Saturday, June 03, 2006

சதுரங்க ஆட்டத்தில் "தமிழீழம்" - 1

ஈழம் குறித்தப் பதிவினை சில மாதங்களுக்கு முன்பு எழுதிய பொழுது, இவ்வாறு கூறியிருந்தேன்.

உலக நாடுகளின் ஆதரவை இரு குழுக்களுமே தற்பொழுது பெற வேண்டிய நிலையில் இருக்கின்றனர். கடந்த காலங்களில் Advantage - srilanka என்ற நிலை தற்பொழுது மாறியிருக்கிறது. புலிகள் எப்படி தங்களை சமாதானத்தை விரும்பும் குழுவாக வெளிப்படுத்த நினைக்கிறார்களோ அது போல ராஜபக்ஷ தான் சிங்கள தேசியவாதத்தை மட்டுமே முன்னிறுத்த வில்லை, தமிழர்களுக்கு கூட்டாச்சி உரிமைகளை கொடுப்பதிலும் தனக்கு ஆர்வமுள்ளது என்பதை தன்னுடைய நடவடிக்கைகள் மூலம் தெளிவுபடுத்தியாக வேண்டிய நிலையில் உள்ளார்

இரு நாடுகளின் ராஜதந்திர யுத்தம் பற்றி அந்தப் பதிவில் எழுதியிருந்தேன். இம் முறையும் இந்த ராஜதந்திர யுத்தத்தில் புலிகள் தோற்று தான் உள்ளனர். போர்க் களத்திற்கும், சமாதானக் கால செயல்பாடுகளுக்கும் இடையே இருக்கும் பெருத்த வேறுபாட்டினை இந்த நீண்ட சமாதானக் காலத்தில் (மறைமுக போர்க் காலம் என்று தான் சொல்ல வேண்டும்) புலிகள் உணர்ந்திருப்பார்கள். போர்க் காலங்களை விட இந்தச் சமாதானக் காலத்தில் விடுதலைப் புலிகளுக்கு நிறைய பின்னடைவுகள் நேர்திருக்கின்றன என்று சொல்லலாம்.

சமாதானப் பேச்சு வார்த்தை தொடங்கிய காலக்கட்டத்தை நோக்கிப் பின்நோக்கி செல்லும் பொழுது சிறீலங்கா அரசு எந்த நிலையில் இருந்தது என்பதையும், தற்பொழுது எந்த நிலையில் உள்ளது என்பதையும் கவனிக்க முடியும்.

யானையிறவு போரில் அரசு படைகள் தோற்று விட்ட சூழலில் தான் சமாதானப் பேச்சு வார்த்தை தொடங்கியது. இராணுவ பலத்தில் புலிகளின் கை ஓங்கியிருந்தது. சிறீலங்கா அரசின் பொருளாதாரம் கடும் பின்னடைவைச் சந்தித்து இருந்தது. மிகவும் வலுவாக 7% பொருளாதார வளர்ச்சியுடன் ஒரு காலத்தில் முன்னேறிக் கொண்டிருந்த சிறீலங்கா, 2001ல் வெறும் 1.5% பொருளாதார வளர்ச்சி என்ற நிலைக்குச் சரிவடைந்து மிகக் கடுமையான நிதி நெருக்கடிகளையும் எதிர்கொண்டு இருந்தது. திருப்பிச் செலுத்த முடியாத நிலையில் வெளிநாட்டுக் கடன், மிகக் குறைந்த வருவாய், எந்த நலத்திட்டத்தையும் செய்ய முடியாத நிதி நிலை என ஒரு Bankrupt நிலைக்கு இலங்கைப் பொருளாதாரம் சென்று கொண்டிருந்தது. அன்றைய சூழலில் போர் தொடர்ந்திருந்தால் இன்று இலங்கையின் பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்திருக்கும். இலங்கை சீர்குலைந்து போய் இருக்கலாம். ( இதற்கு நேர்மாறாக உலக நாடுகள் இலங்கைக்கு உதவி செய்திருக்கலாம் என்று நம்புவதற்கும் இடமுள்ளது. ஆனாலும் இவை யூகங்களே ).

2001-2005க்கு இடையேயான சமாதானக் காலத்தில் இலங்கையின் பொருளாதாரம் ஓரளவிற்கு தன்னுடைய ப்ழைய நிலையை மீட்டு எடுத்து விட்டது. கடந்த ஆண்டின் நிலவரப் படி சுமார் 5% பொருளாதார வளர்ச்சியை இலங்கை அடைந்து இருக்கிறது. இராணுவ ரீதியிலும், ஆயுத தளவாடங்களிலும் அரசின் பலம் அதிகரித்து உள்ளது. 2005ம் ஆண்டின் நிதி நிலை அறிக்கையில் கடந்த ஆண்டுகளைக் காட்டிலும் 8% அதிகமாக இரணுவத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆயுதங்களைத் தவிர இராணுவ வீரர்களின் பலம் குறிப்பிடத்தகுந்த அளவிற்கு உயர்ந்துள்ளது. உதாரணமாக 2001ல் 10,000மாக இருந்த விமானப் படை கடந்த ஆண்டு நிலவரப் படி சுமார் 18,000மாக உயர்ந்துள்ளது.

புலிகளின் இலகு ரக விமானங்கள் குறித்து எழுந்த விமர்சனம் அளவுக்கு இலங்கை அரசின் விமானப் படையின் பலமோ, பலமாக அதிகரிக்கப்பட்ட ஆயுதங்களின் பலம் குறித்தோ எதுவுமே எழுதப்படவில்லை என்பது ஒரு புறம் இருக்க, இலங்கை அரசு மேற்கொண்ட சில strategic நடவடிக்கைகள் புலிகளின் பலத்தை வெகுவாக குறைத்து விட்டது என்றே சொல்ல வேண்டும். குறிப்பாக இரண்டு நடவடிக்கைகளைச் சொல்லலாம்

  • புலிகளின் அதே கொரில்லா உத்தியைப் பின்பற்றி புலிகளை தாக்குவது. இதனைச் செய்ய கருணா பிரச்சனையை தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்வது.

கருணா பிரச்சனை மூலம் புலிகளை வடக்கு, கிழக்கு எனப் பிளவுப் படுத்தலாம் என்பதாக முதலில் மேற்கொண்ட முயற்சி தோல்வி அடைந்து, கருணா "இந்தியாவிலோ", வேறு ஏதோ "ஒரு நாட்டிலோ" பாதுகாப்பாக தஞ்சம் அடைந்து விட்டாலும் அந்தப் பிரச்சனையை அப்படியே இலங்கையின் உளவுப் பிரிவு தக்கவைத்துக் கொண்டது.

கருணா என்ற கவசத்தை அணிந்து புலிகளை திடீரென்று தாக்குவது என்ற அரசு உளவுப் பிரிவின் திட்டம் புலிகளை கடுமையாகப் பாதித்து இருக்கிறது. புலிகளின் முக்கியமான பிரமுகர்கள், இராணுவ தளபதிகள் இவர்களைக் குறிவைத்து நடந்து வரும் இந்தத் தாக்குதல் தமிழ் ஈழப் போராட்டத்தின் போர் சூழ்நிலையில் மோசமான மாற்றங்களை ஏற்படுத்தியிருக்கிறது. கொள்சல்யன் தொடங்கி, கடந்த மாதம் சுட்டுக் கொல்லப்பட்ட ரமணன் வரை புலிகளின் பல முக்கியமான தளபதிகள் இந்த சமாதானக் காலத்தில் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.

இன்று ஒரு அரசாங்கம் எதிர்கொள்ள வேண்டிய பிரச்சனைகளை புலிகளும் எதிர்கொண்டு இருக்கின்றனர். ஏனெனில் அவர்களும் ஒரு தனி அரசாங்கத்தை தமிழீழத்தில் நடத்திக் கொண்டிருக்கின்றனர். கொரில்லா நிலையில் இருந்து மாறுதல் பெற்று ஒரு தனி அரசாங்கத்தை அவர்கள் நிறுவி நடத்தி வரும் சூழ்நிலையில் புலிகளின் முக்கிய பிரமுகர்களை குறி வைத்து நடத்தப்படும் இந்த தாக்குதல் தான் இலங்கையில் தற்பொழுது தொடர்ந்து நடந்து வரும் சண்டைகளுக்கு முக்கிய காரணம்.

  • மற்றொரு விடயம், புலிகளின் சார்பு நிலையில் இருந்த சில சிறந்த சிந்தனையாளர்களை அகற்றுவது, அதன் மூலம் அங்கு ஒரு வெற்றிடத்தை ஏற்படுத்துவது.

சமாதானக் காலத்தில், பேச்சுவார்த்தை போன்ற சூழ்நிலை நிலவும் பொழுது இந்தப் பிரச்சனையை சிறந்த வகையில் வெளிப்படுத்தும் சிறந்த சிந்தனையாளர்கள், பத்திரிக்கையாளர்கள், பிற சமூகத்தினரும் மதிக்கும் எழுத்தாளர்கள் ஒரு சமூகத்தின் முக்கியமான ஆயுதம் என்றே அறியப்படுகிறார்கள். அவ்வாறு ஒரு முகத்தை தமிழ் ஈழ தமிழ் சமுதாயத்தில் வெளிப்படுத்தியவர் "தாரகி" என்று அழைக்கப்படும் தருமரத்தினம் சிவராம்.

தாரகி சிறந்தப் பத்திரிக்கையாளர், இராணுவ ஆய்வாளர் மற்றும் சிந்தனையாளர். இவரை கொழும்புவில் "அதிகப் பாதுகாப்பு மிக்கப் பகுதியாக" அறியப்பட்ட ஒரு பகுதியில் "சிறீலங்கா அரசு உளவுப்பிரிவினர்" கொன்றனர். இதன் மூலம் தமிழ் ஈழ சமுதாயத்தின் உணர்வுகளை வெளிப்படுத்திய ஒரு சிறந்த சிந்தனையாளரை அகற்றி விட்டனர்.

சமீபத்தில் கொல்லப்பட்ட பச்சிளம் குழந்தை உள்ளிட்ட தினமும் கொல்லப்படும் எத்தனையோ அப்பாவி மக்கள், திருகோணமலையில் சுட்டுக்கொல்லப்பட்ட அப்பாவி மாணவர்கள், ஜோசப் பரராஜசிங்கம், கொளசல்யன் தொடங்கி கடந்த மாதம் ரமணன் வரை சுட்டுகொல்லப்பட்ட சில முக்கியமான புலிகள் பிரமுகர்கள் எனப் பல "பயங்கரவாத" நடவடிக்கைகளை மேற்க்கொண்டிருந்த சிறீலங்கா அரசு மீது பொருளாதார தடைகள் விதிக்கப்பட்டிருக்க வேண்டும்.

விடுதலைப் புலிகளின் பலச் செயல்களும் இதையொட்டியே இருந்தன. லஷ்மண் கதிர்காமர் கொல்லப்பட்டதற்காக ஐரோப்பிய ஒன்றியம் புலிகளின் பிரதிநிதிகள் ஐரோப்பிய ஒன்றியங்களில் பயணம் செய்ய தடை விதித்தது. ஐரோப்பிய ஒன்றியம் விதித்த இந்தத் தடைக்கு நியாயமான காரணம் உள்ளது என்பதை மறுக்க முடியாது. படுகொலைகள் ஒரு பயங்கரவாதச் செயல் என்ற வகையில் புலிகளின் அரசியல் படுகொலைகள் கண்டனத்திற்குரியது.

அதே நேரத்தில் "வரலாற்றில் புலிகள் ரத்தக்கறையை ஏற்படுத்தியிருப்பதாக" கருதும் பல நாடுகள், அமைப்புகள், சிந்தனையாளர்கள், பத்திரிக்கையாளர்கள், தனி நபர்கள் புலிகள் மீதான அத்தனை குற்றச்சாட்டுகளுக்கும் உள்ள அதே நியாயமான காரணங்கள் சிறீலங்கா அரசுக்கும் பொருந்தும் என்பதை எப்படி மறக்கிறார்கள்/மறைக்கிறார்கள் என்பது எனக்கு வியப்பை ஏற்படுத்துகிறது.

"தாரகி" ஒரு அரசாங்கத்தின் அமைச்சர் அல்ல என்பதைத் தவிர ஒரு சிறந்த சிந்தனையாளராக, பத்திரிக்கையாளராக, சமூக மக்களின் உணர்வுகளை பிரதிபலிக்கும் பிரதிநிதியாக வெளிப்பட்டுள்ளார். அவர் கொல்லப்பட்டது, பாரளுமன்ற உறுப்பினராக இருந்த பரராஜசிங்கம் கொல்லப்பட்டது, திருகோணமலையில் அப்பாவி மாணவர்கள் கொல்லப்பட்டது (அதனைச் உறுதிச் செய்த SLMM) எனப் பலச் சம்பவங்கள் நடைபெற்றப் பின்னர் சிறீலங்கா அரசு மீது தடை விதிக்க பல நியாயமான காரணங்கள் உள்ளன. ஆனால் அவ்வாறு இல்லாமல் அதனை வாய்மூடி மொளனமாக பார்த்துக் கொண்டிருந்த ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் பிற நாடுகள், அமைப்புகள், பத்திரிக்கையாளர்கள் குறித்த அவநம்பிக்கை எழுகிறது. சிறீலங்கா அரசுப் படைகள் மேற்கொண்ட பல அத்துமீறல்களில் "சிலவற்றையேனும்" காரணமாகக் கொண்டு புலிகள் மீது விதிக்கப்பட்ட அதே அளவிளான தடைகள் சிறீலங்கா அரசு மீதும் விதிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் அவ்வாறு நடக்காமல் போனதன் காரணம் என்னவென்று எனக்கு தெரிந்தே இருப்பதால் இதன் அரசியல் என்னை வேதனைப்படுத்துகிறது/ எரிச்சல்படுத்துகிறது.

இந்தப் பிரச்சனைக்கு எத்தகைய தீர்வு தான் உள்ளது என்ற கேள்வி எழுகிறது.
புகைந்துக் கொண்டிருந்த இந்தப் பிரச்சனை விஸ்ரூபம் எடுத்தது கடந்த ஆண்டு மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக பதவியேற்றப் பிறகு தான். மஹிந்த ராஜபக்ஷ பதவியேற்ற காலத்தில் நிலவியச் சூழ்நிலை கவனிக்கத்தக்கது. புலிகள் "ஆதரவு", "எதிர்ப்பு" என்ற உணர்வுகளை விலக்கிப் பார்க்கும் பலருக்கும் அப்பொழுது நிலவிய சூழ்நிலை தெளிவாகப் புரியும்.

மஹிந்த ராஜபக்ஷ பதவியேற்ற சூழ்நிலையில் நானும் ஒரு பதிவு எழுதியிருந்தேன். அதற்குப் பிறகு எழுதிய சூழ்நிலையிலும் தமிழ் ஈழப் போராட்டம் ஒரு முக்கியமான கட்டத்தை எட்டியிருப்பதாகவே நான் நம்பினேன். முக்கியமான கட்டம் என்பது "தமிழீழம்" என்ற தனி நாட்டை நோக்கிய ஒரு முக்கியமான முன்னேற்றம், அல்லது சிறீலங்கா அரசு போர் நோக்கி நகரும் தீவிரம் இவை ஏதேனும் ஒன்று என்ற ரீதியில் தான் எனது பதிவில் அதனைக் குறிப்பிட்டிருந்தேன்.

