Friday, September 29, 2006

In the Line of Fire - Pervez Musharraf

பாக்கிஸ்தான் அதிபர் பர்வேஷ் முஷ்ரப் எழுதி உலகெங்கிலும் அதிகப் பரபரப்புடன் விற்பனையாகிக்கொண்டிருக்கும் புத்தகம் - In the Line of Fire. இந்தப் புத்தகத்தை வாங்கியவுடன் பெரும்பாலான இந்தியர்கள் படிக்க நினைக்கும் சிலவற்றை தான் நானும் முதலில் படித்தேன். இன்னும் முழு புத்தகத்தையும் படிக்க வில்லை. கார்கில் போர் குறித்தான முஷ்ரப்பின் கருத்துக்களை இந்திய ஊடகங்கள் சாடிக் கொண்டிருந்த நிலையில் முதலில் கார்கில் குறித்து படித்து விட்டு பிறகு முழு புத்தகத்தையும் படிக்கலாம் என்று கார்கில் அத்தியாயத்தை வாசிக்க தொடங்கினேன்.

இந்திய ஊடகங்கள் குறிப்பாக ஹிந்துவில் வெளியான கட்டுரையும், இந்த புத்தகத்தை படிக்காமலேயே ஆசிரியருக்கு கடிதம் எழுதி குவித்து கொண்டிருக்கும் ஹிந்து வாசகர் கடிதங்களையும் பார்த்தப் பிறகு முஷ்ரப் கார்கில் குறித்து என்ன தான் சொல்கிறார் என்ற ஆர்வம் ஏற்பட்டது. கார்கில் குறித்த கட்டுரை நல்ல நடையில் சுவாரசியமாக எழுதப்பட்டிருந்தது.

முதலில் முஷ்ரப் என்ன சொல்கிறார் என்பதை மட்டும் பார்த்து விட்டு அது குறித்த எனது விமர்சனங்களை இறுதியில் எழுதுகிறேன்.

முஷ்ரப் கார்கில் அத்தியாயத்தை இவ்வாறு தொடங்குகிறார்

The year 1999 may have been the most momentous of my life.. The events of 1999 and the fall of 1998, dramatically catapulated me from solidiering to leading the destiny of the nation என்று தொடங்கும் முஷ்ரப் It is time to lay bare what has been shrouded in mystery என்று கார்கில் குறித்த புதிர்களை அவிழ்க்க முற்படுகிறார்.

கார்கில் மற்றும் Dras பகுதியில் இருக்கும் சிலப் பகுதிகளை பாக்கிஸ்தான் 1999ல் ஆக்கிரமித்தது ஒரு சாதாரண நிகழ்வு என்றும் அது முதன் முறையாக நடந்த ஒரு ஆக்கிரமிப்பு இல்லை என்றும் முஷ்ரப் கூறுகிறார். பாக்கிஸ்தான் அதிக வலுவுடன் இல்லாத பனிப் பகுதிகளை இந்தியா ஆக்கிரமிப்பதும், இந்தியா வலுவுடன் இல்லாத இடங்களை பாக்கிஸ்தான் ஆக்கிரமிப்பதும் எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியில் நடக்கும் மிகச் சாதாரண ஒரு நிகழ்வு என்றும் இவ்வாறு தான் சியாசின் பகுதி இந்தியாவால் ஆக்கிரமிக்கப்பட்டது என்கிறார் முஷ்ரப்.

இந்தியா, பாக்கிஸ்தான் பகுதிகள் மீது தாக்குதல் தொடுக்க முயற்சி செய்வதாக தங்களுக்கு கிடைத்த சில தகவல்களின் அடிப்படையிலே தான் கார்கிலை பாக்கிஸ்தான் ஆக்கிரமிக்க திட்டம் தீட்டியது என்கிறார் முஷ்ரப். குளிர் காலங்களில் மிகவும் குளிர் மிகுந்த இந்தப் பகுதிகளை விட்டு இரு நாட்டின் படையினரும் விலகிக் கொள்வதும், குளிர் காலம் முடிந்தவுடன் இந்தப் பகுதிக்கு மீண்டும் வருவதும் வழக்கம். 1999ல் குளிர் காலத்தில் இந்தப் பகுதியை விட்டு இந்திய இராணுவம் விலகிய நிலையில் தான் பாக்கிஸ்தான் கார்கில் பகுதியை ஆக்கிரமித்தது

There was specific information of a possible Indian attack in the Shaqma sector; it was aimed at positions we had used to shell the road between Dras and Kargil in early summer 1998, in response to continuous artillery shelling by the Indians...

There were large gaps between our defensive positions in the Kargil and Dras sectors, making it possible for Indian troops to cross the line too easily. India also brought in and tested special bunker-busting equipment in the autumn of 1998 ...

இந்தியாவின் இந்த முயற்சிகளுக்கு பதிலடி கொடுக்கும் வகையிலும், இந்தியாவின் இந்த முயற்சியை தடுக்கும் வகையிலும் மிக ரகசியமாக கார்கில் பகுதி பாக்கிஸ்தான் இராணுவத்தால் ஆக்கிரமிக்கப்பட்டது என்கிறார். இது பாக்கிஸ்தான் இராணுவத்தின் செயல்திறனுக்கு ஒரு எடுத்துக்காட்டு என்று முஷ்ரப் கூறுகிறார்

Our maneuver was conducted flawlessly, a tactical marvel of military professionalism. By the end of April the unoccupied gaps along 75miles (120KM) of the LOC had been secured by over 100 new posts of ten to twenty persons each.

