Sunday, August 19, 2007

ஹிந்து ஆசிரியர் என்.ராமின் பத்திரிக்கையாளர் முகமூடி...


ஹிந்து நாளிதழின் ஆசிரியர் என்.ராம் பற்றி உங்களுக்கு என்ன தெரியும் ? அவர் இந்து நாளிதழின் ஆசிரியர், ஈழப்பிரச்சனைப் பற்றி தவறான தகவல்களை எழுதுகிறார் என்பது மட்டும் தானே ?

என்.ராம் ஏன் ஈழப் பிரச்சனைப் பற்றிய தவறான தகவல்களை எழுத வேண்டும் ? அதுவும் ஈழ விடுதலையை வெறித்தனமாக எதிர்த்து சிறீலங்கா ரத்னாவாக வேண்டும் ?

கடந்த ஆண்டு என்னுடைய ஒரு கட்டுரையின் மறுமொழியிலே அது பற்றி கூறியிருந்தேன்.

"ஏன் ஹிந்து இவ்வாறு நடந்து கொள்கிறது என்பதை ஆராய வேண்டியதன் அவசியம் உள்ளது

இலங்கை-இந்திய ஒப்பந்தத்தின் பொழுது ஹிந்து ராமின் பங்களிப்பு முக்கியமானது. விடுதலைப் புலிகளின் பிரதிநிதிகள் அவரை சந்தித்து பேசியது, அதன் பிறகு அவர் ஜெயவர்த்தனே அரசின் அமைச்சர்களை சந்தித்து பேசியது, ராஜீவ் மற்றும் ரா உளவு அமைப்புடன் இந்த விவகாரத்தில் பணியாற்றியது போன்ற விவகாரங்களை சமீபத்தில் வாசித்தேன்.

அதன் பிறகு நடந்த விஷயங்கள் என்ன ? அவர் என்ன நோக்கத்தில் இந்திய-இலங்கை ஒப்பந்தத்தில் பணியாற்றினார் போன்ற விவகாரங்கள் அலசப்பட வேண்டியவை"

இது தொடர்பாக நான் அறிந்த தகவல்களை முன்வைப்பதே இந்தக் கட்டுரையின் நோக்கம். இது குறித்து மிக விரிவாக எழுத வேண்டிய அவசியம் உள்ளது. காரணம் திரைமறைவில் நடந்த இந்த நிகழ்வுகள் ஈழப்பிரச்சனையை கூர்ந்து கவனித்து வரும் பலருக்கும் கூட தெரியவில்லை. இந்தக் கட்டுரை அதற்கான ஒரு சிறு அறிமுகம் மட்டுமே. இது குறித்த மிக விரிவான கட்டுரை தொடரை மற்றொரு தருணத்திலே நான் நிச்சயம் எழுதுவேன்.

ஹிந்து என்.ராம் இந்திய இலங்கை ஒப்பந்தத்தில் தன்னுடைய பங்களிப்பினை அதிகம் வெளிப்படுத்திக் கொள்வதில்லை. காரணம் ராஜீவ் காந்திக்கு தவறான தகவல்களை அளித்து இந்தியா-இலங்கை இடையேயான ஒப்பந்தத்தை ஏற்படுத்தி, இந்தியாவிற்கும் ஈழத்தமிழர்களுக்கும் பல இழப்புகளை ஏற்படுத்தி கொடுத்த குழுவில் ஹிந்து ராம் முக்கியமானவர். இந்தியாவின் Foriegn policy disaster என்று வர்ணிக்கப்படும் இந்தியாவின் இலங்கை தலையீட்டினை திட்டமிட்டு நடத்திய குழுவில் முக்கியமானவரான ஹிந்து ராம் அவரது தோல்வியை எப்படி வெளிப்படுத்திக் கொள்வார் ? நாம் தான் வெளிப்படுத்த வேண்டும்...

Assignment Colombo என்ற தன்னுடைய புத்தகத்திலே இந்திய-இலங்கை ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்ட நேரத்தில் ராஜீவ் காந்தியின் முக்கிய ஆலோசகராக இருந்த ஜே.என்.தீக்க்ஷித் இவ்வாறு குறிப்பிடுகிறார்.

I distinctly remember Rajiv Gandhi raising the question as to whether the LTTE would really abide by the agreement, which India was bound to implement as a guarantor. Rajiv Gandhi raised this question in the context of the doubts and misgivings Prabhakaran had expressed when Hardeep Puri provided details of the agreement to him on July 19.

Rajiv's question was primarily addressed to the then secretary of the Research and Analysis Wing, S E Joshi, who was cautious in his response. He said the LTTE was not a very trustworthy organisation and the agreement in a manner went against their high-flown demand for Eelam. Joshi was about to retire. His successor Anand Verma's response was that the LTTE owed much to India's support, that it was the LTTE which conveyed the message to N Ram of The Hindu, which initiated the whole process of discussions on the proposed Agreement.

ஒரு முக்கியமான விடயத்தை நாம் இங்கு கவனிக்க வேண்டும். இந்தியா இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதை புலிகள் எதிர்க்கின்றனர். காரணம் இந்த ஒப்பந்தத்தை முதன் முதலாக முன்னெடுத்தவர்கள் விடுதலைப் புலிகளே. இந்தியா அல்ல. ஆனால் விடுதலைப் புலிகளை அகற்றி விட்டு இந்தியா அவர்கள் சார்பாக இலங்கையுடன் கையெழுத்திடுகிறது. இதனை புலிகள் எதிர்க்கின்றனர். இந்திய-இலங்கை ஒப்பந்தத்தில் அது தான் முதல் கோணல். பிறகு அதுவே பெரிய சிக்கல்களை ஏற்படுத்துகிறது.

1987ம் ஆண்டு விடுதலைப் புலிகள் இயக்கத்தின் பிரதிநிதிகள் சிங்கப்பூரில் ஹிந்து என்.ராமை சந்திக்கிறார்கள். இலங்கை அரசாங்கம் தங்களின் சில கோரிக்கைகளை ஏற்றுக்கொண்டால் இலங்கை அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தைக்கு தயாராக இருப்பதாக விடுதலைப்புலிகள் இயக்க பிரதிநிதிகள் என்.ராமிடம் தெரிவிக்கிறார்கள்.

LTTE representatives in Singapore met N Ram, the associate editor of The Hindu newspaper, published from Madras, and conveyed a message that, the LTTE would be willing for a political compromise, if the Sri Lankan government agreed to the following proposals:

  • Military operations should stop and Sri Lankan forces should return to the barracks, wherever they are;
  • The Northern and Eastern provinces should be merged and recognized as a Tamil homeland;
  • There should be devolution of powers on the basis of the proposals which had come up since 1983 and up to the end of 1986;
  • Tamil should be recognized as an official language equal in status with Sinhalese.
  • An interim Tamil administration should be put in place in the linked northern and eastern provinces, to negotiate and finalize details of devolution of power etc, and;
  • Tamils should be given proportional representation in the three services of the security forces and in the public service.
(Sri Lanka - The Untold Story)

மேலே உள்ள புலிகளின் கோரிக்கைகளை கவனித்தால் அது தான் இந்திய-இலங்கை ஒப்பந்தத்தின் சாராம்சம் என்பது நமக்கு தெரியும். ஆனால் அதனை முன்வைத்த புலிகளே, அந்த ஒப்பந்தத்தில் இருந்து ஒதுக்கப்படுகின்றனர்.

என்.ராம் விடுதலைப்புலிகளின் இந்த தகவலை இலங்கையின் அமைச்சர் காமினி திசநாயக்காவிடம் கொண்டு செல்கிறார். இதையடுத்து விடுதலைப்புலிகள் - இலங்கை அரசாங்கம் - இந்திய அரசாங்கம் இவர்களிடையே பல கடிதப் போக்குவரத்து ஏற்படுகிறது. இந்தக் கடிதங்களை பல தரப்புகளிடம் கொண்டு சேர்க்கும் பொறுப்பினை என்.ராம் ஏற்கிறார்.

