Thursday, April 03, 2008

தலாய்லாமாவுக்கும் ஒசாமா பின்லேடனுக்கும் என்ன தொடர்பு ?

அமெரிக்கா, ஒசாமா பின்லேடனுடன் பேச்சுவார்த்தை நடத்துவதை எவ்வாறு அமெரிக்க மக்கள் விரும்பமாட்டார்களோ அது போல தலாய்லாமாவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதை சீன மக்கள் விரும்பமாட்டார்கள். எனவே சீனா தலாய்லாமாவுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என எதிர்பார்க்காதீர்கள்.

இது என் கருத்து அல்ல. தலாய்லாமா என்கிற அமைதியை விரும்புகிற தலைவருடன் இஸ்லாமிய அடிப்படைவாத பயங்கரவாதியான ஒசாமா பின்லேடனை நிச்சயம் என்னால் ஒப்பிட்டு பார்க்க கூட முடியவில்லை.

இவ்வாறான கருத்தினை முன்வைத்திருப்பது இந்தியாவின் பாரம்பரிய மிக்க "தேசிய" பத்திரிக்கையான (India's National Newspaper) ஹிந்து. ஹிந்துவில் வெளியாகியுள்ள ஒரு கட்டுரை இவ்வாறு கூறுகிறது.

What those urging China to negotiate with the Dalai Lama fail to recognise is the fact that Beijing’s main constituency is not the international community but its own domestic public. For Beijing to appear ‘soft’ on the Dalai Lama would be as politically unpalatable domestically asit would be in the United States were Washington to decide to engage in dialogue with Osama bin Laden.

ஈழப் பிரச்சனையில் எவ்வாறு சிங்கள மக்களின் சார்பாக இருந்து ஹிந்து, தமிழ் ஈழ விடுதலைக்கு எதிராக பேசுகிறதோ அது போல இந்தக் கட்டுரை சீன மக்களின் பார்வை என்பதாக ஒன்றினை "முன்னிறுத்தி" திபெத் விடுதலைப் போராட்டம் குறித்த சீனாவின் பார்வையை இந்திய வாசகர்களிடம் விளக்க/திணிக்க முனைகிறது. ஈழப் பிரச்சனை குறித்து நிருபமா சுப்ரமணியன் எழுதுவது போன்ற ஒரு தொனியில் இந்தக் கட்டுரையை எழுதுகிறார் பல்லவி ஐயர்.

உண்மையில் இந்தக் கட்டுரைகளை யார் எழுதுகிறார்கள்/யார் மேற்பார்வையில் எழுதப்படுகிறது போன்ற கேள்விகள் எழுந்தாலும் இந்தக் கேள்விகளை ஹிந்துவின் பாரம்பரிய வாசகர்களிடமே விட்டு விடுகிறேன்.

ஹிந்துவின் கட்டுரை - How China sees the Dalai Lama and his cause

34 மறுமொழிகள்:

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

//ஈழப் பிரச்சனையில் எவ்வாறு சிங்கள மக்களின் சார்பாக இருந்து ஹிந்து, தமிழ் ஈழ விடுதலைக்கு எதிராக பேசுகிறதோ அது போல இந்தக் கட்டுரை சீன மக்களின் பார்வை என்பதாக ஒன்றினை "முன்னிறுத்தி" திபெத் விடுதலைப் போராட்டம் குறித்த சீனாவின் பார்வையை இந்திய வாசகர்களிடம் விளக்க/திணிக்க முனைகிறது. ஈழப் பிரச்சனை குறித்து நிருபமா சுப்ரமணியன் எழுதுவது போன்ற ஒரு தொனியில் இந்தக் கட்டுரையை எழுதுகிறார் பல்லவி ஐயர்.//

இதனால் இந்து நிர்வாகத்துக்கு என்ன பயன் என்று தெரியவில்லை. அவர்களின் கருத்து வெகுசன கருத்துக்கு மாறுபட்ட கருத்தாகவே உள்ளது. இந்திய அளவில் ஈழப்பிரச்சனையில் வேறு கருத்தை உருவாக்க முயல்வது கண்டிக்கத்தக்கது.

அன்புடன்,
ஜோதிபாரதி.

11:01 PM, April 03, 2008
தனசேகர் said...

நாங்கள் பல காலமாக சிறந்த பத்திரிக்கை என நம்பி வந்த ஹிந்து வின் உண்மையான நிலைப்பாட்டை வெட்ட வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளீர் !

11:20 PM, April 03, 2008
Anonymous said...

I hope Ms. Iyer and Mr. Iyengar don't extend the arguement further to say "just as American public/politicians want(ed) to bomb Afghanistan/Pakistan for sheltering Osama bin Laden, Chinese public/politicians would want to bomb India for hosting Dalai Lama".

11:36 PM, April 03, 2008
தமிழ் சசி | Tamil SASI said...

பாலா,

என்ன இப்படி அதிர்ச்சி அடைந்து போய் விட்டீர்கள் ?

இப்பொழுது தான் ஹிந்து குறித்து உங்களுக்கு புரிகிறது போலும் ?

குறைந்தபட்சம் அதற்காகவாவது நான் பல்லவி ஐயருக்கு நன்றி சொல்லி விடுகிறேன் :))

12:34 AM, April 04, 2008
Anonymous said...

ஏகாதிபத்யத்தை எதிர்த்து குரல் கொடுக்கும் வலையுலக தமிழரங்கம் புரட்சி தோழர்கள் ஸ்ரீரங்கன், இராயகரன், ஸ்டாலின், அசுரன், மயூரன் சீன ஏகாதிபத்யத்தை எதிர்த்து குரல் கொடுக்க மாட்டாங்களா ?

2:04 AM, April 04, 2008
பாரதிய நவீன இளவரசன் said...

The Hindu நாளிதழின் போக்கு CPI (M)கட்சியின் அதிகாரபூர்வ போக்கினோடே எப்போது ஒத்துப்போகும்; ஒருபோதும் CPI(M)ன் அதிகாரபூர்வ போக்கோடும், செயல்பாட்டோடும் முரண்படாது.

The Hindu என்பது பாரம்பரியமிக்க மத்தியத்தர வலதுசாரி கண்ணாட்டத்துடன் ஒத்துப்போகும் சமூக வாசகர்வட்டமும், நல்ல ஆங்கிலம் வாசிக்க வேண்டுமென்ற ஆர்வத்தோடு இருக்கும் வாசகர்வட்டமும் கொண்ட ஆங்கில பத்திரிக்கை. இருக்கும் இந்த வாசகர் வட்டத்தை இழந்து விடக்கூடாது என்று இடதுசாரிக் கருத்துக்களை வெளிப்படையாக எடுத்துக்கூறாமல், சர்சைகள் எழும் காலகட்டத்தில் தேவைகேற்ப CPI(M)ஐ வழிமொழிவது The Hinduவின் நீண்ட காலத்திய போக்கு.

இது அதன் பெரும்பான்மையான வாசகர்வட்டத்திற்கும் தெரியும். All in the game என்று விட்டுவிடுகிறார்கள்!

4:02 AM, April 04, 2008
தமிழ் சசி | Tamil SASI said...

நவீன இளவரசன்,

சந்திரிகா மற்றும் பிற சிங்கள வலதுசாரி கட்சிகளுக்கு கூஜா தூக்குவது CPI(M) நிலைப்பாடா ?

சங்கராச்சாரியை முன்னிறுத்த முனைவது CPI(M) நிலைப்பாடா ?

இந்திய-இலங்கை ஒப்பந்தத்திற்கும் CPI(M) கட்சிக்கும் என்ன சம்பந்தம் ?

ஹிந்து அணிந்துள்ள ஒரு முகமூடி தான் CPI(M) என்பதும். என்னுடைய முந்தைய கட்டுரைகளை பாருங்கள்.

8:08 AM, April 04, 2008
Anonymous said...

Modern Prince,
"The Hindu" is a private corporation owned by a family that belongs to a minority elite community and edited by a member of that family professing "feel good" Marxism. So the publication will try to balance the interests of all these components--profit, Brahminical cultural/social dominance, nationalistic interests, and liberal politics. The party is not popular in the states where the newspaper's circulation is high and vice versa. These two are completely independent entities. Don't try to portray it as a mouthpiece of a small leftist party

9:54 AM, April 04, 2008
SnackDragon said...

//உண்மையில் இந்தக் கட்டுரைகளை யார் எழுதுகிறார்கள்/யார் மேற்பார்வையில் எழுதப்படுகிறது போன்ற கேள்விகள் எழுந்தாலும் இந்தக் கேள்விகளை ஹிந்துவின் பாரம்பரிய வாசகர்களிடமே விட்டு விடுகிறேன்.//


சுதேசமித்திரன் பாரம்பரிய வாசகர்களா? ;)

பாபா, கமண்ட் போட்டு ஒத்துக்கொள்வதற்கு நன்றி ;)

11:05 AM, April 04, 2008
நண்பன் said...

விடுதலை உணர்வை ஒடுக்கும் அணியினருடன் ஒத்துப் போவதில் எப்பொழுதுமே ஹிந்துவிற்கு உடன்பாடு உண்டு. எந்த ஒரு தேசியமும் தன் விடுதலையை முன்வைத்து ஒரு ஏகாதிபத்தியத்தை எதிர்க்கும் பொழுது, அதை மறுத்து எதிர்கருத்துகளை உருவாக்குவதுவும், வளர்ப்பதுவும் ஹிந்துவின் பத்திரிக்கை தர்மம்.

