமளிக்கபட்டு இருக்கிறது ?

//இன்று அமெரிக்கா இலங்கையில் நுழைந்தால் கூட இந்தியா எதிர்ப்பு தெரிவிக்காது என்றே கருதப்படுகிறது//

இல்லை.
இன்னும் அமெரிக்கா இந்தியாவை அனுஆயுத நாடு என்று ஏற்று கொள்வதுஇல்லை.
அதனால் எதிர்ப்பு இருக்கிறது.

இலங்கை சுனாமி நிவாரன பனிகளுக்கு அமெரிக்கா படை சென்ற போது கூட இதை பார்க்க முடிந்து.

//சிங்களருக்கும் இந்தியாவிற்கும் ஒரு வெங்காயமும் இல்லை//

மிக தவறான கருத்து.
வரலாறு அப்படி கூறுவதாக தெரியவில்லை.

5:25 AM, November 24, 2005
Amar said...

TamizSasi,

You will do well not to mix facts with your own lies.

[b]According to sources India is not very happy about Sri Lanka’s decision to allow US Marines to land in Sri Lanka for Tsunami relief work. India is also not happy about American Marines in Maldives[/b]

India Daily - http://www.indiadaily.com/editorial/01-03g-05.asp

5:30 AM, November 24, 2005
Amar said...

A total of 1500 US Marines were deployed in Lanka and Maldives.Not a major force, but still India voiced its concern and the Lankans had a bit of explaining to do with Delhi.

5:34 AM, November 24, 2005
ஈழபாரதி said...

நல்ல ஒரு கட்டுரை, ஆழ்ந்த நோக்கு விடுதலைப்புலிகளோ, ஈழத்தமிழரோ என்றும் இந்தியாவை எதிரியாக நினைத்ததில்லை, இந்தியாவை தம் நேச நாடாகத்தான் என்றும் பார்க்கின்றன, ஏனெனில் தமிழ்நாடுதான் ஈழத்தமிழரின் கலை கலாச்சாரத்தின் ஆணிவேர்பதிந்துள்ள இடம், இந்தியாவே ஒதுக்கினாலும் ஈழத்தமிழர் தமிழ்நாட்டை என்றும் ஒதுக்கமாட்டார்கள்.
ரணில் அமெரிக்க,மேற்குலகத்துக்கு ஆதரவானவர், மகிந்தாவோ இந்தியச்சார்புடையவர், அதனால்தான் ரணில் தோற்றவுடன் மகிந்தாவுடனான உறவை பேனுவதற்காக திடீர் புலிஎதிர்ப்பு அறிவித்தல்களை வெளியிடுகின்றன, இதனால் மகிந்த, இந்திய நெருக்கம் குறையும் என எதிர்பாக்கிறார்கள், மகிந்தா இந்தியாவை பேச்சுவார்த்தை அனுசரனையாளராக அழைக்கலாம் என எதிர்பாக்கப்படுகிறது, இந்திய புலி உறவில் மாற்றம் வருவதற்கான புற நிலை தோன்றி இருக்கும் காலமிது, அதற்கு உதாரணமாக புலியின் கட்டுப்பாட்டில் இருக்கும் கிழிநொச்சி வைத்தியசாலைக்கு இந்தியா நேரடியாக மருத்துவ வசதிகளை அனுப்பி வைத்திருப்பதைக் கருதலாம், காலம் கனிந்துவரும் காலமிது இதயசுத்தியுடன் ஈழப்பிரச்சினையில் தீர்வுகானப்பட்டால் ஈழத்தமிழர் என்றும் இந்தியாவின் நன்பர்கள்தான், ஈழத்தமிழரை பாதுகாப்பதற்காகத்தான் அவர்களது ராணுவபலம், யாரையும் அச்சுறுத்துவதற்காக அல்ல, அச்சுறுத்தவும் முடுடியாது.
அமெரிக்க ராணுவத்தின் அச்சுறுத்தல் இந்தியாவுக்கு விலகிவிட்டதாக எனக்கு தெரியவில்லை.

8:18 AM, November 24, 2005
தமிழ் சசி | Tamil SASI said...

சமுத்ரா,

நீங்கள் மேற்கோள் காட்டிய அதே Indiadaily சில நாட்களுக்குப் பிறகு எழுதியுள்ள மற்றொரு தலையங்கம் இது
http://www.indiadaily.com/editorial/01-06c-05.asp

Don't make your opinion just seeing few articles from few dailies from your google search.

It has much more to it

9:08 AM, November 24, 2005
தமிழ் சசி | Tamil SASI said...

