Wednesday, April 29, 2009

ஈழம் : இயலாமையின் வலி, மனதின் போராட்டம்

கடந்த சில மாத நிகழ்வுகள் ஈழ மக்களை வரலாறு காணாத கொடுமையான இனப்படுகொலைக்கு உள்ளாக்கியிருக்கிறது. உலகெங்கும் வாழும் தமிழ் மக்களின் நிலையை வார்த்தைகளால் விவரிக்க முடியாத சோகம் வாட்டுகிறது. தமிழக தமிழர்கள் அடைந்த வேதனைக்கு சாட்சியாக முத்துக்குமார் மற்றும் பலரின் தீக்குளிப்பு நிகழ்ந்து விட்டது.

ஈழத்தமிழர்களின் மனநிலையை யாரும் வார்த்தைகளில் வடித்து விட முடியாது. அவர்களின் மனதில் ஒரு எரிமலை வெடித்துக் கொண்டிருக்கிறது.

இப்படியான சோகங்களையும், வேதனைகளையும் நமக்குள் பேசிக் கொண்டிருப்பதில் எந்த அர்த்தமும் இருப்பதாக தெரியவில்லை. தமிழ் மனங்களில் தெரியும் இந்த வேதனையை பிற மொழி பேசுவோரிடம் கொண்டு செல்ல வேண்டும். இனி இந்தியாவையும், தமிழகத்தையும் நம்பாமல் மேற்குலக நாடுகளையே அணுக வேண்டும். அமெரிக்காவில் கடந்த சில வருடங்களாக வசித்து வரும் வகையில் அமெரிக்க அரசியலை புரிந்து கொண்டிருக்கிறேன். எங்கோ நடக்கும் பிரச்சனை இங்கு யாருக்கும் தெரியவில்லை. ஆனால் தெரியவரும் பொழுது தங்களை அந்தப் பிரச்சனையுடன் ஈடுபடுத்திக் கொள்கிறார்கள். தமிழகத்தின் 40 எம்பிக்களும் புண்ணாக்கு மூட்டைகளாக டெல்லியில் வலம் வந்து கொண்டிருந்தார்கள். ஆனால் இங்கே உள்ள ஒரு செனட் உறுப்பினருக்கு எழுதும் மின்னஞ்சலுக்கு கூட கரிசனையுடம் பதில் வருகிறது. சில நடவடிக்கைகளையும் எடுத்திருக்கிறார்கள்.

மின்னஞ்சல் மூலமே அமெரிக்க வெளிவிவகார குழு தலைவரும், முன்னாள் அமெரிக்க குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான வேட்பாளாரான ஜான் கெரியை சென்றடைய முடிந்திருக்கிறது. அவருடன் இந்தப் பிரச்சனையை குறித்து பேச முடிந்திருக்கிறது.

நம்முடைய பிரச்சனையை நமக்குள்ளேயே பேசிக் கொண்டிருப்பதில் எந்த பலனும் இல்லை. ஈழத்தின் பால் அக்கறை கொண்டு தமிழில் எழுதும் ஒவ்வொருவரும் இனி ஆங்கிலத்தில் எழுத தொடங்க வேண்டும். தமிழில் ஈழம் குறித்து எழுதப்பட்ட அதே அளவுக்கு கடந்த 20 வருடங்களில் ஆங்கிலத்தில் எழுதியிருந்தால் நாம் நம் நிலையை உலகுக்கு தெரியப்படுத்தியிருக்க் முடியும். ஒரு சின்ன கருத்தையாவது ஆங்கிலத்தில் எழுதி வைக்க வேண்டும். அந்த நோக்கத்துடனே சமீப நாட்களில் ஆங்கிலத்தில் எழுத தொடங்கி இருக்கிறேன்.

கடந்த சில மாத மனதின் ரணங்களை ஆங்கிலத்தில் கொண்டு வர முயற்சித்து இருக்கிறேன். அந்தக் கட்டுரையை "Eelam crisis - The unsettling conflict of mind" கழுகு இணையத்தளம் வெளியிட்டுள்ளது.

Eelam crisis - The unsettling conflict of mind


38 மறுமொழிகள்:

Anonymous said...

I too started writing in English.

-kajan

3:09 PM, April 29, 2009
செல்வன். said...

நல்ல முயற்சி தொடருங்கள்.

3:21 PM, April 29, 2009
Anonymous said...

ஆங்கிலம் தெரிந்த அனைவரும் ஈழத்திற்காகக் குரல் கொடுங்கள என்ற உங்கள் அழைப்பை அனைவரும் ஏற்க வேண்டும். உங்கள் எழுத்துக்கள் எங்களை நிச்சயம் காப்பாற்றும்.

ஒரு ஈழத்துத் தமிழன்

3:21 PM, April 29, 2009
Anonymous said...

சசி உங்கள் புதிய ஆங்கில முயற்சிக்கு வாழ்த்துகள்.

//நம்முடைய பிரச்சனையை நமக்குள்ளேயே பேசிக் கொண்டிருப்பதில் எந்த பலனும் இல்லை. ஈழத்தின் பால் அக்கறை கொண்டு தமிழில் எழுதும் ஒவ்வொருவரும் இனி ஆங்கிலத்தில் எழுத தொடங்க வேண்டும்.//

உண்மை தான். ஆங்கிலத்தில் மட்டுமின்றி பிரெஞ்சு, ஸ்பானிஷ் மொழிகளில் கூட எழுத வேண்டும். பல புலம்பெயர்ந்த ஈழ இளைஞர்கள் இம் மொழிதலில் தேர்ச்சி உள்ளகவர்களா உள்ளன்னர். உங்கள் ஆங்கில கட்டுரைகல்லை மொழி பெயர்த்து ஸ்பானிஷ் இனைய தள்ளங்களில் பதியலாம்.

3:28 PM, April 29, 2009
Ronin said...

Very very valuable point abt writing in English!

Unfortunately We live and learn..

3:38 PM, April 29, 2009
Anonymous said...

நண்பரே அப்படியே ... indianpad.com, humsurfer.com, nowpublic.com, digg.com, mixx.com போன்ற தளங்களில் இணைத்து விடுங்கள். பலரை சென்றடைய வாய்ப்பாக அமையும்.

3:44 PM, April 29, 2009
thiru said...

