Sunday, August 17, 2008

ஈழப் போராட்டம், இந்திய பூச்சாண்டிகள், விகடனின் Half-truth சர்வே...

விடுதலைப் புலிகள் மற்றும் ஈழப் போராட்டம் குறித்த சமீபத்தைய விகடனின் கருத்து கணிப்பு பல காலங்களாக தமிழகத்தில் ஊடகங்களால் கட்டமைக்கப்பட்டிருந்த போலியான கருத்தாக்கத்தை தகர்த்து உள்ளது. ராஜீவ் படுகொலைக்கு பிறகு தமிழகத்தில் விடுதலைப் புலிகளுக்கு எந்த ஆதரவும் இல்லை என்று இந்தியாவில் உள்ள ஊடகங்கள் தொடர்ந்து கூறி வந்ததை இந்த கருத்து கணிப்பு தகர்த்து இருக்கிறது.

விடுதலைப் புலிகளுக்கான தமிழ்நாட்டின் ஆதரவு குறித்து பல கட்டுரைகளில் எழுதி, அந்த விவாதங்கள் ராஜீவ் படுகொலை என்ற வட்டத்திற்கே வந்து விடுவதில் ஏற்பட்ட சோர்வு காரணமாக, விகடன் கருத்து கணிப்பு குறித்து உடனே எழுத வில்லை. அதனால் தாமதமாக இந்தப் பதிவு வெளியாகிறது.

இன்றைக்கு தமிழ் ஈழத்தை எதிர்க்கும் பலர், 1991க்கு முன்பும் தமிழ் ஈழத்தை எதிர்த்தே வந்திருக்கின்றனர். அவர்களுக்கு அன்றைக்கு கிடைத்த காரணம் தமிழ் ஈழம் அமைந்தால் தனித்தமிழ்நாடு அமைந்து விடும் என்பது தான். ராஜீவ் படுகொலைக்குப் பிறகு தனித்தமிழ்நாடு என்ற பூச்சாண்டிக் கதையை ராஜீவ் படுகொலை கொண்டு நிரப்பிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அவர்களின் அடிப்படையான தேவை ஒன்று தான் - தமிழ் ஈழம் எக்காரணம் கொண்டும் அமைந்து விடக்கூடாது.

1991க்கு பிறகு விடுதலைப் புலிகளுக்கு தமிழகத்தில் ஆதரவு இல்லை, தமிழகத்தில் உள்ளவர்களுக்கு தமிழ் ஈழம் குறித்து எதுவுமே தெரியாது, பிராபகரன் தவிர தமிழ்ச்செல்வன் யார் என்று கூட தமிழகத்தில் உள்ளவர்களுக்கு தெரியாது என்பன போன்ற பல்வேறு கதைகளை ஊடகங்கள் தொடர்ந்து பரப்பி வந்தன. இந்தக் கதைகள் பொய்க் கதைகள் என நமக்கு தெரிந்தாலும் அதனை நம்மால் வலுவாக மறுக்க முடியவில்லை. ஏனெனில் அதனைச் சார்ந்த கருத்து கணிப்பு எதுவும் எடுக்கும் தைரியம் தமிழகத்தில் இருந்த எந்த பத்திரிக்கைக்கும் இருந்ததில்லை. அப்படியே வேறு ஏதேனும் பத்திரிக்கைகள் செய்திருந்தாலும், அந்த பத்திரிக்கையின் நம்பகத்தன்மை குறித்த கேள்விகள் எழுந்திருக்கும்.

உதாரணத்திற்கு நக்கீரன் இப்படி ஒரு கருத்துக்கணிப்பை வெளியிட்டிருந்தால் என்ன நடந்திருக்கும் ? அந்தக் கருத்துக்கணிப்பின் நம்பகத்தன்மை, அந்த இதழின் நம்பகத்தன்மை, அந்த பத்திரிக்கை ஆசிரியரின் நம்பகத்தன்மை, புலிகளுக்கும் - நக்கீரனுக்கும் இருக்கும் தொடர்புகள் போன்ற பல்வேறு கேள்விகள் எழுப்பபட்டிருக்கும்.

ஆனால் 80 ஆண்டு கால ”பாரம்பரியம்” மிக்க விகடன் இதழ் சொல்லும் பொழுது அந்த கருத்துக்கணிப்பிற்கு இருக்கும் நம்பகத்தன்மையே தனி தான். அதனை இன்றைக்கு கண் கூடாக காண முடிகிறது. விடுதலைப் புலிகளின் எதிர்ப்பாளர்கள் வாய்மூடி அமைதியாக இருக்கிறார்கள். விகடனா இப்படி ஒரு சர்வே எடுத்திருக்கிறது என்ற ஆச்சரியம். அவர்களாலேயே இதனை நம்ப முடியவில்லை. வேறு ஏதேனும் பத்திரிக்கைகள் இந்த கருத்துகணிப்பை எடுத்திருந்தால் நொடிப்பொழுதில் அதன் தேசபக்தியை கேள்வி கேட்டு கருத்துகணிப்பின் நம்பகத்தன்மையை தகர்த்து இருக்க முடியும். ஆனால் விகடன் ஆயிற்றே ? 80 ஆண்டு கால ”பாரம்பரியம்” மிக்க தங்களுக்கு நெருக்கமான விகடனை என்ன செய்ய முடியும் ? வாய்மூடி மொளனமாக மட்டுமே இருக்க முடியும். அதைத் தான் தற்பொழுது செய்து கொண்டிருக்கிறார்கள்.

ராஜீவ் காந்தி படுகொலை என்ற ஒன்றினை மையப்படுத்தி தமிழகத்தில் புலிகளுக்கு எந்த ஆதரவும் இல்லை என கூறி வந்த பத்திரிக்கையாள பூச்சாண்டிகளான என்.ராம், மாலன், வாஸந்தி, சோ போன்றோரும், முன்னாள உளவாளிகளான பி.ராமனும், ஹரிஹரனும் வாயடைத்து போய் கள்ள மொளனம் சாதிக்கிறார்கள். அவர்களை வாய் மூட செய்த ஒரு காரணத்திற்காவது நான் விகடனுக்கு நன்றி சொல்ல வேண்டும்.

தொடர்ந்து பல காலமாக தமிழகத்தில் விடுதலை புலிகளுக்கான ஆதரவு தளம் உள்ளது என கூறிவந்த என்னைப் போன்ற பல ஈழ ஆதரவாளர்களின் நிலைப்பாட்டினை இந்த கருத்துகணிப்பு உறுதி செய்கிறது.

அரசியல்வாதிகளின் பாணியில் சொல்ல வேண்டும் என்றால் Vikatan survey vindicated our stand.

******

விகடனின் இந்த கருத்து கணிப்பு வரவேற்கபட வேண்டிய ஒன்று தான். என்றாலும் விகடனின் இந்த கருத்து கணிப்பு நடத்தப்பட்ட விதம் குறித்து எனக்கு விமர்சனங்கள் உண்டு.

ஈழப் பிரச்சனையை பொறுத்த வரை இந்திய ஊடகங்கள் எப்பொழுதுமே இந்தப் பிரச்சனையை இந்தியாவின் பார்வையில் இருந்து தான் அணுகியிருக்கின்றன. தமிழர்களின் பார்வையில் இருந்து இந்தப் பிரச்சனையை எந்த ஊடகங்களும் பார்த்ததில்லை. தங்களின் தனிப்பட்ட கருத்தினையே தமிழக மக்கள் மீது திணித்து இருக்கின்றன. செய்திகள் தணிக்கை செய்யப்பட்டிருக்கின்றன. விகடனின் கருத்து கணிப்பும் அதைத் தான் இங்கு செய்கிறது.

இந்தியாவின் பார்வையில் ராஜீவ் காந்தியின் படுகொலை குற்றம் என்றால் ஈழத் தமிழர்களின் பார்வையில் இந்திய இராணுவம் ஈழத்தில் தமிழர்கள் மீது தொடுத்த மிக மோசமான படுகொலைகள், பெண்கள் மீதான பாலியல் வன்முறைகள் ராஜீவ் காந்தியின் படுகொலையை விட மோசமான குற்றங்கள். இந்திய இராணுவம் தமிழர்களை கொன்றதால் தான் அப்போதைய தமிழக முதல்வர் கலைஞர் இந்திய இராணுவம் சென்னை திரும்பி வந்த பொழுது, அந்த வரவேற்பை புறக்கணித்தார். என் இனத்தை கொன்று விட்டு வரும் ஒரு இராணுவத்தை தன்னால் வரவேற்க முடியாது என கலைஞர் கூறினார்.

இந்திய இராணுவம் செய்த பல மோசமான அத்துமீறல்களில் வல்வெட்டிதுறை படுகொலை மிக முக்கியமான ஒன்று. அது குறித்த மிக விரிவான செய்தி ஒன்றினை அப்பொழுது இந்தியன் எக்ஸ்பிரஸ் வெளியிட்டு இருந்தது. வல்வெட்டி துறையில் தமிழர்களை வரிசையாக நிற்க வைத்து இந்திய இராணுவம் சுட்டுக் கொன்றது. ஜாலியன் வாலாபாக், My Lai போன்ற படுகொலை சம்பவங்களை விட மோசமான படுகொலை வல்வெட்டி துறை படுகொலை. இதனை செய்த குற்றவாளிகள் இந்திய இராணுவத்தினர்.

இந்தியன் எக்ஸ்பிரஸ் கட்டுரையை இந்தச் சுட்டியில் படிக்கலாம்.
http://www.tamilnation.org/indictment/Massacre_at_Valvetti_-_Indian_Express.pdf

இந்தியாவின் பாரளுமன்றத்தில் இந்தியாவின் முன்னாள் பாதுகாப்பு அமைச்சரும், அப்போதைய எதிர்க்கட்சி உறுப்பினருமான ஜார்ஜ் பிரணாண்டஸ் பின்வருமாறு கூறுகிறார்.

"When in early August, 1987, I had said that Mr. Rajiv Gandhi's military adventure in Sri Lanka would be India's Viet Nam, I had not anticipated that India's Viet Nam would also have its own My Lai. Of course, I was aware and I had also said repeatedly that soldiers everywhere alike, their training and the rigours of their life, not to speak of the brutalisation caused by war, making them behave in the most inhuman ways when under pressure.

That is why when in the early days of India's military action in Sri Lanka, stories of rape and senseless killings by Indian soldiers came to be contradicted by the India government publicists I joined issue with everyone who came to accept that our soldiers were cast in the mould of boy scouts who went around the fighting fields of Sri Lanka looking out for opportunities to do their day's good deeds, particularly for damsels in distress.

Now, in Velvlettiturai, the Indian army has enacted its My Lai. London's Daily Telegraph commenting editorially on the barbarism exhibited by the Indian army in Velvettiturai says that, if anything "this massacre is worse than My Lai. Then American troops simply ran amok. In the Sri Lankan village, the Indians seem to have been more systematic; the victims being forced to lie down, and then shot in the back".

இவ்வாறு இந்திய இராணுவத்தின் அத்துமீறல்களை இந்தியன் எக்ஸ்பிரஸ் தொடங்கி, லண்டன் பத்திரிக்கைகள் வரை பட்டியலிட்டு இருக்கின்றன.

