Saturday, December 20, 2008

கிளிநொச்சி போர் - ஒரு போரியல் பார்வை - 1

முதல் பகுதி, இரண்டாம் பகுதி, மூன்றாவது பகுதி


ஈழத்திலே நான்காவது ஈழப் போர் ஒரு முக்கியமான கட்டத்தை எட்டியிருக்கிறது. தற்போதைய சூழலில் புலிகள் பலவீனமாக உள்ளனர் என்பதாக சிறீலங்கா அரசு கூறி வருகிறது. புலிகள் தங்கள் வசம் இருந்த பகுதிகளில் பெரும்பாலான பகுதிகளை இழந்துள்ள சூழலில் இந்தக் கருத்தை பல போர் ஆய்வாளர்கள் ஏற்றுக் கொண்டுள்ளனர். தமிழர்கள், புலிகள் பலவீனமாக இல்லை, இது அவர்களின் தந்திரோபாய பின்நகர்வு மட்டுமே என கூறி வருகின்றனர். புலிகள், தங்கள் வசம் இருந்த பெரும்பாலான இடங்களை இழந்துள்ள சூழ்நிலையில் தமிழர்களின் இந்த வாதம் வெறும் நம்பிக்கையாகவே பலருக்கும் தெரிகிறது. கடந்த காலங்களில் இருந்த சூழ்நிலைக்கும், தற்போதைய சூழ்நிலைக்கும் பெரிய வேறுபாடுகள் உள்ளதாக சிறீலங்கா கூறுகிறது. எனவே போரின் போக்கினை கடந்த காலங்களில் மாற்றியது போல தற்பொழுது புலிகளால் மாற்றி விட முடியாது என சிறீலங்கா அரசு நம்புகிறது. இதற்கு சிறீலங்கா முன்வைக்கும் காரணங்களும் வலுவாகவே உள்ளது.

புலிகள் வசம் இருந்த பெரும்பாலான இடங்கள் கைப்பற்றப்பட்டு, கடந்த மூன்று மாதங்களாக கிளிநொச்சியை கைப்பற்ற நடக்கும் இந்தப் போரில் கடுமையான சேதங்களை சிறீலங்கா இராணுவம் இந்த வாரம் அடைந்திருக்கிறது. இந்த வாரம் மட்டும் சுமார் 200க்கும் மேற்பட்ட படையினரை சிறீலங்கா இராணுவம் இழந்துள்ளது. 500க்கும் மேற்பட்ட படையினர் பலத்த காயங்கள் அடைந்துள்ளனர். இத்தகைய சூழலில் கிளிநொச்சிக்காக நடக்கும் இந்தப்போரினை இரண்டாம் உலகப்போரில் நடந்த ஸ்டாலின்க்ரேட் போருடன் (The Battle of Stalingrad) இந்திய உளவு அமைப்பின் முன்னாள் அதிகாரியான பி.ராமன்ஒப்பிடுகிறார் . பி.ராமன் இவ்வாறு கூறுவதற்கு முன்பாகவே ஈழத்தமிழர்கள் கிளிநொச்சியை ஸ்டாலின்க்ரேடுடன் ஒப்பிட்டு பேசியிருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அக்டோபர் மாதம் கிளிநொச்சி ஸ்டாலின்க்ரேட் ஆகும் வாய்ப்பு குறைவு எனக்கூறிய பி.ராமன் டிசம்பரில் அதனை ஒப்புக்கொண்டுள்ளார் போலும்.

The Battle of Stalingrad என்பது இரண்டாம் உலகப்போரில் சோவியத்யூனியனில்இருந்த ஸ்டாலின்க்ரேட் நகருக்காக நடந்த சண்டை. சோவியத்யூனியன் படையினருக்கும், ஜெர்மனியின் நாஸிப் படையினருக்கும் இடையே இந்தப் போர் நடைபெற்றது. இந்தப் போரினை இரண்டாம் உலகப்போரின் முக்கிய திருப்புமுனையாக கூறுவார்கள். சுமார் 6 மாதங்களுக்கு மேலாக நடந்த இந்த சண்டையில் ஸ்டாலின்க்ரேட் நகரத்தை இன்று கைப்பற்றுவோம், நாளை கைப்பற்றுவோம் எனக்கூறிக்கொண்டே இருந்த நாஸிப் படையினர், இறுதியில் தோற்றுப் போயினர். இந்தப் போர் இரண்டாம் உலகப்போரில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது.

கிளிநொச்சி மற்றொரு ஸ்டாலின்க்ரேட் ஆக முடியுமா ? தெரியவில்லை. ஆனால் சிறீலங்கா இராணுவம் நினைத்தது போல கிளிநொச்சி வெற்றி அவ்வளவு சுலபமானது அல்ல என்பதை கிளிநொச்சி போர் தெளிவுபடுத்தி வருகிறது.

நான்காவது ஈழப் போர் சார்ந்த போரியல் ஆய்வாகவே இந்தக் கட்டுரை தொடரை எழுத இருக்கிறேன். என்றாலும் ஒரு விடயத்தை இங்கே தெளிவுபடுத்த வேண்டும். எனக்கு இராணுவம் குறித்து அதிகம் தெரியாது. ஈழத்திலே நடக்கும் போர் குறித்த ஒரு சக தமிழனின் அச்சம்/கவலை இவற்றுடனே இந்தப் போரினை கவனித்து வருகிறேன். அது சார்ந்த விடயங்களை தேடி படிக்கிறேன். அவ்வாறு கிடைத்த தகவல்களை என்னுடைய கருத்துகளுடன் முன்வைப்பது தான் இந்தக் கட்டுரை தொடரின் நோக்கம்.

*********

கிளிநொச்சி போர் குறித்து பார்ப்பதற்கு முன்பு இந்தப் போர் ஆரம்பத்தில் தொடங்கிய சூழலை கவனிக்க வேண்டும்.

Attrition warfare என்பது எதிரியின் பலத்தை படிப்படியாக குறைத்து, பிறகு எதிரியை நிர்மூலமாக்கும் ஒரு போர் நுட்பம். எதிரியின் பலத்தை படிப்படியாக குறைக்கும் பொழுது போரிடும் பலத்தை எதிரி இழக்கும் பொழுது வெற்றி கிடைக்கும். இந்த நுட்பத்தை தான் சிறீலங்கா இராணுவம் மேற்கொண்டது.

புலிகளின் பலத்தை படிப்படியாக குறைப்பது சிறீலங்கா இராணுவத்தின் நோக்கமாக இருந்தது. புலிகளின் பலம் என்பது அவர்களின் போர் வீரர்கள், ஆயுதங்கள் போன்றவை. எனவே முதலில் புலிகளுக்கு ஆயுதங்கள் வரும் வழியை சிறீலங்கா இராணுவம் தடுக்க முனைந்தது. புலிகளுக்கு முல்லைத்தீவு கடல்வழியாகவே ஆயுதங்கள் வரும். இந்த வழியை அடைப்பது தான் சிறீலங்கா அரசின் முதல் நோக்கமாக இருந்தது. இந்தியா/அமெரிக்கா போன்ற நாடுகள் அளித்த அதிநவீன உளவு நுட்பங்கள் மூலம் புலிகளுக்கு ஆயுதங்களை கொண்டு வந்த பல கப்பல்களை சிறீலங்கா கப்பற்படை அழித்தது. இதனால் புலிகளுக்கு ஆயுதங்கள் வரும் முக்கிய வழி அடைக்கப்பட்டது. இது புலிகள் தொடர்ந்து போரிடும் வலுவை குறைத்தது.

