Thursday, November 27, 2008

இஸ்லாமிய அடிப்படைவாதமும், தேசிய இனங்களின் விடுதலைப் போராட்டமும்

மும்பையில் இது வரை பார்த்திராத வண்ணம் மிகவும் கோரமான பயங்கரவாதச் செயல்களை பயங்கரவாதிகள் நிக்ழ்த்தியுள்ளனர். ஒபாமா அமெரிக்க குடியரசு தலைவராக பதவியேற்பதற்கு முன்பாக ஏதாவது பயங்கரவாதச் சம்பவத்தினை அல்கொய்தா நிகழ்த்தும் என்று பொதுவாக எதிர்பார்க்கப்பட்டது. அது போலவே அமெரிக்க, பிரிட்டிஷ், இஸ்ரேலியர்களை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிகிறது. ரயில் நிலையங்களில் இருந்த அப்பாவி மக்கள் மீதும் கண்மூடித்தனமான தாக்குதல்கள் நடத்தப்பட்டிருக்கின்றன. இந்த தாக்குதல்கள் மனித நேயம் உள்ள யாரையும் பதறவே செய்யும். இந்த தாக்குதல்களில் பலியாகிய மக்களுக்கு - அவர்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவராக இருந்தாலும் என்னுடைய அஞ்சலியை செலுத்துகிறேன்.

இந்த நேரத்தில் இந்திய உளவு நிறுவனங்கள் என்ன செய்து கொண்டிருக்கின்றன என்ற கேள்வி இயல்பாக எழுகிறது. இந்த தாக்குதல்களை 9/11 உடன் ஒப்பிடுகிறார்கள். 9/11க்கு முன்பான காலங்களில் அமெரிக்காவில் பெரிய தாக்குதல்கள் நிகழ வில்லை. அதற்கு பிறகு ஒரு தாக்குதல் கூட நடக்க முடியாத அளவுக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருக்கிறது.

ஆனால் இந்தியாவில் கடந்த ஒரு வருடத்தில் எத்தனை தாக்குதல்கள் நடைபெற்று இருக்கின்றன என்பதை எண்ணிப் பார்க்கும் பொழுது கவலை ஏற்படுகிறது. கடந்த ஒரு வருடத்தில் மட்டும் பல்வேறு குண்டுவெடிப்புகளில் இந்தியாவில் சுமார் 500க்கும் அதிகமான அப்பாவி மக்கள் கொல்லப்பட்டிருக்கின்றனர். ஈராக்கிற்கு அடுத்ததாக இந்தியாவில் தான் இவ்வளவு அதிகப் பேர் குண்டு வெடிப்புகளில் பலியாகியுள்ளதாக ஒரு பத்திரிக்கை கூறுகிறது. தொடர்ச்சியாக தாக்குதல் நடத்தப்பட்டு வரும் நிலையில் இந்தியாவின் உளவு நிறுவனங்கள் என்ன தான் செய்து கொண்டிருக்கின்றன என்ற கேள்வியை எழுப்பியாக வேண்டும்.

இன்றைய தினமணி தலையங்கத்தில் எழுப்பபட்டிருக்கும் சில கேள்விகள்நியாயமானவை...

பத்து இடங்களில் கடந்த பத்து மாதங்களாகத் தொடர்ந்து குண்டுகள் வெடித்தும், பல உயிர்கள் பலியாக்கப்பட்டும், அறிக்கை கொடுப்பதைத் தவிர வேறு எதுவுமே செய்யாமல் குண்டுக்கல்லாக ஓர் உள்துறை அமைச்சர் இருக்கிறார் என்பது தான் அவர்களது தைரியம். அவரைப் பார்த்தாலும் சரி, அவருடைய செயல்பாடுகளும் சரி, இந்தியாவில் நாம் எந்தவித பயங்கரவாதச் செயலில் ஈடுபட்டாலும் அதைப்பற்றி சற்றும் கவலைப்படாத உள்துறை அமைச்சகம் இருக்கிறது என்பதுதான் அவர்களுக்குத் துணிவைக் கொடுத்திருக்க முடியும். இத்தனைக்குப் பிறகும் உள்துறை அமைச்சரை மாற்ற வேண்டும் என்று பிரதமரும் நினைக்கவில்லை, தனது கையாலாகத் தனத்தை ஒத்துக்கொண்டு ராஜிநாமா செய்ய வேண்டும் என்று அமைச்சரும் நினைக்கவில்லை. என்ன பொறுப்பற்றதனம்?

கடந்த பத்து ஆண்டுகளாக, சூப்பர் உள்துறை அமைச்சராகவும், நிழல் பிரதமராகவும் செயல்படுபவர் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் என்கிற பதவியை வகிப்பவர். அவர் எதுவுமே பேசக்காணோமே, ஏன்? இப்படித்தான் தொடர்ந்து பயங்கரவாதச் செயல்கள் நடக்கும் என்றால், எம்.கே. நாராயணன் ஏன் தேசியப் பாதுகாப்புச் செயலராகத் தொடர வேண்டும்? அப்படி ஒரு பதவியின் அவசியம்தான் என்ன? இத்தனைக்கும் அவர் முன்னாள் உளவுத்துறைத் தலைவர். அந்தப் பதவிக்கு எந்தவிதப் பொறுப்பும் கிடையாதா?

பாவம் எம்.கே.நாராயணன். அவரை எதுவும் சொல்லாதீர்கள். அவர் இலங்கைப் பிரச்சனையின் ஸ்பெஷலிஸ்ட் (specialist on Sri Lankan affairs). அவ்வளவு தான். அவர் கவனம் முழுவதும் சிறீலங்கா இராணுவம் கிளிநொச்சியையும், முல்லைத்தீவினையும் எப்படி பிடிக்கப் போகிறது என்பதில் தான் உள்ளது. ஆனால் தேவைப்படும் விஷயத்தில் கோட்டை விட்டு விடுவார்.

இந்தியாவில் முன் எப்பொழுதும் இல்லாத வகையில் ஒரு ஆண்டில் சுமார் 500 அப்பாவி மக்கள் இத்தகைய குண்டுவெடிப்புகளில் பலியாகியுள்ளனர். இந்தியாவில் பாதுகாப்பு பலவீனமாக உள்ளதால் தான் அல்கொய்தா இந்த தாக்குதலை நடத்தியுள்ளது என இங்குள்ள தொலைக்காட்சிகளில் கூறப்படுகிறது. அல்கொய்தாவோ அல்லது பாக்கிஸ்தானில் உள்ள வேறு ஏதேனும் பயங்கரவாத அமைப்புகளோ, எதுவாக இருந்தாலும் இந்திய அரசாங்கம் வழக்கம் போல பாக்கிஸ்தானை குற்றம் கூறி தப்பி விட முடியாது. பாக்கிஸ்தானில் இருந்து வந்து இருந்தாலும் மும்பை கடற்கரை வழியாக வரும் அளவுக்கு பாதுகாப்பில் இருந்த பிரச்சனைகள் குறித்த கேள்வி எழுகிறது.

தமிழக கடற்கரையோரங்களில் பலமான கண்காணிப்பு கடற்ப்படையால் மேற்கொள்ளப்படுகிறது. புலிகளுக்கு வரும் கப்பல்கள் பற்றிய உளவு செய்திகளை கூட சிறீலங்கா அரசாங்கத்திற்கு இந்தியா கொடுத்து உதவுகிறது. அவ்வளவு அசுரபலம் கொண்ட இந்தியாவால், இந்தியாவின் முக்கிய நகரமான மும்பையில் கடல்வழியாக தீவிரவாதிகள் நுழைந்து தாக்குதல் தொடுத்து இருப்பதை ஏன் தடுக்க முடியவில்லை என்ற கேள்வி எழுகிறது ?

இந்தியா தன்னை "உலகின் அடுத்த வல்லரசு" என்பதை முதலில் மறக்க வேண்டும். அமெரிக்கா உலகின் வல்லரசு என்றால் அது தன்னுடைய நாட்டினை சரியாக பாதுகாக்கிறது. 9/11க்குப் பிறகு அமெரிக்க சுரங்க ரயில்களில் (Subway) எத்தகைய பாதுகாப்பு உள்ளது என்பது இங்கிருப்பவர்களுக்கு தெரியும். தன்னுடைய நாட்டினை சரியாக பாதுகாக்க முடிந்த அமெரிக்காவிற்கு இணையாக இந்தியா தன்னை வல்லரசாக நினைப்பதால் தான் சோமாலியாவிற்கு சென்று கடற்கொள்ளையர்களை தாக்குகிறது. ஆனால் தன்னுடைய கடல் எல்லைக்கு அருகே இருந்து வரும் பயங்கரவாதிகளின் கப்பலை கண்டுபிடிக்க முடியவில்லை. சோமாலியாவிற்கு சென்று கப்பல் முதலாளிகளை பாதுகாக்க தெரிந்த இந்தியாவால் அப்பாவி தமிழக மீனவர்களை காப்பாற்ற முடிவதில்லை. இப்பொழுது மும்பையையும் காப்பாற்ற முடியவில்லை.

*******

இஸ்லாமிய அடிப்படைவாதத்தை பயங்கரவாதம் என வரையறை செய்வதில் எனக்கு எந்த மாற்று கருத்தும் இல்லை.

ஆனால் பயங்கரவாதம் என்று வரும் பொழுது எல்லாவற்றையும் தட்டையாக பயங்கரவாதம் என அடைத்துவிடும் போக்கு நிலவி வருகிறது. இஸ்லாமிய அடைப்படைவாதம் என்ற ஒன்றினை மையப்படுத்தி அனைவரையும் பயங்கரவாதிகள் என்ற நோக்கில் பார்க்கப்படும் ஒரு போக்கு நிலவி வருகிறது. விடுதலைப் போராட்ட அமைப்புகளையும், இஸ்லாமிய அடைப்படைவாதத்தையும் தட்டையாக பயங்கரவாதிகள் என வரையறை செய்வது தந்திரமானது.

இங்கு அரசாங்கங்கள் செய்யும் பயங்கரவாதச் செயல்கள் கவனிக்கப்படுவதில்லை. தன்னுடைய மக்கள் மீதே குண்டு வீசும் அரசாங்கத்தை பயங்கரவாத அரசாக யாரும் பார்ப்பதில்லை. ஆனால் அதனை எதிர்த்து பதில் தாக்குதல் நடத்தும் அரசாங்கம் அல்லாத அமைப்புகள் மட்டுமே பயங்கரவாதிகளாக பார்க்கப்படுகின்றனர். தமிழ்ச்செல்வன் போன்றோரின் படுகொலைகள் இராணுவ நடவடிக்கைகளாக பார்க்கப்படுகின்றன. பொன்சேகா என்ற இராணுவத் தலைமையின் மீது நடத்தப்படும் தாக்குதல் பயங்கரவாதமாக பார்க்கப்படுகிறது. பயங்கரவாதம் என்று சொல்லப்பட்டால் இரண்டையும் ஒரே தராசில் எடைபோட வேண்டும்.

ஈழப்போராட்டம் நடைபெற்று கொண்டிருக்கும் காலக்கட்டத்தில் இஸ்லாமிய அடிப்படைவாதம் அசுர வளர்ச்சி பெற்றதே ஈழப்போராட்டம் அடைந்த முக்கிய பின்னடைவுகளுக்கு காரணமாக நான் கருதுகிறேன். 2002ல் புலிகள் இராணுவத்தைக் காட்டிலும் பலமாக இருந்தனர். ஆனையிறவை கைப்பற்றி யாழ்ப்பாணத்தை நோக்கி செல்லக்கூடிய சூழ்நிலையில் தான் அமெரிக்காவில் இரட்டைக் கோபுரங்கள் இஸ்லாமிய அடிப்படைவாதிகளால் தகர்க்கப்பட்டன. உலகில் இருந்த பல அமைப்புகளின் செயல்பாடுகள் குறித்து அப்பொழுது கேள்விகள் எழுப்பபட்டன. அந்த அமைப்புகளின் விடுதலை நோக்கங்கள் புறந்தள்ளப்பட்டு அனைத்து ஆயுதப் போராட்ட குழுக்களையும் பயங்கரவாத அமைப்புகளாக பார்க்கும் போக்கு தோன்றியது.

இந்த மாற்றத்தை சிறீலங்கா போன்ற நாடுகள் பயன்படுத்துக் கொண்டன. தேசிய விடுதலையை முன்னெடுத்த அமைப்புகளை பயங்கரவாத அமைப்புகளாக பிற நாடுகளைப் பார்க்க வைத்தன. அந்த வளையத்தில் இருந்து புலிகள் போன்ற அமைப்புகளால் வெளியேற முடியாத சூழ்நிலை உள்ளது. இன்று அனைத்து உலக நாடுகளும் சிறீலங்காவிற்கு உதவி செய்து வருகின்றன. புலிகளின் தற்போதைய பின்னடைவிற்கு இதுவே காரணம்.

அமெரிக்காவின் அடுத்த வெளியூறவுத்துறை அமைச்சராக பொறுப்பேற்ககூடும் என எதிர்ப்பார்க்கப்படும் ஹில்லரி க்ளிண்டன் பயங்கரவாதம் குறித்து பின்வருமாறு கடந்த வருடம் கூறினார்.

Well, I believe that terrorism is a tool that has been utilized throughout history to achieve certain objectives. Some have been ideological, others territorial. There are personality- driven terroristic objectives. The bottom line is, you can't lump all terrorists together. And I think we've got to do a much better job of clarifying what are the motivations, the raisons d'être of terrorists. I mean, what the Tamil Tigers are fighting for in Sri Lanka, or the Basque separatists in Spain, or the insurgents in al-Anbar province may only be connected by tactics. They may not share all that much in terms of what is the philosophical or ideological underpinning. And I think one of our mistakes has been painting with such a broad brush, which has not been particularly helpful in understanding what it is we were up against when it comes to those who pursue terrorism for whichever ends they're seeking.

பயங்கரவாதத்தையும், விடுதலைப் போராட்டத்தையும் வேறுபடுத்தி பார்க்க வேண்டிய தேவையை ஹில்லரி முன்வைத்தார்.

*******

மும்பையில் நடைபெற்றிருக்கும் தாக்குதலை மையப்படுத்தி தற்பொழுது தமிழகத்தில் ஈழப்போராட்டத்திற்கு ஆதரவான உணர்வுகளை அடக்கும் ஒரு முயற்சி நடக்கக்கூடும். இஸ்லாமிய அடிப்படைவாதத்தை முழுமையாக நிராகரிப்பதும், அப்பாவி மக்களின் மீது நடத்தப்படும் தாக்குதல்களை கடுமையாக கண்டிப்பதும் நம்முடைய தார்மீக கடமையாகும். அதே நேரத்தில் சிறீலங்கா அரசாங்கம் தொடுத்து வரும் அரசு பயங்கரவாதத்தை எதிர்ப்பதும், அந்த அரசு பயங்கரவாதத்திற்கு எதிரான ஈழ விடுதலைப் போராட்டத்தை ஆதரிப்பதும் அவசியமாகிறது.

பயங்கரவாதத்திற்கும், விடுதலைப் போராட்டத்திற்கும் இருக்கும் வேறுபாட்டினை நாம் தமிழக/இந்திய மக்களிடம் முன்வைக்க வேண்டும்.

58 மறுமொழிகள்:

Anonymous said...

உளவுத்துறையும், உள்துறையும் இனி துணி துவைக்கப்போலாம்.

இளா

12:12 AM, November 28, 2008
Anonymous said...

தீவிரவாதிகளுக்கு மதமில்லை. மாலேகான் குண்டு வெடிப்பிலும் யாரோ ஒரு இஸலாமிய அமைப்புதான் பொறுப்பேற்றுக் கொண்டதாக சொல்லப்பட்டது.
//இஸ்லாமிய அடிப்படைவாதத்தை பயங்கரவாதம் என வரையறை செய்வதில் எனக்கு எந்த மாற்று கருத்தும் இல்லை// என உடனே ஆரம்பித்து விடுகின்றீர்கள். சே....
தீவிரவாதம் எந்த பெயரில் வந்தாலும் தீவிரவாதம் எதிர்க்கப்பட வேண்டும்.
சில மீடியா வார்த்தைகளைக் கேட்டு உடனே எழுத்து பயங்கரவாதம் செய்பவர்களும் தீவிரவாதிகளுக்கு துணை போகிறவர்கள்தான்.

12:51 AM, November 28, 2008
Unknown said...

//இஸ்லாமிய அடிப்படைவாதத்தை முழுமையாக நிராகரிப்பதும்,//
இஸ்லாம் பெயரில் இயங்கும் தீவிரவாதிகளை இந்தியா வேட்டையாடுவதை இந்திய இஸ்லாமியர்கள் எதிர்க்கிறார்கள் என்பது போல் ஒரு மாயையை இந்துத்துவ வியாதிகள் தான் பரப்புவார்கள்?

1:44 AM, November 28, 2008
Anonymous said...

பல்வேறு விசயங்களோடு ஒத்துப்போகிறேன். புலிகள் வந்தால் தமிழகம் பிரிந்துபோய்விடும் என்று காட்டுக்கூச்சல் போடும் உளவுத்துறைக்கு இனிமேலாவது காஷ்மீரத்துக்கும் தமிழகத்தும் உள்ள வித்தியாசங்கள் புரியட்டும்! யார் தீவிரவாதிகள் என்ற தெளிவான சிந்தனை உதயமாகட்டும்! நன்றி!

அன்புடன்
ஓசை செல்லா

1:51 AM, November 28, 2008
Anonymous said...

நல்ல கட்டுரை.

பயங்கரவாதத்திற்கும் தமிழீழ விடுதலைப்போருக்குமான வேறுபாட்டை மக்கள் நன்கு புரிந்துகொண்டு இருக்கிருக்கிறார்கள்.

பார்ப்பன மற்றும் காங்கிரஸ் கூட்டங்கள் தான் தங்கள் வயிற்றுப்பிழைப்புக்கு சூழ்ச்சியில் இறங்கியிருக்கிறார்கள்.

நீங்கள் சொல்வது போல் இந்த வேடதாரிகளின் பிரசங்கத்தை நாம் தொடர்ந்து முறியடிக்கவேண்டும்.

1:51 AM, November 28, 2008
Anonymous said...

Sasi

Well written. People should understand the difference..
Renga

2:07 AM, November 28, 2008
மு மாலிக் said...

