ராஜீவ் படுகொலை : பாலசிங்கத்தின் மன்னிப்பு
இராஜீவ் படுகொலை ஒரு "துன்பியல்" சம்பவம் என்ற ஒற்றை வார்த்தைக்குப் பிறகு புலிகளின் தலைமையிடம் இருந்து வந்திருக்கும் முக்கியமான ஒப்புதல் வாக்குமூலம் மற்றும் மன்னிப்பு கேட்கும் நிகழ்வாக பாலசிங்கத்தின் பேட்டி இருக்கிறது. இந்த "மன்னிப்போ", இந்தியாவை நோக்கிய புலிகளின் நட்பு ரீதியான அணுகுமுறையோ இந்தியாவின் நிலையில் எந்த மாற்றத்தையும் தற்பொழுது ஏற்படுத்தப் போவதில்லை.
கடந்த காலங்களில் புலிகள் இந்தியாவிடம் நெருங்கி வர முயன்ற சூழ்நிலைகளில் இந்த "மன்னிப்பு" கேட்க வேண்டிய அவசியத்தை பல இந்தியப் பத்திரிக்கையாளர்கள் மற்றும் புலிகள் எதிர்ப்பாளர்கள் முன்வைத்து இருந்தனர். இராஜீவ் காந்தியின் படுகொலையை மன்னிப்பு கேட்பதன் மூலம் சரியாக்கி விட முடியுமா ? என்ற கேள்வி எனக்கு அப்பொழுதே எழுந்தது.
என்றாலும் பொதுவாக பலர் முன்வைத்து இருந்த இந்த மன்னிப்பு, தற்பொழுது கிடைத்து விட்டப் பின்னரும், எந்த மாற்றமும் இந்தியாவின் நிலையில் ஏற்படக்கூடிய வாய்ப்பு இல்லை என்பது தான் யதார்த்தமான உண்மை. ஆனாலும் புலிகளின் எதிர்கால உத்திகளை பாலசிங்கத்தின் பேட்டி படம் பிடித்து காட்டுவதாகவே நான் நினைக்கிறேன்.
புலிகளின் இந்த முயற்சி உடனடியாக எந்த விளைவையும் ஏற்படுத்தி விடாது. ஆனால் எதிர்காலத்தில் தங்களுக்கு இந்தியா மூலம் ஏற்படக்கூடிய அச்சுறுத்தலை தவிர்த்துக் கொள்ள இதன் மூலம் புலிகள் முயன்றிருக்கிறார்கள்.
உலக நாடுகளின் தடை புலிகள் மீது பாய்ந்துள்ள நிலையில் இந்தியாவின் உதவியை நாட புலிகள் முயலுகிறார்கள் என்ற பல பத்திரிக்கைகளின் கருத்தை நான் ஏற்றுக் கொள்ள வில்லை.
இதற்கு காரணம் புலிகள் மீது தடை விதித்துள்ள நாடுகளில், இந்தியாவுடன் மட்டுமே புலிகளுக்கு "தனிப்பட்ட பகை" உள்ளது. இந்திய இராணுவம் - புலிகள் போர் மற்றும் இராஜீவ் காந்தியின் மரணம் போன்றவையே புலிகளை இந்தியாவுடன் நெருங்க முடியாமல் செய்யக்கூடியவை. இவை தவிர புலிகளை கடுமையாக எதிர்க்க கூடிய "செல்வாக்கு மிகுந்த ஒரு Lobby" இந்தியாவில் தான் உண்டு.
ஆனால் பிற நாடுகளுடன் புலிகளுக்கு எந்த தனிப்பட்ட பகையும் இல்லை. புலிகள் மீது தடை விதிக்க வேண்டிய எந்த ஒரு தனிப்பட்ட நோக்கமும் பிற நாடுகளுக்கு இருந்ததில்லை. இலங்கை அரசின் நிர்பந்தம் தான் அமெரிக்கா போன்ற நாடுகள் புலிகளை தடை செய்ய முக்கிய காரணம் (இவை தவிர என்னுடைய முந்தையப் பதிவில் கூறியிருந்த பொருளாதார ரீதியான அணுகுமுறையும் ஒரு முக்கிய காரணமாக கருத முடியும்). புலிகள் மீதான ஐரோப்பிய யூனியன் தடை, கனடாவின் தடை போன்றவை புலிகள் மீது ஒரு நிர்பந்தத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டவை.
