Sunday, January 01, 2006

ஹிந்துவின் தலையங்கம், இந்திய நிலைப்பாடு

இன்றைய ஹிந்து நாளிதழின் தலையங்கத்தை வாசிக்க நேர்ந்தது. பொதுவாக இலங்கைப் பிரச்சனை குறித்து ஹிந்துவில் எழுதப்படும் தலையங்கங்கள் விமர்சனப் பார்வைக்கு கூட தகுதியற்ற ஒரே agenda கொண்டு எழுதப்படும் அலுப்பு தரும் விஷயம் என்பது தான் என் எண்ணம். ஆயினும் இந்தத் தலையங்கத்தை படிக்கும் பொழுது மாறி வரும் சில விஷயங்கள், குறிப்பாக இந்திய நிலைப்பாடு குறித்து ஹிந்துவுக்கு ஏற்பட்டுள்ள கவலையும், அதனை மூடிமறைக்க ஒன்றுக்கும் உதவாத சில விஷயங்களை பெரிதுபடுத்தி பேசி இருப்பதும் நல்ல Humourக உள்ளது. இந்தத் தலையங்கத்தின் நோக்கம் தலைப்பில் தெளிவாக தெரிகிறது. LTTE is an anti-India force.

இந்தியா எங்கே இலங்கை அரசுக்கு ஆதரவான ஒரு நிலைப்பாட்டை எடுக்காமல் இருந்து விடுமோ என்ற கவலை ஹிந்துவுக்கு ஏற்பட்டுள்ளது. இந்தியா இந்த விஷயத்தில் ஒரு நடுநிலையான நிலைப்பாட்டிற்கு செல்லக்கூடிய வாய்ப்புகள் இருப்பதால் Hindu is trying to make a frantic attempt to brand LTTE as an anti-India force.



மகிந்த ராஜபக்ஷவின் இந்திய வருகைக்கு எந்தப் பலனும் கிடைக்காமல் போனதும், மாறாக இது வரையில் இல்லாத அளவு விடுதலைப் புலிகள் விஷயத்தில் இந்திய அரசு மொளனம் சாதித்ததும் "ஸ்ரீலங்கா ரத்னா" பட்டம் பெற்ற ஹிந்துவின் ஆசிரியருக்கு கவலையளித்துள்ளதாக தெரிகிறது.

ஹிந்துவுக்கு குறிப்பாக சில விஷயங்களில் கவலை ஏற்பட்டுள்ளது.

ஒன்று இலங்கை-இந்தியா கூட்டறிக்கையில் போர் நிறுத்த உடன்படிக்கைகளை பின்பற்றுமாறு கூறப்பட்டுள்ளதே தவிர விடுதலைப் புலிகள் போர் நிறுத்த உடன்படிக்கைகளை மீறுகிறார்கள் என்று இலங்கை ஜனாதிபதி இந்தியத் தலைவர்களிடம் முறையிட்டப் பிறகும், அது குறித்து அறிக்கையில் ஒன்றுமே கூறப்படவில்லை.

ஹிந்து இது குறித்து கவலை அடைந்து கீழ்க்கண்டவாறு எழுதியுள்ளது.

Surprisingly, the joint statement is foggy about why the ceasefire is threatened. Instead of identifying the LTTE as the author of the escalating violence, it points to "the need for the strict observance of the ceasefire and immediate resumption of talks aimed at strengthening the ceasefire." Is the non-condemnation of the LTTE deliberate - a consequence of pro-Eelam parties in Tamil Nadu, two of which are constituents of the United Progressive Alliance, applying pressure by ratcheting up the noise against the Rajapakse Government?