அந்தக் காலக்கட்டத்தில் பல ஊடகங்களின் செய்தியை நோக்கினால், குறிப்பாக சிறீலங்காவில் இருந்து வெளிவரும் "டெய்லி மிரர்" போன்ற ஆங்கில நாளிதழ்கள், சிறீலங்காவிற்கு வெளியே இருக்கும் சிறீலங்கா அரசு சார்பு ஏடுகளான "ஹிந்து" போன்ற நாளிதழ்களை கவனித்து வருபவர்களுக்கு இந் நிலை தெளிவாகப் புரிந்திருக்கும்.

புலிகளுக்கு உலக நாடுகள் மத்தியில் கிடைக்கும் அங்கீகாரம் "புலிகள்" எதிர்ப்பாளர்களை கவலை கொள்ள வைத்திருந்தது. மஹிந்த ராஜபக்ஷ போன்ற சிங்கள இனவாத தலைவர்கள் பதவியேற்றிருக்கும் சூழ்நிலையில் புலிகளின் நிலைக்கு பலம் சேர்ந்திருந்தச் சூழலில்
தான் இந்தப் போக்கு தடம் மாறியது.

பல நாட்டு உளவு அமைப்புகள், Strategists போன்றவர்கள் இணைந்து அமைத்த வியூகத்தில் புலிகள் சிக்கிக் கொண்டனர். இன்று பல நாடுகளின் தடை நோக்கி அவர்கள் செல்ல காரணமாக அமைந்ததும் இந்த வியூகச் சிக்கல் தான். வழக்கம் போல தங்களுடைய வியூகத்தை தெளிவாக அமைக்காமலேயே, நிறுவனப்படுத்தப்பட்ட நாடு என்ற ஒரே முகமூடியைக் கொண்டு இந்தப் பிரச்சனையை தங்களுக்குச் சாதகமாக சிறீலங்கா அரசு பயன்படுத்திக் கொண்டது.

முதலில் வடக்கு, கிழக்கு மாகாணங்கள் ஒன்றிணைந்த "தமிழ் தேசம்" என்பதை கேள்விக்குள்ளாக்குவது, புலிகள் அனைத்து தமிழ் மக்களுக்குமான பிரதிநிகள் அல்ல என்று நிலை நிறுத்துவது என்ற போக்கில் தான் அரசின் உத்தி இருந்தது. அதற்கு அவர்கள் உருவாக்கிய கதாப்பாத்திரம் தான் "கருணா". "ஹிந்து" போன்ற சிறீலங்கா அரசு சார்பு ஊடகங்களில் "கிழக்கு மக்களின்" உரிமைகள் குறித்து தொடர்ந்து எழுதப்படுவதை இங்கே கவனிக்க வேண்டும்.

இவ்வாறு சிறீலங்கா அரசுக்கும், புலிகளுக்கும், சர்வதேச நாடுகளுக்கும் இடையே நடக்கும் இந்தச் சதுரங்க ஆட்டத்தில் சிக்கிக் கொண்டவர்கள் திருகோணமலையிலும், யாழ்ப்பாணத்திலும், மட்டக்களப்பிலும் இருக்கும் நம்முடைய அப்பாவி தமிழ்ச் சகோதர/சகோதரிகள் என்பது தான் வேதனைப்படுத்தும் உண்மை
Tamil Eelam Kids

சிறீலங்கா அரசு விளையாட தொடங்கிய இந்த சதுரங்க ஆட்டத்தில் புலிகள் எடுத்த எதிர் நிலைப்பாடு குறித்து அடுத்தப் பதிவில் எழுதுகிறேன்

31 மறுமொழிகள்:

ROSAVASANTH said...

வழக்கம் போல விரிவான பதிவு. தொடருங்கள்

2:07 PM, June 03, 2006
இளங்கோ-டிசே said...

/அதே நேரத்தில் "வரலாற்றில் புலிகள் ரத்தக்கறையை ஏற்படுத்தியிருப்பதாக" கருதும் பல நாடுகள், அமைப்புகள், சிந்தனையாளர்கள், பத்திரிக்கையாளர்கள், தனி நபர்கள் புலிகள் மீதான அத்தனை குற்றச்சாட்டுகளுக்கும் உள்ள அதே நியாயமான காரணங்கள் சிறீலங்கா அரசுக்கும் பொருந்தும் என்பதை எப்படி மறக்கிறார்கள்/மறைக்கிறார்கள் என்பது எனக்கு வியப்பை ஏற்படுத்துகிறது.

"தாரகி" ஒரு அரசாங்கத்தின் அமைச்சர் அல்ல என்பதைத் தவிர ஒரு சிறந்த சிந்தனையாளராக, பத்திரிக்கையாளராக, சமூக மக்களின் உணர்வுகளை பிரதிபலிக்கும் பிரதிநிதியாக வெளிப்பட்டுள்ளார். அவர் கொல்லப்பட்டது, பாரளுமன்ற உறுப்பினராக இருந்த பரராஜசிங்கம் கொல்லப்பட்டது, திருகோணமலையில் அப்பாவி மாணவர்கள் கொல்லப்பட்டது (அதனைச் உறுதிச் செய்த SLMM) எனப் பலச் சம்பவங்கள் நடைபெற்றப் பின்னர் சிறீலங்கா அரசு மீது தடை விதிக்க பல நியாயமான காரணங்கள் உள்ளன. ஆனால் அவ்வாறு இல்லாமல் அதனை வாய்மூடி மொளனமாக பார்த்துக் கொண்டிருந்த ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் பிற நாடுகள், அமைப்புகள், பத்திரிக்கையாளர்கள் குறித்த அவநம்பிக்கை எழுகிறது. சிறீலங்கா அரசுப் படைகள் மேற்கொண்ட பல அத்துமீறல்களில் "சிலவற்றையேனும்" காரணமாகக் கொண்டு புலிகள் மீது விதிக்கப்பட்ட அதே அளவிளான தடைகள் சிறீலங்கா அரசு மீதும் விதிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் அவ்வாறு நடக்காமல் போனதன் காரணம் என்னவென்று எனக்கு தெரிந்தே இருப்பதால் இதன் அரசியல் என்னை வேதனைப்படுத்துகிறது/ எரிச்சல்படுத்துகிறது./

இந்த நிலைதான் எனக்கும் அடிக்கடி வருவது. நல்லதொரு பதிவு. நன்றி சசி.

2:17 PM, June 03, 2006
ஜூலியன் said...

I agree with you about the current situation and the problems that LTTE has to confront. however i beg to differ on why LTTE lost in the propaganda war when GOSL won. It is partially part of LTTE's lack of efficient representatives and propagandists in the west, and the rest is due to the mere "closed eye" politics of the west (read EU, Canada and USA).

I, you as well any other observer of srilankan politics know Kausalyan's assasination preceded Kadigamar's assasination, and Pararajasingam's assasination preceeded the assisasination attempt on Army top brass Fonseka. Yet, NO governernment on the west nor india gave the equivalent improtance to loss of both sides. there is a sort of supporting 'legitimate GOSL" from the west. If you look the history, even a single state NEVER supported a rebel organization unless the particular state gains something out of the rebellion for itself. The words, "democracy", "terrorism" and the pharses in the simliar line get spawned according to 'what is the best for us.' Hence, none can completely blame LTTE for the loss of propaganda war.

Yet, LTTE has a venue that it has not fully explored till this moment. identifying the interests of these countries or at least some of the powerful people in these countries and align themselves with their interests. This helps for LTTE. At least Thirumavalavan showed it as a good move, though his party lost in number of seats seats.

LTTE also wants to have a good propaganist firm to promote them in the west. AT least keep the western born spokepersons or prominent figures who can provide the children of the soil face in the west, like Vannessa Redgrave for Chechniyans, and Richard gere for Tibetians.

canadian situation is a little complecated, as the current conservative premier buffon is more eager to mimic his god fearing gay hating conservative US counterfart for his consistuency rather than alligning with GOSL. In EU's recent actions what many did not notice in the hullabulla of banning LTTE is that tightening GOSL with withholding of funds that was already promissed.

In one way, when i look LTTE's survival in the past, I do not think LTTE will loose much finantially, as it may have alternative finantial resources or mode to flow and follow money into its strips.

2:27 PM, June 03, 2006
தமிழ் சசி | Tamil SASI said...

Rosemary,

உங்களின் கருத்துடன் நான் உடன்படுகிறேன்.

தமிழ் ஈழப் பிரச்சனையை உலக நாடுகளிடம் கொண்டு செல்லக் கூடிய ஒரு நபரை, உலக நாடுகளுடன் உறவை வளர்த்துக் கொள்ளக் கூடிய திறமையுடைய ஒருவரை இது வரை புலிகள் உருவாக்கி கொள்ளவில்லை என்பதும் புலிகளின் தற்போதைய நிலைக்கு முக்கிய காரணம்.

புலிகளின் ஆலோசகராக அறியப்படும் ஆண்டன் பாலசிங்கம், அரசியல் பிரிவு தலைவர் தமிழ்ச்செல்வன் போன்றோர் இந்தப் பிரச்சனையை எந்தளவுக்கு பிற நாடுகளிடம் Diplomaticஆக அணுக முடிந்திருக்கிறது என்பதை பார்க்கும் பொழுது, தற்பொழுது இருக்கின்ற பெரிய இடைவெளி நமக்கு புரிகிறது.

சமாதானக் காலங்களில் தேவைப்படும் இத்தகைய திறமையுள்ள ஒருவரை எப்படி கண்டறியப் போகிறார்கள். ஏற்கனவே இருக்கும் சிலரை பயன்படுத்திக் கொள்ள முடியுமா ? என்ற கேள்விகள் எழுகின்றன.

சமாதானப் பேச்சுகளில் பங்கேற்கும் குழுவை கவனிக்கும் பொழுது கூட பலர் புலிகள் இயக்கத்தில் இருக்கும் முக்கிய தளபதிகள் தான். இதில் எந்த தவறும் இல்லை என்றாலும் இவர்களால் தொடர்ச்சியாகப் பேச்சுவார்த்தை, பிற நாடுகளுடன் உறவினை வளர்த்துக் கொள்ளுதல் போன்றவற்றைச் செய்ய முடியுமா என்ற கேள்வி எழுகிறது.

சமாதானக் குழு என்பது சில நாட்கள் பேச்சுவார்த்தைகளில் பங்கேற்கும் குழு மட்டுமே அல்ல. தொடர்ச்சியாக பிற நாடுகளுடன் நல்லுறவை தொடர்ந்து பராமரிக்க தக்க அளவிலான Logistics அந்தக் குழுவிற்கு இருக்க வேண்டும். ஆனால் அவ்வாறு இல்லாமல் போனது ஒரு பெரிய இடைவெளியை புலிகளுக்கும், சர்வதேச நாடுகளுக்கும் இடையே ஏற்படுத்தியிருக்கிறது.

3:47 PM, June 03, 2006
இளங்கோ-டிசே said...

Rosemary யின் பின்னூட்டத்தை வாசிக்கும்போது வந்த எண்ணம் ஒன்று.

Rosemary கூறுவதுபோல, முற்றுமுழுதாக தமிழ்மக்கள்/புலிகள் பிரச்சாரத்தின் பலவீனமே சர்வதேசத்தின் பார்வை இப்படி கோணலாய் இருக்கின்றது என்று ஏற்றுக்கொள்ளமுடியாது என்றே நானும் நினைக்கின்றேன்.
....
உதாரணத்துக்கு புலிகளை முன்னிலைப்படுத்தாது (இதற்கு முன்னும் சில மாணவர் போராட்டங்கள் நடந்திருந்தன) கொலைகள் நிறுத்தப்படவும், சமாதானச் செயற்பாடுகள் விரைவில் ஆக்கபூர்வமாய் ஆரம்பிக்கவேண்டும் என்று... அண்மையில் இங்கே நடந்த உரிமைக்குரல் நிகழ்வில் கிட்டத்தட்ட 10 000 மக்கள் கலந்துகொண்டிருந்தாலும், அதைப் பற்றி சிறுசெய்திகளாய்த்தானும் இங்குள்ள வெகுசன ஊடகங்கள் மூச்சுவிடவில்லை (விதிவிலக்காய் தென்னாசிய ரீவி நிகழ்ச்சி ஒன்றின் செய்தியொன்றில் மட்டும் இந்நிகழ்வு பற்றிய செய்தி வந்திருந்தது). மாணவர்கள், இப்படி ஒரு நிகழ்வு ஒழுங்குசெய்யப்பட்டிருக்கின்றது, வாருங்கள் என்று வெகுசன ஊடகங்களை அழைத்தபோது... பல்வேறு காரணங்களைக்கூறி (அதில் ஒன்று பஸ் சேவை அன்று நிறுத்தப்பட்டதால், அதுவே தங்களுக்கு முக்கியமான செய்தியென சில ஆங்கில வெகுசன ஊடகங்கள் கூறியிருந்தனவாம்) அந்நிகழ்வை coverage செய்யாமல் இருட்டடிப்புச் செய்திருந்தனர். எனவே மேற்குலகும் தங்கள் 'மனிதாபி'மானக்கதவைச் சற்றாவது திறக்கவைத்திருக்கவேண்டும். அவர்கள் இரண்டுபக்கப் பார்வையாய் தங்கள் நிலையை மாற்றாதுவரை, சர்வதேச சமூகம் எண்டால் நாங்கள்தான் மச்சான் (நன்றி:கொழுவி) என்று கூறிக்கொள்ளுவதாவது அவசியமாகும்.
....
உரிமைக்குரல் அரங்கில் ஒரு நண்பன் பேச்சினிடையே இப்படிக் கூறியிருந்தான்... இங்கே வந்திருக்கும் மக்களில் ஏறக்குறைய 90% மானவர்கள் இங்குள்ள குடிமக்களாய் பிரஜாவுரிமை பெற்றும் இருக்கின்றோம். எனவே நாங்கள் கனடீயர்களாய் நின்றும் கோரிக்கை விடுப்பதை இந்த கனடீய அரசாங்கம் காது கொடுத்துக் கேட்கவேண்டிய தார்மீக அரசியல் அறமும் இருக்கின்றதென்று. நியாயமான கேள்விதானல்லவா?

3:49 PM, June 03, 2006
Anonymous said...

வணக்கம் சசி,

நல்ல நிதானமான பதிவு.

நீங்கள் குறிப்பிட்ட சில விடயங்கள் மேலோட்டமான பார்வயாக இருப்பதாக நான் கருதுகிறேன்.

முதலில் சர்வதேச அரசியல் என்பது இன்றிருக்கும் சர்வதேச ஒழுக்குக்கு அமைவாக(Global order) ,மேற்குலக அரசுகளின் புவியல் சார் கேந்திர நலங்களின்(Geo political interests) அடிப்படையிலயே நிகழ்கிறது.இவை எந்த மனித உரிமை சார்ந்தோ அன்றி மூன்றாம் உலக மக்கள் சார்ந்தோ செய்யப் படுவதில்லை.சர்வதேச ஒழுக்கின் படி தேசிய அரசாங்கங்களை சர்வதேச நிதியம் ,ஐய்கிய நாடுகளின் பாதுகாப்புச் சபை ,போன்ற முறமைகளினால் கட்டுப்படுத்த முடியும்.ஆனால் விடுத்லைப்புலிகள் போன்ற அரசு அல்லாத விடுதலை அமைப்புக்களை இவ்வாறான சரவதேச நிறுவனக்களினூடாகக் கட்டுப்படுத்த முடியாது.அதனாலயே அவற்றைக் கட்டுப் படுத்த பயங்கரவாதி என்கின்ற முத்திரை குத்தப் படுகிறது.இது ஏன் இப்போது குத்தப்பட்டது என்று நாம் நோக்க வேண்டும்.

