Tuesday, August 07, 2007

மாலனின் அரசியல்

சென்னை பதிவர் பட்டறையில் மாலன் அவர்கள் வலைப்பதிவுகளில் நன்னடத்தை என்பது குறித்தும், ஈழத்தமிழர்கள் சிறீலங்கா பாஸ்போர்ட் வைத்துக் கொள்வது பற்றியும் சில கருத்துக்களை தெரிவித்துள்ளது தெரியவந்துள்ளது.

மாலன் சிறந்த பத்திரிக்கையாளர், எந்தவித பந்தாவும் இல்லாதவர் என்ற காரணத்தால் அவர் மீது எனக்கு மரியாதை உண்டு. ஆனால் சிறந்த, நன்கு அறிந்த பத்திரிக்கையாளர் என்பதால் அவர் முன்வைக்கும் "அரசியலை" எதிர்க்காமல் இருக்க முடியாது.

புதியதாக வலைப்பதிய வருபவர்களுக்கு மத்தியில் அவர் விதைக்க விரும்புவதை "அதிகபட்ச ஜனநாயகம்" இருக்கும் வலைப்பதிவுகளில் எதிர்க்காமல் எங்கு சென்று எதிர்ப்பது ? இந்தப் பத்திரிக்கையாளர்கள் பணியாற்றும் பத்திரிக்கைகளுக்கு வாசகர் கடிதம் எழுதியா எதிர்க்க முடியும் ? அப்படி வாசகர் கடிதம் எழுதினாலும் அதனை இந்தப் பத்திரிக்கையாளர்கள் வெளியிடுவார்களா ? அல்லது இது வரை தீவிரமான மாற்றுக் கருத்துக்களை வெளியிட்டிருக்கிறார்களா ?

நான் பள்ளியில் படிக்கும் பொழுது பொங்கல் சிறப்பு இதழாக ஒரு முறை புலம் பெயர்ந்த தமிழர் சிறப்பிதழ் என்ற ஒரு இதழ் வெளிவரும் என்று தினமணிக்கதிரில் அறிவித்திருந்தார்கள். அப்பொழுது தினமணிக்கதிரின் ஆசிரியராக இருந்தவர் மாலன் என்பதாக ஞாபகம். நானும் அந்த சிறப்பிதழுக்காக ஆவலுடன் இருந்தேன். வந்த பொழுது புலம் பெயர்ந்த சிறப்பிதழ் என்பது முழுக்க முழுக்க புலிகளுக்கு எதிரான இதழாக இருந்தது. அதைக் கண்டித்து நான் எழுதிய வாசகர் கடிதம் வெளிவரவேயில்லை.

ஆனால் இன்றைக்கு என் வலைப்பதிவு மூலமாக என் கருத்துக்களை கூற முடிகிறது. யாரையும் கேள்வி கேட்க முடிகிறது. ஒரு சாமானியனுக்கு இணையம் கொடுத்த இந்த ஜனநாயக உரிமை பலரின் கண்களை உறுத்துகிறது. இந்த ஜனநாயக உரிமையை முறிக்க அவர்கள் இணையத்தில் நன்னடத்தை என்பதை முன் வைக்கிறார்கள்.

இணையத்தில் பிரச்சனை இல்லை என்று நான் சொல்ல வில்லை. ஆனால் தமிழ் இலக்கிய சூழலிலும், தமிழக மற்றும் இந்திய வெகுஜன ஊடகங்களிலும் இருக்கும் பிரச்சனைகளை நோக்கினால் வலைப்பதிவுகளில் நடப்பது ஒன்றுமேயில்லை. ஆனால் அங்கெல்லாம் நன்னடத்தை வேண்டும் என யாரும் போதிப்பதில்லை.

எனக்கு முதன் முதலில் அறிமுகமான இலக்கிய சண்டை என்று சொன்னால் நான் பள்ளியில் படிக்கும் பொழுது சமுத்திரத்திற்கும், திலகவதிக்கும் இடையே நடந்த சண்டையை குறிப்பிடலாம். சாகித்திய அகடமி விருது பெற்ற எழுத்தாளர் சமுத்திரம் பெண் எழுத்தாளர்கள் குறித்து உளறி வைக்க, திலகவதி நாங்கள் இப்படி பட்டவர்களை அடிக்க செருப்புகளை தேடிக்கொண்டிருக்கிறோம் என்றார். பதிலுக்கு திலகவதியின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து சமுத்திரம் தாக்க திலகவதி நீதிமன்றம் சென்று சமுத்திரம் என்னைப் பற்றி எழுதக்கூடாது என தடை உத்திரவு வாங்கியதாக ஞாபகம் இருக்கிறது.

அன்று தொடங்கி இன்று வரை தமிழ் இலக்கிய உலகில் எழுத்தாளர்கள் தங்களுக்குள் அடித்துக் கொள்வதை பார்த்திருக்கிறேன். வலைப்பதிவுகளில் நன்னடத்தைப் பற்றி பேசுகிறவர்கள் இந்த இலக்கியவாதிகள் எப்படி "உதாரண புருஷர்களாக" இருக்கலாம் என்பது குறித்து இலக்கிய மேடைகளில் பேசலாம்.

இந்திய வெகுஜன ஊடகங்களின் நன்னடத்தைப் பற்றி விளக்க வேண்டிய அவசியமில்லை. தயாநிதி மாறனை மைய அமைச்சர் பதவியில் இருந்து திமுக விடுவித்துக் கொண்ட பொழுது தினமலர் "கொசு தொல்லை ஒழிந்தது" என்பதாக தலைப்பு செய்தி வெளியிட்டது. தினகரன் அலுவலகம் மதுரையில் தாக்கப்பட்ட பொழுது "தஞ்சையில் எலிகளின் தொல்லை" என தலைப்பு செய்தி வெளியிட்டது. இதுவெல்லாம் ஒரு சில உதாரணங்களே. தனிமனித தாக்குதல் வெகுஜன ஊடகங்கள் முழுக்க நிறைந்து காணப்படுகிறது. அது மட்டுமா அப்பாவிகளை பயங்கரவாதிகளாக சித்தரிக்கும் போக்கும் அதன் மூலம் அவர்கள் வாழ்வியலை சிதைக்கும் போக்கும் ஊடகங்களில் காணப்படுகிறது. ஆஸ்திரேலியாவில் ஹனீப் இவ்வாறே ஊடகங்களால் பயங்கரவாதியாக சித்தரிக்கப்பட்டார். பின்னர் அவர் நிரபராதி எனக்கூறிய பொழுது அந்த ஊடகங்கள் சிறு மன்னிப்பு கூட கோரவில்லை. அடுத்த பரபரப்பு செய்திக்கு மாறி விட்டன.

இன்றைய வணிக மயமான ஊடகங்களுக்கு மத்தியிலே வலைப்பதிவுகளிலும், சிற்றிதழ்களிலும் தான் காத்திரமான பல நல்ல படைப்புகள் வெளிவருகின்றன. வெகுஜன ஊடகங்களில் நல்ல படைப்புகள் வெளிவருவது எப்பொழுதோ நின்று போய் விட்டது. வலைப்பதிவுகளில் சிரீயஸான விடயங்கள் மட்டும் தான் வர வேண்டும் என்ற கோட்பாடு தேவையில்லை. வலைப்பதிவுகள் அதன் இயல்பான பாதையில் பயணிப்பதே நல்லது. அந்த வகையில் மொக்கைகள்/கும்பிகள் தேவையற்றவை எனச் சொல்ல யாருக்கும் உரிமை இல்லை. வலைப்பதிவுகளில் அனைத்தும் கிடைக்கிறது. வருகின்ற வாசகர்களின் ரசனைக்கு ஏற்ப தங்களுக்கு தேவையானதை எடுத்துக் கொள்கிறார்கள்.

வலைப்பதிவுகள் ஒரு மாற்று ஊடகம். ஒரு சிலர் வெகுஜன ஊடகங்களை ஆக்கிரமித்து கொண்டு தங்களை மட்டுமே எழுத்தாளர்கள் என்பதாக உருவாக்கி கொண்ட முறைக்கு எதிராக "எழுதுபவன் எல்லாம் எழுத்தாளனே" என்பதை உருவாக்கிய சமதர்மம் வலைப்பதிவு உலகம். இங்கு மொக்கைகளும் கிடைக்கும், நல்ல காத்திரமான படைப்புகளும் கிடைக்கும். இதற்கு இலக்கணங்களையும், கோட்பாடுகளையும், நியதிகளையும் யாரும் வடிவமைக்க தேவையில்லை.

அப்படி நியதிகளை வகுத்தாலும் அதை உடைப்பதில் வலைப்பதிவர்களுக்கு எப்பொழுதுமே ஒரு ஆனந்தம் உண்டு

*****

தன்னை மார்க்சிஸ்ட் என்பதாக வெளிப்படுத்திக்கொள்ளும் ஹிந்து ஆசிரியர் என்.ராம், அமெரிக்க முதலாளித்துவத்தை எதிர்க்கும் என்.ராம் அவர் மகளை அமெரிக்க முதலாளித்துவ பலகலைக்கழகத்தில் படிக்க வைத்தமை முரண்பாடு தானே ? ஜெயேந்திரர் கைது செய்யப்பட்ட சமயத்தில் சங்கர மடத்தை கட்டிக்காக்க விஜயேந்திர சரஸ்வதியை முன்னிறுத்திய மார்க்சிஸ்ட் தானே என்.ராம் ? ஒரு மார்க்சிஸ்ட் சங்கர மடத்தை ஏன் கட்டிக்காப்பாற்ற வேண்டும் ?

இப்படிப்பட்ட ஒரு மார்க்ஸ்சிய சிந்தனை வறட்சியில் இருக்கும் இந்திய மார்க்சியவாதிகள் தான் இலங்கையில் சிங்கள இனவெறிப்பிடித்த ஜேவிபியினரிடம் மார்க்சிஸ்ட் என்பதாக தோழமை கொண்டாடுகிறார்கள். ஜேவிபியினர் என்ன இடதுசாரி கொள்கைவாதிகளா? அவர்கள் இனவெறிப்பிடித்தவர்கள் தானே ?

இத்தகைய கருத்துகளை தான் பெயரிலி தன் பின்னூட்டத்தில் முன்வைத்து இருந்தார். இது எப்படி தனி மனித தாக்குதல் ஆகும் ? வலைப்பதிவுகளில் நன்னடத்தை பற்றி பேசும் மாலன், பெயரிலி இல்லாத ஒரு இடத்தில் பெயரிலி பற்றி பேசுவது எப்படி நன்னடத்தையாகும் ?

சமீபத்தில் கொழும்பில் இருந்து வயதான மூதாட்டிகள் வரை தமிழர்கள் என்ற ஒரே காரணத்திற்காக வெளியேற்றப்பட்ட சூழலில் உலமெங்கும் இருக்கும் அனைத்து பத்திரிக்கைகளும் "தமிழர்கள் கொழும்பில் இருந்து வெளியேற்றப்பட்டதாக" செய்திகள் வெளியிட்டன. ஐ.நா மற்றும் மனித உரிமை அமைப்புகள் இதனை கடுமையாக கண்டித்திருந்தன. ஆனால் ஹிந்து "வேலையற்ற தமிழர்கள் கொழும்பில் இருந்து வெளியேற்றப்பட்டதாக" செய்தி வெளியிட்டது (jobless Tamils). அந்த செய்தியைப் படித்தால் பாதுகாப்பு காரணங்களுக்காக வேலையில்லாத இளைஞர்கள் கொழும்பில் இருந்து வெளியேற்றப்பட்டதாக இருக்கும்.

படத்தில் இருக்கின்ற இந்த மூதாட்டியும் கொழும்பில் இருந்து வெளியேற்றப்பட்ட ஒருவர். மூதாட்டியும் இந்த வயதில் கொழும்பில் வேலை தேடிக்கொண்டிருந்தாரா ? பிபிசி உள்ளிட்ட செய்தி நிறுவனங்கள் பொய் கூற ஹிந்து மட்டுமே உண்மையான செய்தியை வெளியிடுகிறதா ?

(பிபிசி செய்தி : Police evict Tamils from Colombo)
(ஹிந்து செய்தி : Jobless Tamils evicted from Colombo on grounds of security)

(இந்துவின் இன்னும் பலப் பொய்ச்செய்திகளையும், பிற ஊடகங்களில் வெளியான ஒப்பீடுகளையும் ராம் வாச்சர் பதிவில் படிக்கலாம் - http://ramwatchintamil.blogspot.com, http://ramwatch.blogspot.com/)

உண்மைகள் இவ்வாறு இருக்க "புலிகள் கூறினால் நம்புவார்களா ? ஹிந்து கூறினால் நம்புவார்களா ?" என மாலன் கூறுவது நகைப்பிற்குரியது மட்டுமல்ல. அது பின் இருக்கும் அரசியல்களையும் நமக்கு தெளிவு படுத்துகிறது.

