தமிழகத்திலே யாரைப் பற்றி வேண்டுமானாலும் விமர்சனம் செய்யலாம். மகாத்மா காந்தி, ஜவகர்லால் நேரு என யாரைப் பற்றி வேண்டுமானாலும் விமர்சனம் செய்யலாம். இந்திய ஜனநாயகம் அதனை தாங்கிக் கொள்ளும். இந்திய ஜனநாயகம் கொடுத்திருக்கிற அந்த அசாத்திய பேச்சுரிமை நம்மை புல்லரிக்க வைக்கும். ஆனால் ராஜீவ் காந்தியை மட்டும் "தமிழகத்தில்" விமர்சனம் செய்து விட முடியாது. உடனே தமிழகத்தின் கதர்வேட்டிகள் வானத்திற்கும், பூமிக்கும் குதிக்க தொடங்கி விடுவார்கள். ஒரு மிக சாதாரண விமர்சனத்திற்கு கூட தேசிய பாதுகாப்பு சட்டத்தை பயன்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை எரிச்சலை ஏற்படுத்துகிறது.
இந்த விடயத்தில் சீமான் மீது எனக்கு சில விமர்சனங்கள் இருந்தாலும் சீமானை நான் பாராட்டியாக வேண்டும். தமிழகத்தின் அரசியல்வாதிகள், பத்திரிக்கையாளர்கள், "முற்போக்கு" எழுத்தாளர்கள், "மாற்று" எழுத்தாளர்கள், சமுதாயத்தை புரட்டி போடும் சிந்தனையாளர்கள் என யாருக்குமே ராஜீவ் காந்தி மீது எந்த விமர்சனமும் வைக்க கூடாது என்ற தமிழகத்தின் காட்டு தர்பாரினை எதிர்க்க வேண்டும் என்ற தைரியம் வந்ததில்லை. சீமான் முதல் முறை கைது செய்யப்பட்ட பிறகும், இம் முறை பேசினால் "மறுபடியும்" கைது செய்யப்படுவோம் என தெரிந்தும் ராஜீவ் காந்தியை விமர்சித்து பேசியுள்ளார்.
சீமான் விளம்பரத்திற்காக பேசினார் என்று சொன்னால் அதனை நம்புவதற்கில்லை. வைகோ, நெடுமாறான் போன்றோர் கைதினையே எந்த எதிர்ப்பும் இல்லாமல் அமைதியாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தவர்கள் தான் தமிழர்கள். இவ்வாறு பேசுவதால் சீமானுக்கு எந்தப் புதிய விளம்பரமும் கிடைக்கபோவதில்லை. ஆதாயங்கள் கூட இல்லை. பாதகங்கள் தான் அதிகம். சீமானின் கைதினை யாரும் எதிர்க்க போவதில்லை. இரண்டு நாள் அறிக்கைகள், பிறகு தங்கள் வழக்கமான வேலைகள் என அரசியல்வாதிகள் மாறி விடுவார்கள். காங்கிரஸ் கட்சியினர் கோரிக்கை வைத்திருப்பது போல தேசிய பாதுகாப்புச் சட்டம் வேறு சீமானை பயமுறுத்துகிறது.
கடந்த முறையும் சரி, இம் முறையும் சரி சீமான் இந்திய தேசியத்தை பிளவு படுத்தவோ, இந்திய தேசியத்தை மறுத்தோ கூட பேசவில்லை. ராஜீவ் படுகொலையை கடந்து ஈழப் பிரச்சனையை பார்க்க வேண்டிய தேவையை தான் சீமான் முன்னிறுத்தினார். ராஜீவ் காந்தி இந்திய அமைதிப்படையை அனுப்பிய நோக்கத்தினை தான் கேள்விக்கு உட்படுத்தினார். ராஜீவ் காந்தியின் அமைதிப்படை ஈழத்திலே செய்த போர் குற்றங்கள் ஏற்கனவே பட்டியலிடப்பட்டிருக்கின்றன. இந்தியாவின் இந்தியன் எக்ஸ்பிரஸ் தொடக்கம் லண்டன் பத்திரிக்கைகள் வரை இந்திய அமைதிப்படை ஈழத்திலே செய்த வெறியாட்டத்தை அம்பலப்படுத்தியுள்ளன. இந்தியப் பாராளுமன்றத்தில் இந்திய அமைதிப்படையின் வெறியாட்டம் விமர்சிக்கப்பட்டுள்ளது. ஆனால் அதனை தமிழகத்திலே பேசக்கூடாது, பேசினால் தேசிய பாதுகாப்பு சட்டம் பாயும், சிறையில் போடுவோம் என்பது ஜனநாயக நாட்டின் அறிகுறி அல்ல. சர்வாதிகாரத்தின் வெளிப்பாடு.
அது போல சீமான் பயங்கரவாத இயக்க தலைவரை ஆதரித்து பேசினார் என்பதாக மற்றுமொரு குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. சீமான் அவ்வாறு பேசவில்லை. பிரபாகரன் மேல் தனக்கு இருக்கும் அபிமானத்தை வெளிப்படுத்தினார். ஒரு ஜனநாயக நாட்டில் இந்த பேச்சுரிமை கூட இல்லையா ? இந்திய அரசியல் சாசனம் அமைதியான வழியில் குரல் எழுப்ப அனுமதிக்கிறது. வைகோ கைது செய்யப்பட்ட வழக்கில் கூட நீதிமன்றம் பேச்சுரிமையை வலியுறுத்தியுள்ளது. பிரபாகரனுக்கு ஆதரவாக மட்டுமில்லாமல், விடுதலைப் புலிகளை ஆதரித்தும் கூட அமைதியாக தங்கள் கருத்துக்களை பேசலாம், எழுதலாம். அவ்வாறான சூழலில் காங்கிரஸ் கட்சியை அமைதிப்படுத்த சீமானை தமிழக காவல்துறை கைது செய்துள்ளது.
கலைஞர் குறித்து நாம் வைக்கும் எந்த விமர்சனத்தையும், ஜெயலலிதா ஆட்சியிலே இது போல பேசி விட முடியுமா என்ற வாதம் மூலம் தமிழகத்திலே திமுக ஆதரவாளர்கள் திமுகவின் ஜனநாயக, தமிழ் விரோதப் போக்கினை நியாயப்படுத்த முனைகின்றனர். ஜெயலலிதா ஆட்சியில் நடந்த சர்வாதிகாரப் போக்கினை காட்டி கலைஞர் செய்து கொண்டிருக்கும் ஜனநாயக விரோதப் போக்கினை நாம் நியாயப்படுத்தி விட முடியாது. ஜெயலலிதா தமிழர் அல்ல என கலைஞரே கூறியிருக்கிறார். ஆனால் கலைஞரை "தமிழினத்தலைவர்" என திமுகவினர் கூறுகிறார்கள் (திமுகவினர் மட்டும் தான் கூறுகிறார்கள்). தமிழினத்தலைவராக கூட தேவையில்லை. குறைந்தபட்சம் ஒரு தமிழராக தமிழகத்திலே ஈழத்தமிழர் பிரச்சனையை முழுமையாக விவாதிக்க/பேச ஒரு களம் அமைக்க திமுக ஏன் தொடர்ந்து மறுத்து வருகிறது ? காங்கிரஸ் கட்சியின் தங்கபாலு சீமானை கைது செய்ய வேண்டும் என்றவுடன் பாய்ந்து சென்று சீமானை கைது செய்யும் கலைஞர், தில்லிக்கு சென்று "அவரே" முன்வைத்த கோரிக்கைகளை காங்கிரஸ் இது வரை நிறைவேற்ற வில்லையே என்ற கேள்வியை எழுப்பி இருக்கலாம். ஓ...அது கலைஞர்-காங்கிரஸ் கூட்டு நாடகம் அல்லவா. அதனால் தான் கலைஞர் அமைதியாக உள்ளார். டெல்லியின் எடுபிடிகள் தமிழக காங்கிரஸ் மட்டும் அல்ல. திமுக, பாமக உள்ளிட்ட கட்சிகளும் தான்.