முதலில் அமெரிக்காவின் இலங்கை சம்பந்தமான அடிப்படை நலன்(strategic interests) , தெற்காசியாவில் சர்வதேச கடற் போக்கு வரத்துக்களின் கேந்திர நிலயமாக இலங்கைக் கடற்பரப்பு விளங்குகின்றமையில் இருந்தே ஆரம்பிக்கிறது.அண்மயில் புலிகளினால் நிகழ்த்தப்பட்ட கடற் சமரும் இதனயே சர்வதேசத்திற்கு உணர்த்தியது.புலிகள் இதனை நன்கு உணர்ந்தமயாலயே இந்த பேச்சுவார்த்தைக்ளினூடாக தம்மைப் பலப் படுத்திக் கொண்டனர்.அவர்களின் தளபதிகள் ஆற்றும் உரைகளை நுணுகி ஆராய்ந்தீர்களே ஆனால் அவர்கள் எப்போதும் சொல்லும் ஒரு விடயம், எமது பலமே எம்மைப் பாதுகாக்கும் என்பதுவே.
கேந்திர ரீதியான பலத்தில் இருந்தே சர்வதேச ராஜதந்திர நகர்வுகள் மேற்கொள்ளப் படுகின்றன.
அடுத்து இனி என்ன நடக்கும்?
புலிகள் அதிகரித்த தமது கேந்திர ரீதியான பலத்தை நிலை நாட்டி ,இன்னொரு கட்டத்திற்கு தமது ராஜ தந்திர நகர்வுகளை மேற்கொள்ளுவார்கள்.இப்படியான நகர்வுகளே ஈற்றில் தமிழ் ஈழத்திற்கான அங்கீகாரத்தை ஏற்படுத்தும்.

இதை இந்திய அரசியலுடன் பார்க்க விரும்பின் ,இந்திய அணு ஆயுத வெடிப்பின் பின் அமெரிக்கா விதித்த தடைகளை எண்ணிப் பாருங்கள்? இப்போது அந்தத் தடைகளுக்கு என்ன நடந்தது?இந்தியா தனது அணு ஆயுத ஆராச்சிகளை நிறுத்தி விட்டதா ,இல்லயே.இப்போது அமெரிக்கா இந்தியாவுடன் கூட்டணி அமைத்து அல்லவா ஆராச்சிகளைச் செய்கிறது.

மேலும் இலங்கை அரசின் இராணுவ வலிமை பற்றி உங்கள் கணிப்பீடு தவறானது.புலிகளின் இராணுவ உபாயம் படை எண்ணிக்கயின் அடிப்படயில் அமைவதில்லை.மேலும் அவர்கள் இன்று பல்லாயிரக் கணக்கான மக்களுக்கு இராணுவப்பயிற்ச்சி வழங்கி வருவது ,இனி நிகழப் போகும் போரிற்கான ஆயுத்தமே அன்றி வேறொன்றும் அல்ல.

விரைவில் நிலமைகள் மாறும், எமக்கு அந்த நம்பிக்கை இருக்கிறது.

4:30 PM, June 03, 2006
தமிழ் சசி | Tamil SASI said...

நாரதர்,

உங்கள் கருத்துகளுக்கு நன்றி

இலங்கையின் கேந்திர முக்கியத்துவம் குறித்து என்னுடைய முந்தைய சிலப் பதிவுகளில் குறிப்பிட்டிருந்தேன்.

அது போலவே சமாதானக் காலங்களில் புலிகள் ஆயுதங்களை குவிப்பதாக குற்றம்சாட்டப்படும் நிலையில் சிறீலங்கா அரசும் அவ்வாறு செய்து கொண்டிருப்பதை உலக நாடுகள் வேறு விதமாக கவனிக்கும் போக்கை காட்டவே குறிப்பிட்டிருந்தேன்.

புலிகளின் பலம் ஆயுதங்களோ, எண்ணிக்கையோ மட்டும் அல்ல என்பதை என்னுடைய முந்தைய ஒரு பதிவில் எழுதியிருக்கிறேன்

அடுத்தப் பதிவில் மேலும் சில விடயங்களை விளக்க முடியும் என நினைக்கிறேன்

4:48 PM, June 03, 2006
காத்து said...

வணக்கம் சசி....

நல்ல முறையில் அமைக்கப்பட்ட பதிவு. ஆனாலும் இன்னும் ஒரு கோணத்திலும் இங்கு புலிகள் மீதான தடையை நோக்கவேண்டிய கடப்பாடு உள்ளதாக தெரிகிறது... கடந்தமுறை இந்திய தென்னக கடற்படை தளபதியின் கூற்றை மையமாக வைத்து சொல்லலாம்.... அவர் சொன்ன கூற்று என்ன எண்றால் அங்கீகரிக்கப்பட்ட அரசாங்கத்துடனேயே நாங்கள் நேரடி தொடர்பு வைத்திருக்கமுடியும் எண்றார்... மிகவும் நிதர்சனமான கூற்று அது... அதுக்காக இந்திய கடற்படையால் புலிகளுடன் தொடர்பே வைத்திருக்க முடியாது என்பது அர்த்தம் அல்ல.... இதுவே இங்கு முக்கிய காரணமாக உள்ளது...

அதையும் தாண்டி இலங்கையில் புலிகள் மட்டுமே அதிகாரம் செலுத்தக் கூடிய சக்தியாக ஓங்கி நிற்கிறார்கள்... சண்டை எங்கு பிடிப்பது எப்படி பிடிப்பது, இராணுவத்தினர் என்ன செய்யவேண்டும், கடற்படை என்ன செய்யவேண்டும் எங்கெல்லாம் செல்லலாம் செல்லக்கூடாது, யார் ஜனாதிபதியாய் வரவேண்டும் என்பதுவரை செல்வாக்கும் செலுத்தும். அல்லது முடிவெடுக்கும் திறமைவாய்ந்த அவர்களை சும்மா விட்டுவிட சர்வதேசம் தயாராக இல்லை... அதுவே அனேகமான உண்மையாக இருக்கிறது.

இந்த நிலைய புலிகள்(எம்மவர்கள்) விரும்பி பெற்றார்கள் என்பது கடந்த முறை மாவீரர்நாள் உரையில் மதியுரைஞர் பாலா அண்ணாவின் கூற்றாக இருந்தது கவனிக்கத்தக்கது...

5:15 PM, June 03, 2006
Anonymous said...

Julian Rosemary's comment
one more point. Use of penetration unit by SLA is not new. It was used with the help of ex-plote members in the past. LTTE's Col. Sankar was killed in Odusuttan by them. Even in Colombo use of penetration unit without the knowledge of the president created a rattle sometime back. However using Karuna's name is a new phenomenon with the coorporation of The Hindu and ilks

5:48 PM, June 03, 2006
வெற்றி said...

சசி,
நல்ல பதிவு. ஆனால் தங்களின் சில கருத்துக்களுடன் எனக்கு உடன்பாடில்லை. தற்போது நேரமின்மையால் இன்று இரவு உங்களின் பதிவுக்கு விளக்கமாகப் பின்னூட்டம் இடுகிறேன்.

நன்றி.

அன்புடன்
வெற்றி

6:57 PM, June 03, 2006
theevu said...

நன்றி.பாராட்டுக்கள்.

7:04 PM, June 03, 2006
Anonymous said...

வணக்கம் சகி,

இலங்கைப் பிரச்சினை தொடர்பாக ஓர் நல்லதொரு பதிவினை இட்டுள்ளீர்கள். இலங்கை அரசாங்கத்திற்கும் தமிழீழ விடுதலைப்புலிகளிற்கும் உலக நாடுகளுடன் அணுகும் போது பாரிய வித்தியாசம் இருக்கிறது. இலங்கை அரசானது ஓர் அரசு என்னும் தகுதியுடன் உலகில் அடையாளம் காணப்பட்டு நேரடியாக உலக நாடுகளுடன் தொடர்புகளைப் பேணிக்கொள்ள முடிகிறது. தமிழீழ விடுதலைப் புலிகளைப் பொறுத்தவரை இது முடியாத விடயம். இதனை அண்மையில் விடுதலைப் புலிகளின் அரசியற் துறைப் பொறுப்பாளர் நோர்வே பிரதிநிதிகளைச் சந்தித்துக் கலந்துரையாடியதன் பின்னான ஊடகவியலாளர் சந்திப்பின்போது அவ்வாறு நோக்கும் போது அரசாங்கம் அவ்விடயத்தினில் வேகமாகச் செயற்பட முடிகிறது. ஆயினும் புலிகள் இயக்கம் தன்னிடம் உள்ள வளத்தின் மூலம் தன்னால் இயன்றளவு வெற்றிகண்டிருக்கிறது என்பதனையே 'உரிமைக்குரல்' நிகழ்வின்போது சுவிஸ் பிரதிநிதியின் கூற்று அமைந்திருக்கிறது.

எந்தவொரு விடுதலை அமைப்பும் இன்னொரு அரசாங்கத்தால் வெளிப்படையாக ஆதரவினைப் பெறமுடியாது. இது அனைத்துப் போராட்ட வரலாறுகளிற்கும் பொருந்தும். அவை நாடுகளினூடான தொடர்புகளைப் பாதிக்கும் என்பது ஓர் காரணம். இருப்பினும் மறைமுக ஆதரவினை வழங்கிக் கொண்டிருப்பார்கள்.
அடுத்து மீளவும் இலங்கையின் பொருளாதார வளர்ச்சியானது ஐக்கிய தேசிய கட்சியின் தலமையிலான ஆட்சியின்போதே பொருளாதார வளர்ச்சிப் போக்கு ஆரம்பித்தது. அதனைப் பார்த்தோமானால் ஐக்கிய தேசியக் கட்சியானது அடிப்படையில் வலது போக்குக் கொள்கைகளைக் கொண்டது. பொருளாதாரத்தினையே நோக்காக் கொண்டது. ஐக்கிய தேசியக் கட்சியினைச் சேர்ந்தவர்கள் பொதுவாக தொழிலதிபர்கள் என்பது மட்டுமல்ல அவர்களின் கோட்டையாகத் திகழ்வதும் கொழும்பு மாவட்டம் என்பது வெளிப்படை. இவ்வாறான ஓர் கட்சி ஆட்சிக்கு வரும் போது அவர்கள் பொருளாதராம் சார்ந்து நிற்பார்கள் என்பது சாதாரணமானது. இலங்கையில் ரணில் அரசானது சமாதானப் பேச்சுக்களிற்கு வந்தது புலிகளின் இராணுவ வெற்றி மட்டுமல்ல இலங்கையின் பொருளாதார வீழ்ச்சியும் ஓர் காரணமாகும். அவ்வீழ்ச்சியை நிறுத்முவதற்காகவே ரணில் பேச்சுக்களிற்கு உடன்பட்டதாகவே எனது கருத்து.

9:09 PM, June 03, 2006
வன்னியன் said...

பன்னாட்டு அரசுகளிடமிருந்து நேர்மையான, நியாயமான அணுகுமுறை கிடைக்குமென்ற நம்பிக்கை போய் மிகமிக நீண்டகாலமாகிவிட்டது.
அப்பிடியிருந்திருந்தால் செம்மணி விசயம் முதற்கொண்டு நிறைய நிகழ்வுகளுக்கு சிங்கள அரசு விலை செலுத்தியிருக்க வேண்டும்.
யாழ்ப்பாணத்தை இராணுவம் கைப்பற்றிபோது இராணுவத்தாற் கைதுசெய்யப்பட்ட உத்தியோகபூர்வ எண்ணிக்கையான அறுநூற்றுக்குமதிகமானவர்கள் பற்றி இதுவரை ஏதுமில்லை. அரச ஆணைக்குழுவோ அவர்களில் 16 பேர் மட்டுமே கொல்லப்பட்டுள்ளார்கள் என்று முடிவு சொல்லிவிட்டுப் பேசாமல் இருந்துவிட்டது. அந்த பதினாறு கொலைகூட சாதாரணமாகப் போய்விட்டது. சரி மிகுதிப்பேருக்கு என்ன நடந்தது என்பதையும் சொல்லவில்லை. (என்ன நடந்தது என்பது தெரியும். கொல்லப்பட்டுக் கடலில் வீசப்பட்ட சடலங்கள் சிலவற்றை வன்னியிற் பொறுக்கியவர்கள் நாங்கள்)

இதை விட்டால் நவாலித் தேவாலயப்படுகொலை. குண்டுவீசினபின் உடனடிக்கணக்கெடுப்பே 126 பேர் கொலை என்று வந்தது. பின் அது அதிகரித்து எங்குப் போய் நின்றதோ தெரியாது. அனைவரும் அப்போதுதான் இடம்பெயர்ந்து வந்து தங்கயிருந்தவர்கள் என்பதால் சரியான விவரத்தொகுப்புக்கள் இல்லை. இரண்டு கிழமையின் பின் காணாமற் போயிருந்தவர்களை அந்தப்படுகொலையின் கணக்கிற் சேர்க்க வேண்டியிருந்தது.
அப்போது சிலர் ஆறுதலாகக் கதைத்துக்கொண்டிருந்தார்கள் இத்தோடு உலகநாடுகள் தலையிட்டு பிரச்சினையைத் தீர்க்குமென்று. வேறுசிலர் வத்திக்கானும் பாப்பரசரும் இதில் கடுமையான நடவடிக்கையெடுப்பார்கள் என்று.

******************************************
ஏன் இப்போது உலகின் முக்கிய நகரங்களில், பாராளுமன்ற முன்றல்களில் கடந்த 29 ஆம் திகதி ஆயிரக்கணக்கானவர்கள் கூடி நின்று செய்த உரிமைக்குரல் நிகழ்வு அரச மட்டத்தில் ஏதாவது தாக்கத்தை ஏற்படுத்தும் என்று யாராவது கருத இடமுண்டா?
ஆனால் இந்நிகழ்வுகள் ஈழத்தவரிடம் ஒற்றுமையையும் செயற்பாட்டுத் திறனையும் பேணுவதற்கு கட்டாயம் தேவையானவை. அதைவிட அந்நாட்டு மக்களிடம் ஒரு கவனஈர்ப்பைப் பெறலாம்.

அந்தந்த நாட்டு மக்களிடம் பிரச்சினையைச் சொல்வது தொடர்பாக ஆக்கபூர்வமாகச் செயற்படலாம்.
மற்றும்படி உலகநாடுகளிடம் நியாயம் எதிர்பார்ப்பது வீண்.

இதற்குள் 'ஏன் புலிகளை உலகநாடுகள் வெறுக்கின்றன என்று சிந்தியுங்கள்' என்று புத்திசாலித்தனமான கேள்விகளைக் கேட்டு, புலிகளை ஜனநாயக வழிக்குத் திரும்பச் சொல்லி அறிவுரை சொல்வதற்கு இங்கேயே பலர் இருக்கிறார்கள்.

9:16 PM, June 03, 2006
thamillvaanan said...