ஈழ விவகாரங்களில் மாலன் அவர்களுடைய வாதங்கள் "புலிகள் எதிர்ப்பு, ஈழ தமிழர் எதிர்ப்பு, ஈழ விடுதலை எதிர்ப்பு" என கண்மூடித்தனமாக இருக்கிறது. என்றாலும் அவர் தினமணிக்கதிர், குமுதம் ஆகியவற்றில் பத்திரிக்கையளாராக இருந்த பல சமயங்களில் இதனையே முன்நிறுத்தி இருக்கிறார் என்பதால் அவரது எதிர்ப்பின் அரசியலை புரிந்து கொள்ள முடிகிறது. அந்த அரசியலை எதிர்க்க வேண்டிய தேவையும் உள்ளது.

*****

வலைப்பதிவுகளில் நன்னடத்தை என்பது குறித்து பேசும் ஒரு பேச்சில் ஈழ தமிழர்கள் சிறீலங்கா பாஸ்போர்ட் வைத்திருப்பது குறித்து
பேச வேண்டிய அவசியம் ஏன் நேருகிறது ?

ஈழத்தமிழர்கள் சிறீலங்கா பாஸ்போர்ட் வைத்திருப்பது ஒரு புறம் இருக்கட்டும்.

பொருளாதார/இராணுவ வல்லரசான இந்திய நாட்டின் பிரஜைகள் ஏன் பச்சை அட்டைக்காக அமெரிக்காவில் இந்த அலைச்சல் அலைகிறார்கள் ? கடந்த மாதம் அமெரிக்காவில் பச்சை அட்டைகளுக்கான I-485ஐ அமெரிக்க குடியுரிமைத்துறை நீண்ட வருடங்களுக்குப் பிறகு பெற்றுக்கொள்ள தொடங்கியிருக்கிறது. இதற்கு விண்ணப்பிப்பவர்கள் அமெரிக்காவில் இருந்தாக வேண்டும். இதில் இருக்கும் பல படிகளில் ஒரு சில படிகளை கடக்கும் வரை அமெரிக்காவை விட்டு வெளியேற முடியாத நிர்பந்தங்கள் கூட சிலருக்கு உண்டு. என்னுடைய ஒரு நண்பனின் மனைவி பிரசவத்திற்காக இந்தியா சென்று விட்டார். எட்டாவது மாதம். அவருக்கும் சேர்த்து I-485 விண்ணப்பம் செய்தாக வேண்டும். அவர் அமெரிக்காவில் இருந்தாக வேண்டும் என்பதால் அவரை உடனடியாக அமெரிக்கா வரும்படி நண்பர் கூறிவிட்டார். சிலர் தங்கள் திருமணங்களை கூட தள்ளி போட்டிருக்கிறார்கள். அந்தளவுக்கு பச்சை அட்டை மோகம் இங்குள்ள இந்தியர்களை பாடாய் படுத்துகிறது. வலைப்பதிவுகளில் இந்திய தேசியத்தை ஓங்கி முழங்கும் பலர் இந்திய பாஸ்போர்ட்டை துறந்து அமெரிக்க பாஸ்போர்ட்டைப் பெற்று கொண்டவர்கள் தான். அவர்களின் வாரிசுகள் அமெரிக்கர்கள். இந்தியர்கள் அல்ல.
இது ஏன் ?

இந்தியாவில் வாழ வழி இல்லையா ?

ஏனெனில் பொருளாதாரத்தை மேலும் பெருக்கி கொள்ளும் ஆசை. புலம் பெயரும் இடத்தில் கிடைக்கும் வாய்ப்புகள். இது புலம் பெயரும் அனைத்து நாட்டினருக்கும் பொருந்தும்.

ஆனால் ஈழத்தமிழர்களுக்கு இவை பொருந்தாது. இவர்கள் தேடி வருவது பொருளாதாரத்திற்காக அல்ல. தங்கள் உயிரை காப்பாற்றிக்கொள்வதற்காக. தங்களுடைய வாரிசுகள் இராணுவம் மற்றும் புலிகளின் கைகளில் சிக்கிக்கொள்வார்கள் என்று பயந்து வெளிவருகிறார்கள். நேற்று வெளியான அமெரிக்க மனித உரிமை அமைப்பின் அறிக்கை சிறீலங்கா அரசை கடுமையாக சாடுகிறது.

A US-based human rights group has accused the Sri Lankan government of what it calls a shocking rise in abuses by its security forces. Human Rights Watch said there had been an increase in unlawful killings, enforced disappearances and other abuses over the past 18 months.

The group's Asia director, Brad Adams, said the government had apparently given the green light to its security forces to use the tactics of dirty war.

http://news.bbc.co.uk/2/hi/south_asia/6932772.stm

உலகிலேயே காணாமல் போகும் மக்களின் எண்ணிக்கை இராக்கிற்கு பிறகு இலங்கையில் தான் அதிகம். அதனை முன்னின்று நடத்துபவர்கள் அரசு படையினர். இவர்களிடம் இருந்தும், போர் சூழலில் இருந்தும் தங்களை பாதுகாக்க அகதிகளாக வெளியேருகிறார்கள். அதற்கு தான் அவர்களுக்கு சிறீலங்கா பாஸ்போர்ட் தேவைப்படுகிறது. அவர்கள் என்ன லண்டனைச் சுற்றி பார்க்கவும், இலக்கிய கூட்டங்களில் வெற்றிலைப்பாக்கு போடவுமா பாஸ்போர்ட் வைத்திருக்கிறார்கள் ?

இங்கே பிரச்சனை என்வென்றால் அப்படி சிறீலங்கா பாஸ்போர்ட்டுடன் வருபவர்கள் இங்கே வந்தோமா, முருகனுக்கு பால் குடம் எடுத்தோமா, ரஜினி படம் பார்த்தோமா என்று இருப்பதில்லை. ஈழப்போராட்டத்திற்கு நிதி தருகிறார்கள். வலைப்பதிவுகளில் ஈழப்பிரச்சனைப் பற்றி எழுதுகிறார்கள், ஈழப்பிரச்சனை குறித்து உளறும் தமிழக எழுத்தாளர்களின் பிம்பங்களை உடைக்கிறார்கள். இது கூட பரவாயில்லை. ஆனால் இணைய வரலாற்றை வேறு எழுதுகிறார்கள் பாருங்கள். அது தான் பிரச்சனையே...

எனவே ஈழத்தமிழர்கள் இனி சிறீலங்கா பாஸ்போர்ட் கொண்டு வெளிநாட்டிற்கு வரக்கூடாது. தமிழீழ பாஸ்போர்ட் கிடைக்கும் வரை வெளிநாட்டிற்கே வரக்கூடாது. அப்பொழுது தான் ஈழப்போராட்டத்திற்க்கும் நிதி கிடைக்காது. ஈழ போராட்டமும் வெகுவிரைவில் நிதி இல்லாமல் சிங்கள படைகளுக்கு இரையாகி விடும்.

48 மறுமொழிகள்:

அற்புதன் said...

நன்றி சசி,

இதையும் பாருங்கள்.

http://aatputhan.blogspot.com/2007/08/blog-post.html

4:25 PM, August 07, 2007
வவ்வால் said...

தமிழ் சசி,

உங்கள் ஆதங்கம் சரியானதே, மாலனுக்கு அப்படி சொல்வதற்கு எவ்வித தார்மீக உரிமையும் இல்லை. அவர் என்ன சொன்னார் என்பதை கேட்கவில்லை எனினும் இலங்கைமக்களைப் பற்றி பட்டரையில் சொல்ல வரும் காரணம் என்ன, அது தேவையற்றது என்பதால். இதனை சொல்கிறேன்!

ஆனால் எனக்குள் எழும் தனிப்பட்ட ஒரு கேள்வி எத்தனை புலம்பெயர்ந்த இலங்கை தமிழர்கள் ஒரு தனி ஈழம் அல்லது அமைதி திரும்பினால் மீண்டும் இலங்கைக்கு திரும்ப வருவார்கள் என சொல்ல முடியுமா?

5:03 PM, August 07, 2007
ILA (a) இளா said...

//இங்கே பிரச்சனை என்வென்றால் அப்படி சிறீலங்கா பாஸ்போர்ட்டுடன் வருபவர்கள் இங்கே வந்தோமா, முருகனுக்கு பால் குடம் எடுத்தோமா, ரஜினி படம் பார்த்தோமா என்று இருப்பதில்லை. ஈழப்போராட்டத்திற்கு நிதி தருகிறார்கள். வலைப்பதிவுகளில் ஈழப்பிரச்சனைப் பற்றி எழுதுகிறார்கள், ஈழப்பிரச்சனை குறித்து உளறும் தமிழக எழுத்தாளர்களின் பிம்பங்களை உடைக்கிறார்கள். //
Well Said Sasi

//இது கூட பரவாயில்லை. ஆனால் இணைய வரலாற்றை வேறு எழுதுகிறார்கள் பாருங்கள். அது தான் பிரச்சனையே...//
Got your point :)

5:28 PM, August 07, 2007
தமிழ் சசி | Tamil SASI said...

வவ்வால்,

நான் எதிர்பார்த்துக்கொண்டிருந்த ஒரு கேள்வியை கேட்டிருக்கிறீர்கள்...

அமெரிக்காவில் நியூஜெர்சியில் மட்டும் லட்சக்கணக்கில் இந்தியர்கள் இருக்கிறார்கள். இந்தியாவில் என்ன பிரச்சனை ? போர் நடக்கிறதா ? குண்டு வீசுகிறார்களா ? இந்தியாவில் இல்லாமல் ஏன் இங்கே இருக்கிறார்கள் ? பல வெளிநாடுகளுக்கு செல்கிறார்கள் ?

காரணம் பொருளாதார தேடல் தானே ? அதேக் காரணம் ஈழத்தமிழர்கள் பலருக்கும் இருக்கும்.

எல்லா நாட்டினருக்கும் இருக்கும். ஒரு சாமானிய மனிதனின் பொருளாதார தேடல் தான் அது.

5:35 PM, August 07, 2007
-/சுடலை மாடன்/- said...

சில நேரங்களில் இந்தப் பெயரிலி ஏன் புறக்கணித்து செல்ல வேண்டிய விசயத்துக்காகவெல்லாம் சண்டைக்குப் புறப்பட்டுக் கொண்டிருக்கிறாரே என்று நினைப்பதுண்டு. ஆனால் புறக்கணித்து விட்டுப் போகும் பொழுது எல்லோருக்கும் நல்லபிள்ளையாக நடந்து கொள்பவர்கள் நயமாகச் செய்யும் தந்திர அரசியலோ புறக்கணிக்க முடியாதது. அதைத்தான் இந்த வலைப்பதிவர் பட்டறையிலும் செய்ய முயன்றிருக்கிறார்.

சசி, உங்களைப் போலவே நானும் மாலனை மதிப்பவன். அவருடைய எளிமையாகப் பழகும் பண்பில் நானும் ஈர்க்கப் பட்டிருக்கிறேன். ஆனால் ஈழப்பிரச்னையில் பத்திரிகைத் தர்மத்தை காலில் போட்டு மிதித்து ஈனத்தனமாக நடந்து கொண்டிருக்கும் என். இராமுக்கு வக்காலத்து வாங்கி காப்பாற்றுவதற்காக தன்னுடைய தார்மீக நெறியை இழக்கவும் மாலன் தயாராக இருக்கிறார் என்பது எனக்கு மிகவும் அதிர்ச்சியளிக்கிறது. அதுவும் வலைப் பதிவுகளில் தார்மீக நெறியைப் பற்றிய உரையின் போது அதைச் செய்கிறார்.

இங்கு மாலன் ஒரே கல்லில் இரண்டு மாங்கனிகளை வீழ்த்த எண்ணியிருக்கிறார். (1) பெயரிலியைப் பற்றிய பொய்யான ஒரு குறிப்பை ஏற்கனவே வலைப் பதிவுகளில் சொல்லி ஏற்கப் படாததால் "பெயரிலி தேவையில்லாமல் என். இராமின் குடும்பத்தை இழுக்கிறார்" என்ற அதே பொய்யை திரும்பவும் பட்டறையில் அரங்கேற்றுவது. செல்வநாயகியின் பதிவில் பெயரிலி எழுதிய வரிகளைப் படித்தாலே தெரியும், அதில் குடும்பத்தைத் தாக்கியிருக்கிறாரா இல்லையா என்று. அதை வாசிப்பவர்களின் கவனத்துக்கே விட்டு விடுகிறேன். (2) மாலன் சொல்வது உண்மையென்றே வைத்துக் கொள்வோம், அவர் பட்டறையில் எதற்காக இதைக் குறிப்பிடுகிறார் என்று யோசித்துப் பார்த்தால் புரியும் மாலனின் அதிபுத்திசாலித்தனமான தந்திரம் (வஞ்சகத்தனம் என்று குறிப்பிட வேண்டியதை மாலனின் இனிமைக்காக தந்திரம் என்று மட்டும் குறிப்ப்டுகிறேன்). பெயரிலி குடும்பத்தினரைத் தாக்குதலில் ஈடுபடுகிறார் என்று இணையத் தார்மீக நெறி பற்றிய உரையில் குறிப்பிட்டால் ஒட்டு மொத்தமாக அங்குள்ள அனைத்துப் பதிவர்களையும் பெயரிலியின் எழுத்துக்களை புறந்தள்ளி விட மறைமுகமாகப் பரிந்துரைக்கிறார். பெயரிலி சிரமப் பட்டு பல தரவுகளைத் தேடி எழுதும் ஒரு தொடரை குறைந்த பட்ச நேர்மையோடு எதிர் கொள்ள முடியாமல் வாசகர்களைப் படிக்காமல் செய்துவிட முயல்கிறார். மாலனுடைய இனிமையாகப் பழகும் பண்பும், அவர் பேச அழைக்கப் பட்டிருக்கும் கருத்தும் மாலனுக்கு இங்கு பயன்பட்டிருக்கின்றன. இங்கு இல்லாத ஒரு பதிவரைப் பற்றிப் மாலன் பேசியதோடு தங்களுக்கு உடன்பாடில்லை என்ற அளவிலாவது அந்த அமர்வை நடத்தியவர்கள் சொல்லியிருக்க வேண்டும்.