"இந்த மாற்றத்தை சிறீலங்கா போன்ற நாடுகள் பயன்படுத்துக் கொண்டன. தேசிய விடுதலையை முன்னெடுத்த அமைப்புகளை பயங்கரவாத அமைப்புகளாக பிற நாடுகளைப் பார்க்க வைத்தன. அந்த வளையத்தில் இருந்து புலிகள் போன்ற அமைப்புகளால் வெளியேற முடியாத சூழ்நிலை உள்ளது. இன்று அனைத்து உலக நாடுகளும் சிறீலங்காவிற்கு உதவி செய்து வருகின்றன. புலிகளின் தற்போதைய பின்னடைவிற்கு இதுவே காரணம்."


ரயில் நிலையங்களிலும், பேருந்துகளிலும், மத ஆலயங்களிலும் குண்டுகளை வைப்பதில் புலிகளும், இஸ்லாமிய தீவிரவாதிகளும் ஈடுபட்டாலும், இருவரும் வேறுபட்டவர்கள் என்று நீங்கள் கூறுவது புரிகிறது. :-)

புலிகளையும் இஸ்லாமியத் தீவிரவாதிகளையும் போட்டுக் குழப்பிக் கொள்கிறவர்கள் தெளிவடைவார்களாக.

மும்பையில் ஏற்பட்டுள்ள கொடூரத்தினை அனைவரும் கண்டிப்பாக கண்டிக்க வேண்டும். ஆனால் மெய்சிலிர்க்கும் விஷயம்: இலங்கையின் தமிழ் தேசியக் கூட்டணியைச் சேர்ந்த பாராளுமன்ற தலைவர் கண்டித்துள்ளார். அதைவிட முக்கியம்: அது தமிழ்னெட்டில் வந்துள்ளது.

உங்களுக்கும் வாழ்த்து. தமிழ் நெட்டுக்கும் வாழ்த்து.

2:31 AM, November 28, 2008
Anonymous said...

யுத்த நடவடிக்கை சாராத / இராணுவம் சாராத / அரசியல் சாராத / அப்பாவி மக்களை கொலை செய்பவர்கள் - அச்செயலை ஆதரிப்பவர்கள் ஊக்கப்படுத்துபவர்கள் என அனைவரும் ஈவிரக்கமற்று கண்டிக்க தண்டிக்கப் பட வேண்டியவர்கள்.

2:46 AM, November 28, 2008
Osai Chella said...

நண்பர் சசி..

என் இக்கருத்துக்களையும் இக்கட்டுரையின் சாரத்தோடு இணைக்கிறேன்.

அன்புடன்
ஓசை செல்லா

3:05 AM, November 28, 2008
தமிழ் சசி | Tamil SASI said...

தீவிரவாதம் எந்த பெயரில் வந்தாலும் தீவிரவாதம் எதிர்க்கப்பட வேண்டும்.

****

அப்படி சொல்ல முடியாது என்பது தான் இந்தக் கட்டுரையின் நோக்கமே. பகத் சிங் கூட ஒரு காலத்தில் தீவிரவாதி தான். தீவிரவாதத்தின் நோக்கம் என்ன என்பது தான் நாம் இங்கே பார்க்க வேண்டியது.

விடுதலை அமைப்புகள் அமைதி வழியிலும் போராடி இருக்கிறார்கள். தீவிரவாதமாகவும் மாறியிருக்கிறார்கள். இவர்களின் நோக்கம் என்ன என்பது தான் இங்கே கேள்வி. அதைத் தான் நானும் சொல்கிறேன். ஹில்லரியும் தன் பேட்டியில் கூறியிருக்கிறார்.

இஸ்லாமிய அடிப்படைவாதம் என்றவுடன் உங்களுக்கு கோபம் வருகிறது போலிருக்கிறது :)

இஸ்லாமிய அடிப்படைவாதம், இந்து அடிப்படைவாதம், கிறுத்துவ அடிப்படைவாதம் என எல்லா அடிப்படைவாதத்தையும் எதிர்த்து தான் தீர வேண்டும்.

3:16 AM, November 28, 2008
தமிழ் சசி | Tamil SASI said...

வாங்க மாலிக்

என்னோட பழைய பதிவுல ஹிந்து ராமுக்கு வக்காலத்து வாங்கிக் கொண்டு ஹிந்து ராமின் நடுநிலைத்தன்மையை எண்ணி வியந்து போனது நீங்க தானே ? ஞாபகம் இருக்கிறது

அப்ப விவாதம் பண்ண நேரமில்லை அப்படின்னு ஓடிப்போயிட்டீங்க :)
இப்ப நேரம் இருக்கு போல...

இப்படி தட்டையான ஒற்றைப் பரிமாணத்துல நீங்க என்னை கொக்கி போடறதா நினைச்சு கேட்கறது எனக்கு சிரிப்பை தான் வரவைக்குது :)

ஈழத்தில் நடைபெறும் பிரச்சனை என்ன என்று உங்களுக்கு தெரியுமா ? சிங்கள அரசாங்கம் என்ன புத்தரின் வழியிலா ஆட்சி செய்யுது ? தன்னுடைய சொந்த மக்கள் மீதே குண்டு வீசும் ஒரே நாடு சிறீலங்கா தான். செஞ்சோலை ஞாபகத்தில் உள்ளதா ? அது என்ன என்றாவது தெரியுமா ? அது மட்டுமல்ல, புலிகளின் பகுதிகளில் ஒரு பயங்கரவாத அமைப்பு போலவே பள்ளி வேன்களுக்கு சிறீலங்கா அரசாங்கம் குண்டு வைத்துள்ளது என்றாவது உங்களுக்கு தெரியுமா ?

புலிகள் சிங்கள பேருந்துகளில் நடத்திய தாக்குதல் என்பது இத்தகைய சிறீலங்கா அரசாங்கம் முன்வைத்த தாக்குதல்களுக்கு பதில் தாக்குதல் தான். அதனை நான் நியாயப்படுத்தவில்லை. சிறீலங்கா அரசாங்கம் செய்ததும் தவறு தான். விடுதலைப் புலிகள் செய்ததும் தவறு தான். அப்பாவி மக்கள் மீது நடத்தப்படும் எந்த தாக்குதலையும் நாம் கண்டித்தே தீர வேண்டும்.

ஆனால் இனவெறிப்பிடித்த ஒரு அரசிடம் இருந்து என்ன தீர்வை எதிர்பார்க்க முடியும் ? அத்தகைய மோசமான ஒரு அரசாங்கத்திடம் இருந்து விடுதலையைப் பெற தமிழ் மக்களுக்கு விடுதலைப் புலிகள் தான் ஒரே தீர்வாக உள்ளனர் என்பது தான் என்னுடைய நிலைப்பாடு.

ஆனால் சிறீலங்கா அரசாங்கத்துக்கு வக்காலத்து வாங்கும் என்.ராமை வியக்கத்தக்கவராக போற்றும் நீங்கள் சிறீலங்கா அரசாங்கத்தின் தாக்குதல்கள் பற்றி என்ன நினைக்கிறீர்கள் ? நீங்கள் வியந்து பார்க்கும் என்.ராம் தமிழ் மக்களை இப்பொழுது சிங்கள இராணுவம் குண்டு வீசித்தாக்குகிறதே அதனை எப்படி ஆதரிக்கிறார் ? தமிழ் மக்கள் செத்து மடிந்தால் பரவாயில்லையா ?

உங்களுடைய பிரச்சனை புரிகிறது :)

நன்றி...

3:18 AM, November 28, 2008
மு மாலிக் said...

பல விஷயங்களைத் தெரியுமா என்று கேட்டுள்ளீர்கள். அவைகள் நீங்கள் விளங்கிக் கொண்டபடியே இருக்கட்டுமே.

நான் என்றதும் இந்து ராமிற்கு சென்று விட்டீர்கள் :)

இலங்கை அரசினை புத்த மகான் வழி ஆட்சி செய்யும் அரசு என நான் என்றும் நினைப்பதில்லை.

இலங்கை அரசு அவ்வப்போது இனவெறி கொண்டு பொது மக்களைத் தாக்கும்போது, அதற்கு எதிர்வினையாக புலிகள் தங்களைப் போர் நிறுத்தத்திலிருந்து விலக்கிக் கொண்டு செய்தவர்களைத் தாக்கும் ஒரு நிலையை எடுக்காமல், அதுவும் இனவெறி கொண்டு சிங்களப் பொது மக்களைத் தாக்கியதினை "தீவிரவாதமல்ல; அவைகள் வெறும் எதிர்வினைகள் தான்" எனக் கருத்துவைக்கும் உங்கள் போக்குப்புரிகிறது.


உண்மைதான்..... உங்கள் கோணத்தில் சிந்திக்கும் போது

அப்பாவி சிங்கள‌ மக்களைத் தாக்குவது தீவிரவாதமாகாது. ஏனெனில், ஒரு சாதாரண சிங்கள மனிதனின் மீது அன்பும் அரவனைப்பும் உடையவர்கள்தானே தமிழ் இனத்திற்கெதிரான விரோதிகள் ? எனவே ஒரு சிங்களனைக் கொன்றால் தமிழனைக் கொன்றவனைத் தாக்கியது போலாகும் !! எனவே தீவிரவாதமல்ல ! இதுதானே நீங்கள் சொல்ல வருவது.

ஏற்ற பழமொழி தெரியவில்லை. கதைக் கூறுவது நன்று: ஒரு குருவுக்கு கால் பிடித்துவிட இரு சீடர்கள். அவர்களுக்கு மத்தியில் வந்த பிணக்கினால் குருவின் கால் பாடுபடும் அக்கதைப்படி.

நிறம் சார்ந்த இனவெறியை எடுத்துக் கொள்வோம். சட்டென்று புரியும்.

ஒரு வெள்ளையனுக்கு கறுப்பினத்தின் மீதுள்ள வெறுப்பு தனது வெள்ளையினத்தின் மீதுள்ள விருப்பினால் நிகழ்கிறதா ?

ஒருவன் கறுப்பினத்தின் மீது எதிரான‌ வெறி கொண்டவன் என்பதால் அவன் வெள்ளை இனத்தினரை நேசிக்கின்றான் எனப் பொருளா ? ஒரு வெள்ளையனால் பாதிக்கப்பட்ட கறுப்பன், வேறொரு கறுப்பன் மற்றொரு சாதாரண வெள்ளையனைத் தாக்குதல். இரண்டும் சரிக்கு சமமானது தானே ?

தனது இனத்தின் மீதான பற்று, மற்ற இனத்தின் மீதான வெறி, இவையிரண்டும் ஒன்றுக்கு ஒன்று காரணமாகாது. பொதுவாக வெறிகொண்டவர்களுக்கு மற்ற இனங்களைக் கண்டாலே பிடிப்பதில்லை.

இலங்கையில் இதைத்தான் பலர் "இன உணர்வு" எனப் போற்றுகிறார்கள். இந்த உணர்வு தான் பொது மக்களைத் தாக்குவது "எதிர்வினை" எனப் பொருள்கொள்ளச் செய்கிறது.

4:39 AM, November 28, 2008
Anonymous said...

சிங்களப் பகுதிகளில் மேற்கொள்ளப் பட்ட பொதுமக்கள் மீதான தாக்குதல்கள் எல்லாவற்றையும் செய்தது புலிகள்தான் என்று நம்புகிறவர்களை சோல்லித் திருத்தமுடியாது.

4:45 AM, November 28, 2008
ஜெர்ரி said...

வணக்கம் சசி அறுமை.. நான் என்ன நினைத்தேனோ அதையேதான் நீங்களும் எழுதியிருக்கின்றீர்கள். குறிப்பாக நாராயணன் புலிகளை மட்டுமே பார்க்கிறார். அவர் உண்மையான பாதுகாப்பு அச்சுறுத்தல்களைப் பார்கவில்லை. பாவம் இப்போது இந்திய அரசுக்கு சிறிலங்காவைப் பாதுகாப்பதுதானே வேலை. பார்ப்போம்.. இனியாவது புலிவாலைப் பிடிப்பதை நிறுத்திவிட்டு... தனது சொந்த மக்களையாவது பாதுகாக்க யோசிக்கட்டும்.. யோசிப்பாங்க ஏன்னாக்கா அடிபட்டது தமிழ்நாட்டில் இல்ல மும்பை.. தமிழனைப் பற்றி கவலையில்லை என்றாலும்.. இனியாவது பொறுப்பா நடப்பாங்க.

8:18 AM, November 28, 2008
தமிழ் சசி | Tamil SASI said...

நான் என்றதும் இந்து ராமிற்கு சென்று விட்டீர்கள்
****

பழைய விவாதம் பாக்கியிருக்கே. அது மட்டும் இல்லாம, உங்களுடைய கருத்துகளிலேயே என்னை புல்லரிக்க வைத்த கருத்து ஹிந்து ராம் வியக்கத்தக்கவர் என்ற உங்களுடைய கருத்து தானே :))

நான் கேட்ட கேள்விக்கு இன்னும் நீங்க பதில் சொல்லவில்லை. இனவெறிப் பிடித்த சிறீலங்கா அரசாங்கத்திற்கு எதிராக தமிழர்களுக்கு என்ன தீர்வு ? விடுதலைப் புலிகள் தான் தீர்வு அப்படின்னு நான் நினைக்கிறேன். இல்லைன்னு நீங்க சொல்றீங்கன்னு நினைக்கிறேன். ஒரு தீர்வை சொல்லிடுங்க...

சிறீலங்கா இராணுவம் தொடர்ச்சியாக பொதுமக்கள் மீது குண்டுவீசித் தாக்கும் பொழுது, விடுதலைப் புலிகளின் விமானங்கள் இது வரை ஒரு முறை கூட பொதுமக்கள் மீது எந்த தாக்குதல்களையும் தொடுக்கவில்லை. இராணுவ நிலைகள் மீது மட்டுமே தாக்குதல் தொடுத்து உள்ளனர். மிகவும் சுலபமாக தாக்க கூடியதாக இருக்கிற பொதுமக்கள் மீது புலிகளின் விமானப் படை எந்த தாக்குதல்களையும் தொடுக்க வில்லை. அதிக பாதுகாப்பு வளையம் கொண்ட இராணுவ நிலைகளையே தாக்கி இருக்கிறார்கள்.

நான் ஏற்கனவே தெளிவாக கூறியிருக்கிறேன். என்னுடைய பல பதிவுகளிலும் அதைத் தான் கூறியிருக்கிறேன். அப்பாவி மக்கள் மீது நடத்தப்படும் எந்த தாக்குதல்களையும் ஆதரிக்க முடியாது. அதனை வன்மையாக கண்டிக்க வேண்டும். ஆனால் அந்த ஒற்றைப் பரிமாணத்தைக் கொண்டு மட்டும் ஒரு விடுதலை இயக்கத்திற்கான ஆதரவு/எதிர்ப்பு நிலையை முடிவு செய்து விட முடியாது. ஈழப் போராட்டம் பல பரிமாணங்களைக் கொண்டது. ஈழ விடுதலை என்ற நிலையில் இருந்து புலிகள் விலகியதில்லை. இஸ்லாமிய அடிப்படைவாதிகள் போல பொதுமக்கள் மீது குண்டு வைப்பது ஒன்றையே முக்கிய நோக்கமாக கொண்டவர்கள் அல்ல புலிகள். அவர்கள் ஒரு தேர்ந்த இராணுவ அமைப்பாக இராணுவ நிலைகள் மீது தான் தாக்குதல் தொடுத்து இருக்கின்றனர். இராணுவத்தை எதிர்த்து போராடி வருகின்றனர்.

இஸ்லாமிய அடிப்படைவாதிகள் நேரடியாக அமெரிக்க இராணுவத்தையோ, அமெரிக்க அதிகாரமையத்தையோ எதிர்த்து இது வரை ஒன்றும் செய்ததில்லை. அமெரிக்க பாஸ்போர்ட் வைத்திருக்கும் அப்பாவிகளை தாக்குவது மட்டுமே இவர்களின் நோக்கங்களாக உள்ளது. ஈராக், பாக்கிஸ்தான், ஆப்கானிஸ்தான் என இவர்கள் பல இடங்களில் முஸ்லீம் மக்கள் மீதும் தாக்குதல் தொடுத்து கொண்டிருக்கிறார்கள். சுலபமான இலக்கு அப்பாவி மக்கள் தான். அது மட்டுமே இஸ்லாமிய அடிப்படைவாத பயங்கரவாத அமைப்புகளின் இலக்காக உள்ளது.

நீங்கள் சுற்றி வளைத்து பேச வேண்டியதில்லை. முஸ்லீம்களுக்கும், புலிகளுக்கும் ஒத்து வராது. அதனால் எனக்கு புலிகளைப் பிடிக்காது என நீங்கள் நேரடியாகவே கூறிவிடலாம் :)

10:07 AM, November 28, 2008
Anonymous said...

இந்தியாவின் கடற்காவல் படையால் அடுத்த நாட்டு இராணுவம் அத்துமீறி தன் நாட்டு மீனவர்களையும் காப்பாற்ற முடியாது. கடல் வழியாக வந்து ஒரு மாநகரத்தில் தாக்குதல் நடத்தும் பயங்கரவாதிகளையும் தடுக்க முடியாது.

கடந்த சில மாதங்களாக ஆப்கான்-பாகிஸ்தான் எல்லையில் தலிபான்/அல் காய்தா இலக்குகளை அமெரிக்க இராணுவம் தாக்கி வருகிறது. பாகிஸ்தானால் தலிபான்/அல் காய்தா வை ஒடுக்கவும் இயலாத, அமெரிக்காவை எதிர்க்கவும் முடியாத செயலிழந்த நிலை. மும்பையில் நடந்த தாக்குதல்கள் அமெரிக்கவைப் பழிவாங்க நினைக்கும் அல் காய்தா தீவிரவாதத்தின் செயலாக இருக்கும் என்பது என் கணிப்பு. அமெரிக்க அரசு தன் எல்லையை பாதுகாத்து, தன் நாட்டில் இன்னொமொரு பெருந்தாக்குதல் நிகழாவண்ணம் செய்திருப்பது சாதனை தான். ஆனால் அதன் பக்க விளைவுகள் பிற நாடுகளை பாதிக்கிறது.

இப்பிரச்சினையின் நீண்ட காலத் தீர்வுக்கு இந்தியத்துணைக் கண்டத்தின் புவிசார் அரசியலில் இரு பெரிய மாற்றங்கள் நிகழ வேண்டும்.

1. காஷ்மீர் விடுதலை.
2. பாகிஸ்தானில் நிலையான ஜனநாயகம்.

