Tuesday, October 23, 2007

சிங்கள இனவெறி : பயங்கரவாதம் : ஹிலாரி

அனுராதபுரம் வான் படைத்தளத்தின் மீது தாக்குதல் நடத்திய கரும்புலிகளின் உடல்கள் நிர்வாணப்படுத்தப்பட்டு, அனுராதபுரம் வீதிகளில் கொண்டு சென்ற நிகழ்வு சிங்கள இனவெறியின் காட்டுமிராண்டித்தனத்தேயே நினைவுபடுத்துகிறது.

சிங்கள இராணுவத்திற்கு ஏற்பட்ட இழப்பையும், பின்னடைவையும் சிங்கள மக்கள் மனதில் இருந்து அகற்றவே இத்தகைய ஒரு காட்டுமிராண்டித்தனத்தை சிங்கள இராணுவம் கட்டவிழித்துள்ளது என lankadissent.com என்ற இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.

Several people who witnessed the incident commented that the intention was to prevent the mentality of defeat from entering the public mindset in the aftermath of this major military debacle which inflicted immeasurable damage to life and property.

கடந்த காலங்களில் சிங்கள இராணுவத்தினரின் உடலை தகுந்த இராணுவ மரியாதையுடன் அடக்கம் செய்த புலிகளின் செயல்பாட்டினையும் இங்கே குறிப்பிட வேண்டிய அவசியம் நேருகிறது. சிங்கள இராணுவ வீரர்களின் உடலை சிறீலங்கா இராணுவம் வாங்க மறுத்த நிலையில் அவர்களின் உடலை தகுந்த இராணுவ மரியாதையுடன் புலிகள் அடக்கம் செய்தனர்.

http://www.tamilnet.com/art.html?catid=13&artid=22392

சிங்கள இராணுவத்தின் இந்த காட்டுமிராண்டித்தனத்தை கண்டிப்பதும், வீரமரணம் அடைந்த கரும்புலிகளுக்கு நம்முடைய அஞ்சலியை செலுத்துவதும் அவசியமாகிறது.

****

புலிகளின் இந்த தாக்குதல் மிக நன்கு திட்டமிடப்பட்ட தாக்குதல் என்கிறார் இந்தியவின் உளவு அமைப்பின் ஓய்வு பெற்ற அதிகாரியான ராமன். இவர் புலிகளின் "தீவிர" எதிர்ப்பாளர் என்பதை இங்கே குறிப்பிட வேண்டும்

LTTE's Anuradhapura Raid: Bravery & Precision

Reliable details of the combined air and land attack launched by the Liberation Tigers of Tamil Eelam (LTTE) on the Anuradhapura air base of the Sri Lankan Air Force early in the morning of October 22, 2007, indicate that it was neither an act of desperation as projected by the embarrassed Sri Lankan military spokesmen nor an act of needless dramatics as suggested by others. It was an act of unbelievable determination, bravery and precision successfully carried out by a 21-member suicide commando group of the Black Tigers---significantly led by a Tamil from the Eastern Province--- with the back-up support of two planes of the so-called Tamil Eelam Air Force

****

பயங்கரவாதம் என்பது எல்லா காலங்களிலும் பல்வேறு நோக்கங்களுக்காக பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. இந்த நோக்கங்கள் விடுதலை சார்ந்தவையாகவும் உள்ளன. கொள்கை சார்ந்த புரட்சியாகவும் இருக்கலாம். இந்த அமைப்புகளின் நோக்கங்கள் என்ன என்பதை பார்க்க வேண்டும். அவ்வாறு பார்க்கும் பொழுது விடுதலைப்புலிகளின் நோக்கம் என்ன என்று பார்க்க வேண்டும். இவற்றின் நோக்கங்களை அடையும் வழியாக பயங்கரவாதம் உள்ளதே தவிர இவர்கள் அனைவரையும் மத அடிப்படை பயங்கரவாதிகளைப் போலவே பயங்கரவாதிகள் என்ற பொருள்பட அணுக முடியாது.