இங்கு ஒசாமாவின் நிலைபாட்டை தலய்லாமா-வோடு ஒப்பீடு செய்திருப்பது விடுதலை வேட்கை கொண்ட மக்களையெல்லாம் தீவிரவாதிகளாகவே அடையாளம் கொள்ள வேண்டும் என்ற அதனது அறிவிக்கப்படாத கொள்கையை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்திருக்கிறது.

திபெத்தியர்கள் ஒரு தேசிய இன உணர்வை முன்வைத்து உரிமைகளுக்காகப் போராடுபவர்கள். அதே போலவே தமிழர்களும். முடக்கப்பட்ட தங்களது உரிமைகளுக்காக தமிழ் என்ற தேசிய இன உணர்வை முன்வைத்துப் போராடுபவர்கள்.

ஒசாமாவிற்கு, அத்தகைய தேசியம் என்று எந்த உணர்வும், எந்த நிலத்தின் மக்களின் விடுதலை வேட்கையையும் முன் வைக்கும் சித்தாந்தமும் கிடையாது. ஒசாமாவின் சித்தாந்தம் முழுவதுவும் அமெரிக்கா மற்றும் அதன் கூட்டாளிகளை எதிர்ப்பது - ஒவ்வொரு தளத்திலும் என்பதுவே. அதன் தர்க்க நியாயங்கள் வேறு. அங்கு உரிமைகள் முடக்கப்பட்ட மக்களின் விடுதலை வேட்கை முன்வைக்கப்படவில்லை.

இந்த அடிப்படை வேற்றுமையைப் புரிந்து கொண்டிருந்தால், ஹிந்து அத்தகைய ஒரு ஒப்பீட்டைச் செய்திருக்காது.

6:24 PM, April 04, 2008
தமிழ் சசி | Tamil SASI said...

நண்பன்,

சரியான கருத்துக்கள்...
மிக்க நன்றி...

7:37 PM, April 04, 2008
Anonymous said...

தலாய் லாமா = ஒசாமா பின்லேடன்
பிரபாகரன் = போல்பாட்

இப்போது இந்துவின் வார்த்தை விளை(னை)யாட்டை புரிந்துகொள்ள முடிகிறது!

இப்படியான ஒப்பிடுதலை அரசியலில் குறைந்த பட்ச புரிதல் இருக்கும் ஒரு பதிவர் கூட செய்யமாட்டார். என்ன செய்வது இவர்கள் அறிவு ஜீவி அதிகாரமையங்களாக தோற்றம் காட்டி ஏமாற்றுகிறார்கள்!

நன்றி!

9:21 PM, April 04, 2008
Anonymous said...

//தலாய் லாமா = ஒசாமா பின்லேடன்
பிரபாகரன் = போல்பாட்
//

ஆனால் N.ராமுக்கு மிதவாத தமிழ் தலைவர் யார் தெரியுமா ? சென்னை தெருக்களில் துப்பாக்கியுடன் பேட்டை ரவுடித்தனம் செய்த டக்ளஸ் தேவானந்தா

11:02 PM, April 04, 2008
Anonymous said...

//பாபா, கமண்ட் போட்டு ஒத்துக்கொள்வதற்கு நன்றி//

பாபா பூங்கா வந்ததில் இருந்து இந்து படிப்பதை நிறுத்தியாகிவிட்டதால் அவருக்கு இந்துவின் எடிட்டோரியலில் இப்படி 'கருத்து வன்முறை' இருப்பது தெரியாது. அதிலும் பூங்கா நின்றபிறகு கூட (நின்னுருச்சா?!) அதே பாதிப்பில் (http://domesticatedonion.net/tamil/?p=755#comment-25805) அவர் உழல்வதால் அவருக்கு இந்தச் செய்தி அதிர்ச்சியும், ஆச்சர்யமும் அளிப்பதில் வியப்பில்லை!

12:04 AM, April 05, 2008
Anonymous said...

Baba,
Who is மச்சியவெல்லி? Is he a brother-in-law(மச்சி) of மாக்கியவெல்லி?

1:04 AM, April 05, 2008
Anonymous said...

”இலங்கை-இந்திய ஒப்பந்த 13ம் திருத்தச் சட்டமூலத்தை விரும்புவோர் ஒருவரும் இல்லை”
சமீபத்தில் 13திருத்தச் சட்டமூலம் என்கின்ற விளையாட்டுக்கு ‘தோள் கொடுக்க' ஹிந்து எழுதியது. இந்த 13ம் திருத்தத்துக்கு பின்னணியில் இருந்தத சூத்திரதாரிகளில் ராம் முக்கியமானவர்.

2:25 AM, April 05, 2008
Boston Bala said...

கார்த்திக்...

---பாபா, கமண்ட் போட்டு ஒத்துக்கொள்வதற்கு நன்றி ;---

என்ன ஒத்துக் கொண்டேன்?

ஹிந்துவில் வரும் எல்லாக் இடுகைகளும் மோசம் என்றா? அப்படிப்பட்ட புரிதல் வந்தது என்றால், இல்லை என்று சொல்லிவிடுகிறேன்

சசி,

இப்பொழுது தான் ஹிந்து குறித்து உங்களுக்கு புரிகிறது போலும் ?

இந்தியர்களை வெறுக்கும் நியூ யார்க் டைம்ஸ்; தமிழர்களை வெறுக்கும் அவுட்லுக்; குப்பையை போடும் டைம்ஸ் ஆஃப் இந்தியா -- என்று எல்லா நாளிதழ்களைக் குறித்தும் (பதிவர்களைக் குறித்தும்தான்) குற்றச்சாட்டுகள் அம்பலப்படுகின்றன.

அதற்காக நான் எழுதுவதை மட்டும்தான் படிப்பேன் . பிடித்த கருத்துகளைத்தான் வாசிப்பேன் என்று விட்டுவிட முடியாது.

குறைந்தபட்சம் அதற்காகவாவது நான் பல்லவி ஐயருக்கு நன்றி சொல்லி விடுகிறேன்

பெரும்பாலாக ஜனநாயகக் கட்சி (இடது சாரி?) சித்தாந்தமுடைய பாஸ்டன் க்ளோபில் கூட வலது சாரி (குடியரசு) சார்புடைய பத்தி எழுத்தாளர் ஒருத்தர் (ஒருத்தரே ஒருவர்) எழுதி வருகிறார்.

அந்த மாதிரி மாற்றுக் கருத்துகளை மட்டுமே கொண்ட இதழாக இருந்தாலும் எப்பொழுதாவது இன்னொரு பக்கத்தை விவரிப்பார்கள் என்னும் நம்பிக்கை கொன்டும்; மாற்றுக் கருத்துகளை உணர்வதற்காகவும் வாசிக்க கிடைப்பதையெல்லாம் முடிந்தவரை வாசிப்பது பழக்க தோஷமாகிவிட்டது :)
-------

திபெத் குறித்த இடுகை ஹிந்து நாளிதழ் குறித்து திசை திரும்புவது குறித்து :((((

8:24 AM, April 05, 2008
தமிழ் சசி | Tamil SASI said...

திபெத் குறித்த இடுகை ஹிந்து நாளிதழ் குறித்து திசை திரும்புவது குறித்து

****

இந்த இடுகை ஹிந்து நாளிதழ், திபெத் பிரச்சனையை எப்படி திரிக்கிறது என்பது குறித்து தான். அதனால் ஹிந்து நாளிதழ் குறித்து பேசுவது சரியான திசையில் பின்னூட்டங்கள் செல்கின்றன என்பதையே சுட்டிகாட்டுகின்றன

உங்களுக்கு வேறு மாதிரி தெரிவது தான் ஆச்சரியமாக உள்ளது :)

11:12 AM, April 05, 2008
மு மாலிக் said...

தலாய்லாமாவினை பின்லாடனுடன் ஒப்பிட முடியாதெனினும், தலாய்லாமாவினை அவரது தோற்றத்தினுடனும் ஒப்பிட முடியாது. இந்த தொடுப்பினைப் பார்க்கவும்.

தலாய்லாமா மற்றும் அவரது ஆதரவாளர்களின் முழுவீச்சான கோறுதலான, "திபெத்தியர்களின் சாவு எண்ணிக்கை 99" என்பதினை உண்மை என்று கொண்டாலும், இது சாதாரணமாக இஸ்ரேல் இராணுவத்தினர் பாலஸ்தீனத்தில் 10 அல்லது 20 நாட்களில் கொல்லும் மக்களின் எண்ணிக்கையாக இருந்தாலும், பிபிசி போன்ற இணைய தளங்களில் இச்ச்ய்தி அதி முக்கியத்துவம் பெறுவதற்கு, பிபிசி உள்ளிட்ட ஊடகங்களின் சீனா விரோத போக்குக்கும், தலாய்லாமாவின் போக்குக்கும் ஒத்த நிலை இருப்பதுவே ஆகும். இதனால் தலாய்லாமாவின் பெருமளவில் மிகைப்படுத்தப்பட்ட, "பண்பாட்டு அடிப்படையிலான இன்வொழிப்பு திபெத்தில் நிகழ்கிறது" எனும் கோறுதல்கள் இவ்வூடகங்களில் எதிரொலிக்கப்படுகின்றன.

