போர் நடக்கும் பொழுது எந்த நாட்டின் வெற்றிக்கும், உளவுப்பிரிவு மிக முக்கியமானது. எதிரி நாட்டை சீர்குலைப்பது. அதன் மூலம் தன்னுடைய நாட்டின் நலனை பாதுகாப்பது, போரில் தனது நாட்டை வெற்றி பெற வைப்பது இவை தான் உளவுப்பிரிவின் முக்கிய வேலையாக இருந்து வருகிறது. இந்தியாவிற்கும், பாக்கிஸ்தானுக்கும் இடையே பங்களாதேஷ் உருவாவதற்காக நடந்த போர் கூட உளவுப்படையின் பங்களிப்பிற்கு முக்கிய உதாரணமாக உள்ளது. கிழக்கு பாக்கிஸ்தானில் உள்ள வங்காளிகள் மேற்கு பாக்கிஸ்தானால் நிராகரிக்கப்பட்டு இருந்தனர். "முக்தி பாகினி" என்று சொல்லப்படும் பாங்களாதேஷ் போராளி குழுக்களுக்கு ரா இந்தியாவில் பயிற்சி அளித்தது. இந்த போராளி அமைப்பு பாக்கிஸ்தானுக்கு எதிராக செயல்பட தொடங்கியது. 1971ல் இந்திய -பாக்கிஸ்தான் போரின் வெற்றி இந்திய இராணுவத்திற்கு கிடைத்த வெற்றி என்பதை விட ராவின் செயல்பாடுகளுக்கு கிடைத்த வெற்றி என்று சொல்லலாம். இந்தியா வெற்றி பெற தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் செய்து முடித்த பிறகு இந்திய இராணுவத்தை கிழக்கு பாக்கிஸ்தானில் நுழைத்து ரா இந்தியாவை வெற்றி பெற வைத்தது (உளவு நிறுவனங்கள் பற்றிய என்னுடைய முந்தையப் பதிவு )
இதே போன்ற ஒரு நிலை தான் இன்று இலங்கையிலும் நடந்து கொண்டிருக்கிறது. இதில் முதல் சுற்றில் வெற்றி பெற்றிருப்பது, புலிகள் அல்ல. சிறீலங்கா உளவுப்படை தான் வெற்றி பெற்றிருக்கிறது.
கருணா - புலிகளுக்கு இன்று முக்கிய தலைவலியாக இருக்கக் கூடிய பெயர். இந்த சமாதான காலக்கட்ட துவக்கத்தில் பிரபாகரனின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் தமிழ்ச்செல்வன், பாலசிங்கத்துடன் மேடையில் இருந்தவர்களில் கருணாவும் ஒருவர். புலிகள் இயக்கத்தின் மிக முக்கியமான தலைவராக இருந்த கருணாவை அவர் சமாதானப் பேச்சுவார்த்தை குழுவில் இருந்த பொழுது தான் சிறீலங்கா உளவுப்பிரிவினர் தங்கள் பக்கம் இழுத்து விட்டனர். கருணா விவகாரம் புலிகளுக்கு மிகப் பெரிய சறுக்கல். என்றாலும் புலிகள் தங்களை அந்த இழப்பில் இருந்து சரி செய்து கொண்டனர். அவர்களுடைய பலவீனங்களை சரி செய்து கொள்ளும் ஒரு வாய்ப்பாகவும் கருணா பிரச்சனை அமைந்து விட்டது. மாத்தையா தொடங்கி கருணா வரை பலக் காலங்களாக புலிகளை பிளவு படுத்தும் முயற்சியை சிறீலங்கா உளவுப்படை (இந்திய உளவுப்படை ஆதரவுடன்) தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது. இதில் கருணா மூலமாக வெற்றி கிடைத்தாலும் அவர்கள் எதிர்பார்த்த வெற்றியை பெற முடியவில்லை. கடந்த காலங்களில் சிறீலங்கா இராணுவத்தின் கூலிப்படையாகிப் போன பல போராளி இயக்கங்களின் நிலை தான் இன்று கருணாவிற்கும் ஏற்பட்டு இருக்கிறது.
