Saturday, April 15, 2006

தேர்தல் - சன் டிவி - தினகரன்

இன்று தமிழகத்தில் அதிமுக, திமுக என இரு கூட்டணி தேர்தல்களில் போட்டியிடுகிறது என்றால், மற்றொரு புறம் சன் டிவி-தினகரன் குழுமத்திற்கு எதிராக தமிழகத்தின் மொத்த ஊடகங்களும் கூட்டணி அமைத்தோ அமைக்காமலோ அணி திரண்டிருக்கின்றன. திமுக இந்த தேர்தலில் தோற்பது தங்களின் எதிர்கால "பிசினஸ்" வாய்ப்புகளுக்கு அவசியமாக இந்த ஊடகங்களுக்கு தெரிவதால் திமுகவிற்கு எதிராக தங்கள் பிரச்சாரத்தை மிக தீவிரமாக்கியிருக்கின்றன. கருத்துக் கணிப்புகள், திரிக்கப்பட்டச் செய்திகள் என இந்த தேர்தலில் திமுகவிற்கு எதிராக பலமான அஸ்திரங்கள் இந்த ஊடகங்களால் பிரயோகிக்கப்பட்டிருக்கின்றன. பிற மாநிலங்களைக் காட்டிலும் தமிழகத்தில் ஊடகங்களின் போக்கு "கன்றாவியாக" மாறியிருக்கிறது. இனி எந்த ஊடகங்களும் நாங்கள் ஜனநாயகத்தின் தூண்கள் என்றோ, எங்களுக்கு தனிச் சலுகை வேண்டும் என்றோ கேட்க முடியாது. இந்த ஊடகங்களை அரசியல் கட்சிகளின் மற்றொரு பரிமாணமாகத் தான் நான் பார்க்கிறேன். அரசியல்வாதிகளை குறைச் சொல்லவோ, நக்கலடிக்கவோ இந்த ஊகங்களுக்கு எந்த தகுதியும் கிடையாது.

இன்று தமிழகத்தில் ஒரு பெரும் ஊடக சக்தியாக, தங்களுடைய சாதூரியத்தால் மாறன் அண்ட் கோ உருவாகி இருக்கின்றனர். தினமலர், தினத்தந்தி என பலப் பத்திரிக்கைகள் பல காலமாக முயன்று உருவாக்கி இருந்த வாசகர் எண்ணிக்கையை தங்களுடைய புரொபஷனல் பிசினஸ் உத்திகளால் சில மாதங்களிலேயே உருவாக்கி விட்டனர். இன்று தினகரன் 10லட்சம் பிரதிகள் விற்கும் பத்திரிக்கையாக உருவாகி இருக்கிறது. குங்குமம் குறுகிய காலத்தில் குமுதம், விகடன் என பாரம்பரிய பத்திரிக்கைகளின் விற்பனையை கடந்து விட்டது. குங்குமம் கையாண்ட முறை குறித்து எனக்கு விமர்சனங்கள் இருந்தாலும், தன்னுடைய பத்திரிக்கையின் விற்பனையை உயர்த்த வேண்டும் என்ற கலாநிதி மாறனின் வியபார நோக்கம் நிறைவேறி இருக்கிறது. அது ஒரு மகத்தான சாதனை என்றே நான் நினைக்கிறேன்.

நான் தினகரனை சிறிய வயதில் இருந்து பார்த்து வந்திருக்கிறேன். என்னுடைய அப்பா "தினகரன் - தினத்தந்தி - தினமணி" ஏஜெண்டாக இருந்தார். தினகரன் ஏஜென்சியை என்னுடைய பெயரில் தான் என்னுடைய அப்பா நடத்தி வந்தார். தினகரனை நடத்த நாங்கள் மிகவும் சிரமப்பட்டோம் என்று தான் சொல்ல வேண்டும். சுமாராக 25பிரதிகள் மட்டுமே விற்கப்பட்டதாக நினைக்கிறேன். தினத்தந்தி சில நூறு பிரதிகள் விற்கப்பட்டன. ராணி, ராணி முத்து போன்றவையும் அதிக அளவில் விற்கப்பட்டன. தினமணிக்கென்று ஒரு தனி வாசகர் வட்டம் இருக்கும். ஒரு கட்டத்தில் தினகரனை அதிகமாக விற்கச் சொல்லி அதிக Pressure கூட கொடுக்கப்பட்டது. ஆனால் வாங்குவதற்கு தான் யாரும் இல்லை. எனக்கு தெரிந்து இதனை வாங்கிக் கொண்டு இருந்தவர்கள் மிகத் தீவிரமான திமுக அனுதாபிகள் தான். அதுவும் சலூன் கடைகள், டீக் கடை, டைலர் கடைகள் போன்ற இடங்களில் தான் தினகரன் வாங்கப்பட்டது. அவர்கள் நிச்சயம் திமுக அனுதாபிகளாக இருப்பார்கள். வீடுகளில் தினகரன் அதிகம் வாங்கப்பட வில்லை. வைகோ சார்பாக தினகரன் மாறிய காலங்களில் (கே.பி.கந்தசாமி இருந்த பொழுது) பலர் பத்திரிக்கையை நிறுத்தி விட்டார்கள்.

இந்த நிலையில் தினமலர் மிக Aggressiveக தன்னுடைய மார்க்கெட்டிங்கை செய்தது. தினத்தந்தி குழுமத்தின் பத்திரிக்கைளை நடத்துபவர்கள் தினமலரை நடத்தக் கூடாது என்பது எழுத்தில் இல்லாத உத்தரவு. தினத்தந்தியை நடத்துபவர்கள் அத்தனை பேரும் நாடார் சமூகத்தை சார்ந்தவர்கள். எனவே சாதி ரீதியாகவும் தினமலரை எதிரியாக பார்க்கும் நிலை தான் இருந்தது. ஆனால் தினமலர் எங்களை அணுகிய பொழுது நாங்கள் அதனை ஒப்புக் கொண்டோம். என்னுடைய அப்பா எதையும் பிசினஸ் நோக்குடன் அணுகும் குணம் உடையவர். மளிகைக் கடை நடத்துவதில் தொடங்கி நியுஸ் ஏஜென்சி வரை அவரிடம் இருந்து நான் நிறைய கற்றுக் கொண்டேன் என்று தான் சொல்ல வேண்டும். ஆனால் தினமலரை தினத்தந்திக்கு தெரியாமல் தான் நடந்த வேண்டும் என்னும் நிலை. நாங்கள் தினமலரை நடத்திக் கொண்டிருக்கிறோம் என்று தினகரனுக்கு தெரிந்த நேரத்தில், தினகரனின் சர்குலேஷனை உயர்த்த நாங்கள் எந்த முயற்சியையும் எடுக்க வில்லை என்று கூறி எங்களிடம் இருந்து ஏஜென்சியை மாற்றி விட்டார்கள். மற்றொரு ஏஜென்சியிடம் மாறிய பொழுதும் தினகரன் பெரிதாக விற்க வில்லை. அந்தளவுக்கு தான் தினகரனின் தரம் இருந்தது. திமுக அனுதாபிகள் தவிர யாரும் அந்தப் பத்திரிக்கையை வாங்க மாட்டார்கள். பெண்கள் ராணி, ராணிமுத்து போன்றவற்றை அதிகம் வாங்குவார்கள்.

தினமலரை நாங்கள் ஒரு சிறிய பகுதியில் மட்டும் தான் நடத்தினோம். ஆனாலும் அந்தப் பத்திரிக்கையை மார்க்கெட்டிங் செய்வதில் தொடங்கி, ஏஜெண்டுகளுக்கு சலுகைகள், ஊக்குவிப்பு செய்வது வரை தினமலர் மிகவும் புரொபஷனலாக இதனை எதிர்கொண்டது. தினமலரின் விற்பனையை உயர்த்துவதற்காக தினமலர் விற்பனையாளர்கள் எங்களுடன் எங்கள் பகுதியில் சந்தா உயர்த்துவதற்கும் முயற்சிகள், ஆலோசனைகள் வழங்கினர்கள். இதனால் தினமலரை சிறிது சிறிதாக தினதந்திக்கு நிகராக எங்களால் விற்பனையில் உயர்த்த முடிந்தது.

தினமலர், தினத்தந்தி இவற்றின் செயல்பாடுகளுக்கிடையே நிறைய வேறுபாடுகளை நாம் பார்க்க முடியும். தினத்தந்தியின் அலுவலகத்தில் இருந்து சில நேரங்களில் வரும் உயர்மட்ட பிரதிநிதிகள் வியபாரத்தை வளர்க்கும் எந்த நோக்கமும் இல்லாமல் ஏதோ அரசு Inspection ஏஜெண்ட் போல நடந்து கொள்வார்கள். சில நேரங்களில் அவர்களுக்கு உணவு போன்றவையும் நாம் வழங்க வேண்டும் (லஞ்சம்... கூட உண்டு). சில பரபரப்பான சமயங்களில் எங்களைக் கேட்காமலேயே நிறைய பிரதிகளை எங்களுக்கு தள்ளி விட்டு விடுவார்கள். இதனை விற்றாக வேண்டும் என உத்தரவு கூட வரும். பல நேரங்களில் இவ்வளவு பிரதிகளை விற்க முடியாது. விற்காத பிரதிகளை ரிட்டர்ன் எடுத்துக் கொள்வதிலும் அவ்வளவு ஆர்வம் காட்ட மாட்டார்கள். நாம் வற்புறுத்தினால் நஷ்டத்தில் உங்களுக்கு கொஞ்சம், எங்களுக்கு கொஞ்சம் என்று கூறுவார்கள். கொஞ்சம் கூட Business ethics என்ற ஒன்று அங்கு இருப்பதாக தெரியவில்லை.

ஆனால் தினமலரில் இவ்வாறு இருக்காது. அதனாலேயே தினமலர் ஏஜெண்ட்கள் மத்தியில் அபிமானம் பெற்றது. அதன் விற்பனையை உயர்த்துவதற்கும் முயற்சி எடுத்தனர். இதைத் தவிர தினமலர், உள்ளூர் செய்திகள், இலவச இணைப்புகள் போன்றவற்றிலும் தன்னுடைய கவனத்தை செலுத்த விற்பனையும் கணிசமாக உயர்ந்தது. தினத்தந்தி இதனை காப்பி அடித்ததே தவிர சுயமாக எதனையும் செய்ததில்லை. ஒரு நேரத்தில் சுமார் 500 பிரதிகளுக்கு மேல் விற்றுக் கொண்டிருந்த ராணி வார இதழ் சுமார் 100பிரதிகளுக்கும் குறைவாக வந்து விட்டது. அதனை மாற்ற எந்த முயற்சியையும் தினத்தந்தி நிர்வாகிகள் எடுக்க வில்லை என்பதையும் இங்கு குறிப்பிட வேண்டும். ஆனால் தினமலர் மிக வேகமாக தன்னுடைய விற்பனையை அதிகரித்து கொண்டிருந்தது. வெள்ளி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் தினமலரின் எண்ணிக்கை பிற நாட்களை விட அதிகமாக இருக்கும். அந் நாட்களில் வெளியாகும் இலவச இணைப்பான சிறுவர்மலர், வாரமலர் போன்றவையே இதற்கு காரணம். தினத்தந்தியும் பிறகு இதனை பின்பற்ற தொடங்கியது.

சரியான மாற்று பத்திரிக்கைகள் இல்லாமையாலேயே தினத்தந்தி இன்னமும் தாக்கு பிடித்து கொண்டு இருந்தது என்று சொல்லலாம். அதுவும் தவிர தினமலர் தன்னுடைய செய்திகளில் சார்பு நிலையை அதிகம் பின்பற்றியதால் எல்லா வாசகர்களையும் அது சென்றடையவில்லை. தன்னுடைய சார்பு நிலைகளை ஒரம் கட்டி வைத்து விட்டு இதனை ஒரு இதழியலாக தினமலர் அணுகியிருந்தால் இன்னும் நிறைய வாசகர்களை சென்றடைந்திருக்க முடியும். தினத்தந்தியை விட விற்பனையை அதிகரித்திருக்க முடியும். அதுவும் தவிர ஆரம்ப காலங்களில் சந்தா பிடிப்பதில் ஏஜெண்களுடன் களத்தில் இறங்கி உத்துழைத்த தினமலர் பின் அதனையும் அதிகம் கண்டுகொள்ளவில்லை. தினமலரின் உத்திகள் மாறாத வரை அதன் எண்ணிக்கை இதற்கு மேலும் உயரும் என்று நான் நினைக்கவில்லை.

