Monday, June 27, 2005

காஷ்மீரின் விடுதலை - 1

பள்ளியில் படிக்கும் பொழுது இந்திய வரைபடம் மிக அழகாக இருப்பதாக எனக்கு தோன்றும். இதற்கு முக்கிய காரணம் இந்தியாவின் தலைப்பகுதி தான் என்று நினைப்பேன். மிக அழகாக நெளிந்து செல்லும் அந்த வரைபடத்தில் இருக்கும் அழகான காஷ்மீருக்கு செல்ல வேண்டும் என்ற ஆசை எனக்கு உண்டு. ஆனால் அந்த அழகிய தலைப்பகுதியில் பெரும் பகுதி உண்மையில் நம்மிடம் இல்லை, வரைபடத்தில் மட்டும் அந்த பகுதியை சேர்த்து கொண்டு உரிமை கொண்டாடிக்கொண்டிருக்கிறோம் என்று தெரிந்த பொழுது கொஞ்சம் அதிர்ச்சியாகத் தான் இருந்தது.



நம் இந்திய வரைபடத்தின் தலைப்பகுதியில் ஒரு பகுதி பாக்கிஸ்தானிடமும், மற்றொரு பகுதி சீனாவிடமும் இருக்க எஞ்சிய காஷ்மீர் சர்சைக்குரிய பகுதியாக இந்தியாவிடம் இருக்கிறது. தீவிரவாதிகளுக்கும், இராணுவத்திற்கும் நடக்கும் சண்டையில் அந்தப் பகுதி ரத்த பூமியாக மாறி அடக்குமுறை, விசாரணைகள், மனித உரிமை மீறல்கள் இவற்றுக்கிடையே காஷ்மீர் மக்கள் கடந்த 15 ஆண்டுகளாக போராடிக் கொண்டிருக்கிறார்கள்.

இந்தியாவும், பாக்கிஸ்தானும் கிரிக்கெட் விளையாடி தங்கள் நல்லுறவை மேம்படுத்த நினைக்க இந்த இரு நாடுகளின் உறவில் பகடை காய்களாக இருப்பது காஷ்மீர் மக்கள் தான். அவர்களின் கோரிக்கை தான் என்ன ? அவர்கள் இந்தியாவுடன் இருக்க நினைக்கிறார்களா, பாக்கிஸ்தானுடன் இணைய விரும்புகிறார்களா அல்லது சுதந்திர காஷ்மீர் வேண்டும் என்று நினைக்கிறார்களா ?

இது பற்றி யாருக்கும் கவலையில்லை. தில்லியில் இருந்து கொண்டு நாம் காஷ்மீர் எங்களுடையது என்றும், லாகூரில் இருந்து அவர்கள் காஷ்மீர் அவர்களுடையது என்றும் கூறிக் கொண்டிருக்கிறோம். நாம் காஷ்மீர் இந்தியாவை விட்டு பிரிவதை விரும்பவில்லை. பாக்கிஸ்தானும் காஷ்மீர் சுதந்திரம் அடைவதை விரும்பவில்லை. தன் நாட்டின் ஒரு பகுதியாகத் தான் காஷ்மீர் இருக்க வேண்டும் என்று நினைக்கிறது.

நம்மிடம் உள்ள காஷ்மீரே சர்ச்சைக்குரிய பகுதியாக இருக்க பாக்கிஸ்தானிடம் இருக்கும் காஷ்மீரும் எங்களுடையது தான் அதனை கைப்பற்றியே தீருவோம் என்ற வீரவசனத்தை சங்பரிவார் கும்பல் வீரதுறவிகள் கூறிக் கொண்டிருக்கிறார்கள். நடைமுறையில் சாத்தியம் இல்லாதது, போர் மூலம் பாக்கிஸ்தானை வென்று அந்தப் பகுதியை எல்லாம் கைப்பற்ற முடியாது என்று தெரிந்தாலும், மதவெறியை தூண்டுவதற்கும், அதன் மூலம் பா.ஜ.க. வின் ஓட்டு வங்கி பெருகுவதற்கும் இந்தப் பேச்சு அவர்களுக்கு உதவுகிறது. இப்படியே இது அரசியலாகி, நாட்டின் முக்கிய தீவிரவாத, கொளரவ பிரச்சனையாகி விட்டது.

உண்மையில் காஷ்மீர் இந்தியாவிற்கு சொந்தமானது தானா ? இது பற்றி படிக்க தொடங்கிய பொழுது காஷ்மீர் பிரச்சனையை இந்தியா கையாண்ட விதம், ஒரு இந்தியனான என்னாலேயே சகித்துக் கொள்ள முடியவில்லை. சுருக்கமாக கூறினால் காஷ்மீர் பிரிட்டிஷாரின் பிடியில் இருந்து விடுதலை பெற்று இந்தியாவின் பிடியில் சிக்கிக் கொண்டது என்பது தான் உண்மை. இந்தப் பிரச்சனையின் உண்மை நிலையை இந்தியா அரசு இயந்திரமும், ஊடகங்களும் மூடி மறைக்கவே நினைக்கின்றன. பொய்ச் செய்திகளும் திட்டமிட்டு பரப்ப படுகின்றன.

1947ல் இந்தியா விடுதலையான பொழுது இந்தியா, பாக்கிஸ்தான் என்ற இரு நாடுகளுடன் சேராமல் காஷ்மீர் தனி நாடாக இருந்தது. காஷ்மீர் மன்னர் ஹரி சிங் ஹிந்து. ஆனால் பெரும்பான்மை மக்கள் முஸ்லீம். அதனால் தனி நாடாக இருப்பது அவருக்கு வசதியாக இருந்தது. பிரச்சனையும் இல்லை. காஷ்மீர் மற்றும் பாக்கிஸ்தான் இடையேயான சாலைகள், வர்த்தகம் போன்றவற்றை இருக்கும் நிலையில் அப்படியே பராமரிக்க பாக்கிஸ்தானுடன் ஒரு ஒப்பந்தமும் செய்து கொண்டார் (standstill agreement ). ஆனால் இந்தியாவுடன் அவர் இது போன்ற ஒரு ஒப்பந்தத்தை செய்து கொள்ள வில்லை.

