இந்தியா, அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகள் இணைந்து வங்காள விரிகுடாவில் விசாகப்பட்டினத்திற்கும், அந்தமான் தீவுகளுக்கும் இடையே ஒரு மிகப் பெரிய இராணுவ போர் ஒத்திகைகளை "மலபார் 07 (Malabar 07)" என்ற பெயரில் இன்று நடத்த தொடங்கியிருக்கின்றன. இந்தியாவின் இடதுசாரிக் கட்சிகள் இதனை கடுமையாக எதிர்த்து வருகின்றன.
சுமார் 26 போர் கப்பல்கள், அணுசக்தி மூலம் இயங்கும் விமனம் தாங்கி கப்பல், 160 போர் விமானங்கள் போன்றவை கொண்டு நடத்தப்படும் இந்த போர் ஒத்திகை இது வரையில் இல்லாத அளவுக்கு மிகப் பெரிய இந்திய-அமெரிக்க கூட்டு போர் ஒத்திகை ஆகும். ஒரு காலத்தில் இராணுவ ரீதியில் எதிரும், புதிருமாக இருந்த இந்தியாவும், அமெரிக்காவும் இன்று நேச நாடுகளாக இணைந்து வருவதை தான் இந் நடவடிக்கை வெளிப்படுத்துகிறது.
சீனாவிற்கு எதிரான ஒரு போர் உத்தியாகவும், இராணுவ கூட்டமைப்பாகவும் இது கருதப்படுகிறது. சீனா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகள் ஒரு அணியாகவும், அமெரிக்கா மற்றும் அதன் நேச நாடுகள், இந்தியா, ஜப்பான் போன்றவை மற்றொரு அணியாகவும் ஒரு புதிய கூட்டமைப்பு உருவாகிறது.
ஐரோப்பாவில் அமெரிக்கா நிறுவ முனையும் ஏவுகணை எதிர்ப்பு தொழில்நுட்பத்தை (US Missile Defense System) ரஷ்யா கடுமையாக எதிர்த்து வருகிறது. கடந்த மாதம் தொடங்கி தனது போர் விமானங்களை NATO பகுதிகளுக்கு ரஷ்யா அனுப்ப தொடங்கியிருக்கிறது. சோவியத் யூனியன் பனிப்போர் காலங்களில் இவ்வாறு செய்வது வழக்கம். ஆனால் பனிப்போர் முடிவடைந்து சோவியத் யூனியன் சிதறியதை அடுத்து ரஷ்யா தனது உள்நாட்டு மற்றும் பொருளாதார தேவைகளை முன்னெடுத்தது. ஆனால் வளர்ந்து வரும் அமெரிக்காவின் ஆதிக்கத்தை தடுக்க ரஷ்யா இப்பொழுது அதிரடியாக சில இராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்கிறது. அதன் ஒரு பகுதி தான் பனிப்போர் கால போர் நடவடிக்கைகளை ரஷ்யா இப்பொழுது மறுபடியும் தொடங்கியிருக்கிறது.
வளர்ந்து வரும் பொருளாதார சூழ்நிலை சீனா-ரஷ்யா VS அமெரிக்கா இடையே ஒரு மோதலை எதிர்காலத்தில் ஏற்படுத்தக்கூடமோ என்ற எண்ணத்தை இந்த சில நிகழ்வுகள் வெளிப்படுத்துகின்றன. அமெரிக்காவின் நேச நாடாக தன்னை வெளிப்படுத்திக்கொள்ள இந்தியா நினைக்கிறது. ஆசியாவில் மிகப் பெரிய சக்தியாக வளர்ந்து வரும் சீனாவை சமாளிக்க இந்தியாவை தன் பக்கம் இழுக்க அமெரிக்கா நினைக்கிறது
வங்காள விரிகுடாவின் தற்போதைய போர் ஒத்திகை கூட மலாக்கா நீரிணைவு காரணமாகத் தான் முன்னெடுக்கப்படுகிறது. மலாக்கா நீரிணைவு உலகின் கடற்போக்குவரத்து அதிகளவில் இருக்கும் பகுதியாகும். உலகின் மொத்த எண்ணெய் வர்த்தகத்தில் 50% மலாக்கா நீரிணைவு வழியாகத் தான் நடைபெறுகிறது. உலக மொத்த வர்த்தகப் போக்குவரத்தில் மூன்றில் ஒரு பங்கு இந்தப் பகுதியில் தான் நடைபெறுகிறது. ஜப்பானின் எண்ணெய் தேவைகளில் சுமார் 80% இந்தப் பகுதி வழியாகத் தான் நடைபெறுகிறது. மலாக்கா நிரிணைவு சீனாவை ஆசியாவுடன் இணைக்கும் பகுதி என்பதும், சீனா தனது 60% எண்ணெய் தேவைகளுக்கு இந்தப் பகுதியையே நம்பி இருக்கிறது என்பதும் இந்தக் கடற்பகுதியின் முக்கியத்துவத்தை நமக்கு உணர்த்தும்.