ஈழப் பிரச்சனையின் ஒரு முக்கியமான பரிமாணமான இந்திய இராணுவத்தின் அத்துமீறல்கள், போர் குற்றங்கள் குறித்து விகடனின் சர்வே ஏன் தமிழக மக்களிடம் கேள்வி எழுப்பவில்லை. சிவராசனும், சுபாவும், தனுவும் செய்த படுகொலைக்கு விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் பொறுப்பு என்றால் இந்திய இராணுவம் செய்த தவறுகளுக்கு இந்தியாவின் அப்போதைய பிரதமர் ராஜீவ் காந்தி பொறுப்பு இல்லையா ?

அப்படியெனில் ஈழத் தமிழ் மக்கள் மீது வன்முறை தாக்குதலை தொடுத்த ராஜீவ் காந்தி குற்றவாளியா, குற்றமற்றவரா, மன்னித்து விடலாமா என்ற கேள்விகளை விகடன் ஏன் முன்வைக்க வில்லை என்ற கேள்வியை நான் எழுப்ப விரும்புகிறேன்.

******

விகடன் நடத்திய இந்த சர்வே வரவேற்கப்பட வேண்டிய ஒன்று தான். என்றாலும் இந்த சர்வே முடிவுகளை வெளியிட்ட விதம் என்னை எரிச்சல் படுத்தியது என்பது தான் உண்மை.

“நிச்சயம் தமிழீழம் வேண்டும்! பிரபாகரன் கைதாக வேண்டும்!” என்பது விகடனின் சர்வே முடிவை ஒட்டிய தலைப்புச் செய்தியாக வெளிவந்தது.

சரி விகடன் வெளியிட்ட சர்வே முடிவுகள் என்ன புள்ளிவிபரங்களை தருகிறது என பார்ப்போம்.

பிரபாகரன் கைது செய்யப்பட வேண்டும் என கூறியவர்கள் 43.02%,
குற்றமற்றவர் என கூறியவர்கள் - 16.90%
குற்றத்தை மன்னித்து விடலாம் என கூறியவர்கள் 40.07%. (மன்னித்து விட வேண்டும் என்றால் என் சிற்றறிவுக்கு எட்டிய வரை கைது செய்ய வேண்டாம் என்பது தான் பொருள் என நினைக்கிறேன்)

அதாவது 56.97% பேர் பிரபாகரன் கைது செய்யப்பட வேண்டாம் என்று தான் கூறுகிறார்கள். அப்படி இருக்கும் பொழுது பிரபாகரன் கைதாக வேண்டும் என தமிழக மக்கள் கூறியுள்ளதாக விகடன் தலைப்புச் செய்தி வெளியிடுகிறது ? என்ன கொடுமை சார் இது ?

மும்முனைப் போட்டியில் 43.02% பெற்ற கட்சி வெற்றி பெற்றது, மற்றவர்கள் எல்லாம் தோல்வி அடைந்தார்கள் என்று சொல்ல இது என்ன தேர்தல் கருத்து கணிப்பா ? ஒரு கருத்தினை ஒட்டிய கேள்வி என்னும் பொழுது அந்தக் கருத்தினை சார்ந்த அனைத்து விடயங்களையும் அலசி தான் தலைப்புச் செய்தி வெளியிட வேண்டும். ஆனால் விகடன் அதனைச் செய்ய வில்லை.

இந்தக் கருத்து கணிப்பின் முடிவுகளை ”உண்மையாக” அப்படியே வெளியிடுவதில் விகடனுக்கு உள்ள நிர்பந்தம் எனக்கு புரிகிறது.

இதே சர்வே “நிச்சயம் தமிழீழம் வேண்டும்! பிரபாகரன் குற்றமற்றவர்!” என்றோ “நிச்சயம் தமிழீழம் வேண்டும்! பிரபாகரனை மன்னித்து விடலாம்” என்றோ வந்திருந்தால் என்ன நடந்திருக்கும் ? இந்தியாவின் மேல்தட்டு ஊடகங்களும், தமிழகத்தில் உள்ள விகடனின் ”சொந்தக்கார” ஊடகங்களும் விகடனை ரவுண்டு கட்டி அடித்திருப்பார்கள். விகடனின் நாட்டுப்பற்று குறித்து கேள்விகள் எழுந்திருக்கும். 80 ஆண்டு கால பாரம்பரியம் மிக்க விகடன் எப்படி தேச விரோத பாதையில் செல்கிறது என்பது குறித்த கவலைகள் எழுந்திருக்கும். விகடனுக்கு புலிகள் வழங்கிய வெளியே தெரியாத தொகை குறித்த வேள்விகள் எழுந்திருக்கும்.

எனவே இந்தப் பிரச்சனைகளில் இருந்து தப்பிக்க விகடன் ஒரு உண்மையை மட்டும் வெளியிட்டு விட்டு மற்றொரு உண்மையை புள்ளிவிபரங்களுடன் சேர்த்து மறைத்து விட்டது.

40 மறுமொழிகள்:

தமிழ் சசி | Tamil SASI said...

நண்பர் பிரகாஷ் பத்ரியின் பதிவில் இந்த பின்னூட்டத்தை எழுதியிருந்தார்.



ஆனால்,எதிர்ப்பதற்கோ ஆதரவளிப்பதற்கோ தேவையான ஈழப்போராட்டம் குறித்த புரிதல் தமிழகத்தில் இருக்கிறதா என்பதுதான் நான் வைத்த கேள்வி.

இருக்குன்னு நீங்க சொல்றீங்க. இல்லைன்னு நான் சொல்றேன். அவ்வளவு எதுக்கு? தமிழ்மண முகப்பிலே ஒரு ஆன்லைன் சர்வேக்கு ஏற்பாடு செய்யுங்க. தமிழ்மணம் சேவையை உபயோகிப்பவர்கள் எல்லாம் கலந்து கொள்ளணும் வேண்டுகோள் வைங்க...முடிவிலே நான் தான் விவரம் தெரியாமப் பேசுகிறேன் என்று தெரிய வந்தால், வெளிப்படையாக ஒத்துக் கொள்கிறேன்.



தமிழ்மணம் சர்வே வைத்திருந்தாலே ஒத்துக் கொள்கிறேன் என்றவர், விகடனின் சர்வேயை நிச்சயம் ஒத்துக் கொள்வார் என நம்புகிறேன் :)

10:19 AM, August 17, 2008
Anonymous said...

தமிழகத்தின் பெருவாரியான மக்களுக்கு ஈழப்பிரச்சினை எதனை முன்னிட்டு ஏற்பட்டது? அதன் காரண காரியங்கள் குறித்த விவரங்கள் தெரியாது.. ஈழத்தமிழர்கள் என்றாலே ஒட்டுமொத்தமாக தமிழகத்திலிருந்து புலம் பெயர்ந்தவர்களென்று நினைக்கிறார்கள்.. ஆகவே இந்த வாக்கெடுப்புக்கு முன்னதாக அதுகுறித்து தெளிவாக விவரித்து பின்னர் வாக்கெடுத்திருப்பார்களேயானால் ஆதரவான வாக்குவிகிதம் இன்னும் அதிகமாக இருந்திருக்கும்..

10:33 AM, August 17, 2008
இளங்கோ-டிசே said...

சசி வித்தியாசமான கோணத்தில் விகடனின் கருத்துக்கணிப்பை அணுகியிருக்கின்றீர்கள். முக்கியமாய் இது...
/ஈழப் பிரச்சனையின் ஒரு முக்கியமான பரிமாணமான இந்திய இராணுவத்தின் அத்துமீறல்கள், போர் குற்றங்கள் குறித்து விகடனின் சர்வே ஏன் தமிழக மக்களிடம் கேள்வி எழுப்பவில்லை./

நன்றி.

10:43 AM, August 17, 2008
Anonymous said...

நல்ல பதிவு சசி
நானும் விகடன் எழுப்பியிருந்த தலைப்பு கண்டு கொதித்துப் போய்தான் இருந்தேன்.ஆனால், இப்படி ஒரு முயற்சியை மேற்கொண்டு சோ ராமசாமிகளின் செவ்விட்டில் அறைந்ததற்காகவேனும் விகடனைப் பாராட்டாமல் இருக்க முடியவில்லை

11:04 AM, August 17, 2008
குழலி / Kuzhali said...

//தமிழ்மணம் சர்வே வைத்திருந்தாலே ஒத்துக் கொள்கிறேன் என்றவர், விகடனின் சர்வேயை நிச்சயம் ஒத்துக் கொள்வார் என நம்புகிறேன் :)
//
கொள்வார் கொள்வார் :-)))))))) விகடன் சர்வேயில் இணைய வாக்குகள் எண்ணிக்கை கிட்டத்தட்ட 50%, இணைய வாக்குகள் 50%ற்கு பதில் இன்னும் குறைவாக அதாவது 10%மாகவோ அதையும் விட குறைவாகவோ இருந்திருந்தால் முடிவு தமிழீழத்திற்கும் இன்னும் ஆதரவு அதிகமாக இருந்திருக்கும்.... இணைய வாக்குகள் பற்றி நான் சொல்லவும் வேண்டுமோ அப்படி இருந்தும் இவ்வளவென்றால் :-))))))))))))

11:07 AM, August 17, 2008
ஜோசப் பால்ராஜ் said...

நல்ல பதிவு சசி.
விகடன் இந்த கருத்துக்கணிப்பை வெளியிட்ட போது நான் ஒரு பதிவிட்டிருந்தேன் http://maraneri.blogspot.com/2008/07/blog-post_25.html. ஆனால் விகடனில் முடிவுகளைப் பார்த்த உடன் ஆசிப் அண்ணண் சொல்லியிருப்பது போல் எனக்கும் கோபம் வந்தாலும், இந்த முயற்சியையாவது அவர்கள் செய்தார்களே, அதற்காகவாவது அவர்களை திட்டாமல் விடுவோம் என்று விட்டுவிட்டேன்.

11:44 AM, August 17, 2008
ராஜ நடராஜன் said...

ஈழத்துப் பிரச்சினை ஒரு முடிவுக்கு வரவேண்டும்,மனித நேயம் மீண்டும் மலரவேண்டும் என்று நினைப்பவர்களில் நானும் ஒருவன்.இந்திய ராணுவ செயல்களின் விமர்சனங்களை நீங்கள் முன்வைத்தாலும் அதில் நியாயங்கள் இருப்பது உண்மையெனினும் போர்க்கால சூழலில் எந்த ஒரு ராணுவமும் பாலியல் வன்முறைகளில் ஈடுபடுகின்றன.அதற்கு இந்திய ராணுவமும் விதிவிலக்கல்ல.பின் நாட்களில் பத்துக்கட்டளைகளெல்லாம் பிறந்தன.கட்டளைகள் இன்னொரு போர் அழுத்தத்தில் கடைப்பிடிக்கப்படுமா?

இந்திரா காந்தியை சுட்டதைக் கூட இந்தியர்கள் மன்னித்தோ மறந்தோ கூட விட்டார்கள்.ஆனால் ராஜிவ் காந்தியின் மரணம் மட்டும் ஏன் ஒருவராலும் மறக்க இயலவில்லை?காரணம் மரணிக்கப்பட்ட நிலை.வருடங்கள் கடந்தும் அந்த வன்முறைச் செயல் மனதை விட்டு அகல மறுக்கிறது.திசை மாறியோ அல்லது இவ்வளவு காலம் ஈழத்துப்பிரச்சினை நீண்டும் விடாமலிருந்திருக்கும் அந்த துயரச் சம்பவம் மட்டும் தமிழ் மண்ணில் நடக்காமலிருந்திருந்தால்.இந்த துக்கத்தையும் மீறி மனிதாபிமானக் காரணம் கொண்டும், Dependency on the west is bypassed என ராஜபக்சேவும் இந்தியாவைச் சார்ந்து இருப்பதாலும்,தனது சுய நலன்களுக்காக வேண்டியும் ஈழத்துப் பிரச்சினை முடிவுறவேண்டும்.சுனாமியால் கூட சாதிக்க இயலாத போரை,நார்வேயின் நியாயமான மத்தியஸ்துக்கும் வளைந்து கொடுக்காத துப்பாக்கிச் சூட்டை - தமிழர்களுக்கும்,சிங்களத்து மக்களுக்கும் நலன் விளைவிக்கும் வகையில் இந்தியா செயல்படுமா? என்ற கேள்வியில் பிராந்திய நாடுகளின் எதிர்காலம் உள்ளது.