காரணம் என்.ராம் இலங்கை அரசாங்கம், இந்திய அரசு மற்றும் உளவுநிறுவனங்களுக்கும் மட்டுமல்ல, விடுதலைப் புலிகளுக்கும் நெருக்கமானவர். எனவே ஹிந்து என்.ராம் இந்த ஒப்பந்தத்திலே ஒரு தூதுவராக இந்த மூன்று தரப்புகளிடையே பணியாற்றுகிறார்.

இந்த நெருக்கம் எப்படி ஏற்பட்டது ?

என்.ராம் இந்திய உளவு நிறுவனமான "ரா (RAW)" உளவு நிறுவனத்தின் உளவாளி என தமிழகத்திலே திராவிடர் கழகம் மேடைகளில் முழுங்குவதை கேட்டிருக்கிறேன். அவர் ராவின் உளவாளியாக பல தரப்புகளிடையேயும் தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டிருக்கலாம். அந்த வாய்ப்புகளை மறுப்பதற்கில்லை. ஒரு பத்திரிக்கையாளராக பல தரப்பினரையும் அவர் சந்தித்து இருக்கலாம், தனக்கு ஒரு நெருக்கத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கலாம். எது எப்படியாயினும் இலங்கையில் பலரிடம் என்.ராமிற்கு மிக நெருக்கமான நட்பு இருந்தது என்பதை இலங்கையில் நடந்த பல்வேறு நிகழ்வுகளை கொண்டு அறிய முடிகிறது.

என்.ராம் இலங்கை அரசியலில் தனது பங்கெடுப்பு குறித்து கொழும்பில் ஒரு முறை இவ்வாறு தெரிவிக்கிறார்..

Let me add, by way of disclosure, that I was in Sri Lanka as a journalist seeking to interview President Jayewardene but with an interest and, as it turned out, a role going beyond journalism...

ஆம்...இலங்கை அரசியலில் என்.ராமின் ஈடுபாடு என்பது வெறும் பத்திரிக்கையாளரின் ஈடுபாடு அல்ல. என்.ராம் பத்திரிக்கையாளர் என்னும் முகமூடி மூலமாக இலங்கை அரசியலில் அவரது ஈடுபாட்டினை பல தளங்களில் முன்னெடுக்க முடிகிறது.

அவரது நட்பின் வட்டம் இலங்கையின் பல்வேறு தரப்புகளிடையேயும் பரந்து விரிந்து இருந்தது. இலங்கையின் இரு பெரும் கட்சிகளான ஐக்கிய தேசியக் கட்சி, சிறீலங்கா சுதந்திரா கட்சி என இந்த இரண்டு தரப்புகளிடையேயும் அவருக்கு நெருக்கம் இருந்தது. அது போல இலங்கையைச் சார்ந்த சிறீலங்கா அரசு ஆதரவு தமிழ் தலைவர்களையும் அவருக்கு தெரியும். விடுதலைப் புலிகளுடனும் அவருக்கு நெருக்கம் இருந்தது.

ஐக்கிய தேசிய கட்சியின் தலைவரான காமினி திசநாயக்கா என்.ராமின் நெருங்கிய நண்பர். சென்னையில் என்.ராம் வீட்டிற்கு விருந்தினர்களாக குடும்பத்துடன் வந்து போகும் அளவிற்கு காமினி திசநாயக்காவுடன் என்.ராமிற்கு நெருங்கிய நட்பு இருந்ததாக ஹிந்து நாளிதமிழில் நிருபராக வேலை பார்த்தவரும், விடுதலைப் புலிகளின் எதிர்ப்பாளருமான இலங்கைச் சார்ந்த DBS.ஜெயராஜ் குறிப்பிடுகிறார். என்.ராம் கூட பல தருணங்களில் அவருக்கும் காமினி திசநாயக்காவுக்கும்மான நட்பினை வெளிப்படுத்தி இருக்கிறார்.

என்.ராமின் மற்றொரு நெருங்கிய நண்பர் விஜய குமாரதுங்கா. சந்திரிகா குமாரதுங்காவின் கணவர். திம்பு பேச்சுவார்த்தை தோல்வி அடைந்த பிறகு விடுதலைப் புலிகளையும், மிதவாத சிங்கள தலைவர்களையும் சந்திக்க வைக்கும் ஒரு முயற்சியை என்.ராம் மேற்கொள்கிறார். 1986ல் விஜய குமாரதுங்காவும், சந்திரிகா குமாரதுங்காவும் சென்னைக்கு வருகிறார்கள். என்.ராம் அவர்களை விடுதலைப் புலிகளுடனான சந்திப்பிற்கு ஏற்பாடு செய்கிறார். சென்னையில் இந்த சந்திப்பு நடந்தது.

1985ல் விடுதலைப் புலிகள் இயக்க தலைவர் வே.பிரபாகரனை பேட்டி எடுத்து ப்ரெண்ட்லைனில் வெளியிட்டவரும் என்.ராம் தான்.

மறுபடியும் இந்தியா - இலங்கை இடையேயான ஒப்பந்தத்திற்கு முன்பாக இருந்த சூழலுக்கு வருவோம்...

விடுதலைப் புலிகள், சிங்கள அரசியல்வாதிகள் என இரு தரப்பிற்கும் இடையே நெருக்கமாக என்.ராம் இருந்த காரணத்தாலும், 1986ம் ஆண்டு அவர் சிங்கள மிதவாத தலைவர்கள் எனக்கூறப்படும் விஜய குமாரதுங்கா, சந்திரிகா குமாரதுங்கா ஆகியோருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையேயான சந்திப்பை ஏற்பாடு செய்து இருந்ததமையாலும், விடுதலைப் புலிகள் இலங்கை அரசாங்கத்திற்கும், தங்களுக்கும் இடையேயான பேச்சு வார்த்தையினை ஏற்படுத்த ஒரு "தூதுவராக" என்.ராமை அணுகுகிறார்கள். சிங்கப்பூரில் என்.ராமிற்கும், புலிகளின் பிரதிநிதிகளுக்கும் இடையேயான இந்தச் சந்திப்பு நிகழ்கிறது.

இங்கு கவனிக்க வேண்டியது இந்த ஒப்பந்தத்தையே புலிகள் தான் முதன் முதலில் முன்வைக்கிறார்கள். அதனை ஜே.என்.தீக்க்ஷ்த் தன் புத்தகத்திலே குறிப்பிடுகிறார். பின்னாட்களில் இந்த ஒப்பந்தத்தை இந்தியா முன்னெடுத்ததாக திரிக்கப்படுவதையும் நாம் கவனிக்க வேண்டும்.

இலங்கை அரசாங்கம் மீதும், சிங்கள இனவெறி ஜெயவர்த்தனே மீதும் விடுதலைப் புலிகளுக்கு பெரிய நம்பிக்கை இல்லை. அதனால் இந்தியா ஒரு மத்தியஸ்தராக இந்தப் பிரச்சனையில் இருந்தால் இந்த ஒப்பந்தத்தை இலங்கை மீற முடியாது என புலிகள் நினைக்கிறார்கள். அவ்வாறே என்.ராம் காமினி திசநாயக்கா, ஜெயவர்த்தனே போன்றோரை சந்திக்கிறார். இந்திய தரப்பிலும் இந்திய உளவு நிறுவனத்தையும், இந்திய அரசாங்கத்தையும் சந்திக்கிறார். இம் மூன்று தரப்புகளிடையே ஒரு இணக்கமான சூழ்நிலை கொண்டு வருவதை முன்னெடுக்கிறார்.

ஆனால் இங்கே தான் ஒரு மிகப் பெரிய குழப்பத்தை என்.ராம் உள்ளிட்ட இந்திய தரப்பு செய்து விடுகிறது...

இந்தியாவின் வெளியூறவுக் கொள்கையை கூர்ந்து கவனித்தால் இந்தியா ஏன் இவ்வாறு ஒரு மிகப் பெரிய குழப்பத்தினைச் செய்கிறது என்பது புலப்படும். ஆனால் தமிழகத்திலே மட்டும் இந்த குழப்பத்தினை "தேச நலன்" என்று சப்பை கட்டும் பழக்கம் உள்ளது. ஆனால் தரவுகளை சரியாக பார்த்தால் இந்தியா தனது வெளியூறவுக் கொள்கையில் 1980களில் செய்த தவறுகளை 1990களில் சரி செய்து கொண்ட வரலாறு நமக்கு புரியும்.

