நர்மதா அணைப் பிரச்சனை அரசியலாக்கப்பட்டுள்ளது. நரேந்திர மோடி இதன் மூலம் அரசியல் லாபம் அடைய உண்ணாவிரதம் இருக்கிறார். குஜராத் காங்கிரஸ் கட்சியினரும் நர்மதா அணை திட்டம் நிறுத்தப்பட கூடாது என்று வாதிட்டு கொண்டிருக்கின்றனர். பிரச்சனை அரசியலாக்கப்படுவதால் பிரதமர் மன்மோகன் சிங் அணை திட்டம் நிறுத்தப்படவில்லை என்கிறார்.
நர்மதா அணைப் பிரச்சனையால் பாதிக்கப்படும் மக்களுக்கு நிவாரணம் சரி வர வழங்கப்படவில்லை என்பதை மூடி மறைக்க அரசியல்வாதிகள் முயற்சி எடுக்கின்றனர்.
இந்த நிவாரணம் குறித்த உண்மை நிலைகளை "இந்து" இன்று வெளியிட்டுள்ளது
மைய அரசால் உண்மை நிலவரங்களை கண்டறிய அனுப்பப்பட்ட மூன்று பேர் அடங்கிய அமைச்சரவை குழு, நிவாரணங்கள் சரியான வகையில் நிறைவேற்றப்படவில்லை என்று கூறியிருக்கிறது. அவர்கள் சமர்பித்த அறிக்கை இன்னும் அரசால் வெளியிடப்படவில்லை. ஆனால் "இந்து" பத்திரிக்கைக்கு அந்த அறிக்கை கிடைத்துள்ளது. இதனை இன்று இந்து வெளியிட்டுள்ளது
Rehabilitation work shown only on paper: GoM report
Sardar Sarovar Project: GoM's confidential report
நர்மதா அணைக்கு எதிர்ப்பும் அதிகரித்துள்ளது. பலர் தங்களின் ஆதரவினை நர்மதா அணையால் பாதிக்கப்படும் மக்களுக்கு தெரிவித்துள்ளனர். மும்பை திரைப்பட நடிகர் அமீர்கான் (சல்மான் கான் அல்ல) தன்னுடைய ஆதரவினை தெரிவித்துள்ளதால் அவர் திரைப்படங்களின் பேனர்கள், கட்-அவுட்கள் போன்றவை காங்கிரஸ் மற்றும் பாஜக அனுதாபிகளால் குஜராத் எங்கும் எரிக்கப்பட்டுள்ளது. அமீர்கான், இது குறித்து CNN-IBN மூலமாக ஒரு செய்தியினை விடுத்துள்ளார்.
அதன் சுட்டி : Aamir Khan dams political parties
அமீர் கான் அரசியலில் இறங்கப் போகிறார் அதனால் தான் இந்தப் பிரச்சனையில் நுழைந்துள்ளார். ஏன் 20 ஆண்டுகளாக அவர் இந்தப் பிரச்சனையில் நுழையவில்லை என்பன போன்ற கேள்விகள் பலரால் எழுப்பப்படுகின்றன.
என்னைப் பொறுத்தவரையில் அவர் இந்தப் பிரச்சனையில் எந்த நோக்கத்தில் நுழைந்திருந்தாலும், பாதிக்கப்பட்ட மக்களுக்காக குரல் கொடுக்கும் அவரது முயற்சியை பாராட்டாமல் இருக்க முடியாது. இந்தப் பிரச்சனைக்கு இன்னும் ஆதரவினை திரட்ட அமீர்கான் போன்றவர்களால் உதவ முடியும். பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்றே அவர் வாதிட்டு கொண்டிருக்கிறார்.
இந்தப் பிரச்சனையில் நிவாரணங்கள் பற்றிய உண்மையான நிலை இப்பொழுது வெளியாகியுள்ளது.
நர்மதா நதி அருகில் இருக்கும் நிலங்கள் நல்ல வளமான விளை நிலங்கள். அந்த விளை நிலங்களுக்கு பதிலாக எங்கோ ஒரு இடத்தில் விவசாயத்திற்கு ஏற்ற வகையில் இல்லாத இடங்களை அரசு வழங்கியுள்ளது. இது அப்பாவி மக்களை ஏமாற்றும் வேலை. இது அவர்களின் வாழ்வியல் பிரச்சனை. அவர்கள் இருப்பதற்கு வீடு என்பது மட்டும் பிரச்சனையில்லை. அவர்களின் அன்றாட வாழ்க்கையை பறிக்கும் அரசு, அதற்கான சரியான நிவாரணங்களைச் செய்ய வேண்டும்.