11:48 AM, August 17, 2008
மயிலாடுதுறை சிவா said...

சசி

இது ஓர் மாறுப்பட்ட பார்வை! நல்ல அலசல்! அதே சமயத்தில் விகடனின் இந்த சர்வேயையும் ஓரளவு பாராட்ட வேண்டும்!

தமிழ்நாட்டில் ஓர் தரமான பத்திரிக்கை தைரியமாக தமிழர்கள் ஈழம் கிடைக்கவேண்டும் என்று நினைக்கிறார்கள் என்று தலைப்பு செய்தியாக போட்டமைக்கு ஓரளவு பாராட்டதான் வேண்டியுள்ளது!

உங்கள் உட்கருத்தோடும் ஒத்துப் போகிறேன்!

மயிலாடுதுறை சிவா...

12:16 PM, August 17, 2008
தமிழ் சசி | Tamil SASI said...

இந்திய ராணுவ செயல்களின் விமர்சனங்களை நீங்கள் முன்வைத்தாலும் அதில் நியாயங்கள் இருப்பது உண்மையெனினும் போர்க்கால சூழலில் எந்த ஒரு ராணுவமும் பாலியல் வன்முறைகளில் ஈடுபடுகின்றன.அதற்கு இந்திய ராணுவமும் விதிவிலக்கல்ல.

****

ராஜ நடராஜன்,

சாமானிய மக்கள் மீதும், பெண்கள் மீது தொடுக்கப்பட்ட மிக மோசமான மனித உரிமை மீறல்களை எப்படி இவ்வாறு சுலபமாக உங்களால் கடந்து செல்ல முடிகிறது ?

போர்க்கால சூழலில் ஒரு ஜனநாயக, அகிம்சை நாட்டின் இராணுவம் இப்படி தான் நடந்து கொள்ளும் என்றால் ”ஒரு பயங்கரவாத அமைப்பு” குண்டுகளை வைக்கத் தான் செய்யும், தலைவர்களை கொல்ல தான் செய்யும், என நாங்கள் சொல்லலாமா ?

ஒரு பயங்கரவாத அமைப்பு இவ்வாறு செய்ததை நீங்கள் ஏன் 17 ஆண்டு காலமாக பிடித்து தொங்கி கொண்டிருக்கிறீர்கள் ? இராணுவத்தின் குற்றங்களை கடந்து சென்றது போல ராஜீவ் காந்தியின் கொலையையும் இவ்வாறு சுலபமாக கடந்து சென்று விடலாமே, என்ற கேள்விகளை நாங்கள் எழுப்பலாமா ?

12:47 PM, August 17, 2008
ராஜ நடராஜன் said...

//சாமானிய மக்கள் மீதும், பெண்கள் மீது தொடுக்கப்பட்ட மிக மோசமான மனித உரிமை மீறல்களை எப்படி இவ்வாறு சுலபமாக உங்களால் கடந்து செல்ல முடிகிறது ?

போர்க்கால சூழலில் ஒரு ஜனநாயக, அகிம்சை நாட்டின் இராணுவம் இப்படி தான் நடந்து கொள்ளும் என்றால் ”ஒரு பயங்கரவாத அமைப்பு” குண்டுகளை வைக்கத் தான் செய்யும், தலைவர்களை கொல்ல தான் செய்யும், என நாங்கள் சொல்லலாமா ?

ஒரு பயங்கரவாத அமைப்பு இவ்வாறு செய்ததை நீங்கள் ஏன் 17 ஆண்டு காலமாக பிடித்து தொங்கி கொண்டிருக்கிறீர்கள் ? இராணுவத்தின் குற்றங்களை கடந்து சென்றது போல ராஜீவ் காந்தியின் கொலையையும் இவ்வாறு சுலபமாக கடந்து சென்று விடலாமே, என்ற கேள்விகளை நாங்கள் எழுப்பலாமா ?//

மனித உரிமை மீறல்கள் ராணுவத்தில் நடக்கும் நடைமுறையை நான் வெளிப்படுத்தினேன்.இந்த மனவியல் எல்லா இராணுவத்திற்கும் பொதுவானது.

நீங்கள் பயங்கரவாதத்துக்கு வக்காலத்து வாங்குவதாகத் தெரிகிறது.நான் இந்த தவறு தமிழ்மண்ணில் நிகழாமல் இருந்திருந்தால் இந்தப்பிரச்சினை எப்படி திசைமாறியிருக்கும் என சொல்கிறேன்.

12:55 PM, August 17, 2008
தமிழ் சசி | Tamil SASI said...

நான் இந்த தவறு தமிழ்மண்ணில் நிகழாமல் இருந்திருந்தால் இந்தப்பிரச்சினை எப்படி திசைமாறியிருக்கும் என சொல்கிறேன்.

***

நானும் ஈழ தமிழ் மக்கள் மீது மனித உரிமை மீறல்கள் நடைபெற்றிருக்கா விட்டால், ராஜீவ் காந்தி படுகொலை நடைபெற்றிருக்காது என்று தான் சொல்கிறேன்.

ராஜீவ் காந்தியின் படுகொலை குறித்து கேள்வி எழுப்பும் விகடன் ஏன் இராணுவத்தின் மனித உரிமை மீறல்கள் குறித்து கேள்வி எழுப்பவில்லை என்று தான் நான் கேட்கிறேன்.

ராஜீவ் காந்தியின் கொலையும், ஈழ மக்களின் மீது தொடுக்கப்பட்ட போர் குற்றங்களும் ஒரே தராசில் வைத்து எடை போட பட வேண்டும் என்று தான் சொல்கிறேன்.

ஒன்றினை நியாயப்படுத்தும் சிலர் மற்றொன்றினை தவறு என சொல்லும் விந்தையை தான் வியந்து பார்க்கிறேன்.

***
நீங்கள் பயங்கரவாதத்துக்கு வக்காலத்து வாங்குவதாகத் தெரிகிறது.
***

ராஜீவ் காந்தி படுகொலை சார்ந்த விடயங்களை பேசினால் இறுதியில் இந்த முடிச்சியில் வந்து தான் விவாதங்கள் எப்பொழுதும் முடியும் :)

நான் வக்கலாத்து வாங்குவதாகவே வைத்துக் கொள்ளுங்களேன். ஒன்றும் பிரச்சனையில்லை :))

1:26 PM, August 17, 2008
Anonymous said...

காஷ்மீர் பிரச்சனைக்கி தீர்வு கண்ட கையோட இலங்கைப் பிரச்சனைக்கி தீர்வு காண ஆரம்பிச்சிட்டீங்களே!

கலக்குறீங்க போங்க!

1:36 PM, August 17, 2008
Indian said...

//ஆனால் ராஜிவ் காந்தியின் மரணம் மட்டும் ஏன் ஒருவராலும் மறக்க இயலவில்லை?காரணம் மரணிக்கப்பட்ட நிலை.வருடங்கள் கடந்தும் அந்த வன்முறைச் செயல் மனதை விட்டு அகல மறுக்கிறது.//

அதென்னங்க மரணிக்கப்பட்ட நிலை? எனக்குப் புரியவில்லை.

ஒரு வேளை நேரு குடும்பமே மனிதருள் மாணிக்கங்கள் என்று சாமியடிக்கபடாமல் இருந்திருந்தாலோ இல்ல, புனிதர்கள் உயிர்தியாகம் செய்தார்கள் என்ற கருத்து உருவாகியிருக்காவிட்டாலோ, ஈழத்தமிழர்கள் அடைந்த கொடுமைகளின் சான்றுகளை நீங்கள் கண்டிருந்தாலோ, உங்களின் எண்ணம் மாறியிருக்குமோ?

தங்களின் பிரதமரைக் கொன்ற சீக்கியர்களை மன்னித்து பிரதமராக்க முடிகிறது, ஆனால் தமிழனென்றால் இன்னும் மறக்க முடியவில்லையா?

அது ஒண்ணுமில்ல, எங்கே தமிழனை/தன்னை தேசத்துரோகி என்று (சோ, பிராமண லாபி, பத்திரிகை லாபி, அதிகாரிகள் லாபி, கருத்தாக்கம் உருவாக்கும் லாபி) கூறி விடுவார்களோ என்ற பயம்தான்.

2:23 PM, August 17, 2008
Anonymous said...

//இந்திய இராணுவம் செய்த தவறுகளுக்கு இந்தியாவின் அப்போதைய பிரதமர் ராஜீவ் காந்தி பொறுப்பு இல்லையா ?//

ராஜீவ் காந்தி மட்டுமா? அப்போதைய "முப்படைத் தளபதி"யான ஆர். வெங்கட்ராமன் என்கிற 'ஆமாம் சாமி'யும் பொறுப்பு. இந்திய ராணுவப் போர்க்குற்றங்களுக்காக அந்த ஆளையும் நீதி விசாரனைக்குட்படுத்த வேண்டும்.


//தமிழ்மண முகப்பிலே ஒரு ஆன்லைன் சர்வேக்கு ஏற்பாடு செய்யுங்க ..... .... முடிவிலே நான் தான் விவரம் தெரியாமப் பேசுகிறேன் என்று தெரிய வந்தால், வெளிப்படையாக ஒத்துக் கொள்கிறேன்.
//

கில்லியில் இந்த மாதிரி ஒரு சர்வே வைத்தால் நீங்க விவரமானவர் தான் என்று நிரூபணமானாலும் ஆகலாம்.

3:36 PM, August 17, 2008
Anonymous said...

தமிழ் சசி,

நீங்கள் மாங்கு மாங்கென்று இவ்வளவு தரவுகள் தேடி எழுத வேண்டியதே இல்லை.

//***
நீங்கள் பயங்கரவாதத்துக்கு வக்காலத்து வாங்குவதாகத் தெரிகிறது.
***

நான் வக்கலாத்து வாங்குவதாகவே வைத்துக் கொள்ளுங்களேன். ஒன்றும் பிரச்சனையில்லை
//

இதை மட்டுமே நீங்கள் எழுதியிருந்தாலும், குழலி, ஆசீப் போன்ற ஜால்ராக்கள் வீரத்தோடு கும்மி அடித்திருப்பார்கள்.

ஒரே ஒரு விண்ணப்பம். நீங்கள் தயவுசெய்து உங்கள் இந்தியக் குடியுரிமையை, கடவுச் சீட்டை விட்டொழித்துவிட்டு சுதந்திரமாக இருக்கும் நாளை தெரிந்து கொள்ள ஆசை.

