Sunday, August 12, 2007

காணாமல் போகும் தமிழர்கள்...

இலங்கையில் நடந்து வரும் இனப்பிரச்சனை கடந்த பல ஆண்டுகளை விட இப்பொழுது ஈழத்தமிழர்களை பலமாக தாக்கி வருகிறது. ஈழப் போராட்டத்தை முன்னெடுக்கும் "தமிழர்களை" கடத்திச் சென்று பிறகு கொல்லும் பயங்கரவாதத்தை சிறீலங்கா அரசாங்கம் செய்து வருகிறது. இது சிறீலங்கா "அரசு பயங்கரவாதம்" ஆகும்.

கடந்த ஒரு வருடத்தில் மட்டும் சுமார் 2000 தமிழர்கள் காணாமல் போய் இருக்கிறார்கள். 5000க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டிருக்கின்றனர். காணாமல் போகும் தமிழர்கள் அனைவருமே அதிபாதுகாப்புமிக்க கொழும்பு மற்றும் பிற அரசாங்க கட்டுப்பாட்டு பகுதியில் இருந்து தான் கடத்தப்பட்டிருக்கின்றனர். இவை தவிர கொழும்பு மற்றும் கிழக்கு மாகாணங்களில் அரசாங்கத்தின் துணை இராணுவப்படையினர் பெரும்மளவில் பணப்பறிப்பு, ஆட்களை கடத்தி பணம் வசூலிப்பது போன்றவற்றை செய்து வருகின்றனர்.

தமிழர்களில் பாராளுமன்ற உறுப்பினராக இருப்பவர்கள் கூட அரசாங்கத்தின் இந்த தாக்குதலுக்கு பலியாகி கொண்டு தான் இருக்கின்றனர். சில மாதங்களுக்கு முன்பு தமிழ் பாரளுமன்ற உறுப்பினர் ரவிராஜ் சுட்டுக்கொல்லப்பட்டார்.

உலகிலேயே மனித உரிமை மிக மோசமாக இருக்கும் நாடுகளில் இரண்டாம் இடத்தினை சிறீலங்கா பெற்றுள்ளது. முதல் இடம் இராக்கிற்கு. அது போலவே இராக்கிற்கு அடுத்த படியாக அதிகளவில் காணாமல் போகும் மக்களை கொண்ட இடமாக சிறீலங்கா உள்ளது. காணாமல் போகும் மக்கள் அனைவருமே தமிழர்கள்.

இலங்கையில் நடக்கும் மனித உரிமை மீறல்கள் குறித்த செய்திப்படத்தினை சமீபத்தில் பார்த்தேன். அந்த செய்திப்படத்தை இங்கே தருகிறேன். இந்த செய்திப்படம் 13 நிமிடங்கள் செல்லக்கூடியது. ஒரு வெளிநாட்டு நிருபரால் எடுக்கப்பட்டிருக்கிறது.

அந்த வீடியோவினை இங்கே பார்க்கலாம் - http://www.youtube.com/watch?v=poYN8ikai60

இதற்கு அரசாங்கத்தின் பதில் என்ன ? அல்ஜசீரா தொலைக்காட்சிக்கு சிறீலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவே முன்பு ஒரு முறை கூறிய பதில் - "காணாமல் போனவர்கள் ஜெர்மனியில், லண்டனில் இருப்பதாக" கூறியிருக்கிறார். சிறீலங்கா அரசாங்கம் கடவுச்சீட்டு கொடுத்தால் தான் அவர்கள் வெளிநாடு செல்ல முடியும். அரசாங்கம் அவர்களின் கடவுச்சீட்டு எண்களை கொடுக்குமா ?


ராஜபக்ஷவின் பேட்டியின் முதல் பகுதி இங்கே - http://www.youtube.com/watch?v=SvuDaiVlOyc

கடந்த வாரம் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் இருந்து செயல்படும் Human Rights Watch அமைப்பு சிறீலங்கா அரசாங்கத்தை கடுமையாக சாடி இருக்கிறது. சிறீலங்கா அரசு தமிழர்களுக்கு எதிரான போரினை முன்னெடுக்க மனித உரிமை மீறல்களை அங்கீகரித்து இருப்பதாக அந்த அமைப்பு சாடி உள்ளது.

