Monday, December 24, 2007

ஒரு மணி நேரத்தில் திரட்டி செய்வது எப்படி ?

திரட்டி, தொழில்நுட்பம், Design என ஆளாளுக்கு பேசிக்கொண்டிருக்கும் பொழுது, நாமும் ஏதாவது பேசி தமிழ் இணைய தொழில்நுட்ப பிதாமகன் என்ற பட்டத்தை வாங்கிக்கொள்ளலாம் என்ற ஒரு சின்ன ஆசையில் திரட்டி செய்வது எப்படி என்பது குறித்து இங்கே எழுத இருக்கிறேன்.

தமிழ் இணைய தொழில்நுட்பத்தில் பல நுட்பமான வேலைகளை ஆரம்பகாலங்களில் செய்து, வலைப்பதிவுகள் சுலபமாக பெருக காரணமாக இருந்த முகுந்த், சுரதா, உமர், காசி போன்றவர்கள் எல்லாம் பின்னுக்கு தள்ளப்பட்டு, திரட்டி குறித்து உரக்கப் பேசும் "கருத்து கந்தசாமிகள்" பிதாமகன் பட்டத்தை பெறும் இக் காலத்தில் திரட்டி, வறட்டி செய்வது குறித்த என்னுடைய Recipe இது. இது பலருக்கும் தெரிந்த Recipe தான். தெரியாதவர்கள் தெரிந்து கொள்ளலாம் அவ்வளவே.

****

ஒரு அடிப்படை திரட்டியை செய்வது மிக, மிக சுலபமான வேலை.

ஒரு மணி நேரத்தில் திரட்டி செய்ய தேவைப்படும் (மென்)பொருட்கள்

  • ஒரு லினக்ஸ் சர்வர் அக்கவுண்ட். கிடைக்கும் இடம் - 1and1, godady போன்றவை...

திரட்டி தயாரிக்க பல திறவுமூல மென்பொருள்கள் கிடைக்கின்றன. இங்கே இருக்கும் பல திரட்டிகள் திறவுமூல மென்பொருள் மூலமாகவே தயாரிக்கபட்டுள்ளன.

சில திறவுமூல மென்பொருள்கள்
தமிழ் திரட்டிகள் பல FoF மற்றும் FoFReduxஐ அதிகமாக பயன்படுத்துகின்றன என நினைக்கிறேன். ஆனால் இந்த இரண்டிலும் சில பிரச்சனைகள் உள்ளன. அடிப்படையில் இவை இரண்டும் Magapie என்ற PHP parserஐ பயன்படுத்துகின்றன. MagapieRSS development கிட்டத்தட்ட தேங்கிப் போய் விட்டது. இதனைக் கொண்டு பதிவுகளை திரட்டுவதில் சில பிரச்சனைகள் உள்ளன. சில வசதிகள் இதில் இல்லை. ஆனால் அடிப்படையான வசதிகள் உள்ளன.

தற்பொழுது அதிக கவனத்தைப் பெற்று வரும் ஒரு parser Simplepie. எனக்கு மிகவும் பிடித்தமான parser இது தான். பல தளங்கள் தற்பொழுது Simplepieஐ இப்பொழுது பயன்படுத்த தொடங்கியிருக்கின்றன. மிகவும் சுலபாக பயன்படுத்த கூடியதாக இருக்கிறது.

இது தான் அடிப்படை.

இப்பொழுது எப்படி திரட்டி செய்யலாம் என்று பார்ப்போம். சுலபமான வழிமுறைக்காக FoFRedux கொண்டு எப்படி திரட்டி செய்யலாம் என பார்க்கலாம்.
http://fofredux.sourceforge.net/ சென்று மென்பொருளை தறவிறக்கி கொள்ளுங்கள். உங்கள் தளத்தின் ஒரு முகவரியில் இதனை நிறுவவேண்டும். உதாரணமாக http://yourdomainname/feeds (உதாரணமாக : http://tamilsasi.com/feeds)

பிறகு config.php.sample என்ற ஒரு Fileல் மாற்றம் செய்ய வேண்டும். இதில் உங்கள் வழங்கியின் (Server) Mysql connection parametersஐ கொடுங்கள்