இதைத் தவிர புலிகள் இயக்கத்தில் சிறீலங்கா உளவுப்படையினர் ஊடுறுவி இருக்கிறார்களா என்பது தெரியவில்லை. இந்த வாய்ப்பினை அவ்வளவு எளிதாக நிராகரித்து விட முடியாது. புலிகளின் பகுதியில் சிறீலங்கா இராணுவத்தின் உளவாளிகள் இருக்கிறார்கள் என்பதும், புலிகளின் எதிர்ப்பாளர்கள் சிலர் சிறீலங்கா இராணுவத்தின் உளவாளிகளாக இருப்பதும் கடந்த காலங்களில் நிகழ்ந்திருக்கிறது.
சிறீலங்கா இராணுவத்தில் புலிகளின் உளவாளிகள் இருக்கிறார்கள் என்பது சில நிகழ்வுகளில் உறுதிச் செய்யப்பட்டிருக்கிறது. புலிகள் கொழுப்பில் நடத்திய தாக்குதல்களிலேயே மிக உக்கிரமான தாக்குதால் கட்டுநாயக்கா விமானப் படை தளம் - பண்டாரநாயக விமான நிலையம் மீதான தாக்குதல் தான். இந்த தாக்குதலால் பல மில்லியன் டாலர் இழப்பை சிறீலங்கா விமானப் படையும், விமானப் போக்குவரத்து நிறுவனமும் எதிர்கொண்டது. இந்த தாக்குதல் அதிபாதுகாப்பு மிக்க பகுதியில் மிகத் துல்லியமாக நடத்தப்பட்டமைக்கு காரணம் புலிகளின் உளவுப்படை தான். இந்த தாக்குதலை பல மாதங்கள் திட்டமிட்டு நடத்தினர். புலிகளின் உளவுப்படையைச் சேர்ந்த சிலரை விமான நிலையத்தை ஒட்டியப் பகுதிகளில் பல மாதங்களுக்கு முன்பே குடி அமர்த்தினர். பின்னர் இந்த விமான நிலையத்தின் வரைபடத்தை சில இராணுவ அதிகாரிகளிடம் இருந்து பெற்றனர். அந்த வரைபடத்தின் மாதிரி வடிவத்தைக் கொண்டு பல மாதங்கள் தற்கொலைப்படையினர் பயிற்சி எடுத்தனர். அவர்கள் திட்டமிட்டதை அப்படியே செயல்படுத்தினர். இவ்வாறு பல மாதங்கள் திட்டமிட்டு பொறுமையாக நடத்தப்படும் புலிகளின் தாக்குதல் தான் துல்லியமாக அமைந்து விடுகிறது.
புலிகளுக்கு தகவல் கொடுக்க கூடிய உளவாளிகள் அரசின் பாதுகாப்பு மிக்க இராணுவ நிலையங்களிலும் இருக்கிறார்கள் என்பது தான் இங்கு கவனிக்கப்பட வேண்டிய விடயம். இவர்கள் சிங்களவர்கள் தான். இவர்கள் உளவாளிகளாக மாற வேண்டிய அவசியம் என்ன ? "பணம்" என்பதை தவிர வேறு என்ன இருக்க முடியும். இந்த பலவீனம் அனைத்து பிரிவினருக்குமே உரியது தான். அதனை பயன்படுத்திக் கொள்வதில் தான் ஒரு உளவு நிறுவனத்தின் திறமை உள்ளது. இதற்கு பல உளவு நிறுவனங்களை உதாரணமாக சொல்ல முடியும்.