சசி,

வரவேற்கிறேன்! ஆங்கிலம் அல்லாத பிறமொழி எழுத தெரிந்த தமிழர்கள் அந்தந்த மொழிகளில் தங்களுக்கு இழைக்கப்பட்டுள்ள கொடுமைகளையும், அநீதியையும், அரசியல் உரிமை மறுப்பையும் பதிவு செய்ய வேண்டும். காலம் இன்னும் கடந்து போகவில்லை.

youtube போன்ற தளங்களில் தமிழ்பாடல்களையும், சமர்களின் சாகசங்களை வலையேற்றி வந்த நண்பர்கள் தமிழர்களுக்கு இழைக்கப்பட்டுள்ள அரசியல் உரிமை மறுப்புகளையும், இனப்படுகொலை, இனக்கலவரம்...போன்றவற்றை ஆதாரங்களுடன் ஆங்கிலம் உள்ளிட்ட பிறமொழிகளில் பதிவு செய்யுங்கள். தமிழில் வலையேற்றுவதை நிறுத்த அவசியமில்லை. ஆனால் பிறமொழிகள் பேசும் மக்களையும், அதிகாரமையங்களையும் தமிழர் தார்ப்பு நியாயங்கள் சென்றடைய இந்த முயற்சிகள் மிகவும் அவசியம்.

ஆங்கிலத்தில் எழுதுபவர்கள் www.nowpublic.com போன்ற செய்தித்தளங்களை பயன்படுத்தலாம். சிங்களவர்கள் இதை திட்டமிட்டு செய்கிறார்கள்.

4:26 PM, April 29, 2009
பதி said...

நல்ல முயற்சி சசி...
வாழ்த்துக்கள்...

உங்களுடைய முயற்சியினை வாழ்த்தி, ஈழ மக்களின் துயர்துடைக்கும் அருமருந்து, விடிவெள்ளி, இணையபுரட்சி மூலம் மக்களை விடிவித்த சூறாவளி ஒரு பதிவிட்டுள்ளார்..

http://jananayagam.blogspot.com/2009/04/blog-post_29.html

இந்த கருமாந்திரம் ஜனநாயகம்னா என்ன??? யாருக்காவது விளக்கம் தெரியுமா?

சரி தொலையட்டும்... இது போன்ற மக்கள் பிரதிநிதிகளின் ஆசிர்வாதம் உங்களுடைய முயற்சியினைப் பரப்பட்டும்... :)

6:18 PM, April 29, 2009
தமிழ் சசி | Tamil SASI said...

என் பதிவுக்கு எதிர்வினையாக எழுதிய ஸ்ரீரங்கன் பதிவுக்கான எனது பின்னூட்டம்
ஸ்ரீரங்கன்,

உங்களைப் போன்றும் இன்னும் சில ஈழத்து அறிவுஜீவிகள் போன்றும் வசதியான இடத்தில் உட்கார்ந்து கொண்டு ஈழத்திற்காக இணையத்தில் ”புரட்சிக் கட்டுரைகள்” எழுதி கருத்தாடுவதை விட இன்றைக்கு தனி நபர் முயற்சிகள் மூலம் சில விடயங்களையாவது செய்த திருப்தி பலருக்கும் உண்டு. எனக்கும் உண்டு. இதன் காரணமாக ஈழத்தின் தலையெழுத்தை மாற்றி விடலாம் என்பது என்னுடைய எண்ணமல்ல. எவருடைய எண்ணமும் அல்ல.
அதே நேரத்தில் உங்களைப் போலவும், பிற ஈழத்து இடதுசாரி அறிவுஜீவிகள் போன்றும் சில கட்டுரைகளை எழுதிக் கொண்டு சும்மா காலாட்டிக்

கொண்டு இருப்பதை விட மேற்குலக நாடுகளில் மேற்கொள்ளப்படும் முயற்சிகள் ஆக்கப்பூர்வமானதே.

எப்படி உங்களுடைய புரட்சி, புரட்சி என்ற எழுத்துக்களால் எதையும் சாதித்து விட முடியாதோ, அதே போன்று எங்களுடைய மேற்குலகம் சார்ந்த முன்னெடுப்புகளால் எதையும் சாதித்து விட முடியாது. நீங்கள் புரட்சி, புரட்சி என வீட்டுக்குள் உட்கார்ந்து கொண்டிருக்கிறீர்கள். நாங்கள் ஓரளவுக்காவது செயல்படுகிறோம். அவ்வளவு தான் வித்யாசம்.

இவ்வளவு பேசும் நீங்களும் உங்களுடைய சக அறிவுஜீவிகளும் இனப்படுகொலைக்கு எதிராக கடந்த சில மாதங்களில் செய்தது என்ன ?

குறைந்தபட்சம் வீதியில் இறங்கி உங்களால் போராட முடிந்திருக்கிறதா ? தமிழர்களின் படுகொலைகளை எதிர்த்து என்ன செய்தீர்கள் ? இணையத்தில்

எழுதியே புரட்சியை ஏற்படுத்தி விடலாம் என எண்ணுகிறீர்களா ? தோழி கறுப்பி வீதியில் இறங்கி போராடுபவர்களுக்கு அறிவுரைகளாக வாரி

வழங்குகிறார். ஆனால் எழுதிய பின்னூட்டங்களை கூட அழித்து விடுகிறார். இதிலே புலிகள் கருத்துரிமையை மறுக்கிறார்கள் என்ற புலம்பலை

நினைத்து அழுவதா, சிரிப்பதா என தெரியவில்லை.

இராயகரன் - கடந்த காலங்களில் அவரை எந்த புலியெல்லாம் அடித்தார்களோ, அந்தப் புலிகள் எல்லாம் கொல்லப்படுவதை பார்த்து மகிழ்ச்சி அடைந்து துள்ளிக் குதித்து பதிவு போடுகிறார். இவர் ஒரு அறிவுஜீவி.

சரி..புலிகள் தான் முழுவதும் அழிக்கப்பட்டு விட்டார்கள். உங்களைப் போன்று புரட்சியாளர்கள் எல்லாம் என்ன செய்து கொண்டு இருக்கிறீர்கள் ?

இனியேனும் போராட்டத்தை சரியான திசையில் கொண்டு செல்லலாமே ? தோழர் ஷோபாசக்தி போன்றவர்கள் முன்பு எழுதியது போன்று ராஜபக்சேவை

நோக்கி தீர்வு கேட்க வேண்டியது தானே ? அதனை எப்படி செய்வதாக உத்தேசம் ? இணையத்தில் எழுதியா அல்லது வீதியில் போராடியா ?

தெரிந்து கொள்ள ஆசைப்படுகிறேன்...

நன்றி...

6:53 PM, April 29, 2009
Anonymous said...