// அமெரிக்க ராணுவத்தின் அச்சுறுத்தல் இந்தியாவுக்கு விலகிவிட்டதாக எனக்கு தெரியவில்லை

ஈழபாரதி,

எந்த ஒரு நாட்டின் அச்சுறுத்தலும் குறுகிய காலத்தில் மாறி விட முடியாது.

ஆனால் India and America have made a strategic long term Military co-operation to contain China's growing influence in Asia

சமீபகாலமாக இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் பெருகி வரும் இராணுவ உறவுகள் அமெரிக்காவை இந்தியா அச்சுறுத்தலாக கருதவில்லை என்பதை தான் காட்டுகிறது.

குறிப்பாக Anti-Missile Defence system குறித்த தொழில்நுட்பங்களையும், தளவாடங்களையும் இந்தியாவிற்கு வழங்குவது குறித்தான பேச்சுவார்த்தை அதனையே தெளிவுபடுத்துகிறது.

இது தவிர மாற்றம் கண்டு வரும் உலக நடப்பில் இந்தியாவின் பொருளாதார மற்றும் இராணுவ பலத்தை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ளவே சீனாவும், அமெரிக்காவும் நினைக்கின்றன.

குறிப்பாக சீனா, சிக்கிம் விஷயத்தில் தன்னுடைய நிலையை கடந்த காலங்களில் மாற்றிக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது. சிக்கிமை இந்தியாவின் ஒரு அங்கமாக சீனா சமீபத்தில் தான் ஒப்புக்கொண்டுள்ளது. எதனால் சீனாவிற்கு இந்த உண்மை திடீர் என்று புரிந்தது என்பது அனைவரும் அறிந்த ஒன்று தான்.

சீனாவை விட அமெரிக்காவுடன் கைகோர்க்கவே இந்தியா அதிக ஆர்வம் காட்டுகிறது.

இதனால் சீனாவை இந்தியா பகைத்துக் கொள்ளும் என்பது பொருளல்ல. அத்தகைய உலக சூழல் மாறி வருவதாகவே நான் கருதுகிறேன்.

எல்லாவற்றையும் விட பொருளாதார உறவுகள் தற்பொழுது அதிக முக்கியத்துவம் பெற்று வருகின்றது

9:26 AM, November 24, 2005
Amar said...

Thamizsasi,

I recall reading a report on the Lankan Ambassador briefing MEA about the presence of US Marines.MEA was assured that only a force of 800 marines were present in Lanka and not more.

Diplomatic niceties aside, I'm convinced that US and India are not partners in bed, rather their partnership is based on both pragmatism and principle as PM Manmohan Singh would put it.

Please remember that the US is yet to acknowledge India as a nuclear weapons state officially and this is going to be a great thaw in any future cementing of relationship.

That aside, you assertion that India could be a credible military counter to China is rather far from fact I'm afraid.The Japanese Defense forces are far too advanced than Indian forces.

India is still trying to catch up with China's nuclear arsenal.
(Would you please write about India's nuclear weapons programme ? It is a very facsinating story)

We forget that there is a country called Pakistan in all this - they gladly supplied weapons to the Lankans.

Another very intresting fact is that India is rather at a position to dictate terms to the Lankans.It has happened in the past with RAW getting actively involved by helping the LTTE to a great extent.

I'm afraid India has no option but to continue its status quo.We simply cannot afford another state that hates India to our south - be it Eelam or Lanka.Do you disagree?

9:30 AM, November 24, 2005
தமிழ் சசி | Tamil SASI said...

Samudra,

China, America and India are going to be the three superpowers in the next 20-30 years. This is not just based on Military but also based on economic strength

Japan is the power of past, though it will still remain in the top 10

Any global equation will only revolve around the three countries. India has a long way to go, but it will reach there

// Do you disagree?

தமிழீழம் மற்றும் இந்திய உறவுகள் குறித்து அடுத்து வரும் கட்டுரைகளில் எழுதுகிறேன்

9:51 AM, November 24, 2005
Amar said...

thamizsasi,

I'd think the Indo-US relations are now dependant on the nuke deal, which if cleared in the Congress can go a long long way in trasnforming Indo-US relations.

Eagerly awaiting you next post.

9:56 AM, November 24, 2005
Anonymous said...

மிக நல்லதொரு விடயம்.விடயங்களைத்
தொகுத்து அழகாக எழுதுகிறீர்கள்.தொடருங்கள்.அமெரிக்கா
ஆசியாவில் தனக்கு அசுசுறுத்தலாக கருதுவது சீனாவைதான் அதுவே இந்தியாவை நோக்கி நெருங்கி வர வைத்துள்ளது.