பாக்கிஸ்தான் படைகள் எல்லை கட்டுப்பாட்டு கோடு அருகில் இருக்கும் பகுதியில் தங்கள் பலத்தை அதிகரித்தப் பிறகு முஜாஹீதின் குழுக்கள் இந்தியாவின் பகுதிக்குள் சுமார் 800 சதுர கி.மீ பகுதிகளை ஆக்கிரமித்து இருந்ததாகவும், எல்லைக்கட்டுப்பாட்டு கோடு பகுதிகளை நோக்கி இந்தியா நெருங்க முடியாதவண்ணம் இவர்கள் அரண் அமைக்க, எல்லைக் கட்டுப்பாட்டு கோடுக்குள் பாக்கிஸ்தான் படைகள் தங்கள் பாதுகாப்பை அதிகரித்து இருந்ததாகவும் முஷ்ரப் கூறுகிறார். இது எதுவுமே இந்தியாவிற்கு 1999 மே மாதம் வரை தெரியாது என்கிறார் முஷ்ரப்.

முஷ்ரப் கூறியதன் சாராம்சம் இது தான் - "பாக்கிஸ்தான் மீது இந்தியா கார்கில் பகுதியில் தாக்குதல் தொடுக்க திட்டமிட்டிருந்தது. இதனை முறியடிக்க கார்கில் பகுதியில் எங்கள் பாதுகாப்பை அதிகரித்தோம். முஜாஹீதின் குழுக்கள் மூலமாக இந்தியப் பகுதியையும் ஆக்கிரமித்தோம். இதற்கு காரணம் இந்தியா தானே தவிர நாங்கள் இல்லை"

இது உண்மையா ? பிறகு கவனிப்போம்.

முஷ்ரப் கூறும் மேலும் சில விடயங்கள் இந்திய இராணுவத்தின் திட்டமிடல் குறித்தும், செயல்பாடு குறித்தும், கார்கில் போரில் இந்தியாவின் வெற்றி குறித்தும் பல கேள்விகளை எழுப்புகிறது. அது போல கார்கில் போர் பாக்கிஸ்தானுக்கு கிடைத்த வெற்றி என முஷ்ரப் கூறுகிறார்

India moved in artillery and infantry formations even at the cost of significantly depleting its offensive capability elsewhere along the international border. Evaluating this buildup at headquarters we realized that India had created a serious strategic imbalance in its system of forces. It had bottled up major formations inside Kashmir, leaving itself co capability to attack us elsewhere....

By july 4 they (இந்தியா) did achieve some success, which i would call insignificant

Our Nation remains proud of its commanders and troops, whose grit and determination I observed during my frequent vists to the forward areas

Pakistan was in a strategically advantegous position in case of an all-out war, in view of the massive Indian troop indications inside Kashmir, resulting in a stragtegic imbalance in India's system of forces

The indians, by their own admission, suffered over 600 killed and over 1500 wounded. Our information suggests that the real numbers are at least twice what India has publicly admitted. The Indians actually ran short of coffins, owing to an unexpectedly high number of casualties;

The number of Indian casualties proves the fighting prowess and professionalism of the officers and men of the Pakistan Army

our army, outnumbered and outgunned, fought this conflict with great valor

கார்கில் போர் இராணுவ ரீதியில் பாக்கிஸ்தானுக்கு மிகப்பெரிய வெற்றி என்று கூறும் முஷ்ரப் அரசியல் ரீதியாக இந்தப் போர் தங்களுக்கு கிடைத்த தோல்வி என்கிறார். அதற்கு காரணம் அப்போதைய பாக்கிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் தான் என முஷ்ரப் குற்றம்சாட்டுகிறார்.

கார்கில் போர் திட்டமிடல் குறித்து தனக்கு எதுவும் தெரியாது என நவாஸ் ஷெரீப் அப்பொழுது கூறியது பொய் எனக்கூறும் முஷ்ரப் அவருடன் இது குறித்து விவாதித்த தேதிகளையும் குறிப்பிடுகிறார். பாக்கிஸ்தான் இராணுவத்தின் இந்த மிகப் பெரிய வெற்றியை கூட தன்னால் சரியாக வெளிப்படுத்த முடியாத அளவுக்கு அப்போதைய அரசியல் தலைமை இருந்ததாக நவாஸ் ஷெரீப் மீது குற்றம்சாட்டுகிறார். அது போலவே இந்தியா சர்வதேச ரீதியாக இந்தப் பிரச்சனையை சாதுரியமாக கையாண்டு தங்களுக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தியது என ஒப்புக்கொள்கிறார்.

இந்திய ஊடகங்கள் இந்தியாவின் கார்கில் வெற்றி குறித்து மிகைப்படுத்தியே செய்தி வெளியிட்டது என்று முஷ்ரப் கூறுகிறார். ஆனால் பாக்கிஸ்தானில் பாக்கிஸ்தான் இராணுவத்திற்கு ஆதரவான ஒரு நிலைப்பாட்டை பாக்கிஸ்தானின் அரசியல் தலைமை உருவாக்க தவறி விட்டதாக முஷ்ரப் சாடுகிறார்.

முஷ்ரப் இந்த புத்தகத்தில் கூறுவது உண்மையா ? இந்தக் கேள்வியை பல ஊடகங்கள் எழுப்பிக் கொண்டிருக்கின்றன.

தான் கூறும் அனைத்தும் உண்மை என வாதிடுகிறார் முஷ்ரப்

whatever I have said in the book is the truth, the whole truth and nothing but the truth, and I stand by it."

