Monday, September 24, 2007

சேது சமுத்திரம் : பொருளாதார வாய்ப்புகள் : கலைஞரை ஏன் ஆதரிக்க வேண்டும் ?

தமிழக முதல்வர் கலைஞர் அவர்களின் தலைக்கு சங்பரிவார் "முட்டாள் கூட்டம்" தங்கக்காசுகளை விலையாக நிர்ணயித்து இருக்கின்ற கேலிக்கூத்தான நிகழ்வுகளும், தன்னுடைய ஓட்டு வங்கிக்காக அத்தகைய காவிக்கூட்டங்களின் அறிவிப்பினை கைக்கட்டி அச்சத்துடன் பார்த்துக் கொண்டிருக்கிற காங்கிரஸ் அரசாங்கமும் அணு ஆயுத, பொருளாதார வல்லரசான இந்தியாவின் விஞ்ஞான அறிவினை கேலிக் கூத்தாக்கி இருக்கிறது. இந்தியாவின், இந்தியர்களின் இத்தகைய "விஞ்ஞான அறிவு" உலகெங்கும் சந்தி சிரித்து கொண்டிருக்கிறது. இந்தியா ஒரு மதச்சார்பின்மை நாடு என கூறிக்கொண்டாலும் அவ்வப்பொழுது தன் மதச்சார்பின்மை முகமூடியை விலக்கி "காவிச் சாயத்தை" வெளிப்படுத்தும். அத்தகைய தருணங்களில் இதுவும் ஒன்று. பாக்கிஸ்தானிலும், ஆப்கானிஸ்தானிலும் இருக்கும் இஸ்லாமிய மத அடிப்படைவாதிகள் குறித்து நம்மவர்கள் குறை கூறுவதும் நக்கல் அடிப்பதும் எப்பொழுதுமே வழக்கமானது. இந்த பிரச்சனையில் இந்தியர்களின் மத அடிப்படைவாதம் தெளிவாக வெளிப்பட்டது என்பது தான் உண்மை.

பொருளாதார, இராணுவ வல்லரசான இந்தியாவில் இப்பொழுது முக்கிய பிரச்சனை குரங்குகள் கூட்டணியுடன் ராமர் கட்டியதாக கதையளக்கப்படும் ஆதம் பாலம் என வழங்கப்படும் தீவுக்கூட்டம். இந்த ஆதம் பாலத்தை பல தலைமுறைகளாக ராமேஸ்வரம் பகுதியில் வசிக்கும் மக்கள் மணல் திட்டு என்றே வழங்கி வருகிறார்கள். ஆனால் திடீரென்று வலதுசாரி இந்துத்துவா கும்பல் இதனை "ராம் சேது" என பெயர் மாற்றம் செய்து விட்டது. இவர்களின் வாதத்திற்கு வக்காலத்து வாங்குவது போல வட இந்திய ஊடகங்களும் இதனை ஓங்கி முழங்கி வருகின்றன.

பெரும்பாலான வட இந்திய ஊடகங்களில் எப்பொழுதுமே வலதுசாரி முழக்கங்கள் காணப்படுவது வழக்கமான ஒன்று. இந்தியாவின் ஆங்கில செய்தி ஊடகங்களில் தென்னிந்தியச் செய்திகள் குறித்து விவாதிக்கப்படும் பொழுது கூட வட இந்திய வாடையும்/பார்வையும் முழுமையாக வீசிக்கொண்டிருக்கும். உண்மையை தெரியாத அரைகுறை செய்தியாளர்களின் உளறல் எப்பொழுதுமே இருக்கும். இப்பொழுது அது உச்சகட்டத்தில் இருக்கிறது. இந்த திட்டம் குறித்து தவறான தகவல்கள் திட்டமிட்டு பரப்ப படுகின்றன. ஹிந்து போன்ற தமிழகத்தில் இருந்து வெளியாகும் ஊடகங்கள் அவற்றில் விதிவிலக்கானவை. (ஹிந்துவின் அரசியல் வேறு வகையானது).