9:58 AM, November 24, 2005
Anonymous said...

சரி தங்களது கட்டுரை மேலோட்டமாகப் பாத்ததில் ஓளவிற்கு புறிந்து கொண்டேன் ராஜீவ் காந்தியை கொலை செய்ததை விட்டு விடுவோம் தமிழ் ஈளத்திற்காக போராடிய மற்ற போராளிகள் எத்தனை பேரை இவர் கொலைசெய்துள்ளார். அப்படி இவர் சிங்களரையா கொலை செய்தார் தனக்கு போட்டியாக ஒரு தமிழன் வரக்கூடாத என்பதற்காகத்தானே அத்தனை தமிழ் மக்களையும் ஒழித்துக்கட்டினார். பத்மநபா முதல் பலரை

12:35 PM, November 24, 2005
மாலன் said...

1987ல் நடந்த மாற்றங்களில் வேறு இரு மாற்றங்களை நீங்கள் உங்கள் அலசலில் கணக்கில் எடுத்துக் கொள்ள மறந்து விட்டீர்கள். ஒன்று: விரைவுபடுத்தப்பட்ட உலகமயமாதல். மற்றொன்று அடிப்படைவாதத்தின் வளர்ச்சி.

இரண்டிற்கும் தொடர்புண்டு. (காண்க திசைகள் இத்ழில் என் அன்புடன் கடிதம் www.thisaigal.com) இன்று உலகநாடுகளிடையே உறவுகளைத் தீர்மானிப்பதில் இந்த இரண்டும் முக்கியப் பங்கு வகிக்கின்றன.

இந்தியாவை மறந்துவிட்டு மற்ற உலகநாடுகள் விடுதலைப்புலிகளின் இயக்கத்தை எப்படி மதிப்பிடுகின்றன என்பதையும் ஆராய்ந்து பாருங்கள். அண்மையில் ஐரோப்பிய யூனியன் அவர்களது அரசியல் நடவ்டிக்கைகளுக்குத் தடை விதித்தது.இன்று ஆஸ்திரேலிய காவல் துறை மெல்போர்னில் உள்ள அமைப்புக்களில் சோதனையிட்டுள்ளது. இந்த இரு நாடுகளுக்கும்/ அமைப்புகளுக்கும் தொப்புள் கொடி உறவோ, பகையோ இல்லை.பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் இல்லை. ஆயினும் அவை அந்த நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன. ஏன்? அவை விடுதலைப்புலிகள் அமைப்பை பயங்கரவாத அமைப்பாகக் காண்கின்றன. விடுதலைப் புலிகளை பயங்கரவாத அமைப்பாகக் காண்பது இந்திய பத்திரிகையாளர்கள் மட்டுமல்ல என்பதற்காக இதைச் சொல்கிறேன்.

அப்படி ஒரு perception ஏன் ஏற்பட்டது? அதை மாற்றுவதற்கு வி.பு.கள் செய்த முயற்சிகள் ஏன் பலன் தரவில்லை? என்பதையும் ஆராய்ந்து எழுதுங்கள்.

ராஜீவ் காந்தி படுகொலைக்கு இன்று வரை விடுதலைப்புலிகள் மன்னிப்போ வருத்தமோ தெரிவிக்கவில்லை (They have not repented for it)அப்படியிருக்க இந்தியா தன் நிலையை மாற்றிக் கொண்டால் அது இந்திய அரசியலில் பின்விளைவுகளை ஏற்படுத்தும். மன்னிப்புக் கேட்டால் அது யாழ் அரசியலில் வி.பு.க்களுக்கு சங்கடத்தை ஏற்படுத்தும். எனவே இது இரு தரப்பிலும் பின்னோக்கிச் செல்ல முடியாத, இறுகிவிட்ட நிலை.

இந்தியாவில் தூக்கு தண்டனை ரத்து செய்யப்படாத நிலையிலும்கூட, ராஜீவ் கொலையில் சம்பந்தப்பட்டதாக தீர்ப்பளிக்கப்பட்டவர்கள், இதுவரை தூக்கிலிடப்படவில்லை;அவர்களுக்கு மன்னிப்பு அளிக்குமாறு ராஜீவின் மனைவியே வேண்டுகோள் விடுத்தார். இந்த gestureகளுக்கெல்லாம் விடுதலைப் புலிகள் தரப்பிலிருந்து என்ன எதிர்வினை?

