Sunday, May 10, 2009

போதுமடா இந்த ஈழப் போராட்டம்

நேற்று ஒரு நாளில் மட்டும் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் கொல்லப்பட்டிருப்பதாக செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. சிறீலங்கா அரசுக்கும் புலிகளுக்கும் நடக்கும் இந்த சண்டையில் கசாப்பு கடையில் கொல்லப்படும் ஆடுகளை விட கேவலமாக தமிழர்கள் கொல்லப்படுகிறார்கள். இந்தியா, சீனா மற்றும் உலக நாடுகளின் ஆதரவுடன் நடைபெறும் இந்தப் போரில் மனித உயிர்களுக்கு எந்த அர்த்தமும் இல்லாமல் போய் விட்டது. கொத்து கொத்தாக கொல்லப்படும் சக மனித உயிர்கள் பற்றி எந்தக் கவலையும் இல்லாமல் இந்தியாவில் இருக்கின்ற பெரும்பான்மையான மக்கள் உள்ளனர். இதிலே இந்தக் கொலைக்கார நாட்டிற்கு அகிம்சை நாடும் என்றும், காந்தி பிறந்த நாடும் என்றும் பெயர் வேறு. கம்யூனிச நாடு என்ற பெயரில் சர்வாதிகாரத்தை அடிப்படையாக கொண்டு செயல்படும் சீனா இந்தப் போருக்கு ஆதரவு கொடுத்து வருகிறது. ரஷ்யா, ஜப்பான் என அனைத்து நாடுகளும் இந்த கொலைக்கார கூட்டணியில் அங்கம் வகித்து செயல்படுகின்றன. இந்தியா, சீனா, ரஷ்யா, ஜப்பான் போன்ற நாடுகள் மீது காறி துப்புகிறேன். அதைத் தவிர ஒரு சாமானியனான என்னால் எதுவும் செய்து விட முடியாது. அது தான் இன்றைய சூழ்நிலையில் எனக்கும், பலருக்கும் உள்ள இயலாமை.

கடந்த சில மாதங்களாக நடைபெறும் போரில் பல ஆயிரக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டு வருகின்றனர். சாமானிய மக்களான அம் மக்களை இவ்வாறான அலைக்கழிப்பிற்கு உள்ளாக்கியதில் சிறீலங்கா, இந்தியா, சீனா மற்றும் பிற சர்வதேச சமூகம் ஒரு காரணம் என்றால், இந்த படுகொலைகளுக்கு விடுதலைப் புலிகளும் ஒரு முக்கிய காரணம் என்பதை நாம் இனி பகீரங்கமாக பேச வேண்டிய கட்டாயத்திற்கு வந்துள்ளோம். இப்படி ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்படுகையில் அந்த மக்களுக்கு நாம் நியாயம் செய்வதாக இருந்தால் விடுதலைப் புலிகளை நோக்கியும் நமது குற்றச்சாட்டு அமைந்தாக வேண்டும். இது வரையில் இந்த நெருக்கடியான தருணத்தில் புலிகளை விமர்சிக்க வேண்டாம் என பலர் அமைதியாக இருந்து விட்டோம். போரை நிறுத்த வேண்டும் என்று கூக்குரல் எழுப்புவது மட்டுமே நமது நோக்கமாக இருந்து விட்டது. ஆனால் இன்றைக்கு வன்னிக் காடுகளிலும், வவுனியா தடுப்பு முகாம்களிலும் தமிழர்கள் அனுபவித்துக் கொண்டிருக்கும் இன்னல்களுக்கு காரணம் விடுதலைப் புலிகளும் தான்.

இன்றைக்கு சீனா, இந்தியா, சிறீலங்கா, ஜப்பான், அமெரிக்கா என அனைத்து நாடுகளும் புலிகளை எதிர்த்து நிற்கிறது. புலிகள் தங்களால் முடிந்த அளவுக்கு போராடி விட்டார்கள். இந்த நாடுகளை எதிர்த்து இந்தளவுக்கு தாக்கு பிடிக்க முடிந்ததென்றால் அதற்கு புலிகளின் போர்த்திறன் தான் காரணம். ஈராக் குவைத் மீது போர் தொடுத்த பொழுது அதனை மீட்க அமெரிக்கா எடுத்த நடவடிக்கை ஈராக் போன்ற பெரிய நாட்டின் படையிடம் சில நாட்களில் முடிந்து விட்டது. இத்தனைக்கும் ஈராக் அப்பொழுது மிகப் பெரிய இராணுவம் கொண்டிருந்தது. இராணுவ பலம் கொண்ட உலகின் முதல் 10 நாடுகளில் ஈராக்கும் ஒன்று. ஆனால் புலிகள் தங்களுடைய போரிடும் திறமையை எந்தளவுக்கு வெளிப்படுத்தி இருந்தனர் என்பதற்கு இந்தப் போர் ஒரு உதாரணம். இந்தப் போரில் ஈடுபட்ட ஒவ்வொரு விடுதலைப் புலி வீரரையும் வியந்து பார்க்கிறேன்.

அதே நேரத்தில் என்னுடைய இந்த விமர்சனம் என்பது தனிப்பட்ட விடுதலைப் புலிகளை அல்லாமல் அந்த அமைப்பின் தலைமையை நோக்கியே முன்வைக்கிறேன்.

2002ம் ஆண்டு சமாதான உடன்படிக்கை கையெழுத்திடப்பட்ட பொழுது புலிகள் வசம் 80% தமிழீழ நிலங்கள் இருந்தது. மொத்த இலங்கை நிலப்பரப்பில் 3ல் 1 பகுதி புலிகள் வசம் இருந்தது. மொத்த இலங்கையின் கடற்பரப்பில் 3ல் 2பகுதி புலிகள் வசம் இருந்தது. அதாவது இலங்கை அரசாங்கத்தைக் காட்டிலும் பெரும் கடற்பரப்பு புலிகள் வசமே இருந்தது. இலங்கை அரசாங்கமே புலிகளுக்கு சுங்க வரி செலுத்தும் அளவுக்கு புலிகளின் கட்டுப்பாடு இருந்தது. புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த மக்கள் ஒரு நிம்மதியான வாழ்க்கையை வாழ தொடங்கி இருந்தனர். யாழ்ப்பாணம், கொழும்பு போன்ற பகுதிகளில் இருந்த தமிழர்களும் தேடுதல் வேட்டை, சோதனை போன்ற பிரச்சனைகள் இல்லாத ஒரு அமைதியான வாழ்க்கையை வாழ்ந்து கொண்டு இருந்தனர். இந்த அமைதியான வாழ்க்கை நீடித்து, அரசியல் ரீதியாக போராட்டத்தை தொடர்ந்திருந்தால் இன்றைய அவலம் நேர்ந்திருக்காது.

எந்தப் போராட்டமும் ஒரு குறிப்பிட்ட இலக்கு வரை தான் இரணுவப் பாதையில் செல்ல முடியும். இராணுவப் பாதையில் பெற்ற வெற்றியை அரசியல் பாதைக்கு திருப்புவதே அந்தப் போராட்டத்தினை முழுமை அடைய வைக்கும். மாறாக புலிகளே இறுதிப் போர் என கூக்குரலிட தொடங்கினர். தங்களிடம் இருந்த 80% இடத்தை தக்கவைக்க முனையாமல், அதனையும், தங்களை நம்பி இருந்த மக்களையும் பகடைக்காயகளாக பயன்படுத்தி இன்று அனைத்து இடங்களையும் இழந்து நிற்கின்றனர். அவர்களை நம்பி இருந்த மக்களை சிங்கள வல்லூறுக்களிடம் பலியாக்கி கொண்டு இருக்கின்றனர்.

போர் தொடங்கிய பொழுது புலிகள் ஒவ்வொரு இடமாக பின்வாங்கிய பொழுது இது புலிகளின் போர் தந்திரம் என பேசிக் கொண்டிருந்தோம். தந்திரோபாய பின்நகர்வு என்ற ஒற்றை இராணுவ பார்வையில் மட்டுமே இந்த பின்நகர்வு பார்க்கப்பட்டது. ஆனால் அப்பொழுது இந்த தந்திரோபாய பின்நகர்வுக்கு பின்னே இருந்த மனித அவலங்களை பார்க்கவில்லை. புலிகள் பின்வாங்கும் பொழுதெல்லாம், அவர்களுடன் சேர்ந்து மக்களும் பின்வாங்கிக் கொண்டிருந்தனர். கிழக்கு பகுதிகளில் இருந்து பின்வாங்கி அகதியாகினர். மன்னரில் இருந்து ஒவ்வொரு இடமாக மக்கள் நகர்ந்து கொண்டே இருந்தனர். அந்த அவலத்தை நாம் அப்பொழுது பேசவில்லை. தந்திரோபாயத்தை மட்டுமே பேசினோம். புலிகளின் ஒவ்வொரு நகர்வையும் தந்திரோபாயம் என கூறிக் கொண்டே இருந்தோம். ஆனால் இன்று நகர்வதற்கு கூட இடமில்லாத சூழ்நிலையை அடைந்து விட்டோம்.

புலிகள் நடத்தும் போர் என்பது இன்றைக்கு ஒரு தனி நாட்டை எதிர்த்து அல்ல. உலகமயமாக்கப்பட்ட சூழ்நிலையில், உலகின் முக்கிய கடல் பாதையில் இலங்கை தீவு இருக்கும் சூழ்நிலையில் புலிகள் மொத்த உலகையும் எதிர்த்தே போர் நடத்திக் கொண்டு இருக்கின்றனர். இந்த போரில் வெற்றி என்பது நிச்சயம் கிடைக்கப்போவதில்லை. மொத்த உலகையும் புலிகளால் எதிர்க்க முடியாது. அதனை தான் இன்று பார்த்துக் கொண்டிருக்கிறோம். தமிழ் ஈழம் என்பது முன் எப்பொழுதையும் விட இன்றைக்கு எட்டாத தூரத்தில் உள்ளது. 20002ல் அது கைக்கு எட்டும் தூரத்திலேயே இருந்தது. தனி நாடாக இல்லாமல் ஒரு கூட்டாட்சியாக கூட தொடர்ச்சியான அரசியல் வியூகத்தில் அதனை நோக்கி சென்றிருக்க முடியும். ஆனால் இன்றைக்கு அது சாத்தியம் இல்லை.

தமிழ் ஈழம் என்பது இன்றைக்கு சாத்தியம் இல்லை என்பதும், அப்படியான ஒன்றை பேசிக் கொண்டிருப்பது கூட எதிர்கால தமிழ் மக்களை தொடர்ச்சியான அவலத்திலேயே தள்ளும் என்பதுமே இன்றைய யதார்த்தம். போர் ஒரு சாமானியனுக்கு ஏற்படுத்தும் கொடுமையான பாதிப்புகளை தற்பொழுது தான் முதன் முதலாக பார்க்கிறேன். ஈழப் போராட்டதினை சிறிய வயதில் இருந்து கவனித்து வந்தாலும் இந்தளவுக்கு போரின் கொடுமைகளை நான் உணர்ந்தது இல்லை. இந்தியாவில் இந்தளவுக்கு போர் குறித்த செய்திகளும் வந்ததில்லை. ஆனால் முதன் முறையாக போர் என்பது எவ்வளவு கொடுமையானது, எந்தளவுக்கு மக்களுக்கு போர் பாதிப்புகளை ஏற்படுத்துகிறது என்பதை கவனிக்கும் பொழுது இந்தப் போரை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அதுவும் இந்தப் போர் என்பது சாமானியனுக்கு தான் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. மக்கள் கசாப்பு கடையில் இருக்கும் ஆடுகளை விட கேவலமாக கொல்லப்படுகின்றனர். கொல்லப்படும் மக்களை கொண்டு பரப்புரையும், எதிர் பரப்புரையும் செய்யப்படுவது அதனை விட கொடுமையானது.

அதிகாரங்களை எதிர்த்து பேசுவது, அதிகாரங்களை எதிர்த்து போராட்டம் நடத்துவது என்பதற்கு எல்லாம் இன்று எந்த அர்த்தமும் இல்லை. அடையாளப்பூர்வமாக அதிகாரத்தை எதிர்த்து எழுதலாம் - யாரும் படிக்க மாட்டார்கள். பேசலாம் - ஏதோ சிலர் கேட்டு விட்டு செல்வார்கள். இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் செய்வது போல ஆர்ப்பாட்டம் செய்யலாம் - இந்தியாவில் கைது செய்து சில நாட்கள் உள்ளே வைத்து விட்டு அனுப்பி விடுவார்கள். வெளிநாட்டில் அனுமதி பெற்று பிரச்சனை இல்லாமல் ஆர்ப்பாட்டம் செய்தால் கைது செய்யக்கூட மாட்டார்கள். ஆனால் அதிகாரங்களை எதிர்த்து களத்தில் இறங்கி போராடினால் அதிகாரம் நம்மை அழித்து விடும் என்பதற்கு அடையாளமாகத் தான் இன்றைய போர் உள்ளது. போரில் ஆயிரக்கணக்கான தமிழர்கள் மாண்டு கொண்டிருக்கின்றனர். புலிகள் படிப்படியாக அழிக்கப்பட்டு வருகின்றனர். மக்களை புலிகளே தடுத்து வைத்திருக்கிறார்கள் என ’நம்பத்தகுந்த’ குற்றச்சாட்டுகள் வரும் பொழுது மக்களை விட புலிகளோ, அவர்கள் போராடிக் கொண்டிருக்கும் தமிழ் ஈழமோ முக்கியம் அல்ல.

இப்படி கொடுமையாக மக்கள் கொல்லப்படுகையில் வசதியான இடத்தில் இருந்து கொண்டு தமிழீழமே தமிழர்களுக்கு தீர்வு எனக் கூறுவது எனக்கு மோசமான சுயநலமாக தெரிகிறது. எந்த அதிகாரங்களும் இல்லாவிட்டால் கூட பரவாயில்லை. போர் முடிந்தால் போதும். மக்கள் தங்களின் அன்றாட வாழ்க்கையை குண்டுவீச்சுகள், செல் தாக்குதல் போன்றவை இல்லாமல் கழித்தாலே போதும் என்ற எண்ணமே எனக்கு இன்றைக்கு மேலோங்கியுள்ளது. ஒரு சாமானிய ஈழத்தமிழனின் எண்ணம் அவ்வாறே இருக்கும். இனி ஈழப் போராட்டம் என்பது தனி நாட்டிற்கான போராட்டமாக இல்லாமல் மக்களின் அமைதியான வாழ்விற்கு வழி ஏற்படுத்தும் ஒரு அரசியல் போராட்டமாக இருக்க வேண்டும் என்பதே என்னுடைய விருப்பம்.

84 மறுமொழிகள்:

Harrispan said...

very good.Ippo Thirudan Nallavan.Thirudapattavan Palikaran.
Srilanka, India , china, japan, America are countries, so whatever they do are legal. But need not be correct. Puligal meethu thavaru illai endru sollavaralai, eninum, Poligal makkal kolla pada karanamanavargal illai.Arasu ennum kodumaikaran athikaram ennum anavaththaal purium nara vettai ithu. Unmail intha kodumaikku karanam tamilar tharappil illatha, mudiyatha ortumai thaan.Puligal latchiyam thoorkathu,Karuna indru amaichaar.Karunanidhi muthal amaichar.Prapaharan sari sonnaal avarukku eethu kidaikkathaa?
Tamileelam endru solli ungalai eemarta mudiyamal iranthanar veerargal.

Indru karuna solvathu, angiruppavargal maaveerar kudumbam mattu may.Srilanka ippavum poligal kolvathaga solvathu entha alavau unmai? poligal than padi thuarai thalabathi padukayam pada intha sealai seivathaga solluvathil ell alavenum unmai irukka mudiumaa?

Eelam malaravittalum puligal niyayamanavargal.unmaikku poradiyavargal.

5:44 PM, May 10, 2009
Unknown said...

அன்புள்ள சசி,
உணர்வு வயப்பட்டது சரி.
எண்ணங்களின் முடிவும் கருத்தும் சரியாக பயன் நோக்கி அமையவில்லை.
உணர்ச்சி வயப்படும்போது நேரடியாக பதிப்பு செய்வது பொருந்தாது.
எண்ணிப்பார்த்து பலமுறை ஆய்ந்து பின் பதிவு செய்வது தேவை. பாதிக்கப்படும், துயர்படும் மக்களுக்குத் தேவையான நலம்வேண்டி மிக மிகத் தேவை.
அன்புடன்
ராதாகிருஷ்ணன்

6:00 PM, May 10, 2009
Anonymous said...

பட்டதற்கு பிறகு வந்த புத்தி.

காந்தியையும், அகிம்சையையும் கேவலப்படுத்தி ஆயுத போராட்டத்தை புகழ்ந்து எழுதினீர்கள். ஆயுத போராட்டத்தில் எதிரியும் ஜெயிக்கலாம் என்பதை மறந்துவிட்டீர்கள். இன்று ஆயுதத்தை கீழே போட்டுவிட்டு அகிம்சை போராட்டத்தை கையில் எடுக்க வேண்டிய நிலைக்கு தமிழ்மக்கள் ஆளாகிவிட்டார்கள். ஆனால் அதை செய்ய ஒரு தலைமை கூட அவர்களிடம் மிச்சமில்லை. மாற்றுதலைமை முழுவதையும் புலிகள் அழித்தொழித்துவிட்டார்கள். தமிழ்மக்கள் விடுதலைக்கு உருப்படியான, சாத்தியமாயிருக்ககூடிய ஒரே தீர்வை முன்வைத்த ராஜிவையும் கொன்றுவிட்டார்கள். புலிகள் இப்படி படுகொலைகளை செய்தபோதெல்லாம் அவர்களை பாராட்டி, வக்காலத்து வாங்கி, 'அது கொலையல்ல தண்டனை' என்று ஒத்தூதிய உங்களை போன்ற போலி அறிவுஜீவிகளும் தமிழ்மக்களின் இத்தகைய நிலைக்கு முக்கியமான காரணமாவார்கள்.

கிளிநொச்சி போரை ஸ்டாலின்கிராட் சமருடன் ஒப்பிட்ட உங்கள் ராணுவ ஆராய்ச்சி பதிவுகளையும், அதை பாராட்டி கும்மியடித்த கும்பல்களையும் எல்லாம் இன்று நினைத்து பார்க்கிறேன். போலி அறிவுஜீவித்தனத்தின் ஒரு சான்றாக அந்த பதிவு என்றென்றும் நிலைத்திருக்க வேண்டும் என்பதே என் அவா.

