தமிழகத்தில் ஊடகங்கள் பல கணிப்புகளை வெளியிட்டுக் கொண்டிருக்க ஓரளவிற்கு நம்பகத்தன்மையுடன் இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட கருத்துக் கணிப்பான CNN-IBN-HINDU கருத்துக் கணிப்பு, இன்று வெளியிடப்பட்டுள்ளது. பிற கருத்துக் கணிப்புகளில் குறிப்பாக குமுதத்தில் ஏதோ போனால் போகட்டும் என்று மாவட்டத்திற்கு சில தொகுதிகள் மட்டும் திமுகவிற்கு பெரிய மனதுடன் வழங்கியுள்ளனர். அனைத்து தொகுதிகளையும் அதிமுகவிற்கு குமுதம் வாரி வழங்கியுள்ளது, அனைத்து தொகுதிகளிலும் விஜயகாந்த்திற்கு 10%-20% வாக்குகள் என ஓரே ஆச்சரியம் தான்
இந்தக் கணிப்புகள் யாருக்கும் நம்பிக்கையை ஏற்படுத்த வில்லை என்பது கவனிக்கத்தக்கது. பெரும்பாலானோர் இந்தக் கருத்துக் கணிப்புகளை நம்பவில்லை என்றாலும் கொஞ்சம் குழம்பித் தான் போயினர். அத்தகைய குழப்பத்தை விளைவிக்கத் தான் இந்த கருத்துக்கணிப்புகள் திணிக்கப்படுகின்றன என்று நினைக்கத் தோன்றுகிறது.
CNN-IBN மிகுந்த உஷாருடன் தன்னுடைய கருத்து கணிப்பு முடிவுகளை வெளியிட்டு இருக்கிறது. கடந்த காலங்களில் நடந்த கருத்துக் கணிப்புகளின் தோல்விகளால் எவ்வளவு தொகுதிகளை யார் பிடிப்பார்கள் என்பன போன்ற விஷயங்களை கவனத்துடன் தவிர்த்து இருக்கிறது. இந்தக் கருத்துக் கணிப்பில் அதிமுக 46% வாக்குகளை கைப்பற்ற கூடும் எனவும், திமுக 44% வாக்குகளை கைப்பற்ற கூடும் எனவும் தெரிவிக்கிறது. ஆனாலும் இது சரியான கணிப்பாக இருக்காது எனவும் அதிமுகவின் 2%கூடுதல் வாக்குகள் என்பது கருத்துக்கணிப்புகளில் இருக்கும் standard errorல் கழிந்து போகக்கூடிய வாய்ப்பு இருக்கிறது எனவும் கூறியிருக்கிறது.
பெரும்பாலும் இந்தியா போன்ற நாடுகளில் இந்தக் கருத்துக்கணிப்புகளை விஞ்ஞானப் பூர்வமாக அணுகுவதாக கூறப்படும் முறைகளில் பெரிய நம்பிக்கை எனக்கு ஏற்பட்டதில்லை. கடந்த காலங்களில் இவை சரியாக முடிவுகளை கணிக்க முடியவில்லை என்பது தவிர, தங்கள் தவறுகளை அடுத்து வரும் கருத்துக் கணிப்புகளில் திருத்திக் கொண்டதாகவும் தெரியவில்லை. தங்களுடைய கருத்துக் கணிப்புகள் எந்த வகையில் தோல்வி அடைந்தன என்பதையும் இவர்கள் வெளியிட்டதில்லை. தமிழகத்தில் இவர்களுடைய கருத்துக் கணிப்புகள் எப்பொழுதுமே சரியாக இருந்ததில்லை.