இந்தியா சுதந்திரம் அடைந்தப் பிறகு தனது வெளியுறவுக் கொள்கைகளை பல மாற்றங்களுக்கு உட்படுத்தி இருக்கிறது. நேருவின் காலத்தில் அணிசேரா நாடு என்பதாக அனைத்து நாடுகளிடமும் இணக்கமாக இருந்த கொள்கை, இந்திராவின் காலத்தில் அதிரடியான வெளியூறவு கொள்கையாக மாற்றம் பெற்றது. இந்தியாவின் உளவு அமைப்புகள் அண்டை நாடுகளான பாக்கிஸ்தான் போன்ற நாடுகளில் பல குழப்பங்களை ஏற்படுத்தின. அன்றைக்கு பாக்கிஸ்தானை சீர்குலைப்பது இந்தியாவின் முக்கிய நோக்கமாக இருந்தது. அவ்வாறு தான் பாக்கிஸ்தானில் குழப்பம் ஏற்படுத்தப்பட்டு பங்களாதேஷ் உருவானது. இன்னும் சொல்லப்போனால் இந்திராவின் காலத்தில் தான் இந்திய உளவு நிறுவனங்கள் விஸ்ரூபம் எடுத்தன (உளவு நிறுவனங்கள் குறித்த என்னுடைய முந்தைய பதிவு - http://blog.tamilsasi.com/2005/12/blog-post_29.html)

இந்திராவிற்கு பிறகு பிரதமராக பொறுப்பேற்ற ராஜீவ் காந்தி அரசியலில் ஒரு கத்துக்குட்டி. அவரின் நடவடிக்கைகள் அதிகாரிகளின் ஆலோசனைகளுக்கு ஏற்ப அமைந்தன. இந்திராவின் நடவடிக்கைகள் அண்டை நாடுகளில் உளவுத்துறை மூலமாக குழப்பத்தை ஏற்படுத்தி இந்தப் பிராந்தியத்தில் இந்தியா தான் மிகப் பெரிய சக்தி என்பதை நிருபிக்கும் வகையிலே இருந்தது. ராஜீவ் காந்தி இதனை அடுத்த நிலைக்கு உளவுத்துறை அதிகாரிகளின் ஆலோசனைகள் பேரில் மேற்கொள்கிறார். அதற்கு அப்போதைய பனிப்போர் சூழலும் ஒரு காரணம். ராஜீவ் காந்தி பல நாடுகளில் இந்தியாவின் நேரடியான தலையீட்டினை முன்னெடுக்கிறார். இலங்கை, பங்களாதேஷ், மாலத்தீவு, நேபால் என அனைத்து சிறிய நாடுகளும் இந்தியாவைச் சார்ந்து இருக்க வேண்டும் என்பது தான் ராஜீவ் மற்றும் உளவு நிறுவனங்களின் Hegemony கொள்கையாக இருந்தது. இதனைச் சார்ந்து தான் இந்திய-இலங்கை ஒப்பந்தத்தில் இந்தியாவின் தலையீடும் அமைகிறது.

ஆனால் இதில் ஏற்பட்ட மிகப்பெரிய பின்னடைவு காரணமாக 1989ல் பதவியேற்கும் வி.பி.சிங் தலைமையிலான அரசாங்கம் இந்தியாவின் வெளியூறவு கொள்கைகளில் பல மாற்றங்களை கொண்டு வருகிறது. 1989ல் வெளியூறவுத்துறை அமைச்சரும், பிறகு இந்தியாவின் பிரதமராக பொறுப்பேற்றவருமான ஐ.கே.குஜ்ரால் இந்தியாவின் வெளியூறவு கொள்கைகளில் பல புதிய பரிமாணங்களை கொண்டு வருகிறார். கடந்த காலங்களில் ஏற்பட்ட தவறுகள் சரி செய்யப்பட்டு இன்று வரை அமலில் இருக்கும் அந்த வெளியூறவு கொள்கைகளை "Gujral Doctrine" என்று கூறுவார்கள். அண்டை நாடுகளை மதிப்பது, அண்டை நாடுகளுடன் இணக்கமாக, சமநிலையில் பழகுவது போன்றவை இந்த கொள்கையின் முக்கிய அம்சம். இது இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி போன்றோர் முன்னெடுத்த அதிரடி வெளியூறவு குழப்பத்தை சரி செய்தது மட்டுமில்லாமல் நாடுகளிடையேயான உறவுகளை மேம்படுத்துவதாகவும் அமைந்தது.

இந்தியாவின் இந்த வெளியூறவு கொள்கை குழப்பங்களையும், பின்னடைவுகளையும் மனதில் கொண்டு இந்தக் கட்டுரையினை வாசித்தால், இந்திய-இலங்கை ஒப்பந்தம் எவ்வாறு குழப்பத்துடன் அமைந்தது என்பது புரியும்.

இந்திரா காந்தி இருந்த வரையிலும் இலங்கை அரசுக்கு எதிராக தமிழர்களுக்கு இணக்கமான ஒரு கொள்கையினை அவர் வகுத்து இருந்தார். அந்த சமயத்திலே அவர் இவ்வாறான இணக்கமான நடவடிக்கையை எடுக்காமல் இருந்திருந்தால் தமிழகம் அப்போதைய சுழ்நிலையில் ஒரு கொந்தளிப்பான நிலைக்கு சென்றிருக்கும். எனவே இலங்கைப் பிரச்சனையில் தமிழர்களுக்கு இணக்கமான நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்ற சூழ்நிலை இந்திராவிற்கு இருந்தது. இந்திராவும் அதைத் தான் செய்தார்.

ஆனால் ராஜீவ் பதவியேற்ற பொழுது அந் நிலையில் மாற்றம் ஏற்பட்டது. ராஜீவ் காந்தியின் அருகில் இருந்த உளவு நிறுவ அதிகாரிகளும், ஆலோசகர்களும் இலங்கையிலே தமிழ் ஈழம் அமைவது இந்தியாவில் இருந்து தமிழகம் பிரிவதற்கும், மொழி ரீதியாக இலங்கையில் ஒரு தனி நாடு உருவாவது மொழி வாரி மாநிலங்களை உள்ளடக்கிய இந்தியாவில் பிரச்சனைகளை ஏற்படுத்தும் என்றும் நினைக்கின்றனர். அதனால் இலங்கையில் இந்திரா காந்தி முன்னெடுத்த கொள்கையில் இருந்து ராஜீவ் அரசு தடம் மாறுகிறது.

அவர்கள் தடம் மாற அடிப்படை காரணமாக இருந்த "தமிழகம் தனி நாடாக பிரியும் என்னும் வாதம்" எவ்வளவு முட்டாளதனமான ஒரு வாதம் என்பது இன்றைக்கு நமக்கு புரிகிறது. இதனை முன்னெடுத்துவர்கள் ஒரு சிறு குழுவினர். ஆனால் ஒரு அரசாங்கம் இருபது ஆண்டுகளுக்கு முன்பு இந்த குழுவினரைச் சார்ந்து இந்த வாதத்தை வைத்தது அப்போதைய அதிகாரிகளின் முட்டாள்தனத்தையும், குழுப்பத்தையும் நமக்கு தெளிவுபடுத்துகிறது. அதனால் தான் இந்தியாவின் இலங்கை தலையீட்டினை India's Foriegn Policy Disaster என கூறுகிறார்கள்.

இந்தியாவின் முன்னாள் வெளியூறவுச் செயலர் வெங்கடேஸ்வரன் தெகல்கா இதழுக்கு அளித்த ஒரு பேட்டியில் கடந்த ஆண்டு இவ்வாறு குறிப்பிடுகிறார்.

Going back to the Accord, if you were to look at the Letters of Exchange, it seems India was more concerned about its own geopolitical interests. There was absolutely no reference to the Tamil question.

You may be quite right. One of the clauses of the agreement was directly related to the Voice of America broadcasting station in Sri Lanka. Today, the whole geopolitical situation has changed. We are having a nuclear agreement with the US, which had reneged upon its nuclear agreement for supply of fuel to Tarapore atomic power station in 1974. So, it is very difficult to go digging into the past. There is no point in digging up graveyards.