6:03 PM, May 10, 2009
தமிழ் சசி | Tamil SASI said...

உணர்வு வயப்பட்டது சரி.
எண்ணங்களின் முடிவும் கருத்தும் சரியாக பயன் நோக்கி அமையவில்லை.
உணர்ச்சி வயப்படும்போது நேரடியாக பதிப்பு செய்வது பொருந்தாது.

********

உணர்ச்சி வசப்படவில்லை. உணர்ச்சி வசப்பட்டு சில நிமிடங்களில் இந்தப் பதிவினை எழுத வில்லை. சில மாதங்களாக நண்பர்கள் இடையே உரையாடிய குழும மடல்களிலும் இதனை பேசி வந்திருக்கிறேன். வெளிப்படையாக வலைப்பதிவில் எழுதாமைக்கு காரணம் சிறிய வயதில் இருந்து மனதில் இருந்து வரும் ஒரு விடயத்தை அவ்வளவு எளிதில் அகற்ற முடியவில்லை என்பது மட்டுமே.

தற்பொழுது தெளிவடைந்து இருக்கிறேன். மக்களை புலிகளே தடுத்து வைத்திருக்கிறார்கள் என ’நம்பத்தகுந்த’ குற்றச்சாட்டுகள் வரும் பொழுது மக்களை விட புலிகளோ, அவர்கள் போராடிக் கொண்டிருக்கும் தமிழ் ஈழமோ முக்கியம் அல்ல.

மக்கள் அமைதியாக இருக்கத்தான் நாடு. மக்களை கொன்று குவித்து அவர்களை முழுவதுமாக அழித்து அதன் மீது தமிழ் ஈழத்தை என்றைக்கு அமைப்பது ?

6:09 PM, May 10, 2009
தமிழ் சசி | Tamil SASI said...

அனானி,

நான் என்னை அறிவுஜீவியாக எங்கும் கூறிக் கொண்டதில்லை. நான் என்னுடைய வாழ்க்கைப் பாதையில் கடந்து செல்லும் நிகழ்வுகளைக் கொண்டே என் கருத்துக்களை அனுபவத்தால் அமைத்துக் கொள்கிறேன். ஒவ்வொருவரின் வாழ்க்கை தான் அவரவரின் கருத்துக்களை தீர்மானிக்கிறது. ஒரே வட்டத்தில் என்னை குறுக்கிக் கொள்ள நான் என்றைக்கும் விரும்பியதில்லை. வாழ்க்கைப் பாதையில் என் கருத்தக்கள் மாற்றம் பெறலாம். தெளிவு பெறலாம். குழம்பியும் போகலாம். நாளைக்கே வேறு கருத்துக்கு நான் வந்தடையலாம். அது எனது வாழ்க்கை எனக்கு தரும் பாடம். அனுபவம். அவ்வளவு தான்.

நான் எந்த தேசியத்தைச் சார்ந்தும் என் கருத்துக்களை அமைத்துக் கொள்வது இல்லை. நீங்கள் எந்த தேசியத்தை சார்ந்து உங்கள் கருத்துக்களை அமைத்து கொண்டிருக்கிறீர்கள் என்பதை உங்களுடையே பின்னூட்டமே வெளிப்படுத்துகிறது.

அகிம்சையில் விடுதலை வாங்க முடியாது. அகிம்சையில் இந்தியா விடுதலை வாங்க வில்லை என்பதில் இன்றைக்கும் நான் உறுதியாக இருக்கிறேன். இரண்டாம் உலகப்போர் சார்ந்த பொருளாதார சூழலில் தான் இந்தியா விடுதலைப் பெற்றது. அகிம்சையால் அல்ல. அதே போல இன்றைய உலகமயமாக்கிய பொருளாதார சூழலும், சீனா-இந்தியாவின் பொருளாதார வல்லாதிக்க போட்டியும் தான் ஈழப் போராட்டத்தினையும் முடித்து வைக்கிறது.

உலகளவில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்த பலம் இல்லாத சாமானியர்களின் போராட்டம் ஆயுதப் போராட்டமாக நடந்தாலும் சரி, அகிம்சை போராட்டமாக நடந்தாலும் சரி முடிவு ஒன்று தான்

லட்சக்கணக்கான மக்கள் திரண்டு காஷ்மீரில் விடுதலை முழக்கமிட்டு சில மாதங்களே ஆகிறது. அந்த அகிம்சை போராட்டத்தினை இந்தியா தன்னுடைய போலீஸ் பலத்தால் அடக்கியும் சில மாதங்களே ஆகிறது. அதற்குள்ளாக அகிம்சை பற்றி உபதேசம் செய்ய வந்து விட்டீர்கள். மியன்மாரில் புத்த பிக்குகள் செய்த அகிம்சை போராட்டத்திற்கு கிடைத்த பரிசு என்ன ? திபெத்தில் நடப்பது என்ன ?

அகிம்சை, ஆயுதப் போராட்டம் என்பதற்கு எந்த வேறுபாடும் இல்லை. நேபாளத்தில் மாவோயிஸ்ட்கள் அகிம்சை வழியில் போராட வில்லை. போராட்டம் எப்படி நடத்தப்படுகிறது என்பதில் தான் வேறுபாடு உள்ளது. புலிகள் எப்படி போராட்டத்தினை முன்னெடுத்தனர் என்பதில் தான் என்னுடைய விமர்சனம் உள்ளது.

உங்களுடைய அகிம்சை உபதேசங்களை கொலைக்கார இந்திய அதிகாரமையத்திடம் சென்று சொல்லுங்கள்

6:24 PM, May 10, 2009
Anonymous said...

போராட்டத்தில் மக்கள் கொல்லப்படுவது உண்மையே, ஆயுதப்போராட்டம் இல்லாத போதே சிங்களவன் ஆயிரக்கணக்கில் தமிழனை கொல்லும் போது அவனை எதிர்த்து ஆயுதப்போராட்டம் நடத்தும் போது இழப்புக்கள் இன்னமும் அதிகமாக இருக்கும், போராட்டத்தை விட்டாலும் சிங்களவன் கொல்லத்தான் போகிறான். இந்த இழப்புகளின் இறுதியில் உலசமுதாயத்தால் தமிழருக்கு ஒரு தீர்வு வரும், இறுதி எல்லை அதுவே, தீர்வு வராதுவிட்டால் முழுபிரதேசமும் பிடிபட்டபின்னர், சிங்களமக்களின் மரணங்கள் ஆரம்பிக்கும்.

6:25 PM, May 10, 2009
Anonymous said...

இம் முறை நீங்கள் ஒரு இதயமுள்ள மனிதனாக இந்த பதிவை எழுதியுள்ளீர்கள். நிச்சியமாக சாமானிய ஈழத்தமிழனின் எண்ணமும் அதுவே

6:25 PM, May 10, 2009
தங்க முகுந்தன் said...

காலம் பிந்திய பதிவு!
நான் ஆரம்பத்திலேயே எழுதிக் கொண்டு இருக்கிறேன்!
நான் இட்ட பல பதிவுப் பின்னிடுகைகளுக்குக் கூட சிலர் விதண்டாவாதக் கருத்துக்களைத் தெரிவித்திருந்தார்கள். நீங்கள் அல்ல.
தந்தை செல்வா தனது ஆரம்பத்திலிருந்தே தீர்க்கதரிசனமாக சில விடயங்களைக் குறிப்பிடுவார்!
அது பின்னர் ஏதோ நடந்தே தீரும். இறுதியாகத் தெரிவித்த கருத்து தமிழ் மக்களைக் கடவுள்தான் காப்பாற்ற வேண்டும் என்று - இன்று 2002இல் மத்தியஸ்த்தராக இருந்த நோர்வேயும் கைகழுவி விட்டது!
உலக நாடுகளில் ஒரு நேரத்தில் ஈழப் பிரச்சனை இனப் பிரச்சனையாகப் பேசப்பட்டது!
இன்று பயங்கரவாதம் என எம்மவராலேயே முத்திரையிடப்பட்டதுதான் மிச்சம்!

6:51 PM, May 10, 2009
Anonymous said...

/நான் எந்த தேசியத்தைச் சார்ந்தும் என் கருத்துக்களை அமைத்துக் கொள்வது இல்லை. நீங்கள் எந்த தேசியத்தை சார்ந்து உங்கள் கருத்துக்களை அமைத்து கொண்டிருக்கிறீர்கள் என்பதை உங்களுடையே பின்னூட்டமே வெளிப்படுத்துகிறது./

உங்கள் தேசியம் தான் இன்று காஷ்மிர், ஈழம் என்று எல்லா இடத்திலும் தோற்றுவிட்டதே? நீங்கள் ஆதரிக்கும் எல்லா போராட்டமும் தோற்றுவிடுவது என்ன ராசியோ? உங்கள் ராசிக்கு நீங்கள் தயவு செய்து இந்திய தேசியத்தை ஆதரித்து வைக்கவேண்டாம் என்று பணிவன்புடன் கேட்டுகொள்கிறேன்:-))

/அகிம்சையில் விடுதலை வாங்க முடியாது. அகிம்சையில் இந்தியா விடுதலை வாங்க வில்லை என்பதில் இன்றைக்கும் நான் உறுதியாக இருக்கிறேன். /

உலகில் உள்ள எல்லா வரலாற்று ஆசிரியர்களையும், அறிஞர்களையும் மிஞ்சிய அறிவாளியான தாங்கள் கூறினால் அது சரியாகத்தான் இருக்கும்:-)-:)-:)

விட்டால் நெல்சன் மண்டேலாவும், மார்ட்டின் லூதர் கிங்கும் அகிம்சையால் வெற்றி பெறவில்லை என்றும் சொல்வீர்கள்.இந்த இருவரின் விடுதலை போராட்டத்துக்கும் ஆதர்ச நாயகன் காந்திதான்.மியான்மரில் போராடும் ஆங்க்சான் சூகிக்கும், தலாய் லாமாவுக்கும் ஆதர்சம் காந்தியின் விடுதலை போராட்டம் தான்.

அகிம்சை போராட்டத்தில் உடனடி வெற்றி கிடைக்காது. தளராமல் போராடவேண்டும்.அமெரிக்காவில் கருப்பர் இரு நூறு வருடத்துக்கு மேல் அகிம்சை முறையில் போராடி தான் சிவில் உரிமைகளை வாங்கினார்கள். தென்னாப்பிரிக்காவிலும் அதே நிலைதான்.இந்தியாவிலும் அதே போல்தான்.

மியான்மரில் போராட்டம் துவங்கி 20 வருடம் தான் ஆகிறது. திபெத்தில் சுமார் 40 வருடங்கள். ஆயுதம் தூக்கியிருந்தால் திபெத் மக்களும் இன்று இலங்கைதமிழ் மக்களை போல் அழித்தொழிக்கப்பட்டிருப்பார்கள். ஆயுதம் தூக்காததால் தான் இந்த இரு நாடுகளின் உரிமை போராட்டங்கள் உலகநாடுகளால் அங்கீகரிக்கப்பட்டு மியான்மர் சர்வதேச சமூகத்திலிருந்து ஒதுக்கப்பட்டு இருக்கிறது.சீனா மனித உரிமைகளை பொறுத்தவரை மேற்கத்தியநாடுகளாலும் முற்போக்கு சிந்தனையாளர்களாலும் மிகவும் இழிவாக கருதப்படுகிறது.ரஷ்யா விழுந்ததுபோல் சீனாவும் விழுந்தால் திபெத் சுதந்திரம் பெறுவதை மேற்கத்தியநாடுகளே முன்னெடுத்து செய்யும்.

பொறுமை இழந்து ஆயுதம் தூக்கினால் இதோ இப்படித்தான் "போதுமடா ஈழ போராட்டம்" என்று ஒரு கட்டத்தில் கட்டுரை எழுதவேண்டும்.

6:57 PM, May 10, 2009
Naresh Kumar said...

//சீனாவும் விழுந்தால் திபெத் சுதந்திரம் பெறுவதை மேற்கத்தியநாடுகளே முன்னெடுத்து செய்யும்//

அத்தைக்கு மீசை முளைத்தால் சித்தப்பா கதையாக இருக்கிறது. சீனா விழுந்ததற்கப்புறம் உலக நாடுகள் எல்லாம் என்னத்தை வாங்கி தர்றது. அவங்களே எடுத்துக்கப் போறாங்க.

8:10 PM, May 10, 2009
Muhammad Ismail .H, PHD., said...

அன்பின் சசி,

அப்ப இதற்கு என்ன தான் தீர்வு? தமிழ் பேச தெரிந்த மக்களாக அவர்கள் பிறந்ததற்கு இது தான் பரிசா? இந்த ஈழப பிரச்சினைக்கும் 49-0 போல சரியான தீர்வே கிடையாதா?


49-O என்னும் உதவாக்கரை சட்டம் !!!

http://gnuismail.blogspot.com/2009/05/49-o.html
with care and love,

Muhammad Ismail .H, PHD,
http://gnuismail.blogspot.com

8:12 PM, May 10, 2009
Anonymous said...

you should see the youtube video where they wear cyanide lockets on 15 yr old girls.

problem is lack of unity among people. people need to learn to unite to avoid these kinds of problems.

8:38 PM, May 10, 2009
Anonymous said...

மனிதன் சாவதற்காக போராடுவதில்லை. வாழ்வதற்காக போராடியிருக்க வேண்டிய இலங்கைத் தமிழர்கள் புலிகளின் தற்கொலை வழிமுறையினால் அரசியல் தற்கொலை செய்துள்ளனர்.

8:51 PM, May 10, 2009
வெத்து வேட்டு said...

how can ltte expect Indian govt do nothing after killing Rajiv?
doesn't Praba has an ounce of brain?
Sasi there are thousands of people with your mindset now...
கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரம்

Ltte's way are not acceptable to any "civilized" country...
their way could have been okie before cold-war era...
Praba never woke up from his dream world..al Praba knew is Clint Eastwood movies, MGR movies,
this was bound to happen..and it is happening... too bad

8:55 PM, May 10, 2009
thiru said...

சசி,

உங்கள் கட்டுரையில் பல இடங்களில் முரண்படுகிறேன். அவற்றை முழுவதும் விளக்க தற்போதைய மனநிலை இடம் தரவில்லை.

புலிகளின் அரசியல் பார்வை மற்றும் செயல்பாடுகள் பற்றிய விமர்சனம் தேவை. புலிகளை மட்டுமே விமர்சிப்பதில் உடன்பாடில்லை. புலிகள் ஆதரவு தளத்தையும் (புலம்பெயர் தமிழர்கள், தமிழக ஆதரவு உட்பட அனைத்தையும்) சேர்த்து இந்த விமர்சனங்கள் வைக்கப்பட வேண்டும். அவை தவறுகளிலிருந்து தமிழ்த் தேசிய போராட்ட வரலாற்றின் படிப்பினைகளை தருவதாக இருக்கலாம். அவற்றை இங்கு ஒரு பின்னூட்டத்தில்/பதிவில் எழுத முடியாது.

//20002ல் அது கைக்கு எட்டும் தூரத்திலேயே இருந்தது. தனி நாடாக இல்லாமல் ஒரு கூட்டாட்சியாக கூட தொடர்ச்சியான அரசியல் வியூகத்தில் அதனை நோக்கி சென்றிருக்க முடியும்./

உண்மையில் 2002லும் ஈழம் கைக்கு எட்டும் தூரத்தில் இருக்கவில்லை. சுயநிர்ண உரிமையுடன் ஒன்றுபட்ட இலங்கைக்குள் தமிழர்களுக்கான பிரதேசம் ஒன்றை சமஸ்டி அடிப்படையிலான தீர்வு ஒன்றுக்கு புலிகள் உடன்படும் சகிம்சைகளை 2002 பேச்சுவார்த்தை துவக்கம் முதல் 2003 வரையில் வெளியிட்டனர். அதையொட்டி சமாதான பேச்சுவார்த்தையின் 3வது கூட்டம் அரசியல் தீர்வுக்கான வாய்ப்புகளை ஆராய தீர்மானித்தது. மேற்குலக நாடுகளின் சமஷ்டி அமைப்பு முறைகளை ஆராய புலிகளும் குழுவொன்றை உருவாக்கி பயணங்களையும் மேற்கொண்டிருந்தனர். இப்படி ஒரு பக்கம் சமாதானப் பேச்சுக்கள் நடந்த போது, சிறீலங்கா படைகளின் முறுகல்களும், நடவடிக்கைகளும் தொடர்ந்தன. போர் நிறுத்த ஒப்பந்தத்திலும், சமாதானப் பேச்சு கூட்டங்களிலும் எடுத்த முக்கிய முடிவுகளை நிறைவேற்ற சிறீலங்கா படைகள் தடையாக இருந்தன. அவற்றில் முக்கியமானது தமிழ்மக்களின் மீள்குடியேற்றம் சம்பந்தமானது. பாதுகாப்பு வலையம் என்ற காரணத்தை காட்டி தமிழ்மக்களை தங்களது இடங்களுக்கு போக விடாமல் தடுத்தது சிறீலங்கா அரசு. பேச்சுவார்த்தையில் இதுபற்றிய கேள்விகள் பலமாக எழுந்ததும் 'பாதுகாப்பு வலையம்' என்று அறிவித்த பகுதிகளில் மக்களை மீள்குடியமர்த்தல் பற்றி ஓய்வு பெற்ற இந்திய ராணுவத் தளபதி லெப்.ஜெனரல்.சதீஸ் நம்பியாரை வைத்து ஆய்வு அறிக்கையை மே 2003ல் வெளியிட்டது. அவற்றில் புலிகளின் ஆயுதங்களை கழைவது உள்ளிட்ட நிபந்தனைகள் இருந்ததாக பேசப்பட்டன. இந்திய ராணுவத் தளபதியை சிறீலங்கா ஏன் திடீரென அழைத்தது? இந்திய சூட்சுமம் 2002 முதல் திரைமறைவில் வேலை செய்தது. புலிகளின் கப்பல்கள் இந்தியா துணையுடன் தாக்கி அழிக்கப்பட்டன.