சீமான் மீது எனக்கு விமர்சனமும் உண்டு. சீமான் மீது மட்டும் அல்ல. பொதுவாக தமிழகத்திலே இருக்கும் அனைத்து தலைவர்கள் மீதான எனது விமர்சனமும் கூட. ஈழப் பிரச்சனையை உணர்ச்சிமயமாக பேசி தயவு செய்து பிரச்சனையை திசை திருப்பாதீர்கள். இது உணர்வுப்பூர்வமான பிரச்சனை தான். அதே நேரத்தில் இதனை அமைதியான முறையில் தமிழகத்து மக்கள் மத்தியில் முன்வைக்க வேண்டும். உணர்ச்சிமயமாக பேசுவதை விடுத்து பிரச்சனைகளை பேசுங்கள். ஈழத்தமிழர்கள் படும் இன்னல்களை பேசுங்கள். இந்திய அமைதிப்படை செய்த போர் குற்றங்கள் குறித்து ஆதரப்பூர்வமாக பேசுங்கள். உணர்ச்சிமயமாக பேசுவது தமிழ் மக்களின் எதிரிகளுக்கு தான் சாதகமாக அமைந்து விடுகின்றது. தமிழர்களுக்கு இதனால் எந்த நன்மையும் இல்லை.
இந்த விடயத்தில் சீமான் மீது எனக்கு சில விமர்சனங்கள் இருந்தாலும் சீமானை நான் பாராட்டியாக வேண்டும். தமிழகத்தின் அரசியல்வாதிகள், பத்திரிக்கையாளர்கள், "முற்போக்கு" எழுத்தாளர்கள், "மாற்று" எழுத்தாளர்கள், சமுதாயத்தை புரட்டி போடும் சிந்தனையாளர்கள் என யாருக்குமே ராஜீவ் காந்தி மீது எந்த விமர்சனமும் வைக்க கூடாது என்ற தமிழகத்தின் காட்டு தர்பாரினை எதிர்க்க வேண்டும் என்ற தைரியம் வந்ததில்லை. சீமான் முதல் முறை கைது செய்யப்பட்ட பிறகும், இம் முறை பேசினால் "மறுபடியும்" கைது செய்யப்படுவோம் என தெரிந்தும் ராஜீவ் காந்தியை விமர்சித்து பேசியுள்ளார்.
சீமான் விளம்பரத்திற்காக பேசினார் என்று சொன்னால் அதனை நம்புவதற்கில்லை. வைகோ, நெடுமாறான் போன்றோர் கைதினையே எந்த எதிர்ப்பும் இல்லாமல் அமைதியாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தவர்கள் தான் தமிழர்கள். இவ்வாறு பேசுவதால் சீமானுக்கு எந்தப் புதிய விளம்பரமும் கிடைக்கபோவதில்லை. ஆதாயங்கள் கூட இல்லை. பாதகங்கள் தான் அதிகம். சீமானின் கைதினை யாரும் எதிர்க்க போவதில்லை. இரண்டு நாள் அறிக்கைகள், பிறகு தங்கள் வழக்கமான வேலைகள் என அரசியல்வாதிகள் மாறி விடுவார்கள். காங்கிரஸ் கட்சியினர் கோரிக்கை வைத்திருப்பது போல தேசிய பாதுகாப்புச் சட்டம் வேறு சீமானை பயமுறுத்துகிறது.
கடந்த முறையும் சரி, இம் முறையும் சரி சீமான் இந்திய தேசியத்தை பிளவு படுத்தவோ, இந்திய தேசியத்தை மறுத்தோ கூட பேசவில்லை. ராஜீவ் படுகொலையை கடந்து ஈழப் பிரச்சனையை பார்க்க வேண்டிய தேவையை தான் சீமான் முன்னிறுத்தினார். ராஜீவ் காந்தி இந்திய அமைதிப்படையை அனுப்பிய நோக்கத்தினை தான் கேள்விக்கு உட்படுத்தினார். ராஜீவ் காந்தியின் அமைதிப்படை ஈழத்திலே செய்த போர் குற்றங்கள் ஏற்கனவே பட்டியலிடப்பட்டிருக்கின்றன. இந்தியாவின் இந்தியன் எக்ஸ்பிரஸ் தொடக்கம் லண்டன் பத்திரிக்கைகள் வரை இந்திய அமைதிப்படை ஈழத்திலே செய்த வெறியாட்டத்தை அம்பலப்படுத்தியுள்ளன. இந்தியப் பாராளுமன்றத்தில் இந்திய அமைதிப்படையின் வெறியாட்டம் விமர்சிக்கப்பட்டுள்ளது. ஆனால் அதனை தமிழகத்திலே பேசக்கூடாது, பேசினால் தேசிய பாதுகாப்பு சட்டம் பாயும், சிறையில் போடுவோம் என்பது ஜனநாயக நாட்டின் அறிகுறி அல்ல. சர்வாதிகாரத்தின் வெளிப்பாடு.
அது போல சீமான் பயங்கரவாத இயக்க தலைவரை ஆதரித்து பேசினார் என்பதாக மற்றுமொரு குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. சீமான் அவ்வாறு பேசவில்லை. பிரபாகரன் மேல் தனக்கு இருக்கும் அபிமானத்தை வெளிப்படுத்தினார். ஒரு ஜனநாயக நாட்டில் இந்த பேச்சுரிமை கூட இல்லையா ? இந்திய அரசியல் சாசனம் அமைதியான வழியில் குரல் எழுப்ப அனுமதிக்கிறது. வைகோ கைது செய்யப்பட்ட வழக்கில் கூட நீதிமன்றம் பேச்சுரிமையை வலியுறுத்தியுள்ளது. பிரபாகரனுக்கு ஆதரவாக மட்டுமில்லாமல், விடுதலைப் புலிகளை ஆதரித்தும் கூட அமைதியாக தங்கள் கருத்துக்களை பேசலாம், எழுதலாம். அவ்வாறான சூழலில் காங்கிரஸ் கட்சியை அமைதிப்படுத்த சீமானை தமிழக காவல்துறை கைது செய்துள்ளது.
கலைஞர் குறித்து நாம் வைக்கும் எந்த விமர்சனத்தையும், ஜெயலலிதா ஆட்சியிலே இது போல பேசி விட முடியுமா என்ற வாதம் மூலம் தமிழகத்திலே திமுக ஆதரவாளர்கள் திமுகவின் ஜனநாயக, தமிழ் விரோதப் போக்கினை நியாயப்படுத்த முனைகின்றனர். ஜெயலலிதா ஆட்சியில் நடந்த சர்வாதிகாரப் போக்கினை காட்டி கலைஞர் செய்து கொண்டிருக்கும் ஜனநாயக விரோதப் போக்கினை நாம் நியாயப்படுத்தி விட முடியாது. ஜெயலலிதா தமிழர் அல்ல என கலைஞரே கூறியிருக்கிறார். ஆனால் கலைஞரை "தமிழினத்தலைவர்" என திமுகவினர் கூறுகிறார்கள் (திமுகவினர் மட்டும் தான் கூறுகிறார்கள்). தமிழினத்தலைவராக கூட தேவையில்லை. குறைந்தபட்சம் ஒரு தமிழராக தமிழகத்திலே ஈழத்தமிழர் பிரச்சனையை முழுமையாக விவாதிக்க/பேச ஒரு களம் அமைக்க திமுக ஏன் தொடர்ந்து மறுத்து வருகிறது ? காங்கிரஸ் கட்சியின் தங்கபாலு சீமானை கைது செய்ய வேண்டும் என்றவுடன் பாய்ந்து சென்று சீமானை கைது செய்யும் கலைஞர், தில்லிக்கு சென்று "அவரே" முன்வைத்த கோரிக்கைகளை காங்கிரஸ் இது வரை நிறைவேற்ற வில்லையே என்ற கேள்வியை எழுப்பி இருக்கலாம். ஓ...அது கலைஞர்-காங்கிரஸ் கூட்டு நாடகம் அல்லவா. அதனால் தான் கலைஞர் அமைதியாக உள்ளார். டெல்லியின் எடுபிடிகள் தமிழக காங்கிரஸ் மட்டும் அல்ல. திமுக, பாமக உள்ளிட்ட கட்சிகளும் தான்.