இந்தியா மற்றும் தமிழகத்தில் பல பிரிவு மக்கள், பல வித கட்சிகள், சாதியைச் சார்ந்த பல விதமான ஓட்டுப் பிளவுகள் இருக்கும் சூழலில் இந்தக் கருத்துக்கணிப்புகளை சரியாக அணுகும் முறை இன்னும் வர வில்லை என்று தான் சொல்ல வேண்டும். IBN-HINDU கருத்து கணிப்பில் கூட Random Sampling முறையில் 4,781 பேரிடம் 232 இடங்களில் இருந்து 58 தொகுதிகளில் இந்த கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. ஆனால் எந்த வகையில் இந்த சாம்ப்பிள் கொண்டு வரப்பட்டது என்பதை பொறுத்தே இதன் சரியான கணிப்பு இருக்க முடியும்.
பொதுவாக செய்யப்படும் நகர்ப்புறம், கிராமப்புறம், படித்தவர்கள், படிக்காதவர்கள், ஆண்கள், பெண்கள் என்பதைக் கடந்து எந்தச் சாதி, எந்தக் கட்சியை சார்ந்தவர், எந்த ரசிகர் மன்றத்தைச் சார்ந்தவர், இவை எதனையும் சாராத பொதுவான வாக்காளரா, கட்சியை சாராதவராக இருந்தாலும் இந்தக் கட்சிகளின் மேல் அபிமானம் உள்ளவரா என்பன போன்றவையெல்லாம் கருத்துக் கணிப்பிற்கு முக்கியம் என்று நினைக்கிறேன். ஆனால் இதனை எல்லாம் கொண்டு செய்வது அவ்வளவு எளிதல்ல. கருத்துக் கணிப்பில் அவர்கள் உண்மையை கூறுகிறார்களா என்பதும் கணிக்க முடியாதவை. அந்த வகையில் பார்க்கும் பொழுதும கருத்துக் கணிப்பின் Error 1% இருக்கும் என்று நான் நினைக்கவில்லை. இன்னும் அதிகமாகவே இருக்கும்.
அது போல Random Samplingக்கிறகு கொண்டு வரப்படுபவர்களின் எண்ணிக்கையும் குறைவாகவே இருக்கிறது. எனவே இந்தக் கருத்து கணிப்பு முறை உண்மையான நிலையை பிரதிபலிக்கும் என்று நான் நினைக்கவில்லை. என்றாலும் பிற கருத்துக் கணிப்புகளைக் காட்டிலும் இந்தக் கருத்து கணிப்பு பொதுவாக ஒப்புக்கொள்ளப்பட்ட விஞ்ஞான முறைப்படி எடுக்கப்பட்டிருக்கும் என்று நான் நினைக்கிறேன். நாம் நினைத்தது போலவே கடும்போட்டி இருப்பதாகவே கருத்துக் கணிப்பு பிரதிபலித்து இருக்கிறது.
ஆனால் கருத்துக் கணிப்பில் கூறப்பட்டிருக்கும் சில விஷயங்களே தேர்தலின் வெற்றி தோல்விகளில் முக்கிய காரணிகளாக இருக்கப் போகிறது. உதாரணமாக தேர்தலின் வெற்றி தோல்வி பெரும்பாலும் கடைசி சில 5 தினங்களில் ஏற்படுவதாகத் தான் நான் நினைக்கிறேன். தலைவர்களின் பிரச்சாரம் ஏற்படுத்தும் தாக்கம் போன்றவையெல்லாம் தணிந்து ஒரு முடிவை நோக்கி மக்கள் செல்வது இந்த தினங்களில் தான். அது போல தேர்தல் இறுதி நேரத்தில் பல தொகுதிகளில் எதிர்பார்க்கப்பட்ட முடிவுகள் மாறி இருப்பதை நான் பார்த்து இருக்கிறேன்.
குறிப்பாக சொல்ல வேண்டுமானால் முடிவெடுக்காத வாக்காளர்கள் 30% அளவிற்கு இருக்கின்றனர் என கருத்துக் கணிப்பு கூறுகிறது. வாக்காளர்களின் மனநிலையும் தேர்தலின் இறுதி நேரத்தில் மாறும் வாய்ப்புகள் உள்ளன.