வாய்ஸ் ஆப் விங்க்ஸ் எழுதியது போல ஒரு வித அயற்சியுடனே தமிழ் இணைய வரலாறைப் பற்றிய விவாதத்தை முழுமையாகப் படிக்காத எனக்கு இப்பொழுது மாலனுடைய இடுகைகளையும், பெயரிலியின் இடுகைகளையும் வரி விடாமல் படிக்க வேண்டும் என்ற முனைப்பு ஏற்பட்டுள்ளது. அந்த அளவில் மாலனுக்கு என் நன்றி.

நன்றி - சொ. சங்கரபாண்டி

6:19 PM, August 07, 2007
*** said...

இந்து ராம் மார்க்சிஸ்டா??? நல்ல தமாஷ். அவர் உண்மையில் ஒரு விபீஷண பக்தர் (http://www.hindu.com/2005/11/15/stories/2005111517191400.htm)...

சீறிலங்கா ரத்தினமல்லாவா அவர். அவரிடம் போய் நியாயம் தர்மமெல்லாம் எதிர்பார்த்தால் எப்படி?

7:03 PM, August 07, 2007
குழைக்காட்டான் said...

வவ்வால்,

தனி ஈழம் கிடைத்தால் நான் அறிந்தவரை பலர் திரும்புவார்கள்.
எனினும் உங்கள் கேள்வியையே ஈழ எதிர்ப்பாளர்களும் கேட்டு பிரச்சினையையே திசை திருப்புவார்கள். ஏதோ எல்லோரும் திரும்பச்சம்மதித்தால் ஈழம் தந்து விடுவது போல!
இங்கிலாந்தில் வசித்த சுதந்திர இந்தியா அமையப் போராடிய இந்தியர்கள் அனேகர் இன்னும் இங்கிலாந்தின் குடிமக்களே.
அதே போலத்தான் தென்னாபிரிக்க , பாலஸ்தீனியர் களும்.
ஏன் யூதர்களை எடுத்டுக்கொள்ளுங்கள்.
ரஷ்ய யூதர்கள் தம்மை இஸ்ரேல் செல்ல அனுமதிக்க வேண்டுமென்று ரஷ்ய அரசை கேட்டனர். அதற்கு அமெரிக்காவும் அப்போதைய ஜனாதிபதி ரேகனும் ஆதரவு தெரிவித்ததலாமல் ரஷ்ய அரசை அழுத்தம் கொடுக்கவும் செய்தனர்.
ஆனால் ரஷ்ய யூதர்களில் 75 வீதமானோர் அமெரிக்காவில் தரித்துச்செல்லும் வகையில் விமானச்சீட்டு வாங்கி அமெரிக்காவிலேயே நிரந்தரமாக தங்கிவிட்டனர் என பிரபல பத்திரிகை ஒன்று (நியூயோர்க் ரைம்ஸ் என நினைக்கிறேன்) கூறியது.

7:06 PM, August 07, 2007
Thangamani said...

(பிபிசி செய்தி : Police evict Tamils from Colombo)
(ஹிந்து செய்தி : Jobless Tamils evicted from Colombo on grounds of security)

மேலே உள்ள செய்தித் திரிப்பை கவனிக்க.

ஒன்று பிபிசி செய்தியைத் திரித்திருக்கவேண்டும். அல்லது இந்து செய்திருக்கவேண்டும். அய்நா தொடங்கி மனித உரிமை அமைப்புகள் வரை இலங்கை அரசின் செயலை கண்டித்திருப்பதால் இந்தச் செய்தியில் பிபிசி திரித்திருப்பதாக சொல்முடியாது.

உலகத் தலைவர்கள், உலகப்பத்திரிக்கைகள், ஹாலிவுட் சினிமா நடிகர்கள், தலாய் லாமா, உள்ளூர் கம்யூனிஸ்டுகள், முருகன் இட்லிக்கடை நடத்துகிறவர்கள், 500 ஆண்டு பழமையான பாடி கார்டு முனியானிஸ்வரர் மட நிர்வாகிகள் இவர்கள் எல்லாம் விடுதலைப்புலிகள் பற்றி தெரிவித்திருக்கும் கருத்து என்ன என்று கொக்கிப்பிடி போடுவதற்கு முன் ஸ்ரீலங்கா இரத்னா ராம் இப்படியாக செய்தியை திருக (திரிக்க)வேண்டிய அவசியம் என்ன? அதற்குப் பின் உள்ள அரசியல் என்ன? அந்த அரசியலுக்காக எந்த தார்மீக நெறியினை எப்படி பலி கொடுக்கலாம்?

இந்தக்கேள்விகள் இப்படி 4 பேர் படிக்கும் வலைப்பதிவுலகிலாவது கேட்க்கப்பட வேண்டுமல்லவா?

9:01 PM, August 07, 2007
பட்டுக்கோட்டை பாரி.அரசு said...

நல்ல அலசல்,
வலைபதிவுகளில் நன்னடத்தை என்பது எதற்க்காக முன் வைக்கபடுகிறது... என்பதை நான் பார்க்கும் கோண்ம்...

இதுவரை தமிழகத்தின் பொதுமக்களை சென்றடையுடம் எல்லா ஊடகங்களும் ஓரு குறிப்பிட்ட சாரரின் நலனை முன்னிறுத்தி இருந்தது. அதில் மாற்றுக்கருத்து உள்ளவர்கள் நசுக்கப்பட்டனர். ஊடகம் யார் நடத்தினார்கள் என்பதைவிட என்ன கருத்துகள் மக்களிடம் சென்றடைந்தது என்பதை பார்த்தால்.. அது தமிழன உணர்வுக்கும், தமிழ் மொழி உணர்வுக்கும் எதிரான கருத்தே மக்களிடம் பரப்பப்பட்டது.

வலைப்பதிவுகளில் அவ்வாறான பொய்பரப்புரைகள் இயலாத காரணத்தாலும், அவ்வாறான புரட்டுகள் இங்கு நார், நாராக கிழிக்கப்படுவதாலுமே...

வலைப்பதிவுகளில் நன்னடத்தை இல்லை என்று குய்யோ, முறையோ என்று கூச்சலிடுகிறார் என்று நினைக்க தோன்றுகிறது.

9:31 PM, August 07, 2007
-/சுடலை மாடன்/- said...

இராம் ஒரு மார்க்ஸியவாதி என்று அழைக்கப் படுவதில்தான் இராமுடைய வெற்றியே அடங்கியிருக்கிறது. மார்க்ஸிய முகமூடியை அணிந்து கொள்வதன் மூலம் தமிழரல்லாத மார்க்ஸிய அறிவுஜீவிகளான அருந்ததி ராய், நோம் சாம்ஸ்கி போன்றவர்களை ஏமாற்றி அவர்கள் தமிழர் பிரச்னைகளை மார்க்ஸ்சியக் கண்களால் பார்ப்பதை விட்டு இராமின் கண்களால் பார்க்கச் செய்ய முடிகிறது.

ஒருவகையில் பார்க்கப் போனால், இராமின் மார்க்ஸிய அபிமானத் தோற்றத்தையும், மாலனின் திராவிடக் கருத்தியல் அபிமானத் தோற்றத்தையும் ஒப்பிட்டுப் பார்த்தால் சில உண்மைகள் புலப்படும்.

மார்க்ஸியமும், திராவிடக் கருத்தியலும் ஒடுக்கப் பட்டவர்களின் ஆயுதங்கள். அவ்வாயுதங்களை ஒடுக்கப் பட்டவர்கள் கையில் எடுப்பதைத் தவிர்க்க பல வழிகள் உண்டு. அதில் ஒருவழி அவ்வாயுதங்களை தாங்களே கையில் ஏந்திக் கொண்டால், ஒடுக்கப் பட்டவர்களை வழிநடத்தும் பொறுப்பையும் ஏற்றுக் கொள்ள முடியும். அதன் பின்னால் ஒடுக்கப் பட்டவர்களின் பாதையை, ஈழம் முதல் இந்தி வரை தாங்களே வகுக்க முடியும்.

நன்றி - சொ. சங்கரபாண்டி

10:06 PM, August 07, 2007
சுவாதி சுவாமி. said...

மாலன், ராம் போன்ற அடிவருடிகளுக்கும் , கூழைக் கும்பிடு போடுபவர்களுக்கும் ஒரு சமுகத்தின் உணைவினாலும் , உரிமைக்காகவும் வெடித்த போரட்டத்தைப் தம்முடைய அற்ப விமர்சனங்களாலும் கருத்துக்களாலும் நசுக்கிவிட கனவு காண்கிறார்களா என்ன? வெளிநாட்டிலிருக்கும் ஈழத் தமிழர்களில் 75% மக்கள் தமது மண்ணில் கடைசி மூச்சு போக வேண்டுமென்ற ஏக்கத்துடன் தான் வாழ்கின்றோம். எங்கள் உணர்வுகளையும் ஆதங்கத்தையும் உங்களால் புரிய முடியாது. ஏனெனில் நீங்கள் உங்கள் வாக்குரிமைகளிலிருந்து சகலதையும் அரசியல்வாதிகளிடமும் நடிகர்களிடமும் விற்று விடுபவர்கள் அல்லது விட்டுவிடுபவர்கள். தயவு செய்து எமது உணர்வுகளை நோகடிக்க வேண்டாம். வலைப்பட்டறையில் பேச வேண்டிய விஷயங்கள் எவ்வளவோ இருக்க மாலனுக்கு ஏனிந்த தேவையில்லாத சொல்லாடல்? அவருடைய யாஹூ வலைப்பூவிலும் ஒரு எழுத்தாளரின் ஆக்கத்தை விமர்சிப்பது போல் ஈழப்பிரச்சனையை விமர்சித்திருந்தார். இப்படிப்பட்டவரை எதற்கு மதிக்கிறேன் என்று விருப்பமில்லாமல் கூறவேண்டும்? தைரியமாகச் சொல்லலாம்... எதிர்கின்றேன்...!!!!

10:09 PM, August 07, 2007
வெற்றி said...

சசி,
பதிவுக்கு நன்றி.

"உன்னைத் திருத்திக் கொள்
சமூகம் தானாகவே திருந்தும்" என்பது போல மாலன்கள் முதலில் தாங்கள் பண்புடனும் நன்னடத்தையுடனும் நடந்தாலே சமூகம் தனது பாட்டில் திருந்திவிடும்.

மாலன்களுக்கு இப்போதுள்ள வயித்தெரிச்சல் என்னவென்றால், ஒரு காலத்தில் தாங்களும் அவர்களின் சாதியும் எழுதிய பொய்களையும், புரட்டுக்களையும் கேள்வியில்லாமல் ஏற்றுக் கொண்ட மலம் அள்ளும் சுப்பனும் தெருக் கூட்டும் கந்தனும், இப்போது பதிவுகள் எழுதத் துவங்கி தங்களின் பொய் முகத்திரையைக் கிழித்துக் கேள்வி கேட்பதுதான்.

தமிழ் மண்ணிற்கு பிழைக்க வந்தவர்கள் மதம் எனும் பெயரில் பொய், புரட்டுக்கள் சொல்லித் தமிழனை ஏமாற்றி வயிறு வளர்த்தது போல் இனியும் செய்ய முடியாமல் இருக்குதே எனும் எரிச்சல் அவர்களை பேச வைக்கிது.

பட்டறையை வெற்றிகரமாக முடிக்க எவ்வளவோ கடினமாக உழைத்த அன்பர்களுக்கு மாலன் போன்ற அநாகரிகமானவர்களின் செயல் நெஞ்சில் ஈட்டியால் குத்தியது போலிருக்கும் என்பதில் எனக்கு கடுகளவும் ஐயமில்லை. இது பட்டறைக்கும் ஒரு கறை.

11:08 PM, August 07, 2007
Gopalan Ramasubbu said...