பேச்சுவார்த்தையிலிருந்து தற்காலிகமாக விலகிய புலிகள் Interim Self Governing Authority பற்றிய தங்களது பரிந்துரையை நவம்பர் 2003ல் முன்வைத்தனர். போர்நிறுத்த துவக்கம் முதல் எதிர்த்து வந்த ஜேவிபி, சந்திரிகா குமாரதுங்கா அதை படித்து முழு பொருளையும் உணர அவகாசம் எடுக்காமலே எதிர்த்தனர் (Interim Self Governing Authority வழியாக புலிகளிடம் அதிகாரம் போய் விடுமென்று 2002 ஏப்பிரல் பிரபாகரன் ஊடக மாநாடுக்கு பின்னர் 'இந்து பத்ரீக்கா' எழுதிய கட்டுரைகளும், தாய்லாந்து முதல் பேச்சுவார்த்தையின் முடிவில் ஊடக சந்திப்பில் ஆன்ரன் பாலசிங்கத்திடம் இந்திய ஊடகங்கள் இடைக்கால அதிகார சபை பற்றி கேட்ட கேள்விகளும் மீண்டும் வாசித்தால் இவை விளங்கும்). அமெரிக்கா புலிகளின் Interim Self Governing Authority வரைவு ஆவணத்தை வரவேற்றிருந்தது. தென்னக அரசியலில் குழப்பங்கள் உருவானது. இந்தியா அவற்றில் மிகமுக்கிய பங்காற்றியிருந்தது. சந்திரிகா இந்த குழப்பங்களின் நட்சத்திர நாயகியாக இருந்தார். உண்மையில் இலங்கைத் தீவில் சுயநிர்ணய உரிமையுடன் கூடிய ஒரு பிரதேச ஆட்சியை கூட புலிகளின் ஆளுகையின் கீழ் உருவாக இந்திய வல்லாதிக்கம் அனுமதிக்கவில்லை. இன்னும் நிறைய இதுபற்றி சொல்லலாம்.

ஈழம் அமைவதற்கு இந்தியா முழு முதல் தடை. இந்தியாவிடம் கெஞ்சுவதால் ஈழம் உருவாகாது. இன்று சீனா வெளிப்படையாக எதிர்க்கிறது. ஆனால் மேற்குலகம், ஐ.நா தலையிடாமல் இருக்க யார் காரணமாக இருக்கிறார்கள்? இந்தியா!

ஈழம் வேண்டுமா அல்லது வேண்டாமா என்று தீர்மானிக்கும் உரிமை ஈழத் தமிழ் மக்களுக்குரியது. அவர்களது உரிமையும், உள்ளார்ந்த விருப்பமும் எதுவாக இருப்பினும் நாம் துணையாக இருப்போம்.

இன்று ஈழப் போராட்டத்தின் களம் வன்னியில் அல்லது ஈழத்திற்குள் மட்டுமாக இல்லை. ஈழத்திற்குள் நடப்பது ராணுவ போராட்டம் மட்டுமே. அரசியல் போராட்டங்கள் ஈழத்திற்கு வெளியே இந்தியா, மேற்குலக நாடுகளில் இருக்கிறது.

8:58 PM, May 10, 2009
Raveendran Chinnasamy said...

Sasi

I know how we share pain of Srilankan Tamils . We need peace for People so if we need to stop our struggle , lets do it .

//மக்கள் அமைதியாக இருக்கத்தான் நாடு. மக்களை கொன்று குவித்து அவர்களை முழுவதுமாக அழித்து அதன் மீது தமிழ் ஈழத்தை என்றைக்கு அமைப்பது ?

இனி ஈழப் போராட்டம் என்பது தனி நாட்டிற்கான போராட்டமாக இல்லாமல் மக்களின் அமைதியான வாழ்விற்கு வழி ஏற்படுத்தும் ஒரு அரசியல் போராட்டமாக இருக்க வேண்டும் என்பதே என்னுடைய விருப்பம்.//

agreed

9:18 PM, May 10, 2009
thiru said...

திருத்தம்:

அரசியல் போராட்ட களங்கள் ஈழத்திற்கு வெளியே இந்தியா, மேற்குலக நாடுகளில் இருக்கிறது.

--
2002ல் ராணுவ ரீதியாக ஈழத்தின் 100 சதம் நிலத்தையும் புலிகள் கைப்பற்றியிருந்தால் ஈழம் அமைந்திருக்குமா? அப்போதும் ஈழம் தனிநாடாக பிறந்திருக்காது. இந்திய, மேற்குலக நெருக்கடிகளுடன் போரை சந்தித்திருக்கும்.

ஈழத்தை பெறுவதற்கான அரசியல் போராட்டக் களத்தை இந்தியா, மேற்குலக நாடுகளில் உருவாக்க தமிழர்கள் தவறினார்கள் அல்லது அதற்கான அரசியலை முன்னெடுக்கவில்லை.

9:29 PM, May 10, 2009
வெத்து வேட்டு said...

"இன்று ஈழப் போராட்டத்தின் களம் வன்னியில் அல்லது ஈழத்திற்குள் மட்டுமாக இல்லை. ஈழத்திற்குள் நடப்பது ராணுவ போராட்டம் மட்டுமே. அரசியல் போராட்டங்கள் ஈழத்திற்கு வெளியே இந்தியா, மேற்குலக நாடுகளில் இருக்கிறது."
but only vanni people are dieing like flies...would they accept that Tamil Eelam is not in their hands? :)
all the protests in western countries are a BIG JOKE... they will die down soon..
only Fools in Tamil nadu will self immolate and make ordinary tamils life misearable..

IF seeman, barathirajah, and co believe that whole of Tamilnadu is boiling over this Eelam matter..why they all don't run in Election and win all the seats and make an issue in the Parliament..instead of just doing bravado speeches?????
did Election board bar them?
whom are they fooling....
Barathirajah and Seeman are just gathering crowd for their next movies..that is all

9:36 PM, May 10, 2009
வருண் said...

Sasi,

I agree with you, we try hard to achieve something but fortunately unfortunately if we could not achieve that, like a gentleman, we can accept the inability to achieve what we wished and think of some other way to achieve the same in the near future!

That is what wise people and leaders do!

See, life is not fair lots of times. You dont get what you deserve. It happens in everybody's life.

There may be some other way, some other time you could achieve this successfully. For now, just give it up for the benefit/sake of innocent people who get killed unnecessarily and you dont have the "power" to protect them for now!

I have seen great people failed in their mission. There are million ways to accomplish your target, only one has failed after all.

10:05 PM, May 10, 2009
மு. சுந்தரமூர்த்தி said...

// Anonymous said...
விட்டால் நெல்சன் மண்டேலாவும், மார்ட்டின் லூதர் கிங்கும் அகிம்சையால் வெற்றி பெறவில்லை என்றும் சொல்வீர்கள்.இந்த இருவரின் விடுதலை போராட்டத்துக்கும் ஆதர்ச நாயகன் காந்திதான்.//

Yes, Gandhi was an inspiration to Dr. King, but certainly not for South African leader Nelson Mandela. The regimes they fought were different and the circumstances were different. Each chose a method that worked for their situations.

In his autobiography "Long Walk to Freedom" Mandela mentions Gandhi at handful of places but doesn't claim anywhere that Gandhi was his role model.

As a matter of fact Mandela clearly rejected nonviolence as a matter of principle. He rather suggested nonviolence as a strategy as long as it was effective. In fact, the recently elected President of South Africa Jacob Zuma has served in the military wing of African National Congress and was responsible for procuring arms.

Mandela even mildly ridiculed hunger strike as a mode of protest while serving time at Robben Island prison as he thought it was too passive and favored more militant style of protests such as work strikes or refusing to clean up. His reason was pragmatic; the actions should punish authorities not themselves.

The following is excerpted from Mandela's book for the benefit of both ignorant “satyagrahis” as well as emotional LTTE supporters.

"We also discussed whether the campaign should follow Gandhian principles of nonviolence, or what the Mahatma called satyagraha, a nonviolence that seeks to conquer through conversion. Some argued for nonviolence on purely ethical grounds, saying ii was morally superior to any other method. This idea was strongly affirmed by Manilal Gandhi, the Mahatma’s son and the editor of the newspaper Indian Opinion, who was a prominent member of the SAIC (South African Indian Congress). With his gentle demeanor, Gandhi seemed the very personification of nonviolence, and he insisted that the campaign be run along identical lines to that of his father’s in India.

Others said that we should approach this issue not from the point of view of principle but of tactics, and that we should employ the method demanded by the conditions. If a particular method or tactic enabled us defeat the enemy, then it should be used. In this case, the state was far more powerful than we, and any attempts at violence by us would be devastatingly crushed. This made nonviolence a practical necessity rather than an option. This was my view and I saw nonviolence in the Gandhian model was not an inviolable principle but as a tactic to be used as the situation demanded. The principle was not so important that the strategy should be used even when it was self-defeating, as Gandhi himself believed. I called for nonviolent protest for as long as it was effective. This view prevailed, despite Manilal Gandhi’s strong objections”
Mandela’s pragmatic approach is strikingly similar to that of Periyar, not Gandhi. Ironically, neither Eelam Tamils nor their die hard supporters in Tamil Nadu really have learnt any lesson from Periyar.

I wish LTTE leadership and their supporters had taken the same pragmatic approach as Mandela and ANC did. Unfortunately, Prabhakaran has strong faith in militarism and failed to realize that both the known enemy, Sri Lankan state and the shadow enemy Indian state are stronger. LTTE might have built military strength in the past but never seemed to have had political wisdom. I have criticisms about Tigers but writing about can hardly matter now. A generation has suffered and another generation will suffer immensely due to the brutality of hegemonic Indian state, oppressive Sri Lankan state and unrelenting LTTE.

10:12 PM, May 10, 2009
மாலன் said...

உங்கள் வாசிப்புக்கும் சிந்தனைக்கும்:
http://jannal.blogspot.com/2009/04/blog-post_28.html
மாலன்

10:15 PM, May 10, 2009
Anonymous said...

80% puligalidam eruntathu..apothu enne piracai thonriyathu.. Tsunami puligal kaiyandargal..enthe natdu utaviyum ellamal,karunavin thurogam ataiyum samalitargal.. epadi piracanaigal.. ennum niraiye erukirathu... avargalai vanathil erunthu vanthe power enru ninaikathirgal..avargalum manitargal.. tamil inathirgage..unnakage..yennakage poradikondu erukange..ulagam muluthum 12. koodi tamilargal erukange.. athil 3 lancam tamilargal..maanathodu tamil inne vidivirkage...tamil eelam malare..puligalodu eruke madangala..? unnakum yennakum erukum inne unarvu anthe tamilargaluku erukathe..? nan erunthu eruntalum puligalodutan erunthu erupen... enthe uyir yenn inathikage, natdikage povathu perumaitan atai vitde uyarnthe savu ulagathil kidaiyathu...anthe makkal seithalum porava vilai nangal puligalodu maanathodu sagirom enru erpargal elaiya..enn etai naam pese marukirom..ayutam edutaltan pudiya..uyirai ayutamage kodukum makkalum maveerargaltan...puligalai..puunaiya petru erukum. pulai patravalum pulitane..singalavanukn mandiyiduma

10:16 PM, May 10, 2009
தமிழ் சசி | Tamil SASI said...

தி்ரு,

இன்றைய சூழ்நிலையில் புலிகள் நடந்து கொண்ட விதம் தான் புலிகளை நோக்கி குற்றச்சாட்டுகளை முன்வைக்க காரணமாக உள்ளது. இன்றைக்கு மக்கள் சிங்கள இராணுவத்திடம் மட்டும் அல்ல. புலிகள் கைகளாலும் தான் இறந்து கொண்டிருக்கின்றனர். கொத்து கொத்தாக மக்கள் சாவதற்கு புலிகளும் பொறுப்பு ஏற்க வேண்டும்.

புலிகள் தங்கள் போராட்டத்தை உண்மையான மக்கள் போராட்டமாக நடத்த வேண்டும் என்ற எண்ணம் கொண்டிருந்தால் மக்களை போர் பகுதியில் இருந்து விடுவித்து போரினை முன்னெடுத்து இருக்கலாம். கிளிநொச்சி வீழ்வதற்கு முன்பு வரை செல் மற்றும் ஆர்ட்டிலரி தாக்குதல் இல்லாத தூரத்திலாவது மக்கள் இருந்தார்கள். எனவே அவர்களின் தந்திரோபாய பின்நகர்வு என்பது ஓரளவுக்கு ஏற்றுக் கொள்ளக்கூடியதாக இருந்தது.

ஆனால் கடந்த இரண்டு மாதங்களாக மிகக் குறுகிய நிலப்பரப்பில் மக்களை புலிகள் அடைத்து வைத்திருப்பதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. மக்கள் விடுதலைப் புலிகள் எங்களை அடைத்து வைத்திருந்தார்கள் என பகீரங்கமாக பிபிசி தமிழோசை போன்ற ஊடகங்களில் குற்றம்சாட்டி இருப்பதை வெறும் சிறீலங்காவின் சதி என்று என்னால் பார்க்க முடியவில்லை. புலிகள் மக்களை வெளியே விடுவதில்லை என்ற குற்றச்சாட்டில் உண்மை உள்ளது என்பதே தற்போதைய நிலை. இதனை ஈழத்தமிழர்களையே கேளுங்கள். சொல்வார்கள்.

இப்படியான சூழ்நிலையில் புலிகளையும் குற்றம் சாட்ட வேண்டிய சூழ்நிலையே உள்ளது.

மக்கள் தான் முக்கியம். இயக்கங்கள், தேசியங்கள், நாடு, இனம், மொழி என்பதெல்லாம் அதற்கு பிறகு தான்...

ஈழம் வேண்டுமா, வேண்டாமா என்பதை ஈழத்தமிழர்கள் தான் முடிவெடுக்க வேண்டும். ஆனால் புலம் பெயர்ந்த ஈழத்தமிழர்கள் அல்ல. ஈழத்திலே போர் சூழ்நிலையை எதிர்கொண்டிருக்கிற ஈழத்தமிழர்கள் முடிவு செய்ய வேண்டும். அவர்களிடம் கேட்டால் எங்களை நிம்மதி்யாக வாழ விடுங்கள் என்றே சொல்வார்கள். ஈழம் வேண்டும் என்று சொல்ல மாட்டார்கள். அத்தகைய கொடுமையான யுத்தத்தை தான் சிறீலங்கா இராணுவமும், புலிகளும் அந்த அப்பாவி மக்கள் மீது தொடுத்து கொண்டுள்ளனர்

11:38 PM, May 10, 2009
Anonymous said...

நன்பரே இலங்கையில் இந்திய படைகள் போரிட்டு கொண்டிருக்கின்றன... முற்று முழுக்க இந்தைய ஆயுதங்கள் பாவனையில் உள்ளன.. இலங்கை ராணுவம் போரிட்டு இருந்தால் எப்போதோ கதை முடிந்திருக்கும்.. கோழைத்தனமாக முதுகில் குத்துவது நல்லதல்ல... முதலில் புரிந்து கொள்ளுங்கள்
தமிழன் அடிவாங்காத இடம் ஒன்று சொல்லுங்கள் இந்த உலகிலே???? ஆனால் வாங்கிய அடியை திருப்பி கொடுத்த இடம்தாம் இந்த தமிழீழம்..
ஆயுத போராட்டதுக்கு முதல் தமிழன் கொல்லப்படவில்லையா? அவர்களின் சொத்துகள் சூரையாடபடவில்லையா? வரலாற்றை முதலில் புரிந்து கொள்ளுதல் வேண்டும்..

ராஜிவ் காந்தி கொலை என்று கூறுகின்றவர்கள் எல்லோரிடமும் நான் கேட்பது.. இந்தியபடைகள் இலங்கை வந்து 6000 க்கும் மேற்பட்ட தமிழர்களை கொண்று குவித்ததை நாங்கள் எப்படி மறப்போம்??? விடுதலைப்புலிகளை பிரித்தது யார்? எல்லோருக்கும் தெரியும் அது இந்தியாதான்.. சமாதானம் என்ற பெயரில் நடந்தவைகள் பல.. எழுதும் போது எல்லாம் தெரிந்து கொண்டு எழுதனும் நன்பரே... ஆயுத போராட்டம் கடந்த 25 ஆண்டுகளாகதான் நடைபெறுகின்றது.. ஆனால் தமிழனை 50 வருடங்களுக்கு மேலாக சிங்களவன் கொடுமைப்படுத்தினான்...

மக்கள் தொலைக்காட்சியில் இடம் பெறுகின்ற ஈழம் நிகழ்ச்சிகளை பாருங்கள். வரலாறு தெரியும்

11:42 PM, May 10, 2009
தமிழ் சசி | Tamil SASI said...

என்னுடைய இந்தப் பதிவு மக்களைச் சார்ந்தது. மேலே உள்ள ஒரு இந்திய தேசிய அனானி சொல்லி இருப்பது போல, நான் ஆதரிக்கும் போராட்டங்கள் எல்லாம் தோற்று கொண்டே தான் உள்ளது. ஏனெனில் மக்கள் போராட்டங்களை இன்றைய வல்லாதிக்க அரசுகள் அழித்து ஒடுக்கி விடுகின்றன. மக்களின் பக்கம் பேசும் எனக்கு இந்த தோல்வி தொடர்ந்து கொண்டே தான் இருக்க போகிறது.

சிலர் போல தேசியங்களுக்கு டாய்லெட் பேப்பராக இருக்க என்னால் முடிவதில்லை. அவை எதை செய்தாலும் ஜெய்ஹிந்த் என முழங்க முடியவில்லை.

இந்த பதிவை சாக்கிட்டு வெத்து வேட்டு போன்ற இந்திய தேசியவாதிகள் ஏதோ எனக்கு இப்பொழுது ஞானோதயம் கிடைத்து விட்டது போல எழுதிக் கொண்டிருக்கின்றனர். இந்திய தேசியம் தொடுக்கும் இந்தப் போரினை கண்டிக்க கூட வக்கற்ற இவர்கள் நம் நிலை பார்த்து கொக்கரித்து சிரிப்பது போலத் தான் உள்ளது. எப்பொழுதுமே மக்களை பார்த்து அதிகாரவர்க்கம் சிரித்து கொண்டே தான் இருக்கும்.

ஆனால் அந்தச் சரிப்பில் ஒரு விடயத்தை இந்த இந்திய தேசியவாதிகள் மறந்து விட்டார்கள். இந்தியாவைச் சுற்றிலும் இன்று சீனாவின் பிடி இறுகியுள்ளது. பாக்கிஸ்தான், நேபாளம், பங்களாதேஷ், மியன்மார், சிறீலங்கா என இந்தியாவைச் சுற்றி உள்ள அனைத்து நாடுகளிலும் இன்று சீனாவின் ஆதிக்கம் இறுகி விட்டது. தெற்காசிய நாடுகள் இன்று இந்தியாவை விட சீனாவிடமே அதிகம் நட்புறவாடிக் கொண்டிருக்கின்றன. தங்களுடைய அப்பட்டமான இந்திய தேசிய வெறி மற்றும் Hegemony எந்தளவுக்கு பிற நாடுகளை இந்தியாவிற்கு எதிராக திருப்பி இருக்கிறது என்பதற்கு இது ஒரு உதாரணம். இனி எதிர்காலம் எப்படி அமையும் என்பதை பார்ப்போம்.