****

சேது சமுத்திர திட்டம் தமிழர்களின் 150 ஆண்டு கால கனவு என்பதில் எனக்கு பெரிய உடன்பாடு இல்லை. தமிழனின் பொருளாதாரம் இதை நம்பி மட்டுமே இன்றைக்கு இல்லை. இந்தியாவில் பொருளாதார வளர்ச்சி அடைந்த மாநிலங்களில் தமிழகம் முதல் 3 இடத்தில் இருக்கிறது. தமிழகத்திற்கு ஏராளமான வெளிநாட்டு முதலீடுகள் வந்து கொண்டிருக்கிறன. இவை அனைத்துமே தமிழ்நாட்டின் இயற்கையான சூழல் காரணமாகவும், தமிழனின் மனித வளம் காரணமாகவே வந்துள்ளன. மைய அரசாங்கத்தின் பங்களிப்பு மிகவும் குறைவே. நெய்வேலி போன்ற பகுதிகளில் கூட தமிழகத்தின் இயற்கை வளம் காரணமாகத் தான் மைய அரசு நிறுவனங்கள் உள்ளனவே தவிர வேறு எந்தக் காரணங்களாலும் அல்ல. நெய்வேலியில் தமிழகத்தின் இயற்கை வளத்தை உறிஞ்சும் மைய அரசாங்கம் தமிழகத்திற்கு ராயல்டி கூட வழங்குவதில்லை. பல தலைமுறைகளாக நெய்வேலியில் இருந்த என்னுடைய குடும்பத்தினரும் உறவினர்களும் நெய்வேலி நிலக்கரி நிறுவனத்திற்காக இழந்தது அதிகம். பலன் பெற்றது ஒன்றுமே இல்லை.

மைய அரசாங்கத்திடம் தமிழகம் பல ஆண்டுகளாக எதிர்பார்த்திருந்த திட்டங்களில் சேது சமுத்திரமும் ஒன்று. 1955ல் இந்த திட்டம் குறித்த முதல் ஆய்வு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு பல ஆண்டுகளாக இந்த திட்டம் மைய அரசாங்கத்தால் கிடப்பில் போடப்பட்டது. அன்றைக்கு இந்த திட்டத்தின் மதிப்பு வெறும் 9.98கோடி. ஆனால் இதே காலக்கட்டத்தில் வட இந்திய மாநிலங்களில் இந்திய அரசாங்கம் செய்த பொருளாதார முதலீடு எவ்வளவு என்பதை எண்ணிப்பார்க்க வேண்டும். இன்றைக்கு மைய அரசாங்கத்தின் தலையெழுத்தை நிர்ணயம் செய்யும் மாநிலமாக தமிழகம் உள்ளதால், 9.98கோடி கூட தராமல் தள்ளிப்போடப்பட்ட ஒரு திட்டம் இன்று சுமார் 2500 கோடி ரூபாய் செலவில் தமிழகத்திற்கு கிடைக்கிறது.

இந்த திட்டத்தின் பொருளாதார வாய்ப்புகள் குறித்து பல ஆய்வாளர்களின் அறிக்கைகள் ஊடகங்களில் வெளியாகிக்கொண்டிருக்கின்றன. அனைத்து அறிக்கைகளுமே இந்த திட்டத்திற்கு எதிராக உள்ளவை மட்டுமே. ஆனால் இந்த திட்டம் லாபம் தரும் எனக்கூறிய ஆய்வாளர்களின் அறிக்கைகளும் உள்ளன. அந்த அறிக்கைகள் வெளியாவதில்லை. எது அதிகளவு விளம்பரப்படுத்தப்படுகிறதோ அதைச் சார்ந்தே ஒரு கருத்து ஒற்றுமை உருவாகிறது. ஊடகங்களின் நோக்கமும் அது தான். இந்திய ஊடகங்களின் பல இரட்டை வேடங்களில் இதுவும் ஒன்று. இடஒத்துக்கீடு காலத்தில் இடஒதுக்கீட்டிற்கு எதிரான நிலைப்பாட்டினை வைத்து தன் கோர முகத்தை வெளிப்படுத்தியவை தான் இந்த ஊடகங்கள். மற்றொரு முறை அந்த ஊடகங்களின் வட இந்திய/பார்ப்பனிய/பனியா முகம் வெளிப்படுகிறது.