// Database connection information. Host, username, password, database name.
define('FOF_DB_HOST', "localhost");
define('FOF_DB_USER', "user");
define('FOF_DB_PASS', "password");
define('FOF_DB_DBNAME', "fofredux");
define('FOF_DB_TYPE', "mysql");

config.php.sampleஐ config.php என்ற பெயருக்கு மாற்றம் செய்யுங்கள்

பிறகு http://yourdomainname/feeds/install.php என்ற முகவரிக்கு சென்றால், உங்கள் திரட்டிக்கு தேவையான database tables உங்கள் தளத்தில் நிறுவப்பட்டு விடும்.

பிறகு உங்கள் தளத்தின் முகவரியான http://yourdomainname/feeds சென்று உங்கள் தளம் திரட்ட வேண்டிய செய்தியோடைகளை (RSS Feeds) சேர்க்கலாம். ஒவ்வொரு செய்தி ஓடையாகவும் சேர்க்கலாம். அல்லது பல பதிவுகளின் ஓடைகளை OPML மூலமாகவும் சேர்க்க முடியும். (http://yourdomainname/feeds/add.php).

அது போல உங்கள் தளத்தில் நீங்கள் வைத்திருக்கிற அனைத்து RSS ஓடைகளையும் OPMLக பெற முடியும் - (http://yourdomainname/feeds/opml.php )

அவ்வளவு தான் திரட்டியின் அடிப்படை வேலை முடிந்தது. இப்பொழுது இந்த திரட்டி தானாக பதிவுகளை திரட்ட வேண்டும். http://yourdomainname/feeds/update.php என்ற முகவரிக்கு சென்றால் திரட்டி நாம் கொடுத்துள்ள ஓடைகளை திரட்டும்.

Cron மூலமாக அரை மணி நேரத்திற்கு ஒரு முறை, ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை என்று Schedule செய்ய முடியும். இவ்வாறு செய்வதன் மூலமாக பதிவுகளை தொடர்ச்சியாக திரட்ட முடியும்.

இந்த திரட்டி இரண்டு Mysql tableல்களில் பதிவுகளை சேமிக்கிறது. fr_feedsல் நீங்கள் திரட்டும் பதிவுகளின் பட்டியல் இருக்கும். fr_itemsல் நீங்கள் திரட்டும் இடுகைகள் இருக்கும்

ஒரு அடிப்படையான திரட்டியை இதன் மூலமாக தயாரிக்க முடியும். பின்னூட்டங்களும் ஓடையாக (Comments RSS feed) இப்பொழுது கிடைப்பதால், பின்னூட்டங்களையும் இவ்வாறு திரட்ட முடியும்.

அடுத்து நாம் செய்ய வேண்டியதெல்லாம், ஒரு அழகான முகப்பு பக்கம். இணையத்தில் ஆயிரக்கணக்கான HTML templates கிடைக்கின்றன. நல்ல ஒரு டெம்ப்ளேட்டை எடுத்துக் கொண்டு fr_items tableல் இருந்து இடுகைகளின் பட்டியலை முகப்பு பக்கத்தில் அழகாக வடிவமைத்து காட்டலாம்.

அவ்வளவு தான் - திரட்டி ரெடி.

இப்பொழுது எல்லாவற்றையும் விட முக்கியமான ஒரு வேலை உள்ளது. அது தான் நானும் ஒரு திரட்டியை தயாரித்து விட்டேன் என்று வெளியூலகிற்கு அறிவித்து, தமிழ் இணைய வரலாற்றில் இடம் பிடிக்க முயற்சிப்பது :)

****

மேலே கூறியவை அனைத்தும் PHP சார்ந்த மென்பொருட்கள். இது போல ஜாவா சார்ந்த நுட்பங்கள் கூட திறவுமூல மென்பொருள் மூலமாக கிடைக்கின்றன. ஆனால் ஜாவா மூலமாக செய்வதால் Hosting செலவு அதிகம் ஆகலாம்.