உடனே தேசப்பற்று என்னும் கருத்தாக்கத்தைப் பற்றி காதுகிழிய பிரச்சாரம் செய்யும் அட்டைக் கத்தி அவதாரம் வேண்டாம். தேசியம் ஒரு கருத்தாக்கம் என்றால், மொழிப்பற்றும் ஒரு கருத்தாக்கமேதான். வன்னியர் என்று உங்கள் அடிமனதில் ஆறாமல் இருக்கும் சாதிப் பற்றும் ஒரு கருத்தாக்கம்தான்.

உங்கள் பதிவுகளிலே மேலே குறித்திருக்கும் ஒப்புதல் வாக்குமூலம்தான் சிறந்தது.

6:59 PM, August 17, 2008
தமிழ் சசி | Tamil SASI said...

டிசே, ஆசிப், குழலி, சிவா, ஜோசப் பால்ராஜ்,

நன்றி...

அனானி நண்பருக்கும் நன்றி :)

9:06 PM, August 17, 2008
Anonymous said...

//தேசியம் ஒரு கருத்தாக்கம் என்றால், மொழிப்பற்றும் ஒரு கருத்தாக்கமேதான். வன்னியர் என்று உங்கள் அடிமனதில் ஆறாமல் இருக்கும் சாதிப் பற்றும் ஒரு கருத்தாக்கம்தான்.//

சாமி, கொண்டை தான் நல்லா தெரியுதே. பின் ஏன் அனானியாய் பின்னூட்டம் :) :)

உங்களுக்கான பதில்

....(உங்கள்) மொழிப்பற்றும் ஒரு கருத்தாக்கமேதான்

......... என்று உங்கள் அடிமனதில் ஆறாமல் இருக்கும் (உங்கள்) சாதிப் பற்றும் ஒரு கருத்தாக்கம்தான்

--

வேண்டுமென்றால் உங்களின் ஊர்பற்றையும் சேர்த்துக்கொள்ளுங்கள் :) :)

10:10 PM, August 17, 2008
-/சுடலை மாடன்/- said...

சசி,

முதலில் இரண்டு பாராட்டுக்கள்…
ஒன்று, உங்களுக்கு - சற்றுத் தாமதமாக எழுதினாலும் சரியான தரவுகளொடு நன்றாக எழுதியிருக்கிறீர்கள்.
இரண்டாவது பாராட்டு விகடனுக்கு – நீங்கள் சொல்லியிருக்கும் குறைகளை நானும் உணர்ந்தாலும், இன்றுள்ள தமிழ்நாட்டுச் சூழலில் வெகுஜன இதழொன்று ஈழப்பிரச்னை தொடர்பாக ஒரு பொதுக் கருத்துக்கணிப்பைச் செய்ய முன்வந்ததே பெரிய காரியம். நீங்களும் குறிப்பிட்டிருப்பது போல் பிரபாகரன் கைது பற்றிய கருத்துக் கணிப்பை விகடன் வலிந்து மாற்றி வெளியிட்டிருப்பது தன் நிறுவனத்தை பார்ப்பனியத் தேசிய வல்லூறுகளின் அடக்குமுறையிலிருந்தோ அல்லது விமர்சனத்திலிருந்தோ காப்பாற்றிக் கொள்ளத்தான்.

பத்து மாதங்களுக்கு முன்பு பத்ரியின் பதிவில் நடந்த விவாதத்தை இங்கு உங்கள் பின்னூட்டத்தில் தொட்டிருந்தீர்கள். அப்பதிவில் நான் எழுதிய கருத்துக்களின் சாரம்சம்தான் இன்று விகடனின் கருத்துக்கணிப்பிலும் பிரதிபலித்திருக்கிறது. உண்மையிலேயே விடுதலைப் புலிகளைப் பற்றி இந்திய அதிகார வர்க்கம் பல மிரட்டல்களைச் செய்து கொண்டிருந்தாலும், விடுதலைப் புலிகளை பயங்கரவாதிகளாகக் கருதும் மனநிலை பெரும்பாலான தமிழக மக்களிடம் இல்லை என்றே நினைக்கிறேன். அவர்களின் செயல்பாடுகளில் மாற்றுக் கருத்துக்கள் கொண்டிருந்தாலும், ஈழத்தமிழர்களின் விடுதலைப் போராளிகளாகத் தான் நினைக்கின்றனர். ஈழ விடுதலைக்கும், விடுதலைப் புலிகளுக்கும் தமிழகத்தில், குறிப்பாக சென்னை அல்லாத சிறுநகரங்களில் பரவலான ஆதரவு இருக்கிறது என்பதும், இந்திய ஊடகங்கள் வேண்டுமென்றே மவுண்ட்ரோடு மகாவிஷ்ணுக்களின் கருத்துக்களை மக்கள் கருத்தாகக் கட்டமைத்துக் கொண்டிருக்கின்றன என்பதும் இப்பொழுது வெளிச்சத்துக்கு வந்திருக்கின்றது.


“விடுதலைப் புலிகளை பயங்கரவாதிகளாகக் கருதும் மனநிலை பெரும்பாலான தமிழக மக்களிடம் இல்லை என்றே நினைக்கிறேன். அவர்களின் செயல்பாடுகளில் மாற்றுக் கருத்துக்கள் கொண்டிருந்தாலும், ஈழத்தமிழர்களின் விடுதலைப் போராளிகளாகத் தான் நினைக்கின்றனர்” என்று பத்ரியின் பதிவில் முன்பு சொல்லியிருந்தேன். ஒவ்வொரு ஆண்டும் விடுமுறையில் தமிழகத்தின் பல பகுதிகளைச் சுற்றிவர வாய்க்கும் பொழுது முன்பின் அறியாதவர்களிடமும், சகபயணிகளிடமும், செய்தித்தாள்களில் வரும் செய்திகளைக் காண்பித்துப் பேசுவதுண்டு. பல வருடங்களாக வெளிநாட்டில் இருப்பதால் இந்தப் பிரச்னை பற்றி எதுவுமே தெரியாதவன் போல் கருத்துக் கேட்கும் பொழுது நான் அறிந்த உண்மை இது. குறிப்பாக கிராமங்களில் விடுதலைப்புலிகள் பற்றி பயங்கரவாதிகள் என்ற அபிப்ராயமே இல்லை.

இரண்டு மாதங்களுக்கு முன்பு தமிழ்நாட்டில் பயணம் செய்தபொழுது எனக்கு ஏற்பட்ட ஒரு வித்தியாசமான அனுபவத்தை இங்கு விரிவாகக் குறிப்பிடவேண்டும். திருச்சியிலிருந்து தஞ்சைக்கு நானும் என் மனைவியும் வாடகைக்காரில் சென்று கொண்டிருந்தோம். வழக்கம் போல் முன்பின் தெரியாத கார் ஓட்டுனரிடம் அரசியல் கருத்தறியும் நோக்கில் பேச்சை ஆரம்பித்தேன். தமிழகமெங்கும் இடப்பட்டு வரும் நால்வழிச்சாலையைப் பற்றிக் குறிப்பிட்டு டி.ஆர்.பாலுதான் இத்திட்டப்பணி மும்முரமாகச் செல்லக் காரணமென்கிறார்களே என்று குறிப்பிட்டதுதான் தாமதம். எல்லாத் திட்டத்திலும் திருடுவதுதான் அவருக்குத் தெரியுமென்று கூறியபடி, டி.ஆர்.பாலுவையும், தி.மு.க.வையும் கன்னா பின்னாவென்று திட்ட ஆரம்பித்துவிட்டார். வாஜ்பேயி அரசுதான் இத்திட்டம் நிறைவேறக் காரணமென்று கூறினது மட்டுமல்லாமல் பா.ஜ.க. ஆட்சிதான் மீண்டும் வரவேண்டுமென்றார். இந்த அரசாங்கத்தால் விலைவாசியெல்லாம் ஏறி வாழ்க்கையை ஒட்டுவதற்கே சிரமமாயிருக்குன்னு கோபமடைந்தார். அப்பொழுது நான் பா.ஜ.க.வின் மதவாதத்தைப் பற்றி விளக்கமாகக் குறிப்பிட்ட பொழுது அதெல்லாம் தமிழ்நாட்டில் ஒரு பிரச்னையேயில்லை, திராவிடக் கட்சிகள் வேண்டுமென்றே தங்களுடைய கூட்டணியில் இல்லாவிட்டால் மதவாதத்தையும், பிராமணர்களையும் விமர்சிக்க ஆரம்பித்து விடுகிறார்களென்றார். மீண்டும் நான் பாரதிய ஜனதா கட்சியின் இந்துமதவெறியைப் பற்றி விளக்கிச் சொன்ன பொழுது அவர் பெரியாரையும் விமர்சிக்க ஆரம்பித்தார். சுயநலத்துக்காகத்தான் பெரியார் இந்துமதத்தை எதிர்த்தார் என்று அவர் சொன்ன பொழுது அவருடன் மேலும் வாக்குவாதம் செய்ய ஆரம்பித்தேன்.

பின் என் மனைவி தலையிட்டு சமாதானமாகப் பேசியபின் ஓரளவுக்கு சாதாரணமாகப் பேசிக் கொண்டிருந்தார். அதன் பின் பெட்ரோல் விலை உயர்வு போன்ற பிற பொதுவான விசயங்களைப் பேசிக் கொண்டு வந்த பொழுது ஒரு சுவர் விளம்பரத்தை சுட்டிக் காட்டி ஈழப்பிரச்னையில் என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதை அறியாதவன் போல் கேட்டேன். அப்பொழுது மிகத்தெளிவாக எந்தவிதத் தயக்கமுமில்லாமல் அவர் கூறிய பதில் எனக்கு வியப்பாக இருந்தது. இந்தியா புலிகளுக்கு உதவவேண்டும், இலங்கை அரசாங்கம் செய்யும் கொடுமைகளிலிருந்து விடுபட தனி நாடுதான் சரியான தீர்வு என்றார். இராஜீவ் கொலையை முன்னிட்டு புலிகளைத் தடைசெய்திருப்பதைக் குறிப்பிட்ட பொழுது ”அது எப்பவோ முடிந்த காரியம், இந்தியப் படையை அனுப்பி புலிகளை இராஜீவ் அழித்திருக்கக் கூடாது, அதனால்தான் அவரைப் பழிவாங்கி விட்டார்கள்” என்று சர்வசாதாரணமாகச் சொன்னார். அப்பொழுது இந்திய இராணுவம் சாதாரணத் தமிழ் மக்களைக் கொடுமைப் படுத்தியது அல்லது தற்பொழுது இந்திய அரசு இலங்கை அரசுக்கு உதவுவது போன்ற தகவல்களெல்லாம் அவருக்குத் தெரியவுமில்லை, அதைப் பற்றிய அக்கறையோ, அதன் அடிப்படையில் விவாதிப்பதையோ கூட அவர் செய்யவில்லை. இராஜீவ் புலிகளை அழித்தார், பதிலுக்கு அவர் கொல்லப் பட்டார் என்று ஒரு சாதாரணமான கருத்தைக் கூறினார். நம்மைப் போன்ற கற்றவர்கள் சமூகத்தில் உலவுபவர்கள்தான் இந்திய இராணுவம் அப்பாவி மக்களைக் கொடுமைப் படுத்தியதால்தான் இராஜீவ் பழி வாங்கப் பட்டார் என்று (நாம் தவறாகப் புரிந்து கொள்ளப் படக் கூடாது என்று) மிகுந்த எச்சரிக்கையுடன் பேசுகிறோம். அவர் தமிழ் தேசிய அடிப்படையில் புலிகளை ஆதரிக்கிறார் என்று சொல்ல முடியாது, ஏனெனில் அவருக்கு தமிழ்தேசியத்தைப் பற்றியெல்லாம் கவலைப் படக்கூடிய அளவில் வாழ்க்கை அமைய வில்லை.

