Friday, January 02, 2009

கிளிநொச்சி போர் : ஒரு முடிவின் துவக்கம் ?

முதல் பகுதி, இரண்டாம் பகுதி, மூன்றாவது பகுதி


1996ம் ஆண்டு கிளிநொச்சியை சிறீலங்கா இராணுவம் கைபற்றியது. இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு 1998ம் ஆண்டு கிளிநொச்சியை மறுபடியும் புலிகள் கைப்பற்றினர். கிளிநொச்சி மற்றும் பரந்தனை புலிகள் கைப்பற்றியது அவர்களை ஆனையிறவு வரை கொண்டு சென்றது. தற்பொழுது வரலாறு திரும்பி இருக்கிறது. பரந்தன், கிளிநொச்சி ஆகிய இரண்டு இடங்களையும் சிறீலங்கா இராணுவம் கைப்பற்றியுள்ளது. இனி ஆனையிறவு நோக்கி சிறீலங்கா இராணுவம் முன்னேறும். பரந்தன், பூநகரி போன்ற இடங்களை புலிகள் இழந்துள்ள நிலையில் இனி ஆனையிறவை புலிகள் தக்கவைத்துக் கொள்வது கடினம்.

அடுத்து இராணுவம் ஆனையிறவு மற்றும் முல்லைத்தீவினை நோக்கி நகரக்கூடும். 1998ம் ஆண்டு போல மறுபடியும் சிறீலங்கா இராணுவத்தை முறியடித்து புலிகள் கிளிநொச்சியை கைப்பற்றுவது எந்தளவுக்கு சாத்தியம் என்பது தெரியவில்லை. காரணம் 1998ம் ஆண்டு புலிகள் ஒரு நாட்டினை எதிர்த்து தான் போரிட்டார்கள். எனவே அவர்களால் கிளிநொச்சியை கைப்பற்ற முடிந்தது. ஆனால் இம் முறை பல நாடுகளை எதிர்த்து போரிடுகிறார்கள். சிறீலங்கா, இந்தியா, பாக்கிஸ்தான், சீனா, அமெரிக்கா, ஈரான் என அனைத்து நாடுகளையும் எதிர்த்து ஒரே நேரத்தில் போரிடுகிறார்கள். எனவே கிளிநொச்சி இழப்பு என்பது மறுபடியும் ஈடுசெய்ய முடியாத இழப்பு என்றே எனக்கு தோன்றுகிறது. இது சரியானது தானா என்பதை காலம் தான் பதில் சொல்லும்.

இந்தப் போர் குறித்து போரியல் நோக்கில் கட்டுரை எழுத தொடங்கினேன். இன்னும் போர் முடியவில்லை என எனக்கு தோன்றுகிறது. புலிகள் தங்களின் பலத்தை தொடர்ந்து தக்கவைத்துக் கொண்டுள்ளனர். புலிகளின் பல அடுக்கு தற்காப்பு வளையத்தில் இரண்டு அடுக்குகளை தற்பொழுது இழந்துள்ளனர். முதல் அடுக்கு தங்களது எல்லைகளை பாதுகாப்பது என்பதாகவும், இரண்டாம் அடுக்கு முக்கிய நகரங்களைச் சுற்றியும், மூன்றாவது அடுக்கு இராணுவம் சார்ந்த பகுதிகள் மற்றும் கடற்கரைச்சார்ந்த முக்கிய நிலைகளை பாதுகாப்பது என்பதாகவும் அமைந்து இருந்தது. தற்பொழுது இரண்டு அடுக்குகளை சிறீலங்கா இராணுவம் உடைத்துள்ளது. இரண்டாம் அடுக்கு சார்ந்த சில முக்கிய நிலைகளை இனி புலிகள் தக்கவைப்பது கடினம். எனவே புலிகளின் மூன்றாவது தற்காப்பு வளையத்தை நோக்கி போர் நடைபெறக்கூடும். இது தான் இறுதிப் போர்.

எனவே போர் இன்னும் முடியவில்லை. என்றாலும் பல நாடுகளை ஒரே நேரத்தில் எதிர்த்து போரிடக்கூடிய பலம் புலிகளிடம் உள்ளதா என்ற சந்தேகம் எனக்கு உள்ளது. கிளிநொச்சி, பரந்தன் போன்ற பகுதிகளின் இழப்பு புலிகளின் ஈழப்போராட்டத்தின் முடிவின் துவக்கமாக இருக்குமோ என்ற அச்சம் எனக்கு இருக்கிறது. கொழும்பு ஊடகங்கள் இதனை பிரபாகரனின் வாட்டர்லு என வர்ணிக்கின்றன. "புலிகளின் முட்டாள்தனத்தையும், மூர்க்கத்தனத்தையும் தந்திரோபாயம் என கொண்டாடுபவர்கள் தான் தமிழர்கள்" என ஒரு நண்பர் சில நாட்களுக்கு முன்பு கூறினார். இது உண்மையாக இருக்கலாம்.

இவ்வாறான சூழ்நிலையில் நான்காவது ஈழப் போர் சார்ந்த போரியல் வியூகங்களை தொடர்ந்து இங்கு முன்வைக்கிறேன். ஏனெனில் போர் கிளிநொச்சியுடன் முடிந்து விடப்போவதில்லை.

*********************

1916ம் ஆண்டு முதல் உலகப் போர் நடைபெற்ற சூழலில் இருந்த ஒரு யுத்த வியூகத்தினை நாம் கவனிக்க வேண்டும். ஒரு புறம் ரஷ்யா மற்றொரு புறம் பிரஞ்ச், பிரிட்டன் என இரு புறமும் இருந்த எதிரிகளை சமாளிக்கவும், தொடர்ச்சியான அவர்களின் தாக்குதலை எதிர்கொள்ளவும், அவர்களின் எதிர்தாக்குதல்களை முறியடித்து பிறகு தங்களுக்கு சாதகமான சூழ்நிலையில் ஒரு வலிந்த தாக்குதலை மேற்கொள்ளவும் ஜெர்மனி ஒரு நீண்ட தற்காப்பு வளையத்தை அமைத்து இருந்தது. இந்த தற்காப்பு வளையத்தை Hindenburg Line என குறிப்பிடுவார்கள். தங்களுக்கு சாதகம் இல்லாத இடங்களை கைவிட்டு, சாதகமான இடங்களை மட்டும் தக்கவைத்துக் கொள்வது ஜெர்மனியின் வியூகமாக இருந்தது (If this meant the relinquishment of territory to achieve dominant and fortifiable terrain and features, so be it.). அது தவிர சில முக்கிய நோக்கங்களும் ஜெர்மனி படையணிக்கு இருந்தது. ரஷ்யாவில் பிரச்சனைகள் ஏற்படும், அது தங்களுக்கு சாதகமான ஒரு நிலையை ஏற்படுத்தும் என ஜெர்மனி நினைத்தது. எனவே அது வரையிலான காலத்தை கடத்துவது ஜெர்மனியின் நோக்கம். எனவே தன்னுடைய வலுவான நிலைகளை உள்ளடக்கி ஒரு நீண்ட தற்காப்பு அரணை அமைத்துக் கொண்டது. இந்தப் பகுதியை தங்களால் பாதுகாத்துக் கொள்ள முடியும் என்பதும், குறைவான படைகளே இதற்கு தேவைப்படுவார்கள் என்பதும் ஜெர்மனியின் வியூகம்.

ஜெர்மனியின் இந்த வியூகம் அதற்கு சாதகமாகவே அமைந்தது. தொடர்ச்சியான பிரஞ்ச் படையினரின் தாக்குதல்களை தங்களுடைய தற்காப்பு வியூகங்களால் முறியடிக்க முடிந்தது. மொத்த பிரஞ்ச் படையையே இந்த தற்காப்பு வியூகம் மூலமாக ஜெர்மனி தோற்கடித்தது. முறியடிக்கவே முடியாத நிலையில் இருந்த Hindenburg Line என்ற தற்காப்பு வியூகத்தை நவம்பர் 20, 1917ல் பிரிட்டன் படைகள் முறியடித்தன. இந்த யுத்தத்தை Battle of Cambrai என கூறுவார்கள்.

பிரிட்டன் படைகள் ஜெர்மனியின் வியூகத்தை உடைத்து உள்ளே சென்றதும், பிறகு ஜெர்மனியின் பதில் தாக்குதல்களை எதிர்கொள்ள முடியாமலும் பின்வாங்கினர். இதற்கு பிறகு ஒரு வலிந்த தாக்குதல்களை பிரிட்டன் எதிர்பாராத நேரத்தில் ஜெர்மனி தொடுத்தது. இதில் ஜெர்மனிக்கு கணிசமான வெற்றி கிடைதது.

இப்பொழுது ஈழத்திலே நடைபெற்று கொண்டிருக்கும் போரினை ஜெர்மனி-பிரிட்டன் யுத்தத்துடன் ஒப்பிட முடியும். புலிகளின் படைபலத்தை ஜெர்மனியுடன் ஒப்பிட முடியாது. என்றாலும் புலிகளின் வியூகம் ஜெர்மனி போலவே உள்ளதை கவனிக்க முடியும். தங்களுக்கு சாதகமான பகுதிகளைச் சார்ந்த தற்காப்பு அரணை புலிகள் அமைத்து உள்ளனர். தற்பொழுது கிளிநொச்சி சார்ந்த தற்காப்பு அரண் இராணுவத்தால் உடைக்கப்பட்டுள்ளது. என்றாலும் இன்னும் அவர்கள் வசம் எஞ்சி இருக்கிற பகுதிகளைச் சார்ந்து மற்றொரு தற்காப்பு அரணை அமைத்து உள்ளார்கள். இது தவிர கடல்சார்ந்த புலிகளின் பகுதிகளைச் சார்ந்தும் மற்றொரு தற்காப்பு அரண் அமைக்கப்பட்டுள்ளது. இறுதிப் போர் என்பது இந்த கடற்கரைச் சார்ந்த இறுதி தற்காப்பு அரணைச் சார்ந்தே அமையும் என போரியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

எவ்வாறு பிரிட்டன் படைகள் தங்களின் அசுர மற்றும் நவீன ஆயுதங்களைக் கொண்டு ஜெர்மனியின் வியூகத்தை உடைத்தார்களோ அதைப் போலவே சிறீலங்கா இராணுவம் தங்களது நவீன ஆயுத பலம் மூலம் புலிகளின் தற்காப்பு அரணை முறியடித்து உள்ளனர்.