//தன்னை மார்க்சிஸ்ட் என்பதாக வெளிப்படுத்திக்கொள்ளும் ஹிந்து ஆசிரியர் என்.ராம், அமெரிக்க முதலாளித்துவத்தை எதிர்க்கும் என்.ராம் அவர் மகளை அமெரிக்க முதலாளித்துவ பலகலைக்கழகத்தில் படிக்க வைத்தமை முரண்பாடு தானே ?//

Sasi,

Though I agree with all your other points..I disagree with you on the above mentioned one. N.Ram sending his daughter (or his daughter willing to pursue her) to study in US doesn't contradict with his "Marxist" credentials {if at all he is one}. Parents should not force their ideology on to their kids.

IMHO,the right criticism on N.Ram's "Marxist" credentials is his support for Chinese aggression on Tibet and his subsequent articles on the same issue. :)

11:09 PM, August 07, 2007
மு. சுந்தரமூர்த்தி said...

பின்னூட்ட பாலாக்களைத் தாங்கிக்கொள்ளப் பழகிவிட்ட தமிழ் வலைப்பதிவினருக்கு பெயரிலியை உதாரணமாகக் காட்டி நன்னடத்தையை பற்றி லெக்சர் அடிப்பது கொஞ்சம் ஓவர்தான். இந்த அமாநாட்டின் ஏற்பாட்டாளர்களான பாலபாரதி, லக்கிலுக், பொன்ஸ் இவர்களைக் கேட்டிருந்தால் மாலனுக்கு உள்ளூரிலிருந்தே ஒரு சரியான உதாரணம் கிடைத்திருக்குமே.

மற்றபடி, ஈழப்பிரச்சினையில் இந்துவின் நம்பகத்தன்மைப் பற்றி பேசுவதைவிட அய்யோக்கியத்தனம் வேறேதுவும் இருக்காது. சம்பந்தனோ, நிரூபமா சுப்ரமணியமோ, இப்போதுள்ள முரளிதர ரெட்டியோ கொழும்பில் உட்கார்ந்துக்கொண்டு சிங்கள அரசும், ராணுவமும் கொடுக்கும் தகவல்களை 150 வருட பாரம்பரிய இந்துவில் எழுதினால் அது நம்பக்கூடியதாகி விடும். கடைசியாக இந்து நிரூபர் ஒருவர் இலங்கையின் வடகிழக்குப் பகுதிக்கு எப்போது போய் வந்தார் என்ற தகவல் மாலனிடம் இருந்து அதை தெரிவித்தால் நன்றியுடையவனாக இருப்பேன்.

யாரும் புலிகளின் பரப்புரையை நம்பக்கூடாது என்பதற்கு ஒரு காரணம் இருக்கிறது என்றால் இந்துவில் வெளியாகும் இலங்கைக் குறித்த செய்திகளை நம்பக்கூடாது என்பதற்கு இந்துவின் காழ்ப்பு, சிங்கள இனவெறி அரசின் பொய்கள் என்று இரண்டு காரணங்கள் இருக்கின்றன. அங்கு நடப்பவற்றை தெரிந்துகொள்ள உண்மையிலேயே ஆர்வமிருப்பவர்கள், BBC, AP, Reuters போன்ற பன்னாட்டு ஊடக நிறுவனங்களை வேண்டுமானல் நம்பலாம்.

இந்துவின் நம்பகத்தன்மைக்கு இன்னொமொரு உதாரணம் என்னுடைய இப்பதிவில்

11:58 PM, August 07, 2007
Balaji-Paari said...

அன்பின் சசி,
இந்த கட்டுரைக்கும், கூர்மையான கட்டுடைப்புக்கும் நன்றிகள்.
மாலன் மேல் இருந்த ( நீங்கள் சுட்டிய ஒரு சில தன்மைகளால்) மதிப்பு இச்சம்பவத்திற்கு பிறகு கேள்விக்குறியாகிவிட்டது.

மாலன் பெயரிலி குறித்து பதிவர் பட்டறையில் கூறியதற்கு என் கண்டனங்கள்.

மாலன் போன்ற பிரபலங்கள் என்பவர்கள் உருவாவது மிகவும் நுணுக்கமாக கவனிக்கப்பட வேண்டியது.
ஏன் இவர்களுக்கு தாங்கள் கொண்டு இருக்கும் முரண்களை பார்க்கத் தெரியாமலா இருக்கின்றது?. தனக்கு தேவையான அளவுக்கு உண்மைகளை திரிப்பதும், அதற்கு தரும் விளக்கத்தை
புறந்தள்ளுவதும், அதை மிகவும் தந்திரமாக செய்வது ஆச்சரியத்தை அளிக்கின்றது.
மேலதிகமாக, அவருக்கு கிடைத்த களத்தில், அவரது உள்ளார்ந்த அரசியலை வெளிப்படுத்தியுள்ளார்.

இது ஒருவகையில் நல்லது. இது போன்ற நிகழ்வுகள் எனக்கு வலைபதிவுகள் மேல் மேலும் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.
குறைந்த பட்சம், பிரபலங்கள் எந்த ஒரு sweeping statement வெளியிட்டாலும், அதற்கு தக்க மறுப்பையும், அத்தகைய sweeping stament-ஐ உடைத்து எறியவும் இன்று நம்மால் முடிகின்றது.

இதற்கு சசியின் இந்தக் கட்டுரையே நல்ல காட்டாக உள்ளது. மேலும் அந்த நிகழ்வோடு தொடர்பு கொண்டுள்ள நபரையும் இது சார்ந்து ஒரு பதிவை/பதிலை இட வைத்துள்ளது.

இனியும் தலைக்கு பின் சுற்றும் சக்கரங்களால் தன்னை தாங்கிபிடிக்க இயலாது என்பது இதன் மூலம் மிக தெளிவு.

சசிக்கு என் நன்றிகள்.

12:03 AM, August 08, 2007
மயிலாடுதுறை சிவா said...

சசி

வழக்கம் போல் ஓர் நல்ல பதிவு.
மாலனுக்கு ஓர் சாட்டையடி!
வரும் வாரம் சூடாக போகும்!

....இதற்கு இலக்கணங்களையும், கோட்பாடுகளையும், நியதிகளையும் யாரும் வடிவமைக்க தேவையில்லை.

அப்படி நியதிகளை வகுத்தாலும் அதை உடைப்பதில் வலைப்பதிவர்களுக்கு எப்பொழுதுமே ஒரு ஆனந்தம் உண்டு....."

நான் மிகவும் ரசித்த வரிகள்! சூப்பர்!

நன்றி
மயிலாடுதுறை சிவா...

12:18 AM, August 08, 2007
மலைநாடான் said...

//மார்க்ஸியமும், திராவிடக் கருத்தியலும் ஒடுக்கப் பட்டவர்களின் ஆயுதங்கள். அவ்வாயுதங்களை ஒடுக்கப் பட்டவர்கள் கையில் எடுப்பதைத் தவிர்க்க பல வழிகள் உண்டு. அதில் ஒருவழி அவ்வாயுதங்களை தாங்களே கையில் ஏந்திக் கொண்டால், ஒடுக்கப் பட்டவர்களை வழிநடத்தும் பொறுப்பையும் ஏற்றுக் கொள்ள முடியும். அதன் பின்னால் ஒடுக்கப் பட்டவர்களின் பாதையை, ஈழம் முதல் இந்தி வரை தாங்களே வகுக்க முடியும்.//

இதைச் சற்றுப் புரிந்து கொண்டாலே, அநேக அரசியல் சூழ்ச்சிகள் புரிந்துவிடும்.

பதிவுக்கு நன்றி சசி!

தேவையற்றவிதத்தில் தன் அரசியல் தேவைகருதி ஈழத்தமிழர்களை இழிவுபடுத்தும் வகையில் கருத்துச் சொன்ன மாலனின் நேர்மை...?

1:01 AM, August 08, 2007
thiru said...

சசி,

வலைப்பதிவுகளில் நன்னடத்தை போதிக்கும் முன்னர் தான் சார்ந்துள்ள வெகுஜன ஊடகங்களின் நன்னடத்தையை குறித்தும் மாலன் அவர்கள் சிந்திக்க வேண்டும். மக்களின் பாதிப்புகளை எழுதுவதற்கு கொடுக்கப்படும் முக்கியத்துவத்தை விட 'வியாபார யுக்தியாக' நடிகர், நடிகை, அரசியல்வாதிகளின் தனிப்பட்ட வாழ்க்கைகளை தெருவுக்கு இழுத்து மக்களிடையே அவலச்சுவையை பரப்பிய நாயகர்கள் யார்? அப்படிப்பட்ட 'தெருச்சண்டை' அறிக்கைகளுக்கு 'கவரேஜ்' கொடுக்குப்பது யார்?

ஈழப்பிரச்சனை பற்றி இந்தியாவில் பெரும்பாலான ஊடகங்களில் ஆதரவில்லை என்பதால் ஒரு இன மக்களின் போராட்டமே ஆதரவற்றது/நியாயமற்றது போன்ற தோற்றத்தை விதைப்பது ஆபத்தான ஒரு தந்திரம். இந்திய ஊடகங்களின் பின்னணி என்ன என்ற கேள்வியை கேட்டால் இந்த மாயங்கள் உடைபடும். தமிழ்நாட்டு ஊடகங்களை விட பெர்ரும்பான்மை மக்களிடம் ஈழத்தமிழர்களது போராட்டத்திற்கு அன்றும், இன்றும் ஆதரவு இருக்கவே செய்கிறது. ஊடகங்கள் தான் மக்களின் நிலைபாடுகளிலிருந்து விலகியிருக்கின்றன.

ஈழத்தமிழர்கள் இலங்கை பாஸ்போர்ட் வைத்திருபது பற்றி ஒரு கேள்வி. தங்களுக்கென தமிழீழ பாஸ்போர்ட் பெற வாய்ப்பிருந்தும் ஈழத்தமிழர்கள் இலங்கை பாற்போர்ட்டை 'விரும்பி' வைத்திருக்கிறார்களா? ஈழப்போராட்டமே தங்களுக்கான நாடு, நிர்வாகம், சுயஉரிமை, தன்னாட்சி, கடவு சீட்டு போன்றவற்றை அடைவது தான் என்பது கூடவா மாலன் அவர்களுக்கு புரியவில்லை?

மார்க்சீயம் 'பேசும்' ஊடகங்களும், தலைவர்களும் தேசிய இனங்கள், சாதி பற்றிய பார்வையில் கருத்தியல் வெற்றிடத்தில் சுழல்வது ஒருவகை தந்திரம்.

3:47 AM, August 08, 2007
சுந்தர் / Sundar said...

இதன் பெய்ர் கருத்து சுதந்திரம் .

உங்கள் பார்வை கவனத்துக்கூரியதே !

4:18 AM, August 08, 2007
சின்னக்குட்டி said...

நன்றி

மார்க்ஸியமும், திராவிடக் கருத்தியலும் ஒடுக்கப் பட்டவர்களின் ஆயுதங்கள். அவ்வாயுதங்களை ஒடுக்கப் பட்டவர்கள் கையில் எடுப்பதைத் தவிர்க்க பல வழிகள் உண்டு. அதில் ஒருவழி அவ்வாயுதங்களை தாங்களே கையில் ஏந்திக் கொண்டால், ஒடுக்கப் பட்டவர்களை வழிநடத்தும் பொறுப்பையும் ஏற்றுக் கொள்ள முடியும். அதன் பின்னால் ஒடுக்கப் பட்டவர்களின் பாதையை, ஈழம் முதல் இந்தி வரை தாங்களே வகுக்க முடியும்

5:34 AM, August 08, 2007
பிருந்தன் said...

பதிவிற்க்கு நன்றி சசி, நல்ல சவுக்கடி உண்மை உறைத்திருக்கும் என நம்புவோம்.

6:22 AM, August 08, 2007
வவ்வால் said...

//அமெரிக்காவில் நியூஜெர்சியில் மட்டும் லட்சக்கணக்கில் இந்தியர்கள் இருக்கிறார்கள். இந்தியாவில் என்ன பிரச்சனை ? போர் நடக்கிறதா ? குண்டு வீசுகிறார்களா ? இந்தியாவில் இல்லாமல் ஏன் இங்கே இருக்கிறார்கள் ? பல வெளிநாடுகளுக்கு செல்கிறார்கள் ?

காரணம் பொருளாதார தேடல் தானே ? அதேக் காரணம் ஈழத்தமிழர்கள் பலருக்கும் இருக்கும்.
//

தமிழ் சசி,

நான் ஈழத்தமிழர் யாரையும் குறைத்து எடைப்போடவில்லை. எனினும் நீ்ங்கள் இவ்வாறி சொன்னதால், ஒரு விளக்கம்.

இந்தியாவில் இருந்து அயல்னாட்டிற்கு செல்லும் எவரும் அங்கு வேலை கிடைதததின் ஆதாரம் காட்டி அல்லது படிக்க கிடைத்த அனுமதி காட்டி முன் கூட்டியே எத்தனைக்காலம் அங்கு தங்கி இருக்க முடியும் என்பதற்கான அனுமதி வாங்கி, அதற்காக தூதரக வாச்சலில் தவம் கிடந்து செல்கிறார்கள் பொருள் ஈட்டுகிறார்கள். தங்கள் அறிவை அன்னிய நாட்டிற்கு விற்கிறார்கள் என வேண்டுமானால் குறை சொல்லலாம் ஆனால் அதை தவிர அவர்களின் மீது என்ன குற்றம் சொல்ல முடியும்!