****


திரட்டி செய்வது சுலபம் தான் என்றாலும் ஒரு திரட்டி வெற்றி பெறுவது அது முன்வைக்கும் Creative ideas மூலம் தான். அது போல தொடர்ச்சியாக பதிவுகளையும், பின்னூட்டங்களையும் உடனுக்குடன் காட்டும் திரட்டியே வெற்றி பெறும். அந்த வகையில் பல திரட்டிகளைக் காட்டிலும் தமிழ்மணம் பலவகையிலும் தொழில்நுட்ப ரீதியில் சிறந்து விளங்குவதே தமிழ்மணம் வெற்றி பெற்றதற்கு காரணமாக நினைக்கிறேன். தமிழ்மணம் கருவிப்பட்டையை பயன்படுத்துகிறது. என்றாலும் "உடனுக்குடன்" என்பது தான் தமிழ்மணத்தின் சிறப்பு...

தமிழ்மணத்தின் சில சிறப்பம்சங்கள்

- உடனுக்குடன் இடுகைகளும், பின்னூட்டங்களும் முகப்பில் தெரிவது (வேர்ட்பிரஸ் பின்னூட்டங்கள் முகப்பில் தெரிவதில்லை. "ம" திரட்டி மூலமாக திரட்டப்படுகிறது. தமிழ்வெளி தளத்தின் முகப்பில் வேர்ட்பிரஸ் பின்னூட்டங்கள் தெரியும்)
- பதிவுகள் சூடாகும் நிலவரம் தெரிவது
- ஒரு காலத்தில் வாசகர் பரிந்துரை தமிழ்மணத்தின் ஹைலைட். இன்றும் உள்ளது. ஆனால் அதிகம் கவனிக்கப்படுவதில்லை.

வலைப்பதிவு வாசகர்களில் 99% பேர் இவற்றை மட்டும் தான் பார்க்கிறார்கள். என்றாலும் பிற தொழில்நுட்ப சிறப்பம்சங்கள்...

- வலைப்பதிவுகளில் பயன்படுத்தப்படும் குறிச்சொற்கள் (Wordpress Categories, blogger labels) அனைத்தும் ஒரு இடத்தில் கிடைப்பதும், எந்த குறிச்சொற்கள் அதிகம் பயன்படுத்தபடுகிறது என்ற நிலவரமும்.
உதாரணமாக http://www.thamizmanam.com/tag/அரசியல் என்ற முகவரியில் அரசியல் என்ற குறிச்சொல் கொண்டு எழுதப்பட்டுள்ள அனைத்து இடுகைகளையும் பார்க்க முடியும். அங்கே கொடுக்கப்பட்டுள்ள இணைப்புகளை கொண்டு "அரசியல்" என்ற குறிச்சொல்லுடன் பிற தளங்களில் (wordpress, Technorati) எழுதப்பட்டுள்ள இடுகைகளையும் பார்க்க முடியும் (Find other blogs tagged with அரசியல் in the below sites).

தமிழ்மணம் தவிர தமிழூற்றும் குறிச்சொற்களை திரட்டுகிறது. தமிழூற்றில் குறிச்சொல் தொடர்பான மேலும் சில வசதிகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

- நாம் பல பதிவுகளில் மறுமொழிகளை எழுதுகிறோம். ஆனால் எத்தனை மறுமொழிகள் எழுதினோம், எங்கெல்லாம் மறுமொழிகள் எழுதினோம் என்பதை track செய்வது கடினம். என்னைப் போன்றவர்களுக்கு பிரச்சனையில்லை. ஆனால் கண்ணபிரான் ரவிசங்கர், துளசிகோபால் போன்றவர்களுக்கு தான் பிரச்சனை. சராசரியாக ஒரு மாதத்திற்கு 70-80 மறுமொழிகள் எழுதுகிறார்கள். அவர்கள் எழுதும் மறுமொழிகளை தமிழ்மணம் - "ம" திரட்டி மூலமாக track செய்ய முடியும். http://www.thamizmanam.com/comments/ என்ற முகவரி மூலமாக நீங்கள் எழுதும் பின்னூட்டங்களை track செய்ய முடியும். உதாரணமாக http://www.thamizmanam.com/comments/kannabiran,%20RAVI%20SHANKAR%20(KRS) என்பது மூலமாக கண்ணபிரான் ரவிசங்கர் எழுதும் பின்னூட்டங்களை ஒரே இடத்தில் வாசிக்க முடியும்.