புலிகளின் தற்காப்பு அரண் தங்களின் படைகளை தற்காத்துக் கொள்ளும் நோக்கமும் கொண்டது. அது தவிர தங்கள் பலத்தை ஒரே இடத்தில் குவிப்பதும் புலிகளின் நோக்கமாக உள்ளது (Concentration of forces). புலிகளிடம் இன்னமும் 25,000 படைப்பிரிவினர் உள்ளனர். இவர்களில் 10,000 பேர் நவீன பயிற்சி பெற்றவர்கள். இந்தப் போரில் இது வரை புலிகளின் சார்லஸ் ஆண்டனி படையணி, இம்ரான் பாண்டியன் படையணி போன்றவை அதிகம் ஈடுபடுத்தப்படவில்லை. கடந்த சில வாரங்களுக்கு முன்பு நடந்த தாக்குதல்களில் ஈடுபட்ட இந்தப் படையணிகள் எளிதில் குண்டு துளைக்காத உடைகவசம் அணிந்தும், தலையில் கவசம் அணிந்தும் போரில் ஈடுபடுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. தங்களுடைய முக்கிய படையணிகளை தற்காத்துக் கொள்ளும் புலிகளின் வியூகத்தையே இது வெளிப்படுத்துகிறது.

எந்த தற்காப்பு போரும், இறுதியில் வலிந்த தாக்குதல்களை நோக்கமாக கொண்டே அமைக்கப்படும். அந்த வகையில் ஜெர்மனி எவ்வாறு தங்களுடைய தற்காப்பு வியூகத்தை ரஷ்யாவில் இருந்த உள்நாட்டு குழப்பத்தை எதிர்பார்த்து அமைக்கப்படிருந்ததோ அது போல புலிகளும் தங்களுக்கு சாதகமான ஒரு நிலையை எதிர்பார்த்து தங்களது தற்காப்பு வியூகத்தை அமைத்து உள்ளனர்.

இது வியூகமாக இருந்தாலும், இந்த வியூகம் எந்தளவுக்கு புலிகளுக்கு சாதகமான விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது என்பதை பொறுத்தே அவர்களின் எதிர்கால வலிந்த தாக்குதல் வெற்றிகளை கொடுக்கும். அது போல சிறீலங்கா இராணுவம் எந்தளவுக்கு புலிகளின் பலத்தை குறைத்து உள்ளதோ அதனைச் சார்ந்த அதனுடைய தற்போதைய வெற்றி நிலைக்க முடியும்.

முதலில் சிறீலங்கா இராணுவத்தின் வெற்றி எப்படியானது என்பதை நாம் கவனிக்க வேண்டும். சிறீலங்கா இராணுவம் புலிகள் வசம் இருந்த பெரும்பாலான இடங்களை கைப்பற்றியுள்ளது அதன் முக்கிய வெற்றியாக கூறப்படுகிறது. அதே சமயத்தில் இந்த வெற்றியை தக்கவைப்பதும் எதிர்காலத்தில் இராணுவத்திற்கு இருக்ககூடிய சவால் என்பதையும் நான் கவனிக்க வேண்டும். இப்பொழுது கைப்பற்றியுள்ள இடங்களை தக்கவைக்க வேண்டுமானால் புலிகளின் பலத்தை இராணுவம் அழிக்க வேண்டும். அவ்வாறு இது வரை செய்திருக்கிறதா என்பதை ஆராய்ந்தால் அப்படியான எந்த வெற்றியும் இராணுவத்திற்கு ஏற்படவில்லை என்று தான் கூற வேண்டும். இது வரை புலிகள் தரப்பில் சுமார் 10,000 பேரை தாங்கள் கொன்று விட்டதாக இராணுவம் கூறி வருகிறது. ஆனால் புலிகள் ஆண்டுதோறும் வெளியிடும் மாவீரர்கள் பட்டியல் புலிகள் தரப்பில் கொல்லப்பட்டவர்களின் உண்மையான நிலவரத்தை தரும். அவ்வாறு நோக்கம் பொழுது புலிகள் தரப்பில் பெருத்த சேதங்கள் ஏற்படவில்லை என்பதை கவனிக்க முடியும். இது தவிர புலிகளுக்கு ஆயுதங்கள் வரும் வழங்கல் பாதை (Supply Lines) இன்னும் முழுமையாக முடக்கப்படவில்லை என்பதையும் சமீபத்தைய நிகழ்வுகள் உறுதி செய்கின்றன. இவ்வாறான சூழ்நிலையில் சிறீலங்கா இராணுவத்தின் தற்போதைய வெற்றி என்பது உறுதியான வெற்றி அல்ல என்பதை நாம் புரிந்து கொள்ள முடியும்.

அது போல புலிகளின் தற்காப்பு வியூகங்கள் எந்தளவுக்கு வெற்றி பெற்று உள்ளது என்பதையும் கவனிக்க வேண்டும். தங்களுடைய தற்காப்பு அரண் மூலம் இராணுவத்திற்கு பெருத்த சேதங்களை ஏற்படுத்துவது, தொடர்ச்சியான போர் மூலமாக சிறீலங்காவின் பொருளாதாரத்திற்கு பாதிப்புகளை ஏற்படுத்துவது போன்றவை புலிகளின் நோக்கமாக இருந்தது. புலிகளின் இந்த முயற்சிக்கு எந்த வெற்றியும் கிடைக்கவில்லை என்பதை நாம் போர் நிலவரங்கள் மூலம் கவனிக்க முடியும். சில குறிப்பிடத்தக்க இழப்புகளை இராணுவத்திற்கு புலிகள் ஏற்படுத்தியிருந்தாலும் அந்த இழப்புகள் இராணுவத்தை பொறுத்தைவரை மிகவும் குறைவே. அது தவிர கடந்த காலங்களில் கட்டுநாயக்க விமான தளம் மீதான தாக்குதல் போன்றவை மூலம் சிறீலங்கா பொருளாதாரத்திற்கு கடுமையான அழுத்தங்களை புலிகள் ஏற்படுத்தியிருந்தனர். ஆனால் தற்பொழுது புலிகளால் அது போன்ற ஒரு பொருளாதார அழுத்தங்களை ஏற்படுத்த முடியவில்லை.

இவ்வாறான நிலையில் இந்தப் போர் எந்த வெற்றியையும், யாருக்கும் கொடுக்க முடியாது என்பதை நாம் தெளிவாக புரிந்து கொள்ள முடியும். என்றாலும் இடங்களை கைப்பற்றியதன் மூலம் இராணுவம் சில குறிப்பிடத்தக்க வெற்றிகளை நான்காவது ஈழப் போரில் பெற்றிருக்கிறது என்பதை நாம் மறுக்க முடியாது.

*************************

2008ம் ஆண்டு முடிந்து 2009ம் ஆண்டு தொடங்கி விட்டது. A32 சாலைக்காக நடந்த சண்டையில் இராணுவத்தின் Attrition warfare நோக்கம் தங்களுக்கு தெரிவதாகவும், அதற்கு ஏற்ப தங்களுடைய வியூகமும் அமையும் என புலிகள் அமைப்பின் ஒரு மூத்த தலைவர் தெரிவித்து இருந்தார். 2008ம் ஆண்டு போர் பற்றிய ஒரு தெளிவினை கொடுக்கும் என 2008ம் ஆண்டு ஆரம்பத்தில் அவர் கூறினார். 2008ம் ஆண்டு முடிந்து விட்ட நிலையில் ஒரு விடயம் தெளிவாகவே புரிகிறது..... அதை விளக்க வேண்டிய அவசியம் இல்லை.

2008ம் ஆண்டில் இது வரை இல்லாத அளவுக்கு பல தோல்விகளை புலிகள் அடைந்து உள்ளனர். அடம்பன், பூநகரி தொடங்கி தற்பொழுது பரந்தன், கிளிநொச்சி என பல இராணுவ முக்கியத்துவம் பெற்ற இடங்களை புலிகள் இழந்து உள்ளனர். கிளிநொச்சி தவிர முல்லைத்தீவு பகுதியையும் புலிகள் இழக்ககூடும். கிளிநொச்சியை புலிகள் தற்காக்க தீவிர போர் புரிந்த சூழ்நிலையில் அதனை தங்களுக்கு சாதகமாக சிறீலங்கா இராணுவம் பயன்படுத்திக் கொண்டது. முல்லைத்தீவினை நோக்கி இராணுவம் நகர்ந்து வருகிறது. முல்லைத்தீவு நகரை அண்டிய முள்ளியவளை, தண்ணீரூற்று, சிலாவத்தை ஆகிய இடங்களை இராணுவத்தினர் கைப்பற்றியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. முல்லைத்தீவு பகுதியை தக்கவைக்க வேண்டுமானால் கிளிநொச்சியை விட்டு வெளியேற வேண்டிய நிலை தான் புலிகளுக்கு இருந்தது. அதைத் தான் தற்பொழுது புலிகள் செய்திருக்கின்றனர்.