இவ்விரண்டும் நிகழாத வரை இத்தகைய பயங்கரவாதம் தொடர்ந்துகொண்டு தானிருக்கும். பாகிஸ்தானின் தலைவர்கள் காஷ்மீர் பிரச்சினையில் தங்கள் நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டு, உள்நாட்டில் ஜனநாயகத்தை வளர்த்தெடுப்பதில் கவனம் செலுத்தவேண்டும். தற்போதைய அரசியல் கொள்கையால் பெரிதும் பாதிக்கப்படுவது பாகிஸ்தான் என்ற புரிதல் கூட அந்நாட்டின் தலைவர்களுக்கு இருப்பதாகத் தெரியவில்லை. ஜனநாயகம் பற்றி வாய்கிழிய பேசும் அமெரிக்காவும் தன் குறுகிய நோக்கங்களை கைவிட்டு பாகிஸ்தானிய ஜனநாயகம் வளர்வதில் கவனம் குவிக்க வேண்டும். அமெரிக்க அடிமையாக இருப்பது பாகிஸ்தானுக்கோ, பாகிஸ்தானை தன் கைப்பாவையாக வைத்திருப்பதால் அமெரிக்காவுக்கோ இதுவரை பெரிய பலன் இருந்ததாகத் தெரியவில்லை. இனிமேலும் பயன்தரப் போவதில்லை.

1:32 PM, November 28, 2008
தமிழ் சசி | Tamil SASI said...

அமெரிக்கவைப் பழிவாங்க நினைக்கும் அல் காய்தா தீவிரவாதத்தின் செயலாக இருக்கும் என்பது என் கணிப்பு. அமெரிக்க அரசு தன் எல்லையை பாதுகாத்து, தன் நாட்டில் இன்னொமொரு பெருந்தாக்குதல் நிகழாவண்ணம் செய்திருப்பது சாதனை தான். ஆனால் அதன் பக்க விளைவுகள் பிற நாடுகளை பாதிக்கிறது.

****

ஆம், இந்தக் கருத்திலே எனக்கு முழு உடன்பாடு உண்டு. மும்பையில் நடைபெற்றிருக்கும் தற்போதைய தாக்குதலுக்கு காரணம் காஷ்மீர் பிரச்சனையை முன்வைக்கும் பாக்கிஸ்தானைச் சேர்ந்த ஒரு அமைப்பு என்ற நோக்கிலோ, இந்தியாவில் இருக்கின்ற முஸ்லீம்களை மையப்படுத்தி பார்ப்பதோ உண்மையான பிரச்சனையை திசை திருப்பி விடும்.

இந்தப் பிரச்சனை லண்டன், மேட்ரிட் என தொடரும் அல்கொய்தா தாக்குதல்களின் மற்றொரு கோரமுகமே. பல நாடுகள் தங்களுடைய பாதுகாப்பினை பலப்படுத்தி கொண்ட நிலையில் அமெரிக்காவிற்கு நெருக்கமான நாடாக மாறி வரும் இந்தியா தன்னுடைய பாதுகாப்பினை இன்னும் ஆதி கால சூழ்நிலையிலேயே வைத்துள்ளது. தன்னுடைய நாட்டு மக்களை பாதுகாக்கும் பெரிய அக்கறை இந்தியாவிற்கு இருந்ததில்லை என்பதை தமிழக மீனவர் விஷயத்தில் இந்தியா நடந்து கொண்ட முறையே தெளிவாக வெளிப்படுத்தியுள்ளது. தமிழகத்தில் இருந்து எழுப்பிய குரலை வெறும் "தமிழ் தேசிய" நிலைப்பாடாக மட்டுமே பார்க்கப்பட்டது. இனி அவ்வாறு பார்க்க மாட்டார்கள் என நம்புவோம்.

இந்தச் சூழ்நிலையில் ஹிந்து மத அடிப்படைவாதிகள் வழக்கமான தங்கள் பிரித்தாளும் சூழ்ச்சியை வெளிப்படுத்த துவங்கியுள்ளனர். சட்டங்கள் கடுமையாக வேண்டுமாம். பொடா சட்டத்தால் என்ன நிகழ்ந்தது ? வைகோ போன்றவர்களை சிறையில் தள்ள தான் இது உதவியது. வெளிநாட்டில் இருந்து வரும் பயங்கரவாதிகளை உள்நாட்டு சட்டங்கள் என்ன செய்யும் ? தாஜ் ஹோட்டலிலும், ஓபராய் ஹோட்டலிலும் கண்ட்ரோல் ரூம் அமைத்து பாக்கிஸ்தானில் இருக்கும் தங்கள் தலைமையிடம் கட்டளைப் பெற்று பயங்கரவாதிகள் செயல்பட்டிருக்கிறார்கள்.

தங்களுடைய கையாலாகதனத்தை மறைக்க சட்டங்களா ? இதனால் அப்பாவி முஸ்லீம் மக்களை சந்தேகப்பார்வையுடன் பிடிப்பது தான் நிகழுமே தவிர பயங்கரவாதப் பிரச்சனைக்கு தீர்வு ஏற்படாது.

நீங்கள் கூறியுள்ளது போல இந்தப் பிராந்தியத்தில் இருக்கின்ற பிரச்சனைகள் அமைதியாக தீர்க்கப்பட வேண்டும். அவ்வாறு நிகழ்ந்தால் பயங்கரவாதம் இந்தப் பிராந்தியத்தில் இருந்து அகற்றப்பட வாய்ப்பு உள்ளது. காஷ்மீர், பாக்கிஸ்தான் மட்டுமில்லாது பங்களாதேஷ், சிறீலங்கா என அனைத்து இடங்களிலும் அமைதி நிலவ வேண்டும். அது தான் அனைத்து நாடுகளுக்குமே அமைதியை கொண்டு வரும்.

இந்தியா தன்னுடைய உள்நாட்டு பாதுகாப்பு என்றில்லாமல் அண்டை நாடுகளில் கடைப்பிடிக்கும் வெளிநாட்டு கொள்கைகளையும் மறுபரிசீலனை செய்ய வேண்டும். எம்.கே.நாராயணன் தலைமுறையை கடந்த, இன்றைய சூழலுக்கு ஏற்ற ஒரு அணுகுமுறை இந்தியாவிற்கு தேவைப்படுகிறது. அடுத்து அமையப்போகிற ஆட்சியிலாவது அத்தகைய ஒரு பார்வை கிடைக்கட்டும்.

3:06 PM, November 28, 2008
Viswa said...

உலகத்தின் நான்காவது பெரிய இராணுவம் என்று சொல்லிக் கொள்கிறோம். மற்ற நாட்டு வீரர்களுக்கு பயிற்சி அளிக்கின்றோம். காங்கோ குடியரசு நாட்டில் உள்ள பாதுகாப்பு படையில் 25% வீரர்கள் நம் நாட்டினர். ஆனால் நம் நாட்டில் நடைபெறும் தீவிரவாத்தையே நம்மால் கட்டுப் படுத்த் முடியவில்லை என்பது பெருத்த அவமானம்.

ஏதோ பழமொழி சொல்வார்கள், கூரை ஏறி கோழி பிடிக்க முடியாதவன் வானத்திலேறி வைகுந்தம் போனானாம்...

9:05 PM, November 28, 2008
Anonymous said...

pakistan is a failed state.it nedded IMF's assistance to meet
economic crisis.Baloochistan issue is a headache for Pakistan. The border areas are not at the control of the government.Weak
democracy, strong military and inflitration of militant islamists
into the government- these are going to make Pakistan a nation in trobule for years to come.Soon pressures for dividing the country will mount .Let us see what stand
muslim organizations in india
which support Kashmir militants
take then.

9:41 PM, November 28, 2008
மு மாலிக் said...

புலிகள் பொதுமக்களைத் தாக்குவதை ஆதரிக்கவில்லை எனக் கூறுகிறீர்கள். ஆனால் அதே சமயம் அது தீவிரவாதம் அல்ல எனக்கூறுகிறீர்கள். அதனைத் தீவிரவாத இயக்கமாக பல நாடுகள் அறிவித்ததைப் பற்றி ஆதங்கம் கொள்கிறீர்கள்.

இஸ்லாமியத் தீவிரவாதிகளை விட புலிகள் மேலானவர்கள் என நீங்கள் கூறுவதற்கு காரணமாக நீங்கள் முன் வைக்கும் கருத்து: இஸ்லாமியத் தீவிரவாதிகள் பொதுமக்களைக் கொள்வதை மட்டும் குறிக்கோளாக வைத்துள்ளார்கள், ஆனால் புலிகளோ பொதுமக்களைக் கொள்வதோடு எதிரிகளையும் இலங்கை அரசினையும் ஒரு பதம் பார்க்கிறார்கள்.

அருமை அருமை. :-)

இராணுவங்களை அல்காயிதாவோ தாலிபான்களோத் தாக்கும் அத்தகைய நிகழ்வுகள் நடக்கவில்லை என நீங்கள் சொல்வது வியப்பளிக்கிறது.

இஸ்லாமியத் தீவிரவாதிகள், அவர்களது எதிரிகளான இந்துத் தீவிரவாதிகளைத் தாக்கிய சம்பவங்களையோ அமெரிக்க/இஸ்ரேலிய அரசுகளைத் தாக்கிய சம்பவங்களையோ உங்களுக்கு எடுத்துக் காட்டப்பட்டால், அல் காயிதா, ஜெமா இஸ்லாமியா மற்றும் சிமி மீதான தடைகளை விலக்கக் கோருவீர்கள் போலுள்ளது. :-)

இலங்கைப் பிரச்சனைக்கு தீர்வு என்ன வென்று சாமனியமான என்னிடம் கேட்டுள்ளீர்கள். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவிதமான தீர்வு மனதில் இருக்கும். நான் நினைப்பதினை அடுத்த பின்னூட்டத்திலோ அல்லது இமெயிலிலோ தர முயற்சிக்கிறேன்.

( இந்து ராம் அவர்களை நடுனிலையானவர் என நான் சொல்லியது சராசரியாகத்தான் . நான் எடுத்துக்கொண்ட காரணிகளை அப்பின்னூட்டத்திலேயே கூறியுள்ளேன். மேலும் அது சீனா திபெத் அரசியல் சம்பத்தப்பட்டது.

இந்து ராம் அவர்கள் புலிகளை எதிர்ப்பவர். ஆனால் "இலங்கை சிங்களவர்களுக்கே" எனும் அரசின் நிலைக்கு ஆதரவானவர் என்பதினை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது. விருதுகள் பலரும் தர முன்வருவார்கள். அவர் இலங்கை அரசின் பெற்றுக் கொண்ட காரணத்தினால் புறம் தள்ளிவிட முடியாது. அதனை தார்மீக ரீதியில் மறுப்பது பொதுவாழ்க்கையில் ஈடுபடாத தனிமனிதனுக்கு அழகு. ஆனால் பத்திரிக்கையாளருக்கு அல்ல. அவ்வாறு செய்தால் அது அவரது நடுனிலையின் மீதான கேள்விக்குறியாகிவிடும். ஏனெனில் பத்திரிக்கையாளர் இருபக்கமும் சம்பத்தப்பட்ட செய்தினை மக்களுக்குத் தர கடமைப்பட்டவர். அச்செய்தியின் நம்பகத்தன்மை மீது கேள்விக்குறி எழாமல் இருக்க முயல்வது அவரது தவறல்ல.

மேலும் புலிகள் எனும் ஒரு இயக்கத்தின் மீது அவர் விமர்சனம் வைத்திருப்பது அவர் மறுபக்கம் சாய்ந்தவர் எனும் பொருளும் அல்ல. உதாரணத்திற்கு நானும் அரசின் இன்வெறிகளை ஆதரிப்பவன் கிடையாது. புலிகளின் இனவெறியினை எதிர்ப்பது போலவே)

11:26 PM, November 28, 2008
தமிழ் சசி | Tamil SASI said...

விருதுகள் பலரும் தர முன்வருவார்கள். அவர் இலங்கை அரசின் பெற்றுக் கொண்ட காரணத்தினால் புறம் தள்ளிவிட முடியாது. அதனை தார்மீக ரீதியில் மறுப்பது பொதுவாழ்க்கையில் ஈடுபடாத தனிமனிதனுக்கு அழகு. ஆனால் பத்திரிக்கையாளருக்கு அல்ல. அவ்வாறு செய்தால் அது அவரது நடுனிலையின் மீதான கேள்விக்குறியாகிவிடும். ஏனெனில் பத்திரிக்கையாளர் இருபக்கமும் சம்பத்தப்பட்ட செய்தினை மக்களுக்குத் தர கடமைப்பட்டவர். அச்செய்தியின் நம்பகத்தன்மை மீது கேள்விக்குறி எழாமல் இருக்க முயல்வது அவரது தவறல்ல.

****

மாலிக்,

நீங்கள் அடிக்கிற ஜோக்கைப் படித்தால் ஹிந்து ராமே வாய் விட்டு சிரிப்பார் :)
இன்னுமா இந்த ஊரு நம்பள நம்புதுன்னு :)

//
நான் நினைப்பதினை அடுத்த பின்னூட்டத்திலோ அல்லது இமெயிலிலோ தர முயற்சிக்கிறேன்.
//

அனுப்புங்கள்...காத்திருக்கிறேன் :)
பிறகு நிதானமாக பேசலாம்...

12:39 AM, November 29, 2008
Anonymous said...

மாலிக் ஒரு இசுலாமிய அடிப்படைவாதி என்பதை அவரது பதிவுகளிலும், பின்னூட்டங்களிலும் எளிதாகப் புரிந்து கொள்ளலாம். அவர் என்.இராமையும், சில சமயங்களில் இலங்கை அரசையும் கூட ஆதரிப்பதும், புலிகளை விமர்சிப்பதும், அமெரிக்காவைக் கண்மூடித்தனமாக விமர்சிப்பதும் இசுலாமிய அடிப்படைவாத மனநிலையில்தான். அவ்வவற்றின் பின்புல அரசியல் அடிப்படையினாலல்ல. சற்றும் தொடர்பில்லாத இடங்களில் கூட அவருடைய இசுலாமிய அடிப்படைவாதம் ஒளிந்திருந்து வெளிப்படுவதுண்டு. அதற்கு எடுத்துக்காட்டு அவருடைய இந்தப் பதிவு.

இப்படிப்பட்ட இசுலாமிய அடிப்படைவாதியான மாலிக்குடன் விவாதிப்பது, இந்துத்துவ அடிப்படைவாதியான டோண்டுவுடன் விவாதிப்பதற்குச் சமம். விட்டுத் தள்ளுங்கள்.

1:53 AM, November 29, 2008
Anonymous said...

READ THIS

இந்து பயங்கரவாதமே இஸ்லாமிய பயங்கரவாதமாகின்றது

Written by பி.இரயாகரன்

http://www.tamilcircle.net/index.phpoption=com_content&view=article&id=4505:2008-11-28-09-09-39&catid=74:2008

6:42 AM, November 29, 2008
Anonymous said...

இந்து பயங்கரவாதமே இஸ்லாமிய பயங்கரவாதமாகின்றது Written by பி.இரயாகரன்

பம்பாய் தாக்குதலை வைத்து ஒப்பாரி வைக்கின்றனர். மனிதத் தன்மை பற்றி பேசுகின்றனர். ஆளும் வர்க்கங்கள் தம் அடக்கமுறை கருவிகளை எப்படி பலப்படுத்துவது என்று, கூச்சல் போடுகின்றனர்.

உலக கொள்ளைக்காரர்கள், கொலைகாரர்கள் எல்லாம் 'பயங்கரவாதம் பற்றி" வழமையான ஒப்பாரி வைக்கின்றனர். 'சுதந்திர" செய்தி ஊடகங்கள்இஸ்லாமிய 'பயங்கரவாதம்" என்று மூளைச்சலவை செய்கின்றன.

அறிவு, நேர்மை என எதும் கிடையாத கும்பல்கள் எல்லாம் கொக்கரிக்கின்றது. ஐயோ என்று ஓப்பாரிவைக்கின்றது.

ஒரு மருத்துவர் நோய் வரக் காரணம் என்னவென்று ஆராய்ந்து, அதற்கு தான் மருந்து கொடுத்து அந்த நோயைக் சுகப்படுத்துகின்றனர். இன்று 'பயங்கரவாதம்" என்ற சமூக நோயைக் குணப்படுத்த வேண்டும் என்றால், இதற்கான காரணத்தை கண்டறிந்து அதை குணப்படுத்த வேண்டும்.

இதுதானே அறிவும், நேர்மையுள்ள ஒருவன் செய்ய வேண்டிய பணி. இல்லாதஎல்லோரும் 'பயங்கரவாத"த்தின் தோற்றத்துக்கு துணை போபவர்கள் தான்.

இந்து பயங்கரவாதத்தின் அடிப்படை

இது சாதி அடிப்படையிலானது. தனக்குக் கீழ் 'கீழ் மக்களை" உற்பத்தி செய்கின்றது. இதை மூடிமறைக்க முஸ்லீம் மக்கள் மேல், இந்து பயங்கரவாதத்தைக் கட்டவிழ்த்து விடுகின்றது.

இப்படி இரட்டை வடிவங்களின் சமூகத்தில் சுதந்திரம், ஜனநாயகம் சமத்துவம் என அனைத்தையும், தனக்கு (உயர்சாதிக்கு) அல்லாத மக்களுக்கு மறுக்கின்றது.

இந்த பயங்கரவாத பாசிசக் கும்பல், இந்த முஸ்லீம் மக்களுக்கு இழைத்த கொடுமைகள் எவையும் நீதி விசாரணைக்கு வந்தது கிடையாது. சட்ட ஒழுங்கை பாதுகாப்பதாக கூறிய அடக்குமுறை இயந்திரங்கள், அப்பாவி முஸ்லீம் மக்களை வகை தொகையின்றி குதறியது.

இவர்கள் கட்டமைத்த நீதியின் முன், நீதி மறுக்கப்பட்டு மீண்டும் முஸ்லீம்கள் வதைக்கப்படுகின்றனர்.

ஒரு இந்திய முஸ்லீம், இந்து பயங்கரவாத பாசிச ஆட்சியில் உயிருடன் வாழ்வதும் சரி, 'பயங்கரவாத" நடவடிக்கையில் ஈடுபட்டு மடிவதும் அவனைப் பொறுத்தவரையில் ஒன்றுதான்.

