இந்திய பாராளுமன்றத்திற்கான தேர்தலுக்கு இன்னும் 100 நாட்களே உள்ளன. இந்த தேர்தல் தமிழர்களுக்கு ஒரு முக்கியமான தேர்தலாக அமையப் போகிறது. தமிழர்களுக்கு இது சோதனையான காலம். ஈழத்தில் இன அழிப்பு (Genocide) நடந்து கொண்டிருப்பது ஒரு பக்கம் என்றால் அதனை இந்திய/தமிழக அதிகாரமையங்கள் நேரடியாகவும்/மறைமுகமாகவும் ஆதரித்து கொண்டிருக்கும் சூழல் மற்றொரு புறம் உள்ளது.
தமிழகம் எப்பொழுதுமே திமுக தலைவர் கருணாநிதி அவர்களை தான் தமிழினம் சார்ந்த எல்லாப் பிரச்சனைக்கும் எதிர்நோக்கி இருந்து வந்துள்ளது. கருணாநிதி எல்லாப் பிரச்சனைகளுக்கும் தீர்வு கொடுத்து விடவில்லை. என்றாலும் நிராகரிப்பும் செய்ததில்லை. அதனாலேயே அவர் தமிழினத்தலைவர் என்று கொண்டாடப்பட்டார். ஆனால் தற்பொழுது தன்னுடைய பதவியை காப்பாற்றும் பொருட்டு தமிழின அழிப்பிற்கு (Genocide) துணையாக நிற்கிறார்.
மைய காங்கிரஸ் அரசு ராஜீவ் காந்தியின் மரணத்திற்கு பழி தீர்க்க ஒட்டுமொத்த தமிழினத்தையே ஈழத்தில் அழித்துக் கொண்டிருக்கிறது. சோனியா காந்தியின் கடைக்கண் பார்வைக்காக தமிழின அழிப்பிற்கு காங்கிரஸ் கட்சி துணை போகிறது. அந்த காங்கிரஸ் கட்சியின் தயவில் ஆட்சியை செய்து கொண்டிருக்கும் கருணாநிதி வெளிப்படையாகவே தமிழின அழிப்பிற்கு துணை செய்கிறார். இனி தமிழினத்தலைவராகவோ, ஏன் தொண்டனாகவோ இருக்க கூட கருணாநிதிக்கு எந்த தகுதியும் இல்லை.
திமுக ஒரு புறம் என்றால் அதிமுகவை பற்றி கேட்கவே வேண்டாம். ஜெயலலிதா தலைமையிலான அதிமுக ஈழப்பிரச்சனையில் எப்பொழுதுமே சிறீலங்கா அரசின் கொள்கையையே பின்பற்றி வந்திருக்கிறது. இன அழிப்பு ஈழத்தில் நடந்து கொண்டிருக்கும் இந்த தருணத்தில் கூட ஈழத்தமிழர்கள் என எவரும் இல்லை என ஜெயலலிதா ஆணவத்துடன் கூறியிருக்கிறார்.
ஜெயலலிதாவின் ஆணவம், கருணாநிதியின் அலட்சியம் எங்கிருந்து பிறக்கிறது ?
ஈழத்தமிழர்களின் பிரச்சனை தேர்தல் பிரச்சனையாக மாறாது என்ற நம்பிக்கையும், அதிமுக/திமுக தவிர வேறு மாற்று கட்சிகள் இல்லாத நிலையும் தான் இந்த இரண்டு கட்சிகளையும் மக்கள் விரோதப் போக்கிற்கு தூண்டியுள்ளது.
மூன்றாவது அணி அமைக்கப் போவதாக கூறிய விஜயகாந்த் கொள்கை ரீதியில் திமுக/அதிமுக ஆகிய இரண்டு அணிகளுக்கும் தனக்கும் எவ்வித வித்யாசமும் இல்லை என்பதை தொடர்ந்து நிருபித்து வந்துள்ளார். கடந்த பல மாதங்களாக ஈழப்பிரச்சனை குறித்து எதுவுமே பேசாத விஜயகாந்த் தற்பொழுது மக்கள் மத்தியில் ஈழப்பிரச்சனை குறித்து எழுந்திருக்கும் விழிப்புணர்வை கண்டு அஞ்சி ஈழப்பிரச்சனைக்காக போராட்டங்களை முன்வைக்கிறார். விஜயகாந்த், சரத்குமார் போன்ற நடிகர்கள் கட்சி ஆரம்பித்த பொழுது தங்களை இந்திய தேசியவாதிகளாகவும், ஹிந்தி மொழி ஆதரவாளர்களாகவும் காட்டி தமிழ் இன எதிர்ப்பாளர்களின் ஆதரவுக்காக காத்து நின்றனர்.
இப்படி திரும்பிய பக்கம் எல்லாம் தமிழின எதிரிகளால் தமிழக அரசியல் நிறைந்துள்ளது. இத்தகைய சூழ்நிலையில் இந்த அரசியல் கட்சிகளிடம் இருந்து நமக்கு மாற்றம் வேண்டும்.
தமிழகம் தற்பொழுது 1965ம் ஆண்டு இருந்த காலக்கட்டத்திற்கு பின்நோக்கி நகர்ந்து உள்ளது. மாணவர்கள் எழுச்சி கொண்டு தங்களுடைய அரசியல் தலைமையை மாற்ற துடித்துக் கொண்டுள்ளனர். மக்கள் மத்தியில் இந்திய மைய அரசாங்கம் மீதான வெறுப்பும், கோபமும் அதிகரித்து உள்ளது. மக்கள் மத்தியில் ஒரு மௌனப் புரட்சி உருவாகிக் கொண்டிருக்கிறது.
ஆனால் அந்த மௌனப் புரட்சியை அரசியல் சக்தியாக மாற்றக் கூடிய தலைமை நமக்கு தற்பொழுது இல்லாமை தான் மிகப் பெரிய அவலத்தை தோற்றுவித்துள்ளது. ஆனால் வரலாற்றை புரட்டி பார்க்கும் பொழுது சோதனையான காலக்கட்டங்கள் தான் புதிய தலைமையையும், புதிய சிந்தனைகளையும், மாற்றங்களையும் கொடுத்திருக்கிறது. தமிழனுக்கு தற்பொழுது இருக்கின்ற சோதனையான காலக்கட்டத்தில் புதிய தலைமையை நாம் அடையாளம் காண வேண்டும். அதிமுக, திமுக, கொள்கைப் பிடிப்பு இல்லாத நடிகர்களை புறந்தள்ளி நமக்கென ஒரு புதிய தலைமையை நாம் தேர்ந்தெடுக்க வேண்டும். அதற்கான பங்களிப்பை நாம் ஒவ்வொருவரும் ஒவ்வொரு தளங்களிலும் முன்னெடுக்க வேண்டும்.
இணையம் இன்று பல இளைஞர்களை ஒன்றிணைக்கும் சக்தியாக மாற்றியுள்ளது. அமெரிக்க தேர்தலில் கூட ஒபாமாவின் மாபெரும் வளர்ச்சிக்கு இணையம் துணை புரிந்திருக்கிறது. சாமானியனின் பேச்சுரிமையை இன்றைக்கு இணையம் தான் காப்பாற்றிக் கொண்டிருக்கிறது. அந்த நம்பிக்கையின் அடிப்படையில் தமிழகத்தில் மாற்றத்தை வேண்டிய ஒரு சிறிய முயற்சியாக ஒரு வலைப்பதிவு ஒன்றினை மாற்றத்திற்காக துவங்கியிருக்கிறோம். நண்பர்கள் குழுவாக தற்பொழுது இந்த முயற்சி துவங்கப்பட்டுள்ளது.
அதே நேரத்தில் சில ஆயிரம் வாசகர்கள் மட்டுமே கொண்ட வலைப்பதிவு மற்றும் இணைய வெளி மூலமாக இந்த முயற்சியை சாத்தியப்படுத்தி விட முடியாது. இந்த முயற்சி இணையத்தில் துவங்கி பல்வேறு தளங்களிலும் முன்னெடுக்கப் பட வேண்டும். இணையத்தளம், வலைப்பதிவு என்பதை தொடக்கமாக மட்டும் கொண்டு வேறு பல தளங்களிலும் சில முயற்சிகளை மேற்கொண்டிருக்கிறோம்.
