Saturday, August 05, 2006

அமெரிக்க ஊடகங்களின் இஸ்ரேல் அபிமானம்

இஸ்ரேல், லெபனானில் தாக்குதல் தொடுத்து வரும் நிலையில் அமெரிக்க ஊடகங்களில், ப்ரைம் டைம் செய்தி அலசல்களாக இந்தச் செய்தி தான் இடம் பிடித்து இருக்கிறது. பாக்ஸ், சி.என்.என் என பெரும்பாலான ஊடகங்களில் இஸ்ரேலின் சார்பு செய்திகள் தான் வாசிக்கப்பட்டு வருகின்றன. இஸ்ரேலின் தாக்குதலை நியாயப்படுத்துவது தான் இந்த ஊடகங்களின் முக்கிய வேலையாக இருந்து வருகின்றது.

அமெரிக்க ஊடகங்கள் இஸ்ரேலுக்கு ஆதரவான ஒரு நிலையை அமெரிக்க மக்களிடம் ஏற்படுத்த பல காலமாக தொடர்ந்து முனைந்து வருகின்றன. இஸ்ரேல் பயங்கரவாதிகளின் தாக்குதலுக்கு இலக்காகி வருகின்றது என்பன போன்ற ஒரு பிம்பம் திட்டமிட்டு ஏற்படுத்தப்பட்டு இருக்கிறது. ஆனால் இஸ்ரேல் பாலஸ்தீனிய மக்கள் மேல் தொடுத்த பயங்கரவாதத்தின் எதிர்வினை தான் இஸ்ரேல் மீது தொடுக்கப்படும் தாக்குதல் என்பதை இந்த ஊடகங்கள் சரியாக வெளிக்கொணர்ந்ததில்லை.

அது குறித்த ஒரு விரிவான குறும்படத்தை - Peace, Propaganda & the Promised Land, சமீபத்தில் பார்த்தேன். ஒரு மணி நேரம் செல்லக்கூடிய அந்தக் குறும்படம் அமெரிக்க ஊடகங்களின் இஸ்ரேல் சார்புகளை வெளிப்படுத்துகிறது

Peace, Propaganda & the Promised Land provides a striking comparison of U.S. and international media coverage of the crisis in the Middle East, zeroing in on how structural distortions in U.S. coverage have reinforced false perceptions of the Israeli-Palestinian conflict. This pivotal documentary exposes how the foreign policy interests of American political elites--oil, and a need to have a secure military base in the region, among others--work in combination with Israeli public relations strategies to exercise a powerful influence over how news from the region is reported.
Through the voices of scholars, media critics, peace activists, religious figures, and Middle East experts, Peace, Propaganda & the Promised Land carefully analyzes and explains how--through the use of language, framing and context--the Israeli occupation of the West Bank and Gaza remains hidden in the news media, and Israeli colonization of the occupied terrorities appears to be a defensive move rather than an offensive one. The documentary also explores the ways that U.S. journalists, for reasons ranging from intimidation to a lack of thorough investigation, have become complicit in carrying out Israel's PR campaign. At its core, the documentary raises questions about the ethics and role of journalism, and the relationship between media and politics.

10 மறுமொழிகள்:

பத்மா அர்விந்த் said...

They can no do it any other way. Jewish people in NY are very powerful and wealthy. Their votes are very important and US govt can not act against it even if they try to, not 100%

5:38 PM, August 05, 2006
Sivabalan said...

சசி
நல்ல்தொரு பதிவு.

நான் கேள்விப்பட்டவரை அமெரிக்க ஊடகங்களில் முக்கியமான இடங்களில் யூதர்களின் ஆதிக்கம் இருப்பதாகவும் அதனால் தான் இஸ்ரேல் ஆதரவான நிலையில் இருப்பதாக கேள்விப்பட்டேன்.

6:59 PM, August 05, 2006
வெற்றி said...

சசி,
வணக்கம்.
அமெரிக்க ஊடகங்களில் மட்டுமல்ல அதிகமான மேற்குலக நாடுகளின் ஊடகங்கள் இஸ்ரேல் சார்புச் செய்திகளைத்தான் மக்கள் மீது திணிக்கிறார்கள். வியற்னாம் போரின் போது அமெரிக்கப் படைகள் வியற்னாமில் செய்த கொடுமைகளை உடனுக்குடன் அமெரிக்க மக்களுக்குத் தெரியப்படுத்தியதும் அமெரிக்க ஊடகங்கள். அன்று ஊடகத்தர்மம் தலைதூக்கியிருந்த காலம். ஆனால் இன்று நிலமை தலைகீழ். குறிப்பாக பெரிய நிறுவனங்கள், அல்லது பணம் படைத்த தனிநபர்கள் தான் ஊடகங்களுக்கு உரிமையாளர்களாக இருக்கிறார்கள். அவர்கள் தமது நலன்களுக்காக, அரசியல்வாதிகளிடமிருந்து பெறும் சலுகைகளுக்காகவும் இப்படி பொய்யான செய்திகளைப் பரப்புகிறார்கள் என்பதுதான் என் எண்ணம். எடுத்துக்காட்டாக, CNN ஜ எடுத்துப்பாருங்கள். அதன் உரிமையாளர் Turner செல்வந்தர். அவர் Atlanta Braves எனும் baseball அணிக்கும் உரிமையாளர்.