இதைவிட வேறு ஒரு தீர்வை சமூகம் வழிகாட்டவில்லை. இந்துத்துவ ஒடுக்குமுறையை எதிர்கொண்டு முஸ்லீம் வாழமுடியாத வகையில், மொத்த சமூக நிறுவனமும் இந்துத்துவ காவிமயமாகி நிற்கின்றது.

இவை அனைத்தும் சாதி ரீதியாக தாம் கொடுமைப்படுத்தி ஆளும் பார்ப்பனிய கொடுங்கோலாட்சியை மூடிமறைக்க அவர்களுக்கு தேவையானதாக உள்ளது.

மதவாதத்தை உயர்த்தயி இந்திய ஆட்சி வடிவங்கள் தான், 'பயங்கரவாத'த்தை உற்பத்தி செய்கின்றது.

இந்து பார்ப்பனிய இந்துத்துவம் தான் ஒரிசாவில் கிறிஸ்துவ மக்கள் மேல் அண்மையில் கொலைவெறித் தாக்குதலை நடத்தியது.

இதன் எதிர்வினையான கிறிஸ்துவ 'பயங்கரவாதம்" நாளை இந்தியா மேல் உருவாகலாம். குஜராத் படுகொலை, பம்பாய் படுகொலை, அத்வானியின் ரத யத்திரையுடன் அரங்கேறிய படுகொலை, பாபர் மசூதி இடிப்புடன் அரங்கேறிய படுகொலை, இப்படி முஸ்லீம் மக்கள் மேல் எண்ணிக்கையற்ற பார்ப்பனிய இந்துத்துவ படுகொலைகள்.

நாள்தோறும் ஒரு முஸ்லீம் என்பதால், இந்து பயங்கரவாதிகளால் அந்த மக்கள் ஒடுக்கப்படுகின்றனர்.

எத்தனையோ படுகொலைகள், எத்தனையோ விதமான ஒடுக்குமுறைகள் நடந்த போதும், இதற்கு எதிராக சட்டம் செயல்பட்டது கிடையாது, நீதி விசாரணை நடைபெற்றது கிடையாது.

பெரும்பான்மை மக்கள் இந்த அநீதியை எதிர்த்து போராடியது கிடையாது.

'பயங்கரவாதம்" இப்படித்தான் உருவாகின்றது. சட்டமும், நீதியும் இந்து மயமான சமூக அமைப்பில் முஸ்லீம் மக்களுக்கு மறுக்கப்பட்ட நிலையில், அவர்களை வேட்டையாடி ஒடுக்கியவர்கள் ஆட்சியில் அமர்ந்து நாட்டை ஆளும் போது 'பயங்கரவாத" வழிதான் அவர்களுக்கு தம் எதிர்ப்பைக் காட்ட உதவுகின்றது.

இதனால் இந்துத்துவ ஒடுக்குமுறை அதிகரிக்கும், என்பதை 'பயங்கரவாதத்"தில் ஈடுபடும் நபர்கள் புரிந்து கொள்வதில்லை. சமூகத்துடன் சேர்ந்து போராடுவது தான், விடுதலைக்கான மாற்றுவழி.

மறுபக்கத்தில் மற்றவர்களும் இதைத்தான் செய்கின்றனர். இன்று இந்தியாவில் இந்த பயங்கரவாதம், உங்கள் ஒத்துழைப்புடன் ஆட்சியைப் பிடிக்க பயன்படவில்லையா?

உங்கள் மனச்சாட்சியை தொட்டுச் சொல்லுங்கள். இந்து என்று சொல்லி கட்சிகள் இல்லையா? சாதியைச் சொல்லி கட்சிகள் இல்லையா?

இவர்கள் தானே 'பயங்கரவாதிகளை" உற்பத்தி செய்கின்றனர். இதை கண்டித்து, இதற்கு எதிராக போராடுவதுதான் 'பயங்கரவாதத்தை' ஓழிக்க உள்ள ஒரே வழி.

அதாவது முஸ்லீம் என்பதால், நீதி மறுக்கப்படுவதை எதிர்த்து நாம் போராடுவதன் மூலம் 'பயங்கரவாத"த்தை ஒழிக்க முடியும். முஸ்லீம் வெறுப்புணர்வை கட்டமைக்கும் சாதிய ஒடுக்குமுறை எதிர்த்து போராடும் ஒருவன் தான், உண்மையாக மூஸ்லீம் மக்களின் நீதிக்காக போராடி 'பயங்கரவாதத்தை" உண்மையாக ஒழிப்பான்.

பி.இரயாகரன்
28.11.2008
http://www.tamilcircle.net/index.phpoption=com_content&view=article&id=4505:2008-11-28-09-09-39&catid=74:2008

6:47 AM, November 29, 2008
Anonymous said...

//...இந்து ராம் அவர்கள் புலிகளை எதிர்ப்பவர். ஆனால் "இலங்கை சிங்களவர்களுக்கே" எனும் அரசின் நிலைக்கு ஆதரவானவர் என்பதினை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது. ...//

நாளுக்கு இரண்டு ஸ்ரீலங்காவின் அரச செய்திகளைப்போடும் ராம், ஸ்ரீலங்கா ராணுவத்தலபது ஸ்ரீலங்கா பெரும்பான்மை சிங்களவருக்கு உரியடு என்று வெளிப்படையாகவே சொல்லியபோது அதை எதிர்த்து தலையங்கம் எதாவது எழுதினாரா?

/// அதனை தார்மீக ரீதியில் மறுப்பது பொதுவாழ்க்கையில் ஈடுபடாத தனிமனிதனுக்கு அழகு. ஆனால் பத்திரிக்கையாளருக்கு அல்ல. அவ்வாறு செய்தால் அது அவரது நடுனிலையின் மீதான கேள்விக்குறியாகிவிடும். ஏனெனில் பத்திரிக்கையாளர் இருபக்கமும் சம்பத்தப்பட்ட செய்தினை மக்களுக்குத் தர கடமைப்பட்டவர். அச்செய்தியின் நம்பகத்தன்மை மீது கேள்விக்குறி எழாமல் இருக்க முயல்வது அவரது தவறல்ல..//

அண்ணா மாலிக் நீங்கள் எழுதியதை ஒருமுறையாவது திருப்பி படித்தீர்களா? அஷ்ரப் அலி என்று ஒருவர் ஸ்ரீலங்கா ரேடியோவில் செய்திப்பணிப்பாளராக இருந்தார். அவர் எழுதும் கருத்துகளையே தூக்கிச்சாப்பிடும் அளவுக்கு எழுதுகிறீர்களே!!!
அவர்தான் நீங்களோ என் நினைக்கும் அளவுக்கு செய்துவிட்டீர்களே? நியாயமா இது? :) :) :)

10:40 AM, November 29, 2008
Anonymous said...

சசி, உங்களை நான் ஒரு முற்போக்கானவர் என்று நினைத்தேன். தமிழ் தேசியவாதம் என்று வந்து விட்டால் மட்டும் பல்டியடிப்பது எனக்கு புரியவில்லை. இந்தியாவில் பெரும்பான்மை இந்து மக்களுக்கு அல்லது பிற மாநில மக்களுக்கு காஷ்மீரில் என்ன பிரச்சினை என்று தெரியாது. மீடியாக்கள் சொல்வதும் இல்லை. ஆனால் எங்காவது பயங்கரவாத தாக்குதல் நடந்தால் மீடியாக்கள் மிக கவனமெடுத்து திரும்ப திரும்ப சொல்வார்கள். மக்களும் பயங்கரவாதத்தை பெரிய பிரச்சினையாக கருதி அரசாங்கம் அதனை அடக்க வேண்டும் என்பார்கள். சிறி லங்காவிலும் அதே தான் நடக்கின்றது. பெரும்பான்மை சிங்கள மக்களுக்கு வடக்கு கிழக்கில் நடக்கும் பிரச்சினை தெரியாது. அவர்களின் இடங்களில் பயங்கரவாத சம்பவங்கள் நடக்கும் போது அதனை மட்டுமே ஒரேயொரு பிரச்சினை என்பார்கள். பயங்கரவாதிகளை அடக்க அரசுக்கு ஆதரவு கொடுப்பார்கள். இந்திய பெரும்பான்மை மக்களும், இலங்கை பெரும்பான்மை மக்களும் இவ்வாறு பயங்கரவாத பிரச்சினை குறித்து ஒருமித்த கருத்து கொண்டுள்ளனர். அதே போல காஷ்மீர் மக்களும், இலங்கை தமிழ் மக்களும் இது பயங்கரவாதம் அல்ல, விடுதலைப்போராட்டம் என்று ஒத்த கருத்து கொண்டுள்ளனர். இதிலே வேடிக்கை என்னவென்றால், தமிழர்கள் இலங்கையில் பயங்கரவாதம் செய்பவர்கள் தமது இனத்தவர்கள் என்பதால் விடுதலைப்போராட்டம் என்று சொல்லி விட்டு காஷ்மீரிகள் செய்வதை பயங்கரவாதம் என்பார்கள். நீங்கள் காஷ்மீரிகளுடன் கதைத்தால் அவர்களும் அது போன்ற சொல்வார்கள். இங்கே நீங்கள் யாருடன் உங்களை இனம்கான்கிறீர்கள் என்பது தான் முக்கியம்.

11:18 AM, November 29, 2008
தமிழ் சசி | Tamil SASI said...

சசி, உங்களை நான் ஒரு முற்போக்கானவர் என்று நினைத்தேன். தமிழ் தேசியவாதம் என்று வந்து விட்டால் மட்டும் பல்டியடிப்பது எனக்கு புரியவில்லை.

***

மிக்க நன்றி...
என்னை நான் எந்த பீடத்திலும் அமர்த்திக் கொள்ள விரும்ப வில்லை. நான் "நானாக" மட்டுமே இருக்க விரும்புகிறேன்.

நீங்கள் தற்போதைய மும்பை தாக்குதலை நடத்தியது காஷ்மீர் தீவிரவாத அமைப்புகள் என நினைத்தால் அது மிகவும் தவறு. காஷ்மீர் விடுதலைப் போராட்டம் பற்றி பல கட்டுரைகள் எழுதியுள்ளேன். மிக சமீபத்தில் கூட காஷ்மீரில் காஷ்மீர் மக்கள் போலீசாரின் துப்பாக்கி சூட்டிற்கு பலியானதை எதிர்த்து நான் கட்டுரை எழுதினேன். காஷ்மீர் போராட்டம் குறித்த புரிதல் எனக்கு உண்டு. காஷ்மீரின் விடுதலையை நான் ஆதரிக்கிறேன்.

மும்பை தாக்குதலை நிகழ்த்தியது பாக்கிஸ்தானில் உள்ள இஸ்லாமிய அடிப்படைவாதிகள். இவர்களுக்கும் காஷ்மீர் போராட்டத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இன்னும் சொல்லப்போனால் காஷ்மீர் என்ற பெயரில் இவர்கள் செய்யும் இத்தகைய நாசகார வேலைகள் காஷ்மீர் விடுதலை போராட்டத்தின் முகத்தை சிதைக்கிறது. (இது குறித்த என்னுடைய முந்தைய பதிவு - காஷ்மீர் : சுயநிர்ணயத்தில் இருந்து ஜிகாத் வரை)

நான் இஸ்லாமிய அடிப்படைவாதத்தை கடுமையாக எதிர்க்கிறேன். சுலபமான இலக்குகளாக உள்ள பொதுமக்களின் இலக்கினையே இந்த அமைப்புகள் தாக்குகின்றன. அப்பாவி அமெரிக்க மக்களை இலக்கு வைத்து தாக்கி கொண்டிருப்பதால் எந்தப் பிரச்சனைக்கும் தீர்வு ஏற்பட்டு விடப்போவதில்லை.

மேலே இராயகரனின் பதிவினையும் வாசித்தேன். இந்து பயங்கரவாதத்திற்கு எதிரான நிலை தான் இஸ்லாமிய பயங்கரவாதம் என்கிறார். உண்மை. இன்றைக்கும் இந்து பயங்கரவாத அமைப்புகள் மீது தடை விதிக்க இந்த அரசாங்கம் யோசித்துக் கொண்டிருக்கிறது. ஆனால் இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்புகள் என்றால் உடனே தடை விதித்து விடுகிறது. ஆனால் மும்பை தாக்குதலுக்கு அது மட்டுமே காரணம் அல்ல. இந்த தாக்குதலில் ஈடுபட்டவர்கள் இந்திய முஸ்லீம்கள் அல்ல. பாக்கிஸ்தானைச் சேர்ந்த அமெரிக்க-இஸ்ரேலிய எதிர்ப்பு இஸ்லாமிய அடிப்படைவாதிகள்.

அவர்கள் அமெரிக்க-இந்திய நிலைகளை எதிர்க்கும் ஒரு காரணத்தினாலேயே நாம் உடனே அவர்களின் நிலைக்கு நியாயம் கற்பிக்க முடியாது.

இராயகரன், ஸ்ரீரங்கன் போன்றவர்களிடம் உள்ள பிரச்சனை என்னவென்றால் பிரச்சனையை சரியாக விளங்கிக் கொள்ளாமல் எப்பொழுதுமே தங்களுடைய முன்கூட்டிய திட்டமிட்ட கருத்தாக்கத்துடன் பிரச்சனையை அணுகுவது. சென்னை சட்டக்கல்லூரி பிரச்சனையை ஸ்ரீரங்கன் பார்ப்பனியத்தின் சூழ்ச்சி என்ற பார்வையுடனே அணுகியிருந்தார்.

மக்களின் அன்றாட சமூக/பொருளாதார பிரச்சனைகளே முக்கியம் என்ற நோக்கில் தமிழகத்திலே நான் தமிழ் தேசிய நிலைப்பாட்டினை எதிர்க்கிறேன். தமிழகத்திலே இருக்கின்ற மகஇக போன்ற அமைப்புகளுடன் பெரும்பாலான பிரச்சனைகளில் எனக்கு ஒத்த கருத்து உண்டு.

ஆனால் ஈழத்திலே இருக்கின்ற தமிழ் இடதுசாரிகள் எனக்கு பெரிய நம்பிக்கையை அளிக்கவில்லை. ஈழத்திலே அன்றாடம் மக்கள் எதிர்கொள்ளும் சிங்கள இனவாதத்தின் தாக்குதலுக்கு தமிழ் இடதுசாரிகள் முன்வைக்கும் தீர்வு என்ன ?

முதலில் புலிகள் அழிக்கப்பட்டு பின் ஐரோப்பாவிலும், கனடாவிலும் இருக்கின்ற தமிழ் இடதுசாரிகள் எல்லாம் ஈழத்திற்கு சென்று மக்களிடம் இடதுசாரிக் கொள்கைகளை பரப்பி, புரட்சி ஏற்படுத்தி, சிங்கள இனவாதத்தை சிங்கள இடதுசாரிகள் மூலமாக வென்றெடுத்து பிறகு வடக்கு கிழக்கு இடதுசாரிகளும், தென்னிலங்கை இடதுசாரிகளும் இணைந்து ஒரு இடதுசாரி இலங்கையை தமிழ்-சிங்கள-முஸ்லீம் மக்களின் ஐக்கியத்துடன் அமைப்பது போன்ற கனவுகளை நம்பும் அளவுக்கு நான் அறிவுஞீவி அல்ல.

நான் ஏற்கனவே கூறியிருந்தபடி புலிகளின் அனைத்து நடவடிக்கைகளையும் நான் ஆதரிக்கவில்லை. ஆனால் சிங்கள இனவாதத்திற்கு எதிராக தமிழ் மக்களுக்கு புலிகள் மட்டுமே ஒரே நம்பிக்கையாக இருக்கின்றனர் என்பதே என்னுடைய நிலைப்பாடு.

நன்றி...

1:03 PM, November 29, 2008
-/பெயரிலி. said...

தமிழ்சசி,
நல்லகாலம் தெளிவான, கோவையான மொழிநடையிலும் புயரும் படமும் போட்டு உங்களின் சொந்தப்பதிவிலும் எழுதுகிறீர்கள். இல்லாவிட்டால், உங்களின் பதிவுக்கருத்துகளுக்கும் தர்க்கரீதியிலான பின்னூட்டவிளக்கங்களுக்கும் பெயரில்லாதவர்கள் சிலரைப் பலர் பின்னியிருப்பார்கள் ;-)

மும்பாய்வெடிப்புகளாலே உயிரிழந்தவர்களின் உறவினருக்கப்பால், அதிகம் பாதிக்கப்பட்டுப் பின்னடைவு கொண்டவர்கள் காஷ்மீரின் சுயநிர்ணயம் வேண்டுகிறவர்களாகவேயிருப்பார்கள்.

அதிகம் மகிழ்ச்சியடைகிறவர்களில் எல்லைகடந்த பயங்கரவாதிகள் முதன்மையானவர்கள். அடுத்தடுத்து வருகின்றவர்கள் இந்திய ஊடகக்குப்பைகள், ஸ்ரீலங்கா அரசு. இடையிலே இன்னொரு கும்பல்; மதுசூதனன் ராமானுஜத்தின் பதிவுப்பின்னூட்டங்களை 27 அன்று வாசித்திருக்கவேண்டும்... வெறியை வெளிப்படியாகக் கொட்டிய பின்னூட்டக்காரர்கள் எவ்வகையிலும் மும்பையிலே கொன்றவர்களுக்குக் குறைந்தவார்களில்லை. என்ன, ஆயுதம் வசப்படவில்லை - கூடவே துணிச்சலுமாகவிருக்கக்கூடும்.

1:46 PM, November 29, 2008
Anonymous said...

அருமையான கருத்து பெயரிலி,

ஒரே ஒரு கேள்வி.

உங்களது தமிழ் ஈழத்தில் இருக்கப்போகும் முஸ்லீம்களுக்கு சுய நிர்ணய உரிமை உண்டா பெயரிலி?

ஓ மறந்துட்டேன். எங்கயாவது போய் சுயநிர்ணய உரிமை கேட்டுக்கடா என்றுதான் அவர்களை எல்லாம்தான் துரத்திவிட்டீர்களே?

ஒகே ஓகே

3:27 PM, November 29, 2008
Human Being said...

உங்களுடைய கட்டுரை ஒருபோக்குத் தனமானது அன்பரே....

நீங்கள் கூறுவதுபோல் பார்த்தால், காஷ்மீரத்து சண்டைகளுக்கும் தமிழீழ போருக்கான நியாயம் உள்ளது. இரண்டுமே விடுதலைப் போராட்டங்களே. காஷ்மீரின் வரலாற்றைப் படித்தால் புரியவரும்.