மனித உரிமை கண்காணிப்பு அமைப்பின் குறித்த விபரங்கள் பிபிசி இணையத்தளத்தில் உள்ளது

http://news.bbc.co.uk/2/hi/south_asia/6932772.stm

A US-based human rights group has accused the Sri Lankan government of what it calls a shocking rise in abuses by its security forces.
Human Rights Watch said there had been an increase in unlawful killings, enforced disappearances and other abuses over the past 18 months.

The group's Asia director, Brad Adams, said the government had apparently given the green light to its security forces to use the tactics of dirty war.

The report said the Tamil Tiger rebels stood accused of targeting civilians, extortion and the use of child soldiers.

But Mr Adams said that was no excuse for what he described as the government's campaign of killings, disappearances and the forced returns of the displaced.

According to Human Rights Watch, from January 2006 until June this year, more than 1,000 abductions had been reported in Sri Lanka.

***************

சிறீலங்கா கடவுச்சீட்டு (பாஸ்போர்ட்) வைத்திருப்பது தொடர்பான விவாதம் வலைப்பதிவுகளிலே சென்று கொண்டிருக்கும் இவ் வேளையில் இங்கிலாந்தில் முக்கியமான தீர்ப்பு ஒன்று வெளியாகி இருக்கிறது.

இங்கிலாந்தில் அரசியல் அடைக்கலம் கோரும் தமிழர்கள் சிறீலங்காவிற்கு திரும்பி செல்வது தங்களின் உயிருக்கு பாதுகாப்பற்றது என்ற வாதத்தை முன்வைத்தது தொடர்பான தீர்ப்பிலே, தமிழர்கள் சிறீலங்கா திரும்பி செல்வது அவர்களின் உயிருக்கு பாதுகாப்பற்றது தான் என நீதிமன்றம் தீர்ப்பு கூறியுள்ளது

UK in landmark Sri Lanka ruling -
http://news.bbc.co.uk/2/hi/south_asia/6937471.stm


Sri Lankan Tamil asylum seekers in the UK are at risk of torture if returned to Sri Lanka, according to a landmark ruling by a British tribunal.

An asylum and immigration tribunal on Monday upheld an appeal by a Sri Lankan refugee known only as Mr LP.

The ruling is also intended to offer guidance for similar cases in the UK.

Mr LP's lawyers argued that he was at risk of torture if he returned home because of his perceived support for Tamil Tiger separatists.

புலிகள் அமைப்பு இங்கிலாந்தில் தடைசெய்யப்பட்ட ஒரு அமைப்பு. ஆனால் அவர்களின் ஆதரவாளர்களுக்கு அந் நாடு "மனித நேய" அடிப்படையில் அடைக்கலம் தருகிறது என்பது ஒரு குறிப்பிடத்தக்க விடயம்.

7 மறுமொழிகள்:

குழைக்காட்டான் said...

மகிந்தவின் சொல்லை அப்படியே 125 ஆண்டு பாரம்பர்யம் மிக்க இந்துவில் எழுதும் ஸ்ரீதர் ரெட்டியை நம்புவார்களா கேவலம் முஸ்லிம் பயங்கரவாத நாடொன்றில் இருந்து வரும் அல்ஜஸீராவை நம்புவார்களா?
ஏன் நேரத்தை வீணடிக்கிறீர்கள்.
அது சரி ஜேர்மனி, இங்கிலாந்து போன தமிழர் எந்தப் பாஸ்போட்டில் போனார்கள் என்று மாலனுக்குத்தெரிந்தால் புலிகளின் பொய்பிரச்சாரத்தை முறியடிக்க முடியும்

9:43 PM, August 12, 2007
வெற்றி said...

சசி,
பதிவுக்கு மிக்க நன்றி.

சிங்கள அரசு தமிழ்மக்கள் மீது பலவிதமான யுத்தங்களையும் மேற்கொண்டு வருகிறது.

பலவிதமான யுத்தம் என்று நான் சொல்பவை:

1.இராணுவத் தாக்குதல்கள் மூலம் தமிழர்களைக் கொல்வதோடு அவர்களின் சொத்துக்களை அழிப்பது.