வணக்கம் சசி விரிவாக பலவிடயங்களை சொல்லியிருக்கிறீர்கள்.
//கருணா என்ற கவசத்தை அணிந்து புலிகளை திடீரென்று தாக்குவது என்ற அரசு உளவுப் பிரிவின் திட்டம் புலிகளை கடுமையாகப் பாதித்து இருக்கிறது.//
உண்மையில் கருணா என்ற பெயரை பயன்படுத்துவதன் மூலம் சிங்களபடைகளே தாக்குதலை செய்கிறார்கள். அதாவது இத்தாக்குதலுக்கான முழுமையான நெறிப்படுத்தலை சிங்களப்படைகளே செய்கிறார்கள்.

அதேபோல கருணா என்ற பெயரை பயன்படுத்தி இந்தியதலையீடு குறிப்பிடத்தக்க அளவில் இருக்கிறது என்பதையும் எதிர்பார்க்கலாம். விடுதலைப்புலிகள் தனிப்பெரும் சக்தியாக நிலைத்துவிடக்கூடாது என்பதில் இந்திய புலனாய்வுத்துறையும் தன்னாலான பணிகளை நிச்சயம் செய்யும்.

இன்றைய உலகஒழுங்கில் தனிநாட்டுக்கான விடுதலைப்போராட்டத்தை அனைத்து நாடுகளின் ஆசிர்வாதத்துடன் முன்னெடுக்கமுடியும் என எண்ணினால் அது தவறானதாகவே இருக்கும். இதனை விடுதலைப்புலிகள் எதிர்பார்க்காமல் இருந்திருப்பார்கள் என கருதமுடியாது. அவ்வாறு எண்ணியிருந்தால் ஐரோப்பியஒன்றியத்தை குளிர்படுத்த எண்ணியிருந்தால் இன்னுமொருதடவை பேச்சுவார்த்தையை இழுத்துச்சென்றிருக்கலாம்.

உங்கள் அடுத்த விரிவான அலசலை எதிர்பார்க்கிறேன்.

அன்புன்
தமிழ்வாணன்

1:35 AM, June 04, 2006
Anonymous said...

Nicely analyzed by a former "The Hindu" reporter and a SLTamil journalist.

http://transcurrents.com/tamiliana/archives/173
by D.B.S. Jeyaraj

"The paradox in this was that it was the LTTE which would have been on top politico - diplomatically at the second round of Geneva talks. It was the Government that had gone back on its assurances first. The tigers could have exercised patience and driven that point home. It was in the LTTE’s interest to go to Geneva again instead of vacillating.

Complicating matters further is the total absence of tactful diplomacy. The “gung ho” letters sent to the SLMM in the name of Thamilselvan are monumental disasters. The statements released on behalf of the LTTE are often drafted in bombastic fashion.

Diplomacy is a fine art and in the sphere of international relations every word , phrase and sentence need to be drafted carefully. The nuances are very important.

The LTTE has a vast resevoir of talented and qualified Tamils to draw on. There are many ex - diplomats and academics with a background in international relations among Tamil expatriates. The LTTE would do well to consult them or make use of their professional input.

Even now the situation is not irreversible. War is not the sole option. If the LTTE transplants the Maoist dictum of “one step backwards two steps forward” into the politico - diplomatic sphere it has a chance of turning things around.

The LTTE needs to review and revise its politico - diplomatic strategy urgently."

1:56 AM, June 04, 2006
மாலன் said...

சமாதான காலத்தில் இலங்கை அரசின் கை ஓங்கியிருப்பதற்கும், யுத்த காலத்தில் புலிகளின் கை ஓங்கியிருப்பதற்கும் ஓர் அடிப்படை இருக்கிறது. போர்த்திறனிலும் தந்திரங்களிலும்,புலிகளுக்கு இருக்கும் சாமர்த்தியம் இலங்கை அரசுக்கு இல்லை. அரசியல் தந்திரங்களும், diplomacyயிலும் இலங்கை அரசிற்கு இருக்கும் திறன் புலிகளுக்கு இல்லை. இதற்குக் காரணம் இலங்கை அரசு என்பது ஓர் அரசியல் அமைப்பு. புலிகள் அடிப்படையில் ஓர் ராணுவ அமைப்பு.

இலங்கை அரசின் ராணுவம் என்பது அரசின் மற்ற சிவில் அமைப்புக்களுக்குத் துணையாக நிற்கும் ஓர் அமைப்பு.அதன் அதிகாரங்களும், பட்ஜெட்டும் நாடாளுமன்றதால் தீர்மானிக்கப்படுகின்றன. புலிகளின் நிர்வாக (சிவில்?) அமைப்புக்கள் அதன் ராணுவ அமைப்பிற்குத் துணை நிற்பன.அவற்றின் அதிகாரங்களும், கெலவினங்களும் ஓர் ராணுவத் தலைவரால் தீர்மானிக்கப்படுகின்றன.

இந்த வித்தியாசத்தை உலக நாடுகள் உணர்ந்தே இருக்கின்றன.

ஜனநாயகம் என்பதில் எத்தனை குறைபாடுகள் இருந்தாலும், அதன் தனிச் சிறப்பு, இறுதி அதிகாரம் மக்கள் கையில் இருக்கிறது. தங்களுக்கு நம்பிக்கையூட்டாத ஆட்சியாளர்களை அவர்கள் வீட்டுக்கு அனுப்ப முடியும். இந்தியாவில் பலமுறை மக்கள் அதை நிரூபித்திருக்கிறார்கள். எவ்வளவுதான் மக்கள் ந்லனுக்காகத் தங்களை உயிரைப் பயணம் வைத்துப் போராடுவதாக ராணுவ ஆட்சியாளர்கள் பிரசாரம் செய்தாலும் விரும்பும் போது அவர்களை அதிகாரத்திலிருந்து அப்புறப்படுத்தும் வாய்ப்பு ராணுவ ஆட்சியில் மக்களிடம் இல்லை.
துப்பாக்கியுன் குழலில் இருந்து அதிகாரம் பிறக்கிறது என்று சொன்ன மா-சே-தூங்கின் கொள்கையைப் பின்பற்றும் நேபாள மாவோயிஸ்ட்கள் கூட ஜனநாயகத்தை இன்று ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள்.

யுத்தத்தை எப்போது ஆரம்பிப்பது என்பது யுத்த தந்திரத்தில் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்ததோ அந்த அளவிற்கு எப்போது யுத்தத்தை நிறுத்துவது என்பதும். இதை விளங்கிக் கொள்ள, அல்லது அதை நடைமுறைப்படுத்த முடியாது போனவர்கள் எவரும் யுத்தத்தில் ஜெயித்ததில்லை. அலக்சாண்டர், நெப்போலியன், ஹிட்லர் என்று வரலாறு பல உதாரணங்களை நம் முன் வைக்கிறது.

புலிகள் தங்கள் தவறுகளிலிருந்து பாடங்கள் கற்கிறார்களா என்பதை அவர்களது செயல்களிலிருந்து விளங்க்க் கொள்ள முடியவில்லை. ராஜீவ்காந்தியின் படுகொலை ஏற்படுத்திய பின்னடைவிற்கு நிகரான ஓர் பின்னடைவை கதிகாமரின் மரணம் ஏற்படுத்தத்தக்கது என்று அவரின் மரணத்தை ஒட்டி நான் என் வலைப்பூவில் எழுதியிருந்தேன். அது இன்று நடந்திருக்கிறது.

அன்று கதிர்காமரின் வெற்றி ஓர் தந்திரோபயமாக சிலாகிக்கப்பட்டது. அவர் வாழ்ந்து சாதிக்க முடியாததை இன்று அவர் இறந்து சாதித்திருக்கிறார்.

மிதவாதியான ரணில் விக்ரமசிங்கே தோற்கடிக்கப்பட்டதும் கூட ஓர் நுட்பமான தந்திரமாக சித்தரிக்கப்பட்டது. ஆனால் hardliner மகிந்த கடந்த சில மாதங்களில் தன்னை நன்றாகவே வலுப்படுத்திக் கொண்டிருக்கிறார்.

சிங்களரை விட ராணுவ பலம் இருந்தும், போதுமான மக்கள் ஆதரவும் பொருளாதர பலமும், இருந்தும் நாம் ஏன் வெற்றி பெற முடியாமல் போனது?, நம்மால் ஏன் உலகின் நல்லெண்ணத்தை வென்றெடுக்க முடியாது போனது? என்ற கேள்விகளை ஒரு நாள் இளைய தலைமுறை இன்றைய ராணுவ ஆட்சியாளர்களை நோக்கி எழுப்பும்.

நம்மிடம் எல்லாம் இருந்தது ஜனநாயகம் தவிர என்பதுதான் அதற்கு பதில் என்று சொல்ல அன்று யாருக்குத் துணிவிருக்கும்?

2:55 AM, June 04, 2006
Anonymous said...

தடை செய்பவர்கள் இலங்கை அரசாங்கம் சொல்லித்தான் அப்படிச்செய்கிறார்கள் என்று நான் நம்பவில்லை. தங்களுடைய நலன்களை கணித்துத்தான் அவற்றை தக்கவைக்கவும் பாதுகாக்கவும் இப்படியான நடவடிக்கைகளில் இறங்குகிறார்கள். அதற்கு சாட்டாக ஏதாவது சொல்லிக்கொள்வார்கள்.மனித உரிமைகளும் இலங்கை அரசின் விறாண்டலும் அப்போது பயன்படும். புலிகளை பின்னடையவைத்துள்ளார்கள் என்றாலும் அவர்கள் தங்கள் சுயரூபத்தை தெளிவாக இனம்காட்டியுள்ளார்கள். இந்தியாவிடம் தமிழ் மக்கள் அடைந்த ஏமாற்றத்தைவிட இது மிகவும் குறைவானதே.போகவேண்டிய தூரமும் கொடுக்க வேண்டிய விலையும் இன்னும் அதிகமாக இருக்கப்போகிறது என்பதுதான் இங்கு கவலையளிக்கும் விடயம்.

- ஆசைப்படுபவன்.

5:30 AM, June 04, 2006
Anonymous said...

http://www.thinakkural.com/news/2006/6/4/sunday/marupakkam.htm

பிரித்தானிய அரசாங்கத்தின் வற்புறுத்தலாலும் அதிலும் முக்கியமாக அமெரிக்காவின்

பிரித்தானிய அரசாங்கத்தின் வற்புறுத்தலாலும் அதிலும் முக்கியமாக அமெரிக்காவின் அழுத்தங்களாலுமே ஐரோப்பிய ஒன்றியம் விடுதலைப் புலிகள் மீது தடை விதித்துள்ளது என்று வெளிவெளியாகவே மேலை நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதிலிருந்து நாம் அறியக் கூடிய சில உண்மைகள் உள்ளன. கூட்டிக் கழித்துப் பார்த்தால் முடிவில் அமெரிக்காவின் நெருக்குவாரங்களை எதிர்த்து நிற்கும் ஆற்றல் எந்த மேற்கு ஐரோப்பிய நாட்டுக்கும் இல்லை. சில வரையறைகட்குட்பட்டுத் தமது சொந்த நலன்கட்காக எந்த நாட்டினிதும் அதிகார பீடங்கள் கொஞ்சம் முரண்படலாம். ஆனால், அமெரிக்காவை மீறிச் செயற்படுகிற நெஞ்சுரம் அவற்றுக்கு இல்லை. இன்று இந்தியாவும் அமெரிக்காவின் ஆணைக்குட்பட்டு இயங்குகிற நிலைமைக்குள் வெகு வேகமாகத் தள்ளப்பட்டுக் கொண்டு போகிறது. இந்திய அதிகார பீடங்களின் தென்னாசியப் பிராந்திய மேலாதிக்க நோக்கங்கள் ஒரு புறமும் இந்தியாவின் இடதுசாரிச் சக்திகளதும் எழுச்சி பெற்றுவரும் வெகுசன இயக்கங்களதும் எதிர்ப்புகள் மறுபுறமும் இந்தியாவின் பூரண சரணாகதிக்கு வழி மறித்தாலும் இந்தியாவின் பிரதான இரு கட்சிகளான காங்கிரஸும் பாரதிய ஜனதா கட்சியும் இந்தியாவை அமெரிக்காவுக்கு அடமானம் வைப்பதில் பிடிவாதமாகவே உள்ளன. ஈரானின் அணுசக்தி ஆய்வுகள் தொடர்பாக இந்தியாவின் வெட்கக்கேடான நடத்தைக்கு வேறு விளக்கம் இல்லை. ரஷ்யாவும் சீனாவும் அமெரிக்காவின் அடுத்த கட்ட இலக்குகள் என்பதை அறிவதால் அதற்கேற்ப தமது அயல் கொள்கைகளை அந்த நாடுகளின் அதிகார பீடங்கள் கடைப்பிடிக்கின்றன. ஈரானைக் கைவிடுவது தற்கொலைக்கு ஒப்பானது என்பதை அவை அறிவன. விடுதலைப் புலிகள் மீதான தடை பற்றி ஐரோப்பிய முடிவை இப்பின்னணியில் நோக்குவது தகும் என நினைக்கிறேன். பொதுவாகவே, வலதுசாரி அரசாங்கங்கள் எந்த மேற்கு நாட்டிலும் அதிகாரத்தில் இருக்கும்போது இடதுசாரித் தன்மையுடைய விடுதலை இயக்கங்கள் மீது தயக்கமில்லாது தடை விதிக்கப்படும். அமெரிக்கா எந்த விடுதலை இயக்கத்தையும் தடை செய்யக் கோரினால் வலதுசாரி ஆட்சியாளர்கள் தடை செய்யத் தயங்கமாட்டார்கள். எனவே, குறிப்பிட்ட நாட்டினது அதிகார பீடத்தின் வர்க்க நலன்களும் அமெரிக்க ஏகாதிபத்திய நெருக்குவாரமுமே இவ்வாறான விடயங்களில் முடிவுகளை எடுக்கின்றன. இலங்கையின் வேண்டுகோளுக்கிணங்க விடுதலைப் புலிகள் மீது தடை விதிக்கப்பட்டதென்றால், இலங்கையில் விடுதலைப் புலிகளின் மீதான தடை நீக்கப்பட்ட பின்பும் ஏன் அமெரிக்கா தடையை நீடிக்க வேண்டும்? விடுதலைப் புலிகளால் அமெரிக்க ஆட்சியாளர்கட்கு எதுவிதமான பயங்கரவாத மிரட்டலும் இல்லை என்று அண்மைய அமெரிக்க அறிக்கை ஒன்று கூறிய பின்பும் ஏன் அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியத் தடையை வற்புறுத்த வேண்டும்? விடுதலைப் புலிகளைத் தடை செய்யத் தயங்குகிற இலங்கை அரசாங்கம் உலக நாடுகள் விடுதலைப் புலிகளைத் தடை செய்யும்படி கோருவது நம்பகமானதா? எனவே விடுதலைப் புலிகளதும் இலங்கை அரசாங்கத்தினதும் விருப்பு வெறுப்புக்கட்கு அப்பாற்பட்டே தடை பற்றிய முடிவுகள் எடுக்கப்படுகின்றன என்பதை எவரும் ஓரளவுக்கேனும் ஏற்றாக வேண்டும்.
லக்ஷ்மன் கதிர்காமர் விடுதலைப் புலிகட்கெதிரான பிரசாரத்தைச் சர்வதேச அரங்கில் தீவிரமாக முன்னெடுத்தார் என்பது உண்மை. அவரது முயற்சிகள் பெறுமதியற்றவையல்ல. ஆனால், பிரித்தானியாவின் ஆட்சி (பேரளவில் தொழிற் கட்சியினதும் என்றாலும் பழமைவாதிகளது கட்சிகளைவிட மோசமான வலதுசாரி ஆட்சி) விடுதலைப் புலிகளைத் தடை செய்ய காரணம் கதிர்காமரது விடா முயற்சியல்ல. இந்திய, அமெரிக்க ஆட்சியாளர்களது உலக மேலாதிக்க நோக்கங்கட்கு எத்தடை பயனுள்ளது என்பதுதான் முக்கியமான காரணம். இப்போது கதிர்காமரின் பேச்சு லாவகத்தில் சிறு பகுதியேனும் இல்லாத மங்கள சமரவீரவின் குருட்டாம் போக்கான ராஜ தந்திரத்தின் நடுவிலும் ஐரோப்பாவில் தடை இயலுமாயிற்று என்றால், அது தனிமனித சாதனை தொடர்பான விடயமல்ல என்பது ஓரளவுக்குத் தெளிவாக வேண்டும்.