சீமான் மீது எனக்கு விமர்சனமும் உண்டு. சீமான் மீது மட்டும் அல்ல. பொதுவாக தமிழகத்திலே இருக்கும் அனைத்து தலைவர்கள் மீதான எனது விமர்சனமும் கூட. ஈழப் பிரச்சனையை உணர்ச்சிமயமாக பேசி தயவு செய்து பிரச்சனையை திசை திருப்பாதீர்கள். இது உணர்வுப்பூர்வமான பிரச்சனை தான். அதே நேரத்தில் இதனை அமைதியான முறையில் தமிழகத்து மக்கள் மத்தியில் முன்வைக்க வேண்டும். உணர்ச்சிமயமாக பேசுவதை விடுத்து பிரச்சனைகளை பேசுங்கள். ஈழத்தமிழர்கள் படும் இன்னல்களை பேசுங்கள். இந்திய அமைதிப்படை செய்த போர் குற்றங்கள் குறித்து ஆதரப்பூர்வமாக பேசுங்கள். உணர்ச்சிமயமாக பேசுவது தமிழ் மக்களின் எதிரிகளுக்கு தான் சாதகமாக அமைந்து விடுகின்றது. தமிழர்களுக்கு இதனால் எந்த நன்மையும் இல்லை.
29 மறுமொழிகள்:
காங்கிரஸ்காரர்கள் இன்னும் ராஜா ராணிக் காலத்தில் வாழ்வதுபோன்றே எண்ணுகின்றார்கள். பிரித்தானிய அடிமைத் தனத்தில் இருந்து டில்லி அடிமைத்தனத்திற்கு காங்கிரஸ்கார்கள் மாறிவிட்டார்கள்.
12:43 PM, December 19, 2008சுயபுத்தி இழந்தவந்தான் அடிமையாவன்.
ஒரு ஈழத் தமிழன்
வைகோ கைது செய்யப்பட்ட வழக்கில் கூட நீதிமன்றம் பேச்சுரிமையை வலியுறுத்தியுள்ள///
1:13 PM, December 19, 2008அதே நீதிமன்றம்தான், டான்சி வழக்கில் முதலில் பதவியிலிருந்து வெளியே போகவேண்டியது மாதிரி தீர்ப்புசொல்லும் போது “People's verdict" என்ற ஒரு விசயம் எவ்வளவு ஆபத்தானது என்று கூட சுட்டிக்காட்டியது, நான் இதனை quote பண்ணுவது போல மாற்றி மாற்றி ‘எல்லாம் தெரிஞ்ச அறிவாளிகள்’ எல்லாம் பேசிக்கொண்டே போகலாம். உணர்ச்சிவசப்பட்டு கொலை பண்ணிட்டான், உணர்ச்சிவசப்படவில்லையெனில் ரெம்ப நல்லவன், அதுனால் கன்னத்தில் ஒரு கிள்ளு மட்டும் போதும் அப்படின்னு ஒரு ஜனநாயகம் நாட்டு நீதிமன்றமும் காவல்துறை சட்டங்களும் சொல்லுமேயானால்
உணர்ச்சி வசப்படுற காட்டுமிராண்டிகள் கூட்டம் அதிகமாகி கொலைகள் அதிகமாகும் என்பதற்கு வெள்ளைக்காரன் மனோத்தத்துவ புத்தகங்கள் எல்லாம் உ.ம் காட்டவேண்டியதில்லை. உணர்ச்சிவசப்படுறவன் எல்லாம் உதவாங்கரைங்கதான், உணர்ச்சிவசப்பட்டு கமெண்ட் எழுதுற என்னையும் சேர்த்து,,
வெள்ளைக்காரன் உணர்ச்சிவசப்படுற கூட்டத்தோட போரட்டங்களை எந்த அளவு பூட்டப்பட்ட வீதிகளில் அனுமதிக்கிறான்னு உங்களுக்கு நான் சொல்லவேண்டியதில்லை,,
வெள்ளைக்கார தேசத்தில் ஒருத்தன் பேச்சினையோ, எழுத்தையோ கேட்டு, ஒரு சமூகம் “உணர்ச்சிவச” படுவெதெல்லாம் 19ம் நூற்றாண்டோடு முடிஞ்சு போச்சு, நம்ம ஊருக்கு இன்னும் ஒரு நூற்றாண்டில் பாதியாவது வேணும், அப்புறம் தாராளமா யாருனாலும், எந்த வாய்ச்சொல் வீரனென்றாலும் மூடிய வீதிகளில் பேச்சுரிமையை நிலைநாட்டட்டும்,, அதுவரைக்கும் ஜட்ஜ் ஜயாக்களை quote பண்ணாதீங்க,,
you have presented the argument well.Tamil eelam supporters should handle the issue in a logical way and try to put the facts to the tamil nadu people to gain maximum support.
1:40 PM, December 19, 2008I don't doubt seeman genuinely care for the eelam tamils,but every one should concentrate in getting more organised,just being emotional doesn't help the cause.So far Tamil people have failed in each and every issue which is affecting tamil nadu and tamil people,Kaveri issue -failure,Okanekkal issue failure,Mullai periyaru issue -failure,eelam tamil issue-failure.
We should do soul searching.
Where did we go wrong?
tamils are an emotional people,but we must tone down our emotions and become more smarter in our operation.