11:51 PM, May 10, 2009
Anonymous said...

சசி அவர்களே நீங்கள் எழுதிய பார்வையை வெத்துவேட்டு, ரவீந்திரன் சின்னசாமி, மாலன் போன்ற இந்திய அதிகாரவர்க்கத்தின் ____ என்ன விதமாக மாறுகண் பார்த்து எழுதுகிறார்கள் பாருங்கள். இங்கேதான் விடுதலைப்புலிகள் தோன்றிக்கொண்டிருக்கின்றார்கள்

11:52 PM, May 10, 2009
தமிழ் சசி | Tamil SASI said...

அனானி,

உங்கள் பின்னூட்டத்தின் ஒரு சொல் மட்டும் மட்டுறுத்தப்பட்டுள்ளது. அந்த வார்த்தை ஏற்புடையதாக இல்லை. எனவே நீக்கியிருக்கிறேன். மன்னிக்கவும்

11:54 PM, May 10, 2009
வெத்து வேட்டு said...

ஈழம் வேண்டுமா, வேண்டாமா என்பதை ஈழத்தமிழர்கள் தான் முடிவெடுக்க வேண்டும். ஆனால் புலம் பெயர்ந்த ஈழத்தமிழர்கள் அல்ல. ஈழத்திலே போர் சூழ்நிலையை எதிர்கொண்டிருக்கிற ஈழத்தமிழர்கள் முடிவு செய்ய வேண்டும். அவர்களிடம் கேட்டால் எங்களை நிம்மதி்யாக வாழ விடுங்கள் என்றே சொல்வார்கள். ஈழம் வேண்டும் என்று சொல்ல மாட்டார்கள். அத்தகைய கொடுமையான யுத்தத்தை தான் சிறீலங்கா இராணுவமும், புலிகளும் அந்த அப்பாவி மக்கள் மீது தொடுத்து கொண்டுள்ளனர்---?????
ltter supporters are going to say you were bought by Mahinda and co.

11:54 PM, May 10, 2009
வெத்து வேட்டு said...

இந்திய தேசியவாதிகள் ஏதோ எனக்கு இப்பொழுது ஞானோதயம் கிடைத்து விட்டது போல எழுதிக் கொண்டிருக்கின்றனர்---
i didn't want anyone to be "enlightened"..ltte supporters never get enlightened..they only like Rude awakening

my stand was LTTE's path was only leading Tamils to destruction...and we are seeing it...
i didn't even expect this much destruction.. i thought at one point only ltte leadership will be annihilated..but because of people's mass displacement they became sacrificial goats..
if only all these people stood against ltte that they are not displacing with them...most of them would have been alive...

12:01 AM, May 11, 2009
Muthu said...

Sasi,

Interesting post. I donot want to pass comment on this at this stage. After May 16, we may have more to write and debate.

12:50 AM, May 11, 2009
Muthu said...

//இந்த அமைதியான வாழ்க்கை நீடித்து, அரசியல் ரீதியாக போராட்டத்தை தொடர்ந்திருந்தால் இன்றைய அவலம் நேர்ந்திருக்காது.

எந்தப் போராட்டமும் ஒரு குறிப்பிட்ட இலக்கு வரை தான் இரணுவப் பாதையில் செல்ல முடியும். இராணுவப் பாதையில் பெற்ற வெற்றியை அரசியல் பாதைக்கு திருப்புவதே அந்தப் போராட்டத்தினை முழுமை அடைய வைக்கும்.//

This is what I meant few weeks back and was promptly branded as "udanpirappu". That has nothing with party politics but mere common sense.

situation will come where the instant tamil nationalists find themselves in awkward position after the central govt formation.

12:56 AM, May 11, 2009
asfar said...

நீங்கள் ஒரு இதயமுள்ள மனிதனாக இந்த பதிவை எழுதியுள்ளீர்கள். நிச்சியமாக சாமானிய ஈழத்தமிழனின் எண்ணமும் அதுவaha Irukkak kuudum. this is my opinion.
brother சசி.......
before write this comment, one again i read this article after read whole comments...
this is not suitable time to remind our history as muslim because we many time faced same situation by LTTE.
through whole comment we could understand their feelings.. just we can pray with God to stop this war for only tamil people...
now just we can do this one only which is also get among very difficultis..
http://www.asfarm.20m.com/1203.htm

this is near to my home area, http://www.asfarm.20m.com/1205.htm
if we could visit, sure i will go and meet them..

regards..

1:01 AM, May 11, 2009
Anonymous said...

இந்தப் பதிவின் ஊடாக மக்கள் பால் நீங்கள் கொண்ட பாசத்தை உணர முடிகின்றது. கொடிய போரும் அதனால் மக்கள் படும் துயரங்களையும் உங்களால் தாங்க முடியவில்லை. கொத்துக் கொத்தாக மக்கள் கொல்லப்படுவதை மனம் ஏற்றுக்கொள்ள மறுக்கின்றது. இதற்கு என்ன காராணம்? மனிதாபிமானம்? றுவாண்டாவில் பல்லாயிரம் உயிர்கள் பறிக்கப்பட்ட போது எம்மில் பலர் மனிதாபிமானத்தில் துடித்தரர்களா? ஈராக்கில் பல்லாயிரம் உயிர்கள் மடிந்தபோது? இன்று ஒன்று இரண்டு பத்து இருபது நுர்று இருநூறு ஆயிரம் என்று ஈழத்தில் கொல்லப்படுகின்றார்கள். கேட்க நாதியில்லை. புலியும் தமிழன். கொல்லப்படும் சனமும் தமிழன். முத்துக்குமாரும் தமிழன். கருணாவும் தமிழன். கருணாநிதியும் தமிழன். ஜெயலலிதாவும் தமிழன். பறயனும் தமிழன் பார்ப்பானும் தமிழன் தேவனும் வெள்ளாளனும் கவுண்டரும் தமிழன் இந்து தமிழன் இஸ்லாமிய தமிழன் கிருத்துவ தமிழன் இன்னும் பல தமிழன். ஆனால் சிங்களவன் ஒருவனே. ஆம் சிங்களவன் ஒருவனே. எட்டுக்கோடி தமிழனை வேடிக்கை பார்க்க விட்டு தமிழனை கொல்கின்றான். இந்திய மத்தியரசு கொலைக்கு உடந்தை. முத்துக்குமார் என்ன என்னும் முன்னூறு பேர் எரிந்தாலும் மத்தியரசை மாற்ற முடியாது. எவ்வளவு செய்தாலும் ஒன்றும் செய்ய முடியாது. ஏனெனில் சிங்களவன் ஒருவனே. பொங்கு தமிழுக்கு இன்னல்விழைந்தால் சங்காரம் நிஜம் என்று சங்கே முழங்கு. கட்டபொம்மா...! சேரன் சோழன் பாண்டியன்.. புறநானூறு அகநானூறு.. கலிங்கத்துப் பரணி.. மீன்கொடி புலிக்கொடி வில்கொடி வீரவரலாறுகள் எல்லாம் துடைத்தளிக்கப்படும் இறுதிக் கட்டம் இது. அர்த்தமற்றதாக்கப்படும் பொழுதுகள் இவை. முறத்தால் புலியை விரட்டிய தாய் வேசியாடும் காலம் இது. சிங்களவனும் ஆரியன் என்றே இந்த போரை ஆரம்பித்தான். எந்த நூற்றாண்டில் ஆரியன் நுழைந்தானோ தெரியாது. ராமன் ராமேஸ்வரம் வரைக்கும் அடிமைப்படுத்தினான். இலங்கையில் நடந்த இராமாயணப்போர் இதுவரை கதை. இப்போது நிஜயம். உண்மையான ராமாயணப்போர் இப்போது தான் நடக்கின்றது. இந்திய ஆரிய அதிகாரவர்க்கமும் சிங்கள ஆரியஇனமும் எஞ்சியுள்ளவர்களை அடிமையாக்கும் இறுதிக்கணம் இவை. இங்கே மனிதாபிமானம் மண்ணாங்கடி இனமானம் என்று கோமணத்தை தூக்குவது அடிமைகளுக்கு அழகில்லை. ஒரு அடிமை கொல்லப்படுகின்றான் மிச்ச அடிமைகள் பார்த்துக்கொண்டிருக்கின்றது. ஒரு மாட்டை கசாப்புக்கடையில் கொல்லும் போது மற்றமாடுகள் அதை தடுக்கின்றதா? புலியும் காரணம் அவனும் காரணம் இவனும் காரணம் என்று.. தமிழன் சிங்களவன். ஆரியன் ஆரியன் அல்லாதவன். பலமுள்ளவன் கொல்கின்றன் பலமில்லாதவன் சாகின்றனான் தப்பியோடியவன் பெருமூச்சு விடுகின்றான். அத்தோட நிறுத்து. இல்ல தூக்கில தொங்கி சாவு. இல்ல வன்னிக்கு போய் நெஞ்ச காட்டீட்டு நில்லு கொல்லுவான். இதவிட வேற தெரிவு இல்லை ஏனெனில் நீ தமிழன்.

1:13 AM, May 11, 2009
Anonymous said...

அன்பின் சசி:

உங்களது பதிவு எனக்கு உடன்பாடானதல்ல. உங்களது வலி, விரக்தி, இயலாமை, எல்லாம் புரிகிறது. நேற்றிரவு என்னால் தூங்க முடியவில்லை. ஒரு களத்தில் இருக்கும் ஈழத்தமிழனாக உங்கள் பதிவோடு என்னால் உடன்பட முடியும். ஆனால் அதைக்கணக்கில் கொண்டு செயலாற்றுபவனாகவே வெளியில் இருக்கிற ஒருவன் இருக்கவேண்டும் என்று நினைக்கிறேன். இப்படிச் சொல்வது மிகவும் கொடூரமாகவே எனக்கே தோன்றுகிறது. ஆனால் இப்படிச் செய்யாமல் இருப்பது மிகப்பெரிய தோல்வியை மட்டிலும் அல்ல, இதைத்தொடந்து இன்னும் இதுவரை பார்த்த பேரழிவுகளை விட பெரும் பேரழிவுகளை இலங்கை அரசு செய்ய வழிவகுக்கும். உலகத்தமிழர்கள் அனைவரிடமும் இந்தப்போராட்டம் சென்று சேர்ந்து அதுவே இப்போது நடக்கும் படுகொலைகளை கொஞ்சமேனும் கட்டுப்படுத்திக்கொண்டிருகிறது. முழுமையான சரணடைதல், கைவிடுதல் இதைச் சிதைத்து கட்டுப்பாடற்ற அழிவுக்கு அரசைத் தூண்டி, வதை முகாம்களில் சில வாரங்களிலிலேயே எண்ணிக்கையற்ற (வெளியிலும் வாராத) கொலைகளை செய்ய வழிவகுத்துவிடும். பின் இதைத் தடுக்கவே முடியாது; கருணாநிதியின் உண்ணாவிரதம் எப்படி ஒரு போலியான போர்நிறுத்தத்தையும் அதனடிப்படையில் ஈழத்தமிழர் எதையோ அடைந்துவிட்டதாக ஒரு தமிழர் தரப்பு (கருணாநிதி தரப்பு) நினைத்து தங்களையும் உலகையும் ஏமாற்ற நினைக்கிறதோ அப்படி (இப்படியான விட்டுக்கொடுப்புக்கு பின்) வதை முகாம்களில் நிகழும் பெரும் எண்ணிக்கையிலான கொலைகளை எதிர்த்து போராடக்கூட அமைப்பு ரீதியான செயல்பாடுகள் உலகெங்கும் (இன்று தமிழகத்தில் திமுக தலைமையிலான அமைப்பு இல்லாதது போன்று) இல்லாது மொத்தமாக ஈழமக்கள் வதைமுகாம்களில் வைத்து இலங்கை அரசிட்டம் கையளிக்கப்படுவார்கள்.

அது இந்தச் சாவுகளை நினைத்து அல்லலுறும் நமக்கு வேண்டுமானால் ஒரு பொய்யான நிம்மதியைக் கொண்டு வரலாம் (இன்று கருணாநிதிக்கு கொண்டு வந்தது போல) ஆனால் நிச்சயம் ஈழமக்களுக்கு அல்ல. நாமும் இன்றைய முக போல ஈழத்தில் படுகொலைகள் நிகழவில்லை, ஏனெனில் ஈழப்போராட்டம் கைவிடப்பட்டது என்று சொல்லிக்கொண்டு ஈழப்போராட்டத்தை யாராவது ஆதரித்துப் பேசினால் எதிர்த்து வாதிட்டுக்கொண்டிருக்கலாம்.

ஒன்றை நினைவுபடுத்த விரும்புகிறேன். ஈழப்போராட்டத்தினால் தமிழர்கள் கொல்லப்படுவதில்லை; மாறாக அவர்கள் தமிழர்களாக இருப்பதினாலேயே கொல்லப்பட்டார்கள்; கொல்லப்படுகிறார்கள்; கொல்லப்படுவார்கள்.

1:33 AM, May 11, 2009
லக்கிலுக் said...

போனமாசம் இதே கருத்தோடு நான் எழுதியபோது கருணாநிதி அடிவருடி, தமிழின துரோகி என்று வசைபாடப்பட்டேன். இந்த மாசம் நீங்கள்.

அதிருக்கட்டும். ஜெ.வுக்கான உங்கள் ஆதரவு நிலையானது தானே? :-)

1:44 AM, May 11, 2009
Anonymous said...

விடுதலைப்புலிகள் மக்களை பிடித்து வைக்கவில்லை.. காரணம் அவர்கள் வானத்தில் இருந்து வந்தவர்கள் இல்லை.. அவர்களுடை பெற்றோர்கள், உறவினர்கள் எல்லோரும் அவர்களுடந்தான் இருக்கிறார்கள்.. போராலி குடும்பத்தினர் அவர்களாக இருக்கலாம். அரச கட்டுப்பாட்டிற்குள் வந்த மக்களின் உண்மைக்கதி என்னவென்று உங்களுக்கு தெரியுமா? எத்தனை பெண்கள் பாலியல் சித்திரவதைக்கு உட்படுத்தபடுகின்றனர் தெரியுமா?, ஒவ்வொரு இரவிலும் எத்தனை ஆண்கள், பெண்கள் காணாமல் போகின்றனர் தெரியுமா? கிளிநொச்சியில் எத்தனை ஆண், பெண்கள் நிர்வானமாக்கபட்டு கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் உள்ளனர். வெளியான புகைப்படங்கள் பார்த்ததில்லையா? தயவு செய்து யதார்த்தத்தை புரிந்து கொள்ளுங்கள்..

1:59 AM, May 11, 2009
Unknown said...

//போனமாசம் இதே கருத்தோடு நான் எழுதியபோது கருணாநிதி அடிவருடி, தமிழின துரோகி என்று வசைபாடப்பட்டேன். இந்த மாசம் நீங்கள்.

அதிருக்கட்டும். ஜெ.வுக்கான உங்கள் ஆதரவு நிலையானது தானே? :-)//

உனக்கு ஜே, கருணாநிதி நக்கி தின்பதை விட்டால் வேறு எதுவும் தெரியாது.

ஈழத்தில் செத்து மடிபவனைப் பற்றி உனக்கு நமீதாவின் மறைக்கப்பட்ட அங்கங்கள் குறித்த கவலைகளைவிட பெரிதாகவெல்லாம் கவலை இருந்துவிடாது. ஏன் இந்த நடிப்பு?

முக்காலமும் உணர்ந்த முனிவன்

2:04 AM, May 11, 2009
Unknown said...

வணக்கம் சசி,

கடந்த முறை ஈழம் குறித்து(தேர்தல் பங்களிப்பு குறித்து) நீங்கள் எழுதியதைவிட இந்த கட்டுரை மிகத் தெளிவானதொரு அனுகுமுறையை கொண்டுள்ளது.

நேற்று கொல்லப்பட்ட ஆயிரம் தமிழ் பிணங்களின் மீது நின்று கொண்டுதான் இதனை நாம் எழுதுகிறோம் என்பதை நினைத்தால் உணவு இறங்க மறுக்கிறது.


//அதைத் தவிர ஒரு சாமானியனான என்னால் எதுவும் செய்து விட முடியாது. அது தான் இன்றைய சூழ்நிலையில் எனக்கும், பலருக்கும் உள்ள இயலாமை. //

இந்தியாவின் முகத்தில் ஒரு இந்திய குடிமகனாக நாம் காறி உமிழலாம். தேர்தல் புறக்கணிப்பை வீச்சாக கொண்டு செல்வதன் மூலம் இந்த கொலைகார ஜனநாயகத்தின் முகத்தில் செருப்பால் அடிக்கலாம்.


//புலிகள் நடத்தும் போர் என்பது இன்றைக்கு ஒரு தனி நாட்டை எதிர்த்து அல்ல. உலகமயமாக்கப்பட்ட சூழ்நிலையில், உலகின் முக்கிய கடல் பாதையில் இலங்கை தீவு இருக்கும் சூழ்நிலையில் புலிகள் மொத்த உலகையும் எதிர்த்தே போர் நடத்திக் கொண்டு இருக்கின்றனர். இந்த போரில் வெற்றி என்பது நிச்சயம் கிடைக்கப்போவதில்லை. மொத்த உலகையும் புலிகளால் எதிர்க்க முடியாது. அதனை தான் இன்று பார்த்துக் கொண்டிருக்கிறோம். தமிழ் ஈழம் என்பது முன் எப்பொழுதையும் விட இன்றைக்கு எட்டாத தூரத்தில் உள்ளது. 20002ல் அது கைக்கு எட்டும் தூரத்திலேயே இருந்தது. தனி நாடாக இல்லாமல் ஒரு கூட்டாட்சியாக கூட தொடர்ச்சியான அரசியல் வியூகத்தில் அதனை நோக்கி சென்றிருக்க முடியும். ஆனால் இன்றைக்கு அது சாத்தியம் இல்லை.//


இதனை நாம் பல காலமாக சொல்லி வருகிறோம். கிடைத்த எதிர்வினை மறைமுக பார்ப்பனியம் என்பதுதான்.