அனைவரும் நம்மால் முடிந்த சிறிய முயற்சிகளை மேற்கொண்டால் தான் அது பெருகி மாற்றங்களை உண்டாக்கும். எனவே இந்த ”மாற்றம்” குழுவில் இணைந்து கொள்ள உங்கள் அனைவரையும் அழைக்கிறோம். “மாற்றம்” குழுவிற்கு உங்கள் கருத்துக்களையும், ஆலோசனைகளையும் வழங்க வேண்டுகிறோம்.
எங்கள் இணையத்தள முகவரி : http://www.changefortn.org
இந்த மாற்றம் குழுவில் இணைந்து கொள்ள வலைப்பதிவு நண்பர்களை அழைக்கிறோம்.
மாற்றத்திற்காக கட்டுரைகளை/கருத்துக்களை அனுப்ப விரும்புவோர் changefortn@gmail.com என்ற முகவரிக்கு கட்டுரைகளையும், கருத்துக்களையும் அனுப்பலாம்
புதியதோர் தமிழகத்தை அமைக்க வாருங்கள்...
Sunday, February 22, 2009
மாற்றம் : தமிழக அரசியல் தலைமையை மாற்றுவோம்
By தமிழ் சசி | Tamil SASI | நேரம் 2/22/2009 08:12:00 PM
குறிச்சொற்கள் CHANGE, தமிழகத்திற்கு மாற்றம், மாற்றம்
Subscribe to:
Post Comments (Atom)
48 மறுமொழிகள்:
அமெரிக்கத் தேர்தல்-புகழ் "மாற்றம்" என்ற சொல் உங்களையும் கவர்ந்துவிட்டது போலும். நன்று.
9:16 PM, February 22, 2009ஆனால் ஈழத் தமிழர்களின் உரிமைப் போராட்டத் தலைமையில் மாற்றம் வேண்டாமா ?
நடுநிலை ?
9:16 PM, February 22, 2009இந்த கட்டுரை பாமக தலைமைக்கு பொருந்ததா ?
கட்டுரையில் பாமக பற்றி எதுவும் குறிப்பிடாதது, ஏமாற்றத்தை கொடுக்கிறது.
நான் இணைகின்றேன்!
9:47 PM, February 22, 2009அண்ணா மாற்றம் ஒன்றே மாறாதது!
9:48 PM, February 22, 2009ஈழத்தமிழனாக என்ன செய்ய முடியுமோ கட்டாயம் செய்வோம்.
தமிழர்களாக ஒருங்கிணைவோம் புது சகாப்பதம் படைப்போம்
// நடுநிலை ? //
11:37 PM, February 22, 2009அப்படி ஒன்று இருக்கிறதா :))
நடுநிலை என்பது வேடம்...
ஈழத்தமிழர் பிரச்சனையில் பாமகவின் செயல்பாடுகள் குறித்த என்னுடைய விமர்சனங்களை ஏற்கனவே முன்வைத்துள்ளேன். என்றாலும் தற்போதைய சூழ்நிலையில் இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தை தான் மூன்றாவது மாற்று அணியாக மாற்ற வேண்டிய நிலை உள்ளது என்பது என்னுடைய நிலைப்பாடு. அதற்கான முயற்சிகளை மேற்கொள்வோம்.
உங்களுக்கு வேறு வகையில் மாற்றத்தை ஏற்படுத்தக் கூடிய கருத்துக்கள் இருந்தால் நீங்களும் “மாற்றம்" குழுவில் இணைந்து உங்கள் கருத்துக்களை முன்வைக்கலாம்.
பலரின் கருத்துக்களை மாற்றம் நோக்கி முன்வைக்க வேண்டும் என்பது தான் எங்களது குழுவின் நோக்கம்
நன்றி...
http://voteforeelam.blogspot.com
11:48 PM, February 22, 2009Change - A great independent factor for change is media, especially today. But looks like the medias in Tamilnadu are not interested in the Srilankan issue. The first change needs to come there.
12:05 AM, February 23, 2009If they keep putting well read and articulate people like Seeman in jail, who is there to speak against such issues? Another change needed is to educate and bring about good speakers. At least, record a few good historical speeches in Tamil and Eelam cause, and spread it among young Tamils.
- kajan
நானும் இணைகிறேன்!
12:08 AM, February 23, 2009திருமாவும், மருத்துவரும், வைகோவும் தாங்கள் இருக்கும் கூட்டணியிலிருந்து வெளியேறி, இணைந்து தேர்தலை சந்தித்தால் வெற்றி பெறமுடியும் என்ற நம்பிக்கையை அவர்களிடத்தில் ஏற்படவைக்கவேண்டியது நம் கடமை..
திருமாவும், மருத்துவரும், வைகோவும் தாங்கள் இருக்கும் கூட்டணியிலிருந்து வெளியேறி, இணைந்து தேர்தலை சந்தித்தால் வெற்றி பெறமுடியும் என்ற நம்பிக்கையை அவர்களிடத்தில் ஏற்படவைக்கவேண்டியது நம் கடமை
12:23 AM, February 23, 2009*****
ஜெகதீசன்,
தற்போதைய மக்களின் மாற்றத்தை அவர்களும் உணர்ந்திருப்பார்கள். திருமாவிற்கு இத்தகைய முயற்சியில் முழுமையான ஈடுபாடு இருந்தாலும் வைகோவும், ராமதாசும் இன்னும் தங்கள் கூட்டணியில் இருந்து விலகாமல் உள்ளது தான் தற்பொழுது ஒரு “மாற்று” கூட்டணி உறுதியாக அமைக்க முடியாமைக்கு காரணம்
படிக்க வேண்டிய பதிவு - மாற்றம்நம்பியின் - ஆம் தலைவர்களே! தமிழகத்தின் தலைவிதியை உங்களால் மாற்ற முடியும்
மாற்று கூட்டணி நல்லக்கண்ணு அவர்களின் தலைமையிலோ, பழ.நெடுமாறன் அவர்களின் தலைமையிலோ அமைக்கப்பட்டால் சாதி அடையாளங்களை கடந்து தமிழ் மக்களை ஒன்று திரட்ட முடியும்
உங்கள் மின்னஞ்சல் முகவரியை changefortn@gmail.com அனுப்பி வையுங்கள்...
நன்றி...
//திருமாவும், மருத்துவரும், வைகோவும் தாங்கள் இருக்கும் கூட்டணியிலிருந்து வெளியேறி, இணைந்து தேர்தலை சந்தித்தால் வெற்றி பெறமுடியும் என்ற நம்பிக்கையை அவர்களிடத்தில் ஏற்படவைக்கவேண்டியது நம் கடமை..//
12:24 AM, February 23, 2009அருமையான கருத்து.இவர்கள் இதை செய்தால் நிச்சயமாக இவர்களுக்கு வாக்களிப்பேன்.
உண்மை மற்றும் தேவையானதொரு பதிவு.
1:39 AM, February 23, 2009இதே கருத்தினைக் கொண்ட என் பதிவு.
http://baluindo.blogspot.com/2009/02/blog-post_18.html
குழுமத்தில் இணைகிறேன். நன்றி.
மதிபாலா,
2:04 AM, February 23, 2009நன்றி...
இன்றைய வரையிலுமான சூழ்நிலையில் ஓட்டுக்களும் சீட்டுக்களும் பிரியும் சாத்தியங்கள் மட்டுமே தென்படுகிறது.இந்த சீட்டு பிரிகின்ற நிலையில் தமிழகம் சார்ந்த மத்திய அரசு அமைவதில் கூட ஏமாற்றம் மட்டுமே தோன்றுகிறது.இதனால் ஈழம் பின்னுக்கு தள்ளப்படும் சூழலும் உருவாகும்.மக்கள் புரட்சியை முன்னெடுத்து செல்லும் முழு அங்கீகார தலைமை அமையாதது கவலைக்குரியது.
2:18 AM, February 23, 2009This is a good initiative and I do not disagree with you that TN needs a "CHANGE" and I support your association.
2:19 AM, February 23, 2009Here are my concern
1) Only with the help of Internet how would we achieve this?. As you said only very less number of people have access to internet.