ஆனால் ஈழத்தமிழர்கள் எத்தனை பேர் சண்டை நடந்த காலத்தில் இப்படி ஒரு அனுமதி வாங்கி சென்றார்கள். முழு பூசணிக்காயை சோற்றில் மறைத்து விட்டு எல்லாரும் பொருள் ஈட்டத்தான் போனார்கள் என சொல்லிக்கொள்வதா?

இலங்கையில் பிரச்சினைக்குறிய காலத்தில் கொழும்பு விமான நிலையத்தில் இருந்தா எல்லாம் விமானம் ஏறினார்கள். இந்தியாவிற்கு வந்து ஏஜென்ட்கள் மூலம் போலியான ஒரு இந்திய பாஸ்போர்ட் அதை வைத்து சுற்றுலா விசா என வாங்கி ஏதாவது ஒரு நாட்டிற்கு சென்றதும் குடியேற்ற அதிகாரிகளிடம் அரசியல் தஞ்சம் கேட்டு வாங்கி தானே அங்கு நுழைந்தார்கள்.

இப்பொழுதும் கூட மாதத்திற்கு இரண்டு இலங்கை தமிழர்கள் போலியான பாஸ்போர்ட் விசா வைத்து வெளிநாடு செல்ல முயல்வதாக சென்னை, கொச்சி விமான நிலையங்களில் கைதாகிறார்கள்.செய்திதாள்களைப்படியுங்கள்.

இதனை சுட்டிக்காட்டியது யாரையும் காயப்படுத்த அல்ல.

7:18 AM, August 08, 2007
பாரதி தம்பி said...

மிகச்சிறந்தக் கட்டுரை. மாலன் உள்ளிட்ட பலரின் மேலிருக்கும் எரிச்சலை தெளிவான வார்த்தைகளில் சொல்லியிருக்கிறீர்கள்.

8:09 AM, August 08, 2007
╬அதி. அழகு╬ said...

வழக்கம்போல் ஆழ்ந்த பதிவு, பாராட்டுகள்!

//மார்க்ஸியமும், திராவிடக் கருத்தியலும் ஒடுக்கப் பட்டவர்களின் ஆயுதங்கள். அவ்வாயுதங்களை ஒடுக்கப் பட்டவர்கள் கையில் எடுப்பதைத் தவிர்க்க பல வழிகள் உண்டு. அதில் ஒருவழி அவ்வாயுதங்களை தாங்களே கையில் ஏந்திக் கொண்டால், ஒடுக்கப் பட்டவர்களை வழிநடத்தும் பொறுப்பையும் ஏற்றுக் கொள்ள முடியும். அதன் பின்னால் ஒடுக்கப் பட்டவர்களின் பாதையை, ஈழம் முதல் இந்தி வரை தாங்களே வகுக்க முடியும்.//

சங்கரபாண்டி அவர்களின் கருத்து முழுதான உண்மையாகும்

9:58 AM, August 08, 2007
Sundar Padmanaban said...

வவ்வால்

//இலங்கையில் பிரச்சினைக்குறிய காலத்தில் கொழும்பு விமான நிலையத்தில் இருந்தா எல்லாம் விமானம் ஏறினார்கள். இந்தியாவிற்கு வந்து ஏஜென்ட்கள் மூலம் போலியான ஒரு இந்திய பாஸ்போர்ட் அதை வைத்து சுற்றுலா விசா என வாங்கி ஏதாவது ஒரு நாட்டிற்கு சென்றதும் குடியேற்ற அதிகாரிகளிடம் அரசியல் தஞ்சம் கேட்டு வாங்கி தானே அங்கு நுழைந்தார்கள்.

இப்பொழுதும் கூட மாதத்திற்கு இரண்டு இலங்கை தமிழர்கள் போலியான பாஸ்போர்ட் விசா வைத்து வெளிநாடு செல்ல முயல்வதாக சென்னை, கொச்சி விமான நிலையங்களில் கைதாகிறார்கள்.செய்திதாள்களைப்படியுங்கள்.
//

Step into their shoes and think about it.

வீடு வாசல் உடமைகள் உறவினர்கள் அனைத்தையும் சுத்தமாக இழந்து எந்த நொடி மரணம் சம்பவிக்கும் என்ற உயிரபாயத்தில், எங்கு செல்வது, யாரிடம் கேட்பது என்று எதுவுமே நிச்சயமில்லாத சூழ்நிலையில் நீங்கள் இருந்திருந்தால் - கண்முன்னே சித்திரவதைபட்டுக் கொல்லப்படும் குடும்பத்தினர், அடுத்த வேளை சோறின்றி, நீரின்றி, நின்றால் கொல்லப்படுவோமோ என்று ஓடிக்கொண்டேயிருக்கும் நிர்ப்பந்தத்தில் நீங்கள் இருந்திருந்தால் - ஒருவேளை இதைப் புரிந்துகொண்டிருக்கக் கூடும்.

உயிரும், வாழ்வும் முற்றிலும் மறுக்கப்பட்ட ஒரு நிலத்திலிருந்து, வேலி வழியாக பக்கத்து நாட்டுக்கு ஊடுருவிச் செல்லக்கூட முடியாதபடி சுற்றிலும் கடல் சூழ்ந்த ஒரு தீவிலிருந்து உயிரைக் காத்துக்கொள்ள கண்மண் தெரியாது ஓடும் ஒரு ஜீவனிடம் கடவுச்சீட்டு, விஸா என்று "நேர்வழி" முறைகளைப் பற்றிப் பேசுவது - எனக்கு வக்கிரமாகத் தெரிகிறது.

10:41 AM, August 08, 2007
வவ்வால் said...

சுந்தர் ,

அறை குறையாக எனது பின்னூட்டத்தை படித்து விட்டு அதன் ஒரு பகுதிக்கு மட்டும் சூடாக பதில் பேசுவதும் எனக்கு வக்கிரமாக தெரிகிறதே!

சசி என்ன கேட்டார் , நான் ஏன் அப்படி சொன்னேன் என்பதையும் சேர்த்து படித்து விட்டு வரவும், இதே போன்று குழைக்காட்டான் என்பவரும் பின்னூட்டம் போட்டுள்ளார் அதற்கும் தர்க்க ரீதியாக பதில் சொன்னால் மேலும் காயப்படுத்தும் அவர்களை என்பதால் எதுவும் சொல்லவில்லை.

சும்மா கண்ணை மூடிக்கொண்டு ஆதரவு என்று நிலையில் இல்லாமல் , எதற்காக அப்படி சொல்கிறார்கள் எனப்பாருங்கள்.

11:14 AM, August 08, 2007
குழைக்காட்டான் said...

வவ்வால்,

/*இந்தியாவில் இருந்து அயல்னாட்டிற்கு செல்லும் எவரும் அங்கு வேலை கிடைதததின் ஆதாரம் காட்டி அல்லது படிக்க கிடைத்த அனுமதி காட்டி ..*/

எங்கே ஐயா இருக்கிறீர்கள். ஈழத்தமிழன் எனச்சொல்லி கனடாவிலும் அவுஸ்திரேலியாவிலும் அகதி அந்தஸ்து பெற்ற இந்தியத்தமிழர் பற்றீ நீர் அறியவில்லை போலும். அண்மையில் கூட ஒரு இந்தியத்தமிழரை சந்தித்தேன் சாதாரண அறிமுகப்படலம் முடிந்தவுடன் அவர் கேட்ட முதல் கேள்வி எவ்வாறு கனடா சென்று அகதி அந்தஸ்து பெறுவதென்று. ஒன்றும் தப்பில்லை. நன்றாக இருக்கவேண்டும்.
ஆனால் ஏதோ இந்தியனெல்லாம் 'அனுமதி' வாங்கி வருகிறான் என்றெல்லாம் கனவு காணாதீர்கள்.

/*ஆனால் ஈழத்தமிழர்கள் எத்தனை பேர் சண்டை நடந்த காலத்தில் இப்படி ஒரு அனுமதி வாங்கி சென்றார்கள். முழு பூசணிக்காயை சோற்றில் மறைத்து விட்டு எல்லாரும் பொருள் ஈட்டத்தான் போனார்கள் என சொல்லிக்கொள்வதா?*/
அனுமதி அல்ல இங்கு பிரச்சனை அதை வைத்து என்ன செய்கிறார்கள். இலங்கையில் தான் சண்டை நடந்தது. இந்தியாவில் சண்டையே நடக்கவில்லை! மட்டுமல்ல அண்மையில் ஒரு இந்திய உணவகத்தில் பரிமாறுபவருடன் பேசிக்கொண்டிருந்தேன், அஸாம் மாநிலத்தவர் இங்கே அகதி அந்தஸ்து கோரி இருக்கிறார். 'அனுமதி' பெற்றுத்தான் வந்தார். இந்திய ராணுவம் தனது குடும்பத்தினரை கொன்றும் சிறையிலும் வைத்திருக்கிறார்கள் என்றார்.
மற்றும் ஈழத்தமிழர் அகதி அந்தஸ்து விசாரணைகளின் போது அரச தரப்பினால் வைக்கப்படும் குறுக்கு விசாரணைகளில் ஒன்று அந்தஸ்து கோருவோர் இந்தியத்தமிழராக இருக்கலாம் என்பது. அதற்கு அரசு சொல்லும் விளக்கம் தாம் அவ்வாறு பல மனுக்களை கண்டு பிடித்தது என்பதுதான். இன்னுமொரு விடயம் சுவிஸ் நாட்டில் பல இந்தியர் அகதி அந்தஸ்து கேட்டு விண்ணப்பம் செய்திருக்கின்றனர் ஈழத்தமிழர் போர்வையில். ஆனால் அவர்களோ விசாரணையை வேண்டுமென்றே இழுத்தடிப்பர். தேவையான பணம் ஈட்டியதும் இந்தியா திரும்புவர். அட்டகாச ஐடியா!!!!


/*இலங்கையில் பிரச்சினைக்குறிய காலத்தில் கொழும்பு விமான நிலையத்தில் இருந்தா எல்லாம் விமானம் ஏறினார்கள். இந்தியாவிற்கு வந்து ஏஜென்ட்கள் மூலம் போலியான ஒரு இந்திய பாஸ்போர்ட் அதை வைத்து சுற்றுலா விசா என வாங்கி ஏதாவது ஒரு நாட்டிற்கு சென்றதும் குடியேற்ற அதிகாரிகளிடம் அரசியல் தஞ்சம் கேட்டு வாங்கி தானே அங்கு நுழைந்தார்கள்.*/

அகதி அந்தஸ்து மற்றும் அதற்கான விதிமுறைகளே தெரியாமல் இருக்கலாம். ஆனால் ஒரு அகதி என்ன செய்யமுடியும், முடியாது என அறிந்து கொள்ள முனைவது அறிவுக்குகந்தது!

/*இப்பொழுதும் கூட மாதத்திற்கு இரண்டு இலங்கை தமிழர்கள் போலியான பாஸ்போர்ட் விசா வைத்து வெளிநாடு செல்ல முயல்வதாக சென்னை, கொச்சி விமான நிலையங்களில் கைதாகிறார்கள்.செய்திதாள்களைப்படியுங்கள்.*/

அண்மையில் பாண்டிச்சேரிகாரர்கள் 12 பேர் போலி கடவுச்சீட்டு/'அனுமதி'யுடன் பரிஸ் செல்ல முனைந்து பிடிபட்டார்கள். செய்தித்தாள்களைப் படியுங்கள்!!!!!
அவர்கள் ஈழத்தவரில்லை.

மேலதிகமாக தேவை என்றால் என்னால் எழுத முடியும். அகதிப்போர்வையில் நல்வாழ்வுதேடும் இந்திய தமிழர்களுக்கு உலை வைக்க விருப்பமில்லை.வவ்வால்,

வவ்வால் தலைகீழாகத்தொங்குவதால் உலகமே தலைகீழ் என நினைக்குமாம்!

இதனை சுட்டிக்காட்டியது யாரையும் காயப்படுத்த அல்ல.

11:21 AM, August 08, 2007
வவ்வால் said...

குழைக்காட்டான் ,

நல்லாத்தான் சொல்றிங்க ஆனா ஒரு சில விதி விலக்குகளையே பெரும்பாண்மைக்கு பொருத்த முயல்கிறீர்கள்.அதான் கழுதை போல உதைக்குது!

டாஸ்மாக் மது கடைகளை அரசே திறந்தாலும் கள்ள சாராயம் விற்கத்தான் செய்கிறார்கள் எனவே தமிழகம் எங்கும் கள்ள சாராயம் தான் கிடைக்கும் என்பதா!(சும்மா ஒரு உதாரணம் தான்)

ஏன் எனில் சசி பொருள் ஈட்டும் நோக்கில் தான் ஈழத்தமிழர்கள் அயல் நாடு சென்றுள்ளார்கள் என்பது போல கூறியதால் தான் இதனை குறிப்பிட்டேன். போலி கடவு சீட்டை அது போலி எனத்தெரியாமளே தான் இந்தியாவில் பலர் ஏஜெண்ட்களை நம்பி ஏமாந்து செல்கிறார்கள்.