அடுத்த இலக்காக புலிகளின் முக்கிய முகாம்கள், ஆயுதக்கிடங்குகள் போன்றவற்றை விமானங்கள் மூலம் குறிவைத்து தாக்கியது. இந்த தாக்குதலில் புலிகளின் பல முகாம்களும், ஆயுதக்கிடங்குகளும் அழிக்கப்பட்டதாக சிறீலங்கா இராணுவம் கூறுகிறது. ஆனால் தாக்குதல் நடத்தப்பட்ட பல இடங்கள் பொதுமக்கள் உள்ள இடங்களே என புலிகள் கூறுகின்றனர். புலிகளின் மறைவிடம் என்று கூறி ஆதரவற்ற குழந்தைகள் இருந்த செஞ்சோலை இல்லத்தை சிறீலங்கா இராணுவம் தாக்கியது போன்ற துயரமான சம்பவங்கள் பல நிகழ்ந்தன என்பதை மறுக்க முடியாது.

இதையெடுத்து புலிகளின் எண்ணிக்கையை குறைக்கும் முயற்சியை இராணுவம் மேற்கொண்டது. சுமார் 10,000 புலிகளை தாங்கள் கொன்று விட்டதாக இராணுவம் கூறுகிறது. எப்படி இந்த எண்ணிக்கை முன்னிறுத்தப்படுகிறது என்று பார்க்கும் பொழுது சிறீலங்கா அரசு மேற்கொண்ட போர் வியூகம் நமக்கு புரியும். கடந்த காலங்களில் புலிகள் வசம் இருந்த இடங்களை கைப்பற்றுவதற்காக மிகப் பெரிய அளவிலான தாக்குதலை இராணுவம் தொடுத்து உள்ளது. இதனால் இராணுவத்தின் முன்னேற்றத்தை தங்களின் வியூக அமைப்பினால் புலிகள் முறியடித்து உள்ளனர். இராணுவத்திற்கும் பெரும் சேதம் ஏற்பட்டது.

ஆனால் தற்போதைய போரில் பொன்சேகா சிறீலங்கா இராணுவத்தின் வியூகங்களை மாற்றி அமைத்தார். பெரும் அளவிலான படையெடுப்புகள் எதையும் அவர் முன்னெடுக்கவில்லை. மாறாக சிறு குழுக்களை கொண்ட படைகளை தான் தாக்குதலில் பயன்படுத்தினார். ஆனால் தாக்குதல் தொடர்ச்சியாக இருக்கும். ஒரு சிறு குழு புலிகளின் முன்னரங்கப்பகுதிகள், பதுங்கு குழிகளை தாக்கும். தாக்கும் படைக்கு புலிகள் வசம் இருக்கும் பகுதிகளை பிடிக்கும் நோக்கம் இருக்காது. ஆனால் அவர்களின் இலக்கு புலிகளின் பலத்தை குறைப்பது. அதனால் புலிகளின் இலக்குகளை தாக்கி விட்டு பின்வாங்கி விடுவார்கள். இதனை தினமும் செய்யும் பொழுது புலிகளின் எண்ணிக்கை குறையும். ஆயுதங்களும் குறையும். இவ்வாறு படிப்படியாக குறைக்கப்பட்டு பின் ஒரு மிகப்பெரிய தாக்குதலை தொடுப்பது பொன்சேகாவின் வியூகமாக இருந்தது. புலிகளின் எண்ணிக்கையும் படிப்படியாக குறைக்கப்பட்டு ஆயுதங்கள் வரும் வழிகளும் தடைப்பட்டு விட்ட நிலையில் புலிகள் பலம் இழப்பார்கள் என்பது தான் பொன்சேகாவின் வியூக அமைப்பு.

இதன் மூலமே தினமும் பல புலிகள் கொல்லப்பட்ட நிலையில் புலிகளின் பலத்தில் பெரும்பகுதியை தாங்கள் குறைத்து விட்டதாக சிறீலங்கா இராணுவம் கூறுகிறது.

பொன்சேகாவின் வியூக அமைப்பு இவ்வாறு இருந்தது என்றால் புலிகளின் வியூகம் இதனை எதிர்கொள்ளவே செய்தது. பொன்சேகாவின் வியூகத்திற்கு ஏற்ப தங்களுடைய வியூகங்களையும் புலிகள் அமைத்திருந்தனர்.

*********

புலிகள் போன்ற சிறு கொரில்லா அமைப்பு ஒரு மரபு சார்ந்த இராணுவத்தை எதிர்கொண்டு வருகிறது என்று சொன்னால் அதற்கு காரணம் புலிகள் மேற்கொள்ளும் "பலமான"வியூகங்கள் தான். இதனை சிறீலங்கா இராணுவத்தினரும், இந்திய இராணுவத்தினருமே ஒப்புக் கொண்டுள்ளனர். இதற்கு முன்பாக நடந்த மூன்றாவது ஈழப் போரில் புலிகள் அடைந்த வெற்றிகளே இதற்கு சாட்சிகளாக விளங்குகின்றன.

ஆனையிறவு படைத்தளம் மீது புலிகள் கொண்ட வெற்றியை அவ்வளவு சீக்கிரம் யாரும் மறக்க முடியாது. ஆனையிறவு யாழ்ப்பாண தீபகற்பத்தை வன்னி பெருநிலத்துடன் இணைக்கும் சிறு நிலப்பகுதி. யாழ் தீபகற்பத்திற்கான வாயில் என்று இதனைச் சொல்லலாம். இந்த நிலப்பகுதிக்காக பலப் போர்கள் நடந்துள்ளன. கேந்திர முக்கியத்துவம் உள்ள இடம் இது. இங்கு தான் ஆனையிறவு படைத்தளம் என்ற சீறிலங்கா இராணுவத்தின் மிகப் பெரிய முகாம் இருந்தது. பலத்த பாதுகாப்பான முகாம். பலத்த என்பதை "பலப் பல" மடங்கு என்று சொல்லலாம். பல அடுக்கு பாதுகாப்பு அரண்களை கொண்டது இந்த முகாம். இந்த முகாமின் பாதுகாப்பு வளையங்களை பார்வையிட்ட அமெரிக்க, பிரிட்டன் (UK) இராணுவ வல்லுனர்கள் இதனை கைப்பற்ற வேண்டுமானால் விமானப் படை வேண்டும். மரபுச் சார்ந்த படையாக இருந்து முப்படைகளையும் பெற்றிருக்க வேண்டும். முப்படைகளின் கூட்டு படைத்திறன் மூலமே இந்த முகாமை கைப்பற்ற முடியும் என தெரிவித்திருந்தனர். புலிகள் போன்ற கொரில்லா இயக்கங்களால் இந்த முகாமை எப்பொழுதும் கைப்பற்ற முடியாது என்று கூறினர். இந்த முகாமில் சுமார் 25,000 படை வீரர்கள் இருந்தனர். பல அடுக்கு பாதுகாப்பு அரண்களை கொண்ட இந்த முகாமை புலிகளின் 5000 பேர்களை மட்டுமே கொண்ட படை கைப்பற்றியது, உலக இராணுவ வரலாற்றில் ஒரு முக்கியமான நிகழ்வு. மரபுச் சார்ந்த போர் குறித்த இராணுவ நோக்கர்களின் கருத்துகளை மாற்றி எழுதிய நிகழ்வு இது. இந்தப் போரினை திட்டமிட்டு நடத்தி வெற்றி பெற வைத்தவர் புலிகளின் தலைவர் பிரபாகரன். விமானப் படை இல்லாமலேயே ஒரு பெரிய பாதுகாப்பு அரணை உடைத்து புலிகள் இந்த வெற்றியை கடந்தப் போரில் பெற்றனர்.