The easily public accessible medias like TV, Newspaper are not in support of Tamil Eeelamm or not writing anything about that.
Many of them acts as mouthpiece of Srilankan govt!!. eg., (Hindu, Dinamalar).
If you look at history that during 1950s and 60s Cinema and Drama was used to spread DMK's idealogy and no media was support of them during that time. We need strong media which would carry our messages to common public.
2) We need a realiable leaders to lead the followers. The leaders are not only reliable but would able to achieve the required mission. Other than Kalaingar, no one has that calibre to do that mission. It doesnt mean that others doesnt have the capability. VaiKo is one of the reliable leader but he is stays with JJ. How would we rely upon other leaders which you mentioned in your article other than Kalingar and Vaiko. Can CPI and CPM leaders take any decision without their high command ?. Can PMK be relied upon in this issue if there is no benefit to them?. Forget about Jayalalitha that she never supported Eelam and there is no point in talking about her.
3) ONE possible solution would be that If VaiKo and Kalaingar could meet then there could be a chances that some possible solution could come out. Just look at history that during 2004 election kalingar met Vaiko in jail and thereafter drastic changes happnened in TN. Would this happen?.
If yes, How would make it happen?.
Instead of re-inventing the wheel just use the existing wheel and make benefit of these.
நல்ல முயற்சி.
3:38 AM, February 23, 2009நான் இணைந்துகொள்ளலாமா ?
இந்த தளத்தின் பதிவுகள் தமிழ்மணத்தில் வருமா ?
ஏன் இந்த தளத்தின் முகப்பு தி.மு.க வண்ணத்தில் இருக்கிறது ?
( எப்படி அரசியலை புகுத்தினோம் பார்த்தீங்க இல்ல ? )
பல தமிழர்களின் மனத்திலுள்ள கருத்தை பதிவாகப் போட்டுள்ளீர்கள்.நன்றி
7:12 AM, February 23, 2009ஈழத்தமிழரின் இன்றைய சோதனையான காலகட்டத்தில் அவர்களுக்கு உதவுவதற்கு மட்டுமில்லாமல் எதிர்காலத்தில் பல விடயங்களில் உலகத்தமிழர்களுக்கு உதவுவதற்கும் தமிழ் நாட்டு மக்களின் பொருளாதார சமூக அரசியல் மேம்ம்பாட்டுக்கு உதவுவதற்கும் கொள்கைப் பிடிப்புள்ள நேர்மையான தமிழர் நலனில் அக்கறை உள்ள சுயநலமில்லாத ஒரு தலைமை தமிழ் நாட்டில் உருவாவதற்கு காலம் வந்துவிட்டது.
தமிழர்களுக்கு என்று சொந்த நாடு என்று ஒன்று இல்லாத படியால் ,தமிழ் நாடு என்ற மாநிலம் ஒன்றுதான் ஓரளவேனும் அரசியல் அதிகாரம் கொண்ட ஒரு அங்கமாக இருப்பதால் உலகத்தமிழர்களுக்கு இன்னல் வரும்போது தட்டிக் கேட்க வேண்டிய தார்மீகக் கடமை தமிழ் நாட்டு மக்கள் மீதும் தமிழ் நாட்டு அரசியல்வாதிகள் மீதும் இருப்பதாக உலகத்தமிழர்கள் கருதுகிறார்கள்.
அத்துடன் எண்ணிக்கையிலும் அவர்கள்தான் அதிகமாக உள்ளனர்.
ஈழத்தமிழர்கள் கொள்கை உறுதி உள்ளவர்களாக இருக்கலாம் ,துணிவு உள்ளவர்களாக இருக்கலாம் ,தமிழ் உணர்வு உள்ளவர்களாக இருக்கலாம் ,ஆனால் எண்ணிக்கையில் அவர்கள் முப்பந்தைந்து லட்சம் கொண்ட ஒரு சிறிய தேசிய இனம்தான் .அதிலும் பத்து லட்சம் பேர் நாட்டை விட்டு வெளியேறி விட்டார்கள் ஒரு லட்சம் பேருக்கு மேல் சிங்கள் அரசால் கொல்லப் பட்டுவிட்டார்கள்.இன்னும் ஒரு லட்சம் பேரை வரும் ஒரு மாதத்தில் கொன்று குவிக்க ராஜபக்ச திட்டம் போட்டுள்ளார்.
இந்த முக்கியமான வரலாற்றுக் காலகட்டத்தில் தமிழக அரசியல்வாதிகளின் பங்கு மிக முக்கியமானது.
ஆனால் துரதிஷ்டவசமாக எங்களுக்கு நம்பிக்கை தரும்மாதிரியான தலைவர்கள் இல்லாமல் தமிழ்நாட்டு மக்களின் ஈழஆதரவு உணர்வு தணிந்து விடுமோ என்று ஒரு பயம் உண்டாகிறது .
திமுக தலைவர் கருணாநிதி தனது வயோதிப காலத்தில் ஈழத்தமிழர்களுக்கு ஆக்கபூர்வமாகச் செய்யக் கூடியவற்றைச் செய்யாமல் கண்ணாமூச்சி காட்டுகிறார்.
அதிமுக தலைவர் ஜெயலலிதா தமிழர் மேல் அக்கறையே இல்லாதவர்,தமிழர்கள் ஈழத்தில் இருந்தாலும் சரி செவ்வாய் கிரகத்தில் இருந்தாலும் சரி அவரது நிலைப்பாடு மாறது.தமிழ் நாட்டுத் தமிழர்களையும் தனது அதிகார ஆசைக்காக சிவனே என்று தன் பக்கத்தில் வைத்துக்கொண்டுள்ளார்,மற்றும்படி அவருக்கு தமிழ் நாட்டு மக்களிடமும் பெரிதாக அக்கறை கிடையாது.
மதிமுக தலைவர் வைக்கோ நல்ல பேச்சு வன்மை உள்ளவர் அறிவுத்திறன் உள்ளவர் ,ஆனால் ஒரு சில தொகுதிகளுக்காக கொள்கைகளுக்கு முரண்பட்ட ஜெயலலிதாவுடன் கூட்டு வைத்து தனது செல்வாக்கைக் குறைத்துக் கொண்டுவிட்டார். நேற்று வந்த விஜயகாந்திற்கு இருக்கும் துணிவு இவருக்கு இருக்கவில்லை
மூன்றாவது சக்தி என்று சொல்லப் பட்ட விஜயகாந்தின் உண்மை சொரூபம் இப்போது வெளியே தெரிய ஆரம்பித்துவிட்டது.சிறந்த செயல் திட்டங்களோ கொள்கை நெறிகளோ இவரிடம் இல்லை.,ஆட்சியை கைப்பற்றி முமுதலமைச்சராக
வருவதுதான் அவரது கொள்கை
காங்கிரஸ் காரர்கள் பற்றிப் பேசுவது நேரத்தை வீணாக்குவது.சொல்வதற்கு ஒன்றுமில்லை.
பாமக தலைவர் சில நல்ல கொள்கைகள் வைத்திருக்கிறார்தான்,ஆனால் இவருடைய சந்தர்ப்ப வாதமும் சாதி அரசியலும் நல்ல எடுத்துக் காட்டுகள் அல்ல
திருமாவளவன் ,திறமை இருந்தும் உணர்வு இருந்தும் சாதி அரசியல் காரணமாக பெரிய செல்வாக்கு அடைய முடியாத நிலையில் உள்ளார்
நெடுமாறன் ,நல்லக்கண்ணு போன்றோர் நேர்மை மிக்க தலைவர்கள் என்றாலும் அரசியல் செல்வாக்கு ,அரசியல் அதிகாரம் இல்லாதவர்கள்
இந்த நிலையில் ஒரு புதிய தலைமையை தமிழ் நாட்டில் உருவாக்குவது காலத்தின் தேவை.
வைகோவும் மருத்துவரும் தங்கள் மத்திய அரசின் அரசியலைக்காக ஒதுங்கி நிற்கின்றனர்
7:33 AM, February 23, 2009சசி,
8:37 AM, February 23, 2009ஆக்கபூர்வமான முயற்சி...வாழ்த்துக்கள்.. நானும் இதில் இணைகின்றேன்..