இந்தியாவின் ரா, பாக்கிஸ்தானின் ஐ.எஸ்.ஐ. போன்றவை இந்தியா, பாக்கிஸ்தான் முழுவதும் இந்தியர்களையும், பாக்கிஸ்தானியர்களையும் அவர்கள் நாட்டிற்கு எதிராகவே திருப்பி உள்ளது. இவ்வாறு மாற்றுவதில் இருக்கும் ஒரு வசதி, யார் உளவாளிகள் என்பதை அவ்வளவு எளிதாக கண்டுபிடித்து விட முடியாது. இராணுவத்தினரில் ஒருவராய், இராணுவ நிலையங்களில் சுற்றி இருக்கக் கூடியப் பகுதிகளில் பல வருடங்கள் வசித்து வரும் ஒருவர் உளவாளியாக மாறுவதை இராணுவத்தால் அவ்வளவு எளிதாக கண்டுபிடிக்க முடியாது. இவ்வாறான உத்தியை தான் விமான நிலைய தாக்குதல், லஷ்மண் கதிர்காமர் மீதான தாக்குதலில் புலிகள் பயன்படுத்தினர். லஷ்மண் கதிர்காமரின் வீட்டிற்கு அருகில் இருக்கக் கூடிய ஒரு வீட்டில் இருந்து நடத்தப்பட்ட ஸ்னைப்பர் தாக்குதலை பல மாதங்கள் திட்டமிட்டு பொறுமையாக தக்க சமயத்திற்காக காத்திருந்து புலிகள் நடத்தி உள்ளனர். லஷ்மண் கதிர்காமர் இலங்கையில் ஜனாதிபதிக்கு அடுத்த நிலையில் அதிகப் பாதுகாப்பினை பெற்று இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
பலமான பாதுகாப்புகளை உடைத்து தாக்குதலை நடத்தியிருக்கும் புலிகள், புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு எத்தகைய பாதுகாப்பினை வழங்குகின்றனர் என்பதை அவரது பத்திரிக்கையாளர் சந்திப்பில் காண முடிந்தது. அது பற்றி அப்பொழுது கட்டுரை எழுதிய "ஹிந்து", அந்த பாதுகாப்பு உலகின் மிகச் சிறந்த உளவுநிறுவனங்களை விட மிகச் சிறப்பாக இருந்ததாக எழுதியிருந்தது. இந்த பாதுகாப்பினை வர்ணித்த ஒரு வெளிநாட்டு செய்தியாளர், "காற்று கூட புலிகளின் பாதுகாப்பு வளையத்தைக் கடந்து தான் பிரபாகரனை நெருங்க முடியும்" என்பதாக கூறினார். இங்கு கவனிக்க வேண்டியது, புலிகளின் உளவுப்படை பிற நாட்டு உளவுப்படையினருடன் ஒப்பிடத்தகுந்த அளவிற்கு வளர்ச்சி பெற்று இருக்கிறது என்பதைத் தான்.
இந்த வளர்ச்சி தான் எதிர்வரும் போரில் புலிகளுக்கு முக்கிய பங்களிப்பாக இருக்கப் போகிறது. இலங்கையில் போர் மறைமுகமாக நடந்து கொண்டிருந்தாலும் ஒரு முழு போர் தொடங்கும் நாள் வெகுதூரத்தில் இல்லை என்பது தான் உண்மை. நேரடியான போருக்கு செல்வது இரு தரப்பிற்குமே சவால் நிறைந்தது தான். சிறீலங்கா அரசுக்கு புலிகளின் கணிக்க முடியாத பலம் குறித்தும், போர் தொடங்கினால் வளர்ந்து வரும் அதன் பொருளாதாரம் சீரழிந்து விடும் என்ற அச்சம் உள்ளது. புலிகள் முழுமையான போர் நோக்கி செல்வதற்கு முன்பு தங்களை பல வழிகளில் தயார் படுத்திக் கொள்ள நினைக்கிறார்களோ என்று தோன்றுகிறது. அதில் முக்கியமானது இராணுவ பலத்தை முடக்குவது.
அதன் தொடர்ச்சியாகத் தான் சிறீலங்கா இராணுவத்தின் இரு உயரதிகாரிகள் குறிவைக்கப்பட்டு தாக்கப்பட்டனர். சிறீலங்கா அரசு இதனை எதிர்கொள்வதில் இருக்கும் பிரச்சனை என்னவென்றால் புலிகள் அடுத்த ஆறு மாதத்திற்குப் பிறகோ, ஒரு வருடத்திற்குப் பிறகோ நடக்கப் போகும் தாக்குதலுக்கு இப்பொழுதே தங்களை பல நிலைகளில் தயார் படுத்திக் கொள்கின்றனர். தாங்கள் குறிவைக்கும் இடம் அதன் பாதுகாப்பு என அனைத்தையும் பல மாதங்கள் மிகப் பொறுமையாக கண்காணிக்கின்றனர். தங்களுடைய இலக்கை சரியாக்கிக் கொண்டு தாக்குதல் நடத்தும் பொழுது கொழும்புவில் அவர்கள் பல மாதங்களை கழித்து இருப்பார்கள். அவர்களுக்கு உதவி செய்து கொண்டிருக்கும் உளவாளிகளில் சிலர் சிங்களவர்களாக கூட இருப்பார்கள். ஆனால் சிங்களவர்களுக்கு இந்த திட்டங்கள் குறித்து தெரியாது. புலிகளுக்கு தான் உதவி செய்கிறோம் என்று கூட பலருக்கு தெரிந்திருக்கும் வாய்ப்பில்லை. ஆனாலும் அவர்களின் உதவியை பயன்படுத்திக் கொள்ளும் புலிகள், தகுந்த நேரத்தில் தங்களின் இலக்கினை தாக்குகின்றனர்.