இஸ்லாமிய அடிப்படைவாதம் என்ற வாசகத்தின் அர்த்தம் தெரிந்துதான் எழுதுகிறீர்களா? அந்த வாசகங்களின் வரலாற்றுப் பின்னணி என்னவென்று அறிவீர்களா?

தீவிரவாதத்தையும் வன்முறையும் யார் கையிலெடுத்தாலும் அது கடுமையான தண்டனைக்குறிய குற்றம் என்பதில் யாரும் கருத்து வேற்பாடு கொள்வதற்கு இடமில்லை. அவர்கள் உலகின் எந்த மதத்தினராயினும் சரியே. இராணுவ நடவடிக்கை என்ற பேரில் அரசாங்கங்கள் அப்பாவி மக்களின் மீது பயங்கரவாதத்தை மேற்கொண்டாலும் அதுவும் குற்றமே.

இஸ்லாமிய அடிப்படைவாதம் என்ற பிரயோகம் மாற்றிக்கொள்ளப்படவேண்டிய ஒன்று. அது பற்றிய மேலதிக விபரங்களுக்கு

http://ezhuchi.blogspot.com/2008/11/1.html

4:21 PM, November 29, 2008
-/பெயரிலி. said...

தமிழீழத்தைப் பற்றித் தெரியவில்லை; ஈழத்திலே உண்டா இல்லையா என்று வீட்டிலேதான் கேட்டுச் சொல்லவேண்டும்.
been there and heard the queries



இந்துமோடிகள், வஹாபிதாடிகள் எல்லாம் திடீரென்று இலங்கை முஸ்லீங்களுக்குப் பரிவது காலத்தின் கோலமடி, அம்மம்மா :-)

4:26 PM, November 29, 2008
தமிழ் சசி | Tamil SASI said...

நீங்கள் கூறுவதுபோல் பார்த்தால், காஷ்மீரத்து சண்டைகளுக்கும் தமிழீழ போருக்கான நியாயம் உள்ளது. இரண்டுமே விடுதலைப் போராட்டங்களே.

***

ஐயா அழகரே,

எனக்கு காஷ்மீர் போராட்டம் குறித்து நன்றாகவே தெரியும். அது நியாயமானது என்பதும் தெரியும்.

ஆனால் மும்மையில் நடந்தது காஷ்மீரிகளின் விடுதலைப் போராட்டம் அல்ல.

இஸ்லாமிய அடிப்படைவாத பயங்கரவாதிகளின் வெறியாட்டம்.

இரண்டுக்கும் உள்ள வேறுபாட்டை அறிந்து தான் எழுதிக்கொண்டிருக்கிறேன்.

இஸ்லாமிய அடிப்படைவாதிகள் தான் காஷ்மீர் விடுதலைப் போராட்டத்தின் முதல் எதிர்கள்

என்னுடைய பதிவின் பின்னூட்டங்களை வாசித்திருந்தால் இப்படி எழுதியிருக்க மாட்டீர்கள். உங்கள் அவசரம் உங்களுக்கு :)

என்னுடைய காஷ்மீர் குறித்த கட்டுரைகள் இங்கே உள்ளன. நேரமிருந்தால் வாசித்து பாருங்கள்
http://blog.tamilsasi.com/search/label/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D

4:58 PM, November 29, 2008
Anonymous said...

//
இந்துமோடிகள், வஹாபிதாடிகள் எல்லாம் திடீரென்று இலங்கை முஸ்லீங்களுக்குப் பரிவது காலத்தின் கோலமடி, அம்மம்மா :-)
//

ரொம்ப சரி பெயரிலி.

ஒரே வரியில் உங்களது நிலைப்பாட்டை சொல்வது கஷ்டம் இல்லையா? (என்ன செய்வது உங்கள் எழுத்து அப்படி) சசியாவது சொல்லலாம், அவரது கருத்து என்னவென்று.

போகட்டும்,

இலங்கை முஸ்லீம்களை பற்றி கேள்வி கேட்பவன் எல்லோரையும் இந்து மோடி, வஹாபி தாடி என்று கூட்டில் அடைத்துவிட்டால், பதில் சொல்லியாயிற்று என்று நினைத்துகொள்ளலாம் இல்லையா?

அதாவது இந்த இரண்டுக்கு வெளியே எவனுக்கும் இலங்கை முஸ்லீம்களை பற்றி அக்கறைகிடையாது என்று வரித்துகொள்ளலாம் இல்லையா?

அப்படியே ஒரு தாடியோ மோடியோ கேட்டாலும்கூட, உங்களது பதில், "நீ மட்டும் யோக்கியமா?" என்பதுதானே? இதனைத்தானே மோடியையும் தாடியையும் இழுப்பதன்மூலம் செய்கிறீர்கள்?


-
கேள்வி ரொம்ப சிம்பிள் சசி, பேயரிலி,

காஷ்மீர் முஸ்லீம்களின் (காஷ்மீர் இந்துக்கள் அல்லது பௌத்தர்கள் என்றுமே பிரிவினைக்கு ஆதரவாக இல்லை என்பதே உண்மை) சுய நிர்ணய உரிமை பற்றி அங்கலாய்க்கும் நீங்கள், அதே கொள்கையின்படி, நீங்கள் அமைய விருப்பப்படும் தமிழ் தேசீய ஈழத்துக்குள் முஸ்லீம்களுக்கு சுயநிர்ணய உரிமை பற்றி என்ன சொல்கிறீர்கள்? அவர்கள் தனி நாடு கேட்டால் உடனே கொடுத்துவிடுவீர்களா? அடுத்து அங்கு வாழும் தலித்துகள் தனி நாடு கேட்டால் கொடுத்துவிடுவீர்களா?

--
சசி,

//இஸ்லாமிய அடிப்படைவாதிகள் தான் காஷ்மீர் விடுதலைப் போராட்டத்தின் முதல் எதிர்கள் //

இஸ்லாம் என்பது சுயநிர்ணய உரிமை கோரும் காஷ்மீர் முஸ்லீமகளின் அடிப்படை அடையாளம். அதனை மறுக்கவோ அதன் ரீதியில் ஒருங்கிணையவோ கூடாது என்றோ அல்லது அது தவறு என்றோ உங்களுக்கு சொல்ல அருகதை உண்டா? ஏனெனில், அந்த அருகதை உங்களுக்கு இருக்குமானால், தமிழ் பயங்கரவாதத்தை தவறு என்று கூற ராமுக்கோ அல்லது அசிங்கசங்கரிக்கோ அருகதை உண்டு.

இதையே, திருப்பி "தமிழ் பயங்கரவாதிகள்தான் ஈழ விடுதலைப்போராட்டத்தின் முதல் எதிரிகள்" என்றும் சொல்லலாமே?

வெறும் வார்த்தை ஜாலங்களில் மறைந்துகொண்டு நான் கேட்பது சரி, நீ கேட்பது தவறு என்ற வியாக்கியானங்கள் எல்லோரும் செய்வதுதான்.

5:47 PM, November 29, 2008
தமிழ் சசி | Tamil SASI said...

இஸ்லாம் என்பது சுயநிர்ணய உரிமை கோரும் காஷ்மீர் முஸ்லீமகளின் அடிப்படை அடையாளம்

****

இஸ்லாம் என்பது மட்டும் காஷ்மீரிகளின் அடையாளம் அல்ல. எவ்வாறு ஈழத்தமிழர்களின் அடையாளம் ஹிந்து மதத்தைச் சார்ந்து இல்லையோ அது போல தான் காஷ்மீரிகளுக்கும். காஷ்மீரிகள் ஒரு தனியான இனம். பாக்கிஸ்தானைச் சார்ந்த இஸ்லாமியர்களுக்கும் இவர்களுக்கும் பல வேறுபாடுகள் உள்ளன.

இது குறித்து நான் ஏற்கனவே விரிவாக எழுதியுள்ளேன்.

காஷ்மீர் : சுயநிர்ணயத்தில் இருந்து ஜிகாத் வரை


நன்றி...

6:35 PM, November 29, 2008
Anonymous said...

//இஸ்லாம் என்பது மட்டும் காஷ்மீரிகளின் அடையாளம் அல்ல. எவ்வாறு ஈழத்தமிழர்களின் அடையாளம் ஹிந்து மதத்தைச் சார்ந்து இல்லையோ அது போல தான் காஷ்மீரிகளுக்கும். காஷ்மீரிகள் ஒரு தனியான இனம். பாக்கிஸ்தானைச் சார்ந்த இஸ்லாமியர்களுக்கும் இவர்களுக்கும் பல வேறுபாடுகள் உள்ளன.//

உண்மைதான், இஸ்லாம் என்பது மட்டுமே காஷ்மீரிகளின் அடையாளம் அல்ல. ஆனால், சுயநிர்ணய உரிமை கோருகிற காஷ்மீரிகளின் அடையாளம் இஸ்லாமே. பாகிஸ்தானை சேர்ந்த இஸ்லாமியர்களுக்கும் இவர்களுக்கும் வேறுபாடு நிச்சயம் உண்டு. அதற்கென்ன இப்போது? பாகிஸ்தானில் இருக்கும் சிந்திகளுக்கும் பஞ்சாபிகளுக்கும் வேறுபாடு உண்டு, பலுச்சிகளுக்கும் பக்தூன்களுக்கும் வேறுபாடு உண்டு. பஞ்சாபிகளிலேயே மேற்கு பஞ்சாபியர்களுக்கும் கிழக்கு பஞ்சாபியர்களுக்கும் கூட வேறுபாடு உண்டு. சிந்திகளிலேயே வடக்கு சிந்திகளுக்கும் தெற்கு சிந்திகளுக்கும் கூட பண்பாட்டு கலாச்சார மொழி மற்றும்பல வேறுபாடுகள் உண்டு. வேறுபாடுகள் தாண்டிதான் அவர்கள் இணைந்துள்ளனர்.

மத ரீதியான முறையில் ஒரு விடுதலை போராட்டம் நடக்கக்கூடாது என்று நீங்கள் கருதுகிறீர்கள். எந்த ரீதியில் தங்களது விடுதலை போராட்டம் நடத்தப்படவேண்டும் என்ற உரிமை அந்த மக்களுக்கே உண்டு. உங்களுக்கு இல்லை.

காஷ்மீர முஸ்லீம்களுக்கு இஸ்லாமே முக்கிய அடையாளம். காஷ்மீர இந்துக்களோ காஷ்மீர பௌத்தர்களோ பிரிவினை கேட்கவில்லை.

ஈழத்தில் இந்துக்கள் மட்டுமே பிரிவினை கேட்கவில்லை. ஈழத்தின் போராட்டம் மொழிப்போராட்டம். அது தமிழ் என்ற மொழி அடையாளத்தை முன்னிருத்தியது.

இரண்டையும் போட்டு குழப்பி, தனக்கு சாதகமாக வாதிட முயல்கிறீர்கள்.

மொழி ரீதியான தேசியம், இன ரீதியான தேசியம், மத ரீதியான தேசியம் ஆகியவைக்கான தார்மீக அல்லது அறிவியல் அடிப்படை ஏதும் இல்லை. இவர்கள் தமிழர்கள் இவர்கள் சிங்களவர்கள் இவர்கள் இந்திய தமிழர்கள் என்றோ டி.என்.ஏ வைத்து பிரிக்க ஆதாரம் இல்லை. இனத்துக்கே அறிவியல் ஆதாரமே இல்லை என்றால் ஜாதிக்கான அறிவியல் ஆதாரம் எப்படி இருக்கமுடியும்? இங்கு இன ரீதியான பிரிவு எப்படி உருவாக்கப்பட்டதோ அதே போல மத ரீதியான பிரிவும் உருவாக்கப்பட்டதுதான். மொழி ரீதியான் பிரிவும் இப்படி செயற்கை தேசிய கற்பிதமே.

மக்கள் தங்களது அடையாளம் என்று எந்த குணாம்சத்தை வைத்து ஒருங்கிணைந்தால் உங்களுக்கு என்ன? அது மதமாகவும் இருக்கலாம். ஜாதியாகவும் இருக்கலாம். மொழியாகவும் இருக்கலாம். இன்று காஷ்மீர முஸ்லீம்கள், திரும்பவும் சொல்கிறேன், காஷ்மீரிகள் அல்ல, காஷ்மீர முஸ்லீம்களே சுயநிர்ணய உரிமை என்று கோஷமிடுகின்றனர். காஷ்மீர இந்துக்களோ அல்லது காஷ்மீர பௌத்தர்களோ அல்லது சமீபத்தில் கிறிஸ்துவத்தில் இணைந்திருக்கும் காஷ்மீர கிறிஸ்துவர்களோ அல்ல.

காஷ்மீர சுயநிர்ணயபோராட்டம் என்பது அடிப்படையில் காஷ்மீர இஸ்லாமியர்களின் போராட்டமே என்று புரிந்துகொள்ளாத, புரிந்துகொள்ள மறுக்கிற எந்த ஒருவருக்கும், அதனை பற்றி கருத்து கூற என்ன உரிமையும் இல்லை.

7:11 PM, November 29, 2008
-/பெயரிலி. said...

/ஒரே வரியில் உங்களது நிலைப்பாட்டை சொல்வது கஷ்டம் இல்லையா? /

ஈழம்/இலங்கை குறித்த என் நிலைப்பாடு மிகவும் தெளிவானது.

1. விடுதலைப்புலிகள் காரணமெதுவானாலுங்கூட வடபகுதியிலிருந்து முஸ்லீங்களை விரட்டியது தவறு. இப்போது அதற்காகப் புலிகள் மன்னிப்புக் கேட்டிருந்தாலும், பெயருக்கு யாழ் முஸ்லீம் ஒருவரை ததேமு கொல்லப்பட்ட சிவநேசனின் இடத்துக்கு நியமித்திருந்தாலுங்கூட, விரட்டியது குற்றமே. இப்போது, பதினைந்தாண்டுகள் யாழ்ப்பாணத்தினைக் கையிலே வைத்திருக்கும் ஸ்ரீலங்கா அரசிடம் இவர்களை எதற்காகக் குடியேற்றவில்லை என்று நீங்கள் கேட்கவேண்டும்

2. கிழக்கிலேயான முஸ்லீம் - தமிழர் பிரச்சனை, 1977 இன் தவிகூ அமைப்பு, இலங்கையிலே முஸ்லீங்கள் தம்மைத் தனியான தேசிய இனமாக இனம் காணுதல் இவை பற்றி அண்மையிலே ஒரு பின்னூட்டத்திலே குறிப்பிட்டிருந்தேன். மொழியை முன் வைத்து அடையாளம் காணப்படுவதும் மதத்தை முன்வைத்து அடையாளம் காணப்படுவதும் அவரவர் விருப்பம். அதிலே போய் முஸ்லீம்களைத் தமிழர்கள்தான் தள்ளி வைத்தார்கள் என்ற ஒரு தனிப்பாவனையை உண்டாக்க முயல்வீர்களானால், அஃது உங்கள் விருப்பம். வடக்கினைத் தழுவிய இஸ்லாமிய லீக் போதாதென்று தமுமுமு எதற்காகத் தமிழகமுஸ்லீங்களுக்குத் தேவையென்றோ, பாஜக/ஆர் எஸ் எஸ் எதற்காகத் கோபாலன்களுக்கும் சுதர்சனங்களுக்கும் நீலகண்டர்களுக்கும் தேவையென்று ஆராய்ந்து தமிழகத்திராவிடக்கட்சிகளாக இவர்களைத் தள்ளி வைத்துக் கட்சிகளைத் தொடங்கு, கட்சிகளின் கிளைகளை ஆரம்பி என்று சொன்னதா என்று அறிந்த பின்னால், எழுதுங்கள். சோர்வில்லாவிட்டால், விபரமாக எழுதுகிறேன்.

3. காஷ்மீர், குர்திஷ்,கடலோனிய, பாலஸ்தீனப்போராட்டம் பற்றி என் நிலைப்பாடு மிகவும் தெளிவானது.

4. தமிழீழம் என்று நான் சிந்து பாடுவதில்லை.

5. கற்பனை இலக்குள்ள எல்லைகடந்த பயங்கரவாதத்துக்கும் குறித்த இலக்குகளைக் கொண்ட சுயநிர்ணய உரிமைப்போராட்டங்களுக்கும் வித்தியாசமுண்டு. அல் ஹைடாவினது அதன் உதிரிகளினதும் குண்டுவெடிப்புகள், காஷ்மீரின் சுயநிர்ணயத்துக்கும் உதவவில்லை; கடலோனியாவின் சுதந்திரத்துக்கும் உதவவில்லை; ஈழத்தின் சுதந்திரத்துக்கும் உதவவில்லை. இக்குழுக்களின் நடவடிக்கைகள் எல்லாமே சரியானவை என்று சொல்ல முடியாதென்றாலுங்கூட, அவர்களின் எதிர்ப்பு அவர்களின் மீதான அரசபயங்கரவாதங்களை எதிர்கொள்வதாகவும் சாத்வீகர்கள் என்று தம்மைக் கருதிக்கொள்ளும் பொதுமாக்கள் ஊக்குவிக்கும் அப்பயங்கரவாதங்களிலும்விட அளவு குறைந்ததாகவேயிருக்கின்றன. ஈழமக்கள் மீது ஸ்ரீலங்கா அரசின் பயங்கரவாதத்தினைத் தொடர்ந்து அரசு என்பதன்பேரிலே ஆதரிக்கும் எத்தனை பதிவர்கள், மும்பையின் இருநாட்கொடூரத்துக்கு ஓலம் கொட்டுகின்றார்கள்? ஆயுதமற்ற மனிதர்களைத் திட்டமிட்டுக் கொல்வது பயங்கரவாதமே; அதை இந்திய அரசு, இஸ்ரேல் அரசு, ஸ்ரீலங்கா அரசு, புலிகள், பூனைகள், நாய்கள், நரிகள், அல் ஹைடா, அல்டிமேட் கருடா எது செய்தாலும் பயங்கரவாதமே. மும்பை வைத்தியசாலையிலே குழந்தைகளியும் பெண்களையும் பணயமாகப் பிடித்து வைத்தாலும் பயங்கரவாதமே; யாழ்ப்பாணம் வைத்தியசாலையிலே அமைதியைக் குலைக்கும் படையாக வைத்தியர்களையும் தாதிகளையும் ஊழியர்களையும் சுட்டுக்கொன்றாலும் பயங்கரவாதமே. ஆனால், மும்பை, மாட்ரிட், நியூ யோர்க் பயங்கரவாதத்தின்கூறு என்னவென்றால், மதத்தின் பேரிலே போராடுகிறோம் என்று சுருங்கச் சொல்லிவிட்டு, விரும்பின இலக்கினை எடுத்துப் பயங்கரப்படுத்துவது. இதை மத அடிப்படைப்பயங்கரவாதம் என்று சொல்லாமல் என்ன சொல்வது? மேற்கு வகுக்கும் "இஸ்லாமிய அடிப்படைவாத"த்திலே செல்லும் வாதம்-செல்லாவாதம், அனலிட்டுப் புனலேற்றிப் பார்க்கும் பகுத்றிவும் வாசிப்பும் எம்மிலே பலருக்கிங்கே இருக்கின்றதென்றே நம்புகிறேன். தவிர, எல்லா மத அடிப்படை வாதங்களையும் கண்டுகொண்டுதானிருக்கின்றோம். மதத்தினைப் போலல்லாது, இன, மொழி அடிப்படைவாதங்கள் என்று வரையறுப்பது கடினம். இன, மொழி, மத அடிப்படையிலே சுயநிர்ணய உரிமை ஓர் அரசியல் எல்லைக்குள்ளே அழுத்தப்படும்போது, போராடுவதற்கும் உலகத்தைச் சுற்றி ஒரு கருத்தார்ந்த அளவிலே அகப்பட்டவரைக் கொன்று தள்ளுவதற்கும் வித்தியாசமிருக்கின்றது.