தினத்தந்தி வளர்ச்சியை அதிகரிக்க தினத்தந்தி குழுமத்தினர் சரியான உத்திகளை கொண்டிருக்கவில்லை. பாரம்பரியமாக இருக்கும் பத்திரிக்கை என்பதாலும், தினமலரை வாங்கக் கூடாது என்று நினைப்பவர்களும் தான் தொடர்ந்து தினத்தந்தியை வாங்கிக் கொண்டிருந்தனர். பத்திரிக்கைகளை விட தன்னுடைய சமூகம், அரசியல் போன்றவற்றில் சிவந்தி ஆதித்தன் கவனம் செலுத்த தொடங்கினார். "சிவந்தி ஆதித்தனார் நற்பணி மன்றம்" என்ற பெயரில் நெல்லையில் சிவந்தி ஆதித்தன் ஒரு அமைப்பை தொடங்கினார். நல்ல கூட்டமும் அந்த தொடக்க விழாவிற்கு வந்திருந்தது. அவர் நாடார் சமூக இயக்கத்தை தொடங்க இருக்கிறார் என்று நான் அப்பொழுது நினைத்தேன். ஆனால் அவர் அதனைச் செய்ய வில்லை. ஏதோ ஒரு தயக்கம் அவருக்கு இருந்தது. அவர் நாடார் சமூகம் மத்தியில் மதிக்கப்படும் பிரமுகர். தன்னை அந்த அளவிலேயே நிறுத்திக் கொள்ள முனைந்தார் என நினைக்கிறேன். இப்பொழுது ஆதித்தனாரின் குடும்பத்தைச் சார்ந்த சரத்குமாரை திமுகவில் இருந்து பிரித்து இருப்பதும் சிவந்தி ஆதித்தன் தான் என்பது என் சந்தேகம். இதற்கு காரணம் தினகரனை மாறன் கைப்பற்றிய எரிச்சல் + தன்னுடைய தினத்தந்தி மார்க்கெட்டை தினகரன் கைப்பற்றும் என்ற அச்சம் + நாடார் சமூகம் சார்பில் தன் குடும்பத்தில் இருந்து ஒரு அரசியல் தலைவரை உருவாக்கும் அவரது எண்ணம். அதற்கு தன்னை விட சரத்குமார் சரியான நபர் என்று அவர் முடிவு செய்திருக்க கூடும். சரத்குமாரும் வழக்கம் போல "கலைஞர் குடும்பம்" மீது பழியைப் போட்டு திமுகவில் இருந்து வெளியேறி இருக்கிறார். வைகோ ஆரம்பித்து வைத்த குடும்பம் மீதான பழி போடும் பழக்கம் திமுகவில் இருந்து வெளியேற அனைவரும் பயன்படுத்தும் சாக்காக மாறியிருக்கிறது. கலைஞர் குடும்பத்தின் தயவால் தான் ராதிகா "ராடன்" என்ற நிறுவனத்தையே நடத்த முடிந்தது என்பது இவருக்கு மறந்து விட்டது போலும்

கே.பி.கந்தசாமிக்கு பிறகு தினகரனின் நிர்வாகம் அவரது மகன் குமரன் வசம் வந்தது. இவர் தினத்தந்தி குழுமத்தின் குடும்பத்தினர் தான். கே.பி.கந்தசாமி அதித்தனாரின் மருமகன். அடுத்த தலைமுறையில் கூட திருமணம் மூலம் இவர்களிடையே நெருங்கிய உறவு உள்ளது. இவர்கள் இந்தப் பத்திரிக்கையை நடத்த சரியான உத்தியை வகுக்காமல் மறுபடியும் ஒரு தவறைச் செய்தனர். வைகோ ஆதரவு நிலையில் இருந்து மறுபடியும் திமுக ஆதரவு நிலைக்கு பத்திரிக்கைச் சென்றது. இதனால் தங்களுடைய பழைய வாசகர் வட்டத்தை ஓரளவிற்கு மீட்டெடுத்தனர் என்பதை தவிர பெரிய நன்மை விளையவில்லை. கே.பி.கந்தசாமியின் மகன் குமரன் தினகரன் பத்திரிக்கையை மாற்றுவார் என்றே நான் நினைத்தேன். ஆனால் எந்த முன்னேற்றமும் இல்லை. இறுதியில் கலாநிதி மாறனிடம் தங்கள் பத்திரிக்கையை விற்று விட்டார்.

நிர்வாக அமைப்புடன், தமிழகத்தில் மூன்றாவது பெரிய தினசரியாக சுமார் 3லட்சம் பிரதிகளை விற்றுக் கொண்டிருந்த தினகரனை Acquisition மூலம் தனக்கு உரிமையாக்கிய கலாநிதி மாறன் தினகரனில் ஏற்படுத்திய மாற்றம் பிரமாண்டமானது. நான் இன்னும் இதன் அச்சுப் பிரதியை பார்க்க வில்லை. ஆனால் இதன் இ-பேப்பர் பார்க்கும் பொழுது தினகரனின் லேஅவுட் வேறு எந்த தமிழ்ப் பத்திரிக்கைகளிலும் இல்லை என்று சொல்லலாம். இந்து வெளிநாட்டில் இருந்தெல்லாம் ஆலோசகர்களை வரவழைத்து பத்திரிக்கையின் வடிவமைப்பை மாற்ற முயற்சிகள் எடுத்துக் கொண்டிருக்க, "ஆதி காலத்தில்" நாம் எப்படி பார்த்தோமோ அதே மாதிரி தான் எந்த மாற்றமும் இல்லாமல் தமிழ்ப் பத்திரிக்கைகளை பார்த்து வந்திருக்கிறோம். பெரிய வடிவமைப்பு மாற்றங்களை இந்தப் பத்திரிக்கைகள் செய்ததே இல்லை. ஆனால் தினகரன் அதிலும் முயற்சி எடுத்திருக்கிறது. வண்ண மயமான வடிவமைப்பு, செய்திகள்-படங்கள் போன்றவற்றை தொகுத்திருக்கும் முறை போன்றவை வழக்கமான தமிழ் பத்திரிக்கைகளில் இருந்து ஒரு மாறுபட்ட வடிவமைப்புடன் இருக்கிறது.

பத்திரிக்கைகளின் விலை என்பது மிகவும் முக்கியமான ஒன்று. மாத சந்தா தொகை படிப்படியாக உயர்ந்து செல்ல, விற்பனை குறைந்தே வந்திருக்கிறது என்று சொல்லலாம். ஆனால் அதனையெல்லாம் பத்திரிக்கைகள் கண்டு கொண்டதாக தெரியவில்லை. காகிதம் விலை அதிகமானால் பத்திரிக்கையின் விலை அதிகமாக்கப்பட வேண்டும் என்ற நியதியை எந்தப் பத்திரிக்கையும் மாற்றியதில்லை. ஆனால் தினகரனின் அதிரடி விலைக் குறைப்பு பலரை பத்திரிக்கை வாங்க தூண்டியிருக்கிறது என நான் அறிகிறேன். பத்திரிக்கைகள் படிக்கும் பழக்கம் பலருக்கும் உண்டு. ஆனாலும் "ஓசி" பத்திரிக்கை தான் பல இடங்களில் நடந்து கொண்டிருந்தது. ஆனால் தினகரனின் விலை 1ரூபாய் என்பது பலரையும் தினகரன் வாங்க தூண்டியிருக்கிறது.

இது எல்லாவற்றையும் விட தினகரனின் விற்பனை பெருக முக்கிய காரணம் - சன் டிவி.

சன் டிவி என்ற பவர்புல் ஆயுதத்தை வைத்துக் கொண்டு கலாநிதி மாறனால் Consumer சார்ந்த எந்தத் துறையிலும் எளிதாக இறங்கி வெற்றி பெற முடியும் என்றே நான் நினைக்கிறேன். அதனுடைய வீச்சு அவ்வளவு பலமாக இருக்கிறது. பத்திரிக்கையின் சர்குலேஷனை உயர்த்த நாங்கள் எடுத்த Traditional வகையான முயற்சிகளை நோக்கும் பொழுது, தினகரனின் 10லட்சம் பிரதிகள் ஒரு இமாலய சாதனை என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. சில மாதங்களில் சுமார் 7லட்சம் பிரதிகள் அதிகமாகி இருக்கிறது. இதற்கு சன் டிவி, கே டிவி மற்றும் சூரியன் எப்.எம். மூலம் தினகரனுக்கு கொடுக்கப்பட்ட பிரமாண்ட விளம்பரமும் ஒரு காரணம. இந்த வசதி பிற தினசரிகளுக்கு இல்லை. சந்தா உயர்த்த வேண்டுமானால் ஏஜெண்ட்களுக்கு நெருக்கடி கொடுக்க வேண்டும் என்பது தான் இவர்களின் உத்தியாக பல காலமாக இருந்து வந்திருக்கிறது. அதனை தினகரன் மாற்றி எழுதியிருக்கிறது. தற்போதைய காலத்திற்கு ஏற்ற வகையில் தங்கள் உத்திகளை மாற்றிக் கொள்ளாமையும், தினகரன் அதனை மாற்றியதும் தான் தினகரனின் வெற்றிக்கும் பிற தினசரிகளின் தேக்க நிலைக்கும் முக்கிய காரணம்.

தினகரன் புதிய வாசகர்களை கவர்ந்திருப்பது மட்டுமல்லாமல் பிற பத்திரிக்கைகளின் விற்பனையும் கண்டிப்பாக குறைத்திருக்கும். தினமலர் போன்ற பத்திரிக்கைகள் தங்கள் பத்திரிக்கையின் விலையை குறைக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டிருக்கிறது. தங்களுடைய லாபம் குறையும் பொழுது, வியபாரத்தில் திடீர் சவால்கள் எழும் பொழுது அதற்கு காரணமானவர்களை நோக்கி கோபம் திரும்புவது இயற்கை தான்.

தன்னுடைய வழக்கமான திமுக எதிர்ப்பு நிலையுடன் இந்த புதிய எரிச்சலும் சேர்ந்து கொள்ள, இன்று தினமலர் மிக மோசமான ஊடக வன்முறையை திமுக கூட்டணி கட்சிகளுக்கு எதிராக தொடுத்து இருக்கிறது. திமுக கூட்டணிக்கு எதிராக நாடார் சமூகத்தை திருப்பும் முயற்சியை சிவந்தி ஆதித்தன் மேற்கொண்டிருக்கிறார். சரத்குமாரை திமுகவில் இருந்து விலக்குவது அதன் முதல் கட்டம். இது நாடார் சமூக ஓட்டுக்களை அதிமுகவிற்கு ஆதரவாக கொண்டு வரும் என்பது அவரது கணக்கு. ஒரு காலத்தில் தினமலரை கண்டாலே எரிச்சல் அடையும் தினத்தந்தி குழுமம் கலாநிதி மாறனை எதிர்க்க கூட்டணி அமைக்காமலேயே தினமலருடன் சேர்ந்து கொண்டுள்ளது.

பத்திரிக்கையின் பிரதிகளை விற்க இதற்கு மேல் முடியாது என தினத்தந்தி, தினமலர் போன்ற பத்திரிக்கைகள் முடிவு செய்திருந்தன. ஆனால் தமிழகத்தில் இருக்கும் வாய்ப்புகளை சரியாக கண்டு கொண்ட கலாநிதி மாறனின் வியபார உத்திகளை நாம் பாராட்டாமல் இருக்க முடியாது. அது போலவே தான் குங்குமத்தின் வளர்ச்சியும். குமுதம், ஆனந்த விகடன் என தமிழகத்தின் பாரம்பரிய குடும்ப பத்திரிக்கைகளின் ஆதிக்கத்தை தன்னுடைய "புதுசு கண்ணா புதுசு" விளம்பரம் மூலமே கலாநிதி மாறன் மாற்றிக் காட்டினார். இன்று குங்குமம் தமிழகத்தில் சுமார் 55லட்சம் வாசகர்களைக் கொண்டிருக்கிறது. தமிழகத்தின் நம்பர் 1, இந்தியாவிலேயே நம்பர் 2 என்பது குறுகிய காலத்தில் நிகழ்த்தப்பட்ட மிகப்பெரிய சாதனை.

இதற்கு காரணம் தினகரன், குங்குமம் போன்றவற்றின் தரம் என்பதை விட சன் டிவி விளம்பரங்கள் தான் என்பது மாறனுக்கு கடும் எதிர்ப்பை அவரின் போட்டி பத்திரிக்கை குழுமங்களிடம் ஏற்படுத்தி இருக்கிறது. அவர்களின் எதிர்ப்பு இப்பொழுது சன் டிவி மீதும், திமுக மீதும் திரும்பி இருக்கிறது. குடும்ப அரசியல் மறுபடியும் பிரச்சனையாக்கப்பட்டிருக்கிறது. ஊடக நியதிகளை எல்லாம் கடந்து திரிக்கப்பட்ட செய்திகள், கருத்துக் கணிப்புகள், பொது மக்களை குழப்புதல் போன்றவற்றை இந்தப் பத்திரிக்கைகள் செய்து கொண்டு இருக்கின்றன. இது வரை திமுகவிற்கு பலமாக இருந்த சன் டிவி இப்பொழுது இந்த தாக்குதலுக்கு எதிர்தாக்குதல் தொடுக்க நிறையவே சிரமப்படுகிறது.

சன் டிவியின் செய்திகள் திமுக சார்பாகத் தான் இருக்கும் என்பதால் சன் டிவி சொல்வதை நம்பப் போவதில்லை என்ற முடிவிற்கு மக்கள் வந்து விட்டனர். இதனை தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு பிற ஊடகங்கள் எதிர்த்தாக்குதலை தொடுத்து இருக்கின்றன. செயற்கையாக அதிமுகவிற்கு பெரும் ஆதரவு இருப்பது போன்ற ஒரு தோற்றத்தை ஊடகங்கள் எழுப்பி கொண்டிருக்கின்றன. நான் அதிமுக தேர்தலில் தோற்று விடும் என்று சொல்லவில்லை. போட்டி கடுமையாகவே இருக்கிறது. விஞ்ஞான பூர்வமாக கருத்துக் கணிப்பை அணுகிய IBN-HINDU கூட குழப்பத்துடன் தான் தங்கள் கருத்து கணிப்பு முடிவுகளை வெளியிட்டு இருக்கின்றனர். ஆனால் இந்த ஊடகங்கள் எல்லா மாவட்டங்களிலும் அதிமுகவிற்கு பெரும் ஆதரவு இருப்பது போன்ற தோற்றத்தை எப்படி எழுப்புகின்றன ?