ஜோசப் பரராஜசிங்கம் சுட்டுக்கொல்லப்பட்டதும், யாழ்ப்பாணத்தில் மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலும், யாழ்ப்பாணத்தில் நடத்தப்பட்ட பாலியல் பாலத்காரமும், கிழக்கு மாகாணங்களில் நடந்து வரும் நிழல் யுத்தமும் ஹிந்துவுக்கு டிசம்பர் "Fog"ல் சரியாக தெரியாமல் இருந்திருக்கலாம். ஆனால் இந்திய அரசுக்கும், இந்தியாவின் உளவு நிறுவனங்களுக்கும் அது குறித்து தெரிந்துள்ளது. எனவே தான் இரு தரப்பும் போர் நிறுத்தத்தை கடைபிடிக்க வேண்டும் என்று இந்தியா வலியுறுத்தியுள்ளது. பொதுவாக இரு தரப்புமே போர் நிறுத்த உடன்படிக்கைகளை மீறி இருக்கிறார்கள் என்பது உலக நாடுகள் மத்தியில் தெரிந்த உண்மை. இதைத் தான் இந்தியாவும் செய்துள்ளது. அதற்கு நேர்மாறாக நடந்து கொண்டு தன்னுடைய Credibilityஐ உலக நாடுகள் மத்தியில் கேலி பொருளாக்க வேண்டிய அவசியம் இந்தியாவுக்கு இல்லை. எக்காரணத்தைப் பிடித்தாவது புலிகளை எதிர்த்தே தீர வேண்டிய ஹிந்துவின் Agenda இந்திய அரசுக்கு இப்பொழுது இல்லாமல் போனது மகிழ்ச்சியை அளிக்கிறது.

மற்றொன்று யாருமே எதிர்பாராதது - ஜெயலலிதா மகிந்த ராஜபக்ஷவை சந்திக்க மறுத்தது.

தேர்தல் நெருங்கும் வேளையில் ஜெயலலிதா இது போன்ற நிலைப்பாட்டினை மேற்கொண்டிருக்கிறார். தேர்தல் இல்லாதபட்சத்தில் அவர் இம் மாதிரியான நிலையினை மேற்கொண்டிருப்பாரா என்பது சந்தேகமே. ஆனால் சிங்கள பேரினவாத தலைவராக, தமிழர்களுக்கு உரிமைகளை மறுக்கும் ஒரு தலைவராக மகிந்தா பார்க்கப்படுகிறார். ஜெயலலிதாவின் நிலையே இவ்வாறு இருக்கும் பொழுது மைய அரசின் முக்கிய கூட்டணி கட்சியான திமுகவின் நிலை இந்திய அரசுக்கு புரிந்திருக்கும். மதிமுக, பாமக போன்ற கட்சிகள் இலங்கை அரசுக்கு இந்தியா எந்தவிதத்திலும் ஆதரவு வழங்க கூடாது என்று தொடர்ந்து பேசி வருகின்றன. இதனால் இந்திய அரசு, தமிழர்களுக்கு எதிரான, இலங்கை அரசுக்கு ஆதரவான ஒரு நிலையை எடுக்க முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.

இந்தியாவின் நிலையில் ஏற்பட்டுள்ள இந்த மாற்றம் ஹிந்துவுக்கு மிகுந்த கவலையளித்துள்ளது. எனவே New Delhi must not forget what Tamil Nadu Chief Minister Jayalalithaa has been unwaveringly clear about since May 21, 1991 என்ற பழைய ஆயுதத்தை மறுபடியும் பயன்படுத்த முனைந்துள்ளது.

இந்தியாவின் நிலையில் ஏற்பட்டுள்ள மாற்றத்திற்கு தமிழக அரசியல் கட்சிகள் மட்டுமே காரணம் என்று கூறி விட முடியாது. இதே காலக்கட்டத்தில் ரனிலோ, சந்திரிகாவோ இருந்திருந்தால், ராஜபக்ஷவிற்கு ஏற்பட்டதற்கு மாறாக நல்ல வரவேற்பு கிடைத்திருக்க கூடும். மகிந்த ராஜபக்ஷ உலக நாடுகளால் எப்படி பார்க்கப்படுகிறார் என்பதை அவரது இந்தியப் பயணமே அவருக்கு உணர்த்தி இருக்கும்.