நான் கடந்த பகுதியில் கூறியிருந்தது போல புலிகள் போன்ற சிறிய இராணுவ அமைப்பிற்கு பல முனைகளில் ஒரே நேரத்தில் நடத்தப்படும் பெரிய தாக்குதல்களை எதிர்கொள்ளும் ஆட்பலமோ, ஆயுதபலமோ இல்லை. அதைத் தான் இந்த வார நிகழ்வுகள் உறுதிப்படுத்துகின்றன. இதற்கு என்ன காரணம் என்பதையும் விளக்க வேண்டும். தங்களுடைய தற்காப்பு அரண் முழுவதையும் பாதுகாப்பதற்கு போதிய போராளிகள் பலமோ, ஆயுத பலமோ புலிகளிடம் இல்லை. தற்காப்பு அரணை சார்ந்த பகுதிகளில் குறைந்த அளவிலான போராளிகளே இருப்பார்கள். இது இராணுவத்தின் ஆர்ட்லரி தாக்குதல்கள் போன்றவற்றை சமாளிப்பதற்கான ஒரு உத்தியும் கூட. இராணுவம் தாக்குதல் தொடுக்கும் பொழுது தாக்குதல் நடத்தப்படும் இடங்களுக்கு, தாக்குதல்களின் பலத்தை பொறுத்து போராளிகளையும், ஆயுதங்களையும் அனுப்புவது புலிகளின் வழக்கம். இது புலிகள் என்றில்லாமல் எல்லா இராணுவ அமைப்புகளின் செயல்பாடும் இவ்வாறு தான் இருக்கும். பல முனைகளில் ஒரே நேரத்தில் தாக்குதல் நடத்தப்படும் பொழுது இந்த வழங்கல் பாதையில் (Supply Lines) சுணக்கம் ஏற்படுகிறது. அது தவிர இராணுவத்தின் விமானத் தாக்குதல் இந்த வழங்கல் பாதையை குறிவைக்கிறது. இதன் காரணமாகவே புலிகளின் தற்காப்பு அரணை பல முனை, எதிர்பாராத தாக்குதல்களை மூலம் இராணுவம் முறியடிக்க முனைகிறது. அதற்கு வெற்றியும் கிடைத்து உள்ளது.

இதனை எதிர்கொள்ள தங்களால் பாதுகாக்க முடிந்த சிறிய பகுதிகளை மட்டும் பாதுகாத்து கொள்வதும், தங்களால் பாதுக்காக்க முடியாத முக்கிய நிலைகளை விட்டு பின்வாங்குவதும் புலிகளின் தற்போதைய வியூகமாக உள்ளது. தற்போதைய நிலையில் மூன்று புறமும் புலிகளை இராணுவம் சுற்றிவளைத்துள்ளது. ஒரு புறம் கடல் வழியே வரும் ஆயுதங்களை இராணுவம் தடுக்க முனைந்து வருகிறது. இருந்தாலும் புலிகள் அவ்வப்பொழுது ஆயுதங்களை பெற்றே வந்திருக்கின்றனர் என்பதையும் செய்திகள் உறுதிப்படுத்துகின்றன. புலிகள் எந்தளவுக்கு ஆயுதங்களை கடல் வழியாக பெறுகின்றனர் என்பதை பொறுத்தே போரின் எதிர்கால போக்கு அமையும். இந்த கடல் வழிப் பாதையை எந்தளவுக்கு இராணுவம் தடுக்கிறதோ அந்தளவுக்கு அது இராணுவத்திற்கு வெற்றியையும் கொடுக்கும்.

*************************

இராணுவத்தின் இந்த தொடர்ச்சியான வெற்றிகளை தடுக்க புலிகள் வலிந்த தாக்குதல்களை தொடுக்க வேண்டும். புலிகள் ஏன் தங்களுடைய வலிந்த தாக்குதல்களை மேற்கொள்ள வில்லை என்ற கேள்வி தொடர்ச்சியாக பல ஊடகங்களில் எழுப்பபட்டு வருகிறது. புலிகளிடம் வலிந்த தாக்குதல்களை தொடுக்க கூடிய பலம் இல்லை என இராணுவம் கூறுகிறது. அது உண்மையா என்பதை காலம் தான் பதில் சொல்லும்

47 மறுமொழிகள்:

Anonymous said...

இனி இராயகரன்களும், ஷோபா சக்திகளும் டக்ளஸ் தேவனாந்தா, கருணா, பிள்ளையான் போன்றவர்கள் மூலமாக மறுபடியும் ஈழப்போராட்டத்தை ராஜபக்ஷவை நோக்கி உரிமை கேட்டு தொடருவார்கள் என நம்புகிறேன். அவர்களின் போராட்டம் வெற்றி அடைய வாழ்த்துக்கள்.

1:54 PM, January 02, 2009
அற்புதன் said...

//புலிகளிடம் வலிந்த தாக்குதல்களை தொடுக்க கூடிய பலம் இல்லை என இராணுவம் கூறுகிறது. //

:-)

2:28 PM, January 02, 2009
Anonymous said...

மக்கள் போராட்டத்தை உடனடியாக ஆரம்பிக்க வருமாறு இராயகரன் சிறிரங்கன் மற்றும் பலருக்கும் அவசர வேண்டுகோளை விடுக்கின்றோம்.

பாசிப்புலியிடமிருந்து விடுபட்ட அப்பாவி மக்கள்

2:34 PM, January 02, 2009
ராமலிங்கம் said...

`///
மக்கள் போராட்டத்தை உடனடியாக ஆரம்பிக்க வருமாறு இராயகரன் சிறிரங்கன் மற்றும் பலருக்கும் அவசர வேண்டுகோளை விடுக்கின்றோம்.
///

புலிகள் கருத்து சுதந்திரத்தை மறுக்கிறார்கள். மாற்று கருத்துகளை முன்வைப்பவர்களை அழிக்கிறார்கள் போன்ற கருத்துக்களை இராயகரன் போன்றவர்கள் கூறுகிறார்கள். ஆனால் அவர்களின் உண்மையான லட்சணம் என்ன என்பது எனக்கு சமீபத்தில் புரிந்தது.


அவர்களின் "சிங்கள இராணுவம் பெண்களை நிர்வாணப்படுத்தி குதறுவதை, மூடிமறைக்கும் புலித் தேசியம்" என்ற பதில் ஒரு பின்னூட்டம் எழுதினேன்.

புலிகள் இறந்தவர்களின் படங்களை வெளியிட்ட பொழுது, பிணங்களைக் கொண்டு புலிகள் விளம்பரம் தேடுகிறார்கள் என எழுதினீர்கள். இப்பொழுது புலிகள் இதனை ஏன் விளம்பரப்படுத்தவில்லை என எழுதுகிறீர்கள். புலிகள் முன்னே சென்றாலும் குற்றம், பின்னே சென்றாலும் குற்றம் என்பது தான் இடதுசாரிக் கருத்தியலா என்ற கேள்வியை எழுப்பினேன்.

இந்த பின்னூட்டம் வெளியாகவில்லை. இதனை எதிர்பார்க்கவில்லை. கருத்து சுதந்திரம் குறித்து பேசுபவர்கள், இதனை கூட ஏன் வெளியிடவில்லை என்ற கேள்வி எழுந்தது. எனவே மறுபடியும் ஒரு பின்னூட்டம் எழுதினேன். ஒரு ஆதரமாக அதன் ஸ்க்ரீன்ஷட்டை சேமித்தும் வைத்துக் கொண்டேன். அதனை கீழே உள்ள சுட்டியில் பார்க்கலாம். ஆனால் அந்த பின்னூட்டமும் வெளியாக வில்லை.


http://img230.imageshack.us/img230/7955/37117127jj8.gif


இவர்களுக்கு கருத்துச் சுதந்திரம் குறித்து எந்த அக்கறையும் இல்லை. புலிகள் எதிர்ப்பே பிரதானம்.

இந்த பின்னூட்டத்தை நீங்களாவது வெளியிடுவீர்களா ?

3:01 PM, January 02, 2009
வளர்மதி said...

திரு. சசி அவர்களுக்கு,

ஈழத் தமிழரின் விடுதலைப் போராட்டத்தின் பாலான தங்களின் அக்கறைகளும் கரிசணையும் சந்தேகத்திற்கப்பாற்பட்டது.

எனினும், போர் குறித்த தங்களது மதிப்பீடுகளும் அலசல்களும் பாரிய தவறான விளைவுகளை விளைவிக்கக்கூடியவை என்று கருதுகிறேன்.

சென்றமுறை ஸ்டாலின்க்ராட் தற்காப்புப் போருடன் நீங்கள் ஒப்பிட்டு எழுதியதே தவறென்று குறிப்பிட்டிருந்தேன. எங்ஙனம் என்பதை விரிவாக விளக்க நேரமில்லை.

சிங்கள ராணுவம் தோல்வியின் விளிம்பில் இருப்பதாகவும் அப்போது குறிப்பிட்டிருந்தேன்.

கிளிநொச்சியைக் கைப்பற்றிய செய்திகள் தற்சமயம் வந்துபோதும் எனக்கு அக்கருத்தில் பெருத்த மாற்றங்கள் ஏதுமில்லை.

கிளிநொச்சியைக் 'கைப்பபற்றியதாகச்' சொல்லும் சிங்கள அறிவிப்பு அம்முயற்சியில் எத்துனை புலிகளை வீழ்த்தியது, எத்துனை வீரர்களை இழந்தது என்பதான விவரங்கள் எதையும் கொடுக்கவில்லை.

புலிகள் எந்த இழப்பும் இல்லாமலே கிளிநொச்சியை மட்டுமல்ல அதைச் சுற்றியுமுள்ள பல பகுதிகளையும் விட்டு விலகியுள்ளதையும் நாம் கவனிக்க வேண்டும்.

இதுவே சென்ற முறை நீங்கள் இப்போரை ஸ்டாலின்க்ராடுடன் ஒப்பிட்டதற்கு மறுப்பாக அமையும்.

நான் அறிந்த அளவில் இப்போரின் சில தந்திராபோய யுத்திகளைப் பேச விரும்பவில்லை.

தற்சமயம் நம்மைப் போன்றவர்கள் ஈழப் போரில் புலிகளின் போர் தந்திரங்கள் குறித்து வெளிப்படையாக பேசாது அரசியல் உத்திகள் சார்ந்து நீங்களும் நானும் என்ன செய்ய வேண்டும், என்ன செய்யப் போகிறோம் என்பது குறித்து விவாதிப்பதும் செயலில் இறங்குவதும் மட்டுமே நடைமுறை அரசியலுக்கு உகந்தது என்று கருதுகிறேன்.

ஈழப் போரின் தந்திரோபாயங்கள் குறித்து எழுதி எனது புத்திசாலித்தனத்தை வெளிப்படுத்திக் கொள்வது சிங்கள இராணுவம் மற்றும் இந்திய இராணுவத்தை உஷார் படுத்தும் காரியமாக அமையும். அதைத் தவிர்க்க விரும்புகிறேன். நீங்களும் தவிர்க்கக் கோருகிறேன்.