விஜயகாந்த்திற்கு இந்த ஊடகங்கள் கொடுக்கும் ஆதரவையும் இங்கு கவனிக்க வேண்டும். தினமலர் ரஜினிகாந்த்திற்கு ஆதரவு கொடுக்கிறது என்றால் அதில் ஒரு "லாஜிக்" இருக்கிறது. ரஜினிகாந்த் கடவுள் பக்தர். இயல்பாக பிஜேபி ஆதரவு நிலை உள்ளவர். தினமலரின் "கொள்கைகளுக்கு" ஏற்ற வகையில் இருப்பவர் என்பதால் இவருக்கு கடந்த காலத்தில் தினமலர் கொடுத்த ஆதரவினை புரிந்து கொள்ள முடிந்தது.

ஆனால் விஜயகாந்த்தை இவர்கள் ஏன் ஆதரிக்க வேண்டும் ?

விஜயகாந்த் கொள்கைகளிலோ, பிற கட்சிகளைக் காட்டிலும் தன்னிடம் ஒரு தனித் தன்மை இருப்பதாகவோ இது வரையில் வெளிப்படுத்திக் கொண்டதில்லை. பிற கட்சிகள் செய்யும் அனைத்து ஸ்டண்களையும் கட்சி ஆரம்பித்த குறுகிய காலத்திலேயே செய்து இருக்கிறார். என்றாலும் "தமில்", "தமில்" என்று முழுங்குபவர். அரசியலில் அவர் நுழைவது என்ற முடிவினை எடுப்பதற்கு பல வருடங்கள் முன்பாகவே "விடுதலைப் புலிகள்" மற்றும் தமிழீழத்தின் ஆதரவாளராகவே இருந்து வருகிறார். ஈழத்தில் தமிழ் மக்கள் தாக்கப்பட்ட பொழுதெல்லாம் நடிகர்களில் இவர் தான் நிதி வழங்குதல், நிதி திரட்டுதல் போன்றவற்றைச் செய்தார். விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் மீது இவர் கொண்ட அபிமானத்தால் தான் தன்னுடைய படத்திற்கு "கேப்டன் பிரபாகரன்" என்று பெயர் வைத்தார் என்றும் சொல்லப்பட்டதுண்டு. ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்ட பொழுது இந்த திரைப்படம் ஓடிக் கொண்டிருந்த திரையரங்குகள் கடுமையாக தாக்கப்பட்டன. இவர் வீடு, கார், அந்தப் படத்தில் பயன்படுத்தப்பட்ட ஜீப் போன்றவையெல்லாம் தாக்கப்பட்டன என அப்பொழுது கேள்விப் பட்டிருக்கின்றேன்.

அப்படி பட்டவர் மீது தினமலருக்கோ, "கேப்டன்" என்று இப்பொழுது புகழ்ந்து கொண்டிருக்கும் "சிலருக்கோ" எப்படி திடீர் அபிமானம் ஏற்பட்டது என்பது எனக்கு வியப்பாகத் தான் இருக்கிறது. விஜயகாந்த், திமுக-பாமக ஓட்டு வங்கிக்கு வேட்டு வைப்பார் என இவை நம்புகின்றன. அப்படி வேட்டு வைத்தால் அதிமுகவிற்கு அது சாதகமாக இருக்கும் என்ற எண்ணத்தில் தான் தினமலர், குமுதம் போன்ற ஊடகங்கள் விஜயகாந்த்தை தூக்கிப் பிடிக்கின்றன. வைகோ திமுகவை பிளவு படுத்திய காலங்களில் இவ்வாறு தான் தினமலர் வைகோவிற்கு நிறைய விளம்பரம் கொடுத்தது. அதன் பிறகு திமுக பிளவு பட்டப் பிறகு வைகோ தினமலரில் இருந்து காணாமல் போய் விட்டார். விஜயகாந்த்திற்கும் தேர்தலுக்குப் பிறகு அந்த நிலை தான் ஏற்படும் என நான் நினைக்கிறேன்.

இந்தியாவின் டாப் 10 வார இதழ்களில் குங்குமம், குமுதம், ஆனந்த விகடன் போன்றவை வந்து விடுகின்றன. ஆனால் எண்ணிக்கையில் தெரியும் ஆரோக்கியம், இந்தப் பத்திரிக்கைகள் கொடுக்கும் செய்திகளில் இல்லை. இன்று உண்மையான, நடுநிலையான செய்திகளுக்கு தமிழகத்தில் ஒரு பத்திரிக்கையும் இல்லை என்பது தான் உண்மையான நிலை. ஆனால் இந்தியாவின் ஊடக உத்திகளை தன்னுடைய விற்பனை உத்திகளால் சன் குழுமம் மாற்றி எழுதி இருக்கிறது. சன் டிவி மீதான பொறாமையும் அதிகரித்து இருக்கிறது.

அரசியல் செல்வாக்கு மூலமே சன் டிவி வளர்ந்தது என்று கூறுவதும் சரியானது அல்ல. சன் டிவி தொடங்கப்பட்ட பொழுது அரசியல் செல்வாக்கு காரணமாக "ஜெஜெ டிவி" என்று ஒன்று தொடங்கப்பட்டதே ஞாபகமிருக்கிறதா ? அரசியல் செல்வாக்கு சரிந்தவுடன் அந்த தொலைக்காட்சியும் காணாமல் போய் பின் தவறுகளை திருத்திக் கொண்டு "ஜெயா டிவியாக" வந்தது. ஆனால் அது போன்ற எதுவும் சன் டிவிக்கு ஏற்பட்டதில்லை. சன் டிவி செய்யும் அனைத்தனையும் யாரும் சரி என்று சொல்ல முடியாது. சன் டிவி குறித்து என்னுடைய பலப் பதிவுகளில் நான் விமர்சித்து இருக்கிறேன். அதே நேரத்தில் சன் டிவி எழுப்பிய இருக்கிற ஊடக சாம்ராஜ்யத்தை பொறாமை மூலமும், திமுகவை இந்த தேர்தலில் தோற்க்கடிப்பதன் மூலமும் முடிவிற்கு கொண்டு வரலாம் என்று நினைத்து அதற்காக பொய்யான ஒரு தோற்றத்தை பிற ஊடகங்கள் ஏற்படுத்திக் கொண்டிருப்பது தமிழகத்தில் ஊடகங்கள் "கன்றாவியாக" மாறி விட்டதன் உச்சகட்டம் என்றே நான் கருதுகிறேன்.

51 மறுமொழிகள்:

மு. சுந்தரமூர்த்தி said...

மாறன் குடும்பத்தைப் போல அதிரடி மீடியா மேக்னேட் ஆக திகழ்ந்த முன்னாள் இத்தாலிய பிரதமர் சில்வியா பெர்லுஸ்கோனிக்கு எதிராக அனைத்து கட்சிகளும் திரண்டு அவரை தோற்கடித்தது நினைவிருக்கலாம். என்னதான் மாறன் குடும்பத்தினர் வியாபாரம் வேறு கட்சி வேறு என்று சப்பை கட்டு கட்டினாலும் யாரும் நம்பப்போவதில்லை. சினிமா வேறு அரசியல் வேறு என்று சொல்லி எம்ஜியாரை வலுவிழக்கச் செய்யமுடியவில்லை. ஆனால் கலைஞருக்கு குடும்ப ஊடகம் வேறு திமுக வேறு என்று பிரிக்காவிட்டால் வலுவடைய முடியாது. இதில் கட்சி தான் என் குடும்பம் என்று அடிக்கடி பயமுறுத்துகிறார்.

6:34 PM, April 15, 2006
Sivabalan said...

//தமிழகத்தில் ஊடகங்கள் "கன்றாவியாக" மாறி விட்டதன் உச்சகட்டம் என்றே நான் கருதுகிறேன்//

Me too!!

Excellent Analysis!!

At last, you bell the Cat!!

6:48 PM, April 15, 2006
VSK said...

அய்யோ பாவம்!
எவ்வளவோ சிரமப்பட்டு, இந்தப் பதிவின் மூலம் ஏதோ சொல்ல நினைத்திருக்கிறீர்கள்.
ஆனால், அது, பரிதாபமான, ஒரு பொய்ம்மைப் பாட்டாகவே முடிந்திருக்கிறது.

''குடும்பம்' மீதான பழி போடும் வழக்கம் என நீங்கள் இடும் ஓலம்' படிக்கவே அருவருப்பாக இருக்கிறது!

தினத்தந்தி, தினமலர் போன்ற பத்திரிகைகள் தேர்தலுக்குப் பின்னும் இருக்கும்!
ஆனால், தினகரன்....?
"ஊரே சொல்லட்டும் போ!"

இந்த இலவச மனப்பான்மையைக் கருத்தில் கொண்டே, தி. மு. க. தனது த்ஜேர்தல் அறிக்கையையும் வெளியிட்டிருக்கிறது!

ஆனால், அது எவ்வளவு பெரிய தவறு என்பதினை இன்னும் ஒரு மாத காலத்தில் நாம் அனைவரும் காணத்தான் போகிறோம்!

அதன் பின், இந்த பத்திரிகை எஙே இருக்கிறது என்று அப்பொது மீண்டும் வந்து சொல்கிறேன்!!

6:53 PM, April 15, 2006
Machi said...

அருமையான அலசல். எல்லா உண்மையும் சொன்னா எப்படிங்க ?
//இன்று உண்மையான, நடுநிலையான செய்திகளுக்கு தமிழகத்தில் ஒரு பத்திரிக்கையும் இல்லை என்பது தான் உண்மையான நிலை. //
தினமணி இன்னும் அந்த அளவுக்கு மோசமாக போகவில்லை என்பது என் கருத்து.

எனக்கு தினத்தந்தி படிக்கும் பழக்கம் உண்டு, டீக்கடையில் சென்று கன்னித்தீவு & ஆண்டியார் படித்துவிட்டு வந்துவிடுவேன், இந்த வகையில் எனது நாளிதழ் படிக்கும் பழக்கத்தை உருவாக்கியது தினத்தந்தி.
எனது மாமா (திமுக அனுதாபி) தினகரன் வாங்குவார், அந்த வகையில் தினகரனை படிப்பேன், அதுவும் நடுப்பக்கத்தை மட்டும். உலக நடப்பெல்லாம் அங்கு தான் இருக்கும்.
சந்தா கொடுத்து வாங்கி ரீட் பண்ணியது தினமலர், செஸிபிக்கா வெள்ளி & வார மலர்களுக்காகவே வாங்கினேன்(னோம்). எல்லா வகையான நியூஸ்களும் தினமலரில் உண்டு என்பதால் ஒன் லைன் விடாமல் ரீட் பண்ணிடுவேன். நான் ரொம்ப லைக் பண்ணின நியூஸ் பேப்பர்.
கல்லூரிக்கு வந்தபின் தினமணியை படித்ததுண்டு, தரமான நாளிதழ். முக்கியமா நல்ல தமிழ், கொஞ்சம் தமிழ் கத்துக்கிட்டேன். தமிழ் Indian Express , no local news.
திறமையான வணிக உத்திமூலம் குங்குமம் & தினகரனின் விற்பனையை உயர்த்தியது பாராட்டுக்குரிய செயல். சரியான வணிக உத்திகளை குமுதம், தினத்தந்தி, தினமலர் சரிவர செய்யவில்லை என்பதே மாறனின் பலம்.
சன் டிவிக்கு எப்படி அப்போதைய தூர்தர்சனின் இந்தி மட்டும் என்ற ஒளிபரப்பு கொள்கை உதவியது என்பதை மறக்ககூடாது.

7:48 PM, April 15, 2006
தமிழ் சசி | Tamil SASI said...

குறும்பன்,

தினமணி தன்னுடைய தரத்தில் இருந்து என்றைக்கோ குறைந்து போய் விட்டது. என்றாலும் தினமணி ஓரளவிற்கு நம்பகத்தன்மையுடனே இருக்கிறது என்பதை ஒப்புக் கொள்கிறேன்

7:58 PM, April 15, 2006
Anonymous said...

Mr.Sasi,
The strangle hold SCV has got over the cable operators through out Tamil nadu is a major reason for Sun TV's growth and today's position.It is obvious that all "MEANS ,MAINLY POLITICAL POWER" was used to achieve this.Had you mentioned this also in your analysis, it would have rendered it objective.

K.G.Subbramanian

9:43 PM, April 15, 2006
Mookku Sundar said...

//அதன் பின், இந்த பத்திரிகை எஙே இருக்கிறது என்று அப்பொது மீண்டும் வந்து சொல்கிறேன்!! //

தேர்தலில் திமுக தோற்றவுடன் தினகரன் மட்டும் ஒழிந்து போகுமா..?? வேறு என்னென்ன..??
சன் டீவி, திராவிட ராஸ்கல்கள் எல்லாரும் ஒழிய வேண்டாமா..?? உங்கள் ஆசைகளை முழுதாக சொல்லுங்கள்.

அது சரி, ஜெயேந்திரர் என்ன ஆவார்..?? ;-)திமுக தோற்றால் ஜெயிக்கப் போவது டாக்டர் ஜெயலலிதா ஆயிற்றே..?? :-)

9:46 PM, April 15, 2006
VSK said...

'ஒழிந்து போகும்" என நான் சொல்லவில்லை.

இப்போது முதலிடத்தில் இருக்கும் அது எங்கே இருக்கும் என்று தான் வினவினேன்!
சன் டி.வி. இப்போதே என் வீட்டில் இருந்து ஒழிந்து போய் விட்டது என்பதனை மிகவும் மகிழ்ச்சியுட்ன் தெரிவித்துக் கொள்கிறேன்!

அமெரிக்காவில், இப்பொதெல்லாம் விஜய் டி.வி.யும் கிடைக்கிறது!

தி.ரா.வைப் பற்றி......... வேண்டாம், நீங்களே பார்த்துக் கொள்ளுங்கள்!