இவ்வாறான ஒரு பிராந்திய சூழல் தான் இந்துமா பெருங்கடலில் தமிழ் ஈழம் என்னும் தனி தேசம் அமைவதற்கும் அச்சுறுத்தலாக உள்ளது. ஆனால் எதிர்காலத்தில் புலிகளின் கடற்படை பலம் இந் நிலையை மாற்றவும் கூடும். அது புலிகளின் பலத்தை பொருத்தது. இது குறித்து முன்பு "சதுரங்க ஆட்டத்தில் தமிழீழம்" என்னும் கட்டுரை தொடரில் நான் எழுதிய ஒரு சிறு பகுதியை இங்கே மீள்பதிவு செய்கிறேன்.
மாறிவரும் உலகச் சூழலில் இந்தியா-அமெரிக்கா இடையே பொருளாதார மற்றும் இராணுவ ஒத்துழைப்பு அதிகரித்து உள்ள நிலையில் அமெரிக்க-இந்திய கடற்ப்படைகளுக்கு இடையே திரிகோணமலை துறைமுகம் சார்ந்த கடந்த கால பிரச்சனைகள் ஏற்படக்கூடிய வாய்ப்புகள் குறைவே. ஆனால் நாடுகளிடையே வளர்ந்து வரும் பொருளாதார ஒத்துழைப்புகள், உலகமயமாக்கம் போன்றவை இலங்கையின் பொருளாதார கேந்திர முக்கியத்துவத்தை அதிகரித்து உள்ளன. இந்த முக்கியத்துவத்தின் காரணமாகத் தான் உலகநாடுகள் இலங்கைப் பிரச்சனையில் தங்களை அதிகளவில் தற்பொழுது ஈடுபடுத்திக் கொள்கின்றன.
2000ம் ஆண்டிற்கு முன்பு வரை இலங்கைப் பிரச்சனையை கண்டுகொள்ளாமல் இருந்த ஜப்பான் போன்ற நாடுகள் கூட தற்பொழுது இலங்கை பிரச்சனையில் ஆர்வமுடன் தங்களை ஈடுபடுத்திக் கொள்வதை கவனிக்க வேண்டும். இலங்கைக்கு உதவி செய்யும் நாடுகளின் மாநாட்டை டோக்கியோவில் நடத்தியது, தன்னிச்சையான சமாதான முயற்சிகள் என ஜப்பான் இந்தப் பிரச்சனையில் கடந்த காலங்களில் இல்லாத அளவுக்கு ஆர்வத்தை செலுத்த தொடங்கியதன் பிண்ணனி சுவாரசியமானது.
ஒரு நாட்டின் பொருளாதாரம் வரலாற்று காலம் தொடங்கி இன்றைய நிலை வரை கடல் மீதான ஆளுமையைச் சார்ந்தே இருந்து வந்திருக்கிறது. தமிழக வரலாற்றை சோழர் காலம் முதல் ஆராயும் பொழுது கூட ( என்னுடைய முந்தையப் பதிவு - சோழர்களின் பொருளாதாரப் போர்கள் ) இந்த உண்மை நமக்கு தெளிவாகும். கடல் மீது இருந்த மிகப் பலமான ஆதிக்கம் மூலமே பிரிட்டிஷ் அரசாங்கம் உலகெங்கும் நிறுவப்பட்டது. சோழர் காலம் முதல் இன்றைய உலகமயமாக்கல் காலம் வரை இந்த நிலையில் பெரிய மாற்றங்கள் ஏற்பட்டு விடவில்லை.