உதம் சிங் யார் என்று நமக்கு தெரியுமா தோழர்களே.......இவன் பகத் சிங்கின் தோழன்.
1919 இல் ஜாலியன் வாலாபாக் படு கொலை நிகழ்கிறது. படுகொலையை நிகழ்த்தியது மேஜர் டயர் , படுகொலை செய்ய சொன்னது அதாவது உத்தரவு இட்டவனின் பெயரும் டயர் (Michael O'Dwyer) ஆம் இவன் மேஜர் டயரின் உயர் அதிகாரி.
இந்த படுகொலையின் போது அங்கு தண்ணீர் பரிமாறி கொண்டிருந்த சில இளைஞர்களில் ஒருவன்தான் உதம் சிங். குருதி தோய்ந்த மண்ணை தன் சட்டை பையில் சேகரித்து வைத்து கொண்டு தாக்குதல் செய்ய சொன்னவனை (அம்பை எய்தியவனை - Michael O'Dwyer) பழி வாங்க துடிகிறான். ஆகையால் இரண்டு மாதங்களாக அவனை தேடி அலைகிறான். ஆனால் அதன் பின்னரே உதம் சிங்குக்கு தெரிய வருகிறது Michael O'Dwyer மாற்றல் ஆகி இங்கிலாந்துகே சென்று விட்டான் என்று.
துவள வில்லை உதம் சிங், அதே ஆண்டு அவனை தேடி இங்கிலாந்துக்கு பயணம் அடைகிறான். இங்கிலாந்து சென்று சர்வர் வேலை போன்ற சிறு சிறு வேலைகள் செய்து கொண்டே Michael O'Dwyer ஐ தேடுகிறார். ஒரு ஆண்டு அல்ல இரண்டு ஆண்டு அல்ல.... 21 ஆண்டுகள் தேடி கடைசியாக 13-Mar-1940 ஆண்டு ஒரு பொது விழாவில் கண்டு பிடித்து Michael O'Dwyer ஐ கொள்கிறான். மேலும் அந்த விழாவில் இருக்கும் 3 உயர் அதிகாரிகளை நோக்கியும் சுடுகிறார் அவர்கள் மூன்று பெரும் படுகாயமடைந்து (Lord Zetland, Luis Dane and Lord Lamington) பிழைத்து கொள்கிறார்கள்
மூன்று மாதங்களில் விசாரணை முடிந்து உதம் சிங்கை தீவிரவாதி என்று இங்கிலாந்து அரசாங்கம் அறிவித்து அவருக்கு மரண தண்டனை அளித்து... உதம் சிங்கை 31-July-1940 இல் தூக்கில் இடுகிறார்கள். இறப்பதற்கு முன் உதம் சிங் சொல்கிறார் என் நாட்டில் வந்து 400௦௦ மக்களை கொன்றதற்கு நான் அவனை கொன்றது மிக சரியே என்று சொல்லி தூக்கு கயிற்றை முத்தமிடுகிறார்.
பிறகு 1974 இல் இந்திரா காந்தி பிரதமாராக இருக்கும் போது உதம் சிங்கின் எச்சங்கள் இந்தியா கொண்டு வரப்பட்ட எரிக்கப்பட்டு அவருடைய அஸ்தி கங்கையில் கரைக்க படுகிறது. அவருடைய உடல் பிரதமர், ஜனாதிபதி மற்றும் முதல்வர் அனைவரும் அஞ்சலி செலுத்தி அவரை தியாகி என்று புகழ்ந்துரைகிறார்கள்.
சரி இப்பொழுது விடயத்திற்கு வருவோம்..................
400௦௦ பேரை நம் மண்ணில் கொன்றதற்காக உதம் சிங் இங்கிலாந்து சென்று Michael O'Dwyer கொன்றதனால் தியாகி என்கிறோம் நாம்......
ஆனால் இங்கிருந்து ராஜிவி காந்தியின் உத்தரவின் பேரில் இந்திய அமைதி படை இங்கிருந்து ஈழத்திற்கு சென்று 5400௦௦ பொது மக்களை மற்றும் 800௦௦ பெண்களை கற்பழித்து கொன்றதற்கு சுபா இங்கு வந்து ஒருவனை கொன்றாலே அது தவறா?
“ஒரு பெண் தன் கற்பை காப்பற்றி கொள்ள தன் நகங்களை ஆயுதமாக பயன் படுத்தி எதிரியை கொல்லலாம் மற்றும் என் சகோதிரியின் கற்பு பரி போகும் போது நிச்சயமாக் என்னால் அகிம்சையை கடை பிடிக்க முடியாது”
- மகாத்மா காந்தி
400 மக்களை கொன்றதற்கு உதம் சிங்கிற்கு இவ்வளவு வெறி வருமானால்.....
அதை விட 15 மடங்கு அதிகமான மக்களை (400 பேர் எங்கே - 6200 பேர் எங்கே) இந்திய அமைதி படை கொன்றதற்கு ஈழ தமிழனுக்கு எவ்வளவு வெறி வர வேண்டும்..... வந்தது.
பின் அவர்கள் செய்தால் மட்டும் குற்றமா?
அவர்கள் செய்தால் தீவிரவாதி பட்டம்... நாம் செய்தால் தியாகி பட்டமா?
நல்ல நியாம்டா சாமி..............
சிறிது கூட விடுதலை உணர்வு என்றால் என்ன அல்லது இன பற்று என்றால் என்ன என்று தெரியாத பதவிக்காக ** தின்னும் மனிதர்களுக்கு, இந்த நியாங்கள் அனைத்தும் எங்கே புரிய போகிறது.......
ஆனால் ஒருவருக்கு புரிந்தது.....
''ராஜீவ் காந்தி அனுப்பிய இந்திய அமைதிப்படையில் பகத்சிங்கின் தம்பி ரன்பீர் சிங்கின் மகன் யோணன் சிங்கும் இடம் பெற்றிருந்தார்.. இலங்கைக்குப் போன படை இந்தியா திரும்பியவுடன், யோணன் சிங்குக்கு வீர சர்க்கார் விருது கொடுப்பதாக இந்திய அரசு அறிவித்தது. இந்த செய்தியை தன் அப்பாவிடம் தெரிவித்த யோணன், விருது விழாவுக்கு அவரையும் அழைத்திருக்கிறார்.
ஆனால் ரன்பீர் சிங்கோ, 'இன விடுதலையை அடக்குவதற்காகக் கொடுக்கப்படும் விருதை நான் வீர விருதாகவே கருத மாட்டேன். அப்படி ஒரு விருதை வாங்கிக்கொண்டு வீட்டுக்கு வர வேண்டாம். அந்த விருதை நீ வாங்கினால், நமக்குள் எந்த உறவும் இருக்காது' என்று சொல்ல...
யோணன் அந்த விருதையே புறக்கணித்திருக்கிறார்!''
ரன்பீர் சிங் ஒன்றும் தமிழர் இல்லையே..... பிறகு எப்படி ரன்பீர் சிங்கிற்கு புரிந்த ஈழ போராட்டத்தின் நியாயம் இங்கு இருக்கும் ஏராளமான தமிழகம் மற்றும் இந்திய நாதரிகளுக்கு புரிவதில்லையே ஏன்?
ஏன் எனில் அந்த நாதரிகளுக்கு சுதந்திரம் என்பது ஓசியில் கிடைத்தது மற்றும் அடிமை வாழ்கை என்றால் என்ன என்று அவர்களுக்கு தெரியாது................
மேலும் ஒரு விஷயத்தை சொல்கிறேன்....................
1981 October 31 இந்திரா காந்தி அவரது பாது காவலலார்கலாலே சுட்டு கொல்லபடுகிறார். அவர்களுடைய பெயர் Satwant Singh மற்றும் Beant Singh. அதாவது இந்தியாவின் பிரதமரை தன் உயிரை கொடுத்தாவது காப்பாற்ற வேண்டிய இந்தியா ராணுவ வீரர்களே தங்களுடைய சொந்த விருப்பு வெறுப்புகளுக்காக சுட்டு கொள்கிறார்கள்.
இந்திரா காந்தியை கொன்றவர்களில் ஒருவன் அப்பொழுதே கொல்லப்டுகிறார்.... மற்றொருவன் மூன்று ஆண்டுகள் கழித்து கொல்லபடுகிறான். சீக்கிய குருமார்கள் இந்திரா காந்தியை கொன்றவர்களை சீக்கிய இனத்தின் தியாகியாக அறிவித்து இருகிறார்கள்!!!!
இப்பொழுது இந்திய அரசு ( காங்கிரஸ் ) என்ன செய போகிறது...
பிரதமரை கொன்றவனை தியாகிகள் என்று அறிவித்த இனத்தை தீவிரவாத இயக்கம் என்று சொல்லி தடை செய்திருக்க வேண்டாமா? ஏன் செய்ய வில்லை மாறாக அவர்களுக்கு பிரதமர் பதவி கொடுத்து அழகு பார்கிரிர்கலே அது ஏன்?
அப்படி எனில் ராஜிவ் காந்தியை கொன்றது சுபாதானே?
சுபாதான் அப்பொழுதே இறந்து விட்டாலே...
அதோடு சுபா கூட இருந்த ஐந்து பேரும்(ஒற்றை கண் சிவராசன் – உட்பட) பெங்களூரில் உள்ள வீட்டில் சயனைடு சாபிட்டு இறந்து விட்டார்களே பின் ஏன்?
இந்த வழக்கில் மேலும் நளினி, பேரறிவாளன் மற்றும் முருகன் ஆகியார் 17 ஆண்டுகளுக்கு மேல் தனிமை சிறையில் வாடுகின்றனரே அது ஏன்?
இதற்கு மேலும் விடுதலை புலிகளுக்கு மட்டும் தடை ஏன்???
இங்கு பிரபாகரன் பெயரை சொன்னாலே தேசிய பாதுகாப்புக்கு சட்டம் பாயுமாம்....... (NSA)
ஆனால் சீக்கிய மடம் இந்திரா காந்தியை கொன்றவனை தியாகி என்கிறது..... !!!!!!
எதெற்கெடுத்தாலும் நான் இந்தியன் பிறகு தமிழன் என்று சொல்லும் அறிவு ஜீவிகளே இதற்கு நீங்கள் என்ன சொல்ல போகிறிர்கள்?
தமிழர்களில் இருக்கும் கருங்காலி கூட்டம் சீகியர்களிடம் இல்லை..
இப்படி வரலாற்று உண்மைகளை எடுத்து சொல்லி சீக்கியர்களுக்கு இப்படி நடக்கிறது, தமிழர்களுக்கு மட்டும் ஏன் அநியாயம் செய்கிரிகள் என்று கேட்டால் நாம் இந்திய இறையான்மைக்கு எதிராக பேசுகிரோமாம் மற்றும் நாங்கள் எல்லாம் விடுதலை புலிகள் ஆதரவாளர்களாம்..........
அட நாய்களே.....
நியாத்தை கேட்பதற்கு நான் ஒன்றும் புலியாக இருக்க தேவை இல்லை…..
இந்தியனாக இருக்க தேவை இல்லை…..
தமிழனாகவோ இருக்க தேவை இல்லை
மனிதனாக இருந்தால் போதும்.....
இப்படிக்கு,
மனிதர்
தமிழர்
இந்தியர்