2.பொருளாதாரத் தடைகள்/மருத்துவ மருந்துகளைத் தடை செய்தல்

3. உள ரீதியான யுத்தம்.[Psychological warfare (psywar)

ஆட்கடத்தல், கற்பழிப்பு போன்றன இந்த உள ரீதியான யுத்ததிற்குள் அடக்கலாம். இப்படி உள ரீதியான யுத்தத்தைத் தமிழ்மக்கள் மீது திணித்து அவர்களின் மனவுறுதியைக் குலைக்க முயல்வதோடு, அவர்களைப் பயமுறுத்துவது போன்ற இலக்கோடு சிங்கள அரசு செயற்படுகிறது.

10:02 PM, August 12, 2007
அற்புதன் said...

இந்திய வம்சாவழித் தமிழருக்கும் ஈழத் தமிழருக்கும் இடையில் பிரிவினைகளை உருவாக்கவும் அதனை ,ஈழத் தமிழர்கள் இந்தியத் தமிழர்களை ஒதுக்குவதாகவும் ஒரு மிகப் பெரிய பொய்யை அவிழ்த்து விட்டுள்ள மாலனுக்கு, மேல் உள்ள விபரணத்தில் சில பதில்கள் இருக்கிறன.

மேல் உள்ள விபரணத்தில் வரும் பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் ஒரு இந்திய வம்சா வழித் தமிழர்,ஐகிய தேசியக் கட்சியுடன் அரசியற் கூட்டு வைத்திருக்கும் ஒரு தமிழர்.அவர் தெளிவாகவே தமிழ்த் தேசியப் போராட்டத்தை நசுக்கவே சிறிலங்கா அரசு இவ்வாறான மனித உரிமை மீறல்களைச் செய்கிறது என்று கூறுகிறார்.அத்தோடு கொன்று ஒழிக்கப்பட்ட,கடத்தப்பட்ட தமிழர்களில் பலர் இந்திய வம்சாவழித் தமிழர்கள்.
இந்திய வம்சாவழித் தமிழர்களைப் பிரதி நிதிப் படுத்தும் தொணடமான் அவர்கள் அரசில் ஒரு அமைச்சராக இருக்கும் நேரத்திலையே இவை நடந்தன.மேலும் இப்போது அவர் அமைச்சரவையில் இருந்து விலகியதற்க்கு முக்கிய காரணம்,ஒரு மூத்த இந்திய வம்சாவழி தமிழ் அமச்சரை, இன்றையை சிறிலங்கா அரசின் சகோதரர் பசில் ராஜபக்ஷ்ச 'பறத் தமிழா' என்று பேசியது தான் காரணம்.தமது அரசுக்கு ஆதரவு தரும் ஒரு அமைச்சருக்கே இந்த நிலை என்றால் சாதரணத் தமிழர்களை நினைத்துப் பாருங்கள்?இங்கே சிறிலாங்கா அரசானது தமிழர்கள் எல்லோரையும் ஒன்றாகவே பார்க்கிறது ,அழிக்கிறது, நசுக்கிறது.ஆனால் மாலன் பொன்றோரே இந்தியத் தமிழர்கள், ஈழத்தமிழர்கள் என்று பிரிவினைகளை உண்டு பண்ணும் வண்ணம் நச்சுத் தனமான திருப்புக்களை எழுதி வருகிறார்.

இன்னும் சொல்வதானால் விடுதலைப் புலிப் போராளிகளே பலர் இந்திய வம்சாவழித் தமிழர்கள்.கிளி நொச்சியில் பல இந்திய வம்சா வழித் தமிழர்கள் வாழ்த்து வருகின்றனர்.பலர் இன்றும் அங்கு மலைய்கத்தில் இருந்து இடம் பெயர்ந்து குடியேறிக் கொண்டு இருக்கின்றனர்.விடுதலைப் புலிகளின் போராட்டம் தமக்கும் ஒரு விமோசனத்தைத் தரும் என்றே இந்திய வம்சாவழித் தமிழர்களும் நம்புகின்றனர்.

2:34 AM, August 13, 2007
தமிழ் சசி | Tamil SASI said...