அவ்வளவுதான். இனி வேண்டுமானால், வேறெங்கேனும் சண்டை போடலாம். மதுசூதனன் போன்ற அடுத்த மதவெறியரின் பதிவிலே அநாமதேயமே நீர் பின்னூட்டமாகப் போட்டுத் தள்ளினாலும், அங்கே வேண்டாம்) இங்கே சசியின் பதிவு திசைதிரும்ப வேண்டாம்.

8:40 PM, November 29, 2008
தமிழ் சசி | Tamil SASI said...

நான் சொல்ல வந்தது உங்களுக்கு புரியவில்லையோ அல்லது வாதத்தை வளர்க்க, திசைமாற்ற கூறுகிறீர்களோ என புரியவில்லை. காஷ்மீர் விடுதலைப் போராட்டம் என்பது சிதைந்து போன போக்கினை தான் நான் கூறுகிறேன்.

காஷ்மீர் இந்துக்களும், பௌத்தர்களும் இந்தியாவில் இருந்து விடுதலை கேட்கிறார்கள் என நான் எங்கேயும் கூறவில்லை. அது கூட தெரியாமலா நான் காஷ்மீர் குறித்து பல கட்டுரைகளை எழுதிக் கொண்டிருக்கிறேன் :)

நாம் கூறவந்தது இது தான் - காஷ்மீர் விடுதலைப் போராட்டத்திற்கும், இஸ்லாமிய அடிப்படைவாத ஜிகாத்திற்கும் பெருத்த வேறுபாடுகள் உள்ளன.

காஷ்மீரின் விடுதலையை ஆரம்பகாலத்தில் முன்வைத்த ஆயுதக்குழுவான காஷ்மீர் விடுதலை முண்ணனி (Jammu and Kashmir Liberation Front - JKLF) இஸ்லாமிய அடிப்படைவாத இயக்கம் அல்ல. காஷ்மீரின் விடுதலை, ஒரு மதச்சார்பற்ற காஷ்மீர் போன்றவை தான் JKLFன் நோக்கமாக இருந்தது. அடிப்படையில் காஷ்மீரின் முஸ்லீம்கள் தான் விடுதலை கோரினர். என்றாலும் இஸ்லாமிய மதம் சார்ந்த விடுதலையை JKLF முன்னெடுக்கவில்லை. JKLFன் தலைவர் யாசின் மாலிக் ஹிந்து-முஸ்லீம் ஒற்றுமையை தொடர்ந்து முன்வைத்து வந்துள்ளார். மதசார்பின்மையை வலியுறுத்திய காஷ்மீர் தலைவர்களில் யாசின் மாலிக் முக்கியமானவர்.

அதைத் தான் காஷ்மீரின் சுயநிர்ணய கட்டுரையில் நான் விளக்க முற்பட்டிருக்கிறேன். காஷ்மீர் இந்துக்களும், பௌத்தர்களும் விடுதலை கேட்கிறார்கள் என நான் எங்கேயும் கூறவில்லை. நீங்களாக கற்பனை செய்து கொண்டால் நான் பொறுப்பு அல்ல :)

இவ்வாறு தொடங்கிய காஷ்மீரின் விடுதலை, பாக்கிஸ்தானின் ஆதரவு பெற்ற இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்புகளின் வருகைக்கு பிறகு சிதைந்து விட்டது. JKLF போன்ற அமைப்புகள் வலுவிழந்தன. பாக்கிஸ்தான், ஆப்கான் இஸ்லாமிய அடிப்படைவாதிகள் ஆதிக்கம் பெற்றனர். காஷ்மீர் பிரச்சனையை தன்னுடைய பிற நோக்கங்களுக்காக பாக்கிஸ்தான் பயன்படுத்திக் கொண்டது.

லக்க்ஷ்ர்-இ-தொய்பாவிற்கும் காஷ்மீர் மக்களுக்கும் பெரிய சம்பந்தம் இல்லை. மும்பை மீது தாக்குதல் தொடுத்த பயங்கரவாதிகளில் ஒரு காஷ்மீரீயாவது (காஷ்மீர் முஸ்லீம்) இருக்கிறானா ? எல்லாருமே பாக்கிஸ்தானை சேர்ந்த இஸ்லாமிய அடிப்படைவாதிகள்.

அதைத் தான் நான் கூறினேன். இது உங்களுக்கும் புரியும் என நினைக்கிறேன். நீங்கள் புரியாதது போல தொடர்ந்தால் நான் ஒன்றும் சொல்வதற்கில்லை

நன்றி...

10:49 PM, November 29, 2008
Anonymous said...

எல்லை கடந்த பயங்கரவாதத்துக்கும், எல்லை அடங்கிய உரிமைப்போருக்கும் ஒரு வித்தியாசமும் இல்லை. ஏனெனில் தன் எல்லையை வகுத்துக்கொள்பவர்கள் அந்த போர்வீரர்களும், அந்த போர்வீரர்களுக்கு கொள்கைகளை வகுத்துக்கொடுப்பவர்களும்தான். இஸ்லாமிய கருத்துருவாக்கம் அகில உலகையும் தங்களது சொந்த இடமாக பார்க்கலாம். யார் கண்டது? அந்த விவாதம் இங்கே தேவையில்லாதது.

பெயரிலி,
நான் கேட்டது இது.
//உங்களது தமிழ் ஈழத்தில் இருக்கப்போகும் முஸ்லீம்களுக்கு சுய நிர்ணய உரிமை உண்டா பெயரிலி?
//

அதற்கு புலிகள் எலிகள் மூஞ்சூறுகள் பண்ணியதை நீங்கள் தவறு என்று சொல்வதால் என்ன? சொல்லாவிட்டால் என்ன? இந்த இடத்தில் முடிவெடுக்கவேண்டியதோ முடிவெடுக்காததோ முடிவெடுக்கப்போவதோ முஸ்லீம்கள் தானே தவிர நீங்களோ நானோ அல்ல. இல்லையா?

கேட்டது இது.

தமிழ் ஈழத்தில் இருக்கப்போகும் முஸ்லீம்கள் தனிநாடு கோரினால் அதனை கொடுக்கவேண்டும் என்று போராடுவீர்களா? தங்களது மத அடையாளத்தை முன்வைத்து ஆனால், காஷ்மீரிய ஜேகேஎல்எஃப் மாதிரியே மற்ற மக்களும் இருக்கலாம் என்று கூறி தங்களுக்கு தனி நாடு வேண்டும் என்று கேட்டால் அதற்கு ஆதரவு அளிப்பீர்களா?

--
சசி,

JKLF என்பது அதனை உருவாக்கிய பாகிஸ்தானிய அரசின் மனநிலையை பொறுத்தது. அப்போது மதச்சார்பற்ற ஒரு விடுதலை போராட்டத்தை உருவாக்கினால், பின்காலனிய உலகில் காஷ்மீரையும் விடுவித்துவிடலாம் என்று பாகிஸ்தானிய ஆளும் வர்க்கம் சிந்தித்து உருவாக்கியது. மேலும் அப்போது காஷ்மீரில் இந்த அளவு இந்துக்களை சுத்திகரித்ததும் நடக்கவில்லை.
பின்னால் வந்த அரசுகள் JKLF தான் சொன்ன கோட்டின் மீது நடக்கவில்லை என்பதற்காக மற்ற இஸ்லாமிய தீவிரவாத அமைப்புகளை உருவாக்கின.

சரி, அதே கேள்வி உங்களுக்கும்,
தமிழ் ஈழ முஸ்லீம்கள் காஷ்மீரிய ஜேகேஎல்எஃப் மாதிரியே, எங்கள் நாட்டில் மற்ற மக்களும் இருக்கலாம் என்று கூறி தங்களுக்கு தனி நாடு வேண்டும் என்று கேட்டால் அதற்கு ஆதரவு அளிப்பீர்களா?


=

11:28 PM, November 29, 2008
Anonymous said...

TMMK, Shoba Sakthi and A.Mrax are using the muslim issue in east Srilanka to weaken the cause of Eelam. For them muslims are more important than tamils even when muslims side with sinhala chavunists and government.TMMK will
support all islamic nations including Malaysis because they are islamic states. It will state that all is well in Malaysia.
These muslims think only through religion.They will support genocide in Sudan and many will
support taliban.But they will not
support LTTE or the cause of Eelam
because they consider LTTE as
anti-muslim and Eelam if formed would be a secular state.That is why anti-LTTE forces like Shoba
Sakthi and A.Marx are also ardent supporters of muslim groups like TMMK in India and elsewhere. They will say nothing about ethinic issues in islamic
states and will not write about the demand for Kurdistan.A.Marx will support what has happened in Nepal because it led to Nepal becoming a secular state from a
Hindu state.But will not write about the Baluchistan issue in
Pakistan as supporting that would
weaken the islamic state of Pakistan.
If you read articles in satyakadasi
you wll understand this. Islamic fundamentalism and islamic terrorism may use struggles of nationalities and ethnic groups
but will not further their objectives as the objective of a
global islamic Caliphate or empire
is incompatible with nation-states
that are based on nationalities as
there will be non-muslim/islamic
nation states as well. That is why
muslim groups hate Turkey as it
gives importance to Turkish identity and nation than to islam.

11:37 PM, November 29, 2008
தமிழ் சசி | Tamil SASI said...

JKLF என்பது அதனை உருவாக்கிய பாகிஸ்தானிய அரசின் மனநிலையை பொறுத்தது. அப்போது மதச்சார்பற்ற ஒரு விடுதலை போராட்டத்தை உருவாக்கினால், பின்காலனிய உலகில் காஷ்மீரையும் விடுவித்துவிடலாம் என்று பாகிஸ்தானிய ஆளும் வர்க்கம் சிந்தித்து உருவாக்கியது.

****

நீங்க சொன்னா சரியா தான் இருக்கும் :))

JKLFஐ பாக்கிஸ்தான் உருவாக்க வில்லை என்பது கூட தெரியாத உங்களிடம் இவ்வளவு நேரம் பேசியது கூட நேர விரயமே

****
சரி, அதே கேள்வி உங்களுக்கும்,
தமிழ் ஈழ முஸ்லீம்கள் காஷ்மீரிய ஜேகேஎல்எஃப் மாதிரியே, எங்கள் நாட்டில் மற்ற மக்களும் இருக்கலாம் என்று கூறி தங்களுக்கு தனி நாடு வேண்டும் என்று கேட்டால் அதற்கு ஆதரவு அளிப்பீர்களா?
****

அதான்...கிளிநொச்சியை பிடித்து, முல்லைத்தீவினையும் பிடித்து புலிகளை ராஜபக்சே ஓட ஓட இலங்கை தீவினை விட்டே விரட்ட போகிறாரே, பின் எதற்கு இந்த கேள்வியெல்லாம். நாங்க தான் என்னடா இப்படி ஆயிடுச்சே அப்படின்னு நொந்து போகணும். உங்களுக்கு ஜாலி தானே ?

11:57 PM, November 29, 2008
Anonymous said...

//அதான்...கிளிநொச்சியை பிடித்து, முல்லைத்தீவினையும் பிடித்து புலிகளை ராஜபக்சே ஓட ஓட இலங்கை தீவினை விட்டே விரட்ட போகிறாரே, பின் எதற்கு இந்த கேள்வியெல்லாம். நாங்க தான் என்னடா இப்படி ஆயிடுச்சே அப்படின்னு நொந்து போகணும். உங்களுக்கு ஜாலி தானே ?//

சசி, இந்த அனானிமஸ் வேறுபட்டவன்.

புலிகளின் தற்சமயமான பின்னடைவினால் வேண்டுமானால் அவர்களுக்கு மகிழ்ச்சியிருக்கலாம். ஆனால் அது ராஜபக்சவின் வெற்றியினால் இருக்க முடியாது. குறைந்த பட்சம், நீங்கள் கூறும் "தமிழ் முஸ்லீம்கள்" எனும் பொதுப்படையான சமூகத்தின் மகிழ்ச்சி ராஜபக்சவின் வெற்றியின் மீது இருக்க முடியாது. தமிழ் மக்களின் மகிழ்ச்சி, அரசியல் சாசனம் மற்றும் நடைமுறையில் உள்ள சிக்கல்கள் அகற்றப்படுவதில் தான் இருக்க முடியும்.

1:30 AM, November 30, 2008
தமிழ் சசி | Tamil SASI said...

தமிழ் மக்களின் மகிழ்ச்சி, அரசியல் சாசனம் மற்றும் நடைமுறையில் உள்ள சிக்கல்கள் அகற்றப்படுவதில் தான் இருக்க முடியும்.

******

கீழ்க்கண்ட வரிகளை சமீபத்தில் வாசித்தேன். அதனை உங்களுடைய மேற்கண்ட வரிகள் உண்மை தான் என நிருபிக்கின்றன...


I learned a very good lesson about ethnic majoritarianism recently. I believed for quite some time that ethnic majoritarianism is a political condition that the political leaders of the majority community impose by means of coercion on the ethnic minorities. It accords an unequal, at best second class, status to the minorities. Minorities do not accept majoritarianism and they resist it. That is why ethnic conflicts flare up. Observing how the Tamil and Muslim political parties in Sri Lanka have come to accept the second class and unequal status with great pleasure, I changed, realising that my understanding of majoritarianism was an incomplete one. I now know that ethnic majoritarianism is not necessarily coercive. It has a strong element of consent of the minorities, or at least their political leaders. Majoritarianism is completed when the political representatives of the minorities accept, with happiness and even in intense competition with each other, the condition of inequality. They do so in exchange of other benefits which are usually couched in the respectable language of "development assistance to our community". That is what the 25 years of civil war has done to the minority rights project in Sri Lanka

Jayadeva Uyangoda in Economic and Political Weekly

1:59 AM, November 30, 2008
Anonymous said...

சசி, பெயரிலி

JKLF யார் உற்பத்தி செய்தார் செய்யவில்லை என்பதெல்லாம் இந்த விவாதத்துக்கு தேவையில்லாதது.

உங்கள் நேர விரயத்துக்கு வருந்துகிறேன்.
//அதான்...கிளிநொச்சியை பிடித்து, முல்லைத்தீவினையும் பிடித்து புலிகளை ராஜபக்சே ஓட ஓட இலங்கை தீவினை விட்டே விரட்ட போகிறாரே, பின் எதற்கு இந்த கேள்வியெல்லாம். நாங்க தான் என்னடா இப்படி ஆயிடுச்சே அப்படின்னு நொந்து போகணும். உங்களுக்கு ஜாலி தானே ?//

ஆனால், கேள்வி எனக்கு ஜாலியை பற்றியது அல்ல. இது என் கேள்விக்கு பதிலும் அல்ல. உங்களது பிரின்ஸிபிளை பற்றியது. காஷ்மீருக்கு வைக்கும் அதே அளவுகோல்களின் படி நீங்கள் ஆதரவு தெரிவிக்கும் உரிமைப்போராட்டத்தின்படி ஈழத்தில் முஸ்லீம்கள் தனிநாடு கேட்டால் ஆதரவு அளிப்பீர்களா என்பதுதான்.

ஆம் இல்லை என்று சொல்லி முடித்துவிடலாமே?

ஏன் இவ்வளவு சுற்றி வளைப்பு, மென்று முழுங்குதல்?

9:06 AM, November 30, 2008
-/பெயரிலி. said...

/உங்களது பிரின்ஸிபிளை பற்றியது. காஷ்மீருக்கு வைக்கும் அதே அளவுகோல்களின் படி நீங்கள் ஆதரவு தெரிவிக்கும் உரிமைப்போராட்டத்தின்படி ஈழத்தில் முஸ்லீம்கள் தனிநாடு கேட்டால் ஆதரவு அளிப்பீர்களா என்பதுதான்./

ஆம். இப்போது, என்ன சொல்லவிரும்புகிறீர்கள்? பிரச்சனை என்னிலே இல்லை; உங்களிலேதான் என்று எனக்குப் படுகிறது. ஈழப்போராட்டத்தை தமிழர்-சிங்களவர்-முஸ்லீங்கள் என்று சுருக்கிப் பார்த்தால், உங்களை மாதிரியாகத்தான் கேள்விகளை எழுப்ப முடியும். ஒடுக்கப்பட்டவரின் சுயநிர்ணயப்போராட்டம் என்ற வகையிலே பார்த்தால், ஈழம், காஷ்மீர், குர்திஸ்தான், கடலோனியா இவை வந்தொடுங்கும் புள்ளி ஒன்றே என்று புரியும். தமிழீழவிடுதலைப்புலிகள் முன்வைத்ததாலே தொடங்கியதல்ல, ஈழத்தவர் சுயநிர்ணயவுரிமை பற்றிய போராட்டம். கல்லோயாத்திட்டம், கந்தளாய்த்திட்டம் உட்பட இடங்களிலே பறிபோன நிலங்களும் இனஞ்சார்குடிமக்கள்தொகை மாற்றமும் பாதித்ததிலே, முஸ்லீங்களின் இழப்பு பெரிதானதாகும். மற்றைய பக்கத்திலே கிறீஸ்தவர்களும் சைவர்களும் (இந்துக்கள் என்று இந்தியப்பார்ப்பனியவகைப்படுத்தலே முழுமையாக இங்கே புகாதீர்கள்) தமிழர்கள் என்ற அடையாளத்திலே பாதிக்கப்பட, தமிழ்பேசும் முஸ்லீங்கள் ஓரளவுக்கு உயிராபத்தின்றியேனும் தப்பியிருந்ததற்கு, தமிழ்பேசும் சைவர்களும் கிறீஸ்தவர்களும் பெருங்காரணமல்ல என்பதே என் உய்த்தறிவு. இது முஸ்லீங்கள் குறித்த முந்தைய தமிழ்பேசும் சைவர்களினதும் கிறீஸ்தவர்களினதும் கருத்துகள் சிறப்பானவை என்று சொல்ல வருவதல்ல என்பதையும் குறிப்பிடவேண்டும்.