Secondly, the survey revealed that about 30 per cent of the respondents were either unwilling to disclose their voting preferences or were unsure who they would eventually vote for. About 13 per cent did not reveal a preference; six per cent gave a preference but were unsure whether it would remain the same until election day; and another 11 per cent were more or less sure but not absolutely confident of the way they were going to vote a month from the
மற்றொரு முக்கியமான விஷயத்தையும் "இந்து" தெரிவித்துள்ளது
Thirdly, the advantage of two percentage points for the AIADMK alliance may not result in an advantage in terms of seats. The votes of the DMK and the PMK are concentrated in areas of strength and, as a result, the seat yield from these areas of strength could compensate for a modest disadvantage in terms of share of-the-overall-vote disadvantage. So, despite a difference in vote share, it could be a virtual tie in terms of seats.
பாமகவின் concentrated ஓட்டுவங்கி குறித்து என்னுடைய பதிவில் ஒரு முறை விவாதம் நடந்தது. என்னுடைய வாதத்தை இந்த கருத்துக் கணிப்பு உறுதி செய்வது போல உள்ளது. இந்த தேர்தலில் வடமாவட்டம் திமுக கூட்டணி கைகளுக்கு செல்லும் பட்சத்தில் அவர்களுக்கு ஒரு "Advantage" நிச்சயம் இருக்கும் என்று எனக்கு தோன்றுகிறது.
இந்தக் கருத்துக் கணிப்பின் முடிவுகளை IBN-HINDU மிகுந்த எச்சரிக்கையுடனே வெளியிட்டுள்ளது என்று நினைக்கிறேன். முடிவுகள் எப்படி வேண்டுமானாலும் மாறும் என்று கூறி எந்தச் சூழ்நிலையிலும் தன்னுடைய Credibility பாதிக்காத வண்ணம் பார்த்துக் கொண்டுள்ளது. கடந்த கால கருத்துக்கணிப்பு தோல்விகள் அவர்களை இந்த முடிவினை எடுக்க வைத்துள்ளது. கடந்த தேர்தலின் பொழுது ராஜ்தீப் NDTVயில் வெளிப்படையாகவே இதனை கூறியிருந்தார். இந்த தேர்தலில் தமிழ்நாடு எங்கள் கருத்துக்கணிப்பிற்கு மாறாக வாக்களித்தால் அந்தப் பக்கம் போகவே போவதில்லை என்று நகைச்சுவையாக கூறினார்.
போட்டி மிகக் கடுமையாக இருப்பதாக தெரிகிறது. அதே நேரத்தில் இந்தக் கருத்து கணிப்பில், தொங்கு சட்டசபை அமையாது என்றும் கூறுகிறார்கள். மிகுந்த குழப்பத்துடனே கருத்துக் கணிப்பையும் வெளியிட்டு இருக்கிறார்கள்
தமிழக மக்கள் அவ்வளவு குழப்பத்தில் இருக்கிறார்களா என்ன ?
Thursday, April 13, 2006
கருத்துக் கணிப்புகள்
By தமிழ் சசி | Tamil SASI | நேரம் 4/13/2006 10:48:00 PM
குறிச்சொற்கள் தமிழக அரசியல், தேர்தல் 2006
Subscribe to:
Post Comments (Atom)
15 மறுமொழிகள்:
//தமிழக மக்கள் அவ்வளவு குழப்பத்தில் இருக்கிறார்களா என்ன ?//
11:13 PM, April 13, 2006Yes. It is True!!
தமிழ்நாட்டு மக்களுக்கு எப்பவுமே வெட்டு ஒன்னு துண்டு இரண்டு தான். 1998ல் என்னாச்சு. இந்த கருத்து கணிப்பில, exit pollல எல்லான் தமிழ்நாட்டு ஜனம் ஏமாத்திடும்!
11:15 PM, April 13, 2006//பொதுவாக செய்யப்படும் நகர்ப்புறம், கிராமப்புறம், படித்தவர்கள், படிக்காதவர்கள், ஆண்கள், பெண்கள் என்பதைக் கடந்து எந்தச் சாதி, எந்தக் கட்சியை சார்ந்தவர், எந்த ரசிகர் மன்றத்தைச் சார்ந்தவர், இவை எதனையும் சாராத பொதுவான வாக்காளரா, கட்சியை சாராதவராக இருந்தாலும் இந்தக் கட்சிகளின் மேல் அபிமானம் உள்ளவரா என்பன போன்றவையெல்லாம் கருத்துக் கணிப்பிற்கு முக்கியம் என்று நினைக்கிறேன்.