இந்த திட்டத்தின் அடிப்படை நோக்கம் என்ன ? தமிழகத்தின் கடலோர மாவட்டங்களின் பொருளாதாரம் உயரும் என்பது தான் இந்த திட்டத்தின் நோக்கம். அவ்வாறு பார்க்கும் பொழுது இந்த திட்டம் நிச்சயம் தமிழகத்தின் தற்பொதைய பொருளாதாரத்தை மேலும் பெருக்கும். ஒரு உதாரணத்தைப் பார்க்கலாம். மென்பொருள் துறையை விட்டுவிடுவோம். குறிப்பாக கார் மற்றும் ஆட்டோமோபைல் சார்ந்த தொழிற்சாலைகள் தமிழகத்தில் தான் அதிகம். சென்னை இந்தியாவின் டெட்ரோய்ட் (Detroit) என்று அழைக்கப்படுவதன் முக்கிய காரணம் சென்னையின் உள்கட்டமைப்பு. முக்கியமாக சென்னை துறைமுகம். Manufacturing தொழிற்சாலைகள் அமைக்க துறைமுகம் மிகவும் அவசியம். சென்னையில் ஒரு போர்ட், ஹுண்டாய் தொழிற்சாலை தொடங்கப்படுகின்றன என்றால் அதைச் சுற்றி அந்த தொழிற்சாலைக்கு தேவைப்படும் பல உதிரிப்பாகங்களை தயாரிக்கும் தொழிற்சாலை அவசியமாகிறது. இதனால் பல சிறிய தொழிற்சாலைகள் தொடங்கப்படுகின்றன. அதைத் தவிர மிக சுலபமாக தயாரித்த பொருள்களை ஏற்மதி செய்ய துறைமுகம் அவசியம்.
சென்னை துறைமுகம் இந்தியாவிலேயே இரண்டாவது பெரிய துறைமுகமாக விளங்குவதன் காரணமாகத் தான் இன்று சென்னைக்கு அருகே பல ஆட்டோமோபைல், தொலைத்தொடர்பு சாதனங்களின் உற்பத்தி தொழிற்சாலைகள் உள்ளன.

சேது சமுத்திரம் என்பது வெறும் கால்வாய் வெட்டும் வேலை மட்டுமே அல்ல. அது பொருளாதார வளர்ச்சியையும் கொண்டு வரும் வாய்ப்புகளை மறுக்க முடியாது. சேது சமுத்திரம் திட்டம் அறிவிக்கப்பட்ட காலத்தில் இந்த திட்டம் குறித்த பொருளாதார வாய்ப்புகள் அதிகளவில் ஊடகங்களில் வெளியாகின. பல வணிக ஊடகங்களிலும் அவ்வாறான செய்திகளே வந்தன. ஆனால் இன்று காவிக்கூட்டத்தின் முட்டாள்தனத்திற்கு தீனி போடும் வகையில் செய்திகள் வந்து கொண்டிருப்பது அந்த ஊடகங்களின் இரட்டை வேடத்தை தான் தெளிவுபடுத்துகிறது.

பொதுவாகவே இந்தியாவின் உள்கட்டமைப்பு மிகவும் மோசமான நிலையில் இருப்பதாலேயே பொருளாதார வளர்ச்சியில் தேக்கம் தொடர்ந்து கொண்டிருக்கிறது. சீனா பெரிய அளவில் பொருளாதார வளர்ச்சி பெற காரணம் அந் நாடு மிக வேகமாக தனது உள்கட்டமைப்பை பெருக்கி கொண்டுள்ளது தான். உள்கட்டமைப்பு என்னும் பொழுது மிகத் தரமான சாலைகள், விமான நிலையங்கள், துறைமுகங்கள், தொலைத்தொடர்பு, மின் உறபத்தி என அனைத்துமே அடங்கும். சேது சமுத்திரம் போன்ற திட்டங்கள் உள்கட்டமைப்பு, பொருளாதார வளர்ச்சியை அதிகரிக்கதக்கவை என்ற அளவுகோளில் தான் பார்க்கப்பட வேண்டும். மாறாக கடல்போக்குவரத்து மட்டுமே என்பதாக இதனை அணுக முடியாது.

சேது சமுத்திர திட்டம் லாபத்தை கொண்டு வந்து விடாது என்று கூறும் செய்திகளை வெளியிடும் ஊடகங்கள், லாபத்தை இந்த திட்டம் கொடுக்கும் என்ற செய்திகளை/ஆய்வறிக்கைகளை ஏன் வெளியிடுவதில்லை ?

இந்த திட்டத்தால் லாபம் உண்டு/இல்லை என்ற இரண்டுமே வெறும் ஊகங்கள் தான். இதில் எது உண்மை, பொய் என யாரும் உறுதியாக கூறிவிட முடியாது.