எதையும் முஸ்லீங்கள், தமிழர்கள், இந்துக்கள் என்று கண்ணைக் கொண்டு பார்த்தால், இப்படியாகத்தான் உங்கள் புரிதல்கள் வந்து -மற்றவர்களைப் பற்றி-முடியும்.

நிற்க; இலங்கையிலே வடகிழக்கு முஸ்லீங்களுக்கும் மத்திய+தென்மேற்கு முஸ்லீங்களினிடையேயும் உள்ள உறவு/பிளவினைப் பற்றி ஏதும் நீங்கள் பேசவிரும்பவில்லையா? ஒன்றிய ஸ்ரீலங்காவுள்ளே முஸ்லீங்கள் பிரித்தானிய ஆட்சிக்காலத்திலிருந்து சிங்களசகோதரர்களுடன் பின்னிப்பிணைந்திருந்த கதையை அநாகரிக தர்மபாலர்களும் அறிவார்களே? அது பற்றிப் பேச விரும்பவில்லையா? புலிகளின் வாலை மட்டும் காழ்ப்போடு அனுமார்வாலாகப் பிடித்து அதன் வால்மூலம் வருமூலம் பார்த்துக்கொண்டிருந்தால் பிரச்சனையே இதுதான். மலேசியாவிலே தமிழர்கள் அடக்குமுறை என்று ஈழத்தவர்களும் குரல் கொடுப்பார்களேயொழிய, புலிகள் போய் மலேசியாவிலே சரமாரியாகச் சுட்டதாக யாராவது காட்டமுடியுமா? ஆனால், பிஜியிலே அதன் குடிமகன் மகேந்திரசௌத்ரி பதவி கவிழ்ப்பு என்றவுடன் போர்க்கப்பலை அனுப்ப இந்திய அரசு துடித்த கதை வாசித்திருக்கிறோம்.

எல்லைகடந்த கருத்தளவிலே முனைப்படுத்தப்பட்ட பயங்கரவாதத்தினையும் அரசபயங்கரவாதத்தினையும் ஆதரிக்கின்றவர்கள் தங்களின் விழுமியங்களை வைத்துக்கொண்டு மற்றவர்களைத் தட்டுவதைப் பார்க்கும்போது சிரிப்பு வரவில்லை.

மும்பையிலே நிகழ்ந்ததை வைத்துக்கொண்டு, மதச்சார்பின்மை கொண்டவரை வார்த்தைகளாலே தட்டி நொருக்கும், வெட்கமின்றி மிக வெளிப்படையாகவே "துலுக்கப்பயல்களை அடித்து நொருக்கவேண்டும்" என்று எழுதும், "இந்துத்துவா பயங்கரவாதிகள்தான் செய்தார்கள்" என்று சதிக்கருத்து எச்சிலைப் போலத் துப்பும் மனிதர்களின் விழுமியங்கள் எதிர்பார்த்ததுதான். பெரிய ஆலமரம் சரியும்போது, சில ஆயிரம் நாணற்புற்களை அழிந்துதான் போகுமென்று சொன்ன தர்மசக்கரக்காரர்களைப் பார்த்துவிட்டதாலே வியப்பு வரவில்லை.

12:52 PM, November 30, 2008
Anonymous said...

/
/உங்களது பிரின்ஸிபிளை பற்றியது. காஷ்மீருக்கு வைக்கும் அதே அளவுகோல்களின் படி நீங்கள் ஆதரவு தெரிவிக்கும் உரிமைப்போராட்டத்தின்படி ஈழத்தில் முஸ்லீம்கள் தனிநாடு கேட்டால் ஆதரவு அளிப்பீர்களா என்பதுதான்./

ஆம். இப்போது, என்ன சொல்லவிரும்புகிறீர்கள்? பிரச்சனை என்னிலே இல்லை; உங்களிலேதான் என்று எனக்குப் படுகிறது. ஈழப்போராட்டத்தை தமிழர்-சிங்களவர்-முஸ்லீங்கள் என்று சுருக்கிப் பார்த்தால், உங்களை மாதிரியாகத்தான் கேள்விகளை எழுப்ப முடியும்.
/

ஆம் என்று கூறியதற்கு நன்றி பெயரிலி

அப்படிப்பட்ட ஒரு விடுதலை போராட்டத்தை ஆதரிப்பீர்கள் என்று எடுத்துகொள்கிறேன்.

வடக்கில் வாழும் முஸ்லீம்கள் தனியாக தங்கள் நாட்டை உருவாக்கிக்கொள்ள ஆதரவு தெரிவிக்கும் அதே வேளையில் கிழக்கில் தெற்கில் வாழும் முஸ்லீம்கள் தனி நாடு கேட்டாலும் ஆதரிப்பீர்கள் என்று புரிந்துகொள்ளலாமா?

அடுத்த கேள்வி என்று நேரவிரயம் செய்வதற்கு மன்னிக்கவும்.

ஈழ தமிழ் தலித்துகள் (காரணங்களுடனோ காரணங்கள் இல்லாமலோ இல்லை கற்பனையான காரணங்களுடனோ, உண்மையான ஆனால் அறியப்படாத காரணங்களுடனோ) தனி நாடு கோரினாலும் ஆதரிப்பீர்களா?

விதண்டாவாதம் போல தோன்றும் என்று அறிவேன். ஆனால், உங்களது தனிநாட்டுக்கான விடுதலை போராட்டத்தின் இலக்கணங்களின் எல்லைகளை அறியவே கேட்கிறேன்.

1:42 PM, November 30, 2008
Anonymous said...

சோமாலியா மூலம் பலம் காட்ட நினைத்த இந்தியா அங்கேயும் அப்பாவி தாய்லாந்து மீனவர்களைத் தான் தாக்கி அழித்தது. தமிழ் அகதிகளைக் கண்டறிய பயன்படுத்திய கடற்படையில் பத்திலொரு பிரிவி மும்பாயில் நிறுத்த நாரயணன் மறந்துவிட்டார்.

3:09 PM, November 30, 2008
Anonymous said...

//விதண்டாவாதம் போல தோன்றும் என்று அறிவேன். ஆனால், உங்களது தனிநாட்டுக்கான விடுதலை போராட்டத்தின் இலக்கணங்களின் எல்லைகளை அறியவே கேட்கிறேன்.//


இது விதண்டாவாதம் கூட இல்லை. தன்னை புத்திசாலி என்று நினைத்துக்கொள்ளும் முட்டாள்தனம்.

காஷ்மீர், ஈழப் பிரச்சினைகளை அப்பகுதிகளின் வரலாறுகளோடு பொருத்திப்பார்க்கும் குறைந்தபட்ச அறிவுகூட இல்லாதவருக்கு பதில் சொல்லி திருப்தியளிக்க முடியாது.

காஷ்மீர் ஒரு தேசிய இனமாக, தனி தேசமாக இருந்த பகுதி. இந்திய/பாகிஸ்தானிய சுதந்திரத்திற்கு பிறகு இருநாடுகளுக்கிடையில் துண்டாடப்பட்டு, மீண்டும் ஒன்று பட்ட சுதந்திர நாடாகப் போராடுகிறது. அதேபோல இலங்கைத் தீவின் தமிழர் வாழும் பகுதிகள் தமிழ்மன்னர்களால் ஆளப்பட்டு, பின் காலனிய ஆட்சியாளர்களால் ஒட்டுமொத்த இலங்கையும் ஒரே அரசியல் பிரதேசமாக உருவாக்கப்பட்டு சுதந்திர இலங்கை என்ற பெயரில் சிங்களர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இப்போது மீண்டும் தமிழர்கள் தமக்கான தனி அரசு அமைக்கப் போராடுகிறார்கள்.

காஷ்மீரிகளும், தமிழர்களும் செயற்கையாக உருவாக்கப்பட்டுள்ள இந்திய, இலங்கை தேசிய அடையாளங்களிலிருந்து தம்மை விடுவித்துக்கொண்டு தம் சுய அடையாளங்களை மீட்டு, முழு சுயாதீனத்தோடு வாழ விரும்புகிறார்கள். இந்த அடிப்படை உண்மையை புரிந்துகொண்டால் அந்த அனானி நண்பர் தன்னுடைய புத்திசாலித்தனமான கேள்விகளுக்கு அவராகவே விடைகள் கண்டுபிடித்துக்கொள்ள முடியும். பெயரிலியும், சசியும் விடையளிக்கத் தேவையில்லை.

4:33 PM, November 30, 2008
-/பெயரிலி. said...

Anonymous,
Thanks for the question. I know where to stop pretending biting the hook. Good luck next time. Yes, I have no time.

4:49 PM, November 30, 2008
Anonymous said...

நன்றி அனானிமஸ்

/
இது விதண்டாவாதம் கூட இல்லை. தன்னை புத்திசாலி என்று நினைத்துக்கொள்ளும் முட்டாள்தனம்.
/
புத்திசாலி என்று என்னை நான் நினைத்துகொள்ளவில்லை. தெரிந்துகொள்வதற்காகக்கூட கேட்கலாம் இல்லையா.

/காஷ்மீர், ஈழப் பிரச்சினைகளை அப்பகுதிகளின் வரலாறுகளோடு பொருத்திப்பார்க்கும் குறைந்தபட்ச அறிவுகூட இல்லாதவருக்கு பதில் சொல்லி திருப்தியளிக்க முடியாது.

காஷ்மீர் ஒரு தேசிய இனமாக, தனி தேசமாக இருந்த பகுதி. இந்திய/பாகிஸ்தானிய சுதந்திரத்திற்கு பிறகு இருநாடுகளுக்கிடையில் துண்டாடப்பட்டு, மீண்டும் ஒன்று பட்ட சுதந்திர நாடாகப் போராடுகிறது. அதேபோல இலங்கைத் தீவின் தமிழர் வாழும் பகுதிகள் தமிழ்மன்னர்களால் ஆளப்பட்டு, பின் காலனிய ஆட்சியாளர்களால் ஒட்டுமொத்த இலங்கையும் ஒரே அரசியல் பிரதேசமாக உருவாக்கப்பட்டு சுதந்திர இலங்கை என்ற பெயரில் சிங்களர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இப்போது மீண்டும் தமிழர்கள் தமக்கான தனி அரசு அமைக்கப் போராடுகிறார்கள்.
/
ஏன் காஷ்மீர் ஈழப்பிரச்னைகளோடு கடந்தகால வரலாற்றோடு சேர்ந்த விடுதலை போராட்டத்தை நிறுத்தவேண்டும் என்று தெரியவில்லை. ராமநாதபுரம் மாவட்டம் சற்றே 60 வருடங்களுக்கு முன்னர் தனி சமஸ்தானமாக இருந்தது. கேரளாகூட அப்படியே. அவைகள் ஒட்டுமொத்த இந்தியாவுக்குள் திணிக்கப்பட்டன என்றும் கூறலாமே? அவைகளை தனிநாடாக அறிவிக்க போராட்டம் அறிவித்து போராடினால், ஆதரிக்கலாமா? சோழ சேர பாண்டிய பல்லவ அரசுகள்? அவற்றின் எல்லைகள்?

புதுச்சேரி, கோவா போன்றவை கூட இந்திய படைகளின் ஆக்கிரமிப்பின் பேரில் இந்தியாவுக்குள் இணைக்கப்பட்டன. இலங்கையினுள்ளும் அம்பாறை மாவட்டங்கள் யாழ் அரசின் கீழ்தான் இருந்தனவா என்று எனக்கு உண்மையிலேயே தெரியாது. அப்படி இல்லாமல் தனி சிற்றரசாகவோ சிங்கள அரசின் கீழே இருந்திருந்தால், அவற்றை எதிர்கால ஈழ அரசின் கீழ் கணக்கெடுக்கக்கூடாதா?

/
காஷ்மீரிகளும், தமிழர்களும் செயற்கையாக உருவாக்கப்பட்டுள்ள இந்திய, இலங்கை தேசிய அடையாளங்களிலிருந்து தம்மை விடுவித்துக்கொண்டு தம் சுய அடையாளங்களை மீட்டு, முழு சுயாதீனத்தோடு வாழ விரும்புகிறார்கள். இந்த அடிப்படை உண்மையை புரிந்துகொண்டால் அந்த அனானி நண்பர் தன்னுடைய புத்திசாலித்தனமான கேள்விகளுக்கு அவராகவே விடைகள் கண்டுபிடித்துக்கொள்ள முடியும். பெயரிலியும், சசியும் விடையளிக்கத் தேவையில்லை.
/

ராமநாதபுரம் மாவட்ட மக்கள் தங்களது முந்தைய சுய அடையாளத்தை இழந்துவிட்டனர் என்று கருதி அவர்கள் (தற்போது அல்ல, எதிர்காலத்தில் ) போராடும்போது ஆதரவு உண்டா?
சுய அடையாளங்களை மீட்டெடுக்கும் உரிமை ஈழ முஸ்லீம்களுக்கு உண்டா? அல்லது ஈழ தலித்துகளுக்கு உண்டா? அவர்கள் சுயாதீனத்தோடு வாழ அனுமதிஉண்டா? அவர்களுக்கு முன்பு தனி அரசு இல்லாதிருந்த பட்சத்தில் அந்த உரிமையை இழக்கிறார்களா?

5:11 PM, November 30, 2008
Anonymous said...

ஈழத்தில் தலித்துக்கள் எங்க இருக்கினம் புலம்பெயர் தேசத்தில் வானொலிகலிலும், இணயங்களிலும் மட்டுமே உயிர் வாழ்வதாக கேள்வி பட்டு இருக்கிறேன். இங்கு வந்துதான் ஈழத்தில் தலித்துக்கள் எனற சொற்றொடரை கேள்விப்படுகிறேன்.

6:00 PM, November 30, 2008
தமிழ் சசி | Tamil SASI said...

ஏன் கேட்டுக்கொண்டு தானே இருக்கிறார்கள் ? காஷ்மீரில் மட்டுமா கேட்கிறார்கள் ? மணிப்பூர், அசாம், நாகாலாந்து என இந்தியாவில் இருக்கிற சந்து பொந்துகளில் எல்லாம் கேட்டுக் கொண்டு தான் இருக்கிறார்கள்.

தங்களுடைய உரிமைகள் மறுக்கப்படும் பொழுது எல்லாம் இனமும், சாதியினரும் ஏதோ ஒரு வகையில் தங்கள் உரிமைகளை மீட்டெடுக்க போராட்டத்தை தொடங்கவே செய்கிறார்கள். அவர்களின் அந்த போராட்டமும் அதிகார வர்க்கத்தால் நசுக்கப்படும் பொழுது தான் அந்தப் போராட்டம் அடுத்த கட்டம் நோக்கி நகர்கிறது..

இலங்கை வரலாற்றில் முதல் கட்டத்திலேயா தனி நாடு கேட்டார்களா ? 1956க்கும் - 1970க்கும் இடையே இருந்த காலக்கட்டத்தில் என்ன நிகழ்ந்தது ? பண்டாரநாயக்கா- செல்வநாயகம் உடன்படிக்கை நிறைவேற்றப்பட்டிருந்தால் இன்று வடக்கு கிழக்கு ஒன்றிணைந்த இலங்கைத் தீவில் ஒரு மாநிலமாக கூட மாறியிருக்கும்.

தமிழகத்தில் தலித்களின் போராட்டங்களுக்கு எந்தப் பலனும் கிடைக்காமல் போயிருந்தால் அது ஆயுதப் போரட்டமாக விஸ்ரூபம் எடுத்திருக்கும். தலித்களுக்கு எல்லா உரிமைகளும் கிடைத்து விட்டது என நான் கூற வில்லை. இன்றும் நாங்கள் மனுஷங்கடா என்றே பாட வேண்டியுள்ளது. ஆனால் அவர்களின் நிலையில் ஓரளவுக்கு முன்னேற்றம் உள்ளது

தங்களுடைய போராட்டங்களால் எந்த நியாயமும் கிடைக்காத பொழுது தான் தங்களுக்கென அரசியல் அதிகாரங்களை கைப்பற்றி நாமே நம் அரசாங்கத்தை அமைத்துக் கொள்ள வேண்டும் என்ற கருத்தாக்கம் வலுப்பெறுகிறது. பிராந்திய ரீதியில் வலுவாக இருந்தால் அது தனி நாடு கோரிக்கை வடிவம் பெறுகிறது. அவ்வாறு இல்லாத பொழுது அதன் வடிவம் வேறு வகையாக உள்ளது. உதாரணமாக தமிழகத்தில்/இந்தியாவில் இருக்கின்ற சாதி ரீதியிலான அரசியல் அமைப்புகள். தலித் அரசியல் கட்சிகளின் நோக்கம் கூட அரசியல் அதிகாரங்களை வெல்லும் நோக்கத்தில் தான்.

இலங்கையின் தனி நாடு கோரிக்கை கூட ஒன்றிணைந்த இலங்கையில் தங்களுக்கான அதிகாரங்களை வெல்ல முடியாது என்பதால் தான். காரணம் இலங்கை மைய அரசு தமிழர்களை நம்பி இருக்க வேண்டிய அவசியம் இல்லை. இதனை பத்திரிக்கையாளர் சிவநாயகம் இவ்வாறு கூறுகிறார். அதனை என்னுடைய முந்தைய கட்டுரையிலும் எழுதியிருக்கிறேன்.