இன்றைய இலங்கை இனப் பிரச்சனையில் கூட உலக நாடுகளை இந்த வர்த்தக எண்ணமே செலுத்திக் கொண்டிருக்கிறது. இலங்கை ஒரு தீவாக ஆசியாவின் மையப் பகுதியில் மத்திய கிழக்கு, கிழக்காசியா இடையேயான கடல் பாதையில் இருப்பதே இந்தப் பிரச்சனையில் பல நாடுகளை ஆர்வம் கொள்ளச் செய்திருக்கிறது. மத்திய கிழக்கு மற்றும் மலாக்கா நீரிணைவு இடையேயான கடல் பாதை உலக வர்த்தகத்தில் மிக முக்கியமான ஒரு இடத்தைப் பெற்றிருக்கிறது.
உலகின் மொத்த எண்ணெய் வர்த்தகத்தில் 50% மலாக்கா நீரிணைவு வழியாகத் தான் நடைபெறுகிறது. உலக மொத்த வர்த்தகப் போக்குவரத்தில் மூன்றில் ஒரு பங்கு இந்தப் பகுதியில் தான் நடைபெறுகிறது. ஜப்பானின் எண்ணெய் தேவைகளில் சுமார் 80% இந்தப் பகுதி வழியாகத் தான் நடைபெறுகிறது. மலாக்கா நிரிணைவு சீனாவை ஆசியாவுடன் இணைக்கும் பகுதி என்பதும், சீனா தனது 60% எண்ணெய் தேவைகளுக்கு இந்தப் பகுதியையே நம்பி இருக்கிறது என்பதும் இந்தக் கடற்பகுதியின் முக்கியத்துவத்தை நமக்கு உணர்த்தும்.
அடுத்த 20 ஆண்டுகளில் உலகின் முதல் ஐந்து இடம் பெறக் கூடிய பொருளாதார வல்லரசு நாடுகளான இந்தியா, சீனா, ஜப்பான் போன்றவற்றின் எரிபொருள் தேவை இந்தக் கடற்பகுதி வழியாகத் தான் நடைபெறும் என்பதால் தங்களின் தேவைகளுக்கு எந்தப் பிரச்சனையும் எதிர்காலத்தில் நேர்ந்து விடக் கூடாது என்ற அக்கறை இந்த நாடுகளுக்கு உண்டு. ஆசியாவின் பிற பொருளாதார வளர்ச்சி பெறும் நாடுகளான சிங்கப்பூர், மலேசியா, இந்தோனேசியா போன்றவையும் இந்தப் பகுதியில் இருப்பதை கவனிக்க வேண்டும். இவை தவிர எண்ணெய் வளம் மிக்க நாடான ஈரான் இந்தப் பகுதியில் தன்னுடைய எண்ணெய் வளத்துடன், இராணுவ ரீதியிலான பலத்தை பெறுவதற்கும் தொடர்ந்து முயற்சி எடுத்து வருகின்றது.
எதிர்காலத்தில் உலகின் முக்கியமான பொருளாதார கேந்திரமாக உருவாகக்கூடிய இந்தக் கடற்பரப்பில் தன்னுடைய ஆதிக்கத்தை நிலை நிறுத்த அமெரிக்காவும் தொடர்ந்து முயற்சித்து வந்துள்ளது.
கச்சா எண்ணெய் தவிர அணுமின் நிலையங்களுக்கும், அணுஆயுத உற்பத்திக்கும் தேவைப்படும் புளூட்டோனியம் போன்றவையும் கடல்வழியாகத் தான் கொண்டுச் செல்லப்படுகிறது. எதிர் வரும் காலங்களில் உலகின் முக்கியப் பொருளாதாரப் பிரச்சனையாக இருக்கப் போவது கச்சா எண்ணெய் உள்ளிட்ட எரிபொருள் தேவைகள் தான். தங்களுடைய எரிபொருள் தேவைகளுக்கு தன்னிச்சையான முயற்சிகளை மேற்கொள்ள சீனா, ஜப்பான், இந்தியா, அமெரிக்கா போன்ற நாடுகள் தொடர்ந்து முயற்சித்து வருகின்றன.
