வெகுஜன ஊடகங்களில் செய்திகள் எப்படி வெளியாகிறோ அதையொட்டி தான் வெகுஜன மக்கள் தங்கள் கருத்துக்களை வளர்த்துக் கொள்ள முடியும். செய்திகள் தணிக்கை செய்யப்படும் பொழுது வெகுஜன மக்களுக்கு அந்தச் செய்திகளைச் சார்ந்த பல கோணங்கள் மறுக்கப்படுகின்றன.
ஜனநாயகத்தில் பத்திரிக்கைகள் செய்திகளை வெளியிடும் பொழுது அந்தச் செய்திகளை அப்படியே வெளியிட வேண்டும் என்பது பத்திரிக்கை மரபு. பத்திரிக்கைகள் தங்களின் கருத்துக்களை தலையங்கத்திலோ, கருத்து பத்தியிலோ வெளியிடுவது தான் ஒரு நல்ல மரபாக கருதப்படுகிறது.
இந்திய வெகுஜன ஊடகங்கள் இதனை பல்வேறு விடயங்களில் சரியாக கடைபிடிக்கின்றன. உதாரணமாக, உள்நாட்டு பிரச்சனைகள், அரசியல் கட்சிகளின் கோஷ்டி சண்டைகள் போன்றவற்றில் நடுநிலை பத்திரிக்கைகள் என சொல்லப்படும் பத்திரிக்கைகள் செய்திகளை பெரும்பாலும் தணிக்கை செய்வதில்லை.
ஆனால் தேசியம் போன்ற தங்களின் தேவைக்கு உட்பட்ட சித்தாந்தங்களில் அந்த தணிக்கைகளை தொடர்ந்து செய்து வருகின்றன.
நான் அதிகமாக நீட்டி முழங்க விரும்பவில்லை. விஷயத்திற்கு வருகிறேன்.
இன்று ஹிந்து நாளிதழில் காஷ்மீர் குறித்த ஒரு செய்தியை வாசித்தேன். அதே செய்தியினை Associated press தளத்திலும் வாசித்தேன்.
செய்தியின் சாராம்சம் இது தான்
இந்தியாவின் ஆளுமையில் இருந்து காஷ்மீருக்கு விடுதலை கோரி ஆயிரக்கணக்கான காஷ்மீர் முஸ்லீம்கள் இன்று ஸ்ரீநகரில் உள்ள ஐநா அலுவலகம் முன்பு கூடினர். ஜநாவின் தலையீட்டினை கோரினர்.
இந்த செய்தி Associated pressல் இவ்வாறு வெளியாகிறது
Tens of thousands of Muslims waving green and black protest flags marched through Indian Kashmir's main city on Monday and gathered in front of U.N. offices demanding freedom from India and intervention by the world body.
ஹிந்துவிலே செய்தி எவ்வாறு வெளியாகிறது என பாருங்கள்
Tens of thousands of people from across the Kashmir valley arrived here on Monday to take part in the march organised by the Hurriyat-sponsored Coordination Committee to submit a memorandum to the United Nations office here, seeking its intervention in the resolution of the Kashmir issue.
The processionists, bands tied to their heads and holding black and green flags, asserted that they would not compromise on the basic demand for resolution of the Kashmir issue.
ஹிந்து இந்தச் செய்தியை வெறும் “resolution of the Kashmir issue” என்று மட்டுமே வெளியிடுகிறது.
ஹிந்து செய்திகளில் விடுதலையை குறிக்கும் வார்த்தைகளான Freedom, Independence போன்றவை எங்காவது தென்படுகிறதா என பார்த்தேன். கிடைக்கவேயில்லை. ஆனால் ஆர்ப்பாட்ட படங்கள் “FREEDOM" என்று கூறும் படங்களை தாங்கியே பல தளங்களில் வெளியாகி உள்ளது
ஹிந்துவின் செய்தியில் சுயநிர்ணயம் - self-determination என்ற வார்த்தை மட்டும் இறுதி வரியில் உள்ளது.
self-determination என்பது மேல்பூச்சான வார்த்தையாகவே நான் நினைக்கிறேன்.
Freedom, Independence என்பது காஷ்மீர் மக்களின் போராட்டத்தை குறிக்கும் தெளிவான வார்த்தை. அதனை ஏன் ஹிந்து பயன்படுத்தவில்லை என்பதை படிப்பவர்களின் கணிப்பிற்கே விட்டு விடுகிறேன்
Tuesday, August 19, 2008
வெகுஜன செய்தி திரிப்பு
By தமிழ் சசி | Tamil SASI | நேரம் 8/19/2008 01:03:00 AM
Subscribe to:
Post Comments (Atom)
11 மறுமொழிகள்:
//ஹிந்துவின் செய்தியில் சுயநிர்ணயம் - self-determination என்ற வார்த்தை மட்டும் இறுதி வரியில் உள்ளது.
1:44 AM, August 19, 2008self-determination //
'ஹிந்து' நாளிதழ்தானே அப்படித்தான் இருக்கும், இல்லை என்றால் தான் வியப்பே ! :)
அசோசியேடட் பிரஸ் கொடுத்துள்ளதுதான் உண்மை என்பதற்கான சான்றுகள் உள்ளனவா?
6:26 AM, August 19, 2008Sasi ,
8:18 AM, August 19, 2008You have always against ethic cleansing . But whats happening in kashmir is another example and you are supporting Pakistan's agents. Why suddenly all kashmir issue come to core after US deal is approved ? .
see the comments made by leaders in Kashmir " We are pakistanis " this will not resolve any issue .