அமெரிக்காவையோ அதன் அதிகார பீடத்தில் உள்ள எவரையுமோ குளிரவைப்பதன் மூலம் விடுதலைப் புலிகள் அமெரிக்க ஆதரவை வென்றெடுக்க இயலும் என்று நம்புகிறவர்கள் இருக்கிறார்கள். விடுதலைப் புலிகளை அமெரிக்கா தனது தேவைகட்காகப் பயன்படுத்த இயலுமேயொழிய விடுதலைப் புலிகளால் அமெரிக்காவை எந்த வகையிலும் பயன்படுத்த இயலாது என்பதைப் பற்றி நாம் கவனமாக இருக்க வேண்டும். 1994 ஆம் ஆண்டு முடிவிற்குப் பின்பு மனித உயிர்களையும் மனிதரின் அடிப்படைத் தேவைகளையும் பேரினவாதிகள் எவ்வளவு தூரம் மதிக்கிறார்கள் என்று கண்டோம். பொதுக்கட்டமைப்பின் மூலம் நிவாரணம் பெற இயலாமல் முட்டுக்கட்டை போட்டதில் ஜே.வி.பி.யினதும் ஹெல உறுமயவினதும் பங்கைவிட ஷ்ரீ ல.சு.க. தலைமையின் பங்கு எவ்வகையிலும் குறைவானதல்ல. பொதுக்கட்டமைப்புக்கான உடன்படிக்கையில் ஒப்பமிடுவதைத் தவிர்க்க சந்திரிகா குமாரதுங்க எடுத்த கடும் முயற்சிகள் ஒருபுறமிருக்க அதை பாராளுமன்ற அங்கீகாரத்திற்கு அனுப்பியபோது யூ.என்.பி. ஆடிய கபட நாடகமும் நாம் மறக்கக் கூடாதவை. விடுதலைப் புலிகளின் குறிப்பிட்ட எந்தவொரு நடவடிக்கை காரணமாகவோ அல்லது அண்மைக்கால நடத்தையின் காரணமாகவோ அவர்களை ஐரோப்பிய ஒன்றியம் தடை செய்தது என நான் நம்பவில்லை. எனினும், அவை தடையைப் பிறப்பிப்பதற்கு வசதியாக அமைந்த காரணங்கள் என்பேன்.

விடுதலைப் புலிகள் மட்டுமே மேலை நாட்டு அரசாங்கங்களால் இலக்கு வைக்கப்படவில்லை. தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டம் முழுவதும் இலக்கு வைக்கப்படுகிறது. இங்கு தான் விடுதலைப் புலிகளைத் தடை செய்தது பற்றி ஆனந்தக் களிப்பில் மூழ்கியுள்ள பல்வேறு தமிழ்க்குழுக்களும் அரசியற் பிரமுகர்களும் எச்சரிக்கையாயிருக்க வேண்டும். விடுதலைப் புலிகள் அவர்களது மனித உரிமை மீறல்கட்காகத் தடை செய்யப்பட்டுள்ளனர் என்றால் கடந்த ஏறத்தாழ முப்பதாண்டு கால வரலாற்றில் கட்சி வேறுபாடின்றித் தமிழ் மக்களதும் ஏனைய சிறுபான்மைத் தேசிய இனங்களதும் உரிமை மீறல்கட்காக ஏன் இலங்கையின் ஆட்சியாளர்கள் தண்டிக்கப்படவில்லை?


மேலை நாட்டு ஆட்சிகள் நீதி நியாயத்தின் இருப்பிடங்களென்று நம்புகிறவர்களை ஆப்கானிஸ்தான், ஈராக், இப்போது, ஈரான், எப்போதும் பலஸ்தீனம் தொடர்பான அமெரிக்கா ஐரோப்பிய நாடகங்கள் நித்திரையிலிருந்து எழுப்பவில்லை என்றால், அவர்களது தலைகளில் குண்டுகள் விழும்வரை, அவர்கள் விழித்தெழப் போவதில்லை. தேவையான போது, பிரிவினை தேவையற்ற நாடுகளில் பிரிவினை வாதத்தை ஊக்குவிப்பதும் தாமே ஊக்குவித்த பிரிவினைவாதிகட்கெதிராகக் கடும் நடவடிக்கை எடுப்பதும் கொலனிய எசமானர்களது நவகொலனியவாதிகட்கு கைவந்த கலைதான். எனவே, தமிழ் மக்கள் என்றென்றைக்கும் நினைவிலிருத்த வேண்டிய ஒரு விடயம் ஏதெனில், போராட்டப் பாதை சிக்கலானது, எளிதாகப் பெறக் கூடிய வெற்றிகளென எதுவும் இல்லை. பல வேளைகளில் போராட்டங்கள் மிகவும் தனிமைப்படுத்தப்படுகின்றன. எனினும், எங்கும் எல்லா வேளைகளிலும் விடுதலைப் போராட்டத்துக்கு நண்பர்கள் உள்ளனர்.

நண்பர்கள் யாரென்றும் எதிரிகள் யாரென்றும் அடையாளங் காணுவது ஒரு போராட்டத்தின் வெற்றிக்கு மிகவும் தேவையான ஒரு முன்நிபந்தனையாகும். தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டம் சந்தித்த பின்னடைவுகள் பலவற்றுக்குக் காரணம்; நண்பர்களும் எதிரிகளும் பற்றிய குழப்பமே. பொய்ப் புகழ்ச்சியும் கோள் மூட்டுவதும், நல்லவர்களும் நண்பர்களும் செய்கிற காரியங்களல்ல. தமிழ் மக்களின் விடுதலைக்காகப் புறப்பட்ட பல தலைமைகளதும் ஒரு பெரிய பலவீனம், விமர்சனத்துக்கு முகங்கொடுக்க இயலாமை. இதன் விளைவாகப் பிளவுகளும் உட் கட்சிப் போராட்டங்களும் சகோதரப் படுகொலைகளும் ஏற்பட்டுள்ளன. அதை விட மோசமாக, தமக்குப் போட்டியாக அமையக்கூடிய எந்த அமைப்பையும் எதிரியாகக் கருதிச் செயற்படுகிற மனநிலை உருவாகியது. இதை ஒடுக்குமுறையாளர்களும் பிற சூழ்ச்சிக்காரர்களும் தங்களுக்கு வசதியாக்கிக் கொண்டிருக்கின்றனர். தாங்கள் தங்கள் சமூகத்திற்கு எதிராகப் பயன்படுவது பற்றிய உணர்வில்லாமல் வெறும் கூலிப்படைகள் போல மாறிச் சீரழிகிறவர்கள், எல்லா விடுதலைப் போராட்டச் சூழல்களிலும் இருந்துள்ளனர்.

ஒரு விடுதலைப் போராட்டத்தால் எல்லாப் பிரச்சினைகளையும் ஆயுதங்கள் மூலம் தீர்க்க இயலாது. ஆயுதங்களின் பயன்பாடு தவிர்க்க இயலாதது. ஆனால், அது வேறு வழிகள் இயலாத சூழ்நிலையிலேயே நிகழ வேண்டும். பேசித் தீர்க்கக் கூடிய பிரச்சினைகள் எத்தனையோ உள்ளன. இன்று தமிழ் மக்களிடையே நிகழுகிற வீண் உயிரிழப்புக்கட்குக் காரணமானவர்கள் தங்களது செயல்களால் யார் அதிகம் பாதிக்கப்படுகின்றனர் என்ற கேள்விக்கு மறுமொழி தேட வேண்டும். வன்முறைக்கு வன்முறை பதிலாக முடிவின்றித் தொடர இடமிருக்கக் கூடாது. எனவேதான், தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டம் தனது மூலோபாயத்தைக் கவனமாக மீளவும் ஆராய வேண்டும்.

இலங்கை அரசாங்கப்படைகளும் ஆட்சியாளர்களும் தமிழ் மக்களுக்கு எதிராக இழைத்து வருகிற அநீதிகளைத் தென்னிலங்கையில் உள்ள மக்கள் அறிய வேண்டும். அது போலவே, மேலை நாடுகளில் உள்ள பொதுசனங்கள் மத்தியில் இன்று இலங்கையில் நடப்பது விடுதலைப் புலிகட்கு எதிரான அரசாங்க நடவடிக்கைகள் மட்டுமல்ல, தமிழ் மக்களை அச்சுறுத்தியும் துன்புறுத்தியும் கொன்றும் தமது வாழ்விடங்களிலிருந்து அகற்றுகிற நடவடிக்கைகளையே ஆட்சியாளர்கள் எடுத்து வருகின்றனர் என்பதை உலகறியச் செய்ய வேண்டும்.

தமிழ் மக்களுக்கிடையிலான அரசியல் வேறுபாடுகள், தமிழ் மக்களின் இருப்பை மிரட்டுகிற காரியங்களில் குறுக்கிடத் தேவையில்லை. தமிழ் மக்களின் எதிர்காலம் அவர்களின் போராட்ட ஐக்கியத்தில் தங்கியுள்ளது. பிற போராடும் மக்களின் நட்பும் சாதாரண மக்களின் நல்லெண்ணமும் அதற்கு அவசியமானவை. சர்வதேச சமூகம் என்று சொல்லப்படுகிற ஆட்சியாளர்களை, உண்மையில் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் கருவிகளை, நம்புவதை விட்டு விடுதலைப் போராட்டத்தை வெகுசன மட்டத்தில் விரிவு படுத்தி மக்கள் போராட்டமாக வளர்த்தெடுப்பதும் அதன் மூலம் உலகின் போராடும் மக்களுடன் தமிழ் மக்களின் போராட்டத்தை அடையாளப்படுத்துவதும் விரைவில் காலத்தின் தேவையாகிவிடும் என்றே தோன்றுகிறது.

1:26 PM, June 04, 2006
Anonymous said...

மாலன்,

//நம்மிடம் எல்லாம் இருந்தது ஜனநாயகம் தவிர என்பதுதான் அதற்கு பதில் என்று சொல்ல அன்று யாருக்குத் துணிவிருக்கும்? //

நீங்கள் இப்படிச்சொல்லிக்கொண்டு வரப்போகிறீர்கள் என்று வன்னியன் முன்னரே பின்னூட்டமிட்டுவிட்டார்.

புலிகள் ஆதரிக்கும் தமிழ்கூட்டமைப்பை தேர்தல்களி்ல் மக்கள் வெற்றிபெற வைப்பதெல்லாம் சிங்கள அரசு செய்யும் கொடுமைகளை பார்க்காமல் கண்ணைமூடிக்கொண்டிருக்கும் உலகநாடுகளுக்கு தெரியாமலில்லை.
ஜனநாயகத்திற்கு அவர்கள் கொடுக்கும் மரியாதையை Hamasக்கு கிடைக்கும் வரவேற்பிலிருந்து அறிந்துகொள்ளலாம். மேலும் இப்போதைய தடையிலிருந்து எல்லாமே முடிந்துவிட்டது என்ற தொனியில் எழுதியிருப்பதாக தெரிகிறது. ஐரோப்பிய ஒன்றியம் ஏதோ உதவி செய்யப்போகிறது என்றிருந்த மாயை அகன்றிருக்கிறது. மற்றும்படி வருங்காலத்தில் இளைய தலைமுறை நீங்கள் சொன்னமாதிரி கேள்வி எழுப்புவதற்கான நிகழ்வு எதுவும் தற்போது நடந்துவிடவில்லை.

- ஆசைப்படுபவன்

2:10 PM, June 04, 2006
Anonymous said...

வணக்கம் சசி,

மாலனின் பின்னூட்டம் மிகவும் நகைப்புக் கிடமாகவும் கவலை அழிப்பதாகவும் இருக்கிறது.
இவர் ஜன நாயகம் என்று எதைக் கூறுகிறார் என்று விளங்கவில்லை.
சிறிலங்காவின் அரசை ஒரு ஜன நாயக அரசாக இவர் சொல்வது தான் மிகவும் கிழ்த் தரமான காழ்ப்புணர்வின் வெளிப்பாடாக நான் பார்க்கிறேன்.எட்டப் பட்ட உடன் படிக்கைகளை உதாசீனம் செய்து தமிழ் மக்களின் ஜன நாயகப்போராட்டங்களை இராணுவப்படு கொலைகளால் நசுக்கிக் கொண்டிருக்கும் ஒரு அரசை இவர் நாக் கூசாமல் எவ்வாறு ஜன நாயக அரசு என்று கூறுகிறார் என்று விளங்கவில்லை.இவர்கள் உண்மயிலயே புரியாமல் எழுதுகிறார்களா அல்லது புரிந்து கொண்டே இவ்வாறு எழுதுகிறார்களா என்று விளங்கவில்லை.

மாலன் நீங்கள் விளங்காமல் எழுதுகிறீர்கள் என்று நினைத்து ஒன்றைச் சொல்ல விரும்புகிறேன்.தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளையே புலிகள் பிரதிபலிகிறார்கள்.அவர்கள் தமிழர்களின் அரசியல் அபிலாசைகளை இராணுவ வலிமை கொண்டு எட்டுவதற்காக அமைக்கப் பட்ட விடுதலை அமைப்பு. நாலு வருட பேச்சுவார்த்தைகள் மூலம் தமிழர்கள் பெற்றது கொலையும் ,இடம் பெயர்வும் தான்.போரைத்தொடங்கும் படி இன்று புலிகளை நிர்ப்பந்திப்பது தமிழ் மக்களே.
இன்று ஈழத்தில் பல்லாயிரம் மக்கள் தாங்களாக முன் வந்து ஆயுதப் பயிற்ச்சிகளைப் பெறுகின்றனர்.இங்கே புலத்தில் மக்கள் அலை அலயாக நிகழ்வுகளை நடத்துகின்றனர்.உண்ணாவிரதங்களை செய்கின்றனர்.முதியோரில் இருந்து இளயவர் வரை தமிழ் ஈழத்திற்கான போரை ஆரம்பியுங்கள் எண்டு கேட்டுக் கொண்டிருகிறார்கள்.இவை அனைத்தையும் நிராகரித்தி நாம் நிதானமாகச் செயற்பட வேண்டும் என்று புலிகள் தான் செயற்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.தமிழ் மக்களாகிய நாம் இலங்கைச் சிங்கள அரசாங்கத்தின் ஜன நாயகம் பற்றி நன்கு அறிவோம்.அங்கே சிங்கள இராணுவமே அரசியல் வாதிகள் என்ன செய்ய வேண்டும் என்று தீர்மானிகிறது.புத்த மத பீடங்களே இராணுவமும் .அரசியல் வாதிகளும் என்ன செய்ய வேண்டும் என்று தீர்மானிகின்றன.இதை இவர் ஜன நாயகம் என்கின்றார்.