இந்தியா காஷ்மீரை தன்னுடன் இணைத்துக் கொள்ள நினைத்தது. அதனால் இத்தகைய ஒரு ஒப்பந்தத்தை ஏற்றுக் கொள்ள வில்லை என்றும் ஒரு கருத்து நிலவுகிறது.

1947ம் ஆண்டு அக்டோபர் மாதம் பாக்கிஸ்தானின் பஸ்தூன் பழங்குடிகள் காஷ்மீர் மீது படையெடுத்த பொழுது, ஸ்ரீநகரில் இருந்து தப்பி ஜம்மு வந்து இந்தியாவின் உதவியை நாடிய ஹிரி சிங் இந்தியாவுடன் காஷ்மீரை இணைக்க ஒரு ஒப்பந்தத்தை 1947ம் ஆண்டு அக்டோபர் 26ம் தேதி செய்து கொண்டார் (Instrument of Accession). இந்த இணைப்பு ஒப்பந்தத்தின்படி காஷ்மீர் இந்தியாவுடன் சேர்ந்தாலும், பாதுகாப்பு, வெளியுறவு, போன்ற துறைகள் மட்டும் தான் மைய அரசிடம் இருக்கும். எஞ்சிய துறைகள் காஷ்மீர் அரசின் வசம் இருக்கும்.

1947, அக்டோபர் 27ம் தேதி இந்திய படைகள் ஸ்ரீநகரில் நுழைந்தன. காஷ்மீர் இந்தியா வசம் வந்தது. காஷ்மீரின் நிலப்பரப்பில் 3ல் 2 பங்கு இந்தியாவிடமும், பாக்கிஸ்தான் கைப்பற்றிய 1 பங்கு ஆஸாத் காஷ்மீர் என்று பாக்கிஸ்தானிடமும் உள்ளது.

காஷ்மீர் இந்தியாவுடன் இணைந்ததை பாக்கிஸ்தானும், காஷ்மீரின் பெருவாரியான முஸ்லீம் மக்களும் ஏற்கவில்லை. தன்னிடம் ஒரு ஒப்பந்தம் செய்து கொண்ட நிலையில் மன்னர் ஹரி சிங்கிற்கு காஷ்மீரை இந்தியாவுடன் இணைக்க எந்த அதிகாரமும் இல்லை என்று பாக்கிஸ்தான் வாதிட்டது. மேலும் பெருவாரியான காஷ்மீர் முஸ்லீம்கள் பாக்கிஸ்தானுடன் இணையவே விரும்பியதும், பாக்கிஸ்தானின் வாதத்திற்கு வலுசேர்த்தது.

அப்பொழுது இந்தியாவின் கவர்னர் ஜெனரலாக இருந்த மவுண்ட் பேட்டன் இந்த இணைப்பு தற்காலிகமானது தான் என்றும், காஷ்மீர் மக்களின் விருப்பத்திற்கேற்ப இந்தியாவுடனோ, பாக்கிஸ்தானுடனோ அவர்கள் இணைந்து கொள்ள ஒரு ஓட்டெடுப்பு நடத்தி காஷ்மீரின் மக்களின் விருப்பத்திற்கேற்ப சுயநிர்ணயம் செய்து கொள்ளலாம் என்றும் அறிவித்தார். இதனை காந்தி, நேரு போன்ற தலைவர்களும் ஒப்புக் கொண்டனர்.

1948ம் ஆண்டு இந்தியா இந்தப் பிரச்சனையை ஐ.நா. சபையிடம் முறையிட்டது. காஷ்மீரில் ஒட்டெடுப்பு நடத்தப்பட்டு அம் மக்களின் விருப்பத்திற்கேற்ப காஷ்மீர் இந்தியாவுடனோ, பாக்கிஸ்தானுடனோ இணையலாம் என்று முடிவு செய்யப்பட்டது. இதனை இந்தியாவும், பாக்கிஸ்தானும் ஒப்புக் கொண்டனர். இன்று வரை அந்த ஓட்டெடுப்பு - Plebiscite நடத்தப்படவே இல்லை.

இடைக்கால ஏற்பாடாக மார்ச் 5, 1948ம் ஆண்டு, சேஷக் அப்துல்லா காஷ்மீரின் "பிரதமராக" நியமிக்கப்பட்டார். ஆம்...ஆரம்ப காலங்களில் காஷ்மீரின் முதல்வரை பிரதமர் என்று அழைப்பது தான் வழக்கம். இந்தியாவிற்கு தனி அரசியல் சாசனம், காஷ்மீருக்கு தனி அரசியல் சாசனம் என்பதும் வழக்கில் இருந்தது. அதாவது இந்தியாவின் பாதுகாப்பில் காஷ்மீர் "தனி நாடாக" சுயாட்சியுடன் இருந்தது. மற்ற மாநிலங்கள் போல இல்லாமல் காஷ்மீருக்கு என்று தனி அரசியல் சாசனம் இருக்க வாய்ப்பளிக்கும் காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து தரும் 370ம் சட்டப்பிரிவும் உருவாக்கப்பட்டது.