11:52 PM, April 13, 2006//
1989,1991 தேர்தல்களில் தராசு,நக்கீரன்,குமுதம், விகடன் என கிட்டத்தட்ட எல்லா பத்திரிக்கைகளும் இது மாதிரியான கருத்து கணிப்பு நடத்தியது, அதில் மிகத்தெளிவாக sampling method எல்லாம் விளக்கியிருந்தார்கள், ஆனால் இப்பொது குமுதத்திற்கும் மற்ற சில பத்திரிக்கைகளுக்கும் திமுக ஆட்சிக்கு வரக்கூடாது என்பதற்கான உள்நோக்கம் இருப்பது போல் நக்கீரனுக்கு அதிமுக வரக்கூடாது என்ற உள் நோக்கம் இருப்பதுவும் அதன் விளைவான கருத்து கணிப்புகளையும் வைத்து குழப்புகின்றனர்....
நன்றி
சசி,
12:30 AM, April 14, 2006செய்தி வெளியான வேகத்திலேயே அது குறித்த உங்களின் அலசலையும் வேகமாக நடத்தி வலையில் வெளியிட்டுள்ளீர்கள். முதலில் பாராட்டுக்கள்.
இந்தக் கருத்துக் கணிப்பு ஏப்ரல் 1 முதல் 7 வரையான 7 நாட்களில் நடத்தப் பட்டது என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். அப்போது கருணாநிதியோ, தே மு கூவோ, பிரச்சாரத்தைத் தொடங்கவில்லை. இரண்டு ரூபாய்க்கு அரிசி, இலவச வண்ணத் தொலைக்காட்சி, நிலமற்ற ஏழை விவசாயிகளுக்கு 2 ஏக்கர் நிலம் என்பன போன்ற கவர்ச்சிகரமான அறிவிப்புகளுடன், கருணாநிதி பிரச்சாரம் செய்து கொண்டிருக்கிறார்.
ஜெயலலிதா தன் சாதனைப் பட்டியல்களுடனும், வைகோ தனது வலுவான உரைவீச்சுக்களுடனும், ராமதாசும், விஜயகாந்தும் தமிழகம் முழுதும் பிரச்சாரம் செய்து கொண்டே இருக்கிறார்கள். பிரச்சாரத்தின் தாக்கம், வாக்களர்களின் வாக்களிக்கும் முடிவில் உரிய பாதிப்புக்களை ஏற்படுத்தும்.
எனவே, ஏப்ரல் 1 முதல் ஏப்ரல் 7 வரை நடத்தப் பட்ட ஒரு கருத்துக் கணிப்பு, மே 8 ஆம் நாளில் நடக்கவிருக்கும் வாக்க்ளிப்பு முடிவை எவ்வளவு துல்லியமகப் பிரதிபலிக்கப் போகிறது என்பது கேள்விக்குரியது.
இந்தக் கருத்துக் கணிப்புகள் 10, 15 நாள் இடைவெளியிலாவது தொடர்ந்து நடத்தப் பட்டு, அதன் பின்பு எக்ஸிட் போல்- ம் நடத்தப் பட்டால், ஓரளவு நடக்கப் போவதைக் கணிக்க முடியும்.
ஒரு கருத்துக் கணிப்பு, அதுவும், பிரச்சாரம் தொடங்குவதற்கு முன் நடத்தப்பட்டது என்பதால், இதை அதன் பின்னணியில் மட்டும் விளங்கிக் கொள்வதும், அதற்கு மேல் பெரிய முக்கியத்துவம் கொடுக்க வேண்டியதில்லை என்பதும் என்னுடைய கருத்து.