மகிந்த ராஜபக்ஷவின் இந்தியப் பயணம் இரண்டு நோக்கங்களை முக்கியமாக கொண்டு இருந்தது

ஒன்று இந்தியாவை அணுசரணை செய்யும் நாடுகளில் ஒன்றாக மாற்றுவது. ஏற்கனவே நார்வே முக்கிய அணுசரணையாளராக இருந்தாலும், ஐரோப்பிய ஒன்றியம், அமெரிக்கா, ஜப்பான் போன்ற நாடுகளை உள்ளடக்கிய "co-chair's" ஒன்றை இலங்கை ஏற்படுத்தியுள்ளது. இதில் இந்தியாவையும் சேர்ப்பது ராஜபக்ஷவின் நோக்கமாக இருந்தது. ஆனால் இந்தியா இதனை கண்டுகொள்ளவில்லை.

மற்றொன்று விடுதலைப் புலிகளுக்கு எதிராக போர் நிறுத்த அத்துமீறல்கள் குறித்து ஒரு கண்டனத்தையாவது பெற்று இந்தியா தங்களுக்கு ஆதரவாக இருப்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்துவது.

ராஜபக்ஷ இந்த இரண்டு நோக்கங்களிலுமே வெற்றி பெறவில்லை.

இந்தியா அவரது முதல் நோக்கத்தை கண்டுகொள்ள வில்லை.

கடந்த காலங்களில் இலங்கையின் அமைச்சர்கள் இந்தியாவிற்கு ஒவ்வொரு முறையும் காவடி எடுக்கும் பொழுதெல்லாம், குறைந்தபட்சம் தனது கவலையையாவது இந்தியா வெளிப்படுத்தும். ஆனால் இம் முறை அவ்வாறு கூட இல்லை.

இவ்வாறு ராஜபக்ஷவின் நோக்கம் நிறைவேறாத பொழுதும் ஹிந்து தேடிக் கண்டுபிடித்து சில காரணங்கள் கூறுவது, நல்ல ஜோக்.

Of particular significance are bilateral efforts to identify joint ventures for the development of the eastern Sri Lankan port city of Trincomalee, and its surrounding region, and the agreement for a joint venture power plant in the same district. These projects will intensify India-Sri Lanka economic co-operation in a region the LTTE covets

இரு நாடுகளுக்கிடையே ஏற்பட்டுள்ள ஒரு பொருளாதார உடன்படிக்கை என்பதை தவிர மேற்கண்ட உடன்படிக்கையில் எந்த முக்கியமான அம்சமும் இருப்பதாக எனக்கு தெரியவில்லை. இது ஒன்றும் புதிய உடன்படிக்கை இல்லை. திருகோணமலையில் இந்தியா-இலங்கை இடையே ஏற்கனவே சில உடன்படிக்கைகள் உள்ளன. அப் பகுதியில் இருக்க கூடிய வாய்ப்புகளை கண்டறியக்கூடிய உடன்படிக்கை தானே தவிர செயல்படுத்தப்படும் என்பது நிச்சயமில்லை. செயல்படுத்த கூடிய வாய்ப்புகளும் இருப்பதாக தெரியவில்லை.

ரனிலிடம் இருந்து பாதுகாப்பு போன்ற சில பொறுப்புகளை சந்திரிகா பறித்த பொழுது அவர் கூறிய ஒரு காரணம் திருகோணமலையை சுற்றிலும் புலிகள் அரண் அமைத்துள்ளனர். போர் துவங்கும் பட்சத்தில் திருகோணமலை சில மணி நேரங்களில் புலிகள் வசம் சென்று விடும் என்பது தான். அவ்வாறான பகுதியில் இந்தியா எந்த முதலீட்டையும் செய்யாது.

ஆனால் ஹிந்து அதனை வேறு நோக்கில் பார்க்கிறது.

With this, India has forcefully made the point that it considers the North-East to be an integral part of Sri Lanka

"Forcefully" என்பது தான் கொஞ்சம் அதிகபட்சம்.

Hindu is desperate about the changing situation என்பதைத் தான் இந்த தலையங்கம் காட்டுகிறது.

இந்தியா இந்தப் பிரச்சனையில் எப்பொழுதுமே புலிகளுக்கு ஆதரவான ஒரு நிலையை எடுக்க முடியாது. இந்திய அரசியல் சூழ்நிலையும் கடந்த கால நிகழ்வுகளும் அதற்கு இடம் தராது.