thanks mr akilash
pls translate to english & publish

7:37 PM, April 29, 2009
Darshu said...

I appreciate ur decision,just blameing India you tried different way.If it helps really we all thankfull to you.

8:00 PM, April 29, 2009
கந்தர்மடம் கவின் said...

நல்ல பயனுள்ள முயற்சி தொடருங்கள்.

12:28 AM, April 30, 2009
லக்கிலுக் said...

ஆங்கிலத்தில் எழுதுவது அருமையான முயற்சி. பாராட்டுக்கள். அனானி ஒருவர் கூறியதுபோல ஐரோப்பிய மொழிகளிலும் எழுதப்பட வேண்டும்.

தமிழில் எழுதப்படுவது போல அரசியல் அதிகமாகவும் அவலம் குறைவாகவும் எழுதப்படும் போக்கு மற்றும் மாற்றிக் கொள்ளப்பட வேண்டும். ‘இது மனிதகுல அவலம்’ என்ற மனப்பான்மையை தோற்றுவிக்கும் வகையில் அமையவேண்டும் என்பது முக்கியமானது.

12:46 AM, April 30, 2009
லக்கிலுக் said...

முந்தைய பின்னூட்டத்தில் ‘மற்றும் மாற்றிக்கொள்ளப்பட வேண்டும்’ என்பதை ’மட்டும் மாற்றிக்கொள்ளப்பட வேண்டும்’ என்று மாற்றி வாசிக்கவும் :-(

12:49 AM, April 30, 2009
Anonymous said...

Dear Sasi,
As Eelam Tamils, we are really proud about and thankful to you for your efforts. I think you have good knowledge and view about Eelam struggle than the so called Eelam revolution writers. These writers can’t move a single needle by their writings and they don’t have any solutions or method to achieve the solutions for the issues / problems which they write in their articles; spending hours and hours. Your article and the suggestion is a good one. I also thinking the same way and working last couple of months. As you said, I also feel that we did not properly and or adequately / systematically knock the western politician’s/ newspaper editors/TV or Radio broadcaster’s doors. When I got few chances to knock, I knocked and it’s opened for me and I was replied/ responded.
So, I also request the people who can write in English or any other foreign languages, please write about out problems and the plight of our people. At the beginning, if you cannot write yourself, please try to translate good articles written in Tamil by other authors. Slowly, slowly you can think and write your own and become master in writing in the particular foreign langue.
As you said Sasi, Tamil speaking people have enough knowledge or access to get that knowledge about our people’s plight, therefore no need to write again and again in Tamil. In this way only, Diaspora Tamil have to move their freedom fight to the next stage.
RB -Dubai

1:29 AM, April 30, 2009
Anonymous said...