இவைகளுக்கு முக்கிய காரணம், சமீபத்தில் சீனாவின் செல்வாக்கு வளர்ச்சியே. அதன் செல்வாக்கு கிழக்கு ஆசியாவுடன் மட்டும் நின்றுவிடாது, மத்திய ஆசியா, தென்கிழக்கு ஆசியா மற்றும் ஆஃப்ரிக்காவிலும் வளர்ச்சிஅடைந்துள்ளது. அதனுடைய அரசியல் நிலையில் இஸ்ரேலுக்கு எதிரான நிலைப்பாடு கடந்த லெபனான் போரின் போது வெளிப்பட்டது. சூடான் மேற்கத்திய மதிப்புகளுக்கு எதிராக இருப்பதினால், சூடானில் நிகழும் கலவரத்தினை "இனவொழிப்பு" எனும் சொல்லாடலைக் கொண்டு வர்ணித்து மகிழ்வுற மேற்கத்திய நாடுகள் எத்தனிக்கும் போது, அதனுடன் சீனா நல்லுறவு கொண்டுள்ளது. மேலும் அதன் உறவு வடகொரியாவுடனும் வெனிசுவேலாவுடனும் க்யூபாவுடனும் சிறப்பாகவே உள்ளது. மிக முக்கியமாக ஈரானுடனான‌ அதன் உறவு மிகச் சிறப்பாகவே உள்ளது.

இதனால் இவை அனைத்திலும் மேற்கத்திய நாடுகளுடன் ஒத்த கருத்தினைக் கொண்டுள்ள நாடுகளின் ஊடகங்கள் சீனாவிற்கு எதிரான நிலையைக் கொண்டுள்ளது, அதிக வியப்பினை அளிக்கவில்லை. திபெத்தில் இறந்ததாக‌ தலாய்லாமா கூறிக்கொள்ளும் 99 பேர்கள் அவர்களின் பார்வையில் ஈராக்கில் இறந்த மில்லியன் மக்களைவிடவும், ஆஃகானிஸ்தானில் திருமண நிகழ்ச்சிகளில் கூட விமான‌குண்டு வீசி கொள்ளப்பட்ட மக்களைவிடவும் அதிகமாகத்தோன்றுவதால் அவைகள் தலைப்புச் செய்திகளாக அவ்வூடகங்களின் இணையதளங்களில் பல மணி நேரமோ அல்லது ஒரு நாள் முழுவதுமோ நீடித்தன. இஸ்ரேல் இராணுவம் பாலஸ்தீனத்தில் கொல்லும் செய்திகள் பெரும்பாலும் அந்த பிராந்திய செய்தியாக மட்டுமே சுருங்கிவிடுகின்றன.

ஊடகங்களின் மூலம் நான் பார்த்த வரையில், திபெத்தில் மனிதஉரிமை மீறல்கள் இல்லை. உலகில் உள்ள மற்ற ஆக்கிரமிக்கப் பட்டுள்ள பகுதிகளில் நிகழும் மனிதவுரிமை மீறல்களான வீட்டிற்குள் புகுந்து கற்பழித்தல், காணாமல் போகுதல், என்கவுண்டர் எனும் பேரில் போட்டுத் தாக்குதல் போன்றவைகள் திபெத்தில் நிகழ்ந்துள்ளதாக செய்திகள் இல்லை. தலாய்லாமா சார்பான பிபிசியில் கூட நான் காணவில்லை.

மேற்கத்திய நாடுகளின் நிலைக்கு தாளம் போடாமலும், இந்திய‌ மதவாதிகளின் நிலைக்குத் தாளம் போடாமலும், "தேசியம்" மற்றும் "பிராந்தியம்" எனும் பேரில் இந்தியாவில் தாண்டவமாடுபவர்களுக்கு சார்பில்லாமலும், "தமிழ்தேசியம்" எனும் பேரில் மதவெறியினைக் கொண்டு செயல்படும் கூட்டத்திற்கு எதிரான நிலையைக் கடை பிடித்தும், பெண்ணுரிமை மற்றும் சாதிவொழிப்பு போன்ற பெரியாரின் முற்போக்கான கொள்கைகளையும் தூக்கிப் பிடித்திருக்கும் இந்து பத்திரிக்கையின் ஆசிரியரான ராம் வியக்கத்தக்கவர். ஆனால் அவர் மீதான விமர்சன‌ங்கள் இல்லை யென்றும் சொல்வதற்கில்லை.

2:05 AM, April 06, 2008
தமிழ் சசி | Tamil SASI said...

மாலிக்,

திபெத் பிரச்சனையை மேற்குலக ஊடகங்கள் அதிக அளவில் பிரபலப்படுத்துவதற்கு காரணம் சீனாவிற்கு எதிரான நிலைபாடுகளால் தான் என்பதில் எனக்கு மாற்று கருத்து இல்லை.

ஈழம், குர்தீஷ் இன மக்களின் போராட்டம், பாலஸ்தீனம் போன்ற பகுதிகளைக் காட்டிலும் திபெத்தில் மனித உரிமை மீறல்கள் குறைவாக உள்ளனவா, எவ்வளவு குறைவாக உள்ளன என்பது எப்படி உங்களுக்கு தெரியும் என தெரியவில்லை. சீனாவின் தணிக்கையை மீறி ஏதேனும் செய்திகள் வெளிவருகின்றனவா ?

ஈழத்தில் சிறீலங்கா அரசாங்கத்தின் தணிக்கையை மீறியும் செய்திகள் வெளிவந்து விடுவது உண்டு. காரணம் சிறீலங்கா அரசாங்கத்திற்கு இணையான பிரச்சார ஊடகங்களை புலிகள் அமைத்து இருக்கின்றனர். மாறாக காஷ்மீரிலோ, திபெத்திலோ இந்தியா மற்றும் சீனாவின் அசுர பலங்களை கடந்து எந்த உண்மைகளும் வெளிவருவதில்லை. பிபிசி கூட கடுமையான தணிக்கைகளுக்கு இடையே தான் செய்திகளை வெளியே கொண்டு வந்தன. சீனா மேற்கத்திய ஊடகங்களை சாடுகின்ற அதே நேரத்தில் அந்த ஊடகங்களை திபெத்திற்கு செய்தி சேகரிக்க அனுமதித்து இருந்தால் இந்த குற்றச்சாட்டு எழுந்து இருக்காது.

ஏன் சீனா இந்த ஊடகங்களை அனுமதிக்கவில்லை என்ற கேள்வி இயல்பாக எழுகிறது அல்லவா ? திபெத் பிரச்சனை அதிக அளவில் ஊடகங்களில் பரப்பபட்டதற்கு சீனாவின் செய்தி தணிக்கையும் ஒரு காரணம்.

ஹிந்து ராம் குறித்த பிம்பங்களை உருவாக்கி கொண்டு நீங்கள் வியந்து கொண்டிருப்பதில் எனக்கு ஒன்றும் பிரச்சனையில்லை. ஆனால் தமிழ்தேசியத்தை எப்படி மதவெறி கூட்டம் என குறிப்பிடுகிறீர்கள் என்பதை விளக்க முடியுமா ? முஸ்லீம்களை புலிகள் யாழ்ப்பாணத்தில் இருந்து வெளியேற்றிய நிகழ்வை முன்வைத்து நீங்கள் பேசுகிறீர்கள் என்று வைத்துக் கொண்டாலும் அதற்கு காரணம் தமிழ்தேசியத்தின் மதவெறியா ?

உங்களுடைய வியக்கத்தக்க ராம், சிங்கள அரசு தமிழர்களை கொழும்பில் இருந்து வெளியேற்றிய மனித உரிமை மீறல்களுக்கு ஜல்லி அடித்ததாரே அது சரியானது தானா ? புலிகளை விட்டு தள்ளுங்கள். அப்பாவி தமிழ் மக்களுக்கு எதிராக அரசாங்கத்தின் கட்டுப்பாட்டு பகுதியில் இருக்கும் யாழ்ப்பாணம், கொழும்பு போன்ற பகுதிகளில் நடக்கும் மனித உரிமை மீறல்கள் குறித்து ஹிந்து இது வரை ஏதேனும் செய்திகளை வெளியிட்டு உள்ளதா ? சிங்கள அரசாங்கமே கருணாவுடன் இணைந்து சிறார்களை கடத்திய பொழுது "ஸ்ரீலங்கா ரத்னா" ராம் என்ன விமர்சனங்களை முன்வைத்தார் என்பதை சொல்ல முடியுமா ? புலிகளுக்கு எதிரான இராணுவ நடவடிக்கை என்று கூறி விட்டு பொதுமக்கள் மீது ஸ்ரீலங்கா இராணுவம் விமானம் மூலம் தாக்குதல் நடத்துகிறது. செல் தாக்குதல் நடைபெறுகிறது. இந்த நிகழ்வுகளுக்கு எதிராக இது வரை ஹிந்து ஏதேனும் எழுதியுள்ளதா ? குறைந்தபட்சம் ஒரு முன்னணி பத்திரிக்கை என்றளவில் என்றேனும் தமிழர்கள் இருக்கும் பகுதிகளுக்கு சென்று ஹிந்து செய்திகளை சேகரித்து இருக்கிறதா ? சிங்கள அரசாங்கம் கொடுக்கும் செய்திகளை Cut-Copy செய்யும் ஹிந்து உங்களுக்கு வியக்கத்தக்கத்தாக உள்ளதை நினைத்தால் தான் எனக்கு வியப்பாக உள்ளது :)

இந்தியாவின் மதவெறி கும்பல்களுக்கு எதிரான நிலைப்பாடு எல்லோருக்கும் உண்டு. நரேந்திர மோடி, காவிக்கும்பல் போன்றவை மீது தமிழ் ஈழ விடுதலையை ஆதரிக்கும் பல அமைப்புகள் தங்கள் கடுமையான கண்டனங்களை முன்வைத்து இருக்கின்றனர். போராடியும் உள்ளனர். எனவே ஹிந்து ராம் மீதான கருத்து அளவுகோலாக அவரின் மதசார்பின்மையை முன்வைக்காதீர்கள். காஞ்சி சங்கராச்சாரியை கட்டிகாக்க அவர் துடித்த பொழுது அவரது மதச்சார்பின்மை எங்கே சென்றது என தெரியவில்லை.