நான் இதை விரிவாகச் சொல்ல வேண்டிய காரணம், இதன் பின்னாலுள்ள யதார்த்த நிலையும், சூழ்ச்சி அரசியலும்தான். அவருடைய கருத்துக்களில் அரசியல் அறிவு ஆழ அகலம் இல்லாமலிருக்கலாம். அவருடைய கருத்துக்கள் படித்தவர்களுடைய கருத்துக்களைப் போல் எல்லாப் பிரச்னைகளிலும் ஒரே கொள்கையடிப்படையில் இருக்கவில்லை. ஆனால் தன்னுடைய அறிவுக்கெட்டிய அளவில் மிக எளிமையான நிலையில் வெளிப்படுகின்றன. அவர் கருத்துக்களில் நமக்கு உடன்பாடில்லாமல் இருக்கலாம். அவரைப் போன்ற சாதாரண மக்கள் புலிகளை மிகத்தெளிவாக ஆதரித்த போதிலும், ”தமிழக மக்கள் புலிகளை எதிர்க்கிறார்கள் அல்லது எந்த கருத்துமில்லாமல் இருக்கிறார்கள்” என்று இந்திய ஊடகங்களும், சென்னையை மட்டுமே அறிந்த அறிவுஜீவிகளும் எழுதி வருகிறார்களென்பதை இங்கு குறிப்பிட வேண்டும்.

சசி, பிரகாஷ் பிரதிபலித்த கருத்துக்களை சுட்டிக் காட்டியிருந்தீர்கள். பிரகாஷைப் போன்ற எத்தனையோ சென்னை மாநகரத் தமிழர்கள் தமிழ் நாட்டின் மற்ற பகுதிகளைப் பற்றி அதிகம் அறியாதவர்கள் அல்லது தம்முடைய கருத்துக்கள் பாதுகாப்பானவையாக இருக்க வேண்டுமென்று நினைக்கிறார்கள் என்பதே என்னுடைய அனுமானம். சென்னையிலோ அல்லது இந்தியாவின் பெருநகரங்களில் வாழ நேர்ந்தால் நம்மைப் போன்றவர்களும் கற்ற-சமூகத்தின் பாதுகாப்பான கருத்துக்களை வெளியிடுவோமோ என்னவோ. இவ்வளவு ஏன், சாதி, பொதுவுடைமை போன்ற தலைப்புகளில் புரட்சிகரக் கருத்துக்களைத் தைரியமாக அள்ளி வீசும் நண்பர்களே தான் புலிகளை எதிர்ப்பவன் என்று கூறிவிட்டு நெடுமாறன் போன்றவர்களைத் திட்டி விட்டுத்தான் ஈழப்பிரச்னையைப் பற்றிய கருத்துக்களை உதிர்க்கிறார்கள். இது சாதாரண மக்களின் கருத்தல்ல, பாதுகாப்பானவர்களின் கருத்துக்கள். இல்லையென்றால் இப்பொழுது தமிழர்களை அழித்தொழிப்பதில் இலங்கை அரசுக்கு மன்மோகன் சிங்கின் கேடுகெட்ட இந்திய அரசாங்கம் மிக வெளிப்படையாக உதவி வருவதைப் பற்றியெல்லாம் இவர்கள் புரட்சிக் கருத்துக்கள் வெளியிடுவதில்லை.

இனி தமிழகத்தில் நடக்க வேண்டியது ஒன்றுண்டு. விகடன் வெளியிட்ட கருத்துக் கணிப்பின் அடிப்படையிலாவது ஈழத்தமிழர் விடுதலைக்கு ஆதரவாகத் தமிழகக் கட்சிகள் ஒருங்கிணைந்தோ அல்லது தனித்தனியாகவோ மாபெரும் மக்கள் போராட்டத்தை முடுக்கிவிடவேண்டும்.

நன்றி – சொ. சங்கரபாண்டி

11:06 PM, August 17, 2008
SK said...

இங்கு ”தவறுக்குத் தவறு நியாயம்” எனும் வாதம் நடப்பதாகத்தான் எனக்குத் தோன்றுகிறது. IPKF அத்துமீறல்களும் அநியாயம், ராஜீவ் காந்தியின் கொலையும் அநியாயம் - இல்லையா? எந்த ஒன்றை நியாயப் படுத்த இயலும்? போர்க்கால குற்றங்களுக்காக IPKF-இன் அதிகாரிகளும் தண்டிக்கப் படவேண்டும், ராஜீவ் கொலையை ஆணையிட்டதற்காக பிரபாகரனும் கைது செய்யப்பட வேண்டும் - இல்லையா? Or am I being too naive here?

1:40 AM, August 18, 2008
சிக்கிமுக்கி said...

//பத்திரிக்கையாள பூச்சாண்டிகளான என்.ராம், மாலன், வாஸந்தி, சோ போன்றோரும், முன்னாள உளவாளிகளான பி.ராமனும், ஹரிஹரனும் வாயடைத்து போய் கள்ள மொளனம் சாதிக்கிறார்கள். //

//இந்திய இராணுவத்தின் அத்துமீறல்களை இந்தியன் எக்ஸ்பிரஸ் தொடங்கி, லண்டன் பத்திரிக்கைகள் வரை பட்டியலிட்டு இருக்கின்றன. //

//இந்தியாவின் பார்வையில் ராஜீவ் காந்தியின் படுகொலை குற்றம் என்றால் ஈழத் தமிழர்களின் பார்வையில் இந்திய இராணுவம் ஈழத்தில் தமிழர்கள் மீது தொடுத்த மிக மோசமான படுகொலைகள், பெண்கள் மீதான பாலியல் வன்முறைகள் ராஜீவ் காந்தியின் படுகொலையை விட மோசமான குற்றங்கள். //

//வல்வெட்டி துறையில் தமிழர்களை வரிசையாக நிற்க வைத்து இந்திய இராணுவம் சுட்டுக் கொன்றது. ஜாலியன் வாலாபாக், My Lai போன்ற படுகொலை சம்பவங்களை விட மோசமான படுகொலை வல்வெட்டி துறை படுகொலை. இதனை செய்த குற்றவாளிகள் இந்திய
ராணுவத்தினர்.//

//ஈழப் பிரச்சனையின் ஒரு முக்கியமான பரிமாணமான இந்திய இராணுவத்தின் அத்துமீறல்கள், போர் குற்றங்கள் குறித்து விகடனின் சர்வே ஏன் தமிழக மக்களிடம் கேள்வி எழுப்பவில்லை. சிவராசனும், சுபாவும், தனுவும் செய்த படுகொலைக்கு விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் பொறுப்பு என்றால் இந்திய இராணுவம் செய்த தவறுகளுக்கு இந்தியாவின் அப்போதைய பிரதமர் ராஜீவ் காந்தி பொறுப்பு இல்லையா ?//


மிகச்சரியான கூற்றுகள்.!
ஞாயமான உரைகள்.!
நேர்மையான பார்வைகள்.!
பாராட்டுகள்!.

2:44 AM, August 18, 2008
ஜோ/Joe said...

//ஈழ விடுதலைக்கும், விடுதலைப் புலிகளுக்கும் தமிழகத்தில், குறிப்பாக சென்னை அல்லாத சிறுநகரங்களில் பரவலான ஆதரவு இருக்கிறது என்பதும், இந்திய ஊடகங்கள் வேண்டுமென்றே மவுண்ட்ரோடு மகாவிஷ்ணுக்களின் கருத்துக்களை மக்கள் கருத்தாகக் கட்டமைத்துக் கொண்டிருக்கின்றன என்பதும் இப்பொழுது வெளிச்சத்துக்கு வந்திருக்கின்றது. //

மிக்க சரி!

3:45 AM, August 18, 2008
Anonymous said...

இந்திய ஊடகங்கள் எப்பொழுதுமே இந்தப் பிரச்சனையை இந்தியாவின் பார்வையில் இருந்து தான் அணுகியிருக்கின்றன. தமிழர்களின் பார்வையில் இருந்து இந்தப் பிரச்சனையை எந்த ஊடகங்களும் பார்த்ததில்லை ///
ஈழத்தமிர்களூக்கான இந்திய அரசாங்கத்தின் உதவியையோ அல்லது ஆதரவுநிலையினையோ எதிர்பார்க்கும் போது, மொத்த பிரச்சனையும் அவ்வாறுதான் பார்க்கப்படும், (இந்தியப்பார்வை)

தமிழர்களின் பார்வையில் இருந்து இந்தப் பிரச்சனையை எந்த ஊடகங்களும் பார்த்ததில்லை/// நாம் எத்தனை முறை பீகார் பழங்குடி மக்களூக்கும், அஸ்ஸாம் குண்டிவெடிப்புக்கும், மணிப்பூர் தீவிரவாதிகளுக்கும் அவுங்க கோண்த்தில் பிரச்சனையை அணுகுறோம், பிந்தரன்வாலா கோரிக்கப்பற்றி (நியாயம் எதுவுக் இருந்தால், அதுபற்றியும்) பேசிய, அக்கால தமிழ்பத்திரிக்கை எது ?. மொத்த இந்தியாவும் ஒரு இனம் சார்ந்த பிரச்ச்னைக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டுமெனில் அதற்குண்டான அரசியல் ராஜதந்திர அணுகுமுறை வேண்டும். அதற்கு நம்பிக்கை பெறவேண்டும், எங்களுக்கு தெரிஞ்ச வழி இதுதான் என்றால், இந்தியாவுக்கு தெரிஞ்சவழி சும்மாயிருக்கிறது. நீங்க நெய்வேலியிருந்து இந்த பிரச்சனையை கவசிச்ச மாதிரி, 5 காசு முறுக்கு, இலங்கையை நொருக்குன்னு 1984 ல் ஆரம்பிச்ச கோசத்திலிருந்து நிறைய பேருகவனிக்கிறோம். ஆனால், அன்றைக்கு கோசம் போட்டவர்கள் எல்லாம் எல்லாம் தெரிஞ்சு போட்டாங்கன்னு நீங்க சொல்லுரது, கேள்விக்குள்ளாகுது.

பிரதமரின் பார்வையில் ஜபிகேஎஃப் அனுப்பபட்டது கலவரத்தை அடக்க பிராந்திய அமைதிக்காக. அதன் அத்துமீறல்களுக்கு பிரதமரின் உயிர்தான் தீர்வு, இதில் தலையிட்டதற்காக உயிர் கொடுத்துதான் ஆகவேண்டும் என்று ஆன பின்பு, எங்கள் பிரச்சனையினை நாங்கள் பார்த்து தீர்த்து கொள்கிறோம்ன்னும் ஆனபின்பு அவர்க்களுக்கு தற்போது எதற்கு அடுத்த நாட்டின் ஆதரவு, சரி இந்திய ஆதரவு தருவதாகவே ஆகட்டும், தார்மீக ஆதரவு தரவில்லைன்னு தற்போதைய பிரதமர் மீதும் அவர்கள் கோபம் கொள்ளமாட்டார்கள்ளுன்னு என்ன நிச்சயம், நார்வே தலையீட்டுக்கு கூட பஞ்சாயத்து இருக்கு, ஏன் நார்வே ன்னு.