இந்தியா இந்தப் பிரச்சனையில் இருந்து விலகி இருப்பதும், நடுநிலைமையுடன் செயல்படுவதும் முக்கியமானது என்று நான் நினைக்கிறேன். இலங்கை அரசுக்கு ஆதரவான கடந்த கால நிலைப்பாட்டில் இருந்து இந்தியா இம் முறை சற்றே விலகி இருப்பது, நடுநிலைமையான அணுகுமுறையின் துவக்கம் என்று நான் நினைக்கிறேன்.

19 மறுமொழிகள்:

-/பெயரிலி. said...

நண்பருக்கு வணக்கம்.
தற்போதுதான் இலங்கை குறித்த சில செய்தித்தாபனங்களின் குறிப்புகளிலே சில இணைப்புகளை RamWatch In Tamil இலே பதிவு செய்தோம். நீங்கள்கூட இத்தருணத்திலே இப்பதிவினையிட்டிருப்பது மகிழ்ச்சியினைத் தருகின்றது.

அதற்காக உங்களுக்கு நன்றியினைத் தெரிவித்துக்கொள்கிறோம்

11:38 PM, January 01, 2006
ROSAVASANTH said...

இந்துவின் 'அஜென்டா' பற்றி நீங்கள் (மற்றும் ராம்வாட்ச் போன்றவர்கள்) தொடர்ந்து சொல்வதை முழுவதும் ஏற்றுகொள்கிறேன். ஆனால் இந்துவின் இந்த செயல்பாடுகளின் பிண்ணணி குறித்த தெளிவு யாரிடமுமே(எனக்கும்) இல்லை என்றே தோன்றுகிறது. இதை வெறும் பார்பனியத்தின் தொடர்ச்சி அல்லது சந்திரிகாவின்/சிங்களத்தின் கைக்கூலி என்பது போல, பலர் சொல்வது போல், வார்த்தைகளால் விளக்க முடியும் என்று தோன்றவில்லை. (இந்துத்வ பரிவாரங்கள் மற்றும் அதன் பல பரிமாண ஆதரவாளர்கள் கூட இந்துவை சீனக்கைகூலி' என்பது போல பல வார்தைகளால் திட்டப்படுவதை கவனிக்கவேண்டும். அதே போல சில வார்த்த்தைகள் இந்துவின் அஜெண்டாவின் பிண்ணணியை விளக்கிவிடும் என்று தோன்றவில்லை.)

இந்தியாவில் 'சற்று ஆரோக்கியமாய்' சிந்திக்க கூடிய அனைவராலும் பொதிவாக பார்க்கக் கூடிய பத்திரிகையாக இந்து திகழ்ந்து வருகிறது. அருந்ததி ராய் கூட ஒரு கட்டுரையில் 'இந்து'த்தனமான சொல்லாடல்களில் ஈழப்பிரச்சனையை (குறிப்பாய் புலிகளை) போகிற போக்கில் குறிப்பிட்டு சென்றிஉருப்பார். அதே நேரம் மற்ற விஷயங்களில் இந்து மிக மோசமாய் இல்லாததையும் கவனிக்க வேண்டும். மற்ற பலவகைப்பட்ட கட்டுரைகளுக்கு இந்து இடமளிக்கவும் செய்கிறது. பலஸ்தீனத்திற்கு விடுதலை, காஷ்மீரத்திற்கு சுயாட்சி என்று பேசலாம். ஆனால் ஈழவிவாகரத்தில் மட்டும் இவையெல்லாம் பயங்கரவாதம் என்ற அடிப்படையில், இந்திய முற்போக்கின் நுகர்வுக்கு இந்து செய்திகளையும் ஆதாரங்களையும் விற்பதாக இருப்பதை எப்படி புரிந்துகொள்வது? இந்து ஏன் ஈழவிவகாரத்தில் மட்டும் ஒரு துக்ளக்காக செயல்படுகிறது என்பதை புரிந்துகொள்ள வேண்டியது முக்கியமானது என்று தோன்றுகிறது.

ஆனால் இதற்கான புரிதலைவிட, இந்த உண்மையை உரக்க சொல்வது அதைவிட முக்கியமானது.