ஹிந்துவின் சிறீலங்கா நிலைப்பாடுகள் குறித்து வலைப்பதிவில் பலர் எழுதியுள்ளார்கள். நானும் எழுதியுள்ளேன். தயவு செய்து அதனை படித்து விட்டு பேசுங்கள். விவாதத்திற்கு நான் தயாராகவே இருக்கிறேன். பத்திரிக்கை நியதிகளை காலில் போட்டு மிதித்து கயமைத்தனம் செய்யும் கயவர்களை போகிற போக்கில் வியக்கத்தக்கவர் என கூறாதீர்கள்.

உங்கள் கருத்துகளுக்கு நன்றி....

10:20 AM, April 06, 2008
பாரதிய நவீன இளவரசன் said...

சசி,

The following are my stray thoughts about The Hindu and CPI(M) in general.. (some may not relate to this post or your comment).

The Hindu has always remained to be a left-leaning newspaper, yet maintaining its own identity, and also catering to the interest of its traditional readership base that is mostly conservative comprising Tamil brahmins, urban middle class people and English language lovers.

The Hindu's political and social views always toe the CPI(M) line - be it any issue at any level, regional, national or international - Ram Temple, Sethu Project, Reservations, Congress Party, Sri Lanka, North Korea, Bin Laden, Tibet, Kavery or Hogenakkal... etc.

//சந்திரிகா மற்றும் பிற சிங்கள வலதுசாரி கட்சிகளுக்கு கூஜா தூக்குவது CPI(M) நிலைப்பாடா ?//

ஒன்றுபட்ட இலங்கை, தமிழீழ விடுதலைக்கு எதிர்ப்பு, LTTE போன்ற விஷயங்களில் CPI(M)ற்கு எந்த நிலைபாடோ, அதேதான் The Hindu நாளிதழிற்கும். தவிர, சந்திரிகாவிற்கும், சிங்கள இனவாதிகளுக்கும் கூஜா தூக்குவது என்ற குற்றச்சாட்டு CPI(M) மீதுகூட சுமத்தப்பட்டதே - JVP (ஜனதா விமுக்தி பெரமுன) அமைப்பின் தலைவர் ‘தோழர்’ சோமவன்ச அமரசிங்க, CPI(M) மாநாட்டின் விருந்தினராகக் கலந்துகொள்வது அண்மைக்காலம் வரை வழக்கமாக இருந்த ஒன்று என்பதும், சமீபத்தில்தான் JVPக்கான அழைப்பு நிறுத்தப்பட்டுள்ளது என்பதும் உங்களுக்கும் தெரிந்திருக்கும்தானே? CPI-Mற்கும் தங்களுக்கும் நல்ல உறவு நீடிப்பதாகவே JVP தரப்பு இப்போதும் சொல்லிக் கொண்டிருப்பதாகவும் வாசித்த நியாபகம்.

இவையெல்லாம் தவிர, CPI (M)ன் மாநாடுகளை, பிற தமிழ் நாளிதழ்கள்/பத்திரிக்கைகளைவிட The Hindu, Frontline அதிகமாக கவரேஜ் செய்வதாக எனக்குத் தோன்றியதாலும் அவ்வாறு கூறினேன்.

//சங்கராச்சாரியை முன்னிறுத்த முனைவது CPI(M) நிலைப்பாடா ?//

வேலைக்குப் போகும் பெரும்பான்மையான பெண்களுக்கு கற்பு கிடையாது என்று சொல்லிவிட்டார் என்பதற்காக, ஒரு முறை CPI(M)ன் மாதர் அமைப்பு சங்கராச்சாரிக்கு எதிராக குரல் கொடுத்த சம்பவம் நீங்கலாக காஞ்சி சங்கராச்சாரியை CPI(M) ஒன்றும், திக, மகஇக அமைப்புகளைப் போல அவ்வளவு சிரத்தையாக எதிர்த்ததாகத் தெரியவில்லையே!

சரி, The Hindu நாளிதழ் சங்கராச்சாரியை முன்னிறுத்த முனைகிறது என்று CPI(M) கருதாதவரை.. இந்த உங்கள் கேள்விக்கே இடமில்லை.

//இந்திய-இலங்கை ஒப்பந்தத்திற்கும் CPI(M) கட்சிக்கும் என்ன சம்பந்தம் ?//

இந்தியாவிற்கும் இலங்கைக்கும் பல ஒப்பந்தங்கள் உண்டு. இதிலே, நீங்கள் குறிப்பிடுவது எந்த ஒப்பந்தம்?

ஏகாதிபதியத்தை (Imperialism) எதிர்க்க இலங்கையிலுள்ள முற்போக்கு சக்திகளோடு சேரவேண்டுமென CPI-Mன் அண்மைக்காலத் தீர்மானம் செப்புகிறது (2-April-08). இலங்கையில் இவர்கள் யாரை 'முற்போக்கு' என்று சொல்கிறார்கள் என்று CPI(M)ற்கும், The Hinduவிற்கும்தான் தெரியும்.. உங்களுக்கும் எனக்கும் தெரியாது.

அதெல்லாம் போகட்டும், அதிகாரபூர்வமாக CPI(M) இலங்கை நிகழ்வுகள் குறித்து வருத்தப்படுவதாக வெளியிட்ட கடைசி அறிக்கை இதோ, உங்கள் பார்வைக்கு.

April 27, 2006 (Courtesy: CPI-Mன் இணையதளம் http://www.cpim.org/):

Press Statement - The Polit Bureau of the Communist Party of India (Marxist) has issued the following statement:

On Sri Lankan Situation:

The attack on the Sri Lankan army chief by a suicide bomber is a grave provocation which jeopardizes the ceasefire and possibilities of resumption of the peace process. The terrorist attack within the army headquarters has killed ten people and has all the hallmarks of a LTTE operation, despite its formal denial. The LTTE’s claim that it is committed to the ceasefire will have no credibility if it pursues such vicious assassination tactics.

The overall situation in Sri Lanka causes concern. The LTTE withdrew from participation in the second round of talks scheduled to be held this month in Switzerland . At the ground level, attacks on Tamils in Trincamolee have taken place while the Sri Lankan army and navy have lost more than hundred soldiers in the last five months. Norway and all the concerned countries who are backing the peace initiative should take a firm stand against the provocations by the LTTE. The Indian government must also send out a clear message that such activities will not be tolerated as it will have adverse repercussions within India .

The Sri Lankan government must deal with the situation with restraint and patience so that the overriding interest of maintaining the ceasefire and pursuing the peace process does not get further complicated. It is important to understand that resumption of hostilities, which will affect the Tamil minority people badly, will only play into the hands of the LTTE and aggravate ethnic tensions at the ground level.

//ஹிந்து அணிந்துள்ள ஒரு முகமூடி தான் CPI(M) என்பதும்...//

The Hinduவிற்கு எந்த அளவிற்கு வணிக நிர்பந்தங்கள் உண்டோ, அவையெல்லாம் இன்று CPI(M)ன் 'கைரளி' சேனலுக்கும், அதன் மலையாள நாளிதழான 'தேசபிமானி' பத்திரிக்கைக்கும் இருக்கிறது. The irony is - the online version of Deshabimani is more commercial than 'The Hindu'! (http://www.deshabhimani.com/)
அதன்மீது கூட லேசான வலது சாரி சாயைகள் தென்படுவதைப் பார்க்க முடிகிறது.

CPI(M) தலைவர்களின் பேட்டிகள் மற்றும் கட்டுரைகள் எந்த நாளிதழில்/பத்திரிக்கையில் அதிகமாக இடம்பெறுகிறது என்றால் அகில இந்திய அளவிலேயே The Hindu மற்றும் The Frontlineதான் என்று நீண்டகாலமாக மார்க்ஸிஸ்ட் கட்சியில் இருந்துவரும் எனது மேற்குவங்க நண்பரே சொல்கிறார் என்பதனால், நானும் அவ்வாறு கருத ஆரம்பித்தேன்.

The Hinduவில் வரும் விஷயங்கள் communism, revolution போன்றவைகளுக்கு ஒத்துவராமல் இருக்கலாம்; அவை மேல்சாதி பிற்போக்கு சமாச்சாரங்களை ஏந்தி வருவதாகச் சொல்லலாம். ஆனால், இந்தக் குற்றச்சாட்டுகள் எல்லாம்தான் CPI(M) கட்சியின் மீதேகூட கூறக் கேள்விப்பட்டுள்ளேன்.

பெரும்பான்மை வலது சாரி, பார்ப்பன வாசகர்கள் வட்டத்தைக் கருத்தில் கொண்டு, சங்கராச்சாரி, சாய்பாபா, கர்நாட சங்கீதம், டிசம்பர் கச்சேரி, கோயில், குளம் .. பற்றிய செய்தி, படங்களை வெளியிட்டாலும், விளம்பரம் மற்றும் வணிகமய கலாச்சாரத்திற்கு ஆதரவோடு செயல்பட்டாலும், அரசியல் கருத்து என்று வரும்போது CPI(M) கட்சியின் அதிகாரபூர்வ நிலைபாட்டையே அதன் தலையங்கங்கள் பிரதிபலிக்கும். Peoples Democracyயின் தலையங்கத்திற்கு சற்றும் குறையாத சில தலையங்கங்களை The Hinduவில் பார்த்திருக்கிறேன். CPI(M) கட்சியைச் சார்ந்த அறிவுஜீவிகளும் பலர் The Hindu பத்திரிக்கை குடும்பத்தாரோடு மேடைகளில் ஒன்றியிருப்பதையும் பார்க்கிறோம். No need for a mask - The Hindu and CPI(M) are quite comfortable with Marxism and Vedic Rituals (i wont be surprised if anybody spoke about vedic-marxism from citadel of The Hindu).

