மேதா பட்கர், இயற்கை
மேதா பட்கர், நர்மதா அணைக்கட்டு திட்டத்தை எதிர்த்து இருந்த உண்ணாவிரதம் அவரது கைது மூலம் முடிவிற்கு வந்திருக்கிறது. உண்ணாவிரதத்தின் 8வது நாளில் காவல்துறையினர் அவரை கைது செய்து மருத்துவமனையில் அனுமதித்து இருக்கின்றனர். 
சர்தார் சரோவர் அணைக்கட்டு திட்டம் இந்தியாவில் நடந்து கொண்டிருக்கும் போராட்டங்களில் வித்தியாசமான போராட்டம். தங்களுடைய வாழ்க்கை தேவைகளுக்கான போராட்டமாக மட்டுமில்லாமல் வாழ்க்கை முறைக்கான போராட்டமாகவும் இது உள்ளது. நர்மதா நதியின் மீது 30பெரிய அணைகள், 135சிறிய அணைகள் மற்றும் 3000குட்டி நீர் தடுப்பு நிலைகளை உருவாக்கும் திட்டத்திற்கு எதிராகத் தான் இந்த போராட்டம் தொடங்கியது. இந்த திட்டத்தின் மூலம் பல கிராமங்கள் நீரில் முழ்கும் நிலையும், பல்லாயிரக்கணக்கான மக்கள் இடம்மாறக் கூடிய சூழ்நிலையும் எழுந்துள்ளது. மக்களின் வாழ்க்கை தேவைகள் தவிர இங்கிருக்கும் பல பழங்குடி மக்களின் வாழ்க்கை முறைகளையும் இந்த திட்டம் அடியோடு மாற்றி விடும் என்று நர்மதா அணை எதிர்ப்பாளர்கள் வாதிடுகின்றனர்.

இந்த திட்டம் மூலம் மின்சாரம், குடிநீர் பல ஊர்களுக்கு வழங்க முடியும் என்றும் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு இது உதவும் என்றும் அரசு வாதிடுகிறது. ஆனால் இந்த திட்டம் தொடங்கப்பட்ட பொழுது இங்குள்ள மக்களுக்கு நிவாரணம் வழங்க அரசு எந்த ஒரு சரியான திட்டத்தையும் வைத்திருக்கவில்லை. இன்று மேதா பட்கர், அருந்ததி ராய் போன்றவர்கள் இந்தப் பிரச்சனையை மிகப் பெரிய போராட்டமாக மாற்றியப் பிறகு மேதா பட்கர் இந்தியா முழுவதும் பிரபலமாகி இந்தப் பிரச்சனையையும் பிரபலமாக்கியதால் அரசு சரியான நிவாரணம் வழங்க வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. அதுவும் தவிர இந்தப் பிரச்சனை நீதி மன்றத்திற்கு சென்று இன்று அரசு சரியான நிவாரண திட்டங்களை வைத்திருப்பதாகவும் நீதி மன்றம் கூறியிருக்கிறது.
இங்கு அரசு கூறிக் கொண்டிருப்பதெல்லாம் நிவாரணங்களே. ஆனால் பிரச்சனை மக்களின் இடமாற்றம், சுற்றுப்புறச்சூழல், வாழ்க்கை முறை போன்றவை தான். அதனை அரசாங்கத்தின் எந்த நிவாரணங்களும் ஈடுசெய்து விட முடியாது.
வளர்ச்சி, பொருளாதார தேவைகள் இவற்றுக்கிடையே இம் மக்களின் பிரச்சனைகள் அர்த்தமற்றவையாக பலருக்கு தோன்றவே செய்கிறது. நீதிமன்ற தீர்ப்பு கூட இந்தப் பிரச்சனையின் உணர்வுகளை புரிந்து கொள்ளாமல், இழப்பீடு, நிவாரணம் என்ற ரீதியில் தான் இருந்தது.