அரசியல் ரீதியாக ஈழ விடுதலைப் போராட்டத்திற்கு ஆதரவாக தமிழகத்தில் எம்மைப் போன்றவர்கள் என்னவிதமான நடவடிக்கைகளில் ஈடுபடுவது, அமெரிக்காவில் இருக்கும் நீங்கள் (ஈழத் தமிழரல்லாத நீங்கள்) என்ன செய்வது என்பது குறித்து உரையாடுவதும் செயல்படுவதுமே இச்சந்தர்ப்பத்தில் மிக முக்கியமானது.

பரிசீலிக்க வேண்டுகிறேன்.

அன்புடன்

வளர் ...

3:05 PM, January 02, 2009
Anonymous said...

மிக நேர்த்தியான பார்வை. நன்றி
ஈழப்போர் குறித்த சில சந்தேகங்கள் என் மனதில் மாத்திரமல்ல, ராஜபக்சவின் மனதையும் குடையலாம்.
1. ஏன் இதுவரை புலிகள் வலிந்து தாக்குதலைத் தொடர விரும்பவைல்லை?
2. கிழக்கில் (மாவிலாறு) போருக்காக இலங்கை இராணுவம் தன் படைகளை வன்னி எல்லையில் இருந்து
கிழக்கிற்கு கொண்டு சென்றபோது வன்னியில் புலிகள் வலிந்த தாக்குதலைத் தொடர்ந்து சில இடங்களைக் கைப்பற்றி இருக்கலாம். ஏன் அந்த வாய்ப்பில் மௌனம் சாதித்தது?
3. முதலாம், இரண்டாம் ஈழப்போரில் விமான எதிர்ப்பு ஆயுதங்கள் பயன்படுத முனைந்த அளவிற்குகூட இன்றைய போரில் ஏன் முயற்சிக்கவில்லை?
4.

கடந்த ஏழு ஆண்டுகாலத்தில் ஒரு அங்குல அளவைக்கூட புலிகள் புதிதாக கைப்பற்றவில்லை. புலிகள் வெற்றிபெற இன்னும் வாய்ப்புக்கள் வளர்கின்றன.
புலிக‌ளுக்கு எதிரான‌ விம‌ர்ச‌ன‌ங்க‌ளைப் போன்றே ஆத‌ர‌வான‌ க‌ருத்துக்க‌ளும் க‌ண்மூடித்த‌ன‌மாக‌ வைக்க‌ப்ப்ட்ட‌ன‌.
தேவை மிக நிதானமான ஆலோசனை.

ஒரு ஈழத்தமிழன்

3:09 PM, January 02, 2009
சுந்தரவடிவேல் said...

//ஈழப் போரின் தந்திரோபாயங்கள் குறித்து எழுதி எனது புத்திசாலித்தனத்தை வெளிப்படுத்திக் கொள்வது சிங்கள இராணுவம் மற்றும் இந்திய இராணுவத்தை உஷார் படுத்தும் காரியமாக அமையும். அதைத் தவிர்க்க விரும்புகிறேன். நீங்களும் தவிர்க்கக் கோருகிறேன்.//
I agree with Valarmathi.

3:39 PM, January 02, 2009
தமிழ் சசி | Tamil SASI said...

வளர்மதி,

என்னுடைய பார்வை தவறாக இருந்தால் எனக்கு மகிழ்ச்சியே.

இராணுவம் அகல கால் பரப்பி உள்ளது. அதுவும் குறுகிய காலத்தில் அகல கால்பரப்பி உள்ளது இராணுவத்திற்கு பாதகமான விடயமே. ஆனால் நீங்கள் சொல்வது போல சிறீலங்கா இராணுவம் தோல்வியின் விளிம்பில் நிற்பதாக நான் நம்பவில்லை. அவ்வாறு இருந்தால் எனக்கு மகிழ்ச்சியே.

ஆனால் நீங்கள் கூறுவது போல நம்மைப் போன்றவர்கள் போர் குறித்த வியூகங்களை பேசுவதை விட அரசியல் ரீதியாக நாம் என்ன செய்ய முடியும் என்பது குறித்து யோசிப்பதே நல்லது. அந்த கருத்துடன் நான் உடன்படுகிறேன்.

3:45 PM, January 02, 2009
அற்புதன் said...

வளரின் கருத்தை நானும் வழி மொழிகிறேன்.

புலிகளின் போரியல் யுக்தி பற்றி எழுத இன்னும் காலம் இருக்கிறது என்றே முன்னரும் எழுதினேன்.
புலிகளின் போராட்ட உபாயத்தை முற்றிலும் இராணுவக் கண்ணோட்டத்தில் இருந்து பார்க்க முடியாது.அரசியற்,பொருளதரா இராஜதந்திர உபாயங்களுடன் இணைத்தே பார்க்க வேண்டும்.
இராணுவ ரீதியகா மட்டும் பார்ப்பது என்பது மேலோட்டமான பார்வையே.

3:51 PM, January 02, 2009
Anonymous said...

வளர்மதி!!!

உங்கள் ஈழ மக்கள் தொடர்பான அக்கறை குறித்து என் நன்றிகள்.
உங்க‌ளுக்கு எவ்வாறு கைமாறு செய்வோம் எனத் தெரியவில்லை.
உங்கள் ஒவ்வொரு எழுத்தும் நெஞ்சைத் தொட்டது.
சசியின் ஆர்வம், எழுத்து எல்லாமே காலத்தின் தேவைகள்.

நன்றிகள்

ஒரு ஈழத்தமிழன்

4:07 PM, January 02, 2009
தமிழ் சசி | Tamil SASI said...

அற்புதன்,

பொருளாதார ரீதியிலும் தான் இதனை நான் பார்க்கிறேன். பொருளாதாரம் சார்ந்த விடயங்கள் கடந்த ஈழப்போரில் எந்தளவுக்கு சிறீலங்காவிற்கு தோல்வியை கொடுத்தது என்பதை நான் அறிவேன். தற்போதைய சூழ்நிலையையும் அறிவேன்.

நன்றி....

4:14 PM, January 02, 2009
காத்து said...

தமிழீழம் இந்தியாவுக்கு அருகில் இருப்பது தமிழர்களுக்கு பாதிப்பானதுதான்... அதேபோல புலிகள் பலவீனம் அடையும் வரைக்கும் எல்லாரும் இலங்கை அரசுக்கு உதவிகளை செய்து இலங்கை அரசை தங்களின் கைகளுக்குள் வைத்திருக்க அரசுகள் விரும்புவதும் உண்மைதான்...!!

புலிகள் உண்மையில் பலவீனம் அடைந்து விட்டார்களாயின் இவ்வளவுகாலமும் செய்த உதவிக்களுக்கான பலனை அந்த நாடுகள் இலங்கையிடம் இருந்து எதிர்பார்க்காதா..??? அபடியாயின் இலங்கையின் கருணை யாருக்கு...?? இப்படியான கேள்விகள் உண்மையான விளக்கத்தை தமிழரின் போராட்ட முடிவை உணர வசதியாக இருக்கலாம்...

இனியும் புலிகள் போராடத்தான் போகிறார்கள்.. 2 வருடங்கள் இல்லை5 வருடங்கள் 10 வருடங்களாகா வேண்டுமானாலும் இலங்கை படைகளுக்கு சேதங்களை விளைவிக்க தான் போகிறார்கள்...

ஆப்கானில், ஈராக்கில், போராடும் அமெரிக்க, பிரித்தானிய படைகளுக்கு இல்லாத உதவிகள் இலங்கை படைகளுக்கு இருக்கிறது என்பது கொஞ்சம் அதிகமானது... ஆனாலும் ரஸ்யா, ஈரான் போண்றவை போராளிகளுக்கு உதவுகின்றன எண்று சொன்னாலும் அமெரிக்கர்களின் ஆழுமைக்கு அவை சமனானவைதான்..

இண்று இருக்கும் கேள்வி... புலிகள் இலங்கை படைகளை வெல்ல முடியவில்லை எண்று வைத்து கொள்ளலாம்... இலங்கை படைகள் வெண்று விட்டார்கள் எண்று கொள்ள முடியுமா..?? அப்படி அவர்களால் வெல்ல முடியுமா..?? எவ்வளவு காலத்தில் வெல்ல முடியும்..?? அப்படி எவ்வளவு காலத்துக்கு போரை மட்டுமே இலங்கை அரசால் நடத்த முடியும்..? பால்மாவின் விலை குறைப்பு எப்போது... மக்கள் அதுவரை பொறுத்து இருந்தாலும், இலங்கையில் போருக்காக முதலீடு செய்யும் வெளிநாட்டுகள் பொறுத்து இருப்பார்களா..??

சிறு உதாரணமாக அமெரிக்க தூதர் றொரேட் பிளேக் அவர்கள் தீர்வு ஒண்றை முன் மொழியுமாறு வேண்டு கோள் விடுக்கிறார்... இது அவர்கள் பொறுமை இழக்க ஆரம்பித்து விட்டார்கள் என்பதுக்கான அறி குறி இல்லையா..?

4:36 PM, January 02, 2009
வெத்து வேட்டு said...

"ஈழப் போரின் தந்திரோபாயங்கள் குறித்து எழுதி எனது புத்திசாலித்தனத்தை வெளிப்படுத்திக் கொள்வது சிங்கள இராணுவம் மற்றும் இந்திய இராணுவத்தை உஷார் படுத்தும் காரியமாக அமையும். அதைத் தவிர்க்க விரும்புகிறேன். நீங்களும் தவிர்க்கக் கோருகிறேன்..."
sorry to intrude..but above mentioned is best joke of the millenium :)

8:48 PM, January 02, 2009
Anonymous said...

"ஈழப் போரின் தந்திரோபாயங்கள் குறித்து எழுதி எனது புத்திசாலித்தனத்தை வெளிப்படுத்திக் கொள்வது சிங்கள இராணுவம் மற்றும் இந்திய இராணுவத்தை உஷார் படுத்தும் காரியமாக அமையும். அதைத் தவிர்க்க விரும்புகிறேன். நீங்களும் தவிர்க்கக் கோருகிறேன்..."




எதற்கும் உசார் இருங்க சசி உங்களையும் கைக்கூலி என்று சொல்ல போறாங்க

8:59 PM, January 02, 2009
தமிழ் சசி | Tamil SASI said...

