Monday, April 23, 2007

Sri Lanka: Play by the Rules!

இன்றைய கிரிக்கெட் உலககோப்பையின் அரையிறுதி ஆட்டத்தில் சிறீலங்கா நியூசிலாந்து அணியை சந்திக்கிக்கிறது. இந்த உலககோப்பையின் பிரபலத்தை பயன்படுத்திக்கொண்டு சிறீலங்காவில் நடக்கும் மனித உரிமை மீறல்களை உலகத்தின் பார்வைக்கு கொண்டு வர "Sri Lanka: Play by the Rules!" என்ற பிரச்சாரத்தை அம்னஸ்டி அமைப்பு ஏற்பாடு செய்திருந்தது.

இன்றைய உலககோப்பையின் அரையிறுதி நேரத்தில் அந்த பிரச்சாரம் பற்றிய ஒரு தொகுப்பு

அம்னஸ்டியின் பிரச்சார கையேடு

Sri Lanka: Human rights is the issue, not cricket

மேலும் விபரங்களுக்கு...

கிரிக்கெட் உலககோப்பையினை பயன்படுத்திக் கொண்டு அம்னஸ்டி அமைப்பு சிறீலங்காவில் நடந்து வரும் மனித உரிமை மீறல்களுக்கு எதிராக பிரச்சாரம் மேற்கொண்டதை சிறீலங்கா அரசு கடுமையாக சாடி உள்ளது

சிறீலங்காவில் தொடர்ந்து கொல்லப்படும் அப்பாவி மக்களும், போர் நோக்கி செல்லும் சூழலும் இந்தக் கவன ஈர்ப்புக்கள் எந்தப் பலனையும் அளிக்கப் போவதில்லை என்பதையே சுட்டி் காட்டுகின்றன

ஆஸ்திரேலியா-சிறீலங்கா அணிகளுக்கு இடையேயான போட்டியில் கனடாவைச் சேர்ந்த ஈழத்தமிழர் ஒருவர் தமிழர் பிரச்சனைக் குறித்து கவனத்தை ஈர்க்க புலிகளின் கொடியினை ஏந்திக்கொண்டு மைதானத்தில் ஓடினார்




4 மறுமொழிகள்:

இளங்கோ-டிசே said...

தகவலுக்கு நன்றி சசி.

8:34 AM, April 24, 2007
podakkudian said...

//கிரிக்கெட் உலககோப்பையினை பயன்படுத்திக் கொண்டு அம்னஸ்டி அமைப்பு சிறீலங்காவில் நடந்து வரும் மனித உரிமை மீறல்களுக்கு எதிராக பிரச்சாரம் மேற்கொண்டதை சிறீலங்கா அரசு கடுமையாக சாடி உள்ளது//

நல்ல தகவல்

8:37 AM, April 24, 2007
மருதநாயகம் said...

//
ஆஸ்திரேலியா-சிறீலங்கா அணிகளுக்கு இடையேயான போட்டியில் கனடாவைச் சேர்ந்த ஈழத்தமிழர் ஒருவர் தமிழர் பிரச்சனைக் குறித்து கவனத்தை ஈர்க்க புலிகளின் கொடியினை ஏந்திக்கொண்டு மைதானத்தில் ஓடினார்
//

விளையாட்டெல்லாம் அரசியல் ஆக்கப்படுகிறது அரசியல் விளையாட்டாக நடக்கிறது

11:36 AM, April 24, 2007
வெற்றி said...

சசி,

/* சிறீலங்காவில் தொடர்ந்து கொல்லப்படும் அப்பாவி மக்களும், போர் நோக்கி செல்லும் சூழலும் இந்தக் கவன ஈர்ப்புக்கள் எந்தப் பலனையும் அளிக்கப் போவதில்லை என்பதையே சுட்டி் காட்டுகின்றன */

உண்மை. இது பெரிய அளவில் எந்தப் பலனும் அளிக்கப்போவதில்லை. ஆனால் இலங்கையில் என்ன நடக்கிறது என்பதையாவது சில மக்கள் அறிந்து கொள்வார்கள் என நம்புகிறேன்.

உதவி வழங்கும் நாடுகள், இலங்கைக்கு அளிக்கும் உதவிகளை நிறுத்தி அழுத்தம் கொடுக்கும் வரை இவ் விடயத்தில் பெரிய மாற்றங்களை எதிர்பார்க்க முடியாது.

இலங்கை அரசின் பாதுகாப்பு அமைச்சகம் சர்வதேச மன்னிப்புச் சபையின் இச் செயற்பாட்டை விரும்பவில்லை. இலங்கைப் பாதுகாப்பு அமைச்சின் இணையத்தளத்தில் இருந்து இது பற்றி வந்த தகவல் கீழே.
-----------------------------
It is indeed a woeful situation to see an organization, which claims itself to be protecting human rights has been engaged in an unethical, low quality mode of operations against a democratic nation. Reports from the Caribbean Islands indicate that the Amnesty international has been engaged in cheap propaganda campaign against the SL people and their cricket team to tarnish their good image and thereby to lower the performance of the SL cricketers.

It is a well-known fact that all Sri Lankan's irrespective of their racial or any other differences always support the SL cricket team. Sports have always helped Sri Lankan's as well as all South Asian people to bridge differences and to unite as one nation.

Perhaps it is the same reason why the AI has chosen to attack the SL cricket team. Perhaps, the AI might be thinking that the blood of the Sri Lankan's is cheap so that they do not have a right to fight against terrorism. Perhaps it wants to ensure that the third world remains where it is forever.... The Society for Peace, Unity and Human Rights for Sri Lanka, a leading organization of SL expatriates has condemned this irrelevant and unethical act of the AI in a letter sent to its officials.

7:28 PM, April 24, 2007