1:32 AM, January 02, 2006
தமிழ் சசி | Tamil SASI said...

ஏன் ஹிந்து இவ்வாறு நடந்து கொள்கிறது என்பதை ஆராய வேண்டியதன் அவசியம் உள்ளது

இலங்கை-இந்திய ஒப்பந்தத்தின் பொழுது ஹிந்து ராமின் பங்களிப்பு முக்கியமானது. விடுதலைப் புலிகளின் பிரதிநிதிகள் அவரை சந்தித்து பேசியது, அதன் பிறகு அவர் ஜெயவர்த்தனே அரசின் அமைச்சர்களை சந்தித்து பேசியது, ராஜீவ் மற்றும் ரா உளவு அமைப்புடன் இந்த விவகாரத்தில் பணியாற்றியது போன்ற விவகாரங்களை சமீபத்தில் வாசித்தேன்.

அதன் பிறகு நடந்த விஷயங்கள் என்ன ? அவர் என்ன நோக்கத்தில் இந்திய-இலங்கை ஒப்பந்தத்தில் பணியாற்றினார் போன்ற விவகாரங்கள் அலசப்பட வேண்டியவை.

ஹிந்து மற்ற எல்லா விவகாரங்களிலும் சரியாக நடந்து கொள்கிறது என்றும் சொல்ல முடியாது. சமீபத்தில் திபெத் குறித்த ராமின் ஒரு கட்டுரையை வாசித்தேன். திபெத் சீனாவின் ஒரு பகுதி என்று வாதாடி இருப்பார். தலாய்லாமா தலைமையில் இந்தியாவில் நடக்கும் திபெத் அரசாங்கத்திற்கு இடமளிக்க கூடாது என்பதும் அவரது வாதம்.

திபெத் சீனாவால் ஆக்கிரமிக்குள்ளான பகுதி என்பது எல்லோராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட உண்மை. அதற்கு நேர்மாறான கருத்து உடையவர் தான் ராம்

2:02 AM, January 02, 2006
ROSAVASANTH said...

இந்துவின் திபெத் நிலைப்பாட்டை பற்றி நீங்கள் சொல்வதும் சரிதான். ஆனால் அது ஏன் என்று தெளிவாக புரிகிறது. இந்தியாவில் பல மார்க்சிய மாக்களிடம் உள்ள நிலைபாடுதான். ஈழபிரச்சனையில் அது போன்ற தெளிவான காரணக்கள் தெரியவில்லை என்று தோன்றுகிறது.

2:10 AM, January 02, 2006
ROSAVASANTH said...

மேலும் இழப்பிரச்சனையில் இந்துவின் நிலைபாடு ஒரு வெறிபிடித்த தன்மையை கொண்டிருப்பதை எப்படி புரிந்துகொள்வது?

2:12 AM, January 02, 2006
ROSAVASANTH said...

இழப்பிரச்சனையில் =ஈழப்பிரச்சனையில்

2:13 AM, January 02, 2006
ஜூலியன் said...

You have touched few important points, especially in your feedback. It is amazing to see how overlooked Mr. Ram's part in Indo-Lanka pact. If you haven't noticed look for this. In each and every editorial relevant to Sri Lanka appearing in his publications, there is always a punchline to make the imporatnace of the Indo-Lanka pact. He has double standards. One for Sri Lanka and Tibetian issues and the other for Kasmir and Palestinian issues.

However I have to agree with Mr. Vasanth to an extent. Totally branding Mr. Ram as a Bramin does not serve any good nor fully fair. Of course, he is a friend of Madam Chandrika, but it is not the only reason he is anti-ltte.

2:15 AM, January 02, 2006
இளங்கோ-டிசே said...

தரவுகளுடனான விரிவான இந்தப்பதிவுக்கு நன்றி, சசி.

2:25 AM, January 02, 2006
ஜூலியன் said...

