Monday, January 15, 2007

புலிகள் பலவீனமடைந்து விட்டனரா ?

சம்பூருக்குப் பிறகு புலிகள் மற்றொரு கிழக்கிலங்கைப் பகுதியான வாகரையையும் இழக்கப் போகிறார்கள். புலிகள் தங்களது ஆர்ட்டிலரிகளையும் பிற முக்கிய தளவாடங்களையும் வாகரையில் இருந்து விலக்கி கொண்டிருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன. சிறீலங்கா இராணுவம் வாகரையை நோக்கி முன்னேறும் பொழுது புலிகள் எந்த எதிர்ப்பும் இல்லாமல் அந்தப் பகுதியில் இருந்து தங்கள் படைகளை விலக்கி கொள்வார்கள். வாகரையை இராணுவம் ஆக்கிரமித்தால் அரசியல் ரீதியாக புலிகள் சில முக்கிய சவால்களை எதிர்கொள்ள நேரிடும்.

அதில் முக்கியமானது கிழக்கிலங்கை - கருணாவின் வசம் செல்வது. கருணா பிரச்சனையின் ஆரம்பகாலங்களில் கருணா பிரச்சனையே புலிகளின் ஒரு ராஜதந்திரமோ என்ற எண்ணத்தை எனக்கு ஏற்படுத்தியது. இதற்கு காரணம் கருணா மீதான நம்பிக்கை என்பது ஒரு புறம் இருக்க, கிழக்கு இலங்கை புலிகளின் பலவீனமான பகுதியாகவும் இருந்து வந்தது. இதனை இராணுவ ரீதியாக கைப்பற்றுவது புலிகளுக்கு சவால் மிகுந்த காரியம். கிழக்கு இலங்கையை அரசியல் ரீதியாக வெற்றி கொள்வது தான் புலிகளுக்கு சரியான உத்தியாக இருந்திருக்கும்.

ஒட்டுமொத்த தமிழருக்கும் ஒரே பிரதிநிதியாக புலிகள் தங்களை முன்நிறுத்தியதற்கு எதிராகத் தான் கருணாவை இலங்கை-இந்திய உளவு நிறுவனங்கள் புலிகளுக்கு போட்டியாக உருவாக்கின. கிழக்கிலங்கை மக்களுக்கும், வடக்கு பகுதி மக்களுக்கும் காலங்காலமக நிலவிய பிரச்சனையை உளவு நிறுவனங்கள் இதற்கு பயன்படுத்திக்கொண்டன. இராணுவ ரீதியாக இவர்களின் இந்த முயற்சி எடுபடவில்லை என்றாலும் அரசியல் ரீதியாக இதனை சாதித்துக் கொள்ள தற்பொழுது முனைகின்றனர்.

புலிகள் வாகரையை இழப்பதாலோ, கிழக்கு இலங்கையில் கருணா தலைமையில் ஒரு மொம்மை அரசாங்கம் அமைவதாலோ புலிகளுக்கு இராணுவ ரீதியில் பெரிய இழப்பு ஏற்படப்போவதில்லை, என்றாலும் அரசியல் ரீதியாக இதனால் புலிகளுக்கு நிறைய நிர்பந்தங்கள் ஏற்படும்.

புலிகள் இராணுவ ரீதியில் மிகவும் பலவீனமாக இருப்பதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகிக்கொண்டிருக்கிற நிலையில், புலிகளின் நடவடிக்கைகளும் இந்த சந்தேகத்தை வலுவாக்கிக்கொண்டிருக்கின்ற நிலையில் புலிகளின் உண்மையான பலம் குறித்த கேள்விகள் எழுகின்றன. கடந்த சில மாதங்களுக்கு முன்பு சம்பூரை புலிகள் இழந்த பிறகு கூட இவ்வாறு ஊடகங்கள் எழுதிக்கொண்டிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