இந்தக் கருத்தை தமிழர்கள் பல காலமாக கூறி வருகிறார்கள். ஆனால் அமெரிக்காவின் பயங்கரவாத எதிர்ப்பு போரினை விடுதலைப்புலிகளை எதிர்ப்பதற்கும் பயன்படுத்த சிங்கள அரசாங்கமும், இந்தியாவின் சில சிங்கள அனுதாபிகளும் தொடர்ந்து முனைந்து வருகிறார்கள். அமெரிக்காவின் குடியரசுக்கட்சியை சார்ந்த சில அதிகாரிகளும் கொழும்பு சென்று அவ்வாறு உளறி வைத்து இருக்கின்றனர்.

ஆனால் ஹிலாரி கிளிண்டன் அந் நிலையில் இருந்து மாறுபட்டு கருத்து தெரிவித்து இருப்பது ஆச்சரியமளிக்கிறது. இது வரை அமெரிக்க அரசியல் தலைவர்களிடம் இருந்து இவ்வாறான ஒரு கருத்து வெளிப்பட்டதில்லை.

ஹிலாரியின் பேட்டியில் இருந்து...

Well, I believe that terrorism is a tool that has been utilized throughout history to achieve certain objectives. Some have been ideological, others territorial. There are personality-driven terroristic objectives. The bottom line is, you can't lump all terrorists together. And I think we've got to do a much better job of clarifying what are the motivations, the raisons d'être of terrorists. I mean, what the Tamil Tigers are fighting for in Sri Lanka, or the Basque separatists in Spain, or the insurgents in al-Anbar province may only be connected by tactics. They may not share all that much in terms of what is the philosophical or ideological underpinning. And I think one of our mistakes has been painting with such a broad brush, which has not been particularly helpful in understanding what it is we were up against when it comes to those who pursue terrorism for whichever ends they're seeking.

முழு பேட்டிக்கும் இங்கே செல்லலாம்

http://www.guardian.co.uk/uselections08/hillaryclinton/story/0,,2197197,00.html

இந்த பேட்டியினை யாராவது மொழிபெயர்ப்பார்களா ? :)

9 மறுமொழிகள்:

து.மது said...

இறந்து போன உடல்களில் கூட இனவாதம் பார்க்கிறார்கள்...இவர்களை என்னவென்று சொல்வது?

பிரார்த்திப்பதை விட வேறு வழி தெரியவில்லை.

11:20 PM, October 23, 2007
இவன் said...

போரில் மாண்டவனுக்கு தகுந்த மரியாதை அளிப்பது பன்னெடுங்காலமாக உலகமே பின்பற்றிவருகின்ற மரபு. இதைக்கூட தமிழனுக்கு தரமறுக்கின்றது சிங்கள பேரினவாதம்.

தமிழின மாவீரர் மற்றும் மாவீராங்கனைகளை அவமரியாதை செய்தது சிங்கள பேரினவாதத்தின் அடிமனதில் இருக்கும் ஒரு காழ்ப்உணர்ச்சியையே காட்டுகிறது. இக்காட்டுமிராண்டி தனமான செயல் சிங்கள படைகள்மீதும் அதன் அரசின்மீதும் ஒரு இழிவான எண்ணத்தையே ஏற்படுத்துகிறது.

இச்செயல் சிங்களவரிடத்தும் அதன் அரசின்மீதான ஒரு எதிர்மறை சிந்தனையே எற்படுத்தும் என்பது எனது கருத்து. இச்செயல் தமிழ் மக்களை கோபமுறச்செய்தது என்றால் மிகையாகாது.

நெஞ்சு பொருக்குதில்லையே இந்த நிலைகேட்ட சிங்கள பேரினவாதத்தை நினைந்துவிட்டால்!

11:36 PM, October 23, 2007
வெற்றி said...

சசி,

/* சிங்கள இராணுவத்திற்கு ஏற்பட்ட இழப்பையும், பின்னடைவையும் சிங்கள மக்கள் மனதில் இருந்து அகற்றவே இத்தகைய ஒரு காட்டுமிராண்டித்தனத்தை சிங்கள இராணுவம் கட்டவிழித்துள்ளது */

உண்மை. இது சிங்கள அரசுகள் காலம் காலமாகச் செய்து வருவதுதான். இதை Morning Leader பத்திரிகையும் சுட்டிக்காட்டியுள்ளது.
While the government media carried banner headlines that 21 Tigers were killed ...