தற்பொழுது இந்த வசதி தமிழ்மணத்தின் சோதனையில் உள்ளது. இது தமிழ்மணத்தில் மட்டுமே உள்ள சிறப்பம்சம். பிற திரட்டிகளில் இல்லை.

- தமிழ்மணத்தில் இணைக்கப்பட்டுள்ள பதிவுகள் மட்டும் தான் காண்பிக்கபடுவதாக ஒரு பிம்பம் உள்ளது. ஆனால் அது தவறு. தமிழ்மணத்தில் இணைக்கப்படாத பதிவுகளையும் தமிழ்மணம் தன்னுடைய கேளிர் திரட்டி மூலமாக திரட்டுகிறது. கேளிர் திரட்டியின் தமிழ்ப்பகுதியில் தமிழ்மணத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ள பதிவுகள் கூட திரட்டப்படுகின்றன. இது கூகுள் மூலமாக திரட்டப்படுகிறது. இது போன்ற ஒரு வசதி தேன்கூடு திரட்டியில் உள்ளது. ஆனால் தேன்கூடு "திரட்டிஜி"யை விட தமிழ்மணத்தின் கேளிர் திரட்டியில் பல தமிழ்ப்பதிவுகள் திரட்டப்படுகின்றன. இன்னும் சொல்லப்போனால் தமிழில் எழுதப்படும் அனைத்து வலைப்பதிவுகளும் கேளிர் திரட்டியில் உள்ளது.

- தமிழ்விழி மூலமாக வீடியோக்கள் திரட்டப்படுகின்றன.

****

குழலி பதிவில் தமிழ்மணம் கருவிப்பட்டை குறித்து நான் எழுதிய பின்னூட்டம்
http://kuzhali.blogspot.com/2007/12/blog-post_24.html#comment-1476921344624263856

****

எல்லாவற்றுக்கும் ஒரு மாற்று தேவை என்பது ஒரு சரியான நோக்கம் தான். ஆனால் தமிழனின் மனநிலை தன்னை முன்னிலைப்படுத்திக் கொள்வதில் தான் உள்ளது. "நான்" ஆலோசனை கொடுத்தேன், "நான்" செய்தேன் என அனைத்தும் "நான்", "நான்" என்றே முன்வைக்கப்படுகிறது. அதனால் தான் tamilblogs.com போன்ற தளம் திறவுமூலமாக இருந்தும் அது மேம்படுத்தப்படாமல் சுலபமாக செய்யக்கூடியதாக உள்ள திரட்டிகள் அதிகம் உருவாகி கொண்டே இருக்கின்றன. இது தமிழுக்கு எந்த வகையிலும் நன்மை அளிக்க போவதில்லை. தனிப்பட்டவர்களின் சுயதிருப்திக்கும், சுயதம்பட்டத்திற்கும் மட்டுமே இது வழிவகுக்கும். தமிழனின் இந்த மனநிலையால் தான் பெரிய கூட்டு முயற்சிகள் பெரும்பாலும் தோல்வியே அடைகின்றன. ஆனால் வெளிநாட்டு சூழலில் கூட்டு முயற்சிகள் பெரும் வெற்றி பெற்றிருக்கின்றன. அங்கு அமைப்புகள் முன்னிறுத்தப்பட்டுகின்றன. தனி நபர்கள் அல்ல.

தமிழ்மணத்திற்கு நிச்சயம் ஒரு மாற்று தேவை. புதிய சிந்தனைகளும், புதிய எண்ணங்களும் வளர வேண்டும். இது தமிழ் மொழிக்கும் நன்மையே. இதற்கு தேவை ஒரு பெரிய கூட்டு முயற்சி மட்டுமே. தனிப்பட்ட சிறு முயற்சிகள் அல்ல. அதுவும் வணிக ரீதியில் லாபம் இல்லாத நிலையில் ஆரம்பகட்ட ஆர்வம் சில மாதங்களில் காணாமல் போய் விடும். சிறு முயற்சிகள் தோல்வி அடைந்து விடும். இதனை நான் பல்வேறு முயற்சிகளில் பார்த்திருக்கிறேன். அனுபவத்தால் உணர்ந்தும் இருக்கிறேன்.