Conventional Indian marxists are nothing but a lorry load of emptied cans of evaporated ether. They are yet to come in terms with their spent philosophy. If one looks their actions in the past, of course they are less corrupted than the other parties, but they never naturalised Marxism to India. They still want to show their philosophy works to India in the way they imported. Class stuggle has never been a prominent Indian problem, but the caste struggle is. They overlooked it, and still do. This is the mentality made them invite an ultra-national JVP to India as a fraternity organization. Talk to any Indian conventional communist. Without any valid reason, he negates the need for a country to Sri Lankan Tamilians. The funny reason comes out from his mouth will be the joint forces of Sri Lankan farmers and workers against the ruling class. Dammit! Don't they know what happens to the Indian Tamil labourers in the plantations and what happened to Malayaali workers in Colombo Harbour? Who were the forces behind these poor workers? Alas! the same sinhala labour unions run by nationalist leftees.

Fortunately or unfortunately for India and Nepal, only the unconventional naxalites are the ones who fight for the farmers suppressed in the name of caste. They are real marxists with their feet on their countries.

Mr. Ram, Mr. Raja and Mr. Varadarajan are nothing but the left over elite residue

2:38 AM, January 02, 2006
SnackDragon said...

/இந்தியாவின் நிலையில் ஏற்பட்டுள்ள இந்த மாற்றம் ஹிந்துவுக்கு மிகுந்த கவலையளித்துள்ளது. எனவே
New Delhi must not forget what Tamil Nadu Chief Minister Jayalalithaa has been
unwaveringly clear about since May 21, 1991
என்ற பழைய ஆயுதத்தை மறுபடியும் பயன்படுத்த முனைந்துள்ளது.
/
இதை மென்மையாகப் பார்க்கிறீர்கள்.

தமிழக முதல்வர், இலங்கை ஜனாதிபதியைச் சந்திக்க மறுத்துள்ளார் என்பதையும்
மறைத்து,
//New Delhi must not forget what Tamil Nadu Chief Minister Jayalalithaa has been
unwaveringly clear about since May 21, 1991 //
என்பதைத்தான் "பத்திரிகைக் காலித்தனம்" என்று சொல்வேன் நான்.
மிக்க நன்றி இப்பதிவுக்கு.

2:55 AM, January 02, 2006
Thangamani said...

தமிழ்சசி, இந்துவின் இந்த வெறிபிடித்த நிலைப்பாடு சில வருடங்களாக மிக வெளிப்படையாக தெரிவதுதான். உங்களின் இப்படியான சில முயற்சிகள் உண்மையின் பேரில் அக்கறை கொண்டவர்களுக்கு பயன்தரலாம்.

//ஈழப்பிரச்சனையில் இந்துவின் நிலைப்பாடு ஒரு வெறிபிடித்த தன்மையை கொண்டிருப்பதை எப்படி புரிந்துகொள்வது? //

ரொம்பசரியாக இந்தக் கேள்வியைத்தான் நானும் எழுப்பினேன்! ரோசா அதே கேள்வியை எழுப்பியது குறித்து மகிழ்ச்சியே. ஆனால் ரோசாவின் பதிலில் எனக்கு புரியவில்லை.

//இதை வெறும் பார்பனியத்தின் தொடர்ச்சி அல்லது சந்திரிகாவின்/சிங்களத்தின் கைக்கூலி என்பது போல, பலர் சொல்வது போல், வார்த்தைகளால் விளக்க முடியும் என்று தோன்றவில்லை.//

இந்து பத்திரிக்கை நடைமுறை இந்துத்துவ அஜண்டாவை எதிர்பதால் அது எப்படி சீனக்கைக்கூலி ஆகிவிடமுடியாதோ அப்படியே மார்சிஸ்ட் சார்பு நிலை எடுத்திருப்பதால் தமிழ்விரோத நிலை எடுக்கமுடியாதது என்றில்லை. பார்பனியத்தின் தொடர்ச்சி அது என்று எடுத்துக்கொள்ள முடியாது என்பதற்கும் வலுவான காரணங்கள் இல்லை.