1951ம் ஆண்டு காஷ்மீரின் முதல் தேர்தல் நடந்தது. இந்த தேர்தலை தான் இந்தியா, ஒட்டெடுப்புக்கு இணையாக கூறிக் கொண்டிருக்கிறது. இந்த தேர்தலில் இந்தியாவின் ஆதரவு பெற்ற சேஷக் அப்துல்லா வெற்றி பெற்றார். மொத்தமுள்ள 75 இடங்களிலும் சேஷக் அப்துல்லா வெற்றி பெற்றார். இதில் 73 இடங்களில் சேஷக் அப்துல்லாவின் ஆதரவாளர்கள் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர். எஞ்சிய இரு தொகுதிகளிலும் அப்துல்லாவின் எதிர் போட்டியாளர்கள் கடைசி நேரத்தில் போட்டியில் இருந்து விலகிக் கொண்டார்கள். அதனால் மொத்தமுள்ள அனைத்து தொகுதிகளிலும் சேஷக் அப்துல்லா வாகை சூடிக் கொண்டார்.

ஆனால் உண்மையில் காஷ்மீர் மக்கள் இந்த தேர்தலில் கலந்து கொள்ளவில்லை. தேர்தலை புறக்கணித்தனர். அது மட்டுமில்லாமல் தேர்தலும் முறையாக நடக்க வில்லை. மைய அரசின் உதவியுடன் சேஷக் அப்துல்லாவின் எதிர்ப்பாளர்களாக கருதப்பட்டவர்களின் வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. மொத்தத்தில் சேஷக் அப்துல்லாவின் வெற்றிக்கு காஷ்மீர் மக்களின் ஆதரவை விட மைய அரசின் அதரவு தான் முக்கிய பங்கு வகித்தது. இதற்கு முழு காரணம் அப்போதைய இந்திய பிரதமர் ஜவகர் லால் நேரு. ஆம்.. முறையற்ற தேர்தலை இந்தியாவிற்கு அறிமுகம் செய்த பெருமை நேருவையே சாரும். ஏன் நேரு இதனை செய்தார் ? பிறகு பார்க்கலாம்.

காஷ்மீரின் பிரதமராக தன்னை நிலைநிறுத்திக் கொண்ட பின்பு, இந்தியாவுடனான இணைப்பிற்கு எதிராகவும் காஷ்மீருக்கு விடுதலை வேண்டும் என்றும் சேஷக் அப்துல்லா தன் நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டார். அது குறித்தும் பிரச்சாரம் செய்யத் தொடங்கினார். காஷ்மீரை இந்தியாவுடன் இணைக்கும் தீர்மானத்தை காஷ்மீரின் சட்டசபையில் நிறைவேற்ற மறுத்தார். இதனால் 1953ம் ஆண்டு சேஷக் அப்துல்லா கைது செய்யப்பட்டார். நேருவின் நெருங்கிய நண்பராக இருந்த அப்துல்லா, நேருவாலேயே கைது செய்யப்பட்டார்.

சேஷக் அப்துல்லாவிற்கு பிறகு காஷ்மீரின் பிரதமராக பக்ஷி குலாம் முகம்மது என்பவர் இந்திய அரசால் நியமிக்கப்பட்டார். காஷ்மீரின் சட்டசபையும் காஷ்மீரை இந்தியாவுடன் இணைக்கும் தீர்மானத்தை நிறைவேற்றியது. இதன் பிறகு சாதிக் என்பவர் பிரதமராக நியமிக்கப்பட்டார். அவர் பிரதமராக இருந்த பொழுது காஷ்மீரின் பிரதமர், ஜனாதிபதி என்று அழைக்கும் வழக்கம் மாறி முதலமைச்சர், கவர்னர் என்று அழைக்கும் முறை அமலுக்கு வந்தது. இவ்வாறு காஷ்மீர் படிப்படியாக இந்தியாவின் ஒரு மாநிலமாக மாற்றப்பட்டது. இந்த மாற்றத்திற்கு முக்கிய காரணம் ஜவகர்லால் நேரு தான்.

ஆரம்ப காலங்களில் காஷ்மீர் மக்களின் சுயநிர்ணயம், காஷ்மீர் மக்களின் விருப்பத்திற்கேற்ப தங்களை இந்தியாவுடனோ, பாக்கிஸ்தானுடனோ இணைத்துக் கொள்ளலாம் என்ற நிலைப்பாட்டில் இருந்த ஜவகர்லால் நேரு, பிறகு அதனை மாற்றிக் கொண்டு காஷ்மீரை இந்தியாவுடன் இணைத்துக் கொள்வதில் அதிக ஆர்வம் காட்டினார். பிரிட்டிஷாரின் ஆக்கிரமிப்பிற்கு எதிராக போராடிய நேரு, காஷ்மீர் மக்களின் விருப்பத்திற்கெதிராக அவர்களின் நாட்டை எதனால் இந்தியாவுடன் இணைக்க ஆர்வம் காட்டினார் ?

இதற்கு முக்கிய காரணம் காஷ்மீரை சார்ந்த அவருடைய பாரம்பரியம். காஷ்மீரி பண்டிட்களின் பூர்வீகமான காஷ்மீரை பாக்கிஸ்தானுக்கு கொடுக்க அவர் விரும்பவில்லை. தன்னுடைய பூர்வீக பூமியை தன்னுடன் வைத்துக் கொள்ள பெரும்பான்மையான காஷ்மீர் முஸ்லிம்களின் விருப்பத்தை துச்சமாக நினைத்தார். இதற்காக அவர் தேர்தல் முறைகேடு போன்றவற்றையும் கையாண்டார். 1951 தேர்தல் தொடங்கி இன்று வரை காஷ்மீர் மக்களின் உண்மையான ஆதரவு பெற்ற தலைவர்கள் தேர்தலில் வெற்றி பெற முடிவதில்லை. இந்திய அரசின் ஆதரவு பெற்ற தலைவர்கள் தான் காஷ்மீரில் வெற்றி பெற முடியும்.