முக்கியமான இலக்காக இராணுவ, பொருளாதார மையங்கள் இருக்க கூடும். யானையிறவுப் போரில் கூட இராணுவ வீரர்களுக்கு இருந்த தொடர்புகளை முதலில் துண்டித்தப் பின்பு தான் படிப்படியாக தாக்குதல்களை அதிகரித்து, அந்த முகாமை கைப்பற்றினார். அடுத்து நடக்கப் போகும் தாக்குதல்களில் இம் முறை பெரிய அளவில் கடைப்பிடிக்கப்படலாம். கட்டுநாயக்கா விமானப் படை தளம் போன்ற பிற முக்கிய இராணுவ மையங்கள் இலக்காக இருக்கலாம். இதன் மூலம் இராணுவ தளவாடங்களை அழித்து விட்டு பிறகு தாக்குதல்களை தொடுப்பது புலிகளின் உத்தியாக இருக்கக் கூடும்.
இது எல்லாவற்றையும் விட புலிகளின் எண்ணிக்கை ஒரு பரந்து பட்ட தமிழீழத்தை தக்க வைக்க கூடிய அளவில் இருக்கிறதா என்பதும் கேள்விக்குரியே. இதனால் தான் புலிகளின் பகுதியை பாதுகாக்க மக்கள் படைகளை புலிகள் ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். மக்கள் படைகள் மூலம் கொரில்லா வகை தாக்குதல் தொடுப்பது, புலிகளின் இராணுவப் பிரிவை கொண்டு நேரடியான பெரிய தாக்குதல்களை தொடுப்பது போன்றவை புலிகளின் உத்திகளாக இருக்க கூடும்.
புலிகள் தங்களை பெரிய அளவில் அடுத்து வரும் போருக்காக தயார்படுத்திக் கொண்டிருக்கின்றனர். சிறீலங்கா அரசும் தன்னுடைய ஆயுத பலத்தை பெரிய அளவில் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. இது வரை நடந்த போர்களைக் காட்டிலும் இந்தப் போர் உக்கிரமாக இருக்கும் என்பது அங்கு நடந்து கொண்டிருக்கும் நிகழ்வுகளைப் பார்க்கும் பொழுது தெரிகிறது.
இலங்கையில் எந்த நிமிடமும் போர் துவங்கலாம் என்று இருக்கின்ற நிலையில், இந்தப் போரில் எவ்வளவு உயிர்கள் பலியாகும் என்பதை நினைக்கும் பொழுது அச்சமாக இருக்கிறது.
ஈழ தமிழர்கள் தங்கள் உரிமைகளைப் பெற்று, தமிழீழம் அமைதியாக இருக்க வேண்டும் என்பதே என்னைப் போன்ற பல தமிழர்களின் எண்ணங்களாக உள்ளது. இந்தப் பிரச்சனையின் நேரடி தாக்கத்தை உணராமல், நான் எழுதிய இந்தப் பதிவு எந்தளவுக்கு உண்மையான யதார்த்த நிலையை பிரதிபலித்து இருக்கும் என்று தெரியவில்லை.
ஆனால் அங்கு வாழ்ந்து, இந்தப் பிரச்சனைகளை அனுபவித்த பத்திரிக்கையாளர் சிவநாயகம் அவர்களின் "SRILANKA: WITNESS TO HISTORY" என்ற புத்தகத்தில் இருந்து சில வரிகளுடன் இந்த தொடரை முடித்துக் கொள்கிறேன்.