இது தமிழ் இணைய உலகை 2004ல் இருந்து கவனித்து வரும் என்னுடைய "இரண்டணா"


20 மறுமொழிகள்:

உடைப்பு.Sri Rangan said...

அருமையான பதிவு.அதிலும் நுட்பத்தைச் சொல்லும் மனம் பாராட்டத்தக்கது!

6:30 PM, December 24, 2007
சிறில் அலெக்ஸ் said...

ஆக.. கூடிய விரைவில் 'கும்மி மணம்', 'மொக்கை யூற்று', 'ஜல்லி வெளி' ஆகிய திரட்டிகளை எதிர்பார்க்கலாம்.. :)


ரெம்ப எளிதாயிருக்கு செய்முறை.
விளங்கத் தந்ததற்கு நன்றி.

6:46 PM, December 24, 2007
தமிழ் சசி | Tamil SASI said...

உடைப்பு,

நன்றி...

சிறில் அலெக்ஸ்,

'கும்மி மணம்', 'மொக்கை யூற்று', 'ஜல்லி வெளி' நல்ல பெயர்கள :)

இந்த திரட்டிகளுக்கு நான் தான் technology consultantக இருப்பேன் என்று சொல்லிக்கொள்கிறேன் :)

7:23 PM, December 24, 2007
வடுவூர் குமார் said...

Cron மூலமாக
சமயம் கிடைக்கும் போது இதையும் சொல்லுங்களேன்..விரிவாக.
எனக்கு இதில் வால் மட்டும் தான் தெரிகிரது எப்படி செய்வது என்று தெரியவில்லை.
பி.கு. நான் மென்/வன் துறை வல்லுனன் அல்ல.
(உ-ம்)லினக்ஸில் எனக்கு இணைய இணைப்பு கிடைத்த பிறகு pidgin மென்பொருள் ஆரம்பிக்க வேண்டும்,தானாகவே.இந்த குரோன் மூலம் எப்படி செய்வது?
திரட்டி பற்றிய விளக்கம் base line புரிந்தாலும் என்னை மாதிரி ஆட்களுக்கு கொஞ்ச நேரம் ஆகும்.

8:18 PM, December 24, 2007
தமிழ் சசி | Tamil SASI said...

குமார்,

Cron குறித்த தகவல்கள் இணையத்தில் நிறைய உள்ளன. இந்த இரண்டு இணைப்புகளை பாருங்கள், மேலும் விபரம் கிடைக்கும்.

http://www.unixgeeks.org/security/newbie/unix/cron-1.html

http://www.adminschoice.com/docs/crontab.htm

***

உங்கள் hosting packageல் shell access இருந்தால் நீங்கள் உங்கள் தளத்தில் Cron setup செய்து கொள்ளலாம். இல்லையென்றால்
web cron போன்றவற்றை பயன்படுத்தியும் cron job setup செய்ய முடியும்.

8:56 PM, December 24, 2007
ILA (a) இளா said...

சசி, ரொம்ப பெரிய விஷயங்க. இதைத்தான் சிதம்பர ரகசியம்னு சொல்லுவாங்க. நாங்க எல்லாம் இந்த வசதிய தேடவே 50 நாள் ஆச்சு. அப்போவே சொல்லிருக்காலாங்க.

9:57 PM, December 24, 2007
வினையூக்கி said...

சசி சார்,
நிறைய தொழில்நுட்ப விசயங்களைக் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றிகள்.

அன்புடன்
வினையூக்கி
www.vinaiooki.com

12:06 AM, December 25, 2007
லக்கிலுக் said...

//ILA(a)இளா said...