பாக்கிஸ்தானின் கார்கில் திட்டம் முழுவதும் இந்தியப் பிரதமர் வாஜ்பாய் லாகூருக்கு மேற்க்கொண்ட பஸ் பயணத்திற்கு பின்பாக பாக்கிஸ்தானுடன் ஒரு சுமூக உறவை உருவாக்க இந்தியா முயற்சித்துக் கொண்டிருந்த தருணத்தில் நடைபெற்றது என்பதை இந்த அத்தியாயத்தின் எந்த இடத்திலும் முஷ்ரப் கூறவேயில்லை. அது தவிர கார்கில் பிரச்சனை காஷ்மீர் பிரச்சனையை உலக அரங்கில் கொண்டு செல்வதற்கு மேற்கொள்ளப்பட்ட ஒரு முயற்சி என்பதாக தான் இது வரை இந்திய ஊடகங்களும் பிற நாட்டு ஊடகங்களும் கூறிவந்தன. ஆனால் தங்கள் மீது இந்தியா தாக்குதல் தொடுக்க திட்டமிட்டதன் எதிர் நடவடிக்கை தான் இந்த தாக்குதல் என்றும் தங்களின் கார்கில் நடவடிக்கை அதை முறியடித்து விட்டதாகவும் முஷ்ரப் கூறுகிறார்.

Indian's planned offensive was preempted

முஷ்ரப்பின் இந்தக் கருத்து இதுவரையில் வெளிவராத ஒரு புதிய நிலைப்பாடு. முஷ்ரப் சொல்வது உண்மையா ? தெரியவில்லை

பாக்கிஸ்தான் இராணுவத்தின் பெருமையை பறைச்சாற்றும் முஷ்ரப், இந்த போர் நடந்த சமயத்தில் இந்தப் பிரச்சனைக்கும், பாக்கிஸ்தான் இராணுவத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை என்று தான் கூறி வந்தனர்.

இன்னும் சொல்லப் போனால் இந்தப் போரில் கொல்லப்பட்ட பல பாக்கிஸ்தான் வீரர்களின் சடலங்களை பாக்கிஸ்தான் ஏற்க மறுத்தது. அவர்களுக்கு இந்திய இராணுவமே ஒரு போர் வீரனுக்கு கொடுக்க வேண்டிய இறுதிமரியாதையை முஸ்லீம் முறைப்படி கொடுத்தாக அப்பொழுது ஹிந்துவில் படித்த ஞாபகம் இருக்கிறது. இந்திய ஊடகங்கள் இதை மிகைப்படுத்தி கூறியிருக்க வாய்ப்பு இருக்கிறது. என்றாலும் தொடர்ச்சியாக இந்தப் போரில் தங்கள் இராணுவம் ஈடுபடவில்லை என்று பாக்கிஸ்தான் கூறிவந்ததை இந்தப் புத்தகம் நிராகரிக்கிறது. ஆனால் இதற்கு தான் காரணமில்லை என்றும் அரசியல் தலைமை தான் காரணம் என்று கூறி முஷ்ரப் தப்பித்து கொள்கிறார். ஒரு இராணுவ தளபதியாக தன் படையின் வெற்றியை தன்னால் சரியாக வெளிப்படுத்த முடியாத சூழ்நிலையில் இருந்ததாக முஷ்ரப் கூறுகிறார்.

இந்தப் புத்தகம் இந்திய இராணுவத்தின் வெற்றி குறித்து எழுப்பியிருக்கும் சில கேள்விகள் சரியானவை அல்ல என்றே எனக்கு தோன்றுகிறது. இதற்கு முக்கிய காரணம், இந்தியப் படைகளுக்கு மிகவும் பாதகமான சூழ்நிலையில் தான் இந்தப் போர் நடைபெற்றது. பாக்கிஸ்தான் இராணுவமும், அவர்களின் ஆதரவு பெற்ற தீவிரவாதக் குழுக்களும் இந்திய இராணுவத்தை வலுவாக தாக்கக்கூடிய சாதகமானப் பகுதிகளை தான் ஆக்கிரமித்து இருந்தனர். முதலில் விமானப்படை மூலமான தாக்குதல் தொடங்கி அது பெரிய வெற்றியை கொடுக்காத நிலையில் தான் இந்தியா தனது அடுத்த தாக்குதலை தொடுத்தது. பாக்கிஸ்தான் ஆக்கிரமித்து இருந்த சில நிலைகள் 10 முதல் 20 பேர் வரை மட்டுமே ஆக்கிரமித்து இருந்தனர். அந்த கடுமையான மலைப்பகுதியில், குளிரில் இந்திய இராணுவத்தினர் கடும் சவாலுடன் தான் இந்தப் போரினை எதிர்கொண்டனர் என்பதை மறுக்க முடியாது. சில குறிப்பிடத்தக்க வெற்றிகளையும் பெற்றே இருந்தனர்.

ஆனால் முஷ்ரப் கூறுவது போல அது பெரிய வெற்றி இல்லையா ? - did achieve some success, which i would call insignificant...
தெரியவில்லை

இந்தப் போருக்கு பிந்தைய நிகழ்வுகள் குறித்து முஷ்ரப் எழுதவேயில்லை. பாக்கிஸ்தான் இந்தப் போருக்கு பின்பு அரசியல் குழப்பத்திற்குள்ளானது. நவாஸ் ஷெரீப், முஷ்ரப் இடையேயான பிரச்சனை வலுத்து, மோதல் ஏற்பட்டு இராணுவப் புரட்சி மூலம் முஷ்ரப் அதிபரானார். பாக்கிஸ்தான் மீது கடுமையான நிர்பந்தம் உலக நாடுகளால் ஏற்படுத்தப்பட்டது.