During the Indira Gandhi era, India was perceived to be more sympathetic to the Tamil cause, but there was a sudden shift in approach after Rajiv Gandhi became PM. Was it because of a change in India’s perception of its own geopolitical interests or was it because of his advisers?

You are being slightly unfair to Rajiv. He offered to send Indian forces, as he said, to protect the Tamil people. He did not send the IPKF to fight the LTTE. In the first months there was a lot of bonhomie between the LTTE and the IPKF. Later on, for various reasons, the relationship between the two sides broke down.

இவர் கூறும் various reasons என்ன என்பதை விரிவாக இந்த கட்டுரை தொடரில் நான் அலச இருக்கிறேன்

But don’t you think he should have let the parties to the conflict come to an agreement (instead of India and Sri Lanka signing an agreement)?

It is a very valid point. The agreement should not have been between India and Sri Lanka. It should have been signed between the Sri Lankan government and the LTTE, with India, perhaps as a well-wisher, on the sidelines. On the other hand, the agreement was between the two governments and LTTE was not brought into the agreement directly, which is a pity. But all these are reminiscences in retrospect. Well, since you are asking me, I may say that before the Indo-Sri Lanka agreement was signed, I was still in Delhi after leaving my post as foreign secretary.

One evening, I bumped into N. Ram the present editor of The Hindu. I told him that the Accord, the draft of which was known, was very badly conceived. I felt the LTTE should have been made a party to the agreement, and the Indian government should not have been a direct party with the Lankan government. Ram said it was a bit too late to bring about any change in the agreement, which was happening in the next week or two. He was also travelling with the PM to Colombo for this “historic agreement”. The rest is history.

இரு பூனைகள் அப்பத்தை பங்கு பிரிக்க, குரங்கை அழைத்த கதை போல விடுதலைப் புலிகளும், இலங்கை அரசாங்கமும் செய்ய நினைத்த இந்த ஒப்பந்தத்திலே, மத்தியசம் செய்ய உள்ளே நுழைந்த இந்தியா, புலிகளை ஒதுக்கி தானே ஒப்பந்தத்தில் கையெழுத்திடுகிறது. இந்த ஒப்பந்தத்தை முதலில் முன்னெடுத்த புலிகள் ஒதுக்கப்படுகின்றனர். தமிழர் நலன் புறக்கணிக்கப்படுகிறது. இந்திய தேச நலன் என சில Theoretical அம்சங்களை, இன்று வரை நிருப்பிக்கப்படாத சில அம்சங்களை முன்னிறுத்தி தமிழர்கள் மீது இந்தியா போர் தொடுக்கிறது.

அந்த குழப்பத்தை முன்னெடுத்த குழுவில் முக்கியமானவர் பத்திரிக்கையாளர் என்ற முகமூடியை அணிந்திருக்கும் என்.ராம். ஹிந்து என்.ராம் எவ்வாறு இந்த விவகாரத்தில் பணியாற்றினார் ? விடுதலைப் புலிகளுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட என்.ராம் பிறகு ஏன் விடுதலைப் புலிகளுக்கு எதிராக மாறினார் ?

என்.ராம் தனது இலங்கை அரசியல் பங்கெடுப்பு குறித்து கொழும்பில் ஒரு முறை பேசும் பொழுது இவ்வாறு குறிப்பிடுகிறார்.

....What followed, between February 1987 and March 24, 1990, when the IPKF completed its `de-induction from Sri Lanka under unhappy circumstances, was akin to a historical adventure, some would say, misadventure.

அந்த misadventure குறித்து அடுத்தப் பதிவில் பார்ப்போம்...

********

என்.ராம் மீது திபெத் மக்களின் குற்றச்சாட்டு : கொழும்பில் இருந்து சிங்கள அரசாங்கம் தரும் செய்திகளை ஹிந்து வெளியிடுவதாக ஈழத்தமிழர்கள் குற்றம்சாட்டுவது போல, சீன அரசாங்கத்தின் செய்திகளை வெளியிட்டு திபெத் சுதந்திர போராட்டத்தை ஹிந்து ராம் திரிப்பதாக திபெத் விடுதலைப் போராட்ட ஆதரவாளர்கள் தெரிவிக்கின்றனர்.

அவர்கள் " 'Save The Hindu' Campaign " என்ற ஒன்றினை நடத்தி ஹிந்துவின் செய்தி திரிப்பை அம்பலப்படுத்தி இருக்கின்றனர். அது குறித்த தகவல்கள் இந்த இணையத்தளத்தில் கிடைக்கிறது - http://www.friendsoftibet.org/save/

Friends of Tibet has learned that the editorial board of The Hindu led by N Ram has instructed their centres not to carry any 'Tibet', 'Dalai Lama' and 'Falun Gong' stories criticising the policies of the Chinese government. Instead of depending on reliable news agencies like PTI, UNI, IANS, Reuters, AP and AFP, The Hindu has found a Beijing-based news-agency to fetch stories - The Xinhua - world's biggest propaganda agency belonging to the Chinese Communist Party. Probably The Hindu is the only newspaper in the country to reproduce Xinhua reports. Today The Hindu has virtually become a mouthpiece of the Chinese Communist Party.

திபெத் குறித்த என்னுடைய பதிவு - http://blog.tamilsasi.com/2005/11/blog-post_22.html

34 மறுமொழிகள்:

Pot"tea" kadai said...

good effort sasi...

have to read it again...will reply u in detail later.

5:50 PM, August 19, 2007
இவன் said...

நல்ல ஒரு ஆய்வறிக்கை. மேல் தகவலுக்காக எதிர்பார்திருக்கிறேன்.

8:11 PM, August 19, 2007
வெற்றி said...

சசி,
நல்ல முயற்சி. தொடருங்கள். இப்பதிவில் இருந்தே பல அறிந்திராத தகவல்களை அறிந்து கொண்டேன்.
மிகவும் ஆழமாக ஆய்வு செய்து எழுதியிருக்கிறீர்கள்.


ராம் அவர்கள் இந்திய-இலங்கை ஒப்பந்த காலத்தில் இராஜீவ் காந்தியின் உள் வட்டத்தில் ஒருவராக இருந்ததை அறிந்திருக்கிறேன். ஆனால் 'இந்து' ராமின் பங்களிப்பு என்னவென்பது எனக்குத் தெரியாது. உங்களின் தொடரின் மூலம் விடை கிடைக்கும் என எதிர்பார்க்கிறேன்.

வெங்கடேஸ்வரன் ஒரு சிறந்த இராஜதந்திரி. இராஜீவ் காந்தி அவர்கள் வெங்கடேஸ்வரன் போன்றவர்களை ஒதுக்கிவிட்டு ரமேஸ் பண்டாரி போன்றவர்களை இலங்கைப் பிரச்சனையைக் கையாள்வதற்கு அமர்த்தினார்.

இலங்கையின் இனப்பிரச்சனை தொடர்பாக பண்டாரிக்குச் சிறிதளவும் அறிவோ அனுபவமோ இல்லை என J.N.டிக்சிற் அவர்கள் தனது Colombo Assignment எனும் புத்தகத்தில் சொல்லியுள்ளார்.

Colombo Assignment புத்தகத்திற்கு review எழுதிய திரு.V.சூரியநாராயணன் அவர்கள் டிக்சிற்றை ஆதாரம் காட்டிக் பண்டாரியின் அனுபவமின்மையைக் கீழுள்ளவாறு சொல்கிறார்:


The Rajiv Gandhi-Romesh Bhandari team had different priorities and their policies further contributed to the worsening of the overall situation. Jayewardene hoped that he would be able to have a better relationship with Rajiv Gandhi than the relationship he had with his mother. Rajiv Gandhi, assisted by Romesh Bhandari, wanted to make a fresh beginning...