சம்பூரை கைப்பற்றிய பிறகு ஆனையிறவை நோக்கி சிறீலங்கா இராணுவம் நகரக்கூடும் என்றும், ஆனையிறவை கைப்பற்றியப் பிறகு அந்த பலத்துடன் பேச்சுவார்த்தைக்கு சிறீலங்கா செல்லும் என்றும் ஊடகங்களில் செய்திகள் காணப்பட்டன. DBS.ஜெயராஜ் கூட இது போன்ற கருத்தை வெளியிட்டிருந்தார். ஆனால் ஆனையிறவை நோக்கி முன்னேறிய இராணுவத்தை புலிகள் முகமாலையில் தாக்கி அவர்களுக்கு மிகக் கடுமையான தோல்வியை ஏற்படுத்தினர். அதன் பிறகு சில மாதங்கள் குறைந்திருந்த "புலிகள் பலவீனமடைந்து விட்டனர்" என்ற வாதம் இப்பொழுது மறுபடியும் ஒலிக்க தொடங்கியிருக்கிறது.புலிகள் பலவீனமடைந்து விட்டனரா என்பது புலிகளை தவிர வேறு யாருக்கும் தெரியக்கூடிய வாய்ப்பு இல்லை என்பது தான் உண்மை.

புலிகள் இது வரை தங்கள் பலத்தில் சிறிய அளவு கூட பயன்படுத்த வில்லை. ஆனால் சிறீலங்கா இராணுவம் தன்னுடைய விமானப் படையின் முழு பலத்தையும் பிரயோகித்து வருகிறது. இராணுவச் செலவு அதிகமாகிக் கொண்டே இருப்பதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகின்றன. புலிகளை அழிக்க இது தான் சரியான சமயம் என்பதாக சிறீலங்கா ஆதரவு ஊடகங்களில் செய்திகள் வெளியாகிக்கொண்டிருக்கின்றன. கிழக்கு பகுதியை கைப்பற்றியப் பிறகு வடக்கு பகுதியையும் கைப்பற்றுவோம் என்கிறார் சிறீலங்கா இராணுவ தளபதி போனஸ்கா.

நிறைய இடங்களை கைப்பற்றி அதனை தக்க வைக்க கூடிய வலிமை சிறீலங்கா இராணுவத்திற்கு உள்ளதா என்பதை எதிர்வரும் நாட்கள் தெளிவு படுத்தும்

புலிகளின் யுத்தம் குறித்து எங்கோ படித்த சில வரிகள் இவை.
கொரில்லா யுத்தம் குறித்து மாவோ இவ்வாறு கூறுகிறார்
"the enemy advances, we retreat; the enemy camps, we harass; the enemy tires, we attack; the enemy retreats, we pursue."

புலிகளின் கடந்த கால யுத்த முறை இவ்வாறு தான் இருந்தது. the enemy advances, we retreat என்ற நிலையில் இருந்து தான் முன்னேறி ஆனையிறவு உட்பட பல இடங்களை கைப்பற்றினர்.

கடந்த காலங்களுக்கும் இப்போதைய நிலைக்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளன. இம்முறையும் புலிகளால் தாங்கள் இழந்த இடத்தை கைப்பற்ற முடியுமா ?

புலிகள் பதில் தாக்குதல் நடத்தும் வரை அவர்களின் உண்மையான பலத்தை யாராலும் கணிக்க முடியாது

12 மறுமொழிகள்:

வெற்றி said...

Sashi,
First of all, wish you a very Happy Pongal!

Nice Post.
Sorry to write in English. I am out of town, I will respond to your essay in detail when I get back.

Please refer to the essay wrtten by Iqbal Athas in this week's Sunday Times.Please click here to read the article.

Thanks.

Best Regards
VK

4:27 PM, January 15, 2007
தமிழ் சசி | Tamil SASI said...

நன்றி வெற்றி

உங்களுக்கும் எனது பொங்கல் வாழ்த்துக்கள்

12:16 AM, January 17, 2007
Jayaprabhakar said...

நீண்ட நாட்களாக தங்களின் பதிவை எதிர்பார்த்திருந்தேன். ம.தி.மு.க.வை உடைக்க முயற்சித்து தோழ்வி கண்ட திமுக பற்றி, பாலா அண்ணனின் மறைவிற்கு இரங்கல் தெரிவித்தும், அவரது வாழ்க்கை பற்றியும், புலிகளிடம் ஏற்பட்டுள்ள வெற்றிடம் பற்றியும், சென்னை மாநகராட்சியில், மறுதேர்தல் பற்றியும் பதிவுகள் வரும் என எதிர்பார்த்து காத்திருந்தேன்.

--

புலிகள் ஏன் எதிர் தாக்குதல் நடத்த மறுக்கின்றனர் என்பதற்கு இணையத்தில் ஒரு நண்பர் தந்த செய்தி. எந்த அளவிற்கு உண்மை என்பது எனக்கு தெரியாது.