//
2:47 PM, December 19, 2008வெள்ளைக்கார தேசத்தில் ஒருத்தன் பேச்சினையோ, எழுத்தையோ கேட்டு, ஒரு சமூகம் “உணர்ச்சிவச” படுவெதெல்லாம் 19ம் நூற்றாண்டோடு முடிஞ்சு போச்சு,
//
அப்படியா :-))))))
இங்க ஒபாமாவுக்கு ஓட்டு போட்டவங்க பாதிப்பேர் அவர் பேச்சை கேட்டு உணர்ச்சி மயமாகி ஓட்டுப்போட்டதா சொல்றாங்க. இதுல வெள்ளைக்காரனுக்கு வக்காலத்து வேற. முதல்ல வெள்ளைக்காரன் மேல இருக்கிற "உயர்ந்த" எண்ணத்தை மாற்றிக் கொண்டு, அவனையும் நம்மைப் போன்ற மனிதன் என்ற எண்ணத்துடன் பேசுங்கள். உங்கள் அடிமைப்புத்தியை மாற்றிக் கொள்ள பாருங்கள். பிறகு தமிழன் குறித்து பேசுங்கள்
இங்க ஒபாமாவுக்கு ஓட்டு போட்டவங்க பாதிப்பேர் அவர் பேச்சை கேட்டு உணர்ச்சி மயமாகி ஓட்டுப்போட்டதா சொல்றாங்/////
3:53 PM, December 19, 2008இப்படியே அவுங்க சொல்றாங்க இவுங்க சொல்றாங்க, சொல்லிகிட்டே திரியவேண்டியதுதான், வெள்ளைகார வெண்ணெய்களோட அறிவுசார்ந்த போட்டி போடுற வேலையில் இருந்திகிட்டுதான் சொல்றோமாக்கும், எல்லார்கிட்டேயும் கற்றுக்கொள்ள வேண்டியது இருக்குன்னு,, இதை வெள்ளைக்கார வெண்ணெய்களே ஒத்துக்குராங்க,, அறம் என்றால் என்னவென்று அவனுகளுக்கே நான் விளக்க வேண்டியதாயிற்று,
முதல்ல வெள்ளைக்காரன் மேல இருக்கிற "உயர்ந்த" எண்ணத்தை மாற்றிக் ///
software la நம்ம அடிச்சுக்க ஆள் இல்லை உலகத்திலேன்னு நினைக்கிற ஆள நீங்க, ஓண்ணும் பண்ண முடியாது. அறம் சார்ந்த விசயங்கள் எங்கேயிருந்தாலும் எடுத்துக்கலாம், ஒருவேளே, அறம் சார்ந்து அவனுகதான் உங்களுக்கு உதவ போறானுங்க,, மற்றபடி நாம் தமிழனா பெருமை படுறேன், கில்லியிலுருந்து தான் கிரிக்கெட்டு, தமிழன் பற்றி பேச லெமூரியா script தெரிஞ்சுருக்கணும் பேசனும், தாயைப் பழிச்சாலும் தமிழைப் பழிக்கமாட்டேன் ந்னூ சொல்லிக்கினே இருக்கவேண்டியதுதான்,
சசி,
1:16 AM, December 20, 2008சரியாகத் தான் சொல்லியிருக்கிறீர்கள்!
பிரபாகரன் மீது சீமானுக்கு அபிமானம் இருப்பது தவறில்லை. அது குற்றமும் இல்லை!
ஆனால், இப்படி சீமான் உணர்ச்சிவசப்பட்டு உளறுவதால் ஏதாவது பயன் உண்டா ? அதனால் தீது தான் அதிகம், இது கூட அவருக்குப் புரியாததற்கு அவரது 'சினிமா' TAG தான் காரணமா ????
உதாரணம்:
"சீமான் பேசுவதை நிறுத்தினான் என்றால், தனி ஈழம் அடைந்திருக்க வேண்டும் அல்லது அவன் இறந்திருக்க வேண்டும். உலகிலேயே பிரபாகரனைப் போன்ற வீரன் இல்லை. அவனை விட்டால் உலகத்தில் வலிமைமிக்க ராணுவத்தை ஏற்படுத்தி விடுவான் என பயப்படுகின்றனர்"
"பெரியாரின் குச்சிதான் இன்று நிமிர்ந்து துப்பாக்கியாக பிரபாகரன் கையில் உள்ளது. அவன் நமது குலதெய்வம். "
"எதிரிகளான, பார்ப்பனன், சிங்களன், கன்னடனை விடுத்து, தனது சகோதரனை வெட்டி விட்டு சிறையில் இருக்கிறான். இது ஒரு இனமா? இந்த மண்ணில் (தமிழகத்தில்) இன்னொரு பிரபாகரன் பிறக்கும் வரை இந்த இனம் மீளாது. "
இதெல்லாம் தேவையா, சொல்லுங்க ????
சீமான் பேசியது:
1:27 AM, December 20, 2008//
ஒட்டுமொத்த தமிழ் இனத்தையே அழிப்பதற்காக அமைதிப்படை என்ற பெயரில், இலங்கைக்கு இரண்டு லட்சம் பேரை அனுப்பினாரே ராஜிவ்; இது சர்வதேச தீவிரவாதம் இல்லையா?
//
இந்திய ராணுவம் சிலபல முறையற்ற செயல்களில் ஈடுபட்டிருந்தாலும், இந்தக் குற்றச்சாட்டு அபாண்டமானது, அதீதமானது, அப்பட்டமான உளறல் இல்லையா ? தமிழனத்தை அழிக்கவா ராஜீவ் அமைதிப்படையை அனுப்பினார் ???
பேச்சு சுதந்திரத்தை இப்படி உளறுவதற்கு பயன்படுத்தினால், ஒரு எழவும் சாதிக்க முடியாது :-( த.நா காங்கிரஸ் பற்றி சொல்ல எதுவுமில்லை !!!
பாலா,
2:00 AM, December 20, 2008*********************
இந்திய ராணுவம் சிலபல முறையற்ற செயல்களில் ஈடுபட்டிருந்தாலும், இந்தக் குற்றச்சாட்டு அபாண்டமானது, அதீதமானது, அப்பட்டமான உளறல் இல்லையா ? தமிழனத்தை அழிக்கவா ராஜீவ் அமைதிப்படையை அனுப்பினார்
*********************
சில பல என எப்படி உங்களால் எளிமைப்படுத்த முடிகிறது ? வல்வெட்டி துறையில் தமிழர்களை வரிசையாக நிற்கவைத்து இந்திய இராணுவம் சுட்டுக்கொன்றது.இதனை ஜாலியன்வாலாபாக், Mylai போன்ற சம்பவங்களுடன் ஒப்பிடுகிறார்கள். பல பெண்கள் பாலியல் வன்முறைக்கு உள்ளாகினர்.
இது சர்வதேச தீவிரவாதம் என்ற சீமானின் கருத்து எனக்கு நியாயமாகவே தெரிகிறது. ஆனால் அவர் முன்வைத்த விதம் தான் சரியல்ல என சொல்கிறேன். இத்தகைய பிரச்சனைகளை போகிற போக்கில் அணுக முடியாது. சரியான புள்ளிவிபரங்களுடன் சீமான் பேசியிருந்தால் இன்றைக்கு எகிறி குதித்து கொண்டிருக்கிறவர்கள், வாய்மூடி இருந்திருப்பார்கள். மாறாக சீமான் உணர்ச்சிமயமாக இதனை அணுகியது தான் தவறு என நான் சொல்கிறேன்.
தமிழினத்தை அழிக்கவா ராஜீவ் அமைதிப்படையை அனுப்பினார் எனக் கேட்கிறீர்கள். இல்லை அப்படியான நோக்கம் எதுவும் ராஜீவ் காந்திக்கு இல்லை. அன்றைய சூழலில் போபர்ஸ் பீரங்கி பேர ஊழலில் இருந்து மக்களின் கவனத்தை திசை திருப்ப இலங்கைப் பிரச்சனையை ராஜீவ் காந்தி பயன்படுத்திக் கொண்டார். அப்படி பயன்படுத்திக் கொண்ட சூழ்நிலையிலும் தமிழனுக்கு எந்த ஆதாயமும் கிடைக்காமல் இந்திய நலனை முன்னிறுத்துவதில் கவனம் செலுத்தினர். இந்திய அமைதிப்படைகள் ஈழத்தில் வெறியாட்டம் நடத்திய பொழுது அதனை கண்டுகொள்ளாமல் இருந்து விட்டார். ஈழத்து வரலாற்றில் சிங்கள இராணுவத்தைக் காட்டிலும் மிக மோசமான வன்முறைகளை இந்திய இராணுவத்தினர் நிகழ்த்தினர் என்பது உண்மை.
*********************
பேச்சு சுதந்திரத்தை இப்படி உளறுவதற்கு பயன்படுத்தினால், ஒரு எழவும் சாதிக்க முடியாது
*********************
இதெல்லாம் தேவையா, சொல்லுங்க ????