அதையெல்லாம் விடுங்க சார்..CPI(M) கட்சிக்கு, தமிழகத்தில் பெரிய அளவு ஆதரவும் இல்லை; வளர்வதற்கான சாத்தியக்கூறுகளும் இல்லை - இதனை நன்கு அறிந்த வலது சாரி, பார்ப்பன, மத்தியத்தர சமூக வாசகர் வட்டம், The Hinduவின் இந்த CPI(M) சார்பினைக் கண்டுகொள்வதில்லை; பெரிதுபடுத்துவதுமில்லை.

நான் சொல்லவந்த விஷயம் - இடதுசாரிகளின் அதிகாரபூர்வ வட்டத்திற்கு வெளிலிருந்துகொண்டு இடதுசாரிகளுக்கு அதிக இடம் ஒதுக்கி, CPI(M) அமைப்பின் 'வெளி அரங்கு' போல் செயல்படுதுதான் The Hindu. இந்த ‘இடதுசாரித்தனம்’ The Hinduவின் 'முகமுடி' என்று சொல்வதைவிட The Hinduவிற்கு ரொம்பவும் பிடித்துப்போன 'வாடிக்கை கெட்-அப்' என்று சொல்லலாம்.

***

Coming to 'Dalai Lama = Osama Bin Laden' matter, it will not surprise you , if you had read N.Ram's write up titled TIBET - REALITY CHECK in Frontline long back (Sep. 02 - 15, 2000):
http://www.flonnet.com/fl1718/17180040.htm

Anyway, the views of CPI(M)/The Hindu are far from the public perspective as far as issues concerning Tamils are concerned; both are bent on maintaining their existing support base and readership in the state respectively. And both have successfully managed to turn the technological revolution to their advantage.

In CPI(M) ruled states (WB & Kerala), the readership of vernacular newspapers is far high when compared to the national average and the English dailies have a poor circulation due to people's taste and preference. Yet, The Hindu has made significant sales inroad in these two states in recent past.

At the national level, for the leftists, like Harish Khare, Jayati Ghosh, Praful Bidwai, Bhaskar Ghose or political leaders like Sitaram Yechury, Prakash Karat, etc., The Hindu is ideal and best platform for display of their intellectual marxism in this information era.

I dont know what 'Real Communism' is (or) what 'Real People's Democracy' means... but all I understand is 'The Hindu' is as 'left' as the CPI(M).

10:32 AM, April 06, 2008
தமிழ் சசி | Tamil SASI said...

மாலிக் பதிவில் எழுதிய பின்னூட்டம்

திபெத் பிரச்சனையை சார்ந்த நிகழ்வுகளில் சில முரண்பாடுகளை கவனிக்க முடியும்.

திபெத் விடுதலையை இந்தியாவில் "வலுவாக" ஆதரிப்பவர்கள் இந்து மத அடிப்படைவாத கும்பல்களான பாஜக, ஆர்.எஸ்.எஸ் மற்றும் இந்திய தேசியவாதிகள். இவர்கள் திபெத் விடுதலையை ஆதரிப்பது போல பாக்கிஸ்தானில் உள்ள பலுசிஸ்தான் மாகாண விடுதலையையும் ஆதரிப்பார்கள். ஆனால் பாலஸ்தீனப் பிரச்சனையில் இஸ்ரேலை ஆதரிப்பார்கள். அது போல காஷ்மீர் மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் நடக்கும் பிரச்சனைகளை பயங்கரவாதப் பிரச்சனையாக பார்ப்பார்கள். இவையெல்லாம் இந்திய தேசிய நலன் என்ற வரையறைக்குள் அமைக்கப்படுகிறது.

இந்தியாவில் இருக்கும் முஸ்லீம்கள் திபெத் விடுதலையை ஆதரிக்க மாட்டார்கள். காரணம் இந்து மதவாதிகள் ஆதரிக்கும் எந்த விடயத்தையும் இவர்களால் ஆதரிக்க முடியாது. ஆனால் காஷ்மீர், பாலஸ்தீனம் போன்ற நாடுகளில் முஸ்லீம்கள் விடுதலைக்காக போராடுவதால் அதனை ஆதரிப்பார்கள்.

இந்து மத அடிப்படைவாதிகள் கோசோவா குறித்து என்ன பேசினார்கள் என்பது நமக்கு தெரியும். கோசோவா விடுதலை இந்தியாவில் இருக்கும் தேசிய இனங்களின் விடுதலை போராட்டத்திற்கு ஆதரவாக உள்ளதாக இவர்கள் நம்புகிறார்கள். எனவே கோசோவா விடுதலையை எதிர்க்கிறார்கள்.

உங்களின் பதிவையும், இங்கிருக்கும் சில பின்னூட்டங்களையும் இந்தச் சார்புகளை கொண்டே நான் புரிந்து கொள்கிறேன்.

இந்தியாவின் வலதுசாரிகள் ஹிந்து நரசிம்மன் ராமை இடதுசாரி ஆதரவாளர் என குற்றம்சாட்டுகிறார்கள். இந்தியாவின் சிறுபான்மையினர் இதனால் ஹிந்துவை தாங்கிப்பிடித்துக் கொள்கின்றனர். சிறுபான்மையினர் தங்களை இடதுசாரிகளாக இந்தப் பிரச்சனையில் முன்னிலைப்படுத்துகின்றனர் :). சிறுபான்மையினர் இடதுசாரிகளாக மாறுவது தான் இங்கே உள்ள பெரிய முரண்பாடு.

என்னைப் பொருத்தவரை ஒரு தேசிய இனத்தை அடக்க மற்றொரு தேசிய இனத்திற்கு என்ன உரிமை உள்ளது ? இது ஏகாதிபத்யம் இல்லையா ? திபெத் கலாச்சாரத்தில் பிரச்சனைகள் உள்ளன என்பதில் எனக்கு மாற்று கருத்து இல்லை. திபெத் ஒரு நிலப்பிரபுத்துவ பாரம்பரிய அமைப்பு முறையாக உள்ளது என்ற வாதம் முன்னிலைப்படுத்தப்பட்டு கம்யூனிச படையெடுப்பு நியாயப்படுத்தப் படுகிறது. அப்படி பார்த்தால் சீனா இன்று இந்தியா முழுவதையும் தன் வசம் வைத்திருக்க வேண்டும். ஏனெனில் 1950களில் இந்தியாவிலும் திபெத் போன்ற நிலவரம் தான் இருந்தது. இன்றைக்கும் ஆந்திராவில் உள்ள சில கிராமங்களில் இந்த முறை உள்ளதால் தான் அங்கே நக்சலைட்களின் ஆதிக்கம் உள்ளது. எனவே இந்தியாவின் அனைத்து பகுதிகளையும் சீனா எடுத்துக் கொள்ளலாமா ?

ஒவ்வொரு இனத்தின் சுயநிர்ணய உரிமையும் மதிக்கப்பட வேண்டும் என்பது எனது கருத்தாக உள்ளது. அதனால் தான் ஈழம், திபெத், காஷ்மீர், பாலஸ்தீனம் என அனைத்திலும் எனக்கு ஒரே நிலைப்பாடு உள்ளது.

உங்கள் சார்புகளை விலக்கி விட்டு ஹிந்து நாளிதழ் செய்திகளை வெளியிடும் தோரணைகளை கவனித்து பாருங்கள். ஹிந்து சரியான செய்திகளை வெளியிடுகிறதா, அல்லது தன்னுடைய சார்புகளை செய்திகளாக திரிக்கிறதா என்பது தெரியும்.

ஹிந்து ஒசாமா பின்லேடனை இங்கே இழுக்க வேண்டிய அவசியம் என்ன என்று விளக்க முடியுமா ? இந்து மதவாதிகளை எதிர்க்க ஹிந்துவை ஆதரிக்க வேண்டிய அவசியம் இல்லை :)

11:17 AM, April 06, 2008
தமிழ் சசி | Tamil SASI said...

ஹிந்து ராம் ஒரு கம்யூனிஸ்ட் என்ற நகைச்சுவையை எப்பொழுதும் பலர் முன்வைக்கின்றனர். முன்பு நண்பர் சங்கரபாண்டி இது குறித்து எழுதிய கருத்தினை இங்கே முன்வைக்கிறேன்

இராம் ஒரு மார்க்ஸியவாதி என்று அழைக்கப் படுவதில்தான் இராமுடைய வெற்றியே அடங்கியிருக்கிறது. மார்க்ஸிய முகமூடியை அணிந்து கொள்வதன் மூலம் தமிழரல்லாத மார்க்ஸிய அறிவுஜீவிகளான அருந்ததி ராய், நோம் சாம்ஸ்கி போன்றவர்களை ஏமாற்றி அவர்கள் தமிழர் பிரச்னைகளை மார்க்ஸ்சியக் கண்களால் பார்ப்பதை விட்டு இராமின் கண்களால் பார்க்கச் செய்ய முடிகிறது.

ஒருவகையில் பார்க்கப் போனால், இராமின் மார்க்ஸிய அபிமானத் தோற்றத்தையும், மாலனின் திராவிடக் கருத்தியல் அபிமானத் தோற்றத்தையும் ஒப்பிட்டுப் பார்த்தால் சில உண்மைகள் புலப்படும்.

