Tuesday, October 10, 2006

வடகிழக்கு மாகாணங்களில் தனி ஆட்சி

இன்று CNN-IBN பக்கங்களை மேய்ந்து கொண்டிருந்த பொழுது ஒரு செய்திப்படம் பார்த்தேன். வடகிழக்கு மாநிலமான மணிப்பூரின் சிலப் பகுதிகள் இந்தியாவின் கட்டுப்பாட்டில் இல்லை என்பதும் ஒரு தனி இராணுவம் (மணிப்பூர் மக்கள் படை) சில இடங்களை தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருக்கிறது என்பதும் தான் அந்தச் செய்தி.

அஸாம் குறித்த பிரச்சனையை நான் அறிந்திருக்கிறேன். அது தவிரவும் என்னுடைய நண்பன் ஒருவன் அசாமைச் சேர்ந்தவன் என்ற வகையில் அங்கிருக்கும் பிரச்சனையின் சில யதார்த்த ரீதியிலான உண்மைகளை அறிந்திருக்கிறேன். பொருளாதாரம், கல்வி, அடிப்படைவசதிகள், வேலைவாய்ப்பு போன்ற காரணங்களால் தான் அசாமில் தீவிரவாதம் வளர்ந்தது. வடக்கிழக்கு மாகாணங்கள் இந்திய அரசியல்வாதிகளுக்கு அரசியல் ரீதியாக முக்கியத்துவம் இல்லாத பகுதி என்பதால் கடந்த காலங்களில் இந்தப் பகுதிகள் புறக்கணிக்கப்பட்டதும் தீவிரவாதம் வளர முக்கிய காரணம்.

மணிப்பூர் குறித்து எனக்கு அதிகம் தெரியாது. ஆனால் இந்த செய்தினை பார்க்கும் பொழுது இது பொருளாதார காரணங்களால் மட்டும் நடக்கும் பிரச்சனை போன்று தெரியவில்லை.

CNN-IBN செய்திப்படம்

CNN-IBN செய்தியில் இருந்து சில வரிகள்

The UNLF contends that the Merger Agreement signed in 1949 between Maharaja Bodh Chandra Singh and the Advisor to the Government V P Menon, was flawed.

“From 1947 to 1948, to be precise 15 October, 1949, the day India annexed Manipur, Manipur was an independent country. That's how it all began - the conflict - the genesis of the Manipur-India conflict,” says UNLF Chairman Sanayaima.

Strangely, the man who leads Manipur's violent secessionist movement once believed in the idea of India.

“I grew up and I thought that I'm an Indian - when I was in school and I thought of myself in that environment. But when I began to grow and reach the level of college & I gradually realized that India is something different from what we are,” says Sanayaima.

Alienation drives these young guerillas

6 மறுமொழிகள்:

Machi said...

மேகாலயா, அருணாச்சலப் பிரதேசம் தவிர எல்லா வட கிழக்கு மாநிலங்களிலும் பிரிவினைவாத பிரச்சனை உண்டு. மிசோரமில் கடுமையாக இருந்தது இப்போ இல்லை.

இந்தியா என்பது பல மாநிலங்களின்/ மாகாணங்களின் கூட்டு எனவே தங்களது முக்கியத்துவம் குறைவதாக சிலர் எண்ணி அன்னியப்பட்டு போவது உண்டு.

இன்னும் அதிக உரிமைகளை மாநிலங்களுக்கு மைய அரசு கொடுக்க வேண்டும் என்பது என் எண்ணம்.
பிரச்சனை என்னவெனில் அதிகாரம் குறைவதை யாரும் விரும்புவதில்லை. உள்ளாட்சிகளுக்கு அதிக அதிகாரம் தர மாநில அரசுகள் மறுப்பதன் காரணமும் இதுதான்.

8:26 PM, October 10, 2006
Muthu said...

குழலியின் பதிவில் ஆதிரை எழுதியிருப்பதை பாருங்கள்.
மத்திய அரசு பெரியண்ணன் போல் இருக்கக்கூடாது.