ஆனால் எனக்கு ஒரு புரிதல் உண்டு. சில மார்க்சிஸ்ட் தலைவர்கள் மார்க்சிஸ்டாக ஆனதற்கே அவர்களால் சில மூடநம்பிக்கைகளை, இந்து சமயத்தை ஏற்றுக்கொள்ள முடியாமற் போனதும் (மேலைக்கல்வி இப்படி பல காரணங்களால்), பெரியாரை முன் வைத்து எழுந்த ஒரு விதமான தமிழ்விரோத உணர்வும் என்று நான் புரிந்துகொள்கிறேன்.

இதைப்பற்றி கொஞ்சம் விரிவான பார்வையை பெரியார் எழுதிய 'பொது உடமை இயக்கத்தில் இருக்கும் பிராமணரல்லாதாரின் கவனத்துக்கு' என்ற கையேட்டை படிப்பதன் மூலம் பெறலாம்.

இந்துவின் இந்த நிலைப்பாட்டுக்கு இதுதான் காரணம் என்று உறுதியாக நான் கூற எந்த வலுவான புறசாட்சியங்களும் இல்லை; ஆனால் இந்தக் காரணம் இல்லை என்று கூற அவசியமும் இல்லை.

2:57 AM, January 02, 2006
SnackDragon said...

//இலங்கை-இந்திய ஒப்பந்தத்தின் பொழுது ஹிந்து ராமின் பங்களிப்பு முக்கியமானது. விடுதலைப் புலிகளின் பிரதிநிதிகள் அவரை சந்தித்து பேசியது, அதன் பிறகு அவர் ஜெயவர்த்தனே அரசின் அமைச்சர்களை சந்தித்து பேசியது, ராஜீவ் மற்றும் ரா உளவு அமைப்புடன் இந்த விவகாரத்தில் பணியாற்றியது போன்ற விவகாரங்களை சமீபத்தில் வாசித்தேன்.
//
இதைப்பற்றி உங்களுக்குத் தெரிந்ததை/வாசித்ததை எழுத வேண்டுகிறேன்.

2:57 AM, January 02, 2006
thamillvaanan said...

தங்களின் விளக்கமான பதிவுகளுக்கு நன்றிகள்.

2:57 AM, January 02, 2006
Thangamani said...

Rose Maryயின் கருத்துக்களும் கவனத்தில் கொள்ளத்தக்கது. இதைக் குறிப்பிட நான் தவறிவிட்டேன்.

3:00 AM, January 02, 2006
Muthu said...

//இலங்கை-இந்திய ஒப்பந்தத்தின் பொழுது ஹிந்து ராமின் பங்களிப்பு முக்கியமானது. விடுதலைப் புலிகளின் பிரதிநிதிகள் அவரை சந்தித்து பேசியது, அதன் பிறகு அவர் ஜெயவர்த்தனே அரசின் அமைச்சர்களை சந்தித்து பேசியது, ராஜீவ் மற்றும் ரா உளவு அமைப்புடன் இந்த விவகாரத்தில் பணியாற்றியது//

/In each and every editorial relevant to Sri Lanka appearing in his publications, there is always a punchline to make the imporatnace of the Indo-Lanka pact. //

இந்த விவகாரத்தில் எனக்கு முழு விவரங்களும் தெரியாது..ஆனால் மேற்கண்ட வரியை படிக்கும்போது தான் பங்குபெற்ற ஒரு நடவடிக்கை தோல்வி அடைந்ததை புலிகள் தான் காரணம் என்று கூறி அவர்கள் மீது போட்டுப்பார்த்து அவர்களை விமர்சித்து,பிறகு ஒரு ஈகோவினால் அந்த நிலைப்பாட்டை தொடர்வது போன்ற நடவடிக்கையாக இருக்கலாம்.

ஏனென்றால் மற்ற விஷயங்களில் ஓரளவு பொறுப்பாக செயல்படுபவர் இதில் மட்டும் ஒருதலைபட்சமாக முடிவு எடுப்பதற்கு என்ன காரணம் இருக்கமுடியும்?

4:01 AM, January 02, 2006
தமிழ் சசி | Tamil SASI said...

// இதைப்பற்றி உங்களுக்குத் தெரிந்ததை/வாசித்ததை எழுத வேண்டுகிறேன்

கார்த்திக்,

இது பற்றி இன்னும் சில தகவல்களை சேகரித்து விட்டு எழுதுகிறேன்

நன்றி

6:13 PM, January 02, 2006
எம்.கே.குமார் said...