எதற்கும் உசார் இருங்க சசி உங்களையும் கைக்கூலி என்று சொல்ல போறாங்க

***

என்னை கைக்கூலியாக்க உங்களுக்கு ஏன் இத்தனை ஆசை :)

கிளிநொச்சியின் இழப்பு புலி எதிர்ப்பாளர்களுக்கு சந்தோஷத்தை கொடுத்து இருக்கிறது. அடித்து ஆடுங்கள். இந்த விடயத்தில் ஈழ இடதுசாரிகளுக்கும், சிங்களவர்களுக்கும், இந்திய வலதுசாரிகளுக்கும் இடையே பெருத்த வேறுபாட்டினை நான் காணவில்லை.

இங்கு இருப்பது ஒரே அரசியல் - அது புலி எதிர்ப்பு அரசியல்.

9:28 PM, January 02, 2009
Anonymous said...

ஈழப்போர் இன்னும் நடக்குமா ?

ஐ............

அப்போ ... தொடர்ந்து வசூலும் நடக்குமா ?

9:34 PM, January 02, 2009
Anonymous said...

//கிளிநொச்சியின் இழப்பு புலி எதிர்ப்பாளர்களுக்கு சந்தோஷத்தை கொடுத்து இருக்கிறது. அடித்து ஆடுங்கள். இந்த விடயத்தில் ஈழ இடதுசாரிகளுக்கும், சிங்களவர்களுக்கும், இந்திய வலதுசாரிகளுக்கும் இடையே பெருத்த வேறுபாட்டினை நான் காணவில்லை.

இங்கு இருப்பது ஒரே அரசியல் - அது புலி எதிர்ப்பு அரசியல்.//

எல்லோரும் எதிர்க்கிறார்களென்றால், அதன் முக்கியத்துவம் தெரிகிறது

9:38 PM, January 02, 2009
Anonymous said...

புலி எதிர்ப்பாளர்களுக்கு குறிப்பாக இலங்கையில் வாழும் புலி எதிர்ப்பாளர்களுக்கு இப்போது கிலி பிடிக்க ஆரம்பித்திருக்கும். புலி அழிந்துபோகும் என்ற நிலைப்பாடு இப்போது பரவலடைந்துவரும் நிலையில் அதன் பின் இந்தப் புலி எதிர்ப்பாளர்களின் தேவை சிங்களத்துக்கு துளியேனும் தேவைப்படாது.

ஆயுதங்கள் களையப்படும், பதவிகள் பறிக்கப்படும், சில புலி எதிர்ப்பாளர்கள் கைகள் கட்டப்பட்ட நிலையில் சுடப்பட்டிருப்பார்கள். டக்ளஸின் வானொலியின் தேவை இருக்காது. ஆனந்தசங்கரியின் அலட்டல்கள் தேவைப்படாது. மொத்தத்தில் புலி எதிர்ப்பாளர்கள் கிலி கொள்ளவேண்டிய நேரம் இது. மடையர்கள் வரலாறு தெரியாத மூடர்கள்.

புலிகள் அழிந்தால் நீங்களும் அழிந்தீர்கள் புரிந்து கொள்ளுங்கள்.

- தேவன் -

2:25 AM, January 03, 2009
Anonymous said...

srilankan aim is to kill prapakaran it is clear.
thats why india keeping silent.
after killing prapakaran thay will keep one dummy leader.mostly muharjee visit srilanka after the death of prapakaran.
just like what happen in irak.

3:32 AM, January 03, 2009
Osai Chella said...

நண்பர் சசிக்கு,
கடந்த சில ஆண்டுகளாகவே இந்த போரின் போக்கினை அவதானித்து வருபவன் என்ற முறையில் நாம் போரியல் ரீதியான ஆராய்ச்சிகளை கொஞ்சம் ஒத்திப்போடுவது நலம் என்றே நினைக்கிறேன். அதைவிட முக்கியமானது எப்படி தமிழ்ச்செல்வனின் மரணம் தெருவெங்கும் ஒரு அதிர்ச்சியை ஏற்படுத்தி ஈழப்பிரச்சினை தமிழகத்தில் மீடியாவில் சிறு தாக்கத்தை ஏற்படுத்தியதோ அது போல கிளிநொச்சியும் தமிழகத்தில் அங்கு போர் நடப்பதை தாக்கத்துடன் எடுத்தியம்புகிறது. மக்களின் உணர்வுகள், கோபங்கள், தமிழின சிந்தனைகள், அரசியல் மறுவாசிப்புகள் போன்றவைகள் மீண்டும் கிளர்ந்தெழுவஹற்கு வாய்ப்புள்ளது. இதன் தாக்கம் தமிழகத்தில் அதன் தேர்தல்களிலும் தெரிய வாய்ப்புள்ளது. பேசாமடந்தைகளான அரசியல் தலைவர்கள் "தமிழின" என்ற வார்த்தையை இனி உபயோகித்தால் கூட எடுபடாமல் போகக்கூடிய சாத்தியங்கள் உள்ளது என்பதையும் மறுக்க முடியாது. ஈழமும் எங்களுக்கு உங்கள் ஆதரவு தேவையில்லை.. எதிர்க்கு உதவாவிட்டால் போதும் நாங்களே வென்றெடுப்போம் என்றெல்லாம் பேசுவது இனியாவது குறையும்.. காரணம் ஒரு போரானது நன்மைக்கும் தீஇமைக்கும் இடையே என்றுமே நண்டந்ததில்லை. வலிமைக்கும் வலிமைக்கும் அல்லது வலிமைக்கும் குறைந்த வலிமைக்கும் மட்டுமே நடக்கிறது.... அதில் வலிமையானது மட்டுமே செயிக்கிறது என்ற நியெட்சே கருத்து போன்ற உண்மையை பலர் ஒஉரிந்துகொள்வார்கள். மேலும் எழுத ஆசை.. ஆனால் கொண்டாட்டங்களின் போக்கை ஆராய்ந்தவண்ணம் உள்ளேன். தெற்கு வாழ்கிறது இந்த நிமிடம்!

4:34 AM, January 03, 2009
Osai Chella said...

ஒரே விடயம்.. புலிகளுக்கு இந்தியாவிடமிருந்து எந்த ஆதரவும் இல்லாதநிலையில், வெளியிலிருந்தே ஆயுத சப்ளை என்ற சூழலில் பேய்முனை கிளிநொச்சி போனது சரியான முடிவென்றே படுகிறது. வீரர்களின் எண்ணிக்கையை எதிர்காலத்திற்கு சேமிக்கும்பொழுது!

மற்றொரு சிறுவிடயம் யாரும் கவனிக்காதது.. போரியலில் மிகவும் அவசியமானது ராணுவ தகவல் கள் அல்லது ரகசியங்கள். கருணா கைவிட்டு சென்றபொழுதே கிளிநொச்சியின் முக்கியத்துவம் குறைக்கப்பட்டிருக்கும் தானே!

4:43 AM, January 03, 2009
Osai Chella said...

அதேபோல புலிகள் ஒருவேளை மொத்தமாக வீழ்ந்துவிட்டால் தேவன் சொன்னது போல் அடுத்தகுறி அனந்தசங்கரிகள், அதன்பின் பிள்ளையான் கருணாக்கள் அப்புறம் ... பாவம் தமிழினம்!

புலிகள் தாம் வேண்டாம் இந்தியாவுக்கு.. ஆனால் தமிழர்கள் மீது மிக அதிக அக்கறை. உயிரையும் கொடுக்க ஒரு வயதான முதல்வர் தயாராகவே இருக்கிறார். என்ன பிரயோசனம். எந்த ஒரு தீர்வையும் இன்றுவரை முன்வைக்காமலேயே தந்திரமாக காய்நகர்த்தும் சாகசம் மகிந்தாவிடம் உள்ளதை உலகம் அறிய நாளாகளாம்.

4:51 AM, January 03, 2009
Anonymous said...

இனியாவது வெளிநாடுகளில் உள்ள புலிகளின் பிரதிநிதிகள் மக்களிடம் பணம் பிடுங்காமல் சுயமாக உழைத்து சம்பாதிப்பார்களா?

4:55 AM, January 03, 2009
Anonymous said...

This may be the end of the conventional military war,
but not the end of the liberation struggle of the eelam tamils.
The path may change and the tactics may vary, the leader ship might even change over the years.
but the goal is the same.
the eelam tamil struggle will only end when there is a just political solution for eelam tamils is reached.
This is not a struggle of a political party or a military group.
This is the people's liberation struggle of an ethnic nation.

5:03 AM, January 03, 2009
Anonymous said...

Mr.vetthuvettu,
what is your problem man.
I have seen you intruding every blogsite and making silly remarks to celebrate the victory of sinhala army.
Who are you man.
Are you an eelam tamil or an indian tamil?
your celebratory mood seems out of the ordinary and your happiness towards the suffering of eelam tamils look out of propaortionate.
As a person who is interested in the psychology of mind ,I am just curiuos to know the motive behind your behaviour.
can you enlighten me?

5:12 AM, January 03, 2009
Anonymous said...

>>ஈழப் போரின் தந்திரோபாயங்கள் குறித்து எழுதி எனது புத்திசாலித்தனத்தை வெளிப்படுத்திக் கொள்வது சிங்கள இராணுவம் மற்றும் இந்திய இராணுவத்தை உஷார் படுத்தும் காரியமாக அமையும். அதைத் தவிர்க்க விரும்புகிறேன். நீங்களும் தவிர்க்கக் கோருகிறேன்>>

சிரிப்பாக இருக்கிறது!
நீங்கள் மற்றும் வளர் என்ற நபர் எழுதும் போர்த்தந்திர உத்திகளைப் பார்த்துத்தான் இலங்கை போர் நடவடிக்கைகளை வகுக்கிறது என்ற கூற்று!

6:29 AM, January 03, 2009
Anonymous said...

thair aim is clear. thay want to kill prapakaran.and keep one dummy person .just like what happen in iraq

7:30 AM, January 03, 2009
Anonymous said...

