காஷ்மீர் பற்றிய குறும்படம்

காஷ்மீரில் உள்ள உண்மையான நிலை இந்திய ஊடகங்களில் வெளி வருவதேயில்லை. நேர்மையான செய்தி நிறுவனமாக தங்களை கூறிக்கொள்ளும் பல இந்திய செய்தி நிறுவனங்கள் காஷ்மீர் பற்றிய எந்த உண்மையையும் வெளியிடுவதில்லை. அங்கு நடக்கும் மனித உரிமை மீறல்கள் பலருக்கு தெரிவதே இல்லை. இந்தியாவில் இருந்து ஒரு பிடி மண்ணை கூட விட மாட்டோம் என்று கூறும் வலது சாரி இயக்கத்தினர் மற்றும் தீவிர தேசபக்தியினர் காஷ்மீர் மக்களின் இன்னல்களை தெரிந்து கொள்வது முக்கியம்.

காஷ்மீர் இந்தியாவிற்குச் சொந்தமா, பாக்கிஸ்தானுக்குச் சொந்தமா என்பதை விட காஷ்மீர் மக்களுக்குச் சொந்தமானது, அவர்களின் முடிவு தான் முக்கியமானது என்பதை நாம் உணரவேண்டும். ஆனால் நம்மில் பலர் இதனை புரிந்து கொள்வதேயில்லை. உண்மையை கூறுபவர்களை தேச விரோதிகள் என்றும் முத்திரை குத்தி விடுகிறோம்.

காஷ்மீரில் இயங்கும் இஸ்லாமிய தீவிரவாத இயக்கம் மற்றும் இந்திய இராணுவத்தினரால் பாதிக்கப்படுவது அப்பாவி காஷ்மீர் மக்கள் தான். இராணுவம், தீவிரவாதிகள் என இவர்கள் இருவரிடம் சிக்கிக் கொண்டு தங்களின் அன்றாட வாழ்க்கையை கடும் இன்னல்கள், மனித உரிமை மீறல்கள் இவற்றிடையே கழிக்கும் காஷ்மீர் குறித்த ஒரு குறும்படத்தை இன்று பார்த்தேன்.

காஷ்மீர் பற்றிய இந்தப் படம் 2004ல் எடுக்கப்பட்டது. இது போன்ற ஒரு படத்தை இது வரையில் நான் எந்த இந்திய ஊடகங்களிலும் பார்க்கவில்லை. இந்திய இராணுவத்தின் அடக்குமுறைகளால் இந்தியாவின் மீது காஷ்மீர் மக்களுக்கு அதிருப்தி ஏற்பட்டுள்ளதாக இந்தக் குறும்படம் தெரிவிக்கிறது.



இந்தப் படத்தை UNREPORTED WORLD என்ற செய்திப் பிரிவிற்காக Channel 4 தயாரித்திருக்கிறது

இந்த ஆங்கில வலைத்தளம் மூலம் இது எனக்கு காணக்கிடைத்தது.

இருவருக்கும் எனது நன்றியுடன் இந்தக் குறும்படத்தை இங்கு பயன்படுத்திக் கொள்கிறேன்