ஊடகக் கண்காணிப்புக் குழுவினர்
//குறிப்பாக சொல்ல வேண்டுமானால் முடிவெடுக்காத வாக்காளர்கள் 30% அளவிற்கு இருக்கின்றனர் என கருத்துக் கணிப்பு கூறுகிறது. வாக்காளர்களின் மனநிலையும் தேர்தலின் இறுதி நேரத்தில் மாறும் வாய்ப்புகள் உள்ளன.//
7:52 AM, April 14, 2006இதை உங்களுடைய வேறொரு பதிவில் குறிப்பிட்டிருந்தேன். அடுத்த இரண்டு வாரங்களில் இது குறைந்துகொண்டே வரும். அதற்குள் உணர்ச்சிப்பூர்வமான நிகழ்வுகள் எதுவும் நடக்காது என்று எதிர்பார்ப்போம்.
கடந்த இருவாரங்களாக ஊரில் உறவினர்களுடனும், நண்பர்களுடன் பேச நேரும்போது நானும் 'கருத்துக் கணிப்பு' நடத்தினேன். பெரும்பாலானவர்கள் இன்னும் முடிவுசெய்யவில்லை என்றே சொன்னார்கள். ஒரே வீட்டில் நான்குபேர் நான்கு விதமான கருத்தைக் கொண்டிருந்தார்கள். தேர்தல் முடிவுகளை கட்சி அபிமானம் இல்லாதவர்களே நிர்ணயிப்பார்கள். அதே நேரத்தில் கட்சி அபிமானிகள் தேர்தல் நாளன்று எவ்வளவு தீவிரமாக களப்பணியில் ஈடுபட்டு வாக்காளர்களை வசியப்படுத்தப்போகிறார்கள் என்பதற்கும் முக்கிய பங்கு இருக்கிறது.
நீங்கள் கூறிய்ள்ளது போல தேர்தல் முடிவுகள் பெரும்பாலும் கடைசி நேர மாறுதல்களுக்கு உட்பட்டதுதான். உதாரணமாக 1991 தேர்தலில் திமுக தன்னுடைய முந்தைய ஆட்சி அநியாயமாக கலைக்கப்பட்டு விட்டது எங்களுக்கு மீண்டும் வாய்ப்புத்தாருங்கள் என்று மக்களிடம் நியாயம் கேட்டு ஓட்டுக்கேட்டது. ஆனால் ராஜீவ்காந்தியின் படுகொலை அந்த தேர்தலில் காங்-அதிமுக-விற்கு மிகப்பெரிய வெற்றியைப்பெற்றுத்தந்தது. திமுக-வில் கருணாநிதி தவிர அணைவரும் தோற்றனர்.
6:27 PM, April 14, 2006சசி,
10:11 PM, April 14, 2006வழக்கம்போலவே நல்ல அலசல்.
பெரும்பாலான பத்திரிகைகள் பக்கச் சார்புடனேயே கருத்துக்கணிப்புகள் நடத்துகின்றன. உளவுத்துறைக்கும் இதில் பங்கு இருக்கிறது.