ஜெயேந்திரர் வழக்கு மாநிலம் மாற்றப்பட்டு நடந்து கொண்டிருப்பது தங்களுக்குத் தெரியும் என நம்புகிறேன்.

அதைப் பற்றியும் அடுத்த மாதம் பேசலாம்!

என்ன, சரிதானே!!?

11:29 PM, April 15, 2006
குழலி / Kuzhali said...

மிக அசிங்கமான நிகழ்வு இந்த தேர்தலில் என்றால் அச்சு ஊடகங்கள் எடுத்திருக்கும் இந்த நிலைதான்

//அரசியல் செல்வாக்கு மூலமே சன் டிவி வளர்ந்தது என்று கூறுவதும் சரியானது அல்ல.
//
சன் டிவியின் 14 ஆண்டுகாலத்தில் 9 ஆண்டுகாலம் திமுக எதிர்கட்சியாக இருந்ததுவே, மேலும் சன் டிவி ஆரம்பிக்கப்பட்ட போது இருந்தது அதிமுக ஆட்சி, சன் டிவி யின் மீது பல கடுமையான விமர்சனங்கள் இருந்தாலும் சன் டிவி வளர அதிகாரம் மட்டுமே காரணம் என்பது மற்ற ஊடகங்கள் தம்மை தாமே ஏமாற்றி கொள்ள முயன்றது.

இருந்தாலும் ஒரு ஆறுதல் குமுதம் கருத்துகணிப்பு சிரிப்பா சிரிக்குது மக்களிடம் (யாரிடம் அதைப்பற்றி கேட்டாலும் நகைக்கின்றார்கள்)

11:33 PM, April 15, 2006
Mookku Sundar said...

//தினத்தந்தி, தினமலர் போன்ற பத்திரிகைகள் தேர்தலுக்குப் பின்னும் இருக்கும்!
ஆனால், தினகரன்....? //

இதை சொன்னது SK.

//'ஒழிந்து போகும்" என நான் சொல்லவில்லை.//

இதையும் சொன்னது அவரே.

இப்பவே இப்படின்னா, இன்னமும் தேர்தல் முடிந்தவுடன் என்ன பேசுவாரோ..?? ;-)

இப்போழுது திமுக ஆட்சியா நடக்கிறது..?? அதனால்தான் தினகரனும், சன்னும் முன்னுகிறது என்று சொல்ல..??

பேசுவோம் . பேசுவோம். நேரம் இருந்தால் வருகிறேன். இந்த அக்கப்போர்களில் இறங்கினால் நேரம் ஏகப்பட்டது ஓடிவருகிறது. இதற்கு அலுத்துக் கொண்டே ஏதும் சொல்வது கூட இல்லை. ஆனாலும் சசியின் இந்தப் பதிவைப் போய் குறை சொன்னீர்கள் பாருங்கள், அதனால்தான் எழுதினேன்.

1:04 AM, April 16, 2006
Anonymous said...

இந்த skவை திருத்தவே முடியாதா? எலக்சன்ல தர்மத்தாய் ஜெயிச்சா சரி.ஒருவேளை திமுக ஜெயித்தால் இவர் என்ன பண்ணுவாராம்?

தமிழ் மக்களை நம்பி மடத்தனமாக பேசி திரியவேண்டாம் sk.வெச்சா குடுமி அடிச்சா மொட்டை பழக்கத்தை விடுங்கள்.உங்க நல்லதுக்குத்தான் சொல்கிறோம்.உங்கள் முதலாளிகள் எல்லாம் விஷயம் தெரியாமலா அமைதி காக்கிறார்கள்.

அம்மா ஜெயிக்கட்டும்.வந்து கலக்குங்க.அவசரப்பட்டீங்க அசிங்கப்பட்டிருவீங்க.

1:11 AM, April 16, 2006
Anonymous said...

இப்பொழுது யாருக்கு தினகரன் தேவை

1:44 AM, April 16, 2006
ஜெயக்குமார் said...

இன்று சன் டிவி-யில் என்ன நல்ல நிகழ்ச்சிகள் வருகின்றன?. சினிமா, சினிமா விட்டால் அழுது வடியும் பிற்போக்கு தொலைக்காட்சித்தொடர்கள். என்ன செய்தி சொல்கிறார்கள்?. "செய்திகளில் அடுத்து வருவது ஜெயேந்திரர். சிவகாசி ஜெயலட்சுமி, ஜ்டியல் சுப்பரமணியம், செக்ஸ் சாமியார் சதுர்வேதி, கஞ்சா செரினா மற்றும் கருத்து கருணாநிதி" என்ற அளவில்தான் நமக்கு செய்திகள் சொல்லப்படுகின்றன. உலக செய்திகள் என்று இவர்கள் கூறுவது ஆப்பிரிக்காவில் சிங்கம் இரண்டு குட்டி போட்டதுஇ இங்கிலாந்தில் ஒரு ஜோடி 24 மணி நேரம் முத்தம் கொடுத்ததுஇ அமெரிக்காவில் நிர்வாணப்போரட்டம் என்கிற அளவில்தான் உள்ளது. நாட்டில் வேறு நல்ல விசயங்களே நடக்கவில்லையா. மக்களுக்கு தேவையானஇ பயனுள்ளஇ சிந்திக்க தூண்டுகிற நல்ல விசயங்கள் தினம்இ தினம் நடந்து கொண்டுதான் இருக்கிறது. மேலும் வௌதநாடுகளில் நடந்த சில அசம்பாவிதங்களைப்பற்றி சொல்லும் போது உண்மை நிலை என்ன என்பதை அந்த நாடுகளின் தொலைக்காட்சி செய்திகளைப்பார்த்தாவது சொல்லலாம்இ அப்படி இல்லாமல் ஒரு குண்டு வெடிப்பில் 10 பேர் இறந்தால் 100 பேர் இறந்ததாக கூறுவதுஇ ஒரு ரயில்வே ஸ்டேசன் மூடினால் லண்டனில் அனைத்து ரயில்வே ஸ்டேசன்களும் மூடப்ப்ட்டன என்று கூறி தாயகத்தில் உள்ள உறவினர்களின் மனநிலை எப்படி பாதிப்பு அடையும் என்று கூட கவலைப்படாமல் செய்திகளை வௌதயிடுவது போன்ற முட்டாள் தனமான காரியங்களையும் செய்கின்றனர். நல்ல செய்திகள், கருத்துக்கள் சொன்னால் மக்கள் சிந்திக்க ஆரம்ப்பித்துவிடுவார்கள்! இவர்களின் போலியான கவர்ச்சி எடுபடாமல் போய்விடுமே என்ற எண்ணம் தான் இன்று இவர்களிடம் மேலோங்கி உள்ளது. கெட்டவிசயங்கள் மிக எளிதாக மக்களை சென்றடையும். ஆனால் நல்ல விசயங்கள் மருந்து போன்று கசப்பாக இருந்தாலும், அது அவர்களுக்கு எளிய முறையில் சொல்லப்படுமானால், அது ஒரு நல்ல ஆரோக்கியமான சமூகத்தை வளர்க்க உதவும்.


இன்று சுதந்திர தின மற்றும் குடியரசு தின சிறப்பு நிகழ்ச்சிகளை நீங்கள் பார்த்தால் அதில் சில நடிகர், நடிகைகளின்

நேர்காணல், குத்து நடனங்கள் மற்றும் இந்திய தொலைக்காட்சிகளிலேயே முதன் முறையாக என்று மூளையை

மழுங்கடிக்கச்செய்யும் ஒரு படம். இதுதான் இன்றைய தலைமுறைக்கும், நாளைய தலைமுறைக்கும் சுதந்திர போராட்ட

வரலாற்றை சொல்லும் நிகழ்ச்சிகளா?. கொஞ்சம் ஏமாந்தால் விக்ரமும், விஜய்யும் தான் காந்தியோடு உப்பு சத்யாக்கிரகத்துக்கு போனார்கள் என்று கூட சொன்னாலும் சொல்வார்கள். இதேபோல் தொடர்ந்து சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்தி வந்தால், நாளைய சமுதாயம் சுதந்திர தினத்திற்கு விடுமுறை விடுவதே இவர்களின் நிகழ்ச்சியை பார்க்கத்தான் என்று புரிந்துகொள்ளும் நிலை

ஏற்படலாம். இப்படி சமூகப்பொறுப்பற்ற ஊடகங்களால் நாளைய தலைமுறைக்கு சத்யாக்கிரகம் என்றால் அந்த கிரகம் பூமியில் இருந்து எவ்வளவு தூரத்தில் உள்ளது என்று கேட்டாலும் ஆச்சிரியப்படுவதற்கு இல்லை. நம் தாய் தந்தையரின் அன்பையும்இ தியாகங்களையும் நேரில் பார்த்து உணர்கிறோம். ஆனால் தேசத்திற்காக பாடுபட்டு நம் முன்னோர்களின் தியாகங்களை அடுத்த தலைமுறைக்கு சிறப்பாக சொல்லுவதன் மூலம்தான் நம்முடைய சுதந்திரத்தின் அருமையை நம் இளைய தலைமுறைக்கு உனர்த்தமுடியும். நாம் ரத்தம் சிந்தி பாடுபட்டு வாங்கிய இந்த சுதந்திரத்தை பாதுகாக்க முடியும். ஏன் நம் நாட்டில் ஒரு தியாகி கூட இல்லையா? அவர்களிடம் நேர்காணல் கண்டால் இவர்களின் வியாபாரம் போகிவிடுமா?. மக்கள் எக்கேடு கெட்டால் நமக்கென்ன! என்ற எண்ணம்தான் இவர்களிடம் மேலோங்கி உள்ளது. இதே போல்தான் அனைத்து தமிழர் திருநாள் சிறப்பு நிகழ்ச்சிகளும் உள்ளன. நம் மண்ணைப்பற்றிய, நம் மக்களைப்பற்றிய, உலகில் சிறந்த நம் கலாச்சாரத்தைப்பற்றிய எந்த நிகழ்ச்சிகளும் இவர்களின் தொலைக்காட்சிகளில் இடம்பெறாது. மாறாக போலியான கவர்ச்சிகளே மக்கள்முன் நிறுத்தப்படுகின்றன.


இப்போது சும்மா "நச்"-னு ஒரு ஆபாச "விஷம்" சில இலவசங்களுடன் நம் தமிழகத்தை தினம், தினம் தாக்கி நமது தேசத்தை அதன் இயல்பிலிருந்து பிரிக்க முயன்று கொண்டிருக்கிறது. அதில் சொல்லப்படும் செய்திகள் என்னவென்றால் ஆண் விபச்சாரம், பெண்களுக்கு காபி குடித்தால் "மூட்" வருமா? ஆதிவாசிகளின் நிர்வாண பூஜை, ஆதிவாசிகளின் ஆபாச

குருந்தகடு பரபரப்பு விற்பனை, குஷ்பு ஆபாச பட வௌதயீடு, பண்ணை வீடுகளில் ஆபாச நடனம், 5 நட்சத்திர விடுதிகளில் ஆபாச நடனம், செக்ஸ் சாமியார்கள் பற்றிய செய்திகள் மற்றும் தங்களுக்கு பிடிக்காதவர்கள் பற்றிய தவறான கருத்துகள் போன்ற அருவெறுக்கத்தக்க ஆபாச செய்திகள் தான். இதில் அசிங்கம் என்னவென்றால் இவற்றையெல்லாம் படங்களுடன் தலைப்புச் செய்திகளாக முதல் பக்கதிலேயே வௌதயிடுவதுதான். இவைகளை வௌதயிடுவதால் நம் தமிழகத்திற்கு என்ன பயன்?. செய்தித்தாள்களின் தரம் என்பது அன்றாட நாட்டு நடப்புக்களை உலகுக்கு சொல்வதோடு மட்டுமல்லாமல் நல்ல பயனுள்ள, சிந்திக்கவைக்கக்கூடிய கட்டுரைகளையும், கருத்தாய்வு களையும் வௌதயுட்டு மக்களிடம் உலகளாவிய சிந்தனைகளை வளர்ப்பதாக இருக்கவேண்டும். அதுவே பத்திரிக்கை தர்மமும் நீதியும் ஆகும். சமூகப்பொறுப்புள்ள எந்த செய்தித்தாளும் இதைதான் செய்யும். ஆனால் நான் மேற்கூறிய "விஷம்" இலவசங்களுடன் பரவி மக்களின் செய்தித்தாள் அறிவை மட்டமாக்கி அவர்களிடம் எந்த உலகளாவிய சிந்தனைகளும் தோன்றாமல் பார்த்துக்கொள்கிறது. இதனால் அச்செய்திதாளுக்கும் அது சார்ந்த கட்சிக்கும் தான் லாபமே தவிர நம் மக்களுக்கு எந்தவித பயனும் இல்லைஇ மாறாக நம் மக்கள் வெறும் பணம் சம்பாதிக்கும் எந்திரங்களாகஇ சுயநலவாதிகளாக மட்டுமே இருப்பார்களே தவிர சிந்திக்கின்ற உண்ர்ச்சியுள்ள, போராடும் குணமுள்ள,பொதுநலனில் அக்கரை உள்ள, மனித நேயமிக்க,சமூகப்பொறுப்புள்ள மற்றும் உலகளாவிய சிந்தனைகளை உள்ளடக்கிய சிறந்த கலாச்சாரத்தில் இருந்து வந்த நல்ல குடிமக்களாக இருக்க மாட்டார்கள்.உதாரணமாக குடியரசுதினத்தன்று வெளிவந்த செய்தித்தாள்கள் அணைத்தும் குடியரசுதின நிகழ்ச்சிகளையும் நம் ஜனாதிபதி மற்றும் ஆளுனர் அவர்கள் நாட்டுமக்களுக்கு சொன்ன செய்தியையும் தான் தலைப்பு செய்திகளாக வௌதயிடுவாரகள். ஆனால் "தமிழ் முரசு" என்ற தரமற்ற முரசில் "பள்ளி மாணவிகளை மயக்கி செல்போனில் ஆபாச வீடியோஇ பிடிபட்டது ஆபாசக்கும்பல்" என்ற செய்திதான் தலைப்பு செய்தியாக வந்துள்ளது. இவர்களுக்கு இதற்கு முன்னர் இத்துறையில் அணுபவம் உள்ளதா? அல்லது "நீலப்படம்" எடுக்கும் கும்பலில் இருந்து பிரிந்து வந்து இந்த பத்திரிக்கையை ஆரம்பித்தார்களா? என்றே புரியவில்லை.