*********************
என்னைப் பொறுத்தவரை இது தேவையற்ற உணர்ச்சிப்பூர்வமான உளறல். என்றாலும் அதனை பேசுவதற்கு சீமானுக்கு இந்தியாவில் பேச்சுரிமை இல்லை என்பது தான் என்னுடைய குற்றச்சாட்டு
பேச்சு சுதந்திரத்தை எப்படி பயன்படுத்துவது என்பதை யாரும் வரையறை செய்ய முடியாது. இந்தியாவில் சுப்பிரமணியம் சாமி மட்டும் தான் உளறலாம் போலிருக்கிறது. சீமானுக்கும் உளறுவதற்கு உரிமை உள்ளது தானே :)
தமிழகத்தில் ஈழத்திற்காக உணர்ச்சிவசப்பட்டு பேசுபவர்களுக்கு ஒரு அரசியல் காரணமுண்டு. அது விடுதலை என்பது மக்களை அணிதிரட்டிப் பெறவேண்டியது என்பதை மறுத்து சில சூப்பர் ஹீரோக்கள் பெற்றுத் தரும் பரிசு என்று நினைப்பதுதான். அடுத்து புலிகளை ஆதரிப்பவர்கள்கூட இந்திய அரசு தலையிட்டு அமைதியைக் கொண்டு வரவேண்டுமென கருதுகிறார்கள். இதுவும் மேற்படி வகையினத்தில்தான் சேரும்.
2:44 AM, December 20, 2008ஈழத்தில் அன்றும் சரி, இன்றும் சரி இந்தியா தனது பிராந்திய மேலாதிக்கத்திற்காகவே தலையிடுகிறது. இதில் இந்தியாவை அம்பலப்படுத்தி தமிழக மக்களிடம் பெறும் அரசியல் ரீதியான ஆதரவிலேயே ஈழத்திற்கு நிம்மதியைத் தர முடியும். ஆனால் ஈழத்திற்காக குரல் கொடுக்கும் தமிழகத் தலைவர்கள் பலரும் ஏதோ சில அதிகாரிகள் மத்திய அரசுக்கு தவறான தகவல் கொடுப்பதாகவும், அவர்களை மாற்றிவிட்டால் எல்லாம் சரியாகிவிடும் என்றும் கருதுகிறார்கள். இலங்கை இராணுவத்திற்கு பயிற்சியும், ஆயுதங்களையும் கொடுத்து விட்டு இலங்கை அரசின் போருக்கு எல்லா விதத்திலும் ஆதரவு கொடுக்கும் இந்திய அரசின் பின்னே இந்திய முதலாளிகளின் நலன் மறைந்துள்ளது.
இந்தத் திமிரில்தான் ராஜ பக்க்ஷே போருக்கு இந்தியா ஆதரவளித்திருக்கிறது என்று வெளிப்படையாக பேசுகிறார். அதனால்தான் தமிழகக் காங்கிரசுக் கோமாளிகள் ராஜீவின் கொலையை வைத்து ஈழத்தின் துயரத்தை காலில் போட்டு மிதிக்கிறார்கள்.
ஆகவே ஈழம் குறித்து நாம் அரசியல் ரீதியில் இந்தியாவின் மேலாதிக்கத்தை தகர்க்கும் அளவு உணர்ச்சிவசப்படவேண்டும். அது ஒன்றுதான் இந்தியாவின் பிடியில் இருக்கும் தமிழ் மக்கள், ஈழத்திற்கு செய்யும் தேவையான உதவியாக இருக்கும்.
நட்புடன்
வினவு.
My father used to tell me that real artists are a slightly eccentric and highly emotional people,most of the good artists/creative people have a chaotic personal life and human weaknesses.he used to quote Kannadasan-a great poet,but an alcoholic.
2:50 AM, December 20, 2008Look at kamalahasan,a wonderful actor,but when it comes to women,a very confused man.
look at Barathiraja,thangar bachchan, cheran,Amir some of the best directors of tamil cinema,but many times fail to control their mouths.
I think seeman really love eelam tamils and is angry with the way the central govt is acting.even after so many protests by ordinary Tamil nadu people,indian govt is sending it's military experts to vanni,while sinhala army is killing 5 months old 6 months old babies.
Probably that made him furious,but he should try to control his emotions and speak in a measured way.
however,I condemn the actions of congress people,tamil nadu govt and the police.saying that seeman is a danger to the security of India is a total joke.
இந்திய இறையாண்மையை சப்போர்ட் பண்ணி எப்படி வேண்ணாலும் உளரலாம்.அதுல எந்த இன மக்களுக்கும் சுயமரியாதை போகலாம்.அதை பாலாவும், சு.சாமியும் கேட்க மாட்டாங்க.
3:59 AM, December 20, 2008ஆனா இந்திய இறையாண்மையை தொடக்கூடாது..ஆமா..:)
//பிரச்சனைகளை பேசுங்கள். ஈழத்தமிழர்கள் படும் இன்னல்களை பேசுங்கள். இந்திய அமைதிப்படை செய்த போர் குற்றங்கள் குறித்து ஆதரப்பூர்வமாக பேசுங்கள்//
4:04 AM, December 20, 2008இது ஒரு பக்கச் சார்பாகத் தெரிகிறது சசி..
பேசுவதாக இருந்தால் முதலில் ஈழப் பிரச்சினையின் தமிழ் ஈழத்து மக்களின் ஒருமித்த ஆதரவு ஏன் கிடைக்காமல் போனது..?
ஈழத்து தமிழ் இளைஞர்களை, வேறொரு குழு என்கிற பாசிஸ மனப்பான்மையில் கொடூரமாகக் கொலை செய்த அனைத்துப் போராளிக் குழுக்களின் போர்க் குற்றங்களைப் பற்றியும் பேசலாம்..
ஈழத்து முஸ்லீம்களை ஓட, ஓட விரட்டியடித்து, படுகொலைகள் செய்து தமிழர்கள் வேறு, தமிழ் பேசும் முஸ்லீம் மக்கள் வேறு என்று பிரிவினை காட்டிய போராளிக் குழு எது என்பது பற்றியும் பேசலாம்..
ஆனால் எதுவும் இப்போதைக்கு பலனளிக்காது.. வெட்டிப் பேச்சுதான்..
சீமான் அளவுக்கதிமான ஆர்வத்துடன் இருப்பது ஏன் என்று புரியவில்லை. ஆனால் தனி்ப்பட்ட முறையில் மிக நல்ல, நாகரிகமான மனிதர்.. உதவி, துணை இயக்குநர்களைக்கூட அதட்டி, உருட்டி வேலை வாங்க மாட்டார். பேச்சு.. பேச்சு.. பேச்சுதான்.. மனிதன் தூங்குகின்ற நேரம் தவிர மீதி நேரமெல்லாம் பேசியே தீர்த்துவிடுவார்.. நல்ல சிந்தனையாளர். ஆனால் ஏன் இப்படி பகுத்தறிவு, புலிகள், பிரபாகரன், வெங்காயம் என்று தனது வாழ்க்கையைத் தொலைத்துக் கொள்கிறார் என்பது புரியவில்லை..
உண்மைத் தமிழன்,
4:26 AM, December 20, 2008*******
ஈழத்து தமிழ் இளைஞர்களை, வேறொரு குழு என்கிற பாசிஸ மனப்பான்மையில் கொடூரமாகக் கொலை செய்த அனைத்துப் போராளிக் குழுக்களின் போர்க் குற்றங்களைப் பற்றியும் பேசலாம்..
*******
நிச்சயமாக பேசலாம். பேசப்பட வேண்டும் என்றே நான் நினைக்கிறேன். புலிகள், டெலோ, புளட் போன்ற அமைப்புகளில்/அமைப்புகளுக்குள் நடந்த சகோதரப்படுகொலைகளைப் பற்றியும் பேச வேண்டும். இது குறித்து ஒரு கட்டுரை தொடரினை எழுத எண்ணியிருக்கிறேன்.