//ஆனால் ஈழத் தமிழர்களின் உரிமைப் போராட்டத் தலைமையில் மாற்றம் வேண்டாமா ?//
"அக்கறை"யான கவலை !!!! ஆனால் அதை போராடும்/போராடிய ஈழத்தமிழர்கள் கவனித்துக் கொள்வார்கள் (முடிவு செய்வார்கள்).. இங்கு மாற்றம் வேண்டும் என்பது தமிழக தலைமையைப் பற்றி... அதனை, தமிழக (தமிழ் நாட்டு) மக்களிடம் முன்வைப்போம்... அதற்கான மாற்றத்திற்கு முயற்சிப்போம்....
அதுவரை, புலிகள் யாழ்ப்பாணத்தை விட்டு வெளியேறி முழுவதுமாய் 14 ஆண்டுகள் ஆயினும் இன்னமும் யாழ்ப்பாணத்தில் முஸ்லீம்கள் குடியேற்ப்படவில்லை, ஆனால் அதற்கும் புலிகள் தான் காரணம் என்னும் அற்புதமான மத அடிப்படைவாத புழுகள் பரப்பும், அடிப்படைவாத தொழிலை மட்டும் சிரமேற்கொண்டு செய்யலாமே???
இல்லை, யாழ்ப்பாணத்து கதைகள் உங்களுக்கும் மற்றவர்களுக்கும் அலுத்துவிட்டால், புத்தம் புதிய அம்பாறை சம்பவத்தை ஆரயலாம்..
http://www.tamilwin.com/view.php?2aIWnTe0dRj0g0ecQG7B3b4P9EE4d2g2h2cc2DpY3d426QV3b02ZLu3e
சசி
9:43 AM, February 23, 2009நல்ல முயற்சிக்கான தொடக்கம். வாழ்த்துக்கள்.
நல்லதொரு நோக்கம்... இப்படி ஒரு நல்ல மாற்றம் தமிழகத்துக்கு வருவேண்டியது அவசியம்.. நல்லவர்கள் அடையாளம் காணப்பட்டு, தமிழகத்திற்கு அவர்கள் சேவை கிடைத்திட செய்திடல் வேண்டும்.. சில வருடங்களாகவே நம் மக்களுக்கு இந்த எண்ண ஓட்டம் உள்ளது, நல்ல தலைவர்களுக்கு தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுதுமே வற்ட்சிதான்.. அதே வேளையில் இந்த மாற்றம் என்பது ஈழப்பிரச்சனைக்காக மட்டுமேவா அல்லது ஒட்டுமொத்த தமிழக வளர்ச்சி + ஈழம் பிரச்சனைக்கும் சேர்த்தா என்பதை யோசிக்கவேண்டும் சசி. தமிழகத்திற்கான மற்றம் + தமிழினத்திற்கான மாற்றம் என்று சம அளவில் உங்கள் கட்டுரை இருந்திருந்தால் இதோடு நிறுத்தியிருக்கலாம்..
9:52 AM, February 23, 2009தமிழகத்திற்கு மாற்றம் என்று ஒரு இடத்தினை தவிர்த்து மற்ற அனைத்து இடத்திலும் ஈழம் பற்றியே கருத்து இருப்பதால் கீழே இருப்பதையும் எழுதவேண்டியதாகிறது..
ஈழத்தை ஆதரித்தே ஆகவேண்டும், நம் இனமான ஈழத்தமிழன் காப்பாற்றிட குரல் கொடுத்திட வேண்டும் என்றாலும் தமிழக தேர்தல் களம் /தமிழக அரசு என்று வரும் போது, ஈழத்தை வைத்து மட்டுமே குரல் கொடுத்திடல் என்பது சாத்தியமா என்பதை பார்த்திட வேண்டும். தமிழக ஆட்சி / அரசமைப்பு என்று வரும் போது ஈழத்தையும் தாண்டி பல விஷயங்களை யோசித்திட வேண்டியிருப்பது தானே எதார்த்தம்?
ஈழத்திற்கு நம் ஆதரவு, குரல் என்றாலும், உண்மையில் பார்த்தால் இந்தியாவிற்கென்று , தமிழகத்திற்கென்று தனி அரசியலமைப்பு உள்ளது. தமிழக தமிழர்கள் நலன், தமிழகத்திற்கான முன்னேற்றங்கள், தமிழகத்திற்கான திட்டங்கள் என்பதும் தேர்தல் நேரத்தில் எடுத்துக்கொள்ளப்படவேண்டும் என்பது நிதர்சனம், அது தானே முறை?
குறிப்பாக , தமிழகத்தில் இப்போது இருக்கும் பெரிய கட்சிகள் தி மு க , அதிமு க,.. ஈழம் பற்றிய பிரச்சனை எரிந்துக்கொண்டிருக்கும் இந்த வேளையில் எடுக்கப்பட்ட சர்வேக்கள் முடிவு என்ன காட்டுகிறது.. முதலில் இலங்கை பிரச்சனை குறித்து சமீபத்தில் வந்த சர்வே என்ன என்று பார்ப்போம்.
ஈழத்துக்காண ஆதரவும் , ஈழத்து பிரச்சனைக்கு நாம் குரல் கொடுத்திட வேண்டும் என்றும் சுமார் 70% பேரு கருத்து சொல்லியிருக்கும் நிலையை பார்த்தோம் .. ஜெயலலிதாவின் நிலை தவறு என்று சுமார் 60% கருத்து தெரிவித்தனர். முதல்வர் கருணாநிதி இன்னும் வேகமாக இந்த பிரச்சனையில் செயல்பட வேண்டும் என்று 55 % பேர் கருத்து தெரிவித்தனர்..
இந்த நிலையில், அடுத்து தேர்தலை மைய்யமாக எடுக்கப்பட்ட சர்வேயில், தி மு க 30% ஆதரவும், அதிமுக விற்கு 28% ஆதரவும் என்று வந்துள்ளது.. இலங்கை பிரச்சனையில் அனுகுமுறை என்ற ஒற்றை கருத்துடன் மக்கள் இந்த கருத்துகணிப்பில் வாக்களித்திருந்தால், தி மு க , அதிமுகவிற்கு வழக்கமாக கிடைக்கும் 24 - - 35 வரையிலான அதரவு கிடைத்திருக்குமா என்பதையும் பார்க்கவேண்டும்.
ஆக, தேர்தல் என்று வரும்போது, மக்கள் மாநிலத்துக்கு என்ன செய்வார்கள், இவர்களின் திட்டங்களால் மாநிலம் எப்படி வளர்ச்சி பெறும் போன்ற உள்நாட்டு அரசியலை முன்வைத்தே யோசிப்பார்கள். இலங்கை பிரச்சனை ஒரு பாதிப்பு தருமே தவிர்த்து அதுவே காரணியாக அமையாது..
இன்றளவும் கிராமங்களில் மக்களுக்கு இலைங்கை பிரச்சனையை காட்டிலும், தினக்கூலி, அன்றாட வாழ்கை என்பது தான் முதன்மை..
ஏன் நம்மையே எடுத்துக்கொள்ளுங்கள்.. ஒரு உதாரணம்
ஒரு கட்சி சொல்கிறது - இலைங்கை பிரச்சனைக்கு எல்லாம் செய்வேன், என் பதவி போனாலும் பரவாயில்லை என்று செயல்படுவேன்.. இந்திய அரசை ஆக்ரோஷமாக எதிர்ப்பேன், இலைங்கைக்கு கடும் எச்சரிக்கை தருவேன்.. ஆனால் வேலைவாய்ப்பின்மை , தமிழக வளர்ச்சி போன்ற விஷயங்களில் சற்று தொய்வு ஏற்படும் என்று சொல்கிறது..
மற்றொரு கட்சி சொல்கிறது - இலங்கை பிரச்சனைக்கு முடிந்தளவு எல்லைக்குட்பட்டு செய்வோம், தார்மீக ஆதரவு தருவோம்.. ஆனால் தமிழக வளர்ச்சிக்கு இந்த இந்த திட்டங்கள் தீட்டுவோம்.. வேலை வாய்ப்பு பெருக்குவோம், விலைவாசி குறைய எல்லாவித நடவடிக்கை எடுப்போம் .