எமது மண்ணில், எமது தலை விதியை நாம் தீர்மானிக்க, எமது மக்கள் நிம்மதியாக வாழவே புலிகள் போராடுகிறார்கள்.உயிர் வாழ்வதற்காகப் போராடுவது பயங்கரவாதம் இல்லை.அது விடுதலைப் போராட்டம், அதுவே அதி உன்னதமான ஜனனாயகதிற்கும்,சுதந்திரத்திற்குமான போராட்டம்.

நாம் வெற்றி பெறுவோம் என்பது எமக்குத் தெரியும்.உங்களைப் போன்றோர் பிரமிக்கப் போகும் உத் வேகத்துடன் எமது போராட்டம் தலை நிமிரும் .அந்த நேரம் வெகு விரைவில் வரும். நாங்கள் போராடுவது எமது மக்களின் தயவில் தானே ஒழிய வெறென்ந்த வெளிச் சக்திகளின் தயவிலோ அன்றி வெறும் ஆயுதங்களின் தயவிலோ இல்லை.அதுவே தமிழ் ஈழ விடுதலைப் புலிகளின் பலம்.இதை விகாரமாகக் காட்ட பலர் இன்று தம்மை 'ஜனனாயகவாதிகள்' என்றும் 'நடு நிலையாளர்கள்' என்றும் பலவிதமான நாடகங்களை இணயத்தில் அரங்கேற்றிக் கொண்டிருகின்றனர்.

இவர்கள் உதட்டளவிலயே ஜன நாயகம் மக்கள் போராட்டம் என்று உச்சரிப்பவர்கள்.இவர்களின் பொய்மைகளை தமிழ் மக்கள் நன்கு அறிவர்.அதனாலயே அவர்களை மக்கள் நிராகரிதுள்ளார்கள்.உதட்டளவில் ஜன நாயகம் பேசி தமது தனிப்பட்ட வாழ்க்கையை வளம் படுத்தும் அரசியல் வாதிகள் அல்ல விடுதலைப் புலிகள்.தமது உயிரைக் குடுத்து தமிழ் மக்களின் ஜன்னாயக உரிமைக்காகப் போராடும் மனித உரிமைப் போராளிகள்.

எந்தத் தடை வந்தாலும் ,நாம் வெல்வோம், சத்தியமும் உண்மையும் என்றும் இறுதியில் வெல்லும்.

3:49 PM, June 04, 2006
ஜூலியன் said...

Jeyarajah perfectly put what I intended to say. LTTE has to embrace Tamil intelligentsia in and out of Ezham for its diplomatic moves. Also it has to identify its friends in the west as well as in India, and to come to agreements at least in conditional terms. If this needs to swallow a little pride, it should be ready to do this sacrifice thinking of its survival and Ezham cause.

Julian Rosemary

5:18 PM, June 04, 2006
தமிழ் சசி | Tamil SASI said...

மாலன்,

உங்கள் கருத்துகளுக்கு நன்றி

இலங்கை வந்திருந்த US Assistant Secretary of State for South and Central Asian Affairs, Richard Boucher இவ்வாறு கூறியிருந்தார்

“[The government] also has responsibilities it must live up to. We have high expectations of a democratic government: respect for human rights, outreach to all citizens, respect for the rights of minorities, clean government for all, and a true vision of peace,” he said.

இது எதுவுமே இலங்கை அரசு சரியாக செய்யவில்லை என்றாலும், அமெரிக்கா போன்ற நாடுகள் எதனால் இலங்கையை ஆதரிக்கிறது என்பதை அவருடைய பேட்டியில் ஒரு சில வரிகள் தெளிவாகவே படம்பிடித்து காட்டியிருந்தன.

“You know that if Sri Lanka reverts to a full-scale war, the consequences for the business climate will be devastating. Investors - be they foreign or local - won't support projects that could collapse in the chaos and uncertainty of a war-torn country. Tourists will almost certainly stay away, and insurance rates on shipping could go up significantly . The government's outlays for the cost of war will drain much needed resources from other development enterprises,” he said.

சிறீலங்கா அரசு செய்யும் எதனையும் ஜனநாயக முகமூடி கொண்டு எந்த நாடும் ஏற்றுக் கொள்ள வில்லை. என்றாலும் அவர்களின் strategic மற்றும் பொருளாதார interests தான் சிறீலங்கா அரசை ஆதரிக்க வைக்கிறது என நான் புரிந்து கொள்கிறேன்.

இலங்கை அரசுக்கு ஜனநாயகம் உதவுகிறது என்று நீங்கள் கூறும் வாதம் எனக்குப் புரியவில்லை.

அது போல ஜனநாயகத்தை எப்படி புலிகள் தங்களுக்குள் கொண்டு வரலாம் என்று நீங்கள் நினைக்கிறீர்கள் ?

உங்களுடைய வாதம் மேம்போக்காக இருக்கிறது. கொஞ்சம் விளக்க முடியுமா ?

8:04 PM, June 04, 2006
Anonymous said...

வணக்கம் மாலன்.

நீங்கள் பிடித்த முயலுக்கு மூன்று கால் என்று பிடிவாதம் பிடித்தீர்கள் அனால்
ஒன்றும் சொல்வதற்கு இல்லை.ஆனால்
எமக்கு நன்கு தெரியும் முயலுக்கு நான்கு கால்கள் என்று.நீங்கள் மூன்று
கால்கள் என்ற நிலையிலிருந்து இறங்கி
நான்கு கால்கள் இருக்கலாம் என்ற
Logic புரிந்து கொள்வீர்கள் ஆனால்
சந்தோஸம்.


ஜனநாயகம் நல்ல தொரு வார்த்தை ஆனால் பலஸ்தீனத்தில் ஜன"நாய"கம்
படும் பாட்டைப்பார்த்தீர்களா?
மக்களின் ஆசியுடன் பதவிக்கு வந்த
ஹமாசின் மக்களாட்சிக்கு என்ன நடக்கிறது? மக்களால்தானே தெரிவு
செய்யப்பட்டார்கள் அவர்கள்.

பலஸ்தீனத்துக்கு இருக்கும் ஆதரவைப்பாருங்கள்.சகல முஸ்லீம் நாடுகளும் தார்மீக ஆயுத பொருளாதார
உதவி செய்தும் உலக நாடுகளின் ஆதரவு இருந்தும் சின்னஞ்சிறு இஸ்ரேலை ஒன்றுமே செய்யமுடியவில்லையே.இஸ்ரேலுக்கு பின்னால் நிற்கும் அமெரிக்காவுக்கு தெரியாத தம் பக்கம் நியாயம் இல்லை
என்பது.இதில் அந்தந்த நாடுகளின் பொருளாதார அரசியல் நலன்க்ளே
கவனத்தில் கொள்ளப்படுகின்றன்வே அல்லாமல் பாவப்பட்ட அந்த ம்க்களே
அல்ல.

இது ஈழத்துக்கும் பொருந்தும்.

8:49 PM, June 04, 2006
வன்னியன் said...

மாலன்,
சிறிலங்கா அரசு ஜனநாயக அரசென்றால், புலிகள் அதைவிட மேம்பட்ட ஜனநாயகவாதிகள்.
இருதரப்புக்குமிடையில் செய்யப்பட்ட புரிந்துணர்வு உடன்படிக்கையை எடுத்துக்கொள்வோம்.
ஓர் அங்கீகரிக்கப்பட்ட 'ஜனநாயக' அரசுக்கும் உலகின் முதன்மைச் சக்திகளால் 'பயங்கரவாதிகள்' என்று சித்தரிக்கப்பட்ட அமைப்புக்குமிடையில் செய்யப்பட்ட ஒப்பந்தம் அது. இதில் யார் ஒப்பந்தத்தைச் செம்மையாகக் கடைப்பிடித்தது?
பிரச்சினைகள் அதிகரித்தபோது 'ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்துவதை உறுதிப்படுத்த பேசுவோம்' என்று புலிகள் அழைத்தபோது சிங்கள அரசு கடைசிவரை மறுத்து ஓடியொளித்தது ஏன்? புரிந்துணர்வு ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்த அரசு வெளிப்படையாகவே தயக்கம் தெரிவித்ததும் அதை மாற்றவேண்டுமென்று புலம்பியதும் ஏன்? இதில் யார் பயங்கரவாதிகள்?
இதைவிட சொந்தப் பாராளுமன்ற உறுப்பினரையே கொலை செய்யவும் தயங்காதவர்கள் எப்படி ஜனநாயக வாதிகள்? எத்தனை பத்திரிகையாளர்கள் அரசதரப்பால் கொல்லப்பட்டுவிட்டனர்? எல்லாம் ஜனநாயகம் தானே?
தேர்தல் நடப்பதால் மட்டுமே ஒரு நாடு ஜனநாயக நாடு என்று உங்களைப்போல் பலரும் சொல்லிக்கொண்டுதான் இருக்கிறார்கள்.
சரி, தேர்தல் படி தேர்ந்தெடுக்கப்பட்ட ஹமாசுக்கு உலக முதலாளிகள் அளித்த மரியாதை என்ன? இதில் உலகநாடுகளின் ஜனநாயகம் எங்கிருந்து வந்தது?

தேர்தலில் தமிழ்மக்கள் விடுதலைப்புலிகளை அங்கீகரித்ததை, வழமையான புலியெதிர்ப்புக் கும்பலின் தர்க்கத்தோடு எதிர்கொள்வீர்களென்று நினைக்கிறேன். தேர்தலைப் புறக்கணியுங்கள் என்ற அறிவித்தலுக்கு வேண்டுமானால் மக்கள் பயந்து வாக்களிக்கவில்லையென்ற கூற்று தர்க்கரீதியில் பொருந்தும், வாக்குச்சாவடி செல்வது பகிரங்கமானதென்ற அளவில்.
ஆனால் முழுக்க முழுக்க சிறிலங்கா இராணுவமும் பொலிசாரும் புடைசூழ இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதியில் மட்டுமே நடத்தப்பட்ட இரு பாராளுமன்றத் தேர்தல்களிலும் எப்படி விடுதலைப்புலிகளின் வேண்டுகோளை மக்கள் நிறைவேற்றினர்? இராணுவமும் பொலிசாரும் கூட சேர்ந்து புலிகளை வெல்லவைத்து விட்டார்கள் என்று சொன்னாலும் சொல்வார்கள்.

உலகநாடுகளின் விடுதலைப்போராட்டத்துக்கான ஆதரவு என்று எதைச் சொல்கிறீர்கள்?
வங்காளதேசம் பிரிய இந்தியா கொடுத்த ஆதரவு போலவா?
எரித்திரியாவுக்கு தொடக்க காலத்தில் இரஸ்யா கொடுத்த ஆதரவு போலவா?
அல்லது இன்னும் பல இஸ்லாமியக் குழுக்களுக்கு அமெரிக்கா கொடுத்த ஆதரவைப் போலவா?
அல்லது தொடக்க காலத்திலே ஈழப்போராளிகளுக்குப் பயிற்சியும் ஆயுதமும் கொடுத்த இந்திய ஆதரவைப்போலவா?

இவற்றில் எது நேர்மையான ஆதரவு?

9:06 PM, June 04, 2006
வெற்றி said...

சசி,
வணக்கம்.
தங்களின் இப் பதிவில் நீங்கள் எழுதியுள்ள சில கருத்துக்களுடன் எனக்கு உடன்பாடில்லை என்பதை மிகவும் பணிவன்புடன் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். தங்களின் கருத்துக்களுடன் எனக்கு உடன்பாடில்லாத எல்லாக் கருத்துக்களுக்கும் ஒரே பின்னூட்டத்தில் பதிலளித்தால் பின்னூட்டம் நீளமாகி விடும் என்பதால் ஒவ்வொரு கருத்துக்கும் தனியாகப் பின்னூட்டம் இடுகிறேன்.

முதலில்[First of all], தங்களின் பதிவு அருமையான நல்ல பதிவு. தமிழ்மான உணர்வுள்ளவர்கள், ஈழ விடுதலைப் போராட்டத்தை ஆதரிப்பவர்கள் இப்படியான கருத்துக்களைப் பரிமாறிக் கொள்வது மிகவும் தேவையானது. எனவே இப்படியான ஒரு பதிவை எழுதியதற்காக, ஈழத்தமிழன் என்ற வகையிலும், ஈழவிடுதலைப் போராட்டத்தை நேசிப்பவன் என்கின்ற முறையிலும் உங்களுக்கு என் பாராட்டுக்களும் நன்றிகளும்.

இனி உங்கள் கருத்துக்கள் பற்றி என் கருத்துக்கள்.

//இம் முறையும் இந்த ராஜதந்திர யுத்தத்தில் புலிகள் தோற்று தான் உள்ளனர்...போர்க் காலங்களை விட இந்தச் சமாதானக் காலத்தில் விடுதலைப் புலிகளுக்கு நிறைய பின்னடைவுகள் நேர்திருக்கின்றன என்று சொல்லலாம்...பல நாட்டு உளவு அமைப்புகள், Strategists போன்றவர்கள் இணைந்து அமைத்த வியூகத்தில் புலிகள் சிக்கிக் கொண்டனர். //

சமாதான காலத்தில் புலிகள் இராஜதந்திர ரீதியாகத் தோற்றுவிட்டார்கள் என்பதையோ அல்லது பல நாட்டு வியூகத்திற்குள் புலிகள் சிக்கிக் கொண்டனர் என்பதையோ நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன். மாறாக இந்த பல நாட்டு வியூகங்களில் சிக்காது, அவற்றை மிகவும் தந்திரமாகவும் , சாமர்த்தியமாகவும் முறியடித்து, விடுதலைப் போராட்டத்தை முன்னேற்றகரமான அடுத்த கட்டத்திற்கு நகர்த்தியுள்ளார்கள் என்பதே என் எண்ணம். இதை நீங்களும் எதிர்காலத்தில் அறிந்து கொள்வீர்கள். உலகத்தில் நடந்த, நடக்கும் போராட்ட வரலாற்றிலேயே தமிழீழ விடுதலைப்புலிகள் எதிர் நோக்கிய சவால்களைப் போல் எந்த ஒரு விடுதலை அமைப்பும் சவால்களை எதிர்கொள்ளவில்லை. இதை நான் மிகைப்படுத்திச் சொல்வதாக எண்ண வேண்டாம். இதுபற்றி ஒர் தனிப்பதிவில் எழுதுகிறேன். நிற்க.

விடுதலைப்புலிகள் இராஜதந்திர ரீதியாகத் தோற்கவில்லை எனும் என் வாதத்தை இங்கே சற்று விரிவாக விளக்க விரும்புகிறேன்.