அகதி என்பதை விட அரசியல் தஞ்சம் என சொல்லுங்கள் நன்றாக இருக்கும்.

அஸ்ஸாம் காரர் பற்றி சொன்னீர்கள் அதற்கு வாய்ப்பில்லை, ஏன் ஏனில் ஐக்கிய நாடுகள் சபை ஒரு நாட்டில் அரசியல் ஸ்திர தண்மை இல்லை, உள் நாட்டுக்கலவரம் என அறிவித்தால் அன்றி அரசியல் தஞ்சத்தின் பேரில் பொது மக்கள் செல்ல முடியாது. அஸ்ஸாம் ஒரு நாடும் அல்ல, அப்படி நடப்பதாக ஐ.நா சொல்லவும் இல்லை..எனவே அந்த டீக்கடை பெஞ்சில் 2 பேரு பேசிக்கொண்டார்கள் என்பது போல எல்லாம் சொல்லி வைக்காதீர்கள்.

அசாதாரண சூழலில் ஒருவரால் என்ன செய்ய முடியும் என அறிவேன், ஆனால் அமெரிக்காவில் ஏன் இந்தியர்கள் இருக்கிறார்கள் இந்தியாவில் என்ன யுத்தமா நடக்கிறது என மேதாவிதனமாக கேட்பதை என்னவென்பது!

11:57 AM, August 08, 2007
-/பெயரிலி. said...

குழைக்காட்டான்,
வவ்வால் மாலன் ஈழத்தமிழர்_ஸ்ரீலங்கா கடவுச்சீட்டுஎன்று பேசிய கருத்தின் மீதான கவனத்தைத் திசை மாற்றி இந்தியத்தமிழரையும் ஈழத்தமிழர்களையும் மோதவிட விரும்புகிறாரோ என்றுதான் தோன்றுகிறது. "ஈழத்தமிழர்கள் தனி ஈழம் கொடுத்தால், திரும்புவார்களா?" என்று கண்டுபிடிப்பதா சசியின் இடுகையின் நோக்கம்? அதைப் பற்றிப் பேசக்கூடாதென்றில்லை. ஆனால், இவ்விடுகையின்பின்னே எதற்காகப் பேசவேண்டுமென்று அவர் எதிர்பார்க்கின்றாரென்று தெரியவில்லை :-(

இதே வவ்வால் மா.சிவகுமாரின் பதிவிலே "நடந்தது தனிப்பட்டவரின் கருத்து என்று சொல்லி முடித்துவிட்டு ஆகிற காரியத்தைப் பாருங்கள்" என சொல்கிறார் (அதனை மறுப்பதற்கில்லை). ஆனால், இங்கே வந்து இந்தியத்தமிழர்.எதிர்.ஈழத்தமிழர் என்ற விதத்திலே பொய்யான கடவுச்சீட்டோடு கைதாவதெல்லாம் பேசி, வேறு கோணத்திலே கவனத்தைத் திருப்பத் தூண்டுகிறார். இதற்கு நீங்கள் பலியாகக்கூடாது. பொருளாதாரத்தைப் பற்றியோ அகதிகள் பற்றியோ தெரியாதவராக அவரிருக்க முடியாது.

12:03 PM, August 08, 2007
Oru Elath thamilan said...

நான் ஒரு ஈழ அகதி. நீண்ட காலமாக உறவுகளை காண முடியாமல் வேதனையில் வாழும் பலரில் நானும் ஒருவன். இங்கிருந்து சம்பாதிக்கும் பணம் என் போரினால் வாழ்விழ்ந்து இருக்கும் என் குடும்பத்தினருக்கு மட்டுமல்ல என் தேச உறவுகளுக்கும் பயன்படுகிறது.
பணம் மற்றவர்களைப் போல எங்களுக்கும் அவசியம். எங்கள் அடையாளத்தை தக்க வைக்கவே போர் உருவாகியது. அந்த சமூக அடையாளத்தை எதிர்காலத்தில் காப்பாற்றபோகும் எங்கள் வாரிசுகளூக்கு
உணவளிக்க வேண்டிய குடும்ப, சமூக பொறுப்பும் உண்டு. அகதியாக வெளினாட்டை தெரிந்தெடுக்க இதுதான் காரணம்.


சிங்கள மொழியை பல தமிழர்கள் கற்றார்கள். இன்னும் சிலர் பௌத்த மத சுலோகங்களையும் கற்றார்கள். தங்களை சிங்களவர்களாக காட்டி சிங்களக்
கொலையாளிடம் தப்பித்துக் கொள்ள இதை பல தமிழர்கள் செய்தார்கள்.
இருந்தும் 1983 கலவரத்தில் பல ஆயிரம் தமிழர்கள் கொல்லப்பட்டார்கள்.

என் பிறப்பு என்னால் தீர்மானிக்கப்பட்டதில்லை.

ஒரு ஈழத் தமிழன்

12:25 PM, August 08, 2007
வவ்வால் said...

வாங்க பெயரிலி,

நமக்கு எத்தகைய சண்டையையும் உருவாக்கும் எண்ணம் எல்லாம் இல்லை. ஆனாலும் உங்களது மோப்ப திறன் மெச்ச வைக்கிறது!

மா.சி,

பட்டறையை முன்னின்று எடுத்து சென்றவர்,அவர்களுக்கு இத்தகைய விவாதம் ஆயசம் தரும் , பின்னர் வருங்காலத்தில் எந்த நிகழ்வையும் எடுத்து செய்யனுமா என்ற எதிர்மறையான எண்ணத்தை உண்டாக்கும் என்பதால் அவரிடம் அப்படி சொன்னேன். அதைபடித்த நீங்கள் அதற்கும் மேலே மாலன் செயல் சற்றும் பொறுத்தமற்ற ஒன்று என்று சொன்னதையும் படித்திருக்கலாமே!

நிற்க , ஒருவர் என்னவென்றால் காந்திக்கு என்ன பாஸ்போர்ட் என்று கேட்கிறார், காந்தி என்ன வலைபதிவரா? அவரைப்பற்றி பேசுவதும் காந்திகணக்கா? இங்கு வந்து கண்டு கொண்ட நீங்கள் அங்கும் போய் கண்டிருக்கலாமே.

தேவை இல்லாமல் அசந்தர்ப்பமாக
பேசுவதை கண்டிக்கதான் இங்கே எல்லாம் பேசிக்கொண்டிருக்கிறார்கள். அதிலும் தேவை இல்லாமல் வேறு எதோ எல்லாம் பேசுவதால் நானும் அவ்வழியே பேசுகிறேன்!பதில் தருகிறேன்!

12:26 PM, August 08, 2007
குழைக்காட்டான் said...

/*அகதி என்பதை விட அரசியல் தஞ்சம் என சொல்லுங்கள் நன்றாக இருக்கும்.*/

இல்லை அகதி என்பதி ஒன்றும் குற்றமல்ல. அதில் வெட்கப்பட ஒன்றுமில்லை.
நான் ஒரு யூதரை சந்தித்தேன். பேசிக்கொண்டிருக்கும்போது அவர் நான் ஈழத்தவன் என அறிந்ததும் தானாகவே அகதி என சொல்வதில் வெட்கப்பட வேண்டாம். எமது இனத்தைப்பாருங்கள் நாமும் ஒரு காலத்தில் அகதியாய் அலைந்தவ்ர்கள். இன்றைய எமது நிலை பாருங்கள் அதே போல் திடசங்கற்பம் பூணுங்கள் என சொன்னார்.
அவன் தான் மனிதன், மாலன் அல்ல.
இத்தனைக்கும் நான் இன்னும் அகதி இல்லை என்பது உண்மை. இனிமேல் ஆவேனோ என்னவோ!

/*அஸ்ஸாம் காரர் பற்றி சொன்னீர்கள் அதற்கு வாய்ப்பில்லை,*/

அவருக்கு அரசியல் தஞ்சம் கிடைக்க வாய்ப்பிலாமல் இருக்கலாம். ஆனால் அரசியல், சமைய, மொழி ரீதியான பாதிப்பைக்கூறி தஞ்சம் கோரலாம். உதாரணமாக பெண்களுக்கெதிரான வன்முறை தஞ்சம் கோர அனுமதிக்கிறது. வெறும் பத்திரிகை படிக்காதீர்கள்.மேலும் படியுங்கள்.

மற்றும் அஸாம் காரரை நான் சந்தித்தது உண்மை. நீங்கள் இல்லை என்றால் நான் செய்ய ஒன்றுமில்லை.
நியூயோர்க் சைவ உணவகத்தில் வேலை செய்துகொண்டிருந்தார். நான் அவரிடம் பெயரோ அன்றி எதுவுமே கேட்கவில்லை. அது சரியானதுமல்ல்ல என்பதனால்.

இன்னொரு ஜோக் கேட்கிறீர்களா?

எனக்குத்தெரிந்த ஒருவர் ஆந்திர மாநிலம். அமெரிக்காவில் தஞ்சம் கோரினார். ஆந்திராவில் தான் இருக்குமிடம் முஸ்லிம்களால் சூழப்பட்டது. கொலை, கொள்ளை தாங்கமுடியவில்லை இந்திய அரசும் கண்டு கொள்வதாயில்லை எனக் காரணம் சொன்னார் :( . நம்பினால் நம்புங்கள். உண்மை.
தஞ்சம் கிடைத்ததா என்பதல்ல கேள்வி இங்கே.


நான் பல அகதி வழக்குகளுக்கு மொழிபெயர்ப்பாளனாக சென்றிருக்கிறேன். எனவே பல விடயங்கள் அறிந்துள்ளேன்.

/*ஏன் ஏனில் ஐக்கிய நாடுகள் சபை ஒரு நாட்டில் அரசியல் ஸ்திர தண்மை இல்லை, உள் நாட்டுக்கலவரம் என அறிவித்தால் அன்றி அரசியல் தஞ்சத்தின் பேரில் பொது மக்கள் செல்ல முடியாது. அஸ்ஸாம் ஒரு நாடும் அல்ல, அப்படி நடப்பதாக ஐ.நா சொல்லவும் இல்லை..*/

அவர்கள் தூதராலயத்துக்குச் சென்று கேட்காமல் , வேறுவழிகளில் சென்று கேட்கமுடியும். கொடுப்பது கொடுக்காதது அவரவர் நாட்டையும் அவர்களின் வெளிநாட்டுக்கொள்கையையும் பொறுத்தது.
கியூபாவில் அரசியல் ஸ்திரத்தன்மை இல்லை என ஐ.நா அறிவித்துள்ளதா? அப்போ ஏன் அமெரிக்கா கியூபாவினருக்கு தஞ்சமளிக்கின்ரனர். அதுவும் விமானத்தில்வருவோர்க்கும் கடலால் வருவோர்க்கும் வேற்று வேறான விதிகள். முன்னர் சீனாவில் இருந்து வருவோர் தமக்கு இரண்டு குழந்தைகள் விரும்புவதாக அமெரிக்காவில் சொன்னால் போதும். தஞ்சம் கிட்டும். ஏனெனில் சீனாவில் ஒருகுழந்தைச் சட்டம். ஐ.நா சொன்னார்களா அரசியல் ஸ்திரம் பற்றி.

12:40 PM, August 08, 2007
குழைக்காட்டான் said...

பெயரிலி,

/*வவ்வால் மாலன் ஈழத்தமிழர்_ஸ்ரீலங்கா கடவுச்சீட்டுஎன்று பேசிய ..*/

ஏற்றுக்கொள்கிறேன். நன்றி.

12:41 PM, August 08, 2007
நிர்வாகி (Admin) said...

பதிவர் பட்டறையில் ஈழத்தமிழர்களைப் பற்றி பேசியதற்க்கும், ஈழத்தமிழர் கடவுசீட்டு வைத்துக்கொள்வது பற்றி பேசும்போது 'இந்தியர்கள் ஏன் பச்சை அட்டைக்காக இந்த அலைச்சல் அலைகிறார்கள்?' என்று கேட்பதற்க்கும்/எரிச்சல்படுவதற்க்கும் பெரிய வேறுபாடு தெரியவில்லை

12:57 PM, August 08, 2007
சின்னக்குட்டி said...

//ஏன் ஏனில் ஐக்கிய நாடுகள் சபை ஒரு நாட்டில் அரசியல் ஸ்திர தண்மை இல்லை, உள் நாட்டுக்கலவரம் என அறிவித்தால் அன்றி அரசியல் தஞ்சத்தின் பேரில் பொது மக்கள் செல்ல முடியாது. அஸ்ஸாம் ஒரு நாடும் அல்ல, அப்படி நடப்பதாக ஐ.நா சொல்லவும் இல்லை..*///

பெயரிலி நண்பர் குளக்காட்டனுக்கு சொன்ன வவ்வாலின் திசை திருப்பலை புரிந்து கொண்டேன் ஆகிலும்.. அற்புதன் பதிவில் இணைய பொதுஅறிவு புலி என தனக்கு தானே மகுடம் சூட்டிய வவ்வாலுக்கு ஒரு பதிலளித்து முடிக்க சந்தர்ப்பம் தருவீங்கள் என நம்புகிறேன்.