தற்போதைய யுத்தநிறுத்த ஒப்பந்தம் தமிழர்தரப்பும் சிங்கள தரப்பும் குறிப்பிட்ட நிலப்பரப்பைத் தமது கட்டுப்பாட்டில் வைத்திருக்கின்றனர் என்றும், அந் நிலப்பரப்புக்களுக்கு எல்லையும் உள்ளது என்பதை உறுதி செய்கிறது. இந்த ஒப்பந்தம் ஆகக் குறைந்தது 5 வருடங்களுக்கு அமுலில் இருந்தால், சர்வதேச சட்டத்திற்கமைய அப்பகுதிகள் அவர்களின் நிரந்தர பகுதிகளாக சட்டரீதியாக அங்கீகரிக்கப்படும். இக் கருத்தை நேற்று முன் தினம் ஜே.வி.பி யும் முன் வைத்த போது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. அதனால்தான் இந்த யுத்த நிறுத்தம் 5 வருடத்தை எட்டக்கூடாது என்பதற்காக ஜே.வி.பி அரசுக்கு ஆலோசனை கூறி மகிந்தரும் யுத்தத்தைத் தமிழர் தரப்பு மீது திணிக்கின்றார். அவர்களைப் பொறுத்த வரையில் எப்படியாயினும் புலிகளைச் சண்டைக்கு இழுத்து யுத்தநிறுத்தத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்பது தான் இலட்சியம். சிங்கள தரப்பின் இந்த நோக்கத்தை அறியாதது அல்ல தமிழர் தலைமை. அதனால் தான் மட்டுப்படுத்தப்பட்ட தாக்குதல்களோடு நிறுத்தி, தாம் இன்னும் யுத்தநிறுத்ததைக் கடைப்பிடிப்பதாக தமிழர் தரப்பு வலியுறுத்தி வருகிறது. என்னைப் பொறுத்த வரை சிங்கள அரசின் தந்திர வலைக்குள் வீழ்ந்து யுத்தநிறுத்தத்தை முறிக்காமல், மட்டுப்படுத்தப்பட்ட தாக்குதல்களோடு இன்னும் ஒரு வருடத்தைக் கடத்த வேண்டும். பின்னர் யுத்தநிறுத்தத்திற்கு 5 வயதானதும் எமது பகுதியைப் பிரகடனப்படுத்தி சர்வதேச அங்கீகாரத்தை கோர வேண்டும். அப்போது சில நாடுகள் எம்மை அங்கீகரிக்கும். அதன் பின் மிச்ச தமிழ்ப்பகுதிகளையும் சிங்கள ஆக்கிரமிப்பில் இருந்து விடுவிக்க வேண்டும்.

7:34 AM, January 20, 2007
வெற்றி said...

குளக்கோடன்,
/*நீங்க எழுதியது உண்மையாகிவிட்டது. வாகைரையை நாம் பறிகொடுத்துவிட்டோம் */

மன்னிக்கவும். நீங்கள் நினைப்பது மிகவும் தவறு. எமது போராட்டம் சரியான பாதையில் முன்னேறிக் கொண்டுதான் போகிறது. ஏன் என்ற விபரத்தைப் பின்னர் எழுதுகிறேன். தலைவர் பிரபாகரனின் சிறப்பே, தனது குறிக்கோளில் இருந்து விலகாமல் முன்னேறிச் செல்வதுதான்.

9:51 PM, January 20, 2007
தமிழ் சசி | Tamil SASI said...

ஜெயபிரபாகர்,

விடுமுறையில் தமிழகம் சென்றிருந்த நேரத்தில் பாலா அவர்களின் மறைவும், மதிமுக உடைப்பும் நிகழ்ந்ததால், என்னால் இணையத்தில் எழுத முடியவில்லை.

நீங்கள் கூறியுள்ள கருத்தை நானும் வாசித்தேன். ஆனால் அது குறித்து மேலதிக விபரங்கள் தெரியவில்லை

உங்கள் கருத்துக்கு நன்றி

9:54 PM, January 20, 2007
தமிழ் சசி | Tamil SASI said...

Kulakkodan,

ஆம், வாகரையை சிறீலங்கா இராணுவம் இன்று கைப்பற்றி இருக்கிறது.

புலிகள் தங்கள் படைகளை விலக்கி கொண்டுள்ளனர். இது ஒரு strategic withdrawal என்றே இராணுவ நோக்கர்கள் தெரிவிக்கின்றனர்

9:58 PM, January 20, 2007
Jay said...