ஆனால் இந்தியாவில் இந்தப் போருக்கு பின், ஊசலாடிக் கொண்டிருந்த கூட்டணி ஆட்சி முடிவுக்கு வந்து வாஜ்பாய் தலைமையில் ஒரு வலுவான அரசு உருவானது. பொருளாதார ரீதியிலும் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் ஏற்பட்டன.

இவ்வாறான நிலையில் தான் முஷ்ரப் இராணுவ ரீதியில் மட்டும் இந்தப் போர் பாக்கிஸ்தானுக்கு வெற்றி என்கிறார். கார்கில் போர் பாக்கிஸ்தான் இராணுவ வரலாற்றில் ஒரு முக்கிய மைல்கல் என்கிறார் முஷ்ரப்

Considered purely on military terms, the Kargil operations were a landmark in the history of Pakistan Army. As few as few batallions in support of the freedom fighter groups, were able to compel the Indians to employ four divisions....

இந்தப் போரின் பலன் என்ன ? முஷ்ரப்பே கூறுகிறார்

I would like to state emphatically that whatever movement has taken place so far in the direction of finding a solution to Kashmir is due considerably to the Kargil conflict

இந்த புத்தகத்தின் மற்றொரு முக்கிய விடயம் காஷ்மீர் குறித்து முஷ்ரப் முன்வைத்த out-of-box solution. இது குறித்து முன்பே நான் ஒரு பதிவு எழுதியிருக்கிறேன். பத்ரியும் ஒரு கட்டுரை எழுதியிருந்தார்.

கார்கில் குறித்து முஷ்ரப் கூறிய கருத்துக்களை என்னால் முழுமையாக ஏற்க முடியாவிட்டாலும், காஷ்மீர் குறித்த முஷ்ரப்பின் கருத்து இது வரை இந்தியா-பாக்கிஸ்தான் இரு நாட்டைச் சேர்ந்த எவரும் முன்வைக்காத உருப்படியான திட்டம் என்றே நினைக்கிறேன். அவரின் இந்த திட்டத்தை சில மாற்றங்களுடன் நடைமுறைப்படுத்தினால் அது காஷ்மீர் பிரச்சனைக்கு ஒரு நிரந்தர தீர்வாக அமையக்கூடும்.

அது குறித்து அடுத்தப் பதிவில் எழுதுகிறேன்

கட்டுரையின் அடுத்தப் பகுதி - In the Line of Fire - Nuclear Proliferation

Excerpts from "In the Line of Fire" by Pervez Musharraf
Published by FREE PRESS
Copyright 2006 by President Pervez Musharraf


26 மறுமொழிகள்:

ஜயராமன் said...

மிக அருமையான கருத்தாய்வு.

விளக்கமாகவும், அதே சமயம் எந்த பக்கமும் சாயாமலும் அழகாக உள்ளது.

நான் தங்கள் கருத்துகளை ஒப்புகிறேன்.

மிக்க நன்றி

11:22 PM, September 29, 2006
Machi said...

/இவ்வாறான நிலையில் தான் முஷ்ரப் இராணுவ ரீதியில் மட்டும் இந்தப் போர் பாக்கிஸ்தானுக்கு வெற்றி என்கிறார். கார்கில் போர் பாக்கிஸ்தான் இராணுவ வரலாற்றில் ஒரு முக்கிய மைல்கல் என்கிறார் முஷ்ரப்/

முஷாரப்பே இராணுவம், என்வே முஷாரப்பின் வெற்றி இராணுவ வெற்றி, அவருக்கு இது மைல் கல் அதனால் இராணுவத்துக்கு மைல் கல்.
இல்லையெனில் அவர் பாக்கிஸ்தான் அதிபராகி இருக்க முடியுமா? அதனால் அவர் சொல்வதை ஒத்துக்கொள்ளதான் வேண்டும்.

11:37 PM, September 29, 2006
Anonymous said...

as usual Vajra put his hatred before the rational thinking. Vajra, have you read the book? Whoever or whatever Musharraf is, he is the best bargain that Pakistan or India or any other country can get in the islamic hotbed of Pakistan in this religious fundamentalist environment. The problem with Vajra, Selvan, Samudra and Calgary Siva is that they think spewing venom on anything or anyone they believe is equal to the patriotism.

10:47 AM, September 30, 2006
வஜ்ரா said...

//
as usual Vajra put his hatred before the rational thinking. Vajra, have you read the book? Whoever or whatever Musharraf is, he is the best bargain that Pakistan or India or any other country can get in the islamic hotbed of Pakistan in this religious fundamentalist environment.
//

thanks,

This is exactly what he wants us to believe in. The problem is i dont and you do. And does that mean that i only have hatered towards Mush?

Is not having a liking and disagreeing means hatered then so be it.

Did i read the book?

Frankly, No. I merely second the opinion of B. Raman retd. Cabinet seceretary, who wrote about the book in Outlook india.

//
The problem with Vajra, Selvan, Samudra and Calgary Siva is that they think spewing venom on anything or anyone they believe is equal to the patriotism.
//

The problem is with you my friend, Nobody here spewed venom. The problem is you cannot take disagreement with your ideas (or mush's fantasies for that matter).

11:37 AM, September 30, 2006
Amar said...

//Indian's planned offensive was preempted

முஷ்ரப்பின் இந்தக் கருத்து இதுவரையில் வெளிவராத ஒரு புதிய நிலைப்பாடு. முஷ்ரப் சொல்வது உண்மையா ? //

சசி, ஒரு வேளை நாம் வேறு தாக்குதல் ஒன்றுக்கு தயாராகி கொண்டு இருந்தால் நமது வீரர்கள் acclimatise ஆகி கொண்டு இருந்திருப்பார்கள்.