மார்க்ஸியமும், திராவிடக் கருத்தியலும் ஒடுக்கப் பட்டவர்களின் ஆயுதங்கள். அவ்வாயுதங்களை ஒடுக்கப் பட்டவர்கள் கையில் எடுப்பதைத் தவிர்க்க பல வழிகள் உண்டு. அதில் ஒருவழி அவ்வாயுதங்களை தாங்களே கையில் ஏந்திக் கொண்டால், ஒடுக்கப் பட்டவர்களை வழிநடத்தும் பொறுப்பையும் ஏற்றுக் கொள்ள முடியும். அதன் பின்னால் ஒடுக்கப் பட்டவர்களின் பாதையை, ஈழம் முதல் இந்தி வரை தாங்களே வகுக்க முடியும்.

11:26 AM, April 06, 2008
பாரதிய நவீன இளவரசன் said...

//அருந்ததி ராய், நோம் சாம்ஸ்கி போன்றவர்களை ஏமாற்றி அவர்கள் தமிழர் பிரச்னைகளை மார்க்ஸ்சியக் கண்களால் பார்ப்பதை விட்டு இராமின் கண்களால் பார்க்கச் செய்ய முடிகிறது.//

If an Arundati Roy or Noam Chomsky is unable to distinguish between truth and falsehood, 'mask' and 'real' and gets easily carried away by the lies of a fellow marxist, what kind of intellectuals are they? how could we trust their views of imperialism and host other issues concerning humanism, if they lacked originality in vision and thinking? wouldnt that lead people to conclude that they are misinformed by the likes of N.Rams in several other issues.. ? doesnt this mean Arundati Roys and Noam Choamskys are misinformed in most issues... and they are misleading the people?

//மார்க்ஸியமும், திராவிடக் கருத்தியலும் ஒடுக்கப் பட்டவர்களின் ஆயுதங்கள். அவ்வாயுதங்களை ஒடுக்கப் பட்டவர்கள் கையில் எடுப்பதைத் தவிர்க்க பல வழிகள் உண்டு. அதில் ஒருவழி அவ்வாயுதங்களை தாங்களே கையில் ஏந்திக் கொண்டால், ஒடுக்கப் பட்டவர்களை வழிநடத்தும் பொறுப்பையும் ஏற்றுக் கொள்ள முடியும். //

Your analysis on N.Ram is much similar to the evaluation of CPI(M) by several independant Left thinkers, திக, மகஇக, CPI(M-L), Tamil Nationalists, etc.

11:46 AM, April 06, 2008
தமிழ் சசி | Tamil SASI said...

I dont know what 'Real Communism' is (or) what 'Real People's Democracy' means... but all I understand is 'The Hindu' is as 'left' as the CPI(M).

Dude,

I suggest one thing, go and read about communism as well as Hindu :)

You are saying that Communist Party of India (CPI) is not a communist party because D.Raja is against supporting Sri Lanka whereas CPI(M) is a communist party which supports Sri Lanka and N.Ram who runs a news paper has CPI(M) communist leanings :)

நுனிப்புல் மேய்தல் அப்படின்னு தமிழ்ல சொல்வாங்க தெரியுமா ? உங்கள் கருத்து அது போல உள்ளது

நன்றி...

11:56 AM, April 06, 2008
தமிழ் சசி | Tamil SASI said...

If an Arundati Roy or Noam Chomsky is unable to distinguish between truth and falsehood, 'mask' and 'real' and gets easily carried away by the lies of a fellow marxist, what kind of intellectuals are they? how could we trust their views of imperialism and host other issues concerning humanism, if they lacked originality in vision and thinking?

***********

The so called intellectuals also have their own bias and it does not necessarily mean that intellectuals have indepth knowledge on every aspects of the problems that exists in the world. They may have a good perception on imperialism and humanism. But not about the complex nature of the Eelam problem that is isolated between 2 ethnic groups in a small part of the world. Just like many in India does not know about Darfur or PKK.

Ram has many tags to his name just like he has the Marxist tag. He is also known as the Sri Lankan expert in the Journalist and Marxist circles. That is because he played a major role in Sri Lanka and at one point of time he had close relations with both the LTTE and the Sri Lankan Government. Please see my article -
ஹிந்து ஆசிரியர் என்.ராமின் பத்திரிக்கையாளர் முகமூடி...


N.Ram has strong views against USA, Hindu fundamentalists etc., which i also agree with. But he hides his bias with these Masks which i know better because i know the Eelam problem. But someone who doesn't know about the Eelam problem will just take the words of N.Ram as they agree with him on most issues. I also tend to get the views of Hindu on some aspects of the world problems which i don't know :)

Many seek N.Ram's views on Sri Lanka because of Ram's Sri Lankan expert tag. Recently Indian Express Editor Shekhar Gupta did an interview with Mahinda Rajapaksae. Shekhar Gupta does not know much about Sri Lankan problems. But he did quote N.Ram in few places. That is the influence N.Ram has on the intellectual circles on Eelam problems. And that's is what we are trying to expose...

As i said before, you are doing "நுனிப்புல் மேய்தல்"

12:29 PM, April 06, 2008
மு. மயூரன் said...

அனானிமஸ் சொன்னது:

//ஏகாதிபத்யத்தை எதிர்த்து குரல் கொடுக்கும் வலையுலக தமிழரங்கம் புரட்சி தோழர்கள் ஸ்ரீரங்கன், இராயகரன், ஸ்டாலின், அசுரன், மயூரன் சீன ஏகாதிபத்யத்தை எதிர்த்து குரல் கொடுக்க மாட்டாங்களா ?//

பார்க்க:
http://www.tamilcircle.net/unicode/authors/srirangan_uni/srirangan_113u.html

1:29 PM, April 06, 2008
தமிழ் சசி | Tamil SASI said...

சீனா கம்யூனிச நாடு என கூறுபவர்களுக்காக ப.வி.ஸ்ரீரங்கன் கட்டுரையில் இருந்து சில வரிகள்...

சீன முதலாளித்துவத்தை இன்னும் கொம்யூனிசமெனப் பறைசாற்றியபடி மேற்குலக அதிதீவிரத் தனியார் துறை மேலும் தனது வலுக்கரத்தை மறைத்துச் சீனாவை உலகத்திலிருந்து தனிமைப்படுத்த முனைதல் மேற்குலக-அமெரிக்கப் பொருளாதார முரண்பாட்டின் அப்பட்டமான சதியாகவே நகர்கிறது. இது வளர்ந்துவரும் மேற்குலக முதலாளித்துவத்தின் அதிபயங்கர அராஜகத்தை மறைப்பதற்கும் இந்தப் பயங்கரவாதத்துக்கெதிரான தொழிலாள வர்க்கத்தின் அணித்திரட்சியைத் தகர்ப்பதற்காகவும் சீனாவை வலிந்து கம்யூனிசத் தேசமாகக்காட்டிப் பயங்கரவாதச் செயற்பாட்டை கம்யூனிசத்துக்கும் பொதுமையாக்கி மக்களைத் திசை திருப்பும் ஒரு யுக்தியாகவே ஏகாதிபத்தியம் பொய்யுரைத்துவருகிறது. சீனாவென்பது மேற்குலகத்துக்கு இணையானவொரு ஒடுக்குமுறைத் தேசமாகவே இருக்கிறது. அங்கே கொம்யூனிசம் மருந்துக்கும் கிடையாது. சீனாவை நேரடியான கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் சீன ஆளும் வர்க்கமானது உலகத்து மாபியாக்களோடு தமது உறவை வளர்த்துச் சீனாவையும் அதன் கடந்த காலப்பாரம்பரியத்தையும் கடந்த முப்பதாண்டுக்கு முன்பே குழி தோண்டிப் புதைத்தாகிவிட்டது.

2:18 PM, April 06, 2008
நண்பன் said...

மாலிக், உங்களுடைய ஒப்பீடுகள் பொதுவாக பத்திரிக்கை வாசிக்கும் பாமரத் தன்மையுடையவாக இருக்கின்றன என்றே தோன்றுகிறது.

சீனாவின் அத்துமீறல்கள் பற்றிய தகவல் ஏதுமில்லை என்கிறீர்கள். அது மிகவும் தவறானது. இணையத்தில் பிளாக் எழுதிய சிலரை – அதுவும் தன் நாட்டு பிரஜையையே சீனா விட்டு வைத்ததில்லை. விடுதலை உணர்வுடன் ஒன்று கூடிய மாணவர்களின் மீது தன் டாங்கிப் படையை ஏவி, நசுக்கியே கொன்ற கோரம், வேறெங்கும் கண்டும், கேட்டுமிராத ஒரு கொடூரம். தைவான் மீது, எப்பொழுதும் அது ஒரு ஆக்கிரமிப்பு பார்வையையே வைத்திருக்கிறது. அதுபோலவே மத்திய ஆசியாவில், இஸ்லாமிய இனக்கிளர்ச்சிகளை மிகக் கொடூரமாக அடக்கி ஒடுக்கியே வைத்திருக்கிறது. தன் நாட்டின் சகல எல்லைகளிலும் அது தன் அண்டை நாட்டுடன் ஒத்துப் போனதே இல்லை. இவ்வாறிருக்கும் பொழுது, அது திபெத்தில் எந்த வித அத்துமீறல்களிலும் ஈடுபடவே இல்லையென எழுதுவது தவறானதாகும்.