சசி, ரொம்ப பெரிய விஷயங்க. இதைத்தான் சிதம்பர ரகசியம்னு சொல்லுவாங்க. நாங்க எல்லாம் இந்த வசதிய தேடவே 50 நாள் ஆச்சு. அப்போவே சொல்லிருக்காலாங்க.
//

இளா!

அப்போன்னா இன்னொரு திரட்டி (அய்யய்யோ அதுவும் தமிழ்மணத்துக்கு எதிராக) உருவாக்குற முயற்சியிலே ரெண்டு மாசமா ஈடுபட்டிருக்கீங்க இல்லே?

;-) பதறாதீங்க, சும்மா கொம்பு சீவி விட்டேன்...

12:30 AM, December 25, 2007
-/சுடலை மாடன்/- said...

சசி, தொழில் நுட்பத்தை எளிமையாக விளக்கியிருக்கிறீர்கள். தமிழ் மணத்தின் பிடியிலிருந்து விடுதலை அளிக்கும் 'மாற்றுத்' திரட்டிகள் உருவாக பயனுள்ளதாக இருக்கும் என நம்புகிறேன்.

//தனிப்பட்டவர்களின் சுயதிருப்திக்கும், சுயதம்பட்டத்திற்கும் மட்டுமே இது வழிவகுக்கும். தமிழனின் இந்த மனநிலையால் தான் பெரிய கூட்டு முயற்சிகள் பெரும்பாலும் தோல்வியே அடைகின்றன. ஆனால் வெளிநாட்டு சூழலில் கூட்டு முயற்சிகள் பெரும் வெற்றி பெற்றிருக்கின்றன. அங்கு அமைப்புகள் முன்னிறுத்தப்பட்டுகின்றன. தனி நபர்கள் அல்ல.//

சரியாகச் சொல்லியிருக்கிறீர்கள்!

அமைப்பை ஏற்படுத்தி, யாரெல்லாம் அமைப்பில் இருக்கிறார்கள் என்பதை வெளிப்படையாக அறிவித்த பிறகு, அமைப்பில் யார், யார் என்ன பணிகள் செய்கிறார்கள் என்பதை விளம்பரப்படுத்தி தனிப்பட்ட பெருமை தேடிக்கொள்வதில் நாட்டமில்லாமல் அமைப்பை முன்னிலைப் படுத்திச் செயல்படும் பொழுதும் கூட வீண் வதந்திகளுக்கும், குற்றச்சாட்டுக்களுக்கும் குறைவில்லை.

"ஒளிந்து கொள்கிறார்கள், அமைப்பில் யார் என்ன வேலை செய்கிறார்கள், யார் பதிலளிக்கிறார்கள், யார் பங்களிக்கிறார்கள், மனிதர்களுடன் பேசுவதாக உணர முடிவதில்லை" என்று தேவையில்லாத பிரச்னைகளை எழுப்பி அந்த அமைப்பு ஏதோ தன்னால் இயன்றதைச் செய்வதை விமர்சனம் செய்யவும் இங்கு தமிழர்களில் சிலர்.

சரி, அப்படியே யார், யார் என்ன பணிகளைச் செய்கிறார்கள் என்று வெளிப்படையாகப் பெயர்களைச் சொல்லி இயங்கினால், போலித் தளங்களில் அவர்களின் குடும்பங்களையும் ஆபாச வார்த்தைகளில் அர்ச்சனை செய்து மன அழுத்தத்தை உண்டு பண்ண இன்னொரு கூட்டம்.

செய்யும் வேலைகளை விட இந்த மாதிரி இம்சைகளை எதிர் கொள்ளுவதிலேயே முக்கால் வாசி நேரம் போய்த் தொலைகிறது.

ஆறாயிரம் படித்த தமிழர் இயங்கும் இந்த ஒரு சின்ன கிணற்றுக்குள்ளேயே இத்தனைப் பிரச்னைகளென்றால், ஆறு கோடித் தமிழர்கள் என்று கரை சேருவது. அதனால்தான் வரலாற்றில் உரிமைகளைப் பறித்து துரத்தப் பட்டாலும் ஆதரவுக்கு வர ஒரு நாடில்லை.