சசி, முதலில் நாம் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். எந்த ஒரு நாடும் மனிதநேயத்தை அடிப்படையாக வைத்தோ அல்லது நியாய/தர்மங்களை அடிப்படையாக வைத்தோ தமது வெளியுறவுக் கொள்கையை வகுப்பதில்லை. மாறாக அனைத்து நாடுகளும் தமது சொந்த நலன்களை [முதலீடு, சந்தைப்படுத்தல், பாதுகாப்பு]அடிப்படையாக வைத்துத்தான் தமது வெளியுறவுக் கொள்கையை வகுக்கின்றன. இந்த ஏகாதிபத்திய [அமெரிக்கா, பிரிட்டன், யப்பான்]நாடுகள் தமது நலன்களை முன்னிறுத்தியே அரசியல் நகர்வுகளை மேற்கொள்கிறார்கள். இந்த ஏகாதிபத்தியவாதிகளைப் பற்றிய சுவாரசியமான விடயம் என்னவென்றால், தமது நலன்களைப் பாதுகாப்பதற்காக அடக்கியாளும்[oppressor] நாடுகளுக்கு , அந் நாடுகளில் எழும் கிளர்ச்சிகளையோ அல்லது விடுதலைப் போராட்டங்களையோ அடக்குவதற்கு தங்களால் ஆன பல உதவிகளைச் செய்வார்கள். இப்படித் தங்களின் உதவியுடன் இந்த அடக்குமுறை நாடுகள் விடுதலைப் போராட்டங்களை நசுக்க முடியாத பட்சத்தில் , அடக்கப்படும் மக்களுக்காகப் போராடும் அமைப்புக்களை எலும்புத்துண்டைக் கொடுத்து நசுக்கப் பார்ப்பார்கள். இதற்கும் அடிபணியாது
விட்டால், ஒன்றில் அடக்கப்படும் மக்களின் போராட்டத்தை அங்கீகரித்து , அவர்களை வெல்ல வைத்து தமது நலன்களைப் பேணிப்பாதுகாத்துக் கொள்வார்கள். அல்லது அணைத்துப் போவது போல் போய் அழித்துவிடுவார்கள். இது தான் தென் ஆபிரிக்காவில் நடந்தேறியது. இது தான் சீனாவிலும் நடந்தேறியது.

தென் ஆபிரிக்காவில் உள்ள தங்கச்சுரங்கங்கள் அமெரிக்கா, மற்றும் பிரிட்டிஷ் வெள்ளையர்களின் நிறுவனங்களின் கட்டுப்பாட்டிலேயே இருந்தது. இப்பொழுதும் அதே நிலைதான். தென் ஆபிரிக்கக் கறுப்பின மக்கள் தங்களின் விடுதலைப் போராட்டத்தைத் தீவிரப்படுத்திய போது, கறுப்பின மக்களின் போராட்டத்தை நசுக்கித் தமது நலன்களைப் பேணிப்பாதுகாப்பதற்காக ஏகாதிபத்திய நாடுகள் தென் ஆபிரிக்காவின் வெள்ளையர் அரசுகளுக்குப் பல வழிகளிலும் உதவிகள் புரிந்தன. நெல்சன் மண்டேலா தலைமை தாங்கி வழிநடத்திய ஆபிரிக்க தேசிய காங்கிரசை பயங்கரவாத அமைப்பாக பிரகடனம் செய்தன ஏகாதிபத்திய நாடுகள். அமெரிக்க காங்கிரஸ் சபையும் இவ் அறிவிப்பை வெளியிட்டது. நெல்சன் மண்டேலாவைக் கைது செய்ய CIA உதவி செய்தது. நெல்சன் மண்டேலாவைக் கைது செய்து சிறையில் போடுவதாலும் , ஆபிரிக்க தேசிய காங்கிரசை தடை செய்வதாலும்
கறுப்பின மக்களின் போராட்டத்தை நசுக்கி தமது நலன்களைப் பாதுகாக்கலாம் என ஏகாதிபத்தியவாதிகள் எண்ணியிருந்தனர். ஆனால், நெல்சன் மண்டேலாவைக் கைது செய்து சிறையிலிட்ட போதும், ஆபிரிக்க தேசிய காங்கிரசை பயங்கரவாதக் குழுவெனத் தடை செய்த போதிலும் கறுப்பின மக்கள் அஞ்சி ஒதுங்கிவிடவில்லை. தொடர்ந்தார்கள் போராட்டத்தை. தென் ஆபிரிக்காவின் பல நகரங்களில் குண்டுகள் வெடித்தன. போராட்டம் உக்கிரமானது. இனியும் கறுப்பின மக்களின் போராட்டத்தை அடக்கி தமது நலன்களைக் காக்க முடியாது என ஏகாதிபத்திய நாடுகள் உணர்ந்தன. அதனால் கறுப்பின மக்களின் போராட்டத்தை அங்கீகரித்து,
அவர்களை வெல்ல வைத்து தமது நலன்களைப் பாதுகாக்க முடிவு செய்தன ஏகாதிபத்திய நாடுகள். ஆக,ஏகாதிபத்தியவாதிகள் தமது நலன்களைப் பாதுகாக்க எத் தரப்புடனும் ஒத்துப்போகத் தயார். முதலில் அழிக்கப் பார்ப்பார்கள். முடியாவிட்டால் அணைத்துப் போவார்கள்.

அதே போலத்தான் சீனாவில் 1989ம் ஆண்டு ஓர் நாடகம் அரங்கேறியது. சோவியத் ஒன்றியத்தை சிதறடிக்க வைத்த வெற்றிக்களிப்பில் , சீனாவையும் உடைக்கச் சதி தீட்டின அமெரிக்காவும் அதன் தோழமை நாடுகளும். சனநாயகப் போராட்டம் என்ற போர்வையில் சீனாவில் கிளர்ச்சியை ஏற்படுத்தி சீனாவை இராணுவ , பொருளாதாரத்துறையில் பின்னடைய வைத்து , சீனாவைப் பிளவுபடுத்த முனைந்தது அமெரிக்கா. அதற்காக சாமர்த்தியமாகத் திட்டம் தீட்டி, பல்கலைக்கழக மாணவர்களுக்குள் ஊடுருவி அவர்களைப் பயன்படுத்தி சீனாவில் அமைதியைச் சீர்குலைக்க முயன்றது அமெரிக்கா. இதையெல்லாம் அறியாததல்ல சீனா. கிளர்ச்சியில் ஈடுபட்ட மாணவர்களைச் சுட்டுப் பொசுக்கியது சீனா. இப்படிச் சீனா செய்யுமென வாசிங்ரனில் திட்டம் தீட்டியவர்களே எதிர்பார்க்கவில்லை. இனியும் சீனாவை இவ்வழியில் உடைக்க முடியாதென உணர்ந்த அமெரிக்க ஏகாதிபத்தியம் , சீனாவில் முதலீடுகள் செய்து தனது நலனை வளர்க்க முடிவெடுத்தது.

நான் ஏன் இவற்றையெல்லாம் இங்கே சொல்கிறேன் என்றால், இப்போது இது தான்[மேலே சொன்ன சம்பவங்கள்] இலங்கையில் நடந்து கொண்டிருக்கிறது.
இலங்கைதீவில் நடக்கும் தமிழர்களின் போராட்டத்தை இராணுவ ரீதியாக அடக்குவதற்கு ஏகாதிபத்தியவாதிகள்[அமெரிக்கா, பிரிட்டன், யப்பான்] தங்களால் ஆன பல உதவிகளைச் சிங்கள அரசுகளுக்கு வழங்கி வந்தனர்.
குறிப்பாக, சிங்களப் படைகளுக்கு இராணுவப் பயிற்சிகள், புலிகள் பற்றிய உளவுத்தகவல்கள் பரிமாற்றம், ஆயதங்கள், இராணுவத்தளபாடங்கள் மற்றும் இராணுவ ஆலோசனைகள் என்பவற்றைக் குறிப்பிடலாம். அத்துடன் தென் ஆபிரிக்கக் கறுப்பின மக்களின் விடுதலை அமைப்பான ஆபிரிக்க தேசிய காங்கிரசைப் பயங்கரவாதக் குழுப் பட்டியலில் இணைத்தது போல, தமிழீழ விடுதலைப் புலிகளையும் பயங்கரவாதக் குழுவில் இணைத்தன. ஆனால், இவற்றையெல்லாம், புலிகள் தமது இராஜதந்திரத்தாலும், இராணுவ பலத்தாலும் தகர்த்தெறிந்தனர். குறிப்பாக ஆனையிறவு, மற்றும் கட்டுநாயக்கா விமான நிலையத் தாக்குதல்கள் போன்றவற்றிற்குப் பின், இனியும் புலிகளை இராணுவ ரீதியாக வெல்ல முடியாது என்பதை ஏகாதிபத்திய நாடுகள் உணர்ந்து கொண்டன. இத் தாக்குதல்கள் ஏகாதிபத்தியவாதிகளின் நலனையும் பாதிப்பதாகிவிட்டது.விடுதலைப் புலிகளுடன் பேச்சுவார்த்தையை துவக்குமாறு சிங்கள அரசுக்கு ஏகாதிபத்திய நாடுகள் அழுத்தம் கொடுக்க ஆரம்பித்தன. இராணுவ ரீதியாகப் புலிகளை அழிக்கமுடியாதென உணர்ந்த ஏகாதிபத்திய நாடுகள் மாற்று வழிகளைக் கையாள எண்ணின. இச் சந்தர்ப்பத்தில் தான் இவ் ஏகாதிபத்திய நாடுகளின் ஆசீர்வாதத்தோடு நோர்வே சமாதான முன்னெடுப்புக்களைத் துவக்கியது. இங்கே தான் புலிகளின் இராஜதந்திரத்திற்குப் பெரும் சவால் துவங்கியது. யுத்தநிறுத்த ஒப்பந்தம் கைச்சாத்திட்ட பின் புலிகள் சந்தித்த பாரிய சவால்கள்:
[1]ரோக்கியோவில் நடந்தேறிய இலங்கைக்கான உதவி வழங்கும் நாடுகளின் மாநாடு.

[2]யுத்த நிறுத்த ஒப்பந்தத்தை மாற்றி எழுத அல்லது மேலதிக அமசங்களைச் சேர்க்க அமெரிக்க - ரணில் அரசு மேற்கொண்ட முயற்சி

[3]கருணாவின் துரோகம்

[4]ரணில் - ஏகாதிபத்திய நாடுகளின் "சர்வதேச சமாதான வலை"

நான் மேலே குறிப்பிட்ட சவால்கள் தான் புலிகள் யுத்தநிறுத்த காலத்தில் எதிர்நோக்கிய பாரிய சவால்கள். இச் சவால்களையெல்லாம் புலிகள் தமது மதிநுட்பத்தாலும், இராஜதந்திரத்தாலும் வெற்றி பெற்றார்கள் என்பது மட்டுமல்ல , ஈழப்போராட்டம் இப்போது முன்னேறி, விடுதலைக்கான பாதையில் இருந்து விலகாமல் வீறு நடை போடுகிறது.

சசி, எனது அடுத்த பின்னூட்டத்தில் , நான் மேலே குறிப்பிட்டிருந்த சவால்களுக்குப் பின்னால் இருந்த ஆபத்துக்கள் என்ன என்பதையும் புலிகள் எப்படி இவற்றைத் தந்திரமாகக் கையாண்டு வெற்றி கொண்டார்கள் என்பதையும் விபரமாக எழுதுகிறேன்.

நன்றிகள்.

அன்புடன்
வெற்றி

2:11 AM, June 05, 2006
ஈழபாரதி said...

பதிவுக்கு நன்றி சசி,
உலக இயங்கியலில் இருந்து நான் புரிந்து கொண்டது, சரியோ பிழையோ நடப்பவற்றை வைத்துதான் வரலாறு பிறக்கிறது, நடந்து முடிந்த பின்னர்தான் சரிபிழை பார்ககப்படுகிறது.
என்னைப்பொறுத்தவரை இந்தியாவுக்கு நல்லெண்ண சமிக்கைகளை விடுதலைப்புலிகள் விட்டுக்கொண்டு இருப்பதை விட்டு விட்டு, அமெரிக்காவுடன் ஒரு சிறிய அஜெஸ்மெண்டை செய்ய முன் வரவேண்டும்.
இந்திய பாதுகாப்பு அமைச்சர் பிரனவ்முகர்ஜி இறுதியாக வெளியிட்ட அறிக்கை அவர்களால், மாறமுடியாது என்பதை சுட்டிக்காட்டுகிறது.
அமெரிக்க தற்போது இறுதியாக வெளியிட்டு இருக்கும் அறிக்கையின்படி தமிழ்மக்களின் சுயநிர்னய உரிமையையும், சுயாட்சியையும் அங்கிகரிக்கிறது, விடுதைப்புலிகள் வன்முறையை கைவிட்டால் சரி என்கிறது, அவர்கள் எதையோ எதிர்பாகிறார்கள், நிட்சயம் அது திருகோணமலையாகத்தான் இருக்கும், இந்தியாவினதும், சீனாவினதும் வல்லரசு கணவுகளை உடைக்க, இந்து சமுத்திர பிரதேசத்தில் அதற்கு ஒரு தளம் வேண்டும், அதைத்தான் அது எதிர்பாக்கிறது, இந்த சின்ன அஜெஸ்மெண்டுக்கு விடுதைப்புலிகள் ஒப்புக்கொள்வார்கள் என்றால், அவர்களது பயங்கரவாதமென்ற சொல்லாடல் காற்றில் விடப்படும், ஊதாரணத்துக்கு, உலகத்தில் பயங்கரவாதிகளை உருவாக்குவதில் முன்னனியில் இருக்கும் நாடுகள், பாகிஸ்தானும், சவுதி அரேபியாவுமாகும், அமெரிக்காவின் நன்மைகளுக்காக அவர்கள் பயங்கரவாதம் மறைக்கப்பட்டு நண்பர்களாக இருக்கமுடியுமென்றால், விடுதைலைப்புலிகளின் வன்போராட்டங்கள் அமெரிக்கவுக்கு ஒரு ஜீஜீப்பி.
அரேபியாவில் எப்படி ஒரு ஸ்ரேல் அமெரிக்காவுக்கு தேவைப்படுகிறதோ, அதை ஒத்த ஒருதளம் இந்துசமுத்திரப்பிரதேசத்தில் தேவைப்படுகிறது, அவர்களது போர்கப்பல்கள் வந்துபோவதற்கு ஏற்ற ஒரு தளம் திருகோணமலை, அதன்பின் எந்த ஒருநாடும் தமிழீழத்துடன் வாலாட்ட முடியாது.
இது ஏற்கனவே ஒருமுறை பிரேரிக்கப்பட்ட விடயம், உலக இயங்கியல் தற்போது அதை அவசியமென்கிறது.

நடந்து முடிந்தபின்னர்தான் சரிபிழைபார்கப்படும், நடக்கும் விடயங்களில் இருந்துதான் வரலாறு பிறக்கிறது.
இந்தியாவுக்கு விடுதலைப்புலிகள் கொடுக்கும் நல்லெண்ண சமிக்கைகளை விட அமெரிக்கா விடுதலைப்புலிகளுக்கு கொடுக்கும் நல்லெண்ண சமிக்கைகள் சாலச்சிறந்தது.
இதுவும் ஒரு வழிதான், இதுமட்டுமே வழி அல்ல.

7:44 AM, June 05, 2006
வெற்றி said...

சசி,
எனது முன்னைய பின்னூட்டத்தில் யுத்தநிறுத்த ஒப்பந்தம் அமுலுக்கு வந்த பின் புலிகள் எதிர் நோக்கிய பாரிய சவால்கள் என சில விடயங்களைக் குறிப்பிட்டிருந்தேன். அதில் ஓர் முக்கியமான சவாலைக் குறிப்பிட மறந்து விட்டேன். புலிகள் யுத்தநிறுத்த காலத்தில் சந்தித்த பாரிய சவால்கள்:

[1]ரோக்கியோவில் நடந்தேறிய இலங்கைக்கான உதவி வழங்கும் நாடுகளின் மாநாடு.

