வணக்கம்

சசியின் டைரி என்ற என்னுடைய வலைப்பதிவிற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறேன்.

அரசியல், பொருளாதாரம், ஈழம், காஷ்மீர், சமூகம் என கடந்த 9 வருடங்களில் பல தலைப்புகளில் எழுதப்பட்டிருக்கின்ற என்னுடைய கட்டுரைகளை வாசிக்க உங்களை அழைக்கிறேன்

ஈழம்

என்னுடைய ஈழம் குறித்த பதிவுகளில் ஈழப்போராட்டம் குறித்த வரலாறு, போர், சாமானிய தமிழனின் வாழ்க்கை போராட்டம், இந்தியாவின் மறைமுக போர், தமிழக அரசியல்வாதிகளின் சுயநலம் என பல பார்வைகள் உள்ளன

வாசிக்க...

ஓவியம் : நன்றி - தூரிகைகளின் துயரப்பதிவுகள்

காஷ்மீர்

காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதியாக கூறப்பட்டு கொண்டிருந்த தருணத்தில் 2005ல் காஷ்மீருக்கு விடுதலை வேண்டும் என வலைப்பதிவுகளில் எழுதினேன். காஷ்மீர் குறித்து இந்திய ஊடகங்கள் வெளியிடாத சில தகவல்களையாவது என்னுடைய கட்டுரைகளில் பேசிய திருப்தி எனக்கு உண்டு

வாசிக்க...

அப்துல் கலாம் என்னும் தேசியவாத முகமூடி

அப்துல் கலாம் தமிழகத்தில் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவராக கருதப்பட்டார். தமிழக எழுத்தாளர்கள அவரை விமர்சிக்காமல் இருந்த தருணத்திலேயே அவரை வலைப்பதிவில் நான் விமர்சித்து எழுதினேன்

வாசிக்க...

பிற கட்டுரைகள்

தமிழக அரசியல், அமெரிக்க தேர்தல், இந்திய பொருளாதாரம், தமிழ் தேசியம், ஒடுக்கப்பட்ட மற்றும் தலித் மக்களின் பிரச்சனைகள் என பல கட்டுரைகள் இந்த வலைத்தளத்தில் உள்ளன. வாசியுங்கள், உங்கள் விமர்சனங்களையும் அனுப்புங்கள்

மின்னஞ்சல் : thamizhsasi@gmail.com

Friday, February 09, 2007

காணாமல் போகும் காஷ்மீரிகள்

காஷ்மீரில் இந்திய இராணுவத்தின் மனித உரிமை மீறல் குறித்து பல மனித உரிமை அமைப்புகள் தொடர்ந்து குரல் கொடுத்து வந்திருந்தாலும் அந்த குரல் அதிகம் எடுபட்டதில்லை. இந்திய இராணுவத்தின் மனித உரிமை மீறல்களுக்கு எதிராக குரல் கொடுப்பவர்களை தேசவிரோதிகள் என்று கூறுவது வழக்கமான ஒன்று. இத்தகைய மனித உரிமை மீறல்களை பெரும்பாலான வெகுஜன ஊடகங்கள் கண்டுகொண்டதில்லை.

ஆனால் கடந்த வாரம் காஷ்மீரில் தாங்கள் "பதவி உயர்வு பெரும் பொருட்டு" சில இராணுவத்தினர் "Fake encounter"ல் அப்பாவி காஷ்மீரிகளை கொன்றிருப்பதை இந்திய வெகுஜன ஊடகங்கள் வெளியிட்டு உள்ளன. (இது குறித்து வலைப்பதிவுகளில் எழுதப்பட்டதா என்று தெரியவில்லை).

இது குறித்த ஹிந்து நாளிதழின் தலையங்கம்
Criminals in combat fatigues

CNN IBN செய்திப் படங்கள்
Price families pay for fake encounters
Truth behind Jammu & Kashmir fake encounters

இது காஷ்மீரில் புதியதாக நடக்கும் நிகழ்வு அல்ல. இந்திய இராணுவத்தின் மனித உரிமை மீறல் குறித்து கடந்த ஆண்டு நான் எனது பதிவில் வெளியிட்ட ஒரு குறும்படம் - காஷ்மீர் பற்றிய குறும்படம் . ஆனால் இத்தகைய செய்திகள் இப்பொழுது தான் வெகுஜன ஊடகங்களில் வெளியாகின்றன.