இப்போது யாருக்கு வாக்களிப்போம்?? நம் மக்கள் யாருக்கு வாக்களிப்பார்கள் ?
வெளிநாட்டில் இருந்துக்கொண்டு இருப்பவர்களுக்கு வேண்டுமானால் , தமிழகத்தில் என்ன நடக்கவேண்டும் , எப்படி நிர்வாகம் வேண்டும் ( அட்லீஸ்ட் , தமிழகம் திரும்பி வரும்வரை) என்பது அவ்வளவு முக்கியத்துவம் இல்லாது போகலாம் , ஆனால் இங்கேயே வாழ்பவர்களுக்கு??
யோசிக்கவேண்டும் அல்லவா?
Anandha Loganathan,
12:08 PM, February 23, 2009You have made some important points but new situation demands new solution. It is not a question of reinventing the wheel. It is rather a question of changing the wheels of the wagon. It has become abundantly clear that we cannot continue the journey with the rusted wheel that is Karunanidhi. This piece of junk is bought out by the scrap metal business that is Congress. The new wheel cast Karunanidhi's mould, M.K. Stalin, can't even start rolling.
If Vaiko and Ramadoss don't mend their ways they should be dumped as well. We only hope the realize their responsibility and accept the challenge.
Ok. Karunanidhi is not dependable.
1:11 PM, February 23, 2009Who will head the third front? Ramadoss? If Mu.Ka plays double game, Ramadoss is playing triple game. Till now, only Thiruma has been consistent in his views.
If Thiruma heads third front, I am sure someone will prop up caste clashes.
That leaves only 49-O.
I doubt the congress guys may re-open thamil maanila congress to cheat the public or dmk might join the bjp wagon at the last minute.
-aathirai
this is why india wants to intervene in Eelam.
7:34 PM, February 23, 2009A eelam tamil deciding about the government in TN???
:)
Athirai,
8:37 PM, February 23, 2009You have raised a valid question. In this post and in the article by MaaRRam nambi, names of Nallakkannu and P. Nedumaran are proposed to lead the front. If all the constituents agree anyone, be it Ramadoss, Thiruma, or VaiKo, can also lead. Please remember it is only partlimentary elections and the leadership role doesn't have much significance. So this cannot be allowed stand in the way of forming the third front. All it needs is the courage of these leaders to rise to the occasion under the collective leadership or a single senior leader who will not contest the election.
good work thanks sasi anna
9:10 PM, February 23, 2009நல்ல முயற்சி
10:25 PM, February 23, 2009வாழ்த்துகள்
பதி,
10:25 PM, February 23, 2009அதை ஈழத் தமிழர்கள் பார்த்துக்கொள்வார்கள் என்றால், உங்களுக்கு ஏன் இந்த ஈழப் பிரச்சனையைப் பற்றிக் கவலை ?
இங்கே முஸ்லீம் பிரச்சனைப் பற்றி பேசுவதேன் ? அதை வேண்டுமானால் நீங்கள் அந்த ஜிமெயில் விவாதத்திலேயே தொடர்ந்திருக்கலாமே. சம்பந்தமில்லாமல் எதற்கு இங்கே ? புலிகள் முஸ்லீம் பிரச்சனைக்காக மட்டும் நிராகரிக்கப்படவேண்டியவர்களில்லையே. பல பிரச்சனைகளுக்கு மத்தியில் மனிதக் கேடயத்தை, தற்போதுள்ள நிகழ்வினால், பற்றி பேசி இருக்கலாமே .
தவறான ராணுவ யுக்தியினால் போரில் தோல்வியடைந்த புலி தலைமையில் மாற்றம் வேண்டும். சிந்திக்க தெரியாத தமிழர்களை தீக் குளிக்க தூண்டும் தமிழர் அமைப்புகள் தலைமைகளில் மாற்றம் வேண்டும்.
11:52 PM, February 23, 2009//மு மாலிக் said...
2:36 AM, February 24, 2009பதி,
அதை ஈழத் தமிழர்கள் பார்த்துக்கொள்வார்கள் என்றால், உங்களுக்கு ஏன் இந்த ஈழப் பிரச்சனையைப் பற்றிக் கவலை ?//
காரணம் மிக எளிது... காஸ்மீரத்து மக்களின் 60 ஆண்டுகளுக்கும் மேலானா அடிமை வாழ்வை உணர, வடகிழக்கு மாநிலங்களில் இந்திய இராணுவத்தின் அரச பயங்கரவாதத்தை உணர, பாலஸ்தீன பிரச்சனையை உணர அந்த மக்களாக மாற வேண்டியதில்லை, அது முடியவும் முடியாது.. ஆனால், அதை உணர/அனுபவிக்க மனிதனாக உணர்ந்தால் போதுமானது !!!!! நான் எந்த மத முகமூடியும் அற்ற மனிதனாக உணர்கிறேன்...
நிற்க... அதே சமயம், இங்கு விவாதிக்க விரும்புவது அவர்கள் அவதிப் படுவதைப் பற்றித் தான்.. ஏனெனில் தமிழக தலைமையில் மாற்றம் வெண்டும் என்னும் இழையில் ஈழப் போரட்டத் தலைமை பற்றி விவாதிக்க வேண்டியடு ஏன்?
நான் பிறப்பாலும் வளர்ப்பாலும், குடியுரிமையாலும் தமிழ் நாட்டை சேர்ந்தவன் என்ற காரணத்தினால் தான் தலைமை மாற்றம் என்னும் விவாதத்திற்கு வந்தேன், இல்லையெனில் அடிப்படை பிரச்சனைகளை மட்டும் விவாதித்துவிட்டு போகும் ஒரு சாதாரண ஆள் தான்...
அங்கு, புலியெதிர்ப்பு அரிப்பினால் தலைமை மாற்றம் வேண்டும் என கூவுபவர்களுக்கும், நீ இன்னார் தலைமையில் தான் போரட/செயல் பட வேண்டும் என நிர்பந்தித்த/நிர்பந்திக்கும் இந்திய மேலாண்மைத்தனத்திற்கும் எந்த வித்தியாசமும் இல்லை... அதனால் தான் ஆனால் அதை போராடும்/போராடிய ஈழத்தமிழர்கள் கவனித்துக் கொள்வார்கள் (முடிவு செய்வார்கள்)..
//இங்கே முஸ்லீம் பிரச்சனைப் பற்றி பேசுவதேன் ? அதை வேண்டுமானால் நீங்கள் அந்த ஜிமெயில் விவாதத்திலேயே தொடர்ந்திருக்கலாமே. சம்பந்தமில்லாமல் எதற்கு இங்கே?//
1. இது உங்களுக்கு மட்டும் ஆனதல்ல... ஏனெனில், வலைப் பக்கங்களில், புலிகளை எதிர்ப்பதற்கு தங்களது மதவதா காரணத்தை மிக நளினமாக உபயோகிக்கின்றனர். அதனால் தான்
புலிகள் யாழ்ப்பாணத்தை விட்டு வெளியேறி முழுவதுமாய் 14 ஆண்டுகள் ஆயினும் இன்னமும் யாழ்ப்பாணத்தில் முஸ்லீம்கள் குடியேற்ப்படவில்லை, ஆனால் அதற்கும் புலிகள் தான் காரணம் என்னும் அற்புதமான மத அடிப்படைவாத புழுகுகளை பரப்பும்,வேலையை செய்யலாம் தலைமை மாற்ரம் ஏற்படும் வரையில் என எனது கருத்தை தெரிவித்தேன்..
//புலிகள் முஸ்லீம் பிரச்சனைக்காக மட்டும் நிராகரிக்கப்படவேண்டியவர்களில்லையே.//
தவறே செய்யாத ஏதேனும் ஒரு அமைப்பு, விடுதலைப் போரட்ட இயக்கம், மக்களாட்சியில் முகிழ்ந்த ஏதேனும் ஒரு தேசத்தை அடையாளம் காட்டிச் சொல்லுங்கள்.. அல்லது அவர்களுடன் ஒப்பிட்டு புலிகளின் மேல் குற்றம் சுமத்துங்கள்... குறைந்தபட்சம் ஒப்பீட்டு அளவிலாவது !!!