கார்கில் போரின் போது அவசர-அவசரமாக தான் வீரர்கள் போர் முனைக்குள்ளே அனுப்பட்டனர். தேவையான நாட்கள் acclimatise செய்ய கூட அவகாசம் கிடைக்கவில்லை.

ஆயுதங்கள் கூட அவசர-அவசரமாக இறக்குமதி செய்யபட்டன.

//இந்திய ஊடகங்கள் இதை மிகைப்படுத்தி கூறியிருக்க வாய்ப்பு இருக்கிறது.//

அந்த சமயம் காஷ்மீரில் பனியாற்றிய அதிகாரிகளுடன் பேசியதில் இதில் எதுவும் மிகைபடுத்தி சொல்லவில்லை என்று தான் தெரிகிறது.

எல்லைக்கு அந்த பக்கம் NLI குடும்பத்தினர் ஒரு mini revoltஐயே நடத்தினர் என்பது பலரும் அறியாதது.

ஊடகங்கள் நீங்கள் நினைக்கும் அளவுக்கு அறிவாளிதனமாக செயல்படுவதில்லை என்பது பாதுகாப்பு விஷயங்களை உன்னிப்பாக கவனிக்கும் பலருக்கும் தெரிந்த சோகமான உன்மை.You're just over-estimating the idiots!

//முதலில் விமானப்படை மூலமான தாக்குதல் தொடங்கி அது பெரிய வெற்றியை கொடுக்காத நிலையில் தான் இந்தியா தனது அடுத்த தாக்குதலை தொடுத்தது.//

முதலில் எந்த அளவுக்கு எதிரிகள் ஊடுருவி இருந்தனர் என்பதே ரானுவம் கண்டுபுடிக்க முடியவில்லை.அதை கண்டுபிடிப்பதற்க்கு முன்னர் ஏகபட்ட வீரர்களை இழந்துவிட்டோம்.

பின்னர் தான் விமானப்படை ஈடுபடுத்தபட்டது.விமானப்படையின் பயன்பாடு இந்த போரில் மிக முக்கியமான ஒன்று.

Muntho Dalo சப்ளை மையங்களை தாக்கியது போன்ற சில நடவெடுக்கைகள் எதிரிகளை மிக மோசமாக பாதித்தன.

மேலும் கார்கில் என்பது இன்று நேற்று தீட்டபட்ட திட்டம் அல்ல...என்பதுகளிலேயே அப்போதைய ஆட்சியாளர்கள் தீட்டிய திட்டம் தான் அது.அதன் பெயர் சரியாக நினைவில் வரவில்லை.வந்ததும் சொல்கிறேன்.


//எவரும் முன்வைக்காத உருப்படியான திட்டம் என்றே நினைக்கிறேன்//

அந்த மாதிரி திட்டம் செயல்படுத்த முஷாரப் நினைத்தால் கூட முடியாது.

ஷியா-சன்னி சண்டைகளும், ஓசாமாவின் ஆட்களுடன் சேர்ந்து முஷாரப் 1989 ஆம் ஆண்டு நடத்திய படுகொலைகளும் இன்னும் அந்த பக்கம் உள்ள மக்களால மறக்கபடவில்லை.

ஆகவே utopian ஐடியாக்களை விட்டுவிடுவது உத்தமம் என்று தோன்றுகிறது.

முஷாரப்பை போன்ற கோமாளியை நம்பி எதையும் செய்ய முடியாது. சும்மா பேச்சுக்கு வேண்டுமானால் நன்றாக இருக்கும்.

12:35 PM, September 30, 2006
Anonymous said...

Very good insight Sasi. Thanx for tht :)

2:41 PM, September 30, 2006
Anonymous said...

Vajra, you are saying,"The problem is you cannot take disagreement with your ideas (or mush's fantasies for that matter)." Yet I wonder howelse can the bloggers think of you when you flatly claim "In the line of fire = Musharraf's Mein kampf" even without reading a word from the book.

Musharraf has not been selected from the democratic process, but he seems better than any other corruptive and idiotic ruler Pakistan has seen in the recent history. Also, whatever he is, he is not a late night comedian as Selvan wants to portray. His response on Armitage's outburst is more political evasion than marketinghis book. He responded first when he had the joint conference with Bush. Armitage is known for his colorful arrogant words and sumo wrestler appearence. No wonder he was the onegossipping on Valarie Plame. See how you friend Samudra retorts. All he just wants is to confirm his story from sources that have no other way to claim for the propaganda reason.

3:19 PM, September 30, 2006
கால்கரி சிவா said...

//The problem with Vajra, Selvan, Samudra and Calgary Siva is that they think spewing venom on anything or anyone they believe is equal to the patriotism. //

Thanks for remembering me.

Yes, I spew venom on Musharaf because he deserves only it.

You may forgive enemies, I don't. I am ordinary person not a saint or intellectual like you.

Once again thanks for remembering me

3:21 PM, September 30, 2006
Unknown said...

//The problem with Vajra, Selvan, Samudra and Calgary Siva is that they think spewing venom on anything or anyone they believe is equal to the patriotism.//

பாதகம் செய்பவரை கண்டால்
நீ பயங்கொள்ளலாகாது பாப்பா
மோதி மிதித்து விடு பாப்பா
அவர் முகத்தில் உமிழ்ந்து விடு பாப்பா

சொன்னவர் மகாகவி பாரதி.என்னால் முடிந்தவரை அதை செயல்படுத்துகிறேன்.

நன்றி
செல்வன்

3:30 PM, September 30, 2006
வஜ்ரா said...