7:56 PM, August 05, 2006
வெற்றி said...

சசி,
இப்ப தான் நீங்கள் உங்கள் பதிவில் இணைத்திருந்த குறும்படத்தைப் பார்த்தேன். நெஞ்சைக் கனக்க வைக்கும் படம். சில காலங்களுக்கு முன் கிட்லரின் ஆட்சியில் துன்பமுற்று , எத்தனையோ அடக்குமுறைகளைச் சந்தித்த யூத இனம் , இன்னுமொரு இனத்தை அடக்கியாள்கிறது என்பது வேதனைகுரிய விடயம். ஒரு இனத்தை அடக்கியாள்வதின் மூலம் இஸ்ரேல் தான் விரும்பும் அமைதியை என்று அடையாது என்பது உறுதி.

12:57 AM, August 06, 2006
வாசகன் said...

'ஒருவனைக்கொன்றால் தண்டனை.
ஒட்டுமொத்தமாகக் கொன்றால் விசாரணைக்கமிஷன்' என்றொரு யதார்த்தப்பதார்த்தம் இந்தியாவில் உண்டு.

'அப்பாவிகளைக் கொல்லும் பயங்கரவாதியின் குண்டு அரசாங்க முத்திரை கொண்டுவிட்டால் அச்செயல் போர் என்று பெயர் பெறும்' என்பது அ(மெரிக்க) நியாயம். அதுவும் 'இஸ்ரேல் முத்திரை' ஏக உத்தமம்.

மானுடத்தின் மனசாட்சிகள் விழித்தெழாத வரை அரக்கத்தனத்துக்கும் பயங்கரவாதத்துக்கும் அப்பாவிகளே இரை.

மனசாட்சிகளை உறங்கவைக்கும் வேலையில் 'பிசி'யாகவே இருந்துக்கொண்டிருக்கின்றன மீடியாக்கள் என்பதற்கு பணமே சாட்சி.

3:59 AM, August 06, 2006
வஜ்ரா said...

சசி,

இஸ்ரேல் பக்கம் ஞாயம் உள்ளது..ஹெஸ்பல்லா தரப்பில் வெறுப்பு, துவேஷம், இன மத வெறி தவிர வேறேதுமில்லை.

உங்களால் ஹெஸ்பல்லா ஏன் மகள் நெருக்கடி பகுதியிலிருந்து இஸ்ரேல் மேல் ராக்கெட்டுகள் ஏவ வேண்டும், ஏன் பொது மக்கள் நிறைந்த பகுதியில் மீட்டிங் நடத்தவேண்டும்...என்று அரபு செய்திகளில் விவாதிக்கிறார்களா என்று சோல்ல முடியுமா?

அவர்கள் மீது இஸ்ரேல் பாய்ந்தால் சர்வதேச சமுதாயம் இஸ்ரேலை எதிர்க்கவேண்டும் என்ற கொடூர எண்ணத்தில் தானே...?

எதிர்ப்பு அரசியல் இப்போது இஸ்லாமிய த்தீவிரவாத அபிமானிகளாகவும், ஞாயத்தின் எதிரிகளுக்கும் சுதந்திரத்தின் எதிரிகளுக்கும் வக்காலத்து வாங்குவது கேவலமாக உள்ளது.

3:33 PM, August 06, 2006
Santhosh said...

சசி அருமையானதொரு வீடியோ.
வஜ்ரா சங்கர் நீங்க சில அடிப்ப்டையான விஷயங்களை மறந்து பேசுகிறீர்கள், பாலஸ்தீனியர்கள் அவர்களுக்கு சொந்தமான பகுதிகளில் வசிக்க தடை விதிக்கப்படுகிறது அதை அவர்கள் எதிர்க்கிறார்கள் அந்த எதிர்ப்பு முயற்சி ஊடகங்கள் வாயிலாக தீவிரவாதம் என்று முத்திரை குத்தப்படுகின்றது. உங்க வீட்டுக்கு வந்து உங்களை வெளியேற்ற முயற்சி செய்து அதை நீங்கள் எதிர்க்கும் முயற்சியை திவிரவாதம் என்று செல்லப்படுவதை போலத்தான் இருக்கிறது இஸ்ரேலின் காஸா மற்றும் மேற்குகரை எதிர்ப்புக்கள். முதலில் உங்களை படைகளை அங்கிருந்து வெளியேற்றுங்க பிறகு தீவிரவாதிகள் உருவானால் திருப்பி அடியுங்கள் அதை விட்டு அவங்க நாட்டில் குடியேற முயற்சி செய்து எதிர்ப்பவர்களை தீவிரவாதிகள் என்று முத்திரை குத்துவது எந்த விதத்தில் நியாயம். நீங்க அந்த வீடியோவை பாத்திங்கன்னா இது புரியும். ஹெஸ்புல்லா வேறு கதை இது காஸா மற்றும் மேற்குக்கரை பகுதிகளில் இஸ்ரேலின் செயல்களை விளக்கும் வீடியோ.