தூத்துக்குடி துறைமுகம் குறித்து ஆய்வறிக்கை ஒன்றினை தயாரித்த PricewaterhouseCoopers இவ்வாறு கூறுகிறது. தூத்துக்குடி துறைமுகத்தின் இந்த வாய்ப்பினை பெருக்க சேது சமுத்திரம் மிகவும் அவசியம்.

THE Tuticorin port has the potential to become an international container transhipment hub given its unique geographical location, says a feasibility study by PricewaterhouseCoopers Pvt Ltd (PwC).

இது தவிர சேது சமுத்திர திட்டம் குறித்த feasibility அறிக்கையினை L&T Ramboll ஏற்கனவே வழங்கியுள்ளது.

ஒரு சிறிய உதாரணத்தை மட்டும் பார்த்தாலே தூத்துக்குடி துறைமுகம் எந்தளவுக்கு முக்கியத்துவம் பெறும் என்பது புரியும். கொழும்பு துறைமுகத்தில் நடக்கும் சரக்கு போக்குவரத்தில் சுமார் 40% இந்தியாவின் கிழக்கு மேற்க்கு பகுதிகளுக்கு நேரடியாக செல்ல முடியாத காரணத்தால் கொழும்பு துறைமுகத்தின் மூலமாக நடக்கிறது. சேது சமுத்திரம் திட்டம் அமல் படுத்தப்பட்டால் இது தூத்துக்குடி துறைமுகம் மூலமாக நடக்கும்.

The Colombo port currently handles 1.7 million twenty-foot equivalent units (TEUs) of which 40 per cent is Indian transhipment cargo. It fears Sethusamudram project can wean away a substantial chunk of it.

உண்மைகள் இவ்வாறு இருக்க காவிக்கூட்டத்திற்கு வக்காலத்து வாங்கும் வகையில் செய்திகள் வெளியிடும் தொலைக்காட்சி மற்றும் வணிக ஊடகங்கள் குறித்து நாம் முடிவு செய்து கொள்ள முடியும்.

நான் இங்கு வைத்துள்ள புள்ளி விபரங்கள் அனைத்தும் http://sethusamudram.info என்னும் இணையத்தளத்தில் உள்ளன

****

சேது சமுத்திரம் திட்டத்தின் அடுத்த முக்கிய பிரச்சனையாக கூறப்படுவது சுற்றுப்புறச்சூழல் மற்றும் கடல் வாழ் இனங்களுக்கு ஏற்படக்கூடிய பாதிப்பு. இந்த பிரச்சனை குறித்து சங்பரிவார் கோஷ்டிகளுக்கு இப்பொழுது தான் தெரிகிறதா ?

சுற்றுப்புறச்சூழல் மட்டுமல்ல பல மக்களின் வாழ்வியலை குலைத்த நர்மதா அணைக்கட்டு திட்டத்தை இந்த காவிக் கும்பல் எதிர்த்ததா ? மேதா பட்கர் தனியாளாக போராடிய பொழுது இந்தியாவின் நீதிமன்றங்கள், ஊடகங்கள், அரசியல்வாதிகள் என அனனவருமே வளர்ச்சி திட்டத்தை மேதா பட்கர் குலைப்பதாக தானே கூறினார்கள். இந்திய உச்ச நீதிமன்றம் மேதா பட்கருக்கு எதிராக தீர்ப்பு வழங்கியதே...

சுற்றுப்புறச்சூழல் விடயத்தில் கூட சேது சமுத்திர திட்டம் பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தி விடாது என்ற கருத்துகளும் முன்வைக்கப்படுகின்றன - Sethu project will not create geological imbalance

மீனவர்கள் கூட முன்பை விட அதிக மீன்கள் கிடைக்க வாய்ப்பு இருப்பதாக கூறுகிறார்கள் - http://sethusamudram.info/content/view/20/32/

என்றாலும் இவையெல்லாம் வெறும் தியரி (theory). உண்மையில் என்ன நடக்கும் என யாரும் சரியாக கணிக்க முடியாது என்பதே உண்மை. இந்த திட்டத்தை பொருளாதார காரணங்களுக்காக ஆதரிக்கலாம். என்றாலும் சுற்றுப்புறச்சூழலுக்கு இந்த திட்டம் தீங்கு விளைவிக்க கூடிய வாய்ப்புகளை மறுக்க முடியாது. இயற்கையான எந்த ஒரு விடயத்தையும் செயற்கையாக மாற்றும் பொழுது சில எதிர்விளைவுகள் ஏற்படும். எனவே சுற்றுப்புறச்சூழலுக்காக மட்டுமே இந்த திட்டத்தை எதிர்க்கவேண்டிய அவசியம் நேருகிறது.