3:27 AM, April 16, 2006
Anonymous said...

சன் டிவி பத்தி சொல்றவங்க சசி குடும்ப வளர்ச்சி பத்தி சொன்னா கொஞ்சம் நல்லா இருக்கும். எது உண்மையிலேயே அதிகாரத்த வச்சு வளர்ந்தது

4:51 AM, April 16, 2006
Arulselvan said...

நல்ல அலசல்தான், என்றாலும் என்ன தான் முடிவாகச் சொல்கிறீர்கள் என்பதைப் புரிந்து கொள்ள கொஞ்சம் சிரமமாகத் தான் இருக்கிறது..

குங்கும் 55 லட்சம் பிரதிகள் விற்பதாக நீங்கள் குறிப்பிட்டிருப்பது தவறு. குங்குமம் 55 லட்சம் வாசகர்களைக் கொண்டிருக்கிறது என்பதே சரி. பத்திரிகைகளின் விற்பனை எண்ணிக்கை வேறு. வாசகர்கள் எண்ணிக்கை வேறு. இந்தியாவில் எந்த வாரப் பத்திரிகையும் 2 மில்லியன் பிரதிகள் விற்பனையைத் தாண்டியிருப்பதாகத் தெரியவில்லை.

ஊடக விஷயங்களை அதிகமாக அலசும் தாங்கள், ஊடகத் துறை தொடர்புடையவரா, அல்லது ஊடகங்களில் ஆரவமுடையவர் எனப்தாலேயே இப்படித் தொடர்ந்து ஆர்வம் காட்டிவருகிறீர்களா என்பதை ஊடக மாணவர்களாகிய நாஙக்ள் அறிந்து கொள்ள விரும்புகிறோம்.

ஊடகக் கண்காணிப்புக் குழுவினர்

10:21 AM, April 16, 2006
தமிழ் சசி | Tamil SASI said...

//
என்ன தான் முடிவாகச் சொல்கிறீர்கள் என்பதைப் புரிந்து கொள்ள கொஞ்சம் சிரமமாகத் தான் இருக்கிறது..
//

என்ன இப்படி கேட்டுட்டீங்க :-)

நான் இதில் எந்த முடிவையும் சொல்லவில்லை. சில பிண்ணனி தகவல்கள், சன் டிவி மூலமான வியபார உத்தி, பிற பத்திரிக்கைகளின் உத்தி, இதன் காரணமாக பிற ஊடகங்கள் திமுக மீது தொடுத்திருக்கும் தாக்குதல், அதனால் சிதைந்து போயிருக்கும் ஊடக நெறிமுறை போன்றவற்றை தான் விளக்க முயன்றேன். இங்கு ஊடக நெறிமுறை எல்லாம் சிதைந்து போய் வியபார நோக்கம் மட்டுமே வெளிப்பட்டுள்ளது.

ஊடகத்துறைக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. ஆனால் அதன் மீது எனக்கு ஆர்வம் உண்டு

10:44 AM, April 16, 2006
Anonymous said...

Views can differ. News cannot. I guess it used to be Hindu's caption for one of their advt campaign.

All you have to do is to watch/hear/read the SUN TV media arms (SUN, KTV, Dinakaran, Tamilmurasu, SCV, Suran FM and Kungkuman) for few days and you will know that they belong to DMK. Please do not try to kid people with stories saying they belong to maran (shrewd businessman) and he is not part of DMK. (Out of 14 years of SUN TV existence, DMK has been in power for 8-10 years either in state or centre or both). Without ‘DMK’s money ‘pumalai ‘would have remained pumalai and again without ‘DMK’ in power ‘SCV’ would have not grown in a monster. Let’s not attribute more that what Maran deserves for his business acumen.

If not now, five years later the people of Tamilnadu will realize that so much concentration and monopoly in media is not good for the society. I am not sure if this will be the election issue this time, but SUN group through their own making will ensure that this snowballs into a key election issue for the next elections. History has taught has that People always hate monopoly and they want choices, be it media, business or politics. Wal-Mart was the darling of US in 80’s and 90’s. Today it is a “monster”. People Voted out Jaya in 96 brought her back in 2001. Mark my words “If SUN group is not going to change its approach to news reporting”, they are going to be the integral part of DMK’s downfall.

12:29 PM, April 16, 2006
தமிழ் சசி | Tamil SASI said...

//குங்கும் 55 லட்சம் பிரதிகள் விற்பதாக நீங்கள் குறிப்பிட்டிருப்பது தவறு. குங்குமம் 55 லட்சம் வாசகர்களைக் கொண்டிருக்கிறது என்பதே சரி
//

கட்டுரையை திருத்தி இருக்கிறேன். சுட்டிகாட்டியமைக்கு நன்றி

12:45 PM, April 16, 2006
Anonymous said...

sasi has done a neat analysis. the success of dinakaran and tamil murasu is phenomenal. campaign through sun tv is not the only reason. kalanidhi has roped in the best brains, installed the best technology, pumped in lots of money, cut the cover price by two third and to top it all, ensured the product is promising. the leaning towards dmk during election month is only to be expected. this is nothing when compared to the dirty tricks played by thanthi and dinamalar.

1:27 PM, April 16, 2006
Anonymous said...

kuzali's comments about kumudam are true. last week's kumudam predicition is an perfect example. to my best of knowledge, dmk is going to win the madurai(central) const due to various factors 1) dmk vote bank 2) marxist vote bank 3)sourashtra vote bank (usually they vote for congress) 4)dmk candidate.

but kumudam has predicted that dmk is going to get only 27%. maybe admk is going to get that. i wont be surprised if admk has been pushed to 3rd place.

just for the info.

3:52 PM, April 16, 2006
ஜெயக்குமார் said...

நான் இங்கே சசிக்காகவோ, அல்லது இங்கு பிண்ணூட்டம் இட்டுள்ளவர்களுக்காவோ பேசவில்லை. நம் தமிழகத்தில் இணையதளம் என்றால் என்ன என்றே அறியாத, வெறும் தொலைக்காட்சி மற்றும் செய்திதாள்களையே ஊடகமாக எண்ணிக்கொண்டிருக்கின்ற நம் கிராமத்து தமிழனுக்காக பேசிக்கொண்டிருக்கிரேன். அவனுக்கு தொலைக்காட்சி மற்றும் செய்திதாள்களே ஊடகம் அவைகள் சொல்பவை தான் செய்திகள் என்று நம்பக்கூடியவன். சன் டிவி-யும் அது நடத்தும் பத்திரிக்கைகளின் தரத்தைப்பற்றியும் ஏற்கனவே என் பிண்ணுட்டத்தில் சொல்லியுள்ளேன். மத்தியில் ஆட்சியில் இருக்கும் போதே அவர்களின் அநியாயம் தாங்கமுடியவில்லை என்றால் மாநிலத்திலும் அவர்கள் ஆட்சி வந்துவிட்டால், தமிழ்நாட்டில் இவர்கள் கூறுவதுதான் செய்தி, இவர்கள் நடத்துவதான் நிகழ்ச்சி என்றாகிவிடும். அவர்கள் என்ன சொன்னாலும் அப்பாவித்தமிழன் நம்பித்தான் ஆகவேண்டும். தினமலரும், தினத்தந்தியும் திமுக போன்ற ஒரு சமூக விரோத சக்தி ஆட்சிக்கு வருதை தடுக்கவே விஜயகாந்தையும் வைகோவயும் ஆதரிக்கின்றன. மத்திய அரசில் பங்கேற்றுள்ள திமுக முதலில் ஒளிபரப்புத்துறையைத்தான் மிரட்டிக்கேட்டது, இதை அது இல்லை என்று மறுக்க முடியாது. ஆனால் மத்தியில் ஆழும் காங்கிரஸ் அரசு எதிகட்சிகளின் கேள்விகளுக்கு பயந்து அதோடு தொடர்புடைய வேறுதுறையை அதுவும் கருணாநிதி பேரனுக்கு தந்தது (ஒளிபரப்புத்துறை ஏன் வழங்கப்பவில்லை என்பது எல்லொருக்கும் தெரியும்). மத்தியில் பல காலம் ஆட்சியில் பங்கு பெறும் திமுக ஏன் தூர்தர்சனை வளப்படுத்த முடியாது. ஒரு பேட்டியில் கலாநிதி மாறனே சொல்லியுள்ளார் தூர்தர்ஷன் மட்டும் விழித்துக்கொண்டால் அதுவே எங்களுக்கு மிகப்பெரிய போட்டியாகிவிடும் என்று. எனவே மத்தியில் ஆட்சியில் உள்ள அவர்கள் தமிழகத்திலும் ஆட்சிக்கு வந்தால் அது தமிழகத்தின் அழிவிற்கு மறைமுகமாக காரணம் ஆகிவிடும்.

5:49 PM, April 16, 2006
ஜோ/Joe said...

//தினமலரும், தினத்தந்தியும் திமுக போன்ற ஒரு சமூக விரோத சக்தி ஆட்சிக்கு வருதை தடுக்கவே விஜயகாந்தையும் வைகோவயும் ஆதரிக்கின்றன. //

ஜெயக்குமார்,
உங்க காமெடி தாங்க முடியல்ல.

9:10 PM, April 16, 2006
Prasanna said...

Hi Sasi

I really enjoyed your incisive analysis.And also please accept my c'lations on maintaining one of the best blogs in the Tamil Blogosphere.

I have some observations on this post

While one should rightly give credit to the business acumen and foresight of Kalanidhi Maran,its equally important to highlight that the media empire that he has built is because of the tremendous clout and leverage that he enjoyed in the central government
-DMK'S uninterrupted power at the for 10 yrs now.

I think DMK is the only political party that has been part of all three cental governments in the last 10 years under three differnt arrangement.

So much for accussing Vaiko OF political opportunism.If this is not opportunism,can someone define what is one.

Please note that state government has virtually no role to play in the regulatory mechanism/legislations that govern the television industry in India

Kalanidhi used this clout and changed the rules of the game to his favour.

The Maran brother represent the worst form or manifestaion of crony capitalism(i am unabashed free-market/capitalist ideologue but not of the crony capitalist variety).

Business enterprises that do not succeed by the sweat,toil or creativity of its founders
but by employing brute force /might and incestous collabaration with babudom and bureucarcy

This is very similiar to the practise followed by Ambanis in the pre-liberalisation era where they used the clout to wrest control of the market.


Take if from me,rightly or wrongly the people of Tamil Nadu have come to despise SUN TV
(though they never mind watching the mindless disgusting serials churned out by them)

If DMK suffers a electoral setback(more or less certain going by CNN-IBN poll.I reliably learnt that it was pressure from Ram/Karat axis that forced Sardesai/ Yadav not to predict near-majority for ADMK) there will only be two factors
that contributed to the stunning reversal of fortunes-the frankenstein monster called SUN TV and that silly/ridiculous overbearing Dayanidhi Maran.The Sun TV and dynastic politics propaganda has caught the imagination of the masses
(not becos of Stalin - he is defintely respected and seen as matured politican but becos of the the upstart Dayanidhi)

1:03 AM, April 17, 2006
ஜெ. ராம்கி said...

//இயல்பாக பிஜேபி ஆதரவு நிலை உள்ளவர். தினமலரின் "கொள்கைகளுக்கு" ஏற்ற வகையில் இருப்பவர் //

போகிற போக்கில்?! :-)

1:14 AM, April 17, 2006
Muthu said...

//Kalanidhi used this clout and changed the rules of the game to his favour.//

prasana,

can you be more specific in your allegations please...


and also i wish to tell you that
the game is not over yet..wait for elections results...

1:23 AM, April 17, 2006
Muthu said...

வெறுமனே பிரச்சாரம் மட்டும் செய்துகொண்டிருந்தால் சன்டிவி இத்தனைய வளர்ச்சியை அடைந்திருக்கமுடியாது.

சன் டிவி செய்திகளையும் ஜெயாடிவி செய்திகளையும் சிறிது பார்க்கவும்.

பிற்போக்கு சீரியல்கள் ஏதோ சன் டிவியில் மட்டும்தான் இந்தியாவிலேயே வருவதுபோல் விமர்சிப்பது அயொக்கியத்தனம்.இந்தி ஆங்கில டிவிக்கள் உள்பட எல்லா டிவிக்களிலும் இது வருகிறது.இது வியாபாரம்.அவர்கள் இஷ்டம்தானே.

1:27 AM, April 17, 2006
rajkumar said...

மிகவும் அற்புதமான கட்டுரை.

இதில் உள்ள நியாயம் அரசியல் கண்ணோட்டத்துடன் பார்ப்பவர்களுக்கு புரியாது.

வாழ்த்துக்கள்.

அன்புடன்

ராஜ்குமார்

1:32 AM, April 17, 2006
ப்ரியன் said...