Dixit provides rare insights regarding Romesh Bhandari, who became Foreign Secretary after M.K. Rasgotra. Bhandari did not (or could not) quite comprehend the complexities of the attitudes of Tamils and Sinhalese towards each other. He was keen to find a quick solution to the ethnic crisis before he retired. When Dixit explained the wide gap between Tamil aspirations and what Sinhalese-dominated governments were prepared to offer, Bhandari chided him "for not having a positive attitude". "The punchline in his admonition," Dixit writes, was that "I must not function in the mindset of Indira Gandhi and G. Parthasarathy period" (page 42).

Dixit makes a telling comment about Bhandari's monumental ignorance about Tamil leaders and even Tamil names. New Delhi had prepared a "non-paper", to be used as a basis for further negotiations between Colombo and Tamil groups. Copies of the "non-paper" were to be given to both sides.

In the course of a conversation, Bhandari told Dixit: "Mani, as soon as you reach Colombo, hand over the documents to Chelvanayakam." "I pointed out that Chelvanayakam had died two decades ago. So handing over the papers to him would not be possible. I said perhaps he meant I must hand over the paper to Dr. N. Thiruchalvam. Bhandari was impatient. He said, "Mani, give the paper to Chelvanayakam, Thiruchalvam, whosoever it is. All these South Indian names are confusing." With Bhandari at the helm of affairs in South Block, no wonder the Thimpu talks ended in a fiasco.


கீழே உள்ளது நான் நண்பர் சிவபாலன் அவர்களின் பதிவொன்றில் எழுதிய பின்னூட்டம்:

பல தமிழக நண்பர்கள் இராஜீவ் காந்தி ஈழத் தமிழர்களுக்கு உதவுவதற்காகத்தான் இந்திய-இலங்கை ஒப்பந்தத்தை உருவாக்கினார் என எண்ணுகின்றனர். அது தவறு.

இலங்கை-இந்திய ஒப்பந்தத்தை சிங்களவர்களும் ஏற்றுக் கொள்ளவில்லை. தமிழர்களும் ஏற்றுக் கொள்ளவில்லை.

பில் கிளிங்ரன் அவர்கள் மொனிக்கா லுவின்ஸ்கியுடனான அந்தரங்க உறவுகள் குறித்த விசாரனைகளில் மொனிக்கா இரண்டாவது தடவையாக வாக்குமூலம் அளிக்கச் சென்ற நாள், அமெரிக்க மக்களின் கவனத்தைத் திசை திருப்ப ஆப்கானிஸ்தான், சூடான் போன்ற நாடுகள் மீது விமானக் குண்டுத் தாக்குதல்களுக்கு ஆணை பிறப்பித்தார்.

அரசியல்வாதிகள் தமக்கு உள்நாட்டில் நெருக்கடிகள் தோன்றும் போது மக்களைத் திசை திருப்ப இப்படியான நடவடிக்கைகளைச் செய்வது வழக்கம்.

இராஜீவ் காந்தியும் அப்படி ஒரு சூழ்நிலையில்தான் இலங்கை-இந்திய ஒப்பந்தத்தை உருவாக்கினார்.


------------------------------
நான் ஏன் இவற்றைச் சொல்கிறேன் என்றால், அன்னை இந்திரா காந்தியின் அணுகுமுறை, அவர் ஜி.பார்த்தசாரதி, வெங்கடேஸ்வரன் போன்ற அனுபவமிக்கவர்களை ஆலோசகர்களாக வைத்திருந்தமை என்பன அவரின் அனுபவத்தைக் காட்டுகிறது.

ஆனால் இராஜீவ் ரமேஸ் பண்டாரி, மற்றும் இராம் போன்றவர்களைத் தனது உள் வட்டத்தில் வைத்திருந்தார். அதுதான் இராஜீவின் கொள்கைகள் தோல்வியில் முடியக் காரணமென நான் நினைக்கிறேன்.

உங்களின் அடுத்த பதிவை ஆவலுடன் எதிர்பார்த்திருக்கிறேன்.

9:05 PM, August 19, 2007
குழைக்காட்டான் said...

தமிழ் சசி,

மிகவும் ஒர் சிக்கலான முயற்சி. ஆனாலும் துணிந்து இறங்கியிருக்கிறீர்கள். நன்றி.

//..ஐக்கிய தேசிய கட்சியின் தலைவரான காமினி திசநாயக்கா என்.ராமின் நெருங்கிய நண்பர். சென்னையில் என்.ராம் வீட்டிற்கு விருந்தினர்களாக குடும்பத்துடன் வந்து போகும் அளவிற்கு காமினி திசநாயக்காவுடன் என்.ராமிற்கு நெருங்கிய நட்பு ..//

அதுமட்டுமல்ல ஸ்ரீலங்காவில் காமினி திசநாயகா கொல்லப்பட்டபோது அவரின் மனைவி தன்னிடம் இருந்த விடீயோ சாட்சிகளை (அன்றைய கூட்டத்தில எடுக்கப்பட்ட) ஸ்ரீலங்கா பொலீசிடம் கொடுக்க்காமல் ராமிடமே கொடுத்தார்!!!

//..ஹிந்து நாளிதமிழில் நிருபராக வேலை பார்த்தவரும், விடுதலைப் புலிகளின் எதிர்ப்பாளருமான இலங்கைச் சார்ந்த DBS.ஜெயராஜ் . ..//

டி.பி.எஸ் ஒரு புலி எதிர்ப்பாளர் என்று சொல்வது அவரின் மேல் நல்லபிப்பிராயத்தைக் கொண்டுவரும் (புலி எதிர்ப்பாளரிடையே) மாறாக அவர் ஒரு அரசியல் 'சந்தர்பவாதி' எனச் சொல்வதே பொருத்தமானது. அவரின் எழுத்துகளை அவர் ஒரு The Island இல் எழுத ஆரம்பித்ததில் இருந்தே படித்து வருபவன். அவரைப்பற்றி தனிப்பதிவே போடலாம்.



//..முதன் முதலாக விடுதலைப் புலிகள் இயக்க தலைவர் வே.பிரபாகரனை பேட்டி எடுத்து ப்ரெண்ட்லைனில் வெளியிட்டவரும் என்.ராம் தான்....//

முதன் முதலில் வே.பிரபாகரனைப் பேட்டி எடுத்தவர் அனிதா பிரதாப். அவர் கொல்கத்தா 'Sunday' ற் காக எடுத்து Cover Story ஆக வெளிவந்து பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. தவறாயின் மன்னிக்கவும்.

9:59 PM, August 19, 2007
தமிழ் சசி | Tamil SASI said...

சத்யா, இவன், வெற்றி,

உங்கள் கருத்துகளுக்கு நன்றி...

குழைக்காட்டான்,

அனிதா பிரதாப் என்பது சரியானதே. இது குறித்து அனிதா தனது "The Island of Blood" புத்தகத்திலும் சுட்டி காட்டுகிறார். 1984ல் அனிதா இந்த பேட்டியினை எடுத்து இருக்கிறார். 1983ம் ஆண்டு இனக் கலவரத்தை இந்திய வெகுஜன ஊடகங்களில் கொண்டு வந்தவரும் அனிதா தான்

கட்டுரையிலும் திருத்தம் செய்து விடுகிறேன்.

சுட்டிகாட்டியமைக்கு நன்றி...

அனிதா பிரதாப் குறித்து நான் முன்பு எழுதிய கட்டுரை - http://blog.tamilsasi.com/2006/03/blog-post_11.html

ஹிந்து என்.ராமிற்கும், அனிதா பிரதாப்பிற்கும் தான் எவ்வளவு வேறுபாடு. அனிதா பத்திரிக்கையாளர். ராமிற்கு பத்திரிக்கை என்பது அவரது "திரைமறைவு வேலைகளை" முன்னெடுக்க கிடைத்த முகமூடி...

10:34 PM, August 19, 2007
குழலி / Kuzhali said...

நல்ல கட்டுரை, மற்றையவற்றிற்கும் காத்திருக்கிறேன்...

//ராமிற்கு பத்திரிக்கை என்பது அவரது "திரைமறைவு வேலைகளை" முன்னெடுக்க கிடைத்த முகமூடி...
//
ராமிற்கு மட்டுமல்ல வேறு சிலரையும் நோண்டி பார்த்தால் "திரைமறைவு வேலைகளை" முன்னெடுக்க கிடைத்த முகமூடிகள் தான் என்னும் போது வேதனையாக உள்ளது...