[2]யுத்த நிறுத்த ஒப்பந்தத்தை மாற்றி எழுத அல்லது மேலதிக அமசங்களைச் சேர்க்க அமெரிக்க - ரணில் அரசு மேற்கொண்ட முயற்சி

[3]கருணாவின் துரோகம்

[4]ரணில் - ஏகாதிபத்திய நாடுகளின் "சர்வதேச சமாதான வலை"

[5]நிழல் யுத்தம்/சிங்கள அரசின் இரகசியத் தாக்குதல்கள்[shadow war/ covert operations]

ஜந்தாவதாக குறிப்பிட்ட சவாலை நான் எனது முன்னைய பின்னூட்டத்தில் எழுத மறந்து விட்டேன்.

சசி, எனது அடுத்த பின்னூட்டத்தில் , நான் மேலே குறிப்பிட்டிருந்த சவால்களுக்குப் பின்னால் இருந்த ஆபத்துக்கள் என்ன என்பதையும் புலிகள் எப்படி இவற்றைத் தந்திரமாகக் கையாண்டு வெற்றி கொண்டார்கள் என்பதையும் விபரமாக எழுதுகிறேன்.

நன்றி.

அன்புடன்,
வெற்றி

11:04 AM, June 05, 2006
வெற்றி said...

அன்பின் ஈழபாரதி,

//அமெரிக்காவுடன் ஒரு சிறிய அஜெஸ்மெண்டை செய்ய முன் வரவேண்டும்....அமெரிக்க தற்போது இறுதியாக வெளியிட்டு இருக்கும் அறிக்கையின்படி தமிழ்மக்களின் சுயநிர்னய உரிமையையும், சுயாட்சியையும் அங்கிகரிக்கிறது, விடுதைப்புலிகள் வன்முறையை கைவிட்டால் சரி என்கிறது, அவர்கள் எதையோ எதிர்பாகிறார்கள்//

தங்களின் இக் கருத்துடன் எனக்கு உடன்பாடில்லை என்பதை மிகவும் தாழ்மையுடன் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்.இங்கே தான் நீங்கள் அமெரிக்காவின் தந்திரத்திற்குப் பலியாகி விட்டீர்கள். இது அமெரிக்காவின் சூழ்ச்சி. அமெரிக்கா ஈழத்தமிழர்களின் மேல் கரிசனை கொண்டு இந்த அறிக்கையை விடவில்லை. மாறாக புலிகளின் இராணுவ பலமும், இராஜதந்திரமும் தான் இவ் அறிக்கையை விட அமெரிக்காவை நிர்ப்பந்தித்தது.
நான் மேலே விபரமாக எழுதிய பின்னூட்டத்தைப் படித்துப் பாருங்கள். அமெரிக்கா இவ் அறிக்கையை விட்டதற்கான காரணத்தை என் பின்னூட்டத்தில் இருந்து புரிந்து கொள்வீர்கள்.
நான் மேலே சொன்ன கருத்துக்களில் சில இதோ:

//இந்த ஏகாதிபத்தியவாதிகளைப் பற்றிய சுவாரசியமான விடயம் என்னவென்றால், தமது நலன்களைப் பாதுகாப்பதற்காக அடக்கியாளும்[oppressor] நாடுகளுக்கு , அந் நாடுகளில் எழும் கிளர்ச்சிகளையோ அல்லது விடுதலைப் போராட்டங்களையோ அடக்குவதற்கு தங்களால் ஆன பல உதவிகளைச் செய்வார்கள். இப்படித் தங்களின் உதவியுடன் இந்த அடக்குமுறை நாடுகள் விடுதலைப் போராட்டங்களை நசுக்க முடியாத பட்சத்தில் , அடக்கப்படும் மக்களுக்காகப் போராடும் அமைப்புக்களை எலும்புத்துண்டைக் கொடுத்து நசுக்கப் பார்ப்பார்கள். இதற்கும் அடிபணியாது
விட்டால், ஒன்றில் அடக்கப்படும் மக்களின் போராட்டத்தை அங்கீகரித்து , அவர்களை வெல்ல வைத்து தமது நலன்களைப் பேணிப்பாதுகாத்துக் கொள்வார்கள். அல்லது அணைத்துப் போவது போல் போய் அழித்துவிடுவார்கள்//

//குறிப்பாக ஆனையிறவு, மற்றும் கட்டுநாயக்கா விமான நிலையத் தாக்குதல்கள் போன்றவற்றிற்குப் பின், இனியும் புலிகளை இராணுவ ரீதியாக வெல்ல முடியாது என்பதை ஏகாதிபத்திய நாடுகள் உணர்ந்து கொண்டன. இத் தாக்குதல்கள் ஏகாதிபத்தியவாதிகளின் நலனையும் பாதிப்பதாகிவிட்டது.விடுதலைப் புலிகளுடன் பேச்சுவார்த்தையை துவக்குமாறு சிங்கள அரசுக்கு ஏகாதிபத்திய நாடுகள் அழுத்தம் கொடுக்க ஆரம்பித்தன. இராணுவ ரீதியாகப் புலிகளை அழிக்கமுடியாதென உணர்ந்த ஏகாதிபத்திய நாடுகள் மாற்று வழிகளைக் கையாள எண்ணின. இச் சந்தர்ப்பத்தில் தான் இவ் ஏகாதிபத்திய நாடுகளின் ஆசீர்வாதத்தோடு நோர்வே சமாதான முன்னெடுப்புக்களைத் துவக்கியது. இங்கே தான் புலிகளின் இராஜதந்திரத்திற்குப் பெரும் சவால் துவங்கியது //

//யுத்தநிறுத்த ஒப்பந்தம் கைச்சாத்திட்ட பின் புலிகள் சந்தித்த பாரிய சவால்கள்:
[4]ரணில் - ஏகாதிபத்திய நாடுகளின் "சர்வதேச சமாதான வலை" //

இப்போது பலருக்கு விளங்கியிருக்கும் ஏன் புலிகள் ரணிலைத் தோற்கடித்தனர் என்று. தற்போது ரணில் ஆட்சியில் இருந்திருந்தால் அமெரிக்கா இவ் அறிக்கைக்கு நேர்மாறான அறிக்கையைத்தான் விட்டிருக்கும். ரணிலைத் தோற்கடித்ததன் மூலம் "ரணில்- ஏகாதிபத்திய நாடுகளின் சமாதான வலையை" புலிகள் கச்சிதமாக தகர்த்தெறிந்துள்ளனர் இது புலிகளின் இராஜதந்திர வெற்றிகளில் ஒன்று. இப்படி அறிக்கையை விட வைத்தது போல், அமெரிக்கா தமிழர் போராட்டத்தை வெற்றி பெற வைக்கும் அளவுக்கு அல்லது வெற்றியைத் தடுக்க முடியாதளவுக்கு புலிகள் இராஜதந்திர நகர்வுகளை மேற்கொள்ள வேண்டும். இது இலகுவான செயல் அல்ல. ஆனால் இதைச் செய்யக்கூடிய மதிநுட்பமும், இராஜதந்திர அறிவும் புலிகளிடம் உண்டு. ஆகவே அமெரிக்கா எம்மை ஆதரிக்கிறது என தப்புக்கணக்குப் போட்டு ஏமார்ந்து விடாதீர்கள். இவ் அறிக்கை ராஜபக்சவுக்கு கொடுக்கப்படும் அழுத்தம். அவ்வளவே.

//என்னைப்பொறுத்தவரை இந்தியாவுக்கு நல்லெண்ண சமிக்கைகளை விடுதலைப்புலிகள் விட்டுக்கொண்டு இருப்பதை விட்டு விட்டு, அமெரிக்காவுடன் ஒரு சிறிய அஜெஸ்மெண்டை செய்ய முன் வரவேண்டும்.
இந்திய பாதுகாப்பு அமைச்சர் பிரனவ்முகர்ஜி இறுதியாக வெளியிட்ட அறிக்கை அவர்களால், மாறமுடியாது என்பதை சுட்டிக்காட்டுகிறது.//

ஈழபாரதி, தங்களின் இக் கருத்திலும் நான் மாற்றுக் கருத்தையே கொண்டுள்ளேன். இலங்கையில் இராணுவ ரீதியாகவோ அல்லது அரசியல் ரீதியாகவோ தீவிரமாக ஈடுபட வேண்டிய தேவை இந்தியாவிற்கு தற்போது உள்ள சூழ்நிலையில் இல்லை. காரணம், 1987 ல் கைச்சாத்திடப்பட்ட இலங்கை-இந்திய ஒப்பந்தத்தின் மூலம் தனது நலன்களுக்குச் சாதகமான பல உறுதிகளை இலங்கையிடம் இருந்து இந்தியா பெற்றுக்கொண்டு விட்டது. குறிப்பாக, இலங்கை அரசு எந்த வெளிநாட்டு இராணுவத்தையும் இலங்கைக்குள் அனுமதிக்க முன்னர், அல்லது மற்றைய நாடுகளுடன் இராணுவ ஒப்பந்தங்களைச் செய்யும் முன்னர் கட்டாயம் இந்தியாவிடம்
"ஆலோசனை" பெற வேண்டும் என்பது இலங்கை-இந்திய ஒப்பந்தத்தில் இரு நாடுகளாலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட விடயம். ஆகவே இவ் ஒப்பந்தம் அமுலில் இருக்கும் வரை, இலங்கை அரசு இவ் ஒப்பந்ததை மீறும் வரை இந்தியாவிற்கு இலங்கையில் தீவிரமாக ஈடுபட வேண்டிய தேவை தற்போது இல்லை.

//இந்தியாவுக்கு விடுதலைப்புலிகள் கொடுக்கும் நல்லெண்ண சமிக்கைகளை விட அமெரிக்கா விடுதலைப்புலிகளுக்கு கொடுக்கும் நல்லெண்ண சமிக்கைகள் சாலச்சிறந்தது.//

இந்தியாவின் நலன்களுக்கு எதிராக நாம் செயற்படுவோமாயிருந்தால், அதாவது, புலிகள் இந்திய நலனுக்கு எதிராகச் செயற்படுவார்களாயின் , தமிழீழ விடுதலைப் போராட்டத்தைக் குழி தோண்டிப் புதைக்கும் செயலுக்கு ஒப்பானது என்பதே என் கருத்து.
எமது பிராந்தியத்தில் இந்தியா மிகவும் முக்கியமான நாடு. இந்தியாவின் நலன்களுக்கு எதிராகச் செயற்பட்டால் வரும் விளைவுகளை விடுதலைப் புலிகளின் திட்டவகுப்பாளர்கள் அறியாதது அல்ல. அதனால் தான் பாகிஸ்தான் உளவுப்படை புலிகளுக்கு ஆதரவு தருவதாகத் தகவல் அனுப்பிய போதும், புலிகள் அதை நிராகரித்தனர். அதே போலத்தான் , ஆனையிறவு இராணுவமுகாமைத் தகர்த்தெறிந்து வெற்றியீட்டி, புலிகளின் படை யாழ் நோக்கி அணிவகுத்துச் சென்று கிட்டத்தட்ட 40,000 சிங்களப் படைகளை முற்றுகை இட்ட போது , இந்தியாவின் வேண்டுகோளினால் தான் புலிகள் யாழ் முற்றுகையைக் கைவிட்டார்கள். ஆக, புலிகள் இந்தியாவின் முக்கியத்துவத்தை நன்றாகவே கணிப்பிட்டு வைத்துள்ளார்கள்.

நன்றி.

அன்புடன்
வெற்றி

3:55 PM, June 05, 2006
ஈழபாரதி said...

வெற்றி உங்கள் கருத்துக்கள் ஏற்புடையதாக இருப்பினும், உதாரணத்துக்கு இஸ்ரேலை பாருங்கள், சுற்றவர அரேபிய நாடுகள், அதுவும் எதிரிநாடுகள், அப்படி இருந்தும் திமிரோடு எழுந்து நிற்கிறது, இது எப்படி சாத்தியம் ஒரு சின்ன நாடு இவ்வளவு பெரிய நாடுகளையும் சமாளிக்கிறது, அமெரிக்கா என்ற ஆதரவும், புலம்பெயர்ந்திருக்கும் யூதமக்களின் ஆதரவும்தான். அதனுடன் எந்த நாடும் வாலாட்ட முடியுமா?

இது அமெரிக்காவின் தந்திரம் என தெரிந்தபோதும், ஜேவிபியுடன் இருக்குவரைதான் ராஜபக்சா சனாதிபதி, ஜேவிபியுடன் இருக்கும்வரை ஒருகாலமும், ரணிலைப்போல் அமெரிக்காவுடன் ராஜபக்சாவினால் சாயமுடியாது, சாய்ந்தால் அவர் சனாதிபதியாக தொடரமுடியாது, ஜேவிபி எப்போதும் இந்தியா, சீனாவைதான் சார்ந்திருக்கும்.விடுதலப்புலிகள் அமெரிக்காவுடன் நட்புபேன இது நல்ல சந்தர்ப்பம்.
அமெரிக்காவின் தந்திரமாக இது இருந்தபோதும் எமது தேவைகள் தீர்ந்தபின்தான் அமெரிக்காவின் தேவைகள் நிறைவேற்றப்படும்.
விடுதலைப்புலிகளின் போர் ஆற்றலின் மீது எனக்கு பூரண நம்பிக்கை உண்டு, முழுதமிழீழத்தையும் அவர்களால் மீட்கமுடியும், அதன் பின்? மாலைதீவு கேட்டமாதிரி எனது நாட்டை மீட்டு தருமாறு இந்தியாவிடமோ அல்லது அமெரிக்காவிடமோ, அல்லது யு என் ஓ விடமோகேட்கும் பட்சத்தில், ஒரு அன்னிய படை பெருமளவு எடுப்புடன் இறங்கும்போது, முழு கட்டுமானமே அழிக்கப்படும், உதாரனாம் அரசிடம் இருந்து தாலிபான்களினால் மீட்கப்பட்ட அப்பகானிஸ்தான், அமெரிக்காவிடம் ஒரு நட்பு ஒப்பந்தம் மேற்கொண்டால் களநிலமைகள் நிட்சயம் மாற்றி அமைக்கப்படும், இந்தியாவை நம்பி இருப்பதில் ஒரு பிரயோசனமும் இல்லை ஏனெனில் எவர் எம்மை நெருங்கி வருகிறார்களோ அவர்களைத்தான் நாம் நெருங்கிபோகமுடியும், நடக்கும் செயல்கள்தான் வரலாற்றை எழுதுகிறது.

4:48 AM, June 06, 2006
ஜோ/Joe said...

அருமையான பதிவு..ஈழத் தமிழர்கள் மேல் பரிவு கொண்ட ஒரு இந்திய தமிழனாக நான் அறிந்து கொள்ளவேண்டிய பல விடயங்கள் பதிவிலும் பின்னூட்டங்களிலும் கிடைத்தன. நன்றி!

10:30 PM, June 07, 2006
சுந்தரவடிவேல் said...

இன்றுதான் வாசித்தேன்.
மாலன் தன் ஜனநாயக வாதத்தில் எப்படி அந்த டி.என்.ஏ பாராளுமன்ற உறுப்பினர்கள் அத்தனை பேரையும் விழுங்கினார் என்றே தெரியவில்லை. ஒரு பத்திரிகையாளர் இன்னமும் மக்கள்தான் நாட்டை ஆள்கிறார்கள் என்று நம்புவதை நினைக்கும்போது அழுவதா சிரிப்பதா என்றே தெரியவில்லை.

7:57 AM, June 10, 2006