*************
In a country (ceylon) that earned its independence after 450 years of western colonial rule "without a shot being fired", the one dominating factor today is THE GUN
*************
1956ல் தமிழர்களுக்கு எதிராக நடந்த இனக்கலவரத்தில் தனக்கு ஏற்பட்ட அனுபவம் குறித்து சிவநாயகம் பின்வருமாறு கூறுகிறார்
A gang of thugs stormed into my compartment making threatening noises against all Tamils, and there I was, the only Tamil around, an obvious sitting target. They came for me. The ruffian in front barged in, swept my glasses off my face, and began dragging me... Except my black coated neighbour who was trying to reason out with my attackers not to harm me (who was immediately silenced with a blow on his face) the others merely watched, the women with sullen disapproval, but all of them fearing to come to my defence. The intention of ruffians was very clear. they had a brilliant thought in their heads, to push me out of the moving train!.....
Looking back at my train experience that morning, it dawned on me, at the 25th year of my life that bitter truth...I was a Tamil
What i failed to realise for myself, those thugs taught me. It was the kind of experience that changed my outlook in life forever.
*************
The Tamil Fedral Party under the leadership of that gentle christian Samuel James Chelvanayakam believed in the Philosophy of non-violent action as a way of protest against injustice. Tamils had traditionally come under the influence of the Indian Gandhian movement for independence from the time of the Jaffna Youth congress of the 1920s and 30s. The value of the concept of Satyagraha was, unlike in the case of the singhalese, ingrained in the Tamil mind. It is this that led them to organise what they believed was a peaceful satayagraha at the Parliament (Against the introduction of the "singhala only" bill in parliament on June 5, 1956)
The moment the volunteers and leaders reassembled at the hotel end (Galle Face), a waiting mob of more than a thousand sinhalese toughs fell on them like a pack of wolves in a most inhuman and cowardly attack. They (the satyagrahis) were thrashed and felled prostrate on the ground. Their placards were seized and the wooden poles used as clubs.Some were trampled upon, kicked, beaten and spat upon.
Not even a single satyagrahi raised in retaliation....
*************
The period of 1956 to 1960 was one of signifiance for another reason... The realisation had come that Tamils as a People could never expect a fair deal under a unitary set-up where power was permanently entrenched in a numerically powerful sinhala majority
*************
1972 saw the birth of the Tamil Tiger movement. 1972 also saw the promulgation of the Republican constitution which while turning the country into a virtual sinhala-buddhist state effectively alienated the Tamil people from the body politic...
Pirabakaran was barely eighteen when he founded the Tiger movement in 1972, what was then called the "Tamil New Tigers"
*************
இந்த தொடரை தொடர்ந்து வாசித்து வந்த பல நண்பர்களுக்கும், பின்னூட்டங்கள் எழுதியும், நேரிலும், தொலைபேசியிலும், மின்னஞ்சலிலும் என்னுடன் தொடர்பு கொண்ட அனைத்து நண்பர்களுக்கும் என் நன்றி
Saturday, July 08, 2006
சதுரங்க ஆட்டத்தில் "தமிழீழம்" - 8
By தமிழ் சசி | Tamil SASI | நேரம் 7/08/2006 06:20:00 PM
குறிச்சொற்கள் Sri Lanka, Tamil Eelam, இலங்கை, ஈழம்
Subscribe to:
Post Comments (Atom)
5 மறுமொழிகள்:
Recently Pro Sinhala Asian Tribune points out LTTE moles in SL Army. In spite of this piece of news was hyped by Asian Tribune for planting its own point of view against intermarriage among Sri Lankan communities, it seems ubiquitous Mr. Green aids and abets LTTE to get attract SL servicemen for working on LTTE's side.
6:58 PM, July 08, 2006Regarding Karuna's affair. It was certainly LTTE's big blunder. After Mahataya, LTTE leader seemed failing here by fully trusting Karuna, in spite of reports from his intelligence chief. However Karuna's affair is also a complex one, not like that of Mahataya. Karuna invoked the age old wound of East Vs. North for serving his purpose in the time of relative peace in the country after decades of fighting. Also, like Mahataya's affair, Karuna's affair was and still is much more connected to RAW rather than SL Army or government. SL Army, Muslim MPs of east and SL government did and do give him logistic support and cover for hiding under their wings, but the real puppetery is done by RAW. If one compares Mahataya affair with Karuna affair, both got started when these two got the chance to get directly in touch with foreigners (read Indian agents). Mahataya through IPKF in Jaffna, and Karuna mainly when he was taken out of the country for peace talk. Karuna had his own weaknesses what took him to this level to save his head and of course, his wife's.
http://www.tamilcanadian.com/pageview.php?ID=4184&SID=59
http://www.sibernews.com/the-news/sri-lanka/raw-aiding-paramilitary-recruitment-in-india-%11-report-200606254682/
மாத்தையா பிரச்சினையென்பது நூற்றுக்கு நூறு வீதமும் RAW உடன் சம்பந்தப்பட்டதே. சிறிலங்காப் புலனாய்வு அமைப்புக்கும் இந்தப்பிரச்சினைக்கும் எந்தத் தொடர்புமில்லை.