//
Yet I wonder howelse can the bloggers think of you when you flatly claim "In the line of fire = Musharraf's Mein kampf" even without reading a word from the book.
//

It was the title of article by B. Raman in outlook india. It was not my original idea to call it like that. I have been reading B. Raman's articles for few years now. He seem to judge Mush quite well. Thats why i said so.

There is no reason to give such a hype to Mush's book. This will most likely go down in history as another Dictator's another autobiography.

Your opinion about Mush seems to be very good. But, i am sorry to say that i do not share your opinion and i sincerely do no believe in millitary dicatators and terrorist supporters and probable liers.

3:41 PM, September 30, 2006
Amar said...

//Whoever or whatever Musharraf is, he is the best bargain that Pakistan or India or any other country can get in the islamic hotbed of Pakistan in this religious fundamentalist environment. //

அன்புள்ள அனானி.

முஷாரப் தான் நமது பெஸ்ட் பெட் என்பதை நான் ஏற்றுக்கொள்ள மறுக்கிறேன்.

ஏன்னெனில் அந்த மனிதரின் service recordகளை ஆராயந்த சிலரின் கருத்துகளில் இருந்து அந்த ஆள் மிக பெரிய கோழை, தன்னை காப்பாற்றிகொள்ள என்ன வேண்டுமானாலும் செய்வான், ஒரு காலத்தில் பின் லேடன் ஆட்களுடன் ஷியா முஸ்லிம்களை இனத்துடைப்பு செய்ய முயற்ச்சி செய்தவன், செய்து கொண்டு இருப்பவன் என்று தெரிந்துகொண்டேன்.

இன்றுவரை ஸ்கர்து பகுதியில் எல்லையை இந்தியர்களுக்கு ஏன் முஷார்ப் திறந்துவிட மறுக்க வேண்டும் என்று தெரிந்தால் சொல்லுங்கள் பார்க்கலாம்.

ஒன்றும் தெரியாமல் இப்படி அனானியாக கமெண்ட் அடிப்பது சுலபம்.

பாகிஸ்தான் இரானுவத்தில் இந்த மனுஷன் அதிகாரத்திற்க்கு வந்த பிறகு இரண்டு major insubordinationகள் நடந்துள்ளன தெரியுமா? ஒன்று கஷ்மீரில் அடுத்தது வானாவில்.(அல்லது வஜிர்ஸ்தான்?)

பாகிஸ்தானி நார்தர்ன் லைட் இன்பண்டரி(NLI) வீரர்களை, கார்கில் போரில் எனது நாட்டு வீரர்களை எதிர்த்து போராடி மடிந்தவர்களை நான் மதிக்கிறேன் - மரியாதை செய்கிறேன்.


இதில் கன்மூடித்தனமான தேச பக்தியோ, இஸ்லாமின் மீது வெறுப்போ எங்கு வந்தது?

3:47 PM, September 30, 2006
வஜ்ரா said...

//
Whoever or whatever Musharraf is, he is the best bargain that Pakistan or India or any other country can get in the islamic hotbed of Pakistan in this religious fundamentalist environment.
//

This is what B.Raman said in his article in outlook. That Mush wants the world to believe that he is the best bet that the worlds got against terrorists.!! And you believe so. Sorry friend, i guess not even Tamizsasi would share your this opinion.!!


If you compare bad and worst, bad looks better.!! Mush is bad.

3:48 PM, September 30, 2006
Anonymous said...

The first anonymous said rightly that at present there can be no better alternative than Musharraf in Pakistan with global terrorism seeping over from the middle east, Afghanistan and so on - at present Pakistan is more of a buffer than an antagonist in a relative way - proximity of Musharraf to the west is more beneficial to us than to himself and Pakistan, in a way. Musharraf and his dictatorial idiocies are to be condemned, for sure - but as rightly mentioned by the previous anonymous, people like Samudra and co have a typical neocon black/white approach to this issue, and they\'ll be happy if Pakistan is buried once for all - simple logic - I\'m Indian, I hate Pakistan - I hate Musharraf. These people never get the bigger picture, and I guess, totally lack a sense of objectivity for a long-term protocol for managing India - this has been the bane of our politicians, and what else can we expect if average citizens want to think of it in the same way? If Musharraf is liquidated and Pakistan slips into chaos - we\'ll be screwed big time handling that mess, than handling Musharraf and Pakistan in the present scenario.

3:50 PM, September 30, 2006
Amar said...

//All he just wants is to confirm his story from sources that have no other way to claim for the propaganda reason. //

Friend, I post nothing that is not available in the public domain. I cannot help if you choose to be ignorant.

Thanks.

3:53 PM, September 30, 2006
Anonymous said...

Vajra I know what you gave is very close to Raman's commentary or review or whatever you can call it. The problem is who B. Raman is. Do a little Googling and see what he wrote and writes about the countries around India. He is more of an indian intelligence officer and defence analyst filled with patriotism like you have. He only wants to asserts his side of story like Samudra's friendsly Indian officers gave rather than doing an impartial analysis. He mostly want to give his piece of diplomacy rather than analysing the situation. He does not care about how inconsistent and illogical he is in two pieces he writes in the same time. If you doubt, go and read what his recent writings on Sri Lankan problem. in The Hindu, his own South Asian Analysis Group (SAAG) and other e-zines. I do not want to convince you nor I defend Pakistani President for anything. I do not support him for no reason like you blindfoldly defend state of Isreal.

My sole point is that some of you hate anything without questioning yourselves if oyu think they are against your interests.

Selvan, please do not insult Bharathi by cheaply selling for your defence. You can use the same lines for any army officer who hates and hurts innocent opponents. Remember Manorama of Manipur? As a philosopher, do not become a Martin Heidegger to defend Hitler, Please ;-)

Calgary Siva, ok, your attendance is counted. Musharraf is not an arab,. Yet, you hate him. Intriguing sir ;-)

4:16 PM, September 30, 2006
Anonymous said...