திருகோணமலையில் உள்ள சிங்களக் காடையர்கள் சந்தை வளாகத்தில் உணவு சமைத்து கட்டாயப்படுத்தி
தமிழர்களை உண்ண வைக்கின்றார்கள். இது தவிர அதிகளவு வெடி கொளுத்தி மகிழ்கின்றார்கள்.

மடுப்படுத்தப்பட்ட ஒரு இனக் கலவரத்திற்கு வாய்ப்பு அதிகரிக்கின்றது.

கண்டியில் சிங்கள முச்சக்கர வண்டி ஓட்டுநர்களுக்கு துப்பாக்கி வழங்கப்படுகின்றது.
சந்தேகமான தமிழர்களை கைது செய்து படையிடம் ஒப்படைக்கலாம். தேவை ஏற்பட்டால் துப்பாக்கி பயன்படுத்தலாம்.

அடுத்து வரும் நாட்கள் திருகோணமலையில் மாற்றங்கள் நிகழலாம்.



ஒரு ஈழ‌த் த‌மிழ‌ன்

2:09 PM, January 03, 2009
Anonymous said...

வாசிக்க சுவாரசியாமனதாகத்தான் இருக்கு!! ஆன நமது அடுத்த கட்ட நகர்வை, (மக்களது) மக்களாகிய நாம் தீர்மணிக்கவேண்டும். எனி உந்த மாற்று கருத்தாழர்கள், ஜனநாயகவாதிகள் எண்ட பேச்சுக்கே இடமிருக்காது, தேசம் எண்ட ஒரு வலைப்பதிவுக்கும் அதன் ஆசிரியர்களான புலியெதிர்ப்பாளகள் ஜெயபாலன் தொடக்கம்,சேனன் வரை வெத்து வேட்ட்க்கள் ஆகிவிடுவார்கள். மக்கள் பிறகு என்னாவார்கள்??? தமிழ் மக்கள் அதுவும் 2006 வரை வன்னி நிலப்பரப்பில் வாழ்ந்த மக்கள் எல்லாம் மட்டகழப்பில் நடப்பது போல் கொன்று குவிக்க படுவார்கள்.

3:07 PM, January 03, 2009
இவன் said...

எனது பதில் இதுதான்!

http://ivanpakkam.blogspot.com/2009/01/blog-post_02.html

6:51 PM, January 03, 2009
Anonymous said...

கடைசி ஒரு புலி இருக்கும் வரை போராட்டம் தொடரும், கடைசி ஒரு புலம்பெயர் தமிழன் இருக்கும் வரை போராட்டத்திற்கான பங்களிப்பு தொடரும். அந்த கடைசி இருவரின் பின்தான் போராட்டம் நிறைவு பெறும் அது வரை போராட்டம் தொடரும், போராட்டவழிமுறைகள் மாறுமே ஒழிய போராட்டம் என் றும் மாறாது.

9:46 PM, January 03, 2009
யாரோ ஒருவன் said...

கிளிநொச்சி ஈழப்போரின் திருப்புமுனை என்று கூறியது சரி என்று நேற்று தான் உணர்ந்தேன்

நேற்று நிலவரப்படி

போராளிகள் யாரும் கைது செய்யப்பட்டதாகத் தெரிவிக்கவில்லை,

போராளிகள் யாரும் இறந்ததாகத் தெரிவிக்கவில்லை,

போராளிகளிடம் இருந்து ஆயதங்கள் எதுவும் கைப்பற்றப் பட்டதாகத் தெரிவிக்கவில்லை,

போராளிகளின் முக்கிய ஆவணங்களோ அல்லது தகவல் தொடர்பு சாதனங்களோ கைப்பற்றப்பட்டதாகத் தெரிவிக்கவில்லை,

ஒரு நகரைக் கைப்பற்றிய ராணுவத்தினர் இதுவரை போராளிகளின் ஆயுதங்களையோ, ஆவணங்களையோ, தகவல் தொடர்பு சாதனங்களையோ கைப்பற்றவில்லை என்றால் அதன் அர்த்தம் என்ன?

புலிகள் அந்த நகரை காலி செய்து பல நாட்களாகிவிட்டது.

கிளிநொச்சியை நான்கு புறமிருந்தும் ரானுவம் சுற்றி வளைத்த நிலையில் எப்படி காலி செய்திருக்க முடியும்

1. மந்திரம் மூலம் கூடு விட்டு கூடு பாய்ந்திருப்பார்கள்

2. விமானம் மூலம் சென்றிருப்பார்கள்

3. 6 மாதங்களுக்க முன்னரே காலி (குறைந்த பட்சம் செப்டம்பர் 2008 முன்னர்) செய்திருக்கிறார்கள்

இவ்வளவு நாட்களாக (4 மாதங்களாக ரானுவம் ஒரு பலனற்ற இடத்தை கைப்பற்ற போராடி உள்ளது.

அதை விட சுவாரசியம்

பூநகரியிலிருந்து புலிகள் காலி செய்தது அனைவருக்கும் தெரிந்த வண்ணம் நடந்தது.

கிளிநொச்சியில் இருந்து காலி செய்தது பரம ரகசியமாக நடந்துள்ளது

11:27 PM, January 03, 2009
யாரோ ஒருவன் said...

பொந்து இதழ் என்ன கூறுகிறது என்று பாருங்கள்

The military has released photographs of several buildings in Kilinochchi, from where various LTTE wings functioned.

ஒரு காலத்தில் செயல்பட்ட கட்டிடங்களை மட்டுமே அவர்களால் காண முடிகிறது.

அப்படியென்றால் தற்சமயம் அந்த கட்டிடங்கள், கருவிகள், உபகரணங்கள் எங்குள்ளன

11:30 PM, January 03, 2009
யாரோ ஒருவன் said...

சில வருடங்கள் கழித்து சனவரி 2, 2009 என்பது அனைத்துலகையும் புலிகள் ஏமாற்றிய தினம் என்று வரலாற்றில் எழுதப்பட்டிருக்கும்

இந்த இடத்தை நம்மால் தக்க வைக்க முடியாது என்று 6 மாதங்களுக்கு முன்னரே முடிவு செய்ய கூடிய அளவு வியூகங்களுடன் புலிகள் இருக்கின்றனர் என்பதை பாவம் இப்பொழுது தான் ராஜபக்சே உணர்ந்திருப்பார்.

வருங்காலத்தில் military manoeuvring குறித்த ஆராய்ச்சிகளில் கிளிநொச்சிக்கும் ரானுவம் புகுந்தது முக்கிய விடயமாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை

6 மாதங்களாக பிரபாகரனின் இசைக்கு தாங்கள் ஆடியுள்ளோம் என்பதை அறிந்து கொண்ட ராஜபக்சே, பொன்சேகா, ராம், நாராயணன் ஆகியோர் தற்சமயம் பயங்கர கடுப்பில் இருப்பார்கள் என்பதில் சந்தேகம் இல்லை

11:35 PM, January 03, 2009
யாரோ ஒருவன் said...

புலிகள் வீரர்கள் ஆனால் அறிவு போதாது என்று தான் நான் நினைத்து வந்தேன்

ஆனால் மிக கூறிய மதிநுட்பத்துடன் அவர்கள் வியூகங்களை வகுத்துள்ளனர் என்பது தற்சமயம் தெரிகிறது.

Hats off to LTTE for making every one else dance to their tunes for not just one day, but 6 months

11:38 PM, January 03, 2009
யாரோ ஒருவன் said...

ஆனையிரவை கைப்பற்றுவது மூலம் நாம் அவர்களின் (புலிகளின்) திட்டத்தின் படியே செயல்படுகிறோமோ, முல்லைத்தீவு சென்றால் பிரச்சனையோ என்ற பாரிய குழப்பத்தை சிங்களர்களின் மனத்தில் விதைத்து விட்டனர் புலிகள்

11:39 PM, January 03, 2009
யாரோ ஒருவன் said...

சராசரி தமிழனுக்கு கிளிநொச்சி விஷயம் வருத்தமளிக்கிறது

சராசரி தமிழின விரோதிக்கும் இது சந்தோஷத்தை அளிக்கிறது

ஆனால் சிங்கள படையினரின் மன உறுதிக்கும் இந்த விஷயம் மிகப்பெரிய ஆப்பை வைத்துள்ளது என்பது மட்டும் உண்மை

ஏதோ காரணத்திற்காக புலிகள் பொறுமை காக்கின்றனர்

11:44 PM, January 03, 2009
Anonymous said...

Hi Tankboy,

:))

I appreciate your optimism

12:02 AM, January 04, 2009
Anonymous said...

//

Osai Chella Said...

மற்றொரு சிறுவிடயம் யாரும் கவனிக்காதது.. போரியலில் மிகவும் அவசியமானது ராணுவ தகவல் கள் அல்லது ரகசியங்கள். கருணா கைவிட்டு சென்றபொழுதே கிளிநொச்சியின் முக்கியத்துவம் குறைக்கப்பட்டிருக்கும் தானே!//

போராளிகள் யாரும் கைது செய்யப்பட்டதாகத் தெரிவிக்கவில்லை,

போராளிகள் யாரும் இறந்ததாகத் தெரிவிக்கவில்லை,

போராளிகளிடம் இருந்து ஆயதங்கள் எதுவும் கைப்பற்றப் பட்டதாகத் தெரிவிக்கவில்லை,

போராளிகளின் முக்கிய ஆவணங்களோ அல்லது தகவல் தொடர்பு சாதனங்களோ கைப்பற்றப்பட்டதாகத் தெரிவிக்கவில்லை,

ஒரு நகரைக் கைப்பற்றிய ராணுவத்தினர் இதுவரை போராளிகளின் ஆயுதங்களையோ, ஆவணங்களையோ, தகவல் தொடர்பு சாதனங்களையோ கைப்பற்றவில்லை என்றால் அதன் அர்த்தம் என்ன?

புலிகள் அந்த நகரை காலி செய்து பல நாட்களாகிவிட்டது.