வாகரை வீழ்ந்து விட்டது! பார்ப்போம் என்ன நடக்கப்போகின்றது என்று!

12:56 AM, January 21, 2007
Jayaprabhakar said...

குளக்கோடன்,
தெளிவு படுத்தியமைக்கு நன்றி. நானும் அந்த தகவலை நம்ப காரணம், அன்று சம்பூர் வீழ்ந்த போதும் சரி, இன்று வாகரை வீழ்ந்த போதும் சரி, புலிகளுக்கு பொருட்சேதமோ, உயிர் சேதமோ ஏதும் ஏற்படவில்லை. அவர்கள் தாக்கும் போதெல்லாம், நாம் அமைதி காத்து பின் வாங்கினோம். இதற்கு காரணம் ஐந்து ஆண்டுகள் காத்திருக்க வேண்டும் என்ற விளக்கம், சிறிது அர்த்தம் உள்ளது போன்றே தோன்றியது.

புலிகள் ஏன் விட்டு கொடுத்தனர் என்ற கேள்விக்கு,
1. சிங்கள இராணுவத்தினரை உள்ளே ஊடுருவ விட்டு, அவர்களை வளைத்து தாக்க வேண்டியா?
2. எளிதான வெற்றிகளை தந்து, அவர்கள் புலிகளை குறைத்து மதிப்பிட்டு, திமிராகயும், தெனாவட்டாகவும் இருக்கும் வேளையில், அவர்களை எளிதாக வீழ்த்தி, அவர்களின் நம்பிக்கையையும், மன உறிதியையும் தகர்த்திடவா?
3. போர் நிறுத்த ஒப்பந்தம், அதிகார பூர்வமாக நிறைவு பெற்ற பின், உலக நாடுகளிடம், இலங்கையின் தவறுகளை ஆதாரத்துடன் நிரூபிக்கவா?

5:46 AM, January 21, 2007
ஐந்திணை said...

நானும் தலைப்பை எண்ணிப் பயப்படுகிறேன்...நல்லதே நடக்க இறைவனைப் பிராத்திப்போம்.

1:18 PM, January 21, 2007
வெற்றி said...

சசி,
உங்களின் இன்னொரு பதிவில் நான் எழுதிய பின்னூட்டத்தின் சில பகுதியைத் தேவை கருதி, இங்கே வெட்டி ஒட்டுகிறேன். ஆட்சேபனை இல்லையெனின் தயவு செய்து இப் பின்னூட்டத்தை இங்கே அனுமதிக்க முடியுமா?

/* சிறீலங்கா இராணுவம் வாகரையை கைப்பற்றி இருக்கிறது. புலிகள் தங்கள் படைகளை வாகரையில் இருந்து விலக்கி கொண்டுள்ளனர். இது ஒரு strategic withdrawal தான், என்றாலும் இதனை பெரிய வெற்றியாக ஊடகங்கள் முன்நிறுத்துகின்றன. வாகரையை இராணுவம் கைப்பற்றியிருக்கும் சூழலில் புலிகள் பலவீனமடைந்து விட்டனர் என்ற வாதம் இன்னும் அதிகமாகும்.*/

இது பற்றி நான் விரைவில் ஒரு பதிவே போட்டாக வேண்டும். பலர் மின்னஞ்சல் மூலமும், தொலைபேசி மூலமும் என்னிடம் வினாவும் கேள்வி இதுதான். என்ன புலிகள் பின்வாங்குகிறார்களே? உண்மையில் புலிகள் பலமிழ்ந்து விட்டனரா எனும் ஏக்கம் ஒரு வித பயம் எம் மக்கள் பலருக்கு ஏற்பட்டிருக்கிறது. அது ஞாயமானதும் கூட.

இது புலிகளின் பலவீனம் இல்லை என்பதை மிகவும் தெளிவாகச் சொல்லிக்கொள்ள விருப்புகிறேன். தென்னிலங்கை அரசியல்வாதிகள் அன்று தொட்டு இன்று வரை இப்படியான நிகழ்வுகளைப் பெரிது படுத்துவது வழக்கம். காரணம் அவர்கள் இதை வைத்துத் தான் அரசியல் நடத்துவது. சிங்கள மக்களை புலிகள் பலம் இழந்துவிட்டனர் என்றும் அவர்களை இல்லாதொழிப்போம் என்னும் மாயைக்குள்ளும் கொண்டு செல்கின்றனர். இதற்கு எதிர்கால நிகழ்வுகள் பதில் சொல்லும்.

