Sunday, December 26, 2004

சென்னையில் நில நடுக்கம்

சென்னையில் இன்று காலையில் ஏற்பட்ட நிலநடுக்கம் கடலோரப் பகுதியில் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. மெரினா, சாந்தோம் போன்ற கடலோர பகுதியில் கடல் நீர் புகுந்துள்ளது. இது வரை 30 பேர் பலியாகியுள்ளதாக தகவல்கள் கூறுகிறது. பலரை காணாவில்லை.

சரியான தகவல்கள் இன்னும் கிடைக்கவில்லை. மெரினா கடற்கரை மற்றும் ரோடுகளில் கடல் நீர் இருப்பதை தொலைக்காட்சியில் பார்க்க முடிகிறது. கடலூர், நாகை போன்ற இடங்களில் மீனவர் குடியிருப்புகள் பெருத்த சேதம் அடைந்துள்ளதாகவும், பல மீனவர்கள் இறந்திருக்கலாம் என்றும் சன் நியுஸ் தொலைக்காட்சி தெரிவிக்கிறது.

மேலும் இலங்கையில் கூட இதன் பாதிப்பு இருப்பதாகவும் தெரிகிறது

1 மறுமொழிகள்:

விஞ்ஞானி.க.பொன்முடி வலைப்பதிவு said... 1

நிலம் உயர்ந்து கொண்டிருக்கிறது-விஞ்ஞானி.க.பொன்முடி.
சுனாமி -உண்மைக் காரணம்.

ஆறு முதல் ஏழு கோடி ஆண்டுகளுக்கு முன்பு உள்ள காலகட்டம் மாஸ்ட்ரீசியன் காலகட்டம் என்று அழைக்கப்படுகிறது.

இந்த காலகட்டத்தில் பாலூட்டி விலங்கினத்தின் எலும்புகள் ஆசியக் கண்டத்தில் பரவலாக காணப் படுகின்றன.

இதனால் பாலூட்டி விலங்கினம் ஆசியப் பகுதியில் தோன்றியது என்று விலங்கியல் ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கிறார்கள்.

இந்த ஆசிய வகை பாலூட்டி விலங்கினத்தின் எலும்புகள் இந்தியாவிலும் ஆந்திராவில் உள்ள நாஸ்கல் என்ற கிராமத்தில் ஆறு கோடி ஆண்டுகளுக்கு முன்பு உருவான பாறைப் படிவுகளில் இருந்து எடுக்கப் பட்டிருக்கிறது.

எனவே ஆறு கோடி ஆண்டுகளுக்கு முன்பு இந்தியா இப்பொழுது இருப்பதைப் போலவே ஆசியக் கண்டத்தின் இணைந்த பகுதியாகவே இருந்திருக்கிறது என்பது நிரூபணமாகிறது.

ஆனால் இந்த உண்மைக்கு மாறாக ஆறு கோடி ஆண்டுகளுக்கு முன்பு இந்தியா, பூமத்திய ரேகைக்குத் தெற்கில் ஒரு தீவுக் கண்டமாக இருந்தது என்று புவியியல் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

அத்துடன் தீவுக் கண்டமாக இருந்த இந்தியா வடகிழக்குத் திசையில் ஆண்டுக்கு இரண்டு அங்குலம் வீதம் மெதுவாக நகர்ந்து வந்து ஐந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு ஆசியக் கண்டத்துடன் மோதியதால் இமயமலை உருவானது என்றும் கூறுகிறார்கள்.

இன்றும் இந்தியா நகர்ந்து கொண்டிருப்பதால் ஆசியக் கண்டத்தை முட்டித் தள்ளிக் கொண்டு இருப்பதால் இமயமலை ஆண்டுக்கு ஒரு அங்குலம் வீதம் வளர்ந்து கொண்டு இருக்கிறது என்றும்...

ஆசியக் கண்டத்தை இந்தியா முட்டித் தள்ளிக் கொண்டு இருப்பதால் நில நடுக்கம் ஏற்படுகிறது என்றும் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

அனால் இந்தக் கருத்து உண்மையல்ல என்பது ஆறு கோடி ஆண்டுகளுக்கு முன்பு ஆசியாவில் வாழ்ந்த பாலூட்டி விலங்கின் எலும்புகள் ஆந்திராவில் இருந்து எடுக்கப் பட்டது மூலம் நிரூபணாமாகிறது.

இந்தியா நகரவில்லை என்றால் பிறகு நிலநடுக்கம் ஏன் ஏற்படுகிறது?

ஐந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த திமிங்கிலத்தின் எலும்புகள் சிம்லா மலைக் குகையில் இருந்து எடுக்கப் பட்டிருக்கிறது.
எனவே இந்திய நிலப் பகுதிகள் கடலுக்கு அடியில் இருந்து கடல் மட்டத்திற்கு மேலாக உயர்ந்து கொண்டிருக்கிறது.

இவ்வாறு இந்திய நிலப் பகுதிகள் உயர்ந்து கொண்டிருப்பதால்தான் நில அதிர்ச்சி ஏற்படுகிறது.

இதே போல் இந்தோநேசியாப் பகுதியில் உள்ள தீவுகள் உயர்ந்து கொண்டிருப்பதால் அங்கு அடிக்கடி நில அதிர்ச்சி ஏற்படுகிறது.

கடந்த 26 டிசம்பர் 2004 அன்று ஏற்பட்ட நில நடுக்கத்திற்குப் பிறகு சுமத்ரா தீவுக்கு அருகில் இருக்கும் சிமிலு என்ற தீவின் வடமேற்குப் பகுதி மூன்று அடி உயர்ந்திருந்தது.
இதனால் அப்பகுதியில் புதிதாகக் கடற்கரை உருவாகியிருந்தது.
மேலும் அப்பகுதியில் அது வரை கடலுக்கு அடியில் அமிழ்ந்து இருந்த கடல் பஞ்சுகள் கடல் மட்டத்திற்கு மேலாக மூன்று அடி வரை உயர்ந்து இருந்தது.

இதே போல் கடந்த 28 மார்ச் 2005 அன்று ஏற்பட்ட நில நடுக்கத்திற்குப் பிறகு சிமிலு தீவைச் சுற்றிலும் முன்னூறு கிலோ மீட்டர் சுற்றளவிற்கு கடலுக்கு அடியில் இருந்த கடல் பஞ்சுகள் நான்கு அடி உயரத்திற்கு வெளியில் தெரிந்தன.
எனவே சிமிலு தீவு கடல் தரையில் இருந்து திடீரென்று உயர்ந்ததால்தான் நில நடுக்கமும் சுனாமியும் ஏற்பட்டது.

ஆனால் இந்த உண்மைக்கு மாறாக வடகிழக்கு திசையில் நகர்வதாகக் கூறப் படும் இந்திய-ஆஸ்திரேலியத் தட்டு பர்மா நிலத் தட்டிற்கு கீழே சென்றதால்தான் 26 டிசம்பர் 2004 சுமத்ரா தீவு நில நடுக்கமும் சுனாமியும் ஏற்ப்பட்டது என்று புவியியல் ஆராய்ச்சியாளர்கள் தவறாகக் கூறிவருகின்றனர்.

அன்புடன்,
விஞ்ஞானி க.பொன்முடி
சென்னை.

4:24 PM, March 10, 2009