நர்மதா அணைப் பிரச்சனை அரசியலாக்கப்படுகிறது
நர்மதா அணைப் பிரச்சனை அரசியலாக்கப்பட்டுள்ளது. நரேந்திர மோடி இதன் மூலம் அரசியல் லாபம் அடைய உண்ணாவிரதம் இருக்கிறார். குஜராத் காங்கிரஸ் கட்சியினரும் நர்மதா அணை திட்டம் நிறுத்தப்பட கூடாது என்று வாதிட்டு கொண்டிருக்கின்றனர். பிரச்சனை அரசியலாக்கப்படுவதால் பிரதமர் மன்மோகன் சிங் அணை திட்டம் நிறுத்தப்படவில்லை என்கிறார்.
நர்மதா அணைப் பிரச்சனையால் பாதிக்கப்படும் மக்களுக்கு நிவாரணம் சரி வர வழங்கப்படவில்லை என்பதை மூடி மறைக்க அரசியல்வாதிகள் முயற்சி எடுக்கின்றனர்.
இந்த நிவாரணம் குறித்த உண்மை நிலைகளை "இந்து" இன்று வெளியிட்டுள்ளது
மைய அரசால் உண்மை நிலவரங்களை கண்டறிய அனுப்பப்பட்ட மூன்று பேர் அடங்கிய அமைச்சரவை குழு, நிவாரணங்கள் சரியான வகையில் நிறைவேற்றப்படவில்லை என்று கூறியிருக்கிறது. அவர்கள் சமர்பித்த அறிக்கை இன்னும் அரசால் வெளியிடப்படவில்லை. ஆனால் "இந்து" பத்திரிக்கைக்கு அந்த அறிக்கை கிடைத்துள்ளது. இதனை இன்று இந்து வெளியிட்டுள்ளது
Rehabilitation work shown only on paper: GoM report
Sardar Sarovar Project: GoM's confidential report
நர்மதா அணைக்கு எதிர்ப்பும் அதிகரித்துள்ளது. பலர் தங்களின் ஆதரவினை நர்மதா அணையால் பாதிக்கப்படும் மக்களுக்கு தெரிவித்துள்ளனர். மும்பை திரைப்பட நடிகர் அமீர்கான் (சல்மான் கான் அல்ல) தன்னுடைய ஆதரவினை தெரிவித்துள்ளதால் அவர் திரைப்படங்களின் பேனர்கள், கட்-அவுட்கள் போன்றவை காங்கிரஸ் மற்றும் பாஜக அனுதாபிகளால் குஜராத் எங்கும் எரிக்கப்பட்டுள்ளது. அமீர்கான், இது குறித்து CNN-IBN மூலமாக ஒரு செய்தியினை விடுத்துள்ளார்.
அதன் சுட்டி : Aamir Khan dams political parties
அமீர் கான் அரசியலில் இறங்கப் போகிறார் அதனால் தான் இந்தப் பிரச்சனையில் நுழைந்துள்ளார். ஏன் 20 ஆண்டுகளாக அவர் இந்தப் பிரச்சனையில் நுழையவில்லை என்பன போன்ற கேள்விகள் பலரால் எழுப்பப்படுகின்றன.
என்னைப் பொறுத்தவரையில் அவர் இந்தப் பிரச்சனையில் எந்த நோக்கத்தில் நுழைந்திருந்தாலும், பாதிக்கப்பட்ட மக்களுக்காக குரல் கொடுக்கும் அவரது முயற்சியை பாராட்டாமல் இருக்க முடியாது. இந்தப் பிரச்சனைக்கு இன்னும் ஆதரவினை திரட்ட அமீர்கான் போன்றவர்களால் உதவ முடியும். பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்றே அவர் வாதிட்டு கொண்டிருக்கிறார்.
இந்தப் பிரச்சனையில் நிவாரணங்கள் பற்றிய உண்மையான நிலை இப்பொழுது வெளியாகியுள்ளது.
நர்மதா நதி அருகில் இருக்கும் நிலங்கள் நல்ல வளமான விளை நிலங்கள். அந்த விளை நிலங்களுக்கு பதிலாக எங்கோ ஒரு இடத்தில் விவசாயத்திற்கு ஏற்ற வகையில் இல்லாத இடங்களை அரசு வழங்கியுள்ளது. இது அப்பாவி மக்களை ஏமாற்றும் வேலை. இது அவர்களின் வாழ்வியல் பிரச்சனை. அவர்கள் இருப்பதற்கு வீடு என்பது மட்டும் பிரச்சனையில்லை. அவர்களின் அன்றாட வாழ்க்கையை பறிக்கும் அரசு, அதற்கான சரியான நிவாரணங்களைச் செய்ய வேண்டும்.
காவிரிக் கரையில் இருக்கும் விளை நிலங்களுக்கு பதிலாக ஒன்றுக்கும் உதவாத வறண்ட நிலங்களை கொடுத்தால் எப்படி இருக்கும் ? அந்த நிலை தான் நர்மதா அணைப் பகுதியில் இருக்கும் மக்களுக்கு ஏற்பட்டிருக்கிறது.
இம் மாதிரியான பிரச்சனை குறித்து எனக்கு நேரடியான அனுபவம் இருக்கிறது. நெய்வேலி சுரங்கம் மற்றும் அனல்மின் நிலையத்திற்காக தங்கள் விளை நிலங்களை பறிகொடுத்தவர்களுக்கு சரியான மாற்று வாழ்வியல் தேவைகள் வழங்கப்படாமல் ஏழ்மை நிலைக்குத் தள்ளப்பட்ட மக்கள் பற்றி நான் அறிவேன்.
இன்னும் இந்தப் பிரச்சனையால் எவ்வளவு பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது கூட அரசுக்கு தெரியவில்லை என்று இந்து தெரிவிக்கிறது.
When asked as to how many SC/ST families were affected, the Government could not provide any information.
இந் நிலையில், மேதா பட்கர் தன்னுடைய உண்ணவிரதத்தின் 19வது நாளில் இருக்கிறார். அரசியல்வாதிகள் இந்தப் பிரச்சனையை அரசியலாக்கி கொண்டிருக்கின்றனர்

இந்தப் போராட்டம் பற்றிய மேலும் விபரங்களுக்கு - Friends of River Narmada
இன்னும் சிறிது காலத்தில் ஏற்கனவே முழ்கிய நிலையில் இருக்கும் பல கிராமங்கள், காடுகள், இயற்கையான பகுதிகள் முழுமையாக முழ்கி விடும்

இந்தப் பிரச்சனைப் பற்றிய என்னுடைய முந்தையப் பதிவு
ரோசாவசந்த்தின் பதிவுகள் :
மேதா பட்கர்
நர்மதாவிற்கு ஆதரவாக
முத்துவின் பதிவுகள் :
நானூறு கோடியும் மேதா பட்கரும்
narmada issues -latest developments