இந் நிலையில் தான் கடல் மீதான ஆதிக்கம் முக்கியத்துவம் பெறுகிறது. தங்களுடைய எண்ணைக் கப்பல்களின் பாதுகாப்பு, பிரச்சனையில்லாத போக்குவரத்தை கப்பல்களுக்கு ஏற்படுத்திக் கொடுப்பது, இஸ்லாமிய தீவிரவாதிகளுக்கு எதிரான பாதுகாப்பு, தங்களுடைய பொருளாதார தேவைகளுக்கான பாதுகாப்பு, கடற்பரப்பில் இருக்கின்ற எண்ணெய் வளங்களை கண்டறிவது போன்றவற்றுடன் இந்த கடல்வெளியில் இருக்கும் நாடுகளுடன் ஒத்துழைப்பை ஏற்படுத்திக் கொள்வது என்ற ரீதியில் தான் உலக நாடுகளின் நிலை அமைந்து இருக்கிறது.
இந்தக் கடற்பரப்பில் தங்களின் வர்த்தகத்திற்கு பாதுகாப்பினை ஏற்படுத்திக் கொள்வதும், எதிர்காலங்களில் பிரச்சனை நேரும் சமயங்களில் தங்களின் இருப்பை இந்த வர்த்தக முக்கியத்துவம் மிக்க பகுதியில் நிலை நிறுத்திக் கொள்வதிலும் உலக நாடுகள், குறிப்பாக அமெரிக்கா, சீனா, இந்தியா போன்ற நாடுகள் முனைந்தன.
உலக கடல் போக்குவரத்தில் chokepoint என்று சொல்லக்கூடிய பகுதிகள் நிறைய உண்டு. அதாவது மிகக் குறுகலான பாதை உடையப் பகுதிகளை chokepoint என்று கூறுவார்கள். இவ்வாறு குறுகலான பாதை உடைய கடல் பாதையை ஏதேனும் ஒரு நாட்டின் படையோ அல்லது தீவிரவாத அமைப்போ அடைத்து விட்டால் அதனை விடுவிப்பது கடினம். அவ்வாறான ஒரு chokepoint உள்ள இடம் தான் மலாக்கா நிரிணைவு ஆகும். இதில் சுமார் 2.5கி.மீ அகலம் மட்டுமே கொண்ட பல குறுகலான பாதைகள் உள்ளன. இதனை ஏதேனும் ஒரு நாட்டின் கடற்ப்படையோ, தீவிரவாத அமைப்போ அடைத்து விட்டால் உலகின் மிக முக்கியமான வர்த்தகப் போக்குவரத்து பாதிக்கப்படும். இது உலகப் பொருளாதாரத்திற்கு கடும் பாதிப்பை ஏற்படுத்தும்.
அதனை தடுக்கும் பொருட்டு தான் இந்தப் பகுதியில் பல நாடுகளின் கடற்ப்படை தளங்கள் உருவாக தொடங்கின. அமெரிக்கா இந்தப் பகுதியில் தன்னை நிலை நிறுத்திக் கொள்ள தொடர்ந்து முனைந்து வருகிறது. இந்திய அமெரிக்க கடற்ப்படை இடையே இராணுவ ஒத்துழைப்பு, மலாக்கா நிரிணைவுகளில் கூட்டு ரோந்து நடவடிக்கைகள் போன்றவை மேற்கொள்ளப் படுகின்றன. மத்திய ஆசியப் பகுதியில் அமெரிக்காவின் மிகப் பெரிய கடற்படை தளம் உள்ளது. சுனாமியை முன்னிட்டு அமெரிக்கா தனது கடற்படையை இப் பகுதியின் பலப் பகுதிகளுக்கும் அனுப்பியது குறிப்பிடத்தக்கது.