Morning Leader பத்திரிகை சுட்டிக்காட்டியுள்ள சில சுவாரசியமான தகவல்கள் கீழே:

The government more intent on stemming the negative political impact rather than the military impact of the surprise LTTE attack — the second in one week...

For the Rajapakse government whose legitimacy springs from a military platform, whose sustenance is dependent on war and in its present political crisis is its only lifeline to power, little wonder it hastens to quell the publicity for a military set back as horrendous as Elephant Pass under former President Chandrika Kumaratunga in terms of aircraft lost.

இங்கே மேலே இப் பத்திரிகை சொன்னது போல, விலைவாசி உயர்வு, உல்லாசப் பயணிகள் வருகை குறைந்ததால் பல வேலைவாய்ய்புக்கள் இல்லாமல் போனது, வருமான இழப்பு போன்றவற்றால் இராஜபக்சாவின் செல்வாக்கு சிங்கள மக்கள் மத்தியில்
சரிந்து கொண்டிருக்கும் நிலையில் புலிகளைத் தன்னால்தான் வெல்ல முடியும் எனும் மாயையிலேயே சிங்கள மக்களின் ஆதரவு தங்கியிருக்கிறது.

அதனால் இப்படியான இராணுவத் தோல்விகள் அவரின் செல்வாக்கை இன்னும் குறைக்கும். அதனால்தான் விழுந்தும் மீசையில் மண் ஒட்டவில்லை என்பது போல செயற்படுகிறார்கள்.

Even though Minister Anura Priyadarshana Yapa was to say at the media conference Monday that the attack proved once again the LTTE is still a terror organisation, by targeting only the armed forces the LTTE on the contrary is attempting to transform itself from a terrorist organisation into a legitimate political force. That is what the government should be mindful of at a time it is fast losing international support over its human rights record.

Towards this goal the LTTE with ample help from the hawkish Rajapakse duo who act as the Commander in Chief of the armed forces and the Defence Secretary have succeeded in showcasing themselves to the international community as a responsible armed force worthy of legitimate acceptance into the world community.

இன்னொரு இணையத்தளமான BottomLine கீழுள்ளவாறு சொல்கிறது:

When the LTTE lost three ships within the space of a day, there were celebrations in Trincomalee with the Head of State, the Defence Secretary and Navy Chief in attendance.

The authorities were quite vain about the hundreds of successful sorties carried out by the Sri Lanka Air Force (SLAF) during this phase of the Eelam war.

However, when 17 aircraft were lost in a matter of hours on Monday, the whole debacle was downplayed.

This smacks of irresponsibility.
After the east was militarily secured, there were big tamashas at public expense. But when the Muhamaalai offensive last October ended in disaster, few were willing to take the rap.


Those who are quick to take credit for military successes had better accept responsibility for the debacles.

It was former US President John F. Kennedy who aptly described this reality with his oft-quoted saying, “Victory has a thousand fathers, but defeat is an orphan.”


இத் தாக்குதல் பற்றி இலண்டன் ரெலிகிராப் பத்திரிகை வெளியிட்ட செய்தியைப் படிக்க கீழுள்ள முகவரிக்குச் செல்லவும்:
http://www.telegraph.co.uk/news/main.jhtml?xml=/news/2007/10/23/wlanka123.xml

11:48 PM, October 23, 2007
அருண்மொழி said...

அனைத்து தமிழரையும் பெருமிதம் கொள்ள வைக்கும் நிகழ்வு இது. நடத்திக்காட்டிய கரும்புலிகளுக்கு வீரவணக்கம்.

11:50 PM, October 23, 2007
இறக்குவானை நிர்ஷன் said...

பொறுத்திருப்போம் சசி. காலம் பதில்சொல்லும்.

2:04 AM, October 24, 2007
எம்.கே.குமார் said...

தாம் என்ன செய்கிறோம் என்பதறியாது அறியவும் விரும்பாது இலங்கை ராணுவம் நடத்துவதனைத்தும் அவர்களுக்கே எதிராய் அமையப்போகிறது.