இதற்கு என்ன தீர்வு? இங்கு நடக்கும் நாடகங்கள் அரசியல் கோமாளித்தனங்கள், பழி வாங்குதல்கள், வாக்குச் சேகறிப்பிற்காக சோரம் போகும் கேவலங்கள், ஆதிக்க வெறிகள், சுயநலத்தின் உச்சங்களை கண்டு வெறுப்பும் கோபமும் என்ன சமுகத்தில் நாமெல்லாம் வாழ்கிறோம். இரக்கமும், மனிதாபிமானமும் அற்று இருக்கும் இவர்களுக்கெல்லாம் நாற்காலி கொடுத்து நாம் பின்னர் அவர்களை விமர்சித்து சமான்யனாய் என்னால் என்ன செய்ய முடியும் என சலித்து இப்படியே இருக்கிறோம். ஒவ்வொரு தமிழனும் இலங்கையிலிருக்கும் நம் சக தமிழனுக்காக குரல் கொடுத்தால் இந்த அரசாங்கத்தின் இறையாண்மைச் செயல்கள் சிறிதேனும் யோசிக்கப்படுமல்லவா? பழிவாங்குதல்களுக்குப் பெயர் இறையாண்மையா..என்ன கொடுமை இது. வரலாறு இவர்களை யாரையும் ஒரு போதும் மன்னிக்கபோவதில்லை

எதிரியை விட கொடியவன் துரோகி. கருணா என்ற பெயரே துரோகங்களின் படிமமா?



தமிழ் உணர்வு என்பது பொது இல்லையா? எல்லாருமே தனித் தனிவு தீவுகளா? எது நம்மையெல்லாம் ஒன்று சேர்க்கும்..??????????????


நாமெல்லாம் மனிதர்கள் என்பதை நிரூபிககும் தருணத்தில் வெந்த சோற்றை தின்று செரித்து, வெயில் கொடுமைகளைப் பேசி, செல்வராகவன்களின் கெளதம் மேனன்களின் அடுத்த படம் என்பதை பற்றியெல்லாம் முக்கிய ஆராய்ச்சிகளை மேற்கொண்டும், சுயநலங்களின் முட் கீர்டங்களை மலர் க்ரீடங்களாய் நினைத்து திரிந்து கொண்டிருக்கலாம். இன்று மாலை 4 மணிக்கு சன் டீவியில் புதுப் படத்தையும், இரவு நம்மை பார்த்து அவர்கள் எள்ளி நகையாடும் 'அசத்து போவது யாரு' பார்த்து வயிறு புடைக்க சிரித்து, அவரவர் சொந்த வாழ்வின் ஒரே வடிகாலான இணையுடனான கூடல்களை முடித்து, எந்தவித உறுத்தலும் இல்லாத நிம்மதியான உறங்கி, மறுநாள் காலையில் செய்தித்தாளைப் பார்த்து 'ச்சோ...மூன்னூறு பேரு செத்துட்டாங்களாம்....என்னத்த செய்ய...பேசுகிறோம், பேசுகிறோம்..


பேச மட்டும் செய்கிறோம்....................

2:38 AM, April 30, 2009
பதி said...

சசி,

இணையத்தில் எழுதுவதும் வீதிகளில் போராடுவதும் ஒரு சேர நிகழவேண்டும்.. அதே சமயம், ஆங்கிலம் மட்டுமல்லாது தமிழர்கள் வாழும் தேசங்களில் உள்ள பெரும்பான்மையான மொழிகளில் நமது அவலம் பதிவு செய்யப்பட வேண்டியது மிக அவசியம்..

ஏனெனில், இங்குள்ள பல்கலைக் கழக மாணவர்களிடம் வீதிப் போராட்டங்கள் தொடர்பான பரப்புரைகளை நாங்கள் மேற்கொள்லும் ஒவ்வொரு சமயத்திலும் நான் அறிந்த உண்மையென்னவெனில், பெரும்பாலானோருக்கு இலங்கையில் இப்படி ஒரு பிரச்சனை நடப்பதே தெரியாது என்பதே.. அதே சமயம், நாம் அவர்களது மொழியில் விளக்கிக் கூறும் பட்சத்தில், நமது முயற்சிகளுக்கு வாழ்த்து சொல்லும் அவர்கள் நமது கவனயீர்ப்பு போரட்டங்களிலும் சில சமயம் கலந்து கொள்ளவே செய்கின்றனர்.. (இது வரை நாம் எத்தனை இனங்களின் அவலத்தை அறிந்திருக்கின்றோம் அதில் எத்தனை பேர்களின் போரட்டத்தில் கலந்து கொண்டுள்ளோம் என சுயபரிசோதனை செய்வது மிக அவசியம்.)

தமிழர்கள் நடத்தும் கவனயீர்ப்பு போராட்டங்களில் நான் பல வேற்று இனத்தவர்களை குறைந்த அளவிளாவது கண்டிருக்கின்றேன்.. நாம் இது வரை எத்தனை பேர்களின் போராட்டத்தில் பங்குபெற்றிருக்கின்றோம்?

இன்னமும் புலிப்பாசிசத்தினால் தான் ஈழத்தவர்களின் அவலத்திற்கு தங்களால் எதுவும் செய்ய இயலவில்லை என்னும் இணையப்புரட்சி சித்தாந்தவாதிகள் பாதிக்கப்பட்ட மலையகத் தமிழர்களுக்காக மிகக் கடுமையாக உழைத்து ஓய்ந்த்துவிட்டதாய் கேள்வி.. ஏனெனில், அவர்கள் தான் வன்முறையை கையாள்வதில்லையே..

5:11 AM, April 30, 2009
மு. சுந்தரமூர்த்தி said...

சசி,
உங்களுடைய முந்தைய பதிவின் நான் இதைத் தானே சொல்லியிருந்தேன். இந்தியாவில் இருக்கும் தமிழர்களுக்கு தான் வேறு வழியில்லை. ஊர்வலம், உண்ணாவிரதம், தீக்குளிப்பு என்று பயனளிக்காத முறையில் தங்கள் எதிர்ப்பை, அக்கறையைக் காட்ட வேண்டியிருக்கிறது. வேறு வழியிருப்பவர்களும் தமிழ்நாட்டு அரசியல் பேச்சுக்களில் வெட்டித்தனமான நேரத்தை செலவழிப்பானேன்?