கிளிநொச்சியை நான்கு புறமிருந்தும் ரானுவம் சுற்றி வளைத்த நிலையில் எப்படி காலி செய்திருக்க முடியும்

1. மந்திரம் மூலம் கூடு விட்டு கூடு பாய்ந்திருப்பார்கள்

2. விமானம் மூலம் சென்றிருப்பார்கள்

3. 6 மாதங்களுக்க முன்னரே காலி (குறைந்த பட்சம் செப்டம்பர் 2008 முன்னர்) செய்திருக்கிறார்கள்

இவ்வளவு நாட்களாக (4 மாதங்களாக ரானுவம் ஒரு பலனற்ற இடத்தை கைப்பற்ற போராடி உள்ளது.

அதை விட சுவாரசியம்

பூநகரியிலிருந்து புலிகள் காலி செய்தது அனைவருக்கும் தெரிந்த வண்ணம் நடந்தது.

கிளிநொச்சியில் இருந்து காலி செய்தது பரம ரகசியமாக நடந்துள்ளது//

12:58 AM, January 05, 2009
SPIDEY said...

அங்கு என்ன நடக்கிறது என்று தெரியும் ஆனால் எப்படி நடக்கிறது என்று இப்போது தான் தெரிகிறது. INFORMATIVE பதிவுக்கு நன்றி

12:47 PM, January 05, 2009
Anonymous said...

sorry for copying and pasting ,but i thought it is an interesting article.

Why the conflicts in Gaza and Sri Lanka will continue
Damien Kingsbury
January 6, 2009
The bases of insurgents may be destroyed, but their grievances demand real solutions.

AS SRI Lankan Government soldiers occupied the Tamil Tigers' stronghold of Kilinochchi, Israeli soldiers began to enter Gaza. One case represents a separatist movement in perhaps the final throes of a failed struggle for independence; the other the administration of a territory about to be pushed from power.

Despite their differences, there are striking similarities between the Sri Lankan and Gaza conflicts. It is these similarities that explain why Hamas and the Tamil Tigers have both come to the brink of destruction, yet why both conflicts will continue.

In Sri Lanka, a two-year military campaign against the Tamil Tigers has succeeded in dislodging them from their northern "capital". This followed the recent loss of other key Tamil Tiger strongholds, pushing the Tigers back into the scrubland of the "Vanni".

Following its election in 2006, Hamas has had an on-and-off truce with Israel, characterised by an economic blockade that has brought the inhabitants of the Gaza Strip to the brink of starvation. Fighting recently escalated following missile attacks on Israel by Hamas and three weeks of air strikes against Gaza by Israel.

In both cases, there is little doubt that current military objectives will be reached. The Tamil Tigers will be driven from the occupation of territory they have held since 2002 and large swathes for a decade more. In Gaza, it appears that Israel is intent on destroying Hamas' administrative capacity. In both cases, these are military goals only and fail to address long-term political objectives.

In large part, the conflicts that may end the administrative capacity of the Tamil Tigers and Hamas derive from the implacable opposition of these organisations to the forces now set to destroy them. Following the 2002 ceasefire, the Tamil Tigers briefly discussed the possibility of a negotiated settlement but, due to inflexibility around prior conditions for talks, quickly lost the opportunity to pursue a negotiated settlement to its claims. Similarly, while it entered into mediated talks with Israel, Hamas undermined success by building tunnels under the Israeli border, leading to Israeli attacks against the tunnels and a breakdown in relations. In both cases, hardliners won over moderates.

But the hardliners had persuasive arguments. Sri Lanka's various governments have lacked sincerity in following through with their promises for even a limited settlement to Tamil political claims. Israeli governments have similarly failed to allow progress on negotiations, largely by strangling the Gaza economy.

In both cases, the Sri Lankan and Israeli governments are also hostage to their own hardliners, who view genuine compromise as a recipe for political loss.

While significant elements of Sri Lankan and Israeli societies want peace, both governments are electorally vulnerable to claims of giving in to "terrorism" — that both the Tamil Tigers and Hamas are widely declared to be "terrorist" organisations further hinders meaningful dialogue. Yet both can claim to represent their constituencies. Hamas has the clearest mandate, having won a majority in the 2006 Palestinian elections, predominantly, although not exclusively, in Gaza. The Tamil Tigers have refused to participate in elections, claiming that war conditions preclude a meaningful vote, but they enjoy widespread support in Sri Lanka's north and east.

In both cases, too, these organisations represent the wishes of a disenfranchised minority. Their political legitimacy (in the eyes of their own constituencies) will count for little, however, if the strategic reality is that they lose their administrative capacity.

Removed from quasi-state status, both organisations can be expected to return to the hit-and-run tactics, especially against "soft" civilian targets, that earned them the "terrorist" tag in the first place.

While suffering serious military setbacks, Hamas and the Tamil Tigers are both likely to continue as movements capable of inflicting real damage. Military responses against them will only further feed into their support base, providing them with recruits into the foreseeable future.

But from positions of power, both Israel and Sri Lanka can find lasting solutions to these conflicts, including holding out the hope of peace by addressing the fundamental concerns of the people with whom they are now at war.

Israel will have to accept a genuine two-state outcome for the Palestinians, and allow the two parts of such a state — Gaza and the West Bank — meaningful access to each other. Jerusalem, as the site of much Israeli-Palestinian contest, will need to become an open city, owned by no single power and administered by all.

In Sri Lanka, the Colombo Government will have to genuinely devolve a high degree of political authority to its Tamil minority, if not as a separate state then at least as a genuinely autonomous and unified region.

The ruling parties in both Sri Lanka and Israel will have to overcome their own nationalist chauvinism — the sub-text of which is that as "chosen" people they have territorial primacy — and understand that others' claims to territory are as necessary to survival as their own.

Without such recognition, peace in either place will be impossible.

Associate Professor Damien Kingsbury is associate head (research) of the School of International and Political Studies at Deakin University.

2:20 PM, January 05, 2009
Anonymous said...

"நான் புலிகளின் தலைவரை நன்கு அறிவேன். காலத்தை வீணாக கழிக்காமல் ஏதாவது முயற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருப்பார். 2009 ஜனவரி இறுதிக்குப் பின்புதான் வலிந்து தாக்குதல்களை ஆரம்பிப்பார்.
ஒரு சர்வதேச சூழல்நிலைக்காக புலிகள் காத்திருக்கின்றார்கள்.

நோர்வேயில் அனிதா பிரதாப்‍‍

3:31 PM, January 05, 2009
Anonymous said...

சசி அவர்களுக்கு ,
தங்கள் கட்டுரை நல்ல அலசல் .
ராணுவம் வலிந்த தாக்குதலை நடத்தி பல இடங்களை கைப்பற்றியது. புலிகள் தற்காப்பு யுத்தத்தை நடத்த பின்வாங்கினர். இனி புலிகள் வலிந்தத் தாக்குதலை நடத்த போகிறார்கள் ராணுவம் இனி இழப்புகளை சந்திக்கும் ! -pithaamagan

7:28 AM, January 12, 2009
Anonymous said...

சசி அவர்களுக்கு ,
தங்கள் கட்டுரை நல்ல அலசல் .
ராணுவம் வலிந்த தாக்குதலை நடத்தி பல இடங்களை கைப்பற்றியது. புலிகள் தற்காப்பு யுத்தத்தை நடத்த பின்வாங்கினர். இனி புலிகள் வலிந்தத் தாக்குதலை நடத்த போகிறார்கள் ராணுவம் இனி இழப்புகளை சந்திக்கும் ! -pithaamagan

7:29 AM, January 12, 2009
Anonymous said...

tamils for obama.
this group was formed by tamil americans.
they are collecting electronic signatures from world tamils to hand over a petition to president obama and state secretary hilary clinton.
the petition is to stop the genocide against eelam tamils.
please spare a minute and sign the petition.
go to this website and sign the petition.
www.TamilsforObama.com

4:58 PM, January 12, 2009
Anonymous said...

"நான் பிரபாகரனை நன்கறிவேன். வீணாக பொழுதை கழிக்காமல் எதாவது முயற்சியில் ஈடுபடுவார். ஜனவரி இறுதிக்கு பின்பே தனது தாக்குதலை துவக்குவார். ஒரு சர்வதேச சூழ்நிலைக்காக புலிகள் காத்திருக்கின்றனர்." சொன்னவர் தலைவரை சந்தித்த பெண் பத்திரிகையாளர் அனிதா பிரதாப். நார்வேயிலிருந்து.

2 பெரிய கப்பல்களில் ஆயுதங்கள் வந்தன என்று கொழும்பு ஊடகங்கள் தெரிவித்தன. கிளிநோச்சியயை பிடித்த போது, (புலிகள் தாக்குபிடிக்க முடியாமல் ஓடி விட்டார்களா என்பது உண்மையானால்) பெருமளவிலான ஆயுதங்கள் படையினரால் கைப்பற்றப் படவில்ல. புலிகளும் இதுவரை பெரிய அளவிலான ஆயுத பிரயோகம் செய்யயவில்லை. பெரும் அளவிலான புலிகளும் கைதோ/கொல்லவோ படவில்லை.

அப்படியானால் அந்த ஆயுதங்களும் புலிகளும் எங்கே? முல்லைத்தீவில் இருக்கிறார்கள். சரி அவர்கள் ஏன் பின்வாங்கி விட்டு அமைதி காக்கிறார்கள்.?இம்முறை ஒட்டு மொத்தமாக சிங்கள படைகளுக்கு சமாதி கட்டத்தான் புலிகள் பின் வாங்கி இருக்கிறார்கள்.

அடிக்கும் அடியில் தமிழீழம் மலர்ந்து விட வேண்டும். அல்லது இன்னும் சில ஆண்டுகளுக்கு சிங்கள வெறியன்களும், அவனிடம் பிஸ்கட் சாப்பிடும் கெழட்டு நாய்களும், காட்டிக் கொடுத்த கருணை இல்லா கயவங்களும் தினமும் தமிழன் காசை தின்றுவிட்டு மலம் கழிக்கும் "தினமலம்", இலங்கைக்கான தமிழ்நாடு political pimp சிறிலங்க ரத்னா பத்திரிக்கை காரங்களும் மூடிக்கொண்டு இருக்க வேண்டும்.

அதைத்தான் உலகத் தமிழினம் கண்ணீரோடு எதிர்பார்க்கிறது. எங்கே இருக்கிறீர்கள் தலைவரே?

ரகு

1:19 AM, January 13, 2009
Anonymous said...