இது ஒரு தளத்தில் என்றால், உங்களுடைய மத்திய கிழக்கு பிரச்சினைகளில் நிகழும் மரணங்களை திபெத்திய மரணங்களோடு ஒப்பீடுவதும் தவறாகவே இருக்கின்றது. திபெத்தில் நடத்தப்பட்ட எதிர்ப்புகளுக்கும், மத்திய கிழக்கில் நிகழும் எதிர்ப்புகளுக்குமுள்ள வித்தியாசங்கள் பலப்பல. திபெத்தில் நடந்த நடக்கும் எதிர்ப்பு காந்திய வழியில் அமைதியாக நடத்தப்படுபவை. அவர்கள் ஆயுதம் ஏந்தவில்லை. தலாய்லாமாவால் ஆயுதம் ஏந்திய ஒரு போராட்டத்திற்கு தனது மக்களை இட்டுச் செல்ல முடியாது. ஆனால், பாலஸ்தீனத்தில், லெபனானில், ஈராக்கில், ஆஃப்கானிஸ்தானத்தில் என நீங்கள் எடுத்துக் கொண்ட அனைத்து இடங்களிலும் எதிரிகளுடன் மோதுபவர்கள் ஆயுதமேந்திப் போராடுபவர்கள். அவர்கள் அறிந்தே அதனில் ஈடுபடுகிறார்கள். அதனால், விளையும் மரணங்களும் அதிகமாகவே இருக்கத் தான் செய்யும். இங்கு 99 தானே, அங்கு பாருங்கள் எத்தனை என்ற ஒப்பீட்டின் மூலம் எதை நிருவ முயற்சிக்கிறீர்கள்? சாவின் எண்ணிக்கையின் மூலம் எந்த ஒரு போராட்டமும் வெற்றி பெறுவதில்லை. மாறாக, போராட்டங்களின் ஆத்மா, முன்வைக்கப்படும் கோரிக்கைகளில் – போராட்ட வழிமுறைகளில் இருக்கின்றது.
ஒரு சாவாக இருந்தாலும், மில்லியன் சாவாக இருந்தாலும், விடுதலை வேட்கையை முடக்கிப் போடும் பொழுது அது முக்கியத்துவம் பெறவே செய்கின்றன. சமீபத்தில், தனது இரண்டு வீரர்களை விடுதலை செய்ய, ஹமாஸின் மீது ஆக்ரோஷமான தாக்குதலைத் தொடுத்தது இஸ்ரேல். ஆனால், அதனால் தனது வீரர்களை மீட்க முடியவில்லை. ஹமாஸையும் ஒடுக்க முடியவில்லை. இறுதியாக ராணுவத் தலைமை விலக வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. சர்வதேச ஊடகங்களில் மிகவும் விவாதிக்கப்பட்டது. மற்றெந்த செய்திகளையும் விடவும் முக்கியத்துவம் தரப்பட்டு விவாதம் செய்யப்பட்டது. பின்னர் மற்ற செய்திகள் முன்னுக்கு வர, பாலஸ்தீனப் பிரச்சினைப் பின்னுக்குத் தள்ளப்பட்டது. செய்தியின் வசீகரம் என்றும் ஒன்று இருக்கிறது. இந்து பத்திரிக்கை இதற்கு எத்தனை முக்கியத்துவம் தந்தது, அல்லது தரவில்லை என்பதைப் பற்றிய விவாதம் அல்ல இது. இரண்டு முற்றிலும் வேறுபட்ட இருவித அணுகுமுறையை தகாத முறையில், ஒரு தட்டில் நிறுத்தி எடை போட முயற்சித்தது தான் இந்துவின் மனப்பான்மையை வெளிப்படுத்துகிறது. அந்த நிலையில் இதைப் பார்க்க வேண்டுமே தவிர, இந்தப் போராட்டத்தை இந்துத்வா சக்திகள் ஆதரிக்கின்றன – ஆதலால் இதை மட்டமாக சித்தரிக்க செய்யப்பட்ட முயற்சியை ஆதரிக்க வேண்டும் என்பது, ஒரு இன மக்களின் விடுதலை வேட்கையை அழிப்பதற்கு ஒப்பாகும்.

நீங்கள் செய்த மற்றுமொரு ஒப்பீடும் தவறானது. தமிழ் இன மக்களின் போராட்டத்தை மதவெறி போராட்டம் என்று பார்க்கிறீர்கள். அது மிகவும் தவறு. இலங்கையில், முஸ்லீம்கள் ஒரு தவறான நிலைபாட்டை எடுத்ததாகத் தான் நான் கருதுகின்றேன். தமிழர்கள் பக்கம் நிற்பதா, அல்லது சிங்களர்கள் பக்கம் நிற்பதா என்ற இக்கட்டான சூழலில் அவர்கள் அரசின் பக்கம் சாய்ந்தனர். அத்துடன் அவர்கள் நின்றிருந்தால் எந்தப் பிரச்சினையுமிருந்திருக்காது. ஆனால், அவர்கள் விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை அடையாளம் காட்ட முனைந்த பொழுது, அதுவே உரசலுக்கும் பின்னர் அதன் வழியாக மோதல்களுக்கும் காரணமாயிற்று. என்றாலும், இந்தப் பிரச்சினையை புலிகள் இந்து இஸ்லாமிய போராட்டமாகக் காணவில்லை. விடுதலைப் புலிகளின் வரலாற்றில் அவர்கள் தமிழர்கள் ஆன பலரையும் கூட ‘அகற்ற’ வேண்டிய கட்டாயத்துக்குள்ளாகி இருக்கின்றனர். காரணம், போட்டியினால், அவர்கள் தங்கள் போராளிகளை அடையாளம் காட்ட முனைந்தார்கள் என்பது தான். தங்கள் நலனுக்கு ஊறு விளைவிப்பவர்களாகக் கருதப் பட்ட அரசியல் தலைவர்களுக்குக் கூட இவை நிகழ்ந்திருக்கின்றன. இவை, விடுதலைப் புலிகளுக்கு என்று மட்டுமல்ல – உலகின் எந்த ஒரு போராட்ட இயக்கமும் இந்த வழிமுறைகளைத் தான் கடைபிடித்திருக்கின்றனர். ஆக, இங்கு மதவெறி என்ற வகையில் இந்தப் பிரச்சினையை அணுகுவது முற்றிலும் தவறானது. நாளடைவில் இந்தப் பிரச்சினை சரியாகக் கூடியது தான். சிங்களர்கள் ஒன்றும் இஸ்லாமியர்களை உயர்த்திப் பிடிக்கப் போவதில்லை. இதற்கு கடந்த நூற்றாண்டில், இஸ்லாமியர்களுக்கு எதிராக நடந்த கலவரங்கள் – சிங்களர்களால் தூண்டப்பட்ட கலவரங்களை நோக்கினாலே போதும் உணர்ந்து கொள்ள முடியும்.

விடுதலை உணர்வைக் கோர ஒவ்வொரு இனத்திற்கும் உரிமை உண்டு. அந்த உணர்வுகள் எழும் அடிப்படையில், ஒன்றை விட மற்றவை முற்றிலும் வேறான தளங்களில் நிகழும் உணர்வுகளால் அமையப் பெற்றிருக்கிறது. ஒன்றை மற்றொன்றுடன் ஒப்பிடும் பொழுது, அவற்றின் அடிப்படை ஒற்றுமை வேற்றுமைகளைப் புரிந்து கொண்டே ஒப்பீடுகளையும், மதிப்பீடுகளையும் பொறுப்புள்ளவர்கள் செய்து கொள்ள வேண்டும். தலாய்லாமாவின் வழிமுறைகளையும், பின் லேடனின் வழிமுறைகளையும், ஒரே வீச்சில், ஒற்றைத் தட்டில் எடை போடுவதைப் போன்ற முட்டாள்தனம் வேறெதுவும் இருக்க முடியாது. இதை இந்து செய்கிறதென்றால், அதன் அடிப்படை சித்தாந்தத்தின் கோளாறேயன்றி வேறெதுவும் இருக்க முடியாது.

ராம் எதிர்த்த பலவற்றைப் பட்டியலிட்டிருக்கிறீர்கள். ஆனால், அவை எத்தனை தூரம் வலுவான குரலாக ஒலித்திருக்கிறது என்பதைப் பாருங்கள். ஒரு பலவீனமான குரலாகத் தான் அது எப்பொழுதும் ஒலித்திருக்கின்றதேயன்றி, வலிமையாக அல்ல. இந்து ராமிடம் பாராட்டப்பட வேண்டிய குரலை விட, கண்டிக்கப்படக் கூடிய குரல் மிக அபாயகரமான டெசிபலுடன் மிக வலுவாக ஒலிக்கிறது. ஒலித்துக் கொண்டிருக்கிறது. அதை அடையாளம் காண்பது, விடுதலை உணர்வுக்காக உலகமெங்கும் ஒலிக்கும் பல கோடி மக்களின் கனவைக் காப்பதாக இருக்கும்.

5:54 PM, April 06, 2008
பாரதிய நவீன இளவரசன் said...

வணக்கம் சசி.

//You are saying that Communist Party of India (CPI) is not a communist party because D.Raja is against supporting Sri Lanka whereas CPI(M) is a communist party which supports Sri Lanka and N.Ram who runs a news paper has CPI(M) communist leanings //

நான் அப்படி சொல்லவில்லை and I never meant so. However, a wide difference do exist between CPI(M) and the rest of the Left and it is an entirely different matter altogether. Anyway, D.Raja even while expressing concern for Sri Lankan Tamils by criticising the lankan government, also presents LTTE in a bad picture, which is totally uncalled for:
http://www.tamilnet.com/art.html?catid=13&artid=24943

And a recent resolution of Communist Party of India (CPI) reads "...legitimate aspirations of Tamils in Sri Lanka with all democratic and human rights must be safeguarded through a proper mechanism for devolution of powers on the basis of federal principles within Sri Lanka".