உயிரைத் துச்சமென நினைக்கும் எந்தமிழர்களுக்கு எனது வணக்கங்கள்.

எம்.கே.குமார்

10:18 AM, October 24, 2007
குழைக்காட்டான் said...

தமிழ் சசி,

உங்கள் பதிவுக்கு நன்றி.

சிங்களவர்களின் இம்மாதிரியான நடத்தை பலருக்கு அதிர்ச்சி அளிக்கலாம். ஆனால் என்னைப்பொறுத்தவரை இது ஒன்றும் புதிதோ அன்றி அதிர்ச்சி தக்கூடியதோ அன்று! இதில் நிர்வாணப்பட்டது சிங்களவர்களும் அவர்களுக்க்கு ஆதரவாக இன்னும் பேசிக்கொண்டிருக்கும் சில இலங்கைத்தமிழர்களுமே. முக்கியமாக டி.பி.எஸ்.ஜெயராஜ், ஹூல் மற்றும் ஆனந்தசங்கரி, டக்ளஸ் கூட்டம். இந்து பத்திரிகை ஆசிரியர் என்ன சொல்வார் என போட்டி ஒன்று வைத்தால் வெற்றி பெறுவோர் கட்டுக்கடங்காமல் போகலாம்!
பாவம் அவர் , வாங்கிய 'இலங்கை ரத்னா' வுக்கு பாட்டுப்பாட வேண்டியிருப்பதை நினைத்தால் பரிதாபம் தான்!!!

நீங்கள் சுட்டியுள்ள பி.ராமனின் கட்டுரையில் அவர் புலிகளின் innovative ability இன்னமும் அழிந்து விடவில்லை எனச் சொல்லியிருக்கிறார் எனினும் 10 மாதங்களுக்கு முன்னர் அவரே எழுதிய கட்டுரை ஒன்றில் புலிகளின் innovative ability இலாமல் போய் விட்டதாக கூறியிருந்தார்!!!!!!!!!

9:12 PM, October 24, 2007
தமிழ் சசி | Tamil SASI said...

ஹிந்து ஆசிரியர் "சிறீலங்கா ரத்னா" ராமின் தலையங்கத்தை நேற்று வாசித்த பொழுது சிரிக்கத் தான் முடிந்தது. ஒரு வேளை ஒரு நாள் பொறுத்து தலையங்கம் எழுதியிருக்கலாம். இன்று இலங்கைப் பிரதமரே நாடாளுமன்றத்தில் தங்களது இழப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். 8 விமானங்களை தாங்கள் இழந்து விட்டதாக கூறியிருக்கிறார்.

சிறீலங்கா ரத்னா என்.ராமின் தோழி சந்திரிகாவிற்கு நெருக்கமான சிறீலங்கா சுதந்திர கட்சியின் புதிய பிரிவின் (SLFP-PW) தலைவரான மங்கள சமரவீரா 150மில்லியன் அமெரிக்க டாலர் இழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்து உள்ளார்.


http://www.colombopage.com/archive_07/October24155228SL.html


ஐக்கிய தேசிய கட்சி அழிக்கப்பட்ட 18 விமானங்களின் பட்டியலை வெளியிட்டு இருக்கிறது.

இந்த தகவல்களுக்காக பொறுத்திருந்து தலையங்கம் எழுதியிருந்தால் ஒரு வேளை அவரது சிறீலங்கா ரத்னா பட்டம் வெளியில் தெரியாமல் தலையங்கம் எழுதியிருக்கலாம். ஆனால் பாவம் அவரது உணர்வு துடிக்கிறது போலும். உடனே தலையங்கம் எழுதி "சிறீலங்கா ரத்னா" பட்டம் பெற்றதை நியாயப்படுத்தி விட்டார். Blood is thicker than Water

9:36 PM, October 24, 2007
ஜோ/Joe said...

வீர மறவர்களுக்கு வீர வணக்கம் !
மதிகெட்ட சிங்கள இனவெறி அரசுக்கு "தூ..."

10:02 PM, October 24, 2007