///இதே காலக்கட்டத்தில் ரனிலோ, சந்திரிகாவோ இருந்திருந்தால், ராஜபக்ஷவிற்கு ஏற்பட்டதற்கு மாறாக நல்ல வரவேற்பு கிடைத்திருக்க கூடும். மகிந்த ராஜபக்ஷ உலக நாடுகளால் எப்படி பார்க்கப்படுகிறார் என்பதை அவரது இந்தியப் பயணமே அவருக்கு உணர்த்தி இருக்கும்.///


கூட்டணிக்கட்சிகளாலோ, மாறிவரும் பொருளாதரப்பங்களிப்புகளாலோ, ராஜபக்ஷேயின் அரசியல் தந்திரங்களை உணர்ந்துகொண்டதாலோ அல்லது இவ்வட்டாரத்தின் அண்ணனாய் இருக்க விளைவதாலோ என காரணம் என்னவாய் இருந்தாலும் இந்தியா இப்படி நடந்துகொண்டது பாராட்டுக்குரியது.

எம்.கே.

10:47 PM, January 02, 2006
நண்பன் said...

நல்லவேளையாக ஹிந்துவை வாசிக்க வேண்டிய அவசியமில்லாது போய்விட்டது.

ஆனால், ஹிந்துவின் விஷமப் பிரச்சாரத்தைப் பலரும் ஏற்கனவே சுட்டிக் காட்டியுள்ளனர். சிங்களத்தில் இப்பொழுது அரசு மாறி விட்ட
சூழலில், மீண்டும் ஹிந்து தன் ஆதங்கத்தை வெளியிட்டிருக்கிறது.

தமிழகத்தில் எப்பொழுதுமே விடுதலைப் புலிகளுக்கு ஆதரவு உண்டு. இடையில் ராஜீவின் படுகொலை அந்த ஆதரவாளர்களை நிலைகுலையச்
செய்தது என்னவோ உண்மை தான். ஆனால், 15 வருடங்களுக்குப் பிறகு காலங்கள் மாறிப் போயின. இந்திராவின் படுகொலை ராஜீவின் படுகொலையை
விட வன்மையானது. ஆனால், அந்த கொலையைச் செய்த சீக்கியர்களையே இன்று இந்தியா மன்னித்து மறந்து விட்டது. அந்த இனத்தைச் சார்ந்த
மன்மோகன் சிங்கை சோனியா தேர்ந்தெடுத்த பொழுது, தமிழின ஆதரவாளர்களுக்குத் தெளிவாகப் புரிந்தது - ராஜீவின் கொலையும் காலத்தால் மன்னித்து
மறக்கப்பட வேண்டியது தான் என்பது.

தமிழக முதல்வர் ராஜபக்ஷேவை சந்திக்க மறுத்தது - அரசியல் காரணங்களுக்காகத் தான். பேரினவாத கும்பலின் தலைவர் என்பது மட்டுமெ
காரணமாக இருக்காது. காங்கிரஸ் இவரை எப்படி கையாளப் போகிறது என்பதை அனுமானித்திருக்கக் கூடும். அதற்கேற்ற மாதிரி தாளம்
போட்டிருக்கிறார். வருகின்ற அரசியல் களத்தில் - ஜெயலலிதா எப்பாடு பட்டாவது ஒரு வலுவான கூட்டணியை அமைத்து விடத் துடிக்கிறார்.
அதற்கு காங்கிரஸ் அல்லது பா.ம.க வின் துணை தேவைப்படும்.

பா.ம.க.வின் நிலைபாடு எல்லோருக்கும் தெளிவாகத் தெரிந்தது தான். மீதியுள்ள காங்கிரஸின் நிலைபாட்டையே தானும் கை கொண்டால்,
தனக்குரிய வாய்ப்புகளின் வாயில்கள் இன்னும் அடைக்கப்படாதிருக்கக் கூடிய சாத்தியக் கூறுகளை அவர் கையாண்டிருக்கிறார்.

9:18 AM, January 03, 2006