ஆனையிறவை இழந்தது சிறீலங்கா இராணுவத்திற்கு மிகப் பெரிய உறுத்தலாகவே இருந்து வந்துள்ளது. இம் முறை நான்காவது ஈழப் போர் தொடங்கிய பொழுது சிறீலங்கா இராணுவத்தின் நோக்கம் ஆனையிறவு படைத்தளத்தை கைப்பற்றுவது என்பதாகவே இருந்தது. ஆனையிறவுக்கும், சிறீலங்கா இராணுவத்தின் முதல் முன்னரங்கப்பகுதியான முகமாலைக்கும் இடையேயான தூரம் வெறும் 14 கி.மீ தான். இந்தப் பகுதி மிகவும் குறுகலான ஒரு நிலப்பகுதி. கிளாலி தொடக்கம் நாகர்கோவில் வரையிலான இந்தப் பகுதியின் அகலம் வெறும் 7கி.மீ தான். கிளாலி முதல் முகமாலை வரை ஒரு பகுதியும், நாகர்கோவில் அடுத்தும் உள்ளது (படத்தில் பார்க்கலாம்)



முகமாலையில் இருந்து ஆனையிறவை கைப்பற்றுவது இராணுவத்தின் நோக்கமாக இருந்தது. ஆனால் ஒவ்வொரு முறை இராணுவம் முன்னேற முனைந்த பொழுதும் புலிகள் மிக பலமான ஒரு பதில் தாக்குதலை தொடுத்தனர். இதனால் தங்கள் நிலைகளில் இருந்து இராணுவத்தால் முன்னேற முடியாத சூழல் தான் நிலவி வந்தது. இன்றைக்கும் நிலவி வருகிறது. கடந்த வாரம் கூட இராணுவம் முன்னேற முனைந்த பொழுது மிகவும் கடுமையான சேதங்களை அடைந்தது.
சிறீலங்கா இராணுவ நிலைகளில் இருந்து 14 கி.மீ. தூரம் கொண்ட ஆனையிறவை நெருங்க முனைந்த சிறீலங்கா இராணுவம், முகமாலையில் சில மீட்டர் தூரங்களே கொண்ட புலிகளின் முதல் முன்னரங்கப்பகுதிகளையே நெருங்க முடியவில்லை.

ஆரம்பகாலங்களில் இருந்தே இராணுவத்தின் நோக்கம் ஆனையிறவு தான். கிளிநொச்சி புலிகளின் தலைநகரம் என்பதாக கூறப்பட்டாலும், கிளிநொச்சிக்கு பெரிய இராணுவ முக்கியத்துவம் இல்லை. ஆனையிறவுக்கே அதிக முக்கியத்துவம் உள்ளது. தற்பொழுது நடந்து வரும் போர் கூட கிளிநொச்சிக்கானது என்பதை விட ஆனையிறவு நோக்கியே என கூற முடியும். ஆனையிறவை முகமாலையில் இருந்து கைப்பற்ற முடியாத இராணுவம் இப்பொழுது தென்பகுதிகளில் இருந்து பிடிக்க முனைகிறது. பரந்தன், கிளிநொச்சி, பூநகரி போன்ற பகுதிகள் கைப்பற்றபட்டால் இராணுவத்திற்கு ஆனையிறவை கைப்பற்றுவது சுலபமாக இருக்கும். பூநகரி கைப்பற்ற பட்ட நிலையில் A9 நெடுஞ்சாலையில் இருக்கும் பரந்தன், கிளிநொச்சி போன்றவையும் இராணுவம் வசம் வந்தால் ஆனையிறவு இலக்கு சுலபமாகி விடும். அவ்வாறு நேர்ந்தால் புலிகள் பின்வாங்கி முல்லைத்தீவு பகுதிக்கு செல்ல நேரிடும்.

இது தான் இராணுவத்தின் நோக்கம்.

ஆனையிறவு புலிகள் வசம் இருக்கும் வரை இந்தப் போர் முடிவுக்கு வராது.

புலிகள் வசம் இருந்த இடங்களில் பெரும்பாலான இடங்களை கைப்பற்றிய இராணுவம், ஏன் முகமாலை தொடக்கம், ஆனையிறவு வரையிலான 14 கி.மீ கொண்ட இடத்தை கைப்பற்ற முடியவில்லை ? முகமாலையில் நடந்த பல சண்டைகளில் இராணுவம் சுமார் 1000பேரை இழந்திருக்க கூடும். பலர் காயம் அடைந்துள்ளனர். இங்கு தான் நாம் புலிகளின் தற்காப்பு வியூகங்களை கவனிக்க வேண்டியுள்ளது.

புலிகளின் முகமாலை தற்காப்பு வியூகத்தை இரண்டாம் உலகப்போரில் நடந்த ஆலமெய்ன்(El Alamein) போரில் அமைக்கப்பட்டிருந்த தற்காப்பு வியூகங்களுடன்ஒப்பிடுகிறார்கள் . ஐ ஆலமெய்ன் எகிப்தில் இருக்கும் ஒரு சிறு நகரம். இந்தப் பகுதியில் நடந்த போர் இரண்டாம் உலகப்போர் அதிகம் பேசப்பட்டது. அச்சு அணி நாடுகளான ஜெர்மனி-இத்தாலி படைகளுக்கும், நேசநாடுகளாக இங்கிலாந்து, பிரான்சு போன்ற படைகளுக்கும் இடையே நடைபெற்றஇந்தப் போரில் நேச நாடுகள் வெற்றி பெற்றன. "Before Alamin we had no victory and after it we had no defeats" என்றார் வின்ஸ்டன் சர்ச்சில்.

முகமாலையில் அத்தகைய ஒரு தற்காப்பு அமைப்பினை புலிகள் அமைத்துள்ளதால் தான் மிகக் குறுகிய அந்த நிலப்பகுதியை பல முறை முனைந்தும் இராணுவத்தால் கைப்பற்ற முடியவில்லை. ஆனாலும் தொடர்ந்து புலிகளின் அந்த வியூக அமைப்பை உடைக்க இராணுவம் முயன்று வருகிறது.

இரண்டாம் பகுதி


****************

போர் மிகவும் கொடுமையானது என்பதை தற்பொழுது நடந்து கொண்டிருக்கும் நான்காவது ஈழப் போர் தெளிவாகவே வெளிப்படுத்தி வருகிறது. போரில் இறந்து கொண்டிருக்கும் இளைய தலைமுறையினரின் கோரமான படங்களைப் பார்க்கும் பொழுது வேதனையாக உள்ளது. சிங்கள/தமிழ் இளைஞர்கள் என இரண்டு தரப்புமே இந்தப் போரில் பலியாகி கொண்டிருக்கின்றனர். இந்தப் போரில் யாருக்கும் உறுதியான வெற்றி கிடைக்கப்போவதில்லை என்றே போர் வியூகங்கள் கூறுகின்றன. கிளிநொச்சி கைப்பற்றப்பட்டால் கூட போர் முடியப்போவதில்லை. புலிகள் வசம் முல்லைத்தீவு உள்ளிட்ட பகுதிகள் உள்ளன. அவ்வாறான சூழலில் இத்தனை உயிர்கள் ஏன் பலியாக வேண்டும் ? அதற்கு ஏதேனும் அர்த்தங்கள் உள்ளதா போன்ற கேள்விகளை எழுப்பியாக வேண்டும். இந்தக் கேள்விகளுக்கு தற்போதைய சூழலில் எந்த அர்த்தமும் இல்லை. இருந்தாலும் போர் ஏற்படுத்தும் பாதகங்களை எழுப்பி போரின் கொடுமைகளை பேசியாக வேண்டும்.

28 மறுமொழிகள்:

ரவி said...

அற்புதமான இடுகை !!!

தமிழ்மணத்தில் தொடர்து இணைந்திருக்க காரணம் இது போன்ற இடுகைகளை மிஸ் பண்ணிவிடக்கூடாது என்பது தான்...!!!

தொடருங்கள்..

1:13 PM, December 20, 2008
கொழுவி said...

புலிகளின் ஆட்பலம் ஆயுதபலம் இவற்றை முதன்மை நோக்காகக் கொண்டு படையினர் செயல்பட்டால் மட்டுமே புலிகள் தோற்கிறார்கள் என நம் அறப்படித்த கூழ் முட்டைகள் சரியாக இருக்கும்.