இவ்வாறு ஆரம்பித்த காஷ்மீர் பிரச்சனை தான் இன்று காஷ்மீர் இளைஞர்களை ஆயுதம் ஏந்த வழிவகுத்துள்ளது. பாக்கிஸ்தானின் தூண்டுகோள் இருக்கிறது என்றாலும் அவர்களின் போராட்டம் நியாயமற்றது அல்ல.



காஷ்மீர் பிரச்சனைக்கு காரணம் நேருவின் பொறுப்பற்ற, சுயவிருப்பத்தால் எழுந்த தவறு தான். வரலாற்றின் முன் இந்த பிரச்சனையின் குற்றவாளி ஜவகர்லால் நேரு தான். அவர் இந்த பிரச்சனையை கையாண்ட விதம் தான் இன்றைக்கு இது ஒரு மிகப் பெரிய தீவிரவாத பிரச்சனையாக உருவாக காரணம்.

இந்த பிரச்சனையின் காரணமாக இந்தியாவிற்கும் பாக்கிஸ்தானுக்கும் நடந்த 4 போர்கள், அதில் மடிந்த உயிர்கள், தினமும் மடியும் மனித உயிர்கள், காஷ்மீர் மக்களின் இன்னல், இந்திய இராணுவத்திற்கு இந்த பிரச்சனையின் காரணமாக செலவிடப்படும் பெரும் தொகை என்று இன்றைக்கும் இந்தப் பிரச்சனை தொடர்ந்து கொண்டிருக்கிறது.



அது மட்டுமில்லாமல் இன்று இது தேசத்தின் கொளரவ பிரச்சனையாகி தீர்வு காண முடியாத சிக்கலான விடையமாகி விட்டது. 1948ல் தீர்க்கப்பட்டிருக்க வேண்டிய பிரச்சனை 2005 வரை தொடர்ந்து கொண்டிருக்கிறது.

இதில் பாதிக்கப்பட்டுள்ள காஷ்மீர் மக்களின் நிலை தான் பரிதாபமானது. அவர்களுக்கு வேண்டியது நிம்மதியான வாழ்க்கை. காஷ்மீர் இரண்டாக துண்டிக்கப்பட்டதால் பக்கத்து ஊர்களில் கால்நடையாக சென்று தங்கள் உறவினர்களை பார்த்து விடக் கூடிய தூரத்தில் இருந்த காஷ்மீர் மக்கள் தூண்டிக்கப்பட்டு விட்டனர். தங்கள் உறவினர்களை இன்று பாஸ்போர்ட், விசா போன்றவற்றை பெற்று தான் பார்க்க வேண்டிய நிலை. அதை பெறுவதற்கு தேவைப்படும் பணம். பெறுவதில் உள்ள சிக்கல். குறைந்தபட்சம் தங்கள் சொந்தங்களை சுலபமாக பார்க்க கூடிய சலுகையையாவது எதிர்பார்க்கின்றனர்.



பாக்கிஸ்தான் அதிபர் முஷ்ரப் இந்த பிரச்சனையை மன்மோகன் சிங் பிரதமராக இருக்கும் பொழுதே தீர்த்து விட வேண்டும் என்று கூறுகிறார். இந்தப் பிரச்சனை தீர்க்க கூடிய பிரச்சனை தானா ? என்ன தீர்வு உள்ளது இந்தப் பிரச்சனைக்கு ?

அடுத்த பதிவில் எழுதுகிறேன்

14 மறுமொழிகள்:

Thangamani said...

சசி, நன்றாக எழுதியிருக்க்கிறீர்கள்.
சென்னைப் போக்குவரத்தில் கொஞ்ச நேரம் காத்து நிற்க நேர்ந்தாலே அலுத்துச் சலித்துக்கொள்ளுவோர்கள் காஷ்மீர் மக்களின் துயரெதையும் உணராமல் மனித்ச்சங்கிலி போராட்டம் நடத்துவது போலல்லாமல், காஷ்மீர் மக்களை மனதில் கொண்டு எழுதியுள்ளீர்கள். நன்றி.

2:50 AM, June 27, 2005
rajkumar said...

சசி,

தங்களது ஹர்சத் மேத்தா தொடர் படித்து மிகவும் வியந்து போனேன்.

தற்பொழுது காஷ்மீர். தூள் கிளப்புங்கள்
அன்புடன்

ராஜ்குமார்

7:10 AM, June 27, 2005
குழலி / Kuzhali said...

அவ்வளவாக யாரும் எழுத தயங்கும் விடயம் இது, எளிதாக தேசத்துரோக முத்தப்படும் தலைப்பு இது நன்றாக எழுதியுள்ளீர், பாராட்டுக்கள்

7:32 AM, June 27, 2005
Balaji-Paari said...

மிகவும் நன்றாக எழுதி உள்ளீர்கள். இதில் உள்ள தகவல்கள் நன்றாக கோர்வையாக சொல்லப்பட்டுள்ளது. மிகவும் நிதானமான நடையில் நன்றாக வந்துள்ளது. அடுத்த பதிவை எதிர் நோக்கியுள்ளேன்.

12:50 PM, June 27, 2005
டண்டணக்கா said...