அப்பாவி காஷ்மீர் இளைஞர்களை சட்டவிரோதமாக கைது செய்வதும், பிறகு அந்த இளைஞர்களை பாக்கிஸ்தானை சேர்ந்த தீவிரவாதிகள் என்று கூறி போலியான encounterல் சுட்டுத்தள்ளுவதும் காஷ்மீரில் தொடர்ந்து நடந்து வரும் நிகழ்வு தான்.

Association of Parents of Disappeared Persons (APDP) என்ற காஷ்மீர் இளைஞர்களின் பெற்றோர்களைக் கொண்ட அமைப்பு பாக்கிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த தீவிரவாதிகளாக முன்நிறுத்தப்பட்ட பலர் காஷ்மீரைச் சேர்ந்த இளைஞர்கள் தான் என்று கூறுகிறது. காஷ்மீரில் தீவிரவாதம் உருவாகிய பிறகு இது வரை சுமார் 10,000 காஷ்மீர் இளைஞர்கள் காணாமல் போய்விட்டதாக இந்த அமைப்பு தெரிவிக்கிறது.

2003ம் ஆண்டு ஜம்மு காஷ்மீர் மாநில அரசு வெளியிட்ட புள்ளி விபரங்களில் இது வரை காஷ்மீரைச் சேர்ந்த 3,744 காஷ்மீரிகள் காணாமல் போய் இருப்பதாக தெரிவிக்கிறது. ஆனால் இதில் காவல் துறையாலும், இராணுவத்தினராலும் சுமார் 60பேர் மட்டுமே கொல்லப்பட்டிருக்க கூடிய வாய்ப்பு இருப்பதாக காஷ்மீரின் அப்போதைய முதலமைச்சர் முப்தி முகமது சையீது தெரிவித்தார். இப்போதைய முதல்வர் குலாம் நபி ஆஸாத்தோ, காஷ்மீரில் இது வரையில் காணாமல் போய் இருப்பவர்கள் குறித்து என்னால் கூற முடியாது, ஆனால் எனது ஆட்சியில் காணாமல் போய் இருப்பவர்கள் குறித்து நடவடிக்கை எடுப்பேன் என்று கூறியிருக்கிறார்.

ஒரு மாநிலத்தின் முதல்வரே ஒப்புக்கொண்டுள்ள மிக மோசமான மனித உரிமை மீறல்களை காஷ்மீர் மக்கள் எதிர்கொண்டுள்ளனர் என்பதையே இது தெளிவுபடுத்துகிறது. இது ஒரு மோசமான நிலை ஆகும்.

நான் என்னுடைய முந்தைய ஒரு பதிவில் கூறியிருந்ததை தான் மறுபடியும் சுட்டிக்காட்ட நினைக்கிறேன்

காஷ்மீர் இந்தியாவிற்குச் சொந்தமா, பாக்கிஸ்தானுக்குச் சொந்தமா என்பதை விட காஷ்மீர் மக்களுக்குச் சொந்தமானது, அவர்களின் முடிவு தான் முக்கியமானது என்பதை நாம் உணரவேண்டும். ஆனால் நம்மில் பலர் இதனை புரிந்து கொள்வதேயில்லை. உண்மையை கூறுபவர்களை தேச விரோதிகள் என்றும் முத்திரை குத்தி விடுகிறோம்.

காஷ்மீரில் இயங்கும் தீவிரவாத இயக்கங்கள் மற்றும் இந்திய இராணுவத்தினரால் பாதிக்கப்படுவது அப்பாவி காஷ்மீர் மக்கள் தான். இராணுவம், தீவிரவாதிகள் என இவர்கள் இருவரிடம் சிக்கிக் கொண்டு தங்களின் அன்றாட வாழ்க்கையை கடும் இன்னல்கள், மனித உரிமை மீறல்கள் இவற்றிடையே கழிக்கும் காஷ்மீர் மக்களின் சுயநிர்ணயம் மதிக்கப்பட வேண்டும்

BBC செய்தி - Kashmir shut down over killings

Leia Mais…