யாழ் தமிழர்களுக்கும் தமிழ்நாட்டுத் தமிழர்களுக்கும் தொப்புள் கொடி உறவு என்பதெல்லாம் பசப்பல். மலையகத்தமிழர்களின் குடியுரிமையைப் பறிக்கும் சட்டம் இலங்கை நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்டபோது அதற்கு ஆதரவாக வாக்களித்தவர்கள் யாழ் தமிழர்கள்.

பாகிஸ்தானிலும், வங்க தேசத்திலும் உள்ள் இஸ்லாமியர்களுக்கும் இந்திய முஸ்லீம்களுக்கும் என்ன உறவோ அதே உறவுதான் இந்தியத் தமிழர்களுக்கும் இலங்கைத் தமிழர்களுக்கும் உள்ள உறவு. அவர்கள் சகோதரர்கள். ஆனால் தத்தம் ந்லன் பேணும் சகோதரர்கள். (They are cousins with their own,diffrent,destinies)

11:20 PM, November 24, 2005
Pot"tea" kadai said...

இராஜிவ் காந்தி "படுகொலை" மறக்கவும், மன்னிக்கவும் முடியாத குற்றம். அது குறித்து "பிரபாகரன்" கூறுகையில், இராஜிவ் படுகொலை ஒரு மறக்கப்பட வேண்டிய விசயம் என்கிறார். தவறு செய்தவன் குறைந்தபட்சம் மன்னிப்போ அ வருத்தமோ தெரிவிக்க வேண்டும். அது கூட செய்யாமல் இந்தியா தங்களுக்கு உதவ வேண்டும் என்று கூறுவது ஒரு சிறுபிள்ளைத்தனமான செயல். மேலும் இந்தியாவின் ஒத்துழைப்பு இல்லாமல் "தமிழ் ஈழம்" என்பது இந்நூற்றாண்டில் சாத்தியம் அல்ல.

malan,
//இன்று ஆஸ்திரேலிய காவல் துறை மெல்போர்னில் உள்ள அமைப்புக்களில் சோதனையிட்டுள்ளது. //

ஆஸ்திரேலியாவில் நேற்று நடந்த சோதனைகள், ஆஸ்திரேலிய அரசாங்கம் இசுலாமிய தீவிரவாதம் மட்டுமல்ல, எந்தவொரு தீவிரவாதத்தையும், தீவிரவாதிகளுக்கு உதவி செய்பவர்களையும் சகித்துக் கொள்ளாது என்பதை அறிவுறுத்தவே! இதன் மூலம் அங்கு வசிக்கும் புலம் பெயர்ந்த இசுலாமியர்களுக்கு அவ்வரசு தீவிரவாததிற்கு எதிரான தனது கொள்கைகள் இசுலாமியர்களுக்கானது மட்டுமல்ல என்பதனையும் தெரிவுபடுத்தியுள்ளது.


//யாழ் தமிழர்களுக்கும் தமிழ்நாட்டுத் தமிழர்களுக்கும் தொப்புள் கொடி உறவு என்பதெல்லாம் பசப்பல். மலையகத்தமிழர்களின் குடியுரிமையைப் பறிக்கும் சட்டம் இலங்கை நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்டபோது அதற்கு ஆதரவாக வாக்களித்தவர்கள் யாழ் தமிழர்கள்.//
100% உண்மை!

இன்றும் கூட தமிழக தமிழர்களை "வடக்கத்தியான்கள் முட்டாளப்பா" என்று கூறும் ஈழ வாசிகளும் உண்டு.

12:02 AM, November 25, 2005
Amar said...

//இராஜிவ் காந்தி "படுகொலை" மறக்கவும், மன்னிக்கவும் முடியாத குற்றம். அது குறித்து "பிரபாகரன்" கூறுகையில், இராஜிவ் படுகொலை ஒரு மறக்கப்பட வேண்டிய விசயம் என்கிறார்//

Rajiv Gandhi gifted his own bullet proof vest to Prabakarn while he was in Delhi.

Mr.Prabakaran wanted the LTTE to have a 'monopoly' over the Eelam struggle, hence all the problems.

That aside, Prabakaran did say that Rajiv Gandhi assasination was a 'tragedy'in the famous press
meet.

//யாழ் தமிழர்களுக்கும் தமிழ்நாட்டுத் தமிழர்களுக்கும் தொப்புள் கொடி உறவு என்பதெல்லாம் பசப்பல்.

Very true.
People in Tamil Nadu have more or less quit caring about the Eelam things.All these utopian statements are merely for fantasies.

12:08 AM, November 25, 2005
ஈழநாதன்(Eelanathan) said...