தமிழனென்றோர் இனமுண்டு, அவனுக்குத் தனியே ஒர் குணமுண்டு )-:

நன்றி - சொ.சங்கரபாண்டி

2:39 AM, December 25, 2007
Ayyanar Viswanath said...

துபாய் தமிழ் சங்கங்களைப் பத்தி நண்பர் ஒருத்தர் காமெடியா சொல்வார்

ரெண்டு தமிழன் சேர்ந்தான்னா ஓரு சங்கம் ஆரம்பிப்பான் அதே மூணு தமிழன் சேர்ந்தான்னா ரெண்டு சங்கம் ஆரம்பிப்பான்

என்ன கொடும சார் :)

9:02 AM, December 25, 2007
வவ்வால் said...

சசி,

நன்றி!
அருமையான விளக்கங்களுடன் கூடியப்பதிவு இது குறித்து நானும் இணையத்தில் தேடிக்கொஞ்சம் படிச்சேன் , கண்ணைக்கட்டிடுச்சு, இப்போ, கொஞ்சம் தெளிவாச்சு.

இப்படி அடிக்கடி தொழில் நுட்பங்களை பற்றி சொல்லிக்கிட்டே இருங்க. யாராவது தூண்டினா மட்டும் ரகசியம் சொல்வேன்னு இருக்காதிங்க :-))

அலப்பட்டை இணைப்பை ஸ்டாட்டிக் ஐபி யுடன் வைத்திருப்பவர்கள் தனியே ஒரு செர்வராக செயல்பட முடியும் என்கிறார்கள், அவர்கள் , ஹோஸ்ட் தேடாமல் இப்படி செய்ய முடியுமா?

-----------
அய்யனார்,

நான் 4 பதிவர்கள் சேர்ந்த ஒரு திரட்டி உருவாக்கினாங்க 10 சேர்ந்தா இரண்டு திரட்டி உருவாக்கிடுவாங்கனு சொல்ல வந்தேன், அதுக்குள்ள தமிழன் குணத்தை சொல்லிட்டிங்களே!

9:29 AM, December 25, 2007
தமிழ் சசி | Tamil SASI said...

இளா, வவ்வால்,

இது சிதம்பர ரகசியம் எல்லாம் இல்லைங்க. மென்பொருள் துறையில் வேலை செய்யும் எல்லோருக்கும் தெரிந்த ஒன்று தான்.

மென்பொருள் துறையில் வேலை செய்பவர்கள் அலுவலகத்தில் நுட்பத்தை கட்டி அழுவதே போதுமானது என நினைத்து அதை வெளியில் பேசுவதில்லை :)

****

கருத்துகளை பகிர்ந்து கொண்ட அனைத்து நண்பர்களுக்கும் நன்றி

10:13 AM, December 25, 2007
தமிழ் சசி | Tamil SASI said...

அலப்பட்டை இணைப்பை ஸ்டாட்டிக் ஐபி யுடன் வைத்திருப்பவர்கள் தனியே ஒரு செர்வராக செயல்பட முடியும் என்கிறார்கள், அவர்கள் , ஹோஸ்ட் தேடாமல் இப்படி செய்ய முடியுமா?

****

செய்ய முடியும். சிலர் செய்தும் இருக்கிறார்கள். தமிழ் வலைப்பதிவில் கூட யாரோ இதைப் பற்றி எழுதியதை படித்த ஞாபகம் இருக்கிறது. (பெயர் நினைவில் இல்லை)

10:21 AM, December 25, 2007
Kasi Arumugam said...

"ப்பூ, இந்த தொழில்நுட்ப ஜிகிடியை வெச்சுத்தானா தமிழ்மணம் பூச்சாண்டி காட்டுது?" ('இந்த மண் கோட்டையை வைத்துக்கொண்டுதான் ... ' - வீரபாண்டிய கட்டபொம்மன் பாணியில் வாசிக்கவும் :-))

சசி, திரட்டுவதில் இல்லை சூட்சுமம் என்பதைப் புரிய வைத்தமைக்கு நன்றி.