Random sampling-ல் எப்பவுமே 15-20% எடுத்தாதான் கரெக்டா இருக்கும்னு நம்ம TQM ஆளுக (மிருதங்க வித்வான் & கோ) சொல்வது நினைவிருக்கிறதா ;-)
நன்றி
கமல்
கருத்து கணிப்புகளை கூர்ந்து கவனித்தால் ஒன்று புரியும். எப்போது தெளிவான, வெளிப்படையான ஆதரவு அல்லது எதிர்ப்பு அலை வீசியுள்ளதோ , அப்போதெல்லாம், கருத்து கணிப்புகள் சரியாக அமைந்துள்ளன. உதாரணம் 1996 சட்டமன்ற தேர்தல், 2004 பாராளுமன்ற தேர்தல்(தமிழகத்தை பொறுத்தவரை). ஆனால் தெளிவாக சொல்கின்ற மாதிரி அலை எதுவும் வீசாத தேர்தலில் கருத்து கணிப்புகள் தவறாக சென்றுள்ளன. உதாரணம் 2001 சட்டமன்ற தேர்தல்,2004 நாடாளுமன்ற தேர்தல்(அகில இந்திய அளவில்) தவறாகவே அமைந்தன. தெளிவான அலை வீசாத தேர்தலில் சர்வேயின் சாம்பிள்கள் ஒட்டு மொத்த மாநிலத்தை அல்லது மாநிலங்களை பிரதிபளிப்பதில்லை. ஆனால் அலை ஒரு பக்கம் வீசும் போது சாம்பிள்கள் ட்ரெண்டை தெளிவாக காட்டுகின்றன. எனவே சாம்பிள்களின் அளவினை மிக அதிக அளவில் உயர்த்தினால் மட்டுமே துல்லியம் அதிகரிக்கும். என்னை பொறுத்தவரையில் சென்ற நாடாளுமன்ற தேர்தலுக்கு பயன்படுத்த பட்ட சர்வே சைஸை விட இந்த முறை சர்வே சைஸ் மிக கிக அதிகமாக இருக்க வேண்டும். 117 தொகுதிகளில் ஒவ்வொன்றிலும் 5000 பேரை நேர்காணல் செய்வதன் மூலமே முடிவுகளை கணிக்க இயலும். இது தான் கருத்து கணிப்புகளை பற்றி எனது கணிப்பு.
10:29 PM, April 14, 2006please visit
http://bunksparty.blogspot.com/2006/04/blog-post_13.html
கமல்,
11:15 PM, April 14, 2006TQM Presentationல நாம எப்ப முழிச்சிக்கிட்டு இருந்தோம் :-))
ஞாபகமிருக்கிறது..
இந்தக் கருத்துக் கணிப்பு முறைகளை இந்தியாவிற்கு ஏற்ற வகையில் மாற்ற வேண்டிய அவசியம் இருக்கிறது
sasi,
11:48 PM, April 14, 2006neck to neck போட்டி என்றால் எதிர்கட்சிகளுக்கு சாதகம் என்று கொள்க.இது ஒரு பாலபாடம்.
பெண்கள் ஓட்டு மட்டும்தான் கருணாநிதிக்கு பிரச்சினை.ஜெ.வுக்கு சாதகம்.இதைபொறுத்துத்தான் முடிவு.
முத்து,
12:02 AM, April 15, 2006இப்பொழுது இந்தியா சென்றிருக்கும் என் மனைவியிடம் பேசிக் கொண்டிருந்த பொழுது, பெண்கள் "கலர் டிவி" மோகத்தில் இருப்பதாக கூறினார்.
உங்கள் பக்கத்தில் எப்படி இருக்கிறது ?
I agree with Balachandar Ganesan. In the absence of a wave (both for or against any coalition) sweeping the state, sample polls are not likely to be very useful. Local politics/issues take on the centre stage and victory is decided by strengths/weaknesses and track record of individual candidates.
12:15 AM, April 15, 2006சசி,
1:10 AM, April 15, 2006கலைஞரின் மாஸ்டர் ஸ்ரோக் அது. சினிமா உலகை தன் கனவுலகாக நினைத்து வாழும் தமிழ் பெண்களிடையே இது ஒர்க் அவுட் ஆகலாம்.நான் மங்களூர், கர்நாடகாவில் இருப்பதால் இது உறுதியாக தெரியவில்லை.
(சுய உதவி குழுக்களுக்கும் ஜெயலலிதாவுக்கும் என்ன சம்பந்தம் என்று தெரியாமலே சில அறிவுஜீவிகள் பேசும்போது தமிழ்பெண்களை பற்றி அவ்வளவு உயர்வாக எனக்கு நினைக்கதோன்றவில்லை)
ஒருவேளை கலைஞர் வென்றாலும் "சோற்றாலடைத்த பிண்டங்களுக்கு" கலர் டிவி தரக்கூடாது என்பதுதான் என் கருத்து.ஏழைகளை கணக்கெடுத்து இரண்டு ரூபாய் அரிசி தரலாம்.இது சாத்தியம் என்றே நான் நினைக்கிறென்.