9:44 PM, July 08, 2006கருணா பிரச்சினை பற்றிய குழப்பங்கள் இன்னுமுண்டு. அடிப்படையில் இயக்க நடைமுறைகளையும் கட்டுப்பாட்டையும் மீறிச் செயற்பட்டதால், அதற்குரிய இயக்க நடைமுறையை எதிர்கொள்ளப் பயந்ததால் ஏற்பட்ட விளைவென்று நம்பவே நிறையச் சாத்தியமுண்டு.
ஆனால் அவ்வாறு நடைமுறைகளையும் கட்டுப்பாட்டையும் மீறிச் செயற்படத் தூண்டியவை தொடர்பில் புலனாய்வு அமைப்புக்கள் இருக்கலாம். பிரச்சினையின் பின்னர்தான் அவரைப் பல சக்திகள் கையாண்டன என்பதே பெருமளவு உண்மை. இன்று 'கருணா' என்ற அவரது பெயர் மட்டுமே பிரச்சினையோடு சம்பந்தப்பட்டுள்ளது.
கருணா பிரச்சினை புலிகளின் தலைமைத்துவத்துக்குச் சரியான பாடம். தொடக்கத்திலேயே முறைப்பாடுகள் வரத்தொடங்கினாலும் தலைமை சமாளித்துக் கொண்டிருந்தது. பொதுமக்களுள்கூட விசயங்கள் கசிந்திருந்தன. தலைமை பொறுத்தது கருணாவில் நம்பிக்கை அடிப்படையிலா, அல்லது திடீரென நடவடிக்கை எடுத்தால் கிழக்கில் ஏற்படப்போகும் தளம்பலைக் கருத்திற்கொண்டா என்று தெரியவில்லை. ஆனால் நிலமைகள் நன்கு வளர்ந்தபின்னும் மட்டு - அம்பாறையை தலைமைச் செயலகத்தின் கீழின்றி தனித்தே இயங்கவிட்டது முக்கிய தவறாக இருக்கும்.
ஆனால் 'கருணா பிளவு' என்ற சொல்லூடாக வெளிப்படுத்தப்படுவது, புலிகள் இயக்கம் பிளவுபட்டதைப் போன்ற தோற்றத்தை. இது சரியாகத் தெரியவில்லை. பிற சக்திகளும் புலிகள் பிளவுபடுவார்கள் என்றே நினைத்தனர். ஆனால் இப்பிரச்சினையை எதிர்கொண்ட விதம் அனைவரும் எதிர்பாராது. ஐயாயிரம் போராளிகளும் கனரக ஆயுதங்களும் கருணாவின் பின்னால் என்ற அளவில்தான் அப்போது எல்லோரும செய்திகள் எழுதினர். பிரபா படையா கருணா படையா பலமானது என்று எத்தனை ஆய்வுக்கட்டுரைகள் வந்தன?
முறியடிப்புப் புலனாய்வில் மாத்தையா, கிருபன் சதிகளை முறியடித்ததன் மூலம் புலிகள் தமது திறமையை வெளிப்படுத்தியுள்ளனர். யாழ்ப்பாணத்தைக் கட்டுப்பாட்டில் வைத்திருந்த காலத்தில் இருந்ததைவிட வன்னியில் புலிகளின் முறியடிப்புப் புலனாய்வு மிக உயர்மட்டத்தை அடைந்தது. பொதுவாக புலிகளின் புலனாய்வுத் திறன் என்றால், எதிரிமீதான நடவடிக்கையாக மட்டுமே பார்க்கப்படுகிறது. ஆனால் அதைவிட மிகமேலோங்கிய உயர்தரமான வெற்றிகளை தம்மீதான முயற்சிகளை முறியடித்து ஈட்டியுள்ளனர்.