****

"Ram is a big lie: Karunanidhi" என்பது தான் கடந்த வாரம் பல வட இந்திய பத்திரிக்கைகளின் தலைப்புச் செய்தி. இந்தச் செய்தியை இந்த ஊடகங்கள் அதிர்ச்சியாக வெளியிட்டு உள்ளது தான் உச்சகட்ட காமெடி. கலைஞரை சாடி பல வட இந்திய ஆங்கில நாளிதழ்களில் கட்டுரைகள் எழுதப்பட்டுள்ளதை கூகுள் மூலமாக படித்து சிரித்து ரசிக்கலாம் :). இதனை "Blasphemy" :) என்று கதறும் ஊடகங்களும் அடக்கம். "Even Aurangzeb or the Britishers never questioned the existence of Lord Ram," என அழுகிறார் பாஜக தலைவர் ராஜ்நாத்சிங்

கலைஞர் ராமாயணம் என்ற கதையின் "கதாபாத்திரம்" ராமன் குறித்து பேசியது தவறு என பலர் கூறி வருகின்றனர். ஆனால் கலைஞர் கூறியதில் எந்த தவறும் இல்லை. இதனை இன்னும் வலுவாக, தெளிவாக கலைஞர் கூறியிருக்க வேண்டும் என்பது தான் என்னுடைய ஒரே வருத்தம்.

தமிழர்களின் கலாச்சாரத்தை தட்டையாக "இந்து" என்ற சொல்லாடலில் அடைப்பதை எதிர்க்க வேண்டிய அவசியம் உள்ளது. இந்த பிரச்சனையில் கலைஞர் முன்வைத்த வாதம் வட இந்தியாவில் பிரபலப்படுத்தப்பட்டு விவாதிக்கப்பட்டது ஒரு வகையில் நன்மையே. இந்து மத வெறியர்களை தவிர உண்மையை அறிந்து கொள்ள நினைக்கும் பலருக்கு இந்த உண்மை சென்று சேர்ந்து இருக்கிறது. பெரியார் குறித்தும் சில விவாதங்கள் நடப்பதை சில இணையத்தளங்களிலும், தொலைக்காட்சியிலும் காண முடிந்தது. Periyar An Iconoclast and a Reformer.

அது மட்டுமில்லாமல் இந்தப் பிரச்சனையின் பொழுதும், காஞ்சி மடாதிபதி கைது செய்யப்பட்ட பொழுதும், அயோத்தி பிரச்சனையின் பொழுதும் ஒட்டுமொத்த இந்தியாவில் இருந்து விலகி நிற்கும் ஒரே மாநிலம் தமிழகம் தான் என்பதும் பிற மாநில மக்களுக்கு தெளிவாகியிருக்கும். பெரியார் மாற்றம் செய்த மண் இது. இங்கு இந்து/இஸ்லாமிய/கிறுத்துவ என எந்த மத வெறியர்களுக்கும் வேலையில்லை.

இந்தப் பிரச்சனையை இந்து வெறியர்கள் தொடர்ந்தால் இந்து மதத்தை விமர்சிப்பதை ஒரு இயக்கமாக திராவிட அமைப்புகள் "மறுபடியும்" தொடங்க வேண்டும் என்பதே என் விருப்பம். எல்லா பேதங்களையும் கலைந்து தமிழர்கள் அனைவரும் கலைஞருக்கு இந்தப் பிரச்சனையில் முழுமையான ஆதரவு அளிக்க வேண்டியது அவசியமாகிறது.

14 மறுமொழிகள்:

ஜோ/Joe said...

//பெரியார் மாற்றம் செய்த மண் இது. இங்கு இந்து/இஸ்லாமிய/கிறுத்துவ என எந்த மத வெறியர்களுக்கும் வேலையில்லை.//

ரிப்பீட்டே!

11:35 PM, September 24, 2007
சிவபாலன் said...

// இந்தப் பிரச்சனையை இந்து வெறியர்கள் தொடர்ந்தால் இந்து மதத்தை விமர்சிப்பதை ஒரு இயக்கமாக திராவிட அமைப்புகள் "மறுபடியும்" தொடங்க வேண்டும் என்பதே என் விருப்பம். எல்லா பேதங்களையும் கலைந்து தமிழர்கள் அனைவரும் கலைஞருக்கு இந்தப் பிரச்சனையில் முழுமையான ஆதரவு அளிக்க வேண்டியது அவசியமாகிறது. //


மிகச் சரி!