புலிகள் மீதான தன்னுடைய தடை நிரந்தரமானது அல்ல என்றும் புலிகள் ஆயுதப் போராட்டத்தை கைவிட்டால் புலிகளுடன் தங்களால் தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்ள முடியும் என அமெரிக்கா கடந்த மாதம் கூறியிருந்தது. இது சாத்தியமா என்பது ஒரு புறம் இருக்க, இத்தகைய எந்த வாய்ப்பும் இந்தியாவிடம் புலிகளுக்கு இல்லை என்பதை கவனிக்க வேண்டும். அதாவது தடை விதித்துள்ள நாடுகளில் புலிகளால் நெருங்க முடியாத நாடு இந்தியா மட்டுமே. ஆனால் பிற நாடுகளை புலிகளால் எதிர்காலத்தில் அணுக முடியும்.
இந்தியாவுடன் நெருங்கி வரத்தக்க ஒரு சூழ்நிலையை எதிர்காலத்தில் ஏற்படுத்த வேண்டும் என்ற முயற்சியின் முதல் படியாகத் தான் பாலசிங்கம் இராஜீவ் காந்தியின் படுகொலைக்கு மன்னிப்பு கேட்டுள்ளார்.
இந்த மன்னிப்பு சில முக்கியமான பிண்ணனி காரணங்களைக் கொண்டது.
என்னுடைய முந்தையப் பதிவில் கூறியுள்ளது போல இலங்கையில் போர் துவங்கும் பட்சத்தில் திரிகோணமலை புலிகளின் முக்கியமான இலக்காக இருக்கும். திரிகோணமலை என்பது ஒரு முக்கியமான பொருளாதார மற்றும் இராணுவ கேந்திரம். இந்த இடம் புலிகளுக்கு கிடைக்கும் பட்சத்தில் ஈழப் போரில் முதன் முறையாக ஒரு பொருளாதார கேந்திரம் புலிகளிடம் இருக்கும். ஒரு முக்கியமான பொருளாதார இடம் மூலம் உலக நாடுகளுடன் தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்ளக் கூடிய வாய்ப்பு இருக்கும். இவை தவிர திரிகோணமலை துறைமுகம் குறித்தான சில ஒப்பந்தங்கள் இந்தியாவிற்கும் இலங்கை அரசுக்கும் உள்ளது. புலிகள் இதனை கைப்பற்றும் பொழுது இந்தியாவின் நலன்கள் குறித்த கேள்வி எழும். அப்பொழுது இந்தியாவுடன் உறவை புதியதாக தொடங்க புலிகள் விரும்பினாலும், இராஜீவ் காந்தி படுகொலை, மன்னிப்பு போன்ற பிரச்சனைகள் அப்பொழுது எழும்.
இத்தகையப் பிரச்சனைகளை முன்கூட்டியே தவிர்க்க புலிகள் இந்த "மன்னிப்பு" மூலம் திட்டமிடுகிறார்களோ என்ற கேள்வி எழுகிறது. இதன் மூலம் இந்தியாவின் பொருளாதார நிர்பந்தங்களை புலிகள் exploit செய்ய நினைக்கிறார்களோ என்ற எண்ணம் எழுகிறது.
இதைத் தவிர தமிழீழம் என்ற தனி நாட்டை எதிர்ப்பதில் இந்தியாவிற்கு தான் பல நியாயமான காரணங்கள் இருக்கின்றன. இன்னொரு நாடு உருவாவது தங்களின் பொருளாதார, இராணுவ நோக்கங்களுக்கு பிரச்சனையாக இருக்கும் என்ற வகையில் தான் அமெரிக்கா போன்ற நாடுகள் தமிழீழத்தை எதிர்க்கின்றன. ஆனால் தமிழீழம் என்பது உருவானால் இந்தியாவில் இருக்கின்ற பஞ்சாப், காஷ்மீர், அஸ்ஸாம் போன்ற தீவிராவாத குழுக்களுக்கு அது ஒரு முன் மாதிரியாக அமைந்து விடும் என்ற அச்சம் இந்தியாவிற்கு உண்டு. இந்தியாவுடன் நட்பு கொள்வதன் மூலம் இந்த அச்சத்தை போக்க முடியும் என புலிகள் நினைக்கின்றனர்.
இவை தவிர பிராந்திய வல்லரசான இந்தியாவுடன் நெருங்கி வருவதன் மூலம், இந்தியா மூலம் தங்களுக்கு எதிர்ப்பு ஏற்படாதவண்ணம் பார்த்துக் கொள்ள முனைகிறார்களோ என்றும் நினைக்கத் தோன்றுகிறது.
இப்படியான சில காரணங்களை எதிர்நோக்கி தான் புலிகள் தற்பொழுது மன்னிப்பு கேட்டுள்ளனர். ஆனால் இந்த மன்னிப்பு தற்பொழுது எந்த பலனையும் கொடுக்காது. என்றாலும் எதிர்காலம் நிச்சயமற்றது.
Tags
Strategic Analysis
தமிழ்ப்பதிவுகள்
ஈழம்