//
தமிழ் ஈழம் என்பது இன்றைக்கு சாத்தியம் இல்லை என்பதும், அப்படியான ஒன்றை பேசிக் கொண்டிருப்பது கூட எதிர்கால தமிழ் மக்களை தொடர்ச்சியான அவலத்திலேயே தள்ளும் என்பதுமே இன்றைய யதார்த்தம்.//


ஆயினும், ஈழத் தமிழர் சுயநிர்ணய உரிமை (தனி ஈழம் இதில் உண்டு) என்பது வரலாற்றின் தேவை. அது நடந்தே தீரும்.


//எந்த அதிகாரங்களும் இல்லாவிட்டால் கூட பரவாயில்லை. போர் முடிந்தால் போதும். மக்கள் தங்களின் அன்றாட வாழ்க்கையை குண்டுவீச்சுகள், செல் தாக்குதல் போன்றவை இல்லாமல் கழித்தாலே போதும் என்ற எண்ணமே எனக்கு இன்றைக்கு மேலோங்கியுள்ளது.//

உண்மை இதுதான் இன்றைக்கு பலரின் மனோநிலை. ஒரு வீரம் செறிந்த போராட்டம் சரியான அரசியல் தலைமையின்றி சிதைந்த அவலத்திற்கே நாமே வரலாற்றில் எடுத்துக்காட்டாக இருக்கிறோம் என்பது நெஞ்சை கணக்கச் செய்கிறது. ஆனால் இந்த அவலம் பெரு நெருப்பாக சிங்கள இனவெறியையும் அதனுடன் துணை நிற்கும் உலக, இந்திய மேலாதிக்க சக்திகளையும் சுட்டெரிக்கும்

மு உ மு

2:09 AM, May 11, 2009
லக்கிலுக் said...

முக்காலமும் உணர்ந்த முனிவா!

ஈழத்தமிழர் அவலநிலை குறித்து சோறு, தண்ணி இறங்காமல் இங்கு வந்து பின்னூட்டம் போடுவது மகிழ்ச்சி :-)

எதையாவது நக்கித்தின்னுவதையே பொழைப்பாகக் கொண்ட உன்னைப் போன்ற நாய்கள் இங்கே முகத்தை மறைத்துக் கொண்டு தான் பின்னூட்டம் கூட போடமுடிகிறது என்பதில் இருந்தே உன் அக்கறையும், ஆர்வமும் புரிகிறது.

உனக்கு இன்று நக்குவதற்கு வேறு எதுவும் கிடைக்கவில்லையா?

2:14 AM, May 11, 2009
லக்கிலுக் said...

மன்னிக்கவும் சசி!

தனிநபர் தாக்குதல் செய்ததற்கு மன்னிக்கவும். அந்த நக்கித்தின்னும் நாயின் பின்னூட்டத்தை நீங்கள் நாகரிகமாக வெளியிட்டிருப்பதாலேயே நாகரிகமான மறுமொழியை இங்கே கொடுக்க வேண்டியதாகி விட்டது.

2:14 AM, May 11, 2009
தமிழரங்கம் said...

வணக்கம்

உங்கள் இன்றைய நிலை என்பது, மனித அவலத்தின் பாலனது. அறிவின் பாலனதல்ல. இது எதிரி ஆதாரிக்கும் நிலைக்க சென்றுவிடும் அபயத்ததை இந்த இடத்தில் சுட்டிக் காட்ட வேண்டியுள்ளது. புலிகள் நடத்தியது மக்கள் போராட்டமல்ல. அதனால் அது தோற்கின்றது. எதிரி யார்? நன்பன் யார்? என்பதை நிராகரித்தல் தோற்கின்றது.

புலிகள் உருவாக்கிய மனித அவலங்கள் நீண்ட வரலாறு உண்டு. இன்று அது அம்மனமாக ஊர் உலகம் தெரிய, யாரும் நியாயப்படுத்த முடியாது உள்ளது. இது உங்கள் பிரதிபலிப்பு.

ஆயுதப்போராட்டமா அல்லத அகிம்சையா என்பது மக்கள் தான் தேர்ந்தெடுக்க முடியும். ஆளும் வாக்கங்கள் இந்த இடத்தில் உளறுவது, அவர்கள் நலன்தான்.

நீங்கள் எம் மக்கள் வரலாற்றை கற்று, மக்களுக்காக போராட வேண்டும்.

2:18 AM, May 11, 2009
தமிழ் சசி | Tamil SASI said...

prognostic, லக்கி,

தயவு செய்து தனி மனித தாக்குதல்களை தவிர்த்து விடுங்கள். கருத்துக்களை கருத்துகளால் போதுவோம். தனி மனித தாக்குதல் வேண்டாம்.

உங்கள் இருவர் எழுத்தின் மீதும் எனக்கு மரியாதை உள்ளது. என்னுடைய வேண்டுகோளை ஏற்பீர்கள் என நம்புகிறேன்.

நன்றி...

2:26 AM, May 11, 2009
Unknown said...

//தயவு செய்து தனி மனித தாக்குதல்களை தவிர்த்து விடுங்கள். கருத்துக்களை கருத்துகளால் போதுவோம். தனி மனித தாக்குதல் வேண்டாம்.
//

உங்களது கருத்துக்களை மதிக்கிறேன் நண்பரே,

எனது நோக்கம் லக்கிலுக்கை அம்பலப்படுத்துவது மட்டுமே அது நடந்து விட்டது என்றே கருதுகிறேன்.


எனவே எதிர்வினைகள் எதுவும் செய்யப் போவதில்லை. ஒருவேளை அரசியல் ரீதியாக ஏதேனும் அவரிடமிருந்து உருப்படியான வாதங்கள் வந்தால் ஒழிய.

மு உ மு

2:29 AM, May 11, 2009
லக்கிலுக் said...

பிட்நோட்டிஸ் கொடுத்து என்னை அம்பலப்படுத்திய முனிவருக்கு நன்றி. அப்படியே என் வீடு இருக்கும் தெருவிலும் பிட்நோட்டிஸ்களை வழங்கினால் முற்றிலும் அம்மணமாகி அம்பலமாவேன் என்ற யுக்தியும் தோழருக்கு தெரியும்.

இதுபோல நம் தோழர்களால் அம்பலப்படுத்தப்பட்டு நிர்வாணமாக்கப்பட்டவர்கள் பட்டியலில் என் பெயரும் இணைந்தது மகிழ்ச்சி :-)

2:36 AM, May 11, 2009
Osai Chella said...

நானும் கூட இதே ரீதியில் சிந்தித்துவருகிறேன்! ஆனாலும் எழுத இன்னும் மனம் வரவில்லை! நாளை முயற்சிக்கிறேன். மற்றபடி சில இடங்களில் வேறுபட்டாலும் மனதளவில் உங்களின் வலி எப்படியிருக்கும் என்று புரிகிறது! ஒன்று மட்டும் உண்மை நண்பா.. இந்தப்போர் தொடரப்போகிற ஒன்று! அதே சமயம் சாமானிய மக்களை பொறுப்பின்றி வதம் செய்யும் கொடுமைக்காரர்கள் அமெரிக்காவிலும், இலங்கையிலும் இந்தியாவிலும் ஆட்சியில் இருக்கும் வரை பயங்கரவாதம் விதைக்கப்படுகிறது!

2:52 AM, May 11, 2009
ராஜ நடராஜன் said...

புலிகள் ராணுவ ரீதியாகவும்,மக்கள் பல அவலங்களைச் சந்தித்து தோல்வியின் விளிம்பில் நின்று கொண்டிருக்கும் இந்த தருணத்தில் ஈழம் என்ற கனவு தமிழகத்திலும்,புலம் பெயர் மக்கள் மத்தியிலும் அரசியல் ரீதியாகப் புது தடங்களை துவக்கி வைத்திருக்கிறது.இந்த மாறுதல்கள் இன்னும் கொஞ்சம் காலம் குரல்கள் எழுப்பி பதிவு மாதிரி விரக்தியினால் ஓய்ந்து போகிறதா அல்லது இன்னும் புதிய பரிணாமங்களை உருவாக்குகிறதா என்பது பொறுத்திருந்து பார்க்க வேண்டிய ஒன்று.

தற்போதைய நிலையில் குழந்தைகள்,பெண்கள்,வயதானவர்கள் என்று பாகுபாடு இல்லாமல் மக்கள் அவலங்களின் மரணங்களை தடுத்து நிறுத்த வழிகள் தேடுவதே முதன்மையான விசயம்.

இந்தியக் கட்சிகள் இலங்கை குறித்தும் தமிழ் மக்கள் குறித்தும் ஆளுக்கு ஒரு அறிக்கை விடுகிறார்கள்.அரசியல் ரீதியாக அவர்களின் எதிர்காலம் எப்படி அமையவேண்டும் என்பதை வருங்காலத்தில் தீர்மானிக்க வேண்டியது மக்களே.அதற்கு உறுதுணையாக இருக்கவேண்டியது மட்டுமே பன்னாட்டு அரசுகள் முக்கியமாக இந்தியாவின் எதிர்காலக் கடமை.

3:06 AM, May 11, 2009
Anonymous said...

வந்துட்டாரு இராயகரன்..

பிரபாகரனும் இந்த போராட்டத்தை கைவிட்டு.. இராயகரனைப்போல ஒரு வலைப்பதிவை ஈழஅரங்கம் அல்லது அரங்க ஈழம் என்ற பெயரில் அமைத்து அதில் ஈழப்போரை தொடர்ந்து செய்ய வேண்டும்.

3:41 AM, May 11, 2009
thiru said...

சசி,
மக்கள் மீதான கரிசனை மற்றும் கவலையின் உங்களது மன உணர்வுகளை வெளிப்படையாக பதிவில் சொல்லியிருக்கிறீர்கள். அந்த உணர்வுகளில் நானும் பங்கு கொள்கிறேன்.

சில சிந்தனைகள்.

//இன்றைய சூழ்நிலையில் புலிகள் நடந்து கொண்ட விதம் தான் புலிகளை நோக்கி குற்றச்சாட்டுகளை முன்வைக்க காரணமாக உள்ளது. இன்றைக்கு மக்கள் சிங்கள இராணுவத்திடம் மட்டும் அல்ல. புலிகள் கைகளாலும் தான் இறந்து கொண்டிருக்கின்றனர். கொத்து கொத்தாக மக்கள் சாவதற்கு புலிகளும் பொறுப்பு ஏற்க வேண்டும்.//

வன்னியில் சிறீலங்கா அரசு செய்துள்ள இனப்படுகொலை கண்டனத்துக்குரியது. புலிகள் செய்துள்ள குற்றங்களும் கண்டிக்கப்பட வேண்டியவை. அவற்றில் மாறுபாடில்லை.


ஈழத்தின் இன்றைய நிலைக்கு புலிகளுக்கு மட்டுமல்ல, தமிழ் சமூகத்துக்கு பெரும் பங்குண்டு. குறிப்பாக புலம்பெயர் தமிழர்கள் மற்றும் தமிழக ஆதரவாளர்கள். ஈழ விடுதலைப் போராட்டத்தில் புலிகள் ஆற்றியிருக்கும் பங்கு வலியது.
புலிகளை கதாநாயக மனநிலையில் வைத்துப் பார்த்து கொண்டாடிய தமிழர்கள், எதார்த்த நிலைகளை கருத்தில் கொள்ளவில்லை. பிரபாகரனை தமிழ் சினிமா ரசிகனின் கதாநாயக வழிபாட்டு நிலையிலிருந்து கொண்டாடினார்கள். பிரபாகரன் படத்தை வீட்டிலும், வீதியிலும், சட்டைப் பையிலும் வைத்திருந்தால் விடுதலை கிடைத்து விடுமென்ற அரசியல் அப்பாவித்தனம். பொங்குதமிழ் நிகழ்வுகளும், மாவீரர் தின நிகழ்வுகளும், ‘கிருஷ்ண ஜெயந்தி’, ‘விநாயக சதூர்த்தி’ கொண்டாட்டங்களும் நடத்தி கலைந்து போனார்கள் புலம்பெயர் தமிழர்கள். அரசியல் ரீதியாக மேற்குலகில் தொடர்புகளை ஏற்படுத்தவும், அழுத்தங்களை உருவாக்கவும் சில மாதங்களுக்கு முன்பு வரையில் தமிழர்கள் புலம்பெயர் நாடுகளில் எதையும் குறிப்பிடும் படி செய்தார்களா? இன்று வன்னியில் உயிர்கள் உட்பட பலவிதமான இழப்புகளை சந்தித்ததால் உணர்வு ரீதியாக வீதிகளில் போராடுகிற தமிழர்கள் ஓராண்டுக்கு முன்னால், தங்கள் சமூகத்தைச் சார்ந்த திஸ்ஸநாயகம், ஜசீதரன், ஜசீதரன் மனைவி ஆகியோர் எந்த குற்றச்சாட்டுமில்லாமல் கைது செய்யப்பட்ட போது எதிர்ப்பை பதிவு செய்யவில்லை. பொருளுதவிகளை செய்து, தாக்குதலில் வெற்றியடைந்தால் youtubeல் பலவித பின்னணி பாட்டுகளுடன் வலையேற்றி ஆயுதரீதியான வெற்றிகளை கொண்டாடியவர்களாக இருந்தனர் தமிழர்கள். அப்போது சிறீலங்கா அரசின் அடக்குமுறைகளில் தவித்த மக்கள் பற்றிய செய்திகளை ஊடகங்களிலும், ஆவணங்களிலும் பதிவு செய்ய தவறினார்கள். வாகரையில் தாக்குதல் நடந்த போது பட்டினிக்குள்ளான மக்களுக்கு உணவும், மருந்தும் கொடுக்க தமிழர்கள் ஒட்டுமொத்தமாக குரலெழுப்பவில்லை. காரணம், புலிகள் தங்களுக்கு விடுதலையை ‘வாங்கித் தருவார்கள்’ என்ற மனோபாவம். புலிகளை விடுதலைக்கான ‘ஏஜென்சியாக’ பார்த்து தாங்கள் ஆற்ற வேண்டிய வேலையை செய்யவில்லை. இன்றைய தமிழர்கள் (ஈழத்தமிழர்கள் மட்டுமல்ல, தமிழக தமிழர்களும்) மனித உரிமைகள் மீது அக்கறையற்றவர்கள். சுயநயலம் பிடித்தவர்கள்.
தங்களுக்கும், தங்கள் இனத்துக்கும், தங்களது சொந்தங்களுக்கும் பாதிப்பு வரும் போது மட்டும் குரலெழுப்பும் போக்கு மனித நாகரீகத்துக்கு உகந்ததல்ல. மனித உரிமைகளுக்கு எதிரானவற்றை, புலிகள் உட்பட யார் செய்தாலும் கண்டிக்கும் போக்கு தமிழர்களிடம் இருந்தால் விடுதலைக் களம் வேறு நிலையில் இருந்திருக்கும்.

தமிழகத்தில் ‘உணர்ச்சிகரமான’ முழக்கங்களுடன் பேசுகிற அனைத்து ‘அண்ணன்களும்’ அரசியல் ரீதியாக தமிழ் மக்களின் கண்களை கட்டி வைத்திருக்கிறார்கள். ‘பிரபாகரனை பார்த்தேன், அருகிலிருந்து உணவு சாப்பிட்டேன், கட்டிப்பிடித்தேன்’ ’15 லட்சம் பேர் போக தயாராக இருக்கிறோம்’ போன்ற பேச்சுக்கள் தமிழக மக்களுக்கு ஈழம் பற்றிய எந்த அரசியல் புரிதலையும் உருவாக்கப் போவதில்லை. பிரபாகரனும், புலிகளும் அசாதாரண வீரர்களாக இருப்பதால் மட்டுமே ஈழம் உருவாகிவிடாது.

//மக்கள் தான் முக்கியம். இயக்கங்கள், தேசியங்கள், நாடு, இனம், மொழி என்பதெல்லாம் அதற்கு பிறகு தான்...//
முற்றிலும் உடன்படுகிறேன்.

//ஈழம் வேண்டுமா, வேண்டாமா என்பதை ஈழத்தமிழர்கள் தான் முடிவெடுக்க வேண்டும். ஆனால் புலம் பெயர்ந்த ஈழத்தமிழர்கள் அல்ல. ஈழத்திலே போர் சூழ்நிலையை எதிர்கொண்டிருக்கிற ஈழத்தமிழர்கள் முடிவு செய்ய வேண்டும்.//
உடன்படுகிறேன்.
--

சிலர் ராஜீவ் காந்தியின் படுகொலையால் ஈழம் உருவாகாமல் போனதாக எழுதுகிறார்கள். ராஜீவ் காந்தியின் படுகொலை நிகழாமல் இருந்தாலும் ஈழம் உருவாக இந்தியா உதவியிருக்காது. தெற்காசிய பிராந்தியத்தில் தேசிய இனங்களின் போராட்டங்களுக்கு இந்தியா எப்போதும் தடையாகவே இருக்கும். இந்திரா காந்தி அம்மையாருக்கும் ஈழத்தை உருவாக்கும் நோக்கம் இருக்கவில்லை. போராளி இயக்கங்களை தனது அரசியல் நகர்வுகளுக்காக ஆதரித்து வளர்த்தார். இந்திய தேசியத்தை விரும்பும் யார் இந்தியப் பேரரசின் ஆட்சியில் இருந்தாலும் ஈழம் பெற உதவமாட்டார்கள். தடைகளை ஏற்படுத்துவார்கள். ‘ஈழத்தாய்’ ஜெயலலிதாவுக்கும் அது பொருந்தும்.
போரில் கொல்லப்படுவதும், அழிவுகளை சந்திப்பதும், போராடுவதும் ஈழத்திற்குள் இருக்கிற மக்கள். ஆனால் எப்போதும் அரசியல் போராட்டத்திற்கான களங்கள் ஈழத்திற்கு வெளியே இருக்கின்றது. சிறீலங்கா அரசு அந்த களங்களை தனக்கு சாதகமாக நீண்ட காலமாக பயன்படுத்தி வருகிறது. புலிகள் மீதான தடையா? பேச்சுவார்த்தைக்கு போவதா? போரா? இவை அனைத்தையும் முடிவு செய்யும் அரசியல் களம் ஈழத்திற்கு வெளியில் இருக்கிறது.
புலம்பெயர் தமிழர்கள் இன்று நடத்துகிற ஒன்றுகூடல்களும், எழுச்சிகளும் வேறு வடிவங்களில் நீண்ட அரசியல் போராட்டமாக மாற்றம் பெறுமா என்பதை இப்போதைக்கு சொல்வது கடினம்.