இந்திய இராணுவம் செய்த பல மோசமான அத்துமீறல்களில் வல்வெட்டிதுறை படுகொலை மிக முக்கியமான ஒன்று. ////இதற்க்கு தமிழீழத்தின் அத்துமீறல்கள் தற்போதுன்னு (அல்லது அந்தப்பக்கம், நாங்க ஆரம்பிக்கவில்லை, பழிவாங்கினோம்ன்னு சொன்ன ஒண்னும் சொல்வதற்கீல்லை) மற்றுமோரு உ.ம் காட்டமுடியும். இது மாதிரி மாற்றி மாற்றி காட்டி என்ன செய்யப் போறோம், நாங்க பழிக்குப்பழி வாங்கினோம், மற்றபடி நாங்க நல்லவர்கள்ளுன்னு ஒரு ஓப்பன் ஸ்டேட்மென்டு விட்டுவிட்டு அடுத்த நிரந்தர தீர்வை நோக்கிநகரலாம், ஆனால் தீர்வு நோக்கி நகருவதற்க்கு யாரவது மன்னிப்பு கேட்டு, நகரவேண்டியதிருக்கும், கண்டதற்கெல்லாம் வெள்ளைகாரங்களை உ.ம் காட்டறோம், வில்லிபிராண்ட் ன்னு தேடி, என்னவருதுன்னு பாருங்க.

(62,59%) இந்தியா த‌லையிட்டு தீர்வு காணலாம்ன்னு சொன்ன‌ எல்லோரிட‌மும், நார்வேக்கும் ந‌ம‌க்கும் உள்ள‌ வித்தியாச‌த்த‌ சுட்டி காட்ட‌ விரும்புறேன், ஜ‌ரோப்பாவில் அதிக‌ப்ப‌டியான ஜிடிபி உள்ள‌ நாடு, அங்குள்ள‌ குடிம‌க்க‌ளுக்கு த‌னிப்பிர‌ச்ச்னைக்க‌ளிருன்து விடுதலைன்ற‌ நிலைமை. இங்க‌ இன்னும் 70% ம‌க்களுக்கு ஒரு நேர‌ம் சாப்பாடு இல்லை. 62,59 % பேரில் எத்த‌னை பேர் தெருவில் ந‌ட‌க்க்கிற‌ ப‌க்க‌த்துவீட்டு ச‌ண்டை, துப்பாக்கியோட‌ ந‌ட‌க்கும் போது( ந‌ம்ம‌ ப‌ங்காளீயே துப்பாக்கியோட‌ இருக்கான்னு வ‌ச்சுக்வோம்) தீர்த்துவைக்க‌ போவாங்க‌, அட‌, நாம‌தான் ஏதோ சொந்தம்ன்னா, அடுதத‌ தெருவுக்கார‌னுக்கு என்ன வந்தது உயிரக்கொடுக்க. தெலுகுமக்களும் சீக்கிய‌ர்க‌ளும், போஜ்பூரிம‌க்க‌ளும் த‌மிழ‌ர்க‌ளுக்கு ஆத‌ரவு தெரிவிக்க‌னும்ன்னு எதிர்பார்க்கிறீங்க‌ளா ? இதில் இந்திய‌ தேசிய‌த்த‌ போட்டு குழ‌ப்பாதீங்க‌, ந‌ம‌க்குள் தேசிய‌ம் வேறு,ஒரு அடுத‌த‌ நாட்டு பிர‌ச்ச‌னையில் தேசிய‌ம் வேறு


கொள்கை மாறுப‌ட்ட‌வ‌ர்க‌ளை கொலைசெய்வ‌து என்ப‌தற்கு ப‌திலாக‌ 30,89% ம‌க்க‌ள், அங்குள்ள‌ சூல்நிலை புரிய‌விலையென்னு சொல்லுறாங்க‌ளே, இந்த‌ 30.89 % க்கு ம‌ற்ற‌ எல்லா விப‌ர‌ங்க‌ளூம் ந‌ன்கு புரிந்துவிட்ட‌தோ, இந்த‌ 30.89% மக்களை எல்லா புள்ளிவிப‌ர‌ விடைக‌ளீருந்து க‌ழிக்க‌ ம‌ற‌ந்த‌து ஏனோ, அப்ப‌டியே செய்தாலும் ஆத‌ர‌வு கூட‌தான் என்றாலும், அது எவ்வ‌ள‌வு, அதில் வாக்க‌ளித்த‌ இல‌ங்கை த‌மிழர்க‌ள் எத்த‌னை பேர் ? இதுப‌ற்றியெல்லாம் நீங்க‌ குறிப்பிட‌ ம‌ற‌ந்த‌து ஏனோ. நீங்க‌ளும் பாதிதான் உண்மையை சொல்றீங்க‌ இல்லையா, மொத்த‌ விப‌ர‌ங்க‌ளையும் கொடுங்க‌, ஏதாவ‌து ஒரு நிலை எடுக்க‌வேண்டுமென்று நினைப்ப‌வ‌ர்க‌ள், அத‌ற்கு அப்புற‌ம் எடுப்பார்க‌ள்.

நாளைக்கு திபெத் ப‌ற்றி ஒரு ச‌ர்வெக்கும் (விக‌ட‌ன் ந‌ட‌த்தினால்) இதே மாதிரி ஒரு ஆத‌ர‌வு தெரிவிப்பார்க‌ள் ம‌க்க‌ள், (இப்படியே உணர்ச்சி வசப்பட்டு பட்டுதான் இன்னும் எம்ஜிர் ர நினைச்சு ஓட்டு போடுறாங்க, உடனே சர்வே தமிழகம் முழுவதும் சொல்லாதீங்க, மொத்தமும் ஒரே குட்டைதான்,,, மக்கள் எதிர்கட்சிய வீட்டுக்கு அனுப்ப முடிவு பண்ணிடாங்கன்னு தேர்தலுக்கு தேர்தல் சொல்லுற அரசியல்வாதி காமெடியாகிடும் அது,,)

ந‌ம்ம‌ வீட்டுக்கு பிர‌ச்ச‌னை வ‌ராத‌வ‌ரைக்கும் ஆத‌ர‌வுன்னு சொல்லுறது. ஆதரவு சவுண்ட் ஓவரா இருக்கா, 10 பேரா, ஒக்கே நானும் ஆத‌ர‌வு, இல்லையென்ப‌வ‌ர்கள் 9 பேரா, ம்ம்ம் நான் ஆத‌ர‌வுதான், இதெல்லாம் குருப் சிகாலாஜி. விழிப்புணர்ச்சி இல்லாத அதுக்கான அடிப்படை கல்வியறிவுக்கு வாய்ப்பில்லாத கிராமத்து மக்கள் எம்ஜிஆர்க்கு ஓட்டுப் போடுறாங்க, கட்டற்ற கருமாந்திரத்த கையில் வச்சுருக்க நல்லாப் படிச்சமக்கள் மற்றதுக்கு உணர்ச்சிவசப்படுறாங்க.

தொடர்ந்து பல காலமாக தமிழகத்தில் விடுதலை புலிகளுக்கான ஆதரவு தளம் உள்ளது என கூறிவந்த என்னைப் போன்ற பல ஈழ ஆதரவாளர்களின் நிலைப்பாட்டினை இந்த கருத்துகணிப்பு உறுதி செய்கிறது.//// என‌க்கு எம்ஜிர் ஞாப‌க‌ம் வ‌ர்றாரு,உங்க‌ளுக்கு ?

பிராந்தியத்தில் ஒரு நாட்டின், உங்களாலே அல்லது கட்டமைக்கப்பட்ட (எதுக்கு வம்பு) பயங்கரவாத அமைப்பு என்று ஒத்துக்கொள்ளப்பட்ட ஒன்றின் ஆயுதங்கள், அதனனச் சார்ந்த கட்டமைப்பு அதிகரிப்பு பிரச்சனையேயில்லை என்று ( 35.16 % ) மக்களூம், தெரியவில்லை 18.59 %என்று சொன்ன மக்கள் எல்லாம் மற்ற அனைத்து கேள்விகளையும் அலசி ஆராய்ந்து முடிவு சொன்னாங்கன்னு நீங்க நம்பினால், ம்ம்ம்ம்ம்ம் ஒண்ணும் சொல்வதாக இல்லை.
மொத்த‌தில் அதிக‌ப்ப‌டியான‌ இந்திய‌ பார்வை என்ன‌வெனில், 25 வ‌ருட‌ங்க‌ளாக‌ ஒரு த‌னிஅர‌சாங்க‌ம் ந‌ட‌த்த‌க்கூடிய‌ ஒரு அமைப்பும் அத‌ன் கோரிக்கைக‌ளும் க‌வ‌னிக்க‌ த‌குந்த‌வையே என்று ஒரு புத்திமதி சொல்லலாம், ஆனால் ர‌ட்சிக்க‌ கூடியாவையா என்ப‌த‌னை அந்த‌ நாட்டு அர‌சாங்க‌ம் தான் முடிவு செய்ய‌னும். அப்ப‌டியில்லாம‌ல் நாம் அங்கு அதிகார‌ம் செலுத்தினால், நாளைக்கு காஸ்மீரை பிரிக்க‌லாம்ன்னு இல‌ங்கையில் ஒரு ப‌த்திரிக்கை ச‌ர்வே ந‌ட‌த்தி சொல்லும். நாங்க வென்று காட்டுவோம் பலத்தால்ன்னு சொன்னா, இன்னும் பல கொலைகளோடு, (அவன நீறுத்த சொல்லு, நான் நிறுத்துறேன் பல்லவியோட) 25 வருசத்துக்கு ஆதரவு கேட்டுகிட்டே இருக்கவேண்டியதுதான். நாங்க முதலில் எங்க பிரச்சனையை (70 கோடி) கவனிக்கிறோம். ஒரு 4500 கருத்துகளை தமிழக ஆதரவாக சொல்லும்போது, 110 கோடி மக்களின் கருத்தாக காட்ட எத்தனை பேர் வேண்டுமென்று சொன்னால் அதையயும் செய்யலாம். நன்றி.

6:14 AM, August 18, 2008
நந்தா said...

சிறந்த அலசல்.

ஆ.வியின் கட்டுரைத் தலைப்பை மட்டும் பார்த்து விட்டு கடும் கோபத்துடன் அந்த வார இதழை மட்டும் வாங்கி படித்தேன்.

ஆனால் ஆ.வியில் இப்படி ஒரு விஷயமா என்று என்னை வியக்க வைத்து விட்டது. கட்டுரைத் தலைப்பை போய்த் தொலையுது என்று மன்னித்து விடலாம். எது எப்படியாயினும் ஆச்சரியமே.

6:32 AM, August 18, 2008
Anonymous said...

//போர்க்கால குற்றங்களுக்காக IPKF-இன் அதிகாரிகளும் தண்டிக்கப் படவேண்டும், ராஜீவ் கொலையை ஆணையிட்டதற்காக பிரபாகரனும் கைது செய்யப்பட வேண்டும் Or am I being too naive here?//

இந்திரா குடும்பத்தினரின் நண்பரான யாசர் அராபத் PLO-வின் ஆயுத நடவடிக்கைகளுக்காக எத்தனை முறை தண்டிக்கப்பட்டார்?

யோசிச்சுப் பாருங்க!

10:22 AM, August 18, 2008
Anonymous said...

நல்லா எழுதறீங்க நீங்க.. குற்றம் செய்தவனை எப்படியாவது காப்பாற்றும் கிரிமினல் லாயர் போல..:)

அதனால, இலங்கையின் இட ஒதுக்கீட்டையும் , இந்தியாவில் இருக்கும் இட ஒதுக்கீடு இரண்டையும் ஒப்பிட்டு ஒரு பதிவு எழுத வேண்டுகிறேன்..