இப்போதைய சூழ்நிலையில், அரசியல் ரீதியாகவோ, இராணுவ ரீதியாகவோ உதவ இயலாத அரசியல்/மன ரீதியான தடையில், தமிழ்நாட்டின் மக்கள் தொகை ஏழுகோடியா அல்லது எழுபது கோடியா என்பது ஒரு பொருட்டே அல்ல. இதில் கருணாநிதியைத் தோற்கடிக்க வேண்டும், ஜெயலலிதா/ராமதாஸ்/வைகோ/சிபிஐ/சிபிஎம் ஐ ஆதரிக்க வேண்டும் என்று அறைகூவல் விடுவது, சொல்வதற்கு மன்னிக்க வேண்டும், முட்டாள்தனமாக இருக்கிறது. இவர்கள் வெற்றி பெற்றால் அனைவரும் காங்கிரஸ் மீண்டும் ஆட்சி அமைக்கும் வாய்ப்பு பெறும் நிலையில் காங்கிரசோடு சேரமாட்டார்கள் என்பதற்கு எந்த உத்தரவாதமுமில்லை. அதை முதலில் செய்யக்கூடியவர் ராமதாசாகத் தான் இருப்பார். ராமதாசின் துரோகம் கருணாநிதியின் துரோகத்திற்கு எந்தவிதத்திலும் குறைந்ததல்ல.

இந்த லட்சணத்தில் ஜெயாவை "ஈழத் தாயாக" புகழும் செய்திகள் அருவருப்பை ஏற்படுத்துகின்றன. சந்திரிகா ஆட்சிக்கு வந்த புதிதில், வடகிழக்கு மக்கள் சந்திரிகாவின் படத்தை அம்மனாக வைத்துப் பூஜித்ததாக ஈழத்து நண்பர் ஒருவர் கூறக் கேட்டிருக்கிறேன்.

ஜெயா ஈழம் பெற்றுத் தருவதற்கான ஒரே வாய்ப்பு என்னவென்றால், நாலைந்து ஜோசியர்கள் "அம்மா நீங்கள் இந்தியாவின் பிரதமராகும் யோகம் இருக்கிறது. ஆனால் அதற்கு ஒரு தோஷம் தடையாக இருக்கிறது. பற்றியெரியும் ஈழத்தில் அமைதி நிலவினால் பிரதமாராகிவிடுவீர்கள். அதற்கு ஒரே பரிகாரம் சுதந்திர ஈழம் அமைவது தான்" என்று நம்பவைப்பது தான்.

9:52 AM, April 30, 2009
SnackDragon said...

சீரங்கனுக்கு இட்ட பின்னூட்டம்:
=========
அன்பின் ஸ்ரீரங்கன்,

நீங்கள் வலைப்பதிகளுக்கு புதியவரல்லவே, இதற்கு முன்னரும் பல முயற்சிகள் ஆங்காங்கு சிறிய அளவிலாவது நடந்துள்ளது. அது நடந்ததா இல்லையா என்பது முக்கியமில்லை, ஆனால் எப்போது நடந்தாலும் அது வரவேற்கப்படவேண்டியதே அன்றி "இப்போதுதானா", "இனிமேல்தானா" என்று புலம்புவது உங்கள் மேல் உள்ள (கொஞ்ச நஞ்ச) நம்பிக்கையையும் வாசகர்களிடம் குறைக்கும் என்பதைத்தவிர வேறு என்ன நடக்கும் என்று எதிர்பார்க்கிறீர்கள்?

எல்லாத் தளங்களிலும் எல்லா இடங்களிலும் எல்லா வகையிலும் எமக்கு போரட்டங்கள் தேவையுள்ளதே தவிர இதுவரை நடக்காமல் இனிமேலா? என்ற கேள்வியால் ஆகப்போவது என்ன?

இப்படியெல்லாம் எழுதி வருத்தப்பட[ disppointment] வைக்காதீர்கள்.

10:13 AM, April 30, 2009
Anonymous said...

Hi Sasi,
I have red Sri Rangan's article now. I don't like to send comment to him because, some time he will not publish it. What I understood is that Sri Rangan writing his article with the intention that it should not be understandable easily by others. I thing by doing so, he is thinking that he is a scholar. But actually scholars will have the ability to express their thoughts such a way that can be understandable easily by others. I like to request Sri Rangan to write 10 points /steps that the Tamils have to do now, according to his philosophy or “Jananayagam”. Can Sri Rangan give his view or methodology to solve the Eelam Tamils problems in brief rather than writing and wasting so much of papers and time?
RB- Dubai

10:23 AM, April 30, 2009
Anonymous said...

http://www.youtube.com/watch?v=RtIW-Kx7QRQ
http://www.innercitypress.com/iom1unitar042909.html

10:40 AM, April 30, 2009
SnackDragon said...

சுமு
இரண்டாம் முறையாகவும் இதே கருத்தை[ தமிழகத்தை எதிர்பார்க்காதீர்கள்;பெயர்ந்த‌புலத்தில் போராடுங்கள்] சொல்வதால் இதை எழுதுகிறேன். ஈழத்தின் [கவனிக்க தமிழ் ஈழத்தின் அல்ல; அதாவதுசிங்கள்வர்கள் மட்டும் தனிமைப்படுத்தபடல் வேண்டும் என்ற‌] தேவை நீண்டகால சரியான தீர்வாக இருக்கும் என்பது அனைவரும் அறிந்ததே, அதற்காக தமிழகத்தில் போராட்டத்தை கைவிடவேண்டும் என்ற வாதம் சரியானதாக தோன்றவில்லை. இந்திய அரசு/பார்ப்பனிய /பனிய சிந்தனைப்போக்கின் திணிப்பினை எதிர்க்க எமக்கு எதுவெல்லாம் ஆயுதமோ அதையெல்லாம் கொண்டு போராட வேண்டியதே அவசியம். அது காவிரியாகட்டும்,முல்லை பெரியாறாகட்டும். அல்லது ஈழமே ஆகட்டும். இது வெறும் ஈழப்போராட்டத்துக்கான எதிர்ப்பு மட்டுமல்ல,
தமிழனின் , தமிழின அடையாளத்தின் தனித்துவத்தை {இது இந்தியாவில் எவ்வினத்துக்கும் பொருந்தும்} ஒடுக்கும் எவ்வகையான செயற்பாட்டுக்கும் எதிர்ப்பான போராட்டம் என்பதாகக் காணப்படவேண்டும். உதாரண‌த்துக்கு , வெளிநாடு வாழ் யூதர்கள் வெளிநாடுகளிலே மட்டும் போரிடுவதில்லை; தாயகத்திலும் போரட்டத்தை கைக்கொண்டே போராடுகிறது. ஈழத்திலே போராடுகின்ற அதே நேரத்தில் எம் இனத்துக்க்காக் தமிழகத்திலும் போராடியே தீரவேண்டும். ஆனால் தமிழகத்தலைவர்களை **மட்டுமே** நம்பியிருத்தல் கூடாது. இவ்வளவு எதிர்ப்பு இருந்தும் இந்தியா ஆயுதங்களை வழங்குவதை நிறுத்த வில்லை என்பதே, தமிழர் மீது சுமத்துப்படும் மிகப்பெரும் வன்முறையாகவே நான் பார்க்கிறேன். புலம் பெயர் போராட்டத்தின் ஒரு பகுதியாக தமிழகப்போராட்டம் பார்க்கப்படவேண்டுமே அல்லாது இதை விடுக்கலாம் என்பதும் நேரம் செலவழிக்க வசியமில்லை என்பதும், தமிழகத் தமிழருக்கு இந்தியத்திணிப்பு, ஒடுக்கல், மற்றும் கேளாமை என்றவிதத்தில் சற்றும் நல்லதல்ல. அதே நேரத்தில் குறுகிய கால இலாபமாக எதையும் பெற்றால் எதுவும் கெடுதல்லல்ல. அது ஜெயலலிதா ரூபத்தில் கிடைத்தாலும் அது எமக்கு துரதிர்டவசமனாத இருக்குமே தவிர இழக்க ஒன்றுமில்லை. கிடைக்குமா கிடைக்காதா என்பது எவர் சொன்னாலும் அது வெறும் ஊகமாகத்தான் இருக்கும். உதாரணமாக பார்ப்பன ஊடகப் (அதிக‌)பிரசிங்கிகள் ஜெயலலிதா அம்மையார் தூக்கிக் கொடுத்துவார் என்று சுவாஹிப்பது போல.