I do not support him for no reason like you blindfoldly defend state of Isreal.
.


State of Israel is got better defence than Vajra shankar.

5:14 PM, September 30, 2006
Unknown said...

/Selvan, please do not insult Bharathi by cheaply selling for your defence. You can use the same lines for any army officer who hates and hurts innocent opponents. Remember Manorama of Manipur? As a philosopher, do not become a Martin Heidegger to defend Hitler, Please ;-)/

I did not defend the army officers who raped manorama of manipur.Bharathi's lines apply to them as well.Manorama too is an Indian and how is she inferior to any army officer?True justice should be given to her and every Indian will support her.

NetRikkaN thirappinum kuRRam kuRRamee

Neither am I a heidegger and nor India is a hitler.Musharraf is a moron and there is nothing wrong in calling a spade as a spade.

Thanks
selvan

p.s:FYI, Heidegger is well respected in philosophical world.They dont evaluate a person based upon the fact that whether he isa fascist,commie,nazie,or capitalist.

epporuL yaaryaarvaay keetpinum apporuL meypporuL kaaNpathee philosophy

5:19 PM, September 30, 2006
வஜ்ரா said...

//
I do not support him for no reason like you blindfoldly defend state of Isreal.

My sole point is that some of you hate anything without questioning yourselves if oyu think they are against your interests.
//

I support State of Israel's policy against terrorists. And you defend terrorists. There is huge difference between the two.

How it will be if i put a rhetoric on that...

Some of you (usually liberal leftists) love to hate things that do not conform to your world views and call rest of the "masses" who question you as Neo-cons!!

India's interests are paramount, not Pakistan's.

If Pakistan is in trouble with its terrorist outfits, it is only reaping its harvest. If Terrorists take control of that country, US will nuke it to stone age. Musharraf in Pakistan is more of a protector of US interest in this region.

By claiming Musharraf as the Messiah of Peace you are indirectly supporting US hegemony over Indian sub-continent.!!

5:28 PM, September 30, 2006
Anonymous said...

Vajira, kid! where did I claim Musharraf is dove of peace? He is not a dove with olive leaf nor are you. Do not assume things or suffer from hearing inner voices and noises. All I simply say is without reading his book calling Musharraf moron and clown only because he is the President of an enemy state is not fair and correct.

Selvan, your argument is interesting. Have you given a thought on what Manorama wanted and why she got suffered? Only by asserting your belief of her Indianness, the reality could not be so. People in Manipoor were not and are not treated as other Indian citizens. Else, the problems can not be in this magnitude. Further I'm not saying India is Hitler, but some of the people, who defend India even in its ugly side are. Well, I know the importance of Heidegger in the philosophical world, but your defence of him by saying, "They dont evaluate a person based upon the fact that whether he isa fascist,commie,nazie,or capitalist" does not hold water. The personality of man or woman is the colloection of his or her inner characters.

Pakistan train terrorists against India, so did and do India against Pakistan and Sri Lanka. Why do you think Pakistan's Punjab is in turmoil? RAW is nothing less to ISI. While India blames Pakistan on recent Mumbai bombs on Pakistan ISI, Pakistan blames Indian RAW for the bombing of its ambasidor's car in Colombo. Neither Indian national media nor people like B. Raman who are ready to blame terrorists from other countries do not shed a light on such news and views to their readers.

Patriotism is fine, but the blind partiotism with no questions is the resort of a rogue. Do you know where the problem is. We, the middle class kids never want to look the life or reality beyond what is taught by our teachers or is told by our parents or is published by our national media. Happy hullucination in the name of patriotism and terrorism. You do not even have the dignity for understanding how the Palestinians could feel when a state of Israel was artificially constructed and still humiliate them with the power of weapons and foreign support. However I have a good hinch on your, Calgary Siva's and Samudra's psyches on why you try to portray as patriots and nationalists. Any minority around majority wants to do show like Israel in middle east do. Yet, Israel has a solid base of left liberals. You may want to know this information, if you haven't noticed it already. I better stop here.

8:56 PM, September 30, 2006
Unknown said...

Anonymous,

Pakistan sends trained terrorists across the whole globe.Adequate proof for this has been given by intelligence ageincies all over the world.Pakistani sposnored terrorists create havoc in europe and usa and India and even the government of pakistan has acknolwedged this.

Bombings inside pakistan are caused by its own terrorist groups who turned against it when pakistan started supporting usa in war against terror.So blaming it against india wouldnt cut much ice with the international community.The whole world knows who sponsors terrorism and who sends terrorists across borders.

Obviously pakistan will say RAW is behind everything.But except pakistan nobody says so.But whole world knows that pakistan sends terrorists across the whole world.So comparing india and pakistan and saying both are same is totally divorced from reality.We are a vibrant democracy and they are nothing but a failed,corrupt,undemocratic and moronic state.

And I dont know much about Israel issue.So I am unable to reply to your questions regaurding Israel.I hope that bloggers who oppose or support Israel would answer your questions.

10:33 PM, September 30, 2006
Anonymous said...

Selvan you seem to see everything black and white, or like Mr. Bush, "Our good vs. their evil." This is not what I expected from a philosophy grad student.

One can guide the eye-blind, but not the mind-blind. Self-denial and self-gloating make the dual barrel gun good enough for self mortal infliction.

You made your point. I did prepare for myself to believe the existence of ostriches in middle-east, but not in Colorado. ;-) Whatelse to say! So be it.

10:53 PM, September 30, 2006
Unknown said...