12:12 AM, September 25, 2007
Unknown said...

Once again, your stupidity is revealed by the argument that you build towards the end :-)

Majority intellectuals including the bloggers grasped the 'vote bank politics' of Mr.M.Karunanidi and condemned it. Do you know why? It is for the very reason to avoid inciting communal tension.

so, your argument that we must support M.K. for social harmony is ridiculous

12:33 AM, September 25, 2007
தமிழ் சசி | Tamil SASI said...

சேது சமுத்திரம் திட்டம் குறித்து கூறப்படும் மற்றொரு முட்டாள் தனமான வாதம் Vote Bank Politics என்பது.

சேது சமுத்திரம் திட்டத்தால் எந்த வாக்கும் யாருக்கும் கிடைக்காது. தென்மாவட்டஙகளில் இதன் பலன் கிடைக்க பல ஆண்டுகள் ஆகலாம். இந்த திட்டத்தை கொச்சப்படுத்த செய்யும் வாதம் இது

சேது சமுத்திர திட்டத்தால் நிறைய வாக்குகள் கிடைக்கும் என்றால் வைகோ நிறைய தொகுதிகளை கைப்பற்றியிருக்க வேண்டும். அவர் தான் இந்தப் பிரச்சனையை அதிகளவில் பேசியவர்.

ஆனால் அவர் ஒரு சில தொகுதிகளை கூட பிடிக்க முடியவில்லை

இந்த திட்டத்தை ஜெயலலிதா எதிர்க்கிறார். இந்த திட்டத்தை வைத்து தான் ஓட்டு கிடைக்கும் என்றால் அவர் ஏன் இதனை எதிர்க்கிறார் ?

வட இந்திய ஊடகங்களின் உறளல் தான் சேது சமுத்திரம் Vote Bank Politics என்பது

1:04 AM, September 25, 2007
லக்கிலுக் said...

//இந்த திட்டத்தை ஜெயலலிதா எதிர்க்கிறார். இந்த திட்டத்தை வைத்து தான் ஓட்டு கிடைக்கும் என்றால் அவர் ஏன் இதனை எதிர்க்கிறார் ?//

பா.ஜ.க. இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்தலாம் என்று 2004 தேர்தலுக்கு முன்பாக அறிவித்தபோது "சேது சமுத்திர நாயகி" என்று ஜெ.வுக்கு பட்டம் கொடுக்கப்பட்டு தமிழகமெங்கும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது :-)))))

1:10 AM, September 25, 2007
சாலிசம்பர் said...

//அது மட்டுமில்லாமல் இந்தப் பிரச்சனையின் பொழுதும், காஞ்சி மடாதிபதி கைது செய்யப்பட்ட பொழுதும், அயோத்தி பிரச்சனையின் பொழுதும் ஒட்டுமொத்த இந்தியாவில் இருந்து விலகி நிற்கும் ஒரே மாநிலம் தமிழகம் தான் என்பதும் பிற மாநில மக்களுக்கு தெளிவாகியிருக்கும். பெரியார் மாற்றம் செய்த மண் இது. இங்கு இந்து/இஸ்லாமிய/கிறுத்துவ என எந்த மத வெறியர்களுக்கும் வேலையில்லை.//

பாபர் மசூதி கலவரத்தில் இந்தியாவே பற்றி எறிந்த போது ,தமிழகத்தில் ஒரு இழவு கூட விழவில்லை.அது சிலரின் கண்ணை உறுத்துகிறது.தமிழக மக்கள் அவர்களின் வேட்டியை உருவி விரட்டியடிப்பது உறுதி.

1:36 AM, September 25, 2007
நந்தா said...

முன்முடிவுகள் இல்லாமல்,சாதக பாதங்களை நடு நிலைமையோடு அலசி ஆரயப்பட்ட பதிவு.

இத்திட்டத்தை என்னால் வோட்டு வங்கிக்கான திட்டம் என்பதை ஏற்றுக் கொள்ள முடியாது.

அப்படியாயிருப்பின், ஜெ அம்மையார் இந்நேரம் உயிரைக் கொடுத்தாவது இத்திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்று முழங்கி இருப்பார்.

1:53 AM, September 25, 2007
தருமி said...

ஒரே ஒரு விஷயத்தை எடுத்து மட்டும் பேசிவிட்டு போய்விட்டீர்களே ..