ஆயிரக்கணக்கில் வீரர்களை இழந்து நிலங்களைத் தக்கவைப்பதை விட - பின்பொருநாளில் மூலோபாயங்கள் சரியாகும் போது சில நூறு பேருடன் அவற்றை மீளக் கைப்பற்றலாம் என்பதே புலிகளின் உத்தி( ஆனால் நிலங்களைக் கைவிடும் போதேற்படும் அப்பாவி மக்கள் மேற்சூழும் அவலம் இலகுவாக கடந்து போகக் கூடியது அல்ல)

இதற்கிடையில் கிளிநொச்சி போன்ற ஒரு இடத்தில் பலமான இராணுவ அடிகளை புலிகளால் இராணுவத்திற்கு வழங்க முடிகிறது என்பதுவும் சில புரிதல்களை ஏற்படுத்துகிறது.

அதாவது புலிகள் தாம்கொண்டுள்ள ஏதோ ஒரு திட்டத்திற்கு கிளிநொச்சி வீழ்வது பாதகமானது எனக் கருதுகிறார்கள்.

1:24 PM, December 20, 2008
Sri Rangan said...

சசி,வணக்கம்!

"ஈழப்போராட்டம்" குறித்து இலங்கையரசின் இராணுவத்தை மையப்படுத்தியபடி யுத்தத்தைப் பார்த்தாலும், புலிகளை-தமிழர்களை ஒடுக்கும் இராணுவவலு இலங்கை இராணுவத்துக்கு எங்ஙனம் ஏற்பட்டதென்பதும் அவசியமாகப் பார்க்கப்படவேண்டும்.

கூடவே,இன்றைய ஆசியப் பொருளாதாரப்போக்குகளைக் கவனப்படுத்துவது அவசியம்.இதுள், இந்திய ஆளும் வர்க்கத்தின் மூலதனம் தமிழர் பகுதிகளுக்குப் பாய்கிறது.குறிப்பாகச் சம்பூர்,திரிகோணமலை மற்றும் மன்னார்-வவுனியா.இலங்கையின் பெரும் பகுதிகளில் இந்திய-ஆசிய மூலதனம் பாய்வதன் சூழல் இப்போது புதியரகப் போக்குகளை இலங்கை இனப்பிரச்சனையில் ஏற்படுத்துவதை நீங்கள் கவனிக்க அவசியமான கட்டாயம் உண்டு.

இங்கே, இப் பொருளாதார இலக்குகளுக்குப் புலிவகைப் போராட்டம் குறுக்கே நிற்கிறதென்பதை இன்றைய இந்தியா மிக வேகமாக உணர்கிறது.அவ்வண்ணம் புலிகளால் பாதிப்படைந்த-கொழும்பை மையப்படுத்தியத் தமிழ்ப் பெரும் வர்த்தகர்களின் மூலதனமும் இந்திய-ஏசியப் பொருளாதாரக் கூட்டோடு இணைவதன் தொடர் முயற்சியில் புலிகள் இனிமேல் இவர்களுக்கு அவசியமில்லை.

எனவே,நான்காவது கட்டத்துக்கு ஈழப்போர் நகராது.

அது,புலிகளை முற்றுமுழுதாக யுத்தக் களத்திலிருந்து அகற்றப்படும் சூழலில் முனைப்படையும் இந்திய வியூகத்தில் நாம் மிக இலகுவாக உணரமுடியும்.ஆதலால்,இலங்கை-இந்திய இராணுவக் கூட்டால் புலிகள்-தமிழர்கள் தோற்கடிக்கப்படுவார்கள்.இது,நடந்தேறி வருவதை நாம் இனங்காண்கிறோம்.

இன்னுஞ் சில மாதங்களில் இஃது உறுதிப்பட்டுவிடும்.இங்கே,உணர்வு நிலைப்பார்வைகளைத் தள்ளி வைத்துச் சிந்திப்பதே அவசியம்.

தங்கள் பதிவு மேலும் தொடர்வதிலிருந்து மேலுஞ் சொல்வோம்.

-ஸ்ரீரங்கன்

1:37 PM, December 20, 2008
Anonymous said...

Yes ,war is horrible. In both sides people are dying.
on the sinhala side, mainly army soldiers are dying.sinahala civilians are not affected much at the present moment.
on the tamil side ,tiger fighters are dying at the battle front.
tamil civilians are also dying by aerial bombardment and multi barrel shelling.
in the government controlled area tamil civilians are killed by sinhala army and paramilitaries working with sinhala army.
not just death,people are becoming disabled, tamil civilian's homes and infrastructure are destroyed every day.
Srilanka is a tiny country which receive financial aid and military aid from world countries and it's survival depend on these aids.these countries including india have the power to stop the war and make the srilankan govt to come out with a proper political solution,not just cheating every one and coming out with something which tamil people rejected 20 years ago.I am talking about proper solution
But all the world countries are playing a double game for their own geopolitical interests.on the one hand ,they say there can't be a military solution for the problem.on the other hand, these countries are providing lethal arms ,military hardware,military expertise and money to srilanka.
what a hypocrisy!

1:40 PM, December 20, 2008
தமிழ் சசி | Tamil SASI said...

அதாவது புலிகள் தாம்கொண்டுள்ள ஏதோ ஒரு திட்டத்திற்கு கிளிநொச்சி வீழ்வது பாதகமானது எனக் கருதுகிறார்கள்.

***********

கிளிநொச்சியை கைப்பற்றுவது இராணுவத்திற்கு கொளரவப் பிரச்சனையாக உள்ளது. சிறீலங்கா இராணுவம் எப்பொழுதுமே அரசியல் காரணங்களுக்காக போர் வெற்றிகளை பெற முனைகிறது. போர் தொடர்ந்து நீடிக்கும் பொழுது அரசியல் ஆதாயங்கள் பாதிப்படையும் பொழுது எதைச் செய்தாவது வெற்றி பெற்று விட வேண்டும் என்ற அரசியல்வாதிகளின் துடிப்பிற்கு சிறீலங்கா இராணுவத்தின் போர் வியூகங்கள் பலியாகின்றன.

தற்பொழுது கிளிநொச்சியில் நடந்து கொண்டிருப்பதும் அது தான். கிளிநொச்சியை பிடிக்க வேண்டும் என்ற கெடு நெருங்கிக் கொண்டே இருக்க, எதை செய்தாவது என்ற நோக்கம் ஏற்படுகிறது. புலிகளுக்கு அப்படியான எந்த நெருக்கடியும் இல்லை.

இது தவிர தற்காப்பு போரினை மட்டுமே தற்பொழுது புலிகள் மேற்கொண்டு வரும் நிலையில் எந்த இடத்தை தற்காப்பு செய்ய வேண்டும் என்பதை புலிகளே முடிவு செய்கின்றனர். தங்களுக்கு சாதகமாக உள்ள நில அமைப்பில் தற்காப்பு வியூகங்களை புலிகளால் அமைத்துக் கொள்ள முடியும்.

போரில் வலிந்த தாக்குதல் தொடுப்பவர்களை விட மிக வலுவான தற்காப்பு அரண்களை வைத்திருப்பவர்கள் தான் வெற்றி பெற முடியும். தற்காப்பு அரணுக்கு அனுபவம் மிக்க போர் வீரர்கள் அதிகம் தேவையில்லை. ஆனால் வலிந்த தாக்குதல் தொடுப்பவர்களுக்கு அதிகளவில் அனுபவம் மிக்கவர்கள் தேவைப்படுவார்கள்.

இதனை கொண்டு பார்க்கும் பொழுது கூட போர் வியூகங்கள் நமக்கு புரியும்.

1:48 PM, December 20, 2008
தமிழ் சசி | Tamil SASI said...

ஸ்ரீரங்கன்,

வணக்கம். உங்களுடைய கருத்துகளுக்கு நன்றி. தொடர்ந்து உங்கள் கருத்துக்களை எழுதுங்கள்.