சசி அருமையாக அலசி உள்ளீர்கள்...இப்போது சன் குழுமம் IPO வெளியிட்டதால் இன்னமும் அவர்கள் முதலீடு செய்ய தயாராகிவிட்டார்கள் என்ற பயம் கூட இந்த பத்திரிக்கைகளை இப்படி எழுத தூண்டியிருக்கலாம்

ஊடகங்களின் அரசியல் நடுநிலைமை - ஒரு கேள்விக்குறி - ? என்ற தலைப்பில் ஒரு பதிப்பை இங்கே காணலாம்

http://enkanvaziyae.blogspot.com/2006/04/blog-post_13.html

2:22 AM, April 17, 2006
ஜெயக்குமார் said...

/பிற்போக்கு சீரியல்கள் ஏதோ சன் டிவியில் மட்டும்தான் இந்தியாவிலேயே வருவதுபோல் விமர்சிப்பது அயொக்கியத்தனம்.இந்தி ஆங்கில டிவிக்கள் உள்பட எல்லா டிவிக்களிலும் இது வருகிறது.இது வியாபாரம்.அவர்கள் இஷ்டம்தானே./

ஊடகங்கள்தான் தினம் தினம் மக்களை சந்திக்கின்றன், ஒரு ஊடகம் என்பது குனிந்து கிடக்கும் சமுதாயத்தை நிமிர்ந்து நிக்கச் செய்யவேண்டுமே தவிர அவர்களின் மூளையை மேலும் மலுங்கடிக்கச் செய்யகூடாது.

சுதந்திரப்போரட்ட காலத்தில் வெறும் பத்திரிக்கை மட்டுமே ஊடகமாக இருந்த காலகட்டத்தில் ஒவ்வொரு இந்தியனிடத்திலும் சுதந்திர வேட்கையயை வள்ர்த்தது திலகர், காந்தி, பாரதி போன்றோர் எழுதிய பத்திரிக்கைகள் தான். அவை மட்டும் அன்று அவர்கள் இஷ்டம் தானே என்று வியாபார நோக்கோடு இருந்திருந்தால் நீங்கள் இப்போது இங்கு எழுதிகொண்டிருக்கமுடியாது.

2:27 AM, April 17, 2006
மா சிவகுமார் said...

தமிழ் நாட்டு அரசியலின் ஒரு அதிசயம், நாம் எல்லாரும் போட்டுக் கொள்ளும் வண்ணக் கண்ணாடிகள். திமுக
ஆதரவு நிலை அல்லது அதிமுக ஆதரவு நிலை. இந்தக் கண்ணாடிகள் எல்லா நிகழ்வுகளையும் நமக்கு
பிடித்த மாதிரி திரித்து காட்டி விடுகின்றன.

ஒரு துறையில் ஏகபோகம் (monopoly) இருப்பதை பயன்படுத்தி இன்னொரு துறையில் தன் பொருளை திணிக்க, விற்க முனைவது எல்லா சந்தை பொருளாதார நாடுகளிலும் சட்ட விரோதமாக கருதப்படுகிறது.
இந்தியாவிலும் MRTP சட்டம் இதை முறைப்படுத்த உள்ளதாக நினைவு.

சுமங்கலி/சன் தொலைக் காட்சி, சன்
தொலைக்காட்சி/குஙுமம் இரண்டு உறவுகளுமே, இந்த சட்டத்தால் நெறிப்படுத்தப்பட வேண்டியவைதான்.

அமெரிக்காவில், மைக்ரோசாப்டு விண்டோசு ஏகபோகத்தைப் பயன்படுத்தி, போட்டியாளர்களின் பொருட்களை
நசுக்கி தன் மென்பொருட்களை சட்டவிரோதமாக சந்தை படுத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்டு ஒரு
நீதிமன்றம் அதை நிரூபணம் செய்தது போலத்தான் சன் குழுமமும் தண்டிக்கப்பட வேண்டும்.

1. சன் தொலைக் காட்சியில் குங்குமம் விளம்பரங்களுக்கு சலுகை கட்டணம் கொடுக்கப்படுகிறதா? மற்ற
பத்திரிகைகள் அதே திட்டத்தில் விளம்பரம் செய்ய முடியுமா?

2. சுமங்கலி, சூரியன் பண்பலை நிகழ்ச்சிகளை ஒரு ஓடையில் கொடுப்பதைப் போல ரேடியோ மிர்ச்சி
நிகழ்ச்சிகளை ஏன் கொடுப்பதில்லை?

3:08 AM, April 17, 2006
தயா said...

கண்டிப்பாக ஜெவிற்கு சாமர்த்தியம் போதவில்லை. அவருடைய முதல் ஆட்சியில் தான் சன் டிவி

தோன்றி வளரத்தொடங்கியது. அப்போதும் ஜெ.ஜெ என போட்டியாக தொடங்கினார்களே தவிர சன்

டிவியை போல திறமையாக மக்களை திசை திருப்ப முடியவில்லை. செய்திகளையும் பிரச்சார

பாணியிலும் மேடை பாணியிலும் நடத்தி அவர்களுக்கு ஆப்பு வைத்துக் கொண்டனர்.

சரி அடுத்து ஆட்சிக்கு வந்தாரே! அப்பொழுதாவது விழித்துக்கொண்டு கேபிள் சட்ட மசாதோவை

கொண்டு வந்தாரா, இல்லை! மிடாஸ்/சிறுசேரி பற்றி கலைஞர் பேசவும் அதை அடக்க மசாதோவை

கடைசி நிமிடத்தில் கொண்டு வர அதுவும் கையெழுத்திடாமல் கிடக்கிறது. ஆனால் இப்படி ஒரு

வாய்ப்பு திமுகவிற்கு வாய்த்தால் யோசித்து பாருங்கள். (ஜெயா 5 ஆண்டுகளாக சின்னத்திரை வானில்

காணாமல் போய் விட்டதே)

சன் டிவியின் பதினான்கு ஆண்டுகளில் 4 + 5 காலம் ஜெவின் ஆட்சியில் என்ன தொந்தரவை

அனுபவித்தது? வேண்டுமானால் விளம்பரங்களும் அரசு நிகழ்ச்சிகளில் இவர்களுக்கு உரிய இடமோ

அழைப்போ இல்லாமல் இருக்கலாம். கேபிள் மசாதோ கூட SCVயை குறி வைத்து தான்.

ஆனால் கடந்த பத்து வருடங்களாக மத்தியில் (தேவகெளடா, குஜ்ரால்,வாஜ்பாய்,மன்மோகன் சிங்) திமுக

பதவி வகிக்கிறது. பூர்வாங்க பணிகளில் மற்ற மாநிலங்களில் கால் பதிக்க கண்டிப்பாக சன் டிவி

திமுகவை பயன்படுத்தியிருக்கும்.

விஜய் செய்திகள், ராஜ் செய்திகள் காணாமல் போனது யார் புண்ணியத்தில். தங்கள் திறமையால்

வளர்வது பாராட்டலாம் என்றால் தாங்கள் சொல்வதே செய்தி என ஆதிக்கம் செய்வது

கண்டிக்கப்படவேண்டும். ஜெயா டிவி இன்றைக்கு இருப்பதற்கு காரணம் அவர்களின் அரசியல்

பலத்தினால் தான். இல்லையென்றால் என்றைக்கோ காணாமல் போயிருக்கும்.

சன் டிவிக்கு திமுக போன்ற அரசியல் பிண்ணனி இருக்கும் போது Monopoly ஆவது தமிழகத்திற்கு

நல்லதல்ல. அதற்காகவது தினமலரும் தினதந்தியும் வேண்டும்.

சசி கலாநிதியின் திறமைகளை மட்டும் சிலாகிக்கவில்லை. மற்றவர்கள் குடும்பம் என்ற பழைய

பல்லவியை பாடுவதாக குற்றம் சாட்டுகிறார். அங்கே தான் இடிக்கிறது.
//ஊடக நியதிகளை எல்லாம் கடந்து திரிக்கப்பட்ட செய்திகள், கருத்துக் கணிப்புகள், பொது மக்களை குழப்புதல் போன்றவற்றை இந்தப் பத்திரிக்கைகள் செய்து கொண்டு இருக்கின்றன. // இது சன் டிவிக்கும் தினகரனுக்கும் பொருந்தாதா?
//தமிழகத்தில் ஊடகங்களின் போக்கு "கன்றாவியாக" மாறியிருக்கிறது.// இந்த கன்றாவியின் பெரும் பங்கு சன் டிவியையே சாரும். அதற்கு எதிர் தாக்குதல் நடத்துகிறேன் என ஜெயா டிவி எப்போதோ கீழிறங்கிவிட்டது. ஆனால் சன் டிவி வாழைப்பழத்தில் ஊசி ஏற்றும் வித்தை தெரிந்ததால் ஆரம்ப நிலையில் அதன் சார்பு திரிப்பு யாருக்கும் தெரியவில்லை.

தினமலர் சார்பு செய்தியாம். தினத்தந்தி திமுக வளர்த்த கடாவை மார்பில் பாய விடுகிறதாம். தினகரன் தனது திறமையால் வளர்ந்து வருகிறதாம். தினகரன் எதை நிறுவவதற்கு போராடுகிறது? அவர்களின் சார்பு நிலை என்ன? அதற்கான அவர்களின் உத்தி என்ன? செய்திகளின் தரம் என்ன? நேர்மை என்ன?
இப்படி ஒரு பிரம்மாண்ட வளர்ச்சி கண்டு அச்சுறுத்தும் மீடியாவை தூர நின்று ரசிப்பார்களா அவர்களின் வணிக போட்டியாளர்கள்?

தினகரன் ஒரு பத்திரிக்கை நிறுவனமாகவே மட்டும் இவர்களோடு போட்டியிட்டிருந்தால் தினமலரும் தினத்தந்தியிலும் அதே நிலையில் இறங்கி போராடலாம். அவர்களோ பண பலத்துடன் அரசியல் பலமும் பெற்றிருக்கிறார்கள். அப்போது யாரும் என்ன செய்வார்களோ அதையே தான் அவை செய்கின்றன.

//இயல்பாக பிஜேபி ஆதரவு நிலை உள்ளவர். தினமலரின் "கொள்கைகளுக்கு" ஏற்ற வகையில் இருப்பவர் //
சசிக்கு எப்போது "சோத்தனம்" எனப் தமிழ்மணத்தில் புகழ்பெற்ற வியாதி வந்தது? (எடுத்துக் கொடுத்த ராம்கிக்கு நன்றி!)

பிரசன்னா,
சர்தேசாயை மிரட்டினார்களா?
கலைஞர் இதைத்தானே ஜெ மிரட்டியதால் ஓரு ஆங்கில நாளேடு கருத்துக் கணிப்புகளை வெளியிடவில்லை என சொல்லி கொண்டிருந்தார்?

3:42 AM, April 17, 2006
Prasanna said...

Muthu-I have acknowledged that Sun TV is a true commercial success story

Only thing that takes the sheen away from the success story is the fact that they have resorted to manipulation.Whether its right or wrong -everyone might hold a
opinion on that.

I feel that true capitalist system is one where success stories are
scripted without the intervention of governmentor undue favourtism of the official machinery


Implementation of CAS in Chennai/delay in providing uplinking facilties for
other news channel-there are innumerable instances were Sun TV has been favoured
or their competitors rendered ineffective.This deserves a seperate post

On Quality of programming in Channels,its a serious issue across the spectrum.And to single out SUN TV is unfair


However its a fully justified to apply Karunanidhi's political posturing in the context of Sun TV programming and and find out whether what he preaches is practised by Sun TV
(use of pure Tamil/so-called English influence/glorification of regressive social practices/
protrayal of Women) - after all Karuna had 20% financial stake in the SUN TV (only recntly he sold it off) - he could definitely influenced it positively

No one can deny ROLE of SUN TV in the third-rate slanderous campaign that was waged against Khushboo.i dont know who orchestratated it but SUN TV played it to the hands of those vested interest .And when
regressive notions about Woman(especially coming from land of Periyar) are sought to be imposed
and SUN TV puts its commercial consideration before defending basic principles -well
serious questions needs to be asked

SUN TV today is a public limited COMPANY. nobody COULD HAVE questionED its peroragative to take whatever political view and blank out whOever it deems WHEN it was family run enterprise .But having gone public it will be
have to be judged by the rigorous standards of objectivity and fairness.

SUN TV has raised it bar.Observers will compare it with NDTV/CNN-IBN (not to say that they do not have biases but its not as crude as SUN TV)

In its own long -term interest and to gain respectability its better Sun TV stops being seen as political propaganda mouthpiece of DMK

3:44 AM, April 17, 2006
ப்ரியன் said...

ஊடகங்களின் அரசியல் நடுநிலைமை - ஒரு கேள்விக்குறி - ?

இந்தியாவின் சுதந்திரத்திற்கு முன்பிருந்தே ஊடகங்கள் அரசியலில் பெரும்பங்காற்றி வருகின்றன.அன்று தேசிய நலனை முன்வைத்து அநேகமான எல்லாப் பத்திரிக்கைகளும் ஏடுகளும் இந்திய சுதந்திர வேகத்தை ஊட்டி வந்தன,வரவேற்கப்படவேண்டியவை.அன்றிருந்த பத்திரிக்கைகள் ஏடுகள் பல இன்று இல்லை அல்லது சில கைமாறி இருக்கின்றன.

ஆனால் இன்று உள்ள பத்திரிக்கைகளும் ஏடுகளும் என்னச் சொல்கின்றன அரசியல் சார்பு அவற்றில் எந்த அளவுக்கு இருக்கின்றது.எவை எவை பத்திரிக்கை தருமத்தை மீறி - நடுநிலமை இல்லாமல் நடந்து கொள்கின்றன எனச் சொல்லுவதே இக்கட்டுரையின் நோக்கம்.