காவிரிக் கரையில் இருக்கும் விளை நிலங்களுக்கு பதிலாக ஒன்றுக்கும் உதவாத வறண்ட நிலங்களை கொடுத்தால் எப்படி இருக்கும் ? அந்த நிலை தான் நர்மதா அணைப் பகுதியில் இருக்கும் மக்களுக்கு ஏற்பட்டிருக்கிறது.
இம் மாதிரியான பிரச்சனை குறித்து எனக்கு நேரடியான அனுபவம் இருக்கிறது. நெய்வேலி சுரங்கம் மற்றும் அனல்மின் நிலையத்திற்காக தங்கள் விளை நிலங்களை பறிகொடுத்தவர்களுக்கு சரியான மாற்று வாழ்வியல் தேவைகள் வழங்கப்படாமல் ஏழ்மை நிலைக்குத் தள்ளப்பட்ட மக்கள் பற்றி நான் அறிவேன்.
இன்னும் இந்தப் பிரச்சனையால் எவ்வளவு பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது கூட அரசுக்கு தெரியவில்லை என்று இந்து தெரிவிக்கிறது.
When asked as to how many SC/ST families were affected, the Government could not provide any information.
இந் நிலையில், மேதா பட்கர் தன்னுடைய உண்ணவிரதத்தின் 19வது நாளில் இருக்கிறார். அரசியல்வாதிகள் இந்தப் பிரச்சனையை அரசியலாக்கி கொண்டிருக்கின்றனர்
இந்தப் போராட்டம் பற்றிய மேலும் விபரங்களுக்கு - Friends of River Narmada
இன்னும் சிறிது காலத்தில் ஏற்கனவே முழ்கிய நிலையில் இருக்கும் பல கிராமங்கள், காடுகள், இயற்கையான பகுதிகள் முழுமையாக முழ்கி விடும்
இந்தப் பிரச்சனைப் பற்றிய என்னுடைய முந்தையப் பதிவு
ரோசாவசந்த்தின் பதிவுகள் :
மேதா பட்கர்
நர்மதாவிற்கு ஆதரவாக
முத்துவின் பதிவுகள் :
நானூறு கோடியும் மேதா பட்கரும்
narmada issues -latest developments
Sunday, April 16, 2006
நர்மதா அணைப் பிரச்சனை அரசியலாக்கப்படுகிறது
By தமிழ் சசி | Tamil SASI | நேரம் 4/16/2006 07:20:00 PM
Subscribe to:
Post Comments (Atom)
7 மறுமொழிகள்:
சசி,
11:23 PM, April 16, 2006நீங்கள் சொல்வது ரொம்பவும் சரி. அமீர்கான் எந்த நோக்கத்திற்காக சொன்னாலும் இதை தைரியமாக சொன்னாரே என்பதற்காகவாவது பாராட்டலாம்.
நிவாரண பணிகள் விஷயத்தில் இன்னும் பல பூதங்கள் வெளியே வர காத்திருக்கின்றன.
அரசாங்கம் எதை செய்தாலும் அதை ஆதரிப்பது என்ற நிலை தாம் பாதிக்கப்படும் வரை மக்களுக்கு தெரியாது.
இப்போதைக்கு பட்கரின் வாழ்வை (உயிரை)கருத்தில் கொண்டாவது அரசு விரைந்து நல்ல முடிவு ஏதாவது எடுத்தால் நல்லது.
11:34 PM, April 16, 2006இந்தப் பிரச்சனையில் எனக்குப் புரியாத ஒன்று:
12:12 AM, April 17, 2006இத்திட்டத்தால் பயன்படபோவதென்னவோ குஜராத் மக்களே. பாதிக்கப்படுவதோ மத்தியப்பிரதேச மாநிலத்து பழங்குடி மற்றும் ஏழை விவசாயிகள். இவ்வாறிருக்க, மத்தியப்பிரதேச அரசு ஏன் இத்திட்டத்திற்கு வலிந்து ஒத்துழைக்கிறது, அதுவும் தன் மாநிலத்து மக்களின் நலனையும் ஒதுக்கி வைத்து விட்டு? இதனால் அதற்கு என்ன ஆதாயம்?
அமீர் கான் மீது நான் வைத்திருந்த மரியாதை அதிகரித்துள்ளது என்றே கூற வேண்டும். மக்கள் பிரச்சனைகளில் இது போல் கலையுலகைச் சேர்ந்த பிரபலங்கள் அதிகமான அளவில் ஈடுபடுவது நல்லதே. அப்படியாவது இப்பிரச்சனைகள், நம் துப்பு கெட்ட ஊடகங்களின் கவனத்தை பெற வாய்ப்பிருக்கிறது.
மற்றொரு விடயத்தையும் இங்கு குறிப்பிட வேண்டும்
12:34 AM, April 17, 2006இது வரை உயர்த்தப்பட்ட அணையின் உயரத்தைக் கொண்டே குஜராத்தின் குடி நீர் தேவையை தீர்க்க முடியும்.