நீங்கள் முன்வைக்கும் பொருளாதாரம் சார்ந்த பார்வையும் இந்தப் போருக்கு முதன்மையானது. பொருளாதாரம் தவிர்த்து தன்னுடைய பிராந்திய மேலாதிக்கத்தை நிலைநிறுத்தவும், தன்னுடைய நாட்டில் இருக்கும் பலப் பகுதிகளின் சுதந்திரத்தை தொடர்ந்து நசுக்கவும், ஈழத்தமிழர்களின் போராட்டம் நசுக்கப்பட வேண்டும் என இந்தியா நினைக்கிறது.

*******

செந்தழல் ரவி, செல்வன்,

நன்றி...

2:16 PM, December 20, 2008
Anonymous said...

சசி,
உங்களின் இந்தக்கட்டுரையோடு டி.பி.எஸ் ஜெயராஜ் எழுதிய இந்தக்கட்டுரையையும் (http://www.dailymirror.lk/DM_BLOG/Sections/frmNewsDetailView.aspx?ARTID=35656) கூடச் சேர்த்து வாசிக்கலாம். டிபிஎஸ் குறிப்பிடுகின்றது போன்று மூன்று பரிமாணங்களில் புலிகளின் போராட்ட வகைகளைப் பிரித்துப் பார்க்கவேண்டும் (இதை அநேகமாய் உலகிலுள்ள எல்லா ஆயுதப்போராட்டக்குழுக்களும் பொருத்திப் பார்க்க்லாம்). கிளிநொச்சி ஒரு ஸ்டானின்கிராட் என்று இராமன் சொல்லப்போக, அதை மறுதலித்து டிபிஎஸ் எழுதியதை நீங்கள் வாசித்திருப்பீர்கள். கிளிநொச்சி வீழ்ந்தால் புலிகள் மரபுவழிப்பட்ட இராணுவம் என்பதிலிருந்து கெரில்லாப் போர்முறைக்கு போகவேண்டியிருக்கும். எனவே கிளிநொச்சி என்பது ஸ்டானின்கிராட்டாகும் என்பது கூறுவது சரியா என்று தெரியவில்லை;இன்னொரு ஜெயசுக்குறுவாய் இருக்கலாம். எனெனில் ஸ்டானின்கிராட் நிகழ்வு இரண்டாம் மகாயுத்தத்தையே முடிவுக்கு கொண்டுவந்தது. இங்கு கிளிநொச்சியின் வீழ்ச்சியோ அல்லது இராணுவத்தின் தோல்வியோ எந்தவொரு நிரந்தரமான தீர்வை ஈழப்பிரச்சினைக்குத் தரபோவதில்லை
இன்று பார்த்தீர்களாயின் பல மாதங்களுக்குப் பின் புலிகள் முதன்முறையாகத் தற்காப்புத் (defensive) தாக்குதலிலிருந்து முன்னேறிச் சென்று (offensive) தாக்கியிருக்கின்றார்கள்.
......
எதுவாயிருந்தாலும் இரண்டுபகுதியாலும் வெற்றிகொள்ளப்பட முடியாததாய்த்தான்` நான்காம் ஈழப்போரும் இருக்கப்போகின்றது என்பதுதான் எல்லாவற்றையும் விடச் சோகமானது.

5:15 PM, December 20, 2008
ஒரு அகதியின் நாட்குறிப்பு !!! said...

தோழர் சசிக்கு!
உங்களின் போர் பற்றிய ஆய்வை, பல சிரமங்களுக்கு மத்தியிலும் வாசித்து, அறிந்து தருகிறீர்கள் என்பது மகிழ்ச்சியானபோதும், இந்தப் போரின் தமிழர் தரப்பின் அடிப்படை அல்லது ஆரம்பம் தொடர்பான தெளிவையும் உங்கள் ஆய்வில் வெளிப்படுத்த முனைய வேண்டும்/போரில் இறந்து கொண்டிருக்கும் இளைய தலைமுறையினரின் கோரமான படங்களைப் பார்க்கும் பொழுது வேதனையாக உள்ளது. சிங்கள/தமிழ் இளைஞர்கள் என இரண்டு தரப்புமே இந்தப் போரில் பலியாகி கொண்டிருக்கின்றனர்./ என்கிற பச்சாதாப உணர்வுடன், போர் கொடுமையானது என்பதை உணர்ந்த நீங்கள், இந்தப் போர் திணிக்கப் பட்ட விதத்தையும்,தமிழர் தரப்பு அவஸ்தைகளையும் அதாவது இனக்கலவரங்கள் உட்பட இனி ஆய்வீர்களென்று எண்ணுகின்றேன்.
தமிழ்சித்தன்

5:50 PM, December 20, 2008
Anonymous said...

Thanks,

Now Kilinochchi has the strategic importance with the same reason you have explained related to Anaiyiravu.

Even Mullaitivu is also under threat, SL Army is much much closer.

I think Tigers will try their best to capture Jaffna(I know, Still many think that I am joking).
Because

1. The population in Jaffna will give them more cadres

2. It will be a major blow to SL Army and change every ones thiniking ( Sinhalese, Tamils, and the world) as Tigers are losing. This point has not much importance to tigers at the moment.

3.Once the Jaffna Peninsula captured, No need to employ much resources to protect as it is almost surrounded by the sea.

4.The army have an easy access to withdraw from Jaffna now( Poonagary - Sanguppiddy Road )

5.They will not have such a firm grip on Muhamalai and Nagar Kovil If they are not interested in Jaffna.

6:00 PM, December 20, 2008
Anonymous said...

இது ஒன்றும் தன்மானத்திற்கான போர் மாத்திரம் அல்ல.
எங்கள் அடையாளத்தை தக்க வைத்துக்கொள்ள நடக்கின்ற போர்.
சிங்களப் படைகளுக்கு போர் கசக்கும் காலம் வரும்.

புலிகள் பிரச்சாரத்தை முன்னெடுப்பது போதாது.

புலிகளின் தலைவர் தன் கருத்துக்களை அடிக்கடி பகிரங்கமாகத் தெரிவிக்க முன் வரவேண்டும்.

ஒரு ஈழத் தமிழன்

7:11 PM, December 20, 2008
தமிழ் சசி | Tamil SASI said...

DJ,

டி.பி.எஸ் ஜெயராஜின் கட்டுரையை வாசித்தேன். “The Tigers may be down but they are certainly not out” என்று ஜெயராஜ் தொடர்ந்து கூறிவந்துள்ளார். ஜெயராஜ் ஆனையிறவை நவம்பர் மாதத்திற்குள்ளாக இராணுவம் கைப்பற்றும் என கூறியிருந்தார். தற்பொழுது சனவரி மாதத்திற்கு நுழையப்போகிறோம்.

கிளிநொச்சியை ஸ்டாலின்க்ரேடுடன் ஒப்பிடக் காரணம், கிளிநொச்சியை சிறீலங்கா இராணுவம் பிடிக்க முடியாவிட்டால் அது சிறீலங்காவிற்கு மிகப்பெரிய பின்னடைவாக இருக்கும்.

எனவே இராணுவம் தன்னுடைய அனைத்து பலத்தையும் கொண்டு கிளிநொச்சியை கைப்பற்ற முனையும். இது புலிகளுக்கு சாதகமானதும்/பாதகமானதும் கூட. இராணுவ வலிமையை புலிகளால் எதிர்கொள்ள முடியாவிட்டால் அவர்கள் கொரில்லா பாதைக்கு செல்ல வேண்டிய தேவை வரும்.

இராணுவத்தின் தாக்குதலை முறியடித்தால் புலிகளால் இழந்த இடங்களை கைப்பற்ற முடியும். ஆனால் இழந்த இடங்களை கைப்பற்ற வேண்டும் என்றால் கிளிநொச்சிக்கான போரை நீண்ட காலங்கள் நீடிக்க வைத்து சிறீலங்கா அரசின் அனுபவம் மிக்க ஆட்களை குறைப்பது புலிகளின் வியூகமாக இருக்கும்.