11:03 PM, August 19, 2007
குழைக்காட்டான் said...

//குழைக்காட்டான் said...

தமிழ் சசி,

மிகவும் ஒர் சிக்கலான முயற்சி. ஆனாலும் துணிந்து இறங்கியிருக்கிறீர்கள். நன்றி.//

தமிழ்சசி வணக்கம்

மேலே முதலில் எனது பெயரில் வந்த பின்னூட்டம் குழைக்காட்டன் என்ற பெயரில் எழுதிய பழைய வலைப்பதிவாளரான என்னதில்லை. இன்று தான் மீளவும் ஒரு வலைப்பதிவை ஆரம்பித்துள்ளேன்.

எனது பெயரில் எழுதியவர் தப்பாக எதுவும் எழுததால் பிரச்சனை இல்லை என்று நினைக்கிறேன்

12:36 AM, August 20, 2007
Thangamani said...

சசி:

நல்ல முயற்சி! மிகவும் தெளிவான தரவுகளோடும், தீர்மானிக்கப்பட்ட குறிக்கோளுடனும் ஆரம்பித்திருப்பதாகத் தெரிகிறது. இப்படியான முயற்சிகள், கட்டுரைகள் இப்போதைய வெகுஜன ஊடகங்களில் வழியே எழுதப்படாதிருக்கையில், எதையும் 'தேசிய நலன்' என்கிற போர்வையில் தங்களது நலனை சாதித்துக்கொள்ள முடிகிறது. இத்தகையான பதிவுகள், முயற்சிகளே வலைப்பதிவு என்கிற வடிவத்தின் இருப்பை நியாயப்படுத்துகின்றன.

மிக்க நன்றி!

3:14 AM, August 20, 2007
Unknown said...

Hi,

Whatever happened during 87-89 in Indo srilanka accord was because of betrayers called LTTE...otherwise srilanka would have been a peace land today..

3:40 AM, August 20, 2007
Mugundan | முகுந்தன் said...

சசி,

ஆழமான வாசிப்புக்கு உள்ளாக்கி உள்ளது
உங்களின் கட்டுரை.அப்பாவி மக்களுக்கு
''மசாலா செய்திதாள்''களினால் உண்மை
மறைத்துத் தான் சொல்லப்படுகின்றன.
இது தான் உலக வரலாறாகவும் தொடர்கிறது.

நன்றி.
கடலூர் முகு

6:39 AM, August 20, 2007
ஈழபாரதி said...

உண்மைகள் எப்போதும் கசப்பாகவே இருக்கும், அதற்காக தெரியாமல் இருப்பதை விட தெரிந்து கொள்வது மேலானது. மேலதிக தகவல்களுக்காக காத்திருக்கும்.

7:19 AM, August 20, 2007
சுந்தரவடிவேல் said...

சசி, அன்றாட பரபரப்பு அரசியல் காற்றில் மறைந்துபோன முக்கியமான தகவல்களை அளிக்கிறீர்கள். நன்றி.

10:00 AM, August 20, 2007
வெற்றி said...

/* Stanley said...
Hi,
Whatever happened during 87-89 in Indo srilanka accord was because of betrayers called LTTE...otherwise srilanka would have been a peace land today..*/

இந்தப் பின்னூட்டத்தைப் படித்துச் சிரிப்பு அடக்கமுடியவில்லை.

இப் பின்னூட்டத்தை எழுதிய நண்பர் அவர்கள் இலங்கைக்கான முன்னாள் இந்தியத் தூதுவர் டிகிசிற், மற்றும் இலங்கையில் பணியாற்றிய இந்திய இராணுவத் தளபதிகள் என்ன சொல்கிறார்கள் என்று படிக்கவில்லைப் போலும்.

நான் மேலே எழுதிய பின்னூட்டத்தையாவது அன்பர் ஸ்ரான்லி படித்திருக்கலாம்.

இலங்கை-இந்திய ஒப்பந்ததை தமிழர்கள் ஏற்றுக் கொள்ளததற்கு ஒரு காரணம், சிங்கள அரசுகள் அதை ஒரு போதும் அமுல்படுத்தாது, அத்துடன் தமக்குள்ள பெரும்பான்மையைப் பயன்படுத்தி எதிர்காலத்தில் அவ் ஒப்பந்ததை இல்லாமல் அல்லது மாற்றுவார்கள் என்பது.

கடந்த வருடம் அது நடந்தது. தமிழர்களின் பூர்வீகத் தாயகம் என்று ஒன்று இல்லையென வடக்குக் கிழக்கு மாகாணங்களைப் பிரித்தது.

12:22 PM, August 20, 2007
செல்வநாயகி said...

இந்திராகாந்திக்குப் பிறகு ஈழத்தமிழர்கள் விடயத்தில் ராஜீவ் மிகமோசமான தலையீடுகளை எடுத்ததில் அவரின் ஆலோசனைக்குழுவில் இருந்தவர்களுக்கும் நிறையப் பங்குண்டு என்பதுபற்றிய தகவல்களை அதுசம்பந்தமான நிகழ்வுகளில் என்னைவிடவும் கூடுதலான அறிதலுடைய நண்பனிடம் பேசிக்கொண்டிருந்தபோது நானும் தெரிந்துகொள்ளத் தொடங்கியிருந்தேன். இப்போது உங்களின் இக்கட்டுரை மேலும் விரிவான பார்வையை வழங்குகிறது. நன்றி சசி.

8:28 PM, August 20, 2007
Raveendran Chinnasamy said...

Pin pointing and spreading false analysis are great asset of any organization .

Sri Lankan Tamils need a solution but LTTE is making it harder for everybody.

Srilanka accord by Rajiv is not so great .Agreed ,what are other proposals tabled by LTTE ? Killing everyone ? Sri lankan tamil lost their future due to LTTE.

If GOD is there let him/her save tamils from LTTE.

Like Indian Tamils ,Srilankan tamils doest have leadership.

8:44 PM, August 20, 2007
வெற்றி said...

இரவீந்திரன் சின்னச்சாமி,

/* Sri Lankan Tamils need a solution but LTTE is making it harder for everybody. */

இனப்பிரச்சனைக்குத் தீர்வு காண்பதில் எந்த வகையில் தமிழீழ விடுதலைப் புலிகள் இடையூறாக இருக்கிறார்கள் என்று தயவு செய்து கொஞ்சம் விளக்க முடியுமா?

சிங்களத் தலைமைகள் ஒப்பந்தங்களில் கைச்சாத்திடுவதும், பின்னர் அதை அமுல்படுத்தாது கிழித்தெறிவதும் அவர்களின் வாடிக்கை. அதுதானே இலங்கை-இந்திய ஒப்பந்தத்திற்கும் நடந்தது.


Sir பொன். அருனாசலம் - ஜேம்ஸ் பீரிஸ் ஒப்பந்தம் [1915]
W.துரைசாமி - C.E.கூரே ஒப்பந்தம் [1925]
பண்டா-செல்வா ஒப்பந்தம்[1958]
டட்லி-செல்வா ஒப்பந்தம்[1965]
இலங்கை-இந்திய ஒப்பந்தம்[1987]
பிரபா-ரணில் ஒப்பந்தம்[2002]

இந்த மேற்கூறிய ஒப்பந்தங்களில் ஒன்றையாவது சிங்கள அரசுகள் நேர்மையுடன் அமுல்படுத்தினவா?
இல்லையே!

சரி, பிரபாகரனை விடுங்கள். 1950 களில் இருந்து நாடாளுமன்ற அரசியலில் ஈடுபட்டிருந்த அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் என்ன சொல்கிறார் பாருங்கள்.

அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் அவர்கள் மிகவும் தெளிவாக 1975ம் ஆண்டிலேயே சொல்லிவிட்டார்கள்.

"I personally have lost all hope of being able to establish our rights in one Sri Lanka. We won't reject any short-term solutions that may come up. The only long-term solution is the division of our country. If they offer us federation we won't reject it. But there is no prospect of that. We have not yet declared our policy of separation but at the next convention it will happen."