குடிநீரை கொண்டுச் செல்ல வேண்டிய கால்வாய் பணியை குஜராத் அரசாங்கம் இன்னும் முடிக்க வில்லை. அவ்வாறு இருக்கையில் மேலும் அணையின் உயரத்தை அதிகரித்து என்ன சாதிக்கப் போகிறார்கள் ?
அந்த கால்வாய் பணியை முடிக்க மோடிக்கு "துப்பு" இல்லை. இன்னும் உயரம் வேண்டும் என்கிறார். இதனை ஓட்டு வங்கியாக மாற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் காங்கிரஸ், பாஜக என இரு கட்சிகளுமே செயல்படுகின்றன.
பிற நாடுகளுக்கெல்லாம் அகிம்சையை உபதேசிக்கும் இந்தியா, இந்த போராட்டத்தை ஒடுக்க அனைத்து வழிகளையும் கையாளுகிறது. தில்லியில் உண்ணாவிரதம் இருந்தவர்கள் காவல்துறையினரால் தாக்கப்பட்டனர்.இப்பொழுது குஜராத் NBA அலுவலகம் பாஜக "குண்டர்களால்" தாக்கப்பட்டுள்ளது
ஆஜ் கா அருள்வாக்கு! :-)
12:52 AM, April 17, 2006"அமீர் கான் மீது நான் வைத்திருந்த மரியாதை அதிகரித்துள்ளது என்றே கூற வேண்டும். மக்கள் பிரச்சனைகளில் இது போல் கலையுலகைச் சேர்ந்த பிரபலங்கள் அதிகமான அளவில் ஈடுபடுவது நல்லதே. அப்படியாவது இப்பிரச்சனைகள், நம் துப்பு கெட்ட ஊடகங்களின் கவனத்தை பெற வாய்ப்பிருக்கிறது'
- Voice on Wings
//ஆஜ் கா அருள்வாக்கு! :-)//
2:24 AM, April 17, 2006ராம்கிஜீ, இதில் நகைக்கும் அளவிற்கு நான் என்ன கூறி விட்டேன் என்று புரியவில்லை. உங்கள் தங்கத் தலைவர் ரஜினியும் இதுபோல் சேது சமுத்திரம் திட்டத்தை எதிர்த்து ஒரு statement விடட்டும். அவரையும் பாராட்டி ஒரு பதிவு எழுதி விடுகிறேன் :) இதை இரண்டாவது 'அருள்வாக்காக' கருதுவதற்கு உங்களுக்கு முழு உரிமையையும் அளிக்கிறேன் :)
Sasi,
9:35 PM, April 21, 2006That was nice article.
I hope every one who reads this would have heard about the worlds largest dam "Three Gorges Dam" in china. You can get some of the details at http://en.wikipedia.org/wiki/Three_Gorges_Dam
You can see some videos of it also on http://youtube.com
The point that I am trying to make is sure enough there is going to be a big loss for the community that lives in the valley. There will be a lot of people who will loose their homes and along with that they will loose their memories...agreed.
But see on the other side of life. Most of the people who are poor enough and have not seen the world out there will geta chance to see what is going on outside their village. They will get a glimpse of the oppurtunities thats available out there.(This is what was the topic of one of the pbs video's which you can get in any library in the US. If you guys get a chance do get it and watch it.It will should how people had improved their life after the "Three_Gorges_Dam" project. Also it clearly shows the amount of jobs the Dam has brought to the communities and how well they have developed. You cannot deny those facts if you the video.)
We all know the Indian mentality, we go to walmart or jcpenny to pick shirts, we dont just pick the shirt we will see the positive side of it, we complain to our friends who came with us that if this side had some green color it will be good, if its cotton it will be good...Its a bit long..etc. For a shirt if we complain so much, if we are asked to leave our house and if we are given a house, How many complains do you think that we will make. I think thats what is happening now. We will never be satisfied.
If we make such a mess with this minicule project, I dont think we will ever complete the "combining all rivers in India" project for sure.
When Tsunami struck there was a huge loss on the coastal regions, those people did lost those for nothing but a natures fury. Why not these people relocate for a good cause, provide water for the 3 states people who stuggle to or walk 3 miles to get drinking water.
People are always reactive and not proactive. We cry when we get flood as we got in TN last year and in a couple of months time people will be crying of drought and the CM will ask for relief funds.(Wait and see this is wat either Jaya or Karunanithi are going to do). So why not construct Dams and save the flooding water for future use. Even in the dark if some silver line occurs like some one taking steps to build a dam, this is what we end up in.
Regards
S.Srinivasan
(srinivasan.su@gmail.com)
Post a Comment