அப்புறம் இதையெல்லாம் அன்னானியாக கேட்பதே சிறந்தது..

1:06 PM, August 18, 2008
Thangamani said...

சசி:

விகடனின் கருத்துக்கணிப்பைப் படித்தவுடன் எனக்குத் தோன்றியது இரண்டு கருத்துக்கள். ஒன்று நீங்கள் எழுதியிருக்கும் கோணம். அதாவது கருத்துக்கணிப்பின் முடிவுகளில் தமிழர்களுக்கு ஆதரவான ஒன்றை வெளியிடும் அதே சமயத்தில் அதிகாரவர்க்கத்திடம் தன்னை காப்பாற்றிக்கொள்ளும் முறையில் இன்னொரு கருத்தை வெளியிடுவது. அதே சமயத்தில் இன்னொரு அடிப்படையான கேள்வி இருக்கிறது. என்னளவில் அதுவே முக்கியமானது. அதாவது ஈழத்தமிழர்களின் பிரச்சனை இப்போது ஓட்டு வங்கி பிரச்சனை அல்ல. (ஆனால் அதை அப்படியாக இன்னொரு கட்சி மாற்ற நினைத்தால், முடியும்). அதனாலேயே கழகங்களுக்கு அதில் ஈடுபாடில்லை. தங்களது சக்தியை இதில் செலவிடுவதை விட வேறு ஓட்டு வாங்கும் முயற்சிகளில் செலவிட அவை நினைக்கின்றன. அதே சமயத்தில் தமிழர்களுக்கு எதிரான சக்திகள் ஈழப்பிரச்சனையின் மீதான மக்களின் கவனத்தை அவதூறு செய்தும், ராசீவ் கொலையை முன்வைத்தும் கலைக்கும் போது கழகங்களும் ஈழப்பிரச்சனையில் இருந்து ஓட்டு காரணமாக ஒதுங்கி இருக்கும் தங்கள் தற்போதைய நிலைப்பாட்டிற்கு அதைப் பயன்படுத்திக்கொள்கின்றன. இந்நிலையில் இந்தியாவில் மற்ற கட்சிகளுக்கும், இந்திய அரசுக்கும் கூட ஈழப்பிரச்சனை குறித்த ஆர்வம் , கொள்கை நிலைப்பாடு, அணுகுமுறை எதுவும் இல்லை. மாறாக தமிழர்களுக்கு எதிரான சக்திகளின் முடிவுகளுக்கு இசைய ஏதாவது போகிற போக்கில் எடுக்கப்படும் முடிவுகளைத் தவிர. ஈழப்பிரச்சனையையை விடுங்கள். தமிழக மீனவர்கள் இதுவரை நூற்றுக்கணக்கில் கொல்லப்பட்டுள்ளார்கள். இது ஒரு எல்லைப் பிரச்சனை. அயல்நாடொன்று தனது குடிமக்களை கொல்லும் பிரச்சனை. ஆனால் இது குறித்து இந்திய அரசிடம் முறையான பார்வை, அணுகுமுறை, அக்கறை, ஏன் இந்தப்பிரச்சனை குறித்த அறிவு கூட இல்லை.

இந்நிலையில் விகடனுக்கு ஈழப்பிரச்சனையில் ஆர்வம் எழுந்த காரணம் என்ன?

அரசியல்வாதிகளுக்கு ஓட்டு பணமாவதை போல, வணிக இதழ்களுக்கு மக்களின் ஆர்வம் பணமாகிறது. அது தவிர வணிக இதழ்கள் அரசு, அதிகாரவர்கம் இவைகளின் ஒத்துழைப்பைக் கோரி நிற்பதால் அவைகளுக்கு உதவுவதற்கான வேலைகளில் ஈடுபடுவதும் அவசியமாகிறது. இநிலையில் விகடனுக்கு இந்த விதயத்தில் ஆர்வம் ஏற்பட்டு இப்படியான ஒரு கருத்துக்கணிப்பைக் நடத்தியது மக்களுக்கு ஈழப்பிரச்ச்சனையில் ஆர்வம் இருப்பதை உணர்ந்த ஒரு பத்திரிக்கையின் முயற்சியாகக் கொள்ளலாம். அதே நேரத்தில் இப்படியான (இன்னும் விரிவான) கருத்துக்கணிப்பை நடத்தி இருக்கவேண்டிய பொறுப்பு தமிழக அரசையே (நான் திமுகவை மட்டும் சொல்லவில்லை) சாரும். ஈழத்தமிழர்களின் பிரச்சனை பற்றி இந்திய உளவு நிறுவனங்களால் தமிழகத்தில், பூச்சாண்டிகள் உருவாக்கப்படுகிற வேளையில் அதனால் ஆட்சியை இழக்க நேர்ந்தப்பின்னும் மக்களின் இயக்கமாக இருக்கிற எந்த கட்சியும் மீள அரசமைத்ததும் செய்திருக்கவேண்டியது இப்படியான கருத்துக்கணிப்பை நடத்தி மக்களின் ஏகோபித்த ஆதரவின் அடிப்படையில் மத்திய/ உளவு நிருவனங்களை எதிர்கொள்ளுதலே. அதன் மூலம் அது ஓட்டு வங்கியை ஓரளவுக்கு உருவாக்கவும் முடியும். தனது அரசுக்கு மீண்டும் இந்தப்பூச்சாண்டிகளின் அடிப்படையில் ஆபத்து ஏற்படுவதைத் தவிர்க்கவும் முடியும். ஆனால் அதைத் திமுக தலைமையில் அமைந்த அரசு செய்யவில்லை.

ஆனால் விகடன் செய்வதன் நோக்கம் என்ன?

முன்பே குறிப்பிட்டது போன்று விகடனுக்கு மக்களின் ஆர்வம் குறித்த செய்திகளை வெளியிடுதலில் இருக்கும் ஆர்வத்தை ஒரு காரணமாகக் கொள்ளலாம். ஏனெனில் விகடன் எப்போதும் ஈழப்பிரச்சனையில் வெகுமக்கள் சார்ந்த கருத்துக்களை ஒட்டியே கட்டுரைகளை வெளியிட்டுள்ளது. அதே நேரத்தில் ஈழப்போர் கடுமையாக நடைபெற்றுக்கொண்டிருக்கும் இந்நிலையில், புலிகள் அதை கடுமையா எதிர்கொள்கிற நிலையில் ஒரு பத்திரிக்கையாக விகடனுக்கு இருக்கும் ஆர்வத்தைப் போலவே புலிகளை பலவீனப்படுத்த நினைக்கிற இந்திய/ இலங்கை சக்திகளுக்கும் இருக்கும். அவைகளும் இந்தத் தருணத்தைப் பயன்படுத்திக்கொள்ள விழைவது எதிர்பார்க்கக்கூடியதே. இந்நிலையில் இந்தக்கருத்துக்கணிப்பின் முடிவாக அறிவிக்கப்பட்டவைகளைப் பாருங்கள். ஒன்று தமிழர்கள் தமிழீழம் அமைவதை விரும்புகிறார்கள்; ஆனால் பிரபாகரன் தண்டிக்கப்பட வேண்டும் என்கிறார்கள். களத்தில் இருக்கிற புலிகளுக்கும், ஈழமக்களுக்கும் பிரபாகரனே ஈழம் அமைவதற்கு எதிரானவர் என்ற செய்தியைச் சொல்கிறது இந்த கருத்துக்கணிப்பு. இது குறைந்த பட்சம் இன்னொரு மாத்தையாவையாவது உருவாக்காதா என்ற நம்பிக்கையாகவும் இருக்கலாம், அல்லது அதிகபட்சம் பிரபாகரனை உள்வீட்டு சதியால் நீக்குகிற எதிர்பார்ப்பாகவும் இருக்கலாம்.

ஆனால் எப்படி இருப்பினும் பிறகு தமிழீழம் என்ற கருத்தும், நோக்கமும் இல்லாதொழியும் என்பதை இவர்கள் அறிந்திருப்பதைப் போலவே ஈழத்தமிழர்களும் அறிந்தே இருப்பார்கள், இல்லையா?

2:24 PM, August 18, 2008
அத்திவெட்டி ஜோதிபாரதி said...

திரு.தமிழ் சசி அவர்களே,
தங்கள் பதிவு பெரும்பான்மை தமிழர்களுக்கு மிகவும் அவசியமான பதிவு.
போற்றுவோர் போற்றட்டும் தூற்றுவோர் தூற்றட்டும் என்று எதற்கும் கவலைப்படாமல் புரையோடிப் போன ஈழத்தமிழர்களின் இன்னல்களையும், அதற்கு அல்லது அதனால் தமிழகத்தில் ஏற்படும் அதிர்வுகளையும் தொடர்ந்து எழுதிவருவது எங்களுக்கெல்லாம் மிகுந்த ஆறுதலை அளிக்கிறது.
விகடனில் வெளிவந்த செய்தியை தமிழகத்தில் ஏற்பட்டிருக்கிற மாற்றத்தைப் பிரதிபலிப்பதாகவே கருதுகிறேன். விகடனுக்கு எனது இதயங்கனிந்த நன்றி.

இது பற்றிய எனது பதிவு உங்கள் பார்வைக்கு,
http://jothibharathi.blogspot.com/2008/07/blog-post.html

அன்புடன்,
ஜோதிபாரதி.

8:53 AM, August 19, 2008
Anonymous said...

சசி

ஆழமாக விவாதித்திருக்கிறீர்கள். உங்கள் கருத்துகள் - எங்களால் முடியுமா? என சோர்வடையும் நேரத்தில் கூட - எங்களை முன்னோக்கி பயணிக்க வைக்கும் என திடமாக நம்புகிறேன்.

உங்கள் பணிக்கு தலைவணங்குகிறேன்.

நன்றி.

4:14 AM, August 20, 2008
தமிழன்-கறுப்பி... said...

தொடர்ந்து படித்துக்கொண்டிருக்கிறேன் பதிவையும் பின்னூட்டங்களையும் :)
பதிவுக்கு நன்றி ...

6:43 PM, August 20, 2008
King... said...

என்ன சசி அண்ணன் விவாதம் முடிந்து விட்டதா..? இன்னும் பேச இருப்பது போல தெரிகிறது...

வித்தியாசமான பார்வைக்கும் பதிவுக்கும் வாழ்த்துக்கள்...!
சொல்ல வந்த கருத்தை தெளிவாகச்சொல்வதும் விவாதங்களை ஏற்றுக்கொள்வதும் ஆராய்வதும் கை கூடி வருகிறது உங்களுக்கு...

8:40 PM, August 20, 2008
King... said...

பதிவுக்கு நன்றிகள்...

8:40 PM, August 20, 2008
King... said...

ஈழப்பிரச்சனையின் தற்போதய நிலமை சார்ந்து வடகிழக்கு மக்களின் அல்லது ஒட்டு மொத்த இலங்கை மக்களின் கருத்துக்கணிப்பை எடுக்க ஆளில்லாமல் போனதுதான் எனக்கு வருத்தம்...

8:48 PM, August 20, 2008
Anonymous said...