புலனாய்வுக்கு அடிப்படையே பொருளாதாரம் தான். நீங்களும் அதைக் குறிப்பிட்டிருக்கிறீர்கள். ஆனால் அரசோடு ஒப்பிட்டுப் பார்த்தால் புலிகளுக்கிருக்கும் வளம் மிகமிகச் சிறியது. அதைக்கொண்டு அவர்கள் இவ்வளவு செய்வதே இமாலய சாதனைதான்.
சசி,
1:11 AM, July 09, 2006வணக்கம்.உங்களிடமிருந்து மீண்டுமொரு அருமையான பதிவு.
/* இதில் முதல் சுற்றில் வெற்றி பெற்றிருப்பது, புலிகள் அல்ல. சிறீலங்கா உளவுப்படை தான் வெற்றி பெற்றிருக்கிறது. */
இக் கருத்துடன் எனக்கு உடன்பாடில்லை என்பதைத் தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.
/* புலிகள் இயக்கத்தின் மிக முக்கியமான தலைவராக இருந்த கருணாவை அவர் சமாதானப் பேச்சுவார்த்தை குழுவில் இருந்த பொழுது தான் சிறீலங்கா உளவுப்பிரிவினர் தங்கள் பக்கம் இழுத்து விட்டனர் */
சமாதான பேச்சுக்கள் நடந்து கொண்டிருந்த போது சிங்கள உளவுப்படை கருனாவைத் தம் வசப்படுத்தியது என்பது தவறான கருத்து என்பது என் எண்ணம். பழம் நழுவி பாலுக்குள் வீழ்ந்தது போல் கருனா தானாகச் சென்றுதான் சிங்கள உளவுப்படைகளிடம் சரனடைந்தானே ஒழிய ,சிங்களப் படைகள் தாமாக அவனைத் தம்வசம் இழுக்கவில்லை என்பதை நினைவுபடுத்த விரும்புகிறேன். தனக்கெதிராகத் தலைமைப்பீடம் எடுக்கவிருந்த ஒழுங்கு நடவடிக்கைக்குப் பயந்து மட்டக்களப்பில் உள்ள ஜக்கிய தேசியக் கட்சி உறுப்பினர் ஒருவரைக் கருனா தொடர்பு கொண்டு தனக்கு உதவி செய்யுமாறு கேட்டுக்கொண்டான். அதன் பின்னர் தான் சிங்கள உளவுப்படை அவனைத் தொடர்பு கொண்டது. ஆகவே சிங்கள உளவுப்படைதான் கருனாவை புலிகளிடமிருந்து பிரித்ததென்பது தவறானது என்றே நான் நினைக்கிறேன்.
/* மாத்தையா தொடங்கி கருணா வரை பலக் காலங்களாக புலிகளை பிளவு படுத்தும் முயற்சியை சிறீலங்கா உளவுப்படை (இந்திய உளவுப்படை ஆதரவுடன்) தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது. */
மாத்தையா விடயத்தில் இந்திய உளவு நிறுவனமான ரா தான் 99% காரணம்.
இப்போதும் புலிகளின் தலைவர் பிரபாகரனை எப்படியாவது கொல்வதென்பதில் ரா உறுதியாக இருக்கிறது. அதற்காகப் பல முயற்சிகளிலும் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றது. ரா மாத்தையாவைத் தமது தேவைகளுக்குப் பயன்படுத்த முன்னர் TELO என்ற போராட்டக்குழுவை வளர்த்து அதன் மூலம் புலிகளை அழிக்கத்தீட்டிய திட்டம் புலிகளால் வெற்றிகரமாக முறியடிக்கப்பட்டதையும் நினைவு கூர விரும்புகிறேன். யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தை TELO அமைப்புத் தாக்கிய போது இந்திய உளவுப்படையுடன் சில இந்திய இராணுவ வீரர்களும் அத் தாக்குதல் வெற்றி பெற தாக்குதல் நடந்த இடத்திலேயே நின்று வழிநடத்தியதும் நாம் அறிந்ததே.
Dear Sasi
3:47 AM, July 09, 2006why you did not read SL Govt- LTTE
Peace Fact? .
"யானையிறவு" என்று அழைக்கப்படுவதில்லை
9:32 AM, July 11, 2006"ஆனையிறவு" தான் சரி
______
CAPital
http://1paarvai.wordpress.com/
Post a Comment