The period of 1956 to 1960 was one of signifiance for another reason... The realisation had come that Tamils as a People could never expect a fair deal under a unitary set-up where power was permanently entrenched in a numerically powerful sinhala majority


இதனை இந்தியாவின் சுதந்திர வரலாற்றில் கூட பார்க்க முடியும், காந்தி எடுத்தவுடன் இந்தியாவின் விடுதலையை ஏன் முன்வைக்கவில்லை ? எந்தக் கட்டத்தில் இந்தியாவின் விடுதலையை முன்வைத்தார் ? இதற்கான காரணங்கள் என்ன ?

அமைப்போகிற ஈழ அரசிலும் சரி, இந்தியாவிலும் சரி அல்லது உலகின் எந்த அரசாங்கத்திலும் சரி தொடர்ச்சியாக எந்த மக்களின் உரிமைகளும் மறுக்கப்படக்கூடாது. அதன் எதிர்வினை நிச்சயமாக போராட்டமாக வெடிக்கும். இது மிக மிக இயல்பானது...

****

தொடர்ச்சியான விதாண்டவாத கேள்விகளுக்கும் சரி, இதற்கு மேலான எந்தக் கேள்விகளுக்கும் சரி நான் பதில் அளிக்கப் போவதில்லை

நான் யாருடன் பேசிக்கொண்டிருக்கிறேன் என்பதும் எனக்கு தெரியும் :)

6:26 PM, November 30, 2008
Anonymous said...

முன்னூறு ஆண்டுகளுக்கு முன்னாலே தனி அரசாக இருந்ததென்பதற்காக தனியே போகவேண்டாம். இன்று அமைந்துள்ள அரசின் செயற்பாடுகளின்படி மற்றைய சமூகங்களுக்கு இருக்கும் உரிமைகள் கிடைக்கவில்லை என்றால் தனிநாடாக்க வேண்டி உரிமை வேண்டலாம். ஸ்கொட்லாந்துக்கு அந்த உரிமை இருக்கிறத்து. கியூபெக்குக்கு அந்த உரிமை இருக்கிறது. சோமாலிலாந்துக்கு அந்த உரிமை இருக்கிறது. எரித்திரியாவுக்கு அந்த உரிமை இருக்கிறது. ஈழத்துக்கு அந்த உரிமை இருக்கிறது. ஈழத்திலிருந்து பிரிந்து இலங்கை முஸ்லீம் மக்கள் தனிநாடு ஒன்றை நடத்த முடியுமானால் அவர்களுக்கும் அந்த உரிமை இருக்கிறது. இராமேஸ்வரத்துக்கும் அந்த உரிமை இருக்கிறது. சீர்காழி, சிதம்பரம், சிக்கநாயக்கன்பட்டி, சிந்தாரிப்பேட்டை எல்லாவற்றுக்கும் தனி நாடாக நடக்கும் வலிமையிருந்தாலுஞ்சரி இல்லாவிட்டாலுஞ்சரி, அந்த உரிமை இருக்கிறது. சாம்பாரிலே காய்கறி போல மக்கள் கலந்துவாழும் அமெரிக்காவிலேயும் ஆண்டுக்கொரு முறை "The Union is strong" என்று சனாதிபதி சந்திலே சிந்து பாடவேண்டியிருக்கிறதும் இதனாலே. சோவியத்து பெயரளவிலே சுயநிர்ணய உரிமை கொடுத்து உக்ரேன் தொடக்கம் உக்பெகிஸ்தானை வைத்திருந்ததும் இதனாலேதான்.

சுயநிர்ணயத்தின் அடிப்படை உரிமை தனிமனிதனுக்கும் மொழி, இனம், மதம் சார்ந்து அவனுக்குக் இயல்பிலே அமைந்த புவிசார்நிலைவகுப்பும் உண்டு. ஆனால் ஆற்றுப்பக்க வயலும் தோப்புடனுமான பதினாறு பட்டி தனிநாடாக இருபத்திரோயாம் நூற்றாண்டிலே அமைந்து நடப்பதற்கான நாளாந்த நடைமுறைச்சிக்கல்களுக்கும் தொழில்முறைவளர்ச்சியிலேயும் நிர்வாகத்திறனிலும் நாட்டுக்கான கட்டமைப்புத்திறனிலும் முற்பட்ட முப்பத்தைந்து இலட்சம் மக்கள் தனிநாடாகி நடத்துவதுக்குமான நிலைக்கும் உள்ள வேறுபாட்டினை உணர பொதுமையறிவுடனான பகுத்தறிவு மட்டுமே போதுமானது. ஆங்! சொல்ல மறந்தே போய்விடவிருந்தேன்... பகுத்தறிவு என்பது மற்றவர்களின் சுயநிர்ணயம் என்பது எனது நானுக்கும் எனது நாட்டுக்கும் இழுக்கு என்பதாகக் கருதும் விழிவெண்படலத்திலே புள்ளிவிழாத தன்மையாகும்.

6:29 PM, November 30, 2008
Anonymous said...

//அமைப்போகிற ஈழ அரசிலும் சரி, இந்தியாவிலும் சரி அல்லது உலகின் எந்த அரசாங்கத்திலும் சரி தொடர்ச்சியாக எந்த மக்களின் உரிமைகளும் மறுக்கப்படக்கூடாது. அதன் எதிர்வினை நிச்சயமாக போராட்டமாக வெடிக்கும். இது மிக மிக இயல்பானது...//

//காஷ்மீரில் மட்டுமா கேட்கிறார்கள் ? மணிப்பூர், அசாம், நாகாலாந்து என இந்தியாவில் இருக்கிற சந்து பொந்துகளில் எல்லாம் கேட்டுக் கொண்டு தான் இருக்கிறார்கள்.//

அப்படியா? காஷ்மீர, மணிப்பூர் அசாம் நாகாலாந்து மக்களின் எந்த உரிமை தொடர்ச்சியாக மறுக்கப்பட்டு வந்துள்ளது என்று தெளிவு படுத்த முடியுமா?

8:47 PM, November 30, 2008
Anonymous said...

இதைத் தான் எதிர்பார்த்தேன். நீங்கள் எழுப்புவது எல்லாமே hypothetical கேள்விகள் என்றாலுமே முன்னைய கேள்விகளை விட இந்த கேள்விகள் பொருத்தமானவை.

//ஏன் காஷ்மீர் ஈழப்பிரச்னைகளோடு கடந்தகால வரலாற்றோடு சேர்ந்த விடுதலை போராட்டத்தை நிறுத்தவேண்டும் என்று தெரியவில்லை. ராமநாதபுரம் மாவட்டம் சற்றே 60 வருடங்களுக்கு முன்னர் தனி சமஸ்தானமாக இருந்தது. கேரளாகூட அப்படியே. அவைகள் ஒட்டுமொத்த இந்தியாவுக்குள் திணிக்கப்பட்டன என்றும் கூறலாமே? அவைகளை தனிநாடாக அறிவிக்க போராட்டம் அறிவித்து போராடினால், ஆதரிக்கலாமா? சோழ சேர பாண்டிய பல்லவ அரசுகள்? அவற்றின் எல்லைகள்?//

ஏனென்றால், காஷ்மீரிகளும், ஈழத்தமிழர்களும் மட்டும் தான் தங்கள் உரிமைகள் மறுக்கப்படுவதாக, தங்கள் அடையாளங்கள் அழிக்கப்படுவதாக, தங்கள் பூமிகள் ஆக்கிரமிக்கப்பட்டிருப்பதாக இப்போது போராடுகிறார்கள். நீங்கள் குறிப்பிட்ட ராமநாதபுரம், கேரளா மற்றும் சேர, சோழ, பாண்டியர்கள் ஆண்ட பகுதிகளின் மக்களும் ஒன்றுபட்ட இந்தியாவில் தாங்கள் ஒடுக்கப்படுவதாக, தங்கள் பூமி ஆக்கிரமிக்கப்பட்டிருப்பதாக நினைப்பதற்கான எந்த அறிகுறியும் இல்லை. ஆகவே உங்கள் புத்திசாலித்தனமான கேள்வியை முன்வைத்து விவாதிப்பதற்கு அவசியமும், அவசரமும் இல்லை. அப்படி ஒரு நிலை நீங்களும், நானும் உயிருடன் இருக்கும்போதே உருவாகுமானால் அப்போது விவாதிக்கலாம். அதுவரை பொருமையாக இருங்கள்.

//புதுச்சேரி, கோவா போன்றவை கூட இந்திய படைகளின் ஆக்கிரமிப்பின் பேரில் இந்தியாவுக்குள் இணைக்கப்பட்டன.//

இந்தியா ஆக்கிரமிக்கும் முன் தனி நாடு பிரகடனம் செய்தார்களா அல்லது பிறகு தனிநாடு வேண்டுமென்று கேட்கிறார்களா?

புதுவை பற்றி ஒரு சின்ன நினைவூட்டல். 1977 இல் மொரார்ஜி தேசாய் பிரதமாராக இருந்தபோது, பாண்டிச்சேரியை தமிழ்நாட்டோடு இணைக்கவேண்டும் என்று ஒரு கருத்தை வெளியிட்டார். அதை புதுவை மக்கள் கடுமையாக எதிர்க்க அம்முயற்சி கைவிடப்பட்டது. எதிர்ப்பிற்கு முக்கியமாக வைக்கப்பட்ட காரணம் தமிழ்நாட்டோடு இணைந்தால் தங்கள் தனித்தன்மையை இழந்துவிடுவோம் என்பதாக இருந்தது.

//ராமநாதபுரம் மாவட்ட மக்கள் தங்களது முந்தைய சுய அடையாளத்தை இழந்துவிட்டனர் என்று கருதி அவர்கள் (தற்போது அல்ல, எதிர்காலத்தில் ) போராடும்போது ஆதரவு உண்டா? //

முதலில் குறிப்பிடபடி அப்படி ஒரு நிலை வந்தால் அப்போது விவாதிக்கலாம். அதுவரை நிம்மதியாக இருங்கள்.

//இலங்கையினுள்ளும் அம்பாறை மாவட்டங்கள் யாழ் அரசின் கீழ்தான் இருந்தனவா என்று எனக்கு உண்மையிலேயே தெரியாது. அப்படி இல்லாமல் தனி சிற்றரசாகவோ சிங்கள அரசின் கீழே இருந்திருந்தால், அவற்றை எதிர்கால ஈழ அரசின் கீழ் கணக்கெடுக்கக்கூடாதா? //

//சுய அடையாளங்களை மீட்டெடுக்கும் உரிமை ஈழ முஸ்லீம்களுக்கு உண்டா? அல்லது ஈழ தலித்துகளுக்கு உண்டா? அவர்கள் சுயாதீனத்தோடு வாழ அனுமதிஉண்டா? அவர்களுக்கு முன்பு தனி அரசு இல்லாதிருந்த பட்சத்தில் அந்த உரிமையை இழக்கிறார்களா?//

சுதந்திர ஈழநாடு அமைந்தபிறகு ஈழ முஸ்லீம்களும், 'தலித்'களும் ஏனைய தமிழர்களுக்கு இணையாக நடத்தப்படாவிட்டால், உரிமைகள், வாய்ப்புகள் மறுக்கப்பட்டால், அந்த மக்கள் குழுவினர் பூகோளரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும், தனிநாடாக இயங்கும் சாத்தியம் இருந்தால் நிச்சயம் ஆதரவு உண்டு.

இப்போதைக்கு முதலில் ஈழம் அமையட்டும். பிற hypothetical கேள்விகளையெல்லாம் அதற்கான அவசியம் நேரும்போது பேசலாம்.

11:36 PM, November 30, 2008
மு மாலிக் said...

சசி, உங்கள் பதிவின் ட்ராஃபிக் என்னை பிரமிக்க வைக்கிறது. ஒரு அனானிமஸ் வாசகர் தனது பின்னூட்டத்தில் என்பதிவிற்கு ஒரு தொடுப்பு கொடுத்துள்ளார். அனானிமஸான அந்த பின்னூட்டத்தின் மூலமாகக் கூட‌ பலர் என்பதிவிற்கு வருவதைப் பார்க்கையில், உங்களது பதிவுகளின் பலம் புரிகிறது. வாழ்த்துக்கள்.

இது சற்று பதிவிற்கு அப்பாற்பட்டது; ஆனால் அவரது குற்றச்சாட்டுக்கு விளக்கமளிக்க இதைவிட வேறு சிறந்த இடம் எனக்கு தெரியவில்லை. மன்னிக்கவும்.

தனது குற்றச்சாட்டிற்கு ஆதாரமாக "நோபல் பரிசுகளின் அரசியல்" எனும் பதிவிற்கு அவர் தவறாக தொடுப்பு கொடுத்திருக்கவேண்டும். இத்தவறு எப்படி ஏற்பட்டிருக்கலாம் என்றால், "அமெரிக்கர்கள்" மற்றும் "மத" என்ற வார்த்தைகளை அவசரத்தில் கூகிளைக் கொண்டு எனது தளத்தில் தேடி, அது கொடுத்த விடைகளில் ஒன்றினை எடுத்து தொடுப்புக் கொடுத்திருக்கவேண்டும்.

இஸ்லாமிய மத அடிப்படைவாதத்தினை எதிர்த்து பத்திற்கும் மேற்பட்ட பதிவுகளாவது எனது வலைத்தளத்தில் இருக்கவேண்டும். இருக்கும் சொற்ப பதிவிகளில் பத்திற்கும் மேற்பட்டபதிவுகள் என்பது சற்று அதிகமான வீதமெனெ எனக்கு படுகிறது. அதனை அவர் படிக்க வேண்டுகிறேன்.

அவர் மத அடிப்படைவாதியல்ல என்பதினை அவரது பின்னூட்டத்தின் மூலமாக உணர்வதினால் இதனை நான் கூறத்தோன்றியது.

மற்றபடி எனக்கு இவ்விளக்கத்தினைக் கொடுத்து எனது பிம்பத்தினைப் பாதுகாக்கும் எண்ணமல்ல.

உலகம் முழுவதும் இஸ்லாமிய ஆட்சியை நிறுவ வேண்டுமென்றும், பண்டைக் கால அராபிய வாழ்வியலை நிறுவ உலகில் உள்ள அனைத்து பண்பாடுகளையும் அழிக்கவேண்டும் என்றும் நிலைக் கொண்டுள்ள வாகாபிசம் போன்ற மதஅடிப்படைவாதத்தினைப் பொறுத்தவரையில், அவைகளை வன்முறையினைக் கொண்டேனும் எதிர்க்கவேண்டுமென நான் கொண்டுள்ளதே நிலைப்பாடு.

புலிகளை நான் விமர்சிப்பதைக் கொண்டு அவர் இந்த கருத்தினைக் கூறியிருக்கக் கூடும்.

நான் மத அடிப்படைவாத்தினை எதிர்ப்பவனே ஒழிய "இஸ்லாமிய வெறுப்பு" (Islamophobia) உடையவன் அல்ல. மற்றும் இனவெறுப்பும் உடையவன் அல்ல. இவ்விரு வெறுப்புகளையும் கொண்டு புலிகள் இனசுத்திகரிப்பு செய்ததினால் நான்அவர்களை விமர்சிக்கிறேன்.

நானும் இத்தகைய வெறுப்புகளைக் கொண்டு எனது நண்பர்கள், மற்றும் எனது சூழலில் வாழும் மற்றவர்களின் மனதில் எனது பிம்பத்தினைத் தூக்கி நிறுத்தும் "அங்கிள் டாம்" போன்று இருந்தாலே 'சீரிய சிந்தனையாளர்' என்று அவர் நினைத்தால் அதற்கு நான் பொறுப்பல்ல.

அவரது பின்னூட்டத்தின் மூலம் என்னைப் பற்றிய அவரது மதிப்பீடு ஒரு பக்கம். எனது பதிவுகளில் சில வாகபிகளின் பின்னூட்டங்கள் மறுபக்கம். எனது நடுனிலையினை நான் உணர என்னை ஊக்கப் படுத்தும் அவருக்கு எனது நன்றி.

நான் ஆடிக்கு ஒருவாட்டி அமாவாசைக்கு ஒருவாட்டி எழுதும் பதிவுகளும் கவனிக்கப்படுகிறது என எனக்கு மகிழ்ச்சி

11:59 PM, November 30, 2008
Anonymous said...

//சுதந்திர ஈழநாடு அமைந்தபிறகு ஈழ முஸ்லீம்களும், 'தலித்'களும் ஏனைய தமிழர்களுக்கு இணையாக நடத்தப்படாவிட்டால், உரிமைகள், வாய்ப்புகள் மறுக்கப்பட்டால், அந்த மக்கள் குழுவினர் பூகோளரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும், தனிநாடாக இயங்கும் சாத்தியம் இருந்தால் நிச்சயம் ஆதரவு உண்டு.

இப்போதைக்கு முதலில் ஈழம் அமையட்டும்.//

ஏன் இப்போதே அவர்கள் தங்கள் தனிநாடு குறித்த கோரிக்கையை கிளப்பவும் அதற்கு நீங்கள் ஆதரவும் அளிக்கலாமே?

எதற்கு இன்னொரு அரச பயங்கரவாதத்தின் கீழ் இன்னொரு போராட்டம்?

8:24 AM, December 01, 2008
Anonymous said...

//ஏன் இப்போதே அவர்கள் தங்கள் தனிநாடு குறித்த கோரிக்கையை கிளப்பவும் அதற்கு நீங்கள் ஆதரவும் அளிக்கலாமே?//

சரி கிளப்புங்கள். அதற்கான காரணங்களை விபரமாக எடுத்து வையுங்கள். பார்க்கலாம்.

//எதற்கு இன்னொரு அரச பயங்கரவாதத்தின் கீழ் இன்னொரு போராட்டம்?//

அதானே, எதுக்கு என்னொரு அரச பயங்கரவாதத்திற்கு வர்ற வரைக்கும் காத்திருக்கணும். இப்போதைய சிங்கள அரச பயங்கரவாதத்திற்கு எதிராகவே பிரகடனம் செய்துவிடுங்கள்.

1:52 PM, December 01, 2008
Human Being said...

அன்புள்ள சசி...

உங்களுக்கு காஷ்மீரத்தின் உறை பனிக்குள் கனன்றுகொண்டிருக்கும் வெப்பம் தெரியும் என ஒத்துக்கொள்கிறேன்.

என்னுடைய இன்னொரு கேள்விக்கு தாங்கள் பதில் சொல்லாமல் கோபப்படுகிறீர்களே....

"இஸ்லாமிய அடிப்படைவாதம்" என்ற பதப்பிரயோகத்தின் வரலாற்றை அறிவீர்களா?

4:15 PM, December 02, 2008