ராஜபக்சே வெறும் பொம்மை. ஆட்டுவிப்பவர்கள் புதுடில்லியில் இருக்கிறார்கள். ஆட்டுவிக்கும் இடத்தில் வேறு உருவம் வரலாம். பொம்மை நாற்காலியிலிருந்து ராஜபக்சேவை சாய்த்து ரணில் விக்கிரமசிங்கே பொம்மையை கொண்டு வரலாம். ஆனாலும் ஆட்டம் மாறாது. உலகமயமாக்கல் பொருளாதாரத்தின் சந்தை மற்றும் அணுசக்தி ஒப்பந்தம் மற்றும் தெற்காசியாவின் மேற்குலகின் நம்பகமான நண்பன் என்பவை இந்தியாவுக்கு உலக அரங்கில் பலமான இடத்தை கொடுத்திருக்கிறது. இன்றைய நிலையில் தெற்காசியாவில் இந்தியாவுக்கு பிடிக்காத நடவடிக்கைகளில் எளிதாக மேற்குலகம் ஈடுபடாது.

5:11 AM, May 11, 2009
Anonymous said...

This is what the sinhalese and ...etc wanted.

They want us to not even think about our right to live independently.

They are telling us 'if you want to live just spend your life as a slave, dont ask anything more, dont resist us , we will do what ever we want in your land, if you resist you will be killed.

They wanted us to teach a lesson.
May be you are the first who felldown in their feet.


Tigers seems to follow the recent Gaza war model. But the world is not trying to make any effective pressure on SL. We are less valuable than palastenians to the world.


Still no one going to save the last remaining people, they have two choice 1.perish by the bombs and shells
2. Die in the hands of SL army

5:57 AM, May 11, 2009
vanathy said...

உங்கள் மனிதாபிமான உணர்வை மதிக்கும் அதே சமயம் ,ஈழத்தமிழரின் நீதியான போராட்டம் தோற்று விட்டது ,இனிமேல் ஒன்றுமே வேண்டாம் என்பது சிங்கள இனவெறிக்கு சரணாகதி ஆவது மாதிரித்தானே.
ஆம் ,ராணுவ ரீதியான போராட்டம் ஒரு முடிவு நிலைக்கு வந்து விட்டது என்பது உண்மையே.
இனி போராட்டம் வேறுவிதமான பரிணாமத்தை எடுக்க வேண்டும். அது ராஜதந்திர ,அரசியல் ரீதியான போராட்டமாக மாறவேண்டும்.நீங்கள் சொல்வது மாதிரி புலம்பெயர் தமிழர்கள் அதிலிருந்து விடுபட்டு இருக்க வேண்டும் என்பதையும் என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.
அவர்களுக்கு அங்கு இன்னும் வேர்கள் இருக்கின்றன.,அத்துடன் பலர் அங்கு சிங்கள இனவெறியின் கோரத்தை அனுபவித்தவர்கள்.
அவர்களின் ஈடுபாடு வெறும் கோட்பாடுகள் ,சித்தாதந்தங்கள் மூலமாகவோ வெகு தூரத்தில் இருந்தோ ஏற்படவில்லை சொந்த அனுவவத்தின் மூலம் உண்டானவை.
இன்னொரு விஷயம்,
சமாதான ஒப்பந்தம் உருவானபோது ,கூட்டாட்சி முறையிலான தீர்வு பரிசீலிக்கப்படு மென்று கூறிய பொழுது ,அதற்குக் கூட சிங்கள கட்சிகளிடம் இருந்து எதிர்ப்பு வந்தது.அதைக் கூட தமிழர்களுக்கு ஒரு தீர்வாகக் கொடுக்க சிங்களவர்கள் எதிர்ப்புக் காட்டினார்கள்.
பலருக்கு குறிப்பாக ஈழத்தமிழரல்லாத மற்றையோருக்கு சிங்கள இன வெறி என்ற சிந்தனையின் அதீத தன்மை அனுபவித்தால் ஒழிய விளங்காது.

கிளிநொச்சியில் ஏற்கனவே புத்தர் கோவில் ஒன்றைக் கட்டி விட்டார்கள் ,அத்துடன் அது சிங்களவரின் நிலம் என்றும் சொல்லத் தொடங்கி விட்டர்ர்கள்..
ஜனநாயகம் என்பது இலங்கையில் ,பெரும்பான்மையினரின் சர்வாதிகாரம்தான்
74% சதவீதம் இருக்கும் சிங்களவர் எப்பொழுதுமே தமது ஆதிக்கத்தை ஜனநாயகம் என்ற பேரில் கையில் வைத்திருப்பார்கள் .அங்கு தமிழர்களுக்கு சம உரிமையோ நியாயமோ கிடைக்கும் என்பது நடக்காது.
கருணா ,டக்லஸ் மாதிரி இலங்கை அரசு தமிழருக்கு செய்யும் அநியாயத்திற்கு துணை போனால் ,சாப்பாடு கிடைக்கும் ,ஆனால் உயிர் வாழ்வதும் சாவதும் ,சிங்கள அரசின் கைகளில் தான் இருக்கும்.அவர்களின் மேலாதிக்கத்தை ஏற்றுக்கொண்டு அவர்களுக்கு அடிமை சாசனம் எழுதிக் கொடுத்தால் உயிர் வழ விடக்கூடும் ,இப்போதே கொழும்பில் தமிழர்கள் வெளியில் தமிழ் பேசுவதை தவிர்க்கிறார்கள் ,தமிழ் பெண்கள் நெற்றியில் பொட்டு வைப்பதைத் தவிர்க்கிறார்கள் ,சிங்களப் பெண்கள் மாதிரி வெளியில் காட்டிக் கொள்கிறார்கள்.

இன்று புலிகளின் கட்டுப்பாட்டுக்கு வெளியில் வருபவர்களுக்கு என்ன நடக்கிறது என்பது உங்களுக்கு தெரியும்தானே.
சிறுவர்கள் ,இளைஞர்கள் ,இளம்பெண்கள் வேறேயாகப் பிரிக்கப் பட்டு கொல்லப் படுகிறார்கள் ,சித்திரவதை செய்யப் படுகிறார்கள் . அத்துடன் தடுப்பு முகாம்களில் இருக்கும் மக்களுக்கு சரியாக உணவு கூடக் கொடுப்பத்தில்லை.
,இலங்கை அரசை நம்பி வெளியில் வந்தால் இதுதான் நடக்கிறது.

புலிகள் தவறு செய்யவில்லை என்று நான் சொல்லவில்லை வரலாற்றுப்பாதையில் தவறு செய்துதான் இருக்கிறார்கள் அவர்கள்மீது எனக்கு விமர்சனம் உண்டு.
ஆனால் அவர்கள் ஈழதமிழ் மக்களின் அபிலாட்சைக்காக போராடினார்கள் ,பல உயிர்த் தியாகங்களை செய்தார்கள் மற்றவர்கள் போல் பதவி ,பணம் என்று சோரம் போகாமல் உறுதியுடன் போராடினார்கள் என்ற விதத்தில் ஈழத்தமிழரின் ஆதரவு அவர்களுக்கு பலமாக இருந்தது.

அவர்களுடைய இன்றைய நிலைக்கும் ஈழத்தமிழரின் இன்றைய நிலைக்கும் பல காரணங்கள் உள்ளன தனியே புலிகளை மட்டும் விமர்சனம் செய்ய முடியாது.அப்படி செய்வதும் தவறு
மிகப் பெரிய காரணம் ,சிங்கள இனத்தில் வேர் கொண்டிருக்கும் அசைக்க முடியாத மகாவம்ச மனப்பான்மை இலங்கைத்தீவு முழுவதும் சிங்களவருக்கே சொந்தம் ,மற்ற இனத்தினர் ,தாங்கள் செய்வதை ஏற்றுக்கொண்டு தங்கள் கீழ் வாழ வேண்டும் என்ற இந்த மனப்பான்மை பத்தொன்பதாம் நூற்றாண்டில் விதைக்கப் பட்டு ,சுதந்திரத்தின் பின்பு பிரிட்டிஷ் அரசு ஜனநாயக சர்வதிகார ஆட்சியை அவர்களுக்கு சுலபமாக கத்தியின்றி ரத்தமின்றி சுதந்தரம் என்ற பேரில் கொடுக்கப் பட்ட போது தொடர்ந்து சிங்கள அரசுகளால் தண்ணீர் ஊற்றப் பட்டு இன்று ராணுவ வெற்றி என்ற போதையால் பெரிய விருட்சமாக வளர்ந்துள்ளது. பெரிய நாடுகளின் தலையீடு வராவிட்டால் இனிமேல் சிங்களவர் இல்லாதோர் எல்லாம் இனிமேல் இந்த விருட்சத்துக்கு முன்னால் புல் பூடுகள் களைகள் மாதிரித்தான் நடத்தப் படுவார்கள்.
சமாதான காலத்தில் மற்ற நாடுகள் செய்த நேர்மையில்லாத அணுகுமுறை
போரில் ஈடுபட்டு சமாதான ஒப்பந்தம் செய்த இரு பகுதிகளையும் சமமாக நடத்தினால்தான் உண்மையான நிரந்தரமான தீர்ப்ப்பைக் கொண்டுவரலாம்
ஆனால் இந்த இணைத்தலைமை நாடுகள் சமாதானம் பேசிக் கொண்டே தமிழர் பிரதிநிதிகளாகச் செயல் பட்ட புலிகளை பலமிழக்கச் செய்யவும் ஒழித்துக் கட்டவும் திரை மறைவில் காரியங்களில் ஈடுபட்டனர்.பல நாடுகளுடன் அந்தக் காலத்தில் இலங்கை அரசு பாதுகாப்புக்கு ஒப்பந்தம் போட்டுக் கொண்டார்கள்
இதனை அன்றைய பிரதமர் ரணில் விக்கிரம சிங்கவே சொல்லியுள்ளார் .
மேற்கு நாடுகள் புலிகளைப் பலவீனப் படுத்த நடவடிக்கை எடுத்தனர்
மூன்று நாடுகளில் மட்டுமே தடை செய்யப் பட்டிருந்த புலிகள் இயக்கத்தை கனடா ,ஐரோப்பிய ஒன்றியம் என்பன 2002 தான் தடை செய்தன அதுவும் சமாதான ஒப்பந்தம் அமுலில் இருந்த காலத்தில் ,இது இலங்கை அரசின் திமிரை அதிகரிப்பதுக்கு உதவியாக இருந்ததுடன் தமிழரைப் பலவீனப் படுத்தியது.
மேற்கு நாடுகள் பலவீனப் படுத்த நினைத்தன ,ஆனால் இந்தியா அதற்கு மேலே போய் புலிகளை ஒழிப்பதற்கு இலங்கைக்கு எல்லாவிதமான உதவிகளையும் முதலில் திரை மறைவிலும் பிறகு நேரடியாகவும் செய்யத் தொடங்கியது.
இந்த எல்லா நாடுகளுக்கும் தமிழரின் இன்றைய அவல நிலையில் பெரும் பங்கு உண்டு.
இன்னொரு காரணம் ஈழத்தமிழர் ,புலம் பெயர் தமிழர் உட்பட உலகத் தமிழரான நாங்கள் செய்த தவறுகள்
சமாதான காலத்தில் ஈழத்தமிழரின் நியாயமான கோரிக்கைக்களை அரசியல் ராஜதந்திர ரீதியில் மற்றைய மக்களுக்கும் நாடுகளுக்கும் உலக ஊடகங்களுக்கும் எடுத்துச் செல்ல நாங்கள் தவறி விட்டோம்.
விடுதலைப் போராட்டம் என்பது பல களங்களில் நடத்தப் படுவது ஆயுதப் போராட்டம் என்பது அதன் ஒரு பகுதியே.
ஆனால் நாங்கள் அந்தப் பொறுப்பை விடுதலைப் புலிகளிடம் மட்டும் விட்டுவிட்டு அசமந்தமாக இருந்து விட்டோம்.
ராணுவ வெற்றி மட்டும் விடுதலையைத் தந்து விடும் என்று நினைத்திருந்து அங்கே மக்களும் போராளிகளும் உயிர்களை இழந்து கொண்டிருக்க நாங்கள் இங்கே கிரிக்கெட் மேட்ச் பார்க்கும் பார்வையாளர்கள் மாதிரி இருந்து விட்டோம்.
அந்த இடை வெளியில் சிங்கள அரசு எத்தனையோ காரியங்களை செய்து விட்டது.
புலிகளை தடை செய்ததால் வெற்றி ,
இருபது வருடங்கள் போராளியாக இருந்த கருணாவை சமாதானம் பேச வந்த காலத்தில் பெண் ,பொன் ,பணம் ,பதவி ஆசை காட்டி புலிகளில் இருந்து பிரித்தது இன்னொரு வெற்றி
பயங்காரவாதத்துக்கு எதிரான போர் என்ற புஷ் சொன்ன சொல் தொடரை தங்களது இன அழிப்பு போருக்கு பயன்படுத்தி மற்ற நாடுகளிடம் இருந்து ராணுவ ,பொருளாதார ,ஆயுத ,ராஜதந்திர உதவிகளைப் பெற்றது இன்னொரு வெற்றி.
உலக ஊடகங்கள் ,மனித நேய அமைப்புக்களின் காட்டமான எதிர்ப்பு இலங்கைக்கு இல்லாததும் இன்னொரு காரணம் கொழும்பில் ஒரு குண்டு வெடித்து பதினைந்து பேர் இறந்தால் அது பிபிசியில் தலைப்பு செய்தியாக வரும் ,ஆனால் இலங்கை அரசு குண்டு பொட்டு ஒரே நாளில் எண்ணூறு பேரைக் கொன்றாலும் அதை ஒரு செய்தியாக உலக ஊடகங்களில் காட்டச் செய்வதற்கு தமிழர்கள் எவ்வளவோ போராட வேண்டி உள்ளது
ஐநா சபை என்ற அமைப்பின் கையாலாகத்தனம் ,உண்மையான உலக அமைப்பாக இருக்காமல் ஒரு சில பலம் வாய்ந்த நாடுகளின் நன்மைக்காகவே இந்த அமைப்பு செயல் படுவது இன்னொரு காரணம்
எங்கே போனது இதன்

கடைசியாக நான் சொல்வது ,இன்றைய உலக ஒழுங்கில் எமது போராட்டத்தின் பாதை வேறுவிதமாகத் செயல் பட வேண்டும் என்பதை ஒத்துக் கொள்கிறேன் ,ஆயுத ரீதியான வன்முறைப் போராட்டம் இனிமேல் வேண்டாம் ,ஆனால் ஈழ தமிழர் தமது போராட்டத்தையே கை விட வேண்டும் என்பதை நான் ஒப்புக்கொள்ளவில்லை.

இவ்வளவு காலமும் ஈழத்தமிழரின் போராட்டத்துக்கு தார்மீக ஆதரவு கொடுத்த நீங்கள் இப்படி சொல்கிறீர்களே என்று வருத்தமாக உள்ளது வெற்றிகள் வரும்போது பக்கத்தில் பலர் தேவை இல்லை
ஆனால் அவலங்கள் வரும்போதுதான் ஆதரவு தேவை.

இன்றைய உலக ஒழுங்கில் பண வலிமை ,ராணுவ வலிமை ,சுயநலம் மிக்க மனித நேயமற்ற பூகோள அரசியல் பொருளாதார நோக்கோடு செயல்படும் உலக நாடுகள்தான் நிதர்சனமா ?

மனிதாபிமானம் .பொதுநல நோக்கு ,நீதி ,நியாயம் சம உரிமை என்ற ஒன்றுக்குமே இடம் இல்லையா
அப்படி என்றால் எதற்கு மனித உரிமை அமைப்புக்கள் ,ஐநா எல்லாம் . எதற்காக சமத்துவம் பேசும் இடதுசாரி அமைப்புக்கள்.
கம்யூனிசம் பேசிக் கொண்டே சீனாவும் ருஷ்யாவும் செய்கிற அநியாயம் பெரியது .
அதே போல் மனித உரிமை ,ஜனநாயகம் ,ஊடக சுதந்திரம் கருத்து சுதந்திரம் என்று வாய் கிழியக் கத்திக் கொண்டே இலங்கை அரசு செய்யும் அட்டூழியங்களுக்கு மவுன சாட்சிகளாக மேற்கு நாடுகள் உள்ளன.

மிக நீளமான பின்னோட்டத்திற்கு மன்னிக்கவும்.
மனத்தில் தோன்றியதை எழுதினேன்.
இனிமேல் எழுதவதைக் குறைக்க இருப்பதால் இது கடைசியாக எனது மன எண்ணங்களைக் கூறும் கருத்துக்கள்.

--வானதி

7:12 AM, May 11, 2009
சவுக்கடி said...

உணர்வுப் பெருக்கில் பதற்றத்தில் எழுதியிருப்பதாகவே எண்ணுகிறேன்.

இவ்வளவிற்கும் பிறகு சிங்களருடன் அமைதியான வாழ்க்கை இயலக் கூடியதா?

இன்னொன்று, விடுதலைப் போராட்ட வரலாறுகளில் பலநாடுகளும் கடும் ஈகத்திற்குப் பின்னரே வெற்றி யீட்டியிருக்கிறார்கள்.

உங்களின் தடுமாற்றம் பகைவர்க்கும் எதிரிகளுக்கும் ஊக்கம் அளிப்பதாக அமைந்துவிடக் கூடாது.

7:42 AM, May 11, 2009
K.R.அதியமான் said...

Good post and very relevant and valid points.

and :

some important links related to Eelam issue :

Sri Lankan crisis: how India can help find a way out
http://www.hindu.com/2009/04/27/stories/2009042755500900.htm

Lost opportunities for the Tamils
http://www.dailymirror.lk/DM_BLOG/Sections/frmNewsDetailView.aspx?ARTID=39363

http://www.youtube.com/watch?v=-yWUA-_xjzk
NO FIRE ZONE VIEDEO : (SL AIRFORCE DRONE CLPG)
Srilankan Civilians held hostage by LTTE

8:08 AM, May 11, 2009
வடக்குப்பட்டி ராம்சாமி said...

சரி சரி! இப்படி ஆளாளுக்கு பேசிக்கிட்டே இருந்தா எப்படி? அடுத்து ஆக வேண்டியது என்னன்னு பாருங்கப்பா!

8:11 AM, May 11, 2009
அன்பரசு said...

ராஜிவ் காந்தி வைத்த திட்டத்தை இந்தியாவின் உதவியுடன் மீண்டும் இலங்கை அரசிடம் கொண்டு செல்வதே இப்போதைக்கு சாத்தியமான வழியாகத் தெரிகிறது

8:16 AM, May 11, 2009
Anonymous said...