இன்று ஏறத்தாள எல்லா ஏடுகளும் பத்திரிக்கைகளும் ஏதாவது ஒரு கட்சியை சார்ந்தே உள்ளன.

தமிழகத்தில் வெளியாகும் தமிழ் பத்திரிக்கைகளில் குறிப்பிடத்தக்கவை

தினமலர்
தினத்தந்தி
தினகரன்
தினபூமி
தினமணி
தமிழ்முரசு
மாலைமலர்
மாலைமுரசு

இதில் தினமலருக்கும் தி.மு.க விற்கும் ஆகவே ஆகாது.தி.மு.க வை நன்றாகத் திட்டி நீங்கள் மடல் போட்டால் கண்டிப்பாக அது தினமலரில் பிரசுரமாகும்.அதே சமயம் அம்மாவை திட்டியோ எதிர்த்தோ தினமலர் எழுதி பார்த்தவை குறைவு.அதுவும் சமீப காலமாக மிகவும் மோசம்.அம்மாவின் துதி அதிகமாகப் போய்க் கொண்டிருக்கிறது.இதில் உண்மையின் உரைக்கல் என்ற சொற்கள் வேறு.

தினத்தந்தி சலூன் , டீ கடையில் அதிகம் இடம்பிடித்திருந்த பத்திரிக்கை இப்போது ரூ.1 க்கு தினகரன் இதன் இடத்தை நிரப்பிவிட்டதால் என்னவோ அம்மாவுடன் கூட்டு சேர்ந்துவிட்டதாகவே தோன்றுகிறது.

தினமலரும் தினத்தந்தியும் இப்படிப் போக தினகரன் நிலமையோ வேறு அது கலாநிதி மாறன் கையில் மாறும் முன்பிருந்தே தி.மு.க பத்திரிக்கையாகத்தான் அடையாளம் காணப்பட்டது.இப்போது முழுக்க முழுக்க தி.மு.க செய்திகள் வரும் எனப் பார்த்தால் அ.தி.மு.க வேட்பாளர்ப் பட்டியல் வெளியிட்டது போன்ற செய்திகளைப் போட்டு நடிநிலைமையாய் செய்திகள் தருவதாய் காட்டிக் கொள்ள முயற்சிக்கிறார்கள் மக்கள் நம்ப மாட்டார்கள்.இவர்கள் செய்யும் ஒரே நல்ல விடயம் ரூ.1 க்கு 16 பக்கங்கள் தருவதுதாம்.(தேர்தல் முடிந்ததும் விலையேறும் என்கிறார்கள் நான் நம்பவில்லை தொடரும் 1 ரூபாய்க்கு என்றே நினைக்கிறேன்.)

தினபூமி இது தொடங்கப்பட்டபோதே அம்மாவின் விசுவாசியாகவே தொடங்கப்பட்டது இன்னமும் அப்படியே தொடர்கிறது.

கடைசியாக, தினமணி - தினகரன் தினமலர் தினத்தந்தி அளவுக்கு தினமணியின் சுற்று இல்லாவிட்டாலும் இன்றும் நடுநிலைமையாகவே செய்தி கொடுக்கிறது அதற்குப் பாராட்டுக்கள்.தினமணியைப் பொருத்தவரை எல்.டி.டி.இ செய்திகளுக்கு கொஞ்சம் முக்கியத்துவம் இருக்கும்.அதனால் தவறு இல்லை தமிழனாய் இருப்பவன் எவனுக்கும் அந்த உணர்வு இருக்கத்தான் செய்யும்.

தமிழ்முரசு இது தினகரனின் மாலைப் பதிப்பு :) அவ்வளவே
மாலைமலர் தினத்தந்தியின் மாலைப் பதிவு.

மாலைமுரசு அதிகம் நான் படித்ததில்லை

அடுத்ததாய் ஏடுகளுக்கு வருவோம்.

நக்கீரன்
குமுதம் - குமுதம் ரிப்போட்டர்
துக்ளக்
தமிழன் எக்ஸ்பிரஸ்
ஆ.வி - ஜீ.வி
இந்தியாடுடே

நக்கீரனுக்கும் அம்மாவிற்கும் பொருந்திப் போனதே இல்லை இது 91 லிருந்து நடக்கும் கணக்கு இதில் பொடாவில் போட்டதிலிருந்து மிகவும் மோசமாகப் போய்விட்டது நக்கீரனின் அம்மா தாக்குதல்.

அடுத்து குமுதம் - குமுதம் ரிப்போட்டர், ஆட்சியிலிருக்கும் கட்சியை கொஞ்சம் அனுசரித்துப் போகும் பத்திரிக்கை என்ற எண்ணம் எனக்கு எப்போது உண்டு.ஆனால் இப்போது அம்மா துதி அதிகம் அதிலும் சென்றவாரம் அம்மாவின் பேட்டி.கலைஞர் சொல்லுவதுப் போல் பெட்டி வாங்கிவிட்டார்களா என எண்ணத் தோன்றுகிறது.

துக்
ளக் சொல்லித்தான் தெரியனுமா?

தமிழன் எக்ஸ்பிரஸ் தினமணியின் சாயல் அப்படியே சார்பற்ற செய்திகள் - பாராட்டுக்கள்

ஆ.வி - ஜீ.வி - இதிலும் அரசியல் சார்பு சிறிதும் இல்லை இந்த வாரம் அம்மா பேட்டியா அடுத்த வாரம் கலைஞர் பேட்டி.கலக்கல்

இந்தியாடுடே - எப்போதும் நடுநிலை - அதிலும் வாஸந்தி கட்டுரை ஆகா அது தகவல் களஞ்சியம்.

ஊடகங்கள் என்றால் தொலைக்காட்சியும் தானே என்பது நீங்கள் கேட்பது கேட்கிறது.

சன்னைப் பொருத்தவரை சன் செய்திகளை அம்மாவை காட்டுவார்கள் ஆனால் தேர்தல் பிரச்சாரம் செய்தார் என்ற மட்டில் இருக்கும் ஆனால் கலைஞர் செய்தி தவறாமல் இடம்பிடிக்கும் குறைந்தது 1 நிமிடங்களாவது.சந்திப்போம் போன்ற அரசியல் நிகழ்ச்சிகள் சன் நியூஸுக்கு தாரை வார்க்கப் பட்டதால் அதிகம் அரசியல் வாசம் இல்லை.போதாதிற்கு நேற்று கலைஞர் சேப்பாக்கத்தில் பிரச்சாரம் செய்ததை நான்காவது செய்தியாக விளம்பரத்திற்கு முன் காட்டினார்கள் என்ன திடீர் மாற்றம் முதல் செய்தியாக அல்லவா வரவேண்டும் (ரூ 600 கோடி செய்யும் வேலையாக இருக்கும்!).

ஜெயா செய்திகள் இது சன் செய்திகளை விட மட்டம் சன் செய்திகளில் அரசியல் சார்ப்பாக செய்தி தந்தாலும் அம்மா ஆதரவாளர்க்கு மற்றும் கலைஞர் எதிர்ப்பாளர்களுக்கு மட்டுமே எரிச்சல் கொடுக்கும்.ஆனால் ஜெயாவில் ஒன்றா அம்மா துதி இல்லையே தி.மு.க தூற்றல்.அ.தி.மு.க அன்பர்களே "ஓவர் டோஸ்" என்பதாய்த்தான் இருக்கிறது அவர்களின் நடுநிலைமை.

ராஜ் - பொறுத்தவரை நடுநிலை எனச் சொல்லிக் கொள்ளலாம்.சென்ற பாராளுமன்ற தேர்தலில் அவசர அவசரமாக பா.ஜா.க வில் இணைந்தார்கள்.அப்புறம்தான் தெரிந்தது இணைந்தற்கான காரணம் விசா , ராஜ் மியூசிக் தொலைக்காட்சிகள் நடத்த அனுமதிப் பெறாமாலேயே நட்த்திக் கொண்டிருந்தார்கள் மற்றும் செய்தி ஒளிப்பரப்பிற்கான உரிமத்தை புதிப்பிக்க கூட ஆவணம் தாக்கல் செய்யாமல் இரண்டு வருடங்கல் பழைய உரிமத்திலேயே செய்தி ஒளிபரப்பிக் கொண்டிருந்தார்கள்.உச்ச நீதிமன்றம் தலையிட்டு உரிமம் நீக்க செய்திகள் இல்லாமல் இருந்தது இப்போது மீண்டும் செய்திகள் நடுநிலையாக இருக்கிறது சந்தோசம் தொடர்ந்தால்.

விஜய் - தமிழில் செய்திகள் தந்தவரை நடுநிலையாகவே இருந்தது என்.டி.டி.வி நிறுவனமே விஜய்க்கும் அதன் தாய் தொலைக்காட்சி ஸ்டாருக்கும் செய்தி தயாரித்து தந்தது.என்.டி.டி.வி தனியாக தொலைக்காட்சி ஆரம்பிக்க செய்திகள் நிறுத்தப் பட்டன.விஜய் மீண்டும் செய்திகள் தொடங்கினால் ராஜ் போலவே நடுநிலை செய்திகளை தர இயலும்.

எப்போதும் கலைஞருக்குத்தான் பத்திரிக்கைகளின் ஆதரவு இருக்கும் இந்தமுறை எந்த காரணத்தாலோ அம்மாவிற்கு ம் பார்க்கலாம் என்ன நடக்கிறது என்று.

4:35 AM, April 17, 2006
தமிழ் சசி | Tamil SASI said...

தினகரன் "உண்மையை" மட்டும் பிரதிபலிக்கும் பத்திரிக்கையென்றோ, சன் டிவி "தனித்துவமான டிவி" என்றோ நான் எங்கேயும் கூறவில்லை.

தமிழகத்தில் ஊடகங்கள் "கன்றாவியாக" மாறி விட்டன என பொதுவாக கூறினால் அது "சன் டிவி, தினகரன்" நீங்கலாக என பொருள் கொள்ளும் படி வருகிறது என்று "நினைப்பவர்களை" தமிழ் வகுப்புகளுக்குச் சென்று "தமிழ் படித்து விட்டு வாருங்கள்" என்று மட்டும் தான் என்னால் கூற முடியும்.

அவர்களுக்கு என்னால் விளக்கம் அளித்து கொண்டிருக்க முடியாது

7:22 AM, April 17, 2006
Muthu said...

//சுதந்திரப்போரட்ட காலத்தில் வெறும் பத்திரிக்கை மட்டுமே ஊடகமாக இருந்த காலகட்டத்தில் ஒவ்வொரு இந்தியனிடத்திலும் சுதந்திர வேட்கையயை வள்ர்த்தது திலகர், காந்தி, பாரதி போன்றோர் எழுதிய பத்திரிக்கைகள் தான். அவை மட்டும் அன்று அவர்கள் இஷ்டம் தானே என்று வியாபார நோக்கோடு இருந்திருந்தால் நீங்கள் இப்போது இங்கு எழுதிகொண்டிருக்கமுடியாது//

ஜெயக்குமார் அம்மாவை சப்போர்ட் செய்யாமல் நீங்கள் இதுபோல் பேசியிருந்தால் நான் கைதட்டி வரவேற்றிருப்பேன்.நான் என்ன எழுதி இருக்கிறேன் என்பதை மீண்டும் படிக்கவும்.நன்றி.

7:25 AM, April 17, 2006
தமிழ் சசி | Tamil SASI said...

பிரசன்னா,

உங்கள் கருத்துக்கு நன்றி. உங்களுடைய பெரும்பாலான கருத்துக்களை நான் ஒப்புக் கொள்கிறேன்

சன் டிவி சொல்வதை மக்கள் நம்ப மாட்டார்கள் என்பதை நான் ஏற்கனவே சுட்டி காட்டி இருக்கிறேன்


சன் டிவியின் செய்திகள் திமுக சார்பாகத் தான் இருக்கும் என்பதால் சன் டிவி சொல்வதை நம்பப் போவதில்லை என்ற முடிவிற்கு மக்கள் வந்து விட்டனர்


//
I reliably learnt that it was pressure from Ram/Karat axis that forced Sardesai/ Yadav not to predict near-majority for ADMK
//

How reliable are your sources ? If so can i know the details :-))

Why can't they even predict the number of seats leave alone who will get majority or near-majority ?

7:33 AM, April 17, 2006
லக்கிலுக் said...

சசி...

நல்ல அலசல்.... ஊடகத்துறையில் பணிபுரிவதால் உங்கள் அலசலை நன்கு புரிந்து கொள்ள முடிகிறது...

சில பேருக்கும் கலைஞர் ஏதோ அவர்கள் தலையில் மண்ணை போட்டதைப் போல நினைப்பு... அதனால் கண்ணை மூடிக்கொண்டு சன் குழுமத்தை தகுந்த காரணம் ஏதுமில்லாமல் எதிர்க்கின்றனர்.....



////சன் டி.வி. இப்போதே என் வீட்டில் இருந்து ஒழிந்து போய் விட்டது என்பதனை மிகவும் மகிழ்ச்சியுட்ன் தெரிவித்துக் கொள்கிறேன்!////

உங்கள் வீட்டில் இருப்பவர்கள் "அய்யோ பாவம்"

7:42 AM, April 17, 2006
தயா said...