இந்த 'within Sri Lanka' ஜல்லியைத்தான் இந்தியாவிலுள்ள 'அ'னா முதல் ஃ-ன்னா வரையிலுள்ள எல்லா தேசிய கட்சிகளும் அடித்துக்கொண்டு இருக்கிறதே!

N.Ram and his likes belong to the CPI(M) variety only. Today, CPI(M) is the only place which provides platform to such white collared, english educated, media savvy personalities. தவிர, one quick question to you, sasi.. 'பார்ப்பனிய பின்னணியிலிருந்து வந்தவர்களுக்கு தேசிய அளவில் அதிக இடமும், முக்கியத்துவமும், கவுரவமும் கொடுக்கும் வலதுசாரி அல்லாத அமைப்பு எது?'

***

இலங்கையின் இறையாண்மை, ஒன்றுபட்ட இலங்கை - இவைகளைக் கட்டிக்காப்பது அடிப்படைக் கொள்கைகளில் ஒன்றாகக் கொண்டுதான் இலங்கையிலுள்ள எல்லா இடதுசாரி கட்சிகளுமே (சிங்களத் தலைமையில்) இயங்கிவருவதாக நான் அறிகிறேன். LTTE அமைப்பையும், ஈழத் தமிழர் விடுதலை வேட்கையையும் ஒடுக்குவதில் இலங்கை அரசாங்கம் மேலும் முனைப்புக் காட்டவேண்டுமென பகிரங்கக் குரல் கொடுப்பதுதான் இலங்கையின் பிரதான இடதுசாரி அமைப்புகளின் கோரிக்கை!
இந்த இடதுசாரிகள் சொல்வதைத்தான் பிற நாடுகளில் உள்ள இடதுசாரி அமைப்புகள் நம்புகின்றன.

N.ராம் சொல்வாராம், அதை மற்ற இடதுசாரி அறிவுஜீவிகள் நம்புவார்களாம்! என்ன சசி சொல்றீங்க... இலங்கையிலிருக்கும் இடதுசாரி அமைப்புகளோடு நெருக்கமான உறவுகள் இந்திய இடதுசாரி அமைப்புகளுக்கு இல்லை என்று நீங்கள் நம்புகிறீர்களா? இலங்கையின் இடது சாரி அமைப்புகள் தரும் தகவல்கள் (inputs) தான் இந்திய இடதுசாரிகளுக்கு நம்பத்தகுந்த செய்திகளாகக் கருதப்படும்.
நீங்களே, பாருங்களேன், வெகுசமீபத்தில் நிகழ்ந்துமுடிந்த CPI(M)ன் மாநாட்டு அறிக்கையை..இலங்கையில் இருக்கும் 'முற்போக்கு' சக்திகளூடன் கரம் கோர்த்து ஏகாதிபதியத்தை முறியடிக்கவேண்டுமாம். அப்புறம், அதன் இலங்கை பற்றிய கடைசி அறிக்கை - "The Sri Lankan government must deal with the situation with restraint and patience ........ . It is important to understand that resumption of hostilities, which will affect the Tamil minority people badly, will only play into the hands of the LTTE and aggravate ethnic tensions at the ground level."

N.ராம்தான் CPI(M)ற்கு இதெல்லாம் எழுதிக்கொடுத்தார் என்கிறீர்களா?
CPI(M)இன் கருத்துக்களோடு பிற இந்திய கம்யூனிஸ்ட் அமைப்புகள், அடியோடு முரண்படலாம்...

//Recently Indian Express Editor Shekhar Gupta did an interview with Mahinda Rajapaksae. Shekhar Gupta does not know much about Sri Lankan problems. But he did quote N.Ram in few places. That is the influence N.Ram has on the intellectual circles on Eelam problems. //

Dude, here is where I had to agree with you. N.Ram wields a power of influence which is totally disproportionate to the readership strength of his english daily. This is the case with Yechurys. Karats, Harish Khares, Arundati Roys.. and with all other modern day marxists, who are born in MANUWADI family, broughtup by MACULAYAN thoughts and graduated at MARXIST Universtiy.

ஏதோ... 'நுனிப்புல்' அறிவுக்கு எட்டியதைச் சொன்னேன். ஒருவேளை, 'dialectical materialism, scientific socialism, proletariat dictatorship, democratic centralism, Bolshevism, Menchevism, Trotskysm ............. Glassnost, Perestroika, Nandigramism, Mullaiperiyarism என்று எல்லாவற்றையும் படித்து, கரைத்துக் குடித்தவர் வேறுமாதிரி சொல்லியிருக்கக்கூடுமோ என்னமோ?!

நன்றி.

4:50 AM, April 08, 2008
SnackDragon said...

பாபா,

இதிலே நான் சொன்னதில் உங்களுக்கு என்ன சந்தேகம் என்று புரியவில்லை.

புலிகள் ஈழவிடுதலையில் முக்கியமான சக்தி இல்லை என்று நிறுவி 'தமது இறையாண்மையுள்ள" அரசின் கவுரவத்தை காப்பாற்றும் யுக்தியும், அதே நேரத்திலே இந்திய மத்திய அரசின் துணையோடு பெங்களூரு,கிருஷ்ணகிரிகளில் ஆயுதப்பயிற்சி கொடுத்துக்கொண்டே , சர்வதேச அரங்கில் விடுதலைப்போரட்டத்திணை 9/11 க்கு ஈடான கருத்தாக பரப்பி அமெரிக்க அரசிடம் பிச்சையெடுக்கும் சக்திகள், அதற்கு பெங்களூரு எல்லையிலே ஜெயேந்திரரை இரவோடு இரவாக பிக்‍அப் செய்யும் தமிழக  மார்க்ஸியபூசாரி இலங்கையிலே 'லங்கா ரத்னா' வாங்கக்கூடியவர், அந்தப்பக்கம் ஜேவிபிக்கு,பிக்குணிகளுக்கு  ஆதரவளித்தாலும் இந்தபக்கம் அதைவிட ஆர்தடாக்ஸான‌ தலாய் லாமாவை ஓசாமா என்று எழுதக்கூடிய தேவை இருப்பதை வெளியிடுவது குறித்து,

அதை இந்திய/பிராந்திய நலனைக் காக்க 'இந்தியாவும் வான் புலிகளும்' என்று 2005 இலேயே
// இந்த விமான பலத்தின் மூலம் ஒற்று அறிவது, வேவு பார்ப்பது போன்றவை புலிகளுக்கு எளிதாகும். போராளிகளை, இலங்கை, தென்னிந்தியா மற்றும் தென் கிழக்காசியா போன்ற அக்கம்பக்கத்து நாடுகளுக்குக் கொண்டு விடுவது இயலும். போர் காலகட்டங்களில் வெளியிடங்களில் இருந்து அவசர உதவிகள் தருவிக்கவும்; சிகிச்சைகளுக்கு கொண்டு செல்லவும்; புதிய ராணுவ உதிரி பாகங்களை வெகுவிரைவில் கொண்டு வரவும் உதவலாம்.//

2007 இல் உண்மையாக‌ ஒரு வான்வ‌ழி தாக்குத‌ல் ந‌ட‌க்க‌முன்னாலேயே இந்தியப்பாதுகாப்புக்கு ஏற்படும் ஆபத்தை புள்ளி விவரத்தோடு நிறுவ முயலும் பாஸ்ட‌னில் இருக்கும் பாலாஜிக‌ள், 

//In the history of aviation terrorism, the LTTE attack is considered the worst. The second highest number of aircraft destroyed or damaged in any single terrorist attack is four.//  என்று தி ஹிந்து ஹே!ராம்கள்


ஆண்டாண்டுக‌ளாக‌ ப‌ர‌ப்பி வ‌ந்தாலும் அதை ம‌ட்டும் ந‌ம்பாம‌ல், இவ்வ‌ள‌வு ஜாக்கிர‌தை உண‌ர்வைப் பெறுவ‌து ஆச்ச‌ரிய‌ப்ப‌ட‌கூடிய‌து இல்லை என்றாலும், வாசித்துவிட்டு த‌ன் பெய‌ரை ப‌திவ‌து பாராட்ட‌த்த‌க்க‌து என்று நினைத்தேன்.

த‌மிழ்ச்செல்வ‌ன் ம‌ர‌ண‌த்துக்கு அவ‌ர் பிரிகேடிய‌ர்தானே,அட்டாக்குக‌ளில் இருந்திருக்க‌வில்லையா என்று attackகுப‌வ‌ர்க‌ள், கேபிர் விமான‌த்தாக்குத‌ல்க‌ளில் சிவிலிய‌ன் சாவுக‌ளை ப‌ட்டிய‌லிடும் த‌மிழ்நெட் செய்திக‌ளை எத்தனை த‌ர‌ம் ப‌திவிட்டு/சுட்டியிருக்கிறார்கள் என்று தெரிந்துகொள்ள‌வும் உப‌ரி ஆசை!!!

3:42 PM, April 08, 2008
Anonymous said...

இதில் உங்கள் கருத்து என்ன?திமுகவிற்கு இதில் ஏதேனும் கருத்து இருக்கிறதா.
திபெத்தில் சீனா செய்ததை,செய்வதை
ஆதரிக்கிறீர்களா, எதிர்க்கிறீர்களா?

1:30 AM, April 09, 2008