Sunday, October 10, 2004

காளைகளின் தகவல்கள்

பங்குச் சந்தையில் எப்பொழுதும் எதிர்காலத்தைப் பற்றிய மதிப்பீடுகள் தான் முக்கியம். கடந்து வந்த பாதைகளைப் பற்றிய கற்பனையிலேயே இருந்தால் அதள பாதாளம் தான்.

கடந்த வாரம், BSE பங்குக் குறியீடு 82 புள்ளிகளும், NSE 42 புள்ளிகளும் உயர்ந்தது.

இந்த வாரம் எப்படி இருக்கும் ?

வரும் வாரம் பல நிறுவனங்கள் தங்களது இரண்டாம் காலாண்டு அறிக்கைகளை (Q2 Results) வெளியிடும். அந்த அறிக்கையைப் பொறுத்துத் தான் பங்குச் சந்தையின் போக்கு அமையும். ஒவ்வொரு ஆண்டும் இன்போசிஸ் நிறுவனம் முதலில் தனது காலாண்டு அறிக்கையை தாக்கல் செய்யும். கடந்த காலாண்டில் இன்போசிஸின் சிறப்பான செயல்பாடு இந்த காலாண்டிலும் தொடரும் என எதிர்பார்க்கப் படுகிறது. அந்த அறிக்கையைப் பொருத்து இன்போசிஸ் பங்குகள் விலையில் மாற்றம் தெரியும்.

சரி எந்தப் பங்குகளை நாம் வாங்கலாம் ?

சில நம்பத் தகுந்த வட்டாரங்களில் இருந்து பெரியக் காளைகள் தெரிவிக்கும் தகவல்களைத் திரட்டி தருகிறேன்.

இந்த வார "காளைகளின் தகவல்கள்".

இந்த வாரம் பல மென்பொருள் நிறுவனங்கள் தங்களது காலாண்டு அறிக்கைகளை அறிவிப்பதால் அந்தத் துறைப் பங்குகளை வாங்கலாம். அறிக்கைகளின் நிலவரத்தைப் பொருத்து அந்தப் பங்குகளின் விலை ஏறக்கூடும்.

கச்சா எண்ணெய்யின் விலை ஏறுமுகமாக இருப்பதால் எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனப் பங்குகளான ONGC போன்றவை நல்ல லாபகரமாக் இருக்கும். ஆனால் எண்ணெய் விற்பனை நிறுவனப் பங்குகளான HPCL, BPCL போன்றவற்றில் இருந்து கொஞ்சம் விலகி இருப்பது நல்லது. அரசாங்கம் பெட்ரோல், டீசல் விலைகளை ஏற்றுவதில்லை என்ற முடிவில் இருந்து மாறினால் இந்த நிறுவனப் பங்குகள் முன்னேறும்.

மற்றபடி ரிலயன்ஸ் நிறுவனப் பங்குகளும், வங்கிப் பங்குகளும் விலை ஏறக்கூடிய சாத்தியக் குறுகள் இருப்பதாக காளைகள் சொல்கின்றன.

ரிலயன்சைப் பற்றி எல்லோரும் ஆகா ஓகோ என்று சொல்கின்றனர்.

இந்த வாரம் பங்குச் சந்தை காளைகளின் ஆதிக்கத்தில் இருக்குமா ? கரடிகளின் ஆணைக்கு உட்படுமா ?

காளை, கரடி இந்த இரண்டு சந்தையிலுமே சில பங்குகள் நல்ல லாபகரமாகத் தான் இருக்கும். நான் திரட்டிய இந்த பங்குகள் அந்த வரிசையில் இருந்தால் நல்லா இருக்கும் ? பார்ப்போம் ?

2 மறுமொழிகள்:

Pavals said...

இப்படியோரு பதிவைத்தான் ரொம்ப நாளா தேடிட்டிருந்தேங்க சசி,
வாழ்த்துக்கள்.. (கொஞ்சம் தாமதமா சொல்றனோ??)

12:51 AM, October 11, 2004
Badri Seshadri said...

Mphasis BFL நிகர லாபம் எதிர்பார்த்ததைவிடக் குறைவாக இருந்ததால் டெக் எல்லாமே இன்று அடிவாங்கியுள்ளது.

இந்த லாபக் கணிப்பு பற்றி எனக்கு நம்பிக்கையில்லை. நம் இந்திய அனலிஸ்ட்களுக்கு நிறுவனங்களின் லாபத்தை சரியாகக் கணிக்கக் கூடிய முழுத் தகவலும் இல்லை என்றே தோன்றுகிறது. இன்று தொலைக்காட்சியில் பேசிய ஓர் அனலிஸ்ட் அந்நியச் செலாவணி பற்றி நாங்கள் சரியாக யோசிக்கக் கூட இல்லை. அதனால் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் லாபம் பாதிப்படையும் என்பதை நாங்கள் கவனிக்கவில்லை என்பது போலப் பேசினார்.

அடுத்து இன்போசிஸ் லாபம் வெளியாகும்போது திரும்ப பங்குகள் எங்கோ போகலாம். அடுத்து விப்ரோ லாபம் எதிர்பார்த்ததை விடக் குறையும் போது கொஞ்சம் இறங்கும்.

இப்படி லாபம் கொஞ்சம் இங்கேயோ, அங்கேயோ போவதால் இந்த நிறுவனங்களின் அடிப்படையில் எந்த மாற்றமும் நிகழ்வதில்லை.

9:15 AM, October 11, 2004