பிரபாகரனைப் பொறுத்த வரையில் அவர் தனது இலட்சியமான தமிழின விடுதலை என்பதில் வைத்த கண் வாங்காது, இப்படியான சலசலப்புகளைக் கண்டு குழம்பாது எமது போராட்டத்தை வெற்றிகரமாக முன்நகர்த்திச் செல்கிறார். ஈழ விடுதலை என்றால், தமிழ்மண்ணில் உள்ள சகல சிங்களப் படை முகாம்களையும் அழித்து அங்குலமங்குலமாக தமிழ் மண்ணை விடுவிப்பதுதான் என பல தமிழ்மக்கள் ஒரு மாயயை தம் மனதில் பதித்து வைத்திருக்கின்றனர். அதனால், வாகரை , சம்பூர் போன்ற இடங்களில் புலிகள் பின் வாங்கியதும் பெரும் பின்னடைவு, புலிகள் பலவீனம் என்று முடிவுக்கு வருகிறார்கள். அது தவறு.

எந்த ஒரு விடுதலைப் போராட்டமும் எதிரியின் சகல முகாம்களையும் அழித்து அங்குலமங்குலமாக தமது மண்ணை மீட்டு விடுதலை பெற்றதாக வரலாறு இல்லை. வியற்னாமில் அமெரிக்கர்களின் முழு முகாமையும் தகராமல் , முழு தென் வியற்னாமையும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவராமல் தான் வியற்நாம் வென்றது. அதே போலத் தான் சோவியத் படைகளின் முழு முகாமையும் அழித்து ஆப்கானிஸ்தானில் இருந்து உருஷ்சியப் படைகளை பின்வாங்க வைக்கவில்லை.

ஆக, மண்ணை மீட்பதற்கு முழு நிலப்பரப்பையும் எமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்து, எமது மண்ணில் உள்ள முழு எதிரிகளையும் அழித்துத் தான் நாம் விடுதலை அடைய முடியும் என்பது தவறானது. வியற்னாமில் என்ன நடந்ததோ, ஆப்கானிஸ்தானில் என்ன நடந்ததோ, அதே தான் இன்று ஈழத்திலும் நடக்கிறது. தலைவர் பிரபாகரன், மிகவும் அவதனமாகவும், உறுதியாகவும் அடுத்த நகர்வுகளை மேற்கொண்டு வருகிறார்.

சரி, எதிரியின் முழுமுகாம்களையும் அழிப்பதோ அல்லது முழுமண்னையும் அங்குலமங்குலமாக மீட்பதோ புலிகளின் நோக்கம் இல்லையென்றால் அவர்களின் நோக்கம்தான் என்ன என்று பலர் கேட்கலாம்.நியாயமான கேள்வி. இதற்கான விடையை இன்று இரவு நேரம் கிடைக்கும் போது எழுதுகிறேன்.

நன்றி.

3:28 PM, January 21, 2007
வசந்தன்(Vasanthan) said...

புலிகள் தாக்கவில்லையென்பதற்கும் பின்வாங்குவதற்கும் வேறுகாரணிகள்தான். நிச்சயமாக அந்த ஐந்துவருட கணக்கில்லை. அது ஐரோப்பாவில் தமிழர்களைத் திருப்திப்படுத்த விட்ட கதை.
எவனை நம்பி ஐந்துவருடத்தைப் பேணுவது? புலிகள் மூதூரைத் தாக்கியபோது அடுத்த மணித்தியாலமே 'புலிகள் உடனடியாக பின்வாங்க வேண்டும்' என்று அறிக்கை விட்டவர்கள் சம்பூர் கைப்பற்றப்பட்டு ஐந்து மாதகாலமாக ஓர் அறிக்கை கூட விடவில்லை.
சனங்கள்மேல அப்பட்டமா நடத்தப்படுற படுகொலைகளை நிறுத்திறதுக்கு ஆமான அழுத்தம் குடுக்க முடியாதவர்களை நம்பி அஞ்சு வருசக் கணக்குப்பாக்க புலிகள் முட்டாளில்லை. இந்தக்கதையைக் காவித்திரியிற ஆக்களைத்தான் அப்பிடிச் சொல்ல வேணும்.

9:52 PM, January 21, 2007