அற்புதன்,

ஜீ.ஜீ.பொன்னம்பலத்தை மட்டும் முன்னிறுத்தி தந்தை செல்வா என ஈழத்தமிழர்களால் அழைக்கப்படும் எஸ்.ஜே.வி.செல்வநாயகம் இந்திய வம்சாவளி தமிழர்களின் உரிமைக்காக குரல் கொடுத்ததை மறைக்கும் ஒரு முயற்சியும், இந்திய மற்றும் ஈழத்தமிழர்களிடையே பகை மூட்டி விடும் ஒரு முயற்சி தான் இந்த வாதம்

யாழ்ப்பாணத்தமிழர்கள் என்றால் யார் ? யார் இந்தியத் தமிழர்களுக்கு எதிராக செயல்பட்டார்கள் என்பதை விளக்கினால் நன்றாக இருக்கும்...

வரலாற்றின் சில பக்கங்களில் இருந்து...

S. J. V. Chelvanayakam, then a member of the Tamil Congress, strongly dissented from these bills (The Citizenship Act of December 1948 and the Parliamentary Elections Amendment Act of 1949 ) and left the T.C. to form a new party, the Federal Party, which was 25 years later to absorb other Tamil parties and become the Tamil United Liberation Front (T.U.L.F.). Dr. E. M. V. Naganathan and Mr. C. Vanniasingham were two other eminent figures who left the T.C. to form the Federal Party whose Tamil name read: "The Tamil State Party."

இது குறித்து விரிவாக எழுதும் எண்ணம் இருக்கிறது...

2:54 AM, August 13, 2007
வெற்றி said...

சசி,
அதுமட்டுமல்ல, 1920களின் கடைசியில் இந்திய வம்சாவளித் தமிழர்களுக்கு வாக்குரிமை அளிக்க வேண்டுமா எனும் விவாதம் பிரிட்டிஸ் குடியேற்ற அரசால் விவாதிக்கப்பட்டது. அப்போது சேர்.பொன்.அருனாசலத்தின் மகனான மகாதேவா அவர்கள், கட்டாயம் மலையகத் தமிழ்மக்களுக்கு வாக்குரிமை வேண்டும் என வாதிட்டு பிரிட்டிசாரைச் சம்மதிக்க வைத்தார்.

ஜி.ஜி. பொன்னம்பலம் கூட 1948ல் முதலாவது சுற்று வாக்கெடுப்பில் எதிர்த்துத்தான் வாக்களித்தார்.

3:01 AM, August 13, 2007
thiru said...

சசி ஒளிப்பதிவு சுட்டிகளுக்கு நன்றி! இரண்டாவது சுட்டியில் பேட்டியாளரின் கடைசி கேள்விக்கு மகிந்தா ராஜபக்சே சொல்லும் பதில் சிரிப்பை தான் வரவழைக்கிறது. சமாதானம் பேச வந்த நார்வே, ஐரோப்பா மற்றும் உலகநாடுகளை ஏமாற்றி, உதவியாக வழங்கிய பல கோடி பணத்தை "ஸ்வாகா" செய்தது மட்டுமல்ல, இதுவரையில் இல்லாத அளவு கடத்தல், கொலைகளுக்கு காரணமாகவும் இருப்பது மகிந்தா அரசு தான். இந்த இலட்சணத்தில் இந்தியா தலையிடவேண்டும் என முழங்குகிறார் மகிந்தா. ஐ.நா அதிகாரியின் அறிக்கையையே தனிநபர் தாக்குதலாக குறிவைக்கும் இலங்கைக்கு, இந்தியாவின் துணை தேடுவதில் சூட்சுமம் இருக்கிறது. சிங்கள பேரினவாதமும், பார்ப்பனீயமும் மாமன், மச்சான் உறவில் கூட்டு சேர்வதில் வியப்பில்லை!

5:01 AM, August 13, 2007
வெற்றி said...

"The government’s blanket denials of any wrong doing on its part may convince the rural masses who have no sources of alternative information other than that churned out by the government media. This may help to keep the government in power. But these denials will neither convince the international community nor will it convince the affected populations and others within Sri Lanka who do have access to such information. This will not help in problem solving, which requires a government with credibility that is prepared for reality."
[Jehan Perera, Ground realities contradict government denials, Daily Mirror, Aug 14, 2007]

12:24 AM, August 14, 2007