[Walter Schwars, The Tamils of Sri Lanka, p.15]


/* Sri lankan tamil lost their future due to LTTE. */

தமிழ்த்தேசியவாதம், பிரபாகரன், விடுதலைப் புலிகள் எல்லாம் சிங்களவர்களின் தமிழின அடக்குமுறைகளின் விளைவே. ஆக தமிழ்த்தேசியவாதம், புலிகள், பிரபாகரன் என எல்லாவற்றையும் உருவாக்கியது சிங்கள தேசியவாதமே[சிங்கள இனவெறியர்களே] ஒழிய தமிழர்கள் இல்லை. இதை இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி ரணதுங்க பிரேமதாசாவுக்கு ஆலோசகராக இருந்த அர்ஜுனா கன்னங்கரா எனும் சிங்களவரே சொல்கிறார்:

"This tragic and bitter war should never have happened. The issues that led to the rise of Prabhakaran and the Tamil Tigers could have been resolved peacefully, through dialogue, years ago, if not for the arrogance and inflexibility of the Sinhalese majority and their religious gurus, the Bhuddist clergy."
[Arjuna Kannangara, Tamil State Inevitable, 2000]

11:59 PM, August 20, 2007
Raveendran Chinnasamy said...

//இரவீந்திரன் சின்னச்சாமி,

/* Sri Lankan Tamils need a solution but LTTE is making it harder for everybody. */

இனப்பிரச்சனைக்குத் தீர்வு காண்பதில் எந்த வகையில் தமிழீழ விடுதலைப் புலிகள் இடையூறாக இருக்கிறார்கள் என்று தயவு செய்து கொஞ்சம் விளக்க முடியுமா?
//

LTTE make cause of Srilankan Tamil as monopoly and eliminate other rebels . In the world's eye they can not go into each and every day stuff what they are seeing is LTTE is not a trustworthy organization to deal with . Whenever a deal is made for peace, LTTE using it to train themselves instead of promoting tamil Life ( dont bring they have separate country ) . If LTTE demonstrate they can trustworthy then we can see a light in a tunnel .


I am not familer with accords you have mentioned. But why workd turned deaf to tamils except Oslo ? Because there is no leadership or statesmenship ( except few who were eliminated by LTTE ). LTTE lost Dr.Andon Balasingam who is a moderate .If Prabhakaran is trustworthy he has to travel like Yasar Arafat done .

8:14 AM, August 21, 2007
thiru said...

பாராட்டத்தக்க முயற்சி சசி,

இந்திய கொள்கை வகுப்பாளர்களும், தரகர்களும்
தமிழ் மக்களுக்கு மறைத்த ஈழம் சார்ந்த உண்மைகளை தெரிவிக்கவேண்டிய அவசியம் எழுகிறது.

10:42 AM, August 21, 2007
Badri Seshadri said...

சசி: இந்தப் பதிவு மிகவும் முக்கியமானது. இதனை முழுமையாக முடித்தபின்னர், சிறு பதிப்பாக (monograph) அச்சில் வெளியிட்டு தமிழகத்தில் வழங்கலாம் என்று தோன்றுகிறது.

12:33 AM, August 23, 2007
Kasi Arumugam said...

இன்றுதான் முழுமையாகப் படித்தேன். இன்னும் எழுத நிறைய உழைப்பும் நினைவாற்றலும் நேரமும் தேவைப்படும். இவை அமைய வாழ்த்துக்கள் சசி:-)

5:08 AM, August 23, 2007
தமிழ் சசி | Tamil SASI said...

குழலி, தங்கமணி, திரு, செல்வநாயகி, ஈழபாரதி, முகு, ஸ்டேன்லி, ரவீந்திரன்,

உங்கள் அனைவரின் கருத்துகளுக்கும் நன்றி...

9:36 AM, August 23, 2007
தமிழ் சசி | Tamil SASI said...

பத்ரி, காசி,

நன்றி

இந்தக் கட்டுரையின் ஆரம்பத்தில் நான் கூறியிருந்தது போல இந்த முயற்சி ஒரு சிறு அறிமுகம் மட்டுமே.

"இந்தக் கட்டுரை அதற்கான ஒரு சிறு அறிமுகம் மட்டுமே. இது குறித்த மிக விரிவான கட்டுரை தொடரை மற்றொரு தருணத்திலே நான் நிச்சயம் எழுதுவேன்"

இதனை ஒரு பெரிய கட்டுரை தொடராக மற்றொரு சமயத்தில் எழுதும் எண்ணம் உள்ளது. தற்போதைய பணி சூழலில் ஒரு நீண்ட தொடரை எழுத முடியாத நிலை உள்ளது. இன்னும் ஒன்று/இரண்டு பகுதிகளை தற்பொழுது எழுத எண்ணி உள்ளேன்

நன்றி

9:39 AM, August 23, 2007
மயிலாடுதுறை சிவா said...

சசி

இதுப் போல ஆவணப் படுத்துதல் நலம். ஈழ் வரலாற்றில் இதுப் போல் என்னென்ன மறைக்கப் பட்ட "தமிழ்ர்களின் சுதந்திர தாகத்திற்கு" யார் எல்லாம் தடையாக உள்ளார்களோ என்று நினைக்கும் பொழுது மனம் எல்லையில்லா வருத்தம் அடைகிறது.

உங்கள் முயற்சிக்கு பாராட்டுகள். காசி சொன்னதில் எனக்கும் உடன்பாடே...

மயிலாடுதுறை சிவா...

3:59 PM, August 23, 2007
கொண்டோடி said...

ரவீந்திரன் சின்னச்சாமி,
வெற்றி கேட்ட கேள்விக்கு நேரடியாகப் பதிலளிக்காமல் சுத்திவளைக்கிறியள்.

அந்த ஒப்பந்தம், இந்த ஒப்பந்தம் பற்றி அதிகம் தெரியாது எண்டுற நீங்கள் எப்படி 'புலிகள்தான் இலங்கை இனப்பிரச்சினையைத் தீர்க்க முட்டுக்கட்டையாக இருக்கிறார்கள்' என்று தீர்ப்புத் தருகிறீர்கள்?

சரி, நீங்கள் சின்னப்பிள்ளை என்றே வைத்துக்கொள்வோம், ஆகவே அந்தக்காலத்துக்கு ஒப்பந்தங்கள், நிகழ்வுகள் உங்களுக்குத் தெரியாமலிருக்கலாம்.

ரணில் - பிரபா ஒப்பந்தமும் அதற்குப் பிறகும் வருவோம்.

சுனாமிப் பொதுக்கூட்டமைப்புப் பற்றிய ஒப்பந்தத்துக்கு என்ன நடந்தது?
அதைத் தயாரித்ததில் முன்னின்ற உலகநாடுகள் அதை நடைமுறைப்படுத்த என்ன செய்தன?
உலகமே பார்த்திருக்க நடந்த இயற்கை அழிவுக்கு நிவாரணம் தர, அதே உலகமும் இணைந்து தயாரித்த தீர்வுத்திட்டத்தை, உலகையே சாட்சியாக வைத்துக் கையெழுத்திட்ட சுனாமிப் புனரமைப்புத் திட்டத்தை மிகச்சாதாரணமாக செல்லுபடியற்றதாக்க முடிகிறது சிறிலங்கா அரசால்.

இதே உலகநாடுகள் புலிகளில் நம்பிக்கை வைக்கவில்லையென்பதை ஒரு சாட்டாகச் சொல்லுகிறீர்கள். இதே சிறிலங்கா அரசாங்கம், தமிழர் பிரச்சினையைத் தீர்க்க முன்னிற்பதாகவும் புலிகள்தான் பின்னிற்பதாகவும் ஒரு அண்டப்புளுகை அவிழ்த்து விடுகிறீர்கள்.

புலிகள் வைத்த தீர்வுத்திட்டமென்ன என்று கேட்டீர்களே? புலிகள் மிகத்தெளிவாக ஒரு திட்டம் வைத்தார்கள். மத்தியஸ்தர்களும் அதை ஏற்றுக்கொண்டார்கள். ஏன் சிறிலங்கா அரசாங்கமும் ஏற்றுக்கொண்டது. அத்திட்டத்தின் ஒருபகுதியான இடைக்கால நிர்வாகசபைக்கான பேச்சுவார்த்தையைக்கூட செய்வதற்கு விரும்பவில்லை சிறிலங்கா அரசு.