சசி, காஷ்மீர் மக்களின் பாதிக்கப்பட்ட நிலை பற்றிய உங்களின் அதாங்கம் அர்த்தம் நிறைந்தது, அம்மக்கள் மீதான உங்களின் கவலையை புரிய வைக்கிறது. அவர்களுக்கு தேவையான நிம்மதியா வாழ்க்கை பற்றி இரண்டாம் கருத்து இருக்கவே முடியாது. ஆனால் உங்களின் இந்த கட்டுரையின் வெளிப்பாடு எனக்கு ஆர்சர்யத்தை கொடுக்கிறது. இக்கட்டுரை இன்னும் தெளிவாக எழுதப்பட்டிருக்க வேண்டும் என எண்ணுக்றேன். மொத்த பிரச்சனையின் * ஒரே முகம் * இந்தியா என்பது போல் உள்ளது. மேலும் பல தகவல்களை நீங்கள் கூறாமல் விட்டு விட்டதே அத்தகைய தோற்றத்திற்க்கு காரணம், உங்களின் நோக்கம் அதுவல்ல என நினைக்கிறேன். ஒரு 2 வருடத்திற்க்கு முன்பு இதை பற்றி நான் நிறைய வாசித்தேன், பெரும் பாலும் ஞாபகத்தில் இல்லை, இருப்பினும் சிலவற்றை என்னால் மறுக்கமுடியும்.
/*
இன்று வரை அந்த ஓட்டெடுப்பு - Pலெபிச்cஇடெ நடத்தப்படவே இல்லை.
*/
இதற்க்கு கையெலுத்திடப்பட்ட ஆவணத்தில் ஒட்டெடுப்புக்கு முன் - என நிறைய நிபந்தனைகள் உண்டு - பாகிஸ்தான் படை அஸாத் காஷ்மீரை விட்டு வெளியேற வேண்டும் என்பது உட்பட, இன்னும் நிறைய. அவைகளையும் நீங்கள் படித்து, அதை பற்றியும் பதிந்து இருக்க வேண்டும்.

/*
இவ்வாறு ஆரம்பித்த காஷ்மீர் பிரச்சனை தான் இன்று காஷ்மீர் இளைஞர்களை ஆயுதம் ஏந்த வழிவகுத்துள்ளது.
*/
உங்களுக்கு பட்டாளத்து நண்பர்கள் இருந்தால், அதுவும் காஷ்மீரில் காவல் புரிந்தவர்கள் இருந்தால், அங்கு ஆயுதம் ஏந்தி வருபவர்கள் யார் என்று ஒரு கேள்வி கேளுங்கள். அவர்கள் காஷ்மீர் இளைஞரகளாக இருந்தால் கூட நியாயப்படுத்தி விடலாம், விடுதலை வேள்வி என்று. அனால் வருவது பெரும்பாலும் ஆப்கான். இதை என்ன கோணத்தில் பார்ப்பீர்கள்?

/*
காஷ்மீர் பிரச்சனைக்கு காரணம் நேருவின் பொறுப்பற்ற, சுயவிருப்பத்தால் எழுந்த தவறு தான். வரலாற்றின் முன் இந்த பிரச்சனையின் குற்றவாளி ஜவகர்லால் நேரு தான்.
*/
நான் ஒன்றும் நேருவின் அபிமானி அல்ல, ஆனால் நேருவின் பொறுப்பற்ற, சுயவிருப்பத்தனத்தை சுட்டிக்க்காட்டும் உங்கள் பதிப்பு, பாகிஸ்தானின் கயவாளி தனத்தையும், பொறுக்கித் தனத்தையும் விரிவாக எடுத்துரைக்கவில்லையே, எதனால்?

இன்னும் இதை பற்றி என்னால் விரிவாக, ஆதாரத்துடன் என்னால் மறுக்கமுடியும். அனால் அது தேவையில்லை, உங்களின் நோக்கம் காஷ்மீர் மக்கள் மீது எற்பட்ட வருத்தமே அன்று வேறில்லை என எண்ணுகிறேன். ஆனால் ஒரு வேண்டுகோள், இப்படிப்பட்ட பிரச்சனையில், பாகிஸ்தான் தரப்பினை பற்றிய உண்மையும் வைத்திருக்க வேண்டும்.

-டண்டணக்கா.

2:37 PM, June 27, 2005
Saravan said...

I agree with the points of dandanakka. the views expressed in your blog are one sided.

>>சுருக்கமாக கூறினால் காஷ்மீர் பிரிட்டிஷாரின் பிடியில் இருந்து விடுதலை பெற்று இந்தியாவின் பிடியில் சிக்கிக் கொண்டது என்பது தான் உண்மை. இந்தப் பிரச்சனையின் உண்மை நிலையை இந்தியா அரசு இயந்திரமும், ஊடகங்களும் மூடி மறைக்கவே நினைக்கின்றன. பொய்ச் செய்திகளும் திட்டமிட்டு பரப்ப படுகின்றன.

You cant blame the media for this. In India it is illegal to show the Indian map without Pakisthan occupied Kashmir and Aksai Chin.

>>1948ம் ஆண்டு இந்தியா இந்தப் பிரச்சனையை ஐ.நா. சபையிடம் முறையிட்டது.

After 1948 war, India was at a favarouble position and Nehru done a major blunder by taking the issue to UN.

>>காஷ்மீரில் ஒட்டெடுப்பு நடத்தப்பட்டு அம் மக்களின் விருப்பத்திற்கேற்ப காஷ்மீர் இந்தியாவுடனோ, பாக்கிஸ்தானுடனோ இணையலாம் என்று முடிவு செய்யப்பட்டது. இதனை இந்தியாவும், பாக்கிஸ்தானும் ஒப்புக் கொண்டனர். இன்று வரை அந்த ஓட்டெடுப்பு - Plebiscite நடத்தப்படவே இல்லை.

The UN imposed a cease-fire, and mandated a plebiscite among the entire Kashmiri population, subject to the withdrawal of all Pakistani forces, regular and irregular, and the plebiscite to be held under Indian auspices. Pakistan, however, refused to abide this resolution. Whose fault is this India's or Pakistan's ?