மாலன் அவர்களுக்கு பல இடங்களில் கேட்கப்பட்ட கேள்விதான் என்றாலும் திரும்பவும் கேட்கிறேன்.ராஜீவ் காந்தி கொலை மறுக்கவும் மன்னிக்கவும் முடியாத குற்றம் இதற்காக புலிகள் இயக்கத் தலைவர் மன்னிப்புக் கேட்டுத்தான் ஆகவேண்டுமென்பது உங்கள் வாதம் அது சரியானது என்றே எனக்கும் தோன்றுகிறது.

ஈழத்தில் தான் நடத்திய படுகொலைகளுக்கு இந்தியா எப்போது மன்னிப்புக் கேட்கும்.தனது தவறை ஒப்புக்கொண்டு மன்னிப்புக் கேட்பதை உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு முதலில் செய்யவேண்டும்.பின்னர் பயங்கரவாதிகள் அதனைச் செய்வார்கள்/செய்தே ஆகவேண்டும்.

மலையக மக்களின் வதிவுரிமை பறிக்கப்பட்டதற்கு யாழ் மக்கள் தான் காரணம் என்பது கொஞ்சம் மிகை.அரசியல்வாதிகள் தான் காரணம் என்றாலும் மலையக மக்கள் மீதான் யாழ் மக்களின் பார்வை மேலிருந்து கீழ்நோக்குவதாகத் தான் இருந்திருக்கிறது.

எங்கிருந்தோ வந்த நோர்வேக்கும் இலங்கைக்கும் என்ன உறவு?அந்த உறவையாவது இந்தியாவும் கைக்கொள்ளலாமே?கனடா இன்றுவரை தடை செய்ய ஏன் மறுக்கிறது?ஐரோப்பிய யூனியன் கூட தடை விதிக்கவில்லை.உத்தியோகபூர்வ செயற்பாடுகளுக்குத் தான் இடைநிறுத்தம் வழங்கப்பட்டுள்ளது.
தொப்புள்கொடி என்பதெல்லாம் என்ற உங்கள் கூற்றுடன் எனக்கும் உடன்பாடுண்டு

சசி
நீங்கள் ஆழமாகப் பார்க்க முயன்றிருக்கிறீர்கள் ஆனாலும் இது ராஜீவ்,ஈழம்,பிரபாகரன் உன் தவறு என் தவறு என்று திசைவழிப் போகவிருப்பதாகவே தெரிகிறது

1:11 AM, November 25, 2005
கொழுவி said...

மாலன் மற்றும் பொட்டீக்கடை,

யாழ் தமிழர்களைப் பற்றித்தானே சொல்லியிருக்கிறியள்.
அங்கால கிளிநொச்சி, வவுனியா, முல்லைத்தீவு, மணலாறு, மன்னார், மட்டக்களப்பு, அம்பாறை, திருக்கோணமலைத் தமிழர்களின் நிலைபற்றிச் சொல்லவில்லையே?
அவர்களுக்கும் தமிழகத்தாருக்கும் தொப்புட்கொடி உறவு இருக்குமோ?
புலிகள் ராஜீவ் படுகொலைக்கு வருத்தம் தெரிவிப்பதை மேற்சொன்ன மாவட்டத் தமிழர்கள் விரும்புவார்களோ?

மற்றும் சமுத்திரா,
ராஜீவ் படுகொலை மறக்கப்பட வேண்டிய விசயமென்று பிரபாகரன் சொன்னாரா? எங்கே சொன்னார்?
துன்பியல் சம்பவம் என்ற சொல்லுக்குள்ளால் "வருத்தம்" என்ற கருத்துத் தெரியாமல், "மறக்கடிக்கப்பட வேண்டிய"தென்ற கருத்துத் தெரிகிறதா?
தமிழ்ப் புரிதலில் இத்தனை வித்தியாசம் இருக்குமென்றால் நிச்சயமாக "தொப்புட் கொடி" பற்றி யோசிக்கத்தான் வேண்டும்.

அதைவிட ராஜீவ் தனது சொத்தப் பாதுகாப்பு அங்கியைக் கொடுத்தாரென்ற தகவல் எனக்குப் புதுசு. இப்படிக் கதைகளை யார் சொன்னார்களென்று சொல்ல முடியுமா?

3:28 AM, November 25, 2005
ஜூலியன் said...

The Hindu's news quotes pro-karuna TBC as its source for Melbourne News. It's no wonder. Like other sources of The Hindu, Daily News and The Island of Sri Lanka, this time The Hindu borrowed from Thamil Broadcating Corporation. Very similar accusations come from Asia Tribune a Thailand based anti-eelam webzine. No wonder again.