2. இராயகரன், சத்தியக் கடுதாசி போன்றவர்களின் தளங்களிலிருந்து வரும் செய்திகளின் அடிப்படையில் மட்டுமே விவாதிக்க விரும்பவில்லை. :)
//பல பிரச்சனைகளுக்கு மத்தியில் மனிதக் கேடயத்தை, தற்போதுள்ள நிகழ்வினால், பற்றி பேசி இருக்கலாமே.//
புலிகள், மனிதக் கேடயம்???? உங்களது நகைச்சுவைணர்வை பாரட்டுகிறேன்.
1967ல் காங்கிரஸ் தோற்க பல காரணங்கள்.அரிசி விலை உயர்வு,
4:16 AM, February 24, 2009இந்தி எதிர்ப்பு என.ஆனால் முக்கியமான காரணம் அண்ணா
காங்கிரசுக்கு எதிராக அமைத்த
கூட்டணி.இன்று அண்ணா போன்ற
தலைவர் இல்லை.ஈழத்தமிழர்
பிரச்சினை தமிழ் நாட்டில் தேர்தல்
முடிவுகளை தீர்மானிக்கும் முக்கிய
காரணியாக இருக்க வாய்ப்பில்லை.
அதுவும் பாராளுமன்றத் தேர்தலில்.
ராமதாசு அல்லது விஜயகாந்த்
மாற்று என்பதை எத்தனை % பேர்
ஏற்பார்கள்.எனவே அதிமுகதான் திமுக மீதான அதிருப்தியை அறுவடை செய்யும்.
/மைய காங்கிரஸ் அரசு ராஜீவ் காந்தியின் மரணத்திற்கு பழி தீர்க்க ஒட்டுமொத்த தமிழினத்தையே ஈழத்தில் அழித்துக் கொண்டிருக்கிறது//
4:24 AM, February 24, 2009பாஜக ஆட்சியிலே வாஜ்பேயி கூட விடுதலை புலிகளை அழிக்க உதவினார் அவரோட சொந்தக்காரங்க யாரையாவது புலிகள் போட்டு தள்ளிட்டாங்களா?
உங்களோட கட்டுரைகளை தொடர்ந்து வாசித்து வருகிறேன். ஈழப் பிரச்சினையில் இந்தளவுக்கு சிறுபிள்ளைத்தனாமாக உங்களது நிலைப்பாடு இருப்பது அதிர்ச்சியளிக்கிறது.
காங்கிரசுக்கும், திமுகவுக்கும் ஓட்டு இல்லையெனில் வேறு யாருக்கு போடுவது? நியாயமாக ஓட்டு போடாதே என்கிற முழக்கமே சரியாக இருக்கும். உங்களால்தான் அப்படிப்பட்ட ஒரு முழக்கத்தை சொல்ல முடியாதே? அதுக்கு பதிலா சனியனுக்கு, சாக்கடை பரவாயில்லை என்பது போல இரண்டு எதிரிகளில் ஒன்று என்று மக்களை ஏமாற்ற வேண்டியதுதான்.
மாலிக்,
8:10 AM, February 24, 2009//அமெரிக்கத் தேர்தல்-புகழ் "மாற்றம்" என்ற சொல் உங்களையும் கவர்ந்துவிட்டது போலும். நன்று.//
ஆமாம். ஜனநாயகம், அரசியல் சட்டம், இறையாண்மை, கருத்துரிமை, மனித உரிமை, கணினி, இணையம் எல்லாம் கூட மேற்கிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட சரக்குகள் தான். அதே மாதிரி "மாற்றம்" என்பதை சிலர் உள்வாங்கிக்கொள்வதில் உங்களுக்கு என்ன பிரச்சினை?
//ஆனால் ஈழத் தமிழர்களின் உரிமைப் போராட்டத் தலைமையில் மாற்றம் வேண்டாமா ?//
வேண்டுமென்று நீங்கள் விரும்பினால் அதற்கான பிரச்சாரத்தை நீங்கள் தாராளமாக முன்னெடுத்துச் செல்லுங்கள். உங்கள் விருப்பத்தை பிறர் நிறைவேற்ற வேண்டுமென்று எதிர்பார்க்காதீர்கள்.
//ஆனால் ஈழத் தமிழர்களின் உரிமைப் போராட்டத் தலைமையில் மாற்றம் வேண்டாமா ?//
9:18 AM, February 24, 2009எவ்வளவு தடவை தலைமை மாறியது என்று உங்களுக்குத்தெரியுமா? 1983 இல தான் ஈழப்பிரச்சினை ஆரம்பித்தது என நீங்கள் நினைத்துக்கொண்டிருந்தால் நான் பொறுப்பல்ல.
ராமநாதன், அருணாச்சலம், ஜீ,ஜீ பொன்னம்பலம், செல்வநாயகம், அமிர்தலிங்கம், பின்னர் எல்லோரும் இணைந்த தமிழர் விடுதலைக்கூட்டணி, இவர்களில் இருந்து விலகிய இளஞர் பேரவை, ஈரோஸ்,புளொட்(உமாமகேஸ்வரன்) ரெலோ (குட்டிமணி/தங்கத்துரை/ஜெகன்), கெஸ் (ஈழமானவர் பொது மன்றம்), ஈபிஆரெலெஃப்(பத்மநாபா) , எல்ரிரி ஈ (பிரபாகரன்) என தலைமையை மாற்றி மாற்றிக் களைத்துவிட்டோம். இதில ஐபிகேஎஃப் காலத்தில இந்திய உலவு அமைப்பு ரோவினால் உருவாக்கப்பட்ட TriStars (ஈ.என்.டி.எல்.இ.எஃப்) எனப்படும் அமைப்பு வேறு தலைமை ஏற்றது சுவாரசியமான ஆனால் வேதனையான தனிக்கதை!
Very good one Sasi,
10:28 AM, February 24, 2009Since the % of people on internet is far less than the % of people on mass media side, we can target all the local channels in the cities to come under on motive of cleansing the people mind. Common Tamil is busy seeing Jodi number 1 and maana aada and mandayaada.
So one idea would be to load all the good speeches of Seeman, TRR,etc in one VCD and distribute to all the public. FREE VCDs people will be happy to get, we can also have local channels broadcast in their channels. At the end of speeches , we can request them to circulate to their friends once they have finished watching. I think Seeman has talked a lot, we can continue his speech on VCD who would stop this? VCD can be mass produced cheaply. We all can donate for that cause. So basic idea is VCD has more audience than internet, we can target all the serial watching moms!We can include lot of Eelam videos too...
prognostic,
12:10 PM, February 24, 2009உங்களுடைய அறிவு முதிர்ச்சியை எண்ணி வியக்கிறேன் :))
பிஜேபி ஆட்சியில் இருந்த பொழுது எடுத்த நிலைப்பாட்டிற்கு, தற்போதைய இந்திய அரசின் நிலைப்பாட்டிற்கு இருக்கும் வேறுபாடு கூட உங்களுக்கு புரியவில்லையா அல்லது புரியாமல் கதை விடுகிறீர்களா ?
வாஜ்பாய் ஆட்சி காலத்தில் ஈழத்தில் என்ன போர் நடந்தது என தெரியப்படுத்துகிறீர்களா ?
நான் பிஜேபியை தொடர்ந்து எதிர்த்து வந்திருக்கிறேன். அதன் இந்துத்துவ கொள்கையையும், மோடி போன்ற பாசிச மதவெறியர்களையும் முற்றிலும் நிராகரிக்கிறேன்.
ஆனால் தற்பொழுது காங்கிரஸ் தோற்கடிக்கப்ட்டு பிஜேபி ஆட்சியை பிடித்தால் வருத்தப்படமாட்டேன். காங்கிரசின் தோல்வியை கொண்டாடுவேன்
மிக நல்ல சிந்தனை. இப்போதே! சில பின்னூட்டங்களில் குழப்பத்தை உண்டுபண்ணும் கருத்துகக்கள் தெரிகின்றன. தமிழகத்தில் ஏற்படுத்தப்போகும் மாற்றம் தமிழ் ஈழத்திற்கு மாத்திரமல்ல, தமிழகத்திற்கும் சிறந்த முடிவைத் தரும். பரந்த பொதுநோக்கோடு உங்கள் முயற்சியை வரவேற்கின்றேன்.