//இங்கு ”தவறுக்குத் தவறு நியாயம்” எனும் வாதம் நடப்பதாகத்தான் எனக்குத் தோன்றுகிறது. IPKF அத்துமீறல்களும் அநியாயம், ராஜீவ் காந்தியின் கொலையும் அநியாயம் - இல்லையா? எந்த ஒன்றை நியாயப் படுத்த இயலும்? போர்க்கால குற்றங்களுக்காக IPKF-இன் அதிகாரிகளும் தண்டிக்கப் படவேண்டும், ராஜீவ் கொலையை ஆணையிட்டதற்காக பிரபாகரனும் கைது செய்யப்பட வேண்டும் - இல்லையா? Or am I being too naive here?//

sure we can give piraba to you... are you willing to give us all the indian army who came to Northeast and the generals and politicians responsible for the atrocity? Or am I being too naive here?

9:38 PM, August 20, 2008
Anonymous said...

///அதனால, இலங்கையின் இட ஒதுக்கீட்டையும் , இந்தியாவில் இருக்கும் இட ஒதுக்கீடு இரண்டையும் ஒப்பிட்டு ஒரு பதிவு எழுத வேண்டுகிறேன்..

அப்புறம் இதையெல்லாம் அன்னானியாக கேட்பதே சிறந்தது..//

yea standardization doesn't work at all. we want the government to treat us equally not as second class citizens. Attending universities should be based on merit not based on numbers. Do you even know that grade 5 government exams have different cutoff for northeast than for south. I don't know about the situation now but when i was taking them we had cut off at 130 while Colombo had cutoff at 100 for the same exam. Does that sound fair to you?

this is the quote from former Singapore prime minister
Former Singaporean Prime Minister Lee Kuan Yew once said:
“ In terms of numbers, the Ceylonese, like the Eurasians, are among the smallest of our various communities. Yet in terms of achievements and contributions to the growth and development of the modern Singapore and Malaysia they have done more than warranted by their numbers. In the early days of Malaysia’s and Singapore’s history the civil service and the professions were manned by a good number of Ceylonese. Even today the Ceylonese community continues to play a prominent role in these and other fields of civil life.

For example in Singapore, today, the Speaker of Parliament is a Ceylonese. So is our High Commissioner in Great Britain. So is our Foreign Minister. In the Judiciary, in the civil service, in the university, in the medical Service and in the professions they continue to make substantial contributions out of all proportion to their numbers. They are there not because they are members of a minority community but on the basis of merit.

The point is that the Ceylonese are holding their own in open competition with communities far larger than them. They have asked for no special favour or consideration as a minority. What they have asked for – and quite rightly – is that they should be judged on their merits and that they be allowed to compete with all other citizens fairly and without discrimination. This, as far as the Singapore government is concerned, is what is best for all of us. I believe that the future belongs to that society which acknowledges and rewards ability, drive and high performance without regard to race, language or religion." (taken from wikipedia)

9:44 PM, August 20, 2008
இரா.செந்தில் said...

//போர்க்கால குற்றங்களுக்காக IPKF-இன் அதிகாரிகளும் தண்டிக்கப் படவேண்டும், ராஜீவ் கொலையை ஆணையிட்டதற்காக பிரபாகரனும் கைது செய்யப்பட வேண்டும்//
ஒரு மக்கள் அரசு தன் தவறுகளை முதலில் திருத்தட்டும், பின் நாம் "தீவிரவாதிகளை" தண்டிக்க நாம் கிளம்புவோம். திபேத் சீனாவின் உள்நாட்டு விவகாரம், ஈழத்தமிழர் உரிமைப் பிரச்சினையில் தமிழரைக் கொல்வது இந்திக் குடியரசின் கடைமை.

சசி அருமையான பதிவு. தொடர்ந்து எழுதுங்கள்

10:56 AM, August 21, 2008
Anonymous said...

வணக்கம் சசி!

உண்மையின் பக்கம் நின்று உண்மையினை எழுதிவருகின்றீர்கள்.
தூற்றுபவர்களைப் பற்றி கவலைப்படவேண்டாம்.உங்கள் எழுத்தை
தொடரவும்.

வல்வெட்டித்துறை படுகொலைகள் பற்றி2004 ம் ஆண்டு எனது வலைப்பதிவில்
எழுதிய கட்டுரையினை தருகிறேன்.தேவைப்படுவோர் பார்க்கலாம்,
http://karikaalan.blogspot.com/2004/08/blog-post_05.html

நன்றி

கரிகாலன்.

1:59 AM, August 22, 2008
தமிழ் சசி | Tamil SASI said...

பின்னூட்டங்கள் மூலம் தங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொண்ட அனைத்து நண்பர்களுக்கும் நன்றி

6:45 PM, August 22, 2008
வெற்றி said...

சசி,
நல்ல அலசல்.
நன்றி.

2:13 AM, September 04, 2008
Anonymous said...

உங்கள் பதிவு வழமை போல் சிறப்பாக இருந்தது.

இன்றைய ஈழத்து நிலைமையை ஏதாவது ஒரு தொலைக்காட்சி ஒரு வாரம் ஒளிபரப்பினால் போதும் தமிழக மக்கள் ஈழத்தில் தமிழர் படும் இன்னல்களைப் புரிந்து கொள்வார்கள்.

யார் மணி கட்டுவது? முடிந்தவர்கள் முயலவேண்டும்.

ஒரு ஈழத்துத் தமிழன்

8:43 AM, October 05, 2008
Anonymous said...

Major General Harkirat Singh, the Indian Peace Keeping Force’s first commander says this after his retirement:

How did the IPKF, sent to enforce peace, get involved in a bloody fight with the LTTE? Do you personally believe that it could have been prevented?

One afternoon I was in my operations room when then vice chief of army staff (S F) Rodrigues came. Later he became [army] chief. He talked of hard options. I advised him against it. I told him, If you adopt hard options you would be fighting for the next 10 to 20 years. And this will lead to insurgency and there is no stopping it. You are fighting in Nagaland, Mizoram, all over. This will be another. And sure enough, it has not ended to date. And it won’t end.

Why?

I have all regards for Sri Lanka. The Tamils have sacrificed [a lot], the LTTE is highly motivated and there is one aim: Eelam. Independence. Till they get independence they are not going to stop. You see stray incidents everyday, they even attempted to kill the present president.

——

**************
IPKF ஜெனரல் புலிகளை சந்திக்கிறார் முதன் முதலில்:

மாத்தையா was standing outside a bungalow. He said, General, I am not prepared to talk to you.
I said, Why? I have come here with a message of peace, goodwill.
He said, Unless you bring back Prabhakaran, we will not talk to you.
I said, Where is Prabhakaran?

I didn’t even know that. They kept the army absolutely in the dark. Prabhakaran was in the Ashoka Hotel in Delhi. Now I know the room number also, 512 or 522. And he was to see the prime minister, before the prime minister went in for the Accord. Anyway he saw him, the PM gave him certain assurances, and before he could say ‘Jack Robinson’, the prime minister was in Colombo, signing the Accord.

Prabhakaran learnt it on television that the Accord had been signed and they were not party to it. It was one reason why the LTTE never accepted the Accord and India’s stand.

If we had taken the LTTE into confidence, they would have known the whole thing, their terms would have been put across to Jayewardane, and the situation would have been different.

**************

இந்தியா தன் மக்களுக்கு எவ்வளவு உண்மைகளை மறைத்திருக்கிறதென்று பாருங்கள். பேச்சுத் சுதந்திரம் செய்திச் சுதந்திரம் இருந்தும் உண்மை ஏன் மக்களுக்குச் சென்றடையவில்லை? பங்களாதேஷைப் பிரித்துக்குடுக்க முன் நின்ற நாடு, தமிழனுக்கு ஏன் இந்த வஞ்சகம்?

….
Surrender ceremony was fixed for 5th of August.
….
Yogi [Prabhakaran’s representative] took his pistol and gave it. Then vehicle after vehicle the LTTE came, piled up the whole area with ammunition, guns. Bahut accha tha.

they did not stop arming the EPRLF… . RAW was doing it, ministry of foreign affairs knew about it, Dixit knew about it, but they couldn’t stop it.

Did you tell the army headquarters that the EPRLF was being armed?

Of course.

What was the reaction?

Nothing. No reaction. [Indian army chief] General [K] Sunderji never said anything.


….
But then the Thilappan fast happened.
….
Unless the assurances given by the prime minister of India are fulfilled I am not giving up, he said.
I kept requesting the high commissioner, Come and meet, come and meet, come and meet. He dragged his feet, he delayed it, he didn’t come. Finally he came when the man was dead. We should have saved his life, one life.


குமரப்பா, the Trincomalee leader, and புலேந்திரன், the Jaffna leader, they were in the boat.

Now, the tamasha started. There were LTTE, around them were the Indian troops, around us were the Sri Lankan troops, around them were the Indian troops, around them the APCs of Sri Lanka.

I was guarding the airfield. And all of them came, Depinder, Dixit and some other staff officers. They landed there, they could not convince Jayewardane, and he was too clever for them.

You are given amnesty to them, fulfill it, but these politicians, they couldn’t. Depinder next day flew into Trincomalee and told me, Hand over, let them go and do whatever they want. Let us go and have a cup of tea with them, with the three chiefs.

Our troops withdrew, the Sri Lankan troops charged, and these fellows swallowed cyanide. Those who chewed, they died on the spot, those who swallowed were saved. This created chaos in the Indo-Sri Lankan entity. That the Indian army, IPKF, could not save them.

What was Dixit’s approach to your attempts to buy peace with LTTE?

Once he said, Shoot Prabhakaran, shoot மாத்தையா.
I said, Sorry I don’t do that. Those were his orders. When they came to me at 12 o’clock at night for some work, he said shoot them.
General, I have told you what I have ordered.
I said, I don’t take your orders. And we are meeting under a white flag, you don’t shoot people under white flag.

So who messed up during the boat tragedy?

The responsibility is entirely on the diplomats, entirely on the army headquarters. Otherwise, for me to save those people was no problem. I would have just put them into few APCs and smuggled them out. Sri Lankans tho dekthe raha jathe [The Sri Lankans would have just looked on]. We would have taken them out, we had all the troops there. No problem.


Did you bring this to the notice of your chief?

Of course. Sunderji was well-informed. Sunderji, Depinder everybody knew about it. But they didn’t have the courage to speak out to the press. Why did they not speak to the press regularly? When we were fighting in Lanka, why was press briefing not done, like during the Kargil time? Roz raat ko bhashan ho jatha tha, yeh ho gayi, ye ho gayi. Why wasn’t it done in Sri Lanka?
WHY WHY WHY ???
Why Indian government never told its people the truth that LTTE wasn’t even aware of the Accord being signed???
If this doesn’t fall into betrayel of Tamils of Elam, then what does?
சமாதானம் பேச வந்தவனை “house arrest” இல் வைத்து விட்டு நீங்களாவே இலங்கை அரசாங்கத்துடன் ஒப்பந்தம் செய்துபோட்டு முழுத் துரோகமும் தமிழன் என்றால் என்னையா ஞாயமிது?

இந்தியா செய்த சூட்சும தந்திரங்கள் இந்திய மக்களுக்கு வெளிக்கொணரப்படவில்லை. இதை அறியாமல் தமிழ் நாட்டில் இருக்கும் தமிழர்களும் ஈழத்தமிழர் மேல் பழி போடுகிறார்கள். இந்தியா மிகப் பெரும் ஜனநாயக நாடு என்ற பெயர்தான் ஆனால் தம் மக்களுக்கே உண்மை தெரியாமல் செய்வதில் சீனாவை விட கெட்டித்தனம்.

7:55 AM, November 17, 2008