எதிர்காலத்தில் அமெரிக்காவிற்கு சவால் விடுக்கும் நாடாக கருதப்படும் சீனா இந்தப் பகுதியின் சில முக்கியமான இடங்களில் தன்னை நிலை நிறுத்திக் கொள்ள முனைந்தது. இப் பிராந்தியத்தின் வல்லரசான இந்தியா மூலம் எதிர்காலத்தில் தன் வர்த்தகத்திற்கு அச்சறுத்தல் நேராமல் தடுக்கவும், தன் வர்த்தகத்திற்கு பாதுகாப்பினை ஏற்படுத்தும் முகமாகவும் மியன்மார் (பர்மா), மாலத்தீவுகள் போன்ற பகுதிகளில் தன் கடற்ப்படை மற்றும் தொலைத்தொடர்பு தளங்களை சீனா அமைத்துக் கொண்டது. அது தவிர மியன்மார் அரசுடன் எண்ணெய் கிடங்குகளை பராமரிக்கும் வசதிகளையும் பெற்று இருக்கிறது.
இந்தியாவிற்கு ஏற்கனவே அந்தமான் நிக்கோபர் தீவுகளில் மிகப் பெரிய கடற்படை தளம் உள்ளது. இது மலாக்கா நிரிணைவு பகுதியின் அருகாமையில் இருப்பது குறிப்பிடத்தக்கது. அந்தமான் நிக்கோபர் தீவுகளில் எண்ணெய்க் கிடங்குகளையும் இந்தியா அமைத்துள்ளது. திரிகோணமலையிலும் இந்திய எண்ணெய் நிறுவனமான இந்தியன் ஆயில் காப்ரேஷன் எண்ணெய் கிடங்குகளை பராமரித்து வருகிறது.
இவை தவிர இந்தக் கடற்பரப்பில் தேவைப்படும் கண்காணிப்பிற்கு தொலைத்தொடர்பும் மிகவும் முக்கியமானது. மத்திய கிழக்கு முதல் மலாக்கா நிரிணைவு வரையிலான பகுதியில் இருக்கும் வர்த்தக கப்பல்கள் மற்றும் இராணுவ நிலைகளிடையே தொடர்பு கொள்ளக் கூடிய தேவையும் உள்ளது. இலங்கை இந்தக் கடற்ப்பாதையின் மையப் பகுதியில் இருப்பதால் இத்தகைய தொலைத்தொடர்புக்கு உகந்த இடமாகவும் உள்ளது. அதன் அடிப்படையில் தான் வாய்ஸ் ஆப் அமெரிக்கா போன்ற நிலைகளை 1980களிலேயே இங்கு அமைக்க அமெரிக்கா முனைந்தது. இன்று தொலைத்தொடர்பு அசுர வளர்ச்சிப் பெற்றிருக்கிற சூழ்நிலையில் இது ஒரு பெரிய பலம் என்று சொல்ல முடியாது. என்றாலும் இதுவும் இலங்கைக்கு ஒரு முக்கியமான பலம் தான் என்பதை மறுக்க முடியாது.
இவ்வாறு இந்தப் பகுதி மிக முக்கியமான பொருளாதார கேந்திரமாக இருப்பதால் தான் ஜப்பான், அமெரிக்கா போன்ற நாடுகள் இந்தப் பிரச்சனையில் மிகத் தீவிரமான ஆர்வம் காட்ட தொடங்கின. இயல்பாகவே இந்த நாடுகள் இப் பிராந்தியத்தில் அமைதி ஏற்படுவது தான் தங்களுடைய பொருளாதார தேவைகளுக்கு உகந்ததாக இருக்ககூடும் என்ற எண்ணத்தில் இலங்கை அரசு சார்பான நிலைப்பாட்டினை எடுத்தன. அதனால் புலிகளுக்கு அதிகப்படியான நெருக்கடியை கொடுக்க தொடங்கின. இவ்வாறு நெருக்கடி கொடுப்பதன் மூலம் புலிகளை போர் நோக்கி செல்லாமல் தடுக்க முடியும் என நினைத்தன. அதன் விளைவு தான் அமெரிக்கா ஐரோப்பிய யூனியனை நிர்பந்தம் செய்து புலிகள் மீதான தடையினை கொண்டு வந்தது.