ஒரு தகவலுக்காக, தமிழ்மணம் முதல் பதிப்பில் feed on feeds, magpie rss, 1and1 எல்லாருக்குமே தொடுப்பு இருந்தது, கொஞ்சம் முனைப்புடன் ஆராய்பவர்கள் சில மணி நேரத்தில் திரட்டி செய்திருக்கலாம்.

இளா, இதுக்கு 50 நாளா? டூ மச்!

11:04 AM, December 25, 2007
- உடுக்கை முனியாண்டி said...

சசி மிக எளிதாக விளக்கியமைக்கு நன்றி. இப்ப வர்ற Content Management System எல்லாமே ஒரு திரட்டியை உள்ளடக்கித்தான் வருது. இந்தியில வர்ற நாரதர் திரட்டி வோர்ட்பிரஸ்ல பண்ணியிருந்ததா ஞாபகம். அதனால காசி சொன்ன மாதிரி
// திரட்டுவதில் இல்லை சூட்சுமம் என்பதைப் புரிய வைத்தமைக்கு நன்றி//

வவ்வால், static ip வைச்சி செர்வர் இயக்கறது ஈஸி. உங்களோட டொமைன மட்டும் உங்களோட ஐபிக்கு பாய்ண்ட் பண்ணுங்க. அவ்வளவு தான். உங்களோட சர்வர் ரெடி.(மத்த சூட்சுமம் எல்லாம் தெரியும்ன்ற நம்பிக்கையில)

Dynamic ip யா இருந்தாலும் பிரச்சனை இல்லை. வெங்கட் http://domesticatedonion.net/tamil தன்னோட வலைப்பதிவை சொந்த சர்வர்ல தான் இயக்கறாரு. அதைப் பத்தி ரெண்டு பதிவும் போட்டிருக்காரு.
மேலதிக விபரத்துக்கு http://www.dslwebserver.com/ போய் பாருங்க. தேவையான விளக்கம் எல்லாம் கிடைக்கும்.

12:30 PM, December 25, 2007
ச.பிரேம்குமார் said...

அருமையான பதிவு. வாழ்த்துக்கள்

1:07 PM, December 25, 2007
வினையூக்கி said...

சசி சார்,
ஒரு அடிப்படைத் திரட்டியை நீங்க சொன்ன வழிமுறைகளோடு உருவாக்கியாச்சு.. தமிழ் சசிக்கு நன்றி , சில மணி நேரத்தில் அடிப்படைத் திரட்டி உருவானது

மிக்க நன்றி

4:21 AM, December 31, 2007
தனசேகர் said...

நானும் இந்த சூட்சுமம் எதுவும் தெரியாமல் மூன்று வருடமாக மென்பொருள் வேளையில் இருக்கிறேன் :( மிக்க நன்றி சசி.

1:41 AM, January 13, 2008
Anonymous said...

யாரேனும் reddit தளத்தை பார்ப்பது நல்லதுன்னு தோணுது. திரட்டி மட்டும் பயன் இல்லை. ஒட்டு மொத்த சமூகமும் நல்ல பக்கங்களை தேர்ந்தேடுபதலில் இருந்து அன்றாட செயல்கள் வரை பங்கு கொள்ள வேண்டும். hacker news, stackoverflow போன்ற தளங்களை கொஞ்சம் பார்க்கலாம்! reddit தளத்தை போலவே நிறுவ வேண்டும் என்றால் இங்கே இருந்து தேவையான code இறக்கி நொடியில் தயார் செய்யலாம்:
https://github.com/reddit/reddit/wiki

1:37 AM, October 21, 2011
ADMIN said...

உண்மையில் பிரமிப்பூட்டுகிறது உங்கள் பதிவு.. அருமையான தொழில்நுட்பத்தை எளிதாக தமிழில் தந்து இருக்கிறீர்கள்.. !!

அதோடு நில்லாமல் திரட்டிகளை ஆராய்ந்து அது செயல்படும் விதங்களையும் ஒப்பிட்டு சொன்ன விதம் அருமை. !!

பகிர்தலுக்கு நன்றி பாராட்டுதல்கள்..!!

8:52 AM, November 09, 2011