வழக்கமான
ஆழம் சற்று கம்மிதான்.

11:38 AM, September 25, 2007
ஸ்ரீ சரவணகுமார் said...

//இந்தப் பிரச்சனையை இந்து வெறியர்கள் தொடர்ந்தால் இந்து மதத்தை விமர்சிப்பதை ஒரு இயக்கமாக திராவிட அமைப்புகள் "மறுபடியும்" தொடங்க வேண்டும் என்பதே என் விருப்பம். எல்லா பேதங்களையும் கலைந்து தமிழர்கள் அனைவரும் கலைஞருக்கு இந்தப் பிரச்சனையில் முழுமையான ஆதரவு அளிக்க வேண்டியது அவசியமாகிறது.//

சபாஷ்!

2:47 PM, September 25, 2007
தறுதலை said...

இந்த வாய்ப்பை நழுவ விடாமல், இந்திய அளவில் காவிகளை தோலுரிக்க வேண்டும்.


---------------------
தறுதலை
(தெனாவெட்டுக் குறிப்புகள்-'07)
என் வாழ்க்கை இணையம் முழுவதும் கழிந்து கிடக்கிறது.

4:06 PM, September 25, 2007
aandu said...

Please first learn that Periyar and other so called Dravidian leaders worked with a lot of mis-conceptions and mis-information fed to them by British who followed a divide and rule policy.

The Sethu canal does not have any economic or environmental advantages.

As for TN being a caste-less society is a huge farce. We have 69% quota based on caste... Something that no other state has!! We have 7% reservartion for minorities based on religion. Again something which no other state has... And the person who dividedd the ppl so is M.K himself....

In the name of anti-brahminism and and anti-hindi protests, we stand isolated. I am a Tamilan living outside TN facing problems in communicating with the local populace every single day...a problem ppl from neighbouring states faces.

Pls do your research before, learn our culture before commenting...

http://www.rediff.com/news/2007/oct/01inter.htm

2:32 AM, October 04, 2007
மு. மயூரன் said...

தமிழ்சசி,

உங்கள் பதிவில் சேது சமுத்திர திட்டத்தின் அரசியல் குறித்தான தகவல்களை எதிர்பார்த்தேன்.

இத்திட்டத்தினை தமிழக அரசியல், இந்திய கட்சியரசியல் சட்டகங்களுக்குள் வைத்துப் பார்க்க முடியாது.

இத்திட்டம் "இந்தியாவின்" திட்டம்.

பா.ஜா.கா கூட இத்திட்டத்தினை தாம் ஆட்சியில் இருந்திருந்தால் நிறைவேற்றியிருக்கத்தான் வேண்டும் என்று நான் வலுவாக நம்புகிறேன்.

இது இந்திய-அமெரிக்க நலம்ன் சார்ந்த திட்டம். இதை இவ்விரு வல்லரசுகளும் நிறைவேற்றியே தீரும்.

"ராம சேது" விவகாரம் ப.ஜ.க கையிலெடுத்துள்ள கட்சியரசியல் கோஷம். அவர்களுக்கே தெரியும் இத்திட்டத்தை யாராலும் நிறுத்திவிட முடியாதென்பதும், தாம் கூட ஆட்சியில் இருந்திருந்தால் இதனை செய்து முடித்துத்தான் ஆகியிருக்க வேண்டுமென்பதும்.

"ராம சேது" கோஷம் விளைவித்துள்ள எதிர்மறை விளைவு என்ன என்றால், மாற்றுக்கருத்தாளர்களும், திராவிட ஆதரவாளர்களும் சேது சமுத்திரத்தின் தீவிர ஆதரவாளர்களாக மாறிப்போனமை தான்.

இது திட்டமிட்ட சதியோ என்று எண்ணத்தோன்றுகிறது.

நீண்டகால நோக்கில் சேது கால்வாயால் எந்தவிதமான பொருளாதார பாய்ச்சல்களும் ஏற்பட்டுவிடப்போவதில்லை என்றே தோன்றுகிறது.

கப்பல்களின் வேகமும் அளவும் அதிகரித்து வருகிறது. பெரிய கப்பல்கள் திட்டம் முடிந்த பின்னரும் கூட இலங்கையைச்சுற்றி, கொழும்புக்கு வந்தோ வராமலோதான் செல்லப்போகின்றன.