தான் கையெழுத்திட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மீறி சிறிலங்கா அரசு நிலப்பரப்புக்களை ஆக்கிரமித்தபோதும் மத்தியஸ்தர்கள் வெறும் மாதாந்த அறிக்கைமட்டும்தான் சமர்ப்பித்துக் கொண்டிருக்கிறார்கள். இங்கேயும் புலிகள்தான் இனப்பிரச்சினைத் தீர்வுக்குக் குறுக்கே நிற்கிறார்களா?

யாசீர் அரபாத் போல உலகம்முழுக்கப் பறந்து திரிவதுதான் தீர்வா? பாலஸ்தீனர்களின் பிரச்சினைக்கு என்ன தீர்வு கிடைத்தது? உலகம் முழுக்கப் பறந்ததால் அவர்களின் பிரச்சினை தீர்ந்துவிட்டதா?

ரவீந்திரன் அவர்களே,
குறிப்பிட்ட காலத்துக்கு இடைக்கால நிர்வாக சபையை நடைமுறைப்படுத்தி, அதன்பின்னர், தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரித்து ஒரு தேர்தலை நடத்தி பிரிந்து செல்வதா ஒன்றியிருப்பதா என்பதைத் தீர்மானிப்பதற்கு உங்கள் தரப்பு எசமானர்களுக்குக் கூச்சமாயிருப்பது ஏன்?

இதைவிட்டுவிட்டு, புலிகளிடம் தீர்வில்லை, அவர்கள்தான் தீர்வுக்கு எதிரிகள் என்று பஞ்சப்பாட்டுப் பாடுவது ஏன்?

சரி, இனப்பிரச்சினைக்கு மற்றவர்கள் வைத்த தீர்வு என்ன?
அட, கேவலம், கூட்டாட்சியைக்கூட ஏற்றுக்கொள்ள முடியாதென்று சொல்லிக்கொண்டிருக்கும் சிங்கள அரசாங்கம் 'தீர்வுக்கு முன்வரும் சக்தியாக' உங்களுக்குத் தெரிகிறது.

1:21 AM, August 24, 2007
Vigneshwaran Angamuth said...

---தமிழர்கள் மீது இந்தியா போர் தொடுக்கிறது--- this probably to my knowledge is false information. LTTE s wanted the friction as much as SLA. The gullible army was caught in the middle.

1:48 PM, August 27, 2007
சதுக்க பூதம் said...

இந்து ராம் பற்றிய உங்களது தவறான கண்ணோட்டத்தை நான் வண்மையாக ஆட்சேபிக்கிறேன். கம்யூனிசத்தில் மார்க்சிசம்,லெனினிசம்,ஸ்டாலினிசம் மற்றும் மாவோயிசம் தொடர்ந்து காஞ்சி காமகோடியிசம் என்று புதிய கம்யூனிச சித்தாந்தத்தை கொடுத்து உலகை உய்விக்க வந்த போராளியை தவறாக புரிந்து வைத்துள்ளீர்கள்.BLOOD IS THICKER THAN WATER.

1:18 AM, August 28, 2007
சதுக்க பூதம் said...

"The Hindu" Journalism like the movie "Tomorrow Never Dies"


Since closer tie between India and US is not good for China, "The Hindu" spreads false information like "Manmohan rejected Bush meeting in his ranch". All other papers published that Manmohan accepted the meeting request.But Hindu alone published in other way.
See the link below
http://www.hinduonnet.com/thehindu/thscrip/print.pl?file=2007080650130100.htm&date=2007/08/06/&prd=th&

News from other papers
http://economictimes.indiatimes.com/PM_accepts_Bushs_ranch_invitation/articleshow/2263234.cms

1:28 AM, August 28, 2007
மாறன்(maran) said...

அருமையான கட்டுரை நண்பரே என் நன்றிகளும் பாராட்டுகளும்

5:33 AM, August 30, 2007
Naanjil Peter said...

திரு. தழிழ் சசி அவர்களுக்கு உளங்கனிந்த நன்றி.
தெரியாத அல்லது மறைக்கப் பட்ட பல சரித்திர நிகழ்வுகளையும், செய்திகளையும்
புரியும்படி கோர்வையாக வெளி கொண்டு வந்திருக்கிறீர்கள். மிகவும் ஆற்றலான படைப்பு. தமிழினத்திற்கு மிகவும் தேவையானது. முகமூடிகள் கிழிக்கப் பட்டு உண்மை முகங்கள் வெளிச்சத்திற்குக் கொண்டு வரப்பட்டுள்ளது.

இந்தச் சரித்திர உண்மைகளை ஒரு நல்ல நூலாக பன்முகப் படுத்தி வெளியிட்டு, தமிழ்
சமுதாயத்திற்கு ஒரு சரியான வழிக் காட்ட வேண்டியது நமது கடமை.

திருக்குறள் எண் 647 மற்றும் 648 கருத்துக்களின் படி உங்களால் இந்த தமிழ்ச்
சேவையை உலகத்திற்கு அருள முடியும்.
நன்றியுடன்
நாஞ்சில் எ. பீற்றர்

1:21 PM, September 20, 2007
சுரேஷ் ஜீவானந்தம் | Suresh Jeevanandam said...

தெரியாதன பல தெரிந்து கொண்டேன். நன்றி. தொடரைத் தொடருங்கள்.

3:00 PM, September 20, 2007
பாரதி தம்பி said...

ஆவணப்படுத்த வேண்டிய ஒரு புத்தகத்தின் பத்திகளை இக்கட்டுரையில் காண முடிகிறது. இதை உங்களுக்கு திருப்திப்படும்வரை முழுமையாக எழுதி முடித்ததும் நிச்சயமாக ஒரு நூலாக வெளியிடுங்கள். புனித பீடங்களின் பூச்சுக்களை கலைக்க இம்மாதிரி எழுத்துக்கள் உதவும். ஒவ்வொரு உதாரணத்துக்கும் பின்னால், உங்கள் வாசிப்பு, உழைப்பு, நினைவாற்றல் அனைத்தும் தென்படுகிறது. மறுபடியும் சொல்கிறேன்.. இதை இணையத்துடன் விட்டுவிட வேண்டாம். உங்களுக்கு எப்போது நேரம் கிடைக்கிறதோ, அப்போது அச்சு நூலாக கொண்டு வர முயற்சியுங்கள். வாழ்த்தும், நன்றியும்.

9:44 AM, March 27, 2008
சிக்கிமுக்கி said...

இச்செய்திகள் அனைத்தையும் உள்ளடக்கி -
இக்கால் அவர் இரண்டாம் முறையாகப் பெற்ற பரிசு தொடர்பான செய்திகளையும் இணைத்து -
ஆங்கிலத்தில் நூலாக வெளியிட வேண்டும்.

உண்மைகள் கயமையால் மூடி மறைக்கப் பட்டிருப்பதை உலகிற்கு வெளிப்படுத்த வேண்டும்.

அன்பன்.
சிக்கிமுக்கி

11:32 PM, October 30, 2008
RAGUNATHAN said...

உங்களுக்கு எப்படி நன்றி சொல்வது என்று தெரியவில்லை சசி....அற்புதமாக எழுதுகிறீர்கள்....நல்ல ஆய்வுக் கட்டுரை...தொடர்ந்து எழுதுங்கள்....முடிந்தால் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து எழுதுங்கள் அப்போதுதான் அகில உலகமும் இவர்களை கிழிக்க முடியும்....நான் எனது நண்பர்களுக்கு உங்கள் கட்டுரைகளை தொடர்ந்து ஈமெயில் மூலம் அனுப்புகிறேன்....ஆங்கிலத்தில் பதிவு இருந்தால் வட இந்தியர்களுக்கும் அனுபலாம்....அப்போதுதான் இது எங்கும் பரவும்...ஒரு கருத்து உருவாகும்....அல்லது ஒரு புத்தகமாக வெளியிடுங்கள்...

அன்புடன்
ரகுநாதன்
கோவை

2:08 AM, October 31, 2008