அவ்வாறு பேசும் பொழுது இந்தியா போராளிக்குழுக்களுக்குள் ஏற்படுத்திய கலகங்கள் குறித்தும் பேச வேண்டிய தேவை வரும். அது குறித்தும் பேசலாம் தானே ?
முஸ்லீம்கள் குறித்தும் பேச வேண்டும். ஈழத்து முஸ்லீம்கள் தொடர்ச்சியாக பாதிக்கப்பட்டுள்ளனர். இது தமிழ்ப் போராளிகள் செய்தது மட்டும் அல்ல. இலங்கை சுதந்திரம் அடைவதற்கு முன்பே தமிழ் பேசும் முஸ்லீம்களுக்கு எதிராக சிங்களவர்களுடன் சேர்ந்து தமிழ் பேசும் சைவர்கள் செய்த அராஜகம் தொடக்கம் தற்போதைய சூழல் வரை பேச வேண்டும். முஸ்லீம்கள் தங்களை தனி தேசிய இனமாக ஏன் அடையாளப்படுத்திக் கொண்டனர் என்பது குறித்தும் பேச வேண்டும்.
இது ஒரு புறம் இருக்க, குஜராத்தில் நரேந்திர மோடிக்கு கொடி பிடிக்கும் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் எல்லாம் ஈழத்து முஸ்லீம்களுக்கு இரக்கம் காட்டுவது தான் வேடிக்கையாக உள்ளது :))
there are three things which are raised by some people whenever they want to discredit eelam tamil cause.
5:08 AM, December 20, 2008First ,they go on about rivalry between tamil rebel groups. it happened in the 80s
yes unmai, If we have to talk about that ,then we have to talk about the way indaian raw acted to foster the divisions between the tamil groups.it is true tigers killed other group members but ,it wasn't a one way traffic.lot of tiger members were killed by the other groups as well.it is just tigers emerged stronger and more popular but that doesn't excuse indian government's involvement.
secondly ,they talk about the plight of tamil speaking muslims.before independence,sinhalese showed violence towards muslims,.yes tamil leaders just kept quiet and failed to condemn it,that was wrong but,they didn't do anything to harm the muslims ,it was the sinhalese who attacked them.
people who talk about srilankan muslims should also realise that with the help of the muslims ,sinhala army killed many eastern tamil civilians and tamils in the east have lost many of their ancient lands because of aggression by sinhalese and muslims .It happened in the 80's and 90's.the sinhala govt is still killing tamils every day in the so called 'democratic liberated east'
If you want to talk about the muslim factor in srilanka you have to talk about these facts as well.
you should also talk about the role played by both the srilankan government and of course, indian Raw for fostering division among tamils and tamil speaking muslims. even the recent tiger- karuna split was plotted and executed by india and sri lanka.
Bottom line is that they want crush eelam tamil liberation struggle.
these are the facts -unmaikal,unmai,you wanted to speak the truth, I am speaking the truth .you seem to be always going on the same direction,stop blaming only the one side and hiding the the real facts.
பேச்சு சுதந்திரத்தை எப்படி பயன்படுத்துவது என்பதை யாரும் வரையறை செய்ய முடியாது. இந்தியாவில் சுப்பிரமணியம் சாமி மட்டும் தான் உளறலாம் போலிருக்கிறது. சீமானுக்கும் உளறுவதற்கு உரிமை உள்ளது தானே :)////////////
5:23 AM, December 20, 2008இப்படி வரையரையே இன்றி போய்கினே இருக்கிறதுதான் பிரச்சனையோட ஆதாரமே, உளரருவதற்கு சீமான், சிவசங்கர்மேனன், பாரதிராஜா, சோ, அத்வானி,சாமி, திரிவேதி சாமியார் எல்லோருக்கு உரிமை இருக்கு, ஆனால் சட்டம் எவ்வளவு உளரலாம் என்று சொல்கிறது. அளவே கிடையாது என்று மருத்துவர்களால் கைவிடப்பட்ட நேரங்களில் அறைக்குள் அமர்ந்து உளராலாம் என்று சொல்கிறது.
இதை சொல்லுவதற்கு சட்டம் என்ன ஜனநாயகம் என்ன, பேச்சுரிமைக்கு எல்லையே இல்லை என்று குதிக்கிறவுங்களுக்கு பரிட்சையோடு மறந்து போன திருக்குறள் சொல்கிறேன்.
பீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டம்
சால முகுத்துப் பெயின் - மயிலிறகினை வண்டியில் ஏற்றவே வரையறை இருக்கும்போது (தமிழனென்று நிருப்பிக்கிறதுக்கு என்னவெல்லாம் செய்யவேண்டியிருக்கு) பேச வரையறை இல்லையென்பது நாகரீகத்தில் இன்னும் கொஞ்சம் தூரம் போக வேண்டுமென்கிறேன்,
வரையறையே கிடையாதென்று சொல்லி பூனை மாதிரி கண்னை மூடிக்காதீங்க, அல்லது இந்த பிரச்சனைக்கு மட்டும், என்ன வேண்மெனினும் பேசுவதற்கும், என்ன வேண்டுமானாலும் செய்வதற்கும் வரையறை கிடையாது, வேறு எந்த தனிநாடு பிரச்சனையோடும் இதனை ஒப்பிட முடியாது என்று அளவுகோல் வைத்துள்ள உங்களால் வேறு பிரசனைகள் எய்த தீர்வினையும் ஏற்றுக்கொள்ள முடியாது,,
some of the best directors of tamil cinema,but many times fail to control their mouths.///////////
சொந்தப்பிரச்ச்னைக்கு உணர்ச்சிவசப்பட்டு வீட்டுகுள் கொந்தழித்தால் யாரும் எதுவும் கேட்கமாட்டாங்க, தெருபிரச்சனையை தெருவிலும், நாட்டுபிரச்சனையை நாடளுமன்றத்திலும், சர்வதேச பிரச்சனையினை அதறக்கான அரங்கிலும் பேசும் போதும் தெருச்சண்டை அளவுக்குதான் உணர்ச்சிவசப்படுவோமென்றால்
அப்புறம் அறையில் அடைத்து உணர்ச்சுவசப்பட வைக்கவேண்டியதுதான்,, திரும்பவும் அவையறிந்து வாழாதான் வாழ்க்கை என்று தாத்தாவ கூப்பிடவேண்டியதுதான்.
இப்பத்தான் சசியே, இது தவறென்று சொல்ல ஆரம்பிக்கிறார், பொதுமக்கள் எல்லாம் கைதட்டி அவரை உணர்ச்சிவசப்பட வச்சீராதீங்க,,
அவ்வாறு பேசும் பொழுது இந்தியா போராளிக்குழுக்களுக்குள் ஏற்படுத்திய கலகங்கள் குறித்தும் பேச வேண்டிய தேவை வரும். அது குறித்தும் பேசலாம் தானே ///////
தாரளமாக பேசலாம், ஆனால் அதை முன்னிருத்தி செய்த அன்றைய ஆபிஸர்களின் ஏற்பாடு அது, பிராந்தியகலக குழுக்களின் (ஆரம்பநாட்கள்) பிரிவு ஏற்படுதுவதென்பது அனைத்து நாட்டின் உளவுதுறையின் செய்யக்கூடியதுதான், அது அவர்களின் கடையையும் கூட. நம்முடைய கடமை அக்காலத்திய உளவுத்துறையின் செயல்பாடுகளை விமர்ச்சித்து கொண்டு இருப்பது மட்டுமே, தற்போதைய ஆபிஷர்கள் அதற்கு பிராயசித்தம் செய்யவேண்டுமென்று என்பதுதான்
நமது கடைமையென்று முன்னிருத்தினால், எவனும் அவன் வேலை மட்டும் ஒழுங்கா பார்ப்பேதெயில்லை என்று சொல்வேன், வேலையை பார்க்காமல் கமெண்ட் அடிக்கிற என்னையும் சேர்த்து, I'd stop here. Thanks
"நல்ல சிந்தனையாளர். ஆனால் ஏன் இப்படி பகுத்தறிவு, புலிகள், பிரபாகரன், வெங்காயம் என்று தனது வாழ்க்கையைத் தொலைத்துக் கொள்கிறார் என்பது புரியவில்லை.."
