இந்தியாவின் மோசமான ஆட்டம்

காலை நேர ஆடு களம். ஆடுகளத்தில் சரியான அளவுக்கு வீசப்படும் மித வேக seaming பந்து. அது ஆஸ்திரேலிய பந்து வீச்சாக இருந்தாலும் சரி, பங்களாதேஷின் பந்து வீச்சாக இருந்தாலும் சரி...இந்தியாவுக்கு பிரச்சனையை தான் ஏற்படுத்தும் என்பதை இன்றைய ஆட்டம் மற்றொரு முறை நிருபித்து இருக்கிறது. பங்களாதேஷ் அணியின் பந்து வீச்சாளர்கள் சிறப்பாக பந்து வீசினார்கள். என்றாலும் இதைக் கூட சமாளிக்க முடியாத இந்திய மட்டையாளர்களின் தடுமாற்றம் - இந்த அணி

உலக கோப்பையின் அடுத்த சுற்றுக்கே செல்லுமா என்ற அச்சத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

டாஸ் வென்ற டிராவிட் முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தார். இத்தகைய தருணங்களில் பவுளிங் தான் செய்திருக்க வேண்டும். ஆனால் பங்களாதேஷ் போன்ற அணியிடம் தங்களின் மட்டையாளர்களுக்கு ஒரு பயிற்சி ஆட்டமாக இதனை கருதியிருக்க வேண்டும். அதனாலேயே பேட்டிங் செய்ய தீர்மானித்தார். It back fired. சேவாக்கின் அவுட் என்னை ஆச்சரியப்படுத்தவில்லை. எதிர்பார்த்தது தான். அடுத்த போட்டியில் அவர் விளையாடுவது சந்தேகமே. தினேஷ் கார்த்திக் அணிக்குள் கொண்டு வரப்பட வேண்டும். சேக்வாக்கை தொடர்ந்து அணியில் வைத்திருப்பது ஒரு gambling போலத் தான். சேக்வாக் நன்றாக விளையாடும் பொழுதே அவர் நிலைத்து நின்று ஆடுவது 50-50% தான். ஆனால் தற்போதைய நிலையில் அதிகம் எதிர்பார்க்க முடியாது.

இது வரையில் நடந்த உலககோப்பை ஆட்டங்களை பார்க்கும் பொழுது (பாக்கிஸ்தான்-மேற்கு இந்திய தீவுகள், இங்கிலாந்து-நியூசிலாந்து) துவக்க ஆட்டக்காரர்கள் தடுமாறுவதை பார்த்திருக்கிறோம். இந் நிலையில் துவக்க ஆட்டக்காரர்களாக டெக்னிக்கலாக நன்றாக விளையாடும் ஆட்டக்காரர்கள் தான் தேவை. உத்தப்பா துவக்க ஆட்டகாரராக முடியாது. கங்குலி-கார்த்திக் இருவரும் துவக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கலாம். இது கூட ஒரு சோதனை முயற்சி தான். உலககோப்பையில் வந்து கூட ஆட்டக்காரர்களை சோதனை செய்து கொண்டிருக்கும் இந்திய அணியின் பிரச்சனைக்கு காரணம் என்னை கேட்டால் அணியின் கோச் சேப்பல் என்று தான் கூறுவேன்.

கடந்த உலககோப்பையின் பொழுது இந்திய அணி ஓரளவுக்கு நிலையான பேட்டிங் வரிசையை கொண்டிருந்தது. ஆனால் இந்த போட்டியில் யார் எங்கே விளையாடுவது என்பதை கூட இன்னும் முடிவு செய்ய முடியாத நிலை.

இந்தப் போட்டியில் என்னை ஆச்சரியப்படுத்தியது டிராவிட்டின் தடுமாற்றம். இது போன்ற நிலையில் திராவிட் பல முறை நிதானமாக ஆடி அணியை கரை சேர்த்திருக்கிறார். ஆனால் இன்று அவரது தடுமாற்றம் அதுவும் சுழல் பந்து வீச்சுக்கு அவர் தடுமாறியது இந்திய அணியின் இன்றைய மோசமாக ஆட்டத்திற்கு ஒரு உதாரணம். என்ன தான் ஆடுகளம் பந்து வீச்சுக்கு சாதகமாக இருந்தாலும் கூட (Ball is not coming on to the bat, which made batting difficult) பங்களாதேஷ் அணியின் சுழல் பந்து வீச்சிற்கு இந்தியா சுருண்டது பெருத்த ஆச்சரியம், ஏமாற்றம்

டெண்டுல்கர் கூட சூழல் பந்து வீச்சிற்கு தான் ஆட்டம் இழந்தார். பந்தை சரியாக கணிக்காமல் inside edge on to his pad and caught by keeper.

கங்குலி, யுவராஜ் நன்றாக ஆடினர். குறிப்பாக யுவராஜ் *அதிகம்* தடுமாறவில்லை. ஆனால் தேவையான நேரத்தில் ஆட்டமிழந்தது இந்திய அணிக்கு கடும் பாதிப்பை ஏற்படுத்தியது. யுவராஜ் அடித்த சிக்ஸர் அவர் நல்ல பார்ம்மில் இருப்பதை காட்டியது. ஆனால்....

அடுத்து வந்த டோனி பங்களாதேஷ் அணிக்கு கேட்ச் ப்ராக்டிஸ் கொடுத்த திருப்தியில் வெளியேறினார்...

இந்திய பந்து வீச்சாவது சிறப்பாக இருக்கும் என்று நினைத்தால், சிகஸர்கள் பறக்கிறது. டோனி கேட்ச்களை கோட்டை விடுகிறார். பங்களாதேஷ் அணியின் தமிம் இக்பால் இந்திய அணிக்கு எதிராக போட்டியை திருப்பி விட்டார்.

அவ்வப்பொழுது சில பவுண்டிரிகள் பறந்து கொண்டிருப்பதால், ஏதாவது அதிசயம் நடந்தால் இந்தியா வெற்றி பெறும்.