//Selvan you seem to see everything black and white, or like Mr. Bush, "Our good vs. their evil." This is not what I expected from a philosophy grad student.//

Dear Friend,

I called terrorists and terrorists.Whole world calls them like that.If ediucation prevents us from calling call people who bombed mumbai, kovai, madrid, london and new york as terrorists,then such education is of no use.

I dont mindlessly support anybody.If it's a comparision between India and Pakistan,coming to a decision as of whom to support isnt that much difficult.What we need is an open mind and sincere search for truth.

Entire civilized world calls pakistan as a threat to global peace.So I am unable to understand why I shouldnt call them so

11:25 PM, September 30, 2006
சுவாமி said...

தமிழ் சசி,
நன்றி. புத்தகத்தில் நான் தெரிந்து கொள்ள விரும்பியது மூன்றுதான்; கார்கில் போர், அணுகுண்டு, coup deta. Coup பற்றியும் எழுதி விட்டீர்கள் என்றால் போதும். புத்தகத்தை வாங்கி, அதனால் முஷரப்பிர்க்கு royalty சேருவதை தவிர்த்து விடுகிறேன். அவருடைய நான்கு அம்ச காஷ்மீர் திட்டத்தில், உங்களைப் போல் எனக்கு உருப்படி என்ற நம்பிக்கை இல்லை. அட, நல்லா அமைதியா நடைமுறைப்படுத்த கூடிய திட்டமா இருக்குதே என்று முதலில் பட்டாலும், there is an agenda. "Northern areas நாங்க வச்சுக்கிறோம். லடாக், ஜம்மு நீங்க வச்சுக்குங்க. Azad Kashmir, Srinagar ரெண்டையும் independentஆ விட்டுரலாம். எனக்கும் வேண்டாம். உங்களுக்கும் வேண்டாம். நிச்சயம் மத அடிப்படையில் pakistan பக்கம்தான் Srinagar பின்னாடி சாய்வாங்க. Politically, economically, internationally. இப்போ Azad Kashmir மாதிரி. அப்ப அடுத்த புத்தகம் எழுதிக்கிறேன்". Sarcasticஆ எழுதலை. His is a military mind.
அனானிமஸ் ரொம்ப மேம்போக்கா எழுதற மாதிரி இருக்கிறது. செல்வனும் seriousஆ argue பண்னிட்டு இருக்காரு.
பி.கு: முஷரப் Jon Stewartஓட Daily Showவில் வந்த்தை பார்த்தீர்களா? நல்லா இருந்தது. ஒசாமாவும் புஷ்சும் பாக்கிஸ்தானில் தேர்தலில் நின்றால் யார் வெற்றி பெறுவார்கள் என்ற கேள்விக்கு ஒரு நிமிடம் embarass ஆகி பின் 'They both will loose miserably' என்ற போது he was almost likeable!

சுவாமி

1:54 AM, October 01, 2006
வஜ்ரா said...

anony friend,

//
Musharraf is, he is the best bargain that Pakistan or India or any other country can get in the islamic hotbed of Pakistan
//

This is what you said. And i said i do not agree.

//
where did I claim Musharraf is dove of peace? He is not a dove with olive leaf nor are you.
//

and now you say this. My hearing and seeing ability by God's grace is fine. Is your mental ability fine?

I did not say he is a moron or a clown although i partly agree with that idea.


//
Any minority around majority wants to do show like Israel in middle east do. Yet, Israel has a solid base of left liberals. You may want to know this information, if you haven't noticed it already. I better stop here.
//

Sure anonymous, friend, They have a solid Left Liberals amoung themselves. But these left liberals are true to the salt they eat. The mainstream political leftists who have thrown away marxist leaning and embraced only socialist philosophy are in ruling coalition now. All denominations of Leftists are Israeli first. They accept the reality that recognition of state of israel amoung arab world is the first step towards peace. They are as much patrioitic as any secular apolitical person.

The marxist leftists, supporters of Palestinian cause, are not in mainstream politics. They hardly win any seats. Even the arabs do not vote for them. They whine are cry hoarse all the time. Even during the recent hizbullah war the traditional leftist strong hold Haifa was bombed by Hizbullah and in that a virulent anti-israel newspaper office run by "liberal leftist" was flattened. The editor went silent.\


//
Self-denial and self-gloating make the dual barrel gun good enough for self mortal infliction.
//

Ah! Tell me more about this...particularly self denial part.

1:58 AM, October 01, 2006
Amar said...

Dearest Anonymous,

Who in this world writes impartial analysis?

Let me tell you that the longer Musharaf remains in power the more will be the chaos he leaves behind. Be it in Balochistan, Sindh or Gilgit.

A Baloch grand jirga has just decided to move the ICJ against Pak. Shia-Sunni issues are at a high. Shia's in Kashmir are very unhappy(since Kargil). Sindhi's are a little unhappy with the irrigation projects.

He's sleeping with Taliban in Waziristan and fighting the same people outside!!!

You're just repeating what the American State Department throws at gullible people!

//Why do you think Pakistan's Punjab is in turmoil?//

Again, I cannot help if you choose to remain ignorant.

Pakistani Punjab is the most prosperous part of their country.

//We, the middle class kids never want to look the life or reality beyond what is taught by our teachers or is told by our parents or is published by our national media//

With all due respect spare us your nonsense please.

One cannot help if you're under the impression that one can be "moudled" into a thinking by media or teacher or any other entity.

I've seen enough reality and dont particularly see the dire need for a certification from the likes of you.

As for you comments on RAW et all, much public literature exists on previous operations in Sri Lanka.

Advise us on how Indian intel agencies mass murder Pakistani civillians, will you?

3:13 AM, October 01, 2006