On Australian news, there are two news on Ausralia and LTTE. First one is by a reporter named, Ron Corben. He claims that LTTE did the smuggling quoting intelligence. Then comes the interesting part. These are the key operatives' names. Emanuel Reginold, a Norwegian national of Sri Lankan birth, Paddanisoor Vavumia, and three other Sri Lankan nationals, Herath Mudiyanselage, Dammika Bandara and Ravi Shantha.

Last time I looked into Sri Lankan names, these are Sinhala names, not Tamil names. So now LTTE is working for a sinhala country, er?

Second one talks about arrests made by australians, and confestication of objectionable materials from pro-ltte supporters.

Now if someone wants to make comment about righteousness based on Australian arrests, TBC, Asia Tribune and The Hindu, what can we say? As far as we expect from a jounalist is neutrality in presentation of facts. Most of the tamilbloggers complain about SunTV news and its distrotion of facts. May be they are right.

3:43 AM, November 25, 2005
ஜூலியன் said...

http://www.wsws.org/articles/2005/nov2005/terr-n25.shtml

3:47 AM, November 25, 2005
ஜூலியன் said...

murosoli maaran's thoppul kodi (interviewed by Maalan, the editor of Kumudham july 11 1996. murosoli maaran's family owns SunTV)

http://groups.google.com/group/soc.culture.tamil/browse_thread/thread/539de5f311b8209f/16091dfab91326a8?lnk=st&q=soc.culture.tamil+maalan&rnum=2#16091dfab91326a8

Mr. Maran who is Karunanidhi's nephew, said, Our only worry
is that our Tamil brothers there (in Sri Lanka) should live with rights. If
they think that they can achieve those rights only through Tamil Eelam and if they are prepared to make sacrifices for it , O. K. (let them) do it : Or if they think that they can secure their objectives by getting greater regional autonomy through federalism (here Maran uses the word Ò Kootatchi which can also mean confederation), right.

4:15 AM, November 25, 2005
Amar said...

//
அதைவிட ராஜீவ் தனது சொத்தப் பாதுகாப்பு அங்கியைக் கொடுத்தாரென்ற தகவல் எனக்குப் புதுசு//

My source : Inside an Elusive Mind by an Indian journalist.

You can email me for the ISBN.

I'm no fan of Prabakaran either.

1:20 PM, November 25, 2005
Amar said...

//ராஜீவ் படுகொலை மறக்கப்பட வேண்டிய விசயமென்று பிரபாகரன் சொன்னாரா?

No.
He said it was a 'thunbayil' thingy.

Pls read the book Inside an Elusive Mind , an biography on Prabakaran.

1:23 PM, November 25, 2005
ஜூலியன் said...

samudra why don't you read one more book before jumping on conclusions with Naraya samy's one sided his-story? Didn't you get another or didn't you want to read anything that shatters your myths?

2:45 PM, November 25, 2005
இளங்கோ-டிசே said...

இந்த விவாததத்துக்குள் நுழைய விரும்பவில்லை. இது தொடர்ச்சியாக விவாதிக்கப்பட்டும், இறுதியில் ஒரேயிடத்தில் முடிவதுமாய் இருக்கும்... அலுப்பு என்பதைத் தவிர வேறொன்றுமில்லை. ஒவ்வொருமுறையும் இப்படியான விவாதங்கள் நடக்கும்போது அவரவர் தங்களின் கருத்துக்களின் இன்னும் வன்மையாக/வன்மமாய் நிற்கின்றோம் என்பது மட்டும் புரிகின்றது.
நிற்க, இங்கே ஒரேயொரு விடயத்தை மட்டும் குறிப்பிட்டு விலகிக்கொள்கின்றேன்.
//இந்தியாவில் தூக்கு தண்டனை ரத்து செய்யப்படாத நிலையிலும்கூட, ராஜீவ் கொலையில் சம்பந்தப்பட்டதாக தீர்ப்பளிக்கப்பட்டவர்கள், இதுவரை தூக்கிலிடப்படவில்லை;அவர்களுக்கு மன்னிப்பு அளிக்குமாறு ராஜீவின் மனைவியே வேண்டுகோள் விடுத்தார்.//
மாலன் மேலேயுள்ளதைக் குறிப்பிட்டு தன்னை மிகப்'பெரும்மனிதாபிமானியாக காட்டிக்கொள்வதுதான் மிக எரிச்சலூட்டுகிறது. இதே மாலன், குமுதம் பத்திரிக்கையில் ஆசிரியராக இருந்தபோது, குற்றன்ஞ்சாட்டப்பட்டவர்கள் அனைவருக்கும் தூக்குத்தண்டணை கொடுத்து லீவர் இழுக்கப்படும் சத்தம் கேட்டால்தான் நிம்மதியாயிருக்கும் என்று அதன் ஆசிரியத் தலையங்கத்தில் எழுதியவர். நேர்மையாக புலிகளை/ ஈழத்தமிழரகளை எதிர்க்கின்றோம் என்பவர்கள் மீது மதிப்பு இருக்கின்றளவு, இன்று இப்படியான வேறொரு முகமூடிகளோடு வரும் மாலன் போன்றவர்கள் மீது மதிப்பு வருவதில்லை.(இல்லாவிட்டால் மாலன் தான் அப்படி எழுதியதற்கு எங்கேயாவது மன்னிப்புக் கேட்டாரா என்றும் தெரியவில்லை). எதிர்த்தரப்பு என்று கூறப்பட்டதைவிட இப்படியான 'நடுநிலையாளர்கள்' மிகவும் பயமுறுத்துகின்றார்கள் :-).