//"புலிகளின் முட்டாள்தனத்தையும், மூர்க்கத்தனத்தையும் தந்திரோபாயம் என கொண்டாடுபவர்கள் தான் தமிழர்கள்" என ஒரு நண்பர் சில நாட்களுக்கு முன்பு கூறினார்//

மீண்டும் அதே ஆள் தான் எழுதுகிறேன். நான் இங்கு எழுதக் காரணம் புலி ஆதரவாளர்கள் ஆர்வமுடன் படிக்கும் தளம் என்பதால் புலிகளைப் பற்றிய என் மாற்றுக் கருத்தும் அவர்களை சேரவேண்டும் என்பதற்காகத்தான். அதற்காக உங்கள் தளத்தைப் பயன்படுத்துவதற்கு மன்னிக்கவும். இதை வெளியிடுவது உங்கள் விருப்பத்தைப் பொருத்தது.

நான் கருதும் அதே முட்டாள்தனமான, மூர்க்கத்தனமான சாகசத்தை இன்னொரு முறை நிகழ்த்தியிருக்கிறார்கள். அதைக் கண்டு புலி ஆதரவாளர்கள் புல்லரித்து எழுதிக்கொண்டிருக்கிறார்கள்.

தற்போதைய சூழ்நிலையில் முடிந்தால் போர்நிறுத்தத்திற்கு முயற்சி செய்து இன்னலுறும் மக்களுக்கு சற்றேனும் நிம்மதியைத் தரவேண்டும். போர்நிறுத்தம் வரும்வரை முடிந்தால் வடகிழக்கை ஆக்கிரமித்திருக்கும் இலங்கை இராணுவத்திற்கு இழப்பு ஏற்படுத்தவும், அவர்கள் பின்வாங்கச் செய்யவும், அவர்களின் மனத்திண்மையையும் குலைக்கவும் முயற்சிகளை தொடர்ந்து செய்துகொண்டிருக்கலாம். ஆனால் இரு சிறுவிமானங்களை அனுப்பி கொழும்பு நகரின் மீது சில குண்டுகளை வீசி சாதிக்க நினைத்தது என்ன? இதனால் வடக்கை ஆக்கிரமித்திருக்கும் இராணுவம் பின்வாங்குமா? இரண்டு விமானங்களையும் சுட்டு வீழ்த்தியதாக இலங்கை இராணுவம் சொல்கிறது. இராணுவத்தின் கை ஓங்கியிருக்கும் நிலையில், பன்னாட்டு இராணுவக்கருவிகளைக் கொண்டு இது நடந்திருக்க சாத்தியம் உண்டு. புலிகளின் தரப்பிலிருந்து இது தற்கொலைத் தாக்குதல் என்று அறிவித்திருக்கிறார்கள். எதுவாயிருப்பினும் இதை வைத்து என்ன சாதித்திருக்கிறார்கள்? இரண்டு விமானங்களையும், நன்கு பயிற்சி பெற்ற இரண்டு வீரர்களை இழந்ததைத் தவிர?

புலிகளின் இறுதி நோக்கமான தமிழீழ விடுதலையை ஆதரிக்கிறேன். அதற்கான ஆயுதப்போராட்டத்தையும் ஏற்றுக்கொள்கிறேன். ஆனால் அப்போராட்டத்தின் உத்திகளாக புலிகள் நடத்தும் தற்கொலைத் தாக்குதல்ளையும், அரசியல் படுகொலைகளையும் கடுமையாக எதிர்க்கிறேன். பிற புலி ஆதரவாளர்களாலும் இந்த உத்திகள் கடுமையான விமர்சனத்துக்குள்ளாக்கப்படவேண்டும். தற்கொலைத் தாக்குதல் என்பது அறவியல் நோக்கில் கிஞ்சித்தும் மனிதாபிமானமில்லாத மூர்க்கத்தனமான செயல். அரசியல் படுகொலைகள் என்பது அரசியல் நோக்கில் முட்டாள்தனமான செயல். இந்த விடுதலைப்போர் இத்தனை ஆண்டுகளாக முடிவுக்கு வரவியலாமல் இருப்பதற்கு இந்த இரண்டு உத்திகளும் முக்கியமான காரணங்கள் என்பது என் கணிப்பு. இவ்விரண்டு முறைகளால் கண்மூடித்தனமான புலி ஆதரவு அல்லது கண்மூடித்தனமான புலி எதிர்ப்பு என்று இரண்டு நிலைகள் தான் எடுக்கப்படுகின்றன. இதுவே இப்போராட்டம் தொடர்ந்து இழுபறியாக இருப்பதற்குக் காரணம்.

சிங்களப் பேரினவாத ஆதிக்கத்திலிருந்து விடுதலை பெறவேண்டுமாயின் இராணுவ இலக்குகளையும், பொருளாதார இலக்குகளையும் தான் தாக்கி அழிக்கவேண்டும். இராணுவ மனத்திண்மையை நிலை குலையவைப்பது, பொருளாதாரச் சுணக்கம் ஏற்படுத்தி சராசரி சிங்களர்களிடம் அரசின் மீது வெறுப்பை ஏற்படுத்துவது என்ற உத்திகள் ஈழவிடுதலையை முன்னெடுக்க முடியும். அரசியல் கொலைகளால் மக்கள் தங்கள் பிரச்சினைகளை மறந்துவிட்டு ஆளும் வர்க்கத்தினர் மீது அனுதாபம் கொண்டு அவர்களை தொடர்ந்து ஆதரித்துக்கொண்டிருப்பார்கள்.

சிங்களப் பேரினவாதம் தமிழர்களின் உயிர்களை துச்சமாக மதித்து அழிப்பதில் ஆச்சரியமில்லை. ஆனால் அந்த ஆதிக்கத்திடமிருந்து விடுதலை பெற்றுத் தர போராடும் இயக்கமும் தங்கள் அரசியலை எதிர்க்கும் தமிழர்களை துரோகிகள் என்று அழிப்பதும், தங்கள் பின்னால் வரத்தயாராக இருப்பவர்களை தற்கொலை குண்டுதாரிகளாக்கிக் கொல்வதையும் எந்தவிதத்திலும் நியாயப்படுத்த முடியாது, நியாயப்படுத்தக்கூடாது. முதலாவது வகைக் கொலைகளைவிட இரண்டாவது வகைக்கொலைகள் மூர்க்கத்தனமானவை. இதைத் தொடர்ந்து செயல்படுத்திக்கொண்டிருக்கும் புலித்தலைமை இன்னும் முதிர்ச்சியடையவில்லை என்பதையே காட்டுகிறது.

தன் தலைமையை ஏற்றுக்கொள்கிறார்கள், தன் பேச்சைக் கேட்கத் தயாராக இருக்கிறார்கள் என்பதற்காக சிலரைத் தேர்ந்தெடுத்து தற்கொலைச் செய்துக்கொள்ள கட்டளையிடுவது குற்றவாளிகளுக்கு மரணதண்டனை அளிக்கும் முறையைவிட பலமடங்கு கேவலமான, மனிதாபிமானமற்ற செயல். ஒரு தளபதி தன்னிடமுள்ள சிறந்த வீரர்களை தேர்ந்தெடுத்து போர்க்களத்துக்கு அனுப்பிப் போரிடச் செய்வது அறவியல் ரீதியாக ஏற்றுக்கொள்ளக்கூடியது. இராணுவரீதியாக சரியானது. அவ்வீரர்கள் போர்க்களத்தில் எதிரிகளை அழிக்கலாம். அல்லது எதிரிகளால் கொல்லப்படலாம். அவர்களை மாவீரர்கள் என்றும், அவர்களின் மரணங்களை வீரமரணங்கள் என்றும் கொண்டாடலாம். ஆனால் தன்னிடம் உள்ள சிறந்த வீரர்களுக்கு சாகக்கட்டளை இடுவது ஒரு படைத்தளபதிக்கு அழகல்ல. சிலர் தாங்களாக தற்கொலைக்காக முன்வந்தாலும் அதைத் தடுத்து, அவர்களை போர்வீர்ர்களாகத் தொடர்ந்து போராடச் செய்வது தான் தலைமைக்கு அழகு. அனுபவமுள்ள வீரர்கள் வாழ்ந்து, களமாடி தொடர்ந்து வெற்றிகளைக் குவிக்க முடியுமா அல்லது ஒரு சிறு வெற்றிக்காக தங்களை நிரந்தரமாக மாய்த்துக்கொள்ள வேண்டுமா?

இந்த விமானத் தற்கொலைத் தாக்குதலில் இறந்த இரு வீரர்களும் உயிருடன் இருந்தால் இப்போது ஈட்டிய சிறுவெற்றியைக் காட்டிலும் மேலும் சில வெற்றிகளை ஈட்டுவதற்கான வாய்ப்புகள் இருந்திருக்கும். தங்கள் படைவீரர்களை தாங்களே அழித்து, எதிரிகள் செய்யவேண்டியதை—புலிகளின் எண்ணிக்கையைத் குறைப்பதை-- தாங்களே செய்து எதிரியின் வேலை எளிதாக்குவதைத் தவிர இந்த தற்கொலைத் தாக்குதல் என்ற சாகசத்தால் எந்த பெரிய சாதனையையும் செய்துவிடவில்லை. ஒரு சிறந்த தலைவன் தன்னை நம்பி வருபவர்களின் வாழ்வுக்கு உத்தரவாதம் செய்யவேண்டும். அவர்களைப் பயன்படுத்தி பெரும் சாதனை படைக்கும் வழிமுறைகளை கடைபிடிக்கவேண்டும். சாவைக் கொடுத்து தன் அன்பிற்குரியவர்களை அழிக்கலாகாது.

ஆகவே, புலிகளே இந்த தற்கொலைத் தாக்குதல் என்ற சொந்த அழிவை உத்தரவாதம் செய்யும் உத்தியைக் கைவிடுங்கள். புலி ஆதரவாளர்களே இந்த உத்தியைக் கைவிட புலித் தலைமையின் மனத்தை மாற்றும் முயற்சியில் ஈடுபடுங்கள். தற்கொலைத் தாக்குதல் முறையை கொண்டாடி ஊக்குவிக்காதீர்கள்.

1:54 PM, February 22, 2009