1992க்கு பிறகு ஆனித்தரமாகவும், அதற்கு முன்பும் காங்கிரஸ் - திராவிடக்கட்சிக் கூட்டனிகளே தமிழகத்தில் வெற்றியை சுவைத்திருக்கின்றன. 1992ல் ஜெ தலைமையிலான அ.தி.மு.க அரசும், பிறகு 1996ல் மூப்பனார் த.ம.க மற்றும் திமுக கலைஞர் கருணாநிதியின் தலைமையிலான கூட்டனியும், 2001ல் மூப்பனார் / ஜெ தலைமையிலான கூட்டனியும் வெற்றிப் பெற்றுருக்கின்றன.
1:59 AM, April 15, 2006முன்பு அதிகம் இடங்களை கேட்டுவங்கிய காங்கிரஸ் இன்று 50க்கும் குறைவான இடங்களில் நிற்பது, யானை தன் பலத்தை உணராது போன்ற அவர்களின் பலவீனம். இதற்கு கலைஞர் நன்றாகவே வைகோவை வைத்து காய் நகர்த்தியுள்ளார். அதிக கட்சிகளை தன் கட்சியில் சேர்ப்பது போல்காட்டி விட்டு காங்கிரஸ் தொகுதிகளை குறைத்துவிட்டு, பின்பு வைகோவை கழட்டியவுடன் ஒன்றோ இரண்டோ அதிகம் தருவது போல் ஒரு கணக்கை மிகவும் சாமர்த்தியமாக சரிசெய்தது கலைஞரின் இராஜதந்திரம். இதன் மூலம் ம.தி.மு.கவிற்கு நன்றாக செக் வைத்தார். இவரது கணக்கு சரியானால் தேர்தலுக்கு பின் மதிமுக காணமல் போவது உறுதி.
அ.தி.மு.க வைப் போலவே அடிப்படை ஓட்டுக்கள் காங்கிரசுக்கும் உண்டு. அவர்கள் தனித்து போட்டியிட்ட போது 25 இடங்களை கைப்பற்றியுள்ளனர். இதை தமிழக திராவிடக்கட்சிகள் நன்கு உணர்ந்திருக்கின்றன, அதுவும் கருணாநிதி நன்கு உணர்ந்துள்ளார். ஜெ அனாவசியமாக சோனியாவை திட்டிவிட்டு பின்பு எவ்வளவோ தரிகனத்தோம் போட்டும் காங்கிரசை அவரால் நெருங்க முடியவில்லை. இந்த பார்முலாவை நன்கு உணர்ந்ததால் தான் மருத்துவர் ராமதாஸ் தன் நிலையை தக்கவைத்துக் கொண்டுள்ளார்.
ம.தி.மு.க - அ.தி.மு.க கூட்டனிக்கு இத்தேர்தலில் பெரும் பின்னடைவே. கொள்கையிலும் கூட்டனியிலும் சந்தர்பவாதமே அதிகம் உள்ளதை ஊடகங்கள் மூலமும் வைகோ வின் வாய் ஜாலத்திலும் பொதுமக்கள் நன்றாக உணர்ந்துள்ளார்கள்.
கலைஞரின் கலர் டிவியும், இரண்டு ரூபாய் அரிசியும் இந்த தேர்தலில் மிகப்பெரிய சக்தி. இவைகள் ஏழை எளியோரை மிகவும் கவர்ந்துள்ளதாகவே தெரிகிறது. அவற்றை சமாளிக்க அ.தி.மு.க சொல்லும் புகார்களும் அவற்றை நிருபிப்பது போலவே உள்ளது.
தேர்தலில் தி.மு.க கூட்டணி ஜெயித்தாலும், ஆட்சியமைக்க கண்டிப்பாக காங்கிரசின் கையை எதிர்ப்பார்க்கும் விதமாக அமையும்
So veppilaikari,manthira vaasal,selvi all these serials gonna help improve general knowledge of our villagers.God save our tamils.
9:08 AM, April 15, 2006Post a Comment