3:37 PM, February 24, 2009தலைமை மாற்றத்திற்கான தேவைகளை ஈ மெயில் மூலம் தமிழகம் எங்கும் பரப்ப முடியுமானால்
நல்லது என்பது என் கருத்து.
அதற்கு முன் 'நம்பகமான தலைவர்களை' கருத்தளவில் ஒற்றுமைப்படுத்த முயற்சித்த பின்னர்தானே அவர்களுக்காக பிரச்சாரம் செய்ய முடியும்?
சரவணன்
சசி!
3:58 PM, February 24, 2009இரு வேலைத் திட்டங்கள் அவசியமாகப்படுகின்றது.
1. புதிய தலைமைக்கான தலைவர்களை அடையாளங்கண்டு ஒரே அணிக்குள் கொண்டுவரவேண்டும்.
2. உங்கள் திட்டத்தை மாணவர்கள் மூலம் எடுத்துச் செல்லுதல்.
மாணவர்கள் புரட்சிதான் சரி. புலம்பெயர் நாடுகளில் இன்று நடைபெறும் ஈழ ஆதரவுப் போராட்டங்கள் அனைத்துமே இளையோர் அமைப்பினால்தான் ஏற்பாடு செய்யப்படுகின்றன.
தலைவர்களை ஒன்றுபடுத்துங்கள்!!!
மாணவர்கள் வழி திறப்பார்கள்!!!!!!!!!!!!!!!!!!
ஒரு ஈழத் தமிழன்
//பிஜேபி ஆட்சியில் இருந்த பொழுது எடுத்த நிலைப்பாட்டிற்கு, தற்போதைய இந்திய அரசின் நிலைப்பாட்டிற்கு இருக்கும் வேறுபாடு கூட உங்களுக்கு புரியவில்லையா அல்லது புரியாமல் கதை விடுகிறீர்களா ?
2:47 AM, February 25, 2009வாஜ்பாய் ஆட்சி காலத்தில் ஈழத்தில் என்ன போர் நடந்தது என தெரியப்படுத்துகிறீர்களா ?//
ஈழத்தில் பத்தாயிரக்கணக்கிலான சிங்கள இன வெறி ராணுவ வீரர்கள் புலிகளின் முற்றுகையில் சிக்கி சின்ன பின்னமாக இருந்த நிலையில் இந்தியாவின் வாஜ்பேயி ராணுவ தலையீடு குறித்த மிரட்டலின் மூலம் புலிகளை பின் வாங்கச் செய்தார்.
ஈழத்தில் இந்தியா மேலாதிக்க அரசியல் குறித்து புலிகளுக்கே கூட மாற்று கருத்து கிடையாது. அதனை சந்தர்ப்பவாதமாக பயன்படுத்த முடியும் என்று நம்பிய ராணுவவாத கண்ணோட்டம்தான் அவர்களது முக்கிய தவறுகளில் ஒன்று.
ஈழம் குறித்த இன்றைய பல்வேறு விவாதங்கள் அனைத்துமே கருத்து வேறுபாடின்றி இந்திய அரசின் மேலாதிக்க ஈழ விரோத நிலைப்பாடிற்கு வந்தடைந்துள்ள வேளையில், பிழைப்புவாத அரசியல் தலைமைகள் மட்டுமே காங்கிரசின் ஈழ நிலைப்பாடு என்று தனித்து குரல் கொடுத்து வருகிறார்கள்.
பொதுவாக பல்வேறு பிரச்சினைகளை விரிவாக ஆய்வு செய்து சரியான கோணத்தில் எழுதும் உங்களிடமிருந்தும் இப்படிப்பட்ட தொரு கண்ணோட்டம் வந்ததே எனக்கு அதிர்ச்சியளிப்பதாக இருந்தது.
அந்த வேதனையில்தான் சிறிது காட்டமாக பின்னுட்டமிட்டிருந்தேன் மனதை புண்படுத்தியிருந்தால் பொறுத்தருள்க.
மற்றபடி உங்களது பிற்போக்கு எதிர்ப்பு நிலைப்பாடுகளில்லெல்லாம் எனக்கு எள்ளளவும் சந்தேகமில்லை.
அன்புடன்,
முக்காலமும் உணர்ந்த முனிவன்.
//ஆனால் தற்பொழுது காங்கிரஸ் தோற்கடிக்கப்ட்டு பிஜேபி ஆட்சியை பிடித்தால் வருத்தப்படமாட்டேன். காங்கிரசின் தோல்வியை கொண்டாடுவேன்//
2:50 AM, February 25, 2009ஒரு ரசிக மனோபாவத்திலிருந்து இந்த கருத்து வருவது வேறு, விசயங்களை ஆழ்ந்து உள்வாங்கி பரிசீலிக்கும் உங்களிடமிருந்து இந்த அற்ப கருத்து வருவது கடுமையாக விமர்சனம் செய்யப்பட்டே தீர வேண்டும்.
பாஜக வந்துவிட்டால் மட்டும் இந்தியாவின் ஈழ நிலைப்பாடு மாறிவிடும் என்று உங்களது நம்பிக்கை நடைமுறை ஆதாரங்களும் இல்லை முந்தைய பாஜக ஆட்சியும் அப்படி எதுவும் செய்து விடவில்லை.
இந்திய முதலாளிகளின், ஆளும் வர்க்கத்தின் பிரதேச நலன்களுக்கு ஈழம் ஒரு ஊறுகாய் என்பதை உணரும் போதுதான் ஈழ விடுதலைக்கான சரியான பாதை நோக்கிய பயணத்தின் முதல் படி ஆரம்பமாகும்.
முஉமு
//ஆனால் தற்பொழுது காங்கிரஸ் தோற்கடிக்கப்ட்டு பிஜேபி ஆட்சியை பிடித்தால் வருத்தப்படமாட்டேன். காங்கிரசின் தோல்வியை கொண்டாடுவேன்//
2:55 AM, February 25, 2009இப்படி பேசுவதே ஈழ விடுதலைக்கு நாம் செய்யும் துரோகம்தான். உண்மையான எதிரியை விட்டுவிட்டு அவனது கைப் பொம்மையை நாம் மாற்றி என்ன நடந்து விடப் போகிறது? அப்படி ஒன்றைக் கொண்டே நாம் திருப்தி யடைவதைத்தான் ஈழ விடுதலை எதிரிகள் விரும்புகிறார்கள். நீங்களும் அதனையே வழி மொழிவது நமக்குத்தான் எதிராக முடியும்.
மு உ மு
சசி!
6:07 AM, February 25, 2009'நீங்கள் விரும்பும் மாற்றம்' சாத்தியமில்லை என்று தோன்றுகிறது.
இலங்கைப் பிரச்சினைக்கும், தேர்தல் கூட்டணிக்கும் சம்பந்தமில்லை என்று உங்கள் மருத்துவர் ஐயா தெரிவித்து விட்டார் :-)
லக்கிலுக்,
10:51 AM, February 25, 2009ராமதாசை மட்டும் நம்பி இந்த மாற்றம் முன்வைக்கப்படவில்லை.
பாமக காங்கிரஸ் கூட்டணியில் இருந்து விலக மறுத்தால் காங்கிரஸ் கட்சியுடன் சேர்த்து பாமகவும் அழிக்கப்பட வேண்டும். மதிமுக ஜெயலலிதா கூட்டணியில் இருந்து விலக மறுத்தால் ஜெயலலிதாவுடன் சேர்ந்து மதிமுகவும் புதைக்கப்பட வேண்டும்.
நாம் “மாற்றத்தை” நோக்கி நம் பயணத்தை தொடருவோம். மாணவர்கள் மத்தியில் இருந்து கூட ஒரு தலைவர் உருவாகலாம்.