இந்தியாவுடன் சோந்து இருப்பது தான் நல்லது என்று மாநிலங்களே நினைக்கும் அளவு தேசிய இந்தியாவின் கொள்கைகள் இருக்கவுண்டும்.
இருக்கிறதா?

9:18 PM, October 10, 2006
வஜ்ரா said...

So whats your take on it ?

Do Indians have to give Sanayaima his manipur?

Please give your ideas on these as well.

Everystate in India would want to be separate country if some goons feel that they can get rich by that.

Please see this Wikipedia article

There are separatist movements all over the world. It is not an Indian phenomenon. What matters is Greater common good.

//
இந்தியாவுடன் சோந்து இருப்பது தான் நல்லது என்று மாநிலங்களே நினைக்கும் அளவு தேசிய இந்தியாவின் கொள்கைகள் இருக்கவுண்டும்.
இருக்கிறதா?
//

தேசியக் கொள்கைகள் மானிலங்களிலிருந்து தேர்ந்தெடுக்கப் படும் அரசியல் பிரமுகர்களால் தான் வகுக்கப் படுகின்றது. அப்படி நாம் தேர்ந்தெடுப்போர் பிரிவினைவாதிகளுக்கு வேண்டப்பட்டவர்களாகவும், சுயமாக பிரிவினையைத் தூண்டுபவர்களாகவும் இருக்கும் பட்சத்தில் தன் தேவையை பூர்த்தி செய்துகொள்ள தேசியக் கொள்கைகளை அமைக்க மாட்டான் என்பது என்ன நிச்சயம்.?

10:38 AM, October 11, 2006
Thangamani said...

மேலதிக தகவல்களுகாக மணிப்பூர் பற்றிய எனது பழைய பதிவுகளுக்கான சுட்டிகள் இங்கு


http://bhaarathi.net/ntmani/archives/81

http://bhaarathi.net/ntmani/archives/73

6:36 PM, October 14, 2006
வஜ்ரா said...

மணிப்பூர் பிரிவினைவாதிகளுக்கு உங்கள் பதிவு ஆதரவு அளிக்கும் விதமாக எழுதப்பட்டிருக்கிறதுடன், இதற்கு முன் என்னால் எழுப்பப் பட்ட கேள்விக்கும் பதில் இன்னும் இல்லை.

உங்கள் நிலைப்பாட்டை தெளிவு படுத்தவேண்டிய பொறுப்பு உங்களுடையது திரு. தமிழ் சசி அவர்களே.

இன்னொறு கேள்வியும் எழுந்தது,

இன்று வந்த செய்தியின் படி, அருணாச்சலத்தை சீனா சொந்தம் கொண்டாடுகிறது. 1962லிருந்தே அது அப்படித்தான் செய்துவந்துள்ளது. இதில் ஒன்றும் புதிய விஷயமில்லை தான். என்றாலும்,

இதே போல் அந்த சனயாய்மாவிற்கு நாம் மணிப்பூரை தாரைவார்த்துக் கொடுத்தால் சீனா அதற்கு சொந்தம் கொண்டாடி திபத்தை அழித்தது போல் செய்யாது என்பது என்ன நிச்சயம் ?

9:26 AM, November 14, 2006
ஓகை said...

//குழலியின் பதிவில் ஆதிரை எழுதியிருப்பதை பாருங்கள்.
மத்திய அரசு பெரியண்ணன் போல் இருக்கக்கூடாது.

இந்தியாவுடன் சோந்து இருப்பது தான் நல்லது என்று மாநிலங்களே நினைக்கும் அளவு தேசிய இந்தியாவின் கொள்கைகள் இருக்கவுண்டும்.//

உங்கள் கருத்துடன் முழுமையான உடன்பாடு எனக்கு உண்டு. இது போலவே உள்ளாட்சி அமைப்புகளுக்கும் வேண்டும் என்பது என் எண்ணம்.

//இருக்கிறதா? //

இல்லை.

2:16 PM, November 16, 2006