மிகவும் குழம்பி இருக்கிறீர்கள். பல
நம்பிக்கைகளை நீங்கள் மறு ஆய்வு செய்து கொள்ளும் நேரம் இது. எழுதுவதை விட நண்பர்களுடன்
உரையாடுங்கள்.நிதானமாக யோசியுங்கள்.பின்னர் தெளிவு கிடைக்கும்.அப்புறம் எழுதுங்கள்.
மே 16க்குப் பின் என்ன நடக்கிறது என்று பார்ப்போம்.

8:56 AM, May 11, 2009
Anonymous said...

At last,someone is talking about China and it's arms supply to Srilanka! Ask Comrade Thaa Paandian and company for some explanation on this matter?

8:57 AM, May 11, 2009
Anonymous said...

ஆர்மி ஏரியாவுக்கு வந்திட்டு புலிகளப் பத்தி புகழ் பாடிட்டா இருக்க முடியும். அவர்கள் நிர்பந்தங்களுக்கு ஏற்பத் தான் பேச முடியும். அதுவும் புலிகள் தடுத்து வச்சிருந்தாங்க எண்டு, தினமும் ஒரு தமிழ் மகன சொல்ல வச்சு ஒவ்வொரு நாளும் பிபிசி பார்ப்புல,ச்சே தமிழ்ல போட்ட தினமும் கேட்டு நம்பாதவனும் நம்பத் தான் செய்வான். இதுக்கு உளவியற் போர் எண்டு பேர். சொல்ல வேண்டியதில்ல. என் அம்மா, தம்பி, தந்தை புலிகள் ஏரியாவுல இருந்து தான் இப்ப அரச கட்டுப்பாட்டுப் பகுதிக்கு வந்திருக்காங்க. யார் யார் எங்க தடுத்தாங்க எண்டு மக்கள் அறிவாங்க. இப்படி தொல்வி, பலிகள், பின்னடைவு எல்லாம் பார்த்து விரக்தி அடைய வச்சு எல்லாரையும் போதுமடா சாமி எண்டு சொல்ல வைக்கிறதும் ஒருவகையில போர் தானே.

தமிழ் மக்கள் இத விட வலிகள், தோல்விகள் எல்லாம் பார்த்திருக்கோம். கூட்டங் கூட்டமாக கொல்லப் பட்டிருக்கோம். வெட்ட பட்டு, வன்புணரப் பட்டு, டாங்கிகளால நசுக்கப் பட்டு அழிக்கப் பட்டிருக்கோம், இந்தியன் ஆர்மி காலத்துல. எல்லாம் வரலாறு. அப்ப இணையம் இல்ல. நல்ல வேள அரசியல் திறனாய்வு எண்ட பேரில உங்களப் போல புலம்ப ஆக்களும் இல்ல.
போராடுறதா, கால்ல விழுறதா என்டதை அங்க போராடுற சக்திகளும்,
எல்லாப் உயிர்ப்பலிகளையும் தாங்கிக் கொண்டு ஆயுதப் பயிற்சி பெற்ற அவங்க கூட நிக்கற மக்களும் முடிவு பண்ணட்டும்!

10:13 AM, May 11, 2009
மயிலாடுதுறை சிவா said...

சசி

தங்களது பதிவும் அனைத்து பின்னூட்டங்களையும் படித்தேன்.

உங்கள மன உணர்வுகளை நான் நன்கு உணருகிறேன்.

"வாழ்க்கைப் பாதையில் என் கருத்தக்கள் மாற்றம் பெறலாம். தெளிவு பெறலாம். குழம்பியும் போகலாம். நாளைக்கே வேறு கருத்துக்கு நான் வந்தடையலாம். அது எனது வாழ்க்கை எனக்கு தரும் பாடம். அனுபவம். அவ்வளவு தான்.... முழுக்க முழுக்க உண்மை....

ஆனால் இந்த பதிவுன் யாதர்த்தம் உண்மையாக இருப்பதால் மனம் மிகுந்த மனம் வருத்த படுகிறது!

நீங்கள் சொல்வது போல ஈழம் வாங்கி மக்களே இல்லாமல் போய்விட்டால்?!

இந்திய தேர்தலுக்கு பிறகு வேறு என்னென்ன கூத்து நடக்க போவதோ?!

நன்றி சசி

மயிலாடுதுறை சிவா...

10:14 AM, May 11, 2009
siva said...

ஈழப் போராட்டத்தை அன்று ஆதரித்த சசி இன்று ஈழப்போராட்டம் வேண்டாம் என்கிறார்.
அதைக் கேட்டு இந்திய தேசிய வாதிகளும் ,மகிந்தவின் மாதச் சம்பளத்தில் இருப்பவர்களும் மகிழ்வுடன் துள்ளுகிறார்கள்.
அன்று ஈழப் போராட்டத்தை எதிர்த்த ஜெயலலிதா இன்று தமிழ் ஈழம் பெற்றுத் தருவேன் என்கிறார்..
சசிக்கு ஞானம் வந்ததும் மக்களுக்கு வந்த அவலத்தை கண்டு.
ஜெயலலிதாவுக்கு ஞானம் வந்ததும் மக்களுக்கு வந்த அவலத்தை கண்டு.
எல்லாம் காலத்தின் கோலம்தான்.

10:45 AM, May 11, 2009
sen said...

so ,sasi !
you are leaving the sinking ship.
but the time you decided to leave it is regrettable.
I thought you would stick with eelam struggle through thick and thin.
although I respect your concern about massive civillian death,
I don't accept your opinion that eelam struggle should be given up.
it will go on,but the form of struggle will change.

11:21 AM, May 11, 2009
Anonymous said...

It's very hard to accept. But this 100% correct. A transparent post from a painful heart.

12:22 PM, May 11, 2009
Sri Rangan said...

//இப்படி கொடுமையாக மக்கள் கொல்லப்படுகையில் வசதியான இடத்தில் இருந்து கொண்டு தமிழீழமே தமிழர்களுக்கு தீர்வு எனக் கூறுவது எனக்கு மோசமான சுயநலமாக தெரிகிறது. எந்த அதிகாரங்களும் இல்லாவிட்டால் கூட பரவாயில்லை. போர் முடிந்தால் போதும். மக்கள் தங்களின் அன்றாட வாழ்க்கையை குண்டுவீச்சுகள், செல் தாக்குதல் போன்றவை இல்லாமல் கழித்தாலே போதும் என்ற எண்ணமே எனக்கு இன்றைக்கு மேலோங்கியுள்ளது. ஒரு சாமானிய ஈழத்தமிழனின் எண்ணம் அவ்வாறே இருக்கும். இனி ஈழப் போராட்டம் என்பது தனி நாட்டிற்கான போராட்டமாக இல்லாமல் மக்களின் அமைதியான வாழ்விற்கு வழி ஏற்படுத்தும் ஒரு அரசியல் போராட்டமாக இருக்க வேண்டும் என்பதே என்னுடைய விருப்பம்.//

Sasi, with this write, I must inform you of the decision on the Eelam wars is totally right.
You are a man like others and myself. So we refuse this unnecessary war-blind!

Sasi, Tamileelam is over.

Broken LTTE was all done, about everything!

Yours sincerely,

P.V.Sri rangan

12:24 PM, May 11, 2009
Anonymous said...

போதுமடா இந்த பாலஸ்தீன போராட்டம், போதுமடா திபெத்திய போராட்டம், போதுமடா பர்மிய சுதந்திரத்திற்கான போராட்டம்....இப்படி போதுமடா என்று புலம்பிக் கொண்டே இருக்கலாம்.

Defeat is an orphan என்று சொல்வது எத்தனை உண்மை!

விடுதலைப் புலிகள் மீது பல ஆண்டுகளாக எனக்கு விமர்சனங்கள் உண்டு. ஆனால் தற்பொழுது மனதின் விரக்தியை தணிக்கிறேன் என்ற பெயரில், மக்களின் அவலத்திற்கு அவர்கள்தான் காரணம் என்று கட்டுரை எழுதுவது எதிர்மறையான விளைவையே ஏற்ப்படுத்தும்.

குர்து மக்கள் மீதும், தன்னை எதிர்த்தவர்கள் மீதும் சதாம் நடத்திய கொடுமைகள் நாம் அறிந்ததே...அதற்காக, சதாமை ஒழிக்கிறேன் பேர்வழி என்று அமெரிக்கா ஈராக மக்களை கொன்று குவித்ததை யார்தான் ஏற்றுக் கொள்ள முடியும்?

இதனை எழுதியதற்கு ஒரு கவிதையை எழுதி மனதின் ஆற்றாமையை தணித்திருக்கலாம்.

விமர்சனங்களுக்கான நேரமல்ல இது.

12:57 PM, May 11, 2009
Anonymous said...

//சசிக்கு ஞானம் வந்ததும் மக்களுக்கு வந்த அவலத்தை கண்டு.
ஜெயலலிதாவுக்கு ஞானம் வந்ததும் மக்களுக்கு வந்த அவலத்தை கண்டு.- siva//

மக்களுக்கு வந்த அவலத்தை கண்டு சசி யதார்த்தத்தை உணர்ந்து கொண்டார். சசி ஒரு Gentleman.ஆனால் ஜெயலலிதா தனது அரசியல் வெற்றிக்காக நாடகம் ஆடுகிறார். ஜெயலலிதா இலங்கை தமிழர் துன்பத்தை வைத்து அரசியல் செய்பவர்.

2:30 PM, May 11, 2009
வெண்காட்டான் said...

sasi, eaan ippadi ungalai maatriyathu pool ellarum maattrathan inta poorattam ivvalavu veriyoodu tamillarkalai kollukirathu enpathi neengal eaan purithu kollavillai. makkalai alithal pulikaluku aatharavau kuraiyum enpatharkkakave ithu nadakkirathu endu neengal ariya villaiya.
IPPADI NEENGAL SALITHATHU POOLA SALIPADAYAVE INHTA POORATAM. IPPOTHU THERUKU VARUM IVARKAL EAAN 80% VAITHRIUKKUM POOTHU VRAVILLAI?. KOLAIVERIYOODU EMMAI ALIKIRARKAL ENPATHAI UNARTHU KOLLUNGAL.

2:51 PM, May 11, 2009
ராம கிருஷ்ணன் said...

திமுகவின் சமரசமும் திருமாவின் சந்தர்ப்பவாதமும் சசியிடம் குடியேறிவிட்டன. இனி என்ன சொல்ல?

வேண்டும் மாற்றம் என்றவரிடம் ஏனிந்த (தடு)மாற்றம்?

3:00 PM, May 11, 2009
Anonymous said...

நல்ல பதிவிருக்கு நன்றி,

இனி ஈழப் போராட்டம் என்பது தனி நாட்டிற்கான போராட்டமாக இல்லாமல் மக்களின் அமைதியான வாழ்விற்கு வழி ஏற்படுத்தும் ஒரு அரசியல் போராட்டமாக இருக்க வேண்டும் என்பதே என்னுடைய விருப்பம்!!!.

அரசியல் போராட்டம் சத்தியம் என்று நம்புரீர்களா?

3:03 PM, May 11, 2009
பாரதி.சு said...

வணக்கம் சசி,
உணர்வுகள் பொங்கிப் பிராவகிக்கும் போது சரியானதென தோன்றும் கருத்துகள் எல்லாம் சரியானதல்ல...ஆனாலும் உங்கள் கருத்துகள் பலவற்றில் நானும் உடன்படுகிறேன்.
உங்களைப்போலவே நானும் சிந்தித்த நேரத்தில் நான் பதிவெழுத முனையவில்லை, காரணம் அப்பதிவு நிச்சயம் சரியான விதத்தில் எமது போராட்டத்தினை முன்னெடுக்கும் மிகச்சொற்பமான மக்கள் நம்பிக்கைகளுக்கு "எதிர்மறையான" திசையில் பயணித்து அவர்கள் ஓர்மத்தினை மழுங்கடித்துவிடும் என்பதனாலேயே.

//ஆனால் இன்றைக்கு வன்னிக் காடுகளிலும், வவுனியா தடுப்பு முகாம்களிலும் தமிழர்கள் அனுபவித்துக் கொண்டிருக்கும் இன்னல்களுக்கு காரணம் விடுதலைப் புலிகளும் தான். //

நிச்சயம் ஒத்துக்கொள்கிறேன். காரணமாக நீங்கள் சொன்ன விடயமும் சரியானதே.

//எந்தப் போராட்டமும் ஒரு குறிப்பிட்ட இலக்கு வரை தான் இரணுவப் பாதையில் செல்ல முடியும். இராணுவப் பாதையில் பெற்ற வெற்றியை அரசியல் பாதைக்கு திருப்புவதே அந்தப் போராட்டத்தினை முழுமை அடைய வைக்கும்.//
அருமையாக கிடைத்த சந்தர்ப்பங்களையெல்லாம் தொலைத்ததன் பயனை இன்று அனுபவிக்கின்றோம். அதற்காக சிங்கள அரசு தமிழரிற்கு எல்லாம் தாம்பாளத்தில் வைத்து தரும் என்று சொல்லவில்லை. அரசியல் ரீதியாக அவர்களினை சர்வதேச நாடுகளின் முன் அம்பலப்படுத்தி எமது உரிமைப்போராட்டத்தினை ச்ர்வதேச அதரவுடன் தொடர்ந்திருக்கலாம். எனது அறிவுக்கெட்டியவரை ராணுவ ரீதியாக" விட்டுப்பிடிக்க" நினைத்ததை அரசியல் ரீதியாக விட்டுப் பிடித்திருக்கலாமோ??? என்றே என் மனம் அங்கலாய்க்கிறது.

//இந்தப் போரில் ஈடுபட்ட ஒவ்வொரு விடுதலைப் புலி வீரரையும் வியந்து பார்க்கிறேன்.//

100% உண்மையான கூற்று...தோல்வியின் விளிம்பில் நின்றுங்கூட அவர்களின் அடிபணிய மறுக்கும் நெஞ்சுரம்...
இந்த ஒன்று தான் இன்று வரை அரசுடன் சேர்ந்தியங்கும் முன்னாள் போராளிகளினை (??) நான் கேவலமாகப் பார்ப்பதன் காரணம். அதுமட்டுமல்ல இவர்கள் தமிழ்மக்களின் ஆதரவினை பெற முயற்சிக்காமல் "தங்களுக்கென" என ஒரு வட்டத்தினை போட்டுக்கொண்டு அதற்குள்ளிருந்து சிங்கியடித்தது தான். (மன்னிக்கோனும் எங்கோ போறன் போல இருக்கு...ஆனாலும் இதயும் மனசில வைக்கவேணும் என்டதால தான் )
சிங்கள அரச இயந்திரங்களை எதிர்த்து மண்டியிடாது போரிட்ட அனைவருமே என்னப்பொறுத்தவரை இலட்சிய வீரர்கள் தான். அவர்கள் கனவுகளுக்ககவும் போரில் அநியாயமாக இறந்த அப்பாவி மக்களுக்காகவும் மட்டுமே இன்றும் ஈழப்போரை ஆதரிக்கிறேன்....கைவிடுதலினை ஆதரிக்கவும் மனம் ஒப்புதில்லை.

போராட்டத்தின் போக்கைக் கூட களத்தில் இருக்கும் மக்கள் தான் முடிவு செய்ய வேண்டும். தப்பியோடி வந்து பதிவெழுதுற நாமல்ல...என்பது என் தாழ்மையான எண்ணம்.

//விமர்சனம் என்பது தனிப்பட்ட விடுதலைப் புலிகளை அல்லாமல் அந்த அமைப்பின் தலைமையை நோக்கியே முன்வைக்கிறேன்.///

மிகவும் சரியாகச் சொன்னீர்கள்...அவர்கள் அணுகுமுறையில் மாற்றம் வேண்டும்...அரசியல் பலவீனம் தொடர்ந்தும் அவர்களை வேட்டையாடிக்கொண்டு வருகிறது.

// இனி ஈழப் போராட்டம் என்பது தனி நாட்டிற்கான போராட்டமாக இல்லாமல் மக்களின் அமைதியான வாழ்விற்கு வழி ஏற்படுத்தும் ஒரு அரசியல் போராட்டமாக இருக்க வேண்டும் என்பதே என்னுடைய விருப்பம்.//

தனிஈழப் போராட்டத்தினை கூட அரசியல் ரீதியிலான போராட்டமாக மாற்றியமைக்க வேண்டும் என்பதே என் விருப்பம்.
பி.கு: இதை வாசிக்கும் போதே தெரிந்திருக்கும் நான் ஒன்றும் புத்திஜீவியல்ல என்பது....சாதாரனமாக எனக்குத் தோன்றியதையே எழுதினேன்...

நன்றி.

3:27 PM, May 11, 2009
Anonymous said...

You are entitled to your opinion,

However by blaming tigers for the Tamil suffering, you have fallen into the trap of srilankan govt's propaganda.
I am not saying that tigers are beyond criticism,but you have to accept that people who are imprisoned at the camps by the srilankan govt are at the mercy of the srilankan army and there are offices of paramilitiary groups at the camps who are terrorising people at the camps.
if any one tell the truth to the journalist ,their fate will be sealed immediately and their life will be endangered.

I don't think Tamils can live with the Sinhalese any more ,the scars are too deep .

Srilankan govt is carrying out this war (with the help of Indian govt)to crush the Tamil rebellion for freedom.

sinhala state is asking for subjugatin and surrender of tamils by depriviing them of food and medicine and killing them mercileesly.
By asking the tamil to surrender ,you are legitimising the Srilankan state's brutal war .
you are blaming the victim ratherthan the perpetrator.

3:38 PM, May 11, 2009
Vetri Thirumalai said...

உங்களின பதிவிற்கு பதிலாக ஒரு பதிவே எழுதியிருக்கிறேன். நேரகிருந்தால் பார்க்கவும்

http://vetrithirumalai.blogspot.com/2009/05/blog-post_11.html

5:07 PM, May 11, 2009
தங்க முகுந்தன் said...

அப்பப்பா! தமிழ்சசிக்கு தலை சுற்றுகிறதோ இல்லையோ! எனக்கு தலை சுற்றுகிறது!

இத்தனை பதிவுகளையும் வாசித்து அதற்கு ஒரு பதில் எழுதுவது என்பது ஒரு பாரிய பொறுப்பு! நியாயமோ நியாயமில்லையோ! பல பல கருத்துக்கள் வருவது நல்லதே! இதில் நானும் சிலவற்றைச் சேர்க்கலாம் என்று நினைக்கின்றேன்!