12:19 PM, December 20, 2008உண்மைத்தமிழன், எவ்வளவு இலகுவாகச் சொல்லிவிட்டீர்கள்! ஒரு மனிதரின் சமூக அக்கறையை, சக மனிதர் மீதான அக்கறையை இவ்வளவு மோசமாகக் கீழ்மைப்படுத்தியிருக்க வேண்டாமென்று தோன்றுகிறது.
//பேசுவதாக இருந்தால் முதலில் ஈழப் பிரச்சினையின் தமிழ் ஈழத்து மக்களின் ஒருமித்த ஆதரவு ஏன் கிடைக்காமல் போனது..? //
3:14 PM, December 20, 2008இந்த மடச்சாம்பிராணிக்கும் பதில் தரும் சசியை என்ன சொல்றது?
சசி, உங்களுடைய கருத்தைத் தெளிவாகச் சொல்லியிருக்கிறீர்கள்.
3:32 PM, December 20, 2008சீமான் பேசியதனால் அல்லலுறும் ஈழ மக்களுக்கு ஏதாவது பயனுண்டா, அல்லது, வீண் திசை திருப்பலில் முடிகிறதா என்கிற கேள்வி ஒருபுறமிருக்கட்டும். அவர் உலகத் தமிழரிடம் பெயர் வாங்க வேண்டுமென்றோ, உள் நோக்கத்தினாலோ, உணர்ச்சிவயப்பட்டோ அல்லது உளறலுக்காகவோ பேசினாரா என்ற ஆராய்ச்சியும் இன்னொரு புறமிருக்கட்டும்.
அவர் பேசுவதற்கு உரிமை இருக்கிறது. அவர் பேசியது பார்ப்பன-பனியா-இந்துவெறி-இந்தியப் பயங்கரவாத நாய்களுக்கு செருப்படி கொடுப்பது போலிருக்கிறது. அவரைப் போன்று இன்னும் பலரும் பேசிக் (அல்லது உளறிக்) கொட்ட வேண்டும். அப்பொழுதுதான் உண்மைகளைப் பலரும் வெளியே பேசக்கூடிய தைரியம் அதிகமாகும். புலிகளை விமர்சிக்கும் உண்மைத்தமிழன்களின் தைரியத்தையும் சேர்த்துத்தான் சொல்கிறேன்.
இது மட்டும் போதாது...
காந்தியைக் கொன்ற ஆர்.எஸ்.எஸ். தொடர்ந்து இந்தியாவில் மதக் கலவரங்களைத் தூண்டி வருவதால், அவ்வியக்கத்தை மீண்டும் தடை செய்யக் கோரியும், அவ்வியக்கத்தை ஆதரிக்கும் சோ இராமசாமிகளைச் சிறையிலடைக்கக் கோரியும் அடிக்கடி வேண்டுகோளிட்டுக் கொண்டே இருக்க வேண்டும்.
டெல்லியில் சீக்கிய இனப்படுகொலையை நடத்திய இராசீவின் பயங்கரவாதத்தை மக்கள் மத்தியில் திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டே இருக்க வேண்டும். அக்காலத்தில் அதற்கு ஆதரவாகப் பேசிய சோ ராமசாமி போன்ற பயங்கரவாதிகளை கைது செய்யச் சொல்ல வேண்டும்.
குஜராத் இனப் படுகொலையை நடத்திய நரேந்திர மோடிக்கு ஆயுள்தண்டனை வழங்கக் கோரி பேசிக் கொண்டே இருக்க வேண்டும். நரேந்திர மோடியின் பயங்கரவாதத்தை ஆதரிக்கும் சோ ராமசாமியையும், அவரது இரசிகர்களையும் கைது செய்யச் சொல்லிக் கொண்டேயிருக்க வேண்டும்.
இராஜிவ் காந்தியின் உயிர் மட்டும்தான் முக்கியமா என்ன? அப்பாவி சீக்கியர்கள், முஸ்லீம்கள், இந்துக்கள், ஈழத்தமிழர்களின் உயிர்களும் முக்கியம் என்பதை இந்திய மக்கள் உணர்ந்து விட்டார்கள் என்றும் இன்னும் தேசியவெறியை ஊட்டி ஏமாற்றிக் கொண்டிருக்க முடியாது என்றும் பார்ப்பன-பனியா-இந்துவெறி-இந்தியப் பயங்கரவாதிகள் அஞ்சி தங்களது அரசு-பயங்கரவாதத்தைக் கைவிடவேண்டும்.
சீமானைப் போலவே பலரும் இப்பிரச்னைகளைப் பற்றி எழுப்பிக் கொண்டேயிருக்க வேண்டும். எத்தனை நாட்களுக்கு எத்தனை பேரைத்தான் கைது செய்து இவர்களால் சிறையிலடைக்க முடியும்?
நன்றி - சொ.சங்கரபாண்டி
மும்பாயில் பாகிஸ்த்தான் தாக்குகின்றது.
6:58 PM, December 20, 2008இந்தியா தன் படையை எல்லை நோக்கி நகர்கின்றது.
ஆனால் கடந்த வாரம் இலங்கை இராணுவ முகாமில் இந்திய இராணுவ
அதிகாரிகளும் பாகிஸ்த்தான் அதிகாரிகளும் (ஏனைய 5 நாடுகளின் அதிகாரிகள்
உட்பட) கூட்டாக தமிழர்களை அழிக்க ஆலோசனை கூறியிருக்கின்றார்கள.
சீமான் இதைச் சொன்னால் காங்கிரஸ் நண்பர்கள் கூச்சலிடுகின்றார்கள்?????????????????
//enRenRum-anbudan.BALA said...
9:39 PM, December 20, 2008சீமான் பேசியது:
//
ஒட்டுமொத்த தமிழ் இனத்தையே அழிப்பதற்காக அமைதிப்படை என்ற பெயரில், இலங்கைக்கு இரண்டு லட்சம் பேரை அனுப்பினாரே ராஜிவ்; இது சர்வதேச தீவிரவாதம் இல்லையா?
//
இந்திய ராணுவம் சிலபல முறையற்ற செயல்களில் ஈடுபட்டிருந்தாலும், இந்தக் குற்றச்சாட்டு அபாண்டமானது, அதீதமானது, அப்பட்டமான உளறல் இல்லையா ? தமிழனத்தை அழிக்கவா ராஜீவ்//
தமிழர்களை அழிப்பதற்க்காக அனுப்பவில்லை அனுப்பிவிட்டு அழித்தார்:-)
//இது ஒரு புறம் இருக்க, குஜராத்தில் நரேந்திர மோடிக்கு கொடி பிடிக்கும் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் எல்லாம் ஈழத்து முஸ்லீம்களுக்கு இரக்கம் காட்டுவது தான் வேடிக்கையாக உள்ளது//
9:41 PM, December 20, 2008அண்ண பஞ்சிலேயே சூப்பர் பஞ்ச் இதுதான் சூப்பர்.