Pakistan still asks for a plebiscite in Kashmir under the UN. However, India is no longer willing to allow a plebiscite, mainly because of the fact that the large parts of Kashmir that have been under Pakistani control since 1948 have been assimilated into Pakistan, as part of the Pakistani province called "Northern Areas". There are reports that since 1948, over the last 56 years, the Pakistani government has been settling non-Kashmiris from other parts of Pakistan (especially retired Pakistani Army personnel) in those areas, completely changing the demographics of the region, to the extent that the original (1948) inhabitants of Kashmir are now in a minority in their own homeland.

I cant comment on the elections because I dont have much information.

>>ஆரம்ப காலங்களில் காஷ்மீர் மக்களின் சுயநிர்ணயம், காஷ்மீர் மக்களின் விருப்பத்திற்கேற்ப தங்களை இந்தியாவுடனோ, பாக்கிஸ்தானுடனோ இணைத்துக் கொள்ளலாம் என்ற நிலைப்பாட்டில் இருந்த ஜவகர்லால் நேரு, பிறகு அதனை மாற்றிக் கொண்டு காஷ்மீரை இந்தியாவுடன் இணைத்துக் கொள்வதில் அதிக ஆர்வம் காட்டினார். பிரிட்டிஷாரின் ஆக்கிரமிப்பிற்கு எதிராக போராடிய நேரு, காஷ்மீர் மக்களின் விருப்பத்திற்கெதிராக அவர்களின் நாட்டை எதனால் இந்தியாவுடன் இணைக்க ஆர்வம் காட்டினார் ?
At the time of Independence princely states of Jammu and Kashmir, Junagadh, and Hyderabad didnt join the Indian union. Junagadh joined Indian Union after protests from its people. For Nizam, Sardhar Patel sent Indian army to Hyderabad and they surrendered to India. J&K issue was handled by Nehru and he botched it. Even Dravidian parties asked for a seperate home land in south india. are you saying that Indian Union should conduct a plebiscite in these states ?


>>இவ்வாறு ஆரம்பித்த காஷ்மீர் பிரச்சனை தான் இன்று காஷ்மீர் இளைஞர்களை ஆயுதம் ஏந்த வழிவகுத்துள்ளது. பாக்கிஸ்தானின் தூண்டுகோள் இருக்கிறது என்றாலும் அவர்களின் போராட்டம் நியாயமற்றது அல்ல.

Insurgency in Kashmir started in the year of 1989. Pakistan may claim that insurgents are indegenious fighters, but most of the insurgents are from Afgans aided by pakistan's ISI.


>>பாக்கிஸ்தான் அதிபர் முஷ்ரப் இந்த பிரச்சனையை மன்மோகன் சிங் பிரதமராக இருக்கும் பொழுதே தீர்த்து விட வேண்டும் என்று கூறுகிறார்.
I think this will be difficult. Musharaff is not a statesman and I am not sure whether future pak leaders will abide by the agreement.

India can not leave kashmir now. It will do more harm to the Indain state if it leaves the Kashmir. probable solution is to maintain status quo.


Some contents in this comment are taken from Wikipedia.

10:23 PM, June 27, 2005
தமிழ் சசி | Tamil SASI said...

உங்கள் அனைவரின் கருத்துகளுக்கும் நன்றி

காஷ்மீரின் விடுதலை என்ற பதிவின் முதல் பகுதி தான் இது. இந்தப் பதிவை நடுநிலைமையுடனே எழுத முற்பட்டுள்ளேன். பாக்கிஸ்தான் சார்பாக எழுத வேண்டும் என்ற நோக்கமோ, அவசியமோ எனக்கு இல்லை.

டண்டணக்கா, சரவணன் ஆகியோரின் கருத்துகளைத் தான் நாம் ஆரம்பகாலங்களில் இருந்து இந்திய ஊடகங்களில் கேட்டு கொண்டிருக்கிறோம். ஆனால் அந்த செய்திகளை கடந்த உண்மையும் இருக்கிறது, அது எந்த இந்திய ஊடகங்களும் பெரிதாக எழுதுவதில்லை என்பது தான் என் கருத்து.

/*

Musharaff is not a statesman and I am not sure whether future pak leaders will abide by the agreement.

*/

பாக்கிஸ்தானுடன் இந்தியா சமரசம் செய்து கொள்ள ஒரு வாய்ப்பு உண்டு என்றால் அது முஷ்ரப் அதிபராக இருக்கும் பொழுது நடந்தால் தான் உண்டு. ஏனெனில் பாக்கிஸ்தானின் ஜனநாயக தலைவர்கள் வெறும் மொம்மைகள் தான். அந்த தலைவர்களை ஆட்டுவிக்கும் முகுடி முஷ்ரப் போன்ற இராணுவத் தலைவர்களிடம் தான் இருக்கிறது.

/*

probable solution is to maintain status quo

*/

பிரச்சனையே தற்போதைய நிலை தான். ஆனால் நீங்கள் அதையே எப்படி தீர்வாக சொல்கிறீர்கள் ? இதனை எக் காலத்திலும் பாக்கிஸ்தான் ஒப்புக் கொள்ளப் போவதில்லை.

/*

அவர்கள் காஷ்மீர் இளைஞரகளாக இருந்தால் கூட நியாயப்படுத்தி விடலாம், விடுதலை வேள்வி என்று. அனால் வருவது பெரும்பாலும் ஆப்கான்.

*/

இதை அடுத்து வரும் பதிவுகளில் எழுதுகிறேன். 1989ல் வெடித்த தீவிரவாத பிரச்சனை விஸ்ரூபம் எடுத்து ஜிகாத் என்று மாறி, தாலிபான்கள் நுழைந்து அதனால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் கூட காஷ்மீர் மக்கள் தான்.