//திமுக இந்த தேர்தலில் தோற்பது தங்களின் எதிர்கால "பிசினஸ்" வாய்ப்புகளுக்கு அவசியமாக இந்த ஊடகங்களுக்கு தெரிவதால் திமுகவிற்கு எதிராக தங்கள் பிரச்சாரத்தை மிக தீவிரமாக்கியிருக்கின்றன.//
//அதே நேரத்தில் சன் டிவி எழுப்பிய இருக்கிற ஊடக சாம்ராஜ்யத்தை பொறாமை மூலமும், திமுகவை இந்த தேர்தலில் தோற்க்கடிப்பதன் மூலமும் முடிவிற்கு கொண்டு வரலாம் என்று நினைத்து அதற்காக பொய்யான ஒரு தோற்றத்தை பிற ஊடகங்கள் ஏற்படுத்திக் கொண்டிருப்பது தமிழகத்தில் ஊடகங்கள் "கன்றாவியாக" மாறி விட்டதன் உச்சகட்டம் என்றே நான் கருதுகிறேன்.//

கோபப்படாதீங்க சசி. நீங்கள் கன்றாவியாக மாறிவிட்டது எனக் கோபப்படுவது திமுகவை இவர்கள் வரவிடாமல் செய்கிறார்கள் என்ற காரணத்தை காட்டி தான். இது மேலோட்டமான காரணம். உள் காரணம் என நீங்கள் குறிப்பிடுவது திமுகவை அழித்தால் சன் குழுமத்தை அழித்து விடலாம் என்ற நம்பிக்கை. சன் குழுமம் அப்படி ஒரு அபத்தமான "Equation" ல் இல்லை. அவர்களின் சாம்ராஜ்யம் எல்லையில்லாமல் விரிந்துவிட்டது. இதற்கு காரணம் திமுக மட்டுமே இல்லை என நீங்கள் நம்புகிறீர்கள். மற்றவர்கள் சன் குழுமம் விரிவடைந்ததற்கு காரணம் கலாநிதியின் வணிகத் திறமை மட்டுமே காரணம் இல்லை என நம்புகிறார்கள்.

சன் குழுமத்தின் வளர்ச்சிக்கு அரசியல் பிண்ணனி காரணம் என நம்புபவர்கள் அஸ்திரத்தை கையில் எடுத்திருக்கின்றன. அது அவர்களின் வாழ்வாதார பிரச்சினை. திமுக வரக்கூடாது என்று மட்டும் தானே சொல்கிறார்கள். திமுக செய்யாததை எதுவும் சொல்லவில்லையே. சும்மா இருந்த சங்கு கதையாக திமுகவினரே தேர்தல் அறிக்கை என வாரி வழங்குகின்றனர். பின்னர் அதை விமர்சிக்காமல் விட்டுவிடுவார்களா?

இந்த வாய்ப்பைத் தான் ஜெயா டிவி ஜெ பதவியில் இருந்தும் கோட்டை விட்டனர். ஆனால் சன் பதவியில் இருந்த போது பயன் படுத்திக்கொண்டது. ஏன் விஜய் செய்திகள் ராஜ் செய்திகள் வரவில்லை என்றும் பதிவு செய்திருக்கலாம். அதுவும் சன் குழுமத்தின் வணிகத் திறமையின் ஓரு அங்கம் தானா?

உண்மை தான்!
நீங்கள் எங்கேயும் சன் டிவியும் தினகரனும் "கன்றாவி" பட்டியலில் இல்லை என சொல்லவில்லை. மாறாக சொல்லாமல் விட்டு வி்ட்டீர்கள்.

8:07 AM, April 17, 2006
ப்ரியன் said...

தயா உங்களின் பின்னூட்டதில் எல்லா கருத்துக்களோடும் நான் ஒத்துப் போகிறேன் ஆனால்

/* விஜய் செய்திகள், ராஜ் செய்திகள் காணாமல் போனது யார் புண்ணியத்தில். */

இதற்கு மட்டும் விளக்கம் தர விளைகிறேன்.

விஜய் செய்தி நிறுத்தப்பட்டதற்கு காரணம் விஜய்க்கும் ஸ்டாருக்கும் செய்தி தயாரித்துத் தந்த N.D.T.V நிறுவனம் தனியாக செய்தி தொலைக்காட்சியை தொடங்கியதால் செய்தி தயாரிப்பு விஜய்க்கு தடைப்பட்டது அதன்பின் விஜய் செய்தியை கொண்டுவர முயலவில்லை.

ராஜ் ஒழுங்காக அதன் உரிமத்தை புதுப்பிருந்தால் போதும் அதையும் உச்ச நீதிமன்றமே உரிமத்தை ரத்து செய்தது காரணம் ஒழுங்கான உரிமம் இல்லாமல் "விசா" என்றொரு தெலுங்கு டி.வியையும் "ராஜ் மியூசிக்" என்று தமிழ் தொலைக்காட்சி ஒன்றை ஆரம்பித்ததும்தான்.அதை மறைக்கவே சென்ற நாடாளுமன்ற தேர்தலின் போது ராஜ் டி.வி நடத்தும் குடும்பத்தினர் அவசர அவசரமாய் பி.ஜே.பி யில் இணைந்தார்கள்.

8:21 AM, April 17, 2006
Prasanna said...

Hi Sasi

Thanks

My Sources-Sub-Editor working in The Hindu.He is mostly reliable (though i need to add that he shares with me strong antipathy towards the great communist editor of Mount Road Marx )

Sasi if will be happy if you let me respond to Muthu who is again one of my favourite blogger

Muthu-I have acknowledged that Sun TV is a true commercial success story
Only thing that takes the sheen away from the success story is the fact that
they have resorted to manipulation.Whether its right or wrong -everyone might hold a
opinion on that.I feel that true capitalist system is one where success stories are
scripted without the intervention of government or undue favourtism of the official machinery


Implementation of CAS in Chennai/delay in providing uplinking facilties for
other news channel-i can giveinnumerable instances were Sun TV has been favoured
or their competitors rendered ineffective.This deserves a seperate post

On Quality of programming in Channels,its a serious issue across the spectrum
And to single out SUN TV is unfair


However its a fully justified to apply Karunanidhi's political posturing in the context of
Sun TV programming and and find out whether what he preaches its practised by Sun TV
(use of pure Tamil/so-called English influence/glorification of regressive social practices/
protrayal of Women) - after all Karuna had 20% financial stake in the SUN TV (only recntly
he sold it off) - he could definitely influenced it positively

No one can deny ROLE of SUN TVthe third-rate slanderous campaign that was waged against Khushboo.i dont know
who orchestratated it but SUN TV played it to the hands of those vested interest .And when
regressive notions about Woman(especially coming from land of Periyar) are sought to be imposed
and SUN TV puts its commercial consideration before defending basic principles -well
serious questions needs to be asked

SUN TV today is a public limited COMPANY. nobody COULD HAVE questionED its peroragative to take whatever
political view and blank out whOever it deems WHEN it was family run enterprise .But having gone public it will be
have to be judged by the rigorous standards of objectivity and fairness.

SUN TV has raised it bar.Observers will compare it with NDTV/CNN-IBN (not say that
they do not have biases but its not as crude as SUN TV)

In its own long -term interest ( gaining respectability) its better
Sun TV stops being seen as political propaganda mouthpiece of DMK

8:36 AM, April 17, 2006
Sivabalan said...

Sasi,

Can you please put a blog on

Is The Hindu a Pro Communist Paper?

Because The Hindu Editor in Chief Mr.N.Ram, is an active person in Communist Party.

I want a person like you to analyze this. Can you do it? Please.

// The Communist Party of India (Marxist) - Third International Cuba Solidarity Conference of the Asia Pacific Region’ was held on January 20-21, 2006 at Chennai. N Ram, the editor-in-chief of The Hindu was the chairman of the Reception Committee. //

I am a regular reader of The Hindu for about 17 years.

11:42 AM, April 17, 2006
Muthu said...

prasana,

points taken...will respond later

12:37 AM, April 18, 2006
Muthu said...

few questions:
Before implementing CAS who was the leader in market?

whether CAS Scheme itself is a wrong one?

frankly i donot know anything about the uplinking facilities saga of new channels..( i honestly feel news channels are not a competition to Sun TV)

திமுகவின் கொள்கைகள் கொச்சைப்படுத்தப்பட்டுள்ள (அதைப்பற்றி பேசுவதே அசிங்கம் என்பதுதான் இன்றைய தமிழனின் பொதுபுத்தி)தமிழக சூழ்நிலையில் சன்டிவி அவைகளை தூக்கி பிடித்திருந்தால் இன்றைய வளர்ச்சியை அடைந்திருக்க முடியாது என்று நான் நினைக்கிறேன். சன்டிவி வந்துதான் தமிழன் அறிவை வளர்க்க வேண்டும் என்று அவசியம் இல்லை.
I agree that Sun TV's support to DMK may backfire in DMK's chances in elections.but singling out Sun TV for that purpose is unfair.


//In its own long -term interest ( gaining respectability) its better
Sun TV stops being seen as political propaganda mouthpiece of DMK //

i agree..but remote possibility

12:53 AM, April 18, 2006
Prasanna said...

Hi Sivabalan

I am sure SASI Will write a typically perceptive analysis on "The Hindu"

No Self-promotion.

Just to add.I had a published a detailed post on this - how Ram is wrecking havoc@The Hindu.The post was titled "Crumbling Mount Road Marx".(was featured on the Desipundit)

http://prasannavishy.blogspot.com/2006/03/crumbling-mount-road-marx-losing.html

Hopefully this provides you a perspective

3:13 AM, April 18, 2006
தமிழ் சசி | Tamil SASI said...

பிரசன்னா,

நீங்க வேற... நான் "இந்து"வை பற்றி எழுதப் போக, "இந்து" பற்றி மட்டும் ஏன் எழுதறீங்க, பிறரை பற்றி ஏன் எழுதாம விட்டு விட்டீங்க அப்படின்னல்லாம் கேட்க ஆரம்பிச்சிடுவாங்க..:-)))

எதுக்கு வம்பு

6:48 PM, April 18, 2006
Anonymous said...

I completely admire your analysis.Because of a political support,someone can start a media group but cannot sustain.JJ TV is a very good evidence of this case.If a political party can make a media's success,congress and BJP will own the biggest media group of this country.SUN's(including Dinakaran,Kungumam) success is purely because of their quality,better marketing and their knack to understand people's mind.You go to any city/town or remote village in Tamilnadu,SUN TV's penetration is immense and other media groups are jealous about it.Instead other media groups should enhance their quality instead of gribbing about it.Allegation's against SUN groups is purely an action of certain "groups" who are threatened by SUN's popularity.

12:15 AM, April 19, 2006
லக்கிலுக் said...

////குங்கும் 55 லட்சம் பிரதிகள் விற்பதாக நீங்கள் குறிப்பிட்டிருப்பது தவறு. குங்குமம் 55 லட்சம் வாசகர்களைக் கொண்டிருக்கிறது என்பதே சரி.///

Media Watch Team

இதுவும் தவறான தகவலே... குங்குமம் வாசகர்கள் எண்ணிக்கை 39 லட்சம்.... குமுதம் வாசகர்கள் எண்ணிக்கை 35 லட்சம்... ஆனந்த விகடன் வாசகர்கள் எண்ணிக்கை 25 லட்சம்... லேட்டஸ்டாக வந்திருக்கும் ஐஆர்எஸ் இவ்வாறாக கூறுகிறது... விளம்பர நிறுவனங்கள் இந்த இதழ்களுக்கு விளம்பரம் கொடுக்க ஐஆர்எஸ் சர்வேவையே நம்பும்....

9:09 AM, April 19, 2006
Anonymous said...

I feel pity over Tamil Nadu peoples for watching SUN TV. I dont agree that SUN TV's growth is only based on Kalanithi Maran efforts. As somebody mentioned in this blog SUN TV's, it was given every support and even more benefits from central government, since DMK was in power in central government consequtively for the past 10 years. SUN TV praise the movie as no.1 if the hero gives "interview" with them, else they show the same movie as no. 5 or no.6. We know about this mentioned by Cheran, Vivek, Sathiyaraj and many.

My final comment is, no industry should have a monopoly player, that is not good for the people. Sun TV is a monopoly, they control Tamil Nadu people by humbug serials (all of them are STUPID).

2:39 PM, April 19, 2006
Anonymous said...

ஜெயக்குமார்,
உங்க காமெடி தாங்க முடியல்ல.

Did you watched Jaya TV by any chance. There was a Very very good comedy show running from morning till after, headed by mr. Ravi bernard.

9:46 AM, May 11, 2006
Anonymous said...

//My final comment is, no industry should have a monopoly player, that is not good for the people. Sun TV is a monopoly, they control Tamil Nadu people by humbug serials (all of them are STUPID//


Serial is there in all the TV channels. Including Star PLUS.

Sun TV never ordered you to watch there TV. Its your Wish.

Sun TV will change its way if people stop watching the Serials.

Do any one agree this.

Note: Did any one Know that Kalanathi Maran and the main Sun executive team memebers did not Like Serials. This was said by then in a Interview to Vikatan, last year. I dont remember the issue date of the vikatan

9:58 AM, May 11, 2006
Anonymous said...

dear tamils ..
can we pls shed our usual jelousy and appreciate a 'saga thamizhan 'Kalanidhi Maran for
1. making Sun TV number one
2. becoming a noticeable media baron in India
3. his marketing mantarams fro making Kunkumam and Dinakaran get good circulation
..etc etc

If Sun TV had been few hundred kilometers away from Chennai (into Karnataka or Andhra or Kerala ).. he would have been recognised better ..
shall we take some pride on our achieving tamizhans!!!

Remember ,Abdul Kalam 's name for presidency was not proposed by Tamils but by some Northern parties ..We only commented on his hairstyle ( "mudi vettinal nanraga irukkumey " ..by Ananda vikatan )
----
and about hindu ..I think this link (see the last post ) summarizes about THE Hindu's attitude
http://www.princeroy.org/2005_12_01_princeroy_archive.html#113447918295113172

with regards
N. Thirumalai Nambi

12:01 AM, May 12, 2006