3:05 PM, November 25, 2005
ஜூலியன் said...

your source is just an apple sauce. that's all. Why don't you read Anita Pratab, who gives different story of Rajiv Feros Gandhi and Vellupillai Pirapakaran's meeting? Or why don't you read Anton Balasingam, who probably gives LTTE's view? Here you quote Narayan samy, who claimed meeting Pirapakaran only once according to Pro-Indian Re-search site, but wrote a book on ellusive mind his psychic power.

Being patriotic indian is fine, but for sake of glorifying India you do not have to distort the facts with dubious "sauces and cereals"

At least, in such aspect, learn from the last and the next Sri Lanka Ratnas. They are intelligent enough not to distort the facts that are very obvious, though they evade statements that might cause damage for his agenda. Well, anyway Eelanathan should not have touched ballon with pinning questions. He! He!!

3:14 PM, November 25, 2005
கொழுவி said...

சமுத்திரா,
பாதுகாப்பு அங்கி பற்றிய தகவல் மூலத்தைத் தந்ததற்கு நன்றி.
இது சாத்தியமா என்று யோசிக்கிறேன்.

நிற்க, துன்பியல் சம்பவம் பற்றிய தகவலுக்கு நான் நாராயணசாமியை வாசிக்க வேண்டியதில்லை. அது மிகப் பிரபலமான சொற்றொடர். என் பின்னூட்டத்திலும் அதைச் சுட்டித்தான் உங்களின் பிழையான கருத்துப்பற்றிக் கேட்டிருக்கிறேன்.
இப்படியிருக்க ஏன் நீங்கள் அதைத் திரித்தீர்கள்? அது மறக்கடிக்கப்பட வேண்டிய விசயம் என்று பிரபாகரன் சொன்னதாக ஏன் கருத்தை எழுதினீர்கள்?
இருந்தாலும் அதை ஒத்துக்கொண்டதுக்கு நன்றி.

அதுசரி, யாழ்ப்பாணத்தவரை விட மற்றத் தமிழர்களைப் பற்றி என்ன நினைக்கிறீர்களென்று சொல்லவில்லையே?;-)

6:23 PM, November 25, 2005
மு. மயூரன் said...

//ஈழத்தில் தான் நடத்திய படுகொலைகளுக்கு இந்தியா எப்போது மன்னிப்புக் கேட்கும்.தனது தவறை ஒப்புக்கொண்டு மன்னிப்புக் கேட்பதை உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு முதலில் செய்யவேண்டும்.பின்னர் பயங்கரவாதிகள் அதனைச் செய்வார்கள்/செய்தே ஆகவேண்டும்.//

ஈழநாதனின் இந்த கேள்வியை மாலனை நோக்கி நான் மீண்டும் கேட்க விரும்புகிறேன்..

4:03 AM, November 27, 2005
ஜூலியன் said...

1.
அண்மையில் ஐரோப்பிய யூனியன் அவர்களது அரசியல் நடவடிக்கைகளுக்குத் தடை விதித்தது.

This statement is either a lack of comprehension or a delibrate twist.

What EU said can be viewed here at EU-UK site
http://www.dellka.cec.eu.int/en/press_office/press_releases_pdf/eudcterrorismsl.pdf

"..The European Union is actively considering the formal Listing of the LTTE as a terrorist organisation. In the meantime, the European Union has agreed that with immediate effect, delegations from the LTTE will no longer be received in any of the EU Member States until further notice..."