/*

Even Dravidian parties asked for a seperate home land in south india. are you saying that Indian Union should conduct a plebiscite in these states ?

*/

You are trying to make a unreasonable argument here. Even in this case i can say YES if majority of the people wanted a plebiscite.

11:36 PM, June 27, 2005
Voice on Wings said...

நல்ல முயற்சி. இரு தரப்பு வாதங்களிலும் உண்மையிருக்கிறது.

Plebescite சாத்தியப்படுமா என்றுத் தெரியவில்லை. காஷ்மீரின் இரு பகுதிகளிலும் demographics மாறியிருப்பதென்னவோ உண்மை. பெரும்பான்மை மக்களின் நலன் குறித்து எண்ணுகையில் அங்கிருந்து குடிபெயர்க்கப்பட்ட சிறுபான்மையினரையும் (ஐந்து இலட்சம் மக்கள்) குறித்து யோசிக்கவேண்டும். அவர்கள் இந்துக்கள் என்பதாலேயே அவர்களது துயரை sweeping under the carpet செய்வதும் நேர்மையான அணுகுமுறையாகத் தெரியவில்லை.

விக்கிபீடியாவை மேற்கோள் காட்டுவதில் எனக்கு உடன்பாடில்லை. அந்த கட்டுரை neutral point of view (NPOV) கிடையாது என்று அங்கேயே எச்சரிக்கை இடப்பட்டிருந்ததை நண்பர் சரவண் கவனித்திருப்பாரென்று நம்புகிறேன்.

தீர்வு என்று கேட்டால் அனைத்து தரப்புகளும் இறங்கி வரவேண்டும். சமரசம் செய்து கொள்ள வேண்டும். முக்கியமாக அங்குள்ள (அனைத்து மதங்களையும் சார்ந்த) பூர்வீக மக்களின் தேவைகள், எண்ணங்கள், கருத்துக்கள், கனவுகள் ஆகியன கணக்கில் கொள்ளப்பட வேண்டும். இந்தியா மற்றும் பாகிஸ்தானின் விருப்பங்களும் தேவைகளும் இரண்டாம்பட்சமே.

12:50 AM, June 28, 2005
Saravan said...

/*விக்கிபீடியாவை மேற்கோள் காட்டுவதில் எனக்கு உடன்பாடில்லை. அந்த கட்டுரை neutral point of view (NPOV) கிடையாது என்று அங்கேயே எச்சரிக்கை இடப்பட்டிருந்ததை நண்பர் சரவண் கவனித்திருப்பாரென்று நம்புகிறேன்.
*/

ya i know the wikipedia Kashmir article is disputed for neutrality. i have copied some of the comment from the wikipedia. this does not mean that i got these facts only from wikipedia. i have given the comments only to the portions sections that i have known previously(before reading the wikipedia article). for example i know little about kashmir elections, so i didnt comment on that.


/*டண்டணக்கா, சரவணன் ஆகியோரின் கருத்துகளைத் தான் நாம் ஆரம்பகாலங்களில் இருந்து இந்திய ஊடகங்களில் கேட்டு கொண்டிருக்கிறோம். ஆனால் அந்த செய்திகளை கடந்த உண்மையும் இருக்கிறது, அது எந்த இந்திய ஊடகங்களும் பெரிதாக எழுதுவதில்லை என்பது தான் என் கருத்து.
*/
i am saying you shud be balanced while writing these types of topics. you have written only about the pakistan's argument which is not 100% true.

/*
பிரச்சனையே தற்போதைய நிலை தான். ஆனால் நீங்கள் அதையே எப்படி தீர்வாக சொல்கிறீர்கள் ? இதனை எக் காலத்திலும் பாக்கிஸ்தான் ஒப்புக் கொள்ளப் போவதில்லை.
*/

sorry my comment in this was not clear. my solution of status quo means conversion of LoC into an international border. i dont know better solution than this for the current situation. yes pakistan will not accept anything less than a full kashmir but you have to see the ground realities.

/*
You are trying to make a unreasonable argument here. Even in this case i can say YES if majority of the people wanted a plebiscite.
*/

All the other regions that are attached to the Indian Union involuntarily has joined the main stream. problem is only with kashmir because of India's mishandling of kashmir affairs in 1948 and pakistan.

9:21 PM, June 28, 2005
அழகப்பன் said...

மிகவும் உணர்ச்சிபூர்வமான ஒரு பதிவு. எவருமே தொடத்தயங்குகிற ஒரு தலைப்பு. அதிலும் குறிப்பாக என் போன்ற முஸ்லிம்கள் நினைத்துப் பார்க்கவே முடியாத ஒன்று.

இந்திய ஊடகங்களால் மறைக்கப்பட்ட அல்லது மறக்கடிக்கப்பட்ட பல விஷயங்களை கோர்வையாக எழுதியிருக்கிறீர்கள். அவை எங்கிருந்து பெறப்பட்டன, அவற்றின் நம்பகத் தன்மை இவற்றை நாம் பார்க்க வேண்டும்.

ஹரிசிங்குடன் இந்தியா செய்து கொண்ட ஒப்பந்தத்தின்படி, இந்திய ராணுவம் காஷ்மீரில் நுழைந்தது சரி என்றே எனக்குத் தோன்றுகிறது. (காரணம் அப்போது காஷ்மீரில் மக்களாட்சி நடைபெறவில்லை. மன்னராட்சியின் தத்துவப்படி அது சரியே.) ஆனால் அதற்குப்பின் ஐ.நா. தீர்மானத்தின்படி ஓட்டெடுப்பு நடத்தப்படாததில்தான் இந்தியா மற்றும் பாக்கிஸ்தான் இருநாடுகளுமே தவறிழைத்துள்ளன. தவறிழைத்துக் கொண்டிருக்கின்றன. இப்போது காஷ்மீரில் மக்களைப் பிளந்துதான் இருநாடுகளும் ஆட்சி செய்து கொண்டிருக்கின்றன.