இது கிட்டதட்ட பொன்சேகா ஆரம்பத்தில் முன்னெடுத்த Attrition warfare வியூகத்தின் புலிகள் வடிவம் தான். ஆனால் புலிகளால் சிறீலங்காவிற்கு வரும் ஆயுதங்களை குறைக்க முடியாது. மாறாக பொருளாதார நிலைகளை தாக்கி சிறீலங்கா அரசின் பொருளாதாரத்தை பாதிப்படைய செய்ய முடியும்.

9:38 PM, December 20, 2008
தமிழ் சசி | Tamil SASI said...

இந்தப் போர் திணிக்கப் பட்ட விதத்தையும்,தமிழர் தரப்பு அவஸ்தைகளையும் அதாவது இனக்கலவரங்கள் உட்பட இனி ஆய்வீர்களென்று எண்ணுகின்றேன்.

******

நண்பருக்கு,

என்னுடைய பலப் பதிவுகளில் இதனை எழுதி இருக்கிறேன். இந்த கட்டுரை தொடரை போரியல் பார்வையில் மட்டும் எழுதுவதாக எண்ணியிருக்கிறேன்.

என்னுடைய பிற கட்டுரைகளை இந்தச் சுட்டியில் படிக்கலாம்
http://blog.tamilsasi.com/search/label/ஈழம்


நன்றி...

9:44 PM, December 20, 2008
Anonymous said...

போர் இன்று தற்காப்பு யுத்ததில் இருந்து வலிந்த தாக்குதலுக்கு மாறி இருக்கிறது இனி வரும் காலங்களில் கள நிலமை மாறலாம்.

10:16 PM, December 20, 2008
Anonymous said...

சசி,

//...ஜெயராஜ் ஆனையிறவை நவம்பர் மாதத்திற்குள்ளாக இராணுவம் கைப்பற்றும் என கூறியிருந்தார்..//

டி.பி.எஸ் ஜெயராஜின் கட்டுரைகள் காட்ஃபாதர் சினிமா போன்றது. தனக்கு தெரியாத சில நிகழ்வுகளை ஊகத்தில் எழுதி அதற்கு பலம் சேர்க்க முன்னர் நடந்த ஆனால் இன்றைய 20 வயதுக்கு குறைவானோர் அல்லது இந்தியத்தமிழர்கள் அறியாத நிகழ்வுகளை எழுதி தனது ஊகங்களுக்கு பலம் சேர்ப்பார்.
அத்துடன் இவர் இந்து பத்திரிகையின் ஃப்ரொன்ட் லைனிலும் எழுதி வ்ருபவர். இவ்வாறுதான் 1997 இல் புலிகள் ஒரு முடிந்துபோன சக்திகள் என்று வாரா வாரம் ஃப்ரொண்ட் லைனுக்கு எழுதினார். எங்கே இச்சொல்லை எடுத்தார் என ஆய்ந்தபோது பழைய ஃப்ரொண்ட்லைனில் ராம் எழுதிய கட்டுரைகளில் இருந்து என்றே தெரிய வந்தது. மேலும் இவர் ஒரேநேரத்தில் ஸ்ரீலங்கா ஐலன்ட் பத்திரிகைக்கும் ஃப்ரொண்ட் லைனுக்கும் எழுதிய பத்திகளில் ராமுக்கு ஐஸ் வைக்கக்கூடிய வகையில் மாற்ரம் செய்திருந்தார். இதைப்பற்றி நான் அவரிடம் கேட்டபோது பதில் தராமல் என்னிடம் எதிர்க்கேள்வி கேட்டார். அந்த சுவாரசியம் பின்னொருநாளில்!

11:50 PM, December 20, 2008
குழலி / Kuzhali said...

//பெரும் அளவிலான படையெடுப்புகள் எதையும் அவர் முன்னெடுக்கவில்லை. மாறாக சிறு குழுக்களை கொண்ட படைகளை தான் தாக்குதலில் பயன்படுத்தினார். ஆனால் தாக்குதல் தொடர்ச்சியாக இருக்கும். ஒரு சிறு குழு புலிகளின் முன்னரங்கப்பகுதிகள், பதுங்கு குழிகளை தாக்கும். தாக்கும் படைக்கு புலிகள் வசம் இருக்கும் பகுதிகளை பிடிக்கும் நோக்கம் இருக்காது. ஆனால் அவர்களின் இலக்கு புலிகளின் பலத்தை குறைப்பது. அதனால் புலிகளின் இலக்குகளை தாக்கி விட்டு பின்வாங்கி விடுவார்கள். இதனை தினமும் செய்யும் பொழுது புலிகளின் எண்ணிக்கை குறையும். ஆயுதங்களும் குறையும். இவ்வாறு படிப்படியாக குறைக்கப்பட்டு பின் ஒரு மிகப்பெரிய தாக்குதலை தொடுப்பது பொன்சேகாவின் வியூகமாக இருந்தது. //
சசி ஒரு முறை சரி பார்த்துக்கொள்ளுங்கள், இது புலிகளின் "ஓயாத அலைகள்" தாக்குதல் உத்தி என நினைக்கிறேன், இந்த முறை ஃபொன்.சகா செய்தது deep penetration சிறு சிறு குழுக்களை புலிகளின் அரணில் மோதாமல் பலவீனமான ஒரு புள்ளியில் உள்ளிறக்கி பின்புறமாக தாக்குதல், இதுவும் ஒரு வகை கொரில்லா தாக்குதல் தான்.

புலிகளின் பெரிய பிரச்சினை இந்தியாவின் ஆள்காட்டி வேலை அதாவது உளவு சொல்லுதல், மற்றும் கருணாவின் எட்டப்பன் வேலையும்.

வந்து கொண்டிருக்கும் செய்திகளில் கிளிநொச்சி கள முனை மாறுகிறது, ஆனால் புலிகள் முந்தைய பலத்துடன் இருக்க இயலாது போல தெரிகிறது...

12:07 AM, December 21, 2008
தமிழ் சசி | Tamil SASI said...

குழலி,

ஆம். பொன்சேகா இப்பொழுது நடத்திக் கொண்டிருப்பது கிட்டத்தட்ட ஒரு கொரில்லா வகை யுத்தம் தான். புலிகள் தற்பொழுது செய்து கொண்டிருப்பது ஒரு மரபு சார்ந்த போர் தற்காப்பு.

போரியல் வியூகம் கொண்டு பார்த்தால் ஒரு நாட்டின் இராணுவம் கொரில்லா வகை யுத்தத்தையும், ஒரு கொரில்லா அமைப்பு மரபு சார்ந்த போரினை முன்னெடுப்பதும் விந்தையானது.

ஆனால் போரியல் வியூகப்படி நோக்கும் பொழுது ஒரு நாட்டின் உள்கட்டமைப்பினை கொண்டு இருக்கும் புலிகளை இவ்வாறான பல முனை சிறு தாக்குதல்கள் மூலம் சிதைத்து விட முடியும் என சிறீலங்கா நம்புகிறது.

1:29 AM, December 21, 2008
தமிழ் சசி | Tamil SASI said...

அந்த சுவாரசியம் பின்னொருநாளில்!

************

ம்...எழுதுங்கள், வாசிக்க ஆவல் உள்ளது

டி.பி.எஸ்.ஜெயராஜின் பத்திகளை நான் தொடர்ந்து வாசித்து வரும் வகையில் அவருடைய அலசல்களை விரும்பி படிக்கும் அளவுக்கு அவரது ஊகங்களை நம்புவதில்லை. நடைமுறை சார்ந்த அவரது அலசல்கள் நன்றாக இருக்கும்.