இழக்கப்படவிருக்கும் மீன்வளத்தோடு ஒப்பிடும்போது எந்த வகையில் "பேண்தகு" பொருளாதார அபிவிருத்தியை இத்திட்டம் தருமோ தெரியவில்லை/

இத்திட்டத்தை செயற்படுத்தும் அவசரம், கொடுக்கப்படும் முக்கியத்துவம் எல்லாவற்றையும் தொகுத்துப்பார்க்கும்போது இது ஏகாதிபத்திய-அரசியல்-பொருளாதார நலன் கருதிய திட்டமாகவே படுகிறது.

இந்த நூற்றாண்டின் மிக முக்கியமான பொருளாதார அரசியல் மையமாக மையப்போவது தமிழ்நாடு-தமிழீழம் அடங்கும் பிரதேசமே.

ஒரு வேளை ஒசாமா பின்லேட இறப்பதற்கு அமெரிக்கா அனுமதித்தால் அடுத்த கட்டம் இந்தப்பிரதேசத்தை மையங்கொண்ட காய்நகர்த்தல்களே.

இந்த வேளையில் இந்தப்பிரதேசத்தில் நிகழும் சிறு துரும்பின் அசைவைக்கூட எம்மக்கள் உன்னிப்பாக அவதானிக்க வேண்டும்.

பனாமாவில் நடந்தது கால்வாய் ஒன்றுக்கான அரசியல் சூழ்ச்சி. இங்கே நடக்கப்போவது அரசியல் சூழ்ச்சி ஒன்றுக்கான கால்வாய் வெட்டல்.

மக்கள் போராட்டங்கள் தொடர்பாக மிக ஆழமாக ஆய்வு செய்து எழுதும் உங்களிடம் இந்த அடிப்படையில் சேது சமுத்திரம் தொடர்பான ஆய்வொன்றினை எதிர்பார்க்கிறேன்.

சில கேள்விகள்.

1. இந்த நூற்றாண்டில் இந்து சமுத்திரத்தின் கடல்வழி ஏன் எப்போதைக்குமில்லாத முக்கியத்துவத்தைப் பெறப்போகிறது?

2. இந்தியாவை வல்லரசாக்கும், பலமுள்ளதாக்கும் திட்டமக இது அமையுமென்றால் அமெரிக்கா ஏன் ஆசீர்வதித்துக்கொண்டிருக்கிறது?

3. இத்திட்டம் பற்றிய சீனா, பாக்கிஸ்தானின் நிலைப்பாடென்ன?

4. இந்தியாவின் இந்த நூற்றாண்டுக்கான இராணுவ, தொழிநுட்ப மையம் எந்த மாநிலம்?

5. புலிகள் தோற்கடிக்கப்பட்டு/ வலுக்குறைக்கப்பட்டு மன்னாரும் யாழ்ப்பாணமும் பலவீனமான இலங்கை அரசால் அமெரிக்கத் தளங்களுக்கு தாரை வார்க்கப்பட்டால் நிலமை என்னாகும்?

6. தமிழ்நாட்டை தொடர்ச்சியாக கண்காணிக்கவும் தமது கழுகுப்பார்வையின் கட்டுப்பாட்டுகுள் வைத்திருக்கவும் வேண்டிய தேவை அமெரிக்காவுக்கு இருக்கிறதா?

7. மூன்றாமுலக நாடுகளின் இயற்கை வளங்களை அழிக்கும் திட்டங்களுக்கெல்லாம் அமெரிக்க ஆசீர்வாதம் இவளவு பலமாக வழங்கப்படக் காரணம் என்ன?

8. இந்த நூற்றாண்டில் பெறோலை விட நன்னீருக்கான முக்கியத்துவம் அதிகரிக்கும் என்கிறார்களே, உண்மையா?

2:05 AM, October 08, 2007
தமிழ் சசி | Tamil SASI said...

மயூரன்,

உங்கள் கேள்விகளுக்கும், கருத்துக்களுக்கும் நன்றி

இந்தப் பிரச்சனை குறித்து FAQ வடிவில் எழுத உத்தேசித்துள்ளேன்.

http://blog.tamilsasi.com/2007/10/sethu-samudram-frequently-asked.html

உங்கள் கேள்விகளுக்கு விடை அளிக்க முயற்சிக்கிறேன்

12:36 AM, October 09, 2007
Unknown said...

bjp will rule india 2020...jai hindu...karuna oru durki..he kill tamil hindus in srilanka...kill karuna is great duty

5:44 AM, November 05, 2010