ஜயா வவ்வாலு .. அகதி அந்தஸ்து பெற உள்நாட்டு யுத்தம் அவசியம் என்ற கூற்று பிழை. உ+ம் ஒருவர் ஹோமோ செக்ஸ் நாட்டமுள்ளவர் அந்த நாட்டில் தண்டணை குற்றமாயிருந்தால் அவர்கூட அரசியல் தஞ்சம் பெறலாம் இப்படி இத்யாதியான காரணங்கள் இருக்கின்றன.

நான் ஒரு அகதி அதில் சாதகமசங்களும் பாதகம்சங்கள் நிறைய அநுபவித்திருக்கின்றன. எமது உணர்வுகளை உங்களை மாதிரி மூளையால் மட்டும் அளப்பவர்களால் அறிய வாய்ப்பில்லை

1:10 PM, August 08, 2007
Sundar Padmanaban said...

வவ்வால்

//அறை குறையாக எனது பின்னூட்டத்தை படித்து விட்டு அதன் ஒரு பகுதிக்கு மட்டும் சூடாக பதில் பேசுவதும் எனக்கு வக்கிரமாக தெரிகிறதே!
//

அரைகுறையாக இல்லாது, முழுவதுமாகப் படித்துவிட்டுத்தான் பின்னூட்டமிட்டேன்.

//ஆனால் எனக்குள் எழும் தனிப்பட்ட ஒரு கேள்வி எத்தனை புலம்பெயர்ந்த இலங்கை தமிழர்கள் ஒரு தனி ஈழம் அல்லது அமைதி திரும்பினால் மீண்டும் இலங்கைக்கு திரும்ப வருவார்கள் என சொல்ல முடியுமா?//

என்று நீங்கள் துவக்கி வைத்ததும், அவர் 'பொருளீட்ட' என்று புலம்பெயர்ந்து இன்னொரு தேசங்களில் சென்று வேலைசெய்து வாழும் (என் போன்றவர்களையும் சேர்த்து) மக்களின் நோக்கத்தைக் குறிப்பிட்டார். ஈழத்தவருக்கு 'பொருளீட்ட' என்பதற்கு முன்னால் 'உயிர் பிழைக்க' என்றொரு பிரதான காரணம் இருக்கிறது. அவ்வளவுதான்.

முதலில் தனி ஈழம் அல்லது அமைதி திரும்பட்டும். அப்புறம் மிச்சமிருக்கும் மக்கள் நிம்மதியாக வாழ்வார்கள். புலம்பெயர்ந்தவர்கள் திரும்ப வருவார்களா மாட்டார்களா என்பதற்குள் நீங்களும் நானும் போகத் தேவையில்லை. அது அவர்களது விருப்பத்தைப் பொருத்தது. அல்லது அவர்களிருக்கும் நாடுகளின் சட்டதிட்டங்களைப் பொருத்தது.

நான் கேட்டேன், அவர் சொன்னார், அவர் கேட்டார், நான் சொன்னேன் - என்று ஏட்டிக்குப் போட்டியாக இப்படியே போய்க் கொண்டிருப்பது பதிவின் நோக்கத்தைத் திசை திருப்புவதால் இதற்கு மேல் இவ்விஷயத்தில் எதுவும் சொல்ல விரும்பவில்லை.

நன்றி.

1:27 PM, August 08, 2007
யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

சசி!
தங்கள் உணர்வுத் துடிப்புக்கு!
நன்றி!!

1:46 PM, August 08, 2007
வவ்வால் said...

சின்னகுட்டி,

அற்புதன் பதிவில் எனக்கு நானே மகுடம் சூட்டிக்கொண்டேன் தான், அவர் கேள்வி கேட்டு ஒரு பதிவு போடுவாரம் அதற்கு பதில் சொன்னால் அவர்களுக்கு லங்கா ரத்னா விருதாம், நான் கூட பதிவு போட்டு யாராவது பதில் சொன்னால் மாமா ரத்னா விருது தருவேன் என சொல்லவா? அப்படி பதில் சொல்ல வருபவரை இழிவு படுத்தும் நோக்கில் சொல்பவரிடம் வேறு எப்படி பேசுவது. அவரை முட்டால் என சொல்லாமல் என்னை அறிவாளி என்று சொல்லி அவரை பதிலுக்கு சீண்ட தான் தோன்றும்.

//ஜயா வவ்வாலு .. அகதி அந்தஸ்து பெற உள்நாட்டு யுத்தம் அவசியம் என்ற கூற்று பிழை. உ+ம் ஒருவர் ஹோமோ செக்ஸ் நாட்டமுள்ளவர் அந்த நாட்டில் தண்டணை குற்றமாயிருந்தால் அவர்கூட அரசியல் தஞ்சம் பெறலாம் இப்படி இத்யாதியான காரணங்கள் இருக்கின்றன.//

இந்தியாவில் கொலைக்குற்றத்திற்கு மரண தண்டனை உள்ளதால் ஒரு கொலைக்குற்றவாளி கூட மரண தண்டனை இல்லாத நார்வே, டென்மார்க் போன்ற நாடுகளிடம் அரசியல் தஞ்சம் கோரலாம் அப்படித்தானே!

அரசியல் தஞ்சம் பெற்றோரின் வலியும் வேதனையும் அவர்களுக்கே புரியும், என்னைப்போன்றோர்க்கு புரியாது தான், ஆனால் ஒரு பொதுவான விவாத மேடையில் பேசுவதும் அதற்கும் ஏதேனும் தரம் வேண்டும் என்பதும் எவ்வகை நியாயம். உங்களை போன்றவர்கள் என்ன வேண்டுமானாலும் பேசுவீர்கள் ஆனால் பதில் சொன்னால் , அரசியல் தஞம் பெற்றோர் என்ற முகமூடியின் பின் ஒளிந்து கொள்வீர்கள்.


பேசுவதற்கு மன திடமும், நேர்மையும் இருந்தால் பேசுங்கள், எதையும் திசை திருப்பி அதனால் நான் அடையப்போகும் அனுகூலங்கள் ஏதும் இல்லை.

மாலன் செய்த தவறை சுட்டிக்காட்டலாம் ஆனால், அதற்காக பட்டறை நடத்தியவர்களை கழுவில் ஏற்றுங்கள் என்ற ரீதியில் விவாதம் போவதும்,பதிவர்களை எல்லாம் சோற்றால் அடித்த பிண்டங்களே என்ற ரீதியில் பார்க்கும் மனோபாவமும் ,பொதுவான மற்ற செயல்பாடுகளை பாதிக்கும். ஏன் இனிமேல் இப்படி வலைப்பதிவு பட்டறை நடத்தினால் அனாவசியமான விவாதங்கள் வரும் என எதிர்காலத்தில் பட்டறை நடத்தவே யாரும் முன் வராமல் கூட போகலாம்.

இதைஎல்லாம் கருத்தில் கொள்ளாமல் மேட்டுக்குடி மிராசு போல பேசுவது தான் சின்னக்குட்டிக்கு அழகா?

2:34 PM, August 08, 2007
வவ்வால் said...

வாங்க சுந்தர் ,

இதை தான் நானும் எதிர்பார்க்தேன்,

//மக்களின் நோக்கத்தைக் குறிப்பிட்டார். ஈழத்தவருக்கு 'பொருளீட்ட' என்பதற்கு முன்னால் 'உயிர் பிழைக்க' என்றொரு பிரதான காரணம் இருக்கிறது. அவ்வளவுதான்.//

அவருக்கு உயிர் பிழைக்க ஓடினார் என்று சொல்வது கேவலமாக பட்டு இருக்க வேண்டும், அதான் பொருள் ஈட்ட என்று சொல்லிக்கொண்டார், சரி சொன்னார் ஆனால் ஏன் இந்தியார்கள் போனார்கள் என்றும் குண்டு வீசினார் அதை தானகவே வரட்டும் என்று தான் விட்டு பிடிது பேச்சிக்கொண்டு இருந்தேன். நீங்கள் சாதாரணமாக அவ்வளவு தான் முடித்து விட்டீர்கள்.

பதிவு திசை திரும்பி விடுகிறது என்று சொன்னாலௌம், நான் திருப்ப ஆசைப்படவில்லை. ஒரே சர்ச்சையை பிடித்து இழுத்து தொங்குவதாக பட்டது அதனால் தான் நான் அப்படி கேட்டேன்.

உடனே அவர் கேட்டார் ,னான் சொன்னேன் என்று பேசிக்கொண்டு அலையாதீர்கள் என்று எனக்கு ஞான உபதேசம் செய்யலாம், ஒரு வேளை நீங்கள் மனோதத்துவ நிபுணர் என்பதால் எனது மன விகாரங்களை கூட கண்டறியலாம்!

எல்லாவற்றுக்கும் ஒரு வாய்ப்பு வரவேண்டாமா?

2:40 PM, August 08, 2007
தமிழ் சசி | Tamil SASI said...

வவ்வால்,

பட்டறை நடத்தியவர்கள் குறித்து இந்த இடுகையில் யாரும் எதுவும் கூறவில்லை. அவர்கள் இதற்கு பொறுப்பாக மாட்டார்கள்.

பட்டறையை சிறப்பாக நடத்தியமைக்காக அவர்களுக்கு நன்றியும், பாராட்டுதல்களையும் தெரிவிக்க அனைவரும் கடமைப்பட்டுள்ளேம்

தயவு செய்து விவாதத்தை திசை திருப்ப வேண்டாம்.

பட்டறை குறித்தான பின்னூட்டங்கள் அனுமதிக்கப்படாது

3:09 PM, August 08, 2007
வவ்வால் said...

சசி,

இதில் திசை திருப்பும் நோக்கம் ஏதும் இல்லை, மாலனுக்கு எதிர்வினை தெரிவிக்கும் பலப்பதிவுகளிலும் ,அங்கே இருந்தவர்களும், நடத்தியவர்களும் சும்மா வேடிக்கை பார்த்தனரே என்று குற்றம் சுமத்துவதாகவே இருக்கிறது. உங்கள் பதிவில் நேரடியாக அப்படி இல்லை எனினும் அத்தகைய ஒரு தோற்றம் ஏற்படுத்துகிறது என்பதே எனது எண்ணம்.(even though you too have made many unwanted comments in this blog which is irrelevent to current scenerio)

வலைப்பதிவு பட்டறைக்கு பின்னர் ஆக்கப்பூர்வமாக ஏதும் பதிவிடாமல் எல்லாரும் அங்க்கு நடந்துவிட்ட ஒரே ஒரு அசந்தர்ப்பமான சம்பவம் குறித்தே பேசுவதால் தான் நான் இடை நுழைந்தேன்!

மற்றப்படி நான் எதையும் திசை திருப்ப ஆசைப்படவில்லை. இனிமேல் நான் இங்கு பின்னூட்டம் எதனையும் இனி இடப்போவதில்லை என தெரிவித்துகொள்கிறேன்!

3:50 PM, August 08, 2007
குழைக்காட்டான் said...

வவ்வால்,

/*இந்தியாவில் கொலைக்குற்றத்திற்கு மரண தண்டனை உள்ளதால் ஒரு கொலைக்குற்றவாளி கூட மரண தண்டனை இல்லாத நார்வே, டென்மார்க் போன்ற நாடுகளிடம் அரசியல் தஞ்சம் கோரலாம் அப்படித்தானே!*/

காந்தி பாஸ்போட் மாதிரியே இழுக்கிறீர்களே!
எனினும் மேலே குறித்த கொலக்குற்றவாளி கேஸில் ஓரளவு உண்மையும் இருக்கிறது. அக்கொலை ஒர் அரசியல் கொலை என்றால் அதற்கு சாதகமான முடிவுகிடைக்கும் சாத்தியக்கூறுகள் அதிகம்.
நிற்க, இன்றும் மெக்சிகர்கள் அமெரிக்காவில் வேண்டப்பட்டால் அவர்களை ஒப்படைக்குமுன்னர் மெக்சிக்க அரசு அமெரிக்க அரசிfடம் ஒரு உறுதியை பெற்றுக்கொள்ளும். அதாவது வேண்டப்பட்டவர் வழக்கில் மரணதண்டனை கோருதல் கூடாதென்பது தான். அவ்வாறு கொடுக்க அமெரிக்க அரசு தவறின் மெக்சிகோ அவரை அமெரிக்காவுக்கு அனுப்பத் தேவையில்லை. கொலைக்குற்றம் என்றால் கூட.