இதே மாதிரி போனால் சில காலம் கழித்து முஸ்லிம்கள் என்றாலே தீவிரவாதிகள் என்று முத்திரைக்குத்தப்படுவர். இன்று முஸ்லிம்கள் நாளை இந்துக்கள் யார் கண்டார்கள்.

8:00 PM, August 06, 2006
வஜ்ரா said...

santhosh,

யூதர்கள் பாலஸ்தீனர்களுக்குச் சொந்தமான நாட்டை ஆக்கிரமித்துள்ள்னர்

//
பாலஸ்தீனியர்கள் அவர்களுக்கு சொந்தமான பகுதிகளில் வசிக்க தடை விதிக்கப்படுகிறது அதை அவர்கள் எதிர்க்கிறார்கள் அந்த எதிர்ப்பு முயற்சி ஊடகங்கள் வாயிலாக தீவிரவாதம் என்று முத்திரை குத்தப்படுகின்றது.
//

எது தீவிரவாதம்?

சரி, காசா, மேற்குத் கரை பகுதியை விட்டு இஸ்ரேல் வெளியேறிவிட்டது...என்று வைத்துக் கொள்வோம்... நாளை ஜெரூசலத்திலிருந்து வெளியேறு என்று வாதம் வரும்...தீவிரவாதம் செய்ய ஒரு காரணம் வேண்டும் இஸ்லாமியருக்கு...

யூதர்களைக் கொல்ல ஒரு காரணம் வேண்டும்...

palestine என்கிற நாடு உருவாவதற்கு எந்த தடையுமில்லை.

Two state solution பற்றி இஸ்ரேலின் சரித்திர நிலைப்பாடு..

//
இதே மாதிரி போனால் சில காலம் கழித்து முஸ்லிம்கள் என்றாலே தீவிரவாதிகள் என்று முத்திரைக்குத்தப்படுவர். இன்று முஸ்லிம்கள் நாளை இந்துக்கள் யார் கண்டார்கள்.
//

அந்த காலம் வெகுதூரத்தில் இல்லை...

இரண்டு விதமான முஸ்லீம்கள் உள்ளனர். தீவிரவாதத்தை ஆதரிக்கும் ஒரு பகுதி, மிகவும் politically active இஸ்லாமியர்கள்...

தீவிரவாதத்தை எதிர்க்கும் பெரும்பான்மையினர், ஆனால் எதிர்த்துப் பேசினால் தலை துண்டாகும் அபாயம் உள்ள நிலையில் வாழ்பவர்கள்...

அவர்கள் கையில் தான் பிரச்சனைக்கு விடை உள்ளது...

2:38 AM, August 07, 2006
Anonymous said...

Israel have the rights to live in their country like us, why should we hate them?
Never support Terrorism, If hisbullah have right to kill Israel people, then Pakistan terrorism also have right to kill indian people. Are u support the terrorist who killed the people in mumbai bome blast?, Will you support pakistan terrorist if they launch rockets on your house?

8:58 PM, August 07, 2006
dondu(#11168674346665545885) said...

உங்களுக்கு பிடிக்கிறதோ இல்லையோ, சரித்திர உண்மைகள் என்று உள்ளன. பாலஸ்தீன் எப்போதுமே சுதந்திர நாடாக இருந்ததில்லை. துருக்கியர் கீழ் அது ஒரு மானிலமாக இருந்தது. முதல் உலக மகா யுத்தத்துக்குப் பிறகு அது பிரிட்டனின் மேண்டேட் பிரதேசமாக ஆனது. அதை இரண்டாகப் பிரித்தது ஐ.நா. சபை. ஒன்று யூதர்களுக்கும் இன்னொன்று அரேபியர்களுக்கும் கொடுக்கப்பட்டது.

தங்கள் பகுதியில் இஸ்ரேலியர் முதல் நாளிலிருந்தே அரசு அமைத்து நிர்வகித்து வருகின்றனர். இன்னொரு பகுதியை ஜோர்டானியரும் எகிப்தும் ஆக்கிரமித்தனர்.

இதற்காக யாருமே ஜோர்டானையும் எகிப்தையும் கண்டிப்பதாகத் தெரியவில்லையே, ஏன்?

நெகேவ் பாலைவனத்தையே சோலைவனமாக்கிய இஸ்ரவேலர்கள் எங்கே, அளித்த நிதியை கபளீகரம் செய்த அராஃபாத் போன்றவர்கள் எங்கே?

அன்புடன்,
டோண்டு ராகவன்

7:29 PM, November 16, 2006