What EU said was that It would not officially receive the LTTE representatives as it did in the past two years, not ban LTTE from its political operations.

Even The Hindu, generally an anti- Shri Lankan Tamilian daily said the following

European Union shuts the door on LTTE

".."The EU is actively considering the formal listing of the LTTE as a terrorist organisation. In the meantime, the EU has agreed that with immediate effect, delegations from the LTTE will no longer be received in any of the EU member states until further notice," a statement issued by the British High Commission here said..."

If EU had already banned LTTE, why should the Shri Lakan official Peace site quote a Narayan's scoop for The Island as follows?
Tuesday, 6 December 2005
India asks European Union to ban LTTE

2.
இன்று ஆஸ்திரேலிய காவல் துறை மெல்போர்னில் உள்ள அமைப்புக்களில் சோதனையிட்டுள்ளது.
I recommend anyone to read the follwoing from The International Commission of Jurists:
27 November 2005
ICJ Concern over ASIO Raids on Sri Lankan Tamils in Melbourne

Can anyone give me the definition for wistful thinking?

10:52 PM, December 11, 2005
Anonymous said...

RSS have not apologised for the murder of Gandhi, yet Sarvarkar's image is in parliament.

All Sikhs are not punished for the murder of Indira Gandhi. In fact Jagdish Tytler had to even resign.

Why is then The entire Tamil Community is punished for one "Thunbiyal sambavam"

The answer is very simple

We do not speak Hindi where as Sarvarkars and Singhs speak Hindi

We are dravidians and NOT aryans.....

12:27 PM, February 21, 2006
Unknown said...

Dear sir,

The killers of Gandi and Indira Gandhi were pulled to the court and given punishment. But what happened to killer of Rajiv Gandhi i.e Mr.Prabaharan..You hail him as a leader, unless or untill he is hanged dont expect any help from India. You talked about IPKF killing .? I know what happened during those time..LTTE will throw bomp and run/hide into hospital so that when IPKF attacks common people will be called..as for as know LTTEs and back biters and coward people. Please tell what you have achived in eelam after 16 years of death of Rajiv Gandhi..? Did you get any better deal from anybody than what Rajiv suggested.. Whatever happening in eelam is because of LTTEs monopoly..if not Tamil people would have been in peace long back.

thanks
Stan

12:55 AM, July 02, 2007
nakkeeran said...

In more than one sense Stanley is speaking through his hat. Those who shed tears over the death of
Rajiv Gandhi should also mourn the death of thousands of innocent Thamils killed and scores of
women raped by the IPKF. I will like to cite two incidents that stand out.

1)THE JAFFNA HOSPITAL MASSACRE 1987

Twenty-one persons including medical specialists, nurses, attendants, patients and members of public were massacred inside Jaffna Teaching Hospital (JTH) by Indian Peace Keeping Force (IPKF) troops stationed in Jaffna Fort opened fire on 21st October, 1987. The shooting was unprovoked. It was carried out by frightened and illiterate soldiers who simply went berserk.  The victims of the massacre included three leading medical specialists at that time, Dr.A.Sivapathasuntharam, Dr.K.Parimelalahar and Dr.K.Ganesharatnam, three nurses and fifteen other employees.
2) INDIA'S MY LAI - THE VALVETTITURAI MASSACRE 1989
"...this massacre is worse than My Lai. Then American troops simply ran amok. In the Sri Lankan village, the Indians seem to have been more systematic; the victims being forced to lie down, and then shot in thE back..". London Daily Telegraph quoted by George Fernandez M.P.
On 2 August 1989, the so called Indian Peace Keeping Force deliberately killed 63 Tamil civilians in Valvettiturai in the Jaffna Peninsula in a massacre that was later described as India's Mylai.
As for the query "what you have achieved in eelam after 16 years of death of Rajiv Gandhi..? Did you get any better deal from anybody than what Rajiv suggested"  may I tell you that the LTTE has established a de facto state with all the paraphernalia associated with states like Judiciary, courts, police, education centres, banks etc.! This is not a mean achievement by any standards.
Rajiv Gandhi got killed because of his folly of sending the Indian  army to disarm the LTTE. This was none of his business! No wonder Vaiko described Rajiv Gandhi as the greatest fool the world has ever seen!

11:35 AM, August 12, 2007
Anonymous said...

Sasi,
Can't you write anything other than degrading India and making pro-LTTE analysis?. As per you, whatever India has done is completely wrong and all the activities done by LTTE are laduable. Which passport do you hold?. Dont criticize India or dont be an indian. Get rid of any one of this.

10:09 PM, December 25, 2008