1990களில் ஒருவர் அமெரிக்காவில் மரணதண்டனைக்குற்றம் செய்தார். உடனடியாக அவர் கனடாவுக்குத்தப்பி ஓடி அங்கு (வேண்டுமென்றே) ஒரு சிறிய குற்றம் செய்தார். கனடாவும் அவருக்கு அதிஉயர் தண்டனையாக 25 வருடம் சிரை விதித்தது. ஏன்? அவரை 25 வருடம் காப்பாற்றவே. இது ஒருவகை தஞ்சம் தானே? ஐ.நா அது இது என அலம்பவேண்டாம்.
மெக்சிகோ மட்டுமல்ல ஐரோப்பிய யூனியனில் சேரும் நாடுகள் மரணதண்டனைச் சட்டத்தை நீக்கியபின்னரே யூனியனில் சேர்க்கப்படுவர் என்பதனையும் கருத்தில் கொள்க. இது எதைக்காட்டுகிறது.
தாறு மாறாக மறுத்தான் விட்டு விவாதத்தை விளிம்புக்கு இழுக்க வேண்டாம். சிந்திக்கவும்...

4:02 PM, August 08, 2007
தமிழ் சசி | Tamil SASI said...

இனிமேல் நான் இங்கு பின்னூட்டம் எதனையும் இனி இடப்போவதில்லை என தெரிவித்துகொள்கிறேன்!

***

வவ்வால்,

பட்டறை குறித்து இந்த இடுகையில் எதுவுமே இல்லாத பொழுது நீங்கள் பட்டறை குறித்து குறிப்பிட்ட ஒரு கருத்து பற்றியே நான் குறிப்பிட்டேன்.

மற்றபடி, உங்கள் மாற்றுக்கருத்துக்களை என்னால் ஏற்று கொள்ள முடியா விட்டாலும் அதை நீங்கள் இங்கே இடுவதில் எனக்கு எந்தப் பிரச்சனையும் இல்லை என்பதை மட்டும் தெரிவித்துக் கொள்கிறேன்

விவாதத்தில் பங்கு கொண்டமைக்கு நன்றி

4:04 PM, August 08, 2007
வவ்வால் said...

சசி,

நன்றி! நான் வேறு சிலப்பதிவுகளைப்படித்துவிட்டு அங்கிட்ட பின்னூட்டத்தை இங்கே பெயரிலி, சின்னக்குட்டி(அற்புதனின் பதிவு சார்ந்து) போன்றோர் குறிப்பிட்டதால் அங்கு நிலவிய சூழலையே இங்கும் சொல்லிவிட்டேன் .உங்கள் பதிவில் பட்டறை மற்றும் நடத்தியவர்கள் குறித்து ஏதும் இல்லை. அவர்கள் பதிவில் போய் இதை தொடர்ந்து பேசாமல் இங்கேயே அதைப்பேசியது எனது தவறு தான் மன்னிக்கவும்.

மாலன் செயல் சற்றும் விரும்பத்தகாத ஒன்று என்று தான் நான் அப்போதும் சொல்லியுள்ளேன் ஆனால் அவர்கள் பதிவுகளில் என்ன மாதிரி சொல்லியுள்ளார்கள் என்பதை பெயரிலி பதிவில் நீங்களே படித்து தெரிந்து கொள்ளுங்கள். மாலன் மீது வருத்தப்பட பெயரிலிக்கு உரிமை உண்டு என்ற போதிலும் பதிவின் சாராம்சம் வேறு எங்கோ இட்டு செல்வதை நீங்களும் உணர்வீர்கள்.

5:28 AM, August 09, 2007
SnackDragon said...

தி ஹிந்து-ல் முன்பொருமுறை வெளியான புரட்டலை என் பதிவில் எழுதியிருந்தேன்.

"But the responsibility here lies with the LTTE, which has taken up terrorism and violence as its political weapon. So we hope very much that Minister Solheim's visit here will result in a resumption of negotiations on a date certain, and in a place certain. For those negotiations to take place, we hope the ceasefire can be restored and we hope a final peace can come to Sri Lanka. The United States wants that very much, and we'll support the government in its effort to protect this country, and its territorial integrity as these negotiations resume."

http://usinfo.state.gov/usinfo/Archive/2006/Jan/23-593912.html

இதே செவ்வியிலிருந்துதான், தி இந்து நாளிதழின் சம்பந்தன்,தேவையான வார்த்தைக்கோர்வைகளை மேற்கோள்களுக்கிடையிலே பின்னி மாலையாக்கி,இலங்கை அரசின் பக்கம் அமெரிக்கா இருப்பது போன்ற பிம்பத்தை உருவாக்கும் செய்தி வெளியிட்டுள்ளார்.

Mr. Burns, who met President Mahinda Rajapakse, political leaders and visiting Norwegian Minister for International Development Erik Solheim on Monday, said while the Tamils had "legitimate grievances," the LTTE bore the "full responsibility" to either choose peace or to continue with its "repugnant policies of the past decade and a half." Stepping up pressure on the Liberation Tigers of Tamil Eelam (LTTE) to abandon violence, U.S. Under-Secretary of State Nicholas Burns on Monday described it as a "reprehensive terrorist group," which was "keeping the country on the edge of war."

Asked why the U.S. was encouraging negotiations with the LTTE while not doing so with the Al-Qaeda, he described the latter as "a terrorist group" that represented "no grievances." [The HINDU –international column Jan 24]

8:15 PM, August 09, 2007
இவன் said...

- வெளிநாடு சென்ற தமிழருக்காக -

திரை கடல் ஓடியும் திரவியம் தேடு என ஒருதமிழ் கூறு ஒன்று உண்டு. இதனடிப்படையில் பொருளிட்ட நாடு கடந்த எவரும் குற்றவாளி அல்ல, எல்லோரும் நன்மக்களே.

அரசியல் அவலத்தால் நாடு கடந்து, பின் உறவுகளை காக்க பொருளாதார, தார்மீக மற்றும் அரசியல் ஆதரவு அளிக்கும் தமிழன் அனைவரும் மாவீரரே.. இது ஓர் போர் தந்திரமும் கூட.


- ஈழத்தின் அவலமே மூலதனம் -

தமது பொருளிட்டல் காரணமாய், நமது உறவுகளின் அவலத்தையே மூலதனம்மாக்கி வெளிநாடு செல்லும் தமிழக-தமிழர் பல உண்டு இது மறுக்கமுடியாத உண்மை. இங்கிலாந்து சென்றடைந்ததும் தமது இந்திய பாஸ்போர்டை கிழித்தெரிந்த இருவரை எனக்கு தனிப்பட முறையில் தெரியும்

இதற்கு மறுப்பு இருந்தால் எனக்கு தெறியப்படுத்துங்கள்.

- இது மாலன் ஐயா அவர்களுக்கு -

தமிழ் ஈழ பாஸ்போர்ட் பெறவே முயற்சி செய்து கொண்டிருக்கிறோம். தங்களது பங்களிப்பு எமக்கு உதவியாய் இருக்கும்.

9:26 PM, August 10, 2007
தமிழ் சசி | Tamil SASI said...

மாலன் தன்னுடைய உரை குறித்து விளக்கத்தையும், அவரது முழு உரையையும் தன் பதிவிலே கொடுத்திருக்கிறார்.

அவரை வசைபாடவே சில இடுகைகள் எழுதப்பட்டதாக கூறுகிறார். நான் நிச்சயமாக அப்படி எழுதவில்லை. மற்றவர்களும் "ஈழ தமிழர்கள் சிறீலங்கா பாஸ்போர்ட் வைத்திருப்பது" போன்றவற்றை பேசாமல் இருந்திருந்தால் இடுகைகளை எழுத வேண்டிய அவசியம் இருந்திருக்காது.

அவரது முழு உரையை வாசித்த வகையில் ஈழத்தமிழரின் பாஸ்போர்ட் விவகாரமாகட்டும், ஈழத்தமிழர்கள் இந்தியாவிற்கு வருவது குறித்த அவரது கருத்துக்களாகட்டும் அவசியமற்றவை மட்டுமல்ல, out of contextம் கூட...

உதாரணம் காட்ட எவ்வளவோ இருக்க, ஈழத்தமிழர்கள் தங்களின் வாழ்வியல் தேவைக்காக தங்கள் வீடுகளையும், உடைமைகளையும் இழந்து அகதிகளாக இந்தியாவிற்கும், சிறீலங்கா கடவுச்சீட்டு கொண்டு வெளிநாடுகளுக்கும் செல்வதை உதாரணம் காட்டுவது வன்மையாக கண்டிக்கப்படவேண்டியது என்றே நான் நம்புகிறேன்

*****

அவரது உரையின் சர்ச்சைக்குரிய சில பகுதிகள் மட்டும் கீழே உள்ளது. முழு உரையையும் அவரது இடுகையிலே படிக்கலாம் -

http://jannal.blogspot.com/2007/08/blog-post_11.html


உதாரணமா பெரியார் இருக்கிறார்- அவரை denigrate செய்வதுமாதிரியான பின்னூட்டம் வந்தால் அதை எப்படி ஏற்க முடியும்? அவர் சமூகத்தில் பல விளைவுகளை ஏற்படுத்தியவர்; சிலரால் ஏற்றுக் கொள்ளப்பட்டவர். பெரியார் கருத்துக்களை வேண்டுமானால் மறுத்து எழுதலாம். ஆனால் அவரைத் தனிப்பட்ட முறையில் தாக்கி எழுதுவதை எப்படி ஏற்க முடியும்? இங்கே பதிவர்கள்தான் இருக்கிறீர்கள். மனம் விட்டுப் பேசலாம். பெயரிலி ஒரு பதிவில் பின்னூட்டம் போடுகிறார்.ராமினுடைய மகள் அமெரிக்காவிற்குப் போய் ஜ்ர்னலிசம் படித்து அதில் ராங்க வாங்கியதை விமர்சனம் செய்து எழுதறாரு.அவருக்கும் ராமிற்கும் பிரசினை. ஆனால் ராமின் பெண் என்ன செய்தார்? மார்க்சிஸ்ட்டா அறியப்பட்டவருடைய பெண் எப்படி அமெரிக்காவில போய் படிக்கலாம்னு கேட்டா?

யதார்த்த வாழ்க்கையில, நேர் முரணான கருத்து உடையவர்களோடு ஏதோ ஒரு விதமான உறவு வைத்துக் கொண்டுதானே இருக்கிறோம்? பெரியார் அவருடைய மணத்தைப் பற்றி ராஜாஜி ஒருவருக்குத்தானே கடிதம் எழுதி விவாதித்தார்? இரண்டு எதிர் எதிர் கருத்து நிலை உள்ளவர்கள், ஒரு குறிப்பிட்ட விஷயத்திற்காக ஒருவரோடு ஒருவர் interact செய்ய முடியாதா? இந்தியா இலங்கைப் பிரசினையில் தமிழருக்கு ஆதரவான நிலை எடுக்கவில்லை. ஆனால் இந்தியாவிற்கு வரத்தானே போகத்தானே செய்கிறர்கள்? இலங்கை அரசை எதிர்த்துத்தான் இலங்கைத் தமிழர்கள் போராடுகிறார்கள். ஆனால் இலங்கை பாஸ்போர்ட்ல தானே வெளியே போறாங்க? இது எதிர் எதிர் நிலையில் இருப்பவர்கள், தனிப்பட்ட முறையில் கொள்கிற உறவு.

அமெரிக்கப் பல்கலைக்கழகத்தில் படித்தவர்களுக்குத் தெரியும், அவற்றிற்கும் அரசாங்கம் எடுக்கிற நிலைகளுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது.அவை முதலாளித்துவத்தை பிரசாரம் செய்யக் கூடியவையும் கிடையாது.சீனாவை அமெரிக்காவே Most Favoured Nation என்று அறிவித்துவிட்ட பிறகு, சீனாவை ஆதரிக்கும் ஒருவருடைய மகள், அங்கே போய் படிப்பதில் என்ன முரண்பாடு இருக்கிறது?

இதெல்லாம் தவிர, இது பதிவில் சொல்லப்பட்டிருந்த விஷயத்திற்கு சம்பந்தமில்லாத விஷயம்.....

(மாலன் சார் என்ரு சிவக்குமார் குறுக்கிட நான் பேசுவதை நிறுத்திக் கொண்டேன்.)

10:51 PM, August 10, 2007
சதுக்க பூதம் said...

மார்க்ஸியமும், திராவிடக் கருத்தியலும் ஒடுக்கப் பட்டவர்களின் ஆயுதங்கள். அவ்வாயுதங்களை ஒடுக்கப் பட்டவர்கள் கையில் எடுப்பதைத் தவிர்க்க பல வழிகள் உண்டு. அதில் ஒருவழி அவ்வாயுதங்களை தாங்களே கையில் ஏந்திக் கொண்டால், ஒடுக்கப் பட்டவர்களை வழிநடத்தும் பொறுப்பையும் ஏற்றுக் கொள்ள முடியும். அதன் பின்னால் ஒடுக்கப் பட்டவர்களின் பாதையை, ஈழம் முதல் இந்தி வரை தாங்களே வகுக்க முடியும்

------THE BEST and it gives THE REAL TRUTH

1:44 AM, August 28, 2007