ஆனால் புலிகளின் போக்கு உலக நாடுகளை தங்களின் வழிக்கு கொண்டு வருவது என்ற ரீதியிலேயே இருக்கிறது. இதற்கு காரணம் ஒவ்வொரு நாடும் விடுக்கும் நிர்பந்தங்களுக்கு அடிபணியும் பொழுது தமிழீழம் என்ற தீர்வினை விட்டுக்கொடுக்க நேரும். அது மட்டுமில்லாமல் ஈழப்போராட்டம் ஒரு தன்னிச்சையான பாதையில் செல்லாமல் உலகநாடுகளின் எண்ணங்களுக்கு ஏற்ப வளைந்து செல்லக்கூடிய நிலை நேர்ந்து விடும்.
இன்று இராணுவ ரீதியில் ஈராக், ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் நிறையப் பின்னடைவுகளை எதிர்கொண்டு இருக்கும் அமெரிக்கா, இலங்கைப் பிரச்சனையில் இராணுவ ரீதியில் "நேரடியாக" உள்ளே நுழையாது. வேறு எந்த நாடும் இந்தப் பிரச்சனையில் தன்னை நேரடியாக ஈடுபடுத்திக் கொள்ளாது என்ற நிலையில் உலக நாடுகளின் நிர்பந்தம் வெறும் அச்சறுத்தல், அங்கீகாரம் மறுப்பு என்ற அளவில் தான் இருக்கும்.
இந் நிலையில் இந்தக் கடற்ப்பரப்பில் தங்களது ஆளுமையை நிலை நிறுத்துவது தான் உலக நாடுகளை தங்களின் நிலை நோக்கி கொண்டு வரும் ஒரே வழி என புலிகள் முடிவு செய்தனர். இந்தப் பிராந்திய கடற்பகுதியில் தாங்களும் ஒரு முக்கியமான சக்தி என்பதை உலக நாடுகளுக்கு உணர்த்துவது தான் அவர்களின் எண்ணம். எனவே தான் திரிகோணமலை புலிகளின் முக்கிய இலக்காக எதிர்வரும் காலங்களில் இருக்கும் என நான் நினைக்கிறேன் - (சம்பூர் முதலிய கிழக்கு பிராந்திய பகுதிகளை சிறீலங்கா அரசாங்கம் சமீபத்தில் கைப்பறியதும், புலிகளின் கைகளுக்கு திரிகோணமலை சென்று விடக்கூடாது என்பதால் தான் என்பதையும் இங்கே கவனிக்க வேண்டும்)
புலிகளின் கடற்படை இப் பிராந்தியத்தின் கடற்ப்பரப்பில் ஒரு முக்கியமான சக்தி என்பதை நிலை நிறுத்தும் வகையில் தான் கடந்த கால நிகழ்வுகள் இருந்தன.
அதனால் புலிகள் பெறப் போகும் பலன் என்ன ?
பொருளாதார முக்கியத்துவம் மிக்க ஒரு பகுதியில், ஒரு முக்கியமான சக்தியை எந்த நாடும் புறக்கணித்து விட முடியாது.
Tuesday, September 04, 2007
இந்தியா அமெரிக்காவின் கூட்டு கடற்படை போர் ஒத்திகை...
By தமிழ் சசி | Tamil SASI | நேரம் 9/04/2007 03:51:00 PM
குறிச்சொற்கள் Malabar 07, Military cooperation, Sri Lanka, Tamil Eelam, US-India Military, இலங்கை, ஈழம்
Subscribe to:
Post Comments (Atom)
8 மறுமொழிகள்:
சசி
4:41 PM, September 04, 2007நான் தலைப்பைப் பார்த்து இடது சாரிகளின் நிலை சரியா இல்லையா என்பதைப் பற்றி எழுதியிருப்பீர்கள் என வாசிக்க ஆரம்பித்தேன்.
விரிவாக எழுதியுள்ளீர்கள்..