////பேசுவதாக இருந்தால் முதலில் ஈழப் பிரச்சினையின் தமிழ் ஈழத்து மக்களின் ஒருமித்த ஆதரவு ஏன் கிடைக்காமல் போனது..? //
9:43 PM, December 20, 2008இந்த மடச்சாம்பிராணிக்கும் பதில் தரும் சசியை என்ன சொல்றது?//
நக்கல் பண்ணுங்கப்பு நளினம் பண்ணாதீங்க
உணர்சி வசப்படுத்த பேசினால்தான், தமிழன் தலையை நிமிர்த்தி பார்க்கிறான். தூங்கும் தமிழனை விழிக்க வைக்க, இதுதான் நல்ல வழி. ஆனால் உள்ளுக்குள் பிடித்து போட்டு விடுகிறார்கள். அதை தவிர்த்து கொள்ளவேண்டும், அதற்காக புது யுக்தியை கைக்கொள்ளவேண்டும்.
9:47 PM, December 20, 2008//சீமான் மீது எனக்கு விமர்சனமும் உண்டு. சீமான் மீது மட்டும் அல்ல. பொதுவாக தமிழகத்திலே இருக்கும் அனைத்து தலைவர்கள் மீதான எனது விமர்சனமும் கூட. ஈழப் பிரச்சனையை உணர்ச்சிமயமாக பேசி தயவு செய்து பிரச்சனையை திசை திருப்பாதீர்கள். இது உணர்வுப்பூர்வமான பிரச்சனை தான். அதே நேரத்தில் இதனை அமைதியான முறையில் தமிழகத்து மக்கள் மத்தியில் முன்வைக்க வேண்டும்.//
10:31 PM, December 20, 2008இக்கருத்துடன் சற்று மாறுபடுகிறேன். உணர்ச்சியமாகவும் பேசவேண்டும். உண்மைகளையும் பேசவேண்டும். உண்மைகளை உணர்வுப்பூர்வமாக பேசவும்வேண்டும். சீமான் பேசுவதால் என்ன பயன் என்ற கேள்வி தவறானது. எந்த ஒருத் தனிமனிதர் பேச்சாலும், செயலாலும் மட்டும் ஒரு பெரிய குறிக்கோளை எட்டிவிட முடியாது. எல்லோருடைய கூட்டு முயற்சியினால் தான் அது சாத்தியம். ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக மக்களிடம் பொதுக்கருத்தை உருவாக்க வேண்டுமானால் சீமான் போன்றவர்கள் தொடர்ந்து பேசத்தான் வேண்டும். தமிழ்நாட்டு அரசியல் பெருந்தலைவர்கள் தங்கள் சுயலாபங்களுக்காக சும்மா வெத்துவேட்டு தீர்மானங்களை இயற்றிக்கொண்டு, அறிக்கைகளை விடுத்துக்கொண்டிருக்கும் சூழலில் அரசியல் அதிகாரத்தை எதிர்த்துக் கேள்வி கேட்கும் சீமானின் துணிச்சலைப் பாராட்டுகிறேன். இவர் போன்றவர்களால் தான் பொதுமக்களின் கருத்தில் மாற்றம் உருவாகும், பிறகு அரசியல் தலைமைகளின் மனமும் மாறும். சும்மா ஊளையிடும் நூறு கதர்க்கோவணங்களுக்கு (இவர்கள் ஒருத்தருக்கொருத்தர் வேட்டிகளை உருவிக்கொண்டு, சட்டைகளைக் கிழித்துக்கொள்வதால் இந்த சொற்பிரயோகம் தான் பொருத்தமானது :-) ) பயந்து பேசாமலிருந்தால் பொதுமக்களும் அப்படி பயந்துக்கொண்டுதானே இருப்பார்கள். பிறகு பொதுக்கருத்தை எப்படி மாற்றுவது?
தமிழ்ப்படங்களுக்கு ஆங்கிலப் பெயர் வைப்பதெல்லாம் கருத்துச் சுதந்திரம் என்று காச்சுமூச்சென்று கத்திக்கொண்டிருந்த கருத்துச் சுதந்திரக் காவலர்கள் அரசியல் கருத்துக்களுக்காக சிலரை கைது செய்யப்படுவதைக் கண்டு மௌனம் சாதிப்பது கேவலமாக இருக்கிறது.
கருத்து.காம் புகழ் கரைவேட்டி, கதர்வேட்டி வாரிசுகள் இப்போது என்னத்தை கிழித்துக்கொண்டிருக்கிறார்களோ?
/நல்ல சிந்தனையாளர். ஆனால் ஏன் இப்படி பகுத்தறிவு, புலிகள், பிரபாகரன், வெங்காயம் என்று தனது வாழ்க்கையைத் தொலைத்துக் கொள்கிறார் என்பது புரியவில்லை../
2:10 AM, December 21, 2008என்ன ஒரு கருத்தியல் வன்முறை! இந்த வெங்காயங்களைப் பற்றிப் பேசாமால் சீமான் துக்ளக் சோ என்னும் பார்ப்பன வெங்காயத்திற்கு அடி வருட வேண்டும் என்கிறீர்களா, அல்லது நீங்கள் சொல்லும் இந்த வெங்காயங்களை எல்லாம் சீமானிடமிருந்து கழித்து விட்டால், அவரை நல்ல சிந்தனையாளர் என்று எந்த அடிப்படையில் சொல்கிறீர்கள். எனக்குச் சீமானின் கருத்துக்களோடும் செயல்பாடுகளோடும் நிச்சயம் முரண்பாடு உண்டு. ஆனால் சீமானின் கருத்துரிமை பறிக்கப்படுவது பாசிசமின்றி வேறில்லை. பிரக்யாசிங் தாக்கூருக்கு ஆதரவாக அத்வானி, உமாபாரதி வகையறாக்கள் பேசலாம். பிரபாகரனை ஆதரித்துச் சீமான் பேசக்கூடாதா?
//பிரக்யாசிங் தாக்கூருக்கு ஆதரவாக அத்வானி, உமாபாரதி வகையறாக்கள் பேசலாம். பிரபாகரனை ஆதரித்துச் சீமான் பேசக்கூடாதா?//
2:44 AM, December 21, 2008உள்குத்தினை ரசித்தேன்
People who advise Seeman to be soft on Elam Tamils' issue must say how it should be done? Is it by sending telegrams to Rajapekse and Manmohan Singh? Do they want Tamils in Elam alter their course of struggle? Will they get any assurance from 'Hindu' Ram to air the views of Elam supporters along with Malini Parthasarathy? What is their take on Jeyalalitha and Gnanasekaran like enemies? How is to take Vaiko and Nedumaran like blacklegs?
3:03 AM, December 21, 2008sukdev
4:04 AM, December 21, 2008I think ,it is unfair to call nedumaran and vaiko as blacklegs.
nedumaran,vaikko and thirumavalavan are the very few politicians who consistently supported eelam tamils with good intentions.
I have many criticisms of vaikko,especially his support to jayalalitha, but his concerns towards eelam tamils are genuine.
நேற்று நான் முகப்பேர் (சென்னை ) எல் ஐ சி கிளைக்கு சென்று ஒரு விஷயத்தை பார்த்தேன்!அங்கு ஒரு அம்பேத்கார் படம் இருந்தது !காந்தி படம் இல்லை!! தேசப் பிதாவினை ஓரங்கட்டும் வேலையில் சில சக்திகள் ஈடு பட்டு அதில் ஓரளவு வெற்றியும் அடைகின்றன!! இன்னும் சில நாட்களின் அவரை 'தேசத் துரோகி' என்றும் கூறுவர்!அது போல் இன்று சட்ட விரோதம் நாளை சட்ட பூர்வமாக சரி என்பதே இயற்கையின் நியதி!!!
12:07 AM, April 06, 2009Post a Comment