1987ல் இந்திய இலங்கை ஒப்பந்தம் ஏற்பட்ட பின்னர்
1988 பொதுத் தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட்ட ஈரோஸ் அமைப்பினர் பதவிகளைத் துறக்காமல் நியாயமாகப் போராடியிருக்கலாம்.
1990களின் பின் இந்திய இராணுவத்தை வெளியேற்ற பிரேமதாச அரசுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட சமயத்தில் தமக்காக ஒரு அரசியல் கட்சியை இலங்கை அரச தேர்தல்கள் திணைக்களத்தில் பதிவுசெய்தவர்கள் அரசியல் நீரோட்டத்திற்கு வந்து மக்களைக் காப்பாற்றியிருக்க முடியும்.

உங்கள் பதிவில் கருத்துச் சொல்லிய வானதி என நினைக்கின்றேன் - பதவி பணம் என்று சோரம் போகாமல் என்று குறிப்பிட்டீருந்தார்.
சில சந்தர்ப்பங்களில் அவர்கள் சிறிது விட்டுக் கொடுத்திருந்தால் இன்றைய இந்நிலை ஏற்பட்டிருக்காது.
முழு அதிகாரமும் தமக்கு வேண்டும் என்று தான் எல்லாச் சந்தர்ப்பத்திலும் முட்டுக்கட்டையாக இருந்தார்கள்!
மேலும் சமாதான காலத்தில் முகமாலைச் சோதனைச் சாவடியிலும் தாண்டிக்குளம் சோதனைச் சாவடியிலும் மக்கள் ஏன் நானுட்பட - சிங்களவனிடம் உடல் பொருள் பரிசோதனைக்காகவும் - இங்கு மறுபுறம் பொருள் பரிசோதனை (இந்தியா ருடே பத்திரிகையிலிருந்த ஒரு கட்டுரைக்காக நான் 2 மணி நேரத்துக்குமேல் விசாரணை செய்யப்பட்டேன்) கொண்டுபோகும் ஒவ்வொரு பொருளுக்கும் வரி – எமது பகுதிக்குள்ளே நுழைவதற்கு அனுமதி பாஸ் நடைமுறை ஏன் இன்று மக்கள் வெளியே வர முடியாமலிருப்பதே இந்த பாஸ் நடைமுறைதான் முழுப் பிரச்சனையே!

அரச அலுவலருக்கு சம்பளமும் எல்லாப் பொருட்களும் வருவது வெளியிலிருந்து அவர்களை முழுக் கட்டுப்பாட்டில் வைத்து அதிகாரம் பண்ணியது யார்?

ஒன்று மட்டும் ஒரு முட்டாள் தனமான வேலை – நாட்டுப் பிரச்சனை தீர்க்க முன்னரே! தனி நீதி மன்றம் - காவல் நிலையம் - அடையாள அட்டை விநியோகம் - வைப்பகம் - இங்கு வைப்பிலிட்ட பணத்திற்கு என்ன நடந்தது!

பிபிசியில் மக்கள் சொல்வது புரியவில்லையா?

நான் திரும்பத் திரும்பச் சொல்கிறேன் - ஆயுதம் எடுத்தவர்கள் ஒரு நேரத்தில் ஒரு தீர்வுக்கு வரவேண்டும். ஆனால் நாம் பேச்சுவார்த்தை என்று சொல்லிச் சொல்லி ஒவ்வொரு தடவையும் ஏமாற்றமே கொண்டோம். இதற்கு அரசும் புலிகளும் உடந்தை. இன்று எமது போராட்டம் ஒரு பயங்கரவாதப் போராட்டம் என்று உலகில் அங்கீகரிக்கப்பட்டது ஒன்றே மிச்சம்.

மக்களுக்காக இன்றைய யுத்தம் நடைபெறவில்லை! தனது ஆட்சி அதிகாரத்துக்கு இரு தரப்பும் நியாய தர்மங்களை மீறி கொலைத் தாண்டவம் புரிகின்றனர். உலகம் அமைதி பேணுகிறது!

2002ல் இருந்து நோர்வே மத்தியத்தத்துடன் ஏதாவதொரு முடிவை எட்டியிருக்கலாம் சுவிற்சர்லாந்து அரசியலமைப்பு முறை படிக்க இரு தரப்பும் வந்தனர். ஆனால் நடந்தது – மாவிலாறு அணைக்கட்டை மூடியதுடன் தொடங்கியது இந்தப் போரும் அனைத்து அழிவும்.

நாம் மன நிம்மதியின்றி மக்களுக்காக என்ன செய்வதென தெரியாது மண்டையைப் பிய்த்துக் கொண்டு விசரராகியது தான் மிச்சம்.

இங்கு எனது நண்பர் ஒருவர் சொல்லியது – புலிகள் பின்வாங்கும்போது மக்களை சொந்த இடங்களில் இருக்கவிட்டுவிட்டுப் போயிருக்கலாம் என்று! அப்படிப் போயிருந்தால் வயோதிபர்கள் - பெண்கள் - சிறிய குழந்தைகள் இவர்களுடைய உயிர்களைக் காப்பாற்றியிருக்கலாம் - ஆனால் எல்லோரையும் தங்களோடு அழைத்துச் சென்று இன்று அநியாயமாகப் பலியாக்கியதுதான் அவர்கள் செய்த வேலை என்று.

இப்போதும் தாக்குதல்களை நிறுத்திவிட்டு மக்களுக்காக எதையும் செய்யச் சந்தர்ப்பம் இவர்களுக்கு இருக்கிறது. இவர்கள் தாக்குவதையும் - மக்கள் கொல்லப்பட்டதையும் - வீதிகளில் மக்கள் ஓடுவதையும் - காயப்பட்டவர்களையும் ஒளிப்பதிவு (வீடியோ) பண்ணி தமக்கு ஆதரவு தேடுவதிலல்லவா இன்றைய நிலையிருக்கிறது. சில ஒளிப்பதிவுகளில் மக்கள் இவர்களைத் திட்டித் தீர்ப்பதும் கேட்கிறது! இது சிலருக்கு கோபத்தைத் தரும். ஆனால் யதார்த்தத்தை உணர்ந்து அப்பாவி மக்களுக்காக அவர்களைக் காப்பாற்ற ஏதாவது செய்வதுதான் இன்றைய உடனடித் தேவை!

5:43 PM, May 11, 2009
செல்வநாயகி said...

சசி,

உங்களின் உணர்வுகள் புரிகின்றன. ஒரேநாளில் ஆயிரம் பேர் ஈவுஇரக்கமின்றிக் கொல்லப்பட்டுக் கிடக்கையில் மனம் பதறுகிறதுதான். விடுதலைப்புலிகள் மீதான விமர்சனங்கள் ஈழ விடுதலைப் போராட்டத்தை அக்கறையோடும், நடுநிலையோடும் கவனித்துவருகிற பலருக்குமேகூட உண்டுதான். ஆனால் இந்த விடுதலைப் போராட்டமே இத்தோடு நின்று போகட்டும் என நினைக்குமளவு உங்களுக்குத் தளர்ச்சி ஏற்படும் என்பதை எதிர்பார்க்கவில்லை.

ஈழம்சார்ந்த உங்களின் அத்தனை இடுகைகளையும் தவறாது படித்து வந்தவள் என்ற முறையில் இப்பதிவு எனக்கு ஏமாற்றம் தந்தது. ஏனெனில் அவற்றிலெல்லாம் இருந்த உங்களின் தெளிவும், கூர்மையும் இதில் இல்லை.

5:54 PM, May 11, 2009
Anonymous said...

//தங்களை நம்பி இருந்த மக்களையும் பகடைக்காயகளாக பயன்படுத்தி//

WTF? My mom is still there and I know the truth more than you if tigers using the cilivians like that or not.

Its the people decide what should they do and no one is holding them.

U R such a JERK...

If you are SL Tamil then here you go for my reply: You failed to do ur duty as we failed to do ours for the country. You dont even feel guilt for that and BS-ing here. DAMN it.

If you are Indian Tamil:
SHUT UR TRAP & GET LOST. YOU HAVE NO RIGHTS TO POKE UR STINKY NOSE IN OUR ISSUES.

Its ur government is TOTALLY responsible for the fucked up situation now.

//20002ல் அது கைக்கு எட்டும் தூரத்திலேயே இருந்தது. தனி நாடாக இல்லாமல் ஒரு கூட்டாட்சியாக கூட தொடர்ச்சியான அரசியல் வியூகத்தில் அதனை நோக்கி சென்றிருக்க முடியும். //

Ya right. You made the argeement right. MY FOOT!!!!!

//ஈழப் போராட்டதினை சிறிய வயதில் இருந்து கவனித்து வந்தாலும் இந்தளவுக்கு போரின் கொடுமைகளை நான் உணர்ந்தது இல்லை. //

Do you feel the pain than we feel. MY FOOT..

Neeli kanneer vadikamal, just shut ur trap.

PS:- U may not post this comment. I just want to reply you. Thats enough.

5:58 PM, May 11, 2009
Anonymous said...

//மக்களை புலிகளே தடுத்து வைத்திருக்கிறார்கள் என ’நம்பத்தகுந்த’ குற்றச்சாட்டுகள் வரும் பொழுது மக்களை விட புலிகளோ, அவர்கள் போராடிக் கொண்டிருக்கும் தமிழ் ஈழமோ முக்கியம் அல்ல.
//

Yea your dad found the proof right.. MORON

6:00 PM, May 11, 2009
K.R.அதியமான் said...

////மக்களை புலிகளே தடுத்து வைத்திருக்கிறார்கள் என ’நம்பத்தகுந்த’ குற்றச்சாட்டுகள் வரும் பொழுது மக்களை விட புலிகளோ, அவர்கள் போராடிக் கொண்டிருக்கும் தமிழ் ஈழமோ முக்கியம் அல்ல.
//


சசி,

இது உங்களுக்கு சமீப காலத்தில் தான் புரிந்திருக்கிறது. எம்மை போன்றவர்களுக்கு பல பல ஆண்டுகளுக்கு
முன்பே இது தெளிவாகிவிட்டது. Disilusionment என்றால் என்ன என்று அறிந்து கொண்டோம்.

2:20 AM, May 12, 2009
Rajasekaran said...

கொஞ்சம் யோசித்து பாருங்கள்- இலங்கையில் போரை நிறுத்தவில்லை என்றால் தமிழகத்தில் பெரும்பன்மையான இடங்களில் தோற்போம், தோற்றால் மத்தியில் ஆட்சி அமைக்க முடியாது என்று தெரிந்தும் ஒரு அரசியல் கட்சி இலங்கையில் நடப்பதை பார்த்துக்கொண்டிருக்குமா? ஆளுவதுதான் எந்த அரசியல் கட்சிக்கும் raison d'etre. காங்கிரஸ் அமைதியாக இருப்பதற்கு ஏதோ ஒரு காரணம் இருக்கிறது. ஒரு சிறு பகுதியை மட்டும் பார்த்துவிட்டு எல்லோரும் கருத்து சொல்லிக்கொண்டிருக்கிறோம். இந்தியா ஈழப் பிரச்சனையை கையாண்ட விதம் சரியா தவறா என்று வரலாறு தான் பதில் சொல்ல வேண்டும். சோனியா பழி தீர்த்துக்கொள்கிறார் என்பது மிகவும் குழந்தைத்தனமான வாதம். காங்கிரஸ் ஒரு மிக பெரிய கட்சி அதை நம்பி ஒரு பெரிய கூட்டணியும் இருக்கிறது, பல பேருடைய அரசியல் வாழ்க்கையும் அடங்கி இருக்கிறது சோனியா is just a face to catch votes. That is her only mandate. Period.

3:23 AM, May 12, 2009
sivakumar said...

உங்களிடமிருந்து இந்தப் பதிவை நான் எதிர்பார்க்கவில்லை.
.
தமிழ் ஈழ மாநாடு கூட்டி ,காங்கிரஸ் அரசை குற்றம் சாட்டிய திருமாவளவன் இன்று ,சோனியாவிடம் இறைந்து ஒரே மேடையில் இருந்து உயிர் பிச்சை போடுங்கள் தாயே என்று கெஞ்சியதைக் கேள்விப்பட்டு மனம் வெறுத்துப் போய் இருந்த போது உங்கள் பதிவை வாசித்தபோது கொஞ்சம் அதிர்ச்சியாகத் தான் இருந்தது.

வழக்கமாக அறிவுபூர்வமாக விவாதம் செய்யும் நீங்கள் வெறுமனே 'நம்பகரமான 'வட்டாரங்கள் மூலம் தகவல் கிடைத்திருப்பதாக கூறி விடுதலைப் புலிகளை குற்றம் சாட்டுகிறீர்கள்
எட்டு மாதங்களுக்கு முன்பே தொண்டு நிறுவனங்களையும் ,சுதந்திர ஊடகங்களையும் மனித உரிமை அமைப்புக்களையும் ஐநா நிறுவனங்களையும் இலங்கை அரசு வன்னியில் இருந்து வெளி ஏற்றியது ,கடந்த எட்டு மாதங்களுக்கு மேலாக ஊடகர்களையும் மற்றவர்களையும் தங்கள் பகுதிக்குள் வருமாறு புலிகளின் அரசியல் துறை பொறுப்பாளர் நடேசன் தனது ஒவ்வொரு பேட்டியிலும் கேட்டுக் கொண்டே இருந்தார்.
ஆனால் இலங்கை அரசு ஊடகர்களை விடாமல் தடுத்தது உங்களுக்கே தெரியும்.
புலிகளின் பகுதியில் ஊடகர்களும் மனித உரிமை அமைப்புக்களும் உள்ளே இருந்திருந்தால் அங்கு நடப்பது என்னவென்று நேரடியாகவே தெரிந்து இருக்கும்.
இங்கு உண்மையை மறைக்க முயல்வது இலங்கை அரசுதானே.!
அப்படி ஊடகர்கள் அந்தப் பகுதியில் இருந்திருந்தால் நீங்கள் சொல்வது மாதிரி நம்பகரமான தகவல் என்று பூடகமாகச் சொல்லத் தேவை இல்லை. நேரடியாகவே உண்மையைத் தெரிந்து கொண்டிருக்கலாம்.
உலக நாடுகளாலும் ஐநா சபையாலும் அங்கீகாரம் செய்யப் பட்ட ஒரு நாடான இலங்கை எல்லா சர்வ தேச விதிகளுக்கு எதிராகவும் ஒரு போரை நடத்திக் கொண்டு இருக்கிறது
சுதந்திரம் கேட்ட மக்களை கோரமான போர் செய்து அடக்குகிறார்கள்.
நீங்கள் சுதந்திரம் கேட்டவர்களை குற்றம் சொல்கிறீர்கள்.

4:37 AM, May 12, 2009
arul said...

உங்கள் பதிவு படித்தேன்.
ஆறு மாதங்களுக்கு முன்பு இருக்கலாம் எனக்கு தெரிந்தவர் ஒருவர் சொன்ன செய்தி ஒன்றைச் சொல்கிறேன்.
இலங்கை ராணுவம் மன்னாரிலிருந்து உள்நுளைந்த போது இடம் பெயர்ந்த ஒரு குடும்பம் தமது வயதான பாட்டியை விட்டுவந்து விட்டார்கள் என்று உணர்ந்து அந்தக் குடும்பத்தை சேர்ந்த இரு வாலிபர்களும் (இந்த வாலிபர்களுக்கு பதினாறு பதினேழு வயதிருக்கலாம்.)ஒரு வயதானவரும் வெள்ளைக் கொடியை பிடித்துக் கொண்டு தமது வீட்டுப் பக்கம் போனபோது இரு வாலிபர்களையும் இலங்கை ராணுவம் பிடித்து விட்டது. பாட்டியும் வயதானவரும் பின்பு தடுப்பு முகாமில் இருப்பதாக அந்தக் குடும்பத்தினர் கேள்விப்பட்டனர்.
பிடிபட்ட இளைஞர்கள் போராளிகள் அல்ல.விடுதலை புலி உறுப்பினரல்ல
ஆனால் புலம்பெயர்ந்து இருந்த அவரின் உறவினர்கள் திரும்பவும் அந்த இளைஞர்களைப் பார்த்தது இலங்கை அரசின் பாதுக்காப்பு இணையத்தளத்தில் .
அங்கு அவர்கள் புலிகளின் சீருடைகளுடன் காணப்பாடார்கள் ,அவர்களுக்கு கீழே அவர்கள் விடுதலைப் புலி உறுப்பினர் என்றும் ,ராணுவத்திடம் சரணடைந்து விட்டார்கள் என்றும் தங்களை புலிகள் பலவந்தமாக இணைத்துக் கொண்டார்கள் என்று வாக்கு மூலம் கொடுத்ததாகவும் தகவல் இருந்தது.
இது எனக்குத் தெரிந்த ஒரு உதாரணம்.இது மாதிரித்தான் இன்னும் பல வாக்கு மூலங்கள் இருக்கும் என நினைக்கிறேன்
போரின் உக்கிரத்தினால் புலிகள் சில தவறுகள் செய்திருக்கலாம்
ஆனால் மிகப் பெரிய தவறு செய்கிற இலங்கை அரசு ,அவர்களுக்கு உதவும் இந்திய அரசு ,மற்றைய உலகநாடுகள் ,கண்மூடி ஒன்றும் செய்யாமல் ஐநா அமைப்பு போன்றவைதான் இன்றைய தமிழரின் கொலைகளுக்கு காரணம்.

5:07 AM, May 12, 2009
meerabharathy said...

letter to Tamil Diaspora,....& Sinhala people

Hello Sinhala speaking friends, People, and their leaders

Why I am writing this to you…

I just want share my thoughts, feeling, and emotions …

http://www.facebook.com/note.php?note_id=76683638999&ref=nf

Hello Tamil Diaspora, international community and everyone,
I have something to tell or discuss with you...

http://www.facebook.com/home.php?ref=home#/note.php?note_id=74958408999&ref=nf

9:48 AM, May 12, 2009
Anonymous said...

Dear Sasi:

There is only thing I want to say.
"You wrote supporting humanity". You must have enormous courage to write this blog.

I am FOR Tamil Eelam, but to be frank very disappointed with the approach of LTTE.
My view has always been that LTTE never ever believed in "Political Aspects" and they only depended upon "Military" Victories. Some of the actions of LTTE gave victory on platter to SL. The fact SL was commiting Genocide went to background and LTTE got the name of terrorist. If they had good political team, they would have projected the truth about SL. Simply put the DRAVIDIAN brain power to spread the TRUTH was never utilized. I am totally shocked to the core of my being, that a slaughter is going unquestioned. So much could have been done by propoganda of the truth

Krishna

5:56 PM, May 12, 2009