Kashmir leaders has to provide solid fountation and goals for Kashmir to get what they want.but simply saying align with Pakistan will not provide freedom they desired . Have the world know whats happening in Pakistan Controlled Kashmir ?
Take all conflicts , whenever self styled leader in place then it makes resolution more complicated . ( LTTE / Laksher-e) .
If all SARRC countries ageeed , we should make South asia as a union of states like USA /Europe instead of fighting against each other .
இந்திய ராணுவம் செய்த அராஜகத்தை பக்கம் பக்கமாக எழுதி தள்ளுகிறீர். ஆனால் ஈழத்தமிழர் (அல்லது அவர்களின் so called பிரதிநிதிகள்:புலிகள்)சக ஈழத்தமிழ், தமிழகத்தமிழ், சிங்கள மற்றும் முஸ்லிம் மக்கள் மீது கட்டவிழ்த்துவிட்ட கொடுஞ்செயல் குறித்து மூச்சு விட்டதுண்டா? அது போலத்தான்!
11:08 AM, August 19, 2008//ஆனால் ஈழத்தமிழர் (அல்லது அவர்களின் so called பிரதிநிதிகள்:புலிகள்)சக ஈழத்தமிழ், தமிழகத்தமிழ், சிங்கள மற்றும் முஸ்லிம் மக்கள் மீது கட்டவிழ்த்துவிட்ட கொடுஞ்செயல் குறித்து மூச்சு விட்டதுண்டா?//
8:01 PM, August 19, 2008why can't you be clear about what you say? you are either confused due to info-fusion or a confucious in making. :(
// why can't you be clear about what you say? you are either confused due to info-fusion or a confucious in making. //
11:23 PM, August 19, 2008இந்திய ராணுவம் செய்த அராஜகத்தை பக்கம் பக்கமாக எழுதி தள்ளுகிறீர். ஆனால் புலிகள் ஈழத்தமிழர், தமிழகத்தமிழர், சிங்களமக்கள் மற்றும் முஸ்லிம் மக்கள் மீது கட்டவிழ்த்துவிட்ட கொடுஞ்செயல் குறித்து மூச்சு விட்டதுண்டா?
is it now clear, Mr.Anonymous?
Indian media always mention, "Kashmir state"(Inidan part), "occupied Kashmir(Pakistani part). The Pakistani media do just oppsite. They say "Azad(free) Kashmir", which is in fact autonomous part of Pakistan, and "Indian occupied Kashmir." The Western media prefer to use the term "Indian or Pakistani administrated Kasmir". India and Pakistan must respect the UN resolution, which demand referendum on this issue. Let Kashmiri people to deside themself.
6:42 AM, August 20, 2008Kalaiyagam
10:51 AM, August 20, 2008Just for record :
The U.N Security Council resolution of April 1948 had suggested a plebiscite for the people of Kashmir after it would be vacated by Pakistan; India would be allowed to maintain some forces to maintain the law and order. Pakistan never vacated the area and as a result, the referendum could not happened
//இந்திய ராணுவம் செய்த அராஜகத்தை பக்கம் பக்கமாக எழுதி தள்ளுகிறீர். ஆனால் புலிகள் ஈழத்தமிழர், தமிழகத்தமிழர், சிங்களமக்கள் மற்றும் முஸ்லிம் மக்கள் மீது கட்டவிழ்த்துவிட்ட கொடுஞ்செயல் குறித்து மூச்சு விட்டதுண்டா? //
7:06 AM, August 21, 2008ஆமாம் அவர் அப்படி எழுத முன்னர் அநானி அண்ணாச்சி, முஸ்லீம்கள் கிழக்கில் எத்தனை தமிழ்க் கிராமங்களை அழித்தார்கள். ஊர்காவல் படை என்ற பெயரில் எத்தனை தமிழரைக் கொன்றார்கள். அவர்கள் குழு பெயர் ஜிகாத் குழுவா?
ஈ.பி.டி.பி, புளொட், ENDLF போன்ற தமிழ் ஒட்டுக் குழுக்கள் அவர்கள் எசமானரகளான இந்திய இலங்கை உளவுத் துறையின் உத்தரவின் பேரில் யார் யாரை கொன்று குவித்தார்கள், அதை எல்லாம் எப்படி புலிகள் மீது பழியாகப் போட்டார்கள் என்ற விவரத்தை நீங்கள் எழுதுங்கள்...
Raveendran Chinnasamy said...
9:49 AM, August 25, 2008Kalaiyagam
Just for record :
"The U.N Security Council resolution of April 1948 had suggested a plebiscite for the people of Kashmir after it would be vacated by Pakistan; India would be allowed to maintain some forces to maintain the law and order. Pakistan never vacated the area and as a result, the referendum could not happened."
...
Dear Raveendran Chinnasamy,
U.N. resolution clearly relate Indian army as an occuping force, as well as Pakistani forces. One occupation can't be used to justify another. Even Indian rule without consent of Kashmiri people will be reagarded as occupation. Kashmiri people have more rights than Raveendran, to say what they want. Do they want an independent state? Fine. Do they want to annex with Pakistan, or be as a part of India? That's fine too. Let's forget the U.N. resolution for a while. Will the Indian government ready to hold an referendum in their Kashmir? Raveendran, would you respect the outcome and democratic right of the Kashmiri people? Will you accept, if someone else tell you, what you have to do?
பிரிவினைவாத பீதிட்யூடுவதே பார்ப்பன அரசியல்..!
12:56 AM, January 04, 2009Post a Comment