சிவபாலன்,
5:09 PM, September 04, 2007நன்றி
இந்தியாவின் இடதுசாரி கட்சிகள் தங்களுடைய கோமாளிக்கூத்துகளை அவ்வப்பொழுது அரங்கேற்றுவார்கள். அவர்கள் சித்தாந்தம் என்பது "Anti-America" மட்டுமே. பக்கத்தில் எவன் செத்தாலும் கவலையில்லை. ஆனால் கியூபாவுக்காக உண்டியல் குலுக்குவார்கள். அமெரிக்காவின் ஏகாதிபத்யத்தை எதிர்த்து அம்ஜிகரையில் கூட்டம் போடுவார்கள்.
இந்தியா, ரஷ்யாவுடன் போர் ஒத்திகைகளை வைத்திருந்தால் கேள்வி கேட்காமல் ஆதரித்து இருப்பார்கள்.
எனவே அவர்களைப் பற்றி கருத்து சொல்வது அவசியமற்றது என நான் நினைக்கிறேன்
****
அமெரிக்கா தன்னுடைய பலமான கப்பல்களை பல நாடுகளுக்கும் நல்லெண்ணப்பயணமாக அனுப்புவது வழக்கம். ஒவ்வொரு நாட்டிற்கும் வரும் அந்தக் கப்பல்களுக்கு பொதுமக்கள் சென்று வரலாம். அதிகளவில் விளம்பரமும் செய்யப்படும். அவ்வாறு சென்று வரும் மக்கள் அமெரிக்காவை பற்றிய ஒரு பிம்பத்துடனும், அச்சத்துடனும் வருவார்கள். அது தான் அமெரிக்காவிற்கு தேவையானதும். வலியவன் அவனை விட சிறிய எளியவனை மிரட்டி பார்க்கும் ரவுடித்தனம்.
என்னைப் பொருத்தவரை இந்த கூட்டு இராணுவ ஒத்திகை என்பதும் அவ்வாறானது தான்.
நம் நாட்டில் முன் எப்பொழுதும் இல்லாத அளவுக்கு விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வதாக கடந்த வாரம் ஒரு தொலைக்காட்சியில் பார்த்தேன். இப்படி நாம் கவனம் செலுத்த வேண்டியவை நிறைய உள்ளன. இந்த கூட்டு இராணுவ ஒத்திகைகளால் எந்த நன்மையும் இல்லை.
இந்தப் புதிய இராணுவ கூட்டமைப்பு இந்தப் பிராந்தியத்தில் நிச்சயமற்ற தன்மையையே ஏற்படுத்தும்
Sasi you are joking very overly..you are very funny when you said Tamil Navy can change the balance in Indian ocean..
7:39 PM, September 04, 2007are you ok?
Even the smartest Isreali army/navy don't claim they are match to anyother country...please guy don't be selfpraising....
Tamil navy can't even plug a hair of SL Navy at current state...
Where did I say that Tamil Navy will tilt the balance :))
9:01 PM, September 04, 2007What I said is "they can't be ignored in a sea lane which has Economic significance" and the international community is not allowing a separate Tamil Nation because they will not entertain another actor to come into the picture which will add another dimension to the existing scenario.
If LTTE captures Trincomalee, that will definitely be another dimension which can't be ignored...
If India is not concerned about another force, why can’t they allow the formation of Tamil Eelam :)
BTW FYI - SL Navy lost half of its fleet to LTTE Navy. Recently LTTE did a successful commando raid in Kayts Island and captured anti-aircraft missiles..
When compared between LTTE and SL Navy there is a definite balance. The Balance differs only at Air and Land
Sasi from your point of view
10:13 PM, September 04, 2007Pirates at Somali coast are a considerable force too ;)
cheers mate
beside SLN fleet wasn't lost to regular tiger crafts..most of SLN boats were sunk by black sea tigers..like the American destroyer was destroyed by yemeni dingy craft
10:19 PM, September 04, 2007i am sure you are smart enough to understand the differences...
at this missiles age Trinco harbour is not very strategic point...a powerful navy can make good use of it..but it is useless for SLN or Ltte
THANKS
5:22 AM, September 12, 2007சசி,
3:12 PM, September 20, 2007நல்ல பதிவு. இது பற்றிய என் கருத்துக்களுடன் பின்னர் வருகிறேன்.
Post a Comment