12:38 PM, April 30, 2009
vanathy said...

Thank you,lot of us are thinking about it for some time now.
The sad thing is although eelam struggle is a just cause ,it hasn't got wide spread support like Palestinian cause or Tibetan freedom movement.
True the geopolitical,economical and military interest of the world powers have played a mojor role in hiding the issue from ordinary world citizens .
As Tamils ,we are also responsible for this situation.
Srilanka'n govt spends millions of dollars for propaganda and certainly have had the upperhand so far.
However Tamils have realised it now ,(somewhat lately )Srlankan govt twisted the doctrine 'war against terrorism' and cynically exploited that phrase to unleash the 'war against Tamils'.
They portrayed the Tamil liberation struggle as terrorism ,thereby Eelam issue has been denied it's rightful place in the international media.
Only recently Tamils have opened their eyes and started to contact the world media to put their point across.
There is lot more to do and it is only the begining.
As for your comments about so called 'eelam intellectuals' from the left,their writings are so confusing and illogical I stopped reading them.
Already western people who have seen what happened in vanni are so moved by it, I have witnessed some of them crying after seeing the scenes.
Humanity is not dead yet and we should do a lot to gain support for our freedom struggle from non Tamils by conveying our message in other main world languages.
-vanathy

7:15 PM, April 30, 2009
மாலன் said...

A sensible decision. I welcome your initiative and wish it all success. I request you to think beyond blogs.You may think of creating a mail list, necessarily with the names of those non-Tamils interested in this issue and mail your blog content.

To begin with you may look for the names and ids of human right organizations and activists.

True you will be running the risk of you mail getting lost in the spam, but I would suggest you to give a try.

I feel you will be able to impact, if you take the issue beyond the Tamil- Non Tamil politics and as a human rights/ civil rights denial

regards
Maalan

11:16 PM, April 30, 2009
சயந்தன் said...

தமிழ்சசி

சுவிற்சர்லாந்தில் மெட்ரோ ஏடு போன்றதான ஒரு ஜெர்மன் மொழியிலான ஏடு வரத்தொடங்கியிருக்கிறது. நேற்று
சுவிஸ் முழுவதும் ஒரு லட்சம் பிரதிகள் - புகையிரநிலையங்களில் விநியோகிக்கப்பட்டது.

இதில தகவல்கள் உண்டு
http://www.yarl.com/forum3/index.php?showtopic=57348

4:33 AM, May 01, 2009
Anonymous said...

காங்கிரஸ் கிழட்டு நரிகள் மீது செருப்பு வீசும் புனித சேவையை செய்ய விரும்பும் இனமான சிங்கங்கள் கவனத்திற்கு. தனி ஒரு ஆளாக செருப்பு வீசாதீர்கள். அரசு எந்திரத்தின் கைத்தடி காவலர்களும், முட்டாள் அல்லக்கைகளும் உங்களை தாக்கக் கூடும். கைது, வழக்கு என்று போராட்டம் திசை திரும்பி விடும். எனவே செருப்பு வீச முடிவு செய்திருப்போர் 100 பேர், 50 பேர் என்று எண்ணிக்கையில் அதிகம் பேர்கள் செருப்பு வீசினால் அவர்களுக்கு சிக்கல். மொத்தமாக அத்தனை பேரையும் கைது செய்ய மாட்டார்கள். அபஅபடஇ கஐது செய்தாலும் விடுவித்து விடுவார்கள். நாமும் போராட்டத்தை தொடரலாம்.

6:09 AM, May 01, 2009
Unknown said...

அருமையான முயற்சி. ஆங்கிலத்தில் எழுதத் தெரிந்த அனைத்து பதிவர்களும் இம்முயற்சியில் ஈடுபடலாமே...

6:23 AM, May 01, 2009
We The People said...

நீங்கள் சொல்லுவது நூறு சதவீத உண்மை! அதனால் தான் நானு சில மாதங்களுக்கு முன்னே இதே நோக்கத்தோடு என் ஆங்கில ப்ளாக்கில் ஈழப்பிரச்சனையை பற்றி எழுத ஆரம்பித்திருக்கிறேன். அடிக்க அடிக்க அம்மியும் நகறும் என்று சொல்லுவது போல..ஏதோ ஒரு வகையில் ஈழ மக்களுக்கு ஒரு நன்மை வந்தால் நல்லதே!

என் ஆங்கில ப்ளாக்:

http://wepeopleofindia.blogspot.com

9:22 AM, May 01, 2009
Prakash said...

Dear Sasi ,

I tried this much earlier. I have written about the whole conflict in english on the basis of my reading from various sources and from books like " Island of blood and Viduthalai puligal by Marudhan".Though am not an expert to pen down articles with accuracy , I have tried my best.
Here is the link
http://prakash-prakashism.blogspot.com/

5:50 AM, May 03, 2009
Anonymous said...

Using English to express your views and to out reach is good.
Your bias and prejudice against a section of tamils is well known. But that section has many who can write convincingly in English and who can articulate views. They can contribute to efforts like yours, provided you are willing to shed your biases. You can either continue with youe biases
against that section per se or try
to build bridges with them. The SriLankan Tamils issue has to be
explained to the global media and
community using many strategies.
What works for blogs and popular
writing will not work for communication with academics
and experts. So such efforts need
a pool of persons with different
types of communicating/writing
skills. Creating and sustaining such a pool is a major challenge.

12:02 PM, May 04, 2009
Unknown said...

