Thursday, August 07, 2008

ஒலிம்பிக் போட்டிக்காக வீடுகளில் இருந்து துரத்தப்பட்ட மக்கள்

பீஜிங் ஒலிம்பிக் போட்டி இது வரை ஒலிம்பிக் வரலாற்றில் இல்லாத வகையில் மிக பிரமாண்டமாக நாளை துவங்குகிறது. இந்த ஒலிம்பிக் போட்டிக்காக சுமார் 40பில்லியன் டாலர்களுக்கும் அதிகமான பணத்தை சீனா செலவழித்திருக்கிறது. சிட்னி ஒலிம்பிக் போட்டிக்கு செலவழிக்கப்பட்ட தொகை 5 பில்லியன், ஏதன்ஸ் - 8.5 பில்லியன் மட்டுமே. கடந்த ஒலிம்பிக் போட்டிகளை விட பல மடங்கு அதிகமாக சீனா செலவழித்திருப்பதற்கு காரணம் - இது சீனாவின் 100 ஆண்டு கனவு. அதாவது சீன ஆதிகார மையத்தின் கனவு. இந்த பிரமாண்டம் மூலம் சீனா உலக அரங்கில் அமெரிக்காவிற்கு நிகரான வல்லரசாக உருவெடுத்து இருப்பதாக சீனா பிரச்சாரம் செய்கிறது.

இந்தப் பிரச்சாரத்திற்கு ஏற்ற வகையில் பதக்க பட்டியலில் அமெரிக்காவை விட அதிக பதக்கங்களை வெல்ல சீனா கடுமையான திட்டங்களை கடந்த 8 வருடங்களாக மேற்கொண்டது. project 119 என்ற இந்த திட்டத்தின் மூலம் அதிக பதக்கங்களை வெல்லக்கூடிய போட்டிகள் கண்டறியப்பட்டு விளையாட்டு வீரர்களுக்கு இராணுவ பயிற்சி போன்று கடுமையான பயிற்சிகளை வழங்கியது. கடந்த ஒலிம்பிக் போட்டியில் பதக்க பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருந்த சீனா இம்முறை முதல் இடத்தை பிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஒலிம்பிக் போட்டிக்காக செலவழிக்கப்பட்ட தொகையில் பெரும்பாலான தொகை பீஜிங் நகரின் உள்ளக்கட்டமைப்பிற்காக செலவழிக்கப்பட்டிருக்கிறது. புதிய விளையாட்டு அரங்கங்கள், விமான நிலையம், சாலைகள், சுரங்க ரயில்கள் என அனைத்து உள்கட்டமைப்பும் உலகத்தரத்திற்கு உயர்த்தப்பட்டிருக்கிறது. மாசு கட்டுப்பாட்டிற்காக அதிக செலவு செய்திருக்கிறார்கள். அவ்வளவு ஏன்...ஒலிம்பிக் போட்டியின் பொழுது மழை பெய்யாதிருக்க cloud seeding போன்ற நுட்பங்களை பயன்படுத்தி வானிலையையே தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்திருப்பதாக சொல்கிறார்கள்.

பீஜிங் தேசிய விளையாட்டரங்கம் ஒரு குருவி கூடு போல வடிவமைக்கப்பட்டிருக்கிறது. இதன் கட்டிடக்கலை குறித்து வியந்து பேசுகிறார்கள்.

ஆனால், இந்த ஒலிம்பிக் போட்டிக்காக பிஜிங் மக்கள் கொடுத்த விலை மிக அதிகம். சுமார் 15 லட்சம் மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டிருக்கிறார்கள். பழைய வீடுகள் நகரின் அழகை குலைப்பதால், அந்த வீடுகள் இடிக்கப்பட்டிருக்கின்றன. பலர் நகரை விட்டு வெளியேற்றப்பட்டிருக்கிறார்கள். சரியான மாற்று இடமோ, இழப்பீடோ பலருக்கு வழங்கப்படவில்லை.

பிஜிங்கில் நடக்கும் ஒலிம்பிக் போட்டிகள் பீஜிங்கில் பல தலைமுறைகளாக வாழ்ந்து வந்த மக்களின் வாழ்க்கையை குலைத்து விட்டது. அது குறித்த ஒரு கட்டுரை

The Olympics Have Destroyed Our Lives

"The Olympics have dealt a blow to common citizens; they have destroyed our lives," a 63-year-old man whose family had lived in one of the destroyed neighborhoods for four generations told Chua. "That is what we feel, though we're not allowed to say it in public."

பலரின் வாழ்க்கை சிதைந்து போன இடங்களில் அழகான புல் வெளிகள் முளைத்து இருக்கின்றன. தங்கள் வீடுகளை இடிப்பதை எதிர்த்த பலர் சிறையில் தள்ளப்பட்டிருக்கின்றனர்.

Razed homes leave residents unable to share Olympic joy

பிஜிங்கில் இருந்து வெளியேற்றப்பட்ட மக்கள் குறித்த வீடியோ




The Human cost of the Olympics

1 மறுமொழிகள்:

VIKNESHWARAN ADAKKALAM said...

ஒலிம்பிக் போட்டிகளின் சமயம் சீனாவிற்கும் அமேரிக்காவிற்கும் கடும் போட்டா போட்டி இருக்கும் என்பது தான் பலரின் யூகமாக இருக்கிறது. சீனாவை பற்றிய தவறான செய்திகளை பரப்பபடுவதை தடுக்கத்தான் பல்லூடகங்களை தங்கள் கட்டுபாட்டுக்குள் வைத்திருந்தார்கள். ஆனால் போட்டி நெருக்ங்கி வர பல விடயங்கள் ஒன்றன் பின் இன்றாக வெளியாகிக் கொண்டிருக்கிறது.

12:55 AM, August 08, 2008