Tuesday, April 08, 2008

பயங்கரவாதம், மதம், ஊடகம் : அனிதா பிரதாப்பின் உரை

இலங்கையில் நடந்து வரும் ஆயுதப் போராட்டத்தையும், ஆப்கானிஸ்தானில் தாலிபன் அமைப்பினரின் அடக்குமுறையையும் களமுனைக்கு சென்று செய்தி சேகரித்தவர் அனிதா பிரதாப். இந்தியாவில் அனிதா பிரதாப் போன்று போர் முனைக்கு சென்று செய்தி சேகரித்த செய்தியாளர்கள் மிகவும் குறைவு. அதுவும் தற்போதைய இந்திய வெகுஜன ஊடகங்களில் அனிதா போன்ற பத்திரிக்கையாளர் எவரும் இல்லை என்பதை உறுதியாக சொல்ல முடியும். ஊடகங்கள் என்.ராம், வாஸந்தி, மாலன் போன்ற பத்திரிக்கையாளர்களை கொண்டதாக தான் இந்தியாவெங்கும் உள்ளது. மாநிலத்திற்கு மாநிலம் பெயர்கள் மாறலாமே தவிர பத்திரிக்கையாளர்களின் தரத்திலே பெரிய மாற்றங்கள் இருப்பதில்லை.

பத்திரிக்கை அலுவலகத்தின் ஏ.சி. அறையில் அமர்ந்து செய்திகளை வெளியிடும் செய்தியாளர்கள் மத்தியில் களமுனைக்கு சென்று பல்வேறு இன்னல்களிடையே உயிரை துச்சமாக மதித்து இலங்கையிலும், ஆப்கானிஸ்தானிலும் உள்ள பிரச்சனைகளை பதிவு செய்தவர் அனிதா பிரதாப். அவருடைய அனுபவங்களை "The Island of Blood" என்னும் புத்தகத்தில் விரிவாக கூறியுள்ளார்.

அவரது இந்த உரையினை சமீபத்தில் தான் பார்க்க நேரிட்டது. இலங்கையில் புலிகளுக்கும், இலங்கை அரசுக்கும் இடையே சமாதான உடன்படிக்கை இருந்த காலத்தில் அனிதா முன்வைத்த சில கருத்துக்கள் தற்பொழுது மறுபடியும் போர் தொடங்கியிருக்கிற சூழலிலும் பொருந்துவது இலங்கை இன்னும் போர்-சமாதானம் என்ற இந்த சூழற்சியில் இருந்து மீளவில்லை என்பதையே தெளிவுபடுத்துகிறது.

இந்த உரையில் பத்திரிக்கையாளர்கள் குறித்த அவரது விமர்சனங்களையும் நாம் கவனக்க வேண்டும். ஊடகங்கள் இத்தகைய பிரச்சனைகளில் ஒரு சார்பு நிலைப்பாட்டுடன் செய்திகளை வெளியிடுவது குறித்து அனிதா தன் விமர்சனங்களை முன்வைக்கிறார். ஊடகங்கள் ஒரு பிரிவினருக்கு சார்பாக மாறுவதன் மூலம் பயங்கரவாதப் பிரச்சனையின் எதிரொலி அதிகரிக்கவே செய்கிறது என்பதை அனிதா விளக்குகிறார். பிரச்சனைகளை தேசிய நலன் என்ற பார்வையில் ஊடகங்கள் முன்வைப்பது ஆபத்தானது என அனிதா கூறுகிறார்.



பத்திரிக்கையாளர்கள் குறித்து அனிதா வைத்த விமர்சனத்திற்கு ஒரு உதாரணம் பத்ரியின் இந்த இடுகையில் கிடைக்கும்.

மாலனின் தினமணிக் கட்டுரை - எதிர்வினை

இதே போன்று வாஸந்தி மீது நான் 2006ல் வைத்த விமர்சனத்தை இந்தக் கட்டுரையில் வாசிக்கலாம்

பத்திரிக்கைகளிடம் "சரக்கு" இல்லை

3 மறுமொழிகள்:

Anonymous said...

இதையும் பாருங்கள். இந்தப் பிரச்சனை சம்பந்தப்பட்டது அல்ல. ஊடக அரசியலை விளக்கும்


கலைஞருக்கு எதிராக மாமா மாலனும் வாஸந்தி மாமியும்

9:08 PM, April 08, 2008
நாகை சங்கர் said...

சுட்டிகளுக்கு நன்றி.


அன்புடன்,
நாகை சங்கர்.

4:45 AM, April 11, 2008
Pot"tea" kadai said...

இணைப்புகளுக்கு நன்றி!

3:44 AM, February 22, 2009