ஈழ தமிழர்கள் இன்றைய நிலை பற்றி தமிழர்களுக்கு இடையே தமிழில் விவாதித்து, பேசி, எழுதி பெரிதாக ஒன்றும் நடக்க வில்லை. நீங்கள் கூர்வது போல இனி பிற மொழி மக்களுடன், பிற மொழி மக்களுக்கு சென்று அடையும் படி ஆங்கிலத்தில் முழங்குவதன் அவசியம் பத்தி உங்கள் கருது மிகச்சரி.... right deicsion/awareness at right time...

7:07 PM, May 06, 2009
Anonymous said...

//Your bias and prejudice against a section of tamils is well known. But that section has many who can write convincingly in English and who can articulate views. They can contribute to efforts like yours, provided you are willing to shed your biases. You can either continue with youe biases
against that section per se or try
to build bridges with them.//

Dear my fellow anonymous,
You sound as if on Sasi's bias has stopped all those in that particular section from supporting Eelam Tamils. Please don't tell that all those who write vehemently against Eelam Tamils do so because of Sasi. Eelam Tamils are always willing to take support from anybody without any political or communal prejudice. See for example, how they embrace Jayalalitha once she declared support for Eelam.

So, give up your prejuice, see the the humananitrian and political crises Eelam Tamils have been going through, and write on that basis instead of using perceived bias of other supporters of Eelam Tamils.

Please don't try to make a bargain here "don't talk against us. we will support Eelam Tamils". That is very cheap tactic. Support or oppose a cause based on its merits not based who support or oppose it.

10:26 AM, May 07, 2009
Sendhil said...

//
But that section has many who can write convincingly in English and who can articulate views//

Do you think other communities don’t have people who can articulate their views convincingly? Do you think only that particular section of people can write in better English? This kind of superiority thinking is what irritates me and people like Sasi. We too can write in better English as Portrayed in Sasi’s English Articles and my comments in English blogs

5:00 PM, May 07, 2009
PRABHU RAJADURAI said...

நேற்று இந்தப் பதிவைப் படித்தேன்...இன்று இணையத்தில் பிரேம்குமார் என்பவரின் நடனத்தைப் பார்த்தேன்...அந்த ஐந்து நிமிட நடனம் போதும். பக்கம் பக்கமாக எழுததேவையில்லை!

10:46 PM, May 09, 2009
Dinesh said...

நண்பரே,

உமது முயற்சிக்கு என்னால் ஆனா அனைத்து உதவிகளையும் அளிக்க உறுதியளிக்கிறேன்.
உமது பதிவு குறித்த எனது தாழ்மையான கருத்துக்கள்...
இப்பொழுது பிரச்சினை மொழி அல்ல. ஒரு தவறிற்கான தண்டனை என்னவாக இருக்கலாம் என்பதும்
உலக அகராதியில் "ஈழத்தை அங்கீகரித்தல்" -ன் அர்த்தமும் தான்.

முதலில் தண்டனை குறித்த எனது கருத்து. டெல்லியில் ஒரு பள்ளிச் சிறுமி மாண்ட பொது, மக்களும் ஊடகங்களும்
வெளிப்படுத்திய கருத்துக்கள், அலட்சியத்தை ஒரு கொலைக் குற்றத்திற்கு ஈடாக சித்தரித்தன. அலட்சியம் கண்டிக்கப் பட வேண்டியது தான். அனால் அதன் விளைவுகளே அதனை தண்டனைக்குரியதாக்குகிறது. ஒரு வேளை ஈழத் தமிழர் இன்று படும் இன்னைல்கள் பெரிதாகக் கருதப் பட விட்டாலும், அனைவரும் அஞ்சும் தந்திர இனப் படுகொலையில் ஒருவர் இறந்தாலும் அதற்கு இந்தியா அரசும் அதன் நிலையில்லா நிலைப்பாடும் ஒரு காரணம்.

அரசாங்கங்களின் இத்தகைய கொள்கைத் தவறு(சதி)களை எத்தனை காலம் மன்னிப்பது. அவ்வாறு தண்டிப்பதானால், யார் தண்டிப்பது, என்ன தண்டனை அளிப்பது? இது ஈழத் தமிழர் பிரச்சினைக்காக மட்டும் அல்லாது, பல வித காரணங்களுக்காகவும் சிந்திக்கப் பட வேண்டியது.

சரி இப்பொழுது ஈழத்தை அங்கீகரித்தலில் உள்ள "சிக்கல்கள்" குறித்துச் சிந்திப்போம். (சிக்கல்கள் நமது அரசாங்க அமைப்புகளுக்கு.)

உலகம் ஈழத்தை அங்கீகரித்தால், இது ஒரு எடுத்துக்காட்டாக அமைந்து விடும். உலகில் எந்த மூலையிலும்
புரட்சி ஏற்படுவதற்கான வாய்ப்பு மலிந்து கிடக்கிறது. இந்நிலையில் ஒரு புரட்சி அமைப்பின் கோரிக்கை நிறைவேற்றப் பட்டால்
அதுவே புதிய புரட்சிகளைத் தூண்டும் விதமாக அமைந்து விடும். அது அரசாங்கங்களின் ஆளுமையை கேள்விக்குள்ளாக்கும்.

ஒரு பகுதியில் வாழும் 80 சதவீதம் மக்கள் ஒரு கோரிக்கையை முன் வைத்தால் அதனை நிறைவேற்றுவது ஜனநாயக அரசின் கடமையாகிறது. அந்த கோரிக்கையே தனி நாடாக இருந்தால்? இந்தக் குழப்பம் ஏற்படாது பார்த்துக் கொள்ளும் முயற்சியே இன்றைய அரசுகளின் மௌனத்திற்கு அர்த்தம்.

குழப்பம் ஏற்பட்டால் ஒரு தீர்வு காண வேண்டும். அந்த தீர்வு மனித இனத்தின் இன்றைய அடித் தளமான அரசியல் அரங்கை ஆட்டிப் பார்க்கும். ஏற்கனவே உள்ள பிரச்சினைகள் போதாது இது வேறா என்று அஞ்சும் அரசியல்வாதிகளுக்கு அத்தகைய தீர்வைப் பற்றிக் கவலை எப்படி வரும்?

12:58 AM, May 10, 2009
SK said...

நன்முயற்சி. இதன் மூலம் நன்மை விழைய வாழ்த்துக்கள்.

7:50 PM, May 10, 2009
vasi said...

please tamils who live America,tell our problem in sri lanka.

we need justice for genocide, we should print a small articles in america to expose the warcrimes and genocide against Tamil in Sri lanka.

IF we make a great awareness,automatically Eelam tamils will get justice and their rights.

Earnest request from a helpless Eelam tamil!!!

12:26 PM, April 09, 2010