நம்மால் முடியும் என நம்புவோம்
இன்று மக்கள் மத்தியில் மாற்றம் வேண்டும் என்ற எண்ணம் எழுந்திருக்கிறது. எனவே மக்கள் நிச்சயமாக ஒரு மாற்று இயக்கத்தை ஆதரிப்பார்கள்
Prognostic,
11:37 AM, February 25, 2009It's difficult to explain in few words about the way the current war is being conducted. Let me write about it later
You are ignoring an important factor called M.K.Narayanan in this current war and his role on behalf of India. So, there is a lot of difference between BJP and Congress as far as Eelam is concerned.
However I totally agree and I have written in my various articles that India will be the main obstacle in achieving Eelam irrespective of whichever party is in Power.
Defeating congress is a consolation for the wounds and pains caused by the current war. But it’s not a solution. After all we are also human beings looking for some consolation when nothing is happening for us
Must see ! Change coming to TN.
12:52 AM, February 26, 2009http://www.tubetamil.com/view_video.php?viewkey=278e9f6f4d23bfe8d9c7
//Defeating congress is a consolation for the wounds and pains caused by the current war. But it’s not a solution. After all we are also human beings looking for some consolation when nothing is happening for us//
6:31 AM, February 26, 2009சில விசயங்களை மட்டும் குறிப்பிட்டுவிடுவது சரியாக இருக்கும்.
ஆறுதல் என்பதே தடையாக மாறிவிடக் கூடாது. இந்திய அரசை, ஈழ விரோதிகளை அம்பலப்படுத்த இதைவிட சரியான தருணம் திரும்ப கிடைக்குமா என்று தெரியவில்லை. இந்த நேரத்தில் நமது எதிரிகளை கறராக இருந்து அமபலப்படுத்தி தனிமைப்படுத்தாமல் ஆறுதல் தரும் நோக்கில் செல்வது சரியாக இருக்குமா என்று யோசித்துப்பாருங்கள்.
இந்திய உழைக்கும் மக்களுடனும், ஜனநாயக சக்திகளுடனும் ஐக்கியமாக வேண்டிய நேரத்தில் காங்கிரசின் மறு உருவமான வேறொன்றை கொண்டு வரும் ஒரு யுக்தியாகவே இந்த இயக்கம் இருக்கிறது.
இந்திய அரசும், சிங்கள இன வெறி அரசும் ஈழப் பிரச்சினையில் ஏற்கனவே தனிமைப்பட்டுள்ள நிலையில் வெகு தெளிவாக எதிரியை வரையறுத்து அம்பலப்படுத்தி அடிப்பதுதான் சரி. இப்பொழுது போய் எதிரியிலேயே கொஞ்சம் நல்லவன், கொஞ்சம் கெட்டவன், ரொம்ப கெட்டவன் என்பது போல நாம் பரப்புரை செய்வது மக்களை ஏமாற்றுவதே ஆகும்.
ஆயிரக்கணக்கிலான தமிழர் பிணங்களின் மீதேறி எதிரியே எல்லைகளை தெளிவாக்கியிருக்கும் இந்த வரலாற்று சூழலை நாம் தவற விட்டால் அந்த தவறு இன்னும் ஒரு தலைமுறைக்கு ஈழ விடுதலையை தள்ளிப் போட்டு நம்மை பலி வாங்கும்.
தைரியமாய் சொல்லுவோம் இந்திய அரசு எமது எதிரி என்று. இந்திய மக்களை சுரண்டுபவர்கள் யாரோ அவர்கள்தான் ஈழ மக்களை குண்டு போட்டு கொல்லுவதற்கு திட்டமும் கொடுத்து, துட்டும் கொடுத்து, ஆளும் அனுப்பி வைக்கிறார்கள் என்று.
தைரியமாய் சொல்லுவோம் சிங்கள மக்களின் ஜனநாயக உரிமைகளை யார் பறிக்கிறார்களோ அவர்கள்தான் ஈழ மக்களின் வாழ்க்கையை பறிக்கும் இந்திய, இலங்கை ஆளும் வர்க்கத்தினர் என்று.
இவர்களை புறக்கணிக்கும் அரசியலை பேசுவோம். மாற்று அரசியலை பேச இதைவிடவும் ஒரு நல்ல தருணத்தையா எதிர்பார்க்கிறீர்கள்?
இதுவரை ஏதேதோ காரணம் சொல்லி பதுங்கியது போதும் என்று கூறினால், ஆறுதலுக்காக ஒரு முறை என்று சொல்லி இன்னொரு பதுங்கல் அரசியல் வேண்டாம். ரத்தம் பொதுமிய ஈழ பூமீ தாங்காது... உரத்துச் சொல்லுவோம் நமது எதிரிகள் யார் என்று, இந்த உலக மக்களுக்கு.
மு உ மு
Its a good initiative and I appreciate this idea. We need to think whether this is practically viable to get the suppot through internet. Just a simple statistics, this article was posted 5 days before and just 45 comments have been posted so far. Out of these, there are many postive and negative comments. So my opinion is, we need an effective media to reach people.
10:00 PM, February 27, 2009Samora
Sasi,
2:25 PM, February 28, 2009Mass media has to be targeted first.
Just see this 2 videos, you would know how the TN Govt has diverted the momentum of the lawyers. People are made to think lawyers are rowdies!
http://www.tubetamil.com/view_video.php?viewkey=96dfe66f1a044d3bb7cf
மிகவும் தேவையான கருத்துக்கள்! கடந்த சட்ட மன்றத் தேர்தலின் போதே மாற்றம் தேவை என்று பெரும்பாலானோரால் உணரப்பட்டது. விஜயகாந்த் மூன்றாவது சக்தியாக வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டார். ஆனால் அவரது தெளிவற்ற கொள்கையும், குடும்ப அரசியலும் தானும் அதே குட்டையில் ஊரிய மட்டைதான் என்கின்றன. மேலும் முக்கியமான பிரச்சனைகளில் அவர் கள்ள மௌனம் சாதிப்பது அவரது நோக்கம் பற்றி சந்தேகம் கொள்ள வைக்கின்றது.
2:27 AM, March 03, 2009மரு. இராமதாசும் அவரது சந்தர்ப்பவாத மற்றும் குடும்ப அரசியலும் யாவரும் அறிந்ததே. வைகோ என்று அதிமுக கூட்டணியில் இணைந்தாரோ அன்றே அவர்மீது இருந்த நம்பிக்கை அகன்று விட்டது. நெடுமாறன் அய்யா, திருமா, தா. பாண்டியன், நல்லக்கண்ணு போன்ற தலைவர்கள் நம்பிக்கை அளிக்கிறார்கள். இந்த நால்வரும் இணைந்து ஒரு தலைமை வழிநடத்தும் குழு அமைத்து, அதன் மூலமாக தேர்தலைச் சந்திக்கலாம். தமிழக மக்களும் இந்தக் கூட்டணிக்கு வாக்களித்து தங்கள் எண்ணத்தை ஜனநாயக ரீதியில் தெரியப்படுத்தலாம். மத்தியில் எப்படியும் கூட்டணி அரசுதான் அமையப்போகின்றது. எனவே இந்தத் தமிழ்ப் பாதுகாப்புக் கூட்டணியின் வெற்றி தமிழினத்தலைவரால் கூட சாதிக்க முடியாதவைகளைச் செய்து முடிக்க முடியும்.
அதே நேரத்தில் அதிமுகவும், திமுகவும் 25% வாக்கு வங்கிகளை வைத்துள்ளன. இவற்றை உடைத்து மூன்றாவாது இணி ஒன்று வெற்றி பெறுவது என்பது கடினமான ஒன்று. அதற்கு மரு. இராமதசு, வைகோ அவர்களின் ஆதரவு அவசியமாகின்றது. மரு. இராமதசும், வைகோ அவர்களும் இந்த அணியில் இணைந்து (நான் தான் தலைவராக இருப்பேன் என்றோ அல்லது மகனுக்கு முக்கிய பதவி வேண்டும் என்றோ அரசியல் செய்யாமல்) தங்கள் மீதுள்ள களங்கத்தினை சரி செய்யலாம். அங்கே தமிழினம் அழிந்து கொண்டிருக்கிறது. இப்போதாவது இவர்கள் குடும்ப அரசியல், சந்தர்ப்பவாத அரசியல் போன்றவற்றிலிருந்து வெளிவந்து தங்கள் சமுதாயக் கடமையை நிறைவேற்றுவார்களா?
Post a Comment