பிரபாகரன் விமானத்தாக்குதலில் காயமடைந்தார் என்று முதன் முதலில் செய்தி வெளியிட்டவர் ஜெயராஜ் தான். அதற்கு பிறகே சிறீலங்கா இராணுவம் தன்னுடைய உளவுத்துறை தகவல் எனக்கூறி செய்தி வெளியிட்டது :)

ஆனால் இருவரும் வேறு வேறு தேதிகளில் பிரபாகரன் காயமடைந்தர் எனக்கூறியது தான் விந்தையானது

இது தவிர கருணா பிரான்ஸ் சென்றார் என ஜெயராஜ் கூறினார். கருணா கைதுக்கு பிறகு தெரிந்த விடயம், கருணா சென்ற இடம் லண்டன்.

அவருக்கு கிடைத்த தகவல் தவறானது என நினைத்துக் கொண்டேன்.

1:39 AM, December 21, 2008
Anonymous said...

What is happening is an asymmetrical war.
one side, a small tamil eelam nation with it's limited number of cadres with political ban in several countries(obviously done with the encouragement of india )
other side-sinhala government and it's army with sophisticated arms, modern war planes ,150 thousands of army men, military assistance and aid from regional super power India,another regional power Pakistan,world super power America,former super power Russia,future super power china,former colonial power Britain,Islamic Iran,Iran's enemy Israel,economic aid from japan and European union.
Sinhalese side depends on it's fire power,money,large numbers of army and all the countries behind it.
Tamil side depends on it's determination,courage , conviction and the belief that they are fighting for a just cause.
In cinema,hero will win.
But in eelam war who is going to win?
only the time will tell.

1:46 AM, December 21, 2008
Anonymous said...

you are right sasi,
it is strange a guerrilla movement is fighting a conventional war and a conventional army of a country is fighting a guerrilla war.
more stranger than that, over the recent period, a government is deliberately killing unarmed tamil civilians and a guerrilla group which is called a terrorist movement is not killing unarmed sinhala civilians and only targeting the military.
very strange indeed.

2:20 AM, December 21, 2008
Anonymous said...

'டி.பி.எஸ் ஜெயராஜின் கட்டுரையை வாசித்தேன். “The Tigers may be down but they are certainly not out” என்று ஜெயராஜ் தொடர்ந்து கூறிவந்துள்ளார்.'


ஜெயராஜின் கட்டுரைகள் அவரை உருவாக்கியவர்களுக்கு அவர் சமர்ப்பிக்கும் ராஜ விசுவாசம்.
அவருக்கு களநிலையோ அல்லது வன்னித் தொடர்போ இல்லாமல் தமிழர்களிடம் இருந்து அந்நியப்பட்டு கனடாவில் கதை எழுதுகின்றார்.

8:06 AM, December 21, 2008
சிக்கிமுக்கி said...

/// தன்னுடைய நாட்டில் இருக்கும் பலப் பகுதிகளின் சுதந்திரத்தை தொடர்ந்து நசுக்கவும், ஈழத்தமிழர்களின் போராட்டம் நசுக்கப்பட வேண்டும் என இந்தியா நினைக்கிறது.///

- சரியான பார்வையில் கூறப்பட்ட முதன்மைக் காரணங்களில் முதனமையான காரணம்.

10:45 AM, December 21, 2008
King... said...

அலசலுக்கு நன்றி....

11:25 AM, December 21, 2008
King... said...

எதிர்தாக்குதல்கள் மட்டுமே செய்து கொண்டிருக்கிறார்கள் புலிகள் நீங்கள் நொல்வது போல கிளிநொச்சி வீழ்வதை விரும்பாமல்தான் இருக்கிறார்கள். கிளிநொச்சி வீழ்கிற நிலைமை வருமெனில் தமது வியூகங்களை செயற்படுத்தக்கூடும் என்பதுதான் என் எண்ணமும்...

யுத்தம் கொடுமையானது எனபது நமக்குத்தெரிகிறது,
இலங்கை தங்கடை நாடு அதை எதுக்கு இரண்டாகப்பிரிக் வேண்டும் என்கிற இறையாண்மையும் மனித நேயமும் கொண்ட சிங்கள நண்பர்களுக்கு தெரியவில்லையே...;)

11:35 AM, December 21, 2008
ஸ்ரீ சரவணகுமார் said...

அடுத்த பதிவிற்காக காத்திருக்கிறேன்
நன்றி

1:21 PM, December 21, 2008
அற்புதன் said...

உண்மையில் வன்னிக் களமுனை எத்தகையது என்பதை மூனாவின் இந்தப் படம் சொல்லும்.

http://kirukkall.blogspot.com/2008/12/blog-post.html

டிபிஎஸ் ஜெயராச்சின் எழுத்துக்கள் கூலிக்கான எழுத்துக்கள் .அதில் கற்பனை/விருப்பு எண்பதும் மிகுதி இருபது மட்டுமே உணமையுமாக இருக்கும்.
புலிகளின் போரியல் மூலோபாயம் பற்றி கட்டுரை எழுதுவதற்கான காலம் இன்னும் இருக்கிறது என்றே கருதுகிறேன்.

பரந்து விரிந்து இருக்கும் இராணுவ அணிகளின் பின் புலத்திலோ வழங்கற் பாதையிலோ இது வரை புலிகள் ஏன் கை வைக்கவில்லை என்னும் கேள்விக்கு இது வரை பதில் இல்லை.பதில் தெரியும் நாட்களிலேயே இது எத்தகைய களமாகப் விரியப் போகிறது என்பது தெரிய வரும்.

1:23 PM, December 21, 2008
வளர்மதி said...

ஆழ்ந்த அக்கறையுடன் எழுதப்பட்ட மேலோட்டமான கட்டுரை :(

டிஜே எழுப்பியுள்ள கேள்வி (ஸ்டாலின்க்ராடுக்கும் கிளிநொச்சி போருக்குமான ஒப்புமை குறித்து) முக்கியமானது.

அடுத்து, சிறீலங்கா இராணுவம் கொறில்லா தாக்குதல் முறையைக் கைக்கொண்டுள்ளதாகவும் விடுதலைப் புலிகள் மரபான இராணுவ எதிர் தாக்குதல் உத்திகளைக் கைக்கொண்டிருப்பதாகவும் எழுதியிருக்கும் புள்ளி.

இதை வேறு வகையில் யோசித்துப் பாருங்களேன்.

சிறீலங்கா இராணுவம் மேற்கொண்டிருப்பது anti - guerrilla warfare; the basic tenets of which were formulated by the British Army in Malaysia in the aftermath of the second world war - உலகின் மிக மோசமான சதுப்புநிலக் காட்டுப் பகுதிகளில் பிரிட்டிஷ் ராணுவம் சீன கம்யூனிஸ்டுகளின் ஊடுருவலுக்கு எதிராக வடிவமைத்து வெற்றிகரமாக செயல்படுத்திய வடிவத்தின் நீட்சியாக தற்போதைய சிறீலங்கா இராணுவ யுத்த தந்திரத்தை பார்க்கலாமா?

அதே யுத்த தந்திரத்தை அமெரிக்கா கயூபாவில் கையாண்டபோதும் தோல்வியடைந்தது ஏன்?

தற்சமயம் தோல்வியின் விளிம்பில் சிறீலங்கா இராணுவம் நிற்பது ஏன்?

தீர்மானகரமான பதிலகள் குறித்த தெளிவு எனக்குமில்லை ...

தங்களுடைய இக்கட்டுரை இராணுவ யுத்த தந்திரங்கள் குறித்த கூர்ந்த அலசல் அல்ல என்பதை மட்டும் சொல்ல முடியும்.

மன்னிக்க.

வளர் ...

2:04 PM, December 21, 2008
தமிழ் சசி | Tamil SASI said...

வளர்மதி,

நன்றி...

நான் இராணுவ நிபுணன் அல்ல. அதுவும் தவிர இது கட்டுரை தொடரின் முதல் பகுதி தான் என்பதையும் கூறியிருக்கிறேன். முதல் பகுதி என்பது ஒரு அறிமுகம் மட்டுமே என்பதை நீங்களும் உணர்ந்திருப்பீர்கள். அடுத்து சில பகுதிகளை எழுத எண்ணியிருக்கிறேன். அதை வாசித்து விட்டு கூறியிருந்தால் உண்மையான விமர்சனமாக இருந்திருக்கும்.