இவ்வாறு பெரிய அணைகள் அங்கிருக்கும் காடுகளையும், கிராமங்களையும், இயற்கையான அத்தனை அம்சங்களையும் அழிக்கிறது. நீர்நிலைகள் தடம்மாறும் பொழுது பூமியின் நிலையிலும் நிறைய மாற்றங்கள் ஏற்படுகின்றன. இதுவெல்லாம் சுற்றுப்புறச் சூழலுக்கு பாதகத்தையேச் செய்யும்.
வளர்ச்சி எத்தனையோ மோசமான மாற்றங்களை நமக்கு ஏற்படுத்தி இருக்கிறது. சென்னையே அதற்கு மிகச் சரியான உதாரணம். கூவம் நதியில் இருந்து, பள்ளிக்கரணை சதுப்பு நிலங்கள் வரை நாம் பலவற்றை இழந்திருக்கிறோம். பள்ளிக்கரணை சதுப்பு நிலங்களில் பலவிதமான நாரைகளும், பறவைகளும் வருவது வழக்கம். ஆனால் இன்று குப்பை கொட்டும் இடமாக பள்ளிக்கரணை மாறிவிட்டது. சென்னை முழுவதும் பல நீர்நிலைகள் ஒரு காலத்தில் இருந்தன. ஆனால் இன்று தண்ணீருக்கு திண்டாடும் நிலைக்கு நாம் மாறிவிட்டோம்.
இன்றைய யதார்த்த வாழ்க்கையில் இயற்கையை ஒட்டிய வாழ்க்கை முறை மிகக் கடினமான ஒன்று தான். அணைக்கட்டுகளில் தொடங்கி, நாட்டின் பல வளர்ச்சிப் பணிகளில் பாதிக்கப்படுவது வறுமைக்கோட்டின் கீழ் இருக்கும் மக்கள் தான். நர்மதா அணைக்கட்டு திட்டப்பகுதியின் நதியோரங்களில் இருக்கும் மக்கள் எல்லாம் பழங்குடியினர் மற்றும் தலித் மக்கள் தான். அதனாலேயே அரசாங்கத்திற்கு இந்தப் பிரச்சனை மீது பெரிய அக்கறை ஏற்படுவதில்லை.
வளர்ச்சி, பொருளாதாரம் என்று வாதிடும் நாம் தான் முதுமலை போன்ற காட்டு பகுதிகளுக்கு செல்லும் பொழுது நம்மையே மறந்து விடுகிறோம். அந்தக் காடுகளில் மரம் வெட்டுபவர்களை நினைத்து நாம் ஆவேசம் கொள்கிறோம். இயற்கையை காப்பாற்ற வேண்டும் என்ற உணர்வு அந்தக் காட்டுப் பகுதியில் ஏற்படுகிறது. கரை புரண்டோடும் நீர் நிலைகளை மழைக்காலங்களில் பார்க்கும் பொழுது மகிழ்ச்சி கொள்கிறோம். இது ஒரு மிகுந்த பரவச நிலையை நமக்கு ஏற்படுத்துகிறது.
ஆனால் நகரத்திற்கு வந்தவுடன் அதுவெல்லாம் மறந்து போய் விடுகிறது. இயற்கையின் எழில் கொஞ்சும் பகுதிகள் சில நாட்கள் ரசிப்பதற்கு மட்டுமாகவே நமக்கு தெரிகிறது. வளர்ச்சி தேவைகளுக்கு முன்பாக நர்மதா அணைக்கட்டு போன்ற பிரச்சனைகள் அர்த்தமற்றவையாக நமக்கு மாறி விடுகிறது. இயற்கை மீது பெரிய அளவில் அக்கறை நமக்கு vacation எடுக்கும் பொழுது தான் வருகிறது. பிறகு அதன் மேல் எந்த அக்கறையும் இருப்பதில்லை.

இந்த அணைக்கட்டு திட்டமும் நிற்கப் போவதில்லை. நாட்டின் வளர்ச்சிக்காக அழிக்கப்பட்ட பல இயற்கையான வாழ்விடங்களில் இந்தப் பகுதியும் ஒன்றாக மாறப் போகிறது.