இந்தியாவை ஆதரிக்கும் ஒரு பிரிவு, பாக்கிஸ்தானை ஆதரிக்கும் ஒரு பிரிவு, தனி சுதந்திர நாடு கொள்கையை ஆதரிக்கும் ஒரு பிரிவு என்று மக்களை இரு அரசுகளும் கூறு போட்டுள்ளன. ஆனால் இந்த பிரச்சனையை பாக்கிஸ்தானிலும், இந்தியாவிலும் மதக்கண்ணோட்டத்துடன் பார்ப்பதால் இந்த பிரச்சனையை தீர்ப்பது மிக எளிதான காரியம் அல்ல. அது மட்டுமின்றி இரு அரசுகளுமே உள்ளூர் அமைப்புகளை கலந்தாலோசிக்காமல் அவர்களுக்குள்ளாகவே பேசிக்கொள்வது ஒரு வகையான ஏகாதிபத்தியமே.

9:59 PM, August 07, 2005
Anonymous said...

THANGALATHU AAYVIN THUVAKKATTHIL KOORIYULLATHUP PONTRU, NAAM INTHAP PIRACHANAIYAY NAERMAIYUDAN ANUKAVAENDIYATHUM, MARAIKKAP PATTA UNMAIKALAI VELIK KONARA VAENDIYATHUM AvASIYam!

9:35 AM, October 22, 2005
Inquiring Mind said...

The whole episode by sasi is entirely in view of an outsider. I dont know where sasi is staying now. I dont know whether sasi has any patriotism for india.
THE ONLY MISTAKE DONE BY NEHRU IS TAKING THE KASHMIR ISSUE TO UN.
General Kariappa, the then the head of army, told Nehru that within a week, our army could capture the whole of kashmir. When our forces were strong and continuously advancing, nehru took it to UN for no reason. Perhaps, he could have thought that by taking this to UN would make him the man of peace. But at what cost? At the cost of Nation.

And those who support pakistan, I will say one thing. The existence of pakistan itself is against the wishes of the pakistan people. Can they ask for a plebiscite there? Even today, the baloch rebels fight with pakistan army for independence. Can you ask for a plebiscite there?

Please stop posting these kind of stupid things in your blog. For you, the RSS is communal, Muslim league is secular. Hindu is communal, muslim is secular. Muslims can claim whatever they want, while hindus have no right over any claims, because they are majority.

"Nationalism should be religion. Nationalism should be a spirit. It should be present in each and every breathe of ours"

Dont bring down india, in the pursuit of being neutral. In this world, where everyone want to grab everything, its ultimate stupidity that we give away the land that we have solemn right to claim.

And you have said about the wishes of the people. Did the kashmiris come and tell you their wishes? Dont portray that the kashmiris were suffering at the hands of india. Its because of pakistan, that they were suffering now.

when pakistan have fought 3 wars to capture kashmir which was accessed to india, why cant we fight a war to re-capture our lost kashmir land.
Kindly read the atrocities committed by the pashtun tribals and the pakistan army during the 1947 war.

And please stop insulting india in the name of nuetrality. Today, no body is neutral in this world. Everyone demands their own needs, and we should also do that.

2:17 AM, February 07, 2006
தமிழ் சசி | Tamil SASI said...

Senthil,

I am not trying to "become" Neutral.

I am just presenting the facts without any Bias

I am an Indian. But that does not mean that i have to support every action of India even though it is amoral

8:33 PM, February 07, 2006
Sanjai Gandhi said...

//பாக்கிஸ்தானுடன் இந்தியா சமரசம் செய்து கொள்ள ஒரு வாய்ப்பு உண்டு என்றால் அது முஷ்ரப் அதிபராக இருக்கும் பொழுது நடந்தால் தான் உண்டு. ஏனெனில் பாக்கிஸ்தானின் ஜனநாயக தலைவர்கள் வெறும் மொம்மைகள் தான். அந்த தலைவர்களை ஆட்டுவிக்கும் முகுடி முஷ்ரப் போன்ற இராணுவத் தலைவர்களிடம் தான் இருக்கிறது.//

சசி.. இதை இப்போது படிக்கும் போது உங்கள் மனநிலை எபப்டி இருக்கிறது? இபோதும் இதே கருத்து தானா? இன்று முஷாரப்பின் வாழ்வே கேள்விக் குறி.

பாக்கிஸ்தானை பொறுத்தவரை எதுவுமே அல்லது யாருமே நிலையானவர்களோ போற்றி பின்பற்றக் கூடியவர்களோ இல்லை. ஒப்பந்தமோ வாய் வழி உத்தரவுகளோ அலுவல் கோப்புகளோ.. எதுவாயினும் மீறுவதற்கானவை தான் என்பது அவர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை.. ஆகவே காஷ்மிர் விவகாரத்தை பாகிஸ்தானியர்களை கலந்தாலோசித்து ஒருநாளும் தீர்க்க முடியாது.

ஒருவேளை காஷ்மிருக்கு சுதந்திரம் வழங்கினால் அடுத்த நாள் அது பாகிஸ்தானால் ஆக்கிரமிக்கப் படும். அதற்கு பதில் சிறப்பு அரசியல் அந்தஸ்துடன் அந்த மாநிலம் இந்தியாவுடன் தொடருவதே சிறந்தது எனத் தோன்றுகிறது.

12:42 AM, October 25, 2008