இது ஒரு புறம் இருக்கட்டும்.

*******
தற்சமயம் தோல்வியின் விளிம்பில் சிறீலங்கா இராணுவம் நிற்பது ஏன்?
*******

நீங்கள் எப்படி இவ்வாறு கூறுகிறீர்கள் என விளக்க முடியுமா ? தோல்வியின் விளிம்பில் சிறீலங்கா இராணுவம் நிற்பதாக நீங்கள் எப்படி நினைக்கிறீர்கள் என கூற முடியுமா ? உங்களுடைய பதிலை எதிர்பார்க்கிறேன்.

நான் அப்படி நினைக்கவில்லை. வெற்றி பெற போகிறார்கள் என்றும் நினைக்கவில்லை. ஒரு சமநிலையில் போர் இருப்பதாகவே நினைக்கிறேன்.

ஸ்டாலின்க்ராடு போருடன் கிளிநொச்சி போரினை ஒப்பிட முடியும் என நான் நினைக்கிறேன். போரின் முடிவு என்ற ஒற்றைப் பார்வையில் நான் யோசிக்கவில்லை. ஸ்டாலின்க்ராடு போரில் நாஸிப் படைகள் தோற்பதற்கான காரணம் என்ன ? நாஸிப் படைகள் தங்களுக்கு சாதகம் இல்லாத சூழ்நிலையில் களம் புகுத்தப்பட்டு, தங்களுடைய அசுர பலத்தை இழந்து தோற்றார்கள். அதே வகையிலான அடிப்படைக் காரணங்களை கொண்டு தான் கிளிநொச்சி - முல்லைத்தீவு - ஆனையிறவு போரினை ஸ்டாலின்க்ராடு போருடன் ஒப்பிடுகிறார்கள். நானும் ஒப்பிடுகிறேன். நீங்கள் கிளிநொச்சியை மட்டும் கொண்டு பார்த்தால் அது தவறு. நான் கட்டுரையில் கூறியுள்ளது போல, இந்தப் போர் கிளிநொச்சிக்கான போர் என்பதாக கூறப்பட்டாலும், இது ஆனையிறவுக்கான போர் தான். கிளிநொச்சி புலிகளின் தலைநகரம் என்பதால் அதிகம் முன்னிறுத்தப்படுகிறது. அவ்வளவு தான்.

வலிந்த தாக்குதலை தொடுக்கும் ஒரு இராணுவம், தன்னுடைய அனுபவம் மிக்க வீரர்களை தொடர்ச்சியாக போரில் ஈடுபடுத்த வேண்டிய நிலை ஏற்படும். ஆனால் தற்காப்பு யுத்தம் செய்யும் ஒரு படை பிரிவு தன்னுடைய அனுபவமற்ற வீரார்களை அனுபவம் மிக்க சிலருடன் கலந்து களத்தில் நிற்க வைக்க முடியும். வலிந்த தாக்குதல் தொடுக்கும் இராணுவத்திற்கு அதிக வீரர்கள் தேவைப்படுகிறார்கள். வலிந்த - தற்காப்பு இவற்றுக்கு இடையேயான விகிதம் 5:1 என்றளவில் இருக்க வேண்டும் என போரியல் நிபுணர்கள் கூறுகிறார்கள்.

கிளிநொச்சி போருக்காக தன்னுடைய வலிமையான படையணியை இராணுவம் களத்தில் புகுத்தியுள்ளது. புலிகள் தங்களுடைய வலுவான கமாண்டோ படையணிகளான சார்லஸ் ஆண்டனி படையணி, இம்ரான் பாண்டியன் படையணி போன்றவற்றை போரில் புகுத்தவே இல்லை. They are kept in Reserve. இந்த சூழ்நிலையில் இராணுவம் தொடர்ச்சியாக தங்களுடைய மிக வலிமையான படையணிகளை இந்தப் போரில் புகுத்தி கொண்டிருக்கும் சூழ்நிலையில், கிளிநொச்சியை இராணுவம் கைப்பற்ற முடியாமல் போகும் சூழ்நிலையில் இராணுவம் தன்னுடைய முக்கிய படையணிகளை இழக்கிறது. கிளிநொச்சியை கைப்பற்றினால் கூட இராணுவத்திற்கு இழப்பு அதிகம் இருக்கும். அடுத்த இலக்கான ஆனையிறவு கேள்விக்குறியாகி விடும். எந்தளவுக்கு இராணுவம் தன்னுடைய அனுபவம் மிக்க வீரர்களை இழக்கிறது என்பதை பொறுத்தே போரின் போக்கு அமையும்.

இது தவிர போர் ஏற்படுத்தும் உளவியல் கூறுகளும் (Stress, Psychological Trauma) இராணுவத்திற்கு ஏற்படும்.

அவ்வாறான சூழலில் புலிகள் ஒரு வலிந்த தாக்குதலை தொடுக்கும் பொழுது, எண்ணிக்கை அதிகமாக இருந்தாலும் இராணுவம் தோற்பதற்கான வாய்ப்புகள் அதிகம். அதனுடைய முடிச்சி கிளிநொச்சி-பரந்தன் - ஆனையிறவு-முல்லைத்தீவிற்காக நடைபெறும் போரே தீர்மானிக்கப்போகிறது. இராணுவம் Attrition warfare என்பதை முதலில் முன்னிறுத்தினாலும், புலிகள் தற்பொழுது கிளிநொச்சியில் தங்களுடைய தற்காப்பு அரண் மூலம் செய்வதும் ஒரு வகையில் Attrition warfare தான். இராணுவத்தின் பலத்தை தங்களுடைய தற்காப்பு வியூகம் மூலமே குறைத்து விடலாம் என புலிகள் நினைக்கிறார்கள்.

இந்தக் காரணங்களை சார்ந்தே இந்தப் போரினை ஸ்டாலின்க்ராடு போருடன் ஒப்பிட வேண்டிய சூழ்நிலை உள்ளது. இதனை ஸ்டாலின்க்ராடுடன் ஒப்பிட முடியாது என நீங்கள் கூறினால், நீங்கள் ஈழப் போர் குறித்து இன்னும் முழுமையாக வாசிக்க வேண்டும் என்று தான் நான் சொல்வேன்

நன்றி....

3:24 PM, December 21, 2008
காத்து said...

புலிகள் கிளிநொச்சியை வைத்து இருக்க வேண்டும் என்பது ஒரு விதி அல்ல..!!

ஆனால் இப்போதைய இராணுவ வெற்றிகளை காட்டி பாராளு மண்றைத்தை கலைக்கும் மகிந்தவின் திட்டத்துக்கு தற்காலிகமான ஒரு ஆப்பு வைக்கப்பட்டு உள்ளது...!!

பாராளுமண்றத்தை கலைப்பதின் மூலம் தமிழர்களால் உண்மையாக தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்கள் பதவியை இழப்பதோடு புதிய பாராளுமண்ற உறுப்பினர்களாக டக்கிளஸ், கருணா, போண்ற கொலை கும்பல்களும், ஆனந்தசங்கரி போண்ற அடிவருடிகளையும் பாராளுமற்ற ஆசனங்களில் ஆயுதங்களை வைத்து இருத்தி விட முடியும்...

அதன் பின்னர் பெரும்பகுதியான தமிழர் நிலங்கள் கைகளில் இருக்கிறது அதில் தமிழர்களால்( ஆயுத முனையில்) தெரிவு செய்யப்பட்ட பாராளுமண்ற உறுப்பினர்கள் எல்லாம் தயாராக இருப்பார்கள்... மகிந்த தமிழர்களுக்கு ஒரு தீர்வை கொடுப்பார் அதை இரு கரம் நீட்